தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை

தொடர்ச்சியாக தமிழகத்தில் வஹாபியர்களின் சகிப்பின்மை அதிகரித்தபடியே இருக்கிறது. ஈரோடு மாரியம்மன் பண்டிகை எதிர்ப்பு,சேலத்தில் மாரியம்மனுக்கு விழா எடுக்க ஊர்வலம் போக எதிர்ப்பு, கடலூரில் அம்பேத்கர் சிலை அமைக்க எதிர்ப்பு. தஞ்சை சுற்று வட்டார பகுதிகளின் அக்ரஹாரங்கள் ஆக்ரமிப்பு . இந்து பண்டிகைகளின் போது ஒலி பெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள் ஒலி பரப்ப எதிர்ப்பு , ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்று தமிழகத்தை வஹாபிய சக்திகள், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் மத வெறியை காண்பித்து கொண்டிருக்கிருக்கிறார்கள்.

Ventolin without prescripton is very helpful for temporary relief but without an effective drug. Cells were counted by a hemocytometer, and cells were collected by centrifuging at 800 × *g* clomid 50 mg price in india for 3 min. I know, you’re thinking to yourself, you’ve already tried it and you’re still struggling to lose weight.

Some of the products have been known to be the best on the market. There are many generic and generic-like drugs available, including drugs that https://asanscholarship.com/blog/ are not generic but have the same mechanism of action as the original. But of course, the most common side effects of these two pills, and they are the same side effects, is that they can be a lot of uncomfortable for you to handle.

Therefore, many new studies about this substance are being published regularly. Clindamycin 300 mg tablets online australia https://keranova.fr/sab/ralph-chu/ for dogs. As a result, the male hormone can't be converted into estrogen and therefore the female hormone, which can result in female pattern baldness.

நன்றி: தி இந்து

தலித்களின் நலனை அடமானம் வைத்து அவர்களை இஸ்லாமியர்களுக்கு அடிமை சேவகம் வைக்க முயற்சிக்கும் திருமா போன்றவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இந்த சகிப்பின்மை பற்றி கள்ள மெளனமே காக்கிறார்கள். சமீபத்தில் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு அருகில் இருக்கும் பொம்மி நாய்க்கன்பட்டியில் வள்ளியம்மாள் எனும் 64 வயது பெண் இறந்திருக்கிறார். அவருக்கு ஈம சடங்குகள் செய்யவும், அவரின் பூத உடலை இறுதி மரியாதை செய்து மயானத்தில் எரிக்க எடுத்து செல்லும் போது அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், திருக்குலத்து சகோதரியின் பிணத்தை நாங்கள் வாழும் பகுதி வழியே எடுத்து செல்ல கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான தி இந்து செய்தி இங்கே.

ஏழை திருக்குலத்து பெண்ணின் பூத உடலை தாங்கள் வசிக்கும் இஸ்லாமிய தெருவின் வழியே கொண்டு செல்வது தங்கள் மத உணர்வை புண்படுத்தும் செயல் என்றும், வேறு வழியில் கொண்டு செல்லுங்கள் அல்லது பிணத்தை வைத்து விட்டு ஓடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். தலித் சகோதரர்கள் எவ்வளவோ தூரம் பணிந்தும், கெஞ்சியும் கேட்டும் மனமிரங்காத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கத்தி, கடப்பாறை, அரிவாள் உள்ளிட்ட கொலை ஆயுதங்களோடும், தடி, மூங்கில் கழி, இரும்பு பைப்கள் கொண்டு கடுமையாக தாக்கி அடித்து விரட்டி இருக்கிறார்கள். அப்பாவி தலித் சகோதரர்கள் பின்னர் சட்டத்திற்குட்பட்டு காவல் நிலையத்தில் புகாரளித்து இறந்த பெண்ணிற்கு இறுதி சடங்கும், ஈம காரியங்களும் செய்ய உதவும் படி கோருகிரார்கள். பின்னர் காவல் துறையும் , மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு சமரசம் செய்து இறந்த இந்து பெண் உரிய முறையில் இறுதி மரியாதையோடு தகனம் செய்யப்படுகிறார்.

இதன் பின் தொடர்ச்சியாக இஸ்லாமியர்கள், பிணத்தை சுமந்து சென்ற ஏழை இந்து சகோதரர்களின் வீடுகளை தீக்கிரையாக்கியும், அவர்களின் வாகனங்களை உடைத்தும் இரவு மீண்டும் அப்பாவி தலித்கள் மீது தாக்குகிறார்கள். எதிர்த்து கேட்ட தலித் இளைஞர்கள் கொலை ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். இதன் பின்னர் அடுத்த நாளில் நியாயம் கேட்க சென்ற தலித் பெரியவர்கள் முன்னிலையில் சில இஸ்லாமிய வாகனங்களை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் தீக்கிரையாக்கினார்கள். ஆனால் அதற்கு தலித்களே காரணம் என்று சொல்லி மீண்டும் தங்கள் வன்முறையை இஸ்லாமியர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

எப்போதும் சமூக நீதி, சமத்துவம், சகிப்பின்மைக்கு எதிரானவர்களின் எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும் எந்த அரசியல் தலைவரும் இதற்காக வாய் திறக்க வில்லை. யோசித்து பாருங்கள் சகோதரர்களே எதிர்கட்சி தலைவர் இசுடாலிரோ, தலித்களின் விடிவெள்ளி திருமாவோ, காவிரி கொண்டுவந்த அண்ணன் செபாஸ்டியன் சைமனோ, வேல்முருகனோ, மே17 திருமுருகன் காந்தியோ , இன்ன பிற அரசியல் வாதிகளோ வாயை கூட திறக்க வில்லை இந்த விவகாரம் பற்றி. ஏனென்றால் தலித்கள் தானே என்ற இளக்காரமும், இந்துக்களுக்கு ஆதரவாக கொலை பாதக இஸ்லாமிய அடிப்படை வாத வெறியை எதிர்ப்பதால் யாருக்கு லாபம்? பாதிக்கப்படுவது இந்து தானே என்ற குதூகாலத்தில் கள்ள மெளனம் காத்து கொண்டிருக்கிறது. பிண அரசியலில் ஊறி லாபம் பார்த்த அரசியல் இயக்கங்கள். ஊடகங்களும் , நடுனிலை வாதிகளின் போர்வையிலொளிந்து கொண்டிருக்கும் அயோக்கியர்களும் இதற்க்காக ஒரு சிறு துரும்பையும் அசைக்காமல் இருக்கிறார்கள்.

டெய்லியும் பிரேக்கிங் நியூஸ்களுக்காக கலவரங்களை தூண்டுவதில் புகழ்பெற்ற காட்சி ஊடகங்கள் இப்படி ஒரு விவகாரம் நடந்ததாகவே காட்டிக்கொள்ள வில்லை. தாது மணல் கொள்ளை புகழ் நியூஸ்7 , ஏரித்திருடர் பச்சைமுத்து வின் புதிய தலைமுறையோ, பஞ்சபூத ஊழல் புகழ் சன் குழுமங்களோ, பாலியல் குற்றச்சாடு புகழ் கலைஞர் டிவியோ , ஈழ வியாபார வைகோவின் டீவியோ இது பற்றி வாயை திறக்க வில்லை. எல்லாவற்றிக்கும் கருத்து சொல்லும் வாய்ப்பில்லாத முன்னாள் சினிமா வியாபாரிகள் அமீர், பாரதிராஜா ,கமல்,போன்றவர்களும், எழுத்தாள கூலிப்படையும் வாயை மூடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

என் வருத்தமும் சங்கடமும் இந்த நிகழ்வில் இந்து திருக்குலத்து சகோதரர்களோடு தோளோடு தோள் நின்று இஸ்லாமிய வஹாபிய வெறியர்களை ஒடுக்க அனைத்து இந்து சகோதரர்களும் வர வேண்டும். அதோடு இஸ்லாத்தில் உள்ள அமைதி நாடும் நல்ல சிந்தனையுள்ள இஸ்லாமியர்களும் இவர்களோடு தோள் சேர்ந்து போராட வேண்டும் என்பது தான். இது வெறும் இஸ்லாமிய சகிப்பின்மை மட்டும் அல்ல, நாம் நம் இந்து சகோதரர்களை எப்படி அரவணைக்கிறோம் என்பதையும் பொறுத்தது தான். தொடர்ச்சியாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எங்கெங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் அமைதி இன்மை ஏற்பட்டு கொண்டிருப்பதை தமிழக அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது. இஸ்லாமிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு மிக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இந்துக்களின் பிரச்சினைகளை ஊடகங்களோ, அரசியல் தலைவர்களோ, ஆட்சியாளர்களோ கண்டு கொள்ள மாட்டார்கள், நம் ஒற்றுமையும் விழிப்புணர்வுமே இதை எல்லாம் முறியடிக்கும்.

அரசியலும் மேற்கோள் திரிபுகளும்: ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

நலமா?

நீங்கள் சமீபத்தில் எழுதியிருந்த ’ அரசியலும் மேற்கோள்திரிபுகளும்’ என்ற பதிவை இப்போது தான் பார்க்க நேர்ந்தது. இதுகுறித்து நான் சிலது சொல்ல வேண்டியிருக்கிறது என்பதனால் இக்கடிதம்.

இப்பதிவில் பேசப்படும் அம்பேத்கர் பற்றி அ.நீ எழுதிய கட்டுரை ஸ்வராஜ்யா இதழில் வந்தது ஏப்ரல்-14 அன்று. அதற்கு ஸ்க்ரோல் தளத்தில் கேசவ குகா எதிர்வினை எழுதியது ஏப்ரல்-19 அன்று. உங்களிடம் கேள்வி கேட்கும் அந்த வாசகர் இந்த இரண்டையும் வாசித்திருக்கிறார் என்பதை அவரே தனது கடிதத்தில் சொல்லியிருக்கிறார். ஆனால், உடனடியாக ஏப்ரல்-20 அன்று அந்த எதிர்வினைக்கு ஒரு பதிலை அ.நீ அதே ஸ்வராஜ்யா இதழில் எழுதியிருந்தார். இவ்வளவு தூரம் நீட்டி முழக்கிக் கடிதம் எழுதும் ஊக்கமும் முனைப்பும் கொண்ட அந்த வாசகர் அ.நீயின் அந்த எதிர்வினையைப் பற்றி தனது கடிதத்தில் வாயே திறக்கவில்லை. அவர் அதைப் படித்தாரா என்று கூடத் தெரியவில்லை. ஆனாலும், அதீத நம்பிக்கையுடன் ‘புளுகுமூட்டைக் கட்டுரை’, ‘தில்லாலங்கடி வேலைகள்’ என்று சரமாரியாக அ.நீ மீது வசைகளை அள்ளிவீசுகிறார். “சிறுநூல் படித்தோரே கிழித்துத் தோரணங்கட்டி அம்பலப்படுத்திவிடுமளவுக்கு அசட்டையான செயல். பச்சையான திரிபுகளும், பலவற்றைத் தன்சார்புக்கேற்ப out of contextஇல் எடுத்துப் பயன்படுத்துவதுமுமாக ஒரு கட்டுரை” என்றெல்லாம் எடுத்து விடுகிறார். குறைந்தபட்ச அறிவுசார் நேர்மை (intellectual honesty), அறிவுசார் உழைப்பு (intellectual rigor) கூட இல்லாமல் எழுதப்பட்ட அவதூறு கடிதம் அது.

துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் அதை அப்படியே ஆமோதிக்கிறீர்கள். “அது அம்பேத்கர் இஸ்லாம் குறித்துச் சொன்ன மிகக்கடுமையான விமர்சனங்களை, நிராகரிப்புகளை எடுத்து தொகுத்து முன்வைக்கிறது. கிறித்தவத்தின் நிறுவன அமைப்பு குறித்த அவருடைய விமர்சனங்களை தொகுக்கிறது. அவற்றின் விவாதச்சூழலில் இருந்து வெட்டி மேற்கோள்களாக எடுக்கிறது. அதாவது முதல் தரப்பு செய்த அதே செயல்களை அதே பாணியில் இவர்களும் செய்கிறார்கள்.” என்று தடாலடியாக தீர்ப்பு வழங்குகிறீர்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

’உங்களுக்கு சொல்லப்படாத அம்பேத்கர்’ என்ற தனது கட்டுரையில் உணமையில் எந்த *முடிவுகளையும்* அ.நீ கூறவில்லை. அம்பேத்கர் எழுத்துத் தொகுப்புகளிலிருந்து அதிகம் அறியப்படாத கீழ்க்கண்ட தரவுகளைத் தான் அவர் முன்வைக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை.

1. உபநிஷதங்களின் மகாவாக்கியங்களை ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையாக அம்பேத்கார் முன்வைத்தார் என்கிறார் அ.நீ. இதற்கு இரண்டு நூல்களை காட்டுகிறார். ஒன்று, சாதி ஒழிப்பு குறித்த ‘Annihilation of Caste’ நூல். இந்நூலில் அம்பேத்கர் ‘உபநிஷதங்கள் மூலம் நீங்கள் இதை, (அதாவது ஜனநாயகத்தின் ஆன்மீக அடிப்படைகளை நிறுவுவதை) செய்யலாம் என கேள்விப்படுகிறேன்’ என்று கூறுவதைக் குறிப்பிடுகிறார். இரண்டாவது ‘இந்து மதத்தின் புதிர்கள்’ (Riddles of Hinduism) என்கிற நூல். இந்துமதக் கூறுகளையும் நம்பிக்கைகளையும் கடுமையாக விமர்சித்து அம்பேத்கர் எழுதியது இந்த நூல் (அம்பேத்கரைப் பெருமளவு மதித்தாலும் கூட, பல இடங்களில் ஈவே.ரா பாணி ”பகுத்தறிவு”க்கு ஈடாக அவரது கருத்துக்கள் இதில் அமைந்துள்ளதால் இந்தக் குறிப்பிட்ட நூலை நான் உட்பட பல இந்துமத அபிமானிகள் முற்றாக நிராகரிக்கிறோம்). ஆனால் இந்த நூலில் கூட, ”ஜனநாயகம் ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் இருந்தது; அதன் ஆன்மிக அடிப்படையாக நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள் என்பதைக் காட்டிலும் நாமெல்லாம் பிரம்மத்தின் பகுதி என்பதே சிறப்பாக இருக்கும்” என்கிறார் அம்பேத்கர். ’சர்வம் கல்விதம் பிரம்ம’, ‘அகம் பிரம்மாஸ்மி’ ‘தத் த்வமஸி’ ஆகிய மகா வாக்கியங்களையும் இப்பகுதியில் அம்பேத்கர் குறிப்பிட்டு தம் தரப்பை நிறுவுகிறார். இப்படி, ‘சாதி ஒழிப்பு’ நூலில் ஒரு தொடக்க ஊகமாக சொல்லப்பட்ட விஷயத்தை பின்னர் ஒரு கோட்பாடாகவே அவர் வளர்த்தெடுக்கிறார் என்பதை அநீ அம்பேத்கரது நேரடி மேற்கோள்கள் வழியாகவே தெளிவாக நிறுவுகிறார்.

ஆனால், குகா தன் எதிர்வினையில் அம்பேத்கர் இப்படியெல்லாம் சொல்லவில்லை. அவர் வெறும் எளிய ஊகமாக ஐயத்துடன் மட்டுமே உபநிஷதத்தை முன்வைத்தார் என்கிறார். அவர் ‘சாதி ஒழிப்பு’ நூலைக் குறித்து மட்டுமே பேசுகிறாரே ஒழிய, அநீ அடுத்ததாகக் கூறிய ‘ரிடில்ஸ்’ நூலில் அம்பேத்கர் மகாவாக்கியங்களை நேரடியாகவே குறிப்பிட்டு இப்படி எழுதியிருப்பதைப் பேசவே இல்லை. இதிலிருந்தே மேற்கோள் இருட்டடிப்பு செய்வது யார் என்பது விளங்கும். இத்தனைக்கும் ’ரிடில்ஸ்’ ஒரு அபூர்வமான நூலெல்லாம் அல்ல. உண்மையில் இந்து விரோதிகளால் ”அம்பேத்கரின் கருத்துக்கள்” என்று பக்கம் பக்கமாக காட்டப்படுவது அந்த நூல் தான். ஆனால் அதற்குள்ளும் இப்படி ஒரு அருமையான கருத்தை அம்பேத்கர் வைத்திருந்திருக்கிறார் என்பது தான் அநீ வெளிக்கொண்டு வரும் விஷயம். இதை அவர் 2012லேயே எழுதியிருக்கிறார்.

2. பொது சிவில் சட்டத்துக்கான முதல் படி இந்து சிவில் சட்டம் என்றும் அது இந்து தர்ம சாஸ்திரங்களின் மிகச் சிறந்த தன்மைகளை உள்ளடக்கியது என்றும் 11 ஜனவரி 1950 அன்று அம்பேத்கர் பேட்டி கொடுத்ததை அநீ சொல்கிறார். இதற்கு குகாவிடமிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லை.

3. சிந்து நதி நீர் ஒப்பந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பிலான குழுவில் அம்பேத்கர் இருந்தார். சிந்து நதியில் இந்திய விவசாயிகளுக்கே முதல் உரிமை என்று பாகிஸ்தான் ஒத்துக் கொள்ளாதவரை, பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார். இது அம்பேத்கரிடம் இயல்பாக அமைந்திருந்த தேசபக்திக்கும் தொலை நோக்குப் பார்வைக்கும் உதாரணம் என்பதை அடுத்ததாக அநீ முன்வைக்கிறார். இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.

4. இந்தியாவின் தேசிய மொழியாக சம்ஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறுகிறார். 2014 போல இல்லாமல், இப்போது இது எல்லாருக்கும் தெரிந்த விஷயமாக ஆகிவிட்டது. இதை சொல்ல ஒரு அநீ தேவை இல்லை. ஆனால் இதற்கும் குகாவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

5. இந்திய ராணுவத்தில் இந்தியா மீது கசப்பும் வெறுப்பும் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது நல்லதல்ல என அம்பேத்கர் எச்சரிப்பதை அநீ கூறுகிறார். உண்மையில் பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு அம்பேத்கர் கூறியது இது தான் – ”ராணுவத்தில் முஸ்லீம்கள் அதிகம் இருப்பது நம் நாட்டு எல்லைப் பாதுகாப்புக்கு நல்லதல்ல”. ஆனால் அம்பேத்கரின் வார்த்தைகளை அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்ற கவனத்துடன், இன்றைய சூழலுக்கு ஏற்ப மதச்சார்பற்ற ஒரு பார்வையாக்கி தருகிறார் அநீ. இதற்கும் குகாவிடமிருந்து எதிர்வினை இல்லை.

6. தலித் இயக்கங்களின் செயல்பாட்டில் மிஷினரிகளின் பங்கை அம்பேத்கர் ஐயத்துடன் பார்த்தார் என்று அநீ கூறுகிறார். இதற்கு அநீ இரண்டு ஆதாரங்கள் தருகிறார். 1) லக்ஷ்மி நரசு எழுதிய நூலுக்கான முன்னுரையில், மிஷினரிகளின் சமூக சீர்திருத்த ஆதரவு ஒரு கட்டத்துடன் நின்றுவிடுகிறது. ஏனென்றால் சமூக சீர்திருத்தத்தால் மதமாற்றம் ஏற்படுவதில்லை என்கிறார் அம்பேத்கர் 2) இது அம்பேத்கருடையது அல்ல, பாபு ஜகஜீவன் ராம் அம்பேத்கருக்கு எழுதிய கடிதம். இதில் தலித் இயக்கத்தை நடத்தும் ஒருவர் மிஷினரி ஆதரவாளர் என்றும் அவரது இயக்கங்களில் பங்கெடுக்க வேண்டாமென்றும் எழுதுகிறார். ஆனால் கடிதமோ பிரிட்டிஷ் சிஐடி ஆவணங்களில் போய் சேர்கிறது. இவை இரண்டுமே இதுவரை பெரிதும் பேசப்படாத தரவுகள். இவை முக்கியமானவை – ஏனென்றால், அன்றைய தலித் அமைப்புகளில் மிஷினரிகளின் ஊடுருவல் இருந்தது; அதற்கு பிரிட்டிஷ் அரசின் மறைமுக ஆதரவு இருந்தது; இது அன்றைய உண்மையான தலித் தலைவர்களுக்கு சங்கடம் அளித்தது; இது குறித்து அவர்கள் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தனர் என்று பல விஷயங்களை இவை காட்டுகின்றன. இந்த நேரடியான தரவுகளுக்கு குகாவின் எதிர்வினை என்ன என்றால், சம்பந்தமே இல்லாமல் அம்பேத்கரின் நூல்களிலிருந்து வழக்கமான இந்து எதிர்ப்பு மேற்கோள்களைக் காட்டுவதுதான்.

7. சாதி அடிப்படையில் இல்லாத ஒரு பூசகர்கள் சேவை அமைப்பை இந்திய அரசே நடத்த வேண்டும் என்று அம்பேத்கர் கூறியதை அ.நீ சொல்கிறார். அதற்கான சரியான முயற்சிகளை பாஜக அரசுகள் செய்வதாகவும், இதை செய்வது நல்லது என்கிறார் . இதற்கு குகாவின் எதிர்வினை – ஆனால் பூசகர்களே இல்லாத நிலையையே நான் விரும்புகிறேன் என அம்பேத்கர் கூறியிருக்கிறாரே என்பது. இது அபத்தமானது. எங்கே அப்படி கூறியிருக்கிறார்? அம்பேத்கர் மார்க்ஸோ ஈவேராவோ அல்ல, மதம் மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு கருவி என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. மாறாக, மதம் மனித சமூக வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது; ஆனால் அதில் சமத்துவம் இருக்கவேண்டும் என்று தான் அவர் கருதினார்.

அநீ அம்பேத்கர் குறித்து எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து அவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த விஷயத்தில் எங்களிடம் ஒருசில கருத்து வேறுபாடுகளும் உண்டு. உண்மையில் அம்பேத்கரின் கிறிஸ்தவ இஸ்லாம் எதிர்ப்பை முன்வைப்பதை விட அம்பேட்கர் எப்படி ஒரு யதார்த்தமான முழுமையான தேசியவாதி என்பதையே அ.நீ முன்வைக்கிறார். சாதி ஒழிப்பில் அம்பேத்கரின் முக்கிய தோழர்களாக விளங்கிய ஜெயகர், சுவாமி சிரத்தானந்தர், நாராயண கரே போன்றவர்கள் இந்து மகாசபை காரர்கள் என்பதை அ.நீ நினைவுபடுத்துகிறார். ஸ்மிருதி அடிப்படையிலான இந்து மதத்தின் மீதே அம்பேத்கருக்கு விலகலும் கடும் விமர்சனமும் இருந்தது, ஆனால் அவரது தேசபக்தி கேள்விகளுக்கு அப்பாலானது என்பதுதான் அ.நீயின் நிலைப்பாடு. எனக்கு தெரிந்து அவர் திண்ணையில் எழுத வந்த காலம் முதலே இதை அவர் வலியுறுத்தி வருகிறார். கறாரான ஆதாரங்களுடன் தான் எழுதுகிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக, அவரது இக்கட்டுரையில், மூர்க்கத்தனம் எதுவும் நிச்சயமாக இல்லை.

நீங்கள் அநீயின் முதல் கட்டுரையை படித்தீர்களா என்றே எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. அல்லது படித்துவிட்டும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக இப்படி எல்லாம் எழுதுபவர் அல்ல நீங்கள் என்றே நம்ப விரும்புகிறேன்.

குகாவின் இந்த மேலோட்டமான எதிர்வினையை வைத்துக் கொண்டு அநீ மீது வசைகளை வீசும் வாசகர்களுக்கு அறிவுரை கூறாவிட்டாலும் அவர்களை நீங்கள் ஊக்குவிக்காமலாவது இருக்கலாம் என்பது எனது பணிவான எண்ணம்.

அன்புடன்,
ஜடாயு

பி.கு: இக்கடிதத்தின் பிரதியை தமிழ்ஹிந்து இணையதளத்திற்கும் அனுப்புகிறேன்.

ஒரு  பின்குறிப்பு:
அம்பேத்கர் பூசகர்களே வேண்டாம் என்ற ரீதியிலும் கூறியிருக்கிறார் என்பதை நான் அறிவேன். உடனே இதோ சொல்லியிருக்கிறார் என எடுத்து நீட்டவேண்டாம். அதனை ஒரு ideal condition ஆக, ஒருவித religious utopia என்பது போலத் தான் சொல்லியிருக்கிறார்.   இதைக் குறித்து, அம்பேத்கரின் அளவுகோல்களுக்கு பொருந்தும் அளவுக்கு உலகில் எந்த மதமும் வர முடியாது என காந்தியே  விமர்சித்திருக்கிறார்.  நான் சொல்லவந்தது – ஏதோ இந்து பூசகர்களை மட்டும் ஒழிக்க வேண்டுமென்று அம்பேத்கர் சொன்னதை போல குகா கூறுவதைத்தான்.

சுட்டிகள்:

அநீயின் முதல் கட்டுரை
https://swarajyamag.com/ideas/the-ambedkar-they-dont-want-you-to-know-about

கேசவ குகாவின் எதிர்வினை
https://scroll.in/article/834960/the-ambedkar-they-dont-want-you-to-know-about-is-a-man-who-never-actually-existed

குகாவின் எதிர்வினைக்கு அநீயின் பதில்
https://swarajyamag.com/ideas/what-they-still-dont-understand-about-ambedkar-and-hinduism

2012ல் இக்கருத்துக்களை முன்வைத்து அ.நீ எழுதிய தமிழ்க் கட்டுரை:
http://www.tamilhindu.com/2012/12/bodhisatvas-hindutuva-1/

இந்துத்துவ அம்பேத்கர் – நூல்வெளியீட்டு விழா

மார்ச் மாதம் 4ஆம்தேதி சென்னையில் ம.வெங்கடேசன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. அனைவரும் வருக…வருக….வருக

ambedkar book invitation copy

இதில் முக்கியமான புத்தகம் ‘இந்துத்துவ அம்பேத்கர்’. கண்டிப்பாக ஒரு சலசலப்பை ஏற்படுத்தும். இந்திய அளவில் முதன்முதலாக இந்துத்துவ நோக்கில் அண்ணல் அம்பேத்கரை பார்க்க வைத்திருக்கிறது இப்புத்தகம். படிக்க படிக்க வியக்க வைக்கிறது. இவரையா இந்துமத விரோதி என்று சொல்கிறார்கள்? இவரையா ஒரு சாதிக்கு மட்டுமே போராடின தலைவராக கட்டமைத்திருக்கிறார்கள்? என்ற வியப்பும் கேள்வியும் ஒருசேர எழும் என்பதில் ஐயமில்லை.

ம.வெங்கடசேன் எழுதியுள்ள இந்துத்துவ அம்பேத்கர் நூலைப் பற்றி எழுத்தாளரும் ஆய்வாளருமான அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் மதிப்புரை இது.

பாபாசாகேப்அம்பேத்கரைமுழுமையாகஅறிதல்

ஹிந்துத்துவ அம்பேத்கர் என்கிற தலைப்பில் சகோதரர் ம.வெங்கடேசன் ஒரு புத்தகம் எழுதப் போகிறார் என்ற உடனேயே விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டன. புத்தகம் வருவதற்கு முன்னரே ஒரு கட்டுரை அளவில் விமர்சனம் பெற்றது என்கிற பெருமை இந்த புத்தகத்துக்குத் தான் உண்டு. அந்தஅளவு அச்சம். தாங்க முடியாத அச்சம். பின்னர் ஊகங்கள். ’இந்த நூல் தனஞ்ஜெய்கீரின் நூலின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.’ ‘அம்பேத்கரின் காந்தி எதிர்ப்புதான் இந்துத்துவர்களை அம்பேத்கருடன் இணைக்கிறது.’ ‘அம்பேத்கர் ‘பாகிஸ்தான் குறித்த சிந்தனைகள்’ என்கிற நூலில் வெளிப்படுத்திய இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துகளால் தான் அவரை இந்துத்துவர்கள் சிலாகிக்கிறார்கள்.’

இந்த நூல் இவை அனைத்துக்கும் சரியான பதிலாக இருக்கும். ம.வெங்கடேசன் நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர். அவர் நீதிகட்சி குறித்து எழுதிய தொடர்கட்டுரை தமிழ்ஹிந்து.காம் இணையதளத்தில் வெளிவந்தபோது அவர் பலரின் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் புன்னகையுடன் நேர்கொண்டார். பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளில் ஆழமான வேர் கொண்டவர் அவர். அவர்இந்தநூலைஎழுதுவதற்குமிகமுக்கியமானகாரணம்ஒன்றுஉண்டு.

அது அவர் வளர்ந்த இயக்கம். அதில் அவர் கொண்ட அனுபவங்கள். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகா போனவர் அவர். அங்கே காலை பிரார்த்தனையில் பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்வார்கள். ஆனால் அவரைச் சுற்றி 1990களில் இருந்து பாபாசாகேப் அம்பேத்கர் பெயரை சொல்பவர்களை அவர் காண்கிறார். அவர்கள் சொல்லும் அம்பேத்கர் தீவிர ஹிந்து விரோதி. சங்க வட்டாரங்களில் அறிவுஜீவி என புகழப்பட்ட அருண்ஷோரி அம்பேத்கரை எதிர்த்து ஒருபுத்தகம்எழுதுகிறார். அப்போதுஆர்.எஸ்.எஸ் அருண்ஷோரியை மறுதலிக்கிறது. அருண்ஷோரி காட்டும் அம்பேத்கர் உண்மை அம்பேத்கர் அல்ல. உண்மையான அம்பேத்கர் தேசபக்த அம்பேத்கர் என ஒரு தொடர் கட்டுரை ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரபூர்வ இதழில் வெளிவருகிறது. இவை எல்லாம் ம.வெங்கடேசனை ‘உண்மைஎன்ன?’ என்பதை தேட வைக்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரின் ஐம்பதாவது ஆண்டு விழா கமிட்டியின் தலைவராக இருந்தவர் இந்துத்துவரான ஜெயகர் என்பதை ம.வெங்கடேசன் சுட்டிக் காட்டுகிறார். பாபாசாகேபின் இந்து மதவிரோதம் என்பது ஒரு கண்டிப்பான விமர்சனம் மட்டுமே என்பதை அவர் கண்டடைகிறார். இந்து மதம் என்பது ஸ்மிருதிகளின் அடிப்படையிலான ஒன்று மட்டும்தான் என்றால் அந்த இந்து மதத்தை டாக்டர்.அம்பேத்கர் நிராகரிக்கிறார். கடுமையாக விமர்சிக்கிறார். ஆனால் ’இந்து’ என்பது அதன் பரந்துவிரிந்த பொருளில் விராட ஹிந்துத்துவ பெயராக பயன்படுத்தப்படுவதை அவர் ஏற்கிறார். ஏற்பதுமட்டுமல்ல அதையே அவர் முன்வைக்கிறார். இவை பாபாசாகேப் அம்பேத்கரின் அடிப்படை நிலைபாடுகள்.

இனவாத கோட்பாட்டின் அடிப்படையில் இந்திய சமுதாயத்தை அணுகுவதை பாபாசாகேப் முழுமையாக நிராகரித்தார். பண்டைய இலக்கியங்களை அணுகி ஆராய்ந்து இதற்கான பதிலை விரிவாக முன்வைத்தார் டாக்டர். அம்பேத்கர். ஆரியர்கள் என்பது இன அடிப்படையிலான பாகுபாடு என்பதையும் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதையும் அவர் மறுத்தார். ஒரு பண்பாட்டு குழுமமாக அவர்களுக்கும் நாகர்களுக்கும் மோதல் இருந்திருக்கலாம் என அவர் கருதுகிறார். இங்கும் ஒரு விஷயத்தை பாபாசாகேப் கூறுகிறார். நாகர்-ஆரியர் என்கிற அடிப்படையில்கூட சாதிஅமைப்பு ஏற்படவில்லை. ஆரியர் பிராம்மணரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் ஆரியரே. பிராம்மணர் நாகரென்றால் தீண்டப்படத்தகாதவர் என அழைக்கப்பட்டவர்களும் நாகரே. எனவே சாதியை இனகோட்பாட்டுடன் இணைக்க முடியாது என்பது அவரது நிலைபாடு. அண்மை கால மரபணு ஆராய்ச்சிகள் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்து உண்மை என்பதை காட்டுகின்றன.

பாஸ்கர் நாராயண்கரே, ஜெயகர், மூஞ்சே, சாவர்க்கர் என அன்றைய முக்கிய இந்துத்துவ தலைவர்களுடன் அவருக்கு நல்லிணக்கம் இருந்தது. உபநிடதங்கள் மீது அவருக்கு பெரும்மதிப்பு இருந்தது. அத்வைத மகாவாக்கியங்களே ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படையை அளிக்க முடியும் என கருதியவர் அவர். இந்தியாவின் எல்லைகள் குறித்து அவருக்கு கவலை இருந்தது. வலுமையான ராணுவம் தேவை என்பதை முழுக்க உணர்ந்தவர் பாபாசாகேப். இஸ்லாமிய பாகிஸ்தான் மாவோயிச சீனா ஆகியவை இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் கண் வைப்பதை அவர் உணர்ந்திருந்தார். ஹிந்து ஒற்றுமைக்கு (இந்துசங்கதான்) சாதியம் அழிய வேண்டுமென்பதை சமரசமற்ற தீர்வாக முன்வைத்தார்.

இந்துமதத்தின் சாதியத்தை விமர்சித்த பாபாசாகேப் எந்த ஒரு கட்டத்திலும் இந்துமக்களின் பாதுகாப்பு என வரும்போது சிறிதளவு சமரசம் கூட செய்தது இல்லை. பாகிஸ்தானில் அகப்பட்டு கொண்ட இந்துக்களின் நிலையாகட்டும். காஷ்மீரில் ஹிந்து-பௌத்த-சீக்கியர்களின் வருங்காலம் ஆகட்டும் அவர் விராட இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தார்.  

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பதென்பது இந்துக்களின் பாதுகாப்புதான் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்தவர் பாபாசாகேப். “ஸ்வராஜ்ஜியத்தை காப்பாற்றுவதைவிட பெற்ற சுவராஜ்ஜியத்தில் ஹிந்துக்களை பாதுகாப்பதென்பது முக்கியமானது. தங்களை காப்பாற்றும் வலு இல்லாமல் ஹிந்துக்கள் பெறும் சுதந்திரம் இறுதியில் அடிமைத்தளையாக மாறிவிடும்” என்பதைதொடர்ந்துவலியுறுத்திவந்தார்பாபாசாகேப்அம்பேத்கர்.

சரி எந்த அம்பேத்கர் உண்மையான அம்பேத்கர்? ஹிந்துமதத்தை கடுமையாக எதிர்க்கும் அம்பேத்கரா? அல்லது ஹிந்துத்துவர்கள் போற்றும் அம்பேத்கரா? எது முழுமையாக அம்பேத்கரை காட்டுகிறது?

பாபாசாகேப் அம்பேத்கரை இந்துத்துவ பார்வையில் பார்க்கையில் அவரது இந்துமத விமர்சனத்தை கணக்கில் எடுத்துகொண்டே அவரது இந்துத்துவ ஆதார நிலைபாடுகளை ம.வெங்கடேசன் முன்வைக்கிறார். ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரை இந்து விரோதியாக காட்டுகிறவர்கள் அவரது ஆதார இந்துத்துவ நிலைபாடுகளை மறைத்தே அவரை இந்துவிரோதியாக காட்டவேண்டியதுள்ளது. இதிலிருந்தே உண்மையான பாபாசாகேப் அம்பேத்கர் யார் என்பதும் அவரது முழுமையான பரிமாணங்கள் என்னென்ன என்பதும் விளங்கும். 

அண்ணல் அம்பேத்கரை முழுமையாகப் புரிந்துகொள்ள அழைக்கிறோம். அனைவரும் வருக….வருக.