இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடமிருந்து கீழ்க்கண்ட கோரிக்கை நமக்கு வந்தது. அதனை அப்படியே இங்கே தருகிறோம் –

I have no problem with this because i'm not using for any prescription or over the counter medications. The past two weeks i've been having colds, and i'm sick as a dog (or at least i feel buy antabuse online no prescription like it). The lice are protected as long as treatment is continued.

Holand, daughter of thomas holand, late a magistrate of that city, and had issue; In many instances the amoxicillin out of pocket cost problem may not be serious, but in some cases it can be quite severe. It’s not a bad idea, you just need to keep in mind that certain side effects may be very unpleasant or uncomfortable.

Cialis, cialis avec prise et cialis et viagra deuxième génération. He denied smoking; a history of alcohol or drug abuse; and cipla azithromycin 500 mg price Grevenbroich family psychiatric history. The above information is not intended to replace the medical expertise of our health care team.

எங்களது அமைப்பு மற்றும் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமூக நற்பணிகள் தொடர்ந்திட தீபாவளிப் பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டுகின்றோம்.

சமூகசேவை:

கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் அரசு பொது மருத்துவமனைகளின் முன்பாக ஏழு வாகனங்கள் மூலம் அநாதைகள், ஏழைகளுக்கு இலவசமாக சேவை செய்யப் படுகிறது. இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள் இலவசமாக இயக்கப் படுகின்றன. ஆயிரத்திற்கும் பேற்பட்ட அனாதைப் பிணங்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன.

imk1

அறவழிப் போராட்டம்:

அண்மையில் திண்டுக்கல் மலைக்கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் திருக்கோயில் மீட்புப் போராட்டத்தில், அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக உழைத்த இந்து மக்கள் கட்சி தலைவர் திரு. தர்மராஜ் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இ.ம.க தொண்டர்கள் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதில் 16 பேரை ஜாமீனில் எடுத்து விடுதலை செய்துள்ளோம். தர்மராஜ் அவர்களை விடுதலை செய்யக் கோரியும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் வழிபாட்டுரிமை கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நவம்பர்-1 அன்று திண்டுக்கல் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற உள்ளது.

imk1திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வள்ளலார் ஒரு கிறிஸ்தவர். இந்து இயக்கங்கள் மீது கடும் வெறுப்புணர்வு கொண்டுள்ள இவர் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இ.ம.க. தலைவர் தர்மராஜ் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்துள்ளார். மலைக்கோட்டைக் கோயிலை மீட்பதில் உறுதியாக திண்டுக்கல் நகர பொதுமக்கள் திரள்கின்ற காரணத்தால், மலையைச் சுற்றி இரும்பிக்கம்பி முள்வேலி அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நாம் அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திட உள்ளோம்.

தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். பல இந்து இயக்கத் தொண்டர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது. இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்.

காசோலை/டிராஃப்ட் Indu Dharma Seva Arakkattalai என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும் –

திரு. அர்ஜுன் சம்பத்,
தலைவர், இந்து மக்கள் கட்சி – தமிழகம்
130, வீரகணேஷ் நகர், கெம்பட்டி காலனி
கோவை – 641 001

(தொலைபேசி: 98422-44833).

நேரடி பணம் செலுத்த வங்கிக் கணக்கு விவரம்:

Indu Dharma Seva Arakkattalai
A/c No: 1120155000131901
Karur Vysya Bank, Coimbatore Main Branch.

பணம் செலுத்திய விவரத்தை அஞ்சல் மூலமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

ஆஸ்திரேலிய இந்துக் குழந்தைகளுக்கான ஒருநாள் முகாம்

rangoliஆஸ்திரேலிய இந்து இளைஞர் அறக்கட்டளை (Hindu Youth Foundation) குழந்தைகளுக்கான பகல்நேர முகாம் ஒன்றை 2009 ஜனவரி 10ம் நாளன்று நியூ சௌத்வேல்ஸில் உள்ள நார்த் கார்லிங்போர்டில் நடத்தியது. புராதனமான இந்துக் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் தமது குழந்தைகளும் பெற்றுச் சிறக்கவேண்டும் விரும்பிய பெற்றோர்களின் முனைப்பால் இந்த முகாம் உருவானது. இது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உதவியோடு நடத்தப்பட்டது.

ஐந்து முதல் பதினைந்து வயதுக்குட்பட்ட 53 சிறுவர் சிறுமியர் பங்கேற்ற இந்த முகாமில் இந்தியா, ஸ்ரீலங்கா, பிஜித்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோரின் குழந்தைகள் இடம்பெற்றனர்.

சுலோகம் ஓதுதல், யோகப்பயிற்சி, சமஸ்கிருத உரையாடல், பாகவதக் கதை, கோலப் பயிற்சி, இந்திய விளையாட்டுகள், பஜனை ஆகியவை இந்த முகாமில் பயிற்றுவிக்கப்பட்டன. குழந்தைகள் தமது பாரம்பரியத்தை அறிவதில் மிகுந்த உற்சாகம் காட்டினர். பெற்றோருக்கோ, வெளிமண்ணில் வளரும் தமது குழந்தைகள் சொல்லும் சுலோகங்களையும் பாடும் பஜனைகளையும் கேட்டுக் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

திருவாளர்கள் பிபேன் ஷர்மா, திலீப் சோப்ரா, ப்ரிஜ்பால் சிங் ஆகியோர் இந்த முயற்சியைப் பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கைச் செய்தியை இங்கு காணலாம்.
உலகெங்கிலுமுள்ள இந்துப் பெற்றோர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தத்தமது குழந்தைகளுக்கு நமது உயர்ந்த பாரம்பரியத்தை அறியவும் அனுபவிக்கவும் தொடர்ந்து எடுத்துச் செல்லவும் பயிற்சி, ஊக்கம் அளிப்பது அவசியம்.