குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

பல்லடம் அருகே வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்து, கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற ஐந்து பாதிரியார்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிரியார்களை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்… தேவார திருவாசகங்‌களை ஓதினோம். ஒவ்வொரு வீடாகச் சென்றோம். வாயிலில் நின்றோம். வந்தவருக்கு அடிகளின் திருக்கரங்‌கள் நீறிட்டன. திருவாசகம் நூலின் படி கொடுத்தோம். சிறார்களுக்கு இனிப்புகள் வழங்‌கினோம்…

View More குள்ளம்பாளையம்: மதமாற்றிகளை சிறைபிடித்த மக்கள் சக்தி!

இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

அச்சம் மீதூர தமிழர்கள் நிலை இருக்கையில், மாற்றுச் சமயத்தில் சேர்ந்து விடு என்று அருகாமையிலேயே ஆர்ப்பரிக்கும் குரல்கள்.. புத்தர் சிலைகள் சைவத் தமிழர் நிலப்பகுதியெங்கும் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மளமளமென்று விகாரங்கள் எழுகின்றன.. இலங்கையின் பதினேழு மாவட்டங்களிலும் உள்ள சைவத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முதற்கட்டமாக 150 திருமுறை வேள்விகளை நிகழ்த்துகிறோம்.

View More இலங்கையில் திருமுறை வேள்விகள்: வேகும் தமிழ் நெஞ்சங்களுக்கு ஒரு மருந்து!

சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.

View More சிவாலய ஓட்டம்: சிறப்பு வீடியோ கட்டுரை

தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்

நீங்கள் உண்மையான உணர்ச்சி கொண்டிருக்கிறீர்களா? தேவர்கள் தவ முனிவர்கள் இவர்களின் சந்ததிகளான கோடானுகோடி மக்கள் மிருகங்களினின்றும் அதிக வேற்றுமையில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை உணர்கிறீர்களா? கோடிக்கணக்கான மக்கள் இன்று பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் லட்சக்கணக்கானவர்கள் பல்லாண்டுகளாக பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும் உணர்கிறீர்களா? அறியாமை என்னும் இருண்ட மேகம் இந்த நாட்டைக் கவிந்திருக்கிறதென்பதை உணருகிறீர்களா? அவ்வுணர்ச்சி உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களுக்கு தூக்கமில்லாமல் செய்துவிடுகிறதா?

View More தலித் விடுதலைக்குத் தேவை ஹிந்து ஒற்றுமை: சுவாமி விவேகானந்தர்

வருண் வருகையும் சோனியா கலக்கமும்

தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

View More வருண் வருகையும் சோனியா கலக்கமும்