கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடி

பல ஊர்களில் பக்தர்கள் வரவும் பொங்கல் வைத்து வழிபடவும் உருவாக்கப்பட்ட, ஹிந்து சமுதாயத்திற்கு சொந்தமான, குறிப்பாக தலித் சமூகத்திற்கு சொந்தமான பரந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ் நிலையங்களாக மாற்றப்பட்டன… வடபழனி கங்கை அம்மன் கோயில் ஒரு காலத்தில் கிராம கோயிலாக இருந்து, ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டு ”தெருக்கோயிலாக” ஆக்கப் பட்டு விட்டது.. கோயில் துவஜ ஸ்தம்பத்திற்கும் கோயிலுக்கும் நடுவே சாலை போடுகின்றனர் பொதுத் துறையினர், பிறகு அந்த துவஜ ஸ்தம்பத்தை ஆக்கிரமிப்பு என்று அழிக்கின்றனர்… இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அஷ்டலக்ஷ்மி கோயில் தல மரம் வெட்டப்பட்டு அந்த கோயிலிலேயே எரிக்கப்பட்டது..

View More கோயில்கள் புற்றீசல்களா? – தி.க அவதூறுக்கு பதிலடி

கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்

அரசுத் துறையின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் இந்துக் கோவில்களில் சாமி கும்பிடக் கட்டணம் வசூலிப்பது இந்துக் கோவில்களை அழிக்கும் செயலாகும். இதனை எதிர்த்து ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை இந்து முன்னணி தொடங்கியுள்ளது. இதற்கான கையெழுத்துப் படிவம் ஒவ்வொரு மாவட்டத்திலும், அங்குள்ள ஒன்றியங்களிலும் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களிடம் கிடைக்கும். ஆன்மீக அமைப்புகள், பக்தர்கள் பேரவை மற்றும் தெய்வபக்தி கொண்ட அனைவரும் இந்த கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட முன்வரவேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுக்கிறது…

View More கோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)

சாமியை தரிசனம் செய்யவும் கட்டணம் வசூலிப்பதை இந்து முன்னணி கண்டிக்கிறது… காசர்கோடு-மங்களூர் வழித்தடத்திற்காக சாலை போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலை அமைச்சும் அதை இடிக்கவிருப்பதைத் தடுக்கக் கோரி, கட்சி, மதம் கடந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணிகள் நடைபெற்றன… கௌடில்யரின் “அர்த்தசாஸ்திரம்”– இதன் 450 ஆண்டுகள் பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று ஓரியண்டல் ரிசர்ச் இண்ஸ்டிட்யூட், மைசூரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது… ஹிந்துக்களுக்கு இந்நாள்களில் தங்கள் மத, கலாசாரத்தின் மீதான பற்று, அதைக் காக்கவேண்டிய உணர்வு மங்கிவருவதுகுறித்து வருந்தினார்.

View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து பங்கு கொண்டது, ஒரிஸ்ஸா மாநிலத்தில், பூரி மாவட்டத்தில் கோனார்க்கில் கொண்டாடப்பட்ட மகா சப்தமி, “விஞ்ஞானம் – ஆன்மிகம் – சமூக சேவை’ கருத்தரங்கம், பகவத் கீதை வெறும் மத நூல் அல்ல என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பு, தேசியக் கோடி ஏற்ற முயன்ற தலித் ஊராட்சித் தலைவர் தாக்கப் பட்டது, கோவிலில் மணி அடிக்க தடை பற்றி, போஜ்சாலாவில் இந்துக்களின் உரிமை, பார்சல் குண்டு வழக்கில் தீர்ப்பு, அடுத்த ஆண்டு விவேகானந்தர் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம், மேலும் பல செய்திகள்…

View More இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012)

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் – அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது… மேலும் பல செய்திகள்.

View More இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்

கண்டு பிடிக்கப்பட்ட பைப் குண்டு 6 அடி நீளமுள்ளதும், அதனுள் 7 கிலோ டெட்டனேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் [..] இந்த வெடி குண்டை கண்டு பிடித்தது காவல் துறையினர் கிடையாது [..] அத்வானியின் ரத யாத்திரை செல்லும் வழி இஸ்லாமியர்களின் பயங்கரவாத சம்பவங்கள் நடந்த பகுதி என்பதை காவல் துறை கவனிக்கவில்லை [..] முக்கிய பிரமுகருக்கான பயண பாதுகாப்பு திட்டத்திலேயே மதுரை மாவட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் அலட்சியம் காட்டி இருக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் என்ன நிலை ஏற்பட்டிருக்கும் என ஐ.பி அதிகாரியிடம் விசாரித்த போது அவர் கொடுத்த தகவல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. தொடர்ச்சியாக அத்வானியின் உயிருக்கு ஆபத்து என்பதும், இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா, சிமி , இந்தியன் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளால் எந்த நேரமும் ஆபத்து நிகழலாம் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

View More அத்வானி ரதயாத்திரையில் பயங்கரவாத சம்பவம்

தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

எதிரிக்கும் வேண்டாம்; துரோகிக்கும் வேண்டாம்…
ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே!
-ராம.கோபாலன்
நிறுவனர், ஹிந்து முன்னணி.

View More தேர்தல் களம்: வீரத்துறவியுடன் ஒரு பேட்டி

புத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்!

இவ்வருடமும் விஜயபாரதம் பதிப்பகம் பத்துக்கும் மேற்பட்ட கையடக்க இந்துத்துவ பிரசார நூல்களை வெளியிட்டுள்ளது… ஆர் எஸ் எஸ் நேற்று இன்று நாளை (மா.கோ.வைத்யா), சிறந்த அரசாட்சி (நரேந்திர மோடி), மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்), வந்தேமாதரம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் (ஆர்.பி.வி.எஸ்.மணியன்), அயோத்யா ராம ஜன்ம பூமி போராட்ட வரலாறு, ராம ஜன்ம பூமி உரிமைத் தீர்ப்பு…

View More புத்தகக் கண்காட்சியில் புதிய கையடக்க இந்துத்துவ நூல்கள்!

மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

The strength of a chain is determined by its weakest link. நாங்கள் கமல் அண்ட் கோவின் மிகவும் பலவீனமான பகுதி எது என்பதைப் புரிந்து கொண்டோம். எங்களுடன் மோதினால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்தோம்… மிக அருமையான ஒரு பாடத்தை நண்பர் இளங்கோவின் தலைமையில் செயல்பட்ட நண்பர்கள் குழு நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது… அரக்கர்களுடன் மோதுவது வெட்டி வேலை, கிளியைக் கொல்வதுதான் ஒரே வழி.

View More மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி]

மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?

அரசின் சட்டத்தையும் மீறி குமரி முழுதும் முளைத்த சர்ச் தற்போது எதற்காக வேணுகோபால் கமிஷன் அமைக்கப்பட்டதோ, எந்த மதக்கலவரத்தால் தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தைத் திரும்பிப் பார்த்ததோ அந்த மண்டைகாட்டு பகவதி அம்மன் கோவிலின் அருகிலேயே புதிதாக சர்ச் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.

View More மண்டைக்காட்டில் புதிய சர்ச் கட்ட அடிக்கல்?