கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

For the purpose of this review, we will consider all types of antibiotic-resistant bacteria, which are resistant to at least one of the antibiotic groups currently approved by the united states food and drug administration for use in human medicine. For example, you may be given the option clomid online without prescription of taking. Although the diagnosis of ciau has been the standard of care for many years, the definition and diagnosis criteria still need to be revised.

It is a drug with a high potential to have side effects. Generic nolvadex contains the active pharmaceutical ingredient of nolvadex which belongs to the class of https://okangatrumpeters.com/category/MARKETS/ antihistamines, such as phenylethylpropranolol (inderal), phenylephrine hydrochloride, or. Amoxicillin is available in various strengths and dosage forms.

Priligy was originally developed by novartis pharmaceuticals in the late 1990s for the treatment of seizure disorders and depression in adults. It is a type of anti-estrogen, which is a drug commonly prescribed to treat estrogen related symptoms, cost of dexamethasone tablets modestly such as breast cancer, menopausal hot flashes and menopause symptoms. The doctor did say that he would try to add these drugs to my tamoxifen therapy to see how well it works.

ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய  கிறிஸ்துமதச்சேதனம்

பகுதி 1 – பதிஇயல் – இயேசுவின் ஜீவிதம்

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்னும் புனைவு

ஓ கிறிஸ்தவப் பிரச்சாரகர்களே!

யூதர்களால் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த இயேசு தானே உயிர்த்தெழவில்லை, அவரது பிதாவாலே உயிர்த்தெழச்செய்யப்பட்டார் என்று முன்னர் வாதிட்டோம். அதற்குமாறாக ஜெஹோவா என்னும் யூததேவனும் இயேசுவை உயிர்த்தெழச்செய்யவில்லை, சிலுவையில் மாண்ட இயேசு, மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழவே இல்லை என்பதை இங்கே நிருபிப்போம்.

இயேசுவின் உயிர்த்தெழுகையின் முக்கியத்துவம்

உங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, உயிர்த்தெழுந்ததன் முக்கியத்துவத்தைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதைப்பாருங்கள்.

கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்”–                                                    (கொரிந்தியர் 15:17).

இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது கிறைஸ்தவத்தின் அடிப்படையான நம்பிக்கைகளுள் ஒன்று என்பதால் அதைப்பற்றி விரிவாக இன்னொரு நூலை எழுதுகிறேன். ஆகவே இங்கே மிகவும் சுருக்கமாக அதன் பொய்மைத்தன்மையை  நிறுவ முயல்கின்றேன்.

உயிர்த்தெழுந்ததற்கு நேரடி சாட்சிகள் உண்டா?

சிலுவையில் மரணித்த இயேசு உயிர்த்தெழுந்தது உண்மையா, இல்லை பொய்யா என்பதை உறுதிசெய்வதற்கு அந்தகாலத்தில் அந்த நிகழ்வைக் கண்டவர்களின் சாட்சியத்தை ஆராயவேண்டும். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த எல்லா யூதர்களும் இயேசு உயிர்த்தெழுந்தது பொய் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

பைபிளிலே இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சுட்டப்படும் சான்றுகளைப்பார்க்கலாம்.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் நேரடியாகக் கண்டதாக எந்தவொரு அப்போஸ்தலரும் சொல்லவே இல்லை. அதற்குமாறாக, மற்றவர்கள் அதனைக்கண்டதாக சொன்னதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த பதினொரு அப்போஸ்தலர்களும் பின்னர் இயேசுவை நேரடியாகக் கண்டபோது அவரை வணங்கினார்கள். ஆனால் அவர்களுள்ளும் ஒரு சிலர் தாம் கண்டதை நம்பவில்லை.

“அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்”  — (மத்தேயு 28:17).

உயிர்த்தெழுந்தற்குப் பின்னர் இயேசுவைக் கண்ட அவரது பதினொரு சீடர்களுள் மத்தேயுவும் ஒருவர் என்பதை நாம் அறிவோம். ஆனால் தாம் கண்டது இயேசுவையா என்று சந்தேகப்பட்டவர்களுள் அவரும் ஒருவரா என்பதை நாம் அறியமாட்டோம். உண்மையாகவே இயேசுவை அவர் கண்டிருந்தால், இயேசுவைக் கண்டேன் என்று அவர் சொல்லாதது ஏன்? ஆகவே மத்தேயுவும் கூட தாம் கண்ட மனிதர் இயேசுவா என்று சந்தேகப்பட்டவர்களில் ஒருவர் என்பது தெரிகிறது.

Image result for jesus resurrection clipartஅவர்கள் கண்டது இயேசுவைத்தானா, அல்லது வேறு ஒருவரையா? இயேசுவோடு பலகாலம் கூட இருந்தவர்கள், அவருக்கு சேவை செய்தவர்கள்கூட அவர் உயிர்த்தெழுந்ததை சந்தேகப்பட்டார்கள், அவர் உயிர்த்தெழுந்ததை நம்பவில்லை என்றால் 1890(தற்போது 2016) ஆண்டுகளுக்குப் பின்னர் வாழும் நாங்கள் எப்படி அதை நம்புவது?   .

உயிர்தெழுந்த நிகழ்வின் முரண்பட்ட சித்திரங்கள்!

இயேசு உயிர்த்தெழுந்ததை குறிப்பிடும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நற்செய்தியாளர்கள், தமது சுவிசேஷங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட வகையில் அதனை விவரித்திருக்கிறார்கள். இயேசு எவ்வாறு உயிர்த்தெழுந்தார் என்பதைப்பற்றி அவர்களது சித்திரங்கள் தம்முள் முரண்படுகின்றன.

 “வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல், எடுத்துப்போட்டிருக்கக்கண்டாள்”.யோவான் 20:1,

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம்நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்”.                           மத்தேயு 28:1,

ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு. வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து – மாற்கு 16:1-2.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்”.–        மத்தேயு 28:2

அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.  அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.–                  மாற்கு 16:4-5,

“அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்”.–                                           லூக்கா 24:4.

லூக்காவின் சுவிசேஷப்படி அவர்கள் மத்தேயு சொன்ன தேவதூதனையோ அல்லது மார்க் சொன்ன இளைஞனையோ காணவில்லை.

மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்”.–                   யோவான் 20:11-12.

யோவானின் சுவிசேஷப்படி மகதலேனா மரியாள் ஒரு தேவதூதனையோ (மத்தேயு சொன்னபடி) அல்லது ஒரு இளைஞனையோ (மாற்கில் கண்டபடி), அல்லது இருவரையோ (லூக்கா சொன்னபடி) காணவில்லை.

கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள்”.                    லூக்கா 24:9,

நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்”                                      .– மாற்கு 16:8.

அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு, வாழ்க, என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்”.                          மத்தேயு 28:9.

ஆனால் யோவான்(20:14) சுவிசேஷ வசனப்படி மேரி மகதலேனா இயேசுவைத் தொடவில்லை அவர்தான் உயிர்த்தெழுந்து மீண்டுவந்த இயேசு என்பதை உணரவும் இல்லை[i].

       யோவானுடைய நற்செய்திப்புத்தகம் (20:15-19) உயிர்த்தெழுந்த இயேசுவை மேரி மகதலேனா முதன்முதலில் கண்டதாகக் கூறுகிறது[ii]. அதன் பிறகு அவரது 11 சீடர்களும் அவரைக்கண்டதாகவும் யோவான் கூறுகிறார். ஆனால் மத்தேயுவோ (28:16-17) தனது சுவிசேஷத்தில் இயேசுவின் பதினொரு சீடர்களும் உயிர்த்தெழுந்த அவரை முதன்முதலாக கலிலேயாவாவில் சந்தித்ததாக சொல்லுகிறார்[iii].

இயேசு பெத்தானியாவிலிருந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று லூக்கா (24:50-51) சொல்லுகிறார். ஆனால் அவர் ஒலிவ மலையிலிருந்து சொர்க்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று அப்போஸ்தலர் (1:9-12)  அதிகாரத்தில் சொல்லப்படுகிறது.

மத்தேயுவின் (12:40)  சுவிசேஷத்தில் இயேசு மனிதகுமாரனாகிய தான் பூமியின் இருதயத்தில் (கல்லறையில்) மூன்று பகல் மற்றும் மூன்று இரவும் இருப்பேன் என்று தீர்க்கதரிசனம் உரைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மாற்கின் (14:25-46) நற்செய்தியிலோ, அவர் கல்லறையில் ஒரு பகலும், இரண்டு இரவுகளும் வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

நான்கு சுவிஷேசக்காரர்கள் காட்டும் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய சித்திரத்தில் முரண்பாடுகள் காணப்படுவதால், அவர்கள் சொல்லும் இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்புவதற்கில்லை. புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு சுவிஷேசங்களும் புனைவு என்று மறுக்கப்பட்டபிறகு, நிராகரிக்கப்பட்டதற்குப்பிறகு, இயேசு மரணித்துப் பின் உயிர்த் தெழுந்தார் என்பதற்கு வேறு ஆதாரங்கள் உங்களிடம் ஏதும் உள்ளனாவா?

உயிர்த்தெழுந்தார் என்பதில் ஒற்றுமை ஆதாரமாகுமா?

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

நான்கு சுவிசேஷக்காரர்களுக்கிடையே இயேசு எவ்வாறு உயிர்த்தெழுந்தார், யார் அவரைக்கண்டார்கள் என்பதில் அவர்கள் தரும் மாறுபட்ட தகவல்களால் முரண்பாடு காணப்பட்டாலும், இயேசு உயிர்த்தெழுந்ததை ஏகமனதாக அவர்கள் அனைவரும் சொல்லுவதால் அது உண்மையே என நீங்கள் வாதாடலாம். ஆனால் உங்களுடைய அந்த வாதம் சரியானதன்று, நியாயமானதன்று, தர்க்கப்பூர்வமானதுமன்று.

ஒரு எளிய உதாரணம் கொண்டு இதை விளக்குகின்றேன்.

       திருவனந்தபுரத்தில் உள்ள ஆட்டகுளங்கரை என்னும் இடத்தில் ஒரு கடையின் மேஜையின் மீது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு வெள்ளைக்காகம் அமர்ந்திருந்ததைப் பார்த்ததாக ஒருவர் சொல்லுகிறார்.

அதே காலத்தில், அதே வெள்ளைக் காகம், வேம்பயம் என்ற ஊரில், குருப் என்பவரின் இல்லத்தில் கட்டிலின்மீது அமர்ந்து இருந்ததைக் கண்டதாக இரண்டாவமவர் சொல்கிறார்.

 மூன்றாவது நபரோ, அதே வெண்காக்கையை, அதேசமயம் சங்குமுகம் என்ற ஊரிலே பார்த்ததாகச் சொல்லுகிறார்.

கொட்டாரக்கரை என்னும் ஊரில் உள்ள பிரதான ஆலயத்தில் அந்த வெள்ளைக்காகத்தை அதே சமயம் கண்டதாக நான்காவதாக ஒருவரும் சொல்லுகிறார்.

இந்த நான்கு மனிதர்களும் வெள்ளைக்காக்கையைக் கண்டதாகச் சொன்னார்கள் என்பதற்காக வெள்ளைக்காக்கை இருப்பதை நம்புவீர்களா? அப்படி யாராவது சொன்னால் அவர்களைப்பார்த்துச் சிரிக்கமாட்டீர்களா?

இதைப்போன்றதுதான் நீங்கள் நம்புகிற, பரப்புகிற, இயேசுவின் உயிர்த்தெழுதலும். அது நம்பத்தக்கதன்று.

இயேசுவின் அற்புதங்கள் யாவும் கட்டுக்கதைகளே!

       இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் மெய்யாகிலும் தமது வாழ்நாளிலோ அதற்குப்பிறகோ நிகழ்த்தவில்லை என்பதை மேற்கண்ட எமது வாதங்களும், அதற்கான ஆதாரங்களும், நிரூபிக்கின்றன.  சாத்தானைத் தோற்கடித்தது முதல், உயிர்த்தெழுந்ததுவரை — பைபிளில் சொல்லப்படுகிற இயேசுவின் அற்புதங்கள் யாவும் வெறும் கட்டுக்கதைகள், ஆதாரமற்ற புனைவுகள் என்பதை எமது வாதங்கள் நிரூபித்திருக்கின்றன.

 Image result for jews mocking at blindfolded jesus clipartஇயேசுவைக் கைதுசெய்த யூதர்கள் அவரது கண்களைக்கட்டிவிட்டு, கேலிசெய்தனர். கன்னத்தில் அறைந்து, உம்மை அடித்தது யார் என்று கேட்டார்கள். அதற்கு அவரால் எந்த பதிலையும் சொல்லமுடியவில்லை. இயேசுவை சந்தித்தபோது மகிழ்ச்சி அடைந்த ஏரோது மன்னன் ஒரு அற்புதத்தை நிகழ்த்தவேண்டினான். அப்போதும் எந்த அற்புதத்தையும் அவர் நிகழ்த்தவில்லை.

சிலுவையில் அறையப்பட்டபின்னர் யூதகுருமார்களான பரிசேயரும், சதுசேயரும், மூப்பர்களும் இயேசுவைநோக்கி, நீவிர் உண்மையிலே இஸ்ரவேலின் ராஜாவானால் சிலுவையிலிருந்து இறங்கிவந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்! என்று அறைகூவல் விடுத்தனர். அப்போதும் இயேசுவால் சிலுவையிலிருந்து இறங்கிவந்து தன்னுயிரைக்காத்துக் கொள்ளமுடியவில்லையே!

மரக்கட்டையைப்போல எதையும் செய்யாமல்தானே இருந்தாரே இயேசு கிறிஸ்து!

இயேசு தன்மீது கல்லெறியப்பட்டபோதும், மலை முகட்டிலிருந்து தள்ளிக் கொலைசெய்ய முயற்சிசெய்யப்பட்டபோதும் அதிலிருந்து கள்ளத்தனமாகத் தப்பிச் சென்றதை ஓர் அற்புதமாக நீங்கள் சொல்லலாம். அப்படியானால் மறைந்து செல்லும் அந்தத் தெய்வீக ஆற்றலை சிலுவையில் அறையப்பட்டபோது இயேசு ஏன் பயன்படுத்தவில்லை? தன்னுயிரைத் தற்காத்துக்கொள்ள அவரால் முடியாதது ஏன்?  தன்னைப்பிடிக்கவந்த சேவகர்களிடமிருந்து தப்பித்து ஒளிந்துகொள்ளுவது இயேசுவுக்கு ஒரு வழக்கமாகவே இருந்திருக்கிறது. எனவேதான் மிகச் சாதூர்யமாக இயேவை அவர்கள் பிடித்துக் கைதுசெய்தனர்.

அந்த நாளில் தான் கைதுசெய்யப்படவேண்டும் என்று தமது தந்தையாகிய பரமபிதா முடிவு செய்திருந்தார், அதனாலேயே இயேசு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிசெய்யாமல் கைதானார் என்று நீங்கள் வாதாடலாம். அப்படியானால் எல்லா மனிதருக்கும் தெய்வீக இயல்புகளோடு மானுடத்தன்மைகளும் இருக்கின்றன என்றே முடிவு செய்யவேண்டியிருக்கும். எல்லா மனிதர்களும் கடவுள் என்றுதான் நாம் கருதவேண்டும்.

அற்புதங்கள் செய்வோரெல்லாம் ஆண்டவரா?

 புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷங்களில் காணப்படும் எல்லா அற்புதங்களையும் இயேசு செய்தார் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும்கூட, அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மோசே, ஜோசுவா, எலிசா, போன்ற — இயேசுவுக்கு முன் வாழ்ந்த யூததீர்க்கதரிசிகளும் பலப்பல அற்புதங்களை நிகழ்த்தியதாக பழைய ஏற்பாடு சொல்லுகிறது.

மேலும் பழைய ஏற்பாட்டின் யாத்திராகமத்தில் (7&8), ஜெஹோவாவின் அருளால் மோசே அற்புதங்கள் நிகழ்த்தியபோது — அதைப்போன்றும், அதனினும் விந்தையான சித்துவேலைகளை எகிப்திய மன்னனான பாரோவின் மந்திரவாதிகள் செய்து காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

யூதப்பெருந்தேவனான ஜெஹோவாவை நம்பாத அந்த எகிப்திய அரசவை மந்திரவாதிகள் கைத்தடியை பாம்பாக மாற்றுதல், தண்ணீரை இரத்தமாகச் செய்தல், தவளைகளை வரச்செய்தல் போன்று பல சித்துவேலைகளை பார்வோனின் முன்னிலையில் செய்ததாக யாத்திராகமம் (7 & 8) கூறுகிறது. கடவுளை நம்புவோரோ நம்பாதவரோ யார் வேண்டுமானாலும் அற்புதங்கள் என்று சொல்லப்படுகிறவற்றை, செப்படிவித்தைகளைச் செய்யமுடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது. அற்புதங்களை செய்வோரெல்லாம் கடவுளாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆதலால் இயேசு தேவன் அல்ல என்பதும் புலப்படுகிறது.

மேலும் மத்தேயு (24:24) சுவிசேஷம் சொல்கிறது

ஏனெனில், கள்ளக் கிறிஸ்துகளும் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்”.

எனவே, அற்புதங்கள் செய்கிறார்கள் என்பதற்காக யாரையும் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. ஆனால், அத்தகையவர்களை கடவுளின் பக்தராகவோ அல்லது எதிரியாகக் கருதுவதில் தவறேதும் கிடையாது. பைபிளை ஆழமாக ஆராய்ந்து பார்க்கின்றபோது, இயேசுவைக் கடவுளென்று கருதுவதற்கு எந்தவோர் ஆதாரமும் அதில் கிடையாது என்பது தெளிவாகத்தெரிகின்றது.

இயேசுவின் மரணத்திற்குப் பின்பு நிகழ்ந்தது என்ன?

தர்க்கபூர்வமான வாதங்களின் மூலம் இயேசு தனது மரணத்திற்குப்பின்பு உயிர்த்தெழவில்லை என்பதை எடுத்துக் காட்டினோம். அவரது மரணத்திற்குப்பின்னர் நிகழ்ந்தது என்ன என்று பைபிள் கூறுவதை ஆராய்வோம்.

பாவிகள் அனைவரது உறைவிடமாக நரகம் (ஹெல்) இருக்கின்றது என்று பைபிள் கூறுகின்றது. அனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி.

நரகத்திற்கு சென்றவர்கள் மீண்டுவருவதில்லை என்பது கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருப்பதால், நரகத்துக்குச் சென்ற இயேசு அங்கிருந்து வெளியேவந்திருக்க வாய்ப்பில்லை.

எமது இந்த வாதத்தினை யோவான் (20:17) வசனம் ஊர்ஜிதப்படுத்துகின்றது.

இயேசு அவளிடம், “என்னைத்தொடாதே, நான் இன்னும் என் பிதாவிடம் திரும்பிச்செல்லவில்லை,” என்றார் என்கிறது அந்த வசனம். சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது.

இயேசுவுக்கு சொல்லப்படும் பொருந்தாப் பெயர்கள்!

எனவே, புதிய ஏற்பாட்டிலுள்ள சுவிஷேசங்களில் இயேசுவுக்கு வழங்கப்பட்டுள்ள பெயர்கள் அவருக்கு எந்தவகையிலும் பொருந்தாதவையே!

 1. ஆண்டவர், தேவன் (யோவான் 20:28)[iv],
 2. இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம் (மத்தேயு 1:23)[v],
 3. என்றென்றைக்கும் சிம்மாசனம் உள்ள தேவன் (எபிரேயர் 1:8)[vi],
 4. இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5)[vii],
 5. நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவர் (1 திமோத்தேயு 1:19)[viii],
 6. நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதி, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா (1 திமோத்தேயு 6:15)[ix],
 7. தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்த தேவன் (1 யோவான் 3:16)[x],
 8. தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தேவன் (அப்போஸ்தலர் 20:28)[xi],
 9. மகாதேவன் (தீத்து 2:13)[xii],
 10. மாமிசத்திலே வெளிப்பட்ட தேவன் (1 தீமோத்தேயு 3:16)[xiii],
 11. மெய்யான தேவன், நித்திய ஜீவன் (1 யோவான் 5:20)[xiv],
 12. வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு (ஏசாயா 9:6)[xv],
 13. ஆதியிலே இருந்த தேவவார்த்தை (யோவான் 1:1)[xvi],
 14. கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜாவான ஆட்டுக்குட்டி (வெளிப்படுத்தின விசேஷம் 17:14)[xvii],
 15. கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் (லூக்கா 2:11)[xviii],
 16. இருக்கிறவரும், இருந்தவரும், வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)[xix],
 17. இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தர் (1 கொரிந்தியர் 8:6)[xx],
 1. மகிமையின் கர்த்தர் (1 கொரிந்தியர் 2:8)[xxi],
 2. மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர் மேலும் ஆண்டவராயிருப்பவர் (ரோமர் 14:9)[xxii],
 3. வானத்திலிருந்து வந்த கர்த்தர் (1 கொரிந்தியர் 15:47)[xxiii],
 4. ஆல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் (வெளிப்படுத்தின விசேஷம் 22:13)[xxiv],
 5. சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் (வெளிப்படுத்தின விசேஷம் 3:14)[xxv],
 6. ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா (வெளிப்படுத்தின விசேஷம் 19:16)[xxvi],
 7. எப்போதும் மாறாதவர் (எபிரேயர் 1:12)[xxvii],
 8. உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவர் (வெளிப்படுத்தின விசேஷம் 2:23)[xxviii],
 9. எல்லாவற்றிற்கும் முந்தினவர் (கொலோசெயர் 1:17)[xxix],
 10. எல்லாவற்றையும் அறிந்திருக்கிறவர் (யோவான் 16:30)[xxx],
 11. சகலத்தையும் சிருஷ்டித்தவர் (கொலோசெயர் 1:16)[xxxi],
 12. சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளிப்படுத்தின விசேஷம் 1:8)[xxxii],
 1. நித்திய பிதா (எசாயா 9:6)[xxxiii],
 2. ராஜா (எரேமியா 23:5)[xxxiv],
 1. அவரவருடைய கிரியைகளின்படி அவனவருக்கு அளிக்க பலன் அளிப்பவர்(வெளிப்படுத்தின விசேஷம் 22:12)[xxxv],
 2. பூமியிலே பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ள மனுஷகுமாரன் (மத்தேயு 9:6)[xxxvi],
 3. இறந்தவரை உயிர்ப்பித்து எழுப்ப வல்லவர்(யோவான் 6-54)[xxxvii],
 4. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பவர் (எபிரேயர் 13:8)[xxxviii],
 5. முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் (வெளிப்படுத்தின விசேஷம் 22:13)[xxxix],
 6. உன்னதமானவர் (லூக்கா1:76)[xl],

ஓ கிறிஸ்தவப்பிரச்சாரகர்களே!

இயேசுவை தேவன் என்று நிருபிக்க நீங்கள் செய்த பொய்யான, அறிவுக்கு முரணான வாதங்களையும் — நடக்காத அற்புதங்களுக்கு நீங்கள் காட்டிய ஆதாரங்களையும் பார்க்கின்றபோது — இவற்றையெல்லாம் வைத்து எந்தவொரு சாமானிய மனிதரையும் கடவுள் என்று நிரூபித்துவிடலாமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இதுபோன்ற பொய்யான கட்டுக்கதைகளைத் தற்காலிக லாபம் ஈட்டுவதற்கு நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் உங்களது புனைவுகளைக் கேட்பவர்கள் அறிவில்லாமல் உங்களை நம்புவார்களா?   நிச்சயமாக இல்லை.

 அன்பர்களே!

இந்தப் பகுதியில், கிறிஸ்தவர்களின் கர்த்தர் மீட்பர் என்று போற்றும் இயேசுவின் அற்புதங்களில் மிகமுக்கியமானதான அவரது உயிர்த்தெழுதல் தர்க்கப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகளால் மறுக்கப்பட்டதைக் கண்டோம். இயேசு கிறிஸ்து செய்ததாக சொல்லப்பட்ட அற்புதங்கள் யாவுமே கட்டுக்கதை, புனைவு என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் நிராகரித்தனையும் கண்டோம். பைபிளில் அப்போஸ்தலர்கள் சொல்லும் இயேசுவின் துதிநாமங்களின் பொய்மை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளால் கட்டுடைக்கப்பட்டதையும் பார்த்தோம்.

அடுத்த பகுதி பதியியலின் நிறைவுப்பகுதியாக அமைகின்றது. அதில் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான நியாயத் தீர்ப்புநாள், பரிசுத்த ஆவி மற்றும் திரித்துவம் ஆகியவற்றினைக் கேள்விக்குட்படுத்தி நிராகரிப்பதைக்காண்போம்.

(தொடரும்)

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> 

குறிப்புகள்:

[i] யோவான்(20:14)  இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.

[ii]  இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.  இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். 

வாரத்தின் முதல்நாளாகிய அன்றைய தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

[iii]   பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.

[iv]  யோவான் (20:28) தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.

[v] மத்தேயு (1:23)  “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்”.

[vi] எபிரேயர் (1:8) “ஆனால் தேவன் தம் குமாரனைப் பற்றிச் சொல்லும்போது, “தேவனே! உமது சிம்மாசனம் என்றென்றைக்கும் உள்ளது. சரியான தீர்ப்புகளால் உமது இராஜ்யத்தை நீர் ஆள்வீர்”.

[vii]  ரோமர் (9:5) பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.

[viii] தீமோத்தேயு (1:17)  “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்”.

[ix] தீமோத்தேயு (6:15) “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்”.

[x] யோவான் (3:16) “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்”.

[xi] அப்போஸ்தலர் (20:28) “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்”.

[xii] தீத்து (2:13) “ நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது”.

[xiii]தீமோத்தேயு (3:16) “அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்”.

[xiv]யோவான் (5:20) “அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்”.

[xv]ஏசாயா (9:6) “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்”.

[xvi]யோவான் (1:1) “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”.

[xvii] வெளிப்படுத்தின விசேஷம் (17:14) இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணுவார்கள்; ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

[xviii] லூக்கா (2:11} “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”.

[xix] வெளிப்படுத்தின விசேஷம் (1:8) “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்”.

[xx] கொரிந்தியர் (8:6)  “பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்”.

[xxi] கொரிந்தியர் (2:8) “ அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே”.

[xxii] ரோமர் (14:9) “கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்”.

[xxiii] கொரிந்தியர் (15:47) முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர்.

[xxiv] வெளிப்படுத்தின விசேஷம் (22:13) “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்”.

[xxv] வெளிப்படுத்தின விசேஷம் (3:14) “ லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது”.

[xxvi] வெளிப்படுத்தின விசேஷம் (19:16) “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது”.

[xxvii] எபிரேயர் (1:12) “ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது”.

[xxviii] வெளிப்படுத்தின விசேஷம் (2:23) “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்”.

[xxix] கொலோசெயர் (1:17) “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது”.

[xxx] யோவான் (16:30) “நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்”.

[xxxi] கொலோசெயர் (1:16) “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது”.

[xxxii] வெளிப்படுத்தின விசேஷம் (1:8) “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்”.

[xxxiii] நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம்அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

[xxxiv]  எரேமியா (23:5) “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்”.

[xxxv]  வெளிப்படுத்தின விசேஷம் (22:12) “இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது”.

[xxxvi]  மத்தேயு (9:6) பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்.

[xxxvii] யோவான் (6:54) “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்”.

[xxxviii] இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

[xxxix] வெளிப்படுத்தின விசேஷம் (22:13) “நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்”.

[xl] லூக்கா(1:76)  நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,