பாரதம் பாரதியின் கனவான சந்திர மண்டலத்தியலைக் கண்டு தெளிந்ததுடன் இன்று செவ்வாய் மண்டலத்தையும் கண்டு தெளிய நெருங்கியுள்ளது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
You also need to buy prednisone without a prescription to follow your pet’s condition closely. Tamoxifen pills should not be taken at the same time as the tamoxifen clomid price walmart Panagyurishte capsules or when taking birth control pills. Yes, please be so kind to drink a bit when eating a meal and not overdo it.
Keep all appointments with your doctor and pharmacist. Sporanox interferisce con la pillola clomid prescription cost di alimentazione e la protezione all’aria aperta nella campagna a livello europeo. We are not responsible for the information published on it.
These side effects of neurontin are most likely present in all alcohol brands. I'm on a zithromax zithromax purchase over the counter in uk prescription Pyin Oo Lwin clomid prices in kenya for 3 months. It is set to 1 when the time is between 00:00 and 23:59.
இந்தியாவின் வரலாற்றில் இந்த வருடத்தில் இன்னும் ஒரு பொன்னாள் அது இந்நாள். மே 16 அன்று இந்தியா ஒரு வரலாறு படைத்தது. முதன் முதலாக தனிப் பெரும்பான்மையுடன் நேருவின் கொள்ளைக்காரக் குடும்பத்தினர் அல்லாத ஒரு முதுகெலும்புள்ள தன்னலமற்ற ஒரு மாபெரும் தலைவரை தன்னை ஆள்வதற்குத் தேர்ந்தெடுத்தது. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மே 16க்கு அடுத்ததாக இன்று செப்டம்பர் 24 அன்று இந்தியா உலக அளவில் தன்னை ஒரு அறிவியல் முக்கியத்துவமுள்ள தேசமாக முன்னிறுத்தியுள்ளது.
இந்தியா வானியல் ஆராய்ச்சியில் பல ஆயிரம் வருடங்கள் முன்ணணியில் இருந்து வரும் ஒரு தேசமாகும். இந்தியாவின் வானியல் ஆராய்ச்சிகளின் வேர்கள் அதன் இந்து மதத்தில் புதைந்துள்ளன. வேதங்களில் இருந்தே வான சாஸ்த்திரம் ஒரு அறிவியல் சாஸ்திரமாக வளர்ந்து வருகின்றது. டெலஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப் படுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே வானியல் நிகழ்வுகளை இந்தியாவின் அறிஞர்கள் துல்லியமாகக் கணக்கிட்டு பஞ்சாங்கங்களாகப் பதிந்து வைத்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இந்தியா செவ்வாய் கிரகத்தின் பாதைக்கு தனது கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறது.
இந்தியாவின் ஐ எஸ் ஆர் ஓ விஞ்ஞானிகள் ஆர்யபட்டா, பாஸ்கரா, வராஹ மிஹிரா போன்ற இந்திய வானியல் அறிஞர்களின் பாதையில் இந்தியாவின் வானியல் சாஸ்திரங்களின் முன்னேற்றங்களை அதன் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பாரதத்தின் பழம்பெரும் பாரம்பரியத்தின் தொடர்ச்சிக் கண்ணியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்திய வானவியல் குருமார்களுக்கு இன்றைய இந்திய விஞ்ஞானிகள் தங்களது குரு காணிக்கையை இன்று அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்நாளே இந்தியாவின் உண்மையான குரு உத்சவ் ஆகும். கொண்டாடப் பட வேண்டிய ஒரு நிகழ்வு. இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
கடந்த பல வருடங்களாக இந்தியாவின் மக்களும் அதன் இளைய தலைமுறையினரும் இந்தியாவில் தொடர்ந்த மாபெரும் ஊழல்களினாலும், அரசாங்கங்களின் பலவீனங்களினாலும், அந்நியர்கள் ஆட்சியைப் பிடித்து வைத்துக் கொண்டு அடித்த கொள்ளைகளினாலும் மனம் துவண்டு, நம்பிக்கையிழந்து, சோர்ந்திருந்தனர். பாரத தேசமே பாழ்பட்டு நின்று கொண்டிருந்த ஒரு நிலையில் அதை மீட்டெடுக்கும் முதல் முயற்சியாக இந்திய தேசமே ஒன்று சேர்ந்து நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்தது. அது இந்திய மக்களின் உறுதியான தன்னம்பிக்கையின் வெளிப்பாடு. அவர்களது அயர்வையும் சோர்வையும் போக்கி தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு உற்சாக நிகழ்வாக இன்று இந்த செவ்வாய்க் கிரக கோள் அதன் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
இந்த வெற்றி ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் புது நம்பிக்க்கை ரத்தத்தைப் பாய்ச்சக் கூடியது. இளைஞர்களிடமும் மாணவர்களிடத்தும் பெரும் தன்னம்பிக்கையை ஊட்ட வல்லது. இதன் அறிவியல் பூர்வமான வெற்றியை விட இந்த வெற்றி இந்தியாவின் தளர்ந்து கிடந்த தன்னம்பிக்கையை நிமிர்ந்து நிற்க வைத்துள்ளதே இதன் முக்கியமான விளைவு ஆகும். இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு இது. கடந்த சில தினங்களாக அமெரிக்க வானொலிகளிலும் டி விக்களிலும் இந்தியாவின் இந்த செவ்வாய் கிரக திட்டம் வெகுவாகப் பேசப் பட்டது. அனைவரும் அதன் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்கா, ஐரோப்பிய முயற்சிகளை அடுத்து இந்தியா இதைச் சாதித்துள்ளது அதுவும் குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல. இந்தியாவின் பாரம்பரிய அறிவின் தொடர்ச்சி.
********
இந்தியாவில் விவசாயிகள் எலிகளைத் தின்கிறார்கள், கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா? குடிக்கக் கஞ்சி இல்லை கொப்பளிக்கப் பன்னீரா என்றெல்லாம் நமது இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்திய தேசீய விரோதிகளான கம்னியுஸ்டுகளும், இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவே எப்பொழுதும் போராட்டங்கள் நடத்தி வரும் கூலிப் படையினரான உதய குமார், முத்துகிருஷ்ணன், “பூவுலகின் நண்பர்கள்” (எதிரிகள்?) போன்றவர்களும் எப்பொழுதுமே இந்தியாவின் அறிவியல் முயற்சிகளை மட்டமாகவே பேசியும் எழுதியும் வருகிறார்கள். இந்தத் தேசத் துரோகிகள் அந்நிய நாடுகளிடம் நிதி பெற்றுக் கொண்டு இந்தியாவின் அணு சக்தி முயற்சிகளையும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளையும், செயற்கைக் கோள் முயற்சிகளையும் எப்பொழுதும் எதிர்த்தே பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய விஞ்ஞானிகளுக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்க விரும்பும் மக்கள் இந்தத் தேசத் துரோகிகளை கடுமையாக கண்டனம் செய்து அவர்களை புறக்கணிக்க வேண்டும்.
இந்தியா அடிப்படை ஆராய்ச்சிகளிலும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளிலும் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு செய்யும் இந்த புரட்சிகளின் பிரச்சினைதான் என்ன? அந்த நிர்மூடர்களின் கேள்விகளுக்கான எனது எளிய பதில்:
இந்தியாவின் பெரும்பாலான நடுத்தரவர்க்கமும் ஏழைகளும் கூட தங்களுக்கு உருப்படியான ஒரு வீடோ வாகனமோ அடிப்படை வசதிகளோ ஏன் தேவையான உடைகளோ இல்லாத போதிலும் கூட தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களின் படிப்புக்கு கடன் வாங்கியாவது தங்களது சுகங்களையெல்லாம் தியாகம் செய்தாவது கஷ்டப் பட்டுப் படிக்க வைப்பார்கள். அந்தப் பெற்றோர்களுக்கு சரியான வீடு இருக்காது, உருப்படியான ஒரு இரு சக்கர வாகனம் கூட இருக்காது நல்ல துணிமணிகள் இருக்காது விருந்துகள் உண்ண வாய்ப்பிருக்காது சுற்றுலாப் போக வசதிகள் இருக்காது இருந்தாலும் இருந்தாலும் தங்களை விட தங்கள் வாரிசுகள் இன்னும் ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே இந்தியப் பெற்றோர்கள்.
ஒரு குடும்பத்தில் ஆயிரம் சிரமங்கள் இருக்கும். ஆயிரம் தேவைகள் இருக்கும். இருந்தாலும் குடும்பத் தலைவர் சில அவசிய அவசர காரணங்களுக்குச் செலவு செய்வார். உதாரணமாக என் அப்பா எலக்ட்ரீஷியனாக இருந்தார். பகலில் எஞ்சீனியரிங் காலேஜில் எலக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ரக்டர் வேலை இரவில் வீடுகளுக்கு வயரிங் செய்வது ஃபேன், மோட்டார்கள் ரிப்பேர் செய்வது என்று இரட்டை வேலைகள் பார்த்து அந்த சொற்ப வருமானத்தில் எங்களை வளர்த்து வந்தார். ஒரு சின்ன முன் ரூமும் குளியல் அறையும் சமையல அறையும் சேர்ந்த ஒரு சின்ன பின் ரூமும் உள்ள ஒரு வீட்டில் குடித்தனம் இருந்தோம். மாதம் 120 ரூபாய்கள் அல்லது அதற்கும் குறைவான சம்பளம் தான். மிகவும் சிரமமான கஷ்ட ஜீவனம் தான். இருந்தாலும் தினமணி, துக்ளக், கலைக் கதிர், மஞ்சரி,கோகுலம், கல்கி ஆகிய பத்திரிகைகளுக்கு எப்படியாவது சந்தா கட்டி வரவழைத்து விடுவார். எங்களையெல்லாம் நல்ல பள்ளிக் கூடத்தில் கெஞ்சிக் கூத்தாடி சேர்த்துப் படிக்க வைத்தார். அக்கம் பகக்த்தில் இருப்பவர்களும் உறவினர்களும் ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் பொழுது இந்த பத்திரிகைகள் எல்லாம் எதற்கு வீண் செலவு என்று சொல்வார்கள். இருந்தாலும் அதற்கான செலவுகளைச் செய்தே தீருவார். நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் குறைந்த விலையில் போடப் படும் சோவியத் குழந்தைகள் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார். ரன் அண்ட் மார்ட்டின், லிஃப்கோ டிக்ஷனரி, அட்லஸ் ஆகியவற்றை வாங்கி வருவார். இதெல்லாம் செலவுகள் தான். கஷ்ட ஜீவனத்தின் பொழுது தேவையற்ற ஆடம்பர செலவுகள் என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால் அவர் பிடிவாதமாக அவற்றை நிறுத்த மறுத்து விட்டார். இத்தனைக்கும் பெரிதாகப் படித்தவர் கிடையாது. தன் பிள்ளைகள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டவர். அந்த பத்திரிகைகள் அவர்களுக்கான அறிவு முதலீடு என்று நினைத்தவர்.
அப்படிதான் ஒரு தேசமும் நினைக்க வேண்டும். கக்கூஸ்கள் அவசியம் தேவைதான், அனைவருக்கும் சோறு அதை விட முக்கியம் தான். நல்ல பள்ளிக் கூடங்களும் சாலைகளும் மருத்துவ மனைகளும் தரமான குடி தண்ணீரும் இன்னும் முக்கியமானவைதான். ஆனால் அவற்றையெல்லாம் செய்து விட்டுத்தான் ராக்கெட் விடுவோம் என்றால் இந்தியா அடுத்த நூற்றாண்டில் கூட ராக்கெட் விட முடியாது. என் அப்பா தான் குடியிருக்க வீடு வாங்கிய பின்னர்தான் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் தான் என் அம்மாவுக்கு நகைகள் வாங்கிய பின்னர் தான் எங்களுக்கு எல்லாம் நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்த பின்னர்தான் எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படித் தள்ளிப் போடவும் முடியாது. இதைத்தான் ஒரு அரசாங்கமும் செய்யும். முன்னுரிமைகள் கோரும் பல்வேறு துறைகளில் அறிவுசார் துறைகளுக்கும் குறைந்த பட்ச நிதியுதவி கூடச் செய்யாமல் ஒரு நாடு முன்னேற முடியாது.
தன்னை விடத் தன் குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலாக முன்னேற வேண்டும் என்ற சராசரி இந்தியப் பெற்றோர்களின் அக்கறையையே நாம் இந்திய அரசாங்கத்தின் அறிவியல் ஆராய்ச்சி முதலீடுகளிலும் காண்கின்றோம். அவ்வாறுதான் இந்திய தேசமும் நினைத்துச் செயல் படுகிறது. இந்தியாவில் இன்று அடிப்படைத் தேவைகளுக்கான கட்டுமானங்கள் இல்லை என்பது உண்மைதான். இந்தியாவில் உருப்படியான கழிவறை வசதிகள் இன்னும் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கப் படவில்லை என்பது உண்மைதான். இந்தியாவின் அனைத்து மக்களுக்கு இன்று வரை தரமான தண்ணீரும் இருப்பிடமும் சுகாதாரமும் அடிப்படைக் கல்வியும் அளிக்கப் படவில்லை என்பதும் உண்மைதான். இருந்தாலும் இந்தியா பாரம்பரியமாக ஒரு அறிவுசார் நாடு. கல்விக்கும் ஞானத்துக்கும் முக்கியத்துவம் வழங்கிய நாடு. எந்த வறுமையில் இருந்தாலும் அதன் அறிவுத் தேடலை அதனால் முற்றிலுமாக நிறுத்தி வைத்து விட்டு பிற தேவைகளை பூர்த்தி செய்ய அதன் இயல்பு அனுமதிக்காது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஒன்றாம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரும் ஒரு தேசத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்வது கடைந்தெடுத்த அறிவிலித்தனம் மட்டுமே. மூர்க்கமும் மூடத்தனமும் நிறைந்தவர்களால் மட்டுமே அவ்வாறு உளற முடியும்
இந்தியா செவ்வாய்க்கு ஒரு கோளை அனுப்பி வைப்பதினால் அதன் மக்களுக்கு நேரடியாக எந்தவிதப் பயன்களும் இல்லாமல் போகலாம். அதன் ஆராய்ச்சியாளர்களுக்குக் கூட எந்தவிதமான உருப்படியான கண்டுபிடிப்புகளையும் அது அளிக்காமல் போகலாம் ஆனால் இந்த முயற்சி தந்திருக்கும் மறை பயன்கள் அளப்பரியவை. அவற்றை இந்த மூடர்கள் புரிந்து கொள்ள முயல்வதில்லை. இந்தியாவின் வளர்ச்சியை முன்னேற்றத்தை எந்தவிதத்திலும் எதிர்ப்பதே இந்த அந்நியக் கைக்கூலிகளின் ஒரே வேலை.

இந்த செவ்வாய் கிரக ஆராய்ச்சியினால் விளையவிருக்கும் மறைமுகமான பயன்களில் சிலவற்றை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளேன். இதன் மறைமுக பயன்கள் இன்னும் ஏராளமானவை. அவற்றை நம்மால் இப்பொழுதே அறுதியிட்டுத் தீர்மானமாகச் சொல்லி விட முடியாது. ரிட்டர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட் என்று பார்த்தால் இது ஒரு புத்தி கொள்முதல். அறிவுசார் முதலீடு. இதன் எதிர்காலப் பயன்கள் அளப்பரியவை.
1. உலக நாடுகளில் இன்று இந்தியா பிரமிப்புடன் அணுகப் படும். மோடி அமெரிக்காவில் இறங்கும் பொழுது அவரை பிற நாட்டுத் தலைவர்கள் சற்று மரியாதையுடனேயே அணுகுவார்கள்.
2. இந்தியாவில் அறிவியல் துறைக்கும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க எதிர்ப்பு இருக்காது. தாராள நிதியுதவி அளிக்கப் படும். தடைகள் நீக்கப் படும்.
3.தேனியில் துவக்கப் பட்டுள்ள நியூட்டிரினோ ஆராய்ச்சி நிலையத்திற்கான எதிர்ப்புக் குரலுக்கு ஆதரவு பெருகாது. அதன் வேலைகள் இனி வேகப் படுத்தப் படும்.
4. இந்தியா முழுவதும் இந்திய விஞ்ஞானிகள் மீது அபிமானமும் பெரும் மரியாதையும் உருவாகும். அணு நிலையங்கள் எதிர்க்கப் படும் பொழுது விஞ்ஞானிகளின் குரல்களுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள் உதயகுமார் போன்ற ஆட்கள் சொல்வதை விட விஞ்ஞானிகள் சொல்வது காது கொடுத்துக் கேட்க்கப் படும்.
5.விண்வெளி ஆராய்ச்சியிலும் பிற அடிப்படை அறிவியல் துறைகளிலும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்கும். இந்திய விண்வெளி நிலையங்கள் மூலமாக தங்கள் நாடுகளுக்கு சாட்டிலைட்கள் செய்து கொள்வதும் அவற்றை விண்ணில் ஏவுவதற்கும் பல நாடுகள் நம்பிக்கையுடன் முன் வரும். ஆர்டர்கள் வரும். முதலீடுகள் பெருகும்
6. இந்திய மாணவர்க்ளிடத்தில் விஞ்ஞானப் படிப்புகளிடம் புதிய ஆர்வம் ஏற்படும்.
7. இந்திய வானவியல் சாஸ்திரங்கள் குறித்தும் அவற்றின் வேத காலம் தொட்டு செய்யப் பட்டுள்ள கண்டுபிடிப்புகள் குறித்தும் உலகளாவிய புதிய ஆர்வம் ஏற்படும். நமது பாரம்பரிய அறிவியல் சாஸ்திரங்கள் வேதங்கள் குறித்து மக்களிடம் மரியாதையுணர்வு அதிகரிக்கும்
8. மோடி இந்த வெற்றியைப் பயன் படுத்திக் கொண்டு தனது மேக் இன் இண்டியா கோஷத்தை முன்னெட்டுத்துச் செல்வது எளிதாக இருக்கும்
9. மக்களிடம் தாழ்வுற்றிருந்த தன்னம்பிக்கையும் சோர்வும் நீங்கி ஒரு புது நம்பிக்கை ஒளி பிறக்கும்
10. விண்வெளி ஆராய்ச்சிகள் சாட்டிலைட்டுகள் தொடர்பான உப தொழில்கள் இந்தியாவில் அதிகரிக்கும்
இன்னும் ஏராளமான மறைமுகமான உபரிப் பலன்கள் இதன் மூலம் நிகழும்.
இதெல்லாம் உடனே நாளையே நடக்க வேண்டும் என்பதில்லை. இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். இது ஒரு நல்ல துவக்கத்தை அளித்துள்ளது. விண்வெளியைப் பொருத்தவரை முதலில் வெற்றி பெறும் நாடுகள் கவனிப்பையும் மரியாதையையும் பெறுகின்றன. அமெரிக்காவின் ஆர்ம்ஸ்ட்ராங் முதல் மனிதராக முதல் அமெரிக்கராக சந்திரனில் கால் பதித்த பொழுது அரசியல் ரீதியாக அது அமெரிக்காவுக்கு சோவியத்தை விட பெரும் தார்மீக வெற்றியுணர்வை அளித்தது. அது போலவே சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனுமான எல்லை தகறாறுகளிலும் அரசியல் போட்டிகளிலும் இந்தியாவுக்கு இந்த வெற்றி ஒரு தார்மீக வலுவை அளிக்கும்
இதெல்லாம் இந்தியாவின் இடதுசாரி சீனக் கைக்கூலிகளுக்கும் ஜிஹாதிகளிடம் கூலி வாங்கிக் கொண்டு மாரடிக்கும் போலி புரட்சியாளர்களுக்கும் புரியப் போவதில்லை. சிந்தனைத் திறன் உடைய எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்த அற்பப் பதர்களை புறக்கணிக்கவே செய்வான்.
(ச. திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)