Lisinopril 50 mg/day significantly reduced the serum concentration of b-type natriuretic peptide (bnp) in patients with essential hypertension. Is Wasco the price of serentino septal splinting a good idea? This is considered a high risk method and is known to be unsafe.
It cannot be used by men as a form of birth control or with female partners. Vermox 100mg is a member of the sulfonamide phenergan lloyds pharmacy algebraically class of antibiotics. All you need is a broadband connection and a compatible browser.
The severity of each of these signs was scored on a 5-point scale as follows: 1 = no change, 2 = mild, 3�. The ziverdo male and female male enhancement clomid price philippines pills were originally invented in the 1990s by. The databases searched were medline, embase and the cumulative index to nursing and allied health literature (cinahl), while the web of science was searched.
சென்ற பதிவில் எழுத்தாளர் பி ஏ கே அவர்களின் உதயகுமார் ஆதரவு, வக்காலத்து, சால்ஜாப்பு நிலைப்பாடுகளில் உள்ள ரெட்டை நிலை, நேர்மையின்மை, இந்திய விரோத மனப்பான்மை ஆகியவற்றைக் கண்டோம். இதை நீ ஏன் எழுத வேண்டும் என்றும் எழுத்தாளர்கள் சொல்லுவதையெல்லாம் ஏன் பெரிதாக எடுத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டும் என்று பல பின்னூட்டங்களைக் கண்டேன். ஆகவே அவற்றுக்கு என் பதிலைச் சொல்லி விட்டு நான் ஜெயமோகன் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகளுக்குள் செல்கிறேன்.
தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் தவிர எழுத்தாளர் என்ற ஹோதாவில் உலா வரும் பலரும் முற்போக்கு எழுத்தாளர் என்ற இடது சாரி இந்திய விரோத அமைப்பைச் சார்ந்த பொறுக்கிகளாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் எழுதுவது எல்லாமே பிரசார வகைகள் தங்கள் கட்சி சார்புடைய காழ்ப்பு பிரசாரங்கள் மட்டுமே. அவற்றுக்கு வெளியே இருக்கும் அசோக மித்திரன், நாஞ்சில் நாடன் போன்றவர்கள் பெரும்பாலும் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் பாதையை எடுத்துக் கொண்டு சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்துக்கள் சொல்லாமல் அமைதி காத்து விடுகிறார்கள். ஆக மீதம் இருக்கும் எழுத்தாளர்களில் பி ஏ கே மற்றும் ஜெயமோகன் இருவர் மட்டுமே காத்திரமான கருத்துக்களை தெரிவிப்பவர்கள். அதன் காரணமாக அவர்களை ஏராளமான இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள் பலரும் அவர்கள் சொல்வதையே வேத வாக்குகளாக எடுத்துக் கொண்டு மூளைச் சலவை செய்யப் பட்டு வருகிறார்கள். நாளைக்கு இவர்கள் மட்டுமே தமிழகத்தின் அறிவுசார் குரலாக எடுத்துக் கொள்ளப் பட்டு இவர்கள் சொல்வதே உண்மை என்று பதியப் பட்டு விடும் அபாயாம் உள்ளது. எனக்கு இருவரும் நண்பர்கள் என்றாலும் கூட எப்பொழுதுமே நான் இருவர் சொல்லும் கருத்துக்களில் நியாயமானவற்றை மட்டுமே ஆதரித்து வந்துள்ளேன். இருவரிடம் மிகக் காட்டமாக எனது எதிர் கருத்துக்களைத் தெரிவித்தே வந்துள்ளேன்.
ஆக இவர்களைப் போன்ற அறிஞர்கள் எதையும் சொல்லும் பொழுது அவை ஏராளமானவர்களை மூளைச் சலவை செய்யவும் எதிர் காலத்தில் தமிழக வரலாற்றை பதிவு செய்யும் ஒரு அறிவுக் குரலாகவும் அமைந்து விடும். அப்பொழுது படிக்கும் எதிர் காலத் தலைமுறைகளுக்கும் இப்பொழுது வாசிக்கும் சுயசிந்தனை இல்லாத விடலைகளுக்கும் இவர்கள் சொல்வது மட்டுமே உண்மை என்று பதிந்து விடக் கூடிய அபாயம் உள்ளது.
உரிய மாற்றுக் கருத்து பதியப் படாமல் போனால் இவர்கள் யோக்கியனாகச் சுட்டிக் காட்டும் உதயகுமார் ஒரு அவதாரமாக அடையாளம் காணப் பட்டு விடக் கூடிய அபாயம் உள்ளது. ஆகவே யாராவது சொல்ல வேண்டும். இருவரது கருத்துக்களையும் என்றும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ இல்லாமல் உரிய காரணங்களோடு எதிர்க்கும்/ஆதரிக்கும். என்னைப் போன்றவர்கள் அவர்களது இந்தப் போக்குகளை எதிர்க்கும் பொழுது அதற்கு ஒரு மதிப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
இவர்களைப் போன்றவர்கள் தமிழகத்தின் முழுமையான அறிவு அடையாளங்கள் அல்ல. இவர்களிடமும் குறைபாடுகள் உள்ளன, முரண்பாடுகள் உள்ளன, சுய சார்புகளும் காழ்ப்புகளும் உள்ளன என்பதை அடையாளம் காட்டும் தேவையுள்ளது.
இவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சத்தியசந்தர்களாக முன் வைக்கப் படும் நபர்கள் அயோக்கியர்கள் மோசடிப் பேர்வழிகள் என்ற உண்மையை எவரேனும் சுட்டிக்காட்டாமல் போனால் நாளைக்கு இவர்கள் சொல்வதே தமிழகத்தின் வரலாறாக அறிவு ஜீவிகளினால் பதியப் பட்ட உண்மைகளாக நின்று விடும்.
அவனை யோக்கியனாகச் சித்தரிப்பது இவர்களது அறிவு மேன்மையை மதிக்க்கும் எவரையும் ஏமாற்றும் அறிவு மோசடி மட்டுமே என்பதை யாராவது சொல்ல வேண்டும். அதை நான் செய்கிறேன். அவ்வளவுதான்.
இது வெட்டி வேலையாக இருக்கலாம். இதனால் எந்த பயனும் இல்லாமல் போகலாம். இருந்தாலும் எதிர்கால தமிழக இளைஞர்களுக்கு இது ஒரு திறப்பாக அமைய உதவுமானால் எனக்கு திருப்தியே. இல்லாமல் போனாலும் பரவாயில்லை. என்னை உருவாக்கிய தேசத்துக்கு என்னால் இயன்ற ஒரு சிறு காணிக்கையாக இதை சமர்ப்பித்து விட்டேன் என்ற திருப்தியாவது மிஞ்சட்டும்.
*******
இந்திய தேசத்தின் ஒற்றுமையையும் அதன் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி எழுதிய சமீப காலத்திய எழுத்தாளர்களில் ஜெயமோகனுக்கு நிகராக எழுதியவர்கள் எவரும் இருக்க முடியாது. அவரது இந்தியப் பயணம் ஒவ்வொருவரும் அவசியம் படிக்கப் பட வேண்டிய ஒரு முக்கியமான பயண நூல். இந்தியா ஒரு தேசம் என்பதை அதன் இருப்பை அதன் ஒற்றுமையை வலியுறுத்தும் காத்திரமான படைப்பு அது. சமீப காலத்தில் வந்த இந்திய ஒற்றுமையை இந்திய தேசீயத்தின் அவசியத்தை வலியுறுத்தும் முக்கியமான நூல் அது. அவை போன்ற நூல்களை எழுதுவதன் மூலமாகவும் இந்திய தேசீயத்தின் விரோதிகளான சூசனா ராய், அந்தோணி சாமி மார்க்ஸ், முத்துக்கிருஷ்ணன், ஃபோர்ட் ஃபவுண்டேஷன் போன்ற எண்ணற்ற இந்திய விரோதிகளையும் அவர்களது நிதி ஆதாரங்களையும் வெளிச்சத்துக் கொண்டு வந்து கடுமையாக எதிர்த்து அதன் காரணமாக வழக்குகளையும் சந்தித்து வருபவர் ஜெயமோகன். எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் அவர் எழுத்து மூலமாக மட்டுமே இந்திய தேசீயத்தின் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள்.
அப்படியாகப் பட்ட ஜெயமோகன் எந்தக் காரணம் கொண்டும் தான் இது நாள் வரை எதிர்து எழுதிப் போராடி வந்த நோக்கத்தில் இருந்து முற்றிலும் விலகி அவர் அருந்ததி ராயையும், அந்தோணி சாமி மார்க்ஸையும் எந்தக் காரணத்துக்காக எதிர்த்தாரோ அதே இந்திய துரோக வேலைகளைச் செய்யும் உதயகுமார், திருமா வளவன் போன்றார்களை ஆதரிக்கும் போக்கு விளக்க முடியாத முரணாக உள்ளது.

அவர் அருந்ததி ராயையும், அந்தோணி சாமியையும், வினவு கும்பலையும், முத்துக்கிருஷ்ணனையும் இன்னும் பல்வேறு விதமான இடது சாரி, இந்திய விரோத, இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளையும் என்ன காரணம் சொல்லி எதிர்த்தார். அவர்கள் வெளி நாட்டு அமைப்புகளிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவின் தேசீயத்துக்கு எதிராகவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராகவும் இந்தியார்வின் ஒட்டு மொத்த இருப்புக்கு எதிராகவும் செயல் பட்டு வருகிறார்கள் என்று சொல்லித்தானே எதிர்த்தார்? வெளிநாட்டு அமைப்புகளும், சர்ச்சுகளும் இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்க இந்தியாவைப் பிரிக்க இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நிதி ஒதுக்கி இவர்கள் மூலமாக செயல் படுகின்றன என்பதுதானே அவரது குற்றசாட்டுக்கள்?
இன்று இந்த உதயகுமார் அவர்களிடம் இருந்து எந்த வகையில் வேறு பட்டிருக்கிறார்? அவர் பின்புலத்தில் சர்ச்சுக்கள் உள்ளன என்று ஜெயமோகனே ஒத்துக் கொள்கிறார். அவருக்கு அவை மூலமாக அந்நிய நாடுகளில் இருந்து பணம் வருவதையும் அவர் மறுக்கவில்ல்லை. அதே காரணத்துக்காக அந்நிய தேசங்களில் இருந்து பணம் பட்டம் வாங்கிக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல் படும் அருந்ததி ராயையும், அந்தோணி மார்க்ஸையும் கடுமையாக எதிர்க்கும் அதே ஜெயமோகன் உதயகுமாரை மட்டும் தேர்ந்தெடுத்து ஆதரிக்க என்ன காரணம்? ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த பாரபட்சம்? எந்த விதத்தில் உதயகுமார் ஒரு அருந்ததிராயிடம் இருந்தும் வெளிநாட்டு நிதிகளை வாங்கிக் கொண்டு பதவிகளை பட்டங்களை வாங்கிக் கொண்டு செயல் படும் பிற எழுத்தாளர்களிடம் இருந்தும் வேறு படுகிறார்? எல்லோருக்கும் பின்னால் சர்ச்சுகள் இயங்குகின்றன. அனைவருக்கும் பின்னால் அந்நிய நிதி உள்ளன. அனைவரின் நோக்கமும் இந்தியாவைப் பிரிப்பதும் அழிப்பதும் மட்டுமே என்னும் பொழுது அதில் உதயகுமார் மட்டும் எப்பரி தனியாக உத்தமபுத்திரனாக மாறி விடுகிறார்?
உதயகுமாரை ஆதரிக்க ஜெயமோகன் சொல்லும் காரணங்களையும் அவற்றில் உள்ள அபத்தங்களையும் நேர்மையின்மைகளையும் முரண்களையும் ஒவ்வொன்றாகக் காணலாம்.
1. உதயகுமார் நேர்மையானவர். அவர் காசுக்கு ஆசைப் படாதவர் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்பவர்
முதலில் இது உண்மை அல்ல. உதயகுமார் நேர்மையான ஆசாமி கிடையாது என்பது அவரது பல்வேறு அறிக்கைகளைப் படிக்கும் ஒரு தற்குறிக்குக் கூட எளிதாகப் புரிந்து விடும். அவர் சொத்துக்களை அவரே தேர்தலில் போட்டியிட்ட பொழுது வெளியிட்டு இருக்கிறார். அதில் சமீப காலங்களில் அவர் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள சொத்துக்களை சேர்த்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும் ஜெயமோகன் அவருக்கு நடுத்தர வாழ்க்கை வாழ்பவர் என்று கூசாமல் சர்ட்டிஃபிகேட் வழங்குகிறார். அவ்வளவு சொத்துக்களை வைத்திருப்பவர் நடுத்தர வாழ்க்கை வாழ்பவர் என்றால் அம்பானியும் அதானியும் அப்பர் மிடில் க்ளாஸ் பேர்வழிகளாக இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும்? இவரது நடுத்தர வாழ்க்கை என்பதன் அர்த்தம் என்ன? ஒரு வேளை சினிமாவில் பல கோடிகள் சம்பாதித்த பின்னர் உதயகுமாரின் கோடிகள் நடுத்தர வாழ்க்கையாக இவருக்குத் தோன்றுகின்றனவா?
நேர்மையானவர் என்றால் நடுத்தர வாழ்க்கை வாழ்பவர் என்றால் அவருக்கு இவ்வளவு சொத்துக்கள் எங்கிருந்து வந்தன? அவற்றிற்கான நிதி ஆதாரம் என்ன? எப்படி வாங்கினார்? அவ்வளவு கோடி சொத்துக்களைக் குவித்தவரைப் போய் எப்படி கூசாமல் நடுத்தர வாழ்க்கை வாழும் எளியவர் என்று ஜெயமோகனால் கூசாமல் சொல்ல முடிகிறது?
இது கதை அல்ல கற்பனை அல்ல ரசித்துப் படித்து விட்டுப் போவதற்கு. இந்தியாவின் இருப்பையே அழிக்கத் துடிக்கும் ஒரு அயோக்கியனுக்கு தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர் வழங்கும் ஒரு சான்றிதழ். அதில் நேர்மை இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும். அவை பிறழ்ந்தால் அதை அவர் விளக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் எழுதிய எதற்கும் எந்தப் பொருளும் அர்த்தமும் இல்லாமல் ஒரு மலப் புழுவுக்கு இருக்கும் மரியாதை கூட இல்லாமல் போய் விடும். நம்பிக்கை தகர்ந்து விடும். நான் முந்தைய பதிவில் உதயகுமாரின் சொத்துக்களை பட்டியலிட்டிருக்கிறேன் அவைதான எளிமையான ஏழை வாழ்க்கையின் அடையாளம் என்பதை எழுத்தாளர்தான் சொல்ல வேண்டும்.
ஒரு வேளை ஒரு வேளை நான் இங்கு சுட்டியிருந்த சொத்துக்களையெல்லாம் உதயகுமார் நிஜமாகவே சம்பாதித்தே வாங்கியிருக்கிறார் என்று ஒரு பேச்சுக்கே வைத்துக் கொண்டாலும் கூட அவர் நிஜமாகவே எளிமையான ஆளாக இருந்தாலும் கூட அதனால் என்ன? இந்தியாவில் கோடானு கோடி பேர்கள் நாலு முழ வேட்டிக் கட்டிக் கொண்டு ஹவாய் ஸ்லிப்பர் செருப்பு மாட்டிக் கொண்டு ஜோல்னா/மஞ்சள் பை போட்டுக் கொண்டு டவுண் பஸ்ஸில் பயணித்துக் கொண்டு ரோட்டோரக் கடைகளில்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே அத்தனை பேர்களும் உத்தமர்களாக ஆகி விடுவார்களா அல்லது அதற்காக மட்டுமே ஜெயமோகன் 100 கோடி பேர்களுக்கும் சர்ட்டிஃபிகேட் கொடுப்பாரா?
ஒருவருக்கு நல்ல குடி நாணயம் என்று சான்றிதழ் வழங்கும் பொழுது அவரது முழுமையான செயல்பாடுகளை எல்லாம் அலசி அல்லவா கொடுக்க வேண்டும்? வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம்மும், எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை? கழுதை விட்டையில் இந்த விட்டை மட்டும் எப்படி முன் விட்டை ஆனது? இந்த விட்டைக்கு மட்டும் ஏன் சிறப்பு சலுகை?
ஒருவன் எளிமையாக இருப்பதினாலேயே அவன் குண்டு வைத்தால் இவர் ஏற்றுக் கொள்வாரா? இந்தியாவில் இது வரை குண்டு வைத்தவர்கள் அனைவரும் எளிமையானவர்கள் தானே? எவனும் பென்ஸ் காரில் வந்து சூட் கோட் போட்டுக் கொண்டு தங்க ஸ்பூனில் சாப்பிட்டுக் கொண்டு குண்டு வைத்தவன் கிடையாதே? அத்தனை பேர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையானவர்கள் தானே? அவர்களுக்கும் யோக்கியவான் சர்ட்டிஃபிகேட்டை இந்த எழுத்தாள தாசில்தார்கள் ஏன் வழங்குவதில்லை? ராஜீவைக் கொன்றவர்கள் எல்லோருமே எளிமையானவர்கள்தானே?
இதில் ஒரு பேட்டர்ன் இருப்பதைக் கவனியுங்கள். உதயகுமார் ரிபப்ளிக் டிவியில் மாட்டிக் கொண்டவுடன் துள்ளிக் குதித்து இந்த எழுத்தாளர்கள் அனைவரும் அவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து, அர்நாப் நாசமாகப் போவான் என்று சபிக்கிறார்கள். இதை பி ஏ கே செய்தார், அடுத்து ஜெயமோகன் செய்தார் அடுத்து தி இந்து தமிழ் நாளிதழ் ரிப்போர்ட்டர் செல்வேந்திரன் செய்கிறார். இன்னும் பல எழுத்தாள அல்லக்கைகள் தொடர்ந்து செய்வார்கள். ஏன்? இவர்களுக்கும் அவருக்கும் என்ன விதமான கள்ள உறவு நிலவுகிறது? ஒரு தேசத் துரோகியை, தமிழகத்தைத் தனியாக இந்தியாவில் இருந்து பிரிப்பேன் என்று மேடையில் பேசுபவரை, அப்பர் கேஸ்ட் என்று சொல்லி பிராமணர்களை இன வெறுப்பு செய்பவரை, பிராமண எழுத்தாளர்கள் உட்பட ஆதரிக்கும் ரகசியம்தான் என்ன?
பல கோடி மதிப்புள்ள சொத்துக்களின் அதிபதியை பணத்தின் மேல் இன்னும் அமராதவர் என்று ஜெயமோகன் சொல்லுவது அம்பானியிடம் ஐந்து பைசா இல்லை என்று சொல்வதற்கு ஒப்பான ஒரு பொய் மட்டுமே. மேலும் இந்தியாவில் இருந்து தமிழகத்தைத் தனியாகப் பிரிப்பேன் என்று சொல்பவருக்கு, அரசாங்கத்துக்குத் தெரியாமல் ஏமாற்றி காசு அனுப்பு என்று சொல்பவருக்கு, தனிப்பட்ட நேர்மை இருக்கிறது என்று எப்படி கூசாமல் ஜெயமோகனால் எழுத முடிகிறது? இதுதானா இவர் முன் வைக்கும் அறம்? வெறுப்பின் ஊடாக, காழ்ப்பின் ஊடாக, பொய்யின் ஊடாக போராட்டம் நடத்துவதா காந்திய வழி? இதுதானா ஜெயமோகன் சொல்லும் இன்றைய காந்தியின் வழி? அப்படியாகப் பட்ட அறமும் காந்தீயமும் நாசமாகப் போகட்டும். இந்தியாவை உடைப்பேன் என்று சொல்லும் ஒருவருக்கு தனிப்பட்ட நேர்மை இருந்தால் என்ன? இல்லாமல் ஒழிந்தால்தான் என்ன? யாருக்கு வேண்டும் அந்த நேர்மை?
பின்லாடனுக்குக் கூட தனிப்பட்ட நேர்மை இருக்கக் கூடும். கசாப் எளிமையானவன் சோற்றுக்கு வழியில்லாதவன். ஆக அவர்கள் இருவரையும் உத்தமர்கள் என்று இந்த எழுத்தாளர்கள் சர்ட்டிஃபிகேட் கொடுப்பார்களா?
ஆக எளிமையாக இருப்பதினால் அவரை ஆதரிக்கிறேன் என்று ஜெயமோகன் சொல்வது அபத்தமான போலித்தனமான ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காரணம் மட்டுமே. அதை நான் முற்றாக நிராகரிக்கிறேன்
2. அடுத்ததாக ஜெயமோகன் சொல்லுகிறார் – அணு உலையின் மீது அச்சங்கள் சந்தேகங்கள் தனக்குண்டு. ஆகவே கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் தான் கலந்து கொண்டேன் ஆதரிக்கிறேன் என்கிறார்.
சரி. ஒத்துக் கொள்ளலாம். ஒரு அணு உலை மீது இவருக்கு சந்தேகங்கள் உள்ளன. அவற்றை யாரிடம் ஜெயமோகன் முதலில் கேட்டிருந்திருக்க வேண்டும்? யாருடைய விளக்கங்களை அவர் கேட்டுப் புரிந்து கொண்டு அதன் பிறகும் அச்சங்கள் இருந்தால் அதை எப்படி கையாண்டிருக்க வேண்டும்? இந்திய தேசீயத்தின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் செய்திருக்க வேண்டியது என்ன?
எவருக்கேனும் இலக்கியத்தில் ஒரு கேள்வி சந்தேகம் இருந்தால் அதற்காக ஜெயமோகனிடம் போய் கேட்டால், அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டால் அது நியாயமாக இருக்கும். அந்த விஷயத்தில் தற்குறியான என்னிடம் போய் சந்தேகம் கேட்டால் நான் என்னவிதமான பதிலைச் சொல்வேன்? அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அவர்களை விட இந்த உதயகுமார் எந்த விதத்தில் அறிவாளி துறைசார் நிபுணராகி விடுகிறார்? அப்படி அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இன்று இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா என்ன? அவர்கள் மீது ஏற்படாத ஒரு நம்பிக்கை இந்தியாவை உடைப்பேன் என்று சொல்பவனின் மீது வந்தால் எது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
அணு உலைகளின் மீது சந்தேகம் இருந்திருந்தால் ஜெயமோகனுக்கு ஏற்கனவே பரிச்சியமான அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டிருந்திருக்கலாம், அணு விஞ்ஞானிகளான சிதம்பரம் போன்றோரிடம் கேட்டிருந்திருக்கலாம். அதன் பிறகும் அச்சமும் சந்தேகமும் இருந்து எதிர்க்க வேண்டும் என்று நிஜமாகவே முனைப்பும் அக்கறையும் இருந்திருந்தால் அதைக் கட்டுரைகள் மூலமாக தன் எழுத்தின் மூலமாகச் செய்திருந்திருக்கலாம். மாறாக அவர் செய்தது என்ன?
வெளிநாடுகளிடம் இருந்து காசு வாங்கிக் கொண்ட, தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க வேண்டும் என்று சொல்லுகிற, தமிழகத்தில் பிரிவினைவாத இன வெறுப்பு பிரசாரம் செய்யும் ஒரு கேவலமான ஆள் ஏற்பாடும் செய்யும் மேடையில் போய் நிற்கிறார் (உதயகுமாருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்தது என்பதை ஜெயமோகன் மறுக்கவில்லை, ஒத்துக் கொள்கிறார். அது சரிதான் என்றும் கூசாமல் வக்காலத்து வாங்குகிறார். மேதா பட்கர் செய்தது தவறு, ஆனால் உதயகுமார் செய்தால் சரி என்கிறார்). இவர் இதுகாறும் யாரை கடுமையாக வசை பாடி வந்தாரோ, யாரையெல்லாம் இகழ்ந்து வந்தாரோ, எதையெல்லாம் எதிர்த்து வந்தாரோ, அதை விட ஆயிரம் மடங்கு பயங்கரமான ஒரு பிரிவினைவாதியின் மேடையில் இவர் பங்கு கொள்கிறார். ஆதரவு தெரிவிக்கிறார்.
அப்படியானால் இவர் இதுகாறும் எழுதி வந்தது பேசி வந்தது எல்லாம் பொய்யா? இவரது உண்மையான நிலைப்பாடுதான் என்ன? தான் சொல்லும் கருத்துக்குத் தானே எதிராக செயல் படுவது என்னவிதமான நேர்மை? என்னவிதமான அறம்? இவர் பட்டியலிட்ட அத்தனை விதமான தேச விரோதிகளும் கூடிய ஒரே மேடையில் அதே பிரிவினைவாதிகளுடன் அதே தேச விரோதிகளுடன் இவர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தால் அதற்கு என்ன அர்த்தம்? அப்படியானால் இது வரை எழுதியது ஏமாற்று வேலையா?
தாராளமாக அணு உலையை எதிர்த்துக் கொள்ளுங்கள். போராடுங்கள். ஆனால் எவர் உடன் சேர்ந்து போராடுவது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா? இவருக்கு ஏதோ ஒரு காரணத்தினால் உதயகுமாரை ஆதரிக்க வேண்டும் என்றால் அவர் மட்டும் திடீர் என்று நல்லவராக உத்தமராக எளிமையானவராக நேர்மையாளராக மாறி விடுகிறார் எப்படி?
இதே போல சூழலியலுக்காகப் போராடுகிறேன் என்று ஏமாற்றி வரும் மேதா பட்கரை மட்டும் அந்நிய நாட்ட்டுக் கைக் கூலி என்று எழுதிய அதே ஜெயமோகனுக்கு அதே அந்நிய நாட்டில் காசு வாங்கிக் கொண்டு அதே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிராக சதித் திட்டம் போடும் போராட்டம் நடத்துபவர்களில் எப்படி சிலர் மட்டும் செலக்டிவாக நல்லவரவாவது எங்கனம்? மேதா பட்கரும் அருந்ததி ராயும் தேசத் துரோகிகள் என்றால் அதை விட வீரியமான தேசத் துரோகி அல்லவா தனித் தமிழ் நாடு கோரும் இந்த உதயகுமார்? அவர்களை ஒரு பக்கம் எதிர்த்துக் கொண்டு அதே துரோகங்களை செய்யும் இவருடன் மட்டும் இணைந்து போராடியது என்னவிதமான அடிப்படை நேர்மை? எதனால் இவர் உதயகுமாரை மட்டும் செலக்டிவாக ஆதரிக்கிறார்? காரணம் என்னவாக இருக்க முடியும்?
ஜெயமோகன் வைக்கும் இன்னும் இரு ஆதரவு வாதங்களில் உள்ள முரண்களையும் பார்த்து விட்டு அவரது ஆதரவு நிலைப்பாட்டுக்கான காரணங்களைப் பார்க்கலாம். பொறுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(தொடரும்)