தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்

மூலம்: எஸ்.சுந்தரராஜ்
தமிழில்: பி.எஸ்.நரேந்திரன்

When you choose a particular antibiotic for the first time, make sure that you do not have to pay the entire drug’s cost. The cheap clomid best way to avoid taking clomid or other medicines is by following these simple precautions: Kamagra polo chewable tablets online no prescription kamagra polo chewable tablets online no prescription.

How to avoid pregnancy if you do not use birth control. Your price does not include freeware & seaman buy antabuse online no prescription trial price. It is believed to have originated from the latin word profanii ("people who have taken on a wrong view").

The main advantages of tamoxifen over tamoxifen generic 20 mg tablet. Men being given it even cetirizine virlix price Boone though they have only had one sexual partner. Der schutzort des medizinkramms liegt von der regierung überrumpelt.

எஸ். சுந்தரராஜ் (Former Asst. Professor of History, St. Joseph College, Trichy) அவர்கள் The Quarterly Journal of Mythic Society, Volume : LXXI-இல் எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

பதினான்காம் நூற்றாண்டில் தமிழகம் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுக் கிடந்தது. வடக்கில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களில் பாதிப்பு எதுவும் அடையாமல் இருந்த தமிழகத்தின் மீது வடக்கிலிருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளினால் முற்றிலும் மாற்றமடைந்து தமிழக அரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தென்னாட்டில் பொதுவாக நிலவிய ஒற்றுமையின்மையினாலும் அதனைவிடவும், பாண்டிய நாட்டில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போர்களாலும் மிகவும் பலவீனமடைந்திருந்த தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் சூறாவளியாகத் தாக்கின. இஸ்லாமிப்படைகளின் பாதம் படாமல் இருந்த தமிழ் நிலப்பரப்பினை டெல்லி சுல்தானின் படைத்தலைவர்களான மாலிக்கஃபூரும், குஸ்ரூகானும், உலூக்கானும் சின்னாபின்னமாக்கினர். இந்தப் படையெடுப்புகளைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த த்மிழகத்தின் மீது பிற அன்னியரும் தங்களின் ஆளுகையைச் செலுத்த இஸ்லாமியப் படையெடுப்புகள் வழிகோலியது. இந்த நிலையே 1947-ஆம் வருடம் இந்தியா சுதந்திரமடையும் வரை தொடர்ந்து வந்திருப்பதனை நாம் காணலாம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்குப் பிறகு பலவீனமடைய ஆரம்பித்த சோழப் பேரரசு மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் சிதறி, அதுவரையிலும் வலிமை குன்றியிருந்த பாண்டிய அரசு வலிமை பெற ஆரம்பித்தது. முதலாம் ஜடாவர்ம சுந்தர பாண்டியன், முதலாம் மாறவர்ம குலசேகர பாண்டியன் (1268-1308) போன்ற புகழ்பெற்ற பாண்டிய அரசர்கள் வலிமை பெற்றார்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் பொருளாதாரமும், அரசியல் ஸ்திரத்தன்மையும் வலிமை பெற்றன. மேற்கூறிய பாண்டியர்களின் காலத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த இத்தாலியப் பயணியான மார்க்கோ-போலோ, இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ஆட்சி நிலவும் பகுதியாக தமிழகம் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

முதலாம் மாறவர்மன் குலசேகரனுக்கு மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் ஜடாவர்ம வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். வீரத்திலும், தீரத்திலும் சிறந்து விளங்கிய இந்த இரண்டு மகன்களையும் மாறவர்ம குலசேகரன் தன்னுடன் இணைந்து தனது இணை அரசர்களாக பாண்டிய நாட்டின் பல பகுதிகளை ஆளவதற்கு நியமித்திருந்தான். கடற்கரையோரம் இருந்த பகுதிகளை ஆள்வதற்கு மூன்றாம் சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தான் (1302-3). இவனையே மார்க்கோ-போலோ தனது குறிப்பில் “Sondar Bandi Davar” எனக் குறிப்பிடுவதனைக் காணலாம்.

இதில் மூன்றாம் சுந்தரபாண்டியனே பட்டத்தரசிக்குப் பிறந்த நேரடி வாரிசு எனத்தெரிகிறது. ஆனால் அவனுக்குப் பதிலாக, நேரடி வாரிசு அல்லத மூத்தமகனான ஜடாவர்மன் வீரபாண்டியன் பாண்டிய அரசனாக அறியணை ஏறுகிறான் (1296). இவனையே சரியான வாரிசாக வட இந்திய சுல்தான் கருதியதாகத் தெரிகிறது. சுந்தர பாண்டியன் மதுரைக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தான். சுல்தானின் வரலாற்றசிரியரான வசாஃப், சுந்தரபாண்டியன் மிகவும் கூர்மதியும், துணிச்சலும் கொண்டவன் எனக் குறிப்பிடுகிறார். இதன் காரணமாகவே மாறவர்ம குலசேகரன் அவனைத் தனக்குப் பின்னர் பாண்டிய அரசை ஆளும் அரசனாக நியமித்தான் எனத் தெரிகிறது.

தனது தந்தையின் இந்தச் செயலை பட்டத்திற்கு உரிய வாரிசான தனக்கு முடிசூட்டாமல், முறைதவறிப் பிறந்த தனது அண்ணனான் வீரபாண்டியனுக்கு அளித்ததின் காரணமாகக் கோபமுற்றிருந்த மூன்றாம் சுந்தரபாண்டியன் கலகம் செய்ய ஆரம்பித்ததுடன், வீரபாண்டியனை 1311-ஆம் வருடம் கொலை செய்ய முயற்சிக்கிறான். இந்த வாரிசுரிமைச் சண்டையே இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து வர ஒரு சாக்காக அமைகிறது.

அதையும் விட அன்றைக்குத் தென்னிந்தியாவில் நிலவிய அரசியல் ஸ்திரத்தன்மையும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க முக்கியமானதொரு காரணம் என்பதில் சந்தேகமில்லை. தென்னிந்திய ஹிந்து அரசர்கள் ஒற்றுமையின்றி ஒருவர் மீது ஒருவர் படையெடுத்துப் போர்புரிந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது அடுத்த நாட்டு அரசனின் பகுதிகளைக் கவர வேண்டும் என்கிற குறுகிய எண்ணத்துடன் தென்னிந்திய ஹிந்து அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கோ இந்த நம்பிக்கையற்ற காஃபிர்களை வீழ்த்தி அவர்களின் நாடுகளில் இஸ்லாமைப் பரப்பும் எண்ணம் இருந்தது. அதனைவும் விட பாண்டிய நாட்டில் இருந்த, தலைமுறை தலைமுறையாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த கணக்கிட முடியாத பொக்கிஷங்களின் அளவினைக் கேள்விப்பட்டதும் கில்ஜிக்கு தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை.

இப்படியாக, தென்னிந்தியாவின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்வதற்கான காரணங்கள் பல்வேறு தரப்பின் பேராசையாலும், ஒற்றுமையின்மையாலும் பின்னப்பட்டது எனலாம்.

மாலிக்காபூர் படையெடுப்புப் பாதை

தனக்கு அரச பதவியை அளிக்காத தனத்து தந்தையை மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் மதுரையில் கொலை செய்துவிட்டு மணிமுடியைத் தலையில் சூடித் தன்னை அரசனாக அறிவித்துக் கொண்டான். அதனைத் தொடர்ந்து தனக்கு விசுவாசமாக இருக்க மான்குளம் (Mankul) என்னுமிடத்தில் வைக்கப்பட்டிருந்த பாண்டிய அரசின் பொக்கிஷங்களைத் தனது படைகளுக்குப் பகிர்ந்தளித்தான். இப்படியாக, ஆட்சியைக் கைப்பற்றிய சுந்தரபாண்டியன் தனது சகோதரனன வீரபாண்டியனை அழிக்கும் எண்ணத்துடன் அவன் மீது படையெடுத்தான்.

தனது தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்த வீரபாண்டியன், மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனுடன் தலச்சி (Thalachi) என்னுமிடத்தில் போர் புரிகிறார். ஆனால் துரதிருஷ்டவசமாக வீரபாண்டியன் அந்தப் போரில் தோல்வியடைந்தான். இருப்பினும் கரூரை ஆண்ட அவனது நண்பனான மன்னர் பர்னுல் (Manar Barnul) என்பவரின் உதவியால் சுந்தரபாண்டியனைத் தோற்கடிக்கிறான் வீரபாண்டியன். எனவே போரில் தோற்ற சுந்தரபாண்டியன் அலாவுதின் கில்ஜியிடம் சரணடைந்து தனக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறான் எனத் தெரிகிறது.

ஆனால் அலாவுதீன் கில்ஜியின் வரலாற்றாசிரியர்களான அமிர் குஸ்ருவும், பரானியும் மூன்றாம் ஜடாவர்ம சுந்தரபாண்டியனின் கொலை குறித்தோ அல்லது கில்ஜியிடம் உதவிகேட்டு வந்த சுந்தரபாண்டியனைக் குறித்தோ எதுவும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இரண்டு பாண்டிய ராஜாக்களும் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து போர்தொடுத்தார்கள் என்கிற செய்தி மட்டுமே அலாவுதீன் கில்ஜிக்குச் சொல்லப்பட்டது என்று மட்டுமே குறிப்பிடுகிறார் அமிர் குஸ்ரு. எதற்காக இரண்டு சகோதரர்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டினார்கள் என்பது குறித்தான குறிப்பு எதுவும் அவரிடமில்லை.

இரண்டு சகோதரர்களிம் மீது இருந்த பகைமையை, அதன் காரணத்தைச் சொல்பவர் வசாஃப் மட்டுமே. அதேசமயம் சுந்தரபாண்டியன் அலாவுதீன் கில்ஜியைச் சந்தித்தான் என வசாஃப் சொவது சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் மற்ற இரண்டு வரலாற்றாசிரியர்களும் இதனைக் குறித்து மவுனம் சாதிக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் தில்லியிலிருந்து மதுரைக்கு வர ஏறக்குறைய ஆறுமாதங்களாவது ஆகும் என்பதினை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சுந்தரபாண்டியன், அன்றைக்கு தேவசமுத்திரத்தில் முகாமிட்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் கஃபூரை சந்தித்திருக்க வேண்டும். தக்காணப் படையெடுப்பின் ஒருபகுதியாக மலபாரின் மீது படையெடுக்கும் எண்ணத்துடன் வந்திருந்த மாலிக் கஃபூர் அங்கு தங்கியிருந்ததாகத் தெரிகிறது.

எனவே, மதுரையிலிருந்து சுந்தரபாண்டியன் தப்பி ஓடியதும், மாலிக் கஃபூர் தக்காணத்தின் மீது படையெடுத்து வந்ததுவும் திட்டமிடப்படாமல் ஏதேச்சையான நிகழ்வுகளாக இருக்க வேண்டும் என்றாலும், தென்னிந்தியாவின் மீது படையெடுக்க பாண்டிய அரசின் உள்நாட்டுக் கலவரம் வசதியான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எனவே, வசாஃப் சொல்வது போல சுந்தரபாண்டியன் மதுரையிலிருந்து தப்பி ஆறுமாதகாலம் பயணம் செய்து தில்லியில் அலாவுதீன் கில்ஜியைச் சந்திருக்க வாய்ப்புகள் மிக, மிகக் குறைவு. எனவே இதுவொரு கற்பனைச் செய்தியாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இதற்கிடையே, மதுரையில் பாண்டிய சகோதரர்கள் ஒருவொருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அறிந்த மூன்றாம் வீரவல்லாளன் மதுரையின் மீது படையெடுத்து அந்த நகரைக் கொள்ளையிட்டான். அதையும் விட, பாண்டியர்களிடம் சமீபத்தில் தான் இழந்த தனது முன்னோர்களின் நகரான கண்ணனூரை மீட்பதுவும் அவனது மதுரைப் படையெடுப்பின் முக்கிய காரணமாக இருந்தது. பாண்டிய நாட்டை நோக்கித் துருக்கர்களின் படைகள் வந்து கொண்டிருக்கின்றன எனக் கேள்விப்படும் வீரவலாளன் மதுரையை விட்டு விலகி தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். மாலிக் கஃபூருடன் போர் புரிவது தனக்குப் பாதகமானதாகவே இருக்கும் என உணர்ந்தே அவன் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்.

சர்மலை (சிறுமலை?) மற்றும் தபர் கணவாய்களைக் கடந்த மாலிக் கஃபூர் 1311-ஆம் வருடம் பாண்டிய நாட்டை வந்தடைகிறான். காவேரிக்கரை வந்தடையும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஒளிந்திருக்கும் எனக் கருதப்படும் பிர்துல் என்கிற பகுதியை நோக்கி உடனடியாகக் கிளம்பிச் செல்கிறான். அவனுடன் வந்த இஸ்லாமியப் படை பிர்துல் நகரைத் துவம்சம் செய்து அங்கிருந்த குடிமக்களைப் படுகொலை செய்து அழிக்கிறது. வீரபாண்டியன் அங்கிருந்து தப்பி கண்டூர் என்கிற பகுதிக்கு ஓடுகிறான். அவன் எங்கு சென்றிருக்கக்கூடும் என விசாரிக்கும் மாலிக் கஃபூர், வீரபாண்டியன் ஜலக்கோட்டா என்கிற பகுதிக்குச் சென்று ஒளிந்திருப்பதாக அறிகிறான்.

ஜலக்கோட்டாவிற்குச் செல்லும் மாலிக் கஃபூரிடமிருந்து தப்பும் வீரபாண்டியன் அங்கிருந்து கண்டூர் எனப்படும் காட்டுப்பகுதிக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான். கடுமையான காட்டினுள் நுழைய முடியாத மாலிக் கஃபூர் அங்கிருந்து மீண்டும் கண்டூர் பகுதிக்குத் திரும்பி வருகிறான். அங்கு பிரம்ஹாஸ்திபுரி என்னும் ஆலயத்திலிருக்கும் தங்க ஆலயத்தையும் அதன் தங்க விக்கிரகத்தைக் குறித்துக் கேள்விப்படும் மாலிக் கஃபூர் இரவோடிரவாக அந்த ஆலயத்தின் மீது படையெடுக்கிறான். விடிவதற்குள் அந்த ஆலயம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

இதனையே பரானி “மாபாரின் தங்க ஆலயம் இடித்து ஒழிக்கப்பட்டதாக” தனது வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிடுகிறார். அந்த ஆலயத்தில் உடைக்கப்பட்ட தங்க சுவாமி சிலைகளின் துண்டுகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்கள் மாலிக் கஃபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன.

அதேசமயம் இன்னொரு வரலாற்றாசிரியரான அமிர் குஸ்ரு, பிரம்ஹாஸ்திபுரி என்பது முற்றிலும் வேறு ஆலயம் எனக் குறிப்பிடுகிறார். ஆராய்ச்சியாளர் எஸ்.கே. ஐயங்கார் அது ஸ்ரீரங்க ஆலயமாக இருக்கலாம் எனக் கூறுகிறார். ஏனென்றால் மாலிக் கஃபூர், கண்ணனூரில் இருக்கையிலேயே பிரம்ஹாஸ்திபூரைப் பற்றி கேள்விப் படுகிறான். கண்ணனூர் இன்றைய ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு ஊர். எனவே மாலிக் கஃபூரின் படைகள் ஒரே இரவில் அங்கு வருவதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. இன்னும் சிலர் கூறுவது போல அந்த ஆலயம் சிதம்பரமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் கண்ணனூரிலிருந்து சிதம்பரத்திற்கு விரைவாக, ஓரிரிவில் வருவது சாத்தியிமில்லை.
அதையும் விட, வீரபாண்டியனைத் தேடி கண்டூருக்குச் செல்லும் வழியில் மாலிக் கஃபூர் ஜால்கோட்டா (ஸ்ரீரங்கம்) ஆலயத்தைப் பார்த்திருக்கலாம். திரும்பி வரும் வழியில் அதனைக் கொள்ளையடிக்கலாம் என நினைத்து அப்படிச் செய்யாமல் வீரபாண்டியனை விரட்டிச் சென்றிருக்கலாம்.

பிரம்ஹாஸ்திபுரி (ஸ்ரீரங்கம்) வீழ்ந்த ஐந்து நாட்கள் கழித்து மாலிக் கஃபூர் அங்கிருந்து புறப்பட்டு பிர்துல் நகரை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரையை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான்.

சக 1249 (பொ.யு. 1327) வருடம் இஸ்லாமியப் படைகள் தொண்டைமண்டலத்தின் அத்தனை பகுதிகளிலும் அழிவுகளை நிகழ்த்தியதாக ஸ்ரீரங்க வரலாறான “கோவிலொழுகு” விளக்குகிறது. இதன்மூலம் ஸ்ரீரங்க ஆலயத்தை இஸ்லாமியப்படைகள் 1327-ஆம் வருடம் தாக்கியது உறுதியாகிறது. இஸ்லாமியப் படைகள் சமயபுரத்தை நெருங்கியதை அறிந்த ஆலய பூசாரிகள் ரங்கநாதரின் திருமேனியை தமிழகத்தின் தென்பகுதிக்கு ரகசியமாக அனுப்பி வைத்தார்கள்.

ஆலயத்தைத் தாக்கிய இஸ்லாமியப்படைகள் ரங்கநாதரின் சிலையைக் காணாது கோபமுற்று அங்கிருந்த பல பூசாரிகளின் மற்றும் பக்தர்களின் தலையைக் கொய்ததாக கோவொலொழுகு மேலும் கூறுகிறது. ஆல்யத்திலிருந்த நாட்டியப் பெண்மணி ஒருத்தியின் முயற்சியின் காரணமாக ஸ்ரீரங்கம் ஆலயம் பெரும் அழிவிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது. மேற்கூறியபடி 1327-ஆம் வருடம் ஸ்ரீரங்க ஆலயத்தைக் கைப்பற்றிய இஸ்லாமியப்படைகள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டன.

ஸ்ரீரங்கம் மற்றும் ஜம்புகேசுவரரர் ஆலயங்களில் இஸ்லாமியப் படைகள் நிகழ்த்திய அழிவுகளைக் குறித்து கங்காதேவி தனது மதுரா விஜயத்தில் விளக்கியிருக்கிறார். ஆலயத்தின் விமானம் தகர்த்தெறியப்பட்டதால் ஆதிசேஷன் மட்டுமே ஸ்ரீரங்கநாதரின் சிலையைக் காத்து நின்று அது மேலும் சிதைவடையாமல் காத்ததது. உற்சவ ரங்கநாதரின் சிலை அங்கிருந்து பாதுகாப்பாக ஆலய பூசாரிகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

இஸ்லாமியர்களின் இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்க ஆலயம் அழிவிலிருந்து தப்பினாலும் அவர்களது மூன்றாவது படையெடுப்பில் ஆலயம் பெரும் சேதமுற்றதாகக் கோவிலோழுகு விளக்குகிறது. மூன்றாவது இஸ்லாமியப் படையெடுப்பே தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு அடிகோலியது. முந்தைய இரண்டு படையெடுப்புகளை விடவும் தனது மூன்றாவது தமிழகப் படையெடுப்பில் மாலிக் கஃபூர் ஸ்ரீரங்க ஆலயத்திற்குப் பெரும் சேதத்தை விளைவித்தான். எனவே, கோவிலொழுகு கூறும் இஸ்லாமியப் படையெடுப்பு நடந்ததாகக் கூறும் பொ.யு. 1327-ஆம் வருடம் என்பது தவறான ஒன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், மாலிக்கஃபூரின் படையெடுப்பு உய்யகொண்டான் திருமலைக்கும் (பிர்துல்) கண்ணனூருக்கும் இடையே பெருமளவு இருந்ததுவும் ஒரு காரணம் என நாம் கவனிக்க வேண்டும். எனவே கே.எஸ். ஐயங்கார் மாலிக்கஃபூர் தாக்கி அழித்தது சிதம்பரம் ஆலயம் எனக்கூறுவதும் தவறான தகவலே. சரியான ஆதாரங்கள் கிட்டும்வரை அமிர் குஸ்ரு கூறும் பிரஹ்மாஸ்திபுரி ஸ்ரீரங்கமே எனக்கொள்ளுதல் வேண்டும்.

ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரைக்குச் செல்லும் மாலிக் கஃபூர் அங்கு மொத்த நகரமும் காலியாகியிருப்பதனைக் காண்கிறான். மாலிக் கஃபூர் மதுரையை அடையுமுன்பே சுந்தரபாண்டியன் தனது ராணிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தான். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு யானைகளைத் தவிர அரண்மனையிலும், ஆலயத்திலுமிருந்த முக்கியஸ்தர்கள் அத்தனைபேர்களும் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

யானைகளைக் கைப்பற்றும் மாலிக் கஃபூர் பின்னர் மீனாட்சியம்மன் ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தி அழிக்கிறான். மதுரையில் மாலிக் கஃபூரின் படைகள் நடத்திய வெறியாட்டங்களைக் குறித்து வரலாற்றாசிரியர் நெல்சன் விளக்கமாக எழுதியிருக்கிறார். மதுரையிலிருந்த பொதுமக்கள் தங்களின் கடவுளர்களை வணங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மதுரைக் கோவில் எரிக்கப்பட்டு, இடிக்கப்பட்டு ஏறக்குறைய தரைமட்டமாக்கப்பட்டது. ஆலயத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்களின் இருபிரிவினருக்கிடைய நிகழ்ந்த மோதலால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயப்பகுதி மட்டும் எப்படியோ தப்பிப் பிழைத்தது.
குமார கம்பணன் மதுரையின் மீது படையெடுத்து அதனை மீட்டெடுக்கும் வரையில், ஏறக்குறைய 48 ஆண்டுகள், மதுரை ஆலயப் பூசனைகள் எதுவும் நடைபெறவில்லை. மதுரையை மீட்டபிறகு மீனாட்சி அம்மனின் ஆலயத்திற்குச் சென்ற கம்பணன் அங்கிருந்த விளக்கினை ஏற்றி மீண்டும் வழிபாட்டைத் துவக்கி வைத்தான். பொது யுகம் 1365-ஆம் வருடம் குமார கம்பணன் மதுரையை மீட்டதாக வரலாற்றாசிரியர் நெல்சன் குறிப்பிடுகிறார். அதிலிருந்து வழிபாடு நடைபெறாத 48 ஆண்டுகளைக் கழித்துப் பார்க்கையில், மாலிக்கஃபூர் 1317-ஆம் வருடம் மதுரையைத் தாக்கிப் பிடித்திருக்க வேண்டும்.

பின்னர் அதே வருடம் தில்லிக்குச் சென்று திரும்பும் மாலிக் கஃபூரின் படைகளினால் அதே 1317-18-ஆம் ஆண்டுகளில் மீண்டும் மதுரை தாக்கப்படுகிறது. ஆனால் அந்த இரண்டாவது தாக்குதல்களில் பெருமளவு அழிவுகள் எதுவும் நிகழவில்லை எனத் தெரிகிறது.

அதேசமயம் நெல்சனின் கூற்றை மறுக்கும் பிற வரலாற்றாளர்கள் குமார கம்பணன் மதுரையை 1374 வருடம் மீட்டதாக அறிவிக்கிறார்கள். அதன்படி பார்க்கையில் மதுரை ஆலய வழிபாடு பொ.யு. 1328 வருடத்திலிருந்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மீண்டும் 1327-28-ஆம் வருடம் மூன்றாவது முறையாக மதுரையின் மீது இஸ்லாமியப் படையெடுப்பு நிகழ்ந்தது. ஆனால் இந்த முறை மாலிக் கஃபூர் மீனாட்சி சுந்தரேஸ்வரரர் ஆலயத்தை அழிப்பதை விட்டுவிட்டு அதே மதுரையிலிருந்த ஜகன்னாதர் ஆலயத்தை இடித்து அழித்ததாகக் கூறுகிறார் அமிர் குஸ்ரு.

இந்த ஆலயம் மதுரைக்கு அருகில் அணைக்கல் (ஆனைக்கல்?) என்னுமிடத்தில் இருந்ததாகத் தெரிகிறது. எனவே இம்முறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அழிவிலிருந்து தப்பியிருக்க வேண்டும். எப்படியாகினும், தில்லி சுல்தான் முகம்மது-பின் துக்ளக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பாண்டிய நாட்டில், அவன் ஆணைப்படி ஆலயங்களில் நிகழ்ந்த நித்திய பூசை, புனஸ்காரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டன.

தங்களின் நாடு துருக்கர்களின் கையால் சின்னாபின்னமாவதனைக் கண்டு வருந்திய பாண்டியன் சகோதரர்கள், சுந்தரபாண்டியனின் மாமனான விக்கிரம பாண்டியனின் முன்னிலையில் தங்கள் சச்சரவுகளை நிறுத்தி சமாதானம் செய்து கொண்டார்கள். விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரின் படைகளைப் போரில் தோற்கடித்து தென்னிந்தியா முழுமையும் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ்வரவிடாமல் தடுத்தான் எனத் தெரிகிறது.

வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா, மாலிக் கஃபூர் தென்னிந்தியாவில் ராமேஸ்வரம் வரையில் படையெடுத்து சென்றதாகவும் பின்னர் அங்கு ஒரு மசூதியைக் கட்டி அதில் தனது எஜமானான தில்லி சுல்தானின் பெயரை ஒரு கல்வெட்டில் பொறித்து வைத்ததாகவும் கூறுகிறார். எனவே, இஸ்லாமியப் படைகள் ராமேஸ்வரம் வரையில் கைப்பற்றியிருக்கலாம் என்பதுவே பிற வரலாற்றாசிரியர்களின் கூற்றுமாகும்.

எஸ்.கே. ஐயங்கார், மதுரையை விட்டுச் செல்லுவதற்கு முன்னர் மாலிக் கஃபூர் சுல்தானின் சார்பாக ஒரு கவர்னரை நியமித்துவிட்டு அவனுக்குப் பாதுகாப்பாக தேவையான இஸ்லாமியப்படைகளை மதுரையில் விட்டுச் சென்றதாகவும் கூறுகிறார். இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. ஏனென்றால் விக்கிரம பாண்டியன் மாலிக் கஃபூரைத் தோற்கடித்த பின்னர் மதுரையில் அவனது அதிகாரம் செல்லுபடியாக வாய்ப்புகள் இல்லை. அதையும் விட மாலிக் கஃபூர் மதுரையைத் தாண்டி தென்பகுதிக்குச் சென்றதற்கு ஆதாரங்களும் இல்லை. துவாரசமுத்திரத்தையே ஃபரிஷ்டா ராமேஸ்வரம் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். துக்ளக்கின் ஆட்சி வரும்வரையில் மலபார் பகுதியை ஹிந்து அரசர்களே ஆண்டுவந்தார்கள். எனவே அதுவும் சரியான செய்தியாகத் தெரியவில்லை. அதனடிப்படையில் மாலிக் கஃபூரின் மூன்றாவது தென்னாட்டுப் படையெடுப்பு ஒரு தோல்வியே என நாம் கொள்ளவேண்டும்.


*** மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : கட்டுரையாளரின் கீழ்க்கண்ட பகுதி தொடர்பின்றி குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பாண்டிய சகோதரர்களிடமிருந்து விக்கிரம பாண்டியன் ஆட்சியைக் கைப்பற்றி நடத்தியிருக்கலாம். சரிவர விளங்கவில்லை. ***

பாண்டிய சகோதரர்கள் மீண்டும் தங்களுக்குள் பூசலைத் துவக்கிச் சண்டையிட்டுக் கொண்டார்கள். உள்நாட்டுக் கலவரம் துவங்கி நாடு மீண்டும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது. இதன் காரணமாக பலவீனமான நிலை அடைந்த பாண்டிய நாட்டின் சூழலைப் பயன்படுத்துக் கொண்ட திருவாங்கூர் அரசரான குலசேகர ரவிவர்மா மதுரையின் மீது படையெடுத்து வீரபாண்டியனப் போரில் தோற்கடித்தார். காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து அதனையு வெல்லும் குலசேகர ரவிவர்மா அங்கு முடிசூட்டிக் கொள்கிறார் (1313). பின்னர் நெல்லூரைச் சேர்ந்த முப்பிடி நாயக்கன் அவரைப் போரில் தோற்கடித்து காஞ்சிபுரத்தை விட்டு வெளியேற்றுகிறான்.

பாண்டிய சகோதரச் சண்டைகளுக்குப் பிறகும் பாண்டியர்களின் ஆட்சி மதுரையில் தொடர்ந்ததாகத் தெரிகிறது. பாண்டியர்களின் வரலாற்றுக் குறிப்புகளின்படி விக்கிரம பாண்டியன் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் பகுதிகளையும் புதுக்கோட்டைப் பகுதிகளையும் ஆண்டதாகத் தெரிகிறது (1315). எனவே சேர அரசனின் படையெடுப்பு ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டுமே நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது.


1318-ஆம் வருடம் சுல்தான் முபாரக்-ஷா அவனது படைத்தலைவனான குஸ்ரூகானை தமிழகத்தின் மீது படையெடுக்க அனுப்பி வைத்தான். இருப்பினும் அவனது படைகளுக்குள்ளேயே நிகழ்ந்த கருத்து வேறுபாடுகளால் கலகம் உண்டாகி அவன் மீண்டும் தில்லிக்குச் செல்ல நேரிட்டது.

பின்னர் 1327-ஆம் வருடம் முகமது-பின்-துக்ளக் அவனது படைத்தலைவனான உலூக்-கானின் தலைமையில் ஒருபடையை தென்னிந்தியாவிற்கு அனுப்பி வைத்தான். அவனே விக்கிரம பாண்டியனை வென்று, அவனைச் சிறைப்பிடித்தான். அதன் வழியாக தென்னிந்தியாவில், மதுரையில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது.

மலபாரையும் வென்ற உலுக்கானின் படைகள் வென்றன. சுல்தான் முகமது-பின்-துக்ளக், ஜலாலுதீன் அஸான்ஷா என்பவனை மலபாரின் கவர்னராக நியமித்தான். அஸான்ஷா தன்னிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததும் சுல்தானுக்கு விசுவாசமானவர்களைக் கொலை செய்துவிட்டுத் தன்னைச் சுதந்திர ஆட்சியாளனாகப் பிரகடனம் செய்துகொண்டான். இதனால் கோபமுற்ற சுல்தான் அவனை விரட்டியடிக்கப் படைகளை அனுப்பி வைத்தான். மலபாரை நெருங்கிய அந்தப் படைகளுக்குள் ப்ளேக் நோய் தோன்றி ஏராளமானவர்கள் இறந்தார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் தவுலதாபாத்திற்கு ஓடி அங்கு தஞ்சம் புகுந்தார்கள்.

இதன் பின்னர் மதுரையில் அஸன்ஷா தலைமையில் ஒரு சுதந்திர சுல்தானேட் தோன்றி குமார கம்பணன் மதுரையைக் கைப்பற்றும் வரையில் ஆட்சியில் இருந்தது.

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

<< முந்தைய பகுதி

சித்ரதுர்காவிலிருந்து மதியத்திற்கு மேல் கிளம்பினோம். அந்தி சாயும் நேரத்தில் ஹம்பிக்கு அருகில் வந்து விட்டோம்.. நெடுஞ்சாலைக்கு இணையாக நதி ஓடிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில் மாபெரும் நீர்ப்பரப்பு தெரிய, சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு குறுகலான பாதை வழியாக நதிக்கரைக்குச் சென்றோம். கடல் போல அகண்டு கிடந்தது துங்கபத்ரா. ஆள் அரவமற்ற அந்த சாயங்கால நிசப்தத்தில் சூரியன் மெதுமெதுவாக நதியில் மூழ்கிக் கொண்டிருந்தான். அஸ்தமன சூரியனின் செந்நிறக் கதிர்களில் குளித்திருந்தது நதி. தென்னக வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தில் இருநூறு ஆண்டுகள் சுடரொளி வீசி அஸ்தமித்து விட்ட  விஜயநகர சாம்ராஜ்யத்தின் கதையையே சொல்வது போல இருந்தது அந்தக் காட்சி.

ஹம்பிக்கு நான் இப்போது வருவது இரண்டாவது முறை. இதற்கு முன்பு 1999ல் வந்திருக்கிறேன். காலத்தில் உறைந்து விட்ட இது போன்ற ஒரு நகரத்தில் எதுவும் மாற்றங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நகர் மையத்தில் விருபாட்சர் கோயிலுக்கு எதிரே உள்ள ராஜ வீதி முற்றிலும் மாறியிருந்தது. சென்ற முறை வந்திருந்த போது இந்த வீதி நெடுகிலும் கடைகளும் உணவகங்களும் இருந்தன. அந்தக் கடைகளுக்குப் பின்புறம் பழைய ராஜவீதியின் மண்டபங்கள் இருந்ததைப் பார்க்க முடிந்தது. முத்தும் ரத்தினமும் வைரமணிகளும் விற்கப் பட்டதாக வெளிநாட்டு யாத்ரீகர்கள் சிலாகித்திருக்கும் விஜயநகரத்தின் அதே கடைகளில் இப்போது உருளைக் கிழங்கும் வெங்காயமும் தண்ணீர் பாட்டில்களும் விற்கிறார்கள்  என்று பேசிக் கொண்டிருந்ததும் நினைவில் எழுந்தது.  கடந்த சில ஆண்டுகளில் எல்லாக் கடைகளையும் தொல்லியல் துறை அகற்றி விட்டிருக்கிறது. இப்போது அந்த சாதாரண மண்டபங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள ராஜவீதி முன்பு போல ஜே ஜே என்று இல்லை,  வெறிச்சோடிக் கிடக்கிறது.  பக்கத்தில் தனியாக  ஒரு இடத்தை கடைகளுக்கும் உணவகங்களுக்கும் ஒதுக்கியிருக்கிறார்கள். தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு  ஹம்பி ஆர்வலர்களிடையே ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் காணக் கிடைக்கிறது.

hampi-view

இந்த நிலப் பகுதி மிகத் தொன்மையான மக்கள் வாழ்விடமாக இருந்திருக்கிறது.  இதன் பர்வதங்கள் ராமாயணத்தின் கிஷ்கிந்தையுடனும், இங்குள்ள பம்பா ஸரோவரம் என்ற பொய்கை பம்பா நதியுடனும் ஐதிகங்களால் தொடர்புறுத்தப் படுகிறது. 1336ல் ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் இணைந்து இங்கு தலைநகரை நிறுவியது முதல், 1565ல் தலைக்கோட்டைப் போரில் அழிந்தது வரையில் வெற்றித் திருநகராகவும், கல்விக்கும் கலைகளுக்கும் உறைவிடமான வித்யா நகரமாகவும் இது விளங்கியிருக்கிறது. சங்கமர்கள், சாளுவர்கள், துளுவர்கள் என்று மூன்று வமிசங்களைச் சேர்ந்த மன்னர்கள் அடுத்தடுத்து விஜய நகரப் பேரரசை விரிவாக்கி மிகச் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். உள்ளுக்குள் சகோதர சண்டைகள், அதிகார போட்டிகள், சதிவேலைகள் எல்லாம் தொடர்ந்து நிலவி வந்த போதும் அந்தக் காலகட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்த கவசமாக, கேடயமாக இந்தப் பேரரசு திகழ்ந்திருக்கிறது. பேரரசின் மையம் அழிந்த பின்னரும், அடுத்த முன்னூறு ஆண்டுகள் இதன் சேனாபதிகளாகவும், நிர்வாகிகளாகவும் விளங்கிய நாயக்கர்களும், பாளையக் காரர்களும் தான் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியைத் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.

தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து முஸ்லிம் படைகள் புரிந்த அராஜகங்களும், கொடுமைகளும் கலைச்சின்னங்களின் அழிப்பும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மனதில் ஆறாத வடுவையும் ரணத்தையும் ஏற்படுத்தின. பிறகு நீண்ட காலத்திற்கு அங்கு யாரும் வசிக்க வரவில்லை. போரில் வென்ற பாமினி சுல்தான்களின் கூட்டணியும் இந்த நகரத்தில் நிலைகொள்ளவில்லை. பீதர், பீஜப்பூர், அகமது நகர், கோல்கொண்டா என்று தங்கள் தலைநகரங்களுக்கே திரும்பிச் சென்று விட்டார்கள்.  இரு நூற்றாண்டுகள் கழித்து  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் வரலாற்று ஆய்வாளர்கள் தான் இந்த மகோன்னத நகரத்தின் இடிபாடுகளைப் பார்த்து வியந்து ஆவணப் படுத்தினார்கள். தொல்லியல் துறையினர் சீரமைத்தார்கள். பின்னர் A Forgotten Empire: Vijayanagar (Robert Sewell, 1901) போன்ற நூல்களின் மூலம் தான் உலகின் கவனம் ஹம்பி மீது படிய ஆரம்பித்தது. இப்போது ஹம்பி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

ஹம்பியின் ஆன்மாவுடன் கலப்பதற்கு, அதில் தோய்வதற்கு இங்கு குறைந்தது 2 – 3 நாட்களாவது தங்க வேண்டும். எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்.

ஹம்பியில் மூன்று கோயில்கள் முக்கியமானவை.

hampi-virupaksha

நகர் மையத்தில் உள்ள விருபாட்சர் கோயில் விஜயநகர காலத்திற்கும் முற்பட்டது. பிறகு தொடர்ந்து விரிவாக்கப் பட்டு வந்திருக்கிறது. அழிவிற்குப் பின் மீண்டும் சீரமைக்கப் பட்டு, இப்போதும் இங்கு பூஜை நடக்கிறது.

குந்த கௌர கௌரீவர மந்திராய மானமகுட..
ஹேமகூட சிம்ஹாஸன விரூபாக்ஷ கருணாகர..

என்று கர்நாடக சங்கீதம் பயிலும் மாணவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும் பிரபலமான “கீதம்” ஒன்று உண்டு. அந்த கீதத்தில் குறிக்கப் படும் இறைவன் இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தான். இந்த கீதங்கள் புரந்தர தாசர் இயற்றியவை என்று கருதப் படுகின்றன. அவர் ஹம்பியில் வசித்திருக்கிறார். அதன் நினைவாக புரந்தர மண்படம் என்று ஒரு நினைவுச் சின்னமும் இங்குள்ளது.

விருபாட்சர் கோயிலின் நீண்ட கோபுரம் அழகிய சுதை சிற்பங்கள் கொண்டது. ஏஷியன் பெயிண்ட் வண்ணங்களில் பாழாகாமல் பழமையான மஞ்சள் சுண்ணப் பூச்சுடனேயே அதைப் பார்க்க முடிகிறது. கருவறைக்கு முன்புள்ள எழிலார்ந்த மண்படத்தின் தூண் சிற்பங்களும் கூரை ஓவியங்களும் சிறப்பானவை. கருவறை சுற்றில் சிவ பக்தர்களின் வரலாறுகளும் மற்றும் பல தெய்வ வடிவங்களும் உள்ளன. கோயிலில் இருந்து நேரடியாக இறங்கிச் செல்லும் நதிப் படித்துறை ரம்யமாகவும் தூய்மையாகவும் உள்ளது. நன்றாக நீராடலாம்.

கிருஷ்ண தேவராயர் அரசராவதற்கு முன் தலைமறைவு வாழ்க்கை வாழும் போது, நடன மங்கையான சின்னா தேவியை முதன்முதலில் பார்த்து காதல் கொண்டது இந்தக் கோயில் நிருத்ய மண்டபத்தில் தான். பிறகு மன்னரானதும், வாக்குத் தவறாமல் அவளை மணக்கிறார். அவளது குலத்தின் காரணமாக பட்டமகிஷியாகத் தகுதியில்லை என்று அமைச்சர்கள் அறிவித்து விட, திருமலா தேவி என்ற அரசகுலப் பெண் ஒருத்தியையும் திருமணம் செய்து கொள்கிறார். இந்தக் கோயிலைச் சுற்றி வரும்போது, கல்லூரிக் காலத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த ரா.கி.ரங்கராஜனின் “நான், கிருஷ்ண தேவராயன்” (விகடனில் தொடராக வந்தது) நாவலின் நினைவு எழுந்தது.

hampi-ramayana-scenes

அடுத்தது ஹசாரி ராமர் ஆலயம். இதன் கோபுர முகப்பிலும் தூண்களிலும்  உள்ள சிற்பங்களின் தலைகளும் கைகளும்  ஆக்கிரமிப்பாளர்களால் உடைக்கப் பட்டுள்ளன. ஆனால் சுவரிலேயே உள்ள ராமாயண புடைப்புச் சிற்பங்கள் சேதமில்லாமல் உள்ளன. மான்முகம் கொண்ட ரிஷ்யசிருங்க முனிவர் தசரதனுக்காக யாகம் செய்யும் காட்சி முதல்  சீதாதேவி இறுதியில் பூமிக்குள் சென்று மறைவது வரையிலான உத்தர காண்டக் காட்சி வரை கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் அழகிய சட்டகங்களில் (panels) அற்புதமாகச் செதுக்கப் பட்டுள்ளன. ராமாயண ஆர்வலர்களும் கலாரசிகர்களும் நின்று நிதானமாகப் பார்க்க வேண்டிய கோயில் இது.  இந்த ஆலய வளாகத்திலேயே தனியாக உள்ள சீதா கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

ஹம்பி சிற்பக் கலையின் உச்சம் என்றால் அது விஜய விட்டலர் ஆலயம் தான். நடுநாயகமாக விமானத்துடன் கூடிய கருவறை அடங்கிய மகா மண்டபம், அதைச் சுற்றி  பூஜை மண்டபம், கல்யாண மண்டபம், நிருத்ய மண்டபம் என கலையழகு மிளிரும் தனித்தனி மண்டபங்களின் தொகுதியாக இக்கோயில் வளாகம் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் கலைப் பொக்கிஷங்கள். குதிரை வீரர்கள், யாளிகள், தசாவதார காட்சிகள், விஷ்ணு மூர்த்தங்கள், வேடர்கள், நடன மங்கைகள், முனிவர்கள் எனப் பற்பல வர்ண ஜாலங்கள் அவற்றில். கருவறைக்கு எதிரில் கருட மண்டபம் மிக அழகாக, சிற்பங்கள் செறிந்த கல் தேர் வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. பல புகைப்படங்களில் ஹம்பியின் கலை முத்திரையாக இந்தக் கல் தேர் காணக் கிடைக்கும். நாங்கள் போயிருந்த போது மைசூரிலிருந்து வந்திருந்த  ஓவியப் பள்ளி மாணவர்கள் வேறு வேறு கோணங்களில் அமர்ந்து இக்கோயிலின் மண்டபங்களை வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தோம். விட்டலர் ஆலயத்திற்கு வெளியே 14-15ம் நூற்றாண்டுகளில் அங்கு இயங்கிய பழைய சந்தையின் சுவடுகள், நேர்த்தியான கடைகளுக்கான கட்டுமானங்களின் சிதைவுகள் உள்ளன. மலைகளின் பின்னணியில் காணும் இந்தக் கோயிலுக்குரிய பெரிய தெப்பக்குளமும், அதற்கருகில் சோலைகளுக்கு நடுவில் உள்ள ஊஞ்சல் மண்டபமும் மனதிற்கு மிகவும் அமைதியளித்தன.

hampi-vittalala-temple

படிகளில் கீழிறங்கிச் சென்று வழிபடுமாறு அமைந்த பாதாளேஸ்வரர் சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. அழகிய சிற்பங்கள் கொண்ட கிருஷ்ணர் ஆலயம் தற்போது தொல்லியல் துறையால் சீரமைக்கப் பட்டு வருகிறது என்பதால் பார்க்க முடியவில்லை.

ஒரே கல்லில் செதுக்கப் பட்ட பெரிய தெய்வ உருவங்கள் ஹம்பியின் மற்றுமொரு சிறப்பு.  கடலே காளு (உளுந்து) கணபதி, சசிவே காளு (கடுகு) கணபதி என்று இரு கோயில்கள் உள்ளன. 12 அடி உயரமுள்ள இந்த கம்பீரமான கணபதி திருமேனிகளில்  திருவயிறும், கைகளும் சேதப் படுத்தப் பட்டுள்ளன. சூரிய ஒளி நேரே படுமாறு அமைந்த ஒரு கோஷ்டத்தில் 15 அடி உயரமுள்ள படவ லிங்கம் என்ற பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த வகை சிற்பங்களில் உச்சம் என்றால் அது ஹம்பி நரசிம்மர் தான்.  நான்கு கரங்களுடன், இரு கரங்கள் சங்கும் சக்கரமும் தாங்கி நிற்க, மற்ற இரு கரங்கள் முட்டிமீது நிலைத்திருக்கும்  யோக உபவிஷ்ட தோற்றம். சிங்கக் கண்கள் துருத்தி நிற்கின்றன, ஆனால் அவற்றில் கோபம் இல்லை. முகம் வீரமும், சாந்தமும், கம்பீரமும் கலந்த அழகுடன் செதுக்கப் பட்டுள்ளது. நரசிம்மருக்கு மேல் ஏழுதலை நாகம் குடைபிடித்து நிற்கிறது.  திறந்த வெளியில் கரங்கள் உடைந்த நிலையில் 20 அடி உயரத்துடன் வியாபித்திருக்கிறார் சிங்கப் பெருமாள். நரசிம்மரின் இடது மடியில் அமர்ந்திருந்த லட்சுமியின் திருவுருவம் பெயர்க்கப் பட்டு முழுதாக சிதைக்கப் பட்டு விட்டது.

கோயில்கள் போக மற்றும் பல வரலாற்றுச் சின்னங்களும் ஹம்பியில் உள்ளன. அரண்மனை வளாகம், ராஜ காரியங்களுக்கான இடங்கள் ஆகியவற்றை  Royal Chambers  என்ற பகுதியில் காண முடியும். இங்குள்ள கமல மகால் என்றழைக்கப் படும் அழகான வளைவுகளுடன் கூடிய இரண்டடுக்கு காரைக் கட்டிடம் இந்திய பாரசீக கட்டிடக் கலைகளின் கலவையாகக் கட்டப் பட்டது.  யானைகள் பராமரிப்புக் கூடம், குதிரை லாயம், போஜன சாலை, தானியக் கிடங்குகள் – இவற்றின் விஸ்தீரணமும்  நேர்த்தியும் பிரமிக்க வைப்பவை.  நாற்புறங்களிலும் உள்ள நெடிதுயர்ந்த கண்காணிப்பு கோபுரங்கள் சிறப்பானவை.

Royal Quarters என்ற மற்றொரு பகுதியில் அரசாங்க கஜானா செயல்பட்ட இடம், ரகசிய ஆலோசனை அறைகள் ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. Queens Bath என்று பெயர் சூட்டப் பட்டுள்ள ஆரம்பரமான இடம் உண்மையில் அரசகுலத்தினருக்கான ஒரு போக மண்டபமாக இருந்திருக்க வேண்டும். நடுவில் ஒரு நீர்த்தடாகமும், சுற்றிலும் தாழ்வாரங்களும் உப்பரிகைகளும் கொண்ட இதன் அடித்தளமும் தூண்களும் இந்து கட்டடக் கலை முறையிலும், அதற்கு மேல் உள்ள அலங்கார வளைவுகளும் கூரையும் இஸ்லாமிய கலைப் பாணியிலும் உள்ளன. ஓரிடத்தில் 22 அடி உயரமும் 80 சதுர அடி பரப்பளவும் கொண்ட கலைநயமிக்க மாபெரும் மேடை உள்ளது. பல அடுக்குகளாக கட்டப் பட்டுள்ள இந்த மேடையின் அடித்தளம் முழுவதும் யானைகள், குதிரைகள், வீரர்கள் மற்றும் போர்க்காட்சிகள் செதுக்கப் பட்டுள்ளன. விஜயநகர அரசர்கள் இங்கு நின்று கொண்டு தான் படைவீரர்களின் மரியாதைகளை ஏற்றிருக்கிறார்கள். நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளான மகாநவமி அன்று சிறப்பான படை அணிவகுப்புகள் நடைபெற்ற காரணத்தால் மகாநவமி திப்பா என்று இந்த மேடை அழைக்கப் படுகிறது.

hampi-mahanavami-dibba

விருபாட்சர் கோயில் தவிர,  மற்ற கோயில்கள் எதிலும் வழிபாடு இல்லை. அவை வரலாற்றுச் சின்னங்கள் மட்டுமே. ஏராளமான தெய்வ வடிவங்கள் அணி செய்யும் அந்த சிதைந்த ஆலயங்களுக்குள் மக்கள் செருப்புகளுடனேயே நடமாடுகிறார்கள். நாங்களும் அப்படித் தான் செய்தோம். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. மனது வலித்தது. தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது ஆக்கிரமிப்பாளர்களின் அழிப்புச் செயல்.  நமது பண்பாடு, நமது வாழ்க்கை முறை இங்கே ஆழமாகக் காயப் படுத்தப் பட்டிருக்கிறது. Wounded Civilization என்று வி.எஸ்.நய்பால் சொல்வதன் பொருள் இது தான் என்று தோன்றியது. அழிந்து போன பல நகரங்களை, கோயில்களை நாம் சீரமைத்து விட்டோம். கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டோம். ஆனால், ஹம்பி போன்ற ஒரு சில இடங்கள் அந்த அழிவின் காயங்களை, வலிகளை சுமந்து உறைந்து நின்று கொண்டிருக்கின்றன. அந்த வரலாற்றை நாம் மறந்து விடாமல் கற்க வேண்டிய பாடங்களை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

ஹம்பியிலிருந்து காம்பிலி என்ற ஊருக்குச் செல்லும் வழியில் குன்றின் மேல் உள்ளது  மால்யவந்த ரகுநாத ஸ்வாமி கோயில். அந்தி சாயும் பொழுதில் அங்கு வந்தடைகிறோம். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அந்தக் குன்றின் மீது கூடியிருக்கிறார்கள். அதோ கீழ்வானில் செவ்வொளி பரப்பி ஜோதிப் பிழம்பாக தகதகத்துக் கொண்டிருக்கிறான் சூரியன். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு அசாதாரணமான அமைதி கவிகிறது. வானத்துச் சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரைகிறது. லேசான கருமை படர்கிறது. நாலா பக்கமும் மலைப்பாறைகளும் இடிபாடுகளும் வயல்களும் மெலிதாக மறைகின்றன. திரைச்சீலையின் ஓவியங்களில் மெதுமெதுவாக புகைபடிவது போல.

குன்றிலிருந்து இறங்குகிறோம். இதமான காற்று உடலையும் கனத்த இதயத்தையும் குளிர்விக்கிறது. வரலாற்றின் பொற்கனவுகள் என்றும் அழிவதில்லை என்று பறைசாற்றுகிறது சாலையோரக் கரும்பு வயல்களில் அலையடிக்கும் பசுமை. பயணம் தொடர்கிறது.

ஹம்பி புகைப்படங்கள்:  https://picasaweb.google.com/100629301604501469762/HampiDec2013Trip

(தொடரும்)


அடுத்த பகுதி >> 

டிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..

morning_hindutvaடிசம்பர் 6 சமகால வரலாற்றில் மறக்க முடியாத நாள்.  அயோத்தி இயக்கத்தின் சிகர தினம். இந்தியாவின் செல்திசையையே மாற்றி அமைத்த அந்த இயக்கத்தின் பயணத்தில் முக்கியமான  இன்னும் சில தினங்களையும் இந்த நாளில் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

1989 நவம்பர் 9 . அன்று தான் அயோத்தியில் ராமஜன்ம பூமி ஆலயத்தின் அடிக்கல் (சிலான்யாஸ்) நாட்டப் பட்டது.  காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் வழிபட்டு அனுப்பிய ராம சிலா செங்கற்கள் அயோத்தியை வந்தடைந்தன. கொழும்பிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் பூஜித்துக் கொணர்ந்த செங்கற்களின் படங்கள் அப்போதைய விஜயபாரதம் இதழ்களில் வந்தன. அவை சாதாரண செங்கற்கள் அல்ல, ஓர் மகோன்னதமான இந்து எழுச்சியின் அஸ்திவாரக் கற்கள்.

Shilanyas-of-Shri-Ramjanmabhumi--300x180அந்த அடிக்கல் நாட்டு நிகழ்வை பாஜக தவிர்த்த மற்ற அத்தனை அரசியல் கட்சிகளும் எதிர்த்தன. ஆயினும் மக்கள் சக்திக்குத் தலைவணங்கி வேறு வழியின்றி மத்திய அரசும் உபி அரசும் அனுமதி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சிலிர்ப்பூட்டும் சரித்திர நிகழ்வில் முதல் கல்லை எடுத்து வைத்தவர் காமேஷ்வர் சௌபல். பீகார் விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர். தலித். அவரைப் பின்தொடர்ந்து சாதுக்களும், மற்ற தலைவர்களும் 141 செங்கற்களை சம்பிரதாயமாக அடுக்கி அஸ்திவாரமிட்டனர். நூற்றாண்டுகளாக ஒடுக்கப் பட்டுக் கிடந்த நமது சகோதரர்களில் ஒருவர் இந்து புத்தெழுச்சியின் பிரதிநிதியாக முன் நின்ற ஒரு பொற்கணம்!    ஒரு விதத்தில் இந்தக் குறியீட்டுச் செயல்பாடு இந்து ஒற்றுமை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் வரைபடமாகவும் இருந்தது. ஆனால், குறியீடாக மட்டும் இது நின்று விடவில்லை. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ் வழிகாட்டுதலில் சங்க பரிவாரம் முன்னெடுத்த தீவிர சமுதாய சமத்துவ செயல்பாடுகளும், அயோத்தி இயக்கமும் ஒன்றை இன்னொன்று மேன்மேலும் பலப் படுத்துவதாக, வளர்ப்பதாக இருந்தன. குறிப்பாக மகாராஷ்டிரத்தில், டாக்டர் அம்பேத்கருடன் நெருக்கமாக இருந்து, அவரது சமூக சிந்தனைகளை உள்வாங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இதில் நேரடியாகப் பங்களித்தனர்.

karsevaks-19901990 அக்டோபர் 30 &  நவம்பர் 2.  சரயூ நதியின் தண்ணீருடன் செந்நீர் கலந்தோடிய தினங்கள். அயோத்தி இயக்கத்தின் ஒரு மாபெரும் துயர அத்தியாயம் இத்தினங்களில் நிகழ்ந்தது. அந்த வருடம் ஜூன் மாதம் முதலே கரசேவைக்கான அழைப்பு விடுக்கப் பட்டது. மக்கள்  நாடெங்கிலும் இருந்து வெள்ளமெனத் திரண்டனர். பல்வேறு தடைகளையும் முட்டுக் கட்டைகளையும் தாண்டி எட்டு லட்சத்திற்கும் அதிகமான கர சேவர்கள் அயோத்தி நகரின் சுற்றுப் புறங்களில் வந்தடைந்தனர். ரயில்கள் வேண்டுமென்றே ரத்து செய்யப் பட்டதால் 100 கிமீ தூரம் நடந்தே வந்தவர்கள் அனேகர். வழி நெடுகிலும் உள்ள கிராமங்களில் இருந்த எளிய மக்கள் ராம காரியத்தில் தங்கள் உப்பு சேர வேண்டும் என்று கரசேவர்களுக்கு இடையறாது உணவளித்தனர். அவர்களைக் கவனித்துக் கொண்டனர். முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் வழியாக கரசேவர்கள் பயணம் செய்த போதும் எங்குமே கலவரங்களோ மோதல்களோ ஏற்படவில்லை. நாட்கள் நெருங்க நெருங்க, உபி மாநிலத்தின் எல்லா அரசு கட்டடங்களும் கரசேவர்களை நிரப்பும் சிறைக் கூடங்களாக மாற்றப் பட்டன.

இது எல்லாவற்றையும் மீறி ஒரு லட்சம் கரசேவர்கள் அயோத்தி நகருக்குள் குழுமினர்.  அமைதியாக ராம பஜனை பாடிக் கொண்டு ராம் லாலாவின் கோயிலை நெருங்கிச் சென்றவர்கள் மீது முதலில் தடியடி நடத்தப் பட்டது.  பிறகு கொடூரன் முலாயம் சிங் யாதவ் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. சாதுக்களையும் பெண்களையும் கூட அங்கிருந்த பொறுக்கி எடுக்கப் பட்ட காவல் படையினர் வெறித்தனமாக சுட்டனர். சடலங்கள் மிதந்தால் காட்டிக் கொடுத்து விடும் என்பதற்காக மணல் பைகளில் கட்டி சரயூ நதியில் தள்ளினர். ஒரு தவறும் செய்யாத 400க்கும் மேற்பட்ட அப்பாவி இந்தியப் பிரஜைகள், உதிர்ந்து போன பழைய கும்மட்டங்கள்  இடிக்கப் படலாம்; அவற்றைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் “மதச்சார்பின்மையின்” பெயரால் ஈவிரக்கமின்றி கொல்லப் பட்டனர். இந்த அப்பட்டமான அறமீறலை செய்த மாநில முதல்வர், அரசு அதிகாரிகள், காவல் படையினர் மீது உருப்படியான விசாரணை இன்று வரை நடத்தப் படவில்லை. தண்டனை வழங்கப் படவில்லை. இதன் பின்னணியில் ஊடகங்களும் செக்யுலர் அரசியல் கட்சிகளும் பரப்பி விட்ட வதந்திகளாலும் பொய்ச் செய்திகளாலும் தான் மதக் கலவரங்களும் மோதல்களும் பல இடங்களில் உருவாயின. அதற்கான பழி ஒட்டுமொத்தமாக அயோத்தி இயக்கம் மீது, சங்க பரிவாரங்களின் மீது போடப் பட்டது.

அன்று உயிர்நீத்த அந்த பலிதானிகளை கண்ணீர் அஞ்சலியுடன் நினைவு கூர்வோம்.

ayodhya-comwall1992 டிசம்பருக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. எத்தனையோ வரலாற்று சான்றுகள், அகழ்வாராய்ச்சி முடிவுகள், நீதிமன்றத் தீர்ப்புகள்  மீண்டும் மீண்டும் அங்கிருந்த ஆலயம் 15ம் நூற்றாண்டில் தகர்க்கப் பட்டதை ஆதார பூர்வமாக நிறுவியுள்ளன. இடிக்கப் பட்டது பாபர் மசூதி அல்ல; கும்மட்டம் மட்டுமே என்று அறிவித்துள்ளன.

ஆரம்பம் முதலே, முஸ்லிம் சகோதரர்கள் இதை ஏற்கும் நிலைக்கான சாத்தியம் ஏற்பட்டிருந்தாலும், நேருவிய போலி மதச்சார்பின்மை வாதிகளும், வாக்கு வங்கி அரசியல் கயவர்களும், இஸ்லாமிய மத வெறியர்களும், இடதுசாரி போலி அறிவுஜீவிகளும், அவர்களது பிரசார ஊடகங்களும் முனைந்து இந்த பிரசினை சுமுகமாகத் தீர்க்கப் படக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள்.

அதன் எதிரொலியாகவே ஒவ்வொரு வருடமும், கறுப்பு தினமாக, கசப்புணர்வை, வெறுப்பை, துவேஷத்தைப் பரப்பும் தினமாக டிசம்பர் 6ம் தேதியை அனுஷ்டிக்கிறார்கள். ஏதோ நாட்டுக்கே இழிவை ஏற்படுத்தி விட்ட தேசிய அவமானம் என்பது போல பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

“இப்போது நாம் அனைவரும் மனசாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டிய கேள்வி – எது இந்திய மதச்சார்பின்மைக்கும் அற உணர்வுக்கும் செய்யப் பட்ட மிகப் பெரிய அநீதி? திட்டமிட்டுப் பொய்ப் பிரசாரம் செய்து, இல்லாத மசூதியான ஒரு கும்மட்டத்தை, ஒரு மசூதியாக சிறுபான்மை மக்கள் மனதில் பதித்த இந்தப் படித்த அயோக்கியர்களின் செயலா? அல்லது தாக்கப் பட்டு, குண்டடி பட்டு, மீண்டும் மீண்டும் இந்தியாவின் உச்ச மட்டங்களில் அமர்ந்திருக்கும் அதிகார வர்க்கத்தினரால் ஏமாற்றப் பட்டு, அந்த கும்மட்டத்தை ஏறி உடைத்த கரசேவகர்களின் செயலா?”

என்று கேட்கிறார் அரவிந்தன் நீலகண்டன் (2010 அக்டோபரில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளிவந்தவுடன் எழுதிய கட்டுரை).

அயோத்தி பிரசினையின் ஊடாக நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?  உண்மையில் இந்தப் போராட்டம் ஒரு நிலத் தகராறுக்காக அல்ல. வரலாற்றுப் புத்தகங்களை வைத்து அல்ல. அடிப்படையான மதரீதியான கலாசார மோதல் இது.  இந்திய முஸ்லீம்களிடம் உள்ள பிரசினை, அவர்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையோ, அல்லது அவர்களுக்கு சொந்தமில்லாததைக் கூட அநியாயமாக உரிமை கோரும் தீவிரமோ அல்ல. இதற்கெல்லாம் உந்துதல் அளிக்கும் ஒரு மதத்தை அவர்கள் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவது தான்.  கொய்ன்ராட் எல்ஸ்ட் சொல்வது போல, “பிரசினை அயோத்தியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதல்ல. முஸ்லிம்களிடமிருந்து இஸ்லாமியத்தை (Islamism) வெளியேற்றுவது தான்” [1].

ஒரு தேசமாக, இந்தியாவில் இந்த பிரசினைக்கு நீண்ட காலத் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை அயோத்தி இயக்கம் ஏற்படுத்தியது. ஆனால், இன்று திரும்பிப் பார்க்கையில் இந்திய முஸ்லிம்களிடம் இஸ்லாமியம் அதிகரித்துக் கொண்டிருப்பதைத் தான் காண நேர்கிறது. தொடர் குண்டுவெடிப்புகளும், பர்தா போடாத பெண்கள் கல்லெறி படுதலும், கலை சுதந்திரத்தை முடக்கும் அச்சுறுத்தல்களும் இதன் சாட்சியங்கள். கடும் அடிப்படைவாத கருத்துக்கள் முஸ்லிம் இளைஞர்கள் மனதில் நஞ்சாக ஏற்றப் படுகின்றன. இவை முஸ்லிம்களை  உள்ளிருந்தே அழித்துக் கொண்டிருக்கின்றன. இந்திய தேசியத்திற்கு எதிரான ஒரு மாபெரும் அபாயமாக இது வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரழிவிற்கு எதிராக, தங்கள் மீட்சியை  இந்திய முஸ்லிம்கள் தாங்களே தான் தேடிக்கொள்ள வேண்டும்.  அமைதியிலும் இந்திய தேசியத்திலும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் முன்வர வேண்டும். அரசும், ஒட்டுமொத்த சமூகமும் அதற்கு ஊக்கமும் உதவியும் அளிக்க  வேண்டும்.

அதற்கான வழிகள் உள்ளன. கபீர்தாசரின், உஸ்தாத் பிஸ்மில்லா கானின், பீர் முகமது அப்பாவின், டாக்டர் அப்துல் கலாமின் வழி. இந்த மண்ணின் பண்பாட்டுச் செழுமையுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு நல்லிணக்கத்துடன் வாழும் வழி. நவீனக் கல்வியும், அறிவியலும், ஜனநாயகமும் உருவாக்கும் சுதந்திர வெளிகளின் வழியே தங்களது மதத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை, பெண் அடக்கு முறைகளை, வன்முறை சித்தாந்தங்களை விமர்சித்து நிராகரிக்கும் வழி.

babasaheb_ambedkar“[உண்மையான] மதம் என்பது எப்போதும் கருத்து நெறிகளாகவே இருக்க வேண்டும். கட்டளைகளாக இருக்க முடியாது. அது கட்டளைகளாக மட்டுமே கீழிறங்கும் போது, மதம் என்ற மதிப்பை இழக்கிறது. ஒரு உண்மையான மத ஆசாரத்திற்கு இலக்கணமாக உள்ள பொறுப்புணர்வை அத்தகைய மதம் கொன்று விடுகிறது.” [2]

நவ பாரத சிற்பி அம்பேத்கரின் சொற்கள் இவை. டிசம்பர் 6 அவர் பரிநிர்வாணம் அடைந்த தினம்.

இந்திய சமூகத்தில் நல்வழிகளை நினைவுறுத்தும் நாளாக இந்த நாள்  அமையட்டும்.

நாளை மீண்டும் சந்திப்போம்.

சான்றுகள்:

[1] Ayodhya: The Case against the Temple by Koenraad Elst, Chapter 13.

[2] “Religion must mainly be a matter of principles only. It cannot be a matter of rules. The moment it degenerates into rules, it ceases to be a religion, as it kills responsibility which is an essence of the true religious act”.

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2

P1010916

<< முந்தைய பகுதி

கந்தகிரி உதயகிரியில் மிக முக்கியமான தமிழ் பண்பாட்டு இணைவின் தங்க இணைப்பான காரவேலர் கல்வெட்டுக்களை பார்த்து விட்டு கந்த கிரியின் மற்ற பகுதிகளை காணச்சென்றேன். கந்தகிரியில் மிக முக்கியமாக பெளத்தத்தின் சிற்ப வேலைப்பாடுகளும், குகைகளும்  நிறைய காணக்கிடைக்கின்றன. பெளத்த சைத்யங்கள், பெளத்தத்தின் வேறு ,வேறு சிந்தனை பிரிவுகளின்( school of thoughts ) ஆசிரியர்களும் ,மாணவர்களும் தங்கிப்பயின்ற குகைகள், பாட அறைகள், திறந்த வெளி கல்வி கூடங்கள் . திறந்த வெளி அரங்குகள், பாறைக்குடைவுகள் ,அரசர்கள் தங்கும் குடை வரைவுகள். சிற்பக்கலையின் அபார மிச்சங்கள். அரசர்கள் தங்கும் குகை வரைவுகளை காவல் காக்கும் யவன வீரர்களின் சிற்பங்கள், அச்சு அசல் மாறாத யவன காலனிகள், தலைப்பாகை அணிந்த வலிமை பொருந்திய அயல் தேச வீரர்கள் சிற்பமாய் சமைந்து இன்னும் காவல் புரிகிறார்கள். வித, விதமான யானைகள். யானைகளின் ஆபரணங்கள், யானைகளின் அசைவுகள், அதன் பல்வேறு பரிமாண தோற்றங்கள். போர்க்காட்சி சித்தரிப்புகள். கலிங்கப்போரின் காட்சிகள் என்று அந்த பிரதேசமே 2000 ஆண்டுகளாக உறைந்து போனதாக தோன்றுகிறது. அந்த போர்க்காட்சி சித்தரிப்புகள் மிகவும் தத்ரூபமாகவும், மெய் நிகர் தோற்ற மாதிரியாகவும் இன்றும் இருக்கிறது.

P1010954கந்தகிரி இப்போதைய நிலையில் 5 அடுக்குகளாக (5 floor level) உள்ளது. முழுதுமே பாறைக்குடைவுகள் தான். பறைக்குடைவுகளில் மிக முக்கியமான ஒரு வித்யாசம் என்பது கட்டுமானம் மேலேருந்து கீழாக செய்து கொண்டு வரப்படும். கந்த கிரியின் சில மேல் தளங்கள் சரிந்து கிடக்கின்றன. சில சிற்பங்கள் பாதி செதுக்கப்பட்ட நிலையில் உள்ளது. சில சிற்பங்கள் கால வெள்ளத்தில் தன் உருவக்கட்டமைப்புகள் மட்டும் சிதறி ஆனால் தான் உருவாக்குவதற்காக செய்யப்பட்ட அபாரமான மன எழுச்சியையும், தத்துவக்குறியிடுகளையும் இன்றும் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றது. உலகத்தின் எந்த பகுதியில் இருந்து வருபவர்களுக்கும் சொல்வதற்கு இந்த சிற்பங்களிடம் செய்திகளும், கதைகளும் உண்டு. எத்தனை நூற்றாண்டு, ஆயிரமாண்டு என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை நோக்கி வருபவரிடம் இந்த சிற்பங்களும் , குடை வரைவுகளும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. மொழித்தடையோ, அறிதல் தடையோ, காலத்தடையோ இங்கே முற்றிலும் இல்லை.

இதன் முதல் தளத்தில் ஆசிரியர்கள் தங்குவதற்காக உள்ள குகைகளுக்கு வெளியே உள்ள நீளமான  நடைபாதையின் ஓரச்சுவர்களில் உள்ள கலிங்கப்போரின் காட்சி சித்தரிப்புகளை பார்க்கலாம். இன்றைய காமிக்ஸ் படக்கதைகளைப்போல அசோகனின் கலிங்கப்படை யெடுப்பை அடுக்கு அடுக்காக காட்சி வர்ணணை மூலம் நமக்கு சொல்கிறார்கள் . ஆக்ரோஷமான களக்காட்சிகள் . களத்தில் யானை, குதிரைகளின் பங்களிப்பு . வீரர்களின் அபாரமான போர் அசைவுகள். ஆயுதங்கள், அதனைப்பயன்படுத்தும் போர் வீரர்கள், ரதங்கள் , உன்மத்தம் கொண்ட போர். இறந்து வீழ்ந்திருக்கும் மனித உயிர்கள். கொப்பளித்து ஓடும் குருதி ஆறு இதெல்லாம்  நவீன ஒவியங்களில் மட்டுமே சாத்தியம் என்று நினைத்து கொண்டிருப்பதை நிச்சயம் மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொண்டேன் . அபாரமான காட்சி சித்தரிப்பும், உயிர்ப்பும் ,கலையும் கலந்து பயமுட்டும் வகையில் அமைந்த புடைப்பு சிற்பங்கள்.Cave_monastry_in_khandagiri

ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச்சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது . குடை வரைகளில் உள்ளே ஒரு படுக்கை செதுக்கப்பட்டுள்ளது. உள் சுவர்களில் இரு புறமும் ஏடுகளை வைத்துக்கொள்வதற்குரிய மாடம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் தளத்தின் அறைகள் ப வடிவிலான ஒரு நடைபாதை அதற்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் தங்குவதற்கான அறைகள்.முன் புறம் ஒரு திறந்த வெளி அரங்கு. பக்க வாட்டில் சொகுசான என்று சொல்லத்தக்க அளவில் சற்றே பெரிய உள்குழிந்த அறைகள் . அதனுள்ளே விரியும் நிலவறை , குகை பாதைகள். முன்புறம் காவலர்கள், யானைகள். விருந்தினர்களை சந்திக்க ஏற்பாடுகள். திறந்த வெளி அரங்கில் நிகழும் விவாதங்களையும், கலை வெளிப்பாடுகளையும் மேலிருந்து ரசிக்க ஏற்பாடுகள் என்று அபாரமான முன் யோசனையோடும்,தொலை நோக்குடன் கட்டப்பட்ட ஒரு கட்டிடக்கலைக்கொத்து என சொல்லலாம். காரவேலர் கல்வெட்டு 3 ஆம் தளத்தில் உள்ளது. அதன் மேற்பகுதியில் கலிங்க சிங்கம் வாய் பிளந்த நிலையில் ஒரு பாறை செதுக்கப்பட்டுள்ளது. கலிங்க சிங்கமும், யானையும் போட்டி போட்டுக்கொண்டு ததாகரோடு  நிற்கிறார்கள். நிறைய பிராகிருத பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. காரவேலர் கல்வெட்டில் தான் நாட்டியம் ,இசை , வாத்தியக்கருவிகள் உள்ளிட்ட கலை வெளிப்பாட்டை பார்க்க திறந்த வெளி அரங்கை உபயோகிப்பதை குறிப்பிடுகிறார் .(http://gujaratisbs.webs.com/Abstracts%202010/Mr%20%20Gautam%20More.pdf). இது சாதகர்ணீக மன்னர்களின் கல்வெட்டிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நான் அவற்றை பார்க்க வில்லை.

muruga001அங்கு ஒரு விசித்திரமான சிற்ப தொகுதியை பார்த்தேன். வேடனிடம் அடைக்கலாமாகும் அரசகுமாரி,துரத்தும் யானை, பின்னர் திருமணம் என்பது போன்ற ஒரு புடைப்பு சிற்ப தொகுப்பை கண்டேன். திடீரென பார்க்கையில் எனக்கு அது வள்ளி, முருகன் கதையை நியாபகப்படுத்தியது. இங்கு முருக வழிபாடு உள்ளதா என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. ஆனால் முருக வழிபாடு என்பது எவ்வளவு பழமையானது. எங்கெங்கு பரவி இருந்தது என்பது போன்ற விபரங்களை ஆராய்பவர்கள் தெளிவு படுத்தினால் இந்த தகவல்களுக்கு புதிய ஒளி வெள்ளம் கிடைக்கும். சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள சிங்கம் கலிங்க சிங்கத்தையே ஒத்து இருக்கிறது. சிங்க + ஊர் = சிங்கூர், சிங்கப்பூராக மாறி இருக்கலாம். மலேசியாவில் உள்ள பத்து மலை முருக வழிபாடு, இவை எவ்வளவு பழமையானவை, இவற்றிர்க்கும் கலிங்கத்தில் உள்ள முருக வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பு. புராண ,வரலாற்று ஆதாரங்கள் ஆகியவை தீவிரமாக ஆராயப்பட வேண்டும். இலங்கை, லங்கா, கலிங்கா, அதன் சிம்மம், மகாவம்சம் சொல்லும் செய்திகள் இவை அனைத்தையும் பொருத்தி நாம் சில முடிவுகளுக்கு வர வேண்டும். கந்த மால் பழங்குடிகள், அவர்களின் வேட்டுவ தொழில், வேல் ஆயுதத்தை முக்கியமாக இன்றும் உபயோகிக்கும் கந்தமால் பழங்குடிகள். அவர்களின் பழங்குடி தெய்வத்திற்கு இருக்கும் இரண்டு மனைவிகள் இவை அனைத்தும் ஆய்வு கண்ணோட்டத்தோடு ஆராயப்பட வேண்டும்.

 

”குமார” பர்வதம் எனும் ”கந்த”கிரி குமார சம்பவம் எழுதப்பட்ட மெளரியர்கள் ஆட்சிக்குள் இருந்த தேசம். சமணர்களுக்கும் மிக முக்கியமான சரித்திர முக்கியத்துவம் பெற்ற இடம் . காரவேலர் கல்வெட்டில் முதல் வரியிலேயே காரவேலன் சொல்வது தூய அருகர்களின் பாதம் பணிந்து காரவேலன் சொல்வது என்று துவங்குகிறது. 12 ஆவது வரியில் மகத நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட கலிங்க ஜைன ஆதி நாதரை மகத மன்னர்களுடன் போரிட்டு வென்று திரும்ப கொண்டு வந்திருக்கிறார் .முன்னதாக நந்த மன்னன் நவ நந்தனால் இது கவர்ந்து செல்லப்பட்டது . என பெருமையோடு பதிவு செய்கிறார். சமணர்களுக்கு ( http://orissa.gov.in/e-magazine/Orissareview/apr-2007/engpdf/page40-41.pdf ) சீனத்து பட்டும், அருக துறவிகளுக்கு வெள்ளுடையும் கொடுத்து மகிழ்ந்ததையும், அதிகமான அளவு சமண மதம் பரவ வகை செய்யப்பட்ட்டது என்றும் சொல்கிறார். குமரி பர்வதம் எனும் உதயகிரியில் ஏராளமான சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளும், பத்மாட்ஷி , குஷ்மாண்டிணி தேவிகள், யட்சர்கள்,கின்னரர்களின் சிற்பங்கள் உள்ளன. வித விதமான ஆதி நாதர், பார்ஸ்வ நாதர், சிற்பங்களை கண்டோம். பல குகை வரைவுகளில் சிற்பங்களே இல்லை. முன்புற முகப்பு சிற்பங்களில் அருக தேவர்கள் புடைப்பு சிற்பங்களாக அருள் பாலிக்கிறார்கள். பல குகைகளில் நவீன கால காதலர்கள் தங்கள் காதலை பெயிண்ட்டால் பதிவு செய்திருக்கிறார்கள். முடிந்த அளவு சிற்பங்கள் மேல் சிறிய கற்களாலும் , வேறு உபகரணங்களாலும் உடைத்து தங்கள் பெயரையும் ,காதலன்,/காதலி பெயரையும் பதிய முயற்சித்து சிற்பத்தை மூளியாக்குவதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

P1010927

இதன் மேல் தளத்தில் கருப்பு கிரானைட்டால் ஆன பார்ஸ்வ நாதர் காணக்கிடைக்கிறார். உதயகிரி, கந்த கிரியில் மட்டும் 700க்கும் மேற்பட்ட குகைகள், குடை வரைகள் பல்வேறு மன்னர்களால் செதுக்கப்பட்டுள்ளன. பெளத்தர்களுக்கும், சமணர்களுக்கும் பெரிய அளவில் இங்கு குகைகள் எந்த பாகுபாடுமின்றி தொடர்ந்து வந்த ஹிந்து மன்னர்களால் துவேஷமின்றி வழங்கப்பட்டுள்ளது. சோமவன்ஷிகள், சாதவாகனர்கள், மெளரியர்கள், நந்தர்கள் ,குஷாணர்கள், சேதிபர்கள் , கலிங்க சோழர்கள், கடைசியாக விஜய நகர பேரரசர்கள் வரை பெளத்தர்களுக்கும் , சமணர்களுக்கும் தொடர்ச்சியாக  நிவந்தங்கள் கொடுக்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களும் இவர்களுக்கு நிதி உதவி செய்திருக்கிறார்கள். எந்த கலிங்க வரலாற்றுக்குறிப்பிலும் ஹிந்து மன்னர்கள் பெளத்த, சமண ஆலயங்களை இடித்தனர். உடைத்தனர் என்பது போன்ற தரவுகளே இல்லை . மாறாக இங்கு சிதைந்த நிலையில் இந்த குகைகள் காணக்கிடைப்பதற்கு இஸ்லாமிய படையெடுப்பு ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது (http://voiceofdharma.org/books/siii/ch7.htm ).  தொடர்ச்சியாக வெறி பிடித்த காட்டு மிராண்டி இஸ்லாமிய படைத்தலைவர்கள் எரியூட்டி அழித்து ஒழித்திருக்கிறார்கள் . ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள் .,தோற்று போன வீரர்களை பெருவாரியாக வெட்டிக்கொன்று தங்கள் பாலைவன  காட்டுமிராண்டித்தனத்தை  நிறுவி இருக்கிறார்கள் (http://www.oocities.org/hindoo_humanist/mughal.html ) .

 

பேரழிவின் படை
பேரழிவின் படை

அப்பாவியான பெளத்த,சமண தர்மத்தை கடை பிடிக்கும் நாகரீகமான மக்கள் தர்மம் தவறாத அன்பையே கடவுளாக வழிபடும் அப்பாவி ஹிந்துக்கள் இந்த காட்டு மிராண்டித்தனமான, தர்மத்திற்கு புறம்பான அராஜக ,குரூரர்களுடனான போரில் வீழ்ந்து மாண்டார்கள் . உயிருடன் எஞ்சிய ஆண்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு ஆண்மைஅழிக்கப்பட்டு நபும்சகர்களாக அரேபிய அடிமைகளின் அந்தப்புரங்களில் ஆசை நாயகர்களாக அமர்த்தப்பட்டனர். இஸ்லாமிய காட்டு மிராண்டித் தனமான போர்கள் , அழிவுகள் ,கற்பழிப்புகள் பற்றி சீதாராம் கோயல் (http://sitaram.0catch.com/page266.htm ).ஆனால் பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து விடுவார்கள்.மேற்கு வங்கத்தில் இருந்த கம்யூனிஸ் அரசோ அரசாணை வெளியிட்டு இஸ்லாமிய கொடுரர்கள் செய்த பேரழிவுகளை வரலாற்றில் மறைக்க சொல்லி ஆணையிடும். இதெல்லாம் போலி மதச்சார்பின்மையின் சில நோய்கூறுகள். இந்தியா என்பது ஒரே நாடு என்பதற்கு பல சாட்சிகளும், வரலாற்று உண்மைகளும் பயணம் செய்யும் பொழுது பார்த்துக்கொண்டே வரலாம்,. வேறு, வேறு மொழிகள், உடைகள், வித்யாசமான உணவுப்பழக்கம், இறைவழிபாட்டில், கலை, இலக்கிய ரசனைகளில் வேறு வேறு விதமான மாற்றங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், பண்பாடு , நாகரீகம் என்பதெல்லாம் இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரி இருப்பதை காணலாம். ஆலயங்கள், வழி பாட்டு முறைகள், சகிப்பு தன்மை , விருந்தினர்களை போற்றுதல், துறவிகள் மீதான மரியாதை, தாய் ,தந்தைகளை மதித்தல், குடும்ப அமைப்புகள். வட்டார மொழிகளில் தமிழ், பிராகிருத, சமஸ்கிருத மொழிகளின் கலப்புகள். கலைகளில் தெரியும் பிற மொழி கூறுகள்.  நதிகளை தாயாக வணங்குவது . மானுட நேசம் இவை எல்லாமே இந்த தேசம் ஒரே தேசம் என்பதை தொடர்ந்து நிருபித்துக்கொண்டே இருக்கிறது. என்றெல்லாம் யோசித்துக்கொண்டே புவனேஸ்வரிலிருந்து கோனார்க்  நோக்கி நகர்ந்தேன்.

mus02

கோனார்க்கை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். பாரதத்தின் மகத்தான கலையாக்கங்களில் ஒன்று. மானுட யத்தனங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த ஆக்கம். இந்து மதத்தின் ஆறு தொகைகளில் செளரம் எனும் சூரிய வழிபாட்டுத்தொகையின் முக்கியமான கோயிலாக வாழும் ஆலயமாக இன்றும்  நீடித்து நிலைக்கிறது . இதன் தொன்மம் மகாபாராத காலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மகன் சாம்பனுக்கு சாபத்தால் தோல் வியாதி ஏற்படுகிறது . 12 ஆண்டு கால கடின தவத்தின் பயனால் சூரிய தேவரால் பார்க்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டு தன் நோய் தீர்க்கிறார் யது குல இளவல் என்கிறது பாரதம். வைட்டமின் d குறைபாட்டால் நோய் பீடிப்புக்கு ஆளாகும் யது இளவரசனை சூரிய வெப்பம் சரி செய்கிறது . சூரியன் ஒளியின் கடவுள் , அவருக்கு நன்றி சொல்லும் முகமாக இந்த பேராலயம் பாரத காலத்தில் கட்டப்பட்டதாக தொன்மம் நிலவுகிறது . இன்றைய பாரதத்தின் பெரும்பான்மையான கோயில்கள் ஏதாவது ஒரு பழங்கால நினைவை உயிர்ப்பிக்கவோ, முக்கியமான வரலாற்று, சமூக நினைவுகளை சமூக பொது மனத்தில் இருத்திக்கொள்வதற்காகவோ தான் கட்டப்பட்டதாக இருக்கிறது.

சடங்குகள், பலிகள் பற்றியும் இது போன்ற கண்ணொட்டத்தில் அணுகினால் புதிய திறப்புகள் கிடைப்பதை காணலாம். கடற்கரைக்கு அருகில் உள்ள இந்த இடத்தில் கோயில் இருந்தது என்பதான கண்ணோட்டம், நினைவு சமூகத்தின் பொது மனத்தில் ஆண்டாண்டு காலமாக பேணப்பட்டு வந்திருக்கும். அது தொடர்பான செய்திகள், குறிப்புகள் பாரம்பரிய கலை வடிவமான ஒடிஸி மூலமாகவும், கதையாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மூலமாகவும் செய்தி நூற்றாண்டுகள் தோறும், காலந்தோறும் கடத்தப்பட்டு கொண்டிருக்கும். பின்னாளில் வரும் ஏதோ ஒரு அரசன் அந்த இடத்தில் மீண்டும் கோயிலை நிர்மாணிப்பான். கோயில் மீண்டும் பல்லாயிரம் ஆண்டுகள் மக்கள் மனதில் நீங்காத இடம் பெறும். அப்படியான ஒரு காலத்தொடர்ச்சி தான் இந்த மாபெரும் கலையற்புதமான கோனார்க் சூரியனார் கோயில். நாகரா பாணியும், சிறிது திராவிட பாணியும் கலந்து கட்டப்பட்ட கோயில் தமிழக கலிங்க கலையின் மிகச்சிறந்த ,தேர்ந்த கலை கலப்பு ஆகும். நூற்றாண்டுகளாக ,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலையில் கொண்டும் கொடுத்தும் பேணிக்காக்கப்பட்டு வந்திருக்கும் நீண்ட உறவு தொடர் சங்கிலி இது. இதன் கோபுர வடிவம் நம் தஞ்சை பெரிய கோவிலை ஒத்து இருக்கும். உயர்த்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை விட கொஞ்சம் தான் குறைவான கோயில். ஆனால் சிற்ப அற்புதங்கள், அமைப்பு இவற்றிர்க்கு ஈடு இணை வைக்க முடியவே முடியாது. தேர் வடிவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தை பற்றியும் இதனை இடித்து நாசமாக்கிய நயவஞ்சகர்களை பற்றியும், இதை சீர் செய்ய விரும்பிய ஆங்கிலேயர்கள் பற்றியும், செளர வழிபாடு, அதன் பரவல் ,கீழைக்கங்க மன்னர்களின் கொடைகள். திராவிட சிற்பிகள் இவைகளைப்பற்றி வரும் வாரம் தொடர்கிறேன்..

konark early01

மேலதிக தகவலுக்கு : http://mughalinvaders.wordpress.com/2011/10/05/british-sources-confirm-atrocities-against-indians/

(தொடரும்)