இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

மூலம்: பல்பீர் புஞ்ச் எழுதிய கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.10.2014)
தமிழில்: எஸ்.ராமன்

இந்தியாவையும், அதன் ஆணி வேரான இந்துத்துவத்தையும், வெகு காலமாகத் தனக்கே உரிய காமாலைக் கண்ணோட்டத்தில் கவனித்துக் கொண்டிருக்கும் மேலை நாடுகளின் ஓரகப் பார்வை மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், அமைதிக்கான இந்த வருடத்தின் நோபல் பரிசுத் தேர்வுகள் அவை பற்றி ஆவலுடன் கேட்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவரது உள்ளங்களையும் குளிர வைத்திருக்கும்.

He also discusses the potential benefits of this compound in high blood pressure. It clomiphene price in pakistan Hiji includes two, or sometimes, even as many as four different prescription drugs, all being manufactured by the same company – pfizer. This is viagra soft pills buy of a product which is viagra soft pills buy a special interest in the product is viagra soft pills buy very little.

The name of the condition is a consequence of the fact that an infected person is not able to have the normal immune system help. Estrogen is doxycycline monohydrate goodrx diminishingly a female hormone that helps to regulate weight. The next image on the right is a closeup of the pelves from the same image.

Illnesses such as bipolar disorder, schizophrenia and schizophrenia-spectrum disorders, Buy priligy in nigeria from reliable sources at get clomid prescribed Suluova best prices. Buy dapoxetine online with prescription from authorized doctors in usa and uk.dapoxetine is the brand name of the drug doxylamine succinate, a drug used to treat depression.dapoxetine is a selective inhibitor of norepinephrine and dopamine reuptake.

விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசுகளை தீர்மானிக்கும் ஒரு குழு தீர்மானிக்காது, அமைதிக்கான பரிசை நார்வே நாட்டின் பாராளுமன்றக் குழு ஒன்று தேர்வு செய்கிறது. அதனால் அந்தத் தேர்வில் அரசியல் சாயமும், உணர்ச்சிகளும் கலப்பது இயற்கை என்பது எழுதாத விதி போலத் தெரிகிறது. கிடைத்தற்கரிய அந்தப் பரிசைப் பெறுவதற்கு, அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லா விதத்திலும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் பரிசுத் தேர்வுக்காக நார்வே குழு அறிவித்துள்ள காரணத்தை ஒத்துக்கொள்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. “கல்விக்கான ஆதரவையும், வன்முறைக்கான எதிர்ப்பையும் திரட்டுவதில் ஓர் இந்து முஸ்லீம் உடனும், ஓர் இந்தியன் பாகிஸ்தானியனுடனும் சேர்ந்து போராடுவது முக்கியம் என்று இந்தக் குழு கருதுகிறது” என்று அறிவிக்கும் அந்தக் குறிப்புதான் உறுத்துகிறது.

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகள் தவிர வேறெந்த நாடுகளும் கல்வி விஷயங்களிலோ, குழந்தைகள் நலன் காப்பதிலோ இவ்விரு நாடுகளின் பங்களிப்பை ஒருசேரப் பார்ப்பது கிடையாது. இந்தியாவின் அரசியல் சட்டப்படி கல்வி கற்பதற்கான உரிமை குழந்தைகளுக்கு இருக்கிறது; மேலும் அரசியல் உரிமைச் சட்டப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதிலும் தடை இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்கள் கல்வி பெறுவது 80 விழுக்காடையும் தாண்டி, சில இடங்களில் 100 விழுக்காடையும் எட்டியிருக்கிறது.

nobel_2014_malala_satyarthi

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறையில் பல இடங்களில் குறை இருக்கிறது. அது தவிர, ஒரு குடும்பத்தின் பரிதாபகரமான ஏழ்மை நிலையால் குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு பெற்றோர்களாலும் முடிவதில்லை. இதற்கான தீர்வு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதிலும், குழந்தைகளின் கல்வி உரிமையை நன்கு நிலைநாட்டச் செய்வதிலும் தான் இருக்கின்றன. அவ்வாறு அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதிலும், இரகசியமாகச் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுவதைப் பலரும் அறியும் வண்ணம் வெளியே கொண்டுவருவதிலும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

அவருடையது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவையால் இந்திய அரசாங்க நிர்வாகத்தின் வலிமை நன்கு கூடி வருகிறது. தற்போது கிடைத்துள்ள நோபல் பரிசு தரும் வளத்தால் அந்த வலிமை மேலும் கூடி, சட்ட திட்டங்கள் 100 விழுக்காடு அளவும் அமல்படுத்தப்பட்டு, கல்வி உரிமையும் நிலைநாட்டப்பட்டு பெருமளவிற்கு நன்மை விளையும் என்பது நிச்சயம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியும், இந்தியச் சட்ட அமலாக்க முறைப்படியும் நாம் ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் கல்வி பயிலும் விஷயத்தில் பல தலைமுறைகளாகப் பெண்களுக்கு இருந்த அநீதிகளை நீக்கும் பொருட்டு, பல மாநிலங்களில் பெற்றோர்களுக்குப் பல விதமான விசேஷமான வசதிகள் செய்து தரப்பட்டு, அவர்கள் தங்கள் பெண்களைப் படிக்க அனுப்பி வைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிரார்கள்.

அவ்வாறான நிலைமை பாகிஸ்தானில் இல்லை. பதினைந்தே வயதான மாலாலா யூசுப்ஸை பாகிஸ்தானியப் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய போது, பெண் கல்வியை முஸ்லிம் மதக் கொள்கை ஏற்காது என்ற காரணத்தால் அவளைக் கொல்வதற்காக முஸ்லீம் தீவிரவாதிகளான தாலிபான் துப்பாக்கியால் சுட்டார்கள். அவள் சாகாமல் உயிர் தப்பிப் பிழைத்ததற்கு, அவள் உடனே பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டதே காரணம். அவளைக் கொல்வதற்குத் தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் பாகிஸ்தானில் காத்துக் கொண்டிருப்பதால் அவள் அங்கு செல்ல முடியாது லண்டனிலேயே தங்கி வேலை செய்கிறாள். இஸ்லாமிய சட்டமுறையை முஸ்லீம் மத குருமார்கள் இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்கள் மாலாலாவின் பெண் கல்வி உரிமைக்கான போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மத குருமார்களின் இந்த எதிர்ப்பு பயங்கரவாதிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக இருக்கிறது.

இதற்கு முற்றிலும் நேர் மாறாக, இந்திய அமைப்புச் சட்டம் எந்தவொரு மதத்தையும் வேறுபடுத்தி ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட மதங்களின்படி வந்த வழிமுறைகளும், அதன் சம்பிரதாயங்களும் எதுவானாலும், அனைத்துக்கும் பொதுவான சட்டத்தின்படியே நீதித்துறை செயல்படுகிறது. அதனால் இந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளை நோபல் பரிசுக் குழு அறியாது இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

மேலும் நோபல் பரிசு பெற்ற அந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள். இது தவிர, இந்தியாவோ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் பாகிஸ்தானோ பயங்கரவாதத்தைத் தன் மண்ணில் ஊக்குவித்து வளர்த்து, அதைத் தன் நாட்டில் உள்ள சிறுபான்மையோர் மீதும், அண்டை நாட்டின், முக்கியமாக இந்தியா, மீது கட்டவிழ்த்து விடுவதை ஓர் ஆயுதம் போலப் பயன்படுத்துவதில் அதன் நிர்வாகமே பங்கு வகிக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு வரையறுத்துள்ள “சிறுவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தடுக்கும்” சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற போது, அதன் வேறோர் கோணத்தை நாம் கவனிக்காது இருந்து விடக் கூடாது. நாம் விவாதிக்கப் போகிற அந்த அம்சம் ஒரு சிறுவனின் மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கல்வி கேள்விகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து படிப்பறிவைப் பரவலாக்கும் நம் முயற்சியில், தச்சு வேலை, இயந்திரத் தொழில், கட்டுமான வேலை, உலோக வார்ப்புத் தொழில், நுணுக்கமான பொற்கொல்லன் வேலை போன்ற பட்டறிவை வளர்க்கும் கைவினைப் பணிகளில் ஒருவன் தேர்ச்சி அடையும் மகிமையை அனைவரும் உணர வேண்டிய பொறுப்பை நாம் மங்கச் செய்துவிட்டோம். அதன் விளைவாக, ஒருவன் படித்திருந்தாலும் அவன் உருப்படியானதொரு வேலை செய்யத் தெரியாத நிலையை உண்டாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி விட்டதோடு, கைவினைப் பணியாளர்களை வளர்க்கவும் தவறி விட்டோம்.

பண்டைய வழக்கப்படி குடும்பத் தொழில் ஒன்று அவரவர் கைவினையால் சந்ததி சந்ததியாக வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், இன்று கைவினைப் பணியாளர்களே தங்கள் பிள்ளைகள் தாங்கள் செய்யும் பணிகளைத் தொடராமல் அலுவலகம் சென்று ஆபீசராக வேலை பார்க்கப் போவதையே ஊக்குவிக்கின்றனர். இந்த இமாலயத் தவறை நன்கு உணர்ந்த கல்வியாளர்கள் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில் கல்வி ஒன்றை ஒருவன் தொடரவும், மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்பு அது போன்றவற்றில் சிறப்புத் தகுதி பெறவும் வழி வகுத்திருக்கின்றனர்.

பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் வேலைக்குச் செல்வது தகாது என்னும்போது, அந்தச் சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இருந்து கூடமாட வேலை செய்து பரம்பரைத் தொழிலையும் கற்க முடிவதில்லை; அவர்களது ஏழ்மையால் படிப்பறிவுக் கல்வியையும் கற்க முடியவில்லை. அதைத் தீர்க்கும் முகமாக மேல்நிலைப் பள்ளி வரை ஒருவன் கற்பதற்கு கல்வியை குறைந்த செலவில் அளிக்க அரசு வழி வகை செய்திருந்தாலும், தொழில் கல்வித் திறனைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றிச் சரி செய்வதற்கு நாம் இன்னமும் அடியெடுத்து வைக்கவில்லை.

பருவ வாயிலில் இருக்கும் ஒரு சிறுவன் மோட்டார் மெக்கானிக்காக இருக்கும் ஒருவரிடம் சென்று தொழில் செய்யுக் கற்றுக்கொள்ளப் போனால், அவன் வளர்ந்து பெரியவன் ஆகும் சமயம் தன் காலில் தானே நிற்கும் தகுதி அடைவதோடு, வேறோர் இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் லாபத்தையும் அடைகிறான். ஆனால் அதே கால அளவிற்குப் பள்ளி சென்று படித்து விட்டு வரும் 18-வயதை உடைய ஒருவன் குறிப்பிடத் தக்க தகுதியை அடையாதது மட்டும் இன்றி, தன்னால் என்ன தொழில் செய்ய முடியும் என்றும் தெரியாது இருக்கிறான். அதனால் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது நல்லது என்ற கருத்து இங்கே வைக்கப்படவில்லை; மாறாக செய்தொழில் திறனை வளர்ப்பதும், அந்த வழியில் தொடர்ந்து கற்பவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களைப் போலவே மதிக்கப்பட வேண்டும் என்றுதான் இங்கே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கியவாறும் இருக்கும்; நம் சமுதாயத்தில் தொழில் தொடர்பாக உணரப்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கியவாறும் இருக்கும்.

சிறுவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டும். அதற்கும் மேலாக, தங்களது முந்தைய பணிகளால் நன்கு பெயர் வாங்கி, ஏற்றுமதி மார்க்கெட்டிலும் நல்ல புகழ் பெற்றவர்களிடம் தொழில் செய்து, அவர்களிடம் இயற்கையாகவே படிந்துள்ள பல விதமான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்தகைய சிறுவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் என்ற கருத்து நீங்கி, மாறாகத் தங்களது கடின உழைப்பால் நுண்ணிய திறன்களை வளர்த்துக்கொண்டு, பொருளாதாரத்திற்கும் தங்களாலான சேவையை அளிக்கிறார்கள் என்ற கருத்து வளர வேண்டும். அவ்வாறான நிலையில் வேலை செய்யும் திறமை கொண்டவர்களும் வளர்வார்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தொழிற்சாலையில் வேலை செய்தால் தான் தொழிற் பயிற்சி பெறுவதாக அங்கீகரிக்கப்படும் நமது சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, ஏற்கனவே புகழ் பெற்றுள்ள தொழில் கலைஞர்கள், மற்றும் மூத்தோர்களிடம் எடுத்துக் கொள்ளப்படும் பயிற்சியும் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஒரு போலீஸ் கான்ஸ்டபில் ஆவதற்கும், தகுதி ஏதுமே இல்லாது ஓர் ஆசிரியர் ஆவதற்கும் எவரிடம் கையூட்டு கொடுக்கலாம் என்று அலையும் ஒரு கும்பல் இருக்கும் நாடாக இல்லாமல், இந்தியா பல வகையான திறங்கள் கொண்ட பலதரப்பட்ட மக்கள் இருக்கும் ஒரு பரந்து, விரிந்த தொழில் சந்தையாக மாறவேண்டும். அவ்வாறான ஒரு சீர்திருத்தத்தை, எந்த விதமான இடையூறுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி வந்து, நிறைவேற்றும் அத்தகைய மாமனிதர்களில் ஒருவருக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும்.

முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்  மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும்,  சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை)  என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது.  கடந்த  12 ஆண்டுகளாக தேசபக்தியும்  இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட  முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது.  பயங்கரவாதத்திற்கு  எதிராகவும்,  பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும்  இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது.

muslim-rashtriya-manch-photo

கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் செயல்பாட்டுத் திட்டங்களையும் விவரிக்கிறார் இந்திரேஷ் குமார்.

இந்த அமைப்பின் இணைய தளம்:  http://www.muslimrashtriyamanch.org/

(பெரிதாக்க படங்களின் மேல் க்ளிக் செய்யவும்)

muslim-manch-1

muslim-manch-2

muslim-manch-3

muslim-manch-4

நன்றி: விஜயபாரதம்.

கன்னியின் கூண்டு – 3

மூலம் : அயான் ஹிர்ஸி அலி
தமிழில் : அ. ரூபன்

<< முந்தைய பகுதிகள்

இஸ்லாமியப் பெண்களின் நிலை குறித்து ஹிர்ஸி அலி எழுதிய The Caged Virgin புத்தகத்திலிருந்து எடுத்தெழுதப்பட்ட கட்டுரையின் மூன்றாம் பகுதி.

இஸ்லாமிய சட்டத்தின்படி அமையும் ‘கன்னியின் கூண்டு’ அம்மதத்தின் பெண்களிடம் மட்டும் பாதிப்பை உண்டாக்கிவிடுவதுடன் நின்றுவிடுவதில்லை. அப்பெண்ணைச் சுற்றியிருக்கும் அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில் ‘கன்னியின் கூண்டு’ இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக இருக்கிறது. இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மையைக் காக்க அமைந்த கூண்டு அப்பெண்களுக்கு நிராசையையும், ஏமாற்றதையும், வலிகளையும், கோபத்தையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள். பெரும்பாலான அரேபிய இஸ்லாமியப் பெண்கள் கல்வியறிவு அற்று தற்குறிகளாக இருக்கிறார்கள். அவர்களின் சமூக ஏற்பாட்டால் திட்டமிட்டபடியே அவர்கள் அறியாமையில் உழலும்படி செய்யப்படுகிறார்கள். அவ்வாறு அறியாமையிலும், ஏமாற்றத்திலும் இருக்கும் பெண்ணால் அவளது குழந்தைகளுக்கும் மிகக் குறைந்த அளவே கற்றுத்தர இயல்கிறது. இந்தவகையில் அறியாமையானது தலைமுறை தலைமுறைகளுக்கு தொடர்ந்து வருகிறது.

அயான் ஹிர்ஸி அலி
அயான் ஹிர்ஸி அலி

மேற்கத்திய நாடுகளுக்கு குடியேறிய முதல் தலைமுறை இஸ்லாமியப் பெண்களில் பெரும்பாலோர் ஆரம்பப் பள்ளியைத் தாண்டாதவர்கள் என்பதே உண்மை. கல்வியறிவு இல்லாத அவர்களால் தாங்கள் புதிதாக குடியேறிய சமூகம் இயங்கும் விதம் குறித்து அறிந்து கொள்ள இயலாதவர்களாகவே இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக அவர்களின் குழந்தைகள் கல்வியறிவு பெற்றாலும், பாலின பாகுபாடுகள் மற்றும் இறுக்கமான இஸ்லாமிய நடத்தைவிதிகள் கொணட மனோபாவம் இருக்கும்வரை அவர்களின் குழந்தைகளும் அச்சமூகத்தில் ஓரங்கமாகி, முன்னேற இயலுமா என்பதுவும் கேள்விக்குறியதே.

இவ்வாறு அடக்கி வைக்கப்படும் பெண்களால் உண்டாகும் பிரச்சினைகள் பல இஸ்லாமிய சமூகங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தங்களின் கோப, தாபங்களையும், வெறுப்பையும் தங்களின் கணவன்மார்களின் மேல் காட்டவியலாத முஸ்லிம் பெண்கள் அதனைத் தங்களின் குழந்தைகளை நோக்கித் திருப்புகிறார்கள். எல்லாப் பெண்களும் அதுபோன்றவர்கள் இலை என்பதையும் நான் இங்கு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். கூண்டிலடைபட்ட பல இஸ்லாமியப் பெண்களுக்கு அவர்களின் குழந்தைகளே ஆறுதலாக இருக்கிறார்கள். இருப்பினும் மேற்கத்திய சமூகங்களில், நெதர்லாந்து போன்ற நாடுகளில், இருப்பதை போன்ற உறவுமுறைகள் அவர்களுக்கு அவர்களின் குழந்தைகளுடன் இல்லை என்பதே பொதுவான நிலை.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் மேற்கத்திய நாடுகளிலும் உண்டு என்றாலும் அவை ஒரு அருவருக்கத்தக்க செயலாகவே அங்கு நினைக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமியப் பெண்களுக்கு அவளின் குடும்பத்தினரால் செய்யப்படும் வன்முறை நியாயப்படுத்தப்படுகிறது. அவள் இஸ்லாமிய நடத்தை விதிகளுக்கு அடங்கி நடக்காததால்தான் அவளுக்கு அந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவளியாக்குதல் இஸ்லாமிய சமூகத்து நடைமுறை. அவளது குடும்பமும், சமூகமும் அவள் மீது செலுத்தப்பட்ட வன்முறையை அங்கீகரிக்கின்றன. உன்னை உன் கணவன் அடித்தால் அதற்க்குக் காரணம் நீதான் என அவளைக் குற்றம் சொல்வது சகஜமான ஒன்றே.

குரான் நம்பகத்தன்மையுடன் நடந்து கொல்வதற்கும், உண்மைக்கும், கல்வியறிவு பெறுவதற்கும் மிக முக்கியமான இடத்தைத் தருகிறது. ஆனால் இஸ்லாமிய சமூகங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. பொய்மையும், கீழ்த்தர மனோபாவமும், கல்வியறிவின்மையும் இஸ்லாமிய சமூகங்களில் புரையோடிப் போயிருப்பதைக் காணலாம்.

*

இஸ்லாம் நடைமுறைப்படுத்தியிருக்கும் பெண்களின் உடல் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும், அடக்குமுறை குறித்தும், அதனால் சமுதாயத்திற்கு ஏற்படுகிற விளைவுகளைக் குறித்தும் ஒவ்வொரு முஸ்லிமும் ஆராய வேண்டும். இஸ்லாமிய ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு குறித்தான அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் இஸ்லாமிய சமூகத்தின் முன் கறாராக வைக்கப்பட வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, அதன் அடிப்படையில் இஸ்லாமிய மதத்திற்குள் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி, முறையான வகையில், பள்ளிகளில் பெறப்படும் பொது அறிவு அரேபிய-இஸ்லாமிய நாடுகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என்று சொல்கிறது. ஆனால் குரானோ எல்லா நம்பிக்கையாளர்களும் கல்விக் கேள்விகளில் தொடர்ந்து ஞானம் பெற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அதே குரான், அல்லா எல்லாம் அறிந்தவன்; எனவே குரானே எல்லா ஞானத்திற்கும் அடிப்படை என்றும் சொல்கிறது. இந்த இரண்டு முரண்பாடுகளையும் சமன்செய்வது ஏறக்குறைய இயலாத காரியம்.

உதாரணமாக இயற்பியலையும், உலக வரலாற்றையும் படிக்கும் இஸ்லாமியக் குழந்தைகள் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாவார்கள். எல்லா உலக வரலாறுக் குரான் பிறப்பதற்கு முன்பு ஆரம்பிக்கின்றது. எனவே, பரிணாம வளர்ச்சி குறித்து அறிவியல் கூறுவது அத்தனையும் குரானுக்கு எதிரானது. உலகின் பல முல்லாக்கள் பரிணாம வளர்ச்சி குறித்த கேள்விகளைப் புறங்கையால் தள்ளிவிட்டும் “எல்லா அறிவுக்கும் குரானே அடிப்படை என்பதால், அதனைத் தொடர்ந்து, விடாமல் படித்து வந்தால் அறிவுக்கான கதவு தானே திறந்துவிடும்” என்று பதிலளிக்கின்றனர்.

SHARIA-islam-jihad-women

குரானில் சொல்லப்படும் சட்டங்கள், நடத்தை விதிகள் போன்றவை சாதாரண மானுடர்களால் பின்பற்றவே இயலாதவை என்பதுதான் உண்மை. எனவே, இஸ்லாம் சிறிது மனிதத்தனம் அற்ற அடக்குமுறைகளால் நம்பிக்கையாளர்களைத் தன் வழிக்குக் கொண்டுவர முயல்கிறது. இஸ்லாமிய இளம் பெண்களும், ஆண்களும் திருமணமாகும் வரை கன்னியர்களாக இருக்க முயற்சித்தாலும் அவர்களது ஹார்மோன்கள் அவ்ர்களை அவ்வாறு இருக்கவிடாமல் பாலுணர்வு எண்ணங்களைத் தூண்டவே செய்கிறது. ஆனால் குரானோ அந்த எண்ணங்களைப் பாவங்களாகச் சொல்கிறது. இருப்பினும் அவ்வாறு இருப்பது இள வயதினருக்கு எளிதாக இருப்பதில்லை. எனவே இஸ்லாமை குரான் சொன்னபடியே செய்வது என்பது இயலாத காரியம் என்ற எண்ணம் தோன்றியவுடன், குரான் குறித்தான சந்தேகங்களும் தொன்ற ஆரம்பிக்கின்றன. இருப்பினும் குரானையோ அல்லது முகமது நபியின் வாழ்க்கைமுறையையும், நடத்தையையும் சொல்லும் சுன்னாவையோ சந்தேகிப்பது, கேள்வி கேட்பது போன்ற செயல்கள் இஸ்லாமில் அறவே தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் உதாரண புருஷராக நம்பப்படும் முகமது நபியின் வாழ்க்கை, அப்பழுக்கற்ற, உலத்திற்கே உதாரணமான ஒன்றல்லவா?!

குரான் மீதோ அல்லது முகமது நபி மீதோ எழுப்பப்படும் எந்த சந்தேகத்திற்கும், கேள்விக்கும் இஸ்லாமிய சமூகத்தில் இடமில்லை. அவ்வாறு நடந்தால் அது உடனே தண்டிக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாமின் கொள்கை. ஆனால் கேள்வி கேட்பது கல்வியறிவு பெறுவதற்கான அடிப்படை. எந்தவொன்றைப் பற்றியும் கேள்வியெழுப்பாமல் மானுடர்கள் எவ்வாறு அறிவு பெற இயலும்? இதனால் இஸ்லாமை மிகத் தீவிரமாகப் பின்பற்றுபவர்களின் மனங்களும் ஊசலாட ஆரம்பிக்கின்றன.

இப்படிப்பட்ட உள் மனப் போராட்டங்களால் முஸ்லிம் ஆண்களும், பெண்களும் அவ்வப்போது குழப்பமடையவே செய்கிறார்கள். முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூகம். ஆனால் உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் இத்தனை துன்பத்திற்கும், பெண்களின் மீதான அடக்குமுறைக்கும் காரணமான குரானை, இஸ்லாமை பொறுப்பாக்குவதற்கு மறுக்கிறார்கள். அதற்கு பதிலாக அல்லாவையும், சைத்தானையும் மற்ற வெளிப்புற காரணிகளான யூதர்களையும், அமெரிக்கர்களையும் அல்லது பிறரையும் தங்களது இன்னல்களுக்கு குற்றம் சுமத்துகிறவர்களாக இருக்கிறார்கள். உலக வாழ்வில் பின்பற்றவே இயலாத அவர்களின் புனித நூலான குரானே தங்களின் இத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்ந்தார்களில்லை.

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் மறுப்பையே ஆயுதமாக்கி வாழப் பழகிவிட்டார்கள். ஒரு சிலரோ “என்னுடைய மனைவி கன்னியா இல்லயா என்று நான் அவளிடம் கேட்க மாட்டேன். அதுபற்றி எனக்குக் கவலையில்லை. அதை அல்லாவிடம் விட்டுவிட்டேன்” என்பார்கள். இந்த உலகத்தில் பிழைத்துக்கிடக்க இதுவும் ஒரு வழியல்லவா?

*

முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களில் பெரும்பாலோருக்குக் கல்வியும், தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய அறிவும் இருக்கிறது. மனதில் பட்டதைத் தயங்காமல் சொல்லும் உரிமையையும் மேற்கத்திய கலாச்சாரமும், ஜனநாயகமமும் அவர்களுக்கு அளித்திருக்கிறது.

மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை. முஸ்லிம் ஆண்கள் பலர் கட்டாகச் செய்த ஒரு கூட்டுக் கற்பழிப்பிற்குப் பிறகு முஸ்லிம் பெண்கள் ஃபிரான்சில் நடத்திய ஆர்ப்பாட்டத்தை இதற்கு ஒரு உதாரணமாகக் கூறலாம். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்திய சமீரா பெலில் என்ற பெண்மணியே ஒரு கூட்டுக் கற்பழிப்பிற்கு முஸ்லிம் ஆண்களால் ஆளானவர்தான். இது போன்ற ஒரு சாதாரண ஆர்ப்பாட்டம் நடத்துவது கூட முஸ்லிம் பெண்களுக்கு அவர்கள் வாழும் இஸ்லாமிய நாட்டில் அத்தனை எளிதாக செய்யமுடியாது என்னபதனை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். இரானியப் பெண்கள் வினியோகித்த “புர்காவைத் தூக்கியெறி” என்னும் சிறிய நோட்டீசையும் இதற்கு இன்னொரு உதாரணம்.

இஸ்லாமை விமரிசிக்கும் புத்தகங்களை நெதர்லாந்தில் வாழும் எழுத்தாளரான Haffid Bouazza மற்றும் தத்துவவாதியான Afshin Ellian போன்றவர்கள் துணிந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் புத்தகங்கள் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. என்றாவது ஒரு நாள் அவர்களின் புத்தகங்கள் அரேபிய மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று நம்புகிறேன்.

islam-jihad-marriage-women-yemeni-child-brides-husbands-615

இஸ்லாமிய உலகின் பிரச்சினைகளைக் குறித்து எழுதிய மிகச்சிறந்த ஒரு எழுத்தாளரான, பாகிஸ்தானை சேர்ந்த தத்துவவாதி Ibn Warraq எழுதிய Why I’m not a Muslim என்னும் புத்தகம் அனைத்து முஸ்லிம்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் அந்தத் துணிச்சல் மிகுந்த மனிதன் இந்தப் புத்தகத்தை ஒரு புனைப் பெயரில் எழுதியிருப்பதைக் காண்கையில், மேற்கத்திய உலகில் கூட இஸ்லாமை விமரிசிப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க முடியாது என்பதையே காட்டுகிறது.

மேற்குலகில் எந்தத் தகவலையும், முஸ்லிம் நாடுகளைப் போலல்லாது, எளிதாகப் பெறும் வசதி இருக்கிறது. கிறிஸ்த மதத்தினப் பற்றி அங்கு நடத்தப்பட்ட விமரிசனங்களையும், விவாதங்களையும் பற்றியும் அதன் தொடர்ச்சியான பங்கு பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நூலகங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், மற்றவர்களிடமிருந்தும் தேவையான விஷயங்களைப் பெற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆக்கபூர்மான விமரிசனங்களை தங்கள் மதத்தின் மேல் மேற்கத்திய இஸ்லாமியர்கள் முன்வைக்க வேண்டும். அதுவே இஸ்லாமியர்கள் இன்றைக்கு அடைபட்டிருக்கும் கூண்டிலிருந்து அவர்களை விடுவிக்கும்.

இன்றைக்கு முஸ்லிம்கள் தங்கள் மீதான சுயவிமரிசனத்தை எளிதாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு நாடாக நான் கருதுவது அமெரிக்காவை மட்டுமே. ஏனென்றால் இன்று அமெரிக்கா இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. உலக வர்த்தக மைய்ய தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமைக் குறித்தும், இஸ்லாமியர்களைக் குறித்தும் அறிந்து கொள்வதற்கான எண்ணம் அமெரிக்காவில் அதிகமாகி இருக்கிறது. இந்த எண்ணமே மேற்குலகில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு தாங்கள் மனதளவில் அடைந்து கிடக்கும் கூண்டிலிருந்து தப்பிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

இதுபோன்ற சாதகமான சூழ் நிலையில் வாழ்ந்தாலும் மேற்கத்திய முஸ்லிகளில் பெரும்பாலோர் தங்களைச் சிறைப்படுத்தும் பழமைவாத இஸ்லாமை நோக்கியே துரதிருஷ்ட வசமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்குலகின் அறிவியலில் நன்கு அறிமுகமான சோஷியாலஜிஸ்ட் Fatima Mernissi எழுத்ய Beyond the Veil: Male Female Dynamics in Modern Muslim Society என்கிற புத்தகத்தைப் படிக்கும்படி சிபாரிசு செய்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களும் இஸ்லாம் குறித்தோ அல்லது முகமது நபி குறித்தோ முன் வைகப்படும் எதிர்மறைக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நான் அறிவேன். அப்படியே எவரேனும் தப்பித்தவறி ஏதேனும் சொல்லிவிட்டால் அங்கிருக்கும் இஸ்லாமிய தீவரவாதிகளால் மிரட்டப்பட்டும், அச்சுருத்தலுக்கும் ஆளாகின்றனர். சில சமயங்களில் இஸ்லாமியத் தீவிராவதிகளினால் அவர்கள் கொல்லப்படுவதும் நடந்திருக்கிறது. எனவே எவரும் இஸ்லாமின் தவறுகளை விமரிசிக்க முன்வருவதில்லை. இதில் எனக்கு ஆச்சரியமளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், ஆண்களால் அடக்கப்பட்டு, ஹிஜாபில் அமுங்கியிருக்கும் பெரும்பாலான மேற்குலக முஸ்லிம் பெண்கள், ஹிஜாபைத் துறக்க முன்வராததுதான். நானறிந்த பல துருக்கிய முஸ்லிம் பெண்கள், தாங்கள் துருக்கியில் இருந்தவரை ஹிஜாப் அணிந்ததில்லை என்றும், ஆனால் நெதர்லாந்திற்கு வந்ததும் அதனை அணியத் துவங்கியதாகவும் கூறினார்கள். இதுபோன்ற செயல்கள் மேற்குலகில் வாழும், முன்னேற்ற எண்ணமுடைய இஸ்லாமியர்கள் பலருக்கும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது.

*

நான் கண்ட மேற்கத்திய இஸ்லாமியர்களில், மூன்று பிரிவினர்கள் இருக்கிறார்கள். முதலாவது பிரிவினர் Silent Majority எனப்படும் அமைதிப் பெரும்பான்மையினர். இவர்கள் இஸ்லாமியக் கொள்கைகள் எதனைவும் கடைப்பிடிக்காமல் ஒதுங்கியிருந்து, தங்களின் எதிர்காலம் அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திலேயே அடங்கியிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். சத்தமில்லாமல் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களில் அவர்களே பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். பிற மதத்துக் குடியேறிகளைப் போலவே கடுமையா உழைத்து, பொருளீட்டி, இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறி நல்ல பகுதிகளில் வீடு வாங்கியும், தங்களின் பிள்ளைகளை நல்ல பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். அவர்களில் எவரும் பொதுவில் இஸ்லாமைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

இரண்டாவது பிரிவினர், இஸ்லாமைப் பற்றி வெளியார் யாரேனும் விமரிசித்தால் அதைக் குறித்து காயப்படுவதுடன், அதனைத் தங்களின் தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டு வாதிடவும் செய்பவர்களாக இருக்கிறார்கள். காலம் காலமாக இது போன்றவர்களே தங்களின் இந்த மோசமான வாழ்க்கைகும், வறுமைக்கும் மற்றவர்களைக் குறை கூறியே வந்தவர்கள். வருபவர்கள். இவர்களில் ஒருவரும் தங்களின் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமான இஸ்லாமையும், முகமது நபியைக் குறித்தும் எந்தவிதமான அடிப்படை உணர்வும் இல்லாதவர்கள். அதாவது இந்தப் பிரச்சினைகள் குரானுக்கும், முகமது நபிக்கும் அப்பாற்பட்டவை. அடிப்படைவாத இஸ்லாமியர்களும், ஜிகாதிகளும் இவர்களில் இருந்தே உருவாகி வருகிறார்கள்.

மூன்றாவது பிரிவினர், மிகவும் திறந்த மனதுடைய, முன்னேற்ற மனோபாவமுடையவர்கள். “நம்மை நாமே சுய பரிசோதனை செய்து, நமது தவறுகள், பிரச்சினைகள் என்னவென்பதை கண்டறிந்து அதனைக் களையவேண்டும்” என்ற எண்ணமுடையவர்கள். அவர்களே இந்த இஸ்லாமியக் கூண்டை துண்டு துண்டாக உடைத்து அதலிருந்து தப்பிச் செல்ல எண்ணுபவர்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக இவர்கள் மேற்கத்தியர்களாலேயே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள். மேற்கத்திய மனோபாவம் மதச் சுதந்திரம் உடையது. அதே சமயம் மதங்களை விமரிசிப்பவர்களையும் அது எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. இதனை முஸ்லிம்கள் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்படியும் துணிந்து விமரிசனம் செய்பவர்களிடம் “ஒளிவட்டம்” பொருந்திய இஸ்லாமியர்கள் “நீங்கள் இஸ்லாமை விமரிசித்தால் அது உங்கள் மக்களையே காயப்படுத்தியது போலாகும்; அது உங்களை ஒரு இஸ்லாமோஃபோப்-ஆகக் காட்டும். எனவே இஸ்லாமை விமரிசனம் செய்வதை நிறுத்துங்கள்” என்று கூறி அவர்களின் வாய்களை அடைத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மிரட்டல் எனும் ஆயுதம்.

இதுபோன்ற ஒளிவட்டம் பொருந்திய முஸ்லிம் ஒருவர், எனது தனிமனித சுதந்திரக் கருத்துக்கள் (அது என்னவோ மோசமானது என்பது போல) எப்படி எனக்கு முக்கியமானதாக இருக்கிறதோ அதுபோல இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு மதவெறி முக்கியமானது. எனவே இரண்டும் ஒன்றுதான் என்றார். எப்படி இருக்கிறது பாருங்கள்? இதுபோன்ற சாத்தான்களினால் பாதுகாக்கப்படுவதால்தான் இஸ்லாமியக் கூண்டு இன்னும் அப்படியே இருக்கிறது. தங்களின் சுய லாபத்திற்காக பல மேற்கத்தியர்கள் இதுபோன்ற ஆசாமிகளுக்குத் துணை போகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஒளிவட்டம் பொருந்திய முஸ்லிம்களின் பெருந்திட்டத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாமலும் அவர்கள் இருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை நான் மேற்சொன்ன அமைதிப் பெரும்பான்மையினரில் ஒருத்தியாக இருந்தேன். அதிலும் நான் ஒரு சுதந்திர நாட்டில் வாழ்வதாகவும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒரு பெண் அடித்துத் துன்புறுத்தப்படும்போது அதனை அவள் அமைதியாக பொறுத்துக் கொண்டால், அந்தச் சூழ் நிலைக்கு அவளே பொறுப்பாவாள் என்று எண்ணினேன். நான் அவளாக இருந்தால் அந்த இடத்தை விட்டு ஓடிப்போவேன் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கன்னித்திரையை மீண்டும் தைத்துக் கொள்ளாமல் என்னுடைய புதிய வாழ்க்கையை இங்கேயே, இப்போதே அமைத்துக் கொள்வேன் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று அதனை வேறுவிதமாக யோசிக்கிறேன்.

ஒரு குழந்தைக்கு அதன் வளர்ப்பு முறை எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு இப்போது புரிகிறது. இஸ்லாம் அம்மதத்தின் பிறக்கும் குழந்தைகளை மிக இளவயதிலேயே மூளைச் சலவை செய்ய ஆரம்பிக்கிறது. இஸ்லாமியக் கலாச்சாரம் தனது கூண்டினைக் கட்டுவதே இவ்வாறாகத்தான். மூளைச் சலவை என்பது மிக மிக வலிமையானது. ஒரு குழந்தையின் வெறுமையான மனதில் எதனை வேண்டுமானாலும் விதைத்து, அதனையே நம்பச் செய்வது மூளைச் சலவையின் ஒர் அங்கம். இஸ்லாம் அதனை மிக வெற்றிகரமாகச் செய்கிறது. எனவே இந்த இஸ்லாமியக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களை விடுவிப்பது ஒரு அசாத்தியமான காரியமாக மாறுகிறது. அதற்கு நிறைய நேரமும், சக்தியும் தேவை. ஏனென்றால் குரானையும், முகமது நபியையும் உதாரணமாகக் காட்டி வளர்க்கப்படும் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தங்களின் சுய அறிவை இழந்து, அடங்கி, ஒடுங்கி அடிமைகளைப் போல வாழப்பழகுகிறார்கள். வயது ஏற ஏற இந்தக் கூண்டின் கதவு இன்னும் இறுக்கமாகி அதிலிருந்து தப்ப அவர்களால் இயலாமலேயே போகிறது.

ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாவிற்குக் கட்டுப்பட்டவன். ஆனால் அவனது பெண்களும், பெண் குழந்தைகளும் அவனையும் விட மேலாக அல்லாவிற்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்களின் மீதான ஆண்களின் ஆதிக்கம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. காலம் செல்லச் செல்ல அப் பெண்கள் இதுபோன்ற ஒடுக்கப்படுவதற்குப் பழகி விடுவதால், ஒரு வெளிச் சக்தியால் தாங்கள் நசுக்கப்படுகிறோம் என்ற உணர்வைக் கூட அவர்களின் ஆழ் மனது இழந்துவிடுகிறது. அதையும் விட அம்மாதிரியான நடத்தையே தங்களுக்குப் பாதுகாப்பானது என்றும் நம்ப ஆரம்பிக்கிறார்கள். இந்தத் துயரத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாழப் பழகிவிட்ட பெண்கள் அதனை ஒரு பெருமிதமாகக் கூட நினைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். Stockholm Syndrome-ஆல் பாதிக்கப்பட்டு, தன்னைக் கடத்தியவனையே காதலிக்கும் கடத்தப்பட்டவர்கள் போலத் தங்களை அடக்கி ஆள்பவனுடன் ஒரு ஆழ்மன உறவினை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தாங்கள் வாழ்வது ஒரு அடிமை வாழ்க்கைமுறை என்பதை பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் உணர்வதேயில்லை என்பதுதான் இதில் பேராச்சரியம் தரும் ஒரு செய்தி.

ஒருமுறை துருக்கியப் பெண்கள் நெதர்லாந்தில் நடத்தும் இயக்கமான Milli Gorus-இன் தலைமையகத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் மிகுந்த படோடோபத்துடன் தங்களின் இயக்கம் குறித்துப் பெருமிதம் கொண்டவர்களாக எல்லாவற்றைக் குறித்தும் பேசினார்கள். ஏதேனும் எதிர்மறைக் கருத்து எதிர்ப்பட்டால அதனை மறுத்து ஆவேசத்துடன் கூச்சலிட்டார்கள். தாங்கள் ஒடுக்கப்படுவதைக் குறித்து ஒருவித மயக்கத்துடன், ” நான் ஹிஜாப் அணிய ஆசைப்படுகிறேன். என் கணவன் என்ன சொன்னாலும் கட்டுப்படுவேன்” என்றார்கள். அங்கிருந்த ஒரு மொராக்கோ நாட்டு முஸ்லிம் பெண்ணிடம் இது குறித்துக் கேட்க, அவள் “நானும் ஹிஜாப் அணியவே ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அது அல்லாவால் விதிக்கப்பட்ட கட்டளை” என்றாள். அல்லா சொன்னபடியெல்லாம் நடக்க ஆசைப்பட்டால் இவள் கூண்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

*

islam-women-jihad-slavery

இதற்கிடையே நிறைய முஸ்லிம்கள் இஸ்லாமின் வழியாக ஞானம் (englightenment) வருவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஞானம் அத்தனை எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு பொருளல்ல. அது தானாக எவருக்கும் கிடைத்தும் விடாது. எனவேதான் இஸ்லாமைப் பற்றிய முஸ்லிம்களின் எண்ணம் மாற வேண்டும் என்று சொல்லுகிறேன். தங்களைக் குறித்து, தங்களின் மத நம்பிக்கையைக் குறித்து, வாழும் வாழ்க்கையைக் குறித்து, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுப்பது குறித்து, இஸ்லாமில் தீவிரமாக வலியுறுத்தப்படும் அர்த்தமற்ற பாலின வேறுபாடுகள் குறித்து, நவீன காலத்திற்கு ஒத்துவராத நடத்தை விதிகள் குறித்து முஸ்லிம்கள் தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இன்று நிகழும் பிற்போக்குத்தனங்களிலிருந்து விடுதலையடைய வேண்டுமானால், அது தன்னுடைய இன்றைய தாழ்ந்த நிலைக்கு மற்றவர்களைக் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அர்த்தமற்ற பாலின ஒழுக்கவிதிச் சட்டங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். கன்னித்தன்மை இழக்காத ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்த்தால் எத்தனை இஸ்லாமியர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது? எத்தனை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் தினம் போலித்தனமின்றி உறவாடிக் கொள்கிறார்கள்? சுவனத்தில் தனக்கு இடம் வேண்டும் என்பதற்காக தனது குடும்பத்தின்மீதும், பெண்களின் மீதும் வன்முறையையும், அடக்குமுறையையும் செலுத்துவதால் விளைந்த நன்மைகள்தான் என்ன என்பதனை யோசிக்க வேண்டும். இவ்வாறு நடத்தப்பட்டதால் அந்தப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், சமுதாயத்திற்கும் உண்டான பாதிப்புகள் என்ன என்பதனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

கட்டுக்கடங்காத மக்கள் பெருக்கத்தால் இஸ்லாமிய நாடுகள் பெரும் துன்பமடைந்து, வறுமைக்குள் தள்ளப்படுகின்றன. இஸ்லாம் கூறும் கடுமையான பாலினச் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டும், பால்வினை நோய்களும், எய்ட்ஸ் போன்ற நோய்களும் இஸ்லாமிய நாடுகளில் அதிகரிப்பதைக் காண்கிறோம், இதனைக் குறித்தும் இஸ்லாமியர்கள் விவாதிக்க வேண்டும்.

இன்றைய இஸ்லாமிய உலகம் ஒரு மாபெரும் சுழலில் சிக்கித் தவிக்கிறது. அந்த நிலை மாற புதிய சிந்தனைகள் இன்றைக்குத் தேவை. இஸ்லாமிய உலகம் தன்னைத் தானே உள்ளிருந்து புதுப்பித்துக் கொள்ளாவிடில் நிலைமை இன்னும் மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. இது இஸ்லாமியர்களை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

(முற்றும்)

கன்னியின் கூண்டு – 2

இஸ்லாமியப் பெண்களின் நிலை குறித்து அயான் ஹிர்ஸி அலி எழுதிய The Caged Virgin புத்தகத்திலிருந்து எடுத்தெழுதப்பட்ட கட்டுரையின் இரண்டாம் பகுதி.

மூலம்: அயான் ஹிர்ஸி அலி
தமிழில்: அ. ரூபன்

<<  முந்தைய பகுதி

தொடர்ச்சி…

எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம். ஆக இஸ்லாமில் பிரச்சினைகள் பெண்ணுக்கேயன்றி ஆணுக்கு அல்லவே அல்ல.

மிக இளவயதிலிருந்தே இஸ்லாமியப் பெண்கள் சந்தேகத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். தங்கள் குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்வது அவர்களுக்கு துன்பத்தையே வரவழைக்கும் என்று இளவயதிலேயே அப்பெண்கள் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

இதனை வலியுறுத்துவதற்காக, எனக்கும் அகமது என்பவருக்கும் நடந்த ஒரு சிறு உரையாடலை இங்கு தருகிறேன். அகமதிற்கு திருமணமாகி குழந்தைகள் உண்டு. தனது கடந்த காலத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றாமல், மது அருந்தியும், பல பெண்களுடன் தகாத உறவு கொண்டதுடன், இஸ்லாமிய வாழ்க்கை முறை குறித்து கவலையேதும் இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதன். சில வருடங்களுக்கு முன்பு மனம் திருந்தி, மீண்டும் இஸ்லாமில் இணைந்து, குரானைப்படித்து அதன்படியே வாழ்வதுடன் மட்டுமல்லாமல் அவரது மகளையும் இஸ்லாமிய முறைப்படியே வளர்த்தும் வருகிறவர்.

purdahநான் பார்க்கும் போது அவரது ஏழு வயது மகள் உடலை மூடும் ஹிஜாப் அணிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன் நான் அவரிடம் சொன்னேன், ‘ அகமது, எனக்கு இஸ்லாம் குறித்து நன்றாகத் தெரியும். ஒரு பெண் வயதுக்கு வரும்வரை ஹிஜாப் அணிய வேண்டியதில்லையே….” என்றேன்.

“ஆம்; அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவள் சிறிய வயதிலிருந்தே அதனை அணியப் பழகினால் எதிர்காலத்தில் அது இயற்கையாகத் தெரியும்” என்று சொன்ன அகமது, தொடர்ந்து “இங்கு கோடைகாலத்தில் நெதர்லாந்துப் பெண்கள் உடலை மறைக்கும் உடைகளை அணிவதில்லை. அதனால் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன….” என்றார்.

அகமது அப்படி நிகழ்ந்த விபத்துகள் பலவற்றையும் பார்த்திருக்கிறார். ஒரு நாள் சாலையில் ஒரு டிரக் எதிரில் வந்த டிரக்குடன் மோதிவிட்டது. அதில் ஒரு டிரக் டிரைவர் சாலையைப் பார்த்து ஓட்டாமல், வெளியில் சென்ற ஒரு கவுன் அணிந்த பெண்ணின் கால்களைப் பார்த்து ஓட்டியதால்தான் அந்த விபத்து ஏற்பட்டது என்று சத்தியம் செய்தார் அகமது. இனிமேலும் இப்படியான விபத்துகள் நடக்காமலிருக்க வேண்டுமானால் நெதர்லாந்துப் பெண்கள் உடலை மூடும் ஆடையை அணிய வேண்டும் என்பது அகமதின் வாதம்.

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக இஸ்லாமியப் பெண்கள் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள். ஆண்களின் கண்களில் படாமல் அசாதாரண வாழ்க்கை வாழவே முடியாத காரியம் என்பதால், தாங்கள் ஏதோ தவறாகச் செய்து கொண்டிருப்பதான எண்ணம் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

வெளியில் எங்கு செல்வது, என்ன செய்வது போன்ற முடிவைக் கூட எடுக்கக்கூட சுதந்திரமற்றவளான இஸ்லாமியப் பெண் நாளடைவில் அவளது உள் மனச் சுதந்திரத்தையும் இழந்து தவிக்கிறாள். அவளது வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் பிறரால் தீர்மானம் செய்யப்படுவது பரிதாபமே.

என்னுடைய அத்தை ஒரு நாள் ஒரு இறைச்சித் துண்டை வீட்டுக்கு வெளியே எறிந்தாள். சிறிது நேரத்தில் அதன்மீது வகை தொகையற்ற ஈக்களும், எறும்புகளும் மொய்க்க ஆரம்பித்தன. உடனே அத்தை சொன்னாள், ” ஆண்கள் இந்த ஈ, எறும்புகளைப் போன்றவர்கள். ஒரு பெண்ணைக் கண்டதும் அவர்களால் தங்களின் காம உணர்வைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது” என்று.

********

இஸ்லாமிய சமுதாயங்களில் பெண்களின் கன்னித்தன்மையைப் பாதுகாக்க பலவித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னேன். ஒரு பெண் வயதிற்கு வருமுன் அவளை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைப்பது அதிலொன்று. தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்.

இதனை ஆதரிக்கும் விதமாக குரான் பெண்களை நோக்கி, “வீட்டிற்குள்ளேயே அமைதியாக அடைந்திரு; எந்தவிதமான பகட்டுத்தனத்தையும் காட்டாமல்” என்பதுடன், வீட்டிற்கு வெளியே செல்லும் இஸ்லாமியப் பெண்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிய ஆடையை அணிந்து, தங்களின் பார்வையை நிலத்தில் தாழ்த்தி அடக்கமுடன் நடக்கச் சொல்கிறது.

சாதாரண ஆடை அணிகலன்களையன்றி பகட்டான ஆடையணிகளை அணிந்து தங்களின் அழகினை வெளிக்காட்டாமலும், தங்களின் முகத்திரையை விலக்கி அவர்களின் அழகை அவர்களின் கணவனுக்கும், அவர்களது தகப்பன்களுக்கும், தகப்பன்களுக்கு தகப்பன்களுக்கும், அவர்களது மகன்களுக்கும், அவளது கணவனின் மற்ற மகன்களுக்கும், அவளது சகோதரர்களுக்கும் அல்லது அவர்களின் மகன்களுக்கும், பெண் உறவினர்களுக்கும், அவரது வலது கைக்குச் சொந்தமானவர்களுக்கும் (அடிமைகள்), உடல் தேவையற்ற ஆண் வேலைக்காரர்களுக்கும், உடலுறவு பற்றி அறியாத சிறுவர்களுக்கும் மட்டுமே ஒரு இஸ்லாமியப் பெண் தனது முகத்தைக் காட்டலாம் என்கிறது குரான்.

இஸ்லாமியப் பெண்ணின் கன்னித் தன்மையைக் காக்கும் இரண்டாவது முறை, உறவினரல்லாத ஆண், பெண்களை தனித்தனியே பிரித்து அவர்களை வெவ்வேறு வீடுகளில் தங்க வைப்பது. இதுவும் வீட்டுச் சிறைக்க்கு ஒப்பானதே. இந்த முறை சவூதி அரேபியாவில் அதிகம் பின்பற்றப்பட்டாலும், இரான், பாகிஸ்தான், சூடான், ஏமன் போன்ற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து பெண்ணின் கிளிட்டொரியஸ், உள் மற்றும் வெளி லாபியா மற்றும் பிறப்புறப்பின் உள் சுவர்களை சுரண்டியெடுத்துவிட்டு, பின்னர் அவளது கால்களை ஒட்டித் தைத்துவிடுவது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை.

இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடுமையான முறை பற்றி குரானில் சொல்லப்படாவிட்டாலும், தங்களின் பெண்கள் வீட்டுச் சுவருக்கு வெளியே சென்று தங்களின் குடும்பத்திற்கு அவமான ஏற்படுத்துவதை தவிர்க்கிறது என்ற காரணத்தினாலேயே பரவலாக நடைமுறையில் இருக்கிறது. ஒரு பழங்குடி முறையாக ஆரம்பித்த இந்தச் செயல் இன்று ஒரு மதச் சடங்காகவே மாறியிருக்கிறது.

முகம்மது நபியின் காலத்திலேயே இந்த முறை இருந்ததைச் சுட்டிக்காட்டும் இஸ்லாமிய கல்வியாளர்கள், முகம்மது நபி அதனைத் தடை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்படியாக விவாறு “தைக்கப்படுதல்” ஒரு பெண் தன்னுடைய கற்பை ஒருபோதும் இழக்க முடியாத சாத்தியத்தைத் தருகிறது.

 ******

ஒரு முஸ்லிம் பெண்ணின் மீதான அவ நம்பிக்கை அவளது திருமண நாளில், முதலிரவின் போது உச்சம் பெறுகிறது. மணமான இந்த முஸ்லிம் பெண் கன்னியா, இல்லையா? என்பது அனைவரின் மனதிலும் இழையோடும் ஒரு கேள்வி. ஆண்களும், பெண்களும் இரண்டறக் கலந்து வாழாத சமூகமாக இல்லாமல் இருப்பதால், ஒரு முஸ்லிம் ஆணுக்கு ஒரு பெண்ணினைக் குறித்தான இயற்கையான புரிதல் எதுவும் இருப்பதில்லை. எனவே தனக்குத் தேவையான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க அவன் அவனது குடும்பத்தினரையே சார்ந்து இருக்கிறான். அந்தப் பெண் ஒரு உண்மையான கன்னியா இல்லையா என்பதனை அவர்களே அவனுக்குக் கண்டுபிடித்து அறிவிக்கிறார்கள்.

இதன்படி, திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்தே அறிந்திராத ஒரு ஆணும் பெண்ணும் முதலிரவு அறையில் உடலுறவு கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்திலாகிறார்கள். அந்தப் பெண் அச்சத்திலும், அருவருப்பிலும் அஞ்சி நடுங்கி ஒதுங்கினாலும் அவள் அவனுடன் உடலுறவு கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதுபோலவே அந்த ஆணுக்கு விருப்பமில்லாவிட்டாலும், அவனது ஆண்மையை நிரூபிக்க அவன் அவளுடன் உடலுறவு கொண்டாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான். திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பைப் பார்ப்பதற்காக படுக்கையறைக்கு வெளியே காத்து நிற்ப்பார்கள். எனவே இந்தக் கட்டாய உடலுறவு ஒருவகையில் இஸ்லாமிய சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வன் புணர்ச்சியேயன்றி வேறல்ல.

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் புரிந்து கொள்வது என்பது சிறிய விஷயமில்லை. ஆனால் இஸ்லாமியத் திருமணம் அவ நம்பிக்கையில் துவங்கி, வன் புணர்ச்சியில் முடிகிறது. இதே அவ நம்பிக்கையும், வன் புணர்ச்சியும் அடுத்த தலைமுறைக்கும் கற்றுக் கொடுக்கப்பட்டு தொடர்கதையாகிறது.

the_caged_virgin_coverவெளி நாடுகளில் வசிக்கும் பல இளம் இஸ்லாமியப் பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொள்கிறார்கள். இருப்பினும் அவர்களது குடும்பத்தாரால் வலியுறுத்திச் சொல்லப்படும் “கன்னித் தன்மை” குறித்தான அச்ச உணர்வும் அவர்களைத் தொடர்கிறது. அவர்களுக்கு திருமணம் நடந்து முதலிரவில் வெவ்வேறு விதமான தந்திரோபாயங்களைக் கடைப்பிடித்து, தங்கள் பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அல்லது மருத்துவ முறைப்படி தங்கள் கன்னித்திரையை மீண்டும் தைத்துக் கொள்ளுகிறார்கள்.

திருமணத்திற்குப் பின் ஒரு முஸ்லிம் ஆணுக்கு அவனது மனைவியின் மீதான சந்தேகம் குறைவதற்குப் பதில் அதிகரிக்கிறது. அவள் கணவன் அவளுடனான திருமண நாளில் அவளின் கன்னித்திரையைக் கிழித்து, ரத்தம் வருவதைக் கண்டு அவளின் கன்னித்தன்மையை உறுதி செய்து கொள்கிறான். ஆனால் இதற்கு அப்புறம் அவள் வெளியார் யாருடனாவது உறவு கொண்டால் அதனை எப்படிக் கண்டுபிடிப்பது? எனவே அவன், அவனது மனைவி வேறொருவருடன் உறவு கொள்வதைத் தடுக்க ஒரே வழி அவளை வீட்டினுள் பூட்டி வைப்பதுதான். இனிமேல் அவள் அவனது அனுமதியில்லாமல் ஒரு அடி கூட வெளியில் எடுத்து வைக்க முடியாது. இது அல்லாவினால் அவனுக்கு அளிக்கப்பட்ட கட்டளை. அவ்ன் மனைவி அதற்கு அடங்கிப் போய்த்தான் தீரவேண்டும்.

பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமியப் பழமைவாதியான இமாம் அல்-கஸாலி, “ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணியாக அறியப்படுபவள் ஒருபோதும் தன் கணவனின் அனுமதியில்லாமல் வீட்டை விட்டுப் போகமாட்டாள். பழைய, படோடபமற்ற துணிகளையே அணிந்து கொள்வாள். உடலை மிக சுத்தமாக வைத்துக் கொண்டு, அவள் கணவன் அவளை எப்போது படுக்கைக்கு அழைத்தாலும் அதற்குத் தயாரகவே இருப்பாள்” என்று இஸ்லாமியப் பெண்களைப் பற்றிச் சொல்கிறார்.

அதாகப்பட்டது, ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி கணவனுக்குக் கட்டுப்பட்டு அவனின் அடிமையைப் போலவே இருக்க வேண்டும். அல்லா அருளிய குரான் இன்னும் ஒரு படி மேலே போய், “ஆண்கள் பெண்களைப் பாதுகாத்து அவர்களைப் பராமறிப்பவர்கள். ஏனென்றால் அல்லா ஆண்களுக்கு பெண்களை விடவும் வேறொரு “வலிமையை” வழங்கி அவர்களுக்குத் துணையாக இருக்கச் செய்திருக்கிறான். எனவே ஒரு நல்ல முஸ்லிம் பெண்ணானவள் அவளது கணவன் வீட்டில் இல்லாத நேரத்திலும் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அல்லா எதனைக் காப்பாற்றி வைக்கச் சொல்கிறானோ அதனைக் காப்பாற்றிப் பாதுகாக்கும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவனானவன், தனது நம்பிக்கைக்கு விரோதமாக நடக்கும் பெண்ணை தன்னிடமிருந்து முதலில் விலக்கி வைக்க வேண்டும்; பின்னர் அவளுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளாமல், அவளை மெதுவாக அடிக்க வேண்டும்…..” என்கிறது.

சுன்னி முஸ்லிம்களால் இறைதூதர் முகமது நபிக்கு இணையாக மதிக்கப்படுகிற கலிஃபா உமர் அல்-கத்தாப் இட்ட ஒரு கட்டளையின்படி, ஒரு பெண் பொய் சொன்னதாக நான்கு சாட்சிகள் சொன்னால், அவளுக்கு முன்னூறு கசையடிகள் கொடுக்க வேண்டும். அந்தக் கட்டளை “பரிவுடன்” இந்தக் கசையடிகள் மூன்று நாட்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. கசையடிகளால் உண்டான புண் மேலும் பெரிதாகமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

அதே சமயம், முஸ்லிம் பெண்களும் மானுடர்களே. அவர்களும் அவ்வப்போது கதைகளை உருவாக்கி உலவவிடுவதில் சமர்த்தர்களே. உதாரணமாக, குரான் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உறவு கொள்வதை மறுக்கிறது. ஒருவகையில் இது பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் ஏற்பாடாகவும் உரு மாறியிருக்கிறது.

கணவனுடன் உறவு கொள்ள விருப்பம் இல்லாத, பல குழந்தைகளைப் பெற்று நைந்து போன உடலில் இன்னொரு குழந்தையைச் சுமக்கும் வலிவு இல்லாத ஒரு பெண் தன் கணவனிடம் தான் மாதவிடாய் ஆகியிருப்பதாக கதை சொல்லுதல் சகஜம். ஏறக்குறைய மேற்கத்திய உலகப் பெண்ணின் “தலைவலிக்கு” ஒப்பானது இது எனலாம்.

கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும் அன்றாடம் நடக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் அவள் கணவன் இவளின் பொய்களைக் கண்டுபிடித்துவிட்டால். காலம் காலமாக அவனுக்குத் சொல்லித்தரப்பட்ட “பெண்கள் அனவரும் ஷைத்தான்கள்” என்கிற உண்மை நிரூபணமாகிறது.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

 

 

கன்னியின் கூண்டு – 1

மூலம்: அயான் ஹிர்ஸி அலி
தமிழில்: அ. ரூபன்

துவங்குவதற்கு முன் :

இஸ்லாம் உலகின் மாபெரும் ஆணாதிக்க மதம். அதில் பெண்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. ஐந்து வேளை தொழுகை செய்து, நோன்பிருந்து, ஹஜ்ஜிர்க்குச் சென்று, காஃபிர்களைக் கொன்று…இன்ன பிற மதச் சடங்குகளைத் தொடர்ந்து செய்யும் ஒரு இஸ்லாமியனுக்கு சுவனத்தில் 72 கன்னிகளும், அளவற்ற மதுவும் காத்திருக்கிறது. அதே வேளையில், இஸ்லாமிய ஆணைப்போலவே நோன்பிருந்து, தொழுகை செய்யும் பெண்ணுக்கு சுவனத்தில் கிடைப்பது அனேகமாக ஒன்றுமேயில்லை. அதே கிழட்டுக் கணவனைத் தவிர. எழுபத்தியிரண்டு கன்னிகளுடன் கும்மாளமிடும் கணவன் ஒருபோதும் தான் பூவுலகில் மணந்து, கிழடுதட்டிய பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை.

பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் புர்காக்களுக்குள் அடைபட்டு, வீடுகளுக்குள் முடங்கி, பிள்ளைகளைப் பெற்று, மக்கி, மரணித்துப் போகிறார்கள். அவர்களைக் குறித்தான தகவல்கள் அதிகம் வெளியே தெரிவதில்லை. அல்லது தெரியவிடுவதில்லை.

ayaan-hirsi-aliஅயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. தியோடர் வான்-கோ என்ற இயக்குனருடன் இணந்து இஸ்லாமை விமர்சித்து  எடுத்த ஒரு திரைப்படம் காரணமாக தியோடர் வான்-கோ நட்ட நடுத்தெருவில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியால் கொல்லப்பட்டார். ஹிர்ஸி அலிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஹிர்ஸி அலி எழுதிய “The Caged Virgin” இஸ்லாமியப் பெண்களின் நிலையை தோலுரித்துக் காட்டுகிறது. அந்தப் புத்தகத்திலிருந்து சில சிறிய பகுதிகள் இங்கே.

இஸ்லாமின் துணை கொண்டு உலகின் பிற சமுதாயங்களுக்குள் பரவிய அரேபிய கலாச்சாரம் இன்று மேற்கத்திய கலாச்சாரங்களை விடவும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது கண்கூடு. அதற்கு மூன்று முக்கிய காரணிகளைச் சொல்லலாம். தனி மனித சுதந்திரமின்மை, அறியாமை மற்றும் பெண்களுக்கு அளிக்கப்படாத சுதந்திரம் ஆகியவையே அவைகள். இஸ்லாம் பரவிய பிற கலாச்சாரங்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருப்பதைக் காணலாம். குரானையும், ஹடித்தையும் தங்களின் அடிப்படையான அரசியல், மற்றும் பொருளாதார வழிகாட்டியாகக் கொண்ட நாடுகள் அனைத்தும் அரேபியர்கள் சந்திக்கும் அதே முன்னேற்றமின்மையில் அழுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட அரேபியர்கள் அல்லாத பாகிஸ்தான், இரான் போன்ற நாடுகளில் அதிகமாகவும், இந்தோனேஷியாவின் சிலபகுதிகள், மலேஷியா, நைஜீரியா மற்றும் தான்சானியாவில் ஓரளவிற்கும் தனி மனித சுதந்திரம், அறிவியல் தொழில் நுட்ப அறிவு மற்றும் வளர்ச்சி, பெண்களுக்கான சுதந்திரம் ஆகியவை இல்லாமலேயே போயிருப்பதைக் காணலாம்.

அந் நாடுகள் முன்னேறுவதற்கான வழிவகைகள்  தெரிந்தாலும், அது மிக, மிக மெதுவாகவே நடந்து கொண்டிருக்கிறது. அரேபிய கல்வியாளர்களால் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட “அரேபிய தனிமனிதவள மேம்பாட்டு” (Arab Human Development) அறிக்கை இதனை மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. இன்றைய அரேபிய நாடுகளின் செல்வ வளம், மேற்கத்திய நாடுகளால் தோண்டியெடுக்கப்படும் எண்ணையிலிருந்து மட்டுமே கிடைக்கிறது. அடிப்படையில் அரேபிய பொருளாதார முன்னேற்றம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக, மிகக் குறைவான ஒன்றாகும். அதனை விடக் குறைவான முன்னேற்றம் சஹாரா பாலைவனத்து நாடுகளில் மட்டுமே உண்டு. கல்வி அறிவின்மை அரேபிய நாடுகளில் தொடர்ச்சியாகவும், பரவலாகவும் காணப்படுகிறது.

உதாரணமாக, சின்னஞ்சிறு நெதர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5000 புத்தகங்கள் பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்யப்படுகின்றன. நெதர்லாந்தினை விடவும் மிகப்பெரும் நிலப்பரப்பும், மக்கள் தொகையும் கொண்ட அரேபிய உலகில் ஆண்டிற்கு சராசரியாக வெறும் 330 புத்தகங்கள் மட்டுமே பிற மொழிகளிலிருந்து அரபிக்கு மொழியாக்கம் செய்யப்படுகின்றன.

arab-human-reportஅரேபிய நாடுகளில் மனித உரிமை மீறல் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. அரேபிய ஆட்சியாளர்கள் தங்களின் குடிமக்களை அடக்கி ஆள்வதுடன், அவர்களை தொடர்ந்து ஒருவருக்கொருவர் வன்முறையில் ஈடுபட்டு சண்டையிட்டுக் கொள்ளவும் தூண்டுகின்றனர். குடிமக்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதுடன், உலகில் வேறெங்கும் காணவியலாத வகையில் பெண்களுக்கு கடுமையான அடக்குமுறைகள் விதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பெண்கள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுக்கப்பட்டு, எவ்விதமான அரசியல் அமைப்புகளிலும் பங்கெடுக்க அனுமதிக்கப்படாமலும், திருமணம் மற்றும் விவாகரத்து, சொத்துரிமை போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டும், வன் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக மோசமான சூழ் நிலையில் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறது.

இதே நிலைமை மேற்குலகிற்கு புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் மத்தியில் நிலவினாலும் அது இஸ்லாமிய நாடுகளில் காணப்படுவதை விடவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பெண்களுக்குச் சாதகமான மேற்குலக சட்டங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த முஸ்லிம்கள் தங்களுடன் அவர்களது நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் கொண்டுவந்தார்கள். மேற்கத்தியச் சிறைகளில் முஸ்லிம் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும், வன் கொடுமையிலிருந்து பெண்கள் தப்பி வாழும் அரசாங்க இல்லங்களில் முஸ்லிம் பெண்கள்  நிறைந்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

புலம் பெயர்ந்து மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பு பெறுவதிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள். மேற்கத்திய உலகம் தன் குடிமகன்களுக்கு அளிக்கு உயர்தர கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளைப் போன்ற வாய்ப்புகள் அவர்கள் பிறந்து வளர்ந்த இஸ்லாமிய நாடுகளில் ஒருபோதும் அளிக்கப்பட்டதில்லை என்பதினை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறாமல் இருக்க முஸ்லிம்களை எது தடுக்கிறது? மேற்கத்திய உலகிற்கும், அவர்களுக்கும் உள்ள இடைவெளியை எதனால் அவர்களால் குறைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறது? அவர்களைப் போலவே உலகின் பிற பகுதிகளில் இருந்து வந்து குடியேறிய, பிற மதங்களைச் சார்ந்த மக்கள் இவ்வாறு தங்களுக்கு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு முன்னேறுகின்றனர்? அதைச் செய்ய முஸ்லிம்களால் ஏன் முடியவில்லை?

ஒரு சில இஸ்லாமிய “கல்வியாளர்களின்” கூற்றுப்படி, மேற்கத்திய ஏகாதிபத்தியமும், அதன் தட்பவெப்பமுமே முஸ்லிம்கள் முன்னேற விடாமல் தடை, சுட் செய்கின்றன என்பதாகும். மேலும் உலகில் இன்று காணப்படும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பலவும் மேற்கத்திய நாடுகளின் வசதிக்கேற்ப திடீரென, செயற்கையான முறையில் அமைக்கப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சர்வாதிகளால் ஆளப்படுகின்றன. இவ்வாறான சர்வாதிகாரிகளால்தான் இஸ்லாமிய நாடுகளின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்ற கூற்றை வரலாற்றியசிரியரான Bernard Lewis மறுக்கிறார்.

மேற்குலகினர் மீது அரேபிய இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் ஒருவகையான அதிருப்தியே இஸ்லாமிய உலகின் முன்னேற்றத்தை மெதுவானதாக அல்லது இல்லாததாக ஆக்குகுகிறது எனச் சொல்கிறார் லூயிஸ். மறுமலர்ச்சிக் காலத்திற்கு முந்திய ஐரோப்பா (உ-ம். ஸ்பெயின்) பல நூற்றாண்டு காலம் முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அவர்களை ஆண்ட முஸ்லிம்கள் மேற்குலகினரை மிகவும் பின் தங்கிய மூடர்களாகவும், சுத்தமற்றவர்களாகவும், ஒழுங்கும் கட்டுப்பாடும் அற்றவர்களாகவும், கலாச்சாரமற்ற, நாகரீகமற்றவர்களாகவும் எண்ணினார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக ஸ்பெயினைச் சொல்கிறார் லூயிஸ். ஸ்பெயினைப் பிடித்த முஸ்லிம்கள் அதனை 1492-ஆம் வருடம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள்வரை ஆண்டார்கள். ஸ்பானியர்களுக்கு அடிப்படைச் சுத்தம் குறித்து அறிமுகப்படுத்தியவர்கள் அவர்களே. அழியும் நிலையிலிருந்த பல கிரேக்க, ரோமானிய இலக்கியங்களை முஸ்லிம் ஆட்சியாளர்கள் காப்பாற்றினார்கள். அத்துடன் விவசாய முறைகளையும், நீர் வள மேலாண்மை குறித்தும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களின் கலாச்சாரத்தை மேம்படுத்தினார்கள்.

இருப்பினும், 12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லிம் ஆட்சியாளர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாக மாறினார்கள். புதியவற்றைக் கற்கும் ஆர்வம் குறைந்து, இஸ்லாமிய பழைமைவாதம், மற்றும் தீவிரவாதம் நோக்கித் திரும்பினார்கள். அதே காலகட்டத்தில் மேற்கத்திய உலகம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர ஆரம்பித்தது. அதன் மக்கள் புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வமுடையவர்களாகவும், உலகின் பல்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்யவும் தலைப்பட்டார்கள். இதன் காரணமாக அவர்களால் இஸ்லாமிய உலகை மிக எளிதாக எட்டிப்பிடித்ததுடன், அவர்களைத் தாண்டியும் சென்றார்கள். இஸ்லாமிய உலகம் தேக்கமடைந்து பின்தங்க ஆரம்பித்தது.

இதன் காரணமாக இஸ்லாம் தன்னை பழைமைவாதம் மற்றும் தீவிரவாதம் நோக்கித் திருப்பிக் கொண்டது. தீவிரவாத இஸ்லாமை உலகிற்கு அறிமுகப்படுத்திய சையத் குதுப் மற்றும் ஹசன் அல்-பன்னா (Sayyid Qutb and Hassan Al-Banna) போன்றவர்கள் “இஸ்லாமிய உம்மா (அல்லது சமுதாயம்) உலகில் நன்கு வாழ ஒரே வழி, குரானையும், ஹடித்தையும் மற்றும் இறைதூதர் முகமது நபியின் வாழ்க்கை முறையயும் வார்த்தைக்கு வார்த்தை நம்பி நடப்பதால் மட்டுமே முடியும்” என்றார்கள். இஸ்லாமியர்களின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் அவர்கள் மேற்கூறிய அனைத்தையும் கடைபிடிக்காமல் அதன் வழியிலிருந்து விலகி நடந்ததால் மட்டுமே வந்தது என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் உண்மையில் அவ்வாறு குரானையும், ஹடித்தையும் கண்மூடித்தனமாக பின்பற்றிய அரசியல் தோல்விகளிலேயே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய நாடுகளில் முடிந்திருக்கிறது. அடிப்படையில் சரியான முறையில் இயங்கக்கூடிய ஒரு அரசியலமைப்பு இஸ்லாமில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. இதனையே நாம் சவூதி அரேபியாவிலும், இரானிலும் இன்று காணலாம். பெரும்பாலான இஸ்லாமியர்கள் அல்லாவின் கட்டளைகளை மதித்து நடப்பதில்லை என்ற தீவிரவாத இஸ்லாமியர்களின் கணிப்பு சரியானதே என்றாலும், இஸ்லாமிய உலகம் ஒருபோதும் தீவிரவாதிகள் சொல்வதுபோல நடந்து கொள்ளவே கூடாது என்பதே என் கருத்து.

ஐந்து கண்டங்களில் பரவியிருக்கும் ஏறக்குறைய 1.2 பில்லியன் முஸ்லிம்களின் பிரச்சினைகளான, முரட்டுத்தனம், அறிவியல் தொழில் நுட்ப அறிவின்மை, பிற மதத்தினரை மதிக்காமல் அவர்களை ஒடுக்குதல், நோய்கள் மற்றும் பரவலாக நிகழும் சமூக அமைதியின்மை போன்றவற்றைத் தீர்க்கும் வழிவகைகள் எவையும் கண்ணில் தெரியவில்லை. அந்தந்த பிராந்தியங்களுக்கேயான பல சிக்கலான காரணிகள் தீர்க்கப்படாமல் காலம் செல்லச் செல்ல உருமாறி, பெரிதாகி அவர்களை அலைக்கழிக்கின்றன.

இதற்குச் சிறந்த உதாரணமாக இஸ்லாமிய உலகம் அதன் பெண்களின் மீது செலுத்தும் அடக்குமுறைகளைச் சொல்லலாம். அடிப்படையில் இது ஒரு பழங்குடி மனோபாவமாக உருவாகிப் பின்னர் இஸ்லாமில் ஒரு கட்டளையாக மாறியது. இதுகுறித்தான தகவல்கள் குரானிலும், ஹடித்திலும் மிக அபூர்வமான முறையிலேயே காணக்கிடைக்கின்றன. இந்த நவீன காலத்திற்கு ஒத்துவராத, பெண்ணைப் பூட்டிவைக்கும் மனோபாவம் முகமது நபி வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டு பின்னர் குரானிலும் ஒரு புனிதமான அங்கமாக ஆக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இதுவே பெண்களின் உடல் மற்றும் கன்னித்தன்மை தங்களால் காக்கப்பட வேண்டிய ஒரு கடமையாக, மயக்கமாக, மனோபாவமாக உலகின் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு சொல்லித்தரப்பட்டு, அதுவே அவர்களின் அழுத்தமான obsession ஆக மாறியிருக்கிறது இன்று. பெண்களின் மீதான தங்களின் ஆளுமையைச் செலுத்தி அடக்கியாளும் முஸ்லிம் ஆண்களின் இச்செய்கையைப் போலவே, உலகின் பல இதர மதங்களிலும் (கிறிஸ்தவ, யூத மற்றும் ஹிந்து) காணப்பட்டாலும், அவை பெண்களின் கல்வியின் மீதான அல்லது அவர்களின் முன்னேற்றத்தின் மீதான ஒரு தடையாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதே உண்மையாகும். இந்த மனோபாவம் காரணமாக முஸ்லிம்கள் உலக சமுதாய வாழ்க்கையில் கொடுக்கும் பெரும் விலை குறித்து அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தாலும் அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் கடமை பெண்களின் உடலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே.

“கன்னித்திரை” கிழிந்த பெண்கள் உபயோகிக்கப்பட்ட பொருள்களைப் போன்றவர்கள் என மீண்டும் மீண்டும் அவர்களால் முஸ்லிம் பெண்களுக்குச் சொல்லப்படுகிறது. ஒரு முறை உபயோகிக்கப்பட்ட அந்தப் பொருள் நிரந்தரமாகவே உபயோகமற்றதாகிவிடும் என அவர்கள் மிரட்டப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஒரு “முத்திரையிழந்த” முஸ்லிம் பெண்ணை எந்த முஸ்லிம் ஆணும் திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ் நிலை உருவாகி, அப்பெண் அவர்களின் பெற்றோர்களின் வீட்டிலியே நிரந்தரமாகத் தங்க நேரிடும்.

அதனையும் விட, அவள் திருமண பந்தத்திற்கு வெளியே எவருடனாவது உறவு கொண்டு கற்பிழந்தால் அவளுக்கும், அவளது குடும்பத்தினருக்கும் காலம் காலமாக தொடர்ந்து வரக்கூடிய ஒரு அவமரியாதையை அவள், அவளது குடும்பத்திற்கு அளிக்கிறாள். அவளைச் சுற்றியுள்ள குடும்பங்கள் அவளைப் பற்றி அவதூறு பேச ஆரம்பிக்கும். மேற்படி குடும்பத்தில் உள்ள பெண்கள் கண்ணில் தென்படும் முதல் ஆணைக் கண்டதும் “பாய்ந்து சென்று” அணைத்துக் கொள்வார்கள் என அவளது குடும்ப மானம் காற்றில் பறக்கும். எனவே அது போன்ற ஒரு செயலைச் செய்த ஒரு பெண் அவளது குடும்பத்தினரால் கடுமையான முறையில் தண்டிக்கப்படுவாள்.

தண்டனையானது அவளை கீழ்த்தரமான பெயரிட்டு அழைப்பதிலிருந்து, வீட்டை விட்டு வெளியே விரட்டியடிப்பது அல்லது வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கப்படுவது அல்லது shotgun wedding எனப்படும் துப்பாக்கி முனைத் திருமணத்தை அவளுடன் உறவு கொண்டவனுடேயே செய்து வைப்பது அல்லது யாராவது ஒரு “நல்ல மனிதனுக்கு” திருமணம் செய்து வைப்பது என்று பல வகைப்படும். குடும்ப ரகசியம் காக்க திருமணம் செய்து வைக்கப்படும் “நல்ல மனிதன்” பெரும்பாலும் ஏழையாகவோ அல்லது மனவளர்ச்சி குன்றியவனாகவோ அல்லது கிழடு தட்டி ஆண்மையற்றவனாகவோ அல்லது இவையனைத்துக் கலந்தவனாகவோ இருப்பது வழக்கம்.

மிக மோசமான சூழ் நிலைகளில் அப்பெண் அவரது குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதும் உண்டு (Honor killing). ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அறிக்கையின்படி, இஸ்லாமிய நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5000 பெண்கள் இவ்வாறு கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. இஸ்லாமிய நாடுகளிலேயே மிகவும் முன்னேறிய, சுதந்திரமான நாடாக அறியப்படுகிற ஜோர்டானிலேயே கூட இது சகஜமாக நடக்கிறது என்று மேலும் கூறுகிறது அந்த அறிக்கை.

dishonor_murder

இம்மாதிரியான ஒரு நிலைமை தங்களின் குடும்பங்களுக்கு ஏற்படாமலிருக்க இஸ்லாமிய குடும்பங்கள் தங்களால் இயன்ற அளவு கட்டுப்பாடுகளைத் தங்களின் பெண்களுக்கு விதித்து, அவளின் “கன்னித்திரை”க்கு எந்த பங்கமும் வராமலிருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைக்கிறார்கள். அதற்கான வழிமுறைகள் அவர்கள் வசிக்கும் நாடுகள், சூழ் நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே. அவளது கன்னித்திரையை கிழித்து, அவளை சிக்கலில் சிக்க வைக்ககூடிய முஸ்லிம் ஆணுக்கு அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதுதான்.

சில வருடங்களுக்கு முன், துருக்கிய நீதி அமைச்சராக இருந்த புரஃபெசர் டோகன் சொயாசியன் (Dogan Soyasian) என்பவர், எல்லா ஆண்களும் கன்னிப் பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்; அதனை மறுப்பவர்கள் அயோக்கியர்கள் என்றார். ஒரு மெத்தப் படித்த, ஒரு நாட்டின் அமைச்சராக உள்ளவரே இவ்வாறு சொல்கையில் சாதாரண முஸ்லிம் ஆண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

இஸ்லாமியக் கலாச்சாரத்தின்படி, ஒரு ஆணால் கற்பழிக்கப்பட்ட பெண் தன்னைக் கற்பழித்தவனையே திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுவாள். சிறிது காலம் அவனுடன் குடும்பம் நடத்தியபின் அவள் எல்லாவற்றையும் மறந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவாள் என்றும், அவள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வது காயங்களை ஆற்றும் என்றும் காரணம் கூறப்படும். ஆனால் ஒரே பெண் பல ஆண்களால் கற்பழிக்கப்பட்டால்?

அவ்வாறு நிகழ்ந்தால் அவளை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வர மாட்டார்கள். அப்படியே அவளை மணப்பவனும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காமல், கீழ்த்தரமாகவே அவளை நடத்துவான்.

இஸ்லாம் ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. இது எனக்கு என் இளமைக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறது.

என்னுடைய பாட்டியிடம் ஒரு ஆண் ஆடு இருந்தது. ஒரு நாள் மாலைப் பொழுதில் நாங்களெல்லோரும் வீட்டின் முன்பிருந்த மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை மயங்குவதற்கு முன் மேய்ச்சலுக்குப் போயிருந்த ஆடுகள் ஒரு நீண்ட வரிசையில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தன. பார்ப்பதற்கு மிக அழகான காட்சி அது. அந்த வேளையில், பாட்டியின் வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த அவளது ஆண் ஆடு, காம்பவுண்டுச் சுவரைத் தாவிக் குதித்து கண்ணில் கண்ட முதல் ஆட்டின் மேல் ஏறி அதனுடன் உறவு கொள்ள முயன்றது.

இது குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. இது ஒரு மோசமான நடத்தை என்று நினைத்து அதனைப் பாட்டியிடம் சொன்னோம். பாட்டி சீற்றத்துடன், “இது உங்களுக்குத் தேவையில்லாத ஒரு விஷயம். பக்கத்து வீட்டுக்காரனின் ஆட்டின் மீது நம் ஆடு ஏறவேண்டாமென்றால் அவன் அவனது ஆடுகளைப் பட்டியில் அடைத்துக் கொளளட்டும். அல்லது அவன் ஆடுகளை வேறு வழியில் கொண்டு செல்லட்டும். என் வீட்டின் முன் வந்தால் என் ஆடு அப்படித்தான் ஏறும்” என்றாள்.

goat-arab-cartoon

இஸ்லாம் தன் மதத்தைச் சார்ந்த ஆண்களை இந்த ஆண் ஆட்டைப் போலவே எண்ணி நடத்துகிறது. சாதாரண முஸ்லிம் ஆண், தனது உடலை ஹிஜாப் எனப்படும் உடலை மறைக்கும் ஆடை அணியாத பெண்ணைக் கண்டவுடன் அவள் மீது பாய்வதறகு எண்ணுகிறான். இது ஒரு வகையான self fulfilling prophecy. அதாவது ஒரு முஸ்லிம் ஆணுக்கு சுய கட்டுப்பாடு என்பது இல்லை. அவன் சுய கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை எனச் சொல்லுகிறது இஸ்லாம்.

எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம். ஆக இஸ்லாமில் பிரச்சினைகள் பெண்ணுக்கேயன்றி ஆணுக்கு அல்லவே அல்ல.

மிக இளவயதிலிருந்தே இஸ்லாமியப் பெண்கள் சந்தேகத்துடனேயே நடத்தப்படுகிறார்கள். தங்கள் குடும்பத்திற்கும், சுற்றத்திற்கும் நம்பிக்கையற்றவர்களாக வாழ்வது அவர்களுக்கு துன்பத்தையே வரவழைக்கும் என்று இளவயதிலேயே அப்பெண்கள் கற்றுக் கொள்ளுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று அவர்களைச் சுற்றியிருக்கும் இஸ்லாமிய ஆண்களை கிறுக்கர்களாகா ஆக்குகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள்.

(தொடரும்)

அடுத்த பகுதி >>

பாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா

மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த ஃபத்வா எனும் பகிரங்கக் கொலை மிரட்டலைக் கண்டிக்காமல், நடவடிக்கை எடுக்காமல் அந்த இளம் பெண்களின் இசைக்குழுவான “பிரகாஷ்” (paragaash)-க்கு மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

Kashmir_Girls_Band

இவை எல்லாம் பாகிஸ்தான் ஆக்ரமித்துத் திருடிக்கொண்ட காஷ்மீரில்; தாலீபான்களின் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக் காட்டும் பாரத மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. நாகரிக சமுதாயமான பாரத சமுதாயத்தில் இந்த அநாகரிகமான செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை பேசும் எந்த நாளேடும் இது குறித்துப் பேசவில்லை. விவேகானந்தர் படத்தை பிரசுரிப்பதால் கற்பழிப்புகள் அதிகமாகிறது என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி உடனே செய்தி வெளியிடவில்லை. ஆபாசத்தையும் கலாசாரக் கேட்டையும் பெருமளவு வியாபாரப்படுத்தும் ஆபாச Outlook இதழோ, இன்ன பிற காசு வாங்கிக்கொண்டு ஊடக வேசித்தனம் புரியும் இதழ்களோ, இது பற்றி வாயே திறக்கவில்லை. உச்சபட்சக் குரலில், இந்தியாவில் மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன, பெண்களுக்கு சுதந்திரம் இல்லை, கலாசாரக் காவலர்களான பாஜக, சங்பரிவார் கும்பல்களை அழிக்க வேண்டும் என்று தினமும் பிரசாரம் செய்யும்– அயல்நாட்டுப் பணத்தில் கொழிக்கும் ஆங்கில ஊடக ஜாம்பவான்களோ வாயைத் திறக்கவில்லை.

இந்த ஆபத்தான, வெளிப்படையான கொலை மிரட்டல் ஃபத்வா இந்தியச் சமூகத்தை எதை நோக்கி நகர்த்துகிறது? இது கேள்விக்குள்ளாக்கும் பெண் சுதந்திரத்தின் பின்விளைவுகள் என்ன? நாகரிக சமூகத்தில் இப்படியான பிற்போக்கான, அடிப்படைவாத சிந்தனைகளின் தாக்கம் என்ன? ஏற்கெனவே கல்வி அறிவு, வேலை வாய்ப்புத் துறையில் பின்தங்கி இருக்கும் ஏழை இஸ்லாமிய சகோதரிகளின் சமூக நிலையை என்ன விதமான அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தும்? தாலிபான் பாணியிலான வஹாபிய சிந்தனையின் பின்விளைவுகளையும் யோசிக்கலாம்.

சமீப காலமாக இந்தியா போன்ற பண்பாட்டுக் கூறுகளின் விளைநிலத்தில் அடிப்படைவாத அச்சுறுத்தல்களும், வஹாபியக் குரூரங்களுக்கு பெருகும் சிறுபான்மையின ஆதரவும், பொது நீரோட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையின மக்களை அச்சமும் பீதியும் கொள்ள வைக்கின்றன. கற்காலச் சிந்தனைகளை ஒட்டிய காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள், நாகரிக மக்களைப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் குரூரமான தண்டனை முறைகள். பழங்குடிகளின் கண்மூடித்தனமான போர் வெறியேற்றப்பட்ட மனிதர்கள், பாதிக்கப்படும் இளைய சமுதாயம், போராடிப் பெற்ற பெண் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கி பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் கொத்தடிமைகளாகவும் ஆக்குவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்படும் இது போன்ற இழிவான செயல்களை உடனடியாகக் கிள்ளியெறியா விட்டால் பெரிய பாதிப்பை, கலாசாரச் சீரழிவை, மானுடப் பேரழிவை இது போன்ற செயல்கள் ஏற்படுத்தி விடும். கருத்துக் குருடர்களையும், போலி மதச்சார்பின்மை பேசுபவர்களையும், காட்டுமிராண்டிகளையும், அடிமை வியாபாரம் செய்வதற்காக அலையும் வியாபாரிகளையும் புறம்தள்ளிவிட்டு நாம் முன்னகர்வோம்.


காஷ்மீரில் முறிக்கப்பட்ட பெண் உரிமைக் குரல்:

malala03வங்கப் பிரிவினையின் போது தேவையற்ற முறையில் இந்திரா காந்தி கைதியாகப் பிடித்த 93,000 பாகிஸ்தானிய ராணுவ வீரர்களையும் கூலிப்படை பயங்கரவாதிகளையும் சிம்லா ஒப்பந்தப்படி எந்த நிபந்தனையும் விதிக்காமல்– பாகிஸ்தான் ஆக்ரமித்து வைத்திருந்த காஷ்மீரப் பகுதிகளை விடுவிக்கவும் கோராமல்– விட்டதன் பிரதிபலனை இன்று வரை இந்தியா அனுபவிக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கின் அப்பாவி மக்களும், பூர்வகுடி பண்டிட்களும், தாக்கூர்களும், பாசுபத சைவத்தைப் பின்பற்றும் சிறுபான்மையின இந்துக்கள் மட்டுமின்றி, பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் சொல்லொண்ணா கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். தொடர்ச்சியாக உள்நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றங்களைத் தடுத்துத் தேக்கி வைப்பதன் மூலம் அவர்களுக்கு இந்திய அரசின் மீது வெறுப்பை வளர்த்து, அந்தப் பகுதியைத் துண்டாடி இந்தியாவை சிதைக்கலாம் என்று பாகிஸ்தான் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. கடந்த 40 வருடங்களாக காஷ்மீரப் பள்ளத்தாக்கு மக்களுக்கு எந்தவித அமைதியும், நல்ல வாழ்வும் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக அங்கு திட்டமிட்டு அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் போஷித்து வளர்த்து வருகிறது. அவர்களால் பெருவாரியாக நிம்மதியைத் தொலைத்த காஷ்மீர மக்கள் நடுவில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பிக்கிறார்கள். காஷ்மீரத்து மக்கள் இப்போதுதான் சுதந்திரமாக வெளியே வர துவங்கியிருக்கிறார்கள்.

சில பதின்மப் பருவத்துச் சிறுமிகள் தங்களின் மேலான நுண்ணுர்வின் வாயிலாக உலகைப் பார்க்க விரும்பி இசை எனும் கலை வடிவத்தின் வழியாக தங்களின் குரல்களை திசையெங்கும் பரப்பிக்கொண்டிருந்தார்கள். பிரகாஷ் (from darkness to light) இருளிலிருந்து ஒளிக்கு என்ற வாக்கியத்துடன் ஒரு band இசைக்குழுவை அனிக்மா, நோமா மற்றும் ஃபாரா என்ற 3 சிறுமிகள் சென்ற ஜனவரி 2012-லிருந்து ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள் (குழுவின் ஃபேஸ்புக் பக்கம்). சென்ற டிசம்பரில் காஷ்மீரின் 2012-ஆம் ஆண்டுக்கான இசை விழாவில் பரிசு வென்ற பின் இந்தச் சிறுமிகளுக்கு முக்கியத்துவம் கூடியது. இந்தியா முழுக்க இவர்களுக்கு ஆதரவு பெருகியது. பலரும் இவர்களை ஊக்குவித்தனர். உடனே அடிப்படைவாதிகள் களத்தில் குதித்தனர். முதலில் அவர்களின் முகநூல் பக்கத்தில் மிரட்டினர். அவர்களின் மேனேஜர் நஸீரைத் தனியாக அழைத்து எச்சரித்தனர். திடீரென துகாதார்ன்-இ-மில்லத் என்ற இஸ்லாமிய பெண்கள் பயங்கரவாத அமைப்பினர் இந்தச் சிறுமிகள் செய்வது கொலை நிகர் குற்றம் என அறிவித்தனர்.

இப்படிப் பெண்கள் வெளியே வந்து பாடுவது இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று அறிவித்தது. அந்தச் சிறுமிகள் தொடர்ந்து பாடினால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது. ஏற்கெனவே மாநிலத்தின் தலைமை முஃப்தி இந்தச் சிறுமிகளுக்குத் தடையாணை (ஃபத்வா) பிறப்பித்திருக்கிறார். என்றும் சல்மான் ருஷ்டிக்கு என்ன செய்தார்களோ, தஸ்லீமா நஸ்ரினுக்கு என்ன செய்தார்களோ, படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக மலாலாவை என்ன செய்தார்களோ அப்படிச் செய்வோம் என்று மென்மையான(?) மொழியில் சொன்னர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு கூலிக்கு மாரடிக்கும் சிலரும் இப்படியெல்லாம் இளம் பெண்கள் வெளியே வந்து பாடலாமா என்று பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். மறைமுகமான தாக்குதல் மிரட்டலும் அந்தப் பதிவுகளில் இருந்தன.

இந்த முக நூலில் இருந்தும் ஹயா அந்ராபி என்ற முகநூலில் இருந்தும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுக்கொண்டிருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போலீஸ் முதல் தகவல் அறிக்கை தயாரித்த உடன் உடனடியாக ஒரு வீடியோவை வெளியிட்டனர்.

[youtube http://www.youtube.com/watch?v=aX_BbG–ULg]

பகிரங்கக் கொலை மிரட்டலுடன் அந்த அழிக்கப்பட்ட யூ ட்யூப் வீடியோவின் காப்பியை ஹெட்லைன்ஸ்டுடே ஒளி பரப்பியது. அரசோ பயங்கர வாதிகளைக் கண்டிக்காமல் நீங்கள் பாடுங்கள் உங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்றதோடு அமைதி காத்தனர். பயந்து போன பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உயிருக்கும், மானத்திற்கும் பயந்து தங்கள் குழந்தைகளை அமைதி காக்கக் கேட்டுக்கொண்டனர்.

kashmir_girls_band_2

காஷ்மீரின் எழிலோடும் குளுமையோடும், இனிமையோடும் இருந்த அந்தப் பூங்குயில்களின் குரல்வளையும் ஜனநாயக உரிமைகளின் குரல்வளையும் ஒருங்கே நெறிக்கப்பட்டது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை முஃப்தி இப்படி பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுக்கிறாரே என்று யாரும் அவரைக் கண்டிக்கவில்லை. அனைவரும் அந்தச் சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கினர். சிறுமிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தலைமறைவாக வைத்துள்ளனர். யாரும், குறிப்பாக ஊடகங்கள், சிறுமிகளோடு தொடர்புகொள்ள முடியாத வகையில் அவர்களது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றி வைத்திருக்கின்றனர். முதலமைச்சரின் ட்வீட் உறுதிமொழியோ, காவல்துறையோ தங்களது குழந்தைகளைப் பாதுகாக்க முடியாது என்று அந்தப் பெற்றோர் கூறுகின்றனர். பள்ளத்தாக்கு தனக்குக் கிடைத்த கூடுதல் இசைக்குரல் இனிமையை இழந்திருக்கிறது.

ஆனால் யார் கண்டித்தாலும் அடிப்படைவாதம் தான் இறுதியில் வெல்லும் என்ற முடிவை வலுவாக தாலீபானிய அடிப்படைவாத வஹாபிய சிந்தனை பொதுமக்களிடம் விதைக்கிறது. இதன் மூலம் பெருவாரியான பயத்தை விதைக்கிறது. நாகரிக சமூகத்தை இதன் மூலம் பின்னுக்கு இழுத்து கற்காலத்தில் மக்களை இருத்தப் பிரயத்தனபடுகிறது. பெண்களை சமையலுக்கும், பாலியல் வல்லுறவுக்கும், இதர வீட்டு வேலைகள் செய்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பண்டம் என்பதைத் தாண்டி வேறில்லை என பெண்களையும் நம்பச்செய்து அவர்களையும் அதற்காகப் போராட செய்யும் அளவுக்கு அது குரூரமாகத் திட்டமிட்டு செயலாற்றுகிறது.

இதன் மூலம் அருவெறுப்பு அடைந்திருக்கும் சராசரி நியாய உணர்வுள்ள எளிய இஸ்லாமிய மக்களிடம் நான் கேட்பதெல்லாம் அந்தச் சிறுமிகளுக்கு எதிரான இந்த மதவாத ஒடுக்குமுறையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? இஸ்லாம் மார்க்கம் உண்மையிலேயே இளம் பெண்களின் கலைத்திறமை வெளிப்பாடுகள் கூடாது என்று சொல்கிறதா? உண்மைதான் என்றால் அது நியாயம்தானா? இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த 21-ஆம் நூற்றாண்டில் தொடர்வது பொருத்தம்தானா? பொருத்தமில்லை என்றால் இதற்கும் நீங்கள் உங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டாமா? இப்போது நீங்கள் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காவிட்டால் மலாலாவிற்கு நிகழ்ந்த கொடுமை சுதந்திர இந்தியாவின் மகள்களுக்கும் ஏற்படும். ட்வீட்டரில் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு அமைதி காக்கும் ஒமர் அப்துல்லா தன் ஜனநாயகக் கடமையிலிருந்து வழுவியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான கற்பழிப்புக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் அரசின் அவசரச் சட்டத்தையே இதற்கும் உபயோகித்து அப்பாவிப் பெண்களை, சிறுமிகளை மிரட்டிய அந்த மதத்தலைவருக்கும் அரசு விதிக்குமா?

women rights01இது போன்ற கேவலங்கள் எல்லாம் நாகரீக உலகிற்கும் பெண்கள் சமூகத்திற்கும் இடையில் ஒரு மிகப்பெரும் பள்ளத்தை உருவாக்கி பெண்களை வெறும் பண்டமாகவும், பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான சதியை பழமைவாதிகள் முன்னெடுக்கிறார்கள். அதனால் தங்களின் சகோதரிகளும், தாய்மார்களும், மகள்களும் சமூக அமைப்பில் கீழான நிலையில் மட்டுமே இருக்க வேண்டும். அவர்களுக்கான சுதந்திரம் என்பது ஆண்களால் அனுமதிக்கப்படும் அளவிற்கு மட்டுமே இருக்க வேண்டும். பெண் சமூகமே ஒழுக்கவியல் சங்கிலிகளால் கடுமையாகப் பிணைக்கப்பட்டு, அவர்களை மன உளைச்சலில் ஆழ்த்தி பழங்குடி சமூக அந்தஸ்த்திலேயே வைத்திருக்க பெரும் முயற்சி நடக்கிறது. இதனால் ஏற்கெனவே சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருக்ககூடிய ஏழை இஸ்லாமிய சகோதரிகள், தாய்மார்களின் வாழ்க்கை பெரும் பாதிப்பிற்குள்ளாகி, மேலும் சிக்கலாகப்போகிறது. கல்வி கற்கப் போனால் கொலை செய்வோம் என்று மிரட்டி, கொலை முயற்சியும் செய்த தாலீபான் பாணியிலான அடிமை முறையை இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டிலும் புகுத்தி இங்குள்ள ஏழை மக்களின் மீதும் தேவையற்ற அடிப்படை வாத சமூக அழுத்தங்களைத் திணிக்கிறார்கள்.

மலாலாவை கொலை செய்ய முயன்றது ஒரு சமூகத்தின் கல்வி முயற்சியை தடுப்பது மட்டுமே என்பதைத் தாண்டி அதற்கு வேறு எந்தப் பொருளும் இல்லை. இதன் விளைவுகள் அந்தச் சமூகத்தில் ஏற்படுத்தும் மதிப்புகளை நோக்கினால் ஏழை இஸ்லாமியச் சிறுமிகளின் கல்வி பின்னுக்குத் தள்ளப்படும். அவர்களுக்கான சமூக சுதந்திரம் பறிக்கப்படும். அவர்களின் கல்வி அறியாமையும், சமூகத் தனிமைப்படுத்தலும் அவர்களின் உரிமைகளை மேலும் இல்லாமலாக்கும். ஏற்கெனவே மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் இஸ்லாமிய சகோதரிகளும், தாய்மார்களும் மேலும் கீழான சமூக நிலையை அடையவே இது போன்ற வஹாபிய அடிப்படைவாத சிந்தனைகள் வழிவகுக்கும். புர்கா அணியாத பெண்கள் மீது ஆசிட் வீசுவது, கல்வி கற்கும் பெண்களைக் கொலை செய்வது, பள்ளியில் ஒரு மாணவனுடன் தன் மகள் பேசினார் என்பதற்காக பெற்ற குழந்தையின் மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெற்றோர்களை ஊக்குவித்து வளர்ப்பதன் வழியாக, பெண்களுக்கு 1000 ஆண்டுகளாக இருந்த சமூகத் தடைகளைத் தாண்டி வளர்ந்த இன்றைய நிலையை மீண்டும் மாற்றி பழைய நிலையை உறுதிப்படுத்துவதன் வழியாக அவர்களை பாலியல் கொத்தடிமைகளாக மட்டுமே வைத்திருப்பதற்கான மனநிலைக்கு எதிராகப் போரிட வேண்டியது நம் கடமையாகும். நம் சொந்த சகோதரிகளும், தாயும், மகளும் முன்னோக்கி நடப்பதைப் பெருமையுடன் பார்ப்பதும் அதை ஆதரிப்பதும் ஒரு நாகரிக சமூகத்தின் பெருமிதமான வெற்றியாக இருக்கும். பள்ளத்தாக்கில் சிறகொடிந்து இருக்கும் அந்தப் பாடும் வானம்பாடிகளுக்கு என் மனமார்ந்த ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

malala02

துக்தரன் – இ – மில்லத்

காஷ்மீரிலுள்ள செல்வாக்கு பெற்ற பெண்கள் அமைப்பு இந்த இசைக்குழுவுக்கு எதிரான நிலையை எடுத்தது.எதிர்ப்பு தெரிவித்தது .என்றெல்லாம் மிக மென்மையான மொழியில் மீடியாக்களால் (i meant it for paid media and pro secular media & media persons.)வர்ணிக்கப்பட்ட அந்த பெண்கள் அமைப்பு பற்றியும் அதன் தலைவி ஆயிஷா அந்ரோபி பற்றியும் சிறிது தெரிந்து கொள்வோம். DeM எனக்குறிப்பிடப்படும் துக்த்தரன் – இ – மில்லத் அமைப்பு 1987 முதல் செயல் படுகிறது தாங்கள் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு என்ற அறிவிப்போடு.அதிர்ச்சி அடைய வேண்டாம் . இதற்கு முன்னால் அதன் தலைவியின் பேச்சை கேட்டவர்கள் நடுங்கிப்போனார்கள். அது என்னவென்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் புர்கா அணியாமலோ, இஸ்லாமிய உடைகளை அணியாமலோ செல்பவர்கள் மட்டுமின்றி ஜீன்ஸ் உள்ளிட்ட மேலை நாட்டு உடைகளை அணிபவர்கள் மீது ஆசிட் வீச வேண்டும் என்று ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டார் 2000 ஆவது ஆண்டு . இதை சிரமேற்று இவர்களின் பயங்கரவாத பிரிவான லஷ்கர் – இ ஜாபர் 2 பெண்கள் மீது ஆசிட் ஊற்றி தங்கள் செயலை மக்களுக்கு காண்பித்தார்கள் (http://www.mid-day.com/news/2001/sep/15235.htm ).அதை வெளிப்படையாக செய்ய தூண்டியவர் தான் அம்மையார் ஆயுஷா (http://banditash.wordpress.com/2008/04/06/dukhtaran-e-millat-asiya-andrabi/)அந்த்ராபி .  dem01பாகிஸ்தானால் திருட்டுத்தனமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் இப்போது ஒரு சம்பவம் நடந்து அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்க வைத்தது.ஒரு இஸ்லாமிய மாணவி தன் வகுப்பு தோழனுடன் பேசியதற்காக சொந்த பெற்றோர்களால் ஆசிட் நிறைந்த ட்ரம்மில் அமிழ்த்தி கொல்லப்பட்டார்.அது மத ரீதியாக சரி தான் என வாதிட்டவர் தான் நம் மாதர் குல திலகம் ஆயிஷா அந்த்ரோபி.(http://www.guardian.co.uk/world/2012/nov/02/parents-accused-kashmir-acid-attack ).இந்த பெற்றோர்கள் சந்தேகித்த பெண்ணின் வயது 15.ஜோஹிரா யூசுப் எனும் பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய உறுப்பினர் தெரிவிப்பது என்ன வேன்றால் மாதம் 10 தாக்குதல் ஆவது பெண் குழந்தைகளின் உடை சார்ந்தும், ஒழுக்கம் சார்ந்தும் நடை பெறுகிறது . இது ஒரு நாகரீக சமூகம் தானா? என கேள்வி எழுப்புகிறார்.ஆனால் ஆயிஷாயும் அவரின் அடிப்படைவாத தோழிகளும் பகிரங்கமாக மிரட்டுகிறார்கள் அந்த பெண்களை . நீங்கள் பாடினால் உங்களின் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் தர முடியாது என்கிறார் . ஆறு ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு குற்றங்களுக்காகவும் ,பயங்கரவாத செயல்களுக்காகவும் சிறை சென்று மீண்டு வந்த ஆயிசா அந்த்ரேபி.காஷ்மீரத்திற்காக துப்பாக்கி, வெடிகுண்டு ஏந்தி போராடும் லஷ்கர் இ தொய்பாவும், ஹரிககத் உல் முஜாகீதீனும் தான் காஷ்மீர் மக்களின் பிரதி நிதிகள். மற்றவர்கள் அல்ல என்று சொல்லி சர்ச்சையில் சிக்கியவர் தான் இவர். இந்த அமைப்பை பற்றிய தெற்காசிய தீவிரவாத எதிர்ப்பு நாடுகளின் கூட்டமைப்பின் இணைய தளம் சொல்வதை பாருங்கள் (http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm ).இந்த அம்மையார் தான் மகளிர் அமைப்பின் தலைவர் என்றால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் என்ன விதமான முன்னேற்றம் ஏற்படும் என நினைக்க நடுக்கமாக இருக்கிறது.

dem02
மேலதிக விபரங்களுக்கு :

http://www.voanews.com/content/kashmiri-girl-band-folds-after-muslim-cleric-issues-fatwa/1597597.html

http://tribune.com.pk/story/502931/kashmir-girl-band-quits-after-fatwa/

http://www.irishtimes.com/newspaper/breaking/2013/0205/breaking26.html

http://www.bbc.co.uk/news/world-asia-india-21335186

http://www.satp.org/satporgtp/countries/india/states/jandk/terrorist_outfits/dukhtaran.htm

http://www.youtube.com/verify_controversy?next_url=/watch%3Fv%3D5Ue4Hm0-4YE%26bpctr%3D1360416591

http://www.youtube.com/watch?v=E3Za1GcHwKI

http://www.youtube.com/watch?v=-h_RaXdvlTY