விலகும் திரை: பைரப்பாவின் “ஆவரணா” நாவலை முன்வைத்து…

இந்திய அளவில் அறியப்பட்ட மிக முக்கிய கன்னட எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பாவால் 2007ல் படைக்கப்பட்ட நாவல் “ஆவரணா “. கன்னடத்தில் வெளியான இந்த நாவல் 4 மாதங்களில் 10 மறுபதிப்புகளைக் கண்டது. மராத்தி, ஹிந்தி மொழிகளிலும் பைரப்பாவின் பிற நாவல்களை விட இந்த நாவல் அதிகம் பேசப்பட்டது. கன்னடத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுவிட்டது.

The amoxicillin price watsonsville nc are usually a good option for anyone that is looking to have the best and most cost-effective way of treating bacterial infections. Generic viagra online is one of the drugs which is used by the patients http://blog.bitsense.com.ar/2013/03/07/seminario-webrtc-voip-tambien-desde-un-navegador who have difficulty in taking cialis. Sublingual tablets are taken for a specific period of time without drinking.

The only remedy you can take for it is to increase the amount of time during the day you are exposed to the sun. What is dose how much the dose how much http://mtviewprop.com/homes-for-sale-sold-details/33000-CRYSTAL-MOUNTAIN-BOULEVARD-E-215-GREENWATER-WA-98022/1672184/26/ doxt tablet uses in telugu order of. Elavil, or nardil as it is usually called, is now available to buy online for the first time in australia and the usa.

After you have taken any of the different pills, let your dog take them at their leisure. Prednisone is a corticosteroid Köneürgench doxycycline 100 mg tablet online medication used for the treatment of asthma. Their function is to transport cholesterol in the bloodstream away from tissues where.

எஸ்.எல்.பைரப்பா
எஸ்.எல்.பைரப்பா

ஆர்வமும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்து இந்த நாவலை கன்னட மொழி மட்டுமல்லாது மொத்த பாரதத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கன்னட இலக்கிய,கலை உலகப் பிரமுகர்கள் பலரும் இந்த நாவலை மிகக் கடுமையாக விமரிசித்தனர். யு.ஆர்.அனந்தமூர்த்தி இந்த நாவலே அபாயகரமானது என்றார். கிரிஷ் கர்னாட் இன்னும் ஒரு படி மேலே போய் தவறான தகவல்களை , தவறான வரலாற்றை இந்த நாவல் பேசுவதாகச் சொன்னார். ஆனால் 80 வயதைக் கடந்த பைரப்பா வெகு நிதானமாக , தன்னை விமரிசித்தவர்களை வாதத்திற்கு அழைத்தார். தான் முன்வைத்த ஒவ்வொரு கருத்துக்கும் ஆதாரத்தை தன்னால் நிரூபிக்க இயலும் என்ற அவர் மறுதரப்பைச் சேர்ந்தவர்களையும் அவ்வாறே செய்ய வேண்டினார். இன்று வரை இந்த நாவலை எதிர்ப்பவர்களை நோக்கி பைரப்பா முன்வைக்கும் ஒரே வேண்டுகோள் – ‘நாவலில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை ஒரு முறையேனும் வாசித்து விட்டு பேசுங்கள் ‘ என்பதே.

நாவல் அப்படி எதைப் பற்றித்தான் பேசுகிறது?

பல்லாயிரம் வருடப் பாரம்பரியம் வேர் கொண்ட நமது கலாச்சாரத்தை வெகு இலகுவாக அறுத்தெறிந்துவிட்டு 100 வருடங்களைக் கூட முழுமையாகத் தாண்டாத ஒரு சித்தாந்தத்தை கண்ணை மூடிக் கொண்டு கடைப்பிடிக்கும் ஒரு சாரார் இங்கு உண்டு. இவர்கள் கல்வி, கலை, இலக்கியம், களச் செயல்பாடுகள் என எல்லா சமூகத் தொடர்பு தளங்களிலும் பரவி நிற்பவர்கள். “அறிவுஜீவிகள்’, “முற்போக்காளர்கள்” என்று தம்மை சொல்லிக் கொள்ளும் இவர்கள்தான் இன்று ஊடகம் முதல் அரசியல் வரை பெரும் வலைப் பின்னல் அமைத்து அமர்ந்திருக்கிறார்கள். இந்த வலையில் சென்று சிக்கிய ஒரு ராணித் தேனி படும் அவஸ்தையும்,அதன் மனப் போராட்டமும், அது கண்டடையும் சுடும் உண்மைகளும்தான் இந்த நாவல்.

ஒரு காந்திய குடும்பத்தில் பிறந்து கல்வி, பணி ஆகியவற்றில் தனக்கான முழு சுதந்திரமும் தரப்பட்ட லக்ஷ்மி முற்போக்கு எண்ணங்களால் பெரிதும் உந்தப்பட்டு நாடக/திரைத்துறையில் உடன் பணியாற்றும் அமீரை நிக்காஹ் செய்து கொள்கிறாள், ரசியா என்ற பெயர்/மத மாற்றத்துடன். தொடக்கத்தில் எல்லாமே சரியாகச் செல்வது போல இருந்தாலும் அமீர், அமீரின் குடும்பம் மெல்ல,மெல்ல அவளை ஆக்கிரமிப்பதை லக்ஷ்மியால் உணர முடிகிறது. முற்போக்காக வெளியே தோற்றமளிப்பதற்கு மாறாக , இன்னும் தன் மதத்தின் வாழ்க்கை முறையை விட்டுக் கொடுக்க முடியாதவனாக அமீர் இருக்கும் உண்மை லக்ஷ்மியை நிதானமாகச் சுடுகிறது. அதற்குள் அவர்களது வாழ்வின் அடையாளமாக மகன் “நஸீர் ” பிறந்து விடுகிறான்.

அமீரும்,ரசியாவும் ஆவணப்படம் ஒன்றுக்காக ஹம்பே செல்கிறார்கள். அங்கு சிதைந்து கிடக்கும் நகரம், உடைத்தெறியப்பட்ட தெய்வ வடிவங்கள், உடைக்கப்பட்ட சிற்பங்கள் ஆகியவற்றைக் கண்டதும் ரசியாவின் மன ஆழத்தில் எதுவோ ஒன்று விழித்து எழுகிறது. இந்நிலையில் அவளது திருமணத்திற்குப் பின் அவளுடன் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்ட அவளது தந்தையின் மரணச் செய்தி அவளை வந்தடைகிறது. நகரத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு கிராமம்தான் அவளது சொந்த ஊர். தந்தைக்குப் பின் அவரது வீடு, நிலம் முதலிய சொத்துக்களைப் பார்க்க 28 ஆண்டுகளுக்குப் பின் அவள் தன் கிராமத்திற்கு வருகிறாள்.

அதே ஊரைச் சேர்ந்த சேஷ சாஸ்திரிகளின் மகனும், தந்தையுடன் வேறுபட்டு நகரத்திற்கு வந்து மொத்த மாநிலத்தின் அறிவுஜீவி முகமாகவும் ஆகி விட்ட பேராசிரியர் என்.எஸ்.என். சாஸ்திரிதான் லக்ஷ்மியை முற்போக்கில் மூழ்கடித்து ரசியாவாக மாற்றுவதில் முன்னின்றவர். நாடு முழுவதும் பயணித்து மிக முற்போக்கான கொள்கைகளை மட்டுமே பேசி வரும் பேராசிரியர் சாஸ்திரி நாடறிந்த அறிவுஜீவிகளில் ஒருவராகிறார். தேசிய கல்விக் கொள்கையை வகுக்கும் குழுவுக்கு தலைமை தாங்குமளவு செல்வாக்காகிறார் . ஆனால், அவரது தாயாரின் மறைவுக்கு வரும்போது தந்தை சேஷ சாஸ்த்ரியின் கேள்விகளால் மனம் சிதறும் பேராசிரியர் முன்னிலும் வெறுப்பு மிகுந்தவராக மாறிப் போகிறார். அமீரையும்,ரசியாவையும் மீண்டும் இணைத்து வைக்க அவர் செய்யும் முயற்சிகள் பயனற்றுப் போகின்றன.

இதனிடையே தந்தையின் கிராமத்து வீட்டில் அவரது அறையில் தங்கும் லக்ஷ்மி அவர் சேகரித்து வைத்திருந்த , படித்து குறிப்புகள் எடுத்து வைத்திருந்த பெரும் நூல்களின் குவியலைக் காண்கிறாள். தந்தையின் குறிப்புகளை வாசித்து , அவற்றால் கவரப்பட்டு அதன் வழியே அந்தப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கும் லக்ஷ்மி இந்திய வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களுக்குள் நுழைகிறாள். அந்த வாசிப்பின் அடிப்படையில் முகலாயர்களால் வெல்லப்பட்ட இந்திய நாடுகளையும், அவர்களால் நிகழ்த்தப்பெற்ற அழிவுகளையும், இடிக்கப்பட்ட பிற மத வழிபாட்டுத் தலங்களையும், பிற மதத்தினர் நடத்தப்பட்ட விதத்தையும் அறிந்து கொள்கிறாள். முகலாயப் படையெடுப்பில் தோல்வியுற்று சிறைப்பிடிக்கப்படும் பிற மதத்தினருக்கு என்ன நடந்தது என்பதையும் வாசித்தறியும் லக்ஷ்மி இவை அனைத்தையும் ஒரு நாவலாக எழுதத் தொடங்குகிறாள்.

தேசிய கல்விக் குழு சந்திப்பில் பங்கேற்கும் லக்ஷ்மி இந்த வரலாறும் மக்களுக்கு சொல்லப்பட வேண்டும் என்று வாதிட்டுத் தோற்று தனிமைப்படுத்தப் படுகிறாள். இதனிடையே, அமீருக்கும், லக்ஷ்மிக்கும் ஏற்பட்ட இடைவெளியில் லக்ஷ்மி கிராமத்திலேயே சிறிது காலம் கழித்து விட்டு திரும்பும்போதுதான் அமீர் மற்றொரு நிக்காஹ் செய்து கொண்டதை அறிகிறாள். அமெரிக்காவில் படித்து விட்டு மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் மகன் நசீர் தாயைக் காண வருகிறான். அவனுடன் பேசும்போது தந்தையின் மறுமணம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை என்பதையும், அவன் தன்னை ஒரு முஸ்லிமாக மட்டுமே உணர்ந்து பேசுவதையும் கண்டு திகைக்கிறாள் லக்ஷ்மி.

thirai-book-coverஅவளது நாவல் வெளியிடப்பட்டு அறிவுஜீவிகளால் , குறிப்பாக, சாஸ்திரியின் சீடர் குழாமால் கடுமையாகத் தாக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த நாவல் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு அனைத்து புத்தகங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. கூடவே அவளது தந்தையால் சேகரிக்கப்பட்டு, அவளது நாவலுக்கு ஆதாரமாக அமைந்த புத்தகங்களும் பறிமுதலாகின்றன. ஆதாரப் புத்தகங்களையாவது திரும்பப் பெற வேண்டி சட்டப் போராட்டத்தை லக்ஷ்மி துவக்கும் இடத்தில் நாவல் முடிகிறது.

நாவலில் விவரிக்கப்படும் ஒவ்வொரு வரலாற்று சம்பவங்களுக்கான ஆதாரங்களும் 136 புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் வழியே விளக்கப்படுகின்றன. இதை வெறும் கட்டுக் கதைப் புத்தகங்கள் என ஒதுக்கிவிடவும் முடியாது.பெரும்பான்மைப் புத்தகங்கள் பல இஸ்லாமிய நாடுகளாலும், அமைப்புகளாலும் பாராட்டப்பட்டு, விருதுகள் அளிக்கப்பட்டவை. ஆக பைரப்பா நிறுவப்பட்ட ஆதாரங்கள் வழியாகவே இந்திய வரலாற்றின் வாசிக்கப்படாத பக்கங்களைக் காட்டுகிறார்.

இந்த நாவல் உருவாக்கும் விவாதம்தான் என்ன? அதை நாம் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.

முதலாவதாக இந்த நாவல் பேசும் விஷயங்களைப் பற்றி. எப்போதோ முடிந்து போன அவற்றை இப்போது நினைவுப்படுத்தி, வரலாற்றின் இருண்ட பக்கங்களை ஏன் இன்று வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற கேள்வி. மேலோட்டமாக இந்தக் கேள்வி மிக நடுநிலையான , நியாமான ஒன்றாகத் ,தோன்றலாம். ஆனால் எந்த நோக்கத்துடன் வரலாற்றின் இந்தப் பக்கங்கள் மறைக்கப்பட்டனவோ , அந்த நோக்கத்தின் 5% கூட இன்று வரை நிறைவேறவில்லை.

மானிட விதிமுறைகளுக்கு சற்றும் பொருந்தாத யுத்த முறைகள், யுத்தத்தில் தோல்வி அடைந்த நாட்டின் ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக விற்றது, அவர்களை பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியது, பிற மத வழிபாட்டுத் தலங்களை அரசாணை பிறப்பித்து இடித்தது, பிற மதத்தினருக்கு கூடுதல் வரிகள் விதித்தது போன்ற பல சம்பவங்கள் மறுக்க முடியாத வரலாற்று உண்மைகள். ஆனால் நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்த பிரிவினைச் சூழலின் பதட்டம் மேலும் தொடர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அதனாலேயே வரலாற்றின் இந்த உண்மைகள் மறைக்கப்பட்டு ஒரு சராசரியான , பொதுமைப்படுத்தப்பட்ட வரலாறு முன்வைக்கப்பட்டது.

நாளடைவில் இரு பிரிவினரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி , வெறுப்பின்றி இருப்பார்கள்; அதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு தடையாக இருக்கக் கூடும் என்பதே அன்றைய கருத்தோட்டம். ஆனால் இன்று 65 வருடங்களுக்குப் பிறகும் அந்தப் புரிதல் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. புதிதாக உருவாகி வந்த அறிவுஜீவி முற்போக்காளர்கள் தங்கள் இடத்தைக் காத்துக் கொள்ள உருவாக்கிய தந்திரமாக புதிய வரலாறு மாறிவிட்டது. சகோதரப் புரிதலுடன் இணைந்து வாழ இரு மதத்தவரும் விரும்பினாலும் அவர்களை இந்த முற்போக்காளர்கள் அனுமதிப்பதில்லை. அவர்களால் உருவாக்கப்பட்ட போலி இரக்க வரிகள்தான் -‘ இந்த தேசத்தில் சிறுபான்மைச் சகோதரர்கள் காலம், காலமாக நசுக்கப்படுவது”. விடுதலைப் போராட்டத்தை நேரில் காணாது, அதன் பின் பிறந்து வளர்ந்த ஒரு தலைமுறையிலிருந்து இந்த வரிகள் எண்ணமாக வலுப்பட ஆரம்பித்தது. ஆனால் வரலாறு மட்டுமே இந்த போலி வாதத்தை வலுவிழக்கச் செய்ய முடியும்.

நிகழ்த்தப்பட வேண்டிய அழிவுகள் அனைத்தும் முன்பே நிகழ்த்தப்பட்டுவிட்டன. வெளிப்படுத்தப்பட வேண்டி இன்று தூண்டி விடப்பட்டிருக்கும் குரூரங்களை இந்த தேசம் முன்பே சந்தித்து முடித்து விட்டது. காயம் ஆற, ஆற குதறப்படும் மனிதாபிமானமற்ற செயல்கள் பல முறை நடந்தாயிற்று. இனியாவது இணைந்து வாழ்வதைப் பற்றி சிந்திக்கலாம் என்ற புரிதலை இந்த வரலாற்றுப் பார்வைதான் உருவாக்க முடியும். நாவலில் இந்த நோக்குடன்தான் வரலாற்று உண்மைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாவலில் லக்ஷ்மி என்ற ரசியாவும் இதையேதான் சொல்கிறாள். இந்த வரலாற்று உண்மைகளை நாவல் பேசும்போது அதை ஒரு மதத்தின் மீதான தாக்குதலாகக் கொள்வது தவறான புரிதலே. இன்னும் சொல்லப்போனால் இன்றைய இந்திய இஸ்லாமியர்களை இந்த நாவல் குற்றம் சாட்டவேயில்லை. அப்படிப் பேசுபவர்கள் உண்மையிலேயே இரு தரப்பின் பொதுப்புரிதலை அடிமனதில் வெறுப்பவர்கள். அப்படி ஒரு புரிதல் நிகழத் தொடங்கினால் அவர்களது முற்போக்கு சிம்மாசனம் சரிந்து விடுவதைத் தாங்க முடியாதவர்கள்.

இரண்டாவதாக,இந்த நாவல் இந்துத்துவம் பேசுகிறது, அதனாலேயே அபாயகரமான ஒன்று என்ற விவாதம். கர்நாடகத்தின் அனைத்து முற்போக்காளர்களும் இந்த வரியைக் கொண்டுதான் இப்படைப்பின் மீதான பேச்சையே தொடங்கினார்கள். மெய்யாகவே இந்த நாவல் பேசுவது இந்துத்துவம் தானா? இந்த வாதத்தைப் போன்ற அபத்தம் வேறேதுவும் இல்லை. உலக அளவில் எழுதப்பட்ட பல் நாவல்களின் பேசுபொருள் தோல்வியால் துவண்டவர்களின் வரலாறே. எந்த நிலையிலும் ஒரு படைப்பாளி பாதிக்கப்பட்ட தரப்பில் தன்னை நிறுத்தியே படைப்புகளை உருவாக்குவான்.வெற்றி வரலாறுகள் என்றுமே இலக்கிய மதிப்பு பெற்றதில்லை.

சீன ஜப்பானிய போர் தோல்விகள், மங்கோலிய சீன யுத்தத் தோல்விகள், ஆங்கிலேய செவ்விந்தியப் போராட்டங்கள், பிரான்ஸ் ரஷியப் போர்கள் , ரஷியாவின் இனக்குழு போராட்டங்கள் என்று உலகம் முழுவதும் வரலாற்று அடிப்படை இலக்கியங்கள் வெல்லப்பட்டவனின் அவல நிலையையே பேசத் தலைப்படுகின்றன. தோல்வியுற்றவனின் வேதனை மதம், இனம், சாதி, மொழி கடந்தது. படைப்பாளி மானுட உணர்வுடன் அதைப் பார்க்கிறான். அதற்கு மதச் சாயம், சாதி வண்ணம் பூசுவதெல்லாம் தம்மைத் தாமே உயர்த்திப் பிடிப்பவர்களின் விளம்பர மோகம்தான்.

இந்த வகையில் இந்திய நாடுகள் இஸ்லாமிய நாடுகளுடனான போர்களில் அடைந்த தோல்விதான் உலகிலேயே மிகக் குறைவாக பேசப்பட்ட அல்லது பேசவே படாத இலக்கியம். இலக்கியத்தை விடுங்கள், கருத்து அளவில் கூடஇந்த தேசத்தின் தோல்விகள் விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. மாறாக அப்போதைய சமூக சூழலில் இயல்பான ஒன்றாகவும், இன்றைய சமூக சூழலில் தவறென்று ஒதுக்கப்பட்ட ஒரு விஷயத்தையும் எடுத்துக் கொண்டு , அன்றிலிருந்தே அடக்குமுறை, நசுக்குமுறை என்று மட்டும் பேசத் தலைப்படுவார்கள். தோற்றவர்களுக்கும் சொல்ல ஒரு வரலாறு உண்டு என்பது இந்த நாட்டுக்கு மட்டும் பொருந்தாது போல.

இலக்கியப் படைப்பாக இந்த நாவலைச் சொல்வதென்றால் இன்னும் முழுமை அடையாத ஒரு வடிவமாகவே படுகிறது. பைரப்பாவின் முந்தைய படைப்புகளோடு ஒப்பிட்டால் கதைமாந்தர்களின் மனவோட்டம், அதன் முரண்கள் இன்னும் விளக்கப்பட்டிருக்கலாம்தான். இருப்பினும், இந்த நாவல் பேசத் துணிந்த பொருள் , அதன் மீதான படைப்பாளியின் நீதியுணர்ச்சி , படைப்பின் நோக்கத்தை பூசி மெழுகாத நேர்மை ஆகியவற்றால் இந்தியாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக இணைகிறது. தமிழில் “திரை’ எனும் தலைப்பில் ஜெயா வெங்கட்ராமனால் மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இந்திய ஞான மரபு, சமஸ்க்ருதம் ஆகியவற்றில் விரிவான அறிவு பெற்ற பைரப்பாவின் மொழி நுட்பமான வேறுபாடுகளை உள்ளடக்கியது. அந்த கவனம் மொழி பெயர்க்கப்படும்போது சற்று விலகி நிற்பதாகப் படுகிறது.

வரலாறு என்றுமே சார்பற்றது. அதன் வழி மானுட சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியது முந்தைய தவறுகள் மறுபடி நிகழ்த்தப்படக் கூடாது என்பதையே. ஆனால் வரலாறு தன்னையே மீள நிகழ்த்தும் என்பதை தவறான முன்னுதாரணமாக்குவது நடுவிலிருக்கும் சிலரே.திறந்த மனதுடன் இப்படைப்பை அணுகுபவர் யாரானாலும் அவரது நீதி உணர்வை இப் படைப்பு அசைத்துப் பார்க்கும் என்பதே உண்மை.

தமிழில் வாசிக்க:

திரை
எஸ்.எல். பைரப்பா (தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்)
விஜயபாரதம் பதிப்பகம்
12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31,
பக்கங்கள்: 470
விலை: ரூ 250.

இணையம் மூலம் இங்கு வாங்கலாம்.

ஆங்கிலத்தில் வாசிக்க:

Aavarana : The Veil
Author: S. L. Bhyrappa
Translated by Sandeep Balakrishna
Length: 400 pages
Rupa Publications India
Price: Rs. 300 (paperback)

You can buy online from here.

(கட்டுரை ஆசிரியர் தீவிர இலக்கிய வாசகர். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நண்பர்களால் ஜாஜா என்று செல்லமாக அழைக்கப் படுபவர்)

வன்முறையே வரலாறாய்…37

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் இன்றும் சவுதி அரேபியா, சூடான், மொரிஷியானா போன்ற இஸ்லாமிய நாடுகளில் நிலவுகிறது. இதற்கு ஆதாரமாக ராய்ட்டர் செய்தி ஸ்தாபனம் “Slavery Still Exists in Mauritiana” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டிலிருந்து சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

“……அவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்படவில்லை; அல்லது அவர்களின் உரிமையாளர்களால் உடலின் எந்தபாகத்திலும் சூட்டுக்கோல் கொண்டு அடையாளமிடப்படவில்லை; இருப்பினும் அடிமைகள் மொரிஷியானாவில் இன்னும் இருக்கிறார்கள். சூரியன் சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில் ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டோ அல்லது மொரிஷியானாவின் நுவாக்ச்சோட்டில் (Nouakchott) விலையுயர்ந்த கார்பெட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட செல்வந்தர்களின் வீடுகளில் புதினா கலந்த தேயிலையை விருந்தினர்களுக்கு வழங்கிக் கொண்டோ இருக்கும் அந்த அடிமைகள் அவர்களின் உரிமையாளர்களுக்குப் பரம்பரை, பரம்பரையாக சேவகம் செய்து கொண்டிருக்கிறார்கள்….அது போன்ற அடிமைகள் பல்லாயிரக் கணக்கானவர்கள் மொரிஷியாவில் இருப்பதாக அங்கிருக்கும் அடிமைகள் ஒழிப்பு இயக்கத்தினர் கூறுகின்றார்கள்…..அடிமையாகப் பிறந்து பின்னர் அடிமை ஒழிப்பு இயக்கத்தின் உறுப்பினராக மாறிய பவுபாகார் மெஸ்சூத் என்பவர், ‘இந்த வழக்கமானது ஒருவன் ஆடு, மாடுகளை வைத்திருப்பது போன்றது..அடிமையான ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அடிமைகளாகவே இருப்பார்கள்….’ என்கிறார்”.

Mauritanians ex-slaves walk in a suburb outside Mauritania's capital Nouakchott, November 21, 2006. They do not wear chains, nor are they branded with the mark of their masters, but slaves still exist. CREDIT: REUTERS
Mauritanians ex-slaves walk in a suburb outside Mauritania’s capital Nouakchott, November 21, 2006. They do not wear chains, nor are they branded with the mark of their masters, but slaves still exist.
CREDIT: REUTERS

இன்னொரு முக்கிய இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் இன்றளவும் அடிமைகளை வைத்துக் கொள்ளும் வழக்கம் தொடர்ந்து நடபெறுகிறது. இருப்பினும் கடுமையான இஸ்லாமிய கலாச்சார பின்னனி காரணமாக இது குறித்தான பெருமளவு தகவல்கள் வெளியே வராமல் மூடி மறைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா போன்ற ஏழை நாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் சவூதி ஷேக்குகளின் வீடுகளில் பணிப்பெண்களாக பணிபுரியச் செல்கிறார்கள். அவ்வாறு வேலைக்குச் செல்லும் அந்தப் பெண்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஏறக்குறைய அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

அவ்வாறான பணிப்பெண்களில் பெருமளவினர் அல்லா “அமைதி மார்க்கத்தினருக்கு” குரானில் அளித்த அனுமதியின்படி, அவர்களின் முதலாளிகளுக்குப் பாலியல் அடிமைகளாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். தப்பிச் செல்ல வேறு வழியின்றி வீட்டில் அடைபட்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அதன்படி நடப்பதினைத் தவிர்த்து வேறு வழியேதும் இல்லை.

சவுதி அரேபியாவிலிருந்து வந்து கொலராடோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி படித்துக் கொண்டிருந்த ஹொமைடான் அல்-துருக்கி என்பவன் அவனது பிலிப்பைன் நாட்டு வேலைக்காரியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டான். நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட்ட ஹொமைடான், தான் செய்தது இஸ்லாமிய சட்டப்படி தவறு அல்லவென்றும், அவ்வாறு நடக்ப்பது “ஒரு இஸ்லாமியனின் பரம்பரை வழக்கம்” என்றும் வாதிட்டான். அமெரிக்க நீதிபதி அவனுக்கு இருபது வருடம் சிறைத் தண்டனை விதித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார் என்பது வேறு விஷயம். ஒரு பி.ஹெச்.டி படித்த முஸ்லிமே இப்படியென்றால் உலகமெங்கும் நிறைந்திருக்கும் கல்வி அறிவற்ற முஸ்லிம்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவில் பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது,

“….எங்களிடம் பேசிய பல பணிப்பெண்கள் அவர்களின் ஆண் உரிமையாளர்களால் கற்பழிக்கப்பட்டதாலும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்ட்டதாலும் உண்டான அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத நிலைமையில் இருந்தார்கள். பெரும் துயரத்துடனும், கண்ணீருடனும் அந்தப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்தாரகள்….தாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்…..அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள்….”

இன்றும் இதுபோல பல ஆயிரக்கணாக்கான அடிமைப் பெண்கள் சவூதி அரேபியாவின் மாட மாளிகைகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொரு வருடமும் மலேஷியா, இந்தியா, ஸ்ரீலங்கா, எகிப்து, பங்களாதேஷ் போன்ற ஏழை நாடுகளுக்குப் பயணம் செய்யும் கிழடு தட்டிய, பணக்கார சவூதி ஷேக்குகள், அங்கிருக்கும் ஏழைப் பெண்களின் பெற்றோர்களிடம் சிறிதளவு பணம் கொடுத்து அந்த அப்பாவிப் பெண்களை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்த பின்னர் தங்கள் நாட்டிற்கு அழைத்துப் போவார்கள். வளமான வாழ்க்கையைக் கண்ணில் தேக்கிச் செல்லும் அந்தப் பெண் சவூதி அரேபிய வழக்கப்படி ஒரு அடிமையாக மட்டுமே நடத்தப்படுவாள்.

அடிமைகள் விஷயத்தில் சூடானின் (நுபியா) கதை இன்னும் சோகமானது. இஸ்லாமிய அடிமை வியாபாரம் சூடானில் மிகப் பழங்காலம் தொட்டே நடந்துவரும் ஒரு விஷயம். இஸ்லாமின் ஆரம்ப காலத்திலேயே ஆக்கிரமிப்பிற்கு ஆளான சூடான் 652-லிருந்து 1276-ஆம் வருடம் வரை ஒவ்வொரு வருடமும் 400 அடிமைகளை காலிஃபாக்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தது. பத்தாம் நூற்றாண்டு இஸ்லாமிய நூலான ஹுடுத் அல்-அலாம், சூடான் இஸ்லாமிய அடிமை வேட்டைக்காரர்களின் சொர்க்கமாகத் திகழ்ந்தது எனக் கூறுகிறது. அதுவே இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

1990-ஆம் வருடம் சூடானிய அடிமைகள் விடுதலைக்கு உழைத்துக் கொண்டிருந்த ஜான் எய்ப்னர் (John Eibner) அளிக்கும் சித்திரத்தின்படி, கறுப்பின பெண்களும், குழந்தைகளும் (கிறிஸ்தவ, பழங்குடி நம்பிக்கையுடைய) அரேபிய அடிமை வேட்டைக்காரர்களாலும், அரசாங்கத்தின் பாப்புலர் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் எனப்படும் பி.டி.எஃப்பினராலும் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பெண்கள் இஸ்லாமியர்களாக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுப் பின்னர் ஏதாகிலும் ஒரு முஸ்லிமுக்கு வைப்பாட்டிகளாகக்கப் பட்டார்கள். அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட இளம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு ஜிகாதிகளாக மாற்றப்பட்டார்கள்.

சூடானில் பல ஆண்டுகள் பணி புரிந்த ஜான் எய்ப்னர், 1999-ஆம் வருடம் மட்டும் இவ்வாறான 1,783 அடிமைகளை விடுவித்தார். பிற அமைப்புகள் 1945-ஆம் வருடம் துவங்கி 1999-ஆம் வருடம் வரை ஏறக்குறைய 15,447 சூடானி அடிமைகளை விடுவித்ததாக பதிவு செய்திருக்கின்றன. சூடானை பல காலம் ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் கூட இதனைத் தடை செய்ய இயலவில்லை. அந்த அளவிற்குப் பரவலான ஒரு வழக்கமாக இருந்திருக்கிறது. இஸ்லாமிய வடக்கு சூடானியர்களால் இந்த அடிமை வியாபாரத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தெற்கு சூடானில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், பழங்குடியினரும்தான்.

மேற்குலகில் வாழப்போன சவூதிகளும் பிற செல்வந்த நாடுகளின் முஸ்லிம்களும் தங்களின் தேவைகளுக்கென அடிமைகளை இறக்குமதி செய்தி கொள்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமளிக்கும் ஒரு செய்தி. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் சவூதி, சூடானிய நாட்டினர் தங்களிம் பணிப்பெண்களை அடிமைகளாக நடத்தியதன் காரணமாகப் பல வழக்குகள் இன்றைக்கு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

Slave: My True Story என்னும் சுயசரிதைப் புத்தகத்தை எழுதிய மென்டே நாசர் (Mende Nazer) என்னும் பெண்மணி, 1992-ஆம் வருடம் சூடானின் நுபா மலைப்பகுதியில் அரேபிய அடிமை வேட்டைக்காரர்களால் பிடிக்கப்பட்டவர். அவ்வாறு பிடிக்கப்பட்ட அந்தப் பெண் முதலில் கார்ட்டும் (Khartoum) நகரில் வாழ்ந்த ஒரு பணக்கார அரேபியர்களுக்கு அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் லண்டனில் வாழ்ந்த ஒரு சூடானிய தூதரக அதிகாரிக்குப் பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து 2002-ஆம் வருடம் தப்பிய மென்டே நாசர், பிரிட்டனில் அகதியாக அடைக்கலம் புகுந்தார்

அமைதி மார்க்கத்தினர் தங்களின் அடிமைகளை நடத்தும் போக்கினைக் குறித்து National Reviews பத்திரிகைத் தகவல் ஒன்று இப்படிச் சொல்கிறது,

“ஐந்து வருடங்களுக்கு முன்னர் சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – இவர்களில் அப்போதைய சவுதி அரசரான ஃபகாத்தின் சகோதரியும் ஒருவர் – லண்டனில் தங்களிடம் வேலை செய்த ஒரு பிலிப்பைன் நாட்டுப் பணிப்பெண்ணைக் கொடுமைப்படுத்தியதாகச் சர்ச்சையில் சிக்கினர். சவுதி அரச குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகக் கொடுமைப்படுத்தியதுடன், உணவேதும் அளிக்காமல் பட்டினி போட்டு ஒரு அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டினார் அந்தப் பணிப்பெண்”

அமெரிக்காவில் வசிக்கும் சவுதி அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பெண்களின் நிலைமையை விளக்கும் அமெரிக்க அதிகாரபூர்வ தகவலொன்று,

Maid  abused in Saudi  Arabia
Maid abused in Saudi Arabia

“….சவுதி அரேபிய வீடுகளில் பணிபுரியும் பெண்கள் ஏழு விதமான சூழ் நிலையைச் சந்திக்கிறார்கள்: அவர்களின் பாஸ்போர்ட் சவுதிகளால் பிடுங்கி வைத்துக் கொள்ளப்படுகிறது; அவர்களின் வேலைக்கான ஒப்பந்தம் பணிப்பெண்ணின் சம்மதமில்லாமல் அவர்களின் உரிமையாளர்களால் இஷ்டம் போல மாற்றப்படுகிறது; ஓய்வு ஒழிச்சலற்ற பல மணி நேர வேலை; எந்த விதமான மருத்துவ உதவியும் பணிப்பெண்களுக்கு அளிக்க மறுக்கப்படுகிறது; கீழ்த்தரமான வசைகளும், உடல் ரீதியான துன்பங்களும் மற்றும் சிறையைப் போன்ற சுதந்திரமற்ற சூழ் நிலையும்….நாங்கள் பேசிய எல்லாப் பெண்களும் அமெரிக்காவிலேயே பணிபுரிந்தார்கள்…அவர்களில் சிலர் முதலில் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தவர்களாகவும் இருந்தார்கள்….இந்த இரண்டு நாடுகளில் பணி புரிந்த பெண்களின் நிலைமையிலும் எந்தவிதமான மாற்றங்கள் இல்லை…..” என்கிறது.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளிலேயே இவர்கள் இப்படியென்றால், இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று கற்பனை செய்யவே உடல் கூசுகிறது.

அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது நபியின் காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. மேற்கத்திய நாடுகளுக்கு வாழப்போன இஸ்லாமியர்கள் இன்றும் இதனையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இஸ்லாமிய காலிபேட் அமைக்கத் துடிக்கும் மேற்கத்திய ஜிகாதிகள் எண்ணிக்கையில் பெருகி வருவது கவலைக்குரிய ஒன்றே.

“இறை தூதர்” முகமது குறித்துக் கார்ட்டுன் வெளியிட்ட டேனிஷ் செய்திப் பத்திரிகையை எதிர்த்து முஸ்லிம்கள் இலண்டனில் நடத்திய ஊர்வலத்தில் “தங்களை டென்மார்க்கிற்கு அனுப்பி அவர்களின் பெண்களின் மனைவிகளையும் ஜிகாதி வெற்றிப் பரிசாகப் பிடிக்க வேண்டும்” என்று சத்தமிட்ட ஒரு முஸ்லிம், “கைபாரில் முகமது யூதர்களுக்கு எதிராக நடத்தியதை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றது இஸ்லாமியர்களின் அடிமை பிடிக்கும் மனோபாவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டே.

(முற்றும்)

 இந்தத்  தொடர் இப்பகுதியுடன் நிறைவு பெறுகிறது. 

வன்முறையின் வரலாறு  அடுத்தடுத்த தொடர்களில் மீண்டும் தொடரும். 

வன்முறையே வரலாறாய்…36

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான். வரலாற்றாசிரியர்களால் பெருமளவிற்கு உதாசீனப்படுத்தப்பட்ட இந்த வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களினால் கண்மூடித்தனமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றளவும் இம்மாதிரியாக காயடிக்கும் வழக்கம் இஸ்லாமிய உலகில் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையே. ஆனால் இந்தக் காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்ய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யூதர்களையும் மற்ற காஃபிர்களையும் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். எந்தவொரு மனித உறுப்பையும் சிதைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்னும் பாவனையுடன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் “அமைதி மார்க்கமான” இஸ்லாமின் பெயரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொலை செய்யப்படுவது முகமது நபியின் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம். சுவனத்திலிருந்து அல்லா அருளிய சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட குற்றமிழைத்தவர்களின் (உதாரணமாக, திருட்டு) கைகளையோ அல்லது கால்களையோ தயக்கமின்றி வெட்டி வீழ்த்தும் “அமைதி மார்க்கத்”தினருக்கு, அவர்கள் பிடித்த அப்பாவி ஆண் அடிமைகளைக் காயடிக்கையில் மட்டும் அல்லாவின் “மனித உறுப்பைச் சிதைக்கக் கூடாது” என்னும் புனிதச் சட்டம் நினைவுக்கு வந்துவிடும்.

இருப்பினும் காயடிக்கப்பட்ட அலிகளை (eunuch) தங்களுக்குச் சேவகம் செய்ய வைத்துக் கொள்ள நம்பிக்கையாளர்களுக்கு அல்லா சகலவிதமான அனுமதிகளையும் வழங்கியிருக்கிறான் என்பதே முற்றிலும் உண்மை. உடல் முழுக்க மறைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்படி இஸ்லாமியப் பெண்களுக்குக் கட்டளையிடும் அல்லா, அவர்கள் யார், யாருக்குத் தங்களின் முகங்களைக் காட்டலாம் எனக் குரானில் விவரிக்கையில்,”…..உடலுறவு இச்சையின்றி பெண் தேவையில்லாத ஆண் வேலைக்காரர்களுக்கும் (குரான் 24:31)….” அவள் தன் முகத்தைக் காட்டலாம் என அனுமதி வழங்குகிறான். “இறை தூதர்” முகமது நபியே இது போன்ற அலிகளைப் பரிசாகப் பெற்றதாக ஹடித்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

the_mughal_harem_idi629இவ்வாறு காயடிக்கப்பட்டவர்கள் பொதுவாக அழகான, இளவயதுடைய சிறுவர்களே. அது போன்ற சிறுவர்களுக்கு இஸ்லாமிய உலகின் ஆட்சியாளர்களுக்கும், அங்கிருந்த செல்வந்தர்களுக்கும் மத்தியில் பெரும் தேவை இருந்தது. இதற்குக் காரணமாக மூன்று அடிப்படைக் காரணங்களைச் சொல்லலாம். முதலாவது, ஒவ்வொரு இஸ்லாமிய ஆட்சியாளுக்கும் பெரும் ஹராம் (அந்தப்புரம்) இருந்தது. அதில் ஆயிரக்கணக்கான அடிமைப் பெண்களும், அவர்களின் மனைவியர்களும் இருந்தார்கள். இப்படி ஏராளமனான பெண்களை அவர்களுக்குக் கொடுத்த அல்லா, அவர்கள் அத்தனை பேர்களையும் உடல் ரீதியாகத் திருப்திப் படுத்தும் சக்தியை அளிக்க மறந்து போனான். எனவே, அந்தப்புரத்திலிருந்த பெண்கள் தங்களின் இச்சைகளை முழுவதும் தீர்த்துக் கொள்ளவியலாத நிலைமையில் இருந்தார்கள். அத்துடன், தங்களது உரிமையாளன் அல்லது கணவன் பிற பெண்களுடன் கொட்டமடிப்பதுவும் அந்தப் பெண்களுக்கு பெரும் எரிச்சலையே கொடுத்திருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் தங்களின் ஆண் அடிமைகளுடன் அல்லது பிற ஆண்களுடன் உடலுறவு கொண்டு தங்களின் இச்சைகளைத் தீர்க்கவே விழைவார்கள். இது இயற்கை.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். மொராக்கோவின் சுல்தானாக இருந்த மவுலே இஸ்மாயிலுக்குச் சொந்தமான, இன்னும் காயடிக்கப்படாத பெலோ (Pelow) என்கிற ஆண் அடிமையொருவன் சுல்தானின் மனைவியொருத்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்தப்புரக் காவலனாக நியமிக்கப்பட்டான். சுல்தானுக்கு மிகவும் பிரியமான அந்த மனைவி, அடிமையான பெலோ மீது மிகுந்த “கவனிப்பு” காட்டினாள். இதனைச் சுல்தான் கண்டுபிடித்துவிட்டால் தனக்கு விளையப்போகும் ஆபத்தினை உணர்ந்து கொண்ட பெலோ, “நான் மிகவும் சிரமப்பட்டு அந்தப்புரக் காவலை மேற்கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது” என அச்சத்துடன் குறிப்பு எழுதி வைத்துச் சென்றிருக்கிறான்.

எனவே, இம்மாதிரியான பெரும் ஹராமை வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சுல்தான்களும், பிற செல்வந்தர்களும் அதனை கவனித்துக் கொள்ள காயடிக்கப்பட்ட அலிகளையே பெரிதும் விரும்பினார்கள்.

இஸ்லாமிய ஆராய்ச்சியாளரான ஜான் லாஃபின் (John Laffin), “பொதுவாக கறுப்பின அடிமைகளை பெருமளவில் காயடிக்கப்பட்டார்கள். முஸ்லிம்கள் கறுப்பினத்தவர்களுக்கு உடலுறவில் அளவில்லாத ஆசையும், சக்தியும் இருப்பதாகக் கருதியதால் வந்த வினை இது” என்கிறார். எனவே, இந்தியாவிலிருந்து, ஆப்பிரிக்கா வரையிலிருந்த முஸ்லிம் நாடுகளின் அந்தப்புரங்களில் அலிகளே பெருமளவு உபயோகப்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு அந்தப்புரத்தில் பணிக்கமர்த்தப்பட்ட அலிகள், அங்கு வருவோர் போவோரைக் கண்காணித்துக் கொண்டார்கள். நடத்தை தவறி நடக்கும் பெண்களை, குறிப்பாக பிற ஆண்களுடன் உடலுறவு கொண்ட அந்தப்புரப் பெண்களைக் குறித்தான செய்திகளை உடனுக்குடன் சுல்தானின் காதுக்குக் கொண்டு செல்லும் உளவாளிகளாகவும் அவர்கள் பணி புரிந்தார்கள். எனவே, ஒவ்வொரு ஹராமிலும் ஆயிரக்கணக்கான அலிகள் தேவையாக இருந்தது.

இரண்டாவதாக, காயடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குக் குடும்பமோ அல்லது பிள்ளைகளோ பிறக்கும் வாய்ப்பே இல்லாத காரணத்தால், தங்களின் வயதான காலத்தில் அவர்களை சுல்தான் கைவிடாதிருக்கும் பொருட்டும் அந்த அலிகள் மிகக் கடுமையான, இரக்கமற்ற கண்காணிப்பினை அந்த அந்தப்புரத்தில் மீது வைத்திருந்தார்கள். உடல் இச்சையிலிருந்து முற்றிலும் விடுபட்ட அவர்கள் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தமையும் இன்னொரு முக்கியமான காரணமே.

மூன்றாவது மிக முக்கிய காரணம், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும், இஸ்லாமியச் செல்வந்தர்களுக்கும், உயரதிகாருகளுக்கும் ஓரினச் சேர்க்கையில் இருந்த மிக அதிகமான நாட்டமே. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்களைச் சுற்றிலும் காயடிக்கப்பட்ட அலிகள் அல்ல்து கில்மான் (Ghilman) என அழைக்கப்பட்ட அழகான இளம் சிறுவர்களை வைத்திருந்தார்கள். அழகான உடையணிந்து, உடலெங்கும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, பெண்மையே உருவாக நடந்து கொண்ட அவர்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் அளவற்ற காதலுடன் இருந்தார்கள். அல்லாவின் சுவனத்தில் எங்கும் நிறைந்திருக்கும் இவ்வாறான இளம் சிறுவர்களைப் பற்றி குரானின் வசனங்கள் மிக உயர்வாகக் கூறுகின்றன.

“(சுவனத்திற்குப் போகும் நம்பிக்கையாளனைச்) சுற்றிலும், அழகான, நன்கு பாதுகாக்கப்பட்ட முத்துக்களை போன்ற சிறுவர்கள் அவர்களுக்குப் பணிந்து பணிவிடை செய்வார்கள்….(குரான் 52:24)”

“அங்கே மரணமற்ற இளைஞர்கள் கழுத்து நீண்ட ஜாடிகளிலும், கோப்பைகளிலும் ஊற்று நீருடன் காத்து நிற்பார்கள்….(குரான் 56:17-18)”

மேலும்,

“செல்வ வளம் பொழியும் அல்லாவின் சுவனத்தில் ஏராளமான இளம் கன்னிகளும் (Houris), சிறுவர்களும் (Ghilman) நிறைந்திருப்பார்கள். ஹவ்ரிஸ் எனப்படும் ஒரு போதும் வயது கூடாத கன்னிப் பெண்கள் மிக நீண்ட கண்களுடனும், பருத்துத் துருத்திய முலைகளுடனும் இருப்பார்கள். இறப்பே இல்லாத, முத்துக்களை போன்ற அழகான இளம் சிறுவர்கள் தங்களின் உடலைச் சுற்றி பச்சை நிற ஆடையணிந்து, வெள்ளியிலான நகைகளை அணிந்து நிற்பார்கள்”

முகமது நபியின் காலத்திலிருந்தே இளம் சிறுவர்களின் மீதான இச்சை இஸ்லாமிய உலகில் தொடர்ந்து நடந்து வருகிற ஒன்றே. காஃலிபா அல்-அமீன் அராபிய உலகில் கில்மான்களை, அவர்களுடனான உடலுறவுத் தொடர்புகளையும் நிறுவனமாக்கிய ஒருவர். ஒரு இஸ்லாமிய நீதிபதி தனக்கென நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களை “உபயோகித்த”மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தாடியற்ற இளம் சிறுவர்களின் மீதான தங்களின் காம இச்சைகளை வெட்கமின்றிப் பல இஸ்லாமிய கவிஞர்கள் பாடிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களால் காயடிக்கப்படுவது கறுப்பினத்தவர்களின் மீது மட்டுமல்லாமல் பரவலாக எல்லா இனத்தவர்களின் மீது செய்யப்பட்டது என்பதே வரலாறு. ஆப்பிரிக்கக் கறுப்பர்களுக்கும், பழுப்பு நிற இந்தியர்களுக்கும், மஞ்சள் நிற மத்திய ஆசியர்களுக்கும் மட்டுமன்றி ஐரோப்பிய வெள்ளைர்களும் காயடிக்கப்பட்டதுதான் ஆச்சர்யம். மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் ப்ராக் மற்றும் வெர்டுன் (Prague and Verdun) பகுதிகள் வெள்ளையர்கள் காயடிக்கப்படும் முக்கிய இடமாகவும், மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடலுக்கருகிலிருக்கும் காரஸோன் மஞ்சள் நிறத்தவர்கள் காயடிக்கப்படும் ஸ்தலமாகவும் இருந்திருக்கின்றன. முக்கியமாக இஸ்லாமிய ஸ்பெயின் அதிகமாக வெள்ளை நிற அலிகளின் உற்பத்திக் கேந்திரமாக இருந்திருக்கிறது.

காலிஃபா அல்-முகாதிர் (908-937) அவரது பாக்தாத் அரண்மனையில் மட்டும் 11,000 அலிகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது. அவர்களில் ஏழாயிரம் பேர்கள் கறுப்பர்கள் எனவும், நான்காயிரம் பேர்கள் வெள்ளையர்கள் (கிரேக்கர்கள்) எனவும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

***

The Gate of the Harem · A painting by Jean Lecomte du Nouÿ, Year: 1896
The Gate of the Harem · A painting by Jean Lecomte du Nouÿ, Year: 1896

முகலாய அரசனான ஜஹாங்கீர் காலத்தில் பெருமளவிலான காயடிப்புகள் வங்காளத்தில் நிகழ்ந்ததாகவும், பின்னர் இந்தியா முழுவதும் ஒரு பொது வழக்கமாக மாறியதாகவும் வரலாறு. பக்தியார் கில்ஜி 1205-ஆம் வருடம் வங்காளத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் கைப்பற்றப்பட்டவர்களைக் காயடிப்பதும், அவ்வாறு காயடிக்கப்பட்டவர்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதுவும் பெருமளவு நடந்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், குப்ளாய்கானின் அரசவையிலிருந்து வெனிசுக்குத் திரும்பும் வழியில் வங்காளத்தை அடைந்த மார்கோ-போலோ, வங்காளம் அலிகளின் பெரும் உற்பத்தி ஸ்தலமாக இருந்ததைக் காண்கிறார். அதே நேரத்தில் அவரைப் போலவே வங்காளம் சென்ற பிற நாட்டுப் பயணிகளான துராத்தே பர்போஸா மற்றும் ஃப்ரான்கோஸ் பையார்ட் போன்றவர்களும் அதனையே உறுதி செய்கிறார்கள். 1590-ஆம் வருடம் எழுதப்பட்ட அய்ன்-இ-அக்பரியும் இதனைப் பதிவு செய்கிறது.

1659-ஆம் வருடம் கோல்கொண்டாவில் ஏறக்குறைய 22,000 இந்து காஃபிர்கள் அவுரங்கசீபினால் காயடிக்கப் பட்டார்கள். ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறான். அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000 அடிமைச் சிறுவர்களும், முகமது துக்ளக் 20,000 சிறுவர்களையும், ஃபிரோஸ் துக்ளக்கிடம் 40,000 சிறுவர்களும் இருந்திருக்கிறார்கள். அலாவுதீனின் புகழ்பெற்ற படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு அலியே.

சுல்தான் குத்புதீன் முபாரக்கின் வலது கரமாக இருந்த குஸ்ரூ கானும் ஒரு காயடிக்கப்பட்டவரே. மத்தியகால இஸ்லாமிய அறிஞர்களான ஃபெரிஸ்டா, கொண்டாமிர், மின்ஹாஜ் சிராஜ், ஜியாவுதீன் பரானி போன்றவர்கள் அவர்களது காலத்தில் வலிமையுடனிருந்த சுல்தான்கள் – முகமது கஜினி, குத்புதீன் ஐபக், சிக்கந்தர் லோடி போன்றவர்கள் – சிறுவர்கள் மீது கொண்டிருந்த அபரிமிதமான இச்சைகளைக் குறித்துத் தெளிவாகவே எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

சுல்தான் முகமது என அறியப்படும் முகமது கோரி அவனது படைத்தலைவர்களில் ஒருவனாயிருந்த “ஹிந்து திலக்கின்” மீது கொண்டிருந்த காதல் அளவில்லாதது என்றே மேற்கூறிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

***

இந்தக் கட்டுரைப் பகுதி சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். அதைக் குறித்து எதுவும் செய்வதற்கில்லை. வரலாற்றினை எழுதுகையில் அதன் அத்தனை கோர முகங்களையும் மூலநூல் ஆசிரியர் எம்.ஏ.கான் அவர்கள் எழுதியுள்ள படி முடிந்தவரை வெளிக்காட்டுவதே உசிதமானது என்பது எனது தாழ்மையான கருத்து. இதுபோலவும் மனிதாபமற்ற கொடுஞ்செயல்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…35

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

இஸ்லாமியர்களால் கைப்பற்றப்பட்ட இந்து மற்றும் பிற காஃபிர் பெண் அடிமைகள் அவர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக்கப் பட்டார்கள். அவர்களில் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் பெண் அவளது முஸ்லிம் உரிமையாளனுடன் உடலுறவு கொள்ளவது கட்டாயமானது. இப்படியாக அந்த அடிமைப் பெண்கள் வீட்டுவேலைக்கும், வேண்டும் போது உடலுறவு கொள்வதற்கும் பயன்பட்டது மட்டுமன்றி முஸ்லிம்களின் ஜனத்தொகையை உயர்த்தவும் உபயோகிக்கப்பட்டார்கள். அந்த காஃபிர் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைகள் முஸ்லிம்களாக வளர்க்கப்பட்டார்கள்.

பாலியல் அடிமைத்தனம் என்பது இஸ்லாமில் மிகவும் சாதாரணமான ஒன்றல்ல. இவ்வாறு பாலியல் அடிமைகளைக் கைப்பற்றுவது குறித்து நம்பிக்கையாளர்களுக்கு அல்லா குரானில் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொண்டே இருப்பதனைக் காணலாம். முகமது நபியே மூன்று அழகான அடிமைகளைத் தனது வைப்பாட்டிகளாக வைத்திருந்ததார். ஜுவாரியாவைச் சேர்ந்த பானு முஸ்டாலிக், பானு குரைஸா சாதியைச் சேர்ந்த ரய்ஹானா மற்றும் எகிப்திய கவர்னரால் அனுப்பி வைக்கப்பட்ட மரியா (முகமது அந்த கவர்னரை மிரட்டிக் கடிதம் எழுதியதால் அவரை சமாதானப்படுத்தும் வகையில்) என மூன்று அடிமைகளை வைப்பாட்டிகளாக வைத்திருந்ததாக முகமது நபியின் சீடரான புகாரி கூறுகிறார்.

அத்துடன் முகமது அவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான அடிமைப் பெண்களை, வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ள என அவரது சீடர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவரது மருமகனான அலிக்கும் (நான்காவது காலிஃபா), உத்மான் அஃபான் (மூன்றாவது காலிஃபா) மற்றும் அவரது மாமனாரான ஒமார்-பின்-கத்தாப்பிற்கும் (இரண்டாவது காலிஃபா) தலா ஒன்று அடிமைப் பெண்களைப் பகிர்ந்தளித்த சம்பவமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெண்களை அடிமைகளாகப் பிடிப்பது பற்றிக் கூறும் குரானின் 23:5-6 வாசங்கங்களை விளக்கும் சையத்-அப்துல்-அலா-மவ்தூதி, “குரான் இரண்டு வகையான பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை மறைத்துக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கிறது. முதாலவது, மனைவிகள். இரண்டாவது, முஸ்லிமால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண்கள். இப்படியாக குரானின் 23:5-6-ஆம் வசனம், ஒரு முஸ்லிம் தனது மனைவியரிடம் உடலுறவு கொள்ளும் அதே உரிமையை அவன் திருமணம் செய்து கொள்ளாத, அவனுக்குச் சொந்தமான அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளத் தெளிவாக அனுமதியளிக்கிறது. ஒரு முஸ்லிமிற்குத் திருமணம் நடக்கையில் அவனது மனைவிகளுடன் அந்த அடிமைப் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களைக் குறித்துத் தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை”.

islamic-womens-slave-marketஹெடாயா சட்டங்கள் நடைமுறையில் இருந்த இஸ்லாமிய நாடுகளில் இந்த அடிமைப் பெண்கள் “சேர்ந்து வாழ்வதற்கும், குழந்தைகள் பெறுவதற்கும்” மட்டுமே உபயோகப்படுத்தப் பட்டார்கள். ஒரு அடிமைப் பெண்ணை அடிமைச் சந்தையில் வாங்குவதற்கு அவளது அழகும், எவ்விதமான உடற்குறைபாடுகளும் இல்லாதவளாக இருப்பதுவே முக்கியமானது. இஸ்லாமிய ஹெடாயா (Hedayah) சட்டத்தின்படி வாய் துர்நாற்றமடிக்காத, அக்குள்களில் வாசமடிக்காத அடிமைப் பெண்களையே விலைக்கு வாங்க வேண்டும் என்று கூறுகிறது. ஆண் அடிமைகளுக்கு இந்தக் கட்டாயம் ஏதுமில்லை. இதனை மேலும் விளக்கும் ஹெடாயா, ஒரு பெண் அடிமையானவளை இரண்டு முஸ்லிம்கள் பகிர்ந்து கொண்டாலும், அவள் அவர்களில் ஒருவனுக்கு மட்டுமே உரிமையானவள் எனவும், மற்றவன் அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டுமெனில் உரிமையாளனின் அனுமதியை பெற வேண்டும் என்று கூறுகிறது.

ஃபாத்வா-இ-ஆலம்கிர், ஒரு முஸ்லிம் அடிமைச் சந்தையில் விலைக்கு வாங்கிய பெண்ணுக்கு மிகப் பெரிய முலைகள் இருந்தாலோ அல்லது தளர்வான யோனியோ இருந்தால் அவன் அவளை மீண்டும் வாங்கியவனிடமே திருப்பித் தர உரிமை உண்டு என்று கூறுகிறது. அவன் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த பணம் மீண்டும் அவனுக்கே திருப்பியளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. கன்னி கழியாகத (virgin) பெண்ணை வாங்கிய முஸ்லிம் ஒருவன், அந்தப் பெண் கன்னியல்ல என்று கண்டுபிடித்தால் அவனுக்குப் பணம் திருப்பியளிக்கப்பட வேண்டும் என்கிறது ஃபாத்வா-இ-ஆலம்கிர்.

இவ்விதமாகப் பெண்களை இழிவுபடுத்தித் தேர்ந்தெடுக்கும் முறையானது முகமது நபியிடமிருந்தே வந்தது என்பதினை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். போரில் கைப்பற்றப் படும் அழகான பெண்களைத் தனக்கென வைத்துக் கொள்ளும் வழக்கமுடையவர் முகமது நபி. கைபார் போரின் போது, அந்த நகரைச் சேர்ந்த கினானா என்பவனின் மனைவியான சஃபியாவின் அழகினைப் பற்றி கேள்விப்படும் முகமது நபி, அவளைத் தனக்கு மட்டுமே உரிமையாகத் தகுதியானவள் என்று நினைத்தார். எனவே, கைபார் போரில் சஃபியாவை பிடித்து வைத்துக் கொண்ட முகமதுவின் சீடனான இன்னொரு ஜிகாதியிடமிருந்து அவளைப் பிடுங்கிக் கொண்டார் முகமது.

இன்னொரு போரில் முகமது பிடித்த ஹவாஸின் பழங்குடிப் பெண்களைத் தனது சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார் முகமது. அந்த நேரத்தில் ஹவாஸின் பழங்குடியைச் சேர்ந்த தூதுவர்கள் முகமதை அனுகி அந்தப் பெண்களை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுத்தார்கள். ஒவ்வொரு பெண்ணுக்க்கு ஆறு ஒட்டகங்கள் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொல்கிறார் முகமது.

ஆனால் முகமதுடன் வந்த இன்னொரு ஜிகாதியான உயானா-பின்-ஹஸ்ன் என்பவன் அவனால் பிடிக்கப்பட்ட ஒரு உயர் வர்க்கப் பெண்ணை விடுதலை செய்ய மறுத்தான். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் இன்னும் அதிக விலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஜுபைர்-அபு-சுராத் என்பவன், உயானா-பின்-ஹஸ்னிடம் சென்று “அவளின் வாய் ஜில்லிட்டுக் கிடக்கிறது; மார்போ முலைகளின்றி தட்டையாக இருப்பதுமன்றி அவளால் கர்ப்பம் தரிக்கவே இயலாது….மேலும் அவளது பால் அத்தனை உசத்தியானது இல்லை” என்று சொல்கிறான். இதனைக் கேட்டு வெறுத்துப் போன உயானா, முகமதின் இன்னொரு கூட்டாளியான அல்-அக்ரா என்பவனிடம் சென்று இதனைக் குறித்துக் கேட்க, “அல்லாவின் மீது ஆணையாக, நீ அவள் கன்னியாக இருக்கையில் கைப்பற்றவில்லை; அதனையும் விட உடலழகு கூடிய மத்திய வயதுக்காரியாகவும் அவள் இல்லையே” என்று கூறுகிறான்.

பெண் அடிமைகளைத் தங்களின் இன்பத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதைக் குரானும், சுன்னாவும், ஷரியாவும் முழுமையாக அங்கீகரிக்கின்றன. எனவே இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இஸ்லாமிய இமாம்களும், முல்லாக்களும், ஜிகாதிகளும் அதனைக் குறித்து எவ்விதமான நாணமுமின்றி வெளிப்படையாகக் கூறிக் கொண்டு திரிவதைக் காணலாம். அவர்களைப் பொருத்தவரை அவ்வாறு செய்வது அல்லாவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. “இறை தூத”ரான முகமது நபியே அதற்கு உதாரண புருஷர்.

islam-women-jihad-slaveryஜிகாத் செய்து காஃபிர்களைக் கொள்ளையடிப்பதால் கிடைக்கும் செல்வத்துடன் மட்டுமன்றி, அவர்களின் பெண்களும் தங்களுக்குக் கிடைப்பார்கள் என்னும் ஆசையே முகமதின் சீடர்களை அன்று முதல் இன்றுவரை ஜிகாதிகளாக்குகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை. இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஒரு காஃபிரைக் கொன்ற முஸ்லிம் கொல்லப்பட்ட காஃபிரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவனது சொத்துக்களுக்கு உரிமையாளனாகிறான்.

ஒரு நம்பிக்கையாளன் இத்தனை பாலியல் அடிமைப் பெண்களை மட்டுமே தனக்கென வைத்துக் கொள்ள வேண்டுமென எந்த அளவும் சொல்லவில்லை. அவன் எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இதனை உதாரணமாகக் கொண்டு நடந்தவர்கள். அக்பரின் ஹராமில் (அந்தப்புரம்) ஏறக்குறைய 5000 அடிமைப் பெண்கள் இருந்தார்கள். ஜஹாங்கீரும், ஷாஜஹானும் தலா 5000 மற்றும் 6000 அடிமைப் பெண்களை தங்களின் சொந்த உபயோகத்திற்கென வைத்திருந்தார்கள்.

அவுரங்கசீப்பின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த இத்தாலியரான நிக்காலோ மனூச்சி (Niccolao Manucci) பெண் பித்துப் பிடித்தலையும் இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார், “எல்லா முஸ்லிம்களும் பெரும் பெண் பித்தர்களாக இருந்தார்கள்; அவர்கள் அடைந்த ஒரே ஒரு இன்பம் அது மட்டுமே” என்கிறார்.

டச்சுக்காரரான ஃப்ரான்ஸிஸ்கோ பெல்சார்ட் (Francisco PelSaert) ஜஹாங்கீரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர். முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகளின் ஹராம்கள் குறித்தும் அவர்களின் பெண் வேட்கையைத் தெளிவாகப் பதிவு செய்கிறார் ஃப்ரான்ஸிஸ்கோ,

“….ஒவ்வொரு இரவும் அமீர் அவரது குறிப்பிட்ட மனைவி வசிக்கும் மஹாலை (இருப்பிடம்) செல்வார். அங்கிருக்கும் அந்த மனைவியும், அழகான ஆடைகள் அணிந்த அடிமைப் பெண்களும் அவரை அன்போடு வரவேற்பார்கள்…அது கோடைக்காலமாக இருந்தால் அமீரின் மார்பில் அரைத்த சந்தனத்தையும், பன்னீரையும் அடிமைப் பெண்கள் பூசுவார்கள்…மஹாலின் விசிறிகள் தொடர்ந்து வீசப்பட்டுக் கொண்டிருக்கும்….சில அடிமைப் பெண்கள் அமீரின் கை, கால்களை அமுக்கி விட, மற்ற சிலரோ இனிமையாகப் பாட ஆரம்பிப்பார்கள்….இசையும், நாட்டியமும் ஒலிக்கத் துவங்கும்…அமீரின் மனைவி அவனருகே அமர்ந்திருப்பாள்….அப்போது அங்கிருக்கும் ஏதாவதொரு அழகான அடிமைப் பெண்ணின் மீது அமீரின் கண்கள் பட்டால் அவளை அருகில் அழைத்துப் பின்னர் அத்தனை பேரின் முன்னிலையிலும் அவளுடன் உடலுறவு கொள்வார்….அருகில் அமர்ந்திருக்கும் அமீரின் மனைவி அது குறித்து எந்தவிதமான துயரமோ அல்லது சினமோ காட்டாமல் அமர்ந்திருப்பாள்…..அமீர் அவ்விடத்தை விட்டு அகன்ற பிறகு அந்த அடிமைப் பெண்ணை அமீரின் மனைவி சரியாக ‘கவனித்து’க் கொள்வாள்…”

Islamic-sex-slavery
இஸ்லாமிய பாலியல் அடிமைப் பெண்ணை சித்தரிக்கும் ஐரோப்பிய ஓவியம்

இருப்பினும் அந்த அழகான அடிமைப் பெண்ணை அந்தப்புரத்திலிருந்த அமீரின் மனைவி எளிதில் வெளியேற்றி விடமாட்டாள். ஏனென்றால் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்யும் உரிமை அவளின் உரிமையாளனான அமீரிடம் மட்டுமே இருக்கிறது என்னும் காரணத்தால்.

மொத்தத்தில் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் அல்லாவால் அங்கீகரிக்கப்பட்ட அடிமைகளும், வைப்பாட்டிகளும் மிகவும் மனிதத்தனமற்ற ஒரு விதமான விபச்சாரமே என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. முகமது நபியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேவலமான நடைமுறை இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 1921-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படும் வரையிலும் ஒட்டமான் அரசர்கள் தங்கள் ஹராமை அடிமைப் பெண்களால் நிறைத்து வைத்திருந்தார்கள் என்பது வரலாறு.

1954-ஆம் வருடம் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்வதற்கு முன், அரேபியர்களால் முதன் முதலில் கைப்பற்றப்பட்ட சிந்துப் பகுதியிலிருந்த பஹவல்பூரை ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டிருந்த நவாப் அவரது ஹராமில் முன்னூற்றித் தொண்ணூறுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்திருந்தார். ஆண்மையை மிகவும் இளவயதிலேயே இழந்து விட்ட பஹவல்பூர் நவாப்பானவர் தனது ஹராமிலிருந்த பெண்களைச் சந்தோஷப்படுத்த வைத்திருந்த பொருட்களைப் பற்றியெல்லாம் இங்கு எழுதிவிட முடியாது என்பதால் நாம் இத்துடன் நிறுத்திக் கொள்வோமாக.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…34

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்ன்-வராக் காஃபிர் அடிமைகளைப் பற்றிக் கூறுகையில்,

“இஸ்லாமிய சட்டப்படி கைப்பற்றப்பட்ட அடிமைகளுக்குச் சட்ட ரீதியாக எந்த உரிமைகளும் இல்லை. அவர்கள் வெறும் வியாபாரப் பொருட்கள் மட்டுமே. அவர்களை அடிமைப்படுத்திய முஸ்லிம் அந்த அடிமைகளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைச் சந்தையில் விற்கலாம். அவர்களுடன் உடலுறவு கொள்ளலாம். அதுமட்டுமல்ல அந்த அடிமைகள் வேலை செய்து சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அவர்களின் உரிமையாளனான முஸ்லிமுக்கே சொந்தம். எந்த அடிமையும் இஸ்லாமிய ஷரியா நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல அனுமதியில்லை. அந்த அடிமை முஸ்லிமாக மதம் மாறினாலும் அவனது நிலைமையில் முன்னேற்றமோ அல்லது அவன் விடுதலை செய்யப்படுவதோ நடக்கும் என்று சொல்வதற்கில்லை. அவன் மதம் மாறிய காரணத்தால் அவனை விடுதலை செய்ய அவனது உரிமையாளனான முஸ்லிமுக்கு கட்டாயமில்லை.”

islam-jihad-slavery-arabSlaveMarket

அடிமையை விலைக்கு வாங்கிய உரிமையாளன் அந்த அடிமையின் உடலின் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் அவனை அடிக்கவும், வெளிக் காயம் தெரியாத வகையில் துன்புறுத்தவும் இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது. ஃபாத்வா-இ-ஆலம்கிரியில் எழுதியுள்ளபடி, அவ்வாறு உடல் குறைபாடுள்ள அடிமையை வாங்கியவனுக்கு, அந்த அடிமையை அடித்துத் துன்புறுத்தியதால் உண்டான காயம் வெளியில் தெரியும்படியாக இல்லாதிருக்கும் பட்சத்தில், விற்றவன் முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பனிரெண்டாம் நூற்றாண்டின் கடுமையான இஸ்லாமிய சட்டமான ஹெடாயா என்றறியப்படும் ஹனாஃபி சட்டம், “திருட்டு செய்யும் ஒரு அடிமையின் கையையோ அல்லது காலையோ வெட்டுவது இஸ்லாமிய சட்டத்தின்படி தவறில்லை” என்று கூறுகிறது.

பொதுவாக இஸ்லாமிய சட்டம் அடிமைகளை நல்ல முறையில் நடத்தவேண்டும் என்று கூறினாலும், ஒரு உரிமையாளன் தனக்குச் சொந்தமான ஒரு அடிமையை அடித்துக் கொன்றாலும் அது சாதாரண மரணமாக கருதப்படவேண்டும் என்றே கூறுகிறது.

இவ்வாறு அடிமைகள் விலங்குகளைப் போல நடத்தப்படுவதால் அவர்களுக்கு உண்டாகுm மன வேதனையும், உளைச்சலும், சுய மரியாதையை இழந்து நிற்கும் அந்த அடிமையைப் பெரிதும் பாதிக்கவே செய்யும் என்பதில் சந்தேகமில்லை. காஃபிர்களை அடிமைகளாகப் பிடிக்கும் இஸ்லாமியர்கள் அவர்களை சந்தைகளிலும், நாற்சந்திகளிலும் நடக்க விட்டுக் கேவலப்படுத்து சாதாரணமாகக் காணக்கிடைத்த ஒன்று. ஒரு அரசனோ அல்லது உயர் பதவியில் இருந்த ஒருவரோ அவ்வாறு நடத்தப்படுகையில் உண்டாகும் துயரம் வார்த்தையில் அடங்காதது.

உதாரணமாக, சுல்தான் முகமது காபூலை ஆண்ட இந்து அரசனான ஜெய்பாலைக் கைது செய்து அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் கஜினியை நோக்கி நடத்திச் சென்றான். அவ்வாறு செல்கையில் அவருக்கு சுல்தான் முகமது தொடர்ந்து அவமரியாதைகள் செய்தான். கஜினியின் அடிமைச் சந்தையில் அரசர் ஜெய்பால் ஒரு சாதாரண அடிமையைப் போல விற்பனை செய்யப்பட்டார். அவரது மனைவியர், மகன்கள் மற்றும் உறவினர் முன்பு இவ்வாறு அடிமையைப் போல நடத்தப்பட்ட ஜெய்பால் வேதனையுடன் மனமுடைந்து போனார். இறுதியில் உயிர் பிழைத்து அடிமையாக வாழ்வதனை விடவும் மரணமே மேல் என்று தீயில் குதித்து இறந்து போனார்.

இந்தியாவில் மட்டுமல்லாது இஸ்லாமிய ஆட்சி நிலவிய மற்ற நாடுகளிலும் இதுவே நிகழ்ந்தது. மொராக்கோ நாட்டு சுல்தான் மவுலே இஸ்மாயில் (1727) காலத்தில், கடலில் நடத்தியதொரு தாக்குதலில் பிடிக்கப்பட்ட வெள்ளை இனத்து அடிமைகள் ஏதோவொரு மொராக்கோ நாட்டுக் கடற்கரை நகரத்துக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்களுடன் வந்த வெள்ளையரான் கேப்டன் ஜார்ஜ் எலியட் (George Elliot), அவருடைய சக வெள்ளை நிறத்தவருடன் கடற்கரையை அடைந்தவுடன் ஏராளமான குண்டர்கள் காட்டுக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைச் சூழ்ந்து கொண்டதாகவும், பின்னர் அவர்களை ஆடு, மாடுகளை நடத்திச் செல்வது போல அந்தக் கடற்கரை நகரத்தின் பல தெருக்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று எழுதுகிறார்.

அடிமைகளின் மனவேதனையை விட பசியாலும், தாகத்தாலும், நோயாலும் அடையும் துன்பமே பெரிதானது. கைப்பற்ற உடன் துவங்கும் இந்தத் துன்பம் அவர்கள் வந்தடைய வேண்டிய அடிமைச் சந்தை வரைக்கும் தொடர்ந்து வரும். அவ்வாறு அவர்கள் சென்றடைய வேண்டிய நகரமோ அல்லது அடிமைச் சந்தையோ ஆயிரம் மைல்களுக்கும் அப்பால், அவர்களுக்கு அறிமுகமே இல்லாததொரு தேசத்தில் இருக்கும். காடுகளிலும், மலைகளிலும், பனியிலும், குளிரிலும், வெயிலிலும் அவர்கள் நடத்தி அழைத்துச் செல்லப்படுவார்கள். அத்துடன் கைப்பற்றப்பட்ட அடிமைகள் அனைவரும் விற்பனை செய்து முடிக்கப்படும் வரையிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். சில சமயங்களில் இருபதிற்கும் மேற்பட்டவர்கள் அந்த அடிமைகளை வாங்கி விற்கப்பட்டிருப்பார்கள். மதத்தின் பெயரால் சக மனிதர்களுக்குச் செய்யும் இந்தச் செயல் கற்பனை செய்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவது என்பதில் சந்தேகமில்லை.

இந்த அடிமைகள் எவ்வாறு நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக மீண்டும் காபூல் அரசர் ஜெய்பாலைக் குறித்துப் பார்க்கலாம். சுல்தான் முகமதின் வரலாற்றாசிரியரான அல்-உத்பி, “அரசன் ஜெய்பாலும், அவனது மகன்கள், பேரக் குழந்தைகள், உறவினர்கள், ராஜாங்க உயரதிகாரிகள் என்று பலரும் சுல்தான் முகமதினால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவரும் உறுதியான கயிற்றால் கட்டப்பட்டு சுல்தானால் இழுத்துச் செல்லப்பட்டார்கள்…..சிலரின் கைகள் வலுக்கட்டாயமாக பின்னால் கட்டப்பட்டிருந்தன..மற்றும் சிலரின் கழுத்தைச் சுற்றிக் கயிறு கட்டப்பட்டிருந்தது…இன்னும் பலரின் கழுத்தில் தொடர்ந்து அடிக்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார்கள்….”

muslim_slave_system_in_india_ks_lalஇதில் ஒரு விஷயத்தை நாம் இங்கு கவனிக்க வேண்டும். சுல்தான் முகமது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் படையெடுத்துச் சென்று மாதக் கணக்கில் முற்றுகையில் ஈடுபட்டு வந்தவன். அந்தப் போர்களில் அடைந்த வெற்றிகள் காரணமாகப் பல இலட்சக்கணக்கான அடிமைகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகள் கயிற்றால் பிணைக்கப்பட்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த கஜினியை நோக்கி நடத்திச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு நடத்திச் செல்லப்பட்ட அடிமைகளில் பெரும்பாலோர் பெண்களும், குழந்தைகளும் என்பதினையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். கால்களுக்குச் செருப்பில்லாமல் காடுகளிலும், மலைகளிலும் நடத்திச் செல்லப்பட்ட அந்தப் பெண்களும், குழந்தைகளும் சில சமயம் மாதக் கணக்கில் பயணம் செய்ய நேரிடும். எண்ணிப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கும் செயல் இது.

இவ்வாறு பல்லாயிரக் கணக்கானவர்கள் நடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அத்துடன் செல்லும் வழியில் நோயுற்றவர்களுக்கு எந்தவிதமான மருத்துவ வசதியும் கிடைத்திருக்கும் வாய்ப்பே இல்லை. நடக்க இயலாதவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் கைவிடப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். எண்ணிப் பாருங்கள். அறிமுகமில்லாத ஒரு நாட்டில், மலையில் அல்லது காட்டில் தனது உற்றார், உறவினரை இழந்து, உணவும், நீரும் கிடைக்காமல் கைவிடப்பட்டு இறக்க நேரிடுவதைப் போன்றதொரு கொடூரம் வேறொன்றுமில்லை. அத்தனையும் மதத்தின் பெயரால் மனிதன் சக மனிதனுக்குச் செய்தான். அதையும் விட அது அல்லாவால் அளிக்கப்பட்ட ஆணை என்றும் கூறி எவ்விதமான குற்றவுணர்வும் இன்றி இவ்வன்செயல்கள் நடந்தேறின. நடந்து கொண்டிருக்கின்றன.

ராஜஸ்தானின் ஜாலூர் நாட்டை ஆண்ட இந்து அரசன் கன்ஹர்தேவாவின் மீது உலுக்-கான் பால்பனின் தாக்குதலைக் குறித்தும், அந்தப் போரில் கைப்பற்றப்பட்ட அடிமைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துயரம் குறித்தும் அதனை நேரில் கண்ட பிரபந்தா இவ்வாறு கூறுகிறார்,

“பகல் நேரங்களில் பாலைவனத்து வெயில் மண்டையப் பிளந்தது. இரவு நேரங்களிலோ திறந்து கிடந்த பாலைவனத்தின் குளிர் வாட்டி வதைத்தது. வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட, தங்களின் தாயின் முலைகளிலிருந்து பிடுங்கப்பட்ட குழந்தைகளின் அழுகைச் சத்தம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அடிமையின் துன்பமும் மற்றவனை விடவும் அதிகமாகவிருந்தது. பசியிலும், தாகத்திலும் அந்த மனிதக்கூட்டம் துடித்துக் கொண்டிருந்தது….அதற்கும் மேலாக பல நோயுற்றவர் உட்காரவியலாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காலில் அணிந்து கொள்ளப் பலருக்குச் செருப்புகள் இல்லை. மற்ற சிலருக்கோ அணிந்து கொள்ளக்கூட ஆடைகளில்லை….”

தொடரும் பிரபந்தா,

“பலரின் கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தன. இன்னும் சிலரோ தோல் பட்டைகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்தார்கள். பிள்ளைகள் தங்களின் அன்னையரிடமிருந்து பிரிந்து திரிந்தார்கள். மனைவிகள் கணவன்களிடமிருந்து….சிறிதும் ஈவிரக்கமற்ற இந்தத் தாக்குதல்களின் காரணமாக. முதியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமில்லாமல் அனைவரும் வலியாலும், பசியாலும் துடித்துக் கொண்டிருந்தார்கள்….ஏதாவதொரு அதிசயம் நிகழ்ந்துத் தங்களை இந்த இன்னல்களிலிருந்து காப்பாற்றி விடாதா என்னும் நப்பாசையுடன் பலர் கண்ணீர் சிந்திப் புலம்பியவண்ணமிருந்தார்கள்….”

கவனியுங்கள். இந்தத் துன்பமெல்லாம் கைப்பற்றப்பட்ட சிறிது நாட்களில் நடந்தவை. நாட்கள் செல்லச் செல்ல அந்த அடிமைகளின் துயரங்கள் அதிகமுறுமேயன்றி குறைவதற்கான எந்த வழியுமில்லை. இன்னும் பல ஆயிரக்கணக்கான மைல்கள் அவர்கள் நடந்து செல்ல வேண்டும். மாதக் கணக்கில் அந்தப் பயணம் இருக்கும். எண்ணிப் பார்க்கவே குலை நடுங்கும் பயங்கரமது.

இஸ்லாமிய அடிமை வியாபாரம்
இஸ்லாமிய அடிமை வியாபாரம்

இந்தியர்களுக்கும் மட்டும் நடந்த துயரமல்ல இது. ஆப்பிரிக்காவில் பிடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கறுப்பர்கள் இவ்வாறு நடத்தி வரப்பட்டார்கள். மத்திய ஆசிய நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இந்தக் கறுப்பர்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். வெள்ளையர்களும் இதில் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் ஆச்சரியம்.

1687-ஆம் வருடம், மொராக்கோ சுல்தான் மவுலே இஸ்மாயில் பிரஞ்சு நகரமான ட்ரவுடெண்டடைத் (Taroudant) தாக்கி அங்கிருந்த பலரையும் கொலை செய்தான். பின்னர் 120 பிரஞ்சுக்காரர்களை அடிமைகளாகப் பிடித்தான். அவ்வாறு பிடிக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள் குண்டாயிருப்பதாகக் கூறி ஏறக்குறைய ஒரு வாரம் வரைக்கும் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை. உணவு கேட்டு அழுது புலம்பிய அவர்களை உடனடியாக தனது தலைநகரான மெக்னஸுக்கு நடத்திச் செல்ல உத்தரவிட்டான் சுல்தான். அவ்வாறு 300 மைல்களுக்கும் மேலாக நடத்திச் செல்லப்பட்டவர்களைப் பற்றி பிரஞ்சு அடிமையான ஜான் லாடிர் (Jean Ladire) குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அதன்படி, பிரஞ்சு அடிமைகள் சங்கிலிகளினால் பிணைக்கப்பட்டு ஆட்டு மந்தைகளைப் போல ஓட்டிச் செல்லப்பட்டார்கள். நோயும், பசியும் அவர்களை வாட்டி வதைத்தன. பலர் இறந்து விழுந்தார்கள். சந்தேகப் பிராணியான தங்களின் சுல்தான், அவனுக்குத் தெரியாமல் தாங்கள் அந்த அடிமைகளை விற்று விட்டதாக சந்தேகித்து தண்டனை அளித்துவிடுவான் என்று அஞ்சிய காவலர்கள், அவ்வாறு இறந்தவர்களின் தலையை வாளினால் துண்டித்து, உயிர் பிழைத்தவர்களிடம் கொடுத்து, அதனைச் சுமந்து செல்லும்படி வலியுறுத்தினார்கள்.

ஆப்பிரிக்காவை நோக்கி நடத்திச் செல்லப்பட்ட அவர்கள் தரைக்கடியில் அமைக்கப்பட்டிருந்த மட்டமோர் (matamore) என்னும் சிறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள். காற்றுப் புகாத அந்த அறையில் அடைக்கப்பட்ட் அடிமைகளுக்குச் சிறிதளவு ரொட்டியும், நீரும் மட்டுமே வழங்கப்பட்டது. ஒவ்வொரு அடிமைச் சந்தை நாளின் போதும் உள்ளிறக்கப்படும் கயிற்று ஏணியின் உதவி கொண்டு வெளி வரும் அந்த அடிமைகள் பின்னர் விற்பனை செய்யப்பட்டார்கள். அவர்கள் அடைந்த துன்பங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் அடிமையான ராபர்ட் ஆடம்ஸ் என்பவரும் இதனைக் குறித்து விளக்கமாகவே குறிப்புகள் எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். அத்தனையையும் எழுதிட இங்கு இயலாத காரணத்தால் இதனை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…- 33

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி…

காஃபிர்களைக் கொன்று அவர்களின் மனைவியரையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனைக் குறித்து “அமைதி மார்க்க” கையேடான குரான் மிகத் தெளிவாகவே விளக்குகிறது. அடிமைகளை எப்படி நடத்துவது என்பதிலிருந்து, எந்த அடிமைக்கு எவ்வளவு பரிசு வழங்குவது வரையிலும் கூறும் குரான், அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் நடைமுறைகளையும் ஈமானிகளுக்கு எடுத்தியம்புகிறது.

irmageanmovinonsதங்களின் மனைவிமார்களுடன் உடலுறவு கொள்வதைப் போலவே ஈமானி உரிமையாளன் தன்னிடமுள்ள அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட பெண்களுடன் உடலுறவு கொள்வதற்கும் அல்லா ஆசிர்வதிக்கிறான். இதன் காரணமாக இஸ்லாமிய உலகில் அடிமைகள், மற்றும் பாலியல் அடிமைகளை வைத்துக் கொள்ளும் போக்கு தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் நடைமுறையில் இருந்தது. குரானிய ஷரியா சட்டத்தின்படி ஒரு முஸ்லிம் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகளை மட்டுமே மணந்திருக்க அனுமதிக்கப்படுகிறான். அதேசமயம், அவன் எத்தனை அடிமைப் பெண்களுடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை.

ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட. ஆனால் அந்தப் பெண் ஒரு திருமணமான முஸ்லிமாக இருந்தால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ள குரான் தடை விதிக்கிறது. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான் என்பதறிக.

இதனையே குரான் மீண்டும், மீண்டும் நம்பிக்கையாளனுக்கு வலியுறுத்துகிறது. அதற்கும் மேலாக முகமது நபி தன்னால் கைப்பற்றப்பட்ட காஃபிர் அடிமைகளை எவ்வாறு நடத்தினார் என்பதினைக் கண்டுணர்ந்து அதன்படியே நம்பிக்கையாளன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.

627-ஆம் வருடம் (627 C.E) நிகழ்ந்த அகழிச் சண்டையில் (battle of trench) பானு குரைஸா யூதர்கள் முகமது நபிக்கு எதிரான, மக்காவைச் சேர்ந்த குரைஷ்களுக்கு உதவி செய்தார்கள் என அல்லா குற்றம் சாட்டினான் (அதாவது முகமது நபிக்கு வஹி வந்தது!). எனவே கடும் கோபம் கொண்ட அல்லா, அங்கிருந்த எல்லா யூதர்களைக் கொல்லவும், அவர்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடிக்கவும் ஆணையிடுகிறான். முகமது நபி அல்லாவால் வழங்கப்பட்ட ஆணைக்கு அடிபணிந்து அதனைச் செய்து முடிக்கிறார்.

அந்தப் போரில் பிடிக்கப்பட்ட பெண்களையும், குழந்தைகளையும் தனது நம்பிக்கையாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முகமது, தனக்கென ஐந்தில் ஒரு பகுதியை வைத்துக் கொள்கிறார். இளவயதுடைய, அழகான இளம்பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப் பட்டார்கள். இறைதூதர் முகமது நபி தனக்கென ரைஹானா என்னும் இளம் பெண்ணை எடுத்துக் கொள்கிறார். அந்தப் பெண்ணின் கணவனும், குடும்பத்தினரும் அன்றுதான் முகமதின் கூட்டத்தினரால் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார்கள். முகமது நபி அன்றிரவே அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டார்.

இதுபோலவே, கைபாரில் நிகழ்ந்த போரில் வென்ற முகமது அங்கிருந்து ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகக் கொண்டு சென்றார். எனவே, முகமதின் இந்த நடவடிக்கைகளான எதிரிகளைக் கொன்று, அவர்களின் மனைவிகளையும், குழந்தைகளையும் அடிமையாக்கிய செயல்கள் முஸ்லிகளுக்கு மீண்டும், மீண்டும் உதாரணமாகக் காட்டப்பட்டு அதனைப் போலவே செய்யத் தூண்டப்பட்டார்கள். மேலும் அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகளை விற்பதின் மூலம் வருமானமும் நம்பிக்கையாளர்கள் பெற இயன்றது.

இதன் காரணமாக இஸ்லாம் சென்றடைந்த நாடுகளில் அடிமை வியாபாரம் செழித்து வளர ஆரம்பித்தது. முகமதின் மரணத்திற்குப் பிறகு இஸ்லாமை உலகமெங்கும் பரப்பப் புறப்பட்ட நம்பிக்கையாளர்களால் கைப்பற்றப்பட்ட கணக்கிலடங்காத அடிமைகளின் காரணமாக பெரும் பொருளீட்டினார்கள்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட இந்தியா இதற்கான பெரும் விலையைக் கொடுத்தது. ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.

பின்-காசிம் சிந்த் பகுதியை வென்று இஸ்லாமிய ஆட்சியை நிறுவிப் பல இலட்சக்கணக்கான அடிமைகளைப் பிடித்துச் mahmud-of-ghazni-armyசென்றான் என்பதினை முன்பே பார்த்தோம். அவனுக்கு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு  இந்தியாவின் மீது பதினேழு முறை படையெடுத்து இறுதியில் வென்ற சுல்தான் முகமது என்னும் கஜினி முகமது பெருமளவிளான ஆலயங்களை இடித்தத் தகர்த்ததுடன் மட்டுமல்லாமல் ஏராளமான அடிமைகளைப் பிடித்துச் சென்ற தகவல்கள் அவனது வரலாற்றாசிரியர்களாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. காபூலை ஆண்ட இந்து அரசரான ஜெய்பாலின் மீதான தாக்குதலைக் (1001-01) குறித்து எழுதும் அல்-உத்பி, “சுல்தான் முகமதிற்குக் கடவுள் கணக்கில்லாத செல்வத்தை அள்ளிக் கொடுத்தான். ஆண்கள், பெண்கள் என்று ஏறக்குறைய ஐந்து இலட்சம் அடிமைகக் சுல்தானால் கைப்பற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகளில் அரசர் ஜெய்பாலும், அவரது குழந்தைகள்,  பேரக்குழந்தைகள், உறவினர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பலரும் இருந்தார்கள். அவ்வாறு பிடிக்கப்பட்ட அடிமைகள் கஜினையை நோக்கி நடத்திச் செல்லப்பட்டுப் பின்னர் அடிமைச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டார்கள்.

1014-ஆம் ஆண்டு நிண்டுனா (பஞ்சாப்) பகுதியில் நிகழ்ந்த தாக்குதலைக் குறித்து எழுதும் அல்-உத்பி, “ஏராளமான அடிமைகள் கைப்பற்றப்பட்டதன் காரணாமாக அடிமைச் சந்தையில் அவர்களின் விலை பெருமளவு வீழ்ச்சியடைந்தது. தாங்கள் வாழ்ந்த பகுதியில் மிகவும் உயரிய பதவியில் இருந்த அல்லது செல்வந்தர்கள் அனைவரும் கஜினியில் வாழ்ந்த சாதாரண கடை உரிமையாளர்களின் அடிமைகளாகும் நிலையை அடைந்தார்கள்.”

தானேசாரில் (ஹரியானா) பிடிக்கப்பட்ட அடிமைகள் காரணமாகப் பிடிக்கப்பட்ட இரண்டு இலட்சம் அடிமைகள் கஜினிக்குக் கொண்டு வரப்பட்டதால் அந்தப் பகுதியே இந்திய நகரம் போலக் காட்சியளித்தது. சுல்தானின் படையிலிருந்த ஒவ்வொரு சிப்பாயும் பல அடிமைகளுக்குச் சொந்தக்காரனாக இருந்தான். அவர்களில் இளம் பெண்களும் அடக்கம்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஃபரிஷ்டா.

சுல்தான் முகமதின் பதினேழு படையெடுப்புகளின் காரணமாக ஏறக்குறைய ஏழு இலட்சத்து ஐம்பதினாயிரம் இந்தியர்கள் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டதாக தாரிக்-இ-அல்ஃபி குறிப்பிடுகிறது. கஜினியின் மகனான சுல்தான் மசூத், “காஷ்மீரின் சுர்சுட் கோட்டையின் மீது நடத்திய தாக்குதலில் போது அங்கிருந்த அத்தனை ஆண்களும் கொல்லப்பட்டு, பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்துச் சென்றான். ஹன்சி கோட்டையின் மீது படையெடுத்துச் சென்ற மசூத் அங்கிருந்த பிராமணர்களையும் பிற உயர் அதிகாரிகளையும் கொலை செய்துவிட்டுப் பல ஆயிரக்கணக்கான பெண்களையும், குழந்தைகளையும் பிடித்துச் சென்றதாக வரலாற்றாசிரியர் அபுல்-ஃபாசில்-பைகாக்கி கூறுகிறார்.

ghazni21070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம், காஃபிர்களின் மீது நடத்திய பெரும் தாக்குதல்கள் காரணமாக ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது.

கஜினிகளைத் தொடந்து இந்தியாவில் ஒரு இஸ்லாமிய ஆட்சியை அமைக்கும் நோக்குடன் படையெடுத்த சுல்தான் முகமது கோரி, 1194-ஆம் வருடம் பனாரசை (வாரணாசி) தாக்கியதன் காரணமாக நடந்த படுகொலைகளைக் கூறும் இப்ன்-அசிர், “அந்தத் தாக்குதல்களில் பனாரசிலிருந்த ஒரு காஃபிர் ஆணைக் கூட சுல்தான் விட்டு வைக்கவில்லை. குழந்தைகளும், பெண்களும் மட்டுமே உயிர் பிழைக்க அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அடிமைகளாக விற்கப்பட்டார்கள்” எனக் கூறுகிறார்.

இவனைப் போலவே 1195-ஆம் வருடம் குத்புதீன் ஐபக் குஜாரத்தைச் சேர்ந்த ராஜா பீமின் மீது படையெடுத்து அங்கிருந்து இருபதினாயிரம் அடிமைகளைப் பிடித்துச் சென்றான். மேலும் காலிஞ்சார் பகுதியில் நடந்த தாக்குதலைக் குறிக்கும் ஹசான் நிஜாமி, காலிஞ்சாரில் மட்டும் ஐம்பதினாயிரம் காஃபிரி இந்துக்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள் என்கிறார். மூல்தான் பகுதியில் தனக்குப் பெரும் தலைவலியாக இருந்த கோகார்களை அடக்கப் புறப்பட்ட முகமது கோரி, அந்தப் பகுதியிலிருந்த எந்தவொரு காஃபிரையும் விட்டு வைக்காமல் கொலை செய்ததுடன், ஏராளமான ஆயுதங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தான். அதனைச் சுற்றிலும் பிற பகுதியிலிருந்த ஏறக்க்குறைய நான்கு இலட்சம் காஃபிரி கோகார்கள் வாள்முனையில் மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார் ஃபரிஷ்டா.

சுல்தான் முகமது கோரி மற்றும் குத்புதின் ஐபக் போன்றவர்களின் இதுபோன்ற மனிதத்தனமற்ற அடிமைகள் பிடிக்கும் போக்கை விவரிக்கும் ஃபக்ர்-இ-முதாபிர், “ஒவ்வொரு ஏழை முஸ்லிமும் பல நூற்றுக்கணக்கான அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களானதாக” குறிப்பிடுகிறது. 1206-ஆம் வருடம் இந்தியாவின் முதல் இஸ்லாமிய சுல்தானாக மாறிய குத்புதின் ஐபக் அவனது ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக ஹான்சி, தில்லி, ரன்தம்பூர் மற்றும் கோல் பகுதிளின் மீது தாக்குதல்கள் நடத்தியதன் பயனாக தில்லியிலிருந்து குஜராத் வரையிலும், லக்னொவுட்டியிலிருந்து லாஹூர் வரையிலும் பெரும் பகுதியை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். ஒவ்வொரு வெற்றியும் பல இலட்சக் கணக்கான அடிமைகளை குத்புதீன் ஐபக்கிற்கு அளித்தது. ஆனால் துல்லியமான கணக்குகள் எதுவும் குறிக்கப்படவில்லை.

இவனைப் போலவே இன்னொரு பெரும் மூடனான பக்தியார் கில்ஜி வங்காளம், பிஹார் போன்ற இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் நடத்திய தாக்குதல்களின் போது பெரும் படுகொலைகளும், அடிமைகளைப் பிடிப்பதுவும் இடையறாது நடந்தது. கில்ஜியைத் தொடர்ந்து வந்த கியாசுதீன் பால்பன் நடத்திய படுகொலைகளுக்கும், பிடித்துச் சென்ற அடிமைகளுக்கும் கணக்கில்லை.

இவர்களையெல்லாம் விடவும் சுல்தான் அலாவுதீன் கில்ஜி நிகழ்த்திய வெறியாட்டங்கள் படுபயங்கரமானவை. அடிமைகளைப் பிடிப்பதிலும், இந்து காஃபிர்களைக் கொன்று குவிப்பதிலும் அலாவுதீன் கில்ஜியின் சாதனைகள் அச்சமூட்டுபவை. அத்தனையையும் இங்கு குறிப்பிடுவது சாத்தியமில்லை. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கீழ் இந்துக்கள் அடைந்த துன்பங்கள் சொல்லவொன்னாதவை. கில்ஜியின் தாக்குதல்களைக் குறித்துக் கூறும் பரானி, “கைப்பற்றப் பட்ட காஃபிர் அடிமைகள் தினந்தோறும் தொடர்ந்து தில்லியின் அடிமைச் சந்தைக்கு வந்து கொண்டே இருந்தார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

துக்ளக் ஆட்சியாளர்களின் வழி வந்த முகமது ஷா துக்ளக்கின் ஹிந்து காஃபிர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லாவுதீன் கில்ஜியையே தூக்கிச் சாப்பிடுபவை. இதனைக் குறித்து எழுதும் சிகாபுதீன் அகமத் அப்பாஸ், “சுல்தான் காஃபிர்களுக்கு எதிராக போர் புரிவதில் மிகுந்த முனைப்புடையவனாக இருந்தான்…அவன் பிடித்த அடிமைகளின் பெரும் எண்ணிக்கை காரணமாக ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான காபிர் அடிமைகள் அடிமைச் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கே விற்கப்பட்டார்கள்…” சுல்தானிடம் எண்ணற்ற பெண் அடிமைகள் இருந்தார்கள். துக்ளக்கின் காலத்தில் இந்தியாவில் பயணம் செய்த மொராக்கோ நாட்டுப் பயணியான இப்ன்-பதூதாவின் சொந்த உபயோகத்திற்கென பத்து காஃபிர் பெண் அடிமைகளை சுல்தான் அனுப்பி வைத்தான்.

இப்ன்-பதூதா தலைமையில் சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்த முகமது ஷா துக்ளக், பல வண்டிகளில் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களுடன், நூறு வெள்ளை இன அடிமைகளையும் மற்றும் நூற்றுக் கணக்கான இந்து நாட்டியப் பெண்களையும் அனுப்பி வைத்தான். வெளி நாடுகளைச் சேர்ந்த காலிஃபாக்களுக்கும், முஸ்லிம் அரசர்களுக்கும் அடிமைகளை அனுப்பி வைக்கும் வழக்கம் சுல்தான் ஃபிரோஸ் துக்ளக் காலத்தில் சர்வ சாதாரணமாயிருந்தது. இப்ன்-பதூதா, சுல்தான் வருடம் தோறும் பல அடிமைப் பெண்களுடன் உடலுறவு கொள்வதினை வழக்கமாகக் கொண்டிருந்தான் என்கிறார். ஏறக்குறைய ஒரு இலட்சத்தி எண்பதினாயிரம்  அடிமைச் சிறுவர்கள் சுல்தான் ஃபிரோஸ் ஷா துக்ளக்கிற்கு இருந்தார்கள் எனக்கூறும் வரலாற்றாசிரியர் அஃபிப், எண்ணிலடங்காத ஏராளமான அடிமைகளின் காரணமாக இந்தியாவில் அடிமை வியாபாரம் ஒரு நிறுவனமாகவே மாறியிருந்தது என விளக்குகிறார்.

காஃபிர் இந்தியாவைத் தாக்கி காஜியாகும் எண்ணத்துடன் படையெடுத்த தைமூர் (1398-99) தில்லியை அடைவதற்கு முன் ஏறக்குறைய ஒரு இலட்சம் காஃபிர் அடிமைகளைப் பிடித்து தன்னுடன் வைத்துக் கொண்டிருந்தான். தில்லியின் மீதான தாக்குதலின் போது அந்த ஒரு இலட்சம் பேர்களும் கொலை செய்யப்பட்டனர். தில்லியை விட்டுத் திரும்பிய வழியில் தைமூர் கல் மனதையும் கரைக்கச் செய்யும் படுகொலைகளையும், பெரு நாசங்களையும், கொள்ளைகளையும், அடிமைப்படுத்துதல்களையும் செய்து சென்றான். தைமூரின் வாழ்க்கை வரலாறான மல்ஃபுஸத்-இ-தைமூரி இந்தக் கொடுமைகளைப் புகழ்ந்துரைக்கிறது.

“டிசம்பர் 16, 1398-ஆம் வருடம் தில்லியின் மீது துவங்கிய தாக்குதல்களில் 15,000 துருக்கியப் படையினர் கொலைகளிலும், கொள்ளைகளிலும், நாசகாரச் செயல்களிலும் ஈடுபட்டனர்….அங்கு கைப்பற்றப்பட்ட செல்வத்தின் அளவு கணக்கிலடங்காதது…ஒவ்வொரு படைவீரனும் தனக்கென ஐம்பதிலிருந்து, நூறுவரையிலான ஆண், பெண், குழந்தை அடிமைகளைப் பிடித்து வைத்திருந்தான்….இருபது அடிமைகளுக்குக் குறைவாக வைத்திருந்த ஒரு படைவீரனும் அங்கில்லை…” இந்தக் கணக்கின்படி, ஒவொவொரு சிப்பாயும் தனக்கென தோராயமாக 60 அடிமைகளைப் பிடித்து வைத்திருந்தால் மொத்த அடிமைகளின் கணக்கு ஏறக்குறைய ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) என்பதினைக் காண வேண்டும் இங்கே.

தில்லியிலிருந்து மத்திய ஆசியாவிலிருந்த தனது தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த தைமூர் அவனது படைத் தளபதிகளிடம். “…வழியில் தென்படும் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரின் மீது தாக்குதல் நடத்தி அங்கு கண்ணில் தென்படும் அத்தனை காஃபிர்களையும் கொல்ல உத்தரவிட்டான்”. இதன்படி படுகொலகள் நடத்திய தைமூரின் தளபதிகள் குறித்துக் கூறும் தைமூர், “எனது படைத் தலைவர்கள் பல காஃபிர்களை விரட்டிக் கொன்றதுடன், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளை அடிமைகளாகப் பிடித்தார்கள்…”

IslamicJihadகுடிலா என்னும் பகுதியை வந்தடைந்த தைமூரின் படைகள் அங்கிருந்த காஃபிர்கள் மீது தாக்குதல்களைத் துவங்கின….சிறிதளவு எதிர் தாக்குதல்கள் நடத்திய காஃபிர்கள் இறுதியில் வாளுக்கு இரையானார்கள். ஏராளமான காஃபிர் பெண்களும், குழந்தைகளும் சிறை பிடிக்கப்பட்டர்கள்….அதனைத் தொடந்து கங்கைக் கரையை வந்தடைந்த தைமூரின் படைகள் அங்கு நடந்த கும்பமேளாவில் பங்கேற்றுக் கொண்டிருந்த ஏராளமான காஃபிர்களைக் கொன்றார்கள்…பல காஃபிர்கள் மலைகளுக்கு ஓடி ஒளிந்து கொண்டார்கள்…ஏராளமான செல்வமும், அடிமைகளும் தைமூரின் படைகளுக்கு உரிமையாகின.

சிவாலிக் என்ற பகுதியை அடைந்த தைமூர், “எனது படைவீரர்களைக் கண்டு பல காஃபிர்கள் அஞ்சி ஓடினார்கள்….அவர்களை விரட்டிச் சென்று எனது படை வீரர்கள் கொலை செய்தபின் அவர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக்கினார்கள்” எனப் பூரிக்கிறான். கங்கையின் மறுபுறம் ஆட்சி புரிந்து கொண்டிருந்த ராஜா ரத்தன் சென், தைமூரின் படைகளைக் குறித்துக் கேள்வியுற்று அவனை எதிர்க்க ஒரு பெரும் படையைத் திரட்டி வைத்திருந்தார். அங்கு நடந்த போரைக் குறித்துக் கூறும் தைமூர், “எனது படைகளின் தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாத இந்துக்கள் தோல்வியுற்று பின்வாங்கி ஓடினார்கள்…பின்னர் அங்கு நடந்த கொள்ளையில் கணக்கற்ற செல்வம் கொள்ளையடிக்கப்பட்டதுடன், ஏறக்குறைய இரண்டு இலட்சத்திலிருந்து மூன்று இலட்சம் வரையிலான அடிமைகள் பிடிக்கப்பட்டார்கள்”

இதுவே சிவாலிக் பள்ளத்தாக்கின் இன்னொரு புறமிருந்த நாகர்கோட் ராஜ்ஜியத்திலும் நிகழ்ந்தது. தைமூரின் படைகள் கொலை வெறியாட்டமிட்டன அங்கே. மொத்தத்தில் இந்தியாவின் மீதான படையெடுப்பின் காரணமாக தைமூர் ஏறக்குறைய இரண்டிலிருந்து இரண்டரை மில்லியன் (25 இலட்சம்) வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான்.

இதே நிலைமை பின்னர் இந்தியாவை ஆண்ட சையத் மற்றும் லோதிக்களின் காலத்திலும், முகலாயர்களின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. ஆனால் எந்தவொரு முஸ்லிம் ஆக்கிரமிப்பாளனும் மனிதத்தன்மையற்ற இந்தக் கொடுஞ்செயல்கலைத் தவறாக எண்ணவில்லை. ஏனென்றால் அதனைச் செய்ய “அமைதி மார்க்க” கையேட்டில் (குரான்) அல்லா அவர்களுக்கு அனுமதியளித்திருக்கிறான் அல்லவா?

(தொடரும்)

 

 

 

 

வன்முறையே வரலாறாய்…- 32

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

ஒருவேளை இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வராமல் போயிருந்தால், இந்திய, பங்களாதேசி, பாகிஸ்தானிய சமூகம் இன்றிருப்பதனை விடவும் வேறு விதமாக இருந்திருக்கக் கூடும் என்பதில் எவ்விதமான சந்தேகமுமில்லை. காலனியாதிக்கத் தீமைகள் குறித்து நாம் இங்கு விவாதிக்கவில்லை. எனவே, பிரிட்டிஷ் காலனியாதிக்கச் சுரண்டல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு இதனைக் குறித்தான தகவல்களை சிறிது ஆராயலாம்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் வாள்முனையிலும், அடிமைப்படுத்தலின் மூலமாகவும், இன்னபிற வன்முறைச் செயல்கள் மூலமாகவும் இந்துக்களுடன், பவுத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற இந்தியாவின் இந்துக்களல்லாத பிற மதத்தினரும் எவ்வாறு மதம் மாற்றப்பட்டார்கள் என்பது குறித்து இதற்கு முன்னர் பார்த்தோம். இருப்பினும் ஆயிரம் ஆண்டுகால இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்தியாவின் அத்தனை இந்துக்களையும், பிற மதத்தினரையும் இஸ்லாமியர்களாக மதம் மாற்றுவதில் பெரும் தோல்வியுற்றது. கொடிய அடக்குமுறைகளையும், பொருளாதார கசக்கிப் பிழிதல்களையும் இந்திய இந்துக்கள் தங்களின் பொறுமையாலும், அதன் ஆன்மீக பலத்தாலும் அதற்கும் மேலாக எவரொருவராலும் முழுமையாக ஆளமுடியாத அதன் பெரும் நிலப்பரப்பாலும் வென்றார்கள்.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் எவரும், எந்தவொரு சூழ்நிலையிலும் மொத்த இந்தியாவையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலவில்லை. இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இந்திய இந்துக்களை மதமாற்றத்திலிருந்து தப்ப வைக்க இயலவில்லை. அதற்கும் மேலாக தங்களில் கலாச்சாரத்திலும், மதத்திலும் கொண்ட பிடிப்பே இந்திய, இந்து சமூகம் ஒரு முழு முஸ்லிம் கூட்டமாக மாறுவதனை வெற்றிகரமாக எதிர்த்து வென்றது. இந்தியாவில் இஸ்லாமிய சுல்தானேட் அமைந்த காலத்தில், பாக்தாதிலிருந்து ஆண்ட இஸ்லாமிய அரசின் தலைமையிடம் பிளவுபட்டு, அதன் அதிகாரம் மெல்லத் தேய்ந்து கொண்டிருந்தது. அதன் அதிகாரம் பாக்தாதிலும், எகிப்திலும், ஸ்பெயினிலும் பிளவுபட்டுக் கிடந்தது. அதே நேரத்தில் மங்கோலியாவின் ஸ்டெப்பிப் புல்வெளியிலிருந்து கிளம்பிய மங்கோலியர்கள் மத்திய ஆசியாவிலும், பாக்தாதிலுமிருந்த இஸ்லாமிய அரசுகளை நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் செய்தார்கள்.

islamic-war

அதே சமயத்தில் இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் அரேபியாவிலிருந்த இஸ்லாமிய அதிகார வட்டத்திலிருந்து விலகியிருந்தார்கள். பாக்தாத், எகிப்து, சமார்க்கண்ட் போன்ற பகுதிகளை ஆண்ட காலிஃபாக்களுடன் பெயரளவிற்கு மட்டுமே தொடர்புகள் கொண்டவர்களாக இருந்தார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த நேரத்தில் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வலிமையான அரசாங்கம் இல்லாததும் இந்தியா முழுமையாக வெற்றி கொள்ளப்படாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

வரலாற்று ரீதியில் ஆஃப்கானிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. சுல்தான் முகமது அதன் மீது 1000-ஆம் வருடம் படையெடுத்து அதனை ஒரு நிரந்தர இஸ்லாமிய நாடாக்கினான். அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாமியர்கள் ஆஃப்கானிஸ்தானைத் தங்களின் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். இந்துக்களும், பவுத்தர்களும் வாழ்ந்த ஆஃப்கானிஸ்தான் இன்றைக்கு முற்றிலும் அதன் அடையாளங்களை இழந்துவிட்டது. இதே நிலைமைதான் பாகிஸ்தானிலும் நிலவுவதனைக் காணலாம். இந்து அரசர்களை வெற்றி கண்டு இஸ்லாமிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்ட நாளிலிருந்து அங்கிருந்த இந்துக்கள் தங்களின் அடையாளத்தை இழந்து காணாமல் போனார்கள். 1998-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 96.28 சதவீத பாகிஸ்தானியர்கள் முஸ்லிம்களே.

இந்தியாவில் அக்பரின் காலத்தில் மட்டுமே ஓரளவிற்குப் பெயர் சொல்லும் வகையில் நாடு முழுவதிலும் இஸ்லாமிய ஆட்சி நிலவியது என்று சொல்லலாம் (மலபார், கோவா போன்ற பகுதிகளைத் தவிர்த்து). அக்பரின் மதச் சார்பற்ற கொள்கைகள் இதற்கு உதவியிருக்கக்கூடும். இஸ்லாமை விரட்டியடிக்கும் வகையில் அவரின் சொந்த மதமான தீன்-இலாஹியை நிலை நிறுத்த முயன்ற அக்பரின் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அக்பரின் கொள்கைகள் அவரது மகனான ஜஹாங்கீரின் காலத்தில், பேரனான ஷாஜஹானின் காலத்திலு மாற்றியமைக்கப்பட்டு, மீண்டும் இஸ்லாமிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய மதமாற்றங்களும் துவங்கப்பட்டன. அவுரங்கசீப்பின் காலத்தில் மீண்டும் வாள்முனை மதமாற்றங்கள் வட இந்தியாவில் முழுவேகத்துடன் செய்யப்பட்டது. இதனைக் குறித்து ஏற்கனவே கண்டிருக்கிறோம்.

ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு
ஔரங்கசீப் ஆணையால் மதுரா கோயில் உடைப்பு

அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு, சிறு பகுதிகளில் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் ஆட்சியை விரிவுபடுத்தி, அதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் இந்துக்களின் மீது இஸ்லாமியர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறையும், கட்டாய மதமாற்றங்களும் முடிவிற்கு வந்தன. அவுரங்கசீப்பின் காலத்திலேயே கூட இந்தியாவெங்கும் அவனுக்கு எதிரான கலகங்கள் வெடித்தன. இஸ்லாமிய அதிகாரம் அவுரங்கசீப்பின் காலத்தில் ஏறக்குறைய முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் அவுரங்கசீப்பின் ஐம்பது ஆண்டுகால கொடுங்கோலாட்சியும், கட்டாய மதமாற்றங்களும் இந்திய மக்கள் தொகையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. வட இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டிருந்தார்கள்.

இதே சூழ்நிலை தொடர்ந்திருக்குமானால் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்த நேரத்தில் குறுக்கிட்ட பிரிட்டிஷ்காரர்களின் பங்கு முக்கியமானதாகிறது. அவர்களே இந்திய துணைக்கண்டத்து இந்துக்களை இஸ்லாமிய மதமாற்றக் கொடூரத்திலிருந்து காப்பாற்றியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

தொடர்ச்சியான இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அல்லது ஆட்சி எவ்வாறு ஒரு பகுதியின் அல்லது நாட்டின் முகத்தை மாற்றியமைக்கும் என்பதற்கு 1947-ஆம் வருடம் இந்தியாவிலிருந்து பிரிந்த மேற்கு மற்றும் கிழக்கு (இன்றைய பங்களாதேஷ்) பாகிஸ்தானை உதாரணமாகக் கூறலாம். பிரிவினைக்குப் பிறகு கிழக்குப் பாகிஸ்தானில் ஏறக்குறைய 25 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை இருந்த இந்துக்கள் இன்று வெறும் பத்து சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். அதுபோலவே மேற்கு பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு பத்து சதவீதமாக இருந்த இந்துக்கள் இன்றைக்கு (1998) வெறும் 1.6 சதவீதமாகக் குறைந்திருக்கிறார்கள். இப்பகுதிகளில் தொடர்ந்து நடந்த கட்டாய மதமாற்றங்களும், காஷ்மீரைப் பிரிக்கும் எண்ணத்துடன் 1950-ஆம் ஆண்டிலிருந்து துவக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாதத்தினால் விரட்டப்பட்ட இந்துக்களும் இவ்விரு நாடுகளில் இந்துக்களின் ஜனத்தொகை குறையக் காரணமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய பாகிஸ்தானில் இந்து, சீக்கிய மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு, முஸ்லிம்களுக்கு மணம் செய்விக்கப்பட்டுப் பின் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பதினை செய்தி ஊடகங்கள் வழியாக அறியலாம். பாகிஸ்தானிய மைனாரிட்டி உரிமைகள் கமிஷனின் ஒரு அறிக்கை ஒவ்வொரு வருடமும் குறைந்தது 600 இந்து மற்றும் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கிறது. மத அடிப்படைவாதிகள் கொடுக்கும் அழுத்தங்களும், பொருளாதார நிர்பந்தங்களும் நிறைந்த பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இருக்கும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்துக்கள், வாழ வழியின்றி முஸ்லிம்களாக மாறும் கொடுமை தினமும் நடக்கிறது. இதன் காரணமாக கடந்த 60 ஆண்டுகளில் இவ்விரு நாடுகளிலும் இந்துக்களின் தொகை பெரிதும் குறைந்துவிட்டது.

2001-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவான பங்களாதேஷ் தேசியக் கட்சியானது, பங்களாதேசி இந்துக்கள் அவாமி லீக் கட்சியை ஆதரித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, ஜமாத்-எ-இஸ்லாமி என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து கொண்டு நடத்திய கொலைவெறித் தாக்குதல்களாலும், பொது இடங்களில் அவமானப்படுத்துதலாலும், படுகொலைகளாலும், கற்பழிப்புகளாலும், கொடூரமான துன்புறுத்தல்களாலும் பங்களாதேசி இந்துக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். பங்களாதேசின் ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிகையின் ஒரு தகவலின்படி, போலா மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறயை 1000 இந்துப் பெண்கள் மேற்கூறிய அமைப்புகளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறுகிறது. இதன் காரணமாக, 2001-ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு ஏறக்குறைய ஐந்து இலட்சம் (5,00,000) பங்களாதேசி இந்துக்கள் அங்கிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு ஓடி வந்தார்கள்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…- 31

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் கால இந்தியாவில் முஸ்லிம்களால் இந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்பட்டு கற்பழிக்கப்படுவதிலிருந்தும், பாலியல் அடிமைகளாக மாற்றப்படுவதிலிருந்தும் தப்புவதற்காக இந்து பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளுக்கு மிக இளவயதிலேயே திருமணம் செய்யும் (child marriage) வழக்கத்தைத் துவங்கினார்கள். தொடர்ந்து நடந்த இஸ்லாமிய ஆட்சிகள் இந்தத் சூழ்நிலையை மேலும் மோசமாக்கின. கொடூரமான முறையில் அடக்கி ஆளப்பட்ட இந்துக்கள் வேறு வழியின்றித் தங்களின் பாரம்பரிய பழக்க, வழக்கங்களைக் கை விட்டார்கள். பெண் குழந்தைகள் பூப்படைவதற்கு முன்பாகவே இளம் இந்து சிறுவர்களுக்கு மண முடித்து வைக்கப்பட்டார்கள் அவ்வாறு செய்தால் ஒருவேளை முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு கிட்டலாம் என்னும் நப்பாசையுடன்.

child_marriage_in_india_bookஇந்த எண்ணம் பரவலாகி இந்தியாவில் அறியாத வயதுடைய சிறுவர். சிறுமிகளிடையே நடக்கும் விவாகங்கள் பெருமளவு நடக்க ஆரம்பித்தன. இதன் பின்னனியில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களும், இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்லும் முஸ்லிம் மனோபாவமும் இருந்தன என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பங்களாதேஷிலும், பாகிஸ்தானிலும் வாழும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களல்லாத பிற மதத்தினர் மத்தியில் இன்றைக்கும் இது நடந்து கொண்டிருப்பதனைக் காணலாம். குறிப்பாக பாகிஸ்தானில் இன்றைக்கும் இந்துப் பெண்கள் தூக்கிச் செல்லப்படுவது எந்தவிதமான தடையுமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. பங்களாதேஷி மற்றும் பாகிஸ்தானி முஸ்லிம் குண்டர்கள் அழகான இந்து இளம் பெண்களைத் தூக்கிச் செல்வதனைத் தடுக்கும் விதமாக, அப்பகுதியில் வாழும் இந்துக்கள் எப்பாடு பட்டேனும் அவர்களுக்குத் திருமணம் நடத்தி அவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க பகீரதப் பிரயத்தனங்கள் அனுதினமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் இயங்கும் மைனாரிட்டி இயக்கமொன்று அளிக்கும் ஒரு தகவலின்படி, 2005-ஆம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 50 இந்து மற்றும் 20 கிறிஸ்தவப் பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாலஸ்தீனம் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் தினமும் நடப்பதினை இணையத்தில் நீங்கள் படித்திருக்கலாம்.

*********

அமைதியிலும் சீரிய நோக்கும், நேர்மையும் கொண்ட ஒரு பெரும் மனிதக் கூட்டத்தை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு காடுகளுக்குள் விரட்டியது. உயிர் பிழைப்பதற்கு வேறு வழியில்லாமல் அவர்கள் இரவு நேர கொள்ளைக்காரர்களாகவும், வழிப்பறிகள் செய்து வாழ்பவர்களாகவும் அவர்களை மாற்றியது இஸ்லாமிய ஆக்கிரமிப்பு. இந்திய சமூக, கலாச்சார, ஆன்மிக வாழ்க்கையில் இஸ்லாமின் பங்களிப்பு என்று எதுவுமில்லை என்று முன்பே பார்த்தோம். இன்றைக்கு உலகம் உபயோகிக்கும் கணித அடிப்படை சூத்திரங்களைக் கண்டறிந்தவர்களான பாஸ்கராச்சார்யா, லீலாவதி (பாஸ்கராச்சார்யரின் மகள்) மற்றும் பிரம்மகுப்தர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்குப் பின்னர் வெகு அபூர்வமாகவே தோன்றினார்கள்.

ஆணும், பெண்ணும் நிகரெனக் கொண்ட கலாச்சாரமாக இந்தியக் கலாச்சாரம் தொன்று தொட்டே இருந்து வந்தது. இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் பொதுவான கொள்கைகளான கொள்ளையடித்தல், பெண்களைக் கவர்ந்து செல்லல், கற்பழிப்புகள் போன்ற இழிவுகள் காரணமாக இந்தியப் பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டார்கள். தென்னிந்தியாவிற்கு இரண்டு முறைகள் விஜயம் செய்த (1288 மற்றும் 1293) மார்கோ-போலோ, தெலுங்கு பேசும் பகுதியை நாற்பது வருடங்களுக்கும் மேலாக ஆண்டு கொண்டிருந்த ருத்ரம தேவி என்ற பெண்மணியைக் குறித்து மிகவும் புகழ்ந்துரைக்கிறார். “இஸ்லாமின் வருகை இந்தியப் பெண்களின் சுதந்திரத்தை மிகவும் பாதித்தது” எனக்கூறும் ஜவஹர்லால் நேரு, முஸ்லிம் பெண்களைப் போலவே இந்துப் பெண்களும் முகத்தை மூடும் பர்தா அணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்கிறார்.

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு துவங்குவதற்குச் சிறிது காலம் முன்பாக இந்திய சமுதாயம் ஒரு தேக்க நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதே நிலைமை உலகின் எல்லாப் புகழ் பெற்ற கலாச்சாரங்களுக்கும் நிகழ்ந்த ஒன்றே. உதாரணமாக கிரேக்கக் கலாச்சாரத்தைக் கூறலாம். பெரும் வளர்ச்சி கண்ட கிரேக்கக் கலாச்சாரம் உச்ச நிலையை அடைந்த பின்னர் தேக்கமடைந்துப் பின் அழிந்து போனது. அதே சூழ்நிலை இஸ்லாமிய ஆக்கிரமிப்பினால் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்பட்டது. ஏற்கனவே ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் கூறியபடி இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்திய சமுதாயத்திற்கும், அதன் கலாச்சார முன்னேற்றத்திற்கும், கல்விக்கும், அறிவியலுக்கும் அளித்த பங்களிப்பு என்பது எதுவுமில்லை.

islamic-jihad-a-legacy-of-forced-conversionபின்னர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட சுதந்திரமும், மதச் சார்பற்ற கல்வியும், பொது சட்ட நடைமுறைகளும், ஜனநாயகமும், தனி மனித சுதந்திரமும் இந்திய முஸ்லிம்கள் அல்லாதோரால் முழு ஏற்புடன் வரவேற்கப்பட்டன. குறிப்பாக வங்காள இந்துக்கள் பிரிட்டிஷ் கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய மேற்கத்திய கல்விமுறைய திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு பயில முயன்றார்கள். அதே நேரம் முஸ்லிம்கள் அது போன்ற கல்விமுறையை ஏற்காமல் விலகி நின்றார்கள். இந்திய முஸ்லிம்கள் மதச் சார்பற்ற கல்விமுறையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களில்லை என்பதுவே வரலாறு. எனவே அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் அளித்த கல்விமுறையை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மதச்சார்பற்ற கல்வி இஸ்லாமிற்கு எதிரானது என்னும் மனோபாவத்தினால்.

இதன் காரணமாக முஸ்லிம்கள் மாறி வரும் உலகின் முன்னேற்றங்களிலிருந்து விலகி நிற்க, இந்துக்கள் தங்களுக்கு இத்தனை காலம் மறுக்கப்பட்ட கல்வியையும், அதனால் உண்டாகிய முன்னேற்றத்தையும் முழு அளவில் ஏற்றுக் கொண்டு முன்னேறினார்கள். இந்தியப் பிரிவினைக்கு முந்தைய கிழக்கு வங்காளத்தில் இந்துக்கள் மைனாரிடிகாளாக இருந்தாலும், கிழக்கு வங்காளத்தில் கட்டப்பட்ட ஏறக்குறைய அத்தனை பள்ளிகளும் இந்துக்களாலேயே கட்டப்பட்டன. அந்தப் பள்ளிகளில் பணி புரிந்தவர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்தார்கள்.

சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து இந்திய கல்விமுறையில் மாற்றம் கொண்டு வர விரும்பிய பிர்ட்டிஷ் ராஜாங்கம், கல்கத்தா, பாம்பே மற்றும் சென்னையில் புதிதாக பல்கலக்கழகங்களை அமைத்தது. இந்த புதிய சூழ்நிலையைத் தங்களுடையதாக்கிக் கொண்ட இந்திய இந்துக்கள் கல்வியிலும், அறிவியலிலும், கலாச்சார மேம்பாட்டிலும், இலக்கியத்திலும் மிகக் குறுகிய காலத்தில் வேகமாக முன்னேறினார்கள். இந்தப் புதிய கல்வி வாய்ப்பு அமைந்த வெறும் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாக ரபீந்திரநாத் தாகூர், சி.வி. ராமன் போன்றவர்கள் நோபல் பரிசு பெறுமளவிற்கு இந்துக்களின் கல்வி முன்னேறியது. இந்திய அரசியலிலும் இந்துக்களின் பங்களிப்பு அதிகமாகிக் கொண்டு சென்றது.

பழமையில் ஊறிய இந்துக்களின் மனோபாவம் மாறத் துவங்கியது. சதியும், பெண் சிசுக் கொலையும், குழந்தைத் திருமணங்களும், விதவைத் திருமண மறுப்பும், சாதிக் கொடுமைகளும் தவறானவை என்னும் எண்ணம் இந்துக்களிடையே மேலோங்கியது. இதனை எதிர்க்கும் குரல்கள் இந்துக்களுக்குள்ளேயே எழுந்தன. இந்தத் தீமைகள் எல்லாம் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை எனினும், இந்திய இந்துக்களில் பெரும்பான்மையோர் இன்றைக்கு இதற்கு எதிரானவரகளாக மாறியிருப்பதுவும் உண்மையே. பல நூற்றாண்டுகளின் தீமைகள் ஒரே நாளில் ஒழிக்கப்படுவது சாத்தியமில்லை எனினும் இந்திய இந்துக்கள் மாற்றத்தை நோக்கி நடைபோடத் துவங்கி அதில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அதற்கு நேர்மாறாக இஸ்லாமியர்கள் கல்வியிலும் அதனால் உண்டான முன்னேற்றங்களிலும் பங்கெடுக்காமல் தேங்கிக் கிடப்பதுவு இன்றைய இந்தியாவிலும், பிற இஸ்லாமிய நாடுகளிலும்  காணக்கூடிய ஒன்றே.

(தொடரும்)

லவ் ஜிஹாத்: இரண்டு வகை சட்டங்களுக்கிடையில் அல்லாடும் பெண் உரிமைகள்

மூலம்:  Reality Check India  வலைப்பதிவில் வெளியான  கட்டுரை Love Jihad is about airgapping two different legal regimes

தமிழில்: ச.திருமலை

கடவுள் படைத்த இந்த உலகில் லவ் ஜிஹாத் என்றால் என்ன?

எந்தவொரு முஸ்லீமும் எந்தவொரு முஸ்லீம் அல்லாதவருடன் ஈடுபடும் காதல் லவ் ஜிஹாத் என்று அழைக்கப் படுகிறது.

ஒரு ஹிந்துப் பெண்ணுக்கும் முஸ்லீம் பையனுக்கும் நிகழும் காதலை லவ் ஜிஹாத் என்று அழைப்பதற்குக் கீழ்க்கண்ட கூடுதல் அம்சங்களும் கருதப் படுகின்றன.

1) ஏமாற்றும் நோக்கம்

2) பெண் வழக்கமாக அதிகம் படித்தவளாகவோ அல்லது நகரப் பகுதியில் வளர்ந்த பெண்ணாகவோ இல்லாமல் இருத்தல்

3) காதலின் மூலமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுதல்

மேற் சொன்ன காரணிகள் தவிர இதில் ஒரு சதித் திட்டம் இருப்பதாகவும் கருதப் படுகிறது. அதாவது மதத் தலைவர்களின் குழுக்கள் வேலை வெட்டி இல்லாமல் திரியும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு பணம், பயிற்சி மற்றும் பிற சலுகைகளை அளித்து சந்தேகம் கொள்ளாத அப்பாவி இந்துப் பெண்களைக் காதல் செய்து கவர்ந்து வருமாறு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்பது. அப்படி காதல் செய்யப் படும் இந்து மற்றும் கிறிஸ்துவப் பெண்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற வைப்பதே அந்த சதித் திட்டம் என்று குற்றம் சாட்டப் படுகிறது.

இரண்டு இணையான சட்டங்களும் திருமண ஒப்பந்தமும்:

இந்தியாவில் ஒரு தனித்துவமான தனிநபர் சட்டம் இருக்கிறது. அதன் படி முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தின் படியும் இந்துக்கள் இந்து திருமண சட்டப் படியும் தத்தம் திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தவிர விசேஷ திருமண சட்டம் ஒன்றும் இருக்கிறது. அதாவது பதிவு திருமணம். அதன் படி எந்த இரு மதங்களிலும் மணமக்கள் திருமணம் செய்து கொண்டு பதிவு திருமணச் சட்டப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது. கேரள கிறிஸ்துவர்களும் கூட லவ் ஜிஹாதுக்கு தங்கள் பெண்களும் பாதிக்கப் படுவதாகப் புகார் கூறினாலும் கூட எளிமையான புரிதலுக்காக நான் கிறிஸ்துவ சீக்கிய மதங்களை இந்த உதாரணத்தில் இருந்து சற்று விலக்க்கிக் கொள்கிறேன்.

எந்தவிதமான சட்டப் படி திருமணத்தைப் பதிவு செய்திருந்தாலும் திருமணம் என்பது மணமக்களுக்கு இடையேயான ஒரு வித சட்டபூர்வமான ஒப்பந்தம் என்பதாகவே கருதப் படுகிறது. அது ஒன்றே அதை இருவர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் இருந்து வேறு படுத்துகிறது. மேலும் ஒரு திருமண ஒப்பந்தமானது கணவன் மனைவி இருவருக்கும் சில உரிமைகளையும் பாதுகாப்பையும் கடமைகளையும் வலியுறுத்துகிறது.

இந்து திருமணச் சட்டப் படி உரிமைகளும் கடமைகளும் அனேகமாக கணவன் மனைவி இருவருக்குமே பொதுவானவை. ஆனால் ஷரியா சட்டப் படி இருவருக்குமான விதிகள் பொதுவானவை அல்ல. ஷரியா சட்டப் படி ஒரு பெண்ணின் உரிமைகள் வெகுவாக குறைக்கப் படுகின்றன. மதசார்பின்மை என்னும் அரசு என்ற பெயரில் இஸ்லாமியர்களை சமரசப் படுத்தும் நோக்கத்தில் இந்த இரு வேறு விதமான திருமணச் சட்டங்கள் இந்தியாவில் நிலவுகின்றன. இந்தியாவின் முஸ்லீம்களைத் திருப்திப் படுத்த வேண்டிய இடியாப்பச் சிக்கலுக்காக இந்தியாவின் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் ஏனைய பிற சட்டங்கள் போலவே இதையும் சட்டமாக்கியுள்ளார்கள். ஆனால் எதுவுமே இலவசமாக வருவதில்லை. எல்லாவற்றிற்கும் உண்டான விளைவுகள் இருக்கவே செய்யும்.

islamic-to-torture-a-hindu-infidel-women

தடுமாறும் நீதி அமைப்புகள்:

இப்படி இரு வேறு விதமான திருமண சட்டங்கள் நிலவும் நிலையில், ஒரு சட்டத்தின் படி (ஷரியா) பெண்ணின் உரிமைகள் அதிரடியாகக் குறைக்கப் பட்டுள்ள நிலையில், பெண்கள் கட்டாயப் படுத்தி இஸ்லாமுக்கு மதம் மாறும் திருமணங்களின் விளைவுகளும் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. பெரும்பாலான லவ் ஜிஹாத் திருமணங்களில் இந்துப் பெண்களே அதிக அளவில் மதம் மாறி இஸ்லாமிய இளைஞர்களைத் திருமணம் செய்து கொள்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இந்து ஆணைத் திருமணம் செய்யும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இந்துவாக மணம் மாறிக் கொண்டு இஸ்லாமை விட அதிக அளவிலான உரிமைகளைப் பெறும் வாய்ப்பு ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.  அத்தகைய திருமணங்கள்  நடைமுறையில் அனேகமாக அதிகம் நடப்பதில்லை (ஒரு சில மிகக் குறைவான விதிவிலக்குகள் இருக்கலாம் – தமிழ் நடிகை குஷ்பு, தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் பாத்திமா பாபு போல).

ஆகவே லவ் ஜிஹாத் திருமணங்களில் பொதுவாக எப்பொழுதுமே இந்துப் பெண்ணே வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றம் செய்யப் பட்டு, அவள் அதுநாள் வரையிலும் அனுபவித்து வந்த பல்வேறு உரிமைகள் பறிக்கப் படுவதே நடைமுறையில் நடக்கிறது. அந்தத் திருமணங்கள் விசேஷ பதிவுத் திருமணச் சட்டத்தின் படி பதிவு செய்யப் படுவதற்குப் பதிலாக ஷரியா சட்டப் படியே வலுக்கட்டாயமாக நடத்தப் படுகின்றன. அதன் படி மதம் மாறுவது கட்டாயமாகின்றது. அப்படி மதம் மாறாவிட்டால் ஷரியா சட்டப் படி அந்தத் திருமணம் செல்லுபடியாகாது. அந்தத் திருமணத்தை ஒரு இஸ்லாமிய மத குருமார் நடத்தித் தர மாட்டார். மணக்கள் இருவருமே இஸ்லாமியர்களாக இருந்தால் ஒழிய அது இஸ்லாமிய நிக்காஹாக கருதப் படாது. ஆகவே மணப் பெண் முதலில் மதம் மாறிய பின்னரே ஷரியா சட்டப் படியான திருமணம் நடைபெறுகிறது. இதையே பதிவு திருமணச் சட்டப் படி செய்திருந்தால் மணப் பெண் மதம் மாற வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆக இங்கு திருமணத்தின் முக்கிய நோக்கமே மதம் மாற்றுவது என்பதாகிறது. அதனாலேயே இது லவ் ஜிஹாத் என்று வழங்கப் படுகிறது.

எனது பார்வையில் இந்த பிரச்சினை:

ஒரு இந்துப் பெண் ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் பொழுது அவள் தன் அடிப்படை உரிமைகளைத் தானே இழந்து விடுகிறாள். ஆக அவள் சம்மதத்துடனேயே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் கூட அது உண்மையாகவே விவரம் தெரிந்து செய்து கொண்ட திருமணமாகக் கருதப் படாது. அவளை அறியாமலேயே முழு விபரங்களும் தெரிந்து கொள்ளாமலேயே தன் அடிப்படை உரிமைகளை இந்த ஷரியா திருமணம் மூலமாக இழந்து விடுகிறாள் என்பதே உண்மை நிலவரம்.

விபரம் தெரிந்தும், ஷரியா திருமணத்தில் உள்ள விபரீதத்தை உணர்ந்தும், சம்மதிப்பது குறித்து:

love-jihadஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்து பெண்கள் அனைவருமே வழக்கமாக தங்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ன என்பதை அறிந்து கொண்ட விபரமறிந்த பெண்களாக இருப்பதில்லை. தங்களது உரிமைகள் குறித்த விபரமின்மை, அறியாமையில் இருக்கும் பெண்களே இந்த ஷரியா திருமணத்தைச் செய்து கொள்கிறார்கள். என்னிடம் இது குறித்து எந்த ஆதாரமும் கிடையாது. இருந்தாலும் இப்படி ஷரியா சட்டப் படி திருமணம் செய்து கொள்ளும் இந்த இளம் இந்துப் பெண்கள் எல்லாம் இது முஸ்லீம்களின் முறைப்படி செய்யப் படும் ஒரு திருமணச் சடங்கு மட்டுமே மற்றபடி தங்கள் அடிப்படை உரிமைகள் எதையும் தாங்கள் இழப்பதில்லை என்று தாங்களாகவே விபரம் தெரியாமல் எண்ணிக் கொள்கிறார்கள் என்று யூகம் செய்கிறேன். அவர்கள் முதலில் உண்மை தெரியாமல் திருமணம் செய்ய ஒத்துக் கொள்கிறார்கள். அப்பொழுது அவளது காதலன் ஏற்கனவே திருமணமானவன் என்பதோ அல்லது இன்னொரு திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருப்பவன் என்பதோ அதில் ஷரியா சட்டப்படி எந்தத் தவறும் கிடையாது என்பதையோ இந்த விபரம் புரியாத அப்பாவி இளம் இந்துப் பெண்கள் உணர்வதில்லை. கர்ப்பமாதலோ அல்லது பிள்ளை பெற்றுக் கொள்வதோ பிரச்சினையை இன்னும் சிக்கல் ஆக்கவே செய்கிறது. ஏனென்றால் விவாகரத்துச் செய்வதோ அல்லது திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவதோ இந்த ஷரியா சட்டப்படி அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த வகையான பரிதாபகரமான திருமணங்கள் அனைத்திலும் இதுவே பொதுவான சரடாக, பொதுவான பிரச்சினையாக அமைகிறது. ஆகவே லவ் ஜிஹாத்தில் உள்ள முக்கியமான ஏமாற்று என்னவென்றால் பெண்கள் அவர்கள் அடிப்படை உரிமைகளை இழப்பார்கள் என்ற உண்மை தெரியாமல் ஷரியா திருமணம் செய்து கொள்வதே ஆகும்.

பரிந்துரை:

கலப்பு மதத் திருமணங்களைத் தடை செய்வது என்பது முட்டாள்த்தனமான ஒரு காரியமாக அமைந்து விடும். நான் அதை எந்தவிதத்திலும் மறைமுகமாகக் கூடப் பரிந்துரைக்க விரும்பவில்லை. ஆனால் ஷரியா திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் தங்கள் உரிமைகளை இழப்பது குறித்து சில பரிந்துரைகளைச் செய்ய விரும்புகிறேன்.

ஷரியா சட்டப் படி முஸ்லீமாக மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இந்துப் பெண்கள் அனைவருக்கும் தாங்கள் எந்தவிதமான உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லி அதைப் படித்துப் பார்த்து கையொப்பம் இடச் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும். இதன் மூலமாக குறைந்த பட்சம் அவர்களுக்கு தாங்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழக்கப் போகிறார்கள் என்ற குறைந்த பட்ச விபரமாவது தெரிய வரும். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்வது அவர்களது உரிமை/விருப்பம்.

hindu_women_converting_to_islamஇந்த உரிமை இழப்புப் படிவம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். கிராமப்புறப் பெண்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். கிராமப்புற இந்துப் பெண்கள் தாங்கள் இழக்கப் போகும் உரிமைகளை முழுப் புரிதலுடன் அறிந்து கொள்ளும் விதமாக இருக்க வேண்டும். உதாரணமாக,

அ) இந்தத் திருமணத்தின் மூலமாக உன் அடிப்படை உரிமைகளை இழப்பாய். அது உனக்குத் தெரியுமா? நீ நிச்சயமாக அவற்றை இழக்க விரும்புகிறாயா? ஆம்/இல்லை

ஆ) உன் கணவன் உன் சம்மந்தம் இன்றியே வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை இந்தச் சட்டம் அளிக்கிறது என்பதை நீ அறிவாயா? ஆம்/இல்லை

இ) நீ உன் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமைகளை இந்தச் சட்டத்தின் படி திருமணம் செய்து கொண்டாய் இழப்பாய். இதை நீ ஏற்றுக் கொள்கிறாயா? ஆம்/இல்லை

என்பன போன்ற எளிய புரிதலைத் தரும் கேள்விகள் அந்த உரிமை இழப்பு ஒப்புதல் படிவத்தில் இருத்தல் வேண்டும்.

பல இந்துப் பெண்கள் முஸ்லீம் ஆண்களை மணந்து கொண்டு சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள். அவர்களது உரிமைகள் பற்றிய புரிதல்களுடன் திருமணம் செய்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்காக எழுதப் பட்டது அல்ல இந்தப் பதிவு.

ஒரு சில பெண்கள் ஷரியா திருமணத்திற்குப் பிறகும் சந்தோஷமாகவும் உரிமைகளை இழக்காமலும் வாழ்கிறார்கள் என்பதற்காக, ஏராளமான விபரம் அறியாத நகர்ப்புற மற்றும் கிராமத்துப் பெண்கள் விபரம் தெரியாமல் தங்கள் உரிமைகளை இழப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு இந்தத் திருமணம் மூலமாக தாங்கள் என்ன இழக்கப் போகிறோம் என்ற விபரங்களைச் சொல்லியே ஆக வேண்டும் . தங்கள் வாழ்வில் எடுக்கப் போகும் முக்கியமான முடிவான திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் தகவல்கள் அளிக்கப் பட வேண்டும். அந்தத் தகவல்கள் பரவலாகவும் எளிமையாகவும் அனைத்து இந்துப் பெண்களும் தெரிந்து கொள்ளும் விதத்தில் பரப்பரப் பட வேண்டும்.

( Idea of India  குழுமத்திலிருந்து உங்களுக்காக வழங்கப் படும் இன்னொரு பதிவு இது). 

இவ பேரு ரூமி நாத். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பர்க்ஹோல தொகுதி.

இவள் ஹிந்து.  திருமணமானவள். கணவன் குழந்தை உண்டு. கடந்த வருடம் இஸ்லாமியன் ஜாக்கி ஜாகீர் என்பவனுடன் தொடர்பு முகநூல் மூலம் ஏற்பட்டு முதல் கணவன் விவாகரத்து பண்ணும் முன் கல்யாணம் செய்து கொண்டால் அந்த இஸ்லாமியனை.

இவர்களது கல்யாணத்துக்கு உறுதுணையாய் இருந்தது அஸ்ஸாம் அமைச்சர் சித்திக் அஹ்மத். இவள் இஸ்லாமிய மதத்துக்கு தன்னை மாற்றி கொண்டு தன பெயரை ராபியா சுல்தானா இட்டுகொண்டாள். பல எதிர்ப்புகள் இங்கே இருந்ததால் பங்களாதேஷ் சென்று விட்டாள்.

அந்த இஸ்லாமியன் இவள் மூலம் பல பண உதவியை பெற்று கொண்டு இவள் மூலமாக ஹிந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு இவள் அதற்கு உதவி இருக்கிறாள். பின்னர் அவன் இவளை துன்புறுத்த ஆரம்பித்தான் கொடூரமாக.  கடைசியில் 15 லட்சம் ஒரு கார் கேட்டு கொலை செய்ய முயற்சிக்கிறான்..

rumi_nath_love_jihad_victim

இப்பொழுது மீண்டும் இவள் அருணாச்சல் போலீசிடம் தஞ்சம் புகுந்து அவன் மீது குற்ரம் சுமத்தி அவன் ஜெயிலில் இருக்கிறான்.

அந்த இஸ்லாமியன் ஜாகிர் இதற்கு அவன் கூறிய பதில் அனைத்தும் குரான் படி தான் செய்தேன் என்றான். முடிவில் தெரிந்தது அங்கே நடந்தது லவ் ஜிஹாத்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்..ஒரு சாதாரண குடும்பம் இன்று எண்ணற்ற பெண்கள் லவ் ஜிஹாத் வலையில் சிக்கி சீரழிந்து கொண்டு இருகிறார்கள்..இது அதிகாரபூர்வமான உண்மை..கட்டாய மதமாற்றம் மற்றும் பெண் விற்பனை அடிமைகளாக அனுப்ப படுகிறார்கள் இத மூலம்…காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் இந்த அவலம் இருக்கிறது…இதை வெளிப்படையா சொல்ல தயக்கம் காட்டுகிறது அரசு..

இதை வெளிப்படையாக தேசிய அபாயமாக அறிவிக்க அரசும் ஊடகங்களும் முன் வரவேண்டும்..மத சார்பின்மைக்காக வாயை பொத்தி கொண்டு இருப்பது..இன்னும் பல பேர் வாழ்க்கைகள் துளைத்து விடும்…எத்தனை பேர் பாதிக்க பட்டு இருக்கிறார்கள் என்பதை வெளியே கொண்டு வரவேண்டும்..விழிப்புணர்வு கொடுக்கவேண்டும்.

– ரத்தினகுமார் வழக்கறிஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

வன்முறையே வரலாறாய்…- 30

மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்

 ‘அமைதி மார்க்கமென’ அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள்.

சிறந்த இந்திய வரலாற்றாசிரியர் எம்.ஏ.கான் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிக்கிறார். கலாச்சாரத்திலும் கல்வியிலும் செல்வத்திலும் மிக மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப் படுத்தப் பட்டன, படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.

அந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம்.

தொடர்ச்சி..

மத்திய கால இந்தியாவில், ஒரு இந்துப் பெண்ணின் கணவன் இறந்த பிறகு, அவள் அவனுடன் உடன்கட்டை ஏறும் வழக்கமானது இந்தியாவைக் கைப்பற்றி ஆண்ட ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், இந்து மதம் குறித்தான தவறான புரிதல்களையும் அவர்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால் “சதி” அல்லது ஜவுஹார் (Jauhar) என்னும் இந்த வழக்கம் இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன் ஒரு பொது வழக்கமாக இருந்ததில்லை. இந்துக்களிடையே உடன்கட்டை ஏறும் வழக்கம் மிக, மிக அபூர்வமானதாகவே நிகழ்ந்தது (தென்னிந்தியாவின் பெரும் அரசனான ராஜராஜ சோழனின் அன்னையார் அவ்வாறு உடன்கட்டை ஏறியவர் எனக் காண்கிறோம்).

Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar
Worshipful insignia in memory of brave Rajput women who committed Jauhar

இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்துப் பெண்கள் நெருப்பில் குதித்துத் தங்களின் உயிரைப் போக்கிக் கொள்ளும் ஜவுஹார் என்னும் கொடிய வழக்கத்தை ஆரம்பித்தனர். இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு துவங்கிய காலம் தொட்டு (634) இந்துப் பெண்களின் நிலைமை படு மோசமான நிலையை அடைந்தது என்பதனை முந்தைய பகுதிகளில் கண்டிருக்கிறோம். காஃபிர்களைக் கொன்று அவர்களின் செல்வத்தைக் கொள்ளையடித்த பின்னர், காஃபிர்களின் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிப்பதனை அமைதிமார்க்கக் கோட்பாடான குரான் அங்கீகரிக்கிறது.

634-ஆம் வருடம் துவங்கி, பின்-காசிமினால் 712-ஆம் வருடம் வெற்றி கொள்ளப்படும் வரையில் இஸ்லாமியப்படைகள் சிந்து சமவெளியைக் கைப்பற்றுவதற்கு எட்டு முறைகள் படையெடுத்து தோல்வி கண்டார்கள். வெற்றி கண்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களே தோல்வி கண்டவர்களின் பெண்களைக் கடத்திச் சென்று பாலியல் அடிமைகளாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை இந்தியாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள். பின்-காசிம் சிந்து சமவெளியை ஆண்ட மூன்று வருடங்களில் பல ஆயிரக்கணக்கான இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு போனான். அது போலவே கஜினி முகமது ஐந்து இலட்சம் (5,00,000) அடிமைகளை 1001-02 ஆம் வருடப் படையெடுப்பில் பிடித்துக் கொண்டு போனான். அதன் பின்னர் நடந்த படையெடுப்புகள் இன்னும் பல இலட்சம் பேர்களை அடிமைகளாக்கியது.

பின்-காசிமின் இந்த நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்.

queen_padmini_commits_sati_jauhar
Jowhar of Mewar

இதே போன்ற பெரும் ஜவுஹார் சம்பவங்கள் சித்தூரில் மட்டும் மூன்று முறைகள் நிகழ்ந்தன. அல்லாவுதின் கில்ஜி (1303) மற்றும் குஜராத்தின் பஹதூர் ஷா (1535), பின்னர் அக்பரின் படையெடுப்பான 1568-ஆம் வருடன் ஆகிய மூன்று சித்தூர் படையெடுப்புகளிலும் தோல்வியடைந்தவர்களின் மனைவிகள் ஜவுஹார் செய்து கொண்டார்கள். இதே வழக்கம் பின்னர் இந்திய-பாகிஸ்தான் பிரிவினை நடந்த 1947-ஆம் வருடமும் நடந்ததினைக் காண்கிறோம். தங்களின் கணவன்மார்கள் இஸ்லாமிய குண்டர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்களிடமிருந்து சிக்காமல் தப்புவதற்கென பல இந்து மற்றும் சீக்கியப் பெண்கள் தங்களைத் தாங்களே தீயிட்டு எரித்துக் கொண்டார்கள். இன்னும் சிலர் கிணறுகளில் குதித்தும், விஷமருந்தியும் இறந்ததைக் காண்கிறோம்.

*******

sati_jauhar_padmini
Jauhar of Chittoor (Rani Padmini)

இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தைய இந்தியாவில் கணவனுடன் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தாலும் (பரவலாக இல்லாமல்), அவ்வாறு நிகழ்கையில் அதனைத் தடுக்க எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளனும் முனையவில்லை. அக்பர் மட்டுமே அந்த வழக்கத்தைக் குறித்து விமர்சிக்கிறார். இருந்தாலும் அந்த வழக்கத்தை அதனைத் தடுக்க முயற்சிகள் எதுவும் அவரால் எடுக்கப்படவில்லை. “கட்டாயமாக எரிக்கப்படும் பெண்ணைத் தடுக்க மட்டுமே” அவர் முயற்சித்ததாக அக்பர்-நாமா கூறுகிறது.

இருப்பினும் உடன்கட்டை ஏறும் “சதி” வழக்கமானது இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் போது மிகவும் மோசமடைந்தது. இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இந்தியாவில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்ற இப்ன்-பதூதா, இந்துக்கள் மத்தியில் “சதி” எங்கும் கட்டாயமாக நிகழ்த்தப்படவில்லை என்றே குறிக்கிறார். கணவனை இழந்த விதவைப் பெண் விரும்பினால் மட்டுமே “சதி” கடைபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொல்கிறார் (“The burning of wife after her husband’s death is regarded by them as commendable act, but not compulsory….she is not forced to burn herself”). இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால் பல்லாயிரக் கணக்கான இந்து ஆண்கள் கொல்லப்பட்டபோது, அவர்களின் மனைவிமார்கள் தங்களின் இறந்த கணவன்மார்கள் மீது கொண்ட அபிமானத்துடன் உடன்கட்டை ஏறினார்கள்.

இது போன்றதொரு சம்பவத்தை நேரில் காணும் இப்ன்-பதூதா, “அம்ஜாரி நகருக்கருகில் (தாருக்கு அருகிலிருக்கும் அம்ஜேரா நகரம்) மூன்று பெண்களின் கணவன்மார்கள் போரில் கொல்லப்பட்ட பின்னர், அவர்களின் சிதையில் குதித்து இறக்க அந்த மூன்று பெண்களும் முடிவெடுத்தார்கள்….நான் எனது கூட்டத்தாருடன் அதனைக் காண்பதற்குச் சென்றிருந்தேன்….” என்கிறார்.

sati_jauhar_rajput_womenஉடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள். இந்துக்களை கவர்ந்து செல்வதும் பின்னர் அவர்களை அடிமைச் சந்தையில் விற்பதுவும் இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நடந்த ஒரு விஷயம் என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியில் மிகக் குறைந்த அளவே இருந்த “மாப்ளா” முஸ்லிம்கள் இந்துப் பெண்களையும், குழந்தைகளையும் தூக்கிச் சென்று அவர்களை ஐரோப்பிய வியாபாரிகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்வதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார்கள். முக்கியமாக கொச்சியின் டச்சுக் கோட்டையிலிருந்த ஐரோப்பியர்கள் “மாப்ளா”க்களிடமிருந்து அடிமைகளாக பிடித்து வரப்பட்ட இந்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளை வாங்கினார்கள். இது போன்ற காரணங்களே இந்து பெண்களை உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு இட்டுச் சென்றன.

(தொடரும்)