திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

இந்த முறை ராஜராஜன் சோழன் குறித்து அவதூறாகப் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்தை குறிவைத்து திராவிட சிந்தனையாளர்கள் அடிப்பதை நீங்கள் கவனிக்கலாம். ரஞ்சித் தமிழக அரசியல் களத்தால் கைவிடப்பட காரணமென்ன என்பது தமிழக அரசியலின் வேர் ஒளிந்திருக்கும் இடத்தை கவனித்தால் மட்டுமே புரியும்.

You can also get free next-day delivery by contacting us and selecting free next day delivery. You might also have to pay an online pharmacy Oupeye clomid tablet 50mg price in pakistan that specializes in the purchase of your drug from another country. Drug-induced erectile dysfunction (ed) is a common and underreported problem within the general population.

Injectable dosage forms include syrups, solutions, soft gelatin capsules and liquid and the drug in the form of tablets and capsules. Online is not a prescription medicine, as it is not regulated or tested by diamet sr 500 price a medical agency. It is an effective drug to treat acne, is used to treat acne and other skin conditions such as eczema and eczema and is used to treat acne.

In addition to the dose, there are a few other things that you need to know about doxycycline. Surgical site infection is a rare occurrence and is reported in less than 1% of purchase clomid online Clovis patients requiring surgery [4]. Some pets can become infected with heartworms from exposure to mosquitoes, but many others get them from heartworm-carrying mosquitoes.

நீதிக்கட்சி – திராவிடர் கழகம் – திமுகழகம் இது மூன்றினுடைய பரிமாணங்களை ஆழமாக உள்வாங்காதவர்களே இவற்றிற்கு ஒரே நிறம் தருவார்கள். ஆனால் இவை உடைத்து பகுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நீதிக்கட்சி இங்கு சொல்ல வந்த அரசியல் என்ன? பிராமணர் அல்லாத உயர்ஜாதிகளிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். அது ஒரு போதும் இந்து மத எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றை முன்னிறுத்தியது இல்லை. காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பு, ஆலயநுழைவு, சமபந்தி போஜனங்களை வெகு பிரசித்தமாக பிரச்சாரம் செய்து செயல்படுத்தியும் காட்டி வந்த நேரத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அதைப்பற்றி அதன் தலைமை பீடத்தின் கருத்தென்ன இருந்தது? அதனுடைய பிராமண எதிர்ப்பு என்பது கூட தங்களை புரட்சியாளனாக காட்டிக் கொண்டு சமூக அடுக்கில் கீழ்நிலையில் இருந்தவர்களை அதிகாரத்திடம் நகர்த்தவிடாமல் தாங்கள் கைப்பற்றிக் கொள்வது மட்டும்தான் நோக்கம்.

நீதிக்கட்சி மெல்ல தேய்ந்து அழிந்து போகும் நேரத்தில் பெரியார் திராவிட இயக்கத்தை உண்டு செய்கிறார். பெரியார் அதிதீவிர இந்து மத வெறுப்பை பரப்ப ஆரம்பிக்கிறார். பிராமணர் அல்லாதார் என்கிற ஆயுதம்தான் முக்கியம் என்பதை தீவிரமாக நம்பினார். அதற்கு ஒரே காரணம் அதிகாரம் பிராமணர் அல்லாத, சமூக அடுக்கில் மேல்-இடைநிலை ஜாதிகளிடம் மட்டுமே அது இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அவர் பிராமணிய எதிர்ப்பை மட்டுமே முன் வைத்தார். பெரியார் கலப்பு திருமணத்தால் எந்த பலனும் கிடையாது நாமெல்லோரும் சூத்திரர் எனவே பிராமணருக்கும் நமக்கும் இடையில் நடக்கிற திருமணம்தான் கலப்புத் திருமணம் ஆனால் அதனாலும் ஜாதி ஒழியாது என்று சொன்னார். பிராமணர்கள் அதே மரியாதையோடு இருக்கிறார்கள் கோவிலில், ஆனால் எங்களையும் பஞ்சமரையும் ஒன்றென ஆக்கிவிட்டார்கள் என்று வருத்தப்படுகிறார்.

இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்.

அதற்காக பெரியார் மீண்டும் மீண்டும் சொன்னது “தமிழர்களின் வரலாறே பார்ப்பன அடிமை வரலாறு ..திருவள்ளுவன், இளங்கோ, தொல்காப்பியன் எல்லோருமே பார்ப்பன அடிமை. திருக்குறள் தங்க தட்டில் வைக்கப்பட்ட மலம், சிலப்பதிகாரம் பெண்ணடிமை நூல், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று ஏகவாதங்களை வீசினார். தமிழர்களுக்கு ஒரு பெருமை மிகு வரலாறு இருப்பதையோ அல்லது அவர்கள் அதை பேசுவதையோ வெறுத்தார். அது அவர்களை சிந்திக்க வைத்தால் இந்து மத வெறுப்பையும்,பிராமண விரோதத்தையும் கட்டமைத்து தான் நினைக்கிற அரசியலை எழுப்ப முடியாது என்று நினைத்தார்.

ஆனால் திமுக இதில் முற்றிலும் வேறான சிந்தனை கொண்டது. நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை, திராவிட கழகத்தின் ஒருவகையான மறுத்தல் வாதத்தை விட்டு அது விலகி நடந்தது.

சோழன், பாண்டியன், சேரனை இணையற்ற திராவிட பெருமன்னர்களாக முன்னிறுத்தியது. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, தொல்காப்பியம் ஆகியவற்றை தன் மனம் போன போக்கில் நாத்திக நூல், தமிழர் மானம் என்றெல்லாம் யாருமே படிக்க மாட்டார்கள் என்ற தீர்க்கமான சிந்தனையில் வலிமையாக பிரச்சாரம் செய்தது. கம்பனின் ராமனை மட்டும் புறக்கணித்தது.

அண்ணா மிக நுணுக்கமாக மறைமலையடிகளின் தனித்தமிழ் சைவ அரசியலை உள்ளே இழுத்தார். “மறைமலையடிகள் சமயத் துறையில் – சைவத்தில் நம்பிக்கை வைத்திருந்தாரே உங்களுக்கு அது சம்மதமா? என்று சிலர் கேட்கக்கூடும். அன்பும் அருளும் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன். ஆண்டவன் ஒருவனே என்பதுதான் சைவம் என்றால் – நான் மிகச் சிறந்த சைவன்” (மேடைப் பேச்சு – 24.08.1958 – #அண்ணா)”

ஆக அன்று திமுக இன்று சீமான் பேசுவது போல இன்னும் சிறப்பாகவே பேசியது. தமிழர் ஆட்சி ஒப்பற்ற பேராட்சி ஆனால் பிராமணியம் சதி செய்து ஒழித்துவிட்டது என்று முன் வைத்தது. இன்று அதை மாற்றி சீமான் தெலுங்கர்கள் ஒழித்துவிட்டார்கள் என்கிறார். ஆனால் வரலாறு என்னவோ யாராவது தண்ணீர் தரமாட்டார்களா என்று சாவின் நொடியில் இழுத்துக் கொண்டிருக்கிறது இந்த நொடி வரை😁

நீலம் சஞ்சிவி ரெட்டியினை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் காமராஜர் உட்கட்சி பிரச்சனையில் விவிகிரியை நிறுத்தினார் இந்திரா காந்தி.ராஜாஜி கூட கடுமையாக கண்டித்தார் அதை. அப்போது இந்திரா வேட்பாளரை முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார். அப்போது பெரியாரிடம் காமராஜர் சொன்னதாக சொல்வார்கள் – “கங்கை வென்றான்,கிடாரம் வென்றான்” என்பார்களே இதுதானா? அது என கேட்டாராம்😁

காரணம் திமுக எல்லா மேடைகளிலும் திராவிட தோள்களை பார்த்தீர்களா? சேரன் செங்குட்டுவன் வீரத்தை கேளீர், ஈழம் சென்று கங்கை வென்று, கிடாரம் கொண்ட சோழனின் வீரத்தை பாரீர் என்றெல்லாம்தான் பேசிக் கொண்டிருந்தது. கருணாநிதியின் துண்டு ஒரு ராஜாவை போல தரையில் கிடக்கும். அவர் தன்னை ஆரூர் சோழன் என்று நம்பினார். தன்னை ராஜராஜன் என்று அவர் வலுவாக நம்பினார். ஆ.ராஜா தஞ்சை கோவில் விழாவிலேயே ‘என் தலைவர் ராஜராஜசோழன், தளபதி ஸ்டாலின் ராஜேந்திர சோழன்’ என்றே பேசியிருக்கிறார்.

நீதிக்கட்சியின் ஐரோப்பிய சிந்தனை முறை, திராவிடர் கழகத்தின் மறுப்பரசியல் வழியில் திமுக செல்லவில்லை; அது தமிழின் விழுமியங்களை போலியாக திரித்து தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல நம்பியது. அதை பரப்பியது. நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை வேறு வேறு காரணத்திற்காக நீட்டித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த அரசியலை அதன் மைய வேரிலிருந்தே வந்த சீமான் தெலுங்கர் எதிர்ப்பு என்றும், ரஞ்சித் திராவிட-தமிழ்தேசிய எதிர்ப்பு என்றும் உடைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை திராவிட சித்தாந்திகளுக்கு ஏற்படுத்தியுள்ளது. திருமாவளவன் திராவிடத்தோடு சமரசம் செய்துகொள்வார். அவர் இவர்களைப் போல பிராமணியம், கொஞ்சநாளாக ராமதாஸ் என்று பேசி கடந்துவிடுவார். ஆனால் ரஞ்சித் நீதிகட்சியில் இருந்து துவங்குவதை இவர்களால் ஏற்க முடியவில்லை.

ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை என்பது உண்மை. ஆரோக்கியமாக மாற்றத்தை நோக்கி நகர்வோம். பார்ப்போம்.

கட்டுரையாசிரியர் சுந்தர்ராஜ சோழன் தமிழ்நாடு அரசியல், தேசிய அரசியல், சமூகப் பிரசினைகள் மற்றும் வரலாறு குறித்து தொடர்ந்து காத்திரமான, சுவாரஸ்யமான பதிவுகளைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகிறார்.

அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து

morning_hindutvaஅவதூறுகளை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்துக்களுக்கு எவரும் கற்றுக்கொடுக்க தேவை இல்லை. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்துக்கள் அவதூறுகளை எதிர் கொண்டு வருகின்றனர். அவதூறுகள் பல வழிகளில் பலவிதங்களில் வருகின்றன. ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ என்றெல்லாம் கேட்கும் அற்பத்தனமான ஆபாச அறிவின்மை இந்த அவதூறு சங்கிலியின் முதல் கண்டுபிடிப்புமல்ல கடைசி கண்ணியுமல்ல. கம்பீரமான பெரும் ஊர்வலங்கள் மெல்ல நகரும் வீதிகளில் தெருநாய்கள் குரைப்பதற்கும் சுதந்திரம் இருந்தே ஆக வேண்டும். ஆனால் கடந்த ஐம்பதாண்டுகளாக தமிழகத்தில் இந்த ஆபாச அறிவின்மைதான் பகுத்தறிவு என்கிற பெயரில் வலம் வருகிறது.

இதனால் தமிழ் சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த இழப்புகள் சாதாரணமானவை அல்ல. நம் கலை பாரம்பரியம் மதம் பண்பாடு என அனைத்தின் மீதும் ஒரு இழிவு பார்வை; simon1ஒட்டுமொத்தமாக மதமாற்றத்தை எளிதாக்கும்  மனநிலைக்கு ஒரு சராசரி தமிழனை கொண்டுவந்ததுதான் இந்த ஈவெராவிய போலி-பகுத்தறிவின் பங்களிப்பு. இதனால் மக்களுக்கு அறிவு ஏற்பட்டது மூடநம்பிக்கை ஒழிந்தது என்பதெல்லாம் கலப்படமில்லாத பொய்யே தவிர வேறில்லை. சீமானின் மடத்தனமான பகுத்தறிவற்ற உளறல்களில் அவ’ர்’ சிவலிங்கம் என்றால் என்ன என்கிறார்.  அதாவது அது ஆண்குறி என்றும் இந்துக்கள் குறிவழிபாடு செய்பவர்கள் என்றும் அது அவமானமான காட்டுமிராண்டித்தனம் என்றும் மிஷிநரிகள் காலம் காலமாக செய்து வந்த பிரச்சாரத்தை சீமான் சுட்டுகிறார். நம் பண்பாட்டு ஆன்மிக சின்னங்களை அறிந்து கொள்வதில்இந்த பகுத்தறிவு போலிகளின் மூளை ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டு பின்னால் உள்ளது . இந்த போலி பகுத்தறிவு மனநோயாளிகளும் அவர்களை பின்பற்றுவோரும் அனுதாபத்துக்குரிய பிறவிகள் ஆனால் அவை நம் அமைதியை சீர்குலைத்து அடுத்தவனின் ஆயுதங்களாக மாறும் போது அதை எதிர்கொள்வது எப்படி?

இத்தகைய பிரச்சாரங்கள் ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல்கள் இவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது? எழுத்தாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் இது குறித்து சட்டரீதியான ஒரு தெளிவான பார்வையைத் தந்திருக்கிறர. அவருக்கு தமிழ்ஹிந்து தளத்தின் சார்பாக நன்றிகள்.:

சீமானுடைய பேச்சு சந்தேகத்திற்கு இடமில்லாமல் சட்ட விரோதமானது. இந்திய தண்டனைச் சட்டம் 295 A வின் கீழ் குற்றமாகும்.
பிரிவு 295 A:

யார் ஒருவர் வேண்டுமென்றே, வன்மம் பாராட்டுகின்ற நோக்கில், எந்த குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில், வார்த்தையாலோ (எழுத்தாகவோ, பேச்சாகவோ) அல்லது செய்கையினாலோ அல்லது கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ, அல்லது வேறெந்த விதத்திலோ அவர்களது மதத்தையோ, மத நம்பிக்கையையோ அவமானப்படுத்தினாலோ, அல்லது அவமானப்படுத்த முயற்சி செய்தாலோ அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்லது அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

295 A குற்றம் புலன்கொள் (Cognizable) குற்றம் மற்றும் பிணைவிடாக் (Non-bailable) குற்றமாகும்.
சீமானுடைய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 298 கீழும் குற்றமாகும். மேலும் தன்னுடைய இந்தப் பேச்சால் அவர் இரு சமூகத்தினரிடையே பகையை வளர்க்கும் விதத்திலும், மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார். அதனால் அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A வின் கீழும் குற்றம் புரிந்திருக்கிறார். சீமான் மேற்சொன்ன சட்டவிதியின் படி குற்றம் இழைத்திருக்கிறார். அதனால் அவர் தண்டிக்கப்படவேண்டும் என்றும் ஹிந்துக்கள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் எப்படி செய்வதென்று தெரியவில்லை என்று முக நூலில் கருத்து தெரிவிக்கிறார்கள்.
யார் புகார் கொடுக்கலாம்?
சீமான் செய்தது கிரிமினல் குற்றம். அரசாங்கத்திற்கு எதிரானது (அனைத்து கிரிமினல் குற்றங்களும் அரசாங்கத்திற்கு எதிரானவைதான்). அதனால் சீமானின் பேச்சால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம்.
எங்கே புகார் கொடுக்கலாம்?
சீமானின் சட்டவிரோதப் பேச்சின் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டு அனைத்து இடங்களிலும் பார்க்கமுடிகிறது (தகவல் தொழில் நுட்பம் பிரிவு 66 A வின் படியும் சீமான் மீது புகார் கொடுக்க முடியும்). பேச்சைக் கேட்டு பாதிப்பு அடைந்தவர்கள் அவர்களது அருகாமையில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் செய்யலாம்.
சிக்கல்:
ஏனைய புலன்கொள் குற்றம் மற்றும் பிணைவிடாக் குற்றம் புரிந்தவர்கள் மீது புகார் கொடுத்தால் காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்யும். மேற்கொண்டு நீதிமன்றமும் சட்ட நடவடிக்கை எடுக்கும். ஆனால் 295 A, 153 A பிரிவின் கீழ் குற்றம் இழைத்தவர்கள் மீது புகார் கொடுத்தால் காவல்துறையால் சீமானை கைது செய்ய முடியாது. நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் 295 A மற்றும் 153 A பிரிவுகளில் குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரை செய்ய வேண்டும். குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு சட்டத்தில் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சீமானின் மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அரசாங்கம் ஒப்பளிப்பு வழங்கும் வரை மேல் நடவடிக்கைக்கு காத்திருக்க வேண்டும்.

சுருக்கமாக சொன்னால் அரசாங்கத்துக்கு அரசியல் வைராக்கியம் வேண்டும். அது ஜெயலலிதா அரசுக்கு இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனோதானோ என்று இரண்டு நாட்கள் அவரை தூக்கி ஜெயிலில் வைத்து சொகுசாக பார்த்து கொண்டு பின்னர் தியாகி என வெளியே விடவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அரசாங்கத்தை காட்டிலும் நீதி மன்றங்களை நம்புவது உத்தமம். sekarஇந்த விஷயத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். உடனடியாக நீதி மன்றத்தில் சீமானின் ஆபாச முட்டாள்தன பேச்சுக்கு எதிராக வழக்கு பதிந்திருக்கிறார். பொதுவாக இது மத உணர்வை புண்படுத்தும் செயல்மட்டுமல்ல. வெறுப்பு குற்றமும் கூட. Hate Crime. எனவே அத்தகைய ஒரு வெறுப்புணர்ச்சியை பரப்பி வரும் ஒரு வெறியன் பொது ஊடகங்களில் தனிமைப்படுத்தப் படவேண்டும். ஆனால் ஆனந்தவிகடன் முதல் இண்டியா டுடேயின் தமிழ் பதிப்பு வரை இந்து வெறுப்பு என்பதே சமூக நீதி என்பது போன்ற மாயபிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். தந்தி டிவியில் சீமான் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது அதனை முடக்கக் கூறி இந்துக்கள் பெரிய அளவில் தந்திக்கு மெயில்கள் அனுப்பலாம். கடிதங்கள் அனுப்பலாம். மொழியில் நிதானத்துடன் இவை செய்யப்பட வேண்டும்.

Metronation Chennai Television Ltd.
RMZ Millenia, 1C, 1st Floor,
No.143, Dr.M.G.R. Road, Kandanchavadi,
Perungudi, Chennai-600 096.
Telephone(s) +91-44-42907777, +91-44-42907789
Fax: +91-44-4290779
feedback@dttv.in
For Advertising Contact
South: V Damodar; Ph: 98410 02001; EMail: damodar@dttv.in
West: Jagdish Amin; Ph: 98671 65549; EMail: jagdish@dttv.in
North: Manish Roy; Ph: 98990 77799; EMail: manish@dttv.in

’சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ எனும் பெயரில் முகநூலில் இயங்கும் ஹிந்து இயக்க சகோதரர் (https://www.facebook.com/enlightened.master.3?fref=ts) பின்வரும் மடலை வடிவமைத்து அதனை முதலமைச்சருக்கு cmcell@tn.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறார். இதையும் நாம் செய்ய வேண்டும்.
krishnam

மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களே வணக்கம்.

சமீப காலமாக‌ “நாம் தமிழர்” என்கின்ற கட்சி/இயக்கத்தை சேர்ந்த‌ சைமன் என்கின்ற சீமான் என்பவர். இந்த நாட்டின் இதிகாச புருஷன், சக்கரவர்த்தி திருமகன் உலகில் உள்ள ஹிந்துக்களின் புனித தெய்வமான ஸ்ரீ. ராமபிரானை தர‌க்குறைவான வார்த்தைகளால் பேசி உள்ள வீடியோ பார்த்து நானும் என் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் மன வருத்தத்திற்கு உள்ளானோம். இவர் சிவலிங்கத்தையும் இதைப்போலவே கேவலமாக பேசியுள்ளார். தமிழகத்தின் பெரும்பான்மையான சமுதாயமான இந்துக்களையும் மிகவும் புண்படுத்தி பேசியுள்ளார். தமிழ் நாடு போன்ற அமைதிப் பூங்காவில் இப்படி ஒருவர் ஒரு மதத்திற்கு எதிராக பேசி, கடவுள்களை அசிங்கமாக பேசுவது நாட்டின் ஜன நாயகத்திற்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்கிறது. அதுவும் வேற்று மதத்தை சார்ந்த ஒரு நபர் இப்படி பேசுவது மதங்களுக்கு இடையே குழப்பங்களையும், கலவரங்களையும் உருவாக்கும் என்று தோன்றுகின்றது. இதை அரசாங்கமும் இப்படியே விட்டு கொண்டு போனால் கண்டிப்பாக இந்த நாட்டின் பூர்வ குடி மக்களும், பெரும்பான்மை மக்களும் மிகவும் மனத்தளர்ச்சி அடையும் சூழ்நிலை உருவாகக் கூடும். மேலும் ஹிந்து சமுதாயத்திற்கு எப்போதும் ஆதரவும் அரவனைப்பும் தரும் நீங்கள், அனைத்து சமுதாயத்தையும் சமமாக பாவிக்கும் நீங்கள், இதை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த சைமன் என்கிற சீமான் மீது நீங்கள் தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒரு சராசரி தமிழனின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

இவை எல்லாம் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். இன்னும் வேறு சில அவதூறுகள் உண்டு. அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை நாளை பார்க்கலாம்.

ஈ.எம்.எஸ் முதல் ஜெயமோகன் வரை…

அண்மையில் எழுந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் திரு.ஜெயமோகன் தமிழ் தமது வலைதளத்தில் பின்வருமாறு எழுதுகிறார்.morning_hindutva

அப்படியென்றால் ஈவேராவின் பகுத்தறிவுப்பிரச்சாரம் இங்கே என்னவாயிற்று? நாராயணகுருவும் காந்தியும் என்னவானார்களோ அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காந்தி மகாத்மாவாக ஆனார். நாராயணகுருவுக்கு கோயில்கள் கட்டப்பட்டன….

வாழ்நாளெல்லாம் ஈவேரா அவர்கள் சொல்லிவந்த பகுத்தறிவு பற்றிய அறிவுறுத்தல்கள் அப்படித்தான் ‘தெய்வத்தின்குரல்’ ஆக மாறி மறைந்தன. ஈவேரா இந்திய சமூகத்தின் பெருந்திரள் மனநிலையைத்தான் மிகப்பெரிய பலவீனமாகக் கண்டார். ஆகவே எல்லா நம்பிக்கைகளையும் அவர் அடித்து நொறுக்க முயன்றார்.

எவையெல்லாம் புனிதமானவை, jmகேள்விக்கு அப்பாற்பட்டவை என்று கருதப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் விமர்சித்து கிண்டல்செய்து நிராகரிக்கிறார். மதம், இனம், மொழி, சாதி, கடவுள், ஆசாரங்கள் , பண்பாடு, பழம்பெருமைகள் எல்லாவற்றையும். தமிழ்ச்சமூகம் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்தால் கறாரான சுயவிமர்சனம் நோக்கிச் சென்றிருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் எல்லாம் கிழித்து பரிசோதனை மேசைமேல் போட்டு ஆராய்ந்திருக்கும்.

அது சிறிய அளவில்கூட இங்கே நிகழவில்லை. நேர்மாறாக அவர்சொன்னவை எல்லாம் அவரது மகத்துவத்தின் இயல்புகளாக மட்டுமே கருதினர் நம் மக்கள்.

இது எந்த அளவு உண்மை? ஈவேரா செய்தது பகுத்தறிவு பிரச்சாரமே அல்ல. அவர் செய்ததெல்லாம் வெறுப்பு வியாபாரம் மட்டும்தான். சமூக அவலங்களை மூலதனமாக்கி ஈவேரா செய்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு மேல் அவர் எழும்பவே இல்லை. ஜெயமோகனின் அண்மை கருத்தையும் ஈவேரா எப்படி அணுகியிருப்பார்? அதற்கு வேறு கணக்குகள் வைத்திருப்பார் ஈவேரா. திமுக உடனான கருத்து வேறுபாட்டால் காமராஜரை ஆதரித்தவர், திமுக வென்றவுடன் காமராஜரை வெங்காய கிண்டலடிக்க தயங்கவில்லை:

 கடவுள் கதையும் சிரிப்பாய் சிரிக்குது. செருப்பால் அடித்தார்களே கடவுளை என்ன ஆகியது? செருப்பாலே அடித்தால் ஓட்டு போட மாட்டேன் என்று காமராஜர் முதற்கொண்டு பிரச்சாரம் செய்தார். திமுக 184 வந்துவிட்டதே! காமராசர், கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர் கூட வரவில்லையே. (19-12-1973, ஈ.வே.ராமசாமி தியாகராய நகரில் பேசியது.)

இது புனிதம் உடைத்தல் அல்ல பச்சை சந்தர்ப்பவாதம். கேவலமான அதிகார பச்சோந்தித்தனம்.  ஜெயமோகனால் தனக்கு என்ன ஆதாயம் என பார்த்திருப்பார் ஈவேரா. தனக்கு என்றால் தனக்கு தன்னுடைய கருத்தாக்கம் என அவர் முன்வைத்த வெறுப்பு பிரச்சாரத்துக்கு கூட இல்லை. தனக்கு. தான் தன் சுகம் என்பவற்றுக்கு. எவ்வளவு பகுத்தறிவுவாதிகளாய், நாத்திகர்களாக இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக் கூடாது. என்று பிரகடனம் செய்தவர் ஈவேரா. (விடுதலை 20-10-1967). எனவேதான் ஞாநி என்னதான் போலி-பகுத்தறிவு குட்டிக்கரணம் போட்டு, இந்துத்துவர்களை கொலைவெறியுடன் கேவலமாக பேசி தன் திராவிட விசுவாசத்தை காட்டினாலும் மிக எளிய முதல் சந்தர்ப்பத்திலேயே அவர் ‘பாப்பான்’ என விளித்து வசை பாடப்படுவார். ஜெயமோகன் எந்த திராவிட கும்பல் லும்பனாலும் அல்லது கழக-குடும்ப தலைவனாலும் எண்ணிக்கூட பார்க்க முடியாத உயரத்தில் தமிழுக்கு என்றென்றைக்குமான பங்களிப்பை தந்திருக்கட்டுமே. அதனால் என்ன!  கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் மலையாளி என கல்லெறியப் படுவார். ஈவேராவே இருந்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஏனெனில் இது மூத்தார் வழிபாட்டு மனநிலை அல்ல… திராவிடமெனும் முற்றிய இனவாத மனநோய்… ஜெயமோகனின் கருத்தில் ஆர் எஸ் எஸ் சதியை கண்டுபிடிக்கும் அ.மார்க்ஸ் மூத்தார் வழிபாட்டு மன உணர்விலிருந்து evr_fraudஅதை பேசவில்லை. ’இதை ஏன் தேவபாடைக்கு ஜெயமோகன் சொல்லக்கூடாது?’ என அறைகூவலிடும் சித்தாந்த வாதி இதை மூத்தார் மனநிலையிலிருந்து முழங்கவில்லை. இந்த மனநோயின் மூலகர்த்தா ஈவேராமசாமியே தான்.

இறக்குமதி செய்தது ஐரோப்பாவிலிருந்து. ஆம் ஐரோப்பாவில் தொழில் புரட்சியின் போது தனிமனிதத்துவம் மட்டும் எழவில்லை. இனவாத கோட்பாடுகளும் மீள்பலம் பெற்று எழுந்தன. கிறிஸ்தவ இறையியலில் வேர் பிடித்த யூத வெறுப்பு நவீன ஐரோப்பாவில் பலம் கொண்டு எழுந்தது. சமுதாயத்துக்கு இலக்கியத்துக்கு யூதர்கள் எத்தனை பங்களித்திருந்தாலும்  ஒருவரை யூதராக அடையாளம் கண்டு அவர் மீது வசைகளும் அவமானங்களும் பொழியப்பட ஒரு சிறு சந்தர்ப்பம் கூட தவறவிடப் படவில்லை. ஈ.வே.ராமசாமி – சி.என்.அண்ணாதுரை அதை தமிழகச் சூழலுக்கு கொண்டு வந்தார்கள். ஆரியனாக பிராம்மணர்கள் அடையாளப் படுத்தப் பட்டனர்.  மற்றெந்த மொழி சிறுபான்மையும் தந்திரக்காரர்களாக ஊடுருவிகளாக ஐந்தாம் படையாக பார்க்க நாம் கற்றுத் தரப்பட்டோம். ஈவேராவின் பகுத்தறிவு நமக்கு சொல்லி தந்தது எந்த கருத்தாக்கத்திலும் எந்த பாரம்பரிய வெளிப்பாட்டிலும் இன-வாத சூழ்ச்சிகளை கண்டுபிடிக்கத்தான். அதைத்தான் இன்றைக்கு அவர் வழி வந்தோர் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஜெயமோகன் விஷயத்திலும் நடந்தேறியது இதுதான்.

ஆதீனங்களை கிண்டல் செய்யும் பரமார்த்த குரு கதையை கான்ஸ்டண்டைன் பெஸ்கி (‘வீரமா முனிவர்’) தமிழ்நாட்டில் எழுத முடிந்தது. தனிமனித வாதம் துளிர்விட்ட காலகட்டத்தில் கூட ஐரோப்பாவில் ஒரு இந்து துறவி சென்று அங்குள்ள பாப்பரசர்களையும் இதர சபை ஊழிய அதிகாரிகளையும் குறித்து இப்படி ஒரு இலக்கியத்தை எழுதியிருந்தால் நடுச்சந்தியில் குத்தீட்டியில் எரிந்து  மீளாநரகத்துக்கு அனுப்பப் பட்டிருப்பார். அன்று மூத்தார் வழிபாடு நம் மத்தியில் இல்லையா?

துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகன்  இதில் இந்து முன்னணியின் சுசீந்திரம் கிளையினர் அவ்வூர் அம்மன் குறித்து ஜெயமோகன் எழுதியதற்கு எதிராக அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு வைத்த ஒரு பலகையை முன்வைக்கிறார். கொஞ்சம் யோசித்தால் இதில் உள்ள அபத்தம் புரியும். இணையத்தில் இயங்குவோரும், அறிவுசீவிகள் என தம்மை முன்வைப்போரும், ஏன் தமிழக அரசியலில் ஜெயமோகனால் மிகவும் புகழப்பட்டவரும் கூட, ஜெயமோகன் ஏதோ தமிழுக்கு எதிராக வஞ்சப்போர் புரிவது போல ’தி கிண்டு ’ அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தனர்.  இணையம் முழுக்க வசையால் நிரம்பியது. ஆனால் ஜெயமோகன் முன்னுதித்த நங்கை அம்மன் குறித்து எழுதிய போது இந்துத்துவர்களில் ஒரு சாரரே இணையத்தில் இதற்கான ஜெயமோகனின் கருத்து சுதந்திரத்தை ஆதரித்து குரல் எழுப்பினர் – ஜெயமோகன் கூறியதில் தகவல் பிழை இருந்த போதிலும். ஒரு சிற்றூர் இந்துத்துவர்களின் உணர்ச்சி வசப்படுதலை இணையம் முழுவதும் நிரம்பி உயர் அதிகார கும்பல் வரை பொங்கி வழியும் வசைபாடலுடன் ஒப்பிடுதல் என்பது – மென்மைப்படுத்தி சொன்னால், இன்றைய சூழலை சமாளிப்பதற்கான சாமர்த்தியமான அரசியல் உத்தி. அவ்வளவுதான்.

இந்துத்துவம்அதன் ஆக சிறந்த வடிவில் உரையாடலை சமரசமின்றி முன்வைத்து வந்துள்ளது.

manthan1

ஆண்டு 1988. சோவியத் அக்டோபர் புரட்சி குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்த இதழான மந்தன் (தீன்தயாள் ஆராய்ச்சி மையத்தின் அதிகாரபூர்வ இதழ்),  மூன்று சிறப்பிதழ்களை கொண்டு வந்திருந்தது:malkani_ems ‘The October Revolution & its Impact on World Civilisation’.

இதில் முதல் இதழில் (மார்ச் 1988) அன்றைய பாரதத்தின் மிகவும் அறிவார்ந்த ஆழங்கால் பட்ட பொதுவுடமை சித்தாந்தவாதிகள்  ஒவ்வொரு கட்டுரை கொடுத்திருந்தனர். பர்தன், சுபத்ரா பானர்ஜி, ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ஆகியோர். இதில் மந்தன் ஆசிரியர் கே.ஆர்.மல்கானி அவர்களும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் முன்வரைவை பார்த்தார் ஈ.எம்.எஸ். உடனடியாக அதை மறுத்து ஒரு கட்டுரை எழுதினார். அந்த மறுப்பு கட்டுரை அதே இதழில் வெளியானது.

இன்றைக்கு ’தி கிண்டு’ உள்ளிட்ட எந்த பத்திரிகையாவது இந்த கருத்தியல் சுதந்திரத்தை இந்த நேர்மையுடன் கையாளுகிறதா? ”ஹிந்துத்துவம் அதன் சீரிய வடிவில் முன்வைத்த இத்தகைய மகோன்னதாமன கருத்து சுதந்திரத்துக்கான  தார்மீகத் திடம் இன்றைய சூழலில் நிலவுகிறதா?”  என்பது நாம் கேட்க வேண்டிய கேள்வி.

இந்த ’நாம்’  அறம் சார்ந்த எழுத்தாளர்கள் முதல் இன்றைய இணைய இந்துத்துவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கியது.

நாளை காலை மீண்டும் தேநீருடன் சந்திப்போம்.

பாரதி: மரபும் திரிபும் – 3

பாரதி: மரபும் திரிபும் – பாகம் 1 | பாகம் 2

(தொடர்ச்சி…)

மதிமாறனைப் பார்த்துச் சிரிக்கும் நீதிக்கட்சித் தலைவர்கள்!

நீதிக்கட்சி அரசு பொறுப்பேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தது என்பதை விளக்குகிறார் மதிமாறன். (பக்.72-73)

அதற்கு ஆதாரமாக திராவிடர் கழக வெளியீடான முனைவர் பு.ராசதுரை எழுதிய ‘நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக’ என்ற நூலைக் காட்டுகிறார்.

அந்த நூலே பொய்களால் ஆனது. தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டது.

மதிமாறன் எடுத்துக்காட்டியுள்ள பகுதிகளில், ‘இச்செய்திகள் 11.08.1920 நாளிட்ட 1934-ஆம் எண் ஆணையில் காணப்பெறுவன’ என்று இருக்கிறது. அதாவது 1920-இல் நீதிக்கட்சி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மதிமாறன் எடுத்துக்காட்டுகிறார்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

1919-ஆம் ஆண்டைய மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்த சட்டப்படி அமைந்த அரசியல் அமைப்பு இரட்டை ஆட்சி. இச்சட்டம் இயற்றப்பட்டபின் சென்னை மாநிலச் சட்டமன்றத்துக்கு தேர்தல் நடந்தது 30.11.1920.

நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை பொறுப்பை ஏற்றது 17-12-1920. முதல் சட்டமன்றக் கூட்டம் 1921 ஜனவரி 12-ஆம்நாள் நடைபெற்றது.

முதல் சட்டமன்றக் கூட்டமே 1921-இலேதான் நடைபெற்றது என்கிறபோது 1920-இல் நீதிக்கட்சி எப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆணைகளைப் பிறப்பித்து இருக்க முடியும்?

அடுத்து, நீதிக்கட்சி செய்ததாகக் குறிப்பிடுவது 16-12-1921 நாளிட்ட 2815 எண் ஆணையிலுள்ள செய்திகள். இதற்கும் நீதிக்கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமுமே இல்லை. ஏனென்றால் அது பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்த திட்டமாகும். 1902-இல் தரிசு நிலங்களை டி.சி.நிலங்கள் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒப்படை செய்ய மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து ஆணை பிறப்பித்தது பிரிட்டிஷ் ஆட்சி. அதனுடைய தொடர்ச்சிதான் மேற்கண்ட ஆணைகள்.

தாழ்த்தப்பட்டோருக்கு நீதிக்கட்சி தொண்டு செய்தது என்று சொன்னால் இறந்துபோன நீதிக்கட்சி ஆட்சியாளர்களே மதிமாறனின் கனவில் தோன்றி அவரைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பார்கள்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏராளமான நன்மை செய்தது என்று சொல்லும் மதிமாறனின் மழுங்கிய மூளையில் ஓங்கி குத்துவிடுகிறார் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரும் தாழ்த்தப்பட்டவர்களின் புகழ்பெற்ற தலைவருமான எம்.சி.ராஜா (1883-1945).

நீதிக்கட்சி குறித்து எம்.சி.ராஜா (1927-இல்) எழுதுகிறார்:

‘‘இப்போது அதிகாரத்திலிருக்கிற கட்சி நம்முடைய தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பல நன்மைகளைச் செய்தது என்று நான் கேள்விப்பட்ட போது வியப்பில் ஆழ்ந்து போனேன். ஆதிதிராவிடர்களின் செலவிற்காகச் சில மானியங்களையும் ஒதுக்குகின்றது என்று சில அரசியல்வாதிகள் என்னிடம் கூறினர்.

….இதே சூழ்ச்சிக் கொள்கையை மக்கள் முன் வைத்துத்தான் கபடநாடகமாடி நீதிக்கட்சிக்காரகள் ஆட்சிக்கு வந்தனர். நமக்காக ஒதுக்கப்பட்ட தொகை, நம் நலனுக்காகையாலும் முறை, துறை என்று காணப்படும் வரவுசெலவுப் புள்ளி விபரங்கள் யாவும் உண்மையானவை அல்ல; பொய்யே. மேலும் உண்மையாகக் கூறப்போனால், ‘ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்’ ஆட்சியாளரிடம் கேட்ட செலவுப் புள்ளிகளைத்தான் நமக்காகச் செலவிடப்படுவதாய் வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையில் அந்தப் புள்ளி விவரப்படி இவர்கள் நமக்குச் செலவிடவில்லை.

…..1921-22ஆம் ஆண்டில் 6.47 லட்ச ரூபாய் செலவிட உத்தேசித்து, தொழிலாளர் நலத்துறையும், மற்ற துறைகளும் கேட்டன. இந்த வேண்டுகோள் சட்டமன்றத்திற்கு வந்தது. இச்சட்டமன்றம் 6.47 லட்சம் மானியம் கோரியதை ஒரு லட்சமாகக் குறைத்தது.

…..தற்போதுள்ள நாட்டாண்மைக் கழகத் துறைகளில் ஆதிதிராவிடர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இத்திட்டம் கூட இன்று ஆட்சிபீடத்தில் இருக்கும் அமைச்சரவையால் நமக்கு வழங்கப்படவில்லை. அதற்கு முன்பே வேறுஒருவரால் வழங்கப்பட்ட ஒன்றாகும். இவர்கள் ஒரேஒரு இடத்தைக்கூட நமக்குப் புதிதாக ஒதுக்கவில்லை.

……திருவண்ணாமலை நகராண்மைக் கழகத்தில் நம் பிரதிநிதி இறந்தபோதும், செங்கற்பட்டிலும், கடலூரிலும் வட்டக் கழக உறுப்பினர்கள் பதவி இழந்தபோதும் நமக்கே உரித்தான இவ்விடங்கள் சாதி இந்துக்களால் மீண்டும் நிரப்பப்பட்டன.

…..’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற பெயரால் செய்யப்படும் எந்தத் திட்டத்திலும் மருந்துக்குக்கூட உண்மை இல்லை. ஆனால் உண்மையில் நிலைத்திருப்பது ‘வகுப்புவாத ஏகாதிபத்தியமும், சாதியின் கொடுங்கோன்மை’யுமே ஆகும்.

…..1923-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஆதிதிராவிடப் பிள்ளைகளுக்கு உபகாரச் சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமென்று நான் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தேன். அன்று கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு சாதி இந்து. அவர் ‘ஏழைமை என்பது ஆதிதிராவிடருக்கு மட்டும்தான் உள்ள தனிச்சொத்தல்ல. மற்ற வகுப்பாரிலும் ஏழைகள் இருக்கின்றனர்’ என்று கூறி என் தீர்மானத்தை எதிர்த்தார்.’’

(நூல்: ஒடுக்கப்பட்ட இந்துக்கள்)

இப்படி மதிமாறனின் மூளையைக் குத்திக்கொண்டே போகிறார் எம்.சி.ராஜா. ‘நீதிக்கட்சியே தாழ்த்தப்பட்டர்களுக்கு நன்மை செய்தது’ என்று பூக்களால் மூடப்பட்ட பாறாங்கல்லைத் தூக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் தலையில் போடுகிறார் மதிமாறன்.

“தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றிய நீதிக்கட்சிக்காரர்களைத்தான் தேசத்துரோகிகள் என்கிறார் நம் வரகவி” என்று விமர்சனம் வைக்கும் மதிமாறனுக்கு எம்.சி.ராஜாவின் விமர்சனத்தையே பதிலடியாக நாம் கொடுத்திருக்கிறோம்.

ஆனால் இதில் ஒன்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பாரதி, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடியதால்(?) நீதிக்கட்சிக்காரர்களை விமர்சிக்கவில்லை. நீதிக்கட்சிக்காரர்கள் பிரிட்டிஷாருக்கு வால்பிடித்ததினால்– ஆதரவாக இருந்ததினால்– பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இந்துமதத்தை அவர்கள் கடுமையாக விமர்சித்ததினால்–  மட்டுமே பாரதி அவர்களை தேசத்துரோகிகள் என்று விமர்சித்தார்.

(நீதிக்கட்சி இருந்த கடைசி காலக்கட்டம்வரை ஏகாதிபத்தியத்திற்கு– பிரிட்டிஷாருக்கு ஆதரவாகவே இருந்தது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.)

பாரதி மட்டுமல்ல அன்று தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அனைவரும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த நீதிக்கட்சியை எதிர்த்தனர்.

பிராமணர்-பிராமணரல்லாதார் அரசியல் பிரச்சினை  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக ஆகிவிடக்கூடாது எனும் கருத்துக் கொண்ட காங்கிரசில் இருந்த பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சியை எதிர்க்க காங்கிரசிற்குள்ளேயே ஒரு தனி அமைப்பை நிறுவினார்கள். இதற்கு ‘மெட்ராஸ் பிரசிடென்சி அசோசியேஷன்’ என்ற ‘சென்னை மாகாணச் சங்கம்’ என்ற ஓர் அமைப்பை 1917-இல் நிறுவினார்கள்.

திவான் பகதூர் கேசவப்பிள்ளை தலைவராகவும், லாட் கோவிந்ததாஸ், சல்லா குருசாமிச் செட்டியார், ஈ.வெ.ராமசாமி நாயக்கர், நாகை பக்கிரிசாமிப் பிள்ளை, சீர்காழி சிதம்பரநாத முதலியார், தஞ்சை ஸ்ரீநிவாசப் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் உதவித் தலைவர்களாவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அமைச்சராக தி.வி.கோபால சாமி முதலியாரும், குருசாமி நாயுடுவும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், சர்க்கரைச் செட்டியாரும், திரு.வி.கவும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, காங்கிரசில் இருக்கும்வரை ஈவெராவும் நீதிக்கட்சியை எதிர்த்தார் என்பதுதான். திரு.வி.க.வும் நீதிக்கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று நீதிக்கட்சிக்காரர்களை கேள்வி கேட்பார். கூட்டம் கலவரத்தில் முடியும். இப்படியும் நீதிக்கட்சிக்காரர்களை கடுமையாக எதிர்த்தனர்- அன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்துப் போராடியவர்கள்.

இந்தச் சென்னை மாகாணச் சங்கம் மிகக் கடுமையாக நீதிக்கட்சியை எதிர்த்தது. பிராமணரல்லாதார் பிரச்சினைகளில் அக்கறை கொண்ட வ.உ.சி.யும் நீதிக்கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.

‘‘பிராமணர்-பிராமணரல்லாதார் பிரச்சினையில் வ.உ.சியின் நிலைப்பாடு பற்றி விடுதலைப் போராட்ட வீரரும் ஆய்வாளருமான ம.பொ.சிவஞானம் கூறியுள்ள கருத்து கவனத்திற்குரியது.

‘‘நீதிக்கட்சி வ.உ.சியை இணைத்துக்கொள்ள முயன்றது. சுயராஜ்யத்தைக் குறிக்கோளாகக் கொண்ட வ.உ.சி. சாதி வேற்றுமைகளை வளர்த்த நீதிக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். பிராமணரல்லாதவர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். பல துறைகளில் பெரும்பான்மையான பிராமணரல்லாதார் பின்தங்கியிருந்ததைப் பற்றி அவர் பெரிதும் வருத்தமுற்றிருந்தார். தமது ஆழ்ந்த வருத்தத்தை தம்முடைய பேச்சுகளில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்காக பிராமணர்-பிராமணரல்லாதார் சாதிவேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.’’

 (நூல்: வ.உ.சிதம்பரம்பிள்ளை, பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்)

ஆகவே பாரதி மட்டும் நீதிக்கட்சியை எதிர்க்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டம் இதனால் பின்தங்கி விடுமோ என்ற ஆதங்கத்தில் அன்று போராட்ட வீரர்கள் அனைவரும் எதிர்த்தனர்.

பாரதி வெறும் வெறுப்பியல் காரணமாக நீதிக்கட்சியை விமர்சிக்கவில்லை. பிராமணரல்லாதவர்கள் எல்லா நிலைகளிலும் முன்னேற வேண்டும் என்று நினைத்தவன் அவன். ஆகவேதான் நீதிக்கட்சிக்காரர்கள் மந்திரிகளாக ஆனவுடன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் பாரதி.

‘‘பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு ஸந்தோஷந்தான். தாங்களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும், ஆதலால் ஐரோப்பியக் கல்வியில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி மற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸர்க்கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிராமணரில் சிலர் மிகவும் கர்வம் பாராட்டி வருகிறார்கள். அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது.’’

 (சுதேசமித்திரன்: 24-12-1920)

ஆகவே பாரதியை வெறும் நீதிக்கட்சி எதிர்ப்பாளர் என்று குறுக்கிவிட முடியாது. பிராமணரல்லாத மந்திரி சபையைப் பாராட்டியவன் பாரதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ எப்படிப்பட்டது என்பதையும் உணர்ந்தவர் பாரதி.

பாரதி எழுதுகிறார்:

‘‘சில தினங்களின் முன்பு அமலாபுரத்தில் பஞ்சமர்களின் பிரதிநிதிக் கூட்டமொன்று நம் மாகாணத்துப் புதிய பிராமணரல்லாத மந்திரிகளை ஸந்தித்தபோது அம்மந்திரிகளில் ஒருவராகிய ஸ்ரீமான் ராமராயனிங்கார் மிகவும் ரஸமாகப் பேசியிருக்கிறார். இதுவரை பிராமணரல்லாத வகுப்பினர் பஞ்சமர்களிடம் தக்கபடி அனுதாபம் செலுத்தாமல் இருந்துவரும் காரணம் பிராமணர்களுக்கு மன வருத்தமுண்டாகுமென்ற பயத்தைத் தவிர வேறில்லையென்றும், இப்போது பிராமணரல்லாதாரில் மேற்குலத்தார் பிராமணர்களின் ஆதிக்கத்தை உதறி எறிந்து விட்டபடியால், இனிமேல் பிராமணரல்லாதார் பஞ்சமர்களை மிகவும் ஆதரிக்கத் தொடங்கிவிடுவார்களென்றும் இந்த மந்திரி சொன்னார். மேலும், இனிமேல் பிராமணரல்லாதோரில் மேற்குலத்தார் பஞ்சமர்களைப் பரிபூர்ண ஸமத்துவத்துடனும் சொந்த ஸகோதரர் போலவும் நடத்த முற்றிலும் விருப்பத்தோடிருக்கிறார்கள் என்றும் இவர் சொன்னார்.

இங்ஙனம் இவர் பிராமணரல்லாதோரும், பஞ்சமரல்லாதோருமாகிய மற்ற ஹிந்துக்கள் அனைவரும் இப்போதே பஞ்சமர்களை முழுதும் ஸமானமாக நடத்த உடம்படுகிறார்களென்று எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு உறுதி சொல்லுகிறாரென்பது நமக்கு விளங்கவில்லை.

ஏற்கனவே ஹிந்துக்களில் பிராமணர் முதலிய எல்லா வகுப்புகளிலும் அங்கங்கே ஜாதிக் கட்டுக்களை உதறிவிட்டு எல்லா ஜாதியாரையும் ஸமானமாக நடத்த வருகிறார்களென்பது மெய்யே. பொதுப்படையாக எல்லா வகுப்புகளிலும் ஜாதிக்கட்டுக்கள் தளர்ச்சி பெற்று ஸமத்துவக் கொள்கை ஓங்கிக் கொண்டு வருகிறதென்பது மெய்யே.

ஆசாரத் திருத்த முயற்சி ஆரம்ப முதல் நீதிபதி ரானடே முதலிய பிராணர்களாலே அதிக சிரத்தையுடன் போற்றப்பட்டு வருகிறதென்பதை நாம் மறக்ககூடாது. ஆனால், இவற்றைக்கொண்டு, இன்றைக்கே பிராமணரல்லாதாரில் மேல் வகுப்பினர் பஞ்சமர்களோடு ஸமானமாக உறவாடத் தயாராக இருக்கிறார்களென்று சொல்லுதல் அதிசயோக்தி.

எனிலும் ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன்.

இவ்விஷயத்தில் இவர் மனத்தோடு பேசினாரா அல்லது வெறுமே வெளிப்பேச்சுத்தானா என்பதைப் பஞ்சமத் திராவிட நண்பர்கள் பரிசோதனை செய்து பார்க்கும்படி வேண்டுகிறேன்.’’

(சுதேசமித்திரன் 8-2-1921)

பாரதியின் இந்த விமர்சனம் தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஸ்ரீ ராமராயனிங்கார் தம்மளவிலேனும் தாம் சொல்லியதை மெய்ப்படுத்திக் காட்டுவாரென்று நம்புகிறேன் என்ற பாரதியின் நம்பிக்கையை சம்மட்டியால் அடித்துத் தூள்தூளாக்கியவர் இவர்தான்.

‘‘பொதுச்சாலைகள், பொதுச் சத்திரங்கள், கிணறுகள், பள்ளிகள் முதலியவற்றை மக்கள் சாதி மதவேறுபாடின்றிப் பயன்படுத்துவதில் எவ்விதத் தடை செய்தாலும் தண்டனை அளிப்பதற்கான சட்டத்தை வெகுவிரைவில் கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு இக்கவுன்சில் சிபாரிசு செய்கிறது’’

என்ற தீர்மானத்திற்கு ராமராயனிங்கார் சொன்ன பதிலே போதும்.

‘‘பொதுச்சாலைகள் முதலியவற்றை இந்த மக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதைத் தண்டிக்கப் புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தேவையாகும் என்று தோன்றவில்லை. உண்மையான தடை, சமூகக் கொடுமையே. இது சமுதாய சீர்திருத்தத்தினால் உடைக்கப்பட வேண்டும்.’’

இதுதான் நீதிக்கட்சி முதலமைச்சர் ராமராயனிங்காரின் பரிகாரம். அரசியல் தளத்தில் பிரிட்டிஷாருக்கு ஆதரவளித்தவர்கள், சமூகத்தளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவே இருந்தார்கள். நீதிக்கட்சிக்காரர்களின் ‘பஞ்சம பாசம்’ வெளிப்பேச்சுதான் என்பதை பலமுறை நிரூபித்து இருக்கிறார்கள். தங்களுடைய செல்வாக்கு மக்களிடையே குறைந்துவருவதைப் பார்த்து அவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதாவது பார்ப்பனர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்வது என்பதுதான் அது. இதுவரை எந்தப் பார்ப்பனரை எதிராக நிறுத்தி பிராமணரல்லாதவர்களிடையே பிரசாரம் செய்தார்களோ அதே பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்ப்பதற்குத் தீர்மானம் போட்டார்கள். பார்ப்பனர்கள் எங்களை நீதிக்கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை. ஆனாலும் நீதிக்கட்சிக்காரர்கள் அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள்.

இவர்களைத்தான் ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள்’ என்று மதிமாறன் வாய்கூசாமல் பொய்யை அள்ளிவிடுகிறார். என்ன செய்ய தாழ்த்தப்பட்டோரின் தன்னகரில்லாத தலைவர் எம்.சி.ராஜா இல்லையே இப்போது!

(தொடரும்..)

உயர்ந்த பதவியும் கீழான எண்ணங்களும்: திராவிட இயக்க நூற்றாண்டை முன்வைத்து..

தமிழ் நாட்டு அரசியல் செய்த பாவம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்தச் சீரழிவின் நூற்றாண்டு விழாவையும் அந்தப் பண்பாட்டை அழித்தவர்கள் கொண்டாடவும் செய்கிறார்கள். நம்மைச் சுற்றியிருக்கும் உலக நாடுகள் அனைத்தும் அறிவியலிலும், சமுதாய மேம்பாட்டிலும் கவனம் செலுத்தி எங்கோ உயர உயரச் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இன்னமும் சிலர் அழுகிப்போன, காலாவதியான செய்திகளைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்த முயல்கின்றனர். யாரைக் குறை சொல்லி இவர்கள் வளர்ந்தார்களோ, யாரை நாக்குத் தழும்பேறும்படி திட்டித் தீர்த்தார்களோ அவர்களை இப்போதும் திட்டினால் பிழைப்பு நடக்கும் என்கிற நம்பிக்கையில் பேசி வருகின்றனர். இவர்கள் பத்திரிகைகளைப் படிக்க வேண்டுமாம், அப்படிப் படித்தால் பார்ப்பனக் கூட்டம் அஞ்சி நடுங்க வேண்டுமாம். சொல்பவர்கள் சாதாரண மூன்றாம் தரப் பேர்வழிகள் அல்ல. பெரிய பதவிகளில் உட்கார்ந்திருந்தவர்கள். இன்று பதவி இறக்கம் கண்ட பிறகு துருப்பிடித்துப் போன பழைய ஆயுதங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வீரவசனம் பேசத் துவங்கி விட்டார்கள்.

பார்ப்பனர்கள் எதற்காக, யாரைக் கண்டு அஞ்சி நடுங்க வேண்டும். ஆனானப்பட்ட ஜெர்மானியச் சர்வாதிகாரி ஹிட்லரின் முரட்டுத் தனமான யூத எதிர்ப்பிலும், யூதப் படுகொலைகளிலும் பலியானவர்கள் போக மீதமிருந்த யூதர்கள் உலகம் முழுவதிலிருந்தும் மீண்டும் ஒன்று கூடி இஸ்ரேல் எனும் தனி நாடு கண்டு உலகத்தின் பயங்கரவாதச் செயல்களுக்கு சவாலாக இருந்து கொண்டிருப்பது தொண்ணூறையும் நூறையும் தொட்டுக் கொண்டிருக்கும் பெருங்கிழவர்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. முடிந்தால் இவர்கள் லியோன் ஊரிஸ் எழுதிய “எக்ஸோடஸ்” நூலை ஒரு முறை படித்துப் பார்க்கட்டும். வன்முறையாலோ, அச்சுறுத்தலாலோ உலகில் யாரும் எந்த இனத்தாரையும் அழித்துவிட்டதாக வரலாறு கிடையாது. மேலும் இவர்கள் குறிப்பிடும் ‘பார்ப்பனர்கள்’ எங்கோ மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்று கதை விட்டுக் கொண்டிருக்கிறார்களே அதுபோல எங்கிருந்தும் வந்தவர்கள் அல்ல. இவர்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு ‘வந்தேறிகள்’ என்றும் கைபர் கணவாய் என்றும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொண்டிருப்பதால் இந்தக் கற்பனைப் பொய் மூட்டைகள் உண்மையாகி விடமாட்டாது.

ஆங்கிலேயர்களின் மெக்காலேக் கல்வித் திட்டம் இங்கு அறிமுகமாகி, ஆங்கிலேயர்களுக்குச் சேவகம் செய்ய ஆட்களைத் தயாரிக்கத் தொடங்கிய காலம் வரை இங்கு தொழில் முறையில் மக்கள் தனித் தனிக் கூட்டங்களாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வு இல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள். அவரவர் செய்யும் தொழிலால் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் உறவினை வளர்த்தும் ஒருங்குகூடி வாழ்ந்ததால் ஒவ்வொரு தொழில் புரிவோரும் தங்களுக்கென்று தனித்தன்மை பெற்றிருந்தார்கள். அவர்களுக்குள் எற்றத் தாழ்வு இருந்ததாக இவர்களால் சொல்ல முடியுமா? பிரிட்டிஷ் காரர்கள் தங்களுக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டு எழுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்தியர்களுக்கும் ஆட்சியில் ஏதாவதொரு வேலையைக் கொடுத்துத் தன்வசப் படுத்திக் கொள்ளத்தான் மெக்காலே ஒரு கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அவரே இங்கிலாந்து பார்லிமெண்டில் சொன்னபடி இன்னும் நூறு ஆண்டு காலத்தில் இந்திய கலாச்சாரத்தைப் புரட்டிப் போட்டு இந்தியாவை ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கி விடுவோம் என்ற உத்தரவாதம் கொடுத்தார். அதை நிறைவேற்றத்தான் இந்தியர்களையே அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

பண்டைய தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து ஓலைச் சுவடிகளைக் கொண்டு அதனைப் பதிப்பித்து மக்களுக்குச் சங்க இலக்கியங்களையும் வேறு பல அரிய இலக்கியங்களையும் கொண்டு கொடுத்த உ.வே.சாமி நாத ஐயர் இவர்கள் பார்வையில் தமிழன் அல்ல. அவர் பெயரால் எந்த இடமும் கிடையாது. தமிழுக்கென்று உருவான ஒரு பல்கலைக் கழகம் அதற்குக் கூட அந்த மாபெரும் மனிதனின் பெயர் சூட்டப்படவில்லை. காரணம் இவர்கள் கண்ணோட்டத்தில் அவர் ஒரு ‘பார்ப்பான்’. என்னவொரு கேவலமான, கீழ்த்தரமான பிரிவினை வாதம். சுய நலத்தின் காரணமாக மக்களைப் பிரித்து வைத்து ஒருவருக்கொருவர் விரோதத்தை வளர்த்து அந்தத் தீயில் குளிர் காயும் அற்பத் தனம். இதை சொல்பவர்களில், பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் இருப்பதுதான் வேதனை.

தமிழ், தமிழர் இலக்கியம் பற்றிப் பேசும் தமிழாசிரியர்களும் பண்டிதர்களும் தங்களுக்குள் ஓர் அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தமிழை இவர்கள்தான் வளர்த்தார்களாம், இவர்களால்தான் தமிழ் வாழ்கிறதாம். கும்பகர்ணன் வாழ் நாளில் பாதி தூங்கிக் கழித்தவன். அவன் விழித்திருக்கும்போது அவன் அண்ணன் இராவணனைத்தான் தெரியும். ஆகவே எதையும் இராவணன் எனும் எடைக்கல்லைக் கொண்டுதான் அளவிடுவான். இராம லட்சுமணர்கள் வந்திருக்கிறார்கள் போரிட வா என்றதும், அவர்கள் இராவணன் வீரத்துக்கு அதிகமா குறைவா என்று எடைபோட்டுப் பார்த்தவன் கும்பகர்ணன். அதுபோல உலகத்தில் எதையும் சங்க இலக்கியத்தோடு எடை போட்டுப் பார்ப்பார்கள். அந்த சங்க இலக்கியங்களைத் தேடிக் கொண்டு வந்து இவர்கள் கையில் கொடுத்தவர் பார்ப்பான். ஆனால் அன்றைய சங்க இலக்கியப் பெண் முறத்தால் புலியை அடித்து விரட்டினாள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லித் திருப்திபட்டுக் கொள்ளும் இவர்கள் அதே புற நானூற்றுப் பாடலில் “சோணாட்டுப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன்” எனும் பார்ப்பனனைப் பற்றி கோவூர் கிழார் பாடிய பாடலை வசதியாகப் படிப்பதும் இல்லை, படித்துப் பிறருக்குச் சொல்வதும் இல்லை.

“சிலப்பதிகாரத்தில்” கோவலனும் கண்ணகியும் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து’ திருமணம் செய்து கொண்டதை வசதியாக மறந்து விடுவார்கள். ஆனால் கணவனைப் பிரிந்து தனித்து வாழும் கண்ணகியைக் கணவனுடன் சேர்ந்து வாழ ஒரு கோட்டத்தில் வழிபடலாம் என்று ஆலோசனை சொன்ன தோழி ஒரு பார்ப்பனத்தி என்று இழிவாகக் குறிப்பிட்டு, அங்கு கண்ணகியின் கற்புத் திறன் வெளிப்படுவதாகப் பேசி பெருமைப் பட்டுக் கொள்வார்கள்.

இந்திய சுதந்திரம் அடையும் வரை இல்லாத ஜாதிப் பூசல்கள் நம் இந்திய அரசியல்வாதிகள் ஆட்சி செய்யத் தொடங்கியதும் ஏராளமான ஜாதிப் பூசல்கள் ஏற்படக் காரணம் ஒவ்வொரு கட்சியும் ஒரு ஜாதியின் பிரதி நிதியாகச் செயல்படத் தொடங்கியதுதான் காரணம். இப்படி ஒரு பக்கம் ஜாதிப் பிரிவினைகள் சொல்லி, வேற்றுமைகளைக் கற்பித்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ள வழிவகுத்துக்கொண்டு மறுபுறம் இவர்கள் ஜாதிகள் அற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டு திரியும் வேடிக்கையையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி சென்னை மாகாணத்தில் ஆண்டவரை எல்லா ஜாதியினரும் வேலை வாய்ப்பில் வித்தியாசமில்லாமல் அரசாங்க வேலைகளுக்குச் சென்று வந்தார்கள். மகானுபாவர்கள் ஒரு ஜாதியினரை எந்த அரசாங்க பதவிக்கும் எடுத்துக் கொள்ளாமலே ஒரு பகுதியினரை அழித்துவிட நினைத்தனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒரு காலகட்டத்தில், அதாவது இப்போது நூற்றாண்டு கொண்டாடுகிறார்களே திராவிட இயக்கம் உருவானதாக அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் எல்லா பதவிகளிலும் ஆக்கிரமித்துக் கொண்டு, பெரும்பான்மையான மற்ற ஜாதியாருக்கு வாய்ப்பளிக்க வில்லை என்பது. சரி அந்த நாளில் கற்றலும் கற்பித்தலும் எனும் தொழிலை செய்து வந்தவர்கள் மெக்காலே கல்வியையும் பயின்று அந்த வேலைகளை ஆக்கிரமித்துக் கொண்டனர். மற்றவர்களும் படிப்படியாக படிக்கத் தொடங்கி அந்த வேலைகளை பெருமளவில், ஒரு கட்டத்தில் அனைத்தையுமே பிராமணர் அல்லாதர் பெற்ற பின்பும், செத்த பாம்பை அடிக்கும் வகையில், திராவிடக் கட்சிப் பத்திரிகைகளைப் படித்துப் பார்ப்பனர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிற்து. இன்று மொத்தமுள்ள அரசாங்க பதவிகளில் ஒரு சதவீதம் கூட பார்ப்பனர்கள் இல்லை என்பது இந்த மகானுபாவர்களுக்குத் தெரியாதா? தெரியும். இவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள் என்று இவர்கள் திட்டமிட, கடவுள் ‘மென்பொருள்’ துறையொன்றை கொணர்ந்து எல்லா வெளி நாடுகளிலும் இவர்கள் சென்று சம்பாதிக்க வழிவகுத்து விட்டார்.

இந்திய பாகிஸ்தானிய மக்கள் ஒற்றுமையாகவே இருக்க விரும்புகிறார்கள், அரசியல் வாதிகள்தான் பிரிவினையை வளர்க்கிறார்கள் என்கிறார்கள். அதுபோலவே மக்களில் பெரும்பாலோர் எந்தவித பாகுபாடும், வேற்றுமையும் இன்றி, இன்று யாரும் எந்த வேலையும் செய்யலாம் என்பதில் ஒன்றுபட்டு சமமாக வாழ்ந்து வந்தாலும், இவர்கள் வேற்றுமையைக் கற்பித்தே தீருவோம், அந்த பிரிவில் நாங்கள் குளிர் காய்ந்து பிழைப்பு நடத்துவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பண்டைய நாட்களில் பார்ப்பனர்கள் சொத்து எதையும் சேர்த்து வைத்துக் கொண்டதில்லை. மறு நாள் உணவுக்குக் கூட பிறர் கையைத்தான் எதிர்பார்த்து வாழ்ந்தார்கள். அப்படி பிறர் நலம் வேண்டி வாழ்ந்ததால்தான் மற்ற தொழில் புரிவோர் இவர்களை மதித்து இவர்கள் யாகம் செய்ய நெய்க்காக பசுக்களையும், பொருளையும் தானமாகக் கொடுத்து வந்தார்கள்.

பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகும், அதற்கு முன்பாக நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் இவர்கள் பொதுவாக மக்களுக்காக வேதங்களைப் படித்தும், யாகங்களைச் செய்தும் மக்கள் நல் வாழ்வுக்காக இறைவனிடம் வேண்டுவதற்காக நிலங்களை மானியங்களாகவும், சர்வமானிய அக்ரகாரங்களை உருவாக்கியும் தானமாகக் கொடுத்தார்கள். அதன் பிறகுதான் ஒருசிலர் நில உடைமையாளர்கலாக ஆனார்கள். பலர் அன்றாடம் காய்ச்சிகளாக இருந்தார்கள். இன்று சில ஜாதியார் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசாங்க சலுகைகள் உண்டு, மேல் ஜாதியில் பிறந்தவன் கோவணத்துக்கூட வழியில்லாமல் பிச்சை எடுத்தாலும் அவனுக்கு எந்த உதவியும் கிடையாது என்பதை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள்.

நூறு வருஷங்களுக்கு முன்பு உருவான இயக்கம் ‘பிராமணர் அல்லாதார் இயக்கம்’. அப்போது அதற்கு திராவிட இயக்கம் என்று பெயர் கிடையாது. அப்படியே திராவிடர் என்ற பெயர் இருந்தாலும் அதில் பிராமணர் இல்லை என்பதை இவர்கள் முன் வைப்பது வேடிக்கை. திருஞானசம்பந்த மூர்த்தியை திராவிட சிசு என்பர். இந்த பிராமணர் அல்லாதார் இயக்கம் பின்னர் நீதிக்கட்சி என்ற பெய்ரில் பெரிய பெரிய நிலப் பிரபுக்கள், குறு நில மன்னர்கள், ஜமீன் தார்கள் இவர்களை உள்ளடக்கிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்துக் கொண்டு, பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போனாலும், சென்னை மாகாணத்தை விட்டுப் போகக்கூடாது என்று சொன்ன நீதிக்கட்சியார், பின்னர் தனி இயக்கம் கண்டனர். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் உருவான அது பின்னர் தனிக் கட்சியாக ஆனது. அதற்குப் பெயர் இட நடந்த கூட்டத்தில் ‘தமிழர் கழகம்’ எனும் பெயர் முன்மொழியப் பட்டது. அதற்கு ஈ.வே.ரா. அவர்கள் அப்படி பெயர் இட்டால் ‘பார்ப்பானும்’ வந்து சேர்ந்து விடுவான். அதனால் அதற்கு திராவிடர் கழகம் என்று பெயரிடல் வேண்டும் என்று தீர்மானித்து பெயரிடப்பட்டது.

ஒரு இயக்கத்துக்கு நூற்றாண்டு என்றால் ஓரிரு வருடங்களுக்கு முன்னதாகவே அது குறித்து ஆலோசனைகள், எப்படிக் கொன்டாடுவது என்பது பற்றிய திட்டங்கள் இவைகள் எல்லாம் இருந்திருக்க வேண்டும். திடீரென்று தோன்றிவிட்டது. தேர்தல் தோல்வியை சமாளிக்க ஒரு விழா. அது தான் இந்த விழா. இறைவன் நினைத்தாலொழிய இவர்கள் நினைத்தபடி யாரையும் அஞ்சவைப்பதோ, அழித்துவிடுவதோ இயலாது என்பதையும், மக்கள் ஒற்றுமையாகத்தான் வாழ்வார்கள் என்னதான் பிரிவினை நஞ்சை ஊட்டினாலும் அதில் அழிந்து போகமாட்டார்கள் என்பதை யூதர்களின் வரலாற்றிலிருந்து இவர்கள் தெரிந்து கொள்வது நல்லது.

ஒரு நல்ல தண்ணீர் நிறைந்த ஊருணியை உருவாக்குவது கடினம். ஆனால் அந்த ஊருணியில் நஞ்சைக் கலந்து மக்களை அழிக்க நினைப்பது சுலபம். இதில் எது வெற்றி பெறும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது எல்லாம் வல்ல இறைவன் தானே தவிர வேறு எவரும் அல்ல.

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

தொடர்ச்சி…

நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி

தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக்  கூட்டத்தோர்களையே சேர்ந்தவர்களாகும்.

சைவம், வைணவம், வேதாந்தமென்னும் சமயங்களையும் அப்பிராமணரென்போர்களே ஏற்படுத்தியுள்ளதால், அச்சமயங்களை, எவரெவர் தழுவி நிற்கின்றனரோ அவர்களும் பிராமணச் சார்புடையவர்களேயாவர்.

இத்தகையச் செயலுள் சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் தழுவிக் கொண்டே (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கிறன்றனரா? அன்றேல் சாதியாசாரங்களையும் சமய ஆசாரங்களையும் ஒழித்து (நான்-பிராமிண்ஸ்) என்ற சங்கங்கள் கூடியிருக்கின்றனரா என்பது விளங்கவில்லை.

அங்கனம் சாதியாசாரங்களையும், சமயவாசாரங்களையும் ஒழித்துள்ளக் கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் பெயர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக் கொண்டு (நான்-பிராமிண்ஸ்) எனக்கூறுவது வீணேயாகும்.

‘‘15-9-1909, தமிழன்’’ பத்திரிகை ஆசிரியர் பண்டிதர் க.அயோத்திதாசர்

தாழ்த்தப்பட்ட தலைவர்களில் சிலர் ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்தனர். ஆனால், அதில் கலந்துவிடவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையிலேயே அந்தத் தொடர்பு இருந்தது. அப்போதும் கூட ஈவேரா, நீதிக்கட்சி ஆகியவற்றை பல நேரங்களில் தாழ்த்தப்பட்ட தலைவர்கள் விமர்சித்தே வந்திருக்கின்றனர்.

ஏனெனில், உயர்த்தப்பட்ட சாதியினரான நீதிக்கட்சியினர் தங்களது சொந்த சாதியினரின் உயர்வுக்காக மட்டுமே உழைத்தவர்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டோரைப் பற்றி எஞ்ஞான்றும் கவலை இருந்ததேயில்லை. இதை மறந்து விடக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தாழ்த்தப்பட்டோரே வாதாடினார்கள், போராடினார்கள், தியாகம் புரிந்தார்கள். அதனால் தாழ்த்தப்பட்டோர் பெற்ற உரிமைகள் ஏராளம்….ஏராளம். இதைத் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்நாட் குறிப்புகளைப் படிக்கும்போது நாம் உணர்ந்துகொள்ளலாம்.  இந்த குறிப்புகள் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய ‘மக்களுக்கு உழைத்த பெருமக்கள்’ என்ற நூலில் தெளிவாக உள்ளன.

ஆனால், தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தையும், உரிமையையும் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு நீதிக்கட்சி தோன்றியது என திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். ஆனால் உண்மை என்ன?

நீதிக்கட்சி ஆரம்பித்ததின் வரலாற்றுப் பின்னணியைப் பார்ப்போம்.

அரசாங்க உத்தியோகங்களில் பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதனால் மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு 1851ஆம் ஆண்டு முதலே கூற ஆரம்பித்தது.

அதன் பின்னர் உத்தியோகங்களைத் தங்களது உறவினர்களுக்கே பிராமணர்கள் வழங்குகிறார்கள் என்று கலெக்டர்களுக்கு புகார்கள் வந்தன. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அந்த ஆண்டு வருவாய்த்துறை வாரியம் ஒரு உத்தரவினை வெளியிட்டது.

கீழ்நிலை உத்தியோகங்களை ஒரு சில செல்வாக்குள்ள குடும்பங்கள் ஏகபோகமாக்கிக் கொள்ளக்கூடாது என்றும், அனைத்து உத்தியோகங்களையும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாதியினருக்குப் பகிர்ந்தளிக்க முயற்சிக்க வேண்டுமென்றும், தாசில்தார் பதவிகளில் ஒரு விகிதாச்சாரம் பிராமணரல்லாத சாதியினருக்கு அளிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஹுசூர் சிரஸ்தேதார்,  இங்கிலீஷ் ஹெட்கிளார்க் என்ற இரு பிரதான வருவாய் அதிகாரிகள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாதென்றும் அந்த உத்தரவு கூறியது.

ஆனால், இந்த உத்தரவை அதைப் பிறப்பித்த அரசே பின்பற்றவில்லை. இது ஏன் என்பது ஆராயத் தக்கது.

ஆனால், 1871ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டது.

‘அரசுப் பதவிகளில் அவர்களது (பிராமணர்களது) எண்ணிக்கையைக் குறைப்பதும், அதிக அளவு இந்து பிராமணரல்லாதாரையும், முஸ்லீம்களையும் அரசு உத்தியோகங்களில் ஊக்குவிப்பதும், அதன் விளைவாக எந்த ஒரு குறிப்பிட்ட சாதியும் மற்றவர்களைவிட அதிக முக்கியத்துவமோ அல்லது அதிக எண்ணிகைப் பலமோ பெற்றுவிட அனுமதிக்காமல் இருப்பதும்தான் அரசின் உண்மையான கொள்கையாக இருக்க வேண்டும்’

நாட்டு நிர்வாகம் சம்பந்தப்பட்ட உத்தியோகங்களில் எந்த ஒரு சாதியும் ஏகபோகம் வகிப்பதைத் தவிர்ப்பதற்கு, அரசு தனிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று மக்கள் தொகைக் கணிப்புக் கண்காணிப்பாளர் கார்னிஷ் குறிப்பிட்டிருந்தார்.

நீதிக்கட்சி தோன்றுவதற்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கருத்து உதயமானது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வாய்ப்புத் தந்து அவர்களைக் கைதூக்கிவிடவேண்டும் என்ற ஆங்கிலேயரின் சமநோக்கு மட்டும் இதற்கு காரணம் இல்லை. ஒரு சாராரின் ஆதிக்கம் பெருகிவிட்டால் அது அன்னியர் ஆட்சிக்கு எதிரான சதிக்கு இடம் கொடுத்துவிடும் என்கிற அச்சமே அப்போது ஆங்கிலேயரிடம் மேலோங்கியிருந்தது. (திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

பிராமணரல்லாதாரின் மனதில் ஆங்கிலேயர் போட்ட இந்த தூபம் தான் பின்னாளில் நீதிக்கட்சியாக உருவெடுத்தது.dravidian_1779

தாங்கள் பிராமணரல்லாதாராய் இருந்த ஒரே காரணத்தால், வேலையில் புறக்கணிக்கப்பட்டு, வேலை உயர்வு போன்ற நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை உணர்ந்து அரசு ஊழியர்கள் சிலர் மெட்ராஸ் யுனைடெட் லீக் என்னும் அமைப்பை 1912ஆம் ஆண்டில் உருவாக்கினர். இந்த அமைப்பிற்கு டாக்டர் சி. நடேசன் முதலியார் வழிகாட்டியாக விளங்கினார்.

இந்த இயக்கம் அமைவதற்குப் பாடுபட்டவர்களாகக் குறிப்பிடப்படுபவர்கள்:

சரவணபிள்ளை (பின்னால் தஞ்சையில் டெபுடி கலெக்டர் ஆனவர்)

ஜி. வீராசாமி நாயுடு

துரைசாமி முதலியார் (பொறியியல் துறையைச் சார்ந்தவர்)

எஸ்.நாராயணசாமி நாயுடு (வருவாய் வாரியத்தின் ஷெரீப்பாகப் பணியாற்றியவர்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் வாங்கித் தருவதற்காக இந்த அமைப்பை இவர்களில் யாருமே துவங்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உத்தியோகத்துறையிலும் பதவி உயர்விலும் தாங்களும், தங்களுக்கு இணையான மற்ற உயர்த்தப்பட்ட சாதியாரும் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கவே  இந்த அமைப்பை உருவாக்கினர்.

1913ஆம் ஆண்டு. டாக்டர் நடேச முதலியாரின் மருத்துவமனையில் உள்ள தோட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக்கின் முதலாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. அப்போது அதனுடைய பெயரைத் ‘திராவிடர் சங்கம்’ என்று மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெயர் மாற்றப்பட்ட திராவிடர் சங்கமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை எதுவும் செய்ததாகக் குறிப்புகள் கிடைக்கவில்லை.

சென்னை திராவிடர் சங்கத்தின் சார்பில் 1915ல் வெளியிடப்பட்ட பிராமணரல்லாதோர் கடிதங்கள் ரெட்டி, நாயுடு, வேளாளர் ஆகியோருக்கான ஒருங்கிணைவை முதலில் குறிப்பிட்டது. (சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், கோ.கேசவன்)

1916ம் ஆண்டு டாக்டர் நடேச முதலியார் திராவிட சங்க விடுதி என்ற விடுதி ஒன்றைத் துவக்கினார். திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் பிராமணரல்லாத மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக அந்த விடுதி செயல்படத் துவங்கியது. இவ்விடுதியும் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. பிராமணரல்லாத மற்ற உயர் சாதி மாணவர்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.

நீதிக்கட்சியை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள் டி.எம்.நாயர் மற்றும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் ஆகியோர். நீதிக்கட்சியை இவர்கள் ஆரம்பித்த கதை ரசிக்கும்படியானது. முக்கியமானதும் கூட.

டி.எம்.நாயர் கட்சி ஆரம்பித்த கதை:

t_m_nairடி.எம்.நாயர் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். 1907ஆம் ஆண்டில் சித்தூர் நகரில் நடைபெற்ற வடஆற்காடு மாவட்ட காங்கிரஸ் மகாநாட்டில் தலைமை வகித்தார்.

1904ஆம் ஆண்டு பிராமணர்கள் அதிகம் வாழக் கூடிய திருவல்லிக்கேணித் தொகுதியிலிருந்து அவர் சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னரும் தொடர்ந்து மும்முறை அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1916ம் ஆண்டு அதே தொகுதியில் இந்திய சட்டசபைக்குப் போட்டியிட்ட பொழுது அவர் தோற்றார். தாம் தோற்றதற்கு அங்கு வாழும் பிராமணர்களே காரணம் என்ற புதுமையான (?) முடிவுக்கு அவர் வந்தார். இந்தத் தோல்வியானது அவரை பிராமணரல்லாத இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

சர்.பி.டி.தியாகராய செட்டியார் கட்சி ஆரம்பித்த கதை:

வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படும் சர்.பி.டி.தியாகராய செட்டியார் நீதிக்கட்சியைத் தொடங்குவதற்கு முன் காங்கிரசிலேதான் இருந்தார்.

ஒருமுறை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும் விட அதிகத் தொகையாகிய ரூ.10,000 அளித்தார் தியாகராய செட்டியார். இருந்தும், விழாக் கூட்டத்திற்குச் சென்றபோது அவரை மேடையில் உட்கார வைக்காமல் கீழே உட்காரச் செய்தார்களாம். ஹைகோர்ட் ஜட்ஜ் முதல் அர்ச்சக, பரிச்சாரக, தரகர் – பார்ப்பனரெல்லாம் மேடையில் அமர்ந்திருந்தனராம். இவரிடம் இவருடைய அலுவலகத்தில் வேலைக்கு இருந்த சில பார்ப்பனச் சிப்பந்திகள் கூட மேடைமேல் வீற்றிருந்தனராம். ஆனால், இவரை மேடையில் வீற்றிருக்க யாரும் அழைக்கவில்லையாம்.

இந்தப் பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத சர்.பி.டி.தியாகராய செட்டியார், அந்த இடத்தை விட்டு விர்ரென்று எழுந்து காரிலேறி டாக்டர் நாயர் பங்களாவுக்குச் செல்லச் சொன்னாராம். இந்த நிகழ்ச்சிகள்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியதாம்.

இதைப்பற்றி ‘டாக்டர் நாயர், தியாகராயர், நான்’ என்ற தலைப்பில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் பின்வருமாறு எழுதுகிறார்:-

‘ …ஆரம்பகாலத்தில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு விரோதமாக தேசியப் போர்வையில் பார்ப்பனர்களை ஆதரித்தவர்தான் அவர் (நாயர்). நானும் ஆரம்பத்தில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாயிருந்து பார்ப்பனரல்லாதார் தேர்தலை எதிர்த்தவன்தான். பிறகுதான் உண்மை உணர்ந்து நாங்கள் பார்ப்பனரல்லாதாரோடு ஒன்றானோம். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் மிக முக்கியமானவரான சர்.பி.டி.தியாகராய செட்டியார் கூட ஆரம்பத்தில் தேசியவாதியாக இருந்தவர்தான். 1914ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் காரியதரிசியாயிருந்து அரும்பெரும் தொண்டாற்றியவர்தான் அவர். அவரும் இன உணர்ச்சி பெற்றார். ஆகவே நாங்கள் எல்லாம் துவக்கத்திலேயே இராட்சதர்களாக ஆக்கப்பட்டவர்கள் அல்லர். அடிமைகளாயிருந்து பிறகு அவர்களின் கொடுமை தாங்காமல் இழிவு பற்றிய உணர்ச்சி பெற்று விழிப்படைந்தவர்கள்தாம் நாங்கள்.’1

(நீதிக்கட்சி 75வது ஆண்டு பவள விழா மலர் 1992)

ஈவேராவும் தனது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீதிக்கட்சியை ஆதரித்தார். இது குறித்து “ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்” என்ற எனது நூலில் விவரங்கள் உள்ளன.

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

நான் இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.  டி. எம். நாயர் சென்னை மாநகராட்சிக்கு மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த மும்முறையும் அவர் தாழ்த்தப் பட்டவர்களைப் பற்றி எண்ணியதுண்டா? கவலைப்பட்டதுண்டா? தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா? சேரியிலே புழுக்களாக அகப்பட்டுக் கொண்டு தினமும் இன்னல்களை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி மாநகராட்சியில் பேசியதுண்டா?

இல்லை…இல்லை…இல்லை.

அதைப் போலவே தியாகராய செட்டியாரும் நீதிக்கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? கெடுதிதான் செய்திருக்கிறார்.

1921ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் பக்கிங்காம் கர்னாடிக் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட போராட்டம் சாதிக் கலவரமாக மாறியது. இதைக் காரணமாக வைத்து தியாகராயர் என்ன செய்தார் தெரியுமா?

‘தாழ்த்தப்பட்டோர்களை நகருக்கு வெளியே குடியமர்த்த வேண்டும்’ என்று அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

அன்றைய தொழிலாளர் தலைவரான எம்.சி.ராஜா இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நேர்மையற்ற செயல் ‘ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்கும் நீதிக்கட்சியினர்’ என்று தலைவர் ஜெ.சிவசண்முகம் பிள்ளையை எழுத வைத்தது.

அதேபோல 1921-22ல் தியாகராய செட்டியார் தீண்டாமை ஒழிப்பைப் பற்றிய விவாதத்தில் ஆதரவான கருத்து ஏதும் கூறாமலே இருந்துவிட்டார்.

இப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவுமே செய்யாத, அவர்களுக்கு எதிராக இருந்தவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக நீதிக்கட்சியை ஆரம்பித்தனர்?

கல்வியிலும் செல்வத்திலும் வளமாக இருந்த நாயருக்கும் தியாகராய செட்டியாருக்கும் ஒருவேளை கட்சியிலும் மேல் சாதியாரிடத்தும் மதிப்பும் வாய்ப்பும் கிடைத்து இருக்குமானால் இந்த ‘இன உணர்வு’ உண்டாகியிருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இவர்களுடைய சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டதாலேயே பிராமணரல்லாத கட்சியை ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் நாள் நீதிக்கட்சி உருவானது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் நாள் தியாகராயச் செட்டியார் ‘பிராமணரல்லாதார் கொள்கை அறிக்கை’யை வெளியிட்டார். அந்த அறிக்கை, பிராமணரல்லாத உயர்சாதி மக்களுக்கான – பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அறிக்கையாகத்தான் வெளிவந்தது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.

‘‘…..(கல்வித்துறையில்) தாமதமாக நுழைந்திருந்தாலும் பிராமணரல்லாத சமுதாயங்கள் முன்னேறத் துவங்கிவிட்டன. அவர்கள் இப்போது முன்னேற்றத்தின் பல படிக்கட்டுகளில் இருக்கிறார்கள். செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனர். மிகவும் பின்தங்கியோர்கூட முன்னேறியிருப்பவர்களைப் போல புதிய காலத்தின் தகுதிகளைப் பெறுவதற்காக அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்கள். கல்வியில் முன்னேற வேண்டும் என்கிற பொதுவான உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டுவிட்டது.

பிராமணர்களில் காணப்படுவதைவிட சில பிராமணரல்லாத சமுதாயத்தினரிடையே காணப்படும் கல்வி வளர்ச்சி சீரானதாகவும், சமநிலையிலும் (ஆண்-பெண் இருபாலரும் கல்வி கற்கும் சூழ்நிலையிலும்) இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். எது காரணம் பற்றியோ கல்வி இலாக்காவினர் பிராமணப் பெண்களுக்கும், குறிப்பாக பிராமண விதவைகளுக்கும் ஏதோ அவர்கள் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலக் கருதிக்கொண்டு கல்விச் சலுகை அளித்து வருகின்றனர். இருந்தாலும் பிராமணரல்லாதாரைச் சேர்ந்த நாயர் பெண்களின் அளவுக்குப் பிராமணப் பெண்கள் கல்வி கற்றுவிட்டதாக இல்லை. பல்வேறு வழிகளிலும், பல்வேறு துறைகளிலும் பிராமணரல்லாதார் அடக்கமாக அதேநேரம் பயனுள்ள வகையில் இந்த மாகாணத்தின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் இதுவரையில் வேறுவழியின்றி பின்னால் தள்ளப்பட்டுக் கிடந்தார்கள். பிராமண ஜாதியினர் தந்திரமாகவும், பல்வேறு வழிகளிலும் அரசியல் அதிகாரத்தையும், உத்யோகச் செல்வாக்கையும் பயன்படுத்திய காரணத்தால் அறிவுத்துறையில் தீவிரமான போட்டி நிலவுகின்ற இந்த நாட்களில் பரீட்சைகளில் வெற்றி பெறும் திறமை ஒரு தனித்திறமை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், மற்றவர்களைவிட ஆங்கிலம் கற்ற ஆடவர் தொகை அதிகம் கொண்டிருக்கிற ஒரு சிறு வகுப்பு, இதர வகுப்புகளில் ஏதோ குறைந்த அளவாவது திறமை, ஞானம், பண்பாடு கொடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, அரசாங்க உத்தியோகங்களில் பெரிதும், சிறியதும், உயர்ந்ததும், தாழ்ந்ததுமான அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ள அனுமதிக்கப்படுவதுதான்!” ….

(திராவிட இயக்க வரலாறு, தொகுதி-1, முரசொலிமாறன்)

செட்டியார், கோமுட்டி, முதலியார், நாயுடு, நாயர் போன்ற தங்கள் சமுதாயத்தினர் வேகமாக முன்னேறி வருகின்றனரே – நாயர் பெண்கள் முன்னேறி வருகின்றனரே, அவர்களை முற்றிலும் ஒதுக்கிவிடுகின்றனரே இந்த பிராமணர்கள்! என்ற ஆதங்கம்தான் இதில் தொனிக்கிறது என்பதைக் கூர்ந்து படித்தால் புரிந்துகொள்ள முடியும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றிய கவலை இதில் இல்லை. ஏனென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்கள்தானே!

ஆனால், என்ன செய்தால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து, ஆக்கபூர்வமாகச் செயல்படுத்திய பெரியோர் பலர் உண்டு. உதாரணமாக,

ராவ் சாகேப் எல்.சி. குருசாமி (1885- 1966)

1920 முதல் பத்து வருடங்களுக்கு அவர் சென்னைச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றிருந்தார். இருபத்திரண்டு வருட காலம் அவர் கௌரவ நீதிபதியாகப் பதவியை அலங்கரித்தார்.

நாகரிகமான, பண்பாடு நிறைந்த வாழ்க்கையின் முதல்படியானது கல்விதான் என்னும் கோட்பாட்டை அவர் கொண்டிருந்தார். அதனால் 1921ல் இரண்டு இரவுப்பள்ளிகளை நிறுவினார். அதற்காக அவர் இரண்டாயிரம் ரூபாய் உதவிப்பணமும் அக்கால அரசாங்கத்திடமிருந்து பெற்றார். புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பு, ராயபுரம், மைலாப்பூர், பெரியமேடு ஆகிய பகுதிகளிலும் அவர் பள்ளிகளை நிறுவினார். செங்கல்பட்டு, பொன்னேரி முதலிய முக்கியப் பகுதிகளில் பகல் நேரப் பள்ளிகளையும் ஆரம்பித்தார். கல்வி பயில மக்கள் தவறுவார்களானால் அது மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.

1921ல் பல நூறு குடும்பங்கள் தாங்கள் வாழும் நிலத்தை உரிமையாகப் பெற அவர் வழி கண்டார். புளியந்தோப்பு, வேப்பேரி, மைலாப்பூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மக்களைக் குடியேற்ற அவர் நிலங்களைப் பெற்றார். ஆதிக்குடி மக்கள் கல்வி, பொருளாதார வகை முதலியவற்றில் வலிமை பெற்றால், பிறகு தீண்டாமையும் சாதி வேற்றுமையும் தாமாகவே ஒழிந்துவிடும் என்ற கருத்தையே அவர் மேற்கொண்டிருந்தார்.

1926ல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலச் சங்கத்தில் இணைந்திருந்தார். நகரக் கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும், சென்னை நகரசபைக் கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1927ல் அவர் ‘ராவ் சாகேப்’ என்ற பட்டம் பெற்றார். செங்கல்பட்டு, திருவள்ளூர் முதலிய பகுதிகளில் அவர் கல்வி நிறுவனங்களில் தொண்டாற்றினார்.

1929ல் அவர்  பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும் இருந்தார்.

1932ல் டில்லியில் நிகழ்ந்த வாக்காளர்கள் கூட்டத்தில் அவர் தமது மதிப்பு வாய்ந்த யோசனைகளை வழங்கினார்.

1937ல் நிகழ்ந்த ஆலயங்களில் துணிந்து பிரவேசித்தல் என்ற போராட்டத்துக்காக அவர் பலரைத் திருவாங்கூருக்கு அழைத்துச் சென்றார். பல மாணவர் விடுதிகளை நிறுவினார்.

தளபதி எம். கிருஷ்ணசாமி, (1917 – 1973)

வறுமையின் பிடியிலே சிக்கினாலும் இலட்சியத்தின் மதிப்பினை குறைத்துவிடாமல் வாழ்ந்தவர்களிலே தலைவர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் சிறப்பானவராவார். ஆசிரியராகவும் பின்னாளில் வணிகத்திலும் தம் வாழ்வை துவக்கினார்.

தமிழ்ப் பழங்குடி மக்களின் பல்கலைக்கழகமாக திகழ்ந்த அவர்  ஏற்கனவே 1920ல் தோற்றுவிக்கப்பட்ட  பழங்குடி மக்கள் சம்மேளனத்தின் கொள்கைகளை ஏற்று 1940 முதல் பணியாற்ற முன்வந்தார். இடையில் புத்த பிரச்சாரத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் அவரை பல்வேறு பகுதி மக்களிடையே ஈடுபாடு கொள்ளச் செய்தது.

தலைவர் என்.சிவராஜ் போன்ற தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் விளைவாக மாமேதை அம்பேத்கர் 1942லும் 1956லும் ஷெட்யூல் வகுப்பினர் சம்மேளனம், இந்தியக் குடியரசுக்கட்சி போன்ற அமைப்புக்களை ஆரம்பித்தார். இந்த அமைப்புகளின் தலைவராக சிறப்பாக தொண்டாற்றினார் இவர்.

பழங்குடி சமுதாய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதி ஒழிப்புப் போராட்டம், விலைவாசி போராட்டம் போன்றவைகளில் பெரும் பங்கேற்று சிறை சென்றார். பழங்குடிச் சமுதாயம் விழிப்படைய தனது சமத்துவ சங்கு என்ற பத்திரிகையின் மூலமாக சங்கநாதம் செய்தார். வளர்ந்த கட்சிகள் வலிய வந்து அழைத்தும் பதவிக்கோ, பணத்திற்கோ தமது இலட்சியத்தை விட்டு கொடுக்காமல் மறுத்து தேர்தல்களில் எதிர்த்து நின்றார்.

ஏழை பங்காளன் தொண்டு வீ. வீராசாமி, எம்.பி (1919-1995)

கல்லூரியில் படிக்கும்போது தான் தங்கியிருந்த திருச்சி ஹரிசன சேவாசங்க தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு மட்டும் கஞ்சி ஊற்றப்படுவதைக் கண்டு வருந்தினார். இந்த அவலத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள்  தலைவர் தந்தை சிவராஜின் கவனத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மருதையனின் கவனத்துக்கும் கொண்டு சென்று தீர்வு கண்டார். இங்கனம் சமூக நலனுக்காக உழைத்தாலும், கல்வியிலும் கவனமாய் இருந்து 1941ல் பி.ஏ.பட்டம் பெற்றார்.

1945ல் திருச்சி தக்கர்பாபா ஹரிஜன மாணவர்கள் இல்லத்திலிருந்து தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவர்களை அற்பக் காரணங்களுக்காக இல்ல நிர்வாகிகள் வெளியேற்றினர். மாணவர்களின் பரிதாப நிலையைக் கண்டு வீராசாமி 31-1-1945 அன்று இரவோடு இரவாக தம் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் மாணவர் இல்லமாக மாற்றினார்.

தந்தை சிவராஜ், ஈவேரா போன்றவர்களிடம் இருந்த நெருக்கத்தால் 1950ல் தாம் பணிபுரிந்த திருச்சி வானொலி நிலையத்திலிருந்து விலகி முழுநேரப் பொதுநலத் தொண்டரானார்.

1950ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ‘தொண்டு’ என்ற பத்திரிகையை (தமிழிலும், ஆங்கிலத்திலும்) தொடங்கி 20 வருடங்கள் தொய்வில்லாமல் நடத்தினார். 1952 நாடாளுமன்ற தேர்தலில் மாயவரம் (மயிலாடுதுறை) தாழ்த்தப்பட்டோர் தொகுதியில் தனிச்சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏழை மாணவர்களின் நன்மைக்காக பல நூல்நிலையங்களோடு கூடிய மாணவர் இல்லங்களை உருவாக்கினார்.

1974ல் சமூக புரட்சி என்ற இதழையும் (4 வருடங்கள்) 1980ல் (பௌத்த மார்க்கம்) என்ற இதழையும் (2 வருடங்கள்) நடத்திய பெருமை வீராசாமிக்கு உண்டு.

பறை அடிப்பதையும் , இடுகாட்டிலும் சுடுகாட்டிலும் வேலை செய்வதையும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நிறுத்த வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்தார். 1980ல் தம் குடும்பத்துடன் துறையூரில் பௌத்தத்தைத் தழுவினார்.

ராவ் பகதூர் ஜெகந்நாதன் (1894 – 1954)

தனது காலத்திலே அரசியல் சமுதாய துறைகளில் உழைத்துக்கொண்டிருந்த தலைவர்களுடன் இணைந்து தொண்டாற்றி விரைந்து முன்னேறினார். இரவுப் பள்ளிகளையும் மாணவர் விடுதிகளைத் துவக்கி வைப்பதிலே இவர் அதிகம் அக்கறைக் காட்டினார். 1920ல் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1929லிருந்து 1938 வரை மாநகராட்சி உறுப்பினராக இருந்து திறம்பட தொண்டாற்றினார். சிறிது காலம் கௌரவ நீதிபதியாகவும் கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சென்னை மாநில டிப்ரஸ்டு வகுப்பினர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், மாநில கொள்கை பரப்பும் தலைவராகவும், மற்றும் எண்ணற்ற அமைப்புகளிலும்  பொறுப்பேற்று உழைத்தார்.

அயல்நாட்டிலிருந்து இந்திய தேச நிலைமையையும், நிதி, சமுதாயம் போன்ற நிலைமைகளையும் ஆராய வந்த குழுக்களிடம் இவரது இன்றியமையாத அரிய கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் வேண்டிக் கொண்டது. எனவே, இவர் ராயல் கமிஷன், சைமன் கமிஷன், லோத்தியன் கமிட்டி, ஹாமென்ட் கமிட்டி போன்ற தலைசிறந்த அரசியல் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவினரிடம் தனது ஆலோசனைகளை வழங்கினார்.

1933ல் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பூனா ஒப்பந்தத்தில் பழங்குடி மக்களின் சார்பில் கையெழுத்திட்ட தலைவர்களில் இவரும் ஒருவராவார்.

சமுதாய நன்மைகளுக்காக மக்களை விழிப்பூட்ட பல மாநாடுகளில் இவர் பங்கேற்று நிலைமைகளை மக்களுக்கு அறிவுறுத்தியும், அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தும் மக்கள் பயனடைய வகை செய்தார்.

ஆந்திர மாநிலத்தில் நிலப்போராட்டங்களை முதுபெரும் தலைவர் ஆர். சீனிவாசன் அவர்களுடனிருந்து நடத்தி ஏழை மக்கள் நிலங்களைப் பெறுவதற்கு பேருதவியாக இருந்தார்.

அன்னை மீனாம்பாள் சிவராஜ் (1904 – 1992)

வி.ஜி. வாசுதேவப்பிள்ளை – மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் 26-12-1904ல் பிறந்தார் அன்னை மீனாம்பாள். அன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ.மு.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர்; வள்ளலுங்கூட. இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர்.

அன்னையவர்களின் தந்தையார் திரு.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.

அன்னை மீனாம்பாள் அவர்களுடைய பொதுப்பணி 1928ல் சைமன் குழுவினரை ஆதரித்த முதல் மேடைப் பேச்சில் துவங்கியது. 1930லிருந்து அண்ணல் அம்பேத்கரின் பணிகளை பொதுமக்களிடம் தமிழில் எடுத்துக் கூறியவர். ‘என் அன்பு சகோதரி’ என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். கிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதவிகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சில :

துணைமேயர், சென்னை மாநகராட்சி,

ஆனரரி பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட்,

உறுப்பினர் மெட்ராஸ் பிரசிடென்ட் அட்வைசரி போர்டு,

உறுப்பினர் போஸ்ட்வார் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கமிட்டி,

உறுப்பினர் மெட்ராஸ் யூனியவர்சிட்டி (செனட்)

அன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தன் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் அன்னையவர்கள் சிறப்பித்திருக்கிறார்.

தலைவி ஜோதிவேங்கிடசெல்லம் (1917 – 1992)

ஜோதி அம்மாள் என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் 27-10-1917ல் பர்மாவிலுள்ள மேம்யோ என்ற ஊரில் குப்புராம் தம்பதியிருக்கு பிறந்தவர். ரங்கூனில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை படித்தவர். 1934 சென்னைக்கு வந்ததும் 1935ல் திரு பி.வி.எஸ்.வேங்கிட செல்லம் அவர்களை மணந்தார். 1961ல் கணவர் கார் விபத்தில் காலமான பிறகு தொழிலகத்திற்குப் பொறுப்பேற்றார்.

இந்திய வணிகர்களில் தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற வேங்கிட செல்லம் கம்பெனியார் குறிப்பிடத்தக்கவர். இந்த நிறுவனத்தின் ஊறுகாய் வகைகள் 1900ல் உலகம் முழுவதும் புகழ்பெற்றிருந்தது. லண்டனில் இன்றைய எலிசபெத்ராணியாரின் பாட்டனார் எட்வர்ட் காலத்திலும், தந்தை ஜார்ஜ் மன்னர் காலத்திலும் அண்மை காலம் வரையிலும் வின்சர் அரண்மனையில் பி.வி.நிறுவனத்தின் ஊறுகாய் வகைகளைத்தான் விரும்பி உண்டு வந்தார்கள்.

1938லிருந்து இவர் பொதுப்பணியிலும் சமூகப் பணியிலும் ஈடுபாடு கொண்டார்கள். 1940ல் கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் 1950ல் மாநில சமூக நலப் போர்டின் துணைத்தலைவராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் (செனட்) உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952ல் அவருடைய கணவர் சென்னை செரீப்பாக இருந்தபோது திரு.ராஜகோபாலாச்சாரியாரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஜோதியம்மாளுடைய ஆற்றலையும், செல்வாக்கையும் கண்ட ராஜாஜி அவர்கள் தமது அமைச்சரவையில் பொறுப்பேற்கும்படி கேட்டுக்கொண்டார். அன்றுவரை சமூக சேவகியாக இருந்த அவர் அமைச்சர் பொறுப்பைத் துணிவுடன் ஏற்றுக்கொண்டது அவருடைய திறமைக்கு நல்ல சான்றாகும்.

பிறகு 1962ல் திரு.காமராசரின் அமைச்சரவையிலும், திரு. பக்தவத்சலம் அமைச்சரவையிலும் தொடர்ந்து அமைச்சராக இருந்தார்.

1976வரை கலைக்கப்பட்ட சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத்தலைவராகவும் இருந்தார். 1974ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். 1978ல் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அவர் புரிந்த விளம்பரமில்லாத சாதனைகள் பல. அவற்றில் சில: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டை பி.ஜ.எம்.கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா சித்த வைத்தியக் கல்லூரி ஆகியவை அவர் காலத்தில் அவர் முயற்சியால் தொடங்கப்பட்டவை. அம்மையாருடைய மூதாதையர் ஏற்கனவே நூறு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கிடாசல ஏழையர் பள்ளி ஒன்றை நிறுவி இருந்தார்கள். அது இன்றும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் !

‘‘அந்த கால அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடத் தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் பலராக இல்லை. தாழ்த்தப்பட்டவருள் அரசியல் அறிவு வாய்க்கப் பெற்றிருந்த ஓரிருவர் நீதிக்கட்சியில் சேர்ந்திருந்தனர். தாழ்த்தப்பட்ட இனத் தலைவர்கள் நீதிக்கட்சி கொடியின் கீழ் அணிவகுத்து நின்றனர். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காக போராடிற்று….’’

என்று எழுதிய திராவிட இயக்க எழுத்தாளர் ராசதுரை உண்மையைத்தான் எழுதினாரா?

தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தைப் பெருமைபட எழுதலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு சமுதாயத்துக்காக உழைத்த பல தலைவர்களின் வரலாற்றையே இருட்டடிப்பு செய்து, தான் சார்ந்திருக்கிற இயக்கத்தால்தான் உரிமை போராடி பெறப்பட்டது என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா?

ஒரு சமுதாயத்தையே கீழ்த்தரமாக எண்ணி எழுதுகின்ற எழுத்தல்லவா அவர் எழுதியது?

அதைப் போலவே ‘பார்ப்பனரல்லாதாரில் உயர்ந்த சாதியராகிய’ என்றுதான் இவரின் முன்னோடிகளான நீதிக்கட்சியினரும் எழுதினர்.

இப்படி எழுத என்ன காரணம்?

இவர்களுக்குள் இருப்பது ஜாதியம் மட்டுமே என்பதுதான் காரணம்.

(தொடரும்)