ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை

வால்மீகி ராமாயணத்தில் ராவணனின் பெருமைகளும் (குலம், வீரம், தவம், வரங்கள், வித்தைகள் இத்யாதி), அவனது அதர்ம நடத்தைகளும் ( தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தியது, பெண்களைக் கவர்ந்து வந்தது, குரூர குணங்கள்) இணைத்தே பேசப்படுகின்றன. பல இடங்களில் நேரடியாக கவிக்கூற்றாகவும் மற்றும் ராமன், ஹனுமான், விபீஷணன் போன்றோரது எண்ணங்கள், பேச்சுகளின் வாயிலாகவும் இவை வருகின்றன. சிவபக்தன் என்ற குறிப்பு முதல் 6 காண்டங்களில் இல்லை, உத்தர காண்டத்திலேயே உள்ளது, அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

The most common side effects of this medication are weight gain, increased appetite, nausea, vomiting, and abdominal pain. It’s recommended that young children eat 10 percent of their calorie intake from foods high in Oued Lill vitamin d. The symptoms are often mild to mild, moderate, or severe.

If your doctor says your medical conditions are best treated with a low-dose oral contraceptive like depo-provera, then you may do as your doctor suggests and try the same cycle of pills. Clomid could also be taken clomid 50mg price Amstelveen at a much higher, although safer, dose than oral estrogen. I hope this helps other people who may be considering changing the medication they have been taking.

Do not use excessive pressure to remove your sneakers. The company that Cutler Ridge get clomid over the counter manufactures clomid no prescription online, or clomid, Your prescription will be filled at the pharmacy and will be delivered by the pharmacy to your door.

காவிய நோக்கில், ராமனைப் போன்று தர்மத்தின் மூர்த்தியாகவும் நற்குணக் கடலாகவும் உள்ள ஒரு மகத்தான நாயகனுக்கு எதிராக, எந்தப் பெருமைகளும் இல்லாத முற்றிலும் தீயவனான எதிர்நாயகனைப் படைப்பது என்பது முதிர்ச்சியற்ற, படுசாதாரணமான ஒரு காவிய அழகியலாகவே இருந்திருக்கும். கிரேக்க, ரோமானிய, செல்டிக் கலாச்சாரங்களின் பழைய காவியங்களும் அவற்றின் பாத்திரங்களும் இந்தப் பாணியில் தான் முற்றான நேர்-எதிர் தன்மைகளுடன் உள்ளன. கடவுள் – சாத்தான் என்ற யூத-ஆபிரகாமிய-கிறிஸ்தவ கருதுகோளும் அப்படியே.

ஆனால் நமது பண்பாட்டின் ஆதிகாவியமான ராமாயணத்தை அளித்த வால்மீகி ஒரு சாதாரண கவியல்ல. மானுட அகத்தையும் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் நெறிகளையும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுக் கண்டு தெளிந்த மகத்தான கவி-ரிஷி அவர். அதனால் தான் வாலியை ராமன் மறைந்து நின்று கொன்றதையும், ராவணனின் பெருமைகளையும், அக்னிபிரவேசத்தின் போது ராமன் சீதையிடம் கடுஞ்சொல் கூறுவதையும், “வீரனே, பண்பாடற்றவளிடம் பண்பாடற்றவன் பேசுவது போலவன்றோ பேசுகிறாய்” என்று சீதை அதை எதிர்கொள்ளும் துயரத்தையும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. ஏன் அவர் நினைத்திருந்தால், கருப்பு வெள்ளைத்தனமாக ராவணனையும் ராமனையும் சித்தரித்திருக்கலாமே? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவ்வளவு பெருமைகளும் கொண்டிருந்த ராவணன் அதர்ம வழியில் சென்று அழிந்தான் என்பது தான் அந்தக் காவியத்திற்கு உச்சத்தன்மையை அளிக்கிறது.

இத்தனை நூற்றாண்டு காலமாக, ராமாயணம் பல்வேறு மொழிகளிலும் வடிவங்களும் நமது தேசமெங்கும் மீளமீளக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த அடிப்படையான விஷயத்தின் ஆழமும், கனமும் நீர்த்துப் போகவில்லை. ராமனும் சீதையும் பரதனும் லட்சுமணனும் குகனும் அனுமனும் ஜடாயுவும் விபீஷணனும் போற்றப் படுகிறார்கள். ராவணன் போற்றப் படவில்லை, ஆனால் தூற்றப் படவுமில்லை. அவனை வீழ்ச்சியடையச் செய்தது எது என்பதன் வாயிலாகப் புரிந்து கொள்ளப் படுகிறான்.

இந்த நாட்டின் படிப்பறிவில்லாத கிராம மக்கள் கூட உள்வாங்கிக் கொண்டுள்ள இந்தப் பண்பாட்டுச் செழுமையை சிறிதும் உணரும் திறனும் அறிவும் இல்லாத படித்த முட்டாள்களும், அறிவிலிகளும் தான் ராமாயணத்தையே திருப்பிப் போட்டு தாங்கள் ஏதோ புதியதாக பெரிய “புரட்சி” செய்துவிட்டதாகக் கருதிக் கொள்கிறார்கள். ராமாயணம் போன்ற ஒரு மகோன்னதத்தை, அதை நமக்களித்த ரிஷிகளின் கவிகளின் மேதைமையின் விசாலத்தை ஒரு சிறிதும் உணரத் திராணியில்லாத சிறு மனங்கள் கொண்ட நிர்மூடர்கள் தான், அதை வெறுப்புணர்வுகளைப் பரப்பவும், தங்கள் அரசியல் / சித்தாந்த காழ்ப்புகளை சித்தரிக்கவும் திரிக்க முற்படுகிறார்கள். இன்று பிறந்து நாளை அழியும் ஈசல்கள் இவர்கள்.

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராமாயண காதை உலகில் நிற்கும்.

யாவத் ஸ்தா2ஸ்யந்தி கி3ரய: ஸரிதஶ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா2 லோகேஷு ப்ரசரிஷ்யதி

(வால்மீகி ராமாயணம் 1.2.36)

*****

சமூகக் குறியீட்டு ரீதியாக ராமாயணத்தை வாசிப்பது என்றால் – ராவணன் ஆதிக்க சாதியான அரக்கர் குலத்தவன். ஆக்கிரமிப்பின், குரூரத்தின், பயங்கர ஆயுதங்கள் கொண்ட ராணுவ படைபலத்தின், வன்முறையின், எளியவர்களை ஒடுக்க நினைக்கும் செல்வச் செருக்கின், அதர்மத்தின் அடையாளம். ராமன் சாமானிய சாதியான மானுட குலத்தவன். அரசகுமாரன் எனினும் சத்தியத்தைக் காக்கக் கானக வாழ்க்கை மேற்கொண்டு எளியவர்களான முனிவர்கள், வனவாசிகளுடன் உடனுறைந்து, கல்லையும் மரங்களையுமே ஆயுதங்களாகக் கொண்ட வானரப் படைகளின் துணையுடன், அதிகபலம் வாய்ந்த அதர்ம அரக்கரை எதிர்த்துப் போரிடும் தர்ம சக்தியின் அடையாளம்.

அதனால் தான், கடலும் இராமனுக்கு வழிதிறக்கிறது, எளிய ஜீவனான அணிலும் தன் பங்குக்கு உதவி செய்கிறது. அதனால் தான் காந்திஜி தனது இலட்சிய அரசாட்சியை ராம ராஜ்யம் என்றழைத்தார். இந்திரா காந்தி சிறுவயதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தன்னார்வலர் தொண்டர் படையை ‘வானர சேனா’ என்றழைத்தார். இந்த மண்ணின் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்த குறியீடு இது.

இதை அப்படியே திருப்பிப் போட்டு, ராவணனை “வஞ்சிக்கப் பட்டவனாக” (victim) சித்தரிப்பது எந்தவிதமான “புதிய புரட்சியும் ” அல்ல, மாறாக பண்பாட்டு அழிப்புச் செயல். எந்த வரலாற்று ஆதாரமுமில்லாத ஆரிய திராவிட இனவாதத்தை வைத்து திராவிட இயக்க மூடர்கள் தமிழ்நாட்டில் பரப்பி உளுத்துப்போன இழவெடுத்த பொய்ப் பிரசாரத்தை, சாக்கடையிலிருந்து எடுத்து மறுபடி புட்டியில் ஊற்றி பரிமாறும் இன்னொரு விதமான வெறுப்புப் பிரசாரம் மட்டுமே இது. என்னவோ இதில் பயங்கரமான காவிய / இலக்கிய / சினிமா உத்தி எல்லாம் இருக்கிறது என்று புல்லரிக்கும் சிலரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.

#ராமன் #ராவணன் #காலா #ரஜினி

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

கரப்பு (அல்லது) பத்திரிகைக் குழுமம் நடத்துவது எப்படி?

முதலில் “கரப்பு” என்ற பத்திரிகையைத் தொடங்கவும்.

நீங்கள் மோதியை எதிர்த்து எழுதுவதாக மவுண்ட் ரோட் மன்றோ சிலை மேல் சத்தியம் செய்தால் பல விசேஷ , சுவிசேஷ கருத்துக்களால் தூண்டப்பட்ட தன்னார்வ, சுயநிதி, அரசு சாரா அமைப்புகள் நிதி உதவி செய்யும். உங்கள் பெற்றோர், மனைவி, நாடு, மனசாட்சி மற்றும் குழந்தைகளை பிணையாகக் கொடுக்க நேரிடும். அதனாலென்ன? குழுமம் முக்கியமல்லவா?

குழுமப் பத்திரிகளுக்கு செய்தி சேகரிப்பு எவ்வாறு செய்வது? முதலில் எதையாவது ஒரு பொதுவான விஷயத்தை எடுத்துத் தொலையுங்கள். உதாரணமாக ” நகம்”.

கரப்பு : இது வெகுஜனப் பத்திரிகை. எனவே,

ஸ்கார்லட் ஜான்சனுக்கும் ” நகராட்சி” ஹீரோயின் நெயில்யா சக்சேனாவிற்கும் ஒற்றுமை நகம் கடிப்பது. ” சின் புள்ளனின்சி இதே பேடு ஹேபிட்டு நாக்கு ” என்று பெங்காலியில் கொஞ்சுகிறார். நகராட்சி , வட சென்னையில் நடக்கும் நகராட்சி ஊழல் அவலங்களைத் தோலுரிக்கும் படம். ரொன்றோ ( டொராண்டோ)வில் நடக்கும் சர்வ தேச விழாவில் தயாரிபபிறகு முன்பே திரையிடப்பட இருக்கிறது. ஹீரோ கதிரேசனின் அழுக்கு லுங்கி நகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்காக ஏலம் விடப்படும். ( ஹ்யூமன் ஆங்கிள் முக்கியம்)

ஜூனியர் கரப்பு :

இது அரசியல் பத்திரிகை. எனவே ” கலைஞர் கை விரல் நகங்களைப் பரிசோதித்த காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசந்து போனார்களாம். எத்தனை பிரதமர்களை அடையாளம் காட்டிய விரல்களின் நகங்கள்” என்று தலைமை மருத்துவர் சொன்னதும் ஸ்டாலினும் அழகிரியும் கண்ணீரால் ஆஸ்பத்திரி வராண்டாவையே கழுவினார்களாம். எனவே அழகிரி மீண்டும் குடும்ப வட்டத்தில் வருவது உறுதி என்று தயாளு அம்மாள் கருதுவதாக செல்வம், சபரீசனிடம் தெரிவித்த விஷயத்தை நகம் கடிக்கும் பழக்கமுள்ள அருள் நிதி ஆமோதித்துள்ளாராம். இது மோதிக்கு வரவிருக்கும் நகச்சுத்தி என்று குதூகலிக்கிறார்கள் உடன் பிறப்புகள்.

அவள் கரப்பு : இது பெண்கள் கரப்பு…..சீ…பத்திரிகை!

வீட்டில் பாதாமும் முந்திரியும் மிதிபடுகிறதா ? குங்கமப்ப்பூவை மெலிதாக நெய்யில் வறுத்து ஊறவைத்த பாதாமும் முந்திரியும் சேர்த்து மிக்சியில் அடித்து நகங்களில் தடவினால் நல்ல உறுதியான நகம் நாற்பதே வாரங்களில். நடுவில் கை கழுவவேண்டாம்.

தன கரப்பு : இது மணி மேட்டர்ஸ்.

ராஜஸ்தான் பிகநீர் மாவட்டத்தில் நகம் வளர்க்கும் போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. பரிசுத் தொகை ரூ 10 லட்சம். கார்ப்பொரேட்களான லாக்மே, லோ ரியல் இதில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்கள். தற்போது பாபா ராம்தேவின் பதஞ்சலி இதில் 1000 கோடி முதலீட்டுடன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. இந்திய நகங்களுக்கு தென் அமெரிக்க நாடான் சிலியில் பெரும் கிராக்கி. அம்பானி, அதானியின் கடைப்பார்வையும் இந்த நக ஏற்றுமதியில் விழுந்துள்ளதாக உலக வங்கியின் ரக்சிய சுற்றரிக்கை தெரிவித்துள்ளது.

ஆன்மீகக் கரப்பு :
இது பக்தி சமாசாரம்.

நகம் கடிப்பதை பழக்கமாக வைத்திருந்த நசிகேதஸைத் திருத்த யமன் போதித்த தலம். லால்குடிக்கு அருகிலுள்ள நகர் கிராமத்தில் இருக்கும் நக கடேஸ்வரர். அம்பாளின் பெயர் நகநகவல்லி. இங்கு ஆடி அவிட்டத்தில் நகத்தைக் கிள்ளிப் போட்டால் நகம் கடிக்கும் பழக்கும் போகும் என நசிகேதஸ புஜங்கத்தில் இருக்கிறது.

டாக்டர் கரப்பு :
இது மருத்துவம்.

நகம் கடிப்பதால் புற்று நோயா? இருக்கவே இருக்கு க்யூரர் தினகரின் சிகிச்சை. ஆண்டொன்றுக்கு நகச் சுத்தியாலும் நகப் புற்று நோயாலும் 5 கோடி பேர் இறப்பதாக உள்துறை ரகசிய அறிக்கை. இதில் 4 கோடிப் பேர் கால் நகம் கடிப்பதால் என்று ரிப்போர்ட் நம்மை அதிர வைக்கிறது. நகம் கடிக்கும் வழக்கத்தைத் தொடங்கியதே இல்லுமினாட்டிகள் என்று மிரள வைக்கிறார் க்யூரர் தினகர்.

துறுதுறு கரப்பு : இது குழந்தைகள்.

உங்கள் குட்டீஸ் நகம் கடிக்கிறார்களா? தடுக்காதீர்கள். நகம் கடிக்கும் குழந்தைகள் மற்ற சராசரிக் குழந்தைகளைவிட 56.5% அதிக புத்திசாலிகளாகவும், சூழ் நிலையை சமாளிக்கும் பெரியவர்களாகவும் உருவாகிறார்கள் என்று கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வு தெரிவிக்கிறது. நகத்தை கடிக்குமுன் சாஸ், மயோனீஸ், சீஸ் தடவினால் உங்கள் குட்டீஸ் மிகவும் விரும்புவார்கள். நகமும் சீக்கிரம் வளரும். எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் நகத்தைக் கடிக்க அனுமதிப்பது சுகாதாரக் குறைவு என்று வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் அறிக்கை.. சீ, ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது.

இது போல் பல், முடி, விரல், என்று பல வாரங்கள் எழுதி வாசகர்களைக் கவரமுடியும்.

(தி.ரா.சங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

சம்ஸ்கிருதம் குறித்து அப்படி என்னதான் சொல்லி விட்டார் ராஜ்நாத் சிங்?

சமீபத்தில் லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியது ஹிந்தியில். அந்த செய்தி ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாக தமிழுக்கு வருகிறது. அந்த செய்தி நவபாரத் டைம்ஸ் இதழில் வந்துள்ளவாறு அப்படியே கீழே தமிழில் தருகிறேன். (துளசிதாசரையும் பிரேம்சந்தையும் வாசிக்கும் அளவுக்கு, சராசரிக்கும் மேலானது எனது ஹிந்திப் புலமை என்பதையும் சொல்லியாக வேண்டும்).

संस्कृत सबसे अधिक वैज्ञानिक भाषा: राजनाथ सिंह

लखनऊ: केन्द्रीय गृह मंत्री राजनाथ सिंह ने संस्कृत भाषा को बढ़ावा देने की वकालत करते हुए रविवार को कहा कि दुनिया के अन्य देशों के विद्वान भी संस्कृत को सबसे अधिक वैज्ञानिक भाषा के रूप में मान्यता दे रहे हैं। सिंह अपने संसदीय क्षेत्र के तीन दिवसीय दौरे के अंतिम दिन राष्ट्रीय संस्कृत संस्थानों एवं संस्कृत भारती की तरफ से संस्कृत भाषा को घर-घर तक पहुंचाने के लिए शुरू किए गए गृहं-गृहं प्रति संस्कृतम सम्पर्क अभियान के श्रीगणेश के लिए आयोजित एक समारोह को संबोधित कर रहे थे।

அனைத்தினும் அதிகமான அறிவியல்பூர்வமான மொழி சம்ஸ்கிருதம்: ராஜ்நாத் சிங்.

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்ஸ்கிருத மொழி மேம்பாட்டை ஆதரித்து ஞாயிறன்று பேசிகையில், ‘அனைத்து மொழிகளினும் அதிகமாக சம்ஸ்கிருதம் அறிவியல்பூர்வமான மொழி என்று உலகின் மற்ற நாடுளில் உள்ள அறிஞர்களும் போற்றுகின்றனர்’ என்று கூறினார். தனது சட்டமன்றத் தொகுதியில் மூன்று நாள் பயணத்தின் இறுதி நாளில் ராஷ்ட்ரீய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் மற்றும் சம்ஸ்கிருத பாரதி நடத்திய “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்ற பெயரில் இல்லங்கள் தோறும் சம்ஸ்கிருத மொழியை எடுத்துச் செல்லும் மக்கள் தொடர்பு இயக்கத்தின் துவக்க விழாவில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

उन्होंने कहा, ‘संस्कृत भाषा के ग्रंथों में गूढ़ से गूढ़ दार्शनिक प्रश्नों के उत्तर उपलब्ध हैं, चाहे ललित साहित्य की बात हो, विज्ञान अथवा प्रौद्योगिकी अन्य देशों के विद्वान भी संस्कृत को सर्वाधिक उपयोगी भाषा के रूप में स्वीकार कर रहे हैं।’ यह कहते हुए कि सभी भाषाओं का मूल संस्कृत है, सिंह ने कहा कि सुपर कम्प्यूटर बना रहे नासा ने संस्कृत को कम्प्यूटर के लिए सबसे वैज्ञानिक भाषा होने की बात कही है। उन्होंने कहा, ‘अन्य देशों के विद्वान एक तरफ संस्कृत के प्रति आकर्षित हो रहे हैं। यहां तक कि अमेरिका और इंग्लैड के छात्र संस्कृत सीख रहे हैं। मगर विडम्बना है कि भारत उससे दूर हो रहा है।’

kumbakonam-dalit-sanskrit-studentஅவர் மேலும் கூறினார் – “சம்ஸ்கிருத நூல்களில் மிகப்பெரும் சிக்கல்கள் நிரம்பிய தத்துவக் கேள்விகளுக்கு விடைகள் தரப்புட்டுள்ளன. கலை இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் என எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சம்ஸ்கிருதம் அத்துறைக்கு மிகப் பயன்தரும் மொழி என வெளிநாட்டில் உள்ள அறிஞர்களும் ஏற்கின்றனர்”. சம்ஸ்கிருதம் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று கூறிய திரு சிங், “சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்கும் நாஸா நிறுவனமும் சம்ஸ்கிருதம் கணினிகளுக்கான அறிவியல் பூர்வமான மொழி என்பதைச் சொல்லியுள்ளது” என்று குறிப்பிட்டார். “ஒரு புறம் மற்ற நாட்டு அறிஞர்கள் சம்ஸ்கிருதத்தினால் ஈர்க்கப் படுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மாணவர்கள் சம்ஸ்கிருதம் கற்கிறார்கள். ஆனால், விநோதம் என்னவென்றால், பாரதம் அதிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

अंग्रेजी के बट और पुट जैसे शब्दों का उदाहरण देते हुए, सिंह ने कहा कि वर्तनी और उच्चारण की दृष्टि से भी संस्कृत सर्वाधिक वैज्ञानिक भाषा है। उन्होंने कहा कि विभिन्न भाषाओं के उच्चारण में क्षेत्रवार भिन्नता सुनाई पड़ती है, मगर ध्वनि विज्ञान पर आधारित संस्कृत का उच्चारण देश और दुनिया के हर भाग में एक है। सिंह ने वैदिक गणित की उपयोगिता का जिक्र करते हुए कहा कि वर्ष 1991 में उत्तर प्रदेश का शिक्षा मंत्री रहते हुए उन्होंने इसे पाठ्यक्रम में शामिल किया था, मगर बाद में आई सरकार ने उसे पाठ्यक्रम से निकाल दिया।

ஆங்கிலத்தின் but, put ஆகிய சொற்களை உதாரணம் கொடுத்து, எழுத்திலக்கணம் (வர்த்தனி – orthography) மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றின் படி பார்த்தாலும், சம்ஸ்கிருதம் அனைத்திலும் அறிவியல்பூர்வமான மொழி என்பது புலப்படும் என்று அவர் கூறினார். “பல மொழிகளில், அவை பல்வேறு இடங்களில் பேசப்படும் பொழுது பற்பல வேறுபட்ட வடிவங்களைக் கேட்க முடியும். ஆனால், த்வனி விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைந்த சம்ஸ்கிருத உச்சரிப்பு நாடு முழுவதும், உலகின் பல பகுதிகளிலும் ஒன்று போலவே இருக்கும்” என்றார் அவர். வேத கணிதத்தின் பயன்களைக் குறிப்பிட்ட அவர், 1991ல் உ.பியின் கல்வி அமைச்சராகத் தாம் இருந்தபோது பாடத்திட்டத்தில் அதை சேர்த்ததாகவும், பிறகு வந்த அரசுகள் அதை நீக்கிவிட்டதாகவும் கூறினார்.

उन्होंने संस्कृत ग्रंथों में निहित ज्ञान को आधुनिक समाज की उन्नति और सफलता की सीढ़ी बताते हुए कहा कि इस भाषा को घर-घर तक पहुंचाना है और यदि इच्छाशक्ति है तो इसमें कामयाबी जरूर मिलेगी।

“சம்ஸ்கிருத மொழியில் உள்ளுறையும் ஞானம் நவீன சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் படிக்கட்டாக அமையும். விருப்பமும் உறுதியும் இருந்தால், இந்த மொழியை இல்லங்கள் தோறும் எடுத்துச் செல்வது என்ற இலக்கில் கட்டாயம் வெற்றி கிடைக்கும்” என்றும் அவர் கூறினார்.

நன்றி: http://navbharattimes.indiatimes.com/…/article…/48641995.cms

****

ஒரு ஒப்பீட்டுக்காக, இந்த செய்தி தி கிண்டு (தமிழ்) நாளிதழில் எப்படி வெளியாகியுள்ளது என்று பாருங்கள். “அறிவியல், தொழில்நுட்பத்துக்கு உகந்த மொழி சமஸ்கிருதம்: ராஜ்நாத் சிங்” என்று தலைப்பில் ஆரம்பித்து, அவர் பேசியது லேசாகத் திரிக்கப் பட்டுள்ளது தெரிய வரும். இது மொழி அறிவுக் குறைபாடா அல்லது திட்டமிட்ட ஊடக திரிசமனா என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

உண்மையில் ராஜ்நாத் பேசியதில் எந்த சர்ச்சையுமே இல்லை.

*அவர் பேசிய விழாவின் நோக்கமே “சம்ஸ்கிருதத்தை வீடுகள் தோறும் எடுத்துச் செல்வது” என்பது தான். அதை ஏற்பாடு செய்த இரு அமைப்புகளில் ஒன்று மத்திய அரசின் கீழ் நேரடியாக இயங்கும் ரா.ச.சம்ஸ்தான்.

* அவர் வலியுறுத்தியது சம்ஸ்கிருதம் மற்றெல்லா மொழிகளையும் விட அறிவியல்*பூர்வமான* மொழி என்பதைத் தானே தவிர, உடனடியாக அறிவியல் பாடங்களை எல்லாம் சம்ஸ்கிருதத்தில் படிக்க வேண்டும் என்பதாக அல்ல. மொழியியலிலும், பாணினி இலக்கணத்தின் கட்டமைப்பிலும் ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்வார்கள்.

*ACM (Association of Computing Machine) என்ற ஆய்வேட்டில் 1980களில் சம்ஸ்கிருதம் கணினி மொழியாகத் தகுந்தது என்பதை முன்வைத்து இரு ஆய்வாளர்கள் எழுதியிருந்த கட்டுரை மற்றும் இன்னும் சில நாஸா விஞ்ஞானிகள் தெரிவித்த சில உண்மையான கருத்துக்களைத் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் தவறேதும் இல்லை.

babasheb_Sanskrit

* சம்ஸ்கிருதத்தைக் குறித்து பெருமிதமாக விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், திலகர், காந்தி, பாரதியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், காமராஜர், கண்ணதாசன், அப்துல் கலாம் போன்ற பல்வேறு தலைவர்களும் கூறாத எதையும் அவர் கூறி விடவும் இல்லை. சம்ஸ்கிருத மேன்மை பிரகடனம் என்பது பாரத பண்பாட்டு மேன்மை பிரகடனத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம்.

எனவே, இதில் எதிர்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. வேறெந்த மாநிலத்திலும், ஆங்கில ஊடகங்களிலும் கூட இந்த செய்தியினால் எந்த சலசலப்பும் இல்லை. ஆனால் தமிழ் ஊடகங்கள் மட்டுமே இதை ஏதோ பெரிய பிரசினையாக்கிக் கொண்டிருக்கின்றன. “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்” என்று பாரதியார் சொல்லவில்லையா என்ன? அதே போன்ற ஒரு லட்சிய வாசகம் தான் “க்ருஹம் க்ருஹம் ப்ரதி சம்ஸ்க்ருதம்” என்பது. எல்லா மக்கள் இயக்கங்களுக்கும் இத்தகைய வாசகங்கள் தேவை என்பதால் அது அப்படி அமைந்துள்ளதே அன்றி, அது அரசாங்கத்தின் மொழித் திணிப்புக் கொள்கையோ அல்லது இந்துத்துவ அரசின் வெறித்தனமோ அல்லது ஆரிய பார்ப்பன வடவர் சூழ்ச்சியோ எல்லாம் அல்ல. இந்த அடிப்பையான எளிய விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள முடியாத முழு மூடத்தனத்திலும் மௌடீகத்திலும் தமிழ் ஊடகச் சூழலும், “அறிவுஜீவிகளும்” உள்ளனர் என்பது வெட்கக் கேடு.

தமிழ் இலக்கிய வம்புகளைக் கூட தனது கனமான ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் ( Ananthakrishnan Pakshirajan  ), இந்த தி கிண்டு செய்தியை எடுத்துப் போட்டு தமிழில் தாம் தூம் என்று குதிப்பது தான் இதைவிடவும் பெரிய காமெடி. அவர் தில்லிக்காரர், ஹிந்தியில் சிங் பேசியதை அவரால் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியும். ஆனால், எதை எழுதினால் தமிழ் ஃபேஸ்புக் கும்பல்கள் கூடி ஆர்ப்பரிக்கும் என்று தெரிந்து அதை முயன்று பார்க்கிறார் போல. அமைச்சரின் மிக அமர்ச்சையான, பொறுப்பான இந்தப் பேச்சுக்கே இப்படி பொங்கும் இவர், தி கிண்டுவில் தனது சக கட்டுரையாளரான அப்துல் ரகுமான் ஆதாமும் ஏவாளூம் தமிழ் பேசியதில் ஆரம்பித்து விளாசித் தள்ளும் போலித் தமிழ்ப் பெருமை ஜல்லிகளைக் குறித்து ஏதாவது ஒரு வார்த்தை எழுதியிருக்கிறாரா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

மொத்தத்தில் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எந்த பிரசினையையும் குற்றச்சாட்டையும் கிளப்ப முடியவில்லையே என்ற புகைச்சலும் நமைச்சலும் மட்டுமே இதில் தெரிகிறது.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்

ன்று தமிழ்நாட்டில் ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பின் தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிபோய்விட்டது; மதவெறி, சாதிவெறியர்களுக்கு இந்த ஆட்சி ‘நம் ஆட்சி’ அதனால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவு வந்துவிட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த து முதல் மதவெறியை, சாதிவெறியை தூண்டுவிட்டு அரசியல் செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளுடைய தலைவர்கள் ராமகிருஷ்ணன், முஸ்லீம்கள் அமைப்புகள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன. இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (தாக்குதல்தானா?) அவர்கள் அரசியல் செய்வதற்கு வழியைக் காட்டியிருக்கிறது.

இவர்களுடைய ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவான கருத்துக்களை பார்க்கும்போது நமக்கே புல்லரிக்கிறது. உண்மையிலேயே இவர்கள் கருத்து சுதந்திரத்திற்கு, ஊடக சுதந்திரத்திற்கு ஆதரவானவர்கள்தானா என்று பார்க்கும்போது அவர்கள் போட்டிருக்கும் வேடம் கலைந்துவிடுகிறது.

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதை ஆராய்வோம்.

[1] 1950ல் வெளியான ஒரு கார்ட்டூன் சென்ற இரண்டு வருடங்களுக்கு முன் மீண்டும் அது சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. அரசியல் அமைப்புச் சட்டக் குழு நத்தைபோல நகர்ந்துகொண்டிருக்கிறது. சீக்கிரம் எழுதப்படவில்லை. காலதாமதம் ஆகிறது. அதனால் அன்றைக்கு குழு தலைவராக இருந்த அம்பேத்கரை நேரு சாட்டையால் அடிக்கின்ற மாதிரி ஒரு கார்ட்டூன்.

இந்த கார்ட்டூன் உண்மையிலேயே இப்போது பாடபுத்தகத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சேர்க்கப்பட்டது. அதை நானும் இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறோம். ஏன் அன்றைக்கு பாஜக கூட அதை பாடபுத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது.

Slide1

இந்த கார்ட்டூன் அம்பேத்கரை அவமதிக்கிறது, தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி திருமாவளவன் அன்று பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தார். பல்வேறு தலித் அமைப்புகள் போராடினர்.  அன்றைய மத்திய அமைச்சர் கபில் சிபில் இதற்காக மன்னிப்பு கேட்டார். கார்ட்டூனை அனுமதித்த இருவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர். கார்ட்டூனை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்று அப்போது திருமாவளவன்  சொல்லவில்லை. தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லித்தான் போராடினார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரவாதிகள்!

[2] 2008ல் தினமலர் இதழ் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்களை அவதூறாக சித்தரித்து ஒரு செய்தியை வெளியிட்டது. உடனே விடுதலை சிறுத்தைகட்சிகாரர்கள் தினமலர் இதழ் அலுவலகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டார்கள். அங்கிருந்த பல பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். காவலாளி இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். தினமலர் வெளியிட்டது கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று அப்போது அவர்களுக்கு தெரியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை!

சொன்னால் நம்புங்கள் இவர்கள் ஊடக சுதந்திரவாதிகள்!

[3] சுந்தர ராமசாமி பிள்ளைகெடுத்தாள் விளை என்ற ஒரு சிறுகதையை 2005ல் எழுதினார். அதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு தலித் அமைப்புகளிடம் எழுந்தது. ஏனென்றால் அதில் தலித் பெண்கள் பற்றி மிக மோசமாக எழுதப்பட்டிருந்தது என்று சொல்லி எதிர்த்தார்கள். டாக்டர் அம்பேத்கர் மையம் என்ற அமைப்பு இலக்கிய வன்கொடுமை எதிர்ப்பு என்ற பெயரில் ஒரு கருத்தரங்கை நடத்தினார்கள். சுந்தர ராமசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எஸ்ஸி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்று தீர்மானம் இயற்றி அச்சுறுத்தினார்கள். ஒரு எழுத்தாளரின் கருத்து சுதந்திரம் அது என்று அப்போது இவர்கள் பேசவில்லை.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் படைப்பாளர்களின் பாதுகாவலர்கள்!

[4] புதுமைப்பித்தன் எழுதிய துன்பக்கேணி என்ற சிறுகதை சென்னை பல்கலைக்கழக பாடபுத்தகத்தில் சேர்க்கப்பட்டது. இந்த சிறுகதை தலித்துகளை அவமதிக்கிறது என்று சொல்லி தலித் அமைப்புகள் போராடினார்கள். பின்பு சென்னைபல்கலைக்கழக பாடத்திலிருந்து அந்த சிறுகதை நீக்கப்பட்டது.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

[5] எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு பத்திரிகைக்கு பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில் தலித்துகளை அவமரியாதை செய்துவிட்டார், அந்த பேட்டி தலித்துகளை புண்படுத்துகிறது என்று சொல்லி மதுரையில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ன வென்று தெரியாதவர்கள் இன்று கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் எழுத்தாளர்களின் நண்பர்கள்!

இதில் கொடுமை என்னவென்றால் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூட கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் வேடிக்கை.

[6] 2007ல் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த எச்.ஜி.ரசூல் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார்.இஸ்லாத்தில் குடி பண்பாடு என்பது பற்றி எழுதினார். உடனே முஸ்லீம்கள் பொங்கி எழுந்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா? அவரையும் அவர் குடும்பத்தினரையும் இன்றுவரை ஊர்விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். இதை தவறு என்று யாராவது சொன்னார்களா? இத்தனைக்கும் அவர் இடதுசாரி கலை இலக்கிய பெருமன்ற அமைப்பைச் சேர்ந்தவர். பெருமாள் முருகனுக்காக நாடுமுழுவதும் கண்டனக்கூட்டங்களை நடத்திய இவர்கள் கூட தமிழ்நாடு முழுவதும் இந்த பிரச்சினையை பேசவில்லை. ஜமாத்தை எதிர்த்து போராடவும் இல்லை. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம். எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் ரசூலுக்கு எதிராகவே இருந்து வருகின்றன. ஒரு கருத்து சுதந்திரவாதிகள் கூட இஸ்லாமியர்களை கண்டிக்கவில்லை. போராடவும் இல்லை.

Slide6

[7] தஸ்லீமா நஸ்ரின் பற்றி எல்லோருக்கும் தெரியும். இன்று அவர்கள் எவ்வளவு ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதுகூட தெரியும். அவர்கள் நடத்தும் எந்த ஒரு கூட்டமும் முஸ்லீம்களால் வன்முறை உள்ளாக்கப்படும். அவர்கள் பெண் என்றுகூட பார்க்காமல் அடிபட்ட சம்பவமும் உண்டு. இதுதான் இஸ்லாமிய அமைப்புகளின் கருத்து சுதந்திரம்.

[8] 2013ல் சென்னை பல்கலைகழகத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அமீனா வதூத் என்கிற இஸ்லாமிய பெண்ணியவாதி பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு மட்டுமல்ல இஸ்லாமிய கல்லூரியான எஸ்ஐஈடியிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? சென்னை பல்கலைகழகத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்தது. அவர் பேசக்கூடாது என்று மிரட்டல் விடுத்தது. இறுதியில் அந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[9] விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமியர்கள் காட்டிய எதிர்ப்பைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. எல்லா தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்தனர். தியேட்டர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. நடிகர் கமல் பேனருக்கு தீ வைத்தார்கள். தமிழகம் முழுவதும் அராஜகம் நடந்தது. ராமநாதபுரத்திலேயும் கோயமுத்தூரில் உள்ள திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. திண்டுக்கல்லில் அரசு பேருந்துமீது கற்கள் வீசப்பட்டன. காவல்துறையில் அவர்கள் என்ன புகார் கொடுத்தார்கள் தெரியுமா? படத்தை தடை செய்யணும். இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இதுதான் அவர்களுடைய புகார்.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டுமுன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம் லீக் கட்சி நடத்தியது. அதில் பெருமளவு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது நடிகர் மணிவண்ணன் என்ன தெரியுமா சொன்னார்? விஸ்வரூபம் பட பிரச்சினையில் நான் முஸ்லீம்களை ஆதரிக்கிறேன் என்று சொன்னார். இவர் முற்போக்குவாதியாக அறியப்படுகிறவர்.

எங்களுக்கு படம் போட்டுக் காட்டணும் என்று மிரட்டல் விடுத்தனர். இன்றைக்கு பெருமாள் முருகன் மாதிரி அன்றைக்கு கமலும் நான் வேறு நாடுகளுக்கு சென்றுவிடுவேன் என்று சொன்னார். ஆனால் கடைசியில் அவர் படத்தை போட்டு காண்பித்தார். சில சொற்களும், சில காட்சிகளும் நீக்கப்பட்டன. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

[10] இன்னோசன்ஸ் ஆப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒருவாரத்திற்கு மேலாக அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டார்கள் முஸ்லீம்அமைப்பினர். அங்கிருந்த பெருவாரியான வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான். அந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக மக்கள் பட்ட அவதிகள், தொல்லைகள் நாம் மறக்க முடியாது. இதுதான் அவர்களுடைய கருத்து சுதந்திரம்.

Slide10

[11] உங்களுக்கெல்லாம் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களைத் தெரிந்து இருக்கும். அவர் ஒரு முஸ்லீம். அப்துல் ஹமீது அவருடைய நிஜப்பெயர். இந்து பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிறார். அவர்கூட கருத்துசுதந்திரத்தைப் பற்றி பேசினார். பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பேசினார். கருத்து சுதந்தித்தை நசுக்கும் செயல். இந்துத்துவ பேயாட்டம் என்றெல்லாம் பேசினார். ஆனால் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் கார்ட்டூன் விஷயத்தில் அவரின் உண்மை முகம் வெளிவந்தது.

கருத்து சுதந்திரம் என்பது வரையறை செய்யப்பட வேண்டும். நபிகள் பல்லாயிரம் முஸ்லீம்களின் ஐகான். அவரை கொச்சைப்படுத்தக்கூடாது என்று சொன்னார். அதாவது நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது என்ற சொன்னார்.

இதுமட்டுமல்ல அவர் தொலைக்காட்சி விவாதத்தில் ஒன்று சொன்னார். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தடை செய்யவேண்டும் என்றுசொன்னார். அப்படங்கள் மக்களை கெடுக்கின்றனவாம். நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடாது. ஆனால் இராமரை, கிருஷ்ணரை கொச்சப்படுத்தலாம். இதுதான் இந்த முஸ்லீம் வெறியனின் கருத்து சுதந்திரம்.

[12] இன்னொருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நுழைந்து மாநில அளவில் பதவி பெற்று முஸ்லீம் அடிப்படைவாதத்தை தமிழகத்தில் ஊன்றி வருபவர் ஷாநாவாஸ். இவர் ஒரு மதஅடிப்படைவாதி. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். இவருடைய முகநூலை பாருங்கள். ஐஎஸ்ஐஎஸ் போராடுவது மண்ணுக்காக. அவர்களுடைய மக்களுக்காக. அவர்கள் போராளிகள் என்று முகநூலில் பதிவிடுகிறார். அது மக்கள் போராட்டம் என்று சொல்கிறார். நேதாஜி ஆயுதம் ஏந்தி போராடினால் போராளி என்று சொல்கிறீர்கள். அதையே ஈராக்கிகள் செய்தால் தீவிரவாதியா என்று கேள்வி கேட்கிறார்.

அதுமட்டுமல்ல விடுதலைப் புலிகளையும் ஐஎஸ்ஐஎஸ்யும் இணைத்து அவர்களை போராளிகள் என்று சொல்கிறார். சூழல்கருதி முஸ்லீம் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆதரவு தர தயங்குகின்றனர் என்று வெளிப்படையாக முகநூலில் எழுதுகிறார். இவர்தான் கருத்து சுதந்திரத்திற்காக போராடுகிறார்.

சொன்னால் நம்புங்கள் இவர்கள் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரவாதிகள்!

கம்யூனிஸ்டுகளின் கருத்து சுதந்திரம் என்ன தெரியுமா?

[13] 1990ல் கல்கத்தா பற்றிய ஒருபடத்தை எடுத்தார்கள். படத்தின் பெயர் சந்தோஷநகரம். (city of joy) 20 ஆண்டுகள் ஆகியும் கம்யூனிச ஆட்சியில் மக்கள் எவ்வளவு பசியும், பட்டினியுமாக இருக்கிறார்கள் என்பதுதான் அந்த படத்தின் கரு. விடுவார்களா கம்யூனிசவாதிகள்? படக்குழுவினரை ஓட ஓட அடித்தார்கள். வன்முறை மொத்த உருவமாக அன்று இருந்தார்கள். இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[14] ரஷ்யாவில் லெனின் பற்றி அலெக்சாண்டர் ஸோக்குரோய் ஒரு படம் தயாரித்தார். படத்தின் பெயர் டாரஸ் (ரிஷப ராசி) ரஷ்ய திரைப்பட தணிக்கைகுழு தணிக்கை செய்து அங்கு வெளியிடப்பட்டது. பல்வேறு நாட்டிலும் வெளியிடப்பட்டது. கொல்கத்தா திரைப்பட விழாவில் அந்தப் படம் திரையிட்டபோது மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார்கள் கம்யூனிஸ்ட்டுகள். அந்த படத்தில் நடித்த கதாநாயகனைக்கூட விடவில்லை. ஒரே வன்முறை. இவர்கள்தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி இப்போது பேசுகிறார்கள்.

[15] சில ஆண்டுகளுக்கு முன்பு ஒச்சாயி என்றொரு படம் வந்தது. முக்குலத்தோரின் தெய்வமான ஒச்சாயி என்ற பெயரையே அந்த படத்திற்கு தலைப்பாக வைத்திருந்தார்கள். ஒச்சாயி என்ற பெயர் தமிழ்பெயரா என்று கேள்வி கேட்டு வரி விலக்கு அளிக்க தயங்கியது. அப்போது நம்ம காம்ரேட் தா.பாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? தமிழ்நாட்டில் ஒச்சாயி என்ற பெயரில் பல்லாயிரக்கணக்காண தாய்மார்கள் வாழ்கிறார்கள். அவர்களையெல்லாம் அவர்களையெல்லாம் அவமதிக்கிற செயலாக இது இருக்கிறது என்று அறிவித்தார்.

அதாவது அவர் சார்ந்த சாதிக்கு அவர் வக்காலத்து வாங்கலாம். ஆனால் திருச்செங்கோட்டு பெண்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடாது? இதுதான் கம்யூனிஸ்ட்காரர்களின் கருத்து சுதந்திரம்.

Slide18[16] துரை.குணா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை சார்ந்தவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு புத்தகத்தை எழுதினார். ஊரார் வரைந்த ஓவியம் என்று. அந்த புத்தகத்தை குளத்திரான்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் தங்கராஜ் எதிர்க்கிறார். அந்த ஊரைச் சேர்ந்த எல்லா தலித்துகளும் மற்ற சமூக மக்களும் இந்த நூலை எதிர்க்கிறார்கள். இதில் என்ன செய்தி? ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு தலித். அது ஒரு செய்தியா? இல்லை. அவர் ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இதுதான் செய்தி.

அவர் சொல்கிறார்:- எழுத்தாளர் துரை.குணா தவறான  தகவல் தந்திருக்கிறார். அதனால் ஊரில் ஒற்றுமையாக இருக்கிற மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் இந்த புத்தகத்தை தடை செய்யணும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம் என்று சொல்கிறார். இதுமட்டுமல்ல

இந்த புத்தகத்துக்கு ஒருவர் அணிந்துரை எழுதியிருக்கிறார். பெயர் சின்னதுரை. அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? தெரியாமல் அணிந்துரை எழுதிவிட்டேன். அதில் கொச்சையாக எழுதி இருப்பவற்றை நீக்கும்படி குணாவிடம் சொல்லியிருக்கிறேன் என்று கூறுகிறார். அவர் யார் தெரியுமா? இவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இரண்டு கூட்டங்களில் இந்த புத்தகத்தையும் ஆதரித்து பேசினார்கள். ஆனால் அவர்கள் யாருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள் என்று கடைசிவரை சொல்லவேயில்லை. இதையும் இந்துத்துவா ஆட்கள்தான் எதிர்க்கிறார்கள் என்று தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.

[17] முற்போக்கு ‘தி இந்து’ பத்திரிகை பிரான்சில் இஸ்லாமிய தாக்குதலுக்கு உள்ளாகிய சார்லி ஹெப்டோ பத்திரிகையை, கருத்து சுதந்திர  போராளிகள் தங்கள் கையில் வைத்திருப்பது போல ஒரு படத்தை வெளிட்டது  (தி இந்து சர்ச்சைக்குரிய கார்ட்டூனை மறுபிரசுரம் செய்யவில்லை – அந்தத் துணிச்சலை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?  மக்கள் கையில் வைத்திருந்த பத்திரிகை பிரதியில் அந்தக் கார்ட்டூன் லேசாகத் தெரியும் படி இருந்தது, அவ்வளவு தான்). இதற்குக் கூட தமிழகத்தின் முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மறுநாளே தொடை நடுங்கிக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கேட்டது  தி இந்து. ஆனால் இதே பத்திரிகை பெருமாள் முருகனுக்கு  கட்டற்ற கருத்து சுதந்திரம் வேண்டும் என்று கெட்கமில்லாமல் ஆதரவு தெரிவிக்கிறது.

அதாவது சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற இவர்கள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன் கூட கருத்து சுதந்திரம் பற்றி பேசியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியினுடைய கருத்து சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதையும் பார்ப்போம்.

[18] நாடார் பெண்கள் பற்றி சிபிஎஸ்சி பாடபுத்தகத்தில் மேலாடை அணிவது பற்றிய தகவல் சொல்லப்பட்டது. நாடார்கள் கொந்தளித்தார்கள். அதை நீக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குரல்கொடுத்தார். மத்திய இணை அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தார்.. ஏனென்றால் நாடார்களின் மனம் புண்படுகிறது. அதை நாங்களும் வழிமொழிகிறோம். ஆனால் திருச்செங்கோட்டு மக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா? தாலி விஷயத்தில் இந்துக்களுக்கு அந்த உணர்வு இருக்க கூடாதா?

[19] இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் ரெட் சாரி என்ற ஆய்வு நூலை எழுதினார். சோனியா காந்தியைப் பற்றிய நூல் அது. அந்நூலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. மணிஸ் திவாரி மிரட்டினார். அந்நூலை காங்கிரஸ்காரர்கள் கொளுத்தினார்கள். எழுத்தாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதான் இவர்களுடைய கருத்து சுதந்திரம்!

Slide21

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கருத்து சுதந்திர பின்னணி

இந்தியாவின் மரபுகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் கொச்சைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.

[20] பெருமாள் முருகன் எழுதியிருக்கிற நாவலை ஏன் எதிர்க்கிறோம்? ஆய்வு என்ற பெயரில் திருச்செங்கோட்டு பெண்களை பச்சையாக தேவடியாள் என்று கூறியிருப்பதால்.

நாம் ஆதாரம் கேட்டால் மகாபாரதத்தில் இப்படி இருக்கிறது, பழங்குடி சமூகங்களில் அப்படித் தான்  இருக்கிறது என்று சொல்கிறார்கள். தினமணி கூட அப்படித்தான் ஒரு தலையங்கம் எழுதியது.

எல்லா அலுவலகங்களிலும் பெண்களுக்கு பாலுறவு தொந்தரவு கொடுக்கப்படுகிறது. கம்யூனிச அலுவலகத்திலும் தினமணி அலுவலகத்திலும் அப்படி கொடுக்கப்படுகிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா? ஆதாரம் கேட்க மாட்டார்களா? அப்போது எல்லா அலுவலகங்களிலும் இப்படித்தான் நடக்கிறது என்று நாம் பொதுவாக சொன்னால் அது சரியாக இருக்குமா? ஆதாரம் காட்ட வேண்டாமா? இதைத்தானே பெருமாள் முருகனிடம் திருச்செங்கோட்டு மக்கள் கேட்டார்கள்?

பெருமாள் முருகன் எழுதுகிறார் –  “வீதிகளிலே சாயங்காலம் முதலே அலையத் தொடங்கிவிட்டான். இறக்கத்துக் கோயிலுக்கு எதிரே இருந்த தேவடியாள் தெருவில் அன்றைக்குக் கூட்டமே இல்லை. அந்தப் பெண்கள் நன்றாக சிங்காரித்துக் கொண்டு மண்டபங்களில் ஆடப்போனார்கள். இன்னிக்கு நம்மள எவன் பார்க்குறான். எல்லாப் பொம்பளைங்களும் இன்னிக்குத் தேவடியாள்தான் என்று அவர்கள் பேசிச் சிரித்துப் போனார்கள்”. (பக்.87, மாதொருபாகன்)

ஆனால் உண்மை என்ன? 1929ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு எல்லா மாவட்டங்களிலும் இது ஒழிக்கப்பட்டது. எல்லா அலுவலங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. அதன்படி எல்லா தேவதாசி இனாம்களை விடுவித்து, அவர்களை கோயில் பணியின் பொறுப்பிலிருந்து விடுவித்தனர் என்று முத்துலட்சுமி ரெட்டி தன் வாழ்க்கை சரிதத்தில் கூறுகிறார்.

இந்த நாவல் 1940ல் நடப்பதாக தினமலரில் பெருமாள் முருகன் கூறியுள்ளார். அப்படியென்றால் 1940ல் தேவதாசி முறை இருந்ததா? நீதிக்கட்சி தேவதாசி சட்டத்தை கொண்டு வந்து ஒழித்தது என்று பெருமையடிக்கும் திராவிட கழகம் இதற்கு என்ன சொல்லப்போகிறது?

அதாவது கோயிலுக்கு வரும் பெண்கள் எல்லோரும் தேவடியாள்கள் என்பதை வாசகர் மனதில் பதிய வைக்கத்தான் இதை பெருமாள் முருகன் சேர்த்திருக்கிறார். 11வருடத்திற்குமுன் தடைசெய்யப்பட்ட தேவதாசி முறையை இதற்குப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஏன் இவர் இப்படி எழுதுகிறார்? இதனுடைய பின்னணி என்ன?

இவர் 2013ல் தமிழ்பதிப்பான தி இந்துவில் சைவ சமயத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சங்ககால தமிழ்நூல்கள் வெளிவராமல் இருந்ததற்கு காரணம் சைவ சமயம்தான் என்று எழுதினார். அந்த கட்டுரையை படித்தால் ஒருவனுக்கு நிச்சயமாக சைவ சமயத்தின்மேல் வெறுப்புதான் உண்டாகும். தமிழுக்கும் சைவத்திற்கும் பிரிக்கமுடியாத பிணைப்பு இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பல சங்க நூல்கள் சைவ மடங்களில் இருந்துதான் வெளிக்கொண்டுவரப்பட்டவை. உ.வே.சா வாழ்க்கையைப் படித்தவர்கள் இதை அறியலாம். ஆனால் இவர் அந்த உண்மைகளை மறைத்து சைவ சமயமே தமிழுக்கு விரோதியாக இருந்தது என்பதை கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Slide25

[21] இந்த சங்கத்தைச் சேர்ந்த டி.செல்வராஜ் (டேனியல் செல்வராஜ்) எழுதிய நோன்பு என்கிற சிறுகதை பாடமாக 2012-2013ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் வைக்கப்பட்டது. அதில் ஆண்டாள் தாசியின் மகள் என்று கதை எழுதினார். நமக்கு தெரியும். ஆண்டாள் துளசி செடியின் அருகில் கண்டெடுக்கப்பட்டவள் என்று. ஆனால் ஆண்டாளை கொச்சைப்படுத்தும் விதமாக இவர் எழுதினார்.

[22] அதேபோல சோலைசுந்தரபெருமாள் தாண்டவபுரம் என்ற நாவலை எழுதினார். அதில் திருஞானசம்பந்தரை கொச்சைப்படுத்தி எழுதினார். இவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்தான்.

[23] இதனுடைய தொடர்ச்சிதான் கரூரில் புலியூர் முருகேசன்  கவுண்டர்களைப் பற்றி மிக மோசமாக எழுதியது. இவருக்கு பின்புலமாக இந்த சங்கம் இருக்கிறது. அதாவது யாரெல்லாம் இந்த பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் எதிராக இயங்குகிறார்களோ அவர்களை ஆதரிப்பது, அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது – இதையே ஒரு திட்டமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

[24] இந்த கம்யூனிச, திராவிட சித்தாந்த வாதிகள் கூட்டாக சேர்ந்து கும்மியடிக்கும் இடமாகத்தான் இப்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி இயங்கிவருகிறது. பட்டாசைக்கூட வெடிகுண்டு என்றுகூறி ஊடக தர்மத்தை மீறிவருகிறது இந்த தொலைக்காட்சி என்றால் இதனுடைய கருத்து சுதந்திரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆகவே நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். கருத்து சுதந்திரம் – ஊடக சுதந்திரம் பற்றிப் பேச மேற்சொன்ன்னவ அரசியல், சித்தாந்த, ஊடக ஆசாமிகள் ஒருவருக்குக் கூட அதற்கான தார்மீக தகுதி என்பது  சிறிதும் கிடையாது. இவர்கள் அத்தனை பேரும் இரட்டைவேடம் போடும் கபடதாரிகள்  மட்டுமே.

ம.வெங்கடேசன்
ம.வெங்கடேசன்

பிப்ரவரி 8, 2015 அன்று திருச்செங்கோட்டில் “எது கருத்து சுதந்திரம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம்  நடைபெற்றது.

அந்தக் கருத்தங்கில் ம.வெங்கடேசன் ஆற்றிய உரையின்  கட்டுரை வடிவம்.

இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் அனைத்துப் படங்களுடன் அடங்கிய பவர்பாயின்ட் பிரசன்டேஷன் வடிவத்தை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?

முந்தைய பகுதி – ‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

தொடர்ச்சி: 

புதிய தலைமுறையின் நடுநிலை நாணயம்

புதிய தலைமுறை டிவி நடுநிலையானது என்றும் அதில் சகல தரப்பினருக்கும் இடம் அளிக்கப் படுகிறது என்றும் நான் மதிக்கும் நண்பர் பானு கோம்ஸ் கூறியுள்ளார். அதில் உண்மை கிடையாது. புதிய தலைமுறை கம்னியுஸ்டுகளினாலும், தி க கும்பல்களினாலும் இன்னும் சகல விதமான இந்திய இந்து விரோதிகளினாலும் பொறுக்கிகளினாலும் கேவலமான ஆட்களினாலும் நடத்தப் பட்டு வரும் ஒரு டி வி கம்பெனியே.

தேர்தல் சமயத்தி;ல் புதிய தலைமுறை டி வி கம்பெனியின் ஓனர் பச்ச முத்து பா ஜ க கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தார். அவர் அளிக்கும் பிச்சைக்காசு நிதிக்காக அவருக்கும் இரண்டு சீட்டுக்களை பா ஜ க விற்று சோரம் போயிருந்தது. அப்பொழுது தேர்தலுக்கு முன்பாக இந்த டி வி ஒரு அயோக்கியத்தனம் செய்தது. அதாவது பாக்கிஸ்தானில் நிர்வாண நடனம் போன்ற ஒன்றை சிலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோ க்ளிப்பிங்கை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி அதைப் பார்ப்பவர்கள் கர்நாடக பா ஜ க எம் எல் ஏக்கள் என்று பொய் பிரசாரத்தைச் செய்தது. அப்பொழுதே மானம் கெட்ட பா ஜ க பச்சமுத்துவை வெளியில் தள்ளியிருந்திருக்க வேண்டும். மானம் ரோஷம் கெட்டுப் போய் அவனுடன் உறவினைத் தொடர்ந்தது. மீண்டும் மீண்டும் அந்த விடீயோவை ஒளிபரப்பி பா ஜ க கட்சிக்காரர்கள் அனைவரும் பலான படம் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அது பாக்கீஸ்தானிய வீடியோ என்றும் அதில் இருப்பவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானிய முஸ்லீம்கள் என்றும் உண்மை வெளி வந்த பின்னரும் அது இந்த டி வி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப் பட்ட பின்னரும் கூட அந்தக் கேவலமான பொய் பிராசரத்தை அந்த டி விக்காரர்கள் செய்து வந்தார்கள். தொடர்ந்து அந்த பொய்யான வீடியோவைப் போட்டு பா ஜ க வை அசிங்கப் படுத்தினார்கள். பின்னர் அதற்காக எந்தவொரு மன்னிப்போ வருத்தமோ கூட அவர்கள் ஒரு மரியாதைக்குக் கூடத் தெரிவிக்கவில்லை. இதுவே புதிய தலைமுறையின் மீடியா அறம், தார்மீகம், யோக்கியதை, கண்ணியம் எல்லாமே.

puthiya_thalaimurai_under_raid

இன்னொரு உதாரணம் இந்த டி வி ஓனர் பச்சமுத்துவின் கட்சியின் ஊதுகுழலாக செயல் பட்டு வருவது. நண்பேண்டா என்ற படத்தில் ஏதோ ஒரு வசனத்தில் பச்சமுத்து என்ற பெயரில் நடிகர் காமெடி செய்திருப்பதை எதிர்த்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தி அந்தப் படத்தை தடை செய்யக் கோரினார்கள். காமெடியில் வருவதோ பச்சமுத்து என்ற பெயர் மட்டுமே ஆனால் இந்த டி வி ஆட்கள் மீண்டும் மீண்டும் பார்வகுலம் என்னும் ஜாதியினரையே அந்த சினிமா இழிவு படுத்துகிறது என்று சொல்லி மீண்டும் மீண்டும் பொய் பிரசாரத்தை நடத்தினார்கள். அந்த அளவுக்குக் கேவலமான பொறுக்கித்தனமான ரவுடித்தனத்தை வளர்க்கும் ஒரு டி வி இந்த புதிய தலைமுறை டி வி.

இதன் ஓனர் பச்சமுத்துவின் பேரில் ஏராளமான ஊழல் ,மற்றும் ரேப் புகார்கள் உள்ளன. அதற்காக அவரை விசாரிக்க சி பி ஐ அலுலவகத்திற்கு அழைத்த பொழுது இந்த மீடியா ஆட்கள் போய் அவரை வேறு எவரும் படம் எடுக்க முடியாத வண்ணம் மறைத்து ரவுடித்தனம் செய்தார்கள்

ஆக இப்படி பொய் புனைச் சுருட்டு ஆகியவற்றை மட்டுமே விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இந்த டி வி இதன் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் இயல்பான இந்து வெறுப்பினால் இப்பொழுது இந்து நம்பிக்கைகளைக் கேவலப் படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த ஒரு நிகழ்ச்சியே புதிய தலைமுறை அயோக்கியர்களினால் மக்களை ஏமாற்ற நடத்தப் பட்டு வரும் டி வி என்பதை எவருமே புரிந்து கொள்ள முடியும். இந்த டி வி யை ஆதரிக்கும் எவரும் இந்த கேடு கெட்டத்தனத்தை மறைத்து அது ஒரு தரமான டி வி என்று ஏமாற்றுகிறார்கள் பொய் சொல்கிறார்கள். கிடையாது இந்த டி வி பொய் செய்திகளைத் திட்டமிட்டு பரப்பி வரும் ஒரு மோசடி டி வி மட்டுமே

அடுத்ததாக இந்த டி வியின் முக்கியமான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நபர்கள் அனைவருமே கடுமையான இந்து வெறுப்பு உடையவர்கள். கம்னியுஸ்டு மற்றும் திக நிலைப்பாடு உடையவர்கள். அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள். இவர்களினால் எப்படி நடுநிலையான நிகழ்ச்சிகளை அளிக்க முடியும்? புது புது அர்த்தங்கள் என்ற நிகழ்ச்சியை அளிக்கும் ஜென் ராம் ஒரு கம்னியுஸ்டு காரர். நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிச ஆதரவாளர். அவர்களை ஆதரித்தும் இந்து அமைப்புகளை கடுமையாக விமர்சித்தும் ஜுனியர் விகடன் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியவர். அவர் நிகழ்ச்சி நடத்தினால் அது எப்படி நடுநிலையான நிகழ்ச்சியாக இருக்கும்? இதையே அவர் கம்னியூஸ்டுகளுக்கான டி விக்களில் செய்தால் எவரும் கேள்வி கேட்க்கப் போவதில்லை. அவர் கம்னியுஸ்டாக இருப்பதிலோ அதன் கொள்கைகளை பிரசாரம் செய்வதிலோ எனக்கு ஆட்சேபணை இல்லை அது அவர் உரிமை, அவர் சுதந்திரம். அதை தீக்கதிரில் போய் செய்து கொள்ளட்டும். அனைத்து தரப்பினரும் பார்க்கும் ஒரு டி வி யில் நடுநிலையாக நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று பம்மாத்து செய்ய வேண்டாம். அதன் பெயர் மோசடி. மக்களை ஏமாற்றும் வேலை.

puthiya_thalaimurai_jainulabideen

சரி இதுநாள் வரை செய்யவில்லை. இப்பொழுது சாயம் வெளுத்து வருகிறது. இனியாவது அப்படி அறிவித்துக் கொள்ளும் நேர்மை இந்த டி விக்கு உண்டா? புகை பிடித்தால் கான்சர் வரும் என்றொரு விளம்பரத்தை சினிமா காட்சிகளில் வரும் புகை பிடிக்கும் சீன்களில் காண்பிப்பது போல ஜென் ராம் வரும் காட்சிகளில் எல்லாம் இவர் ஒரு கம்னியுஸ்டு என்று உண்மையை அறிவித்து விட்டு நிகழ்ச்சி நடத்தும் நேர்மை அந்த டி வி க்கு உண்டா? இதை ஜென்ராம் செய்ய முடியாது டி வி நிர்வாகிகள் செய்ய வேண்டும். செய்வார்களா?

ஆனால் ஒரு நடுநிலையான டி வி என்று அறிவித்துக் கொண்ட டி வி யில் ஒரு கம்னியுஸ்டு கட்சிக்காரர் பொது மக்களிடம் கருத்து உருவாக்கும் நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது தன் கட்சி தன் கொள்கைகளுக்கு ஆதரவாக நிகழ்ச்சி நடத்தினால் அதை எப்படி நேர்மையான தரமான நடுநிலையான டி வி என்று சொல்ல முடியும்? அவரது சார்பு நிலை அவர் அழைத்து வரும் பேசாளர்கள் மூலமாகவும் அவரது இடையூறுகள் மூலமாகவும் மிகத் தெளிவாக வெளிப்படும். அப்படியானால் அது நிஜமாகவே நடுநிலையான டி வி என்றால் என்ன செய்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு கம்னியுஸ்டு என்று அறிவித்து விட்டு அதை அவர் கழுத்தில் எழுதி மாட்டிக் கொண்டு அல்லவா நிகழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். கேட்க்கும் அப்பாவி பொது மக்கள் இது நடுநிலையான டி வி என்று நம்பி ஏமாற மாட்டான் அல்லவா? அப்படி ஒரு கட்சி அபிமானியை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்துவதும் அதை பொது மக்களிடம் திணிப்பதும் அயோக்கியத்தனம் அல்லவா? மோசடி வேலை அல்லவா? இதை எப்படி நடுநிலையான டி வி என்று பானு கோம்ஸ் போன்றோர் சொல்கிறார்கள். அப்படியானால் நடுநிலையின் அர்த்தத்தை அகராதியில் மாற்றி விட்டார்களா என்ன?

புதிய தலைமுறை நடுநிலையான டி வி என்று எவரேனும் சொன்னால் நான் தான் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பேன் அதை ஏற்றுக் கொண்டால் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

மேலும் இவர்களின் பத்திரிகையில் முன்பு இணையத்தில் உள்ள பெண்களின் படங்களை எடுத்து நிர்வாணமாக்கி காமக் கதைகள் எழுதி அவர்களை மிரட்டிக் கொண்டிருந்த ஒரு பொறுக்கியைத்தான் நிருபராக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை நிருபனாக வைத்துக் கொண்டுதான் வெட்க்கமில்லாமல் கற்பழிக்கு எதிராகப் பேசுகிறார்கள் இந்த அயோக்கிய சிகாமணிகள். இன்னொரு முக்கியமான ஆள் நடிகைகளின் அந்தரங்கங்களை கதைகளாக எழுதி வியாபரம் செய்ததற்காக இன்னொரு பத்திரிகையில் இருந்து அடித்து விரட்டப் பட்ட நபர். இதுதான் இவர்களின் யோக்கியதை தகுதி தராதரம் நேர்மை எல்லாமே.

puthiya_thalaimurai_seeman

இன்னொரு முக்கியமான நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரு தி க கட்சிக்காரர், தி க குடும்பத்துக்காரர். ஒரு தி க காரர் எப்படி இந்து மதத்தை அணுகுவார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அவர் தி க காரர் என்பதை அறிவித்து விட்டு அல்லவா பொது நிகழ்ச்சிகளை நடத்தியிருந்திருக்க வேண்டும்? அதுதானே ஊடக நேர்மை?

இந்த இருவரும் நடத்தும் நிகழ்ச்சிகளில் நடு நிலமை என்ற பெயரில் மோசடித்தனம் செய்து வந்தார்கள். ஒரு பா ஜ க அல்லது இந்த்துவரை அழைத்தால் அவருக்கு எதிராக ஐந்தாறு கம்னியுஸ்டு, தி க , திமுக கட்சி ஆட்களை நடத்தி நிகழ்ச்சி நடத்தி இந்து தரப்பு பேச்சாளர் பேசும் பொழுது நடுவர் இடையூறு செய்து திசை திருப்புவார். நடுநிலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு தரப்பினரை மட்டும் அவமானப் படுத்தும் கேவலப் படுத்தும் கேலிக் கூத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தன. அதையும் வெட்க்கமில்லாமல் பொறுத்துக் கொண்டு இந்து தரப்பினர் கலந்து கொண்டனர். அது அவர்களின் தவறு.

பா ஜ க கட்சி உடனடியாக பச்சமுத்துவுடன் உள்ள கூட்டணியை முறிக்க வேண்டும். அவர் நடத்தும் நிறுவனங்களின் மீதுள்ள அனைத்து புகார்களையும் விசாரிக்க வேண்டும். நடுநிலை இல்லாமல் ஒரு தரப்பாக நிகழ்ச்சி நடத்தும் ஆட்களின் நோக்கங்களையும் பின்புலன்களையும் விசாரித்து இந்த டி வி யின் உண்மையான நோக்கங்களை அம்பலப் படுத்த வேண்டும்.

இந்து அமைப்பினர்கள் இந்த டி வி யை எதிர்த்து போராடுவதுடன் கூடவே தங்கள் கட்சித் தலைவர்களை வற்புறுத்தி உடனடியாக மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். மக்களிடம் இந்த டி வி நிகழ்ச்சிகள் நடுநிலையானைவ அல்ல அது கம்னியுஸ்டுகளினாலும் தி க வினராலும் நடத்தப் படுகின்றன என்பவற்றை விளக்க வேண்டும்

புதிய தலைமுறையின் இந்து விரோதப் போக்குகள்:

புதிய தலைமுறை என்றொரு டி வி கம்பெனியை கல்வி பிஸினெஸ் டிராவல்ஸ் பிஸினெஸ் போன்ற பல தொழில்கள் செய்து வரும் பச்சைமுத்து அண்ட் சன்ஸ் நடத்தி வருகிறது. இவர்கள் ஆரம்பித்த புதிதில் தாங்கள் நடுநிலை டி வி என்றும் அனைத்து தரப்பினர்களுக்கும் இடம் கொடுப்போம் என்றும் சொல்லிக் கொண்டார்கள். இன்னும் அதில் கலந்து கொண்டு பேசும் சிலர் அதற்காக சர்ட்டிஃபிகேட் கொடுக்கிறார்கள்.

அந்த டி வி யில் இருந்து முன்பு தீபாவளி கொண்டாடுவது அவசியமா என்றொரு விவாத நிகழ்ச்சியை நடத்தினார்கள். அவர்கள் போலவே இன்னொரு பிரபலமான டி வி யான விஜய் டி வி யில் அந்தோணி என்னும் கிறிஸ்துவரும் இந்துக்களின் நம்பிக்கைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விவாத நிகழ்ச்சிகளை நீயா நானா பேயா பிசாசா போன்ற நிகழ்ச்சிகளில் நடத்தினார்கள். ஏற்கனவே தி மு க வின் டி வி கம்பெனிகளில் காசி குறித்தும் இந்துக்கள் நம்பிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பும் நிகழ்ச்சிகளும் நடந்தேறி வருகின்றன. இவை அனைத்தும் ஏதோ தனித்தனியாக நடப்பவை கிடையாது. இவை அனைத்துமே இந்துக்களின் ஆதார நம்பிக்கைகளைக் கேள்வி எழுப்பி கிண்டல் செய்து இந்து இளைய தலைமுறையிடம் அவநம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை இந்து மதத்தில் இருந்து பற்றின்றி நம்பிக்கை இன்றி போக வைத்து மதமாற்றம் செய்யும் ஒரு மாபெரும் சதியின் ஒரு அங்கமே. குல தெய்வங்கள் குறித்தும் சிறு தெய்வங்களைப் பிரித்து நாட்டார் தெய்வங்கள் என்று ஆராய்ச்சி செய்து பெருந்தெய்வம் சிறு தெய்வம் என்று பிரிப்பதும், மாதொருபாகன் போன்றொரு நாவல்கள் எழுத வைப்பதும் இந்த சதிகாரர்கள் நிதியுதவி அளித்து செய்து வரும் வேலைகளே.

puthiya_thalaimurai_pachamuthu

இந்தச் சதிச் சங்கிலியின் ஒரு கண்ணியாக இதற்கு முன்பாக விஜய் டி வி யில் ஆழமற்ற மேலோட்டமான விவாத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மொண்ணைகளாக்கி வரும் ஆண்டனி கோட்டு கோபி கம்பெனி பெண்களுக்கு தாலி அவசியமா என்றொரு நிகழ்ச்சியை நடத்தியது. அதை இந்து இயக்கங்கள் பலரும் ஆட்சேபித்தவுடன் முஸ்லீம் பெண்களுக்கு பர்தா அவசியமா என்றொரு நிகழ்ச்சியை நடத்துவது போல நடத்தி விட்டு அதற்கு டைரக்டர் அமீர் தலமையில் முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று சொல்லி அந்த நிகழ்ச்சியையே வெளியிடாமல் நிறுத்தியும் கொண்டது. இப்படி பாரபட்சமாக இந்துக்களின் நம்பிக்கையை மட்டும் கேவலப் படுத்தி நிகழ்ச்சிகள் நடத்துவதையும் பிற மதங்களைத் தொடாத போக்கையும் இந்து அமைப்பினர் கண்டித்து வந்தார்கள்

தாலி உட்பட இந்துக்களின் எந்தவொரு நம்பிக்கை குறித்தும் தாராளமாக விவாதிக்கட்டும், நிகழ்ச்சி நடத்தட்டும் ஆனால் அது போலவே பிற மதங்களின் நம்பிக்கைகளையும் குறைந்தது பிற மதத்தினரின் மூட நம்பிக்கைகளையாவது விவாதித்து விட்டு இந்து மதத்தினரையும் விமர்சிக்கட்டும். மாறாக அவர்களை விமர்சிக்க மாட்டேன் இந்து நம்பிக்கைகளை மட்டுமே விமர்சிப்பேன் என்று சொன்னால் அது அயோக்கியத்தனம். அதைக் கண்டிக்கவே செய்வார்கள். முஸ்லீம் பெண்கள் தமிழ் நாட்டின் வேகாத வெயிலில் கண்கள் மட்டுமே தெரியுமாறு கருப்பு பர்தா அணிய வைக்கப் படுகிறார்கள். அது குறித்தோ கத்தோலிக்க மதத்தின் திருமணச் சட்டம் குறித்தோ முஸ்லீம் ஆண்களின் பலதார மணம் குறித்தோ இதே மீடியாக்கள் விமர்சிக்க நிகழ்ச்சி நடத்த தயாராக இல்லாத பொழுது தேர்ந்தெடுத்து இந்துக்களின் நம்பிக்களை மட்டும் விமர்சித்து விவாதிப்பார்களேயானால் அதில் உள்நோக்கம் உள்ளது சதி எண்ணம் உள்ளது என்று சந்தேகித்து கண்டிக்கப் படுவார்கள். அப்படி கண்டிப்பதில் தவறேதும் கிடையாது. என்றைக்கு உங்களுக்கு அனைத்து மதங்களையும் ஒரே சமமாக விமர்சிக்கும் உரிமை சுதந்திரம் கிடைக்கிறதோ அன்றைக்கு நீங்கள் தாராளமாக இந்துக்களைப் பற்றியும் நிகழ்ச்சி நடத்தி விட்டுப் போங்கள். அது வரை நடிகைகளின் தொப்புள்களை ஆராய்வதுடன் மட்டுமே உங்கள் நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஏன் புதிய தலைமுறை டி வி தாலி குறித்த நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் அவர்கள் நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்காக உரிமைக் குரல் கொடுத்திருக்கிறார்கள்  சில முற்போக்குகள்.  தாராளமாகக் கொடுக்கட்டும். ஆனால் விஜய் டி வி பர்தா நிகழ்ச்சியை நிறுத்திய பொழுது இதே அக்கறையை  எந்தவொரு முற்போக்கு அறிஞர்களும் காண்பிக்கவில்லை என்பதே உண்மை. இந்த இரட்டை வேடங்கள் இருக்கும் வரையிலும் புதிய தலைமுறையின் இந்து விரோத நிகழ்ச்சிகளுக்கு எதிரான கண்டனங்களை அதில் மெரிட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் ஆதரிக்கவே செய்வேன்.

********

புதிய தறுதலை டி வி மீது குண்டு வீசியதாக மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். எந்தவொரு இந்து அமைப்புகளிலும் இல்லாமல் திடீரென்று தோன்றி ஏற்கனவே கோவை பகுதிகளில் ஃப்ராடு செய்து விட்டு சென்னைக்கு வந்து ஒரு திடீர் இந்து அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் பஸ் ஏஜெண்ட் ஒருவரும் அவரது பஸ் ப்ரோக்கர்கள் சிலரும் தாங்கள்தான் குண்டு வீசியதாகச் சொல்லி கைதாகியிருக்கிறார்கள். அவர்கள் வீசியது வெடி குண்டு அல்ல தீபாவளிக்கு வெடிக்கப் படும் பட்டாசுகள் என்று சென்னை கமிஷனர் ஜார்ஜும் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஒரு மீடியா மீது தீபாவளி பட்டாசாகவே இருந்தாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் அவர்கள் வளாகத்தில் வீசி எறிந்தது குற்றமே. அதற்காக அப்படி வீசியவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்கப் பட வேண்டும். இவை போன்ற ரவுடித்தனங்கள் கடுமையாகக் கண்டிக்கப் பட வேண்டும். இதில் எந்தவொரு இந்து ஆதரவாளர்களுக்கும் ஆட்சேபணை கிடையாது. மேலும் அவனை அனைத்து இந்து அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்தும் உள்ளார்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிஜ குண்டுகள் வைத்து மக்களைக் கொல்லும் பொழுதெல்லாம் அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்றும் போலீஸ் பொய் கேஸ் போடுகிறது என்றும் சொல்லி அவர்களுக்கு ஆதரவாகப் பேசும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் போலி மதவாதக் கட்சிகள் போல் இல்லாமல் செய்த ஆள் இந்துவாக இருந்தாலும் அவன் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று இன்று அனைத்து இந்து கட்சியினரும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த டிபன்பாக்ஸ் குண்டுவீச்சு முழுவதும்  புதிய தலைமுறை டிவிக் காரர்களே திட்டமிட்டு செய்த ஒரு நாடகம் என்றும் சொல்கிறார்கள். அதையும் போலீசார் விசாரித்து அது உண்மையென்றால் இந்த செட்டப்பை செய்த பச்சமுத்து மற்றும் அந்த டி வி யின் சம்பந்தப் பட்ட அனைவரும் கைது செய்யப் பட்டு கடுமையாக தண்டிக்கப் பட வேண்டும்.

(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

‘புதிய தலைமுறை’ தாலி விவாதமும் “தாக்குதல்களும்”

ண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சிஇந்துப் பெண்களின் மங்கலச் சின்னமான தாலியை அவமதிக்கும் வகையில் ஒரு விவாத நிகழ்ச்சியை அறிவித்து, பிறகு எதிர்ப்புகள் மிகவும் வலுக்கவே, அதன் ஒளிபரப்பை ரத்து செய்தது .  இந்த பின்னணியில் புதிய தலைமுறை டிவி அலுவலகம் மீது  நிகழ்த்தப் பட்ட டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  இதில்  ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன், பாஜக தேசியப் பொருளாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகிய தலைவர்கள்  இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

puthiya_thalaimurai_tiffin_box_bomb_newsஇது தொடர்பாக சமூக வலைத் தளங்களில் தெரிவிக்கப் பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்தளிக்கிறோம்.

ஹர்ஷ் தமிழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:

தமிழகத்தில் ஒரு சில “இந்து” அமைபுகள் இருக்கின்றன. இவையெல்லாம் சில்லறை விளம்பரத்திற்காகவும், பணத்துக்காகவும் இயங்கக் கூடியவை. சில கிறிஸ்தவ நிறுவனங்களாலும், சில இஸ்லாமிய நிறுவனங்களாலும், சில திராவிடக் கட்சிகளாலும் ”சோறு” போட்டு வளர்க்கப்படுபவை.

தமிழகத்தில் உண்மையான ஹிந்துத்துவம் காலூன்றிவிடக் கூடாது என்பதற்காகவும், பாரதிய ஜனதா கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தங்களைச் சோறு போட்டு வளர்க்கும் நிறுவனங்களும் திராவிடக் கட்சிகளும் என்ன செய்யச் சொல்லி உத்தரவு போடுகிறார்களோ அவற்றை சிரமேற்கொண்டு செய்யக்கூடியவை இந்த சில்லறை அமைப்புகள்.

ஆர்.எஸ்.எஸ், வி.ஹி.ப மற்றும் இந்து முன்னணி போன்ற நேர்மையான, பண்பாடு மிக்க, உண்மையான தேசபக்தி கொண்ட ஹிந்து அமைப்புகள் ஜனநாயக முறையில் கையிலெடுக்கும் போராட்டங்களை இடையில் புகுந்து கெடுத்து நீர்த்துப்போகச் செய்வது; தேர்தல் சமயங்களில் பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் தாங்களும் திராவிடக் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்களுடைய வேட்பாளர்களை நிறுத்தி ஹிந்து வாக்குகளைப் பிரிப்பது; பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் களத்தில் வேலை செய்வது; ஆகிய துரோகச் செயல்களில் ஈடுபடுவது இந்தச் சில்லறை அமைப்புகளின் வழக்கம்.

“இந்து கலாச்சாரத்தைக் காப்பாறுகிறோம்” என்று கூறிக்கொண்டு மட்ட ரகமான தரம் குறைந்த போராட்டங்களை அறிவிப்பது; உதாரணத்திற்கு சமீபத்தில் ஒரு இஸ்லாமிய அமைப்பு மஹாராஷ்டிர பாஜக-சிவசேனா அரசுக்கு எதிராக சென்னை ராஜ்பவன் கவர்னர் மாளிகை முன்பு மாடு அறுக்கும் போராட்டம் அறிவித்தபோது, அதற்கு எதிராக பன்றி அறுக்கும் போராட்டம் அறிவித்ததைச் சொல்ல்லாம்.

இவர்கள் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட ஹிந்து விரோத சக்திகளிடம் பணம் பெற்றுக்கொண்டு, இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றன இந்தச் சில்லறை அமைப்புகள்.

இந்தப் பின்னணியில்தான் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தில் குண்டு வீசியதாக்க்கூறி சரணடைந்தவரின் அமைப்பையும் நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகள் இந்தியாவைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிய சூனியா அரசு, “காவி பயங்கரவாதம்”, “இந்து பயங்கரவாதம்” என்று இல்லாத ஒன்றை, தேச விரோத ஊடகங்களின் உதவியுடன் கட்டமைத்துள்ளது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த சோரம் போன சில்லறை அமைப்புகள் நடந்துகொள்கின்றன.

தற்போது மத்தியில் வலிமையான பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. எனவே அதற்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றிவிடாமல் செய்யவும், இனி இந்த சில்லறை அமைப்புகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும். தேச விரோத ஹிந்து விரோத ஊடகங்களும் ஹிந்துத்துவத்திற்கு எதிரான ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சிக்கும்.

இந்த சில்லறை அமைப்புகள் நமக்கு ஆபத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த மாதிரியான சில்லறை அமைப்புகளை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

*********

ஜடாயு  தனது  ஃபேஸ்புக் பக்கத்தில்:

‘தாலி’ ஒரு சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்தச் சர்ச்சைகளில் உண்மையிலேயே ஏதாவது சாரமிருக்கிறதா என்று பார்க்கலாம்.

thaali_mangalsutra1. மங்கல நாண் அணிவது தொன்மையான இந்துக் கலாசாரமே அல்ல. சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரத்தில், வேதங்களில், இதிகாசங்களில் அது பற்றி எதுவும் இல்லை என்கிறார்கள் சில “ஆய்வாளர்கள்” (என்னவோ மற்ற எல்லா விஷயங்களையும் இந்த நூல்களில் உள்ளதா என்று பார்த்துத் தான் செய்வது போல). சரி, ஒரு வாதத்திற்காக அது உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அதன் அடிப்படையில் தாலியை அவமதிக்கவோ, விலக்கவோ வேண்டும் என்று வாதிடுவது, அதுவும் இந்து எதிர்ப்பாளர்கள் அவ்வாறு பேசுவது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. நமது இன்றைய இந்துக் கலாசாரம் என்பது பல நூற்றாண்டுகளாக பரிமணித்து பல்வேறு கூறுகளை இணைத்துத் தொகுத்து வளர்ந்திருப்பது. அதிலுள்ள நல்ல கூறுகளை, அவை பிற்காலத்தவையாக இருந்தாலும் ஏற்பதும், தீய கூறுகள் பழமையானதாக இருந்தாலும் நிராகரிப்பதுமே ஆரோக்கியமான வழிமுறையாகும். இந்து மதத்தின் டி.என்.ஏவிலேயே இந்த இயைபுத் தன்மை (adaptability) உள்ளது.

மேலும் பொதுயுகம் 5-6ம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட பல நூல்களில் தாலி / மங்கல நாண் பற்றிக் குறிப்புகள் உள்ளன. லலிதா சகஸ்ர நாமத்தில் “காமேஸ்வரன் கட்டிய மங்கல நாண் அழகு செய்யும் கழுத்துடையவள்” (காமேஶ ப³த்³த⁴ மாங்க³ல்ய ஸூத்ர ஶோபி⁴த கந்த⁴ரா) என்றே ஒரு திருப்பெயர் உண்டு. “மன்றின் மணி விளக்கெனலா மருவு முக நகை போற்றி – ஒன்றிய மங்கல நாணின் ஒளி போற்றி” என்பது சிவகாமியம்மை துதி (காஞ்சிப் புராணம்). தாலியை இந்து சமூகம் திருமண உறவின் மங்கலச் சின்னமாக, புனிதமானதாக குறைந்தது 15 நூற்றாண்டுகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒன்றே அதை மதிப்பதற்கும் கட்டிக் காப்பதற்கும் போதுமானது. அதற்கு மேல் வேறு எந்த ஆதாரமும் தேவை இல்லை.

2. எதிர்மறை அம்சம் என்ற வகையில் கணவனை இழந்த பெண்கள் தாலியை சடங்குரீதியாக அறுப்பது என்பது மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது என்று சொல்லப் படுகிறது. அது உண்மை தான். ஆனால் இறப்பு தொடர்பான எல்லா சடங்குகளுமே அந்த வகையானவை தான்; உற்றவரின் மரணம் என்ற மாபெரும் இழப்பை சகித்துக் கொண்டு அதிலிருந்து படிப்படியாக மீண்டு வர உளவியல் ரீதியாக மக்களைப் பக்குவப் படுத்துபவை அவை. அந்த சடங்குகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் அவற்றை செய்கிறார்கள். கட்டாயமில்லை. மன முதிர்ச்சியுடன், புரிந்துணர்வுடன் அவற்றை அணுக வேண்டும்.

கசந்து போன திருமண உறவில், பிரிந்து வாழும் பெண் ஏன் அனாவசியமாக தாலியை சுமக்க வேண்டும் என்று கேட்கப் படுகிறது. அந்த சூழலில் தாலியை அணிவதும் விலக்குவதும் சம்பந்தப் பட்ட பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதில் எந்த விதக் கட்டாயமும் இருக்கக் கூடாது, நடைமுறையில் அப்படி இருப்பதாகவும் தெரியவில்லை.

இந்த எதிர்மறை அம்சங்களைக் காரணமாகக் காட்டி, தாலி என்ற மங்கலச் சின்னத்தையே ஒட்டுமொத்தமாக மறுதலிப்பது தர்க்கபூர்வமானது அல்ல. இத்தகைய வாதத்தை வைத்து அறிவியலை, கல்வியை, ஜனநாயகத்தை எல்லாவற்றையுமே மறுதலித்து விட முடியும்.

3. நமது சமுதாயம் தனது விருப்பதற்குரிய மரபுகளைக் கூட காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற பல மாறுதல்களுடன் தான் கடைப்பிடித்து வருகிறது. தாலிக்கும் அது பொருந்தும். மஞ்சள் கயிறு, சங்கிலி, தாழ்வடம் என்று பலவிதங்களில் கோர்த்து இந்துப் பெண்கள் மங்கல நாணை அணிகிறார்கள். இந்த அணிகலன் சிறியதாக கழுத்தில் அணியப் படுகிறதே அன்றி இஸ்லாமியப் பெண்களின் கருப்பு பர்தாக்கள் போல நடைமுறையில் பெண்களின் ஆரோக்கியத்திலோ, அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதிலோ அல்லது பணிச்சூழலிலோ எந்த விதமான இடையூறுகளையும், தேவையற்ற கவன ஈர்ப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.

எனவே தாலியின் மீது அநாவசிய வெறுப்பை உருவாக்குவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப் படும் வெறுப்புணர்வுப் பிரசாரம் என்றே கருத இடமிருக்கிறது.

நிற்க.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது நடந்த அதிபயங்கரமான “குண்டுவெடிப்பு தாக்குதல்” இன்றைய தி கிண்டுவின் எல்லா தேசிய பதிப்புகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. முதல் பக்கத்தில் பாதிக்கு செய்தி, ஒரு தலையங்கம், நடுவில் ஒரு முழுப் பக்கதிற்கு வழக்கமான தி கிண்டு பாணி மசமச வளவளா கட்டுரைகள்.. அலுவலக காம்பவுண்டில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்தாத பட்டாசு சத்தம் கேட்டு ராத்திரி ஐயோ அம்மா என்று திடுக்கிட்டு எழுந்த வாட்ச்மேன்களின் பெயர்களைக் கூட முதல் பக்கத்தில் போட்டு செய்தி ஊடக வரலாற்றில் புதிய புர்ச்சியை செய்து விட்டிருக்கிறது தி கிண்டு.

இந்த “தாலி தேவையா” கழிசடை விவாதம் “புதிய தலைமுறை”யின் ஒரு மூன்றாந்தரமான பரபரப்பு உத்தி. அதை இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கருத்தியல் ரீதியாக கண்டனம் செய்வது மிகச் சரியான வழிமுறை. அதோடு, அந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர்களிடம் நேரடியாகப் பேசி இதனால் அவர்கள் பொது மக்களிடத்தில் மதிப்பிழப்பது பற்றி எச்சரிக்க வேண்டும்; மீறினால் அவர்களது தயாரிப்புகளைப் புறக்கணிக்கக் கோரி பிரசாரம் செய்யவும் வேண்டும்.

ஒரு பம்மாத்து டிவி நிகழ்ச்சிக்கு எதிராக சில லெட்டர்பேடு இந்துப் பெயர்தாங்கி இயக்கக் கோமாளிகள் வீராவேசமாக “வெடித்து” கிளம்புவதே பெரிய காமெடி என்றால் புதிய தலைமுறை, தி கிண்டு போன்ற ஊடகக் கோமாளிக் கயவர்கள் அதை முன்வைத்து நடத்தும் கூத்துகள் அதைவிடப் பெரிய காமெடியாக இருக்கின்றன.

islam_jihad_burqa_women_slaveryஒரு சார்லி ஹெப்டோவாக ஆக முடியாவிட்டாலும், எப்படியாவது ஏதாவது கருத்து சுதந்திர தியாகியாக மாறியே தீரவேண்டும் என்று உங்களுக்கு உள்ளூர ஆசை இருக்கிறது என்பது புரிகிறது.. ஆனால் இதுவா அதற்கான வழி? அதற்கு நேரடியான எளிதான வழிகள் நிறைய இருக்கிறதே – பர்தா என்னும் இருட்சிறைக்குள் இஸ்லாமியப் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது, தமிழ் மரபின் நெறிகளுக்கு எதிராக ஹலால் என்ற குரூரமான முறையில் மிருகங்களை வெட்டி கசாப்பு போடுவது, பெண்ணுரிமைகள் அனைத்தையும் கடாசி விட்டு தலாக் முறையில் விவாகரத்து செய்வது – இந்த அதிமுக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதம் நடத்தி அதை ஒளிபரப்பக் கூடாது? குரானிய வசனங்களின் ரத்தக் களரியைப் பற்றி, இஸ்லாமிய வரலாற்றின் கொள்ளைகளை, குரூரங்களை, வன்புணர்வுகளைப் பற்றி ஏன் நிகழ்ச்சிகள் தயாரிக்கக் கூடாது?

மேற்சொன்னவற்றைச் செய்யுங்கள். உடனடியாக நீங்கள் விரும்பியது நடக்க மிக அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்போது அதற்கான தகுதியும் கூட உங்களுக்கு வந்ததாக ஆகும். அட, அவ்வளவு பெரிய கருத்து சுதந்திர வீரப் புகழுக்காக சில அடிகளையும் உதைகளையும் வெட்டுகளையும், சில உண்மையான சின்ன குண்டுவெடிப்புகளையும் கூட உங்களால் சகிக்க முடியாதா என்ன?

அதை விட்டுவிட்டு தாலியை அவமதிக்கத் துடிக்கிறீர்களே தறுதலைகளே – உங்களுக்கு வெட்கமாயில்லையா? தமிழகத்தில் பூ விற்கும் பெண்கள் முதல் புகழின் உச்சியில் இருக்கும் உயரதிகாரிகள் வரை மதித்து அணியும் மங்கலச் சின்னமான தாலி. தங்கள் உழைப்பிலும் பண்பிலும் உண்மையாக நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பெண்கள் மதித்து அணியும் தாலி. கட்டாயத்தின் பேரில் அல்ல, உள்ளார்ந்த அன்பினாலும், பாசத்தினாலும் கலாசார உணர்வாலுமே உந்தப் பட்டு தமிழ்ப் பெண்கள் மனமுவந்து அணியும் ஒரு அணிகலன். அது *அவசியமா* என்று கேட்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? தாலியைப் போன்ற ஒரு பண்பாட்டு அடையாளத்தை அருவருக்கத் தக்க வகையில் பொது நிகழ்ச்சியில் அவமதிப்பதன் மூலம் என்ன பெரிய எழவுப் புரட்சியைக் கொண்டு வரப் போகிறீர்கள்?

உங்கள் ஊடக போலித் தனத்தின் அவலட்சணத்தைப் பார்த்து ஊரும் உலகமும் சிரிக்கிறது. அதையாவது உணருங்கள் அறிவிலிகளே.

************

 நம்பி நாராயணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில்:

இந்த டிபன் பாக்ஸ் குண்டு வழக்கில் தற்போது சரணடந்து கைதாகி இருக்கும் ஜெயம் பாண்டியனின் பின்புலம் பற்பல சந்தேகங்களை எழுப்பி யுள்ளது. இந்த நபர் கோவை பெரியகடை வீதியில் உள்ள சான்மா காம்ப்ளெக்ஸ் இல் ஜெயம் டிவி என்கிற பெயரில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி வந்தவர். அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 25 லட்சம் ரூபாயை செலுத்தாமல் டிவியை பூட்டி கொண்டு தலைமறைவானவர். தற்போது சென்னை கோயம்பேட்டில் ஜெயம் டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்திவருபவர். இவர் இல்லாத கட்சிகளே இல்லை எனலாம். திமுகவில் இருந்திருக்கிறார். பிறகு நாம் தமிழர் கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்பாளராக செயல்பட்டு வந்திருக்கிறார். அதன்பின் இந்து மக்கள் கட்சியில் பணியாற்றிவந்துள்ளார். இவரது இந்து இளைஞர் சேனா துவக்கப்பட்டு மூன்று மாதங்களே ஆகின்றன. யாருடைய பின் புலத்தில் இவர் இந்த இயக்கத்தைத் துவக்கினார் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

சம்பவம் நடந்து ஏழு மணிநேரத்தில் இவர் மதுரையில் சரண் அடைந்து இருப்பது சந்தேகம் வருகிறது. தனது இயக்கத்தின் பெயர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என அறிவிக்கப்பட்ட நிலையில் தான் மதுரையில் சரணடந்ததாக இவர் தெரிவிப்பது ஆச்சர்யமாக உள்ளது. எங்கே எப்போது யாரால் அப்படி அறிவிக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இவரது கோயம்பேடு அலுவலத்தில் இருந்த ஐவரும் கூட கைதாகியுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையோடு பிரச்சனை முடிந்ததாகக் கருத இடமில்லை. காரணம் இதில் அடங்கியுள்ள மர்மங்களும் சந்தேகங்களும் தான்.. தற்போது பிரச்சனையில் நான்கு தரப்பினர் உள்ளனர். முதலாவது, 2000 தொலைபேசி எதிர்ப்புகளுக்குப் பிறகும், முக்கிய ஹிந்துத்வ பிரமுகர்களின் வேண்டுதலுக்குப் பிறகும் நிகழ்ச்சியை நடத்துவது என பிடிவாதமாய் இருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி. இரண்டாவது இவர்களின் உணர்வுகளை மதிக்காத போக்கால் வெகுண்டு எழுந்த ஹிந்துத்வ இயக்கங்கள். மூன்றாவது காவல்த்துறை. நானகாவது இந்த நிகழ்வுகளால் குளிர்காய நினைக்கும் பல மதவாத வகுப்புவாத இனவாத அமைப்புகள். இந்த நால்வரில் காவல்த்துறை மீது புதியதலைமுறை தனது ஊடகவலிமையால் தாக்குதல் செய்ய காவல்த்துறையும் நிலை தடுமாறி தேவையற்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. இரண்டாவதான, நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த முக்கிய ஹிந்து இயக்கம், ஒரு சாதாரண எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏதோ ஒரு மாபெரும் தாக்குதல் போன்று நாடகமாடி மக்கள் அரங்கில் அரேங்கேற்றிவிட்ட புதியதலைமுறையின் பொய் பிரசாரத்தை எப்படி எதிர் கொள்வது என திட்டமிட்டு வருகிறது. ஹிந்து பரிவார் இயக்கங்கள் என்றுமே வன்முறைகளில் ஈடுபட்டதில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. இதுவரை காங்கிரஸ் தலைமையில் இதர சிறுபாண்மை ஆதரவு ஹிந்து விரோத கட்சிகளால் புனையப்பட்ட ” ஹிந்து பயங்கரவாதம் ” என்ற சொல் எங்குமே நீடித்த வெற்றி பெறவில்லை. ஆக, மொத்த சந்தேகங்களும் மூன்றாவதும் நான்காவதுமான புதியதலைமுறை மீதும், இச்சம்பவங்களால் குளிர்காய நினைக்கும் மதவாத வகுப்புவாத இயங்கங்கள் மீதும் தான் படிகின்றன.

அது எப்படி புதிய தலைமுறையே அப்படி ஓர் காரியம் செய்ய முனையும், இதர கட்சிகள் அதற்கு உடன்பட முடியும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆனால் சமீபத்திய ஹிந்துத்வ எதிர்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் செயல்களும், அவற்றிற்கு ஆதரவாக பல ஊடகங்கள் சதி செய்து வந்ததும், வருவதுமான வரலாறு இந்த ஐய்யபாடுகளில் உள்ள நியாயத்தை உணர்த்தும்.

 (தொடரும்)

அடுத்த பகுதி –  ‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா?

பெருமாள் முருகன் விவகாரம்: அறிவுலகவாதிகளும், சாமானிய மக்களும்

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான  நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் திருச்செங்கோடு. திருச்செங்கோடு என்றவுடனே நினைவுக்கு வருவது அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோவில்தான். ஆணும் பெண்ணும் சரிபாதி என்னும் உயர்ந்த தத்துவத்தை நிலைநாட்டும் வகையில் மாதொரு பாகனாக ஆண்டவன் அங்கே காட்சி தருகிறார். இன்று வரைக்கும் கொங்கு நாட்டுக் கிராமங்கள் பலவற்றுக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுடனான தொப்புள்கொடி உறவு தொடர்ந்து இருந்து வருகிறது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

திருச்செங்கோடு  பகுதி விவசாயம் சார்ந்ததாகவே இருந்து வந்தது. கடந்த காலங்களில் போதிய நீர்வளம் இல்லாததால் மக்கள் வெவ்வேறு தொழில்களுக்கு மாறினார்கள். தங்களின் கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வினால் இன்று வெவ்வேறு  தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் அறிந்த வரை அந்தப்பகுதி மக்களின் தொழில் திறமை தமிழகத்தின் பிற பகுதிகளை விடவும் அதிகம். அவர்களிடத்தில் அசாத்தியமான தொழில் முனையும் தன்மை உள்ளது. சென்ற 2011-ஆம் வருடம் வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரப் பயணமாகச் சென்றிருந்தோம். முதல் நாள் அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரான இடாநகரில் கருத்தரங்கு முடிந்து விடுதிக்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அங்கு வழியில் ஒரு ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்தது.

அருகில் சென்ற பார்த்தபோது அது திருச்செங்கோட்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இவ்வாறு அப்பகுதி மக்கள் ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலை நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆகையால் இப்போது திருச்செங்கோடு நாடு முழுவதும் அறியப்படும் நகரமாக உள்ளது.  போக்குவரத்து, ஜவுளி, விசைத்தறி உள்ளிட்ட பல தொழில்களை  இன்று அவர்கள் செய்து  வருகின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில் மற்றும் தொழில் முனையும் தன்மைக்கு எடுத்துக்காட்டாக நாடு முழுவதும் பெருமையுடன் அறியப்பட்டு வந்த திருச்செங்கோடு,  கடந்த இரண்டு மாதங்களாக வேறொரு காரணத்துக்காக வெளியில் பரவலாகப் பேசப்பட்டு  வருகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகள், தேசிய மற்றும் மாநில ஊடகங்கள்  எனப் பலவற்றிலும் கட்டுரைகளும், விவாதங்களும், செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன.

பெருமாள் முருகன்
பெருமாள் முருகன்

அதன் பின்னணியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி ஆசிரியரான பெருமாள் முருகன் என்பவர் எழுதிய  ‘மாதொரு பாகன்’ என்னும் நாவல் உள்ளது. அவரது புத்தகத்தில்  எழுபது வருடங்களுக்கு முன்னால் அங்கு நடந்தவற்றைச் சொல்வதாகக் கதையைப் படைத்துள்ளார். அது திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள கிராமப் பகுதியில்  வாழ்ந்த மக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

தனது நாவலுக்காகக்  கள ஆய்வுகள் மூலம் தகவல்களைச் சேகரித்ததாக அவர் முன்னுரையில் கூறுகிறார். மேலும் அதை எழுதுவதற்காக ஒரு குறிப்பிட்ட அமைப்பில் நிதி பெற்றிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகம் வெளிநாட்டு வாசகர்களுக்காகப் பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

நாவலின் கதாநாயகர்கள் அங்கு பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகிப்  பல வருடங்களாகக் குழந்தை பிறக்கவில்லை.  தம்பதியினர் திருமணமாகி குழந்தைப் பேற்றுக்காக இறைவனை வேண்டுவதும், மலைக்கு மேலே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று வழிபடுவதும் காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம்.

நாவலில் குழந்தைப் பேறு தாமதமானதால், கதாநாயகி கோவில் தேர்த் திருவிழாவின் பதினான்காம் நாளன்று இரவு முகம் தெரியாத வேறு  ஏதாவது ஆணுடன் உறவு கொள்ளுமாறு உறவினர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே, அது குழந்தைப் பேறு தாமதமானவர்களுக்கு வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடை முறைதான் என்றும், அதற்காகவே அன்று ஆங்காங்கு ஆண்கள் இரவு நேரத்தில் காத்துக் கிடப்பார்கள் என்றும், எனவே அதில் தவறு இல்லை எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் ‘சாமி குழந்தைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் நாவல் கூறுகிறது.

திருச்செங்கோடு பகுதியைப் பொறுத்தவரையில் அங்கு வருடா வருடம் நடைபெறும் தேர்த் திருவிழா மிகவும் முக்கியமானது. பதினைந்து நாட்கள் நடை பெறும் அந்த விழாவில் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் சேர்ந்து அது மிகவும்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தப் பிரச்னையின் பின்னணியை அறிந்துகொள்ள இரு வாரங்களுக்கு முன் ஈரோடு பகுதியைச் சேர்ந்த இரண்டு தொழில் துறை நண்பர்களுடன் திருச்செங்கோடு சென்றிருந்தேன். அப்போது அங்கு வாழும் பல சமூகங்களைச் சேர்ந்த மக்களையும், கோவில் கட்டளைதாரர்களையும் சந்தித்தோம். அவர்கள் சொன்ன சில விஷயங்கள் மிகவும் வருத்தப்பட வைத்தன.

சென்ற வருட இறுதியில் அந்த நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சிங்கப்பூரில் வாழும் அந்த ஊரைச் சேர்ந்தவர் படித்திருக்கிறார். அதன் பின் அவர் இங்குள்ள  தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு, அந்தப் புத்தகத்தின் மூலமான தமிழ் நாவலைப் படிக்குமாறு சொல்லியிருக்கிறார். அதன் பின்னரே அதிலுள்ள விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது.

காலங்காலமாக தாங்கள் பிரதானமாக வழிபட்டு வரும் தெய்வத்தின் தேர்த் திருவிழா நிகழ்வுகள் பற்றியும், தங்கள் ஊர்ப் பெண்களின் கற்பு பற்றியும் மிகவும் கேவலமாகச்  சித்தரித்துள்ளதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே அவர்களில் சிலர் நாவலாசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்டுள்ள விபரங்களுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளனர். அவர் அதற்கு முறையாகப் பதில் அளிக்காமல், இணைப்பையும் துண்டித்து விட்டதாகச் சொல்கின்றனர். அங்கு நாங்கள் சந்தித்த இரண்டு பேர்   அவரிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர், தான் நாவலாசிரியரை நன்கு அறிந்தவர்  என்றும் கூறினார்.

பின்னர் உண்மையை அறியும் நோக்கில் ஊர் மக்கள் கூடிப் பேசி  காவல் துறையை அணுகி நாவலாசிரியர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரியுள்ளனர். நாட்கள் கடந்த பின்னரும், அங்கு எதுவும் நடக்காததால், திருச்செங்கோடு நகரில் அவர்கள் ஒரு நாள் கடையடைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடையடைப்பு அனைவரின் ஒருமனதான ஆதரவாலும் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

Tirucengodu 4
தினத்தந்தி செய்தி (23.01.2015)

நிலைமையின் தன்மையைப் புரிந்து கொண்ட மாவட்ட நிர்வாகம், அதன் பின்னர் பிரச்னையைத் தீர்த்து வைக்க எழுத்தாளரிடமும் பொது மக்கள் பிரதிநிதிகளுடனும் தனித் தனியாகப் பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. பொதுமக்கள் தரப்பில் புத்தகத்தில் தவறாகக் குறிப்பிட்டுள்ள விசயங்களுக்கு நாவலாசிரியர் ஆதாரம் காட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இல்லையெனில், தவறாகக் குறிப்பிட்டுள்ள பத்திகளை நீக்க வேண்டும் எனவும், அடுத்த பதிப்புகளில் அவை இடம் பெறக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அப்போது சம்பந்தப்பட்ட  அதிகாரியின் முன்னிலையில் நாவலாசிரியர் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கற்பனையென்றும், அந்தப் புத்தகத்தின் விற்காத பிரதிகளைக் கடைகளில் இருந்து திரும்பப் பெற்றுக்  கொள்வதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார்.  பொதுமக்கள் தரப்பில் இனிமேல் எந்தவிதப்  போராட்டமும் நடத்தப்படக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அவற்றை ஓர் ஒப்பந்தமாக அந்த அரசு அதிகாரி இரு தரப்பிலும் கையெழுத்துகளை வாங்கி முடித்துள்ளார்.

மறுநாள் பெருமாள் முருகன் தனது முகநூல் பக்கத்தில் தனக்குள்ளிருந்த நாவலாசிரியர் செத்து விட்டதாகவும், இனிமேல் ஒரு கல்லூரி ஆசிரியராக மட்டுமே அவர் செயல்படுவாரென்றும் அறிவித்தார். உடனே அந்த விஷயம் பத்திரிகைகளில் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள்,  ஊடகங்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால்  அது எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதற்காகப் பல கட்டுரைகள் எழுதப்பட்டன; நாடு முழுவதும் செய்திகள் வந்தன. தேசிய அளவிலான ஆங்கிலத் தொலைக்காட்சிகளிலிருந்து, தமிழகத் தொலைக்காட்சிகள் வரை பலவற்றிலும் விவாதங்கள் நடத்தப் பட்டன.  மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கூட்டங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன.  சர்வதேச அளவில் பி.பி.சி. மற்றும் பாகிஸ்தான் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்தன.

அவை எல்லாவற்றிலும் முக்கியமாக உள்ளூர் மக்கள் ஜாதியவாதிகளாகவும், மதவெறி பிடித்தவர்களாகவும் ஒருமனதாகச்சித்தரிக்கப்பட்டனர்.  ஒரு பிரபலமான ஆங்கில தொலைக்காட்சி அவர்களை ‘லும்பென்’ (lumpen) என மோசமாகக் குறிப்பிட்டது. தமிழகத்தின் ஒரு இடதுசாரி அறிவுஜீவி ‘பாசிசக் குழு’ என அம்மக்களை வர்ணித்ததாக பத்திரிகைச் செய்தி வந்தது.

வசைபாடிய நூல் எரிப்பு
வசைபாடிய நூல் எரிப்பு

நாவலாசிரியரின் எழுத்துரிமை பற்றி இரு வேறு கருத்து இருக்க முடியாது. அது பாதுகாக்கப்பட வேண்டியது தான். ஆனால் நாவலாசிரியரின் எழுத்துரிமைக்கு என்று சொல்லி  வாதாடும்  அறிவுலக வாதிகள், தாங்கள் நியாயம் எனக் கருதும் விஷயத்துக்காக எந்த வித வன்முறையுமின்றி அமைதியாகப் போராடும் சாமானிய மக்களை எப்படி வேண்டுமானாலும் வசை பாடலாமா?

தாங்கள் புனிதமாக வழிபடும் தெய்வத்தின் தேர்த் திருவிழா பற்றியும், தங்கள் பகுதிப் பெண்களின் மானம் பற்றியும் வரலாறு என்று சொல்லித் தவறுதலாகச் சித்தரித்ததற்கு, எழுதியவரிடம்  ஆதாரம் கேட்க அவர்களுக்கு எந்த வித உரிமையும் இல்லையா?

ஜாதியவாதிகள் என்று அவர்களைச் சொல்வதற்கு  எந்தவிதமான  ஆதாரமும் இல்லை. ஏனெனில் அந்த எதிர்ப்புகளை தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களும் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர்.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும்  பொறுப்புக்கள் உள்ளன. அதற்கான கட்டளைகள் அவர்கள் அனைவருக்கும் காலங்காலமாக இருந்து வருகிறது.

மேலும் தாங்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். அமைதியான முறையில் தமது எதிர்ப்புகளை சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள்  தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு நாள் அனைவரும் ஒன்று சேர்ந்து  ஊர்வலமாகச் சென்றபோது, சிலர் புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கங்களின் பிரதிகளை எரித்துள்ளனர்.

எனவே அவர்கள் வன்முறையாளர்கள் என ஊடகங்கள் மூலம் சித்தரிக்கப்படுவது  குறித்து மிகவும் கவலை  தெரிவிக்கின்றனர். அந்த  மக்களைப் பற்றி எவ்வளவோ குறைகளைச் சொல்லும்  ஊடகங்களில் சிலவாவது திருச்செங்கோடு சென்று அவர்களைச் சந்தித்து அங்கு என்ன நடந்து வருகிறது என்று நேரடியாகத் தெரிந்து கொள்ளலாமே? அதற்கு என்ன தயக்கம்? இந்த விஷயத்தைப் பொறுத்த மட்டில் ஏன் தலைநகரில் இருந்து ஒரே மாதிரியாகவே கருத்துக்கள் வருகின்றன?

Tirucengodu1
திருச்செங்கோடு மக்களின் அறப்போராட்ட அறிவிப்பு

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்த் திருவிழாவின் பதினான்காவது நாள் நிகழ்ச்சிக்கு எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், அது முற்றிலும் தவறானது என்றும் மக்கள் கூறுகின்றனர். புலவர் செ.இராசு கொங்கு நாட்டின் முக்கியமான சமகால வரலாற்றாசிரியர். தமிழ் பல்கலைக் கழகத்தின் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவராக இருந்தவர்; நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியவர். தமிழக அரசின் முதல் உவேசா விருதினைப்  பெற்றவர்.  திருச்செங்கோட்டுக்கு அருகில் உள்ள மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்தவர்.

அவர் நாவலில் குறிப்பிட்டுள்ள அந்த விஷயங்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார்.  மேலும் கொங்கு நாட்டுப் பெண்கள் ஆரம்ப முதலே தமது உயிரை விடவும் மானத்தைப் பெரிதாகக் கருதி வாழ்ந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கிறார். அங்குள்ள வயதில் மூத்தவர்களும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி எதுவும் இருந்ததாக  தாங்கள் இதுவரை கேள்விப்பட்டதே  இல்லை எனக் கூறுகின்றனர்.

மேலும் அந்த நாவலில் வரலாற்றுப் பிழைகள் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உதாரணமாக அங்கு  ‘தேவடியாள் தெரு’ என ஒன்று இருந்ததாகப் புத்தகத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது.  தேவரடியார்கள் சமூகத்தைச் சேர்ந்தவரும், கோவில் கட்டளைதாரருமான ஏ. கோபால கிருஷ்ணன் அது முற்றிலும் தவறு என மறுக்கிறார். அது தேரடித் தெரு என்றும், அதிலுள்ள முதல் வீடே அந்த நகரத்தின் முக்கியத் தலைவராக விளங்கிய டாக்டர் சுப்பராயன் அவர்களுக்குச் சேர்ந்தது என்றும், இன்னமும் அது அவர்களின் குடும்பத்திடமே இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

சுப்பராயன் அவர்கள் 1926 முதல் 1930 வரை மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராகவும், பின்னர் நேருவின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும், இந்தோனேசியா நாட்டுக்கு நமது தூதராகவும் பல பொறுப்புகளில் இருந்தவர். அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இன்று வரை அரசாங்கத்தில்  முக்கிய பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.

நன்கு படித்து சொந்தமாகத் தொழில் புரியும் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என்னிடத்தில் சொன்னார். “ சார், திருமணமாகி ஆறு வருடங்களாக எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அதற்காகத் தினமும் நான்  மாதொருபாகனை வேண்டி வருகிறேன். எனக்குக் குழந்தை பிறக்கும் போது, இந்த உலகம் என்னை எப்படிப் பார்க்க வேண்டுமென இந்த அறிவுலக வாதிகள் விரும்புகிறார்கள்?” அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களில் நீர் ததும்பியது. நானும் கண்ணீரை அடக்கச் சிரமப்பட்டேன்.

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்

பிரபல சமூகவியலாளர் பிரான்சிஸ் புகுயாமா சொல்கிறார்: “சமூகங்களை எளிதில் அழித்து விடலாம். ஆனால் அவற்றை மீண்டும் உருவாக்குவது எளிதான காரியமல்ல”. இந்திய தேசம் குடும்பங்களாகவும், சமூகங்களாகவும்  அமைதியான முறையில் இயங்கி, மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தமது கலாசாரம், நம்பிக்கைகள் ஆகியவற்றையொட்டித் தொடர்ந்து  நடத்தி வருகின்றனர். அவர்கள் அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதில்லை; அரசாங்கத்தைக் கூடச் சார்ந்து நிற்பதில்லை.

இந்தப் பண்புகள் தான் இன்று உலக அளவில் நமது தேசத்தின் மிகப் பெரிய பலம். நமது சமூகங்கள் தேசத்தின் அமைதிக்கும்  பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஆற்றி வரும் பங்கு பற்றி ஆய்வுகள் வந்து கொண்டுள்ளன.   அப்படித் தான் திருச்செங்கோடு, நாமக்கல் ஆகியன இன்று தேசப் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. அதற்கு அந்த மக்களின் கலாசாரம் மற்றும் வாழ்க்கை நெறிகள் ஆகியவையே காரணமாக இருந்து வருகின்றன.

எனவே தங்களின் தெய்வத்தைக் கொண்டாடி  வழிபட்டு அமைதியாக அங்கு வாழ்ந்து வரும் மக்களை ஏன் மற்றவர்கள் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டும்? அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள்? அறிவு ஜீவிகள் என்றும் விபரம் தெரிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு பெரு நகரங்களில் உட்கார்ந்து, தூரத்தில் வாழ்ந்து வரும் மக்கள்  மேல் பழி சுமத்திக் கொண்டே போவது எந்த வகையில் நியாயம்?

ஊடகத்தின் மூலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வாய்ப்பில்லாத மக்களின் கருத்துக்களைத் தெரிவிக்க உதவுவதுதான் அறிவுலகவாதிகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே அது முற்றிலும் மாறாக நடக்கிறதே?

கொலைக் குற்றவாளிக்குக் கூட  அவனது கருத்தைச் சொல்ல வாய்ப்புக் கொடுத்த பின்னரே தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படாமல் அந்த ஊர் மக்கள் அனைவர் மீதும் தொடர்ந்து  குற்றம் சாட்டிக் கொண்டே செல்வது எந்த வகையில் நியாயமாகும்?

நமது தேசத்தின் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்னையாக இது தெரிகிறது.

prof_kanagasabhapathiபேரா. ப.கனகசபாபதி அவர்கள் பாரதீய சிந்தனை வழி பொருளாதார வளர்ச்சி பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மேலாண்மைத் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். கோவையில் உள்ள மாநில அரசின் நகரியல் கல்வி மையத்தின் இயக்குநராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவர்.

வலுவான குடும்பம்- வளமான இந்தியா, இந்தியப் பொருளாதாரம்- அன்றும் இன்றும் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார்.

ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

AN_speech_mediaதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார்.

போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்.

தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.

இன்றைக்கு இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றீன் பரவலால் ஊடகம் மிகவும் ஜனநாயகப் படுத்தப் பட்டுள்ளது. இன்றைக்கு நாம் செய்திகளை அப்படியே படித்து நம்புபவர்களாக அல்ல, நாமே செய்திகளை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். இந்த வலிமையை தேச, சமூக முன்னேற்றத்திற்காக சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்.

பாகம் 1:


பாகம் 2
:

தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்

தி ஹிண்டு பத்திரிகை ஜனவரி-3 அன்று வெளியிட்ட ஒரு பத்திக் கட்டுரையில் இந்திய தேசிய எழுச்சியின் நாயகர் சுவாமி விவேகானந்தரைக் குறித்த மோசமான, அவமதிப்பான சித்தரிப்பு இருந்தது. இதனைக் கண்டித்து ஜனவரி-6, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு “தி ஹிண்டு” அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சுவாமிஜி மீது அன்பு கொண்டோர் அனைவரும் திரளாக வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்..

இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே.

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தி ஹிண்டு பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதம் –

rk_math_letter_to_the_Hindu

மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்

pmontv

ஒரு நல்ல தலைவனுக்குரிய முதல் தகுதி, தன் எண்ணங்களை, தன் நோக்கங்களை, திட்டங்களை, எதிர்காலக் குறிக்கோள்களை, இலக்குகளை, தடைகளை, சாதனைகளை தன் நிர்வாகத்தின் கீழ் இருப்பவர்களுடன் வெளிப்படையாகவும், தவறாமலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பகிர்ந்து கொள்வதே. கார்ப்போரேட் நிறுவனங்களில் பணி புரிந்தவர்களுக்குத் தெரியும் அதன் சேர்மன் வருடம் இரு முறை அதன் ஊழியர்களைச் சந்தித்து, தன் திட்டங்களையும் இலக்குகளையும் மிகத் தெளிவாக விளக்குவார். அது போலவே இறுதி நிலை திட்ட மேலாளர்கள் வரை தங்களிடம் பணிபுரிவர்களிடம் தொடர்ந்து தங்களது இலக்குகளையும் சோதனைகளையும் நன்மை தீமைகளையும் தெரிவித்துக் கொண்டேயிருப்பார்கள். ஆக தொடர்பு என்பது எந்தவொரு தலைமைக்கும் இன்றியமையாதது. அது நான்கு பேர்களை நிர்வாகிக்கும் ப்ராஜக்ட் மேனஜராக இருந்தாலும் சரி, இரண்டு லட்சம் பேர்களை நிர்வாகிக்கும் நிறுவன அதிபர் பதவியாக இருந்தாலும் சரி, 200 பேர்களின் நலன்களைக் கவனிக்கும் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலராக இருந்தாலும் சரி, சில கோடி பேர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் மாநில முதல்வராக இருந்தாலும் சரி, பல கோடிப் பேர்களைக் கட்டிக் காக்கும் நாட்டின் தலைவராக இருந்தாலும் சரி கம்யூனிக்கேஷன் என்பது தலைமைப் பண்பிற்கு உண்டான அத்தியாவசிய அடிப்படைத் தேவை. ஒரு நல்ல தொடர்பாளனாக இல்லாதவனால் ஒரு நல்ல தலைமையை அளிக்கவே முடியாது அது சின்ன ப்ராஜக்ட் மேனஜரில் இருந்து நாட்டின் தலைவர் வரை அனைவருக்கும் பொருந்தும். தலைமைப் பண்பின் அடிப்படை அரிச்சுவடி தொடர்பு என்பது. 
 
ஆனால் துரதிருஷ்டவசமாக, மக்கள் தொடர்பைக் கண்டு அச்சப்படும்- அதன் முக்கியத்துவம் அறியாத ஒருவரை, இந்தியா தனது பிரதமராகக் கொண்டுள்ளது. இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவியும் அதே போல மக்கள் தொடர்பைத் திட்டமிட்டு தவிர்பவராகவே உள்ளார். ஆக, கட்சியின் தலைமையும் அந்தக் கட்சித் தலைமை கட்டுப்படுத்தும் பிரதமரும் மக்களிடம் நேரடியாகப் பேசுவதே கிடையாது. தலைமைப் பண்பின் ஆரம்பப் பாடத்திலேயே தோல்வி அடைந்தவர்களைத்தான் இந்தியா தன் தலையெழுத்தை நிர்ணையிக்க வேண்டிய தலைவர்களாகப் பெற்றுள்ளது, இந்தியா செய்த பாவம் அன்றி வேறென்ன? ஒரு நல்ல தலைவன் குறிபிட்ட கால இடைவெளிகளிலோ அல்லது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். மக்களிடம் அதன் மூலம் உற்சாகத்தையும், நேர் எண்ணங்களையும், புத்துணர்ச்சியையும், நாடு அல்லது செய்யும் பணி மேலான பற்றையும் ஏற்படுத்த வேண்டும். pmmeetstveditors1பேசாத உறவு வளராது. கெடும். குறிப்பாக இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் நாட்டின் தலைமை தொடர்ந்து உரையாட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்களிடம் நம்பிக்கை வளரும், நாட்டுப் பற்றும் ஆர்வமும் வளரும். எந்தவொரு வளர்ந்த, முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்திலும் தொடர்பு கொள்வதில் ஆர்வமில்லாத எவரும் எந்தப் பதவியையுமே அடைய முடியாது. ஆனால் அந்தோ பரிதாபமாக இந்தியாவில் மட்டுமே மக்களையும் மக்களிடம் செய்திகளைக் கொண்டு செல்லும் ஊடகத்தினரையும் சந்திக்கப் பிடிவாதமாக மறுக்கும் இரண்டு பேர்கள் இந்தியாவின் தலைவிதியையே நிர்ணயம் செய்யக் கூடியவர்களாக உள்ளார்கள். இத்தகைய பரிதாப நிலை இந்தியாவைப் பிடித்த கேடு காலம் என்றே சொல்ல வேண்டும். ஆம், மன்மோகனும் சோனியாவும் மக்களை நேராகக் கண் நோக்கி நேர்மையுடன் உரையாடியதே கிடையாது. மக்களிடம் தொடர்பு கொள்ள அவர்களது வஞ்சக நெஞ்சம் தடுக்கிறது. ஜெயமோகனின் ‘ஏழாவது உலகம்’ நாவலில் பிச்சைக்காரர்களை அடிமைப் படுத்திய வியாபாரம் செய்யும் பண்டாரம் வானத்தில் மின்னும் துருவ நட்சத்திரத்தைக் காணவே கூசுவான். அதைக் காண அச்சப்படுவான். ஏனென்றால் அவன் உள்ளத்தில் தீமையும் சூதும் கபடமும் நிறைந்திருக்கும். அந்த நட்சத்திரம் அவன் மனசாட்சியின் அறத்தின் குறியீடு. அந்த நட்சத்திரம் என்னும் அறத்தைக் காணவே கூசும் கயவன் அவன். அதே போலவே மக்களை நேரடியாகச் சந்திக்க அச்சப்படும், கூச்சப்படும், வெட்கப்படும் பண்டாரங்களாக நமக்கு சோனியாவும் மன்மோகனும் வாய்த்திருக்கிறார்கள். ஏழாம் உலகப் பண்டாரம் பிச்சைக்காரர்களை விற்றுப் பிழைப்பு நடத்துவது போலவே இந்த இருவரும் இந்தியாவின் இறையாண்மையையும் வளங்களையும் பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாக விற்று, ஈனப் பிழைப்பு நடத்துகிறார்கள். அதனாலேயே மக்களைக் கண்கொண்டு பார்க்க அஞ்சுகிறார்கள். 

மன்மோகன் சிங் மக்களுக்குச் செய்தி சொல்லும்விதமாக டிவி பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே ஓர் அபூர்வமான, அதிசயமான தருணமாக விளம்பரப் படுத்தப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவர் மக்களைத் தொடர்பு கொள்ள இது போன்ற நேர்காணல்கள் ஒரு வழி. அதைச் செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால் இந்தியாவில் மன்மோகன் சிங் மக்களைத் தொடர்பு கொள்வதே ஏதோ வானத்தில் இருந்து இறங்கிய தேவகுமாரன் மக்களைச் சந்திப்பது போல அதிசய நிகழ்வாகக் கருதப்படும் அவலம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம். ஒரு நாட்டின் பிரதமர், தன் மக்களுடன் தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாகத் தொடர்பு கொள்வது ஒருவித அடிப்படை எதிர்பார்ப்பு, அது அவருடைய அடிப்படைக் கடமை. தன் அடிப்படைக் கடமையைக் கூட ஒரு சலுகை போல, ஒரு வரம் போலக் கருதும் கேவலமான ஒரு மனிதரையே இந்தியா தன் பிரதமராக அடைந்துள்ளது. நாட்டின் தலைவர் தன் மக்களைத் தொடர்பு கொள்வது- அதிலும் ஒரு ஜனநாயக தேசத்தில்- இந்தப் பாரதத் திருநாட்டில் ஓர் அதிசய நிகழ்ச்சியாக மாறி விட்டது. தன் ஆட்சியின், தன் கொள்கைகளை, தன் செயல்பாட்டை அடிக்கடி மக்களுடன் ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதும் டவுண் ஹால் மீட்டிங்குகள், பொதுக் கூட்டங்கள் மூலமாகத் தன் நிலைகளை விவரிப்பதுமே ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கு அழகு; நேர்மை. தன்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லாத எந்தவொரு அரசியல்வாதியும் உலகத் தலைவரும் இந்தியப் பிரதமரைப் போல பத்திரிகையாளர்களையும் மக்களைச் சந்திப்பதையும் தவிர்ப்பது கிடையாது. வாரம் ஒரு முறை அமெரிக்க அதிபரை ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் உரையாடுவதையோ, ஏதாவது ஒரு சானலில் பேட்டி அளிப்பதையோ பத்திரிகை, டிவி நிருபர்களுடன் உரையாடுவதையோ தொடர்ந்து காணலாம். அப்படி ஊடகங்களையும் மக்கள் சந்திப்பையும் புறக்கணிக்கும் எவரும் அடிப்படையாக அந்தப் பதவியின் ஆரம்ப நிலைக்குக் கூடப் போட்டியிட அருகதையில்லாதவர்களாக ஆகி விடுவார்கள். எத்தனை முறை மன்மோகனும் சோனியாவும் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்கள்? எத்தனை முறை மாணவர்களிடம் நேரடியாக உரையாடியிருக்கிறார்கள்? அப்படியே அவர்கள் உரையாடியிருந்தாலும் பேட்டி அளித்திருந்தாலும் அது தங்களால் தேர்வு செய்யப்பட்ட கூலிப் பத்திரிகையாளர்களாக, தேர்ந்தெடுத்துக் கட்டுப்படுத்தப் பட்ட அடிமைக் கூட்டமாகவே இருக்குமே அன்றி அது ஒரு நிஜமான பேட்டியாக இருந்ததே கிடையாது.
 
மக்கள் தொடர்பு என்பது ஓர் அரசியல்வாதிக்கு முக்கியமானது. மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க முடியாவிட்டாலும்கூட, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சந்திப்பது பொதுவாழ்வில்– அதிலும் முதல்வர், பிரதமர் போன்ற பதவியில்– இருப்பவர்களின் அடிப்படைத் தகுதியும் கடமையாகும். அதைச் செய்யத் தவறினால் அவர்களிடம் கள்ளம் கபடம் சூது உள்ளது என்றே அர்த்தம் ஆகும். மன்மோகன் என்றுமே நிருபர்களிடம் பேசுவது கிடையாது. மறைப்பதற்கு தன் நெஞ்சில் வஞ்சக எண்ணம் உள்ளவர், நேர்கொண்ட பார்வையுடனும் நிமிர்ந்த நன்னடையுடனும் மக்களை எதிர் கொள்ள முடியும்? நெஞ்சை உயர்த்தி யாருக்கும் அஞ்சேன் என்று சூளுரைக்க முடியும்? குற்றமுள்ள நெஞ்சும் குழி படைத்த கண்ணும், வழிப்பறித்த கொள்ளையும், நாட்டுக்கும் மக்களுக்கும் குழிப்பறித்த ஊனம் கொண்ட மனமும் உள்ளவர் மன்மோகன் என்பது அவர் மக்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதில் இருந்தே உறுதியாகிறது.
 
மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் கிடையாது. டெல்லி தொகுதியில் நின்று தோற்றுப் போனவர். தனியாக நின்றால் ஒரு கார்ப்பரேஷன் வார்டு கவுன்சிலர் பதவிக்காகப் போட்டியிடக் கூட அருகதையற்றவர். அதற்கான ஆட்சித் திறமையோ, பேச்சுத் திறனோ, நேர்மையோ அவருக்கு என்றுமே இருந்ததில்லை. அவருக்கு மக்கள் தொடர்பே கிடையாது. கொல்லைப்புறம் வழியாக, அதிலும் அவருக்குச் சம்பந்தமேயில்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்புறம் வழியாகப் பிரதமர் பதவியில் அமர்த்தப் பட்டவர். இவர் ஓர் அமர்த்தப் பட்ட பொம்மைப் பிரதமர் என்பதை அவரது பேச்சுகளும் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.
 
இவர் மக்களை என்றுமே நேர்மையாகவும் துணிவுடனும் அணுகியதே கிடையாது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தகுதியான பேச்சு வன்மை இவருக்குக் கிடையாது. மியாவ் மியாவ் என்று பூனை கத்துவது போல இவர் பேசும் எதுவும் என்றைக்குமே எவரையுமே கவர்ந்ததும் கிடையாது. இவருக்கு முன்னால் இருந்த பல பிரதமர்கள் அபாரமான பேச்சு வன்மை உடையவர்கள். அவர்களில் பலரும் என்றுமே பத்திரிகையாளர்களையோ பொது மக்களையோ ஊடகங்களையோ தவிர்த்தவர்கள் கிடையாது. அவர்கள் பத்திரிகையாளர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுபவர்கள் இருந்தார்கள். நரசிம்மராவும், வாய்பாயியும் அற்புதமான பேச்சாளர்கள், உரையாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தது கிடையாது. இத்தனைக்கும் இவர் மெத்தப் படித்தவர். உலகத்திலேயே சிறந்த தகுதிகள் கொண்டவராம். ஆனால் படிக்காத ஒரு காமராஜர் பேச்சில் இருந்த தெளிவும் துணிவும் என்றுமே இவரது பேச்சில் இருந்தது கிடையாது. இவரது பேச்சுக்கள் அனைத்துமே உறக்கம் வரவழைக்கக் கூடிய, சிந்தனையைத் தூண்டாத, வெற்றுக் குப்பைகளே. அலுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும் உணர்ச்சியற்ற சவம் போன்ற பேச்சு இவருடையது.
 
மன்மோகன் மட்டும் அல்ல, அவரது தலைவியான சோனியாவும் கூட என்றுமே வெளிப்படையாக தனது முகத்தைக் காட்டியது கிடையாது; தனது எண்ணங்களை ஒளிவு மறைவின்றி சொன்னது கிடையாது. அதற்குக் காரணமாக அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர், அவர் ஓர் அரசியல்வாதி கிடையாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. உண்மையான காரணம், மனதிலும் செயலிலும் உள்ள கயமை மட்டுமே. அந்தக் கள்ளத்தனமும் கபடமுமே, வெளிப்படையாகக் கண்களைப் பார்த்து பேச அச்சம் ஊட்டுகிறது. அதன் காரணமாகவே சோனியாவும் மன்மோகனும் உலகத்தை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள். கூடிக்கூடிப் பேசி எழுதிவைத்துக்கொண்ட அறிக்கைகள் மூலமாக மட்டுமே எதிர்கொள்கிறார்கள். மேலும் இருவருக்கும் சேர்ந்தாற் போல நாலு வார்த்தைகளைத் திக்காமல் திணறாமல் பேசத் தெரியாது. அது ஒரு பெரிய குறை கிடையாது என்றாலும் தங்களது பலவீனத்தை மறைக்க முயல்கிறார்கள்.
 
முதலில் மன்மோகனது மதிப்பு தினம் தினம் அதல பாதாளத்துக்குப் செல்கிறது என்பதினால் அவரது மதிப்பைத் தூக்கி நிறுத்த அவரது பி.ஆர் ஆட்கள் செய்த ஒரு ஸ்டண்ட் மட்டுமே இந்த டிவி தமாஷா. ஆம், இது ஒரு காமெடி மட்டுமே. தனக்கு அடிமைகளாக, கைக்கூலிகளாகச் செயல்படும் இருபது டி.வி ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்து ஆளுக்கு ரெண்டு கேள்வி கேட்க வைத்து பிரச்சினையைக் குழப்பி, மழுப்பி விட்டால், அரைகுறையாகப் பேசிவிட்டால், அது, ‘மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை’ என்ற குறையையும் போக்கும்; அவரது இமேஜையும் கூட்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தோ பரிதாபமாக அவரது மதிப்பு இன்னும் கீழே போய் விட்டதுதான் இதில் நடந்த ஒரே நன்மை. இதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான டிவி நிருபர்கள் அல்லது அனைவருமே காங்கிரசின் கைக்கூலிகள். காங்கிரசின் ஊழலில் கலந்து கொண்ட ராஜ்தீப் சர்தேசாய் போன்ற புரோக்கர்கள் என்ன விதமான கேள்விகளை உருப்படியாகக் கேட்டு விட முடியும்? ராஜ்தீப் சர்தேசாய், பர்க்கா தத் போன்ற டிவி பிரபலங்கள் கூலிக்கு விலை போனவர்கள் என்பதை நீரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்கள் சந்தேகத்துக்கிடமின்றி உறுதி செய்தன. வேறு நாடாக இருந்திருந்தால் அவர்களின் மோசடி, தரகு வேலைகளுக்காக பல பத்தாண்டுகள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவிலோ அவர்கள்தான் இன்றும் கொண்டாடப் படும் டிவி பிரபலங்கள். அதே அடிவருடிகள்தான் இந்த மன்மோகன் நேர்காணலிலும் கேள்வி கேட்கிறார்கள். இவர்களின் கேள்விகளில் என்ன விதமான நேர்மை இருக்க முடியும்? ஆகவே இது திட்டமிடப்பட்ட நாடகத்தின் ஒரு பகுதியே. சோனியாவின் கதையமைப்பில் நடத்தப்பட்ட மற்றொரு காட்சி. இதில் கலந்து கொண்ட டிவி எடிட்டர்கள் மன்மோகனிடம் நாங்களும் ஒரு கேள்வி கேட்டோம் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதைத் தவிர இந்த வட்ட மேஜை பேட்டியினால் ஒரு புண்ணாக்குப் பயனும் ஏற்படவில்லை. மாறாக மக்களிடம் இவர் மீது அவநம்பிக்கையும், இவரது திறமையின்மையின் மீது, ஊழலின் மீது, தகுதியின்மை மீதான வெறுப்பையுமே இந்த டிவி பேட்டி சாதித்துள்ளது. மேலும் இந்தப் பேட்டிக்கு டிவி எடிட்டர்களை மட்டும் அழைத்ததிலும் ஒரு திட்டமிடப்பட்ட சூது, சதி உள்ளது. பத்திரிகை ஆசிரியர்கள் என்றால் சேகர் குப்தா, சோ ராமசாமி, குருமூர்த்தி, அருண் ஷோரி, பயனீர் சந்தன் மித்ரா போன்ற துணிவும் நேர்மையும் கொண்ட உறுதியான தேச பக்தர்கள் வந்து மன்மோகன் பதில் சொல்ல விரும்பாத முடியாத கேள்விகளை கேட்பார்கள். ஆனால் டிவி முழுக்க காங்கிரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள். அவர்கள் காங்கிரசின் எடுபிடிகள். இடைத்தரகர்கள். ஆகவே அவர்களிடம் ஏற்கனவே எழுதப்பட்டக் கேள்விகளைக் கேட்கச் சொல்லி ஒரு துல்லியமான நாடகக் காட்சியைத் திட்டமிட்டு அரங்கேற்றி மக்களை ஏமாற்றுவது மிக எளிது; அதன் காரணமாகவே இதில் டிவி எடிட்டர்களை மட்டுமே அனுமதித்திருக்கிறார்கள்.
 
பேட்டியைப் கண்டதில் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்கப் படவில்லை. ஒரு நிஜமான பேட்டியாக இருந்திருந்தால் கீழ்க்கண்ட கேள்விகள் கேட்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? எந்தவோர் ஊழல் பற்றி கூட, ஆழமாக ஒரு கேள்வி கூடக் கேட்கப் படவில்லை. கேட்க முயன்ற கோஸ்வாமியைக்கூட, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஹரெஷ் கடிந்து நிறுத்தி விட்டார். இது காங்கிரசின் அடிமைகள் கூடி அடித்த ஒரு குத்தாட்டம் மட்டுமே.
 
முதலில் மன்மோகனின் பேச்சில் நடுக்கம் நிறைந்திருந்தது. ஒளிவு மறைவுள்ள ஒருவரின் நேர்மை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத, கம்பீரம் இல்லாத, ஆளுமை இல்லாத பேச்சாகவே நிகழ்ச்சி முழுவதும் இருந்தது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கு இருக்கும் அடிப்படைப் பேச்சாற்றல், குறைந்தபட்ச மொழி ஆளுமை கூட இல்லை. வார்த்தைகளைத் தேடித் தேடி, திக்கித் திக்கி, திணறித் திணறி பேசினார். தான் செய்த நேர்மையற்ற குற்ற உணர்வுகளால் உந்தப்பட்ட ஒரு தயக்கம் நிறைந்த பேச்சாக இருந்தது. தப்பு செய்த சின்னப் பையன்கள் தட்டுத் தடுமாறி மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல நடுக்கங்களுடனும் மழுப்பல்களுடனும் திணறல்களுடனும் இருந்தது. ஒரு நாட்டின் தலைவரிடம் காணப்படக் கூடாத மிகக் கேவலமான ஆளுமை வெளிப்பாடாக அமைந்து இருந்தது. மனதில் உண்மையும், சத்தியமும் இருந்தால் அது வார்த்தையில் வந்திருக்கும். மனதில் கள்ளமும் கபடமும் பொய்யும் மோசடி எண்ணங்களும் நிறைந்திருந்ததினால் அவரால் தன்னம்பிக்கையுடன் இந்த கேள்விகளையும் அதன் மூலம் மக்களையும் எதிர்கொள்ள முடியவில்லை. கண்களைப் பார்த்துப் பேசாதவன் மனதில் கபடம்தான் இருக்கும். கண்களைத் தாழ்த்திய அவரது பேச்சில் குற்றத்தின் குறுகுறுப்பே வெளிப்பட்டது ஓர் ஊழல் பிரதமரின், ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவியின் அடிமையின், ஒரு பலவீனமான, திறமையற்ற, கேவலமான மனிதரின் மனசாட்சியில்லாத, சத்தியம் இல்லாத, மோசடியான மழுப்பல்களாகவே இந்தச் சந்திப்பு அமைந்திருந்தது.

 
பிரதமரிடம் என்ன கேள்விகள் கேட்கப் பட்டிருக்க வேண்டும்? நேர்மையான பத்திரிகையாளர்களாக இருந்திருந்தால் ஒரு அருண் ஷோரியாக, ஒரு சோவாக, ஒரு குருமூர்த்தியாக இருந்திருந்தால் என்ன கேள்விகள் கேட்டிருப்பார்கள்? அவை எவையுமே கேட்கப் படவில்லை.

pmmeetstveditors

 
முதலில் அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களில் இருந்த குழப்பங்களையும், மழுப்பல்களையும், ஏமாற்றுக்களையும், சமாளிப்புக்களையும் அதில் இருந்த ஓட்டைகளையும் , அவரிடம் அவசியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய ஆனால் கேட்கப் படாத கேள்விகளையும் அலசலாம்
 
1. ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்தது என்ன ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? மழுப்பலாக “ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராஜா சரியான திசையில் செல்கிறார் என்று சொன்னது ஏன்?” என்று கேள்வியே அவருக்கு வசதியாகக் கேட்கப் பட்டது
 
இந்தக் கேள்விக்கு எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று மழுப்புகிறார். அது தெரியவில்லை என்றால் இவருக்கு இந்தப் பதவியில் தொடர என்ன அருகதையிருக்கிறது? இந்தப் பதிலைச் சொல்ல இவருக்குக் கேவலமாக இல்லை? ராஜா மீது புகார்கள் வந்ததாம்; இருந்தாலும் கூட்டணி தர்மத்தின்படி அவர் செய்வதை இவர் ஏதும் கேள்வி கேட்கவில்லையாம். இதையும் வெட்கமின்றி சொல்லுகிறார் இந்த உத்தம புத்திரன். இவர் ராஜாவுக்குக் கடிதம் எழுதினாராம். பதிலுக்கு உடனே அவரும் எல்லாம் சரியாக நடக்கிறது என்றாராம்; இவர் நம்பினாராம். எல்லாமே சரியாகவே நடந்ததாம். டிராய் சொன்ன படிதான் நடந்ததாம். அப்புறம் ஏன் ராஜாவைக் கைது செய்தீர்கள்? ஏன் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது? கபில் சிபலை விட மிகக் கேவலமாக ராஜா செய்ததை சரியென்று சொல்லி ஊழலில் தனக்கும் பங்கு உள்ளது என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் இந்த ஊழல் பிரதமர். சின்ன உறுத்தல் கூட இவரிடம் காணப் படவில்லை என்பதுதான் வேதனையானது. ராஜா எந்தத் தவறையும் செய்திருப்பார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அது தொலைத் தொடர்பு துறைக்கும் நிதித் துறைக்கும் நடுவில் ஆனது; அதில் போய் நான் ஏன் தலையிடுவானேன் என்று இருந்து விட்டேன் என்றார்.
 
உடனே எந்தவொரு உண்மையான தொழில் தர்மம் உள்ள பத்திரிகையாளரும் என்ன செய்திருக்க வேண்டும்?
 
ஐயா பிரதமரே முதல் ஆட்சியிலேயே ராஜா செய்த ஊழல்கள் வெளி வந்து விட்டன. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட்டன. தலையங்கங்கள் எழுதப் பட்டன. டிவி யில் காட்டினார்கள். சி.ஏ.ஜி தன் ஆட்சேபத்தைத் தெரிவித்தது. சி.வி.சி தன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். சுப்ரமணியன் சுவாமி கடிதத்திற்கு மேல் கடிதமாக அனுப்பினார். அதையெல்லாம் நீங்கள் படிக்கவில்லையா? செய்தித்தாள் படிப்பதில்லையா? டிவி பார்ப்பதில்லையா? உங்களுக்கு வரும் லெட்டர்களைக் கூடப் படித்ததில்லையா? அத்தனை தூரம் வெளியான பின்னும் கூட வெட்கம் மானம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் இப்படி இது நிதித் துறைக்கும் டெல்காம் துறைக்கும் நடந்த விவகாரம், நான் ஏன் தலையிட வேண்டும் என்று கேட்கிறீர்களே? இது நியாயமா? தர்மமா, நேர்மையா? இதுதான் நீங்கள் ஊழலை ஒழிக்கும் லட்சணமா? உங்களுக்குக் கீழேயுள்ள மந்திரி நாட்டையே ஏலம் போடாமல் விற்று விட்டானே அதைக் கூட காண மறுத்ததும் கேட்க மறுத்ததும் கண்டிக்க மறுத்ததும் தடை செய்ய மறுத்ததும் அமைதி காத்ததும் அல்லாமல் ராஜா செய்வது எல்லாமே முறைப்படித்தான் நடந்தது நடக்கின்றது நடக்கும் என்று சொன்னவரும் நீர்தானே? இந்த ஊழலிலும் உங்களுக்கும் பெருத்த பங்கு இல்லாமல் இவ்வளவு தூரம் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முகாந்திரமே இல்லை. ஆகவே ஐயா ஊழல் பிரதமரே நீர் ஏன் ராஜினாமா செய்யக் கூடாது உம்மை ஏன் சிபிஐ இன்னும் விசாரிக்கவில்லை? நீர் ஏன் இன்னும் திஹார் ஜெயிலுக்குப் போகவில்லை என்றல்லவா கேட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் பட்ட திட்டமிடப்பட்ட கதை வசனத்திற்கு, கூலிக்கு மாரடித்த எடிட்டர்கள் எவரும் இதைக் கேட்கவிலை அதனால் நாம் கேட்கின்றோம்– ஏன் உங்களை பதவியில் இருந்து அகற்றி ஊழல் குற்றசாட்டில் உடந்தையானவர் என்ற அடிப்படையில் விசாரிக்கக் கூடாது என்று.

 
2. ஐ.எஸ்.ஆர்.ஓ ஊழல் பற்றிய கேள்வி கேட்கப்பட்ட விதமே தவறு. முதலில் இவ்வளவு பெரிய வருமானம் வரக் கூடிய ஒரு விஷயம் ஏன் ஏலமின்றி ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டது? அதற்குப் பொறுப்பான மந்திரி நீங்கள் அல்லவா? இது எந்த விதத்தில் சரி? இது ஊழலுக்கு வழிவகுக்காதா? அந்த முடிவுக்குப் பொறுப்பான உங்களுக்கு எந்தவித பங்கும் கிடையாதா? இப்படி ஒரு மோசடி நடந்ததற்காக நீங்கள் ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டிருக்க வேண்டும். மாறாக விளக்கெண்ணெயில் வேகவைத்த வெண்டைக்காயாக ஒரு கேள்வியும் அதற்கு எழுதி வைக்கப்பட்ட மழுப்பலான ஒரு பதிலும் அளிக்கப்பட்டது. பேட்டியின் பொழுது எழுதி வைத்துப் படிக்கக் கூடாது என்று ஒரு முறை ஜெயலலிதாவுடன் ஆக்ரோஷமான சண்டைக்குப் போன கரண் தப்பார் போன்றவர்கள் மன்மோகன் எழுதி வைத்துப் படித்த பொழுது அமைதியாக ஆமோதித்தார்கள்.

 
3. ஜே.பி.சி குறித்து கேட்கப்பட்ட கேள்வியே தவறு. ஜே.பி.சி குறித்து தனக்கு பயமில்லை, அதில் ஆஜர் ஆவேன் என்கிறார் இந்தச் சூரப் புலி. அப்படியானால் ஏனப்பா நீயும் உன் கட்சியும் அதைப் பிடிவாதமாக அமைக்க மறுத்து வருகிறீர்கள் என்று எந்த டிவி சூரர்களும் கேள்வி கேட்கவேயில்லை; வசதியாக மறந்து போனார்கள். உனக்கு பயமில்லை என்றால் ஏன் ஜே.பி.சி-ஐ அமைக்க மாட்டோம் என்று மொத்த குளிர்காலத் தொடரையும் வீணடித்தீர்கள் என்று எவருமே கேள்வி கேட்கவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் கேனையன் என்ற நினைப்பில் பாராளுமன்றம் நடக்காததற்கு பி.ஜே.பி தான் காரணம் என்று கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் உண்மையை மறுத்துப் பொய் சொன்னார் மன்மோகன் சிங். நீ சொல்வது பச்சைப் பொய், மோசடி, ஏமாற்று வேலை, அயோக்யத்தனம் என்று எதிர் கேள்வி கேட்க அங்கு ஒரு மானஸ்தன் கூட இல்லாமல் போனது பரிதாபம்.
 
மேலும் இத்தனை மோசடிப் பதில்கள் போதாது என்று பாராளுமன்றம் நடக்க விடாமல் பி.ஜே.பி மட்டும்தான் தடுக்கிறது. அதுவும் குஜராத் மந்திரி மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதினால்தான் பாராளுமன்றத்தை பி.ஜே.பி நடத்த விடாமல் செய்கிறது என்று பி.ஜே.பி மீது கடும் குற்றசாட்டை வீசினார். அரசு சிபிஐ-ஐத் தவறாகப் பயன்படுத்தி மோடியின் அரசை நடக்க விடாமல் செய்கிறது; அது நிறுத்தப் பட வேண்டும் என்று பி.ஜே.பியினர் கேட்டது உண்மைதான். ஆனால் பாராளுமன்றம் நடக்காமல் போனதற்கு அது காரணம் இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் விஷயத்தில் 1.76 லட்சம் கோடியை கொள்ளையடித்த குற்றத்தை விசாரிக்க பி.ஜே.பியும் பிற எதிர்க்கட்சிகளும் ஜே.பி.சி அமைக்கக் கோரினார்கள். அதை அமைக்க காங்கிரஸ் கட்சி, பிடிவாதமாக மறுத்ததினாலேயே அவர்கள் போராட நேர்ந்தது. நீ யோக்யன் என்றால் ஜே.பி.சி யிடம் பயம் இல்லை என்றால் அதை அமைக்க மறுத்ததேன்?
 
இவரும் இவர் கட்சியும் ஜே.பி.சி அமைக்க ஒத்துக் கொண்டிருந்தால் பி.ஜே.பி ஏன் தடுக்கிறார்கள்? சரி பி.ஜே.பி-தான் குஜராத் மந்திரியின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்த்து ஆளும் கட்சியை மிரட்டினார்கள். நியாயமான நிருபர்கள், உடனே மன்மோகனிடம் என்ன கேட்டிருக்க வேண்டும்? ஐயா பிரதமரே பி.ஜே.பி தன் மந்திரியைப் பழிவாங்காமல் இருக்குமாறு கேட்டார்கள் பாராளுமன்றத்தை அதனாலேயே நடக்கவிட்டாமல் செய்தார்கள் என்கிறீர்கள். சரி உம்மை நம்புகிறோம். பி.ஜே.பி அப்படி உள்நோக்கம் கொண்டு தடை செய்தார்கள். ஆனால் கம்னியுஸ்டுகளும், அதிமுக-வினரும் எதற்காகப் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் ஸ்தம்பிக்க வைத்தார்கள், அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? என்று ஒருவராவது இந்த ஏமாற்றுப் பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லவா? ஏன் கேட்கவில்லை? யாருக்காக நடத்தப் பட்டது இந்த நாடகம்? ஆகவே நாம் கேட்கின்றோம்– ஜே.பி.சி-யை எதிர்கொள்வேன் என்று டிவி-யில் சவடால் விடும் மன்மோகன் சிங் அவர்களே நீங்கள் விடும் சவடால் உண்மையானால் ஏன் இத்தனை காலம் அதை அமைக்க மறுத்தீர்கள்? மடியில் கனமில்லா விட்டால் வழியில் பயம் ஏன்? பதில் சொல்வீரா மிஸ்டர் (அ)க்ளீன்?

 
4. கருப்புப் பண விஷயத்தில் ஏன் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மழுப்புகிறீர்கள்? குதிரை வியாபாரி அலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சோனியாவுக்குக் கேஜிபி-யால் கொடுக்கப்பட்ட பத்து மில்லியன் டாலர்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எவருமே இந்த திருவாளர் தூய்மையிடம் கேள்வி கேட்க வசதியாக மறந்து போனார்கள். ஜெர்மன் அரசாங்கம் ஸ்விஸ் வங்கியில் கள்ளப் பணம் வைத்திருபவர்களின் பெயர்களைத் தரத் தயாராக இருந்த போதும் ஏன் அதைக் கேட்டு வாங்க முதலில் மறுத்தீர்கள்? அதைப் பெற்ற பின்னும் வெளியிட மறுப்பதேன்; யாரைப் பாதுகாக்கிறீர்கள்? 800 பில்லியன் டாலர் கள்ளப் பணம் வைத்திருப்பவனை ஒரு சின்ன விசாரணை கூட இது வரை ஏன் செய்யவில்லை? இந்தக் கேள்விகள் எதையுமே கேட்கவில்லை டிவி கனவான்கள். அதனால் நான் கேட்கிறேன்– எதற்காக இந்த பேட்டி என்னும் நாடகம்? யாரை ஏமாற்ற?

 
5. ஊழலில் குற்றசாட்டப்பட்ட பி.ஜே.தாமசை எப்படி, எந்த யோக்யதையில் ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்க அனைவருமே திட்டம் போட்டு மறந்து போனார்கள். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்னீஷீயா வந்து விட்டது. அதனால் நான் கேட்கின்றேன்– ஊழல் குற்றம் சாட்டப்பட்ட பி.ஜே.தாமசை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமித்தது ஏன்? அதற்கு முன் நவீன் சாவ்லா என்ற மற்றொரு கிறிஸ்துவரை மற்றொரு ஊழல் குற்றம் சாட்டப்பட்டவரை தேர்தல் கமிஷனராக நியமித்தது ஏன்? அதெப்படி உமது ஆட்சியில் தொடர்ந்து ஊழல் குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகள் வழங்கப் படுகின்றன? யாருக்காக இந்தப் பதவி அமர்த்தல்கள்? எதை மறைக்க இந்த ஊழல்வாதிகளை நியமித்தீர்கள்?
 
 
6. குவட்ரோச்சியை நாம் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம் என்று எந்த அடிப்படையில் சொன்னீர்கள் என்று எவருக்குமே கேட்கத் தோன்றவில்லை. ட்ரிப்யூனல் கமிஷன் வழங்கப் பட்டிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட சிபிஐ-ஐ விட்டு உனது அரசாங்கம் ஏன் குவட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் செய்ய உத்தரவிட்டது என்று கேள்வி கேட்க ஒருவருக்காவது துணிவில்லை. எந்த அடிப்படையில் குவட்ரோச்சியின் கணக்கை விடுதலை செய்தீர்கள் என்றும் யாரும் கேட்க மறந்து போனார்கள். அதனால் நான் கேட்கின்றேன்– குவட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் வாங்கியது ஏன்? அவரது வங்கிக் கணக்கை அவருக்குத் திருப்பி தந்தது ஏன்? யாருக்காக இந்தச் சலுகைகள்? எதற்காக சிபிஐ அடியாள் போல பயன் படுத்துகிறீர்கள்? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுச் சொல்ல முடியுமா?

 
7. சோனியா மீதும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்படுகிறதே, அது குறித்து என்ன சொல்லுகிறீர்கள் என்று எவரும் கேட்கவில்லை. கூலி வாங்கிக் கொண்டு நடித்த அந்த டிவி எத்தர்கள் கேட்காத கேள்வியை நான் கேட்கின்றேன்– சோனியாவுக்கு இந்த ஊழலில் என்ன பங்கு? சுப்ரமணியன் சுவாமி கொடுத்த புகாருக்கு பதில் என்ன? தாவூத் இப்ராஹிமுக்கும் பால்வாவுக்கும் சோனியாவின் சகோதரிகளுக்கும் என்ன தொடர்பு? விளக்க முடியுமா மன்மோகன் அவர்களே?
 
 
8. காமன் வெல்த் விளையாட்டில் மொத்தப் பணத்தையும் விநியோகித்தது நீங்கள்தானே, ஊழலுக்கும் திருட்டுக்கும் நீங்களும்தானே பொறுப்பு என்று யாருக்கும் கேள்வி கேட்க மனதில்லை. ஆகவே நான் கேட்கின்றேன்– காமன் வெல்த் கேம்ஸ்ஸின் நிதிப் பொறுப்பு பிரதமர் அலுவலகத்தில்தானே இருந்தது. பணத்தை வெளியிட்டது நீர்தானே? ஏன் கொடுத்த பணத்திற்குக் கணக்கு கேட்கவில்லை? யாருக்குச் சென்றது அந்த ஊழல் பணம்? இதுக்கு நீர் மட்டும்தானே முழுப் பொறுப்பு? நியாயமாகப் பார்த்தால் நீர்தானே குற்றவாளி? உம்மைத்தானே கைது செய்திருக்க வேண்டும்?

 
9. ஆஸ்திரேலியாவில் ஒரு பயங்கரவாதி கைதான பொழுது, எனக்குத் தூக்கம் போயிற்று என்று துக்கம் அனுஷ்டித்த மன்மோகன் அவர்களே, அனுதினமும் குண்டு வெடிப்பிலும் நக்சல் தாக்குதலிலும் கொல்லப்படும் இந்துக்களின் சாவுக்காக என்றாவது நீங்கள் தூக்கத்தை இழந்ததுண்டா என்று எவரும் கேட்கக் கனவிலும் நினைக்கவில்லை. நான் கேட்கின்றேன்– மும்பை தாக்குதல் முதல் ஏராளமான உண்மைக் குற்றவாளிகளை, முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்தினால் கைது செய்யாமல், தண்டனை கொடுக்காமல் இருக்கும் உமது அரசு அப்பாவி இந்துக்களை மட்டும் சித்ரவதை செய்வதேன்?

 
10. 2ஜி, ஆதர்ஷ், காமன் வெல்த் கேம்ஸ், ஐ.எஸ்.ஆர்.ஓ ஆகிய அனைத்திலும் ஊழல் செய்திருப்பவர்கள் தண்டனை அடைவார்கள் என்று சொல்லும் மன்மோகன் சிங் அவர்களை அதற்கெல்லாம் பொறுப்பாக தலைமை ஏற்ற மந்திரி சபையின் தலைவரான உங்களுக்குக் கீழே இவ்வளவு ஊழல்கள் நடந்திருக்கும் பொழுது அவற்றைத் தடுக்காத உங்களுக்கு யார் தண்டனை தருவது? என்ன தண்டனை கொடுப்பது? என்ற ஒரு சிறிய கேள்வியை யாராவது ஒருவராவது கேட்டிருந்தாலாவது இந்தப் பேட்டிக்கு அதைவிடச் சிறியதோர் அர்த்தமாவது இருந்திருக்கும். தவறு நடந்திருக்கிறதாம், தண்டிக்கப் படுவார்களாம் ஆனால் அதில் இவருக்கு சின்ன பொறுப்புகூடக் கிடையாதாம். இதையும் ஒரு பிரதமர் வெட்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் சொல்லுகிறார் அதையும் ஒரு தேசம் வெட்கமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

 
11. ராஜாவை ஏன் மீண்டும் மந்திரி சபையில் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு, எனக்கு யாரைச் சேர்க்க வேண்டும் சேர்க்கக் கூடாது என்ற அனுமதி கிடையாது; என் மந்திரி சபையில் யார் யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை என்னிடம் கிடையாது; அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது; எனக்குத் தெரியாது என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்கம் இல்லாமல், மானம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல், பொறுப்பு இல்லாமல் ஒரு பிரதம மந்திரி பதில் சொல்லுகிறார். அப்படியானால் இந்தப் பதவியில் இருக்க ஒரு நிமிடம் கூட உங்களுக்கு அருகதை கிடையாது, ராஜாவின் உடம்பில் ஆடைகள் இல்லை என்ற உண்மையைச் சொல்லும் துணிவு அங்கு ஒரு ஜீவனுக்குக் கூட இல்லாமல் போனது மன்மோகனின் நிலையை விடக் கேவலமாக இருந்தது. இவர்கள்தான் இந்தியாவின் நான்காவது தூணாகிய பத்திரிகை/டிவி தூணைத் தாங்கிப் பிடிப்பவர்கள். வெட்கக் கேடு.

 
12. நீரா ராடியா போன்ற ஒரு புரோக்கர் எப்படி உங்கள் உரிமையில் தலையிடலாம் என்ற கேள்விக்கே இடமில்லாமல் மன்மோகன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் அவனில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

 
13. மற்றொரு காங்கிரஸ் புரோக்கரும் வோர்ல்ட் விஷன் என்ற மதமாற்ற கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகியுமான காங்கிரஸ் எடுபிடி ராஜ்தீப் சர்தேசாய் மன்மோகனுக்கு ஒரு தியாகி பிம்பத்தை அளிக்கும் விதத்தில் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டார். உங்களைச் சுற்றி திருடர்கள் இருந்தபடியால் நீங்கள் பதவி விலக நினைத்தீர்களா என்று. அதற்கு மன்மோகன் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்று அப்பாவியாகப் பதில் சொன்னதுடன் இன்னும் பல வேலைகள் முடிக்கப் படாமல் இருப்பதாகவும் அதுவரை தான் பதவியில் தொடருவேன் என்றும் சொன்னார். அதாவது இன்னும் கோடி கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்க வேண்டியது பாக்கி இருக்கிறது; அது வரை அலிபாபா மட்டும் அல்ல நாற்பது திருடர்களும் கூட கூட்டுக் கொள்ளை அடிப்போம் என்கிறார்.
 
 
14. அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை? இப்படி ஒரு பயங்கரவாதியைப் பாதுகாத்தாவது இஸ்லாமிய ஓட்டைப் பொறுக்க வேண்டுமா? ஏன் இந்த தேசத் துரோகம் என்று ஒரு டிவி ஆசிரியரும் கேட்க நினைக்கவில்லை. அப்சல் குருவை தூக்கில் போட்டால் இவர்கள் அல்லவா முதலில் எதிர்ப்பார்கள்.
 
 
15. குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று வெட்டி வீறாப்பு பேசும் பிரதமர் அவர்களே, உங்களுக்கு உண்மையிலேயே ஊழல் ஒழிப்பில் அக்கறையிருந்திருந்தால் ஏன் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பத்தில் இருந்தே நேர்மையுடன் விசாரிக்க ஆரம்பித்த சிபிஐ அதிகாரியை நீங்களே உத்தரவிட்டு மஹராஷ்டிரத்துக்கு இடமாற்றம் செய்தீர்கள்? இது என்ன விதமான ஊழல் ஒழிப்பு என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா என்று ஒருவராவது கேட்பார் என்று நானும் கடைசிவரை காத்திருந்ததுதான் மிச்சம்.
 
 
மொத்தத்தில் இந்தப் பேட்டி மூலமாக கீழ்க்கண்ட உண்மைகள் உறுதி செய்யப் பட்டுள்ளன.

  1. மன்மோகன் மிகத் தெளிவாகவே ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆதரிக்கிறார். அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்று கபில் சிபல் சொன்னதையே இவர் வேறு வார்த்தைகளில் சொல்லியுள்ளார். 
  2.  ஜே.பி.சி நடத்தும் எண்ணம் கட்சிக்குக் கிடையாது என்று மறைமுகமாகச் சொல்லியுள்ளார்.
  3. ஊழல்களை ஒழிப்பேன் என்று வெறும் வெத்து வாய் ஜாலம் மட்டுமே காட்டுகிறாரே அன்றி அதை செயல்படுத்தும் எண்ணம் துளியும் இல்லை என்பதை இவரது மழுப்பலான பதில்கள் உறுதி செய்துள்ளன.
  4. கருப்புப் பணம் குறித்தோ, சேத்தின் பாதுகாப்பு குறித்தோ ஒரு சம்பிராதயத்திற்குக் கூடப் பேச இவர் தயாராக இல்லை என்பதும் உறுதியாகியுள்ளது

ஆகவே இந்த மோசடி நேர்காணலை, மக்களை இளிச்சவாயர்களாக நினைத்து ஏமாற்றும் சூழ்ச்சியை இந்திய மக்கள் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் ஓர் ஏமாற்றுக் கும்பலிடம் நாட்டை ஒப்படைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி எழ வேண்டும். இவர்களிடமிருந்து, இந்தத் தேசத் துரோகிகளிடமிருந்து, இந்தியாவைக் கூறு போட்டு விற்கும் இந்த ரத்த வியாபாரிகளிடமிருந்து நாட்டை மீட்க ஒவ்வொரு தேச பக்தியுள்ள இந்தியக் குடிமகனும் உறுதி பூண வேண்டும். ஒட்டுமொத்தமாக தேசம் முழுவதும் ஊழலுக்கும் மோசடிக்கும் பயங்கரவாத ஆதரவுக்கும் எதிரான ஒன்றுபட்ட இந்தியக் குரல் எழும்ப வேண்டும். மக்கள் விழிப்படைய வேண்டும். இந்தப் புல்லர்கள் அகற்றப் பட வேண்டும். மன்மோகனின் மோசடிகளை நிறுத்தக் கூடிய வல்லமை இந்திய மக்களிடம் மட்டுமே உள்ளது. இவை போன்ற மோசடிப் பேட்டிகளுக்கு விலைபோகாமல், உண்மையை உணர்ந்து ஒவ்வொரு இந்தியனும் செயல்பட வேண்டிய கட்டாயம் இன்று உள்ளது. இதை இன்னமும் கூட நாம் உணராவிட்டால் நம் சந்ததியினருக்கு ஒரு சூனியமான சூறையாடப் பட்ட பாலைவனத்தையே நாம் விட்டுச் சென்று அவர்களின் தீராத சாபத்திற்கு நாம் உள்ளாவோம். விழிந்தெழுங்கள். அயோக்கியர்களை அகற்றுங்கள். இந்தியா நமது தேசம்; அதை அந்நியருக்கும் இனிமேலும் விற்க மாட்டோம் என்று உறுதி செய்யுங்கள்.