இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 2

பகுதி-III ஆப்பிரிக்கா-21ம் நூற்றாண்டின் சுரண்டப்படும் முகம்:-

However, if you do not take it for a while, it will be very hard to get up to the right dose. This drug helps in treating breast cancer by regulating the growth of cancer cells and in regulating the growth and development Boumahra Ahmed of breast cancer. You should start off using ivermectin if you have not already been given a prescription, as the medication is not regulated by your local health department.

In the first set of tests the effect of lipitor on liver enzymes was assessed. Buy clomid and nolvadex Besançon for sale online in india, best price and best service. If you’re considering a prescription drug, you need to know the drug manufacturer’s instructions for the drug.

It has been more than 3 years since i was treated with prednisone in my left arm for my ulnar nerve entrapment at the elbow due to my own stupidity. Vytorin, an anti-convulsive drug, is used in the treatment of Dülmen online clomid prescription most types of epilepsy. The cost of prednisone can be high for patients who are on multiple medications.

21ம் நூற்றாண்டிற்கு முன் ஆப்பிரிக்கா சுரண்டப்பட வில்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு முன் சுரண்டியவர்கள் ஐரோப்பியர்கள். சுரண்டியது பெரும்பாலும் மனித வளங்களை. ஆனால் இப்பொழுது ஆரம்பித்திருக்கும் சுரண்டல் மனித வளம் மட்டுமல்ல. கனிம வளம், எண்ணெய் வளம் போன்றவற்றுடன் கூடிய சுரண்டல். மேலும் ஒரு அதிசயம். சுரண்டலை ஆரம்பித்திருப்பவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல. இந்தியாவும், சீனாவும்தான். நம்ப முடியவில்லையா! மேலும் படிக்கவும்.

சுரண்டலுக்கான தேவை:-

இந்தியாவும் சீனாவும் பொருளாதார நிலையில் அடைய விரும்புவது வளர்ச்சியை அல்ல, மாபெரும் வளர்ச்சியையும் அல்ல. அசுர வளர்ச்சியை. ஆப்பிரிக்காவில் அசுர வேள்வி ஆரம்பித்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் இயற்கை வளம் இந்திய, சீன வளர்ச்சிக்கு ஆஹுதியாக அளிக்கப்படுகிறது.

china-in-africaதங்களின் பெரும்பாலான மக்களின் ஏழ்மையை போக்கவும், மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வரும் காலங்களில் மிகப்பெரிய முன்னெடுப்புகளை இந்தியாவும் சீனாவும் செய்தாக வேண்டும்.

2050ல் இந்தியா தன் உணவு தானிய உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும். நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் தேவைகளும் மிகவும் அதிகமாகும். (வெளி உலகுக்கு அவ்வப்பொழுது சுற்றுச்சூழல் பிரசங்கங்களை நம்மால் செய்ய முடியுமே தவிர, தற்பொழுதைய மற்றும் குறுகிய வருங்கால முன்னெடுப்புகளுக்கு எரிசக்தியையே சார்ந்து இருந்தாக வேண்டும்). இவற்றை பூர்த்தி செய்து கொள்ள தன் நாட்டு நிலப்பரப்பை மட்டுமே பயன்படுத்தினால் போதாது. ஐரோப்பா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் இல்லாததால் இந்தியாவும் சீனாவும் இருப்பதிலேயே இளிச்சவாயன்களான ஆப்பிரிக்க கருப்பர்களின் மடியில் கை வைக்க ஆரம்பித்திருக்கின்றன.

ஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. தற்பொழுதைய நிலவரப்படி சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம் வகிக்கின்றன. நம் நாட்டின் எண்ணெய் தேவைகள் வரும் 20 வருடங்களில் இரண்டு மடங்காக உயரும் என்பதால் இந்திய அரசும் ONGC போன்ற அரசு கம்பெனிகளுக்கு பண உதவி செய்யும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

லஞ்ச லாவண்யமும், ஆயுத கலாச்சாரமும் இன்றைய ஆப்பிரிக்கர்களின் வாழ்வில் ஒன்றாகி இருப்பதால், இந்தியா மற்றும் சீனாவால் தங்கள் முன்னெடுப்புகளை எளிதாக செய்ய முடிகிறது.

இங்கே ஒரு விஷயத்தை கூறியாக வேண்டும். சீனா தன் முன்னெடுப்புகளை தன் அரசு வங்கிகளின் மூலமே செய்கிறது. ஆனால் இந்தியா தன் முன்னெடுப்புகளை நேரடியாக செய்ய வில்லை. நம் கம்பெனிகள்தான் அங்கு முதலீடு செய்கிறார்கள். ஆகவே, சீன அரசு சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றையும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இலவசமாக செய்து தருகிறது. ஆனால் இதற்கு பதிலாக அந்நாட்டின் இயற்கை வளங்களை பல சகாப்தங்களுக்கு குத்தகைக்கு எடுத்து கொள்கிறது.

இக்கட்டுரைக்கு விஷயம் வர்த்தகம் அல்ல. மாறிவரும் உலக பொருளாதார முன்னெடுப்புகளில் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் என்பது இன்றியமையாத ஒன்றுதான். “Devil is in the details” என்று கூறுவார்களே! அதைப்போல் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கும், இந்திய கம்பெனிகளுக்கும் ஏற்படும் உடன்பாடுகள் மறைமுகமாக இல்லாமல் வெளிப்படை தன்மையுடன் அமைய வேண்டும் என்பதைத்தான் இக்கட்டுரை சுட்டி காட்ட விரும்புகிறது.

சீனாவின் சுரண்டல் ஆரம்பித்தாகி விட்டது:-

ஸூடான் போன்ற நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல், அங்கு நிலவும் மனித உரிமை மீறல்களைப்பற்றி லவநேசமும் கவலைப்படாமல் தன் நாட்டு கம்பெனிகளின் மூலம் ஸூடானின் பல இடங்களில் எண்ணெய் மற்றும் எரிசக்தியை சீனா தோண்டி எடுத்து இறக்குமதி செய்து கொள்கிறது.

மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயம், துறைமுக கட்டமைப்பு போன்றவற்றில் சீனா பெரிதான ஆர்வம் காட்டுகிறது. தன் நாட்டு கம்பெனிகளால் உருவாக்கப்படும் எந்த கட்டமைப்பிலும் சீனர்கள் மட்டுமே வேலை செய்வதை உறுதிப்படுத்துகிறது.

2006 நிலவரப்படி 49 ஆப்பிரிக்க நாடுகளில் 900 சீன கம்பெனிகள் செயல் பட்டு கொண்டிருக்கின்றன. பெரும்பாலானவை எண்ணெய், கனிமவளம் சார்ந்தவையே!. ஆனாலும் மக்களின் நலனையும் கருத்தில் கொள்கிறோம் என்பதை வெளிப்படுத்த மற்ற துறைகளிலும் சீன அரசு முதலீடு செய்கிறது. அவர்களின் நோக்கம் இயற்கை வளம் என்பது வெளிப்படையான இரகசியம்.

இன்னொரு பரிமாணத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். முற்காலத்தில் ஏழை நாடுகள் கடன் வாங்க IMF, World Bank போன்ற நிறுவனங்களை நாடின. கடன் கொடுப்பதற்கு முன் அந்நாடுகளின் மனித உரிமை நிலவரங்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. என்னதான் அமேரிக்கா ஒழிக என்றாலும், சட்டதிட்டங்களாவது இருந்தன. ஆனால் தற்பொழுது சில ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடமிருந்து நேரடியாக கடன் பெறுகின்றன. மேலும் மனித உரிமை போன்றவற்றை சீனா கண்டு கொள்ளாது. ஆகவே சர்வாதிகாரிகளை கொண்ட சூடான், ஜிம்பாப்வே போன்ற நாடுகள் கூட சீனாவிடமிருந்து கடன் பெறுகின்றன.

africa-india-china-race

இந்தியாவின் சுரண்டல் இப்பொழுதுதான் ஆரம்பமாகியுள்ளது:- எத்தியோப்பியாவில் இந்திய விவசாய கம்பெனிகள் இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை 40 அல்லது 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளன. நம் கம்பெனிகளுக்கும் எத்தியோப்பிய அரசாங்கத்திற்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகள் நம்மை திகைப்புக்கு உள்ளாக்கும்.

 • 40 சதவிகித தொழிலாளர்களை நம் கம்பெனிகள் இந்தியாவிலிருந்து தருவித்து கொள்ளும்.
 • அந்த நிலங்களிலிந்து கிடைக்கும் விளை பொருட்கள், தானியங்களோ அல்லது வேறு விவசாய பொருட்களோ ஏற்றுமதி (இந்தியாவிற்கு) செய்யப்படலாம்.

ஆனால் நடைமுறையில் இந்த கட்டுபாடுகளை நம் கம்பெனிகள் அனுசரிப்பதில்லை. நம் நாட்டை விட பெரிய அளவில் ஊழல் மலிந்து உள்ளதால், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, இந்தியாவிலிந்து 60 முதல் 70 சதவிகிதம் வரை தொழிலாளர்கள் தருவிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களை வேலை வாங்கும் அதிகாரிகள் எத்தியோப்பியாவில் கிடைப்பதில்லை என்பது உண்மை என்றாலும், கீழ்மட்ட வேலைகளுக்கு கூட இந்தியர்களை தருவித்து விட்டால் எத்தியோப்பிய கருப்பர்களுக்கென்று இந்த உடன்பாட்டால் ஒரு பயனும் இல்லை.

அதிகாரிகளும், தொழிலாளர்களும் இந்தியர்கள். பெரிய அளவில் வேலை வாய்ப்பு எத்தியோப்பியர்களுக்கு கிடைக்க போவதில்லை. அந்த நிலங்களின் உரிமையும் எதார்த்தத்தில் கருப்பர்களின் கைகளிடமிருந்து இந்திய கம்பெனிகளுக்கு கிடைத்து விடுகிறது. மேலும் முத்தாய்ப்பாக உற்பத்தி பொருட்கள் எத்தியோப்பியர்களுக்கு உபயோகப்படாமல் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகின்றன.

ஒரு இந்திய கம்பெனியின் முதலாளி இதை நியாயப்படுத்தி ஒரு கருத்தை கூறுகிறார். அவரின் கம்பெனி ரோஜா பூக்களை பயிரிட்டு ஏற்றுமதி செய்வதாகவும், பல வகையான வரிகளை எத்தியோப்பிய அரசாங்கத்திற்கு கட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த வரிவருமானம் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்கிறார். ஆனால் ஆப்பிரிக்க அரசாங்கங்களின் இலட்சணம் நமக்கு தெரியும். வரி வசூல், கருப்பு தலைவர்களின் ஸ்விஸ் வங்கி கணக்கிற்கு செல்லுமே தவிர மக்களுக்கா செலவாகப் போகிறது?

இந்திய-அமேரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை தொடர்ந்து, அணு உலை விபத்து இழப்பீடு மசோதா நிறைவேறும்போது வாய் கிழிய கத்திய இந்திய கம்யூனிஸ்டுகள், இந்திய கம்பெனிகள் ஆப்பிரிக்காவில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை விமர்சிக்க முன்வருவதில்லை.2010லும் அதே புளித்துப்போன “அமேரிக்கா இந்தியாவை அடிமைபடுத்தி விடும்” என்ற வெற்று கோஷங்கள்.

ethiopia-agricultureசில மாதங்களாக எத்தியோப்பிய உள்ளூர்வாசிகள் இந்திய கம்பெனிகளை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். இந்திய அரசு விழித்து கொள்ள வேண்டிய தருணம் இது. இந்த எதிர்ப்பை முன் நின்று நடத்தி வரும் தலைவர் இந்திய கம்பெனிகளின் செயல்களை பற்றி விமர்சிக்கும் போது “It is Ethiopia’s biggest land grab” என்றார்.

ஒரு பத்திரிகையில் வந்த இரு வாக்கியங்களை நான் கீழே தருகிறேன்.

“New Delhi, troubled by lack of farmland at home (India), is encouraging Indians to buy mega farms across Africa”.

ஐக்கிய நாடுகள் சபையின் கருத்து- “Unsurprisingly, locals aren’t too happy about this.In fact, even the United Nations (UN) agrees, deals are being signed with little public input, and local ministers promising just about anything”.

சில எலும்புத்துண்டுகளை கருப்பு தலைவர்களுக்கு போட்டு விட்டு பெரும்பான்மையான ஆப்பிரிக்க கருப்பர்களின் சாரத்தை உறிஞ்சுவதை காலனித்துவ மனநிலையாக ஏன் பார்க்க கூடாது? கிழக்கிந்திய கம்பெனியை இன்று வரை விமர்சனம் செய்து வரும் நாம் அந்த சுரண்டலை நாமே வேறு வழியில் புதுமையாக செய்வதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? 200 வருடங்களுக்கு முன் குறுநில மன்னர்கள் பலருக்கு எலும்பு துண்டுகளை போட்டு விட்டு, நம் நாட்டின் மொத்த வளத்தையும் சுருட்டிய பிரிட்டிஷாரின் யுக்திதான் எனக்கு ஞாபகம் வருகிறது. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியா?

நம் வளர்ச்சிக்கு முதிர்ச்சி அவசியம்:

1990களின் ஆரம்பத்தில் இந்தியா சந்தை பொருளாதார முறைகளை அனுசரிக்க ஆரம்பித்தது. அதன் ஒரு பகுதியாக நாடெங்கிலும் தொலைத்தொடர்பு சேவைகளை அளிக்க தனியாருக்கும், வெளிநாட்டவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுகள் அப்பொழுது அளித்த விளக்கங்களை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பும் கோபமும் வரும். “இந்திய இரகசியங்களை வெள்ளைக்காரர்கள் ஒட்டு கேட்டு இந்தியாவை அழித்து விடுவார்கள்” என்றெல்லாம் கூறியதை நாம் நினைவு படுத்தி கொள்ளலாம்.

இந்தியாவின் ஒரு தனியார் தொலைதொடர்பு கம்பெனி தற்பொழுது ஆப்பிரிக்க கென்யாவில் தடம் பதிக்க முயல்கிறது. டாடா கம்பெனி, பிரிட்டனில் ஜேகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) கம்பெனியை வாங்கியுள்ளது. வங்கிகள், காப்பீடு, தொலைத்தொடர்பு, கணிணி என்று அனைத்து துறைகளிலும் இன்று இந்திய கம்பெனிகள் உலகம் முழுவதும் பல கம்பெனிகளை வாங்கி உள்ளன. (அமேரிக்காவிலும்தான்).

இப்படிப்பட்ட இரட்டை நிலைகளை கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது சாதாரண இந்தியர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இக்கட்டுரைக்கு விஷயம்.

உலக சந்தை பொருளாதார முறையில் இனி நாம் தனியாக வாழ்வது சாத்தியமே இல்லை. இனிவரும் காலங்களில் நம் சமூகம் முதிர்ச்சியை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தார்மீக நெறிமுறைகள்:-

இந்தியர்கள் தங்களை தார்மீக நெறிமுறைகளில் (Moral High Ground) மற்றவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்கள் என்று வரலாற்று ரீதியாகவும், தற்காலத்திலும் கூட கூறி வருகிறார்கள். இதற்கு வலு சேர்க்க பல ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். முக்கியமான சிலவற்றை பார்க்கலாம்.

 • இந்தியர்கள் எந்த நாட்டுடனும் போரிட்டதில்லை. இன ஒழிப்புகளில் பங்கு வகித்ததில்லை.
 • அகிம்சையை உலகிற்கு சொல்லிக்கொடுத்த, செய்தும் காண்பித்த நாடு இந்தியா
 • ஒடுக்கப்பட்ட இனங்கள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று அவர்கள் தனித்தன்மையுடன் வாழ அனுமதிக்க பட்டனர். உதாரணமாக ரோமானியர்களால் துரத்தப்பட்ட யூதர்கள். ஈரானிலிருந்து துரத்தப்பட்ட பார்ஸிகள் இந்தியாவில் அடைக்கலம் பெற்று இன்று வரை தங்கள் மதநம்பிக்கை மற்றும் கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.
 • மனிதர்களே மனிதர்களை அடிமைப்படுத்தும் முறையை இந்தியர்கள் ஆதரித்ததில்லை.

இக்கட்டுரையை படிக்கும் பெரும்பாலானோர்க்கு, என்னையும் சேர்த்து, மேற்கூறியவற்றில் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த கட்டுரையில் இது வரை முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த தார்மீக உயர் நிலை சுதந்திர இந்தியாவில் நம்மால் முழுமையாகக் கடைபிடிக்கப் படவில்லை என்பதே என் அபிப்பிராயம்.

முடிவுரை:

போக்குவரத்து சந்திப்புகளில் மூன்று நிற விளக்குகளும் அவற்றுக்குறிய விளக்கங்களும் இருக்கும். “நில்,கவனி,செல்”. ஆப்பிரிக்காவில் இந்தியா தன் முன்னெடுப்புகளை அவதானித்து தவறுகளை சரி செய்து கொண்டு பின் பயணத்தை தொடர வேண்டும் என்பதே சரியான வழிமுறையாக இருக்க முடியும்.

 1. மேற்கத்திய நாடுகள் செய்தவை பெரும்பாலும் தவறுகள்தான். ஆனால் கம்யூனிஸ்டு நாடுகள் செய்தவை பெரும்பாலும் அட்டூழியங்களே!
 2. ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம். ஆனால், இந்தியாவும் அமேரிக்காவை போன்றே பல தவறுகளை செய்துள்ள நிலையில் எதற்கெடுத்தாலும் “அமேரிக்காதான் காரணம்” என்று கூறும் மனநிலையிலிருந்து நாம் மாற வேண்டும்.
 3. நம் வருங்கால சந்ததியினர் “சீனா அட்டூழிங்களை செய்தது, அதை தொடர்ந்து எங்கள் முன்னோர்களும் செய்தார்கள்” என்ற நொண்டி சாக்கை கூற வேண்டிய நிலையில் இருக்க கூடாது.
 4. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் வரலாற்று ரீதியாக கீழ்தட்டு மக்களை அடிமைபடுத்தியது பற்றி இன்றும் பதில் கூறி கொண்டிருக்கிறார்கள். குறுகிய கால இலாபங்களுக்காக, நம் சந்ததிகளுக்கு அது போன்ற சங்கடமான நிலையை நாம் ஏற்படுத்துவது நம் கலாச்சாரத்திற்கே கருப்பு புள்ளியாக உருவெடுத்து விடும்.
 5. venezuela-hugo-chavez-barack-obama-summit-book

 6. இந்தியா மியன்மாரில் செய்ய ஆரம்பித்திருப்பது வரலாற்று தவறே!. அமேரிக்கா வெனிசுவேலாவுடன் கொண்டுள்ள உறவை கவனித்து நாம் கற்று கொள்ளலாம். வெனிசுவேலா தன் எண்ணெய் வளத்தில் 30% மேல் அமேரிக்காவிற்குதான் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமேரிக்காவிற்கும் வெனிசுவேலாவிற்கும் நல்ல ராஜ்ஜீய உறவுகள் கிடையாது. ஹ்யூகோ சாவேஸ் நாள்தோறும் அமேரிக்காவை விமர்சித்து அறிக்கை அளிப்பார். வர்த்தகத்தை செய்து கொண்டே தார்மீக நெறிகளையும் அனுசரிக்க முடியும் என்பதற்கு அமேரிக்க-வெனிசுவேலாவின் உறவே சான்று.
 7. ஆப்பிரிக்காவில் இந்தியா கனிம வளங்களையும், எண்ணெய் வளங்களையும் தனதாக்கிக் கொள்ளட்டும். அது தவறல்ல. ஆனால் அந்த வர்த்தக இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்வது நம் எதிர்காலத்தில் நம் சந்ததிகள் நிம்மதி பெருமூச்சு விட உதவியாக இருக்கும். நம் கலாச்சாரத்தின் பழம்பெருமைகளுக்கு முட்டு கொடுப்பதற்கும் தோதாக இருக்கும்.
 8. எதிர்காலத்தில் தார்மீக உயர்நிலை என்னும் வரலாற்று பெருமை இந்தியாவுக்கு கிடைக்காது. ராஜ தந்திரம் என்ற ரீதியில் இன்றும் நாளையும் ஒரு சில விதிமீறல்களை செய்துதான் தீர வேண்டியிருக்கும். அவை கம்யூனிஸ்டுகளின் அட்டூழியங்களின் அளவுக்கு செல்லக்கூடாது என்பதே என் பிரார்த்தனை.

இக்கட்டுரை இந்தியா அண்டை நாடுகளில் செய்த செயல்களை கேள்விக்கு உட்படுத்த எழுதப்பட வில்லை. இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பை” கேள்விக்கு உட்படுத்துவதற்காக எழுதப்பட்டது. 20ம் நூற்றாண்டின் கடைசியில் பேசப்பட்ட வாக்கியம். “அடுத்த நூற்றாண்டு ஆசியாவிற்கு”. ஆனால் பேசப்படாதது அடுத்த நூற்றாண்டின் பலிகடா-ஆப்பிரிக்கா.

(முற்றும்)