எலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் தூதுவர்

மனிதச் சிந்தனையும் ஆளுமையும் புறச்சூழல்களினாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் உருவாவதாக நமக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. பெரும்பாலும் இது உண்மையென்றே நாம் நம் அனுபவங்களிலிருந்தும் பார்த்து, இச்சிந்தாந்தத்தை ஏற்று வந்திருக்கிறோம். ஆனால் மனித மனதின் விசித்திரங்களை என்னவென்று சொல்வது?

The doctor will also prescribe a daily intake for dosing the dosage. You can opt to have a traditional fluticasone prescription vs otc and natural method or a hormonal method. Levaquin is used to treat infections caused by bacteria, viruses, and fungus.

The half-life is about 12 hours, so, while taking lorazepam, the effects. It is important to be aware that doxycycline can Shushi inhibit many. The wuhan park opened in 2002 and the beijing park opened in 2007, with the w.

You can use this link to access a secure area to download your order. This information zithromax price walmart Monserrato is believed to be accurate, but not guaranteed. Azomax is a broad-spectrum antibiotic used for the treatment of acute bacterial skin and skin structure infections (coccidioidomycosis, histoplasmosis, and other molds).

buchenwald-1945-wiesel-is-on-the-second-row-of-bunks-seventh-from-the-leftஎலீ வீஸல் தனது நினைவுகளை, தன் சிறுவயதுப் பிராயத்துக்குப் பின்தள்ளிப் பார்க்கும்போது, அவர் தன் தந்தையுடன் நாஜிகளின் சிறைமுகாம்களில் ஒன்றான ஆஸ்விட்ஸில் பசியிலும் பட்டினியிலும் கொடும் சித்திரவதையிலும் இரையாகி, தினமும் மரணத்தையே எதிர்நோக்கியிருந்த நிலைக்குத்தான் இட்டுச்சென்று உறைகின்றன, அந்த நினைவுகள். அந்நிலையிலும் சிறுவனான தனக்குக் கிடைக்கும் உணவையும் கூட, தன் தந்தையுடன் பகிர்ந்து கொள்ள அவரைத் தடுப்பது, பக்கத்தில் நின்று முறைக்கும் சிறைக்காவலர்கள் மட்டுமல்ல; சிறைமுகாமின் கொடூரங்களால் தன் தந்தையுடன் சேர்ந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மற்ற யூதக் கைதிகளும் கூடத்தான். “நீ வாழவேண்டியவன். நானும் உன் தந்தையும் இன்றோ நாளையோ, மறு கணமோ சாகக் காத்திருப்பவர்கள். நீ உனக்குக் கொடுத்ததை உன் தந்தைக்குக் கொடுப்பதால், உன் தந்தை உயிர் காப்பாற்றப்படப் போவதில்லை. நீ வாழவேண்டியவன். நீ உன் தந்தைக்காக இரக்கப்படுவதில் அர்த்தமில்லை,” என்று அவர்கள் இவனுக்குச் சொன்னது இரக்கமற்ற வார்த்தைகளாகத் தோன்றினாலும் ஒரு கொடூர உண்மையைத்தான் சொல்லின.

இன்று அந்தச் சிறுவன் 1986-ம் வருட உலக அமைதிக்கான நோபெல் விருதைப் பெற்ற, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியனாகவிருக்கும் எலீ வீஸல்.

ஆனால் இந்த விபரங்கள் ஒன்றும் அப்படி அதிசயிக்கத்தக்கன அல்ல. அந்தச் சிறுவன் அன்று அறிந்தது ஆஸ்விட்ஸ் சிறைமுகாமில் யூதர்கள் அனுபவித்த கொடூரங்களும் ஜனசம்ஹாரமும்தான். ஆனால் அவனும் உலகமும் அறிய நேர்ந்தது, யூதர்கள் ஓர் இனமாக தனிமைப் படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. ஐரோப்பிய கண்டம் முழுதும் தழுவிய இன எதிர்ப்புப் படுகொலைகள். தன் கண் முன்னேயே தன் தந்தை யூதன் என்ற காரணத்துக்காக சித்திரவைதைக்குட்பட்டு இறந்தார். இந்நிலையில் தன் இன அழிவுக்குக் காரணமானவர்கள் மேல் அளவு கடந்த வெறுப்பு எலீ வீஸலின் ஆளுமையை ஆக்கிரமித்திருக்கவேண்டும். சிறு வயதில் அந்தச் சூழலில் தனக்கு வெறுப்பு இருந்ததென்றாலும், போர் முடிந்த பிறகு அந்த வெறுப்பு தன்னை அண்டாதவாறு தன்னைக் காத்துக்கொண்டதாகச் சொல்கிறார் எலீ வீஸல். அத்தகைய வெறுப்பு தன்னிடம் வளர்ந்திருந்தால் அது இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கும் என்று சொல்லும் வீஸல், அதற்கான சாத்தியப்பாடுகள் இருந்த போதிலும் ஆனால் தான் தேர்வு செய்து கொண்டது வெறுப்பு அல்ல, பழி தீர்க்கும் உணர்வும் அல்ல. இத்தகைய தன் தேர்வு இயல்புக்கு மாறானது என்றும் சொல்கிறார் வீஸல்.

anatomy-of-hate-oslo-conferenceஇவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை, வீஸல் எதிர்கொள்ளும் உலக பிரச்சினைகள் தொடங்கி, அன்றாட சின்னச் சின்னப் பிரச்சிச்னைகளை அவர் எதிர்கொள்ளும் முறைவரை, இத் தேர்வுகள் கொள்கை சார்ந்ததல்ல; ஆளுமையின் குணம் சார்ந்தது; இவை வெற்று வார்த்தைகள் அல்ல; அவரது உள்ளார்ந்த தேர்வுகளின், சிந்தனையின் வெளிப்பாடு என்று தெரிகிறது. அன்றாட நடைமுறைப் பிரச்சினைகளிலில் தொடங்கி, இனங்களிடையே, நாடுகளிடையே வெடித்தெழும் போராட்டங்கள் வரை எல்லாமே பேசித் தீர்வுக்காணக்கூடியவையாகவே எலீ வீஸல் கருதுகிறார். அவர் படிப்பிக்கும் வகுப்புகளில் மாணவர்களிடையே எழும் கறுப்பு-வெளுப்புப் பிரச்சினைகளாகட்டும், ஆண் பெண் பாலியல் ஏற்றத் தாழ்வுகளாகட்டும், நாடு தழுவிய போராட்டங்களாகட்டும், அவர் தன்னளவில் இரு தரப்பையும் கூட்டிப் பேசியே தீர்வு கண்ட சம்பவங்களை ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். இவை ஏதும் தன் சாதனைகள் என்று காட்டும் முனைப்பில் அல்லாது ருட்ஜர்ஸ் என்னும் இன்னொரு பல்கலைக் கழக பேராசிரியருடன் நிகழ்ந்த தொடர்ந்த உரையாடலில் அவ்வப்போது தன்முன் எதிர்வந்த பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றைத் தன் வழியில் எப்படி எதிர்கொண்டார் என்பதாகவும் சொல்லிச் செல்கிறார். தன் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பேராசிரியர்களை வன்முறை காட்டி பயமுறுத்தியபோது, மாணவர்கள் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, அவர்களது வன்முறை, இனப் பிரச்சினையாகவும் உருவெடுக்கும் அபாய நிலையில், தான் செய்யக் கூடியது அந்தப் பிரச்சினைக்கான மாணவர்களைத் தன் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு மணி நேரமானலும் சரி நான்கு மணி நேரமானலும் சரி அவர்களுடன் பேசித்தான் அவர்களைப் புரிய வைப்பேன் என்று சொல்லும் வீஸல், ஆஸ்லோவில் தான் ஏற்பாடு செய்திருந்த ‘Anatomy of Hate’ என்னும் கருத்தரங்கிறகு, அப்போதுதான் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்த நெல்ஸன் மண்டேலாவையும், அவரைப் பல பத்தாண்டுகளாகச் சிறையில் தள்ளிய தென்னாப்பிரிக்க அரசின் அமைச்சர் ஒருவரையும் அழைத்திருந்தார். அந்த மேடையிலேயே அந்த அமைச்சர் நெல்ஸன் மண்டேலாவை நோக்கி, தான் நிறவெறியுடன் பிறந்து வளர்ந்ததாகவும் இப்போது அதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் காத்திருப்பதாகவும் சொன்னது எல்லோர் நெஞ்சையும் நெகிழ்வித்தது என்று வீஸல் சொல்கிறார். இதன் அடுத்த கட்டத்தில்தான் இருவரது அங்கு தொடங்கிய உரையாடல் மண்டேலாவை அதிபராகத் தேர்ந்தெடுப்பதில் முடிவுற்றது என்றும் அதன் தொடக்கத்தைத்தான் அக்கருத்தரங்கம் சாதித்தது என்றும் வீஸல் கருதுகிறார்.

எந்தப் போராட்டமும் பிரச்சினையும் இரண்டு தரப்புகளும் உட்கார்ந்து பேசித் தீர்க்கப்படவேண்டும், அது சாத்தியம் என்று வீஸல் நம்புவது ஒரு லட்சியக் கனவாக நமக்குத் தோன்றலாம். ஆனால் அவர் அந்த நம்பிக்கையில் திடமாகவே இருக்கிறார். யூத இனப்படுகொலை நேர்ந்தது; ஜெர்மன் கலாசாரம், யூதக் கலாசாரத்தை எதிர்த்து சண்டையிடவில்லை; யூதக் கலாசாரத்தையே, யூத இனத்தையே ஒழிக்க நினைத்தது. யூதர்களாக இருப்பதே ஜெர்மன் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஆக, யூதர்களை ஒழிப்பது சட்டத்தின்படி தேவையான ஒரு காரியமாகியது. இதைத் தொடர்ந்து வீஸல் சொல்கிறார், “எந்தக் கலாசாரமும், அது இந்துவோ வேறு எதுவுமோ, அதுவும் என்னுடைய கலாசாரத்துக்கு இணையான சிறந்த ஒன்று தான். ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதே சமூக உறவாடலின் விளைவாக இருக்கவேண்டும்.”

சிறைமுகாமிலிருந்து வெளிவந்ததும், அவர் யூத மதப் பற்று மிக்கவரானார். எந்த விஷயத்திலும் அவர் மேற்கோள் காட்டுவது, சிறப்பாக எடுத்துப் பேசுவது யூத மத சித்தாந்தங்களும் சட்டங்களும் அடங்கிய தால்மூதைத்தான். அவர் இஸ்ரேலைக்கூட மதநெறி சார்ந்த நாடாகவே கருதுகிறார். அதே சமயம் யூதர்கள் ஏன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மற்றவர்களின் வெறுப்பிற்கு இரையாகி இடம்பெயர்ந்து அலையும் நிலைக்கு விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னைக் கேட்டுக்கொள்கிறார். எந்த மதநெறியும் அறம் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்தே இருக்கவேண்டும் என்று சொல்கிறவர், அதே போல் மற்றவர் மதநெறியும் அறம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக அங்கீகரிக்கவேண்டும் என்றும் சொல்கிறவர், வரலாற்றின் நிர்ப்பந்தங்களுக்கு இரையாகி, தன்னைக் காத்துக்கொள்ள, தான் வாழ ஓர் இடம்வேண்டி தன்னைக் காத்துக்கொள்ள தம்மை இணைப்பது வரலாற்றில் இரையாகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையாக இருப்பதன் காரணத்தை; அவர் இஸ்ரேலின் இறைசார்பைப் பார்க்கவில்லை.

elie-wiesel-leaving-nazi-deathcamp-at-the-age-of-15-apr-27-1945வீஸலின் ஆளுமையைச் சொல்லும் இன்னுமொரு சம்பவம், அமெரிக்கர்கள் ஜெர்மனியில் முன்னேறி வரும்போது நாஜி அரசு சிறைமுகாம்களிலிருந்த யூதர்களை, நாளொன்றுக்கு பத்தாயிரம் என்ற கணக்கில் எங்கோ கப்பலில் ஏற்றி, கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ எலீ வீஸல் இருந்த குழந்தைகள் பகுதி தொடப்படாத காரணத்தால் அமெரிக்கர்கள் முன்னேறி வந்தபோது அவர்கள் பாதுகாப்பில் வந்தார்கள். அவர்களில் கறுப்பினத்தவர்களும் இருந்தார்கள். எலீ வீஸல் சொல்கிறார். வதைமுகாம்களில் இருந்த சிறுவர்களைவிட அவர்கள்தான் கொலைகார நாஜிகள் மீது ஆத்திரப்பட்டார்கள். பின், கோபம்மேலிட்டு அழவும் செய்தார்கள். தங்களிடமிருந்த ரேஷன் பொருள்களையெல்லாம் முகாமிலிருந்த குழந்தைகளுக்கு வீசி எறிந்தார்கள். ஆனால் அவற்றைச் சாப்பிடும் முன், பிரார்த்தனை செய்யவே அந்தச் சிறுவர்கள் விரும்பினார்களாம். அதற்கான பிரார்த்தனைக் கூடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களைக் கைவிட்டுவிட்ட கடவுளிடம் கண்ணீர் மல்கப் பிரார்த்தனை செய்ததாக எலீ வீஸல் சொல்கிறார்.

நோபல் விருது பெற்ற சமயம் நெல்லி சாக்ஸ் என்ற பெண் கவிஞரைச் சந்தித்துப் பேசியது பற்றி மிக மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வீஸல் சொல்கிறார், “நெல்லி சாக்ஸ் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை தாம் பயன்படுத்தவே முடியாது மனம் இறுகிப் போய்விட்டதாகவும் அதற்குக் காரணம் அந்த வார்த்தைகளை நாஜிகள் தம் கொடூரச் செயல்களுக்குப் பயன்படுத்தியதே காரணம் என்றும் சொன்னார். அவர் மன நோய்க்கு ஆளாகி சிகித்சை பெற வேண்டியதாயிற்று. ஒரு கவிக்கு தன் மொழியுடன் ஆன பிணைப்பில் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது.”.

இதற்கு அடுத்த படியாக மேலும் வீஸல் சொல்கிறார், “எப்போதெல்லாம் மொழியின் மீது தாக்குதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் மனித மனத்திற்கும் ஆன்மாவிற்கும் ஊறு நேர்கிறது. மொழி ஒரு நினைவுச் சின்னம். மொழியின் பிரயோகங்கள் அது பெறும் மாற்றங்கள் அம்மக்கள் கூட்டம் பெற்ற மாற்றங்களைச் சொல்லும். ஒரு வாக்கியத்தை ஆராய்ந்தால் அந்த வாக்கியத்தைப் பயன்படுத்திய மக்களின் எல்லா விவரங்களையும் அறிய முடியும்,” என்று வீஸல் விளக்குகிறார். “மக்கள் மீதான தாக்குதல் மொழியின் மீதான தாக்குதலையும் உள்ளடக்குகிறது,” என்கிறார் வீஸல்;

elie-wieselதங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும் வெறுப்பின், பழிதீர்த்தலின் விளைவாகக் கருதி அதை ஒப்புக்கொள்வதில்லை. வெறுப்பு, பழிதீர்த்தல் என்ற இரண்டு எதிர்மறை கருதுகோள்கள் வீஸலின் பெரும்பாலான தீர்வுகளைத் தீர்மானிக்கின்றன. “கொமேனியைப் பாருங்கள். கடவுள் மீதான அன்பு, விசுவாசம் என்ற பெயரில் எத்தகைய வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது! கடவுள் சார்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்கள் எத்தனை, எத்தனை?… பைபிள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில், இருப்பில் உள்ள ஆவணங்களில், ஆகச் சிறந்த மனித நேய ஆவணங்களில் ஒன்றாக நான் நம்புகிறேன்.. இருந்தும் அதிலும் கூட சில கடுமையான பக்கங்கள் இருக்கின்றன- நம் எதிரிகளை நாம் எப்படி நடத்தவேண்டும், தண்டிக்கவேண்டும் என்பதைச் சொல்லும் பகுதியைப் போல். புனித நிலத்திற்கு ஜோஷ்வா வந்து சேரும்போது கனானை வெற்றிகொள்வது என்ற நிகழ்வை என்னால் பெருமித உணர்வோடு ஏற்க இயலவில்லை. இயலவே இல்லை,” என்கிறார். மேலும் வேறோரிடத்தில் அவர், “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது,” என்கிறார்.

வீஸல் தன் வாழ்க்கையின் தொடக்கத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டு வேறோரிடத்தில் சொல்கிறார்: “ஒரு மகனின் தந்தை கொலையாளி ஒருவரால் சாகடிக்கப்பட்டு விட்டதாக வைத்துக்கொள்வோம். சரி, அந்த மகன் சென்று, தன் தந்தையைக் கொன்றவனைக் கொலைசெய்து விடுகிறானென்றால், அதன் மூலம் கிடைப்பது என்ன? நடந்த துன்பியல் நிகழ்வு முன்பு இருந்ததைப் போல் அத்தனை உண்மையாக இனி இல்லாமல் போய் விடுகிறது. இப்போது வேறொன்று சமன்பாட்டில் இடம் பெறுவதாகிவிடுகிறது. பழிதீர்த்துக்கொள்ளல் என்ற செயல்பாட்டை நாம் ஆரம்பித்து விடலாகாது…. முதலில் பழிதீர்க்கப்படவேண்டியவர்கள் SS-தானே? ஆனால், அந்த SS-ஐ ஆதரித்து அதற்கு உதவி செய்த குழுக்கள் எத்தனையோ இருந்தன. நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் ஓரமாக நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். பின் நாம் ஹங்கரிக்குப் போகவேண்டியிருக்கும். அங்கேயும் கணிசமான அளவில் ஹங்கரி நாஜி வெறியர்கள் என்னுடைய சொந்த ஊரில் SS-க்கு உதவி செய்து வந்தார்கள். ஜெர்மானியர்களைவிட அதிக அளவு இவர்கள் யூதர்களை அடித்துதைத்தும் அவமானப் படுத்தியும் துன்புறுத்தினார்கள். ருமேனியா, போலந்து, மற்றும் உக்ரெய்ன் ஆகிய இடங்களிலும்கூட இதுதான் நடந்தது. நாம் எங்கே நிறுத்துவது?

இது ஏதும் Utopian என்று சொல்லத்தக்க லட்சியக் கனவு அல்ல. வெகுவாக நடைமுறை விவேகம் என்று சொல்லத்தகுந்த ஒன்றுதான். இதுவும் பிரக்ஞைபூர்வமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்றல்ல,” என்று எலீ வீஸல் சொல்கிறார்.

இது தனிநபர் சார்ந்த அறவியல்; இயல்பாக உருவானது; பாரம்பரியமாகத் தொடர்வது; தந்தையர்களின் நற்பண்புகள் என்று தொடர்வது. அவர் தாத்தா, கொள்ளுத் தாத்தா சொல்வாராம், “வேண்டாம், நீ அதைச் செய்யாதே. நீ செய்யத் தக்க காரியம் இல்லை அது. நாம் ஒரு போதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை,” என்று. பின், எலீ வீஸல் தொடர்ந்து சொல்கிறார், “இரண்டாயிரம் வருட யூத வரலாறு வெறுப்பும், தண்டனையும் கொன்றுகுவித்தலுமான வரலாறுதான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பழிக்குப் பழி என்று நடந்துகொள்ள முற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?” அதே சமயம் வேறோரிடத்தில் ஒரு கசப்பான உண்மையையும் பார்க்கவேண்டியிருக்கிறது. “இஸ்ரேலில் எனது மதம், அதன் வரலாறு காரணமாய், வருந்தத்தக்க அளவில், மிக அதிகச் செல்வாக்குடையதாய் விளங்குகிறது. மதங்கள் மிக அதிகமாக அரசியலோடு கலக்கின்றன. அது எனக்கு உடன்பாடான விஷயமில்லை.”

அவர் உடன்படுகிறாரோ இல்லையோ, கொமேனிக்கு அதிகாரம் வந்தடைந்ததும் ஈரான் என்னவாயிற்று என்பது அவருக்கே தெரியும். அவரும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து வேறிடத்தில், “எனக்குக் கவலையளிக்கும் விஷயம் மதம் என்பது அதன் உச்சபட்ச அடிப்படைவாதப் போக்கில் எழுச்சி பெற்று வருவது தான். அஸர்பைஜான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டிலுமாகச் சேர்ந்து 700 லட்சம் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே தீவிரவாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு, உலகில் மத அடிப்படைவாதிகளின் மேலாதிக்கத்தின் கீழே 200 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இஸ்ரேலைப் பொருத்தவரையிலும் இதே நிலைமைதான்…” என்று சொல்லிச் செல்கிறார். 200 கோடி முஸ்லீம்கள் மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் தீவிரமடைவது எங்கே? இவர்களிடையில் இஸ்ரேலும் தன் மதத் தீவிரவாத்த்தைக் கையாளும் தற்காப்பு எங்கே? எது காரணம்? எது விளைவு? அவரவர் தரப்பு நியாயத்துக்குக் காரணத்தையும் விளைவையும் மாற்றி வாதிடலாம்தான். வலுத்த கையின் சொல் அம்பலமேறும். இதில் எலீ வீஸல் கூறும் வட்டமேஜையைச் சுற்றி உட்கார்ந்து கருத்து பரிமாறிக்கொள்வதில் எந்தப் பிரச்சினை தீரும்? எத்தனை ஆண்டு இனவெறியின் ஆளுகைக்குப் பின், உலகளாவிய எதிர்ப்புக்குப் பிறகு, ஒரு தென்னாப்பிரிக்க அமைச்சர் நெல்சன் மண்டேலாவின் அருகே அமர முடிந்தது? அது ஏன் ஹிட்லரோடு, ஸ்டாலினோடு, மாவோவோடு, பால் பாட்டோடு சாத்தியமாகவில்லை? மகாத்மா எவ்வளவு விட்டுக்கொடுத்த போதிலும் ஏன் ஜின்னாவோடு சாத்தியமாகவில்லை? சாத்தியமாகாது போனபின் நடந்த வரலாறு என்ன? இன்னும் ஒரு பேரழிவு தானே!

ஆனால் நம் நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் என்னவாக இருந்தாலும், எலீ வீஸல் போன்ற ஒரு குரலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும். வெகு அபூர்வமாக ஒலிக்கும் குரல் இது. இப்படிப்பட்ட ஒரு குரல் 1948- வருடம் ஜனவரி மாதம் 30 தேதி தொடர்ந்து எழாது பலவந்தமாக நசுக்கப்பட்டது.

எலீ வீசல் யூத இறையியலாளர்குழுக் கதை ஒன்று சொல்கிறார்: இரண்டு நபர்கள் தற்செலாக சந்தித்துக் கொள்கின்றனர். முதலாமவன் கானகத்தில் தனியாக வழிதெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனுக்குள் பயமும் பீதியும் பரவுகிறது. அந்தச் சமயத்தில் அவன் இன்னொரு மனிதனைப் பார்க்கிறான். மனம் மகிழ்ந்து அவனிடம் ஓடிச்சென்று, “உன்னை இங்கே காண்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். தயவு செய்து இங்கிருந்து வெளியேறும் வழியை எனக்குக் காட்டு,” என்று கேட்கிறான். அதற்கு இரண்டாமவன் சொல்கிறான், “நானும் வழியைத் தொலைத்தவன்தான். என்னால் உனக்குச் சொல்லமுடிவது, நான் வந்த வழியாகச் செல்லாதே. ஏனெனில் அந்த வழியாகத் தான் வழிதொலைத்து இங்கே வந்திருக்கிறேன்,” என்று அந்தக் கதை முடிகிறது. பின் வீஸல் சொல்கிறார், “இந்த நூற்றாண்டு மறுபடியும் இருபதாம் நூற்றாண்டுக்குத் திரும்பிச் செல்லாமல் இருக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.”

ஆனால் நமக்குத் தெரியும், நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரே பாடம், வரலாற்றிலிருந்து எதையுமே நாம் கற்றுக்கொள்வதில்லை என்பது தான்.

சமாதானத்திற்கான நோபல் விருது பெற்ற நூல்– எலீ வீஸலுடனான உரையாடலைப் படிப்பது ஓர் அரிய அனுபவமாக இருந்தது. இதைச் சாத்தியமாக்கிய சந்தியா பதிப்பகத்துக்கும், தமிழில் மொழிபெயர்த்த லதா ராமகிருஷ்ணனுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.

 

conversations-with-elie-wiesel-coverஎலீ வீஸல் உரையாடல்கள்: உரையாடுபவர் ரிச்சர்ட் டி. ஹெஃப்னர் (Richard D Heffner)
தமிழில்: லதா ராமகிருஷ்ணன்
சந்தியா பதிப்பகம்,
நியு டெக் வைபவ்,
57, 53வது தெரு,
அசோக் நகர்,
சென்னை-83.

விலை ரூ 135.

 

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.