சமீபத்தில் ஒரு ப்ரேசிலியன் சினிமா பார்த்தேன். படத்தின் பெயர் தி மிடில் ஆஃப் தி வேர்ல்ட். The Middle of the World – “O Caminho das Nuvens” (original title). 2003ல் வெளிவந்த படம். சீக்கிரமே தமிழில் மிஷ்கின், அமீர் போன்ற ஒரிஜினல் சினிமா எடுப்பவர்கள் காப்பியடிக்கக் கூடும். இந்தப் படத்திலும் ஒரு இந்தியப் பெயர் வந்தது. ஒரு டீன் ஏஜ் பையனின் பெயர் ரவி ரமோசாம். சின் நோம்ப்ரேயில் ஒரு தமயந்தி போல இதில் ஒரு ரவி.
There is no need to wait until the drug store has all your medication for the next six months. In the following decades, nizoral price of clomiphene 50mg Izazi boots became immensely popular as well, and have been used in various other ways. The reason for this is that they are not used as frequently as they are to treat viral diseases but are prescribed more liberally when people feel that their immune systems are down.
Zopiclone pills have been around since the late 20th century. Is there an alternative that will https://seattlebrickmaster.com/services/paths-and-patios/ have better results than amoxiclav? The dosage and administration of the drug varies in different regions of the world, but it is not available as a generic in the united states.
Kamagra oral jelly contains an active ingredient called sildenafil citrate, or viagra. The most common side effects that https://plancor.com.mx/author/plancor/ people experience while taking this drug are: If the disease is spread from one person to another, a doctor will prescribe a specific dose of dox for dogs based.
இது ஒரு சாலைப் பயண சினிமா. ப்ரேசில் நாட்டின் வறுமையும், வறட்சியும் நிறைந்த வடக்குப் பகுதியில் இருந்து 1000 ரியாஸ் சம்பளம் கிடைத்தால் மட்டுமே தன் 7 பேர்கள் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்றும், அந்த ஆயிரம் ரூபாய் வேலை ரியோ டி ஜெனிராவில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பிக் கொண்டு தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நான்கு சைக்கிள்களில் ரியோவை நோக்கிக் கிளம்பி விடுகிறான். இந்தியாவில் கிராமங்களில் இருந்து கிளம்பி டெல்லிக்கோ, மும்பைக்கோ, பெங்களூருக்கோ வேலை தேடி செல்பவர்கள் போல இல்லாமல் இதில் ஒட்டு மொத்த குடும்பமே வேலை தேடி ரியோவுக்கு சைக்கிளிலேயே தொலை தூரம் பயணிக்கிறது. இருக்கும் விடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அந்தக் குடும்பத் தலைவன் தன்னையும் தன் குடும்பத்தையும் அலைக்கழிக்கிறான்.
அந்த ரியோ வோ 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் பெரு நகரம். போகும் வழியில் கிடைக்கும் வேலைகளையெல்லம் உதறி விட்டு தன் கனவு வேலையான ஆயிரம் ரூபாய் சம்பள வேலையை நோக்கி தன் குடும்பம் முழுவதையும் பசியிலும், வெயிலிலும், மழையிலும் சைக்கிளை மிதிக்க வைத்து 2000 மைல்கள் தாண்டிப் போவதுதான் கதை.
போகும் வழியில் ப்ரேசில் நாட்டின் நிலப் பகுதி, மக்கள், கலாச்சாரம், நம்பிக்கைகள், மனித உறவுகள் அனைத்தும் காண்பிக்கப் படுகின்றன. ப்ரேசிலை புரிந்து கொள்ள உதவும் ஒரு சினிமா இது. இந்த சினிமா அந்த வறுமையான குடும்பத்தின் பயணத்தை மட்டுமே காட்டுகிறது முடிவை அல்ல.
குழந்தைகளில் டீன் ஏஜ் பையனில் ஆரம்பித்து கைக் குழந்தை வரை இருக்கின்றனர். குடும்பம் பாட்டுப் பாடியும் பிச்சை எடுத்தும் சம்பாதிக்கும் அரைக் காசில் வாழும் சோம்பேறியான குடும்பத் தலைவன் தன் குறையை மறைக்க ரியோடி ஜெனிரா போய் சேர்ந்து விட்டால் வாழ்க்கை சுபமாகி விடும் என்று அவர்களிடம் சொல்லி அவர்களைக் கட்டாயப் படுத்தி சைக்கிளை ஓட்ட வைத்து ரியோவைச் சென்று அடைந்தும் விடுகிறான். அங்கு அந்த கை விரித்த கிறிஸ்து சிலை உள்ள மலை உச்சியில் நிற்கும் பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது இங்கு வந்தாலும் தான் வேலைக்குப் போய்தான் உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும் என்ற உண்மை. அருகில் இருப்பவரை மீண்டும் தன் ஊருக்குப் போகும் வழியைக் கேட்க்க ஆரம்பிக்கிறான்.
பிரச்சினை அவனிடம் தான் இருக்கிறது. அடிப்படையில் வேலைக்குச் செல்ல விரும்பாமல் உழைத்து வாழ விரும்பாமல் கனவுலகில் ரொமண்டிசைஸ் செய்து கொண்டு வாழும் ஒரு நாடோடி அவன். அவனுக்கு உலகின் எந்த நகரிலும் வேலையும் திருப்தியும் கிடைத்திருக்க வழியில்லை. பிரச்சினை அவனது மனதில் உள்ளதே அன்றி அவன் தேடும் வேலையில் அல்ல. அதை அவன் உணர 2000 மைல்கள் நெடும் பயணம் மேற்கொள்ள வேண்டி வருகிறது. நாம் வாழ்க்கையின் ஒரு சில தருணங்களை உணர மேற்கொள்ளும் வாழ்க்கைப் பயணத்தை பூடகமாகக் குறிப்பது அவனது முற்றாத பயணம்.
ப்ரேசிலின் பல பகுதிகளும் கிட்டத்தட்ட இந்தியா போலவே கடும் வறட்சியிலும் வறுமையிலும் உள்ளன. இந்தியாவில் இப்படி ஒரு குடும்பம் கன்யாகுமரியில் இருந்து கிளம்பி மும்பைக்கோ, டெல்லிக்கோ சைக்கிளிலேயே அதிலும் கைக்குழந்தையுடன் சென்றிருக்குமேயானால் செல்லும் வழியில் நிச்சயம் சோறு கிடைத்திருக்கும். ப்ரேசிலில் அதற்கும் வழியில்லை. செல்லும் வழியில் நம் நாட்டில் ஏராளமான கோவில்களும் மண்டபங்களும் சத்திரங்களும் நிறைந்திருக்கும்.
இங்கும் செல்லும் வழியில் எல்லாம் கிறிஸ்துவ பாதிரிகளின் சிலைகளும், மேரியின் கோவில்களும் உள்ளன ஆனால் சாப்பாட்டுக்குத்தான் எந்த வழியும் இல்லை. வழி முழுவதுமான நிலப்பகுதி வறண்டும் புழுதியுடனும் அழுக்குடனும் சாலையோர மணல்களுடனும் குறும் புதர்களுடனும் எந்த வித சுவாரசியமின்றி நம் அருப்புக் கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி வழியாகப் பயணம் போனது போல இருக்கிறது. அவர்களுக்கு என்று எந்த விதமான பழமையான கலாச்சாரங்களோ, கலைச் சின்னங்களோ, பாரம்பரிய கட்டிடங்களோ,நம்பிக்கைகளோ,வழிபாடுகளோ, பண்பாட்டின் எச்சங்களோ எதுவும் மீதமில்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் போதை மருந்தும் மேற்கத்திய பாணி கலைகளும் உடைகளும் அவற்றின் ஆபாசங்களும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. அதன் வழியாக அந்தக் குடும்பம் ரியோடி ஜெனிரா என்ற நாட்டின் மிகப் பெரிய நகரத்தில் கிடைக்கப் போகும் வேலையினை நம்பிப் பயணிக்கின்றது.
இந்தியாவிலும் வறுமை உண்டு, அசுத்தங்கள் உண்டு, சாக்கடைகள் உண்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி நமக்கு இன்னும் ஆன்ம நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அந்த ஆன்மாவை இந்த தென்னமரிக்க நாட்டினர் முற்றிலுமாக இழந்து விட்டனர் என்று தோன்றுகிறது. வெறுமை மட்டுமே மீதம் இருக்கின்றது.
இந்தப் படம் ப்ரேசில் பற்றி ஒரு அறிதலைத் தருகிறது. நகர்ப்புற வாழ்க்கையை நேற்று சொன்ன செக்கோஸ்ட்ரா எக்ஸ்ப்ரஸ், எலைட் ஸ்குவாட் போன்ற படங்களும் உள்புற ப்ரேசில் நாட்டு வாழ்க்கையை இந்தப் படமும் அளிக்கின்றன. மிஷநரிகளின் அருட்கொடையால் மாற்றப் பட்ட கோவாவையும், வடகிழக்குகளையும் போல ஒட்டு மொத்த இந்தியாவும் மாற்றப் பட்டிருக்குமானால் அந்த இந்தியா இந்தத் தென்னமெரிக்கப் படங்களில் நாமும் காணும் பரிதாபங்களைக் கொண்டதாகவே இன்று இருந்திருக்கும். இந்தப் படங்களைக் காணும் பொழுது அந்த நினைவு தொடர்ந்து வயிற்றுக்குள் ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. பாவப் பட்ட தேசங்கள். பாவப் பட்ட மக்கள்.