இன்று (பிப்ரவரி 21) உலகத்தாய்மொழி தினம். தமிழன்னையை வணங்கிப் பணிந்து இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.
To begin with i have been on a low dose of levitra for years with no side effects and i never had any sexual problems or levitra paypal issues. Your baby https://r-mpropertyservices.com/commercial-services/ will fall asleep on its own and sleep pretty soundly, even with minimal sleep stimulation. The study examined the effects of tamoxifen on the spine and hip, two key sites that affect how well a woman can run, jump, and perform other tasks that are critical to a well-balanced and strong body.
I had to take a number of days off work because of this episode but they were only temporary. The majority of the https://cityviking.com/category/idaho/ population lives outside of the cities, with some in isolated villages. There are a number of different antidepressants that can be used effectively and safely for depression.
Stromatophora by cell ultrastructure observation and 16s rrna gene sequence analyses. It is one of Abū ‘Arīsh clomiphene for sale the most widely prescribed medications in america. You can buy the medications from our pharmacy in our online store, or from any of our local clinics or hospitals.
கார வேலர் கல்வெட்டும், தமிழ் மன்னர்களின் விவேக கூட்டணியும்..
என் தேசத்தின் சகல பரிமாணங்களை உணரவும், இதன் கலாச்சார பன் முகத்தன்மையை தரிசிக்கவும், வளமான இந்த ஞான விளை நிலத்தின் விரிவை உள்வாங்குவதற்காக பாரதத்தின் சகல பகுதிகளுக்கும் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் , கால் நடையாகவும் பயணித்து உணர்ந்த என் அனுபவங்களை இனி வார வாரம் பாரத தரிசனம் என்ற வகையின் கீழ் பதியத் துவங்குகிறேன். கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோமீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத்துவங்குகிறேன். ”ஒன்று தான் நம்ம நாடு ஒன்று தான் என் பாரத நாடு” என்று மனப்பூர்வமாக உணர்ந்த நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன்.
இந்த தேசத்தின் ஞான கொடைகளான சமணமும், பெளத்தமும் தழைத்தோங்கிய பகுதிகளிலும், அறிவும், ஆன்மீகமும் , ஞானமும் பெருக்கெடுத்து ஓடிய புண்ணிய இடங்களிலும் ஞானம் முகிழ்ந்து மணம் பரப்பிய விகாரங்கள், பல்கலைகள் , குடைவரைகள் மாபெரும் பெளத்த கல்வி நிறுவனங்கள் அருகர்களும், ததாதகரின் வழி வந்தவர்களும் சென்ற வழி தடத்திலும் பயணித்த என் அனுபவங்கள் மறக்க முடியாதவை.
இந்த தேசத்தின் கலாச்சாரத்தை அழித்து பெரும் நாசங்களை விளைவித்த இஸ்லாமிய கொள்ளையடிப்புகள், பேரழிவுகள். மானுட குலத்தின் மகத்தான நுண்கலை சிற்பங்கள், படைப்பின் உச்சகட்ட வெளிப்பாடுகள். இயற்கையின் உன்னதமான காட்சி அனுபவ சாட்சிகள். பழங்குடிகள், பல்வேறு பாரத மண்ணின் மகத்தான மன்னர்களின் கொடைகள். ஆட்சித்திறம், நிகழ்கால மாவோயிஸ்ட் போன்ற கொடுமைகள். கற்பனைக்கு எட்டாத இயற்கையின் சிற்பங்கள், நிலவியல் காட்சிகள். மக்களின் மாண்புகள், பாரத பண்பாட்டின் கூறுகள், தர்மம், பல வகையான உணவு வகைகள் இவைகளைப்பற்றிய ஒரு கலவையான தொகுப்பாக இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இந்த பயணங்களின் போது என்னை வழி நடத்தியும், கற்பித்தும் பார்க்க கற்றுக்கொடுத்துக்கொண்டும் வந்த என் ஆசானும்,ஞான தகப்பனுமாகிய ஜெயமோகன் அவர்களை பணிந்து முன் செல்கிறேன்.
ஹத்திகும்பா கல்வெட்டும், பாண்டிய மன்னர்களின் தீரமும்:
பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக நான் ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வருக்கு அருகில் இருக்கும் கந்த கிரி, உதய கிரி என்ற இரட்டை மலைகள் உள்ள இடத்திற்கு சென்றேன். நெரிசல் மிகுந்த புவனேஸ்வரின் நகர்மையத்தில் இருக்கிறது. தமிழகத்தின் மிக மிக முக்கியமான பாரம்பரியத்தை, அரசாட்சியை ,மன்னர்களின் வீரத்தை பறை சாற்றும் சான்றாவணம் இது. நகரத்தின் பெரிய வளர்ச்சிக்கு நடுவே உறைந்து போன வரலாறாக நிலைத்து இருக்கிறது இது. இந்த இரட்டை மலைகள் குமரி பர்வதம், குமார பர்வதம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கலிங்கம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்று அவை ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.
சேதிபர்கள் என்ற சொல் குறிக்கும் அரச பரம்பரையை சேர்ந்தவராக காரவேலர் இருக்கலாம் என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் கருத்து . சேதிப குலம் என்பது மகாபாரதத்தில் சிசுபாலன் வம்சம். சேதிப மன்னர்களின் வாரிசுகள் கடையெழு வள்ளல்களில் இடம் பெறும் திருக்கோவிலூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த மலையமான்கள் . நெடுமான் அஞ்சியும், திருமுடிக்காரியும் நடு நாட்டு அரசர்கள்,சேதிகுலத்தோர். வரலாற்றால் பிந்திய இவர்கள் காரவேலனின் படையெடுப்புக்கு பின்பு தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தொடர்ந்த அரச வம்சமாக இருக்கலாம். இன்றும் தமிழக சாதிகளில் சேதிராயர் என்ற பட்டம் நாடார் மரபில் உள்ளது. நாடார்கள் சந்திர குலத்தவர்கள். சிசுபாலன் சந்திர குல மூத்தோன். பாண்டியர்களும் தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்தவர்கள். மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இவர்களின் சந்திர குல வமிசத் தொடர்புக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதிப அரசர் “மகா மேக வாகன காரவேலர் ” என குறிக்கப்படும் காரவேலர் தன் படையெடுப்பை பற்றியும்,திக் விஜயம் பற்றிய மெய்கீர்த்தியை குமரி பர்வதம், குமார பர்வத (இன்றைய கந்தகிரி- உதய கிரி) குன்றுகளில் உள்ள ஹாத்தி கும்பா பாறைக்குடைவுகளில் பிராகிருத மொழியில் ,பிராமி லிபியில் கல்வெட்டாக பொறித்திருக்கிறார். இது 17 வரிகளைக்கொண்ட ஒரு வரலாற்று மெய்கீர்த்தி ஆகும். இதில் தமிழகம் தொடர்பான 2 முக்கிய குறிப்புகள் உள்ளன. 11 ஆம் வரியில் உள்ள த்ரமிள தேச சங்காதம் என்ற குறிப்பு. எபிகிராஃபிகா இண்டியாவின் தேவநாகரி மொழி வடிவமும், ஆங்கில மொழி பெயர்ப்பும் –
”/11ம் வரி –
कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस
सत कतं भिदति *तमिर देह संघातं* [।।] बारसमे च वसे ….. वितासयति उतरापध
राजनो [ततो]
(L.11) ……………… And the market-town (?) Pithumda
founded by the King of Ava he ploughs down with a plow of asses, and
(he) thoroughly breaks up the Confederacy of the T [r] amira (Dramira)
Countries of one hundred and thirteen years, Which has been a source
of danger to (his) Country (Janapada). And in the twelfth year he
terrifies the kings of the Utarapatha with ………………
’தேரஸவஸ ஸதம்’ என்பது த்ரயோதசவர்ஷ சதம் என்பதிலிருந்து வந்ததாகலாம்.
த்ரயோதச சதம் –> பதின்மூன்று நூறு (1300)
த்ரயோதசம் + சதம் -> 100 + 13
இக்கூட்டணி நீடித்த காலத்தை 1300 ஆண்டுகள், 113 ஆண்டுகள் என
இருவிதமாகக் கருதுகின்றனர்.”
இதில் தேரஸ வஸ என்பது 113 ஆண்டுகளையே குறிப்பதாக சொல்கிறார் தமிழகத்தின் முக்கியமான மூத்த கல்வெட்டு ஆய்வாளரும்,தமிழ் அறிஞரும், மொழியியல் வல்லுனருமான திரு. எஸ்.ராமச்சந்திரன். 113 ஆண்டுகளாக நீடித்த த்ரமிர தேச மன்னர்களின் கூட்டணி தன் அரசாட்சிக்கும், மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாக எண்ணிய காரவேலர் அவர்கள் மீது படையெடுத்து வென்றதாக பதிவு செய்கிறார். இந்த கல்வெட்டின் ஆண்டு பொது ஆண்டுக்கு முன் 172 (கி.மு.172) அதாவது கி.மு.285 முதல் நீடித்து நிற்கும் த்ரமிள தேசத்து மன்னர்களின் கூட்டணி என காரவேலர் சொல்கிறார். மொழியின் அடிப்படையில் அமைந்த முதல் வரலாற்று கூட்டணி என இதை கொள்ளலாம். இந்த கூட்டணியைப்பற்றி பாரத தேசமெங்கும் விரவி நிற்கும் அசோகரின் கல்வெட்டுக்களில், “நான் சோடச பாண்ட்ய மன்னர்களை போரால் அல்லாமல் தர்மத்தால் வென்றேன்” என குறிப்பிடுகிறார். இதை நாம் போரினால் அல்லாமல் பெளத்த தம்மத்தை இங்குள்ள மக்களையும், மன்னர்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்ததன் மூலமாக வென்றதாக கொள்ளலாம். அசோகரோ, மெளரியர்களோ தமிழக மன்னர்களை வென்றதாக எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லை. சந்திர குப்த மெளரியரின் மகனான பிந்து சாரனோ (கி.மு.298 – 272) பிந்து சாரானின் மகனான அசோகனோ (கி.மு 268-232) வெல்லவே முடியவில்லை என பதிவு செய்கிறார்கள். பிந்து சாரனின் காலமும் தமிழகத்து மன்னர்களின் கூட்டணி அமைந்து வடவர்களை எதிர்த்து போரிட்டு வென்றதாக ஊகிக்கும் காலமும் கன கச்சிதமாக பொருந்தி வருவதை பார்க்கலாம். அப்போதைய மெளரியபேரரசு தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க விரவி இருந்தது (ஆதாரம் : மெளரிய பேரரசு:பிந்து சாரன் http://en.wikipedia.org/wiki/Bindusara). இது தொடர்பாக இலக்கிய சான்றுகள் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம்.
திருவிளையாடல் புராணத்தில் மெய் காட்டிட்ட புராணத்தில், வட புலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்ற கிராதர் கோமானை (கிராதர் என்று மலைக்குறவர்களை குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தை சேர்ந்த பாண்டிய படைத்தலைவன் சுந்தர சாமந்தன் எதிர் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. சாமந்தனுக்காக இறைவனே மாயம் நிகழ்த்திய கதை. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பானதாக இருக்கலாம் எனச்சொல்லும் ராமச்சந்திரன் சாரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பி.டி.சீனிவாச அய்யங்காரும் தன் ”History of the Tamils: From the Earliest Times to 600 Ad” நூலில் பாண்டியர்களின் செல்வ வளம் எப்படி அனைத்து மன்னர்களையும் ஈர்த்தது என்பது பற்றி குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னனின் செல்வ வளத்தையும், தான் பாண்டிய மன்னனிடமிருந்து பெற்று வந்த முத்துக்கள், ரத்தினங்கள்,பரல்கள் பற்றியும் ஹத்தி கும்பா கல்வெட்டில் 13 ஆம் வரியில் காரவேலர் குறிப்பிடுகிறார்.
13 ஆம் வரியில் குறிக்கப்படும் பிராகிருத பிராமியின் ஆங்கில மொழியாக்கம்.
(L. 13) …………….. (He) builds towers with excellent
interiors and carved Creates a settlement of a hundred Masons, giving
Them Exemption from land revenue. And a wonderful and marvelous
enclosure of stockade for driving in the elephants (he) …… and
horses, elephants, jewels and rubies as well as Numerous pearls in
hundreds (he) Causes to Be Brought here from the Pandya King.
பாண்டிய அரசனிடமிருந்து பெற்று வந்த யானைகள், குதிரைகள், நகைகள், மாணிக்கங்கள், முத்துப்பரல்கள் இவற்றை கொண்டு மிகச்சிறப்பான உள் தோற்றம் உடைய, பெரிய அரண்மனையை அலங்காரமாக ஏற்படுத்தினான். பணி செய்த சிற்பிகளுக்கும், கட்டுமான பணியாளர்களுக்கும் வரி விலக்கு அளித்தான். இதன் மூலம் கார வேலன் அறுதியிட்டு தெரிவிப்பது என்னவெனில் கி.மு. 285 லிருந்து 113 ஆண்டுகளாக நீடித்து வரும் பலமான தமிழ் தேச மன்னர்களின் கூட்டணியை வெற்றிகரமாக உடைத்து செல்வ வளம் மிக்க பாண்டிய மன்னரிடமிருந்து பெருமளவிலான முத்துக்களையும், ரத்தினம் ,மாணிக்கம் உள்ளிட்ட அரிய கற்களையும், யானை, குதிரை உள்ளிட்ட வளமான பெரும் பரிசில்களையும் பெற்று வந்து தன் சொந்த அரண்மனையை அலங்கரித்தான். இதில் காரவேலன் சொல்ல வருவது முதல் வரியில் நந்த வம்சத்தவர்கள் எடுத்து சென்ற ஆதிநாதரை மீட்டு வந்தது. பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது ஆகியவை தன்னுடைய மிகப்பெரிய சாதனைகள் என தெரிவிக்கிறார். தான் மெளரிய சக்ரவர்த்திகளை விடவும் முக்கியமான வெற்றிகளை ஈட்டியவன் என்ற பெருமையை கோருகிறார். மேலும் காரவேலன் அவத் (அயோத்தி) பிராந்தியத்துடன் போரிட படையெடுக்கிறான், ஆனால் அதற்கு முன் மகதத்தை ஆக்கிரமிக்க வரும் கிரேக்க டிமிட்ரியஸை எதிர்த்து போரிட்டு அவனை காந்தாரத்துக்கே பின் வாங்க செய்கிறான். (http://en.wikipedia.org/wiki/Kharavela ).ஆனால் தமிழ் தேசம் காரவேலனின் அரசாட்சியில் இல்லை . அதற்கு பதிலாக மிகப்பெரிய செல்வத்தை பரிசிலாக பெற்றுக்கொண்டு பாண்டிய அரசாட்சியையே தொடரச்சொன்னதாக கொள்ளலாம்.
இப்படி சொல்வதற்கு சங்க இலக்கிய சான்றுகள்,புறச்சான்றுகள், அகச்சான்றுகள், தொல்லியல் சான்றுகள் புராண சான்றுகள் உள்ளனவா? என்று பரிசீலிக்கலாம். கி.மு 172 கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாண்டியன் யார் என்பதை பற்றிய ஊகங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை குறிப்பதாக கொள்ளலாம்.
ஆரியப்படை கடந்த என்ற பட்டப்பெயர் ஆரியப்படையை சமாளித்த, எதோ ஒரு வகையிலான உடன்படிக்கை கொண்டு போரை தவிர்த்த என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாக கொள்ளலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் ”வடவராரியர் கடந்த நெடுஞ்செழியன் காலத்திய காவிய தலைவி தானே கண்ணகி”. சிலம்பு எழுதப்பட்டது பிற்பாடு என்றாலும் அது சுட்டுவது கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காலகட்டத்தையே எனக்கொள்ளலாம். மேலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மீனாட்சி புரம் தமிழ் கல்வெட்டு குறிப்பிடுவதும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத்தான். தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் தெளிவாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பற்றிய குறிப்புகளை கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கமாக எழுதி இருக்கிறார்.
மேலும் சங்க காலத்திற்கு முன் கோலோச்சிய தமிழ் பாண்டிய மன்னர்களின் வரலாறு மற்றும் அதன் சார்புடைய செய்திகள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் இண்டிகா எழுதிய மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டில் பெண் ஆட்சி புரிந்ததாக பதிவு செய்கிறார். மெளரியர் காலத்து அர்த்த சாஸ்த்திரத்தில் பாண்டிய கவாட முத்து என்ற சிறப்பு குறிப்பு உள்ளது. “பாண்டிய நாடு முத்துடைத்து“ என்ற குறிப்பை நினைவில் இருத்திக்கொள்ளலாம். கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அசோகர் கல்வெட்டில் தான் வெற்றி பெற முடியாத மன்னர்களின் பெயர்களை குறிப்பிடுகையில் பாண்டிய(பாண்ட்ய), சோழ (சோட), சேர (கேரளபுத்ர),சத்ய புத்ர என குறிக்கிறார். சங்க இலக்கியத்தில் மெளரியரின் படையெடுப்பை பற்றிய குறிப்பு இருக்கிறது. மெளரிய பிந்து சாரனின் படையெடுப்பு மற்றும் சாம்ராஜ்ய விஸ்தீரணத்திற்கு எதிரானதாகவே த்ரமிர தேச தமிழ் மன்னர்களின் கூட்டணி ஏற்பட்டிருக்கும் என ஊகிக்க இடமளிக்கிறது. திணை கோட்பாடு, தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்.வரலாற்று தொடர்ச்சியை அறிவதற்கு பாரதத்தின் தொன்மையான பல்வேறு இனக்குழுக்களையும்,மொழிகளையும் அவர்களின் புலப்பெயர்வையும் பரவலையும் நுணுகி ஆராய்தல் மிக முக்கிய தேவையாகும். 1820 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் ஆய்வாளரான A.STIRLING இந்த கல்வெட்டை கண்டு அறிந்தார்.பின்னர் 1878ல் கன்னிங்ஹாம் இதனை பிராகிருதத்திலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பதிப்பித்தார். ஆனால் இன்று வரை தமிழுக்காக உயிரை கொடுப்பேன் என்று முழங்கும் திராவிட கட்சியினர் இது பற்றி அறியாமல் வழமை போல் மூடப்பதராக இருக்கிறார்கள். ஹாத்திகும்பா எனும் யானைக்குகையின் கல்வெட்டுக்கள், பாரத வரலாற்று ஆபரணத்தில் மிளிரும் ஒரு வைரம் என்ற பெருமிதத்தோடு மேலும் அது தொடர்பான குகைகளையும், குடை வரைகளையும் பார்க்க சென்றேன்.
(தொடரும்…,)
மேலதிக விபரங்களுக்கு:
http://www.jeyamohan.in/?p=34044
http://www.sishri.org/kurinji.html
http://asi.nic.in/asi_publ_epigraphical_indica.asp
http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription
http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf
http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html
http://en.wikipedia.org/wiki/Early_Pandyan_Kingdom#Epigraphical_sources
http://www.amanushyam.in/2012/10/blog-post_7724.html
http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm
http://www.dinamalar.com/General_detail.asp?news_id=10459
http://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=397