இன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்

சிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். சிரவணன் ஒரு சிறுவன். கண் தெரியாத தனது தாய் தந்தையரை தராசு போன்ற ஒரு காவடியில் வைத்து எங்கும் தூக்கிச் செல்லுவான். ஒரு நாள் அந்த காவடியை இறக்கி வைத்து விட்டு தண்ணீர் மொள்ள செல்கிறான். அப்போது அங்கு வேட்டைக்கு வந்த தசரத சக்ரவர்த்தி இவன் குடத்தில் தண்ணீர் மொள்ளும் சத்தத்தை கேட்டு, ஏதோ விலங்கு தான் என்று அந்த திசையில் அம்பை எய்ய, அது சிரவணனை தாக்கி விடுகிறது. ஐயோ என்ற அவன் குரல் கேட்டு தசரதன் ஓடிச்சென்று பார்க்க, மானிற்கு பதில் ஒரு சிறுவன் கிடக்கிறான். அவனைத் தூக்கி மடியில் கிடத்தி மன்னிப்பு கோரும் போதும், ”என் தாய் தந்தையர் கண்ணிரண்டும் தெரியாதவர்கள். அவர்களை நீங்கள் காக்க வேண்டும். அதோடு இந்த நீரையும் அவர்களுக்கு கொடுங்கள்” என்று கூறி சிரவணன் இறந்து விடுகிறான். தசரதன் சென்று அவர்களை பார்க்க, அப்போது அவர்கள் மகன் இறந்த செய்தி கேட்டு இது போல நீயும் மகனை பிரிந்து துன்ப படுவாய் என்று சாபம் கொடுக்கிறார்கள். தாங்களும் உயிர்விடுகிறார்கள்.

After a first treatment, the dog should be monitored regularly by the veterinary staff. This drug should be used cautiously in children and generic clomid over the counter Volla patients with kidney failure or who have severe liver disease. These supporters may not necessarily support the candidate if the candidate does not get elected, but they may change their support to the candidate if his performance becomes better.

Priligy is an anesthetic which is used for various procedures. The generic equivalent of this drug is the brand name of dapoxetine, which generic clomid over the counter Mount Clemens is available in many different types in the united states of america. Cipro is an antibiotic drug used for the treatment of viral infections.

Do not use more than one dose per day, unless your doctor approves in writing. If you experience a lump in harassingly your breast, or a painful or itchy breast that has changed in shape, you may be experiencing breast cancer. You are going to have to tell your doctor about it.

ராமன் காடேகியதின் காரணமாக இந்த கதை சொல்லப்படுவதுண்டு. இந்த இடம் உத்தர பிரதேசத்தின் காசிப்பூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது . அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் நடந்து இது பொய்யல்ல என்று நிரூபித்துள்ளது.

ஒரிசாவின் மயூர்பன்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் சிங். ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் மேல் மொராடா காவல்நிலையம் ஒரு வழக்கு பதிவு செய்து 18 நாள் சிறையில் வைத்து விட்டது. அது ஒரு பொய் வழக்கு என்பது இவரின் குற்றசாட்டு. அந்த வழக்கினால் இவர் ஊர்க்காரர்கள் இவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள். அதோடு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இவருக்கு சொந்த நிலமேதும் இல்லை. வேறு ஊர்களுக்கு வேலை தேடி செல்லவும் முடியாது. ஏனென்றால் வீட்டில் வயதான பெற்றோர் இருக்கிறார்கள். இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார் தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக. தன் பெற்றோரின் வாழ்நாளிலேயே தன் மீதான குற்றம் களையப்பட்டு அவர்கள் அதை அறிய வேண்டும் என்பதே தன் அவா என்றும் தெரிவித்திருக்கிறார்.

கொடிய வறுமை. வறுமையிலும் நேர்மை. அதிலும் தாய் தந்தையர் மேல் பக்தி. புராண கதைகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை அல்ல. நிகழ்காலத்திலேயே அதற்கு நிகரான சம்பவங்கள் அனைத்தும் நடக்கின்றன. அவற்றில் சில புராணங்களில் வரும் சம்பவங்களை காட்டிலும் உருக்கமானவை, மனதை பிசைபவை.

இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும் பேராசைக்காரர்களும், திருடர்களும், கொள்ளையர்களும், பணப்பேய்களும் மலிந்துவிட்ட காலத்தில் கூட கடந்த காலத்தின் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வைராக்யம் தான் இதை இன்னும் கவசம் போல காத்திருக்கிறது என்றால் மிகையல்ல.

செய்தி இங்கே.

(ஆர்.கோபிநாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது) 

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3


<< முந்தைய பகுதி

ன் பயணங்களின் நோக்கம் சேரும் இடங்களையோ, பார்க்கும் இடங்களையோ பற்றி சிலாகிப்பதும் அதன் வரலாறு, முக்கியத்துவம் இவற்றை சொல்வது மட்டுமன்று. இந்த பயணம் தான் நான் சொல்ல விரும்பும் செய்தி. இந்த பயணம் எனக்கு அளிக்கும் தரிசனம். என் மனச் சித்தரிப்புகளை, என் நம்பிக்கைகளை மாற்றுவதற்கு, உதறி கலைத்து நெசவு செய்வதற்கு, இந்த தேசத்தின் அகத்தையும், புறத்தையும் உணர்வதற்கு என் ஆசானால் வழிகாட்டப்பட்ட ஆப்தம் தான் இந்த பயணம். வித விதமான மனிதர்கள், வித்யாசமான நிலவியல் அமைப்புகள், வேறுபட்ட பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், கடவுள்கள், வழிபாட்டு முறைகள், மொழிகள், இன்னும் எத்தனையோ முரண்கள். ஆனாலும் இவர்களை என்னுடன் இணைக்கும் இழை என்பது கண் கூடாக தெரிகிறது. தென்னாடுடைய என் சிவன் இவர்களுக்கும் கருணை செய்கிறான். ஞானப்பால் கொடுத்த என் தாயார் பார்வதியின் அருள் இவர்களுக்கும் மேன்மையை அளிக்கிறது. கோகுலத்து கண்ணனும், சீதா ராமனும் இவர்களுக்கும் உயிருக்கு மேல். சிலர் ஏசுவையோ, முகமது நபியையோ, இன்னும் தெரியாத யார் யாரையோ வணங்குகிறார்கள். அவர்களுக்கும் என் ஈசனும், ராமனும் கருணையை அமுதமாக்கி பொழிகிறார்கள்.

hindu_fair_girls_performing_homamஒரு மிக சாதாரண இந்துவான என்னுடன் இவர்கள் அனைவரையும் இணைக்கும் இழையாக உயர்ந்த இந்து தர்மமே இருக்கிறது. இந்த தர்மம் என்பது எப்படி ஒரு வாழ்க்கை முறையாக, வேள்வியாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டே இருந்தேன். இந்து தர்மம் என்பது ஒரு மகா யக்ஞம். அதற்கு தெரிந்தும் தெரியாமலும் ஒவ்வொரு பாரத தாயின் புதல்வர்களும் பங்களித்துக் கொண்டே இருக்கிறார்கள். தாங்கள் இடும் பிச்சையால், பசித்த தாவரத்திற்கு ஊற்றும் நீரின் மூலமாக, தேவைப்படும் குழந்தைக்கு கொடுக்கும் கல்வியின் மூலமாக, அன்னமிடுதல் மூலமாக, அமைதியான வாழக்கை முறை மூலமாக, நேர்மை நெறியின் மூலமாக, விருந்தினரை போற்றுதல் மூலமாக, அன்னை தந்தையை நேசிப்பதன் மூலமாக, அறத்தோடு வாழ்வதன் மூலமாக, தர்ம யக்ஞத்திற்கு நாளும் நாளும் தன் செயல்கள் மூலமாக நெய் வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மகா யக்ஞம் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன் காரியங்களாலும், தன் தர்மத்தாலும் ஒரு சாதாரண இந்து தன்னை மேலும் மேலும் தூய்மைப் படுத்தி கொள்கிறான். இதை அறிந்தும் அறியாமலும், உணர்ந்தும், உணராமலும் அனைவரும் செய்கிறார்கள். இது இந்த தர்மத்தை என்றும் பூமியில் நிலைத்திருக்க செய்யும் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைத்திருக்கிறது.

என் பயணங்களுக்கு முன்னால் எனக்கு சில பயங்கள், கவலைகள் இருந்தன. இவ்வளவு காலம் கட்டி காப்பாற்றப்பட்டு வந்த தர்மம், பண்பாடு இவை எல்லாம் கட்டாய மத மாற்றங்களாலும், அழுகிப்போன சில மூட சிந்தனைகளாலும் அழிக்கப்பட்டு போய்விடும் என்றும், நம் தர்மம் இன்னும் கொஞ்ச நாளில் அழிந்து விடுமோ என்றும். நாம் ஏன் இப்படி வாளாவிருக்கிறோம். இந்து மதத்தை காக்கவென்று தனிப்பட்ட படைகள் கூட இல்லையே என்றெல்லாம் மனம் நொந்து விரக்தியில் இருந்திருக்கிறேன். என் ராமனை, கிருஷ்ணனை, ஈசனை , சரஸ்வதியை இழிவு செய்கிறவர்களை எந்த விதத்திலும் நம் பெரியவர்கள், சிந்தனை வாதிகள், முன்னோடிகள் யாரும் ஒன்றும் திட்டவே மாட்டேன் என்கிறார்கள். இவர்களை யாரும் தண்டிக்கவே மாட்டார்களா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முக்கியமான அமைப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இதை பற்றி கேட்டால் அமைதியான புன்சிரிப்பை உதிர்த்து விட்டு ராமனுக்கும், சிவனுக்கும் நாம் செய்யும் உண்மையான அன்பு என்பது மானுட சேவை தான் என்று சொல்லி விட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுகிறார்கள். பெரிய படிப்பு எல்லாம் படித்து விட்டு பழங்குடி கிராமங்களில் குழந்தைகளுக்கு கல்வி போதிக்க வனவாசி கல்யாண ஆசிரமத்திற்கு போகிறார்கள். ஆனால் அவர்கள் திக திமுக பாணி கீழ்த்தரமான மன வக்கிர வெளிப்பாடுகளை ஏன் கண்டிப்பதில்லை? கிறிஸ்ததவ மிஷனரிகள் போல சின்ன அளவில் காரியம் செய்து விட்டு பெரிய அளவில் விளம்பரமும் செய்து கொள்வதில்லை? இப்படித்தான் இந்த ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், வனவாசி கல்யாண ஆசிரமம், விவேகானந்தா கேந்திரா போன்றவை ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருக்கிறேன். அதற்கு விடை என் பயணங்களில் கிடைத்தது. காலம் தோன்றி, உயிரினங்களும், தாவர இனங்களும் தோன்றி அதற்கு அறிவின் முதல் வெளிச்சம் பட்ட நாள் முதல் இருக்கும் வாழ்க்கை முறையான இந்து தர்மத்தை நிச்சயம் யாராலும் அழிக்க முடியாது. இது ஒரு நீடித்த வேள்வி. மிகப் பெரிய யக்ஞம். காலத்தையே தனக்கான குண்டமாக கொண்டு எரிந்து வருகிறது. இதை நம்மால் காப்பாற்றவோ,வளர்க்கவோ முடியாது. மானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன.

புவனேஸ்வரின் கந்தகிரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு ஒரிஸ்ஸாவின் மாபெரும் கலை அற்புதமான கோனார்க்கின் சூரியனார் கோயிலை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். புவனேஸ்வர் இப்பொழுதெல்லாம் மிகவும் நெருக்கடியான ஒரு நகரமாக மாறி விட்டது. உயர்ந்த கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், சாலையை அடைக்கும் வாகனப் பெருக்கங்களால் மூச்சு திணறுகிறது . மற்ற இந்திய நகரங்களைப் போலவே அபரிமிதமான வளர்ச்சியை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்வில் செழுமையை கொண்டு வந்திருக்கிறது . இந்தியப்பெரு நகரங்களுக்கிடையே வித்யாசங்களை கண்டு பிடிப்பதே இன்னும் சிறிது காலத்தில் கடினம் என்றே நினைக்கிறேன். எல்லா பகுதி மக்களும் காணக்கிடைக்கிறார்கள். பாரதத்தில் புழங்கும் பல மொழிகளும் இங்கே கேட்க கிடைக்கின்றன. புவனேஸ்வரிலிருந்து 65 கிலோ மீட்டரில் உள்ள புகழ்பெற்ற கோனார்க் நகரை அடைந்தேன். இனிமையான, எளிய ஒரிய மதிய உணவை முடித்து கொண்டு கோவிலை நோக்கி விரைந்தேன். தூரத்தில் இருந்தே காணக்கிடைக்கும் திராவிட பாணி விமானம் தான் என் முதல் ஆச்சரியம். ஆனால் இதை பற்றி எழுதும் அனைவரும் இது கலிங்க பாணி என்றே குறிக்கிறார்கள் இதில் திராவிட பாணியின் அடிப்படை அறிவு வேரோடி கலந்து கிடைக்கிறது. திராவிட பாணி விமானத்தில் நான்கு பக்கம் என்பது ஒரு அடிப்படையான சிந்தனை (basic idea).உதாரணமாக காஞ்சிபுரம் கைலாச நாதர் கோவில், கர்னாடகவின் பட்டடக்கல் விருபாக்‌ஷர் ஆலயம், தஞ்சை பெரிய ஆவுடையார் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் உள்ளிட்ட காலத்தால் முற்பட்ட ஆலய பாணி விமானமே சூரியஷேத்திரத்தின் மூல விமான பாணி.

Konark_Sun_Temple_11087

அதன் உச்சி கலசம் (key stone) பன்னிரண்டு வயது தர்ம பாதாவால் நிலை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தலைமை சிற்பியான பிக்‌ஷி மகராணா கோயில் மீதிருந்து குதித்து கடற்கரையில் உயிர் நீத்ததாக தொன்மம் நிலவுகிறது. இந்த முறையிலான விமான மேல்புறம் திராவிட மற்றும் வேசர பாணியின்  தனி சிறப்பு பெற்ற கலவை என்றே கூறலாம். கைலாச நாதர் ஆலயமும்,தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழ புரம் மட்டுமின்றி எல்லோராவில் உள்ள கல் குகையில் உள்ள கைலாச நாதர் ஆலயத்தின் விமானத்திலும் இந்த திராவிட பாணியின் தாக்கத்தைக் காணலாம். காந்தார சிற்பிகள் எவ்வளவு சிறப்பு பெற்றிருந்தார்களோ, அவ்வளவு சிறப்பை திராவிட சிற்பிகளும் பெற்றிருந்தார்கள். வேசர பாணி விமானங்களும், நாகரா பாணி விமானங்களும் மத்திய பாரதம் மற்றும் வடக்கு பகுதிகளை ஆட்சி செய்யும் விமானங்கள். நான் சென்றிருந்த ஜனவரி21 ம் தேதி உலகம் முழுக்க இருக்கும் சூரிய வழிபாட்டு மரபினர் தங்கள் பிரார்த்தனைகளை சூரியனிடம் தெரிவிக்க கோனார்க்கில் கூடுகிறார்கள். பெரிய அளவில் பிரார்த்தனைகளும், ஆராதனைகளும் வெளி எங்கும் நிறைந்திருந்தது. சூரிய வழிபாடு என்பது இன்று முழுக்க முழுக்க இந்து மதத்தின் ஒரு அங்கமாக மாறி விட்டது. ஆனால் செளரம் என்ற வழிபாட்டு முறை தனித்துவம் மிக்கது. ஆதி சங்கரர் தொகுக்கும் முன் செளர வழிபாடு மிகவும் செல்வாக்காக உலகம் முழுதும் நீடித்து இருந்து வந்திருக்கிறது. எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களிலும், மாயன், அஸ்டெக், சுமேரிய நாகரீகத்திலும் சூரியக் கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. இன்றும் உலகம் முழுக்க சூரிய வழிபாடு இருந்த ஆலயங்கள் இருக்கின்றன. இதைப்பற்றி பின்னால் சொல்கிறேன்.

கோனார்க்கின் இந்த சூரிய க்ஷேத்திரம் பொ.பி. 1238-1264 ல் ஆட்சி புரிந்த கீழை கங்க மன்னர் நரசிம்ம தேவரால் கட்டப்பட்டது. 12 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1200 க்கும் மேற்பட்ட சிற்பிகளின் மேலான கலை வெளிப்பாடு இது.

Wheel_of_Konark,_Orissa,_India

கோயிலின் அமைப்பு என்பது ஒரு மிகப்பெரிய காலம் எனும் தேரில் பவனி வரும் சூரிய தேவன். ஏழு குதிரைகளும், 24 சக்கரங்களும் கொண்ட காலம் எனும் தேரில் பாய்ந்து பயணிக்கும் சூரியன். அவனுக்கு காலத்தால் அழியாத இசையாலும், கலையாலும் அர்ப்பணமும் அஞ்சலியும் செலுத்தும் முன்புற நாத மண்டபம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். பல்வேறு விதமான இசைக் கருவிகள், வேறு வேறு விதமான தாளகதிகள், அனந்த கோடி நடன மங்கைகள், ஆயிரம் ஆயிரம் நடன முத்திரைகள். போர் காட்சிகள், பிரமிக்க செய்யும் யானைகள், கானகங்கள் , இயற்கை அமைப்புகள், எல்லாமே காலத்தை இல்லாமலாக்கும் காட்சிகள் தான். அனந்த கோடி நிகழ்வுகளின் நடனமே காலம் எனும் தேரை செலுத்துகின்றன என்பதான சித்திரமாக இது இருக்கிறது. இந்த நடன மாதரசிகளின் களி நடனமும், இசையும் காலத்தை நகர்த்துகிறது. காலங்காலமாக இந்த பெரு நடனம் முடிவில்லாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. காலச்சக்கரங்களாக கடிகாரங்களையும் பலவிதமான  நாட்டிய ,இசை சிற்பங்களையும் சக்கரத்தில் வடித்து காலத்தேரின் ஓட்டத்திற்கு துணை செய்வதாக உருவகித்திருக்கிறார்கள். இந்த பிரபஞ்ச லீலை காட்சியாக கருக்கொண்டு உயிர் பெற்றிருக்கிறது.

சூரியன் படைப்பின் கடவுள். போகம் படைப்பின் கருவி . சிருங்காரத்தின் வழியாக மானுட மனங்கள் போகம் எனும் நிலையிலிருந்து படைப்பு எனும் மேலான ஆக்கத்திற்கு பயணம் செய்கிறது. அதனின்றும் தாண்டி படைப்பின் வழியாகவே இறை நிலையை அடைவதாகவே இவை சித்தரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் மானுட மனத்தின் உச்ச இறை நிலையை அடைவதற்கான குறியீடுகளை விளக்குவதற்காக குறிக்கப்பட்டு நமக்கு சொல்லப்படுகின்றன. போகத்தில் ஈடுபட்டிருக்கும் மனிதர்கள் மெய் மறந்து ஆழ் நிலையில் பிரமித்து உறைந்து போனவர்களாகவும், உற்சாகத்தில் பொங்கி கொப்பளித்து பிரவாகித்து வரும் காமக்கடும் புனலால் செலுத்தப்பட்டு கொண்டிருப்பவர்களாக நிலை பெற்று இருக்கிறார்கள்.

konark01மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள். மலர் சூடும் மங்கைகள், ஒப்பனையை சரி பார்க்கும் இளம் பருவ தோழிகள், சதங்கைகளை ஒயிலாக சரி செய்யும் நடன மணிகள். தன் இணையின் அழைப்பிற்கு திரும்பி பார்க்கும் தேவிகள். நீரில் முகம் பார்க்கும் அரசிகள். நுணுக்கத்தின் இலக்கணமாய் அவர்களின் ஆபரணங்கள். ஆடைகளின் மடிப்புக்கள், பல்வேறு வகையான நடன , நாட்டிய சாத்திய கூறுகள் . இசைக்கருவிகளுடன் தோன்றும் கின்னர்கள், யட்சர்கள், அடர் கானகங்கள், மனதை கொள்ளை கொள்ளும் யானைகள். யானைகளின் அணிவகுப்புக்கள். யானைக்கூட்டங்கள், யானைகளின் ஆபரணங்கள், யானைகளின் மீதான போர் சாத்தியங்கள். யானைகளின் வித்யாசமான நடைகள், ஓட்டங்கள், வேறுபட்ட துதிக்கை நிலைகள். யானைகளின் மீது பெரும் மோகம் கொண்டு யானையாலேயே உலகத்தையே நிறைக்க வேண்டும் என்ற ஆவேசத்தோடு செய்யப்பட்ட சிற்பங்கள்.

இந்த யானைகளின் மீதான மோகத்தை சாதாரணமாக ஆந்திராவிலிருந்து ,ராஜஸ்தான் வரை அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கண்டு கொண்டே செல்லலாம். அவ்வளவு யானைகள் நம் வனங்களை அலங்கரித்திருக்கின்றன. ஒவ்வொரு கோவிலுலும் மிகக்குறைவாக ஒரு 10 ஆயிரம் யானைச் சிற்பங்களையாவது காணலாம். அவ்வளவு நுட்பமாகவும் , அழகாகவும் நிஜ யானைகள் இறங்கி வந்ததை போன்ற தத்ரூபத்துடன் காணப்படும். அதுவும் விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. இதில் எல்லாமும் திருப்தி அடையாமல் வெளியே நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாகவே மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம் .

kon3கோவிலின் 20 அடி உயர முதல் அடித்தளத்தின் மேல், கீழ் பேனல்கள் போர் சித்தரிப்புகளாகவும், யானை அணிவகுப்பாகவும் இருக்கிறது. இடையில் ஆயிரக்கணக்கான இசைக்கச்சேரிகளும், நடன கச்சேரிகளும், நடன அரங்கேற்றங்களும் அரங்கேறுகிறது . திருப்பங்களில் வித்யாசமான சிருங்கார சிற்பங்கள், வித விதமான யாளிகள், குட்டி யானைகள். வித்யாசமான பூமிக்கும் ,ஆகாயத்திற்கும் இடையே நீளும் தோரண அலங்காரங்கள். சிறிய நுணக்கங்களோடு பல்வேறுபட்ட தாவர, செடி, கொடிகளின் கலந்து பட்ட ஆகச்சிறந்த சாத்தியங்கள். ஒரே நேரத்தில் நடக்கும் மாபெரும் பிரபஞ்ச லீலையின் நடன அசைவுகளை கைப்பற்றி அவற்றை சிற்பங்களாக வடித்து நிறுவ  நடந்த முயற்சியாகவே இது தெரிகிறது. அப்புறம் குறிப்பிட்டு சொல்லும் படியானவை நாகர்கள், நாகர் உலக தொன்மங்கள், விதவிதமான நாகலோக மனிதர்கள், நாக கன்னிகைகள். அவர்களின் இசை முயற்சிகள், தாள உத்திகள், நடனங்கள், நாக கன்னிகளின் அபிநயங்கள்,  நாகமாக மாறி பின்னி பிணைந்து முயங்கும் படைப்பின் அற்புதங்கள் .

konark_lion_killing_elephantசில இடங்களில் தலை காட்டும் ஒட்டகங்கள் . அரண்மனை புறப்பாடுகள். உப்பரிகையில் தோன்றும் கன்னிகள். கூட்டாக கலவியில் லயிக்கும் சிற்பத்தொகுதிகள் என பார்க்க பார்க்க புதிது புதிதுதாக துலங்கிக்கொண்டே இருக்கும் ஆச்சரிய அற்புதம் தான் இதன் கீழ் தொகுதி முழுவதும். அடித்தளத்தின் முன்புறம்  யானையை வெற்றி கொண்டு தாவும் சிம்மம். இது கலிங்கர்களின் போர் வெற்றியை குறிப்பதாக இருக்கலாம்.

ஒரு 40 அடி அலங்கார படிகளை கடந்து மேலேறினால் வானத்திற்கும் , பூமிக்குமாய் உயர்ந்து நிற்கிறது சூரிய ஆலயம். நான்கு திசைகளிலும் ஏழு வண்ணங்களை, ஏழு நாள்களை, ஏழு ஸ்வரங்களை, ஏழு ரிஷிகளை, ஞானத்தின் ஏழு படி நிலைகளை, மெய்மையின் தரிசனத்தை, ஏழு உலகங்களை, ஏழு பிறவிகளை, ஏழு கடல்களை, ஆட்சி செய்யும் சூரியன் காலத்தின் தேரில் ஏறி விரைவதை சித்தரிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன. இதன் சிதைந்த தன்மை நமக்கு சொல்ல விழைவது இது இன்னும் சொல்ல வரும் பிரபஞ்ச உண்மைகளை நோக்கி நம்மையும் முயற்சிக்க சொல்கிறது. அதற்கு மேல் திராவிட கலிங்க பாணி விமானம்.

konark2கோவிலில் பல ஆண்டுகளாக சூரிய வழிபாடு நடை பெறுவதில்லை.  ஆனால் நான் சென்றிருந்த பொழுது பெரும்பாலும் மஞ்சள் உடையுடனும், செம்பட்டாடையுடன் சிலரும் உக்கிரமான மன எழுச்சியோடும், உணர்வோடும் ஆலயத்தை வலம் வந்தனர். சில ஆச்சர்ய கரமான செய்கைகளை வானத்தை நோக்கி செய்தனர். அனைவரும் கோஷமிட்டனர். வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த, மூடப்பட்டிருந்த மூலஸ்தானம் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.  உணர்வு பூர்வமாக அவர்கள் சூரிய தேவனை அங்கேயே தரிசித்து விட்டு அவருக்கான படையல்களையும் செய்தனர். தங்கள் பிரார்த்தனைகளையும் , நன்றியையும் தெரிவித்து விட்டு முழு அமைதியுடன் திரும்பி நடந்தனர். அவர்களுக்கு இந்த சிலைகளோ, சிற்பங்களோ, சிருங்காரமோ எதுவும் பாதித்ததாக புறப்பார்வைக்கு தெரிய வில்லை. ஆனால் அவர்களின் அகம் சூரியனையும், இந்த இதர தத்துவங்களையும் உள்வாங்கி உணர்ந்தே இருக்கும் என்று தோன்றுகிறது. நமக்கெல்லாம் புரிந்தும், உணர்ந்தும் இருக்கும் தத்துவங்கள் அவர்களுக்கு ஆழ் மனக்குகையின் வேறு ஒரு தளத்தில் துலங்கி வேறு ஒரு விசித்திரமான பொருளை அவர்களுக்கு உணர்த்தலாம். இல்லாமல் மேலான எளிய உண்மையை கூட அவர்களுக்கு தெரிவித்திருக்கலாம். இந்து பாரம்பரியத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த வாழ்க்கை முறையே ஒரு ஆச்சரிய கரமானதும், புதிர்த் தன்மை வாய்ந்ததும், ஆழமானதும் அதே நேரத்தில் எளிமையை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிசயம் .

ஏராளமான சுற்றுலா பயணிகளாலும், யாத்ரீகர்களாலும் கோவில் ததும்பிக்கொண்டே இருக்கிறது. செம்மை ஏறிய இந்த சிற்பங்கள் அபாரமான மன எழுச்சியையும் ஆனந்த கண்ணீரையும் வரவழைத்து கொண்டே இருக்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது இதன் வடிவம் ஒரு விதமான சித்திரத்தையும் பிரமிப்பையும் அளிக்கிறது. பின் சிறிது அருகில் வரும் போது அதன் பிரமாண்டமும், தோற்றமும், நிறமும், இயற்கை ஒளியில் அது மின்னும் தோரணையும் ஒரு விதமான காட்சி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் அதன் உச்சம் அருகில் வரும் போது அதன் சிற்பத்தொகுதிகளும், நடனங்களும் ஏற்படுத்தும் மன மகிழ்ச்சி . இதை கண்டு ஆனந்திக்கும் , வெட்கப்படும் , ஆச்சரியப்படும் சக மனிதர்களை பார்க்கும் போது ஒரு மகிழ்வு. இதன் நுணக்கங்கள் விதைக்கும் ஆச்சரியங்கள். யானைகளின் விளையாட்டு ஏற்படுத்தும் துள்ளல், யானைகளின் சித்தரிப்புகள் தரும் புன்சிரிப்புடன் கூடிய குதூகலம். அத்தனையும் ஆச்சரியம். இந்திய தொல்லியல் துறைக்கு ஒவ்வொரு இந்தியனும் கடன் பட்டிருக்கிறான். அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி. பாரதிய பாரம்பரியத்தில் நிவந்தங்கள் அளிக்கும் போது சந்திரர், சூரியர் உள்ள வரை இவை தொடர வேண்டும் என்றும், சாவா ஆடுகள் என்றும் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த படைப்புகள் எனக்கு அப்படியே தான் தோற்றமளிக்கின்றன. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பி 800 வருடங்கள் கழிந்தும் காலம் தெரியாமல் ஏதோ ஒரு கால வெளியில் பார்க்கும் ஒருவனுக்கு தன் அபாரமான படைப்பூக்கத்தால் மகிழ்ச்சி ஊட்டுவதற்காக செய்தவை இந்த நிவந்தங்கள்.

கால வெளியில் அவன் படைப்பூக்கத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் அழிவே இல்லை.

பயணம் தொடரும்…

rajamanickam_veera

 

கட்டுரை ஆசிரியர் வீர.ராஜமாணிக்கம் திருப்பூரைச் சேர்ந்த கட்டுமானப் பொறியாளர். தமிழக பா. ஜ.க இளைஞரணி செயலர்களில் ஒருவர்.

தமிழ் மரபு, சைவ சித்தாந்தம், வரலாறு, கலாசாரம், பயணங்கள் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். தீவிர இலக்கிய வாசகர். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

பாரத தரிசனம்: நெடும்பயண அனுபவம் – 1

இன்று (பிப்ரவரி 21) உலகத்தாய்மொழி தினம். தமிழன்னையை வணங்கிப் பணிந்து இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.

கார வேலர் கல்வெட்டும், தமிழ் மன்னர்களின் விவேக கூட்டணியும்..

என் தேசத்தின் சகல பரிமாணங்களை உணரவும், இதன் கலாச்சார பன் முகத்தன்மையை தரிசிக்கவும், வளமான இந்த ஞான விளை நிலத்தின் விரிவை உள்வாங்குவதற்காக பாரதத்தின் சகல பகுதிகளுக்கும் சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் , கால் நடையாகவும் பயணித்து உணர்ந்த என் அனுபவங்களை இனி வார வாரம் பாரத தரிசனம் என்ற வகையின் கீழ் பதியத் துவங்குகிறேன். கடந்த ஒராண்டில் ஏறத்தாழ 23,500 கிலோமீட்டருக்கும் மேல் பாரதம் முழுக்க என் பயணம் விரிந்தது. இதன் கலாச்சார வளமையும், நாகரீகமும், தொன்மையும், அறிவு செழித்து பல்கி பெருகி விரிந்த இடங்களையும், இயற்கை அன்னையின் பெருங் கருணையையும், பண்பாட்டு உச்சங்களையும், கவின் கலையின் பிரமிப்புகளையும், வரலாற்றுத் தடங்களையும், தருணங்களையும், மட்டுமின்றி பாரதத்தின் ஒருமித்த பேருருவை கண்டடைந்த பெருமித கணங்களை பதியத்துவங்குகிறேன். ”ஒன்று தான் நம்ம நாடு ஒன்று தான் என் பாரத நாடு” என்று மனப்பூர்வமாக உணர்ந்த  நிகழ்வுகளை உங்கள் முன் வைக்கிறேன்.

DSC01409

இந்த தேசத்தின் ஞான கொடைகளான சமணமும், பெளத்தமும் தழைத்தோங்கிய பகுதிகளிலும், அறிவும், ஆன்மீகமும் , ஞானமும் பெருக்கெடுத்து ஓடிய புண்ணிய இடங்களிலும் ஞானம் முகிழ்ந்து மணம் பரப்பிய விகாரங்கள், பல்கலைகள் , குடைவரைகள் மாபெரும் பெளத்த கல்வி நிறுவனங்கள் அருகர்களும், ததாதகரின் வழி வந்தவர்களும் சென்ற வழி தடத்திலும் பயணித்த என் அனுபவங்கள் மறக்க முடியாதவை.

இந்த தேசத்தின் கலாச்சாரத்தை அழித்து பெரும் நாசங்களை விளைவித்த இஸ்லாமிய கொள்ளையடிப்புகள், பேரழிவுகள். மானுட குலத்தின் மகத்தான நுண்கலை சிற்பங்கள், படைப்பின் உச்சகட்ட வெளிப்பாடுகள். இயற்கையின் உன்னதமான காட்சி அனுபவ சாட்சிகள். பழங்குடிகள், பல்வேறு பாரத மண்ணின் மகத்தான மன்னர்களின் கொடைகள். ஆட்சித்திறம், நிகழ்கால மாவோயிஸ்ட் போன்ற கொடுமைகள். கற்பனைக்கு எட்டாத இயற்கையின் சிற்பங்கள், நிலவியல் காட்சிகள். மக்களின் மாண்புகள், பாரத பண்பாட்டின் கூறுகள், தர்மம், பல வகையான உணவு வகைகள் இவைகளைப்பற்றிய ஒரு கலவையான தொகுப்பாக இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். இந்த பயணங்களின் போது என்னை வழி நடத்தியும், கற்பித்தும் பார்க்க கற்றுக்கொடுத்துக்கொண்டும் வந்த என் ஆசானும்,ஞான தகப்பனுமாகிய ஜெயமோகன் அவர்களை பணிந்து முன் செல்கிறேன்.

ஹத்திகும்பா கல்வெட்டும், பாண்டிய மன்னர்களின் தீரமும்:

udaya02பாரத தரிசனத்தின் ஒரு பகுதியாக நான் ஒரிஸ்ஸாவின் புவனேஸ்வருக்கு அருகில் இருக்கும் கந்த கிரி, உதய கிரி என்ற இரட்டை மலைகள் உள்ள இடத்திற்கு சென்றேன். நெரிசல் மிகுந்த புவனேஸ்வரின்  நகர்மையத்தில் இருக்கிறது. தமிழகத்தின் மிக மிக முக்கியமான பாரம்பரியத்தை, அரசாட்சியை ,மன்னர்களின் வீரத்தை பறை சாற்றும் சான்றாவணம் இது.  நகரத்தின் பெரிய வளர்ச்சிக்கு நடுவே உறைந்து போன வரலாறாக நிலைத்து இருக்கிறது இது. இந்த இரட்டை மலைகள் குமரி பர்வதம், குமார பர்வதம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கலிங்கம் தொடர்பாக 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் கிடைக்கப்பெற்று அவை ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.

சேதிபர்கள் என்ற சொல் குறிக்கும் அரச பரம்பரையை சேர்ந்தவராக காரவேலர் இருக்கலாம் என்பது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. எஸ்.ராமச்சந்திரன் அவர்களின் கருத்து . சேதிப குலம் என்பது மகாபாரதத்தில் சிசுபாலன் வம்சம். சேதிப மன்னர்களின் வாரிசுகள் கடையெழு வள்ளல்களில் இடம் பெறும் திருக்கோவிலூரை தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த மலையமான்கள் . நெடுமான் அஞ்சியும், திருமுடிக்காரியும்  நடு நாட்டு அரசர்கள்,சேதிகுலத்தோர். வரலாற்றால் பிந்திய இவர்கள் காரவேலனின் படையெடுப்புக்கு பின்பு தாய் வழியிலோ, தந்தை வழியிலோ தொடர்ந்த அரச வம்சமாக இருக்கலாம். இன்றும் தமிழக சாதிகளில் சேதிராயர் என்ற பட்டம்  நாடார் மரபில் உள்ளது. நாடார்கள் சந்திர குலத்தவர்கள். சிசுபாலன் சந்திர குல மூத்தோன். பாண்டியர்களும் தாங்கள் சந்திர குலத்தை சேர்ந்தவர்கள் என்று பிரகடனம் செய்தவர்கள். மகாபாரதத்தில் பாண்டியர்கள் பற்றிய குறிப்புகள் இவர்களின் சந்திர குல வமிசத் தொடர்புக்கு வலு சேர்ப்பதாக கொள்ளலாம்.

udayagiri01கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதிப அரசர் “மகா மேக வாகன காரவேலர் ” என குறிக்கப்படும் காரவேலர் தன் படையெடுப்பை பற்றியும்,திக் விஜயம் பற்றிய மெய்கீர்த்தியை குமரி பர்வதம், குமார பர்வத (இன்றைய கந்தகிரி- உதய கிரி) குன்றுகளில் உள்ள ஹாத்தி கும்பா பாறைக்குடைவுகளில் பிராகிருத மொழியில் ,பிராமி லிபியில் கல்வெட்டாக பொறித்திருக்கிறார். இது 17 வரிகளைக்கொண்ட ஒரு வரலாற்று மெய்கீர்த்தி ஆகும். இதில் தமிழகம் தொடர்பான 2 முக்கிய குறிப்புகள் உள்ளன. 11 ஆம் வரியில் உள்ள த்ரமிள தேச சங்காதம் என்ற குறிப்பு. எபிகிராஃபிகா இண்டியாவின் தேவநாகரி மொழி வடிவமும், ஆங்கில மொழி பெயர்ப்பும் –

”/11ம் வரி –
कलिंग पुवराज निवेसितं पिथुडं गधवनंगलेन कासयति [।।] जनपद भावनं च तेरसवस
सत कतं भिदति *तमिर देह संघातं* [।।] बारसमे च वसे ….. वितासयति उतरापध
राजनो [ततो]

(L.11) ……………… And the market-town (?) Pithumda
founded by the King of Ava he ploughs down with a plow of asses, and
(he) thoroughly breaks up the Confederacy of the T [r] amira (Dramira)
Countries of one hundred and thirteen years, Which has been a source
of danger to (his) Country (Janapada). And in the twelfth year he
terrifies the kings of the Utarapatha with ………………

’தேரஸவஸ ஸதம்’ என்பது த்ரயோதசவர்ஷ சதம் என்பதிலிருந்து வந்ததாகலாம்.

த்ரயோதச சதம் –> பதின்மூன்று நூறு (1300)
த்ரயோதசம் + சதம் -> 100 + 13
இக்கூட்டணி நீடித்த காலத்தை 1300  ஆண்டுகள், 113 ஆண்டுகள் என
இருவிதமாகக்  கருதுகின்றனர்.”

 

 ins01இதில் தேரஸ வஸ என்பது 113 ஆண்டுகளையே குறிப்பதாக சொல்கிறார் தமிழகத்தின் முக்கியமான மூத்த கல்வெட்டு ஆய்வாளரும்,தமிழ் அறிஞரும், மொழியியல் வல்லுனருமான திரு. எஸ்.ராமச்சந்திரன். 113 ஆண்டுகளாக நீடித்த த்ரமிர தேச மன்னர்களின் கூட்டணி தன் அரசாட்சிக்கும், மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாக எண்ணிய காரவேலர் அவர்கள் மீது படையெடுத்து வென்றதாக பதிவு செய்கிறார். இந்த கல்வெட்டின் ஆண்டு பொது ஆண்டுக்கு முன் 172 (கி.மு.172) அதாவது கி.மு.285 முதல் நீடித்து நிற்கும் த்ரமிள தேசத்து மன்னர்களின் கூட்டணி என காரவேலர் சொல்கிறார்.  மொழியின் அடிப்படையில் அமைந்த முதல் வரலாற்று கூட்டணி என இதை கொள்ளலாம். இந்த கூட்டணியைப்பற்றி பாரத தேசமெங்கும் விரவி நிற்கும் அசோகரின் கல்வெட்டுக்களில், “நான் சோடச பாண்ட்ய மன்னர்களை போரால் அல்லாமல் தர்மத்தால் வென்றேன்” என குறிப்பிடுகிறார். இதை நாம் போரினால் அல்லாமல் பெளத்த தம்மத்தை இங்குள்ள மக்களையும், மன்னர்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்ததன் மூலமாக வென்றதாக கொள்ளலாம். அசோகரோ, மெளரியர்களோ தமிழக மன்னர்களை வென்றதாக எந்த வரலாற்று குறிப்புகளும் இல்லை. சந்திர குப்த மெளரியரின் மகனான பிந்து சாரனோ (கி.மு.298 – 272) பிந்து சாரானின் மகனான அசோகனோ (கி.மு 268-232) வெல்லவே முடியவில்லை என பதிவு செய்கிறார்கள். பிந்து சாரனின் காலமும் தமிழகத்து மன்னர்களின் கூட்டணி அமைந்து வடவர்களை எதிர்த்து போரிட்டு வென்றதாக ஊகிக்கும் காலமும் கன கச்சிதமாக பொருந்தி வருவதை பார்க்கலாம். அப்போதைய மெளரியபேரரசு தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க விரவி இருந்தது (ஆதாரம் : மெளரிய பேரரசு:பிந்து சாரன் http://en.wikipedia.org/wiki/Bindusara). இது தொடர்பாக இலக்கிய சான்றுகள் பற்றிய குறிப்புகளை பார்க்கலாம்.

தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு
தமிழகம் தவிர்த்து பாரதம் முழுக்க பரவியிருக்கும் மெளரிய அரசு

திருவிளையாடல் புராணத்தில் மெய் காட்டிட்ட புராணத்தில், வட புலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்ற கிராதர் கோமானை (கிராதர் என்று மலைக்குறவர்களை குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தை சேர்ந்த பாண்டிய படைத்தலைவன் சுந்தர சாமந்தன் எதிர் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. சாமந்தனுக்காக இறைவனே மாயம் நிகழ்த்திய கதை. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பானதாக இருக்கலாம் எனச்சொல்லும் ராமச்சந்திரன் சாரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். மேலும் பி.டி.சீனிவாச அய்யங்காரும் தன் ”History of the Tamils: From the Earliest Times to 600 Ad” நூலில் பாண்டியர்களின் செல்வ வளம் எப்படி அனைத்து மன்னர்களையும் ஈர்த்தது என்பது பற்றி குறிப்பிடுகிறார். பாண்டிய மன்னனின் செல்வ வளத்தையும், தான் பாண்டிய மன்னனிடமிருந்து பெற்று வந்த முத்துக்கள், ரத்தினங்கள்,பரல்கள் பற்றியும் ஹத்தி கும்பா கல்வெட்டில் 13 ஆம் வரியில் காரவேலர் குறிப்பிடுகிறார்.

13 ஆம் வரியில் குறிக்கப்படும் பிராகிருத பிராமியின் ஆங்கில மொழியாக்கம்.

 (L. 13) …………….. (He) builds towers with excellent 
interiors and carved Creates a settlement of a hundred Masons, giving 
Them Exemption from land revenue. And a wonderful and marvelous 
enclosure of stockade for driving in the elephants (he) …… and 
horses, elephants, jewels and rubies as well as Numerous pearls in 
hundreds (he) Causes to Be Brought here from the Pandya King.  

 karavela 01

பாண்டிய அரசனிடமிருந்து பெற்று வந்த யானைகள், குதிரைகள், நகைகள், மாணிக்கங்கள், முத்துப்பரல்கள் இவற்றை கொண்டு மிகச்சிறப்பான உள் தோற்றம் உடைய, பெரிய அரண்மனையை அலங்காரமாக ஏற்படுத்தினான். பணி செய்த சிற்பிகளுக்கும், கட்டுமான பணியாளர்களுக்கும் வரி விலக்கு அளித்தான். இதன் மூலம் கார வேலன் அறுதியிட்டு தெரிவிப்பது என்னவெனில் கி.மு. 285 லிருந்து 113 ஆண்டுகளாக நீடித்து வரும் பலமான தமிழ் தேச மன்னர்களின் கூட்டணியை வெற்றிகரமாக உடைத்து செல்வ வளம் மிக்க பாண்டிய மன்னரிடமிருந்து பெருமளவிலான முத்துக்களையும், ரத்தினம் ,மாணிக்கம் உள்ளிட்ட அரிய கற்களையும், யானை, குதிரை உள்ளிட்ட வளமான பெரும் பரிசில்களையும் பெற்று வந்து தன் சொந்த அரண்மனையை அலங்கரித்தான். இதில் காரவேலன் சொல்ல வருவது முதல் வரியில் நந்த வம்சத்தவர்கள் எடுத்து சென்ற ஆதிநாதரை மீட்டு வந்தது. பெரிய மெளரிய வம்ச சக்ரவர்த்திகளாலேயே வெற்றி கொள்ள முடியாத தீரமிக்க தமிழ் மன்னர்களை திரை செலுத்த வைத்தது ஆகியவை தன்னுடைய மிகப்பெரிய சாதனைகள் என தெரிவிக்கிறார். தான் மெளரிய சக்ரவர்த்திகளை விடவும் முக்கியமான வெற்றிகளை ஈட்டியவன் என்ற பெருமையை கோருகிறார். மேலும் காரவேலன் அவத் (அயோத்தி) பிராந்தியத்துடன் போரிட படையெடுக்கிறான், ஆனால் அதற்கு முன் மகதத்தை ஆக்கிரமிக்க வரும் கிரேக்க டிமிட்ரியஸை எதிர்த்து போரிட்டு அவனை காந்தாரத்துக்கே பின் வாங்க செய்கிறான். (http://en.wikipedia.org/wiki/Kharavela ).ஆனால் தமிழ் தேசம் காரவேலனின் அரசாட்சியில் இல்லை . அதற்கு பதிலாக மிகப்பெரிய செல்வத்தை பரிசிலாக பெற்றுக்கொண்டு பாண்டிய அரசாட்சியையே தொடரச்சொன்னதாக கொள்ளலாம்.
 

காரவேலரின் அரசு (தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது)
காரவேலரின் அரசு ( தமிழகம் சுதந்திர அரசாகவே தொடர்கிறது.)

இப்படி சொல்வதற்கு சங்க இலக்கிய சான்றுகள்,புறச்சான்றுகள், அகச்சான்றுகள், தொல்லியல் சான்றுகள் புராண சான்றுகள் உள்ளனவா? என்று பரிசீலிக்கலாம். கி.மு 172 கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாண்டியன் யார் என்பதை பற்றிய ஊகங்கள் கி.மு. 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை குறிப்பதாக கொள்ளலாம்.

ஆரியப்படை கடந்த என்ற பட்டப்பெயர் ஆரியப்படையை சமாளித்த, எதோ ஒரு வகையிலான உடன்படிக்கை கொண்டு போரை தவிர்த்த என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாக கொள்ளலாம். மேலும் சிலப்பதிகாரத்தில் ”வடவராரியர் கடந்த நெடுஞ்செழியன் காலத்திய காவிய தலைவி தானே கண்ணகி”. சிலம்பு எழுதப்பட்டது பிற்பாடு என்றாலும் அது சுட்டுவது கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காலகட்டத்தையே எனக்கொள்ளலாம். மேலும் கி.மு.2 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மீனாட்சி புரம் தமிழ் கல்வெட்டு குறிப்பிடுவதும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைத்தான். தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் தெளிவாக ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பற்றிய குறிப்புகளை கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் விளக்கமாக எழுதி இருக்கிறார்.
 
மேலும் சங்க காலத்திற்கு முன் கோலோச்சிய தமிழ் பாண்டிய மன்னர்களின் வரலாறு மற்றும் அதன் சார்புடைய செய்திகள். கி.மு 4 ஆம் நூற்றாண்டில் இண்டிகா எழுதிய மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டில் பெண் ஆட்சி புரிந்ததாக பதிவு செய்கிறார். மெளரியர் காலத்து அர்த்த சாஸ்த்திரத்தில் பாண்டிய கவாட முத்து என்ற சிறப்பு குறிப்பு உள்ளது. “பாண்டிய நாடு முத்துடைத்து“ என்ற குறிப்பை நினைவில் இருத்திக்கொள்ளலாம். கி.மு.3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அசோகர் கல்வெட்டில் தான் வெற்றி பெற முடியாத மன்னர்களின் பெயர்களை குறிப்பிடுகையில் பாண்டிய(பாண்ட்ய), சோழ (சோட), சேர (கேரளபுத்ர),சத்ய புத்ர என குறிக்கிறார். சங்க இலக்கியத்தில் மெளரியரின் படையெடுப்பை பற்றிய குறிப்பு இருக்கிறது. மெளரிய பிந்து சாரனின் படையெடுப்பு மற்றும் சாம்ராஜ்ய விஸ்தீரணத்திற்கு எதிரானதாகவே த்ரமிர தேச தமிழ் மன்னர்களின் கூட்டணி ஏற்பட்டிருக்கும் என ஊகிக்க இடமளிக்கிறது. திணை கோட்பாடு, தமிழ் மொழியின் தோற்றம் வளர்ச்சி பரவல் பற்றி ஆராயும் மானுடவியலாளர்கள், மொழியியல் வல்லுனர்களுக்கு தமிழக கலிங்க உறவுகளும் ஹாத்தி கும்பா கல்வெட்டுகளும் மிகப்பெரிய புதையலாகும்.வரலாற்று தொடர்ச்சியை அறிவதற்கு பாரதத்தின் தொன்மையான பல்வேறு இனக்குழுக்களையும்,மொழிகளையும் அவர்களின் புலப்பெயர்வையும் பரவலையும்  நுணுகி ஆராய்தல் மிக முக்கிய தேவையாகும். 1820 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் ஆய்வாளரான A.STIRLING இந்த கல்வெட்டை கண்டு அறிந்தார்.பின்னர் 1878ல் கன்னிங்ஹாம் இதனை பிராகிருதத்திலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பதிப்பித்தார். ஆனால் இன்று வரை தமிழுக்காக உயிரை கொடுப்பேன் என்று முழங்கும் திராவிட கட்சியினர் இது பற்றி அறியாமல் வழமை போல் மூடப்பதராக இருக்கிறார்கள். ஹாத்திகும்பா எனும் யானைக்குகையின் கல்வெட்டுக்கள், பாரத வரலாற்று ஆபரணத்தில் மிளிரும் ஒரு வைரம் என்ற பெருமிதத்தோடு மேலும் அது தொடர்பான குகைகளையும், குடை வரைகளையும் பார்க்க சென்றேன்.

(தொடரும்…,)

மேலதிக விபரங்களுக்கு:

http://blog.mapsofindia.com/2012/04/03/pandyan-dynasty-the-richest-and-the-longest-reigning-indian-empire/

 http://www.jeyamohan.in/?p=34044

http://www.sishri.org/kurinji.html

http://asi.nic.in/asi_publ_epigraphical_indica.asp

http://en.wikipedia.org/wiki/Hathigumpha_inscription

http://www.sdstate.edu/projectsouthasia/upload/HathigumphaInscription.pdf

http://micheldanino.voiceofdharma.com/tamilculture.html

http://books.google.co.in/books?id=ERq-OCn2cloC&pg=PA189&ots=Fp5loyJrzM&dq=musiri+pandyas&sig=aNcEToGTkngMTlXNVQAYgL95TTc&redir_esc=y#v=onepage&q=musiri%20pandyas&f=false

http://en.wikipedia.org/wiki/Early_Pandyan_Kingdom#Epigraphical_sources

http://www.amanushyam.in/2012/10/blog-post_7724.html

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=10459

http://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=397

 

 

 

 

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

பல காரணங்களால் இந்து மதத்தை விட்டு வெளியே பிற மதங்களுக்கு மாறியவர்கள், திரும்ப தாய் மதம் திரும்ப முடியுமா? என்ற கேள்வி இனி எழாது. ஹிந்து மதத்தின் மேன்மை, அதன் பரந்த சுதந்திர வெளி இருட்சுவர் சூழ்ந்த மதங்களில் இருப்பவர்களுக்கு விடுதலையாக அமைவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். பல நாளிதழ்களிலும் அவ்வப்போது இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரிசாவில் கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப் பட்ட மலைவாழ் மக்கள் சுமார் மூவாயிரம் பேர், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டாக்டர். பிரவீன் தொகாடியா அவர்கள் தலைமையில் ஹிந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் திரு. தொகாடியா அவர்கள் பேசும்போது “விஸ்வ ஹிந்து பரிஷத் மலைவாழ் மக்களுக்காக அரும்பாடு பட்டு வருகிறது. நாடெங்கும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் நாற்பதாயிரம் பள்ளிகள், ஆயிரம் மருத்துவ விடுதிகள் ஆகியவை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவில் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்கள் படித்து முன்னேறி மேன்மை அடையவேண்டும் அதே சமயத்தில் அவர்கள் பண்பாட்டு கலாசார அம்சங்களை இழந்து விடக்கூடாது” என்று கூறினார்.

என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். இதில் திரளான இந்துக்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்களும் பங்கேற்றனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். நம்மூரில் சல்மான்கான் கூட மகாசிவராத்திரி விரதம் இருந்ததாகவும் தகவல். இதோடு இன்னொரு மகிழச் செய்யும் தகவல் பாகிஸ்தானில் 1500 வருடம் பழமை வாய்ந்த பஞ்சமுக ஹனுமான் ஆலயம் புனருத்தாரணம் செய்யப் படவிருக்கிறதாம்.

பகவத் கீதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார் ஒருவர். இவரும் ஒரு முஸ்லிமா என்கிறீர்களா? அது தான் இல்லை. வேங்கட அப்பளச் சாரி என்பவர், சுமார் எழுநூறு ‘உருது சுலோகங்களில்’ பகவத் கீதையை மொழிபெயர்த்துள்ளார். எண்பது வயதான இவர், ஒரே வருடத்தில் மொழி பெயர்த்து விட்டாராம். முகலாயர் காலத்தில் கீதை மொழிபெயர்க்கப் பட்டது. பின்னர் சமீபத்திலும் சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் விட என்னுடையது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த பகவத் கீதை மொழிபெயர்ப்பை உருது மொழியில் இருப்பதால் வலமிருந்து இடமாகத் தான் படிக்க முடியும்!

இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, பரமபதம், பராசக்தி போன்ற வார்த்தைகளுக்கு இணையான உருது வார்த்தைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். மொழிபெயர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் கீதை போன்ற இலக்கியச்சுவையும், தத்துவ ஆழமும் கொண்ட நூலை எளிதாக மொழியாக்கம் செய்வது இன்னும் கடினம்.

பெரிய பெரிய பத்திரிகைகளில் வேலை பார்க்கும் ஆசாமிகள் கூட பிரபலங்களை பேட்டி எடுத்த விவரத்தை வெளியிடும்போது சொன்னது ஒன்று, வெளிவந்தது வேறு ஒன்று என்று செய்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த பிரபலம் தான் அப்படி சொல்லவில்லை என்று படாத பாடு படவேண்டி இருக்கிறது. பொது மக்கள் முதலில் வந்த செய்தியை நம்புவதே வழக்கம். ஆகவே ஒன்று அந்த பிரபலம் சம்பந்தப் பட்ட பத்திரிக்கையை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் இல்லாவிட்டால் கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டியது தான். அந்த பத்திரிக்கையாளரோ சற்றும் கவலைப் படமாட்டார், தவறு நிகழ்ந்துவிட்டது என்று எடுத்துக் காட்டினாலும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். இன்றைக்கு பத்திரிகை தர்மம் அப்படி ஆகிவிட்டது. அச்சுப் பத்திரிக்கைகளிலேயே இப்படி என்றால் இணைய இதழ்களில் கேட்கவா வேண்டும்?

அண்மையில் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் பேசும் போது சுதந்திரம் வாங்கிய பின் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது இருந்ததை விட சுரண்டல் பலமடங்கு அதிகமாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை “பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா எங்கேயோ போயிருக்குமே – ஆர்.எஸ்.எஸ். ஆதங்கம்” என்று தலைப்பிட்டு வெப்துனியா.காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் மோகன் பாகவத் அவர்கள் சொன்னது “After Independence, the dominance of rich and powerful people in politics and rising inflation have worsened the country’s situation, which is worse than what it was during the British rule” என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி இப்படி இருக்க இதில் இந்தியா எங்கோ போயிருக்கும் என்பதை கண்டுபிடிக்க கொஞ்ச நஞ்சமல்ல எக்கசக்கம் திரிசமன் வேண்டும்.

சில செய்திகள் திரித்து வெளியிடப் படுகின்றன. சில செய்திகள் வெளியே வருவதே இல்லை. ஒரு குற்றம் நிகழும் பொது, அதில் ஈடுபட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவரோ அதற்கு தகுந்த மாதிரி செய்தி வெளிவருகிறது. சம்பந்தப் பட்டவர் “சிறுபான்மை” மதமாக இருந்தால் அந்த செய்தி அப்படியே அமுக்கப் படுகிறது. அப்படியும் சில செய்திகள் வெளியே வந்து விடுகின்றன. அப்படி நமக்கு கிடைத்த செய்தி தான் இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக வந்த செய்தி. கேரளா அரசாங்கம் இந்த விசாரணையில் முடிவு எதுவும் எடுத்து விடக் கூடாது என்று கிருத்துவர்கள் முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. முக்கியமாக கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் ஆலன்செர்ரி என்பவர் இந்திய மீனவர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தில் இத்தாலிய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதை கேரளா பா.ஜ.க. வன்மையாக கண்டனம் செய்துள்ளது. ஒரு வியாபாரக் கப்பலில் இத்தாலிய ராணுவ வீரர்களுக்கு என்ன வேலை? சோமாலியாவில் இருப்பது போல இங்கே எந்த கடற்கொள்ளையர்கள் இருக்கிறார்கள்? இவ்வாறு ராணுவம் வருவது இது தான் முதல்முறையா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

கேரளாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிற (அதிசயம்!) பிரவம் பகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கையில் கூட அந்த ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருப்பது கூட அந்த இடைத்தேர்தல் வரை தானோ என்று தோன்றுகிறது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்துக்கள் பெருமளவு வாழ்கிற பகுதியாக இருந்தாலும் நிறுத்தப் பட்டிருக்கிற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவருமே கிருத்துவர்கள்!

ஆபிரகாமிய மதங்கள் வேறொரு நாட்டில் மையம் கொண்டிருப்பதே, இங்கே அவை தேச விரோத நடவடிக்கைகளிலும், மதமாற்ற நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட காரணமாகிறது. அவற்றின் இதயம் வேறு எங்கோ துடிக்கிறது. இங்கே அதனால் தானோ என்னவோ இங்கே இதயமற்று நடந்து கொள்கிறார்கள். இவர்களை நம்பி அப்பாவிகள் பலியாகிறார்கள். சில பள்ளிக் கூடங்களில் பகிரங்கமாகவே மதமாற்றம் நடைபெறுகிறது. பள்ளிக்கு படிக்க வருகிற இளம் பிஞ்சு உள்ளங்களை கிருத்துவ மத போதனையில் மூழ்கடித்து அவர்களை அறியாமல் மதமாற்றம் செய்கிறார்கள். இப்படி திண்டுக்கல்லை அடுத்த நத்தம் முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியரும், வேறொரு ஆசிரியருமாக சேர்ந்து ‘மதமாற்ற வேலை’யில் ஈடுபட்டிருந்த போது, செல்போன் கேமராவில் படம்பிடித்து விட்ட அப்பகுதி மக்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் அதை ஆதாரமாகக் காட்டி புகார் செய்ய அந்த ஆசிரியர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இதே போல சிலநாட்கள் முன்பு சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை கேலி செய்தது பற்றி தமிழ் ஹிந்துவில் இந்த பகுதியில் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இன்னும் எத்தனை பள்ளிகளில் என்னென்ன நடக்கிறதோ என்ற கவலை எழுகிறது.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது ஆபிரகாமிய மத அமைப்புகளின் வழக்கம். இதற்குத் தப்பாமல், புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரி முரசு இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே கூறி வருகிறோம். இப்போது கையும் களவுமாக ஓர் “உளவாளி” பிடிபட்டிருக்கிறார். இன்னும் பத்துப் பதினைந்து அரசு சாரா அமைப்புகளை புலன்விசாரணை செய்யுமாறு இந்திய அரசு சி.பி.ஐயிடம் கோரியிருக்கிறது. எதற்கும் வாயைத் திறக்காத நமது பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் அமெரிக்க என்.ஜி.ஓக்கள் பின்னணியில் செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

வஹாபிகளின் எண்ணைப் பணமும், எண்ணற்ற வெளிநாட்டு கிறித்தவ மிசனரிகளிடம் இருந்து ‘நன்கொடைகளும்’ தீவிரவாதத்திற்கும், கட்டாய மதமாற்றத்துக்குமாக கணக்கின்றி திணிக்கப் படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த பதினேழு ஆண்டுகளில் மட்டும் இந்திய என்.ஜி.ஓக்கள் எனப்படும் தனியார் சமூக சேவை அமைப்புகளுக்கு 97,000 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. இதில் நன்கொடை தரும் வெளிநாட்டு அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, இந்தியாவில் அவற்றைப் பெரும் அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, முதலாவதாக நிற்பவை கிறிஸ்தவ மிஷனரி, மதமாற்ற நிறுவனங்கள். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை, பல காலமாக இந்துத்துவ தரப்புகள் சொல்லி வரும் விஷயம் தான் இது. இப்போது தான் போலி மதச்சார்பின்மை சேற்றில் ஊறிய இந்திய அரசியல் கட்சிகளுக்கும், பொதுஜனத்தீற்கும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இது உறைக்க ஆரம்பித்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு கோஷ்டிக்கு உண்மையில் நாம் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

(வாரா வாரம் வரும்)

நினைவுகளின் சுவட்டில்- கலுங்கா

 

காலையில் எழுந்து  பார்த்தால் கம்பும் கழியுமாக ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் இருந்த கூட்டம் இல்லை. ஆனால்  ரயில் நிலையத்துக்கு வெளியே சுற்றிலும் அவர்களின் நடமாட்டம்  இருந்தது. இரவில் பார்த்த  பத்துப் பதினைந்து பேருக்கும்  மேலாக நிறையபேரின் நடமாட்டம் இருந்தது. இவர்கள் எல்லாம் சுற்று வட்டார கிராமத்து ஜனங்கள் என்றார் ஜார்ஜ்.

சரி வாங்க, காலைக் கடனெல்லாம் முடித்துவிட்டு குளித்து ஏதாச்சும் சாப்பிடலாம் என்று கிளம்பினோம். ஸ்டேஷனில்தான் எல்லா வசதிகளும் இருக்குமே. அது ஒரு சின்ன ஸ்டேஷன்தான். அதிகம் கிராமத்து ஏழை ஜனங்களின் நடமாட்டம்தான். ஸ்டேஷனில் உள்ள பொது இடங்களில், உள்ளே இருக்கும் கழிவறை, ப்ளாட்பாரத்தில் இருக்கும் தண்ணீர்க் குழாய் எதானாலும் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பெரிய ஸ்டேஷன்களில்தான் அநாவசிய கெடுபிடி, அதிகாரத்தைக் காட்டும் பெருமைக்காகவே அதிகாரம் செலுத்துவார்கள். சாதாரணமாகவே ஒடியா மக்கள் சாது. கிராமத்து ஜனங்கள் படிப்பில்லதவர்கள். அதிலும் ஹிராகுட், கலுங்கா போன்ற ஆதிகுடிகள் வசிக்கும் இடங்களில் அவர்கள் சிநேகமாகவே இருப்பார்கள். சாது மக்களைப் பார்த்து நமக்கும் அதிகாரத் தோரணை மேலிட்டால் ஒழிய வம்பில்லை

எனக்கு இப்போது  நினைவிலிருப்பது ஜார்ஜ் வழிகாட்ட சர்சுக்குப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் ஒரு பெரிய கன்னிமாடம் (nunnery)  அதிலிருந்து நிறைய  ஆதிவாசிப் பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த இடம் முழுதுமே சர்ச்சுக்குச்  சொந்தமானதாக அதன் பராமரிப்பில் இருப்பதான தோற்றம் தந்தது. ஜார்ஜிடம் கேட்டதற்கு இந்த ஏரியாவிலேயே அது ஒரு பெரிய சர்ச் என்றும் இதாலிய கத்தோலிக்கப் (Roman Catholic) பாதிரிமார்களால் நடத்தப்படுவது என்றும் சொன்னார். அவருக்கு இதுதான் முதல் தடவை. ஆனால் இங்கு வரும்முன் அவருக்கு இந்த இடத்தைப் பற்றி யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்பின் அவரும் இந்த இடம் பற்றிய தகவல்களைச் சேகரிக்க முனைந்திருக்கிறார். சர்ச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

எனக்கு அடுத்து  நினைவுக்கு வருவது- சர்ச்சில் பிரார்த்தனை நடக்கிறது. நானும் தேவசகாயம், ஜியார்ஜ், பஞ்சாட்சரம், மணி வேலு இத்யாதி எல்லோரும் சர்ச்சில். என்னவோ லத்தீன் மொழியில் நடக்கிறது. நாங்கள் மண்டியிட்டு கைகள் கூப்பி இருக்கிறோம். மற்றவர்கள் அவ்வப்போது என்னவோ ஆமென்–னோ என்னவோ சொல்கிறார்கள். நான் சும்மா மண்டியிட்டு கைகூப்பி இருந்தாலும், பாதிரியாரும் மற்றவர்களும் பார்க்க நானும் பிரார்த்தனை செய்கிறேன் என்று இருக்க வேண்டாமா?  அந்த சர்ச்சில் அன்றைய பிரார்த்தனையில் சுமார் 150-லிருந்து 200 பேருக்குள்ளாக இருந்திருப்பார்கள்.  என் கண்களுக்கு வேறென்ன வேலை? சுற்றி மேய்வதுதானே? அதுவும் பாதிரியாரின் கண்கள் என்பக்கம் இல்லாதபோது. ஆனாலும் இந்தப் புதிய காட்சிகளின், சடங்குகள், கூட்டம் இவற்றின் புதுமையும் சுவாரஸ்யமும் வெகுநேரம் நீடிக்கவில்லை. மண்டியிட்டே பழக்கமில்லை. ஸ்கூலில் கூட பெஞ்ச் மேல் ஏறி நிற்கச் சொல்வார்கள். அது அதிகம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீளாது. இல்லையெனில் வகுப்புக்கு வெளியே நிற்கச் சொல்வார்கள். ஸ்கூல் ஹெட் மாஸ்டரின் மருமகனானாலும் எனக்கு ஒன்றிரண்டு தடவை இந்தத் தண்டனை கிடைத்ததுண்டு. ஆனால் மண்டியிடும் நிலைமை என்றும் எனக்கு நேர்ந்ததில்லை. யாருக்குமே நேர்ந்ததில்லை. நான் ஒண்ணாங்கிளாசிலோ என்னவோ சேர்ந்தபோது ஒரு பையனுக்கு காலில் கட்டையொன்றைச் சங்கிலியால் பிணைத்திருந்தார்கள். அவன் அதை இழுக்கமுடியாது இழுத்துக்கொண்டு நடப்பான், பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ஆனால் அது ஒரே ஒரு முறைதான். அந்த மாதிரி தண்டனை பின்னர் வெகு சீக்கிரம் கைவிடப்பட்டது என்று நினைக்கிறேன். பள்ளி நாள்களில் இப்படி தண்டனை அனுபவிக்காத நான் இப்போது ஒரு சர்ச்சில் நடக்கும் ஈஸ்டர் பிரார்த்தனையில் மற்றவர்களோடு விரும்பிக் கலந்துகொண்டது ஏதோ தண்டனை கொடுக்கப்பட்டு அனுபவிப்பது போலத்தான் தவித்தேன். சின்ன வயதில் ஒரு வேளை அரை மணி நேரம் மண்டியிடுவது சாத்தியமாகியிருக்கலாம். ஆனால் காலை ஒன்பது ஒன்பதரை மணிக்கு சர்ச்சுக்குள் நுழைந்த நாங்கள் அதிக நேரம் உள்ளே நின்றிருக்கவில்லை. மண்டியிடும் நேரம் வெகு சீக்கிரம் வந்து விட்டதென்றே  நினைக்கிறேன். அரை மணிக்கு மேல் தாங்கவில்லை. கால் கடுக்க ஆரம்பித்தது. பின் அது வேதனையாக மாறி சர்ச்சின் சடங்குகளில், பிரார்த்தனையில் மனம் கொள்ளாது முழங்கால் வலியிலேயே மனம் துன்பப்பட்டுக்கொண்டிருந்தது. எப்போடா இந்த பிரார்த்தனை முடியும், இந்த இடத்தை விட்டு வெளியே போவோம் என்றே எண்ணித் தவித்துக்கொண்டிருந்தேன். அது ஒன்றும் அப்படி அவசரப்பட்டு வருவதாகத் தெரியவில்லை. இனி ஜியார்ஜ் என்ன, யார் அழைத்தாலும் ஈஸ்டர் ப்ரேயர்ஸ்க்கு கட்டாயம் மறுத்து விடுவது, போனால் போகிறது நண்பர்களாயிற்றே என்று புது வருஷ பிரார்த்தனைக்கு வேண்டுமானால் ஷாமியானா எழுப்பி சம்பல்பூரில் நடந்தது போல நடக்குமானால் நண்பர்களுக்காக அதில் கலந்து கொள்ளலாம். தூக்கம் வந்தால் வெட்ட வெளியில் தூங்கவும் செய்யலாம் என்று மனம் சலித்துகொண்டிருந்தது.

அன்றைய என்  வேதனை சொல்லி மாளாது. மற்ற நண்பர்களும் இப்படிக் கஷ்டப்பட்டார்களா, இல்லை மனதுக்குள் அடக்கிக் கொண்டுள்ளார்களா தெரியவில்லை. இப்படி நேரிடும்மென்று ஜியார்ஜோ இல்லை தேவசகாயமோ சொல்லியிருக்கலாம். ஒரு வேளை அவர்கள் சர்ச்சுகளில் இப்படி இருக்காதோ என்னவோ.  ஒரு வழியாக இந்த அவஸ்தை 12.30 மணிக்கோ 1 மணிக்கோ நின்றது. வெளியில் வந்ததும் நான் என் வேதனையைச் சொன்னேன். அவர்கள் பாதி பச்சாதாபப்படுவதும் பாதி சிரிப்பதுமாகத்தான் இருந்தார்கள். பின்னர் பச்சாதாபம் நின்று சிரிப்பது மட்டுமே தொடர்ந்தது. சற்று நேரம் இளைப்பாறிவிட்டு பாதிரியாரைப் போய்ப் பார்க்கலாம் என்று ஜியார்ஜ் சொல்ல, மற்றவர்களும் அதை ஆமோதிக்க, நானும் அவர்களுடன் சென்றேன். மரியாதை நிமித்தம்தான். நாம் தூரத்திலிருந்து வந்திருக்கிறோம் நாம் எல்லோருமே கிறித்துவர்கள் இல்லை என்றும் அவருக்குச் சொன்னால் அவர் சந்தோஷப்படுவார் என்றார் ஜியார்ஜ். அப்படித்தான் நடந்தது. ஏதோ ஒரு சில நிமிடங்கள் அவர் எங்களையெல்லாம் விசாரித்து, வந்தது பற்றித் தம் சந்தோஷத்தைத் தெரிவித்ததோடு கர்த்தர் எங்களை எந்த வித்தியாசமும் பாராட்டாது ரக்ஷிப்பார் என்று ஒரு ஆசீர்வாதமும் தர, பெற்று நாங்கள் வெளியே வந்தோம். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியது. பாதிரியார் ஒடியா இல்லை. இந்தியரும் இல்லை. இத்தாலியர். அவருடன் இருந்த மற்றவர்களும் இத்தாலியரே.

அங்குமிங்கும் ஓடி வேலை செய்தவர்கள்தான் ஒடியாக்கள். ஆதிவாசிகள். எங்களுடன் அவர் பேசியது ஆங்கிலத்தில். அவர்களுக்கு உதவிய சர்ச்சின் வேலையாட்களுடன் அவர் பேசியது ஆதி வாசிகளின் பாஷையில். ஒடியா கூட இல்லை. ஒடியாவில் எனக்கு ஒரு சில வார்த்தைகளுக்குமேல் தெரியாதென்றாலும், பேசுவது ஒடியாவென்றால் அது தெரிந்திருக்கும்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஜியார்ஜ், தேவசகாயும் இன்னும் மற்றவர்களிடம்  இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

“அவங்களுக்கு அத்தனை அக்கறை இருக்கு. கத்துக்கறாங்க. மதப் பிரசாரத்தோட அதுவும்தான்.. அவங்க பாஷையிலே பேசலைன்ன எப்படிப் பிரசாரம் செய்யறது?” என்று ஜியார்ஜ் சொன்னார்.

”நாம இங்கே வந்து மூணு வருஷம் ஆகுது. நமக்கு ஒடியா தெரியுமா? அவ்வளவுதான் நம்ம அக்கறை” என்று பஞ்சாட்சரமோ மணியோ சொன்னார்கள்.

“சாமிநாதனுக்கு நாலஞ்சு வார்த்தை தெரியும்” என்றார் தேவசகாயம்.

“அது தானா வந்ததுய்யா, நானா கத்துக்கிடலை” என்றேன்.

அன்று சாயந்திரம்வரை எங்கே போனோம், எங்கே  சாப்பிட்டோம் எப்படிப் பொழுதுகழிந்தது என்பதெல்லாம் ஒன்றும்  நினைவில் இல்லை. நினைவில் பளிச்சென்று  மறையாமல் இருப்பது அன்று  மாலை ஒரு திறந்த வெளியில் நாங்கள் தரையில் உட்கார்ந்திருக்க அங்கு கூடிய கூட்டம். மணி ஆறுக்கு மேல் இருக்கும். சூரியனின் தகிப்பு குறைந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும். அத் திறந்த வெளியில் நாலா பக்கங்களிலிருந்தும் நீண்ட கம்புகளோடு  (இன்னம் வேறு ஏதும் ஆயுதம் இருந்ததா என்பது நினைவில் இல்லை. என் மனத்தில் பதிந்திருப்பது) கம்புகளோடு நிறைந்து வரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமான ஆதிவாசிகளின் கூட்டம். முந்தின தினம்  இரவு ஸ்டேஷனில் இம்மாதிரி ஒரு பத்துப் பதினைந்து பேரைப் பார்த்து அடைந்த பயம் இப்போது இல்லை. ஆச்சரியத்துடன் பார்த்து இருக்கும் அதிசயமாக இருந்தது அது. சுமார் ஆயிரம் ஆயிரத்து ஐந்நூறு பேர் இருக்கலாம் அந்தக் கூட்டத்தில்.

கூட்டத்தின் நடுவில்  ஒரு வட்டமான வெற்றிடம். மேடை ஏதும் இல்லை. இரவு சூழும் நேரத்தில் இத்தாலியப் பாதிரிமார்களும்  அவர்களைச் சுற்றிய மற்றோரும்  வந்தார்கள். சுற்றிக் குழுமியிருக்கும் கம்பும் கழியுமாக தூக்கிக் கச்சமாகக் கட்டிய அழுக்கு வேட்டிக் கூட்டத்தினிடையில் நீண்ட வெள்ளையும் சிகப்புமான  அங்கியும் தரித்து இருக்கும் வெள்ளைப் பாதிரிமார்.

இதுவும் ஈஸ்டர் சடங்குகளில் ஒன்றோ என்னவோ. சர்ச்சுக்கு சர்ச்சு மாறுமோ என்னவோ. அவர்களிலும்தான் 10–12 வகைகள் இருக்கின்றனவே; நம்மில் இருக்கும் ஜாதிகள் போல. பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம் மாதிரியா அய்யர் வீட்டுக் கல்யாணமோ, நாயக்கர் வீட்டுக் கல்யாணமோ இருக்கும்?

நடந்தது எல்லாம்  இலத்தீன் மொழியில். எனக்கோ ஜியார்ஜுக்குமோ இல்லை தேவசகயாத்துக்குமோ  என்ன புரியும்?

ஹிந்தியில் இல்லை. ஒடியாவில் இல்லை. அந்த ஆதிவாசிகள் மொழியிலும் இல்லை. இலத்தீன் மொழியில். என்னமோ இரண்டு மணி நேரம் நடந்தது.  எங்களுக்கு ஏதோ நாடகம் பார்ப்பது போல் இருந்தது. யாரும் மண்டியிடவில்லை. நானும் மண்டியிட வேண்டாம். அது ஒரு பெரிய ஆசுவாசம். அப்பாடா என்று இருந்தது. கூட்டத்தோடு நின்று கொண்டோ அல்லது முடிந்தால் பார்க்க சௌகரியம் இருதால் கூட்டத்துக்கு வெளியே நின்று கொண்டோ பார்த்தோம். அந்த ஆதிவாசிகள் கூட்டத்துக்கு என்ன புரிந்ததோ என்ன கிடைத்ததோ தெரியாது. ஆனால் அந்தக் கூட்டம் அனைத்தும் மிக சிரத்தையோடு ஆர்வத்தோடும் அதில் கலந்து கொண்டனர். அவ்வப்போது ”ஆமென்” சொன்னார்கள். நாம் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியை இட்டுக்கொண்டு எரியும் சூடத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டால் போதும் என்று இருக்கு இல்லியா அது போலத்தான்.

வேறொன்றும் எனக்கு நினைவில் இல்லை. இன்னமும் அது பற்றி யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும் விஷயம்.. நாங்கள் கலுங்கா போனது 1952 அல்லது 1953-ல் ஒரு மார்ச் மாதம். கலுங்கா ஒரு காட்டுப் பிரதேசம். எங்கும் மின்சார இணைப்புகூடக் கிடையாது. ரயில் நிலையத்திலிருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் உள்ளே இருப்பவைதான் அந்த சர்ச்சும் கன்னிமாடமும் இன்னும் மற்ற அந்த சர்ச் சம்பந்தப்பட்ட கட்டடங்களும். சுற்றி உள்ள காட்டுப் பிரதேசத்தில் இந்த ஆதிவாசி கிராமங்கள். ஐம்பது வருஷங்களுக்கு முன்னோ, அல்லது அதற்கும் முன்னோ, அதாவது 20-ஆம் நூற்றாண்டுக்கு ஆரம்பத்தில் அல்லது சற்றுமுன் அவர்கள் இத்தாலியிலிருந்து போப்பின் கட்டளையின் பேரில், தங்கள் மதத்தைப் பரப்ப இங்கு வந்திருக்கிறார்கள். இந்தக் காட்டில். ரோமிலிருந்து இந்தக் காட்டுக்கு. இங்கு வந்து இந்த ஆதிவாசிகளுடன் பழகி, அவர்கள் மொழியைக் கற்று, அவர்களுக்கு படிப்போ மருத்துவ உதவிகளோ ஏதோ செய்து அவர்களையும் கத்தோலிக்கர்களாக்கி… அதுவே எவ்வளவு கஷ்டமான வேலையாக இருந்திருக்கும்! அந்த ஆதிவாசிகளுக்கு ஆதிகாலம் தொட்டு தம் இனப் பழக்க வழக்கங்கள், தெய்வங்கள், தொழும் முறை இவற்றில் எல்லாம் இருந்திருக்கக் கூடிய பிடிப்பு சாதாரணமாகவா இருந்திருக்கும்? அதையெல்லாம் உதறியெறியச் செய்து, என்னமோ அவர்கள் கண்களுக்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் உடைகளையும் சடங்குகளையும் புரியாத மொழியில் ஆர்வம் கொள்ளச் செய்து, இடையிடையில் அவர்கள் “ஆமென்” சொல்ல வேண்டும்.. வேறு பங்கேற்பு ஏது? இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? 1950-களின் ஆரம்ப வருடங்களில், ஒரிஸ்ஸாவின் ஒரு ஒதுங்கிய காட்டுப் பிரதேசத்தில். அப்போது அவர்கள் வந்து தங்களை அவ்வளவு விரிவாகவும் ஆழமாகவும் ஸ்தாபித்துக்கொள்ள ஐம்பது வருடங்களாவது ஆகியிருக்கும். அந்த இத்தாலியப் பாதிரிமார்களுக்கு இது ஒரு வேலையா? சேவையா? அல்லது அர்ப்பண உணர்வா?

அதே சமயம் இப்போது கிட்டத்தட்ட மூன்று மாத காலமாகக் கூடங்குளத்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் நினைவுக்கு வராமல் இருப்பது சாத்தியமில்லை. இது என்ன வகையைச் சார்ந்தது? அரசியலா, பின்னிருக்கும் வர்த்தகப் பேராசை, மதப் போர்வை போர்த்துக் கொண்டுள்ளதா? இந்த பாதிரிமார்களுக்குப் பின்னிருப்பது மக்களா, இல்லை சர்ச்சா? சர்ச்சானால் அதன் பின்னிருப்பது எது?

தூய மத உணர்வின் அர்ப்பண ரூபம்தானா அங்கு கலுங்காவில் பார்த்ததும்?

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

உடையும் வீரமணி – பாகம் 2

டையும் இந்தியா? புத்தகம் குறித்து திராவிடர் கழகம் நடத்திய வசையரங்கில் இரண்டாம் நாள் (ஜனவரி 9).

தமிழ்ஹிந்து இணையதளத்தை தி.க. அரங்கில் அறிமுகப்படுத்தி அதன் பெயரை விமர்சித்தார் வீரமணி. தமிழ் என்று இருப்பதால் அது பிரிவினைவாதம் ஆகிவிடாதா என்கிறார் வீரமணி. தேச ஒற்றுமையின் மீது மிகவும் அக்கறை வந்திருக்கிறது வீரமணிக்கு! அந்த அளவு மாற்றத்தை இந்த நூல் கொண்டு வந்துள்ளது சந்தோசம். ‘உடையும் இந்தியா’ நூலுக்கு மட்டுமல்ல, தமிழ்ஹிந்து இணைய தளத்துக்கும் வீரமணி செய்யும் விளம்பரம் நகைச்சுவை கலந்தும் முட்டாள்தனமாகவும் இருந்தாலும்…. சரி அதை சகித்து கொள்ளலாம்.

ஆனால் அதோடு நிறுத்தியிருக்கலாம். நேற்றைய தமிழ்ஹிந்து பதிவுக்கு உடனடி எதிர்வினை செய்ய வேண்டும் என்ற தவிப்பு போல. “சிராஜ் உத் தவுலாவுக்கு துரோகம் செய்தவர்களில் அமீர்சந்த் ஒரு பார்ப்பனர்” என்று முழங்கினார். பாவம், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால், அது அணிந்திருப்பது முப்புரில் நூல் என்று சொல்லி தன் மூக்கை தானே உடைத்திருக்க வேண்டாம். ஆங்கில அதிகாரியான தாமஸ் மெக்காலே தனது பதிவுகளில் அமீர்சந்த் ஒரு வங்காளி என்று சொன்னதாலே அவர் ஒரு பார்ப்பனராக கருதப்பட்டார். ஆனால் உண்மை என்ன?

கி.வீரமணி பாணியில் சொன்னால், (அடித்தொண்டையில் வாசிக்கவும்) “இங்க பாருங்க … இந்த புத்தகம் இருக்கு பாருங்க இது முக்கியமான விசயம்…(பக்கத்தை தேடி எடுக்கிற வரை இப்படி சொல்லிகிட்டே இருக்கணும், இது திராவிடர் கழக மேடையின் எழுதப்படாத விதி) … இந்த புத்தகத்தை நாங்க எழுதலை. ஆர்.எஸ்.எஸ்.காரன் எழுதலை. இதை எழுதினவர் சயீத் அப்பாஸ் ரிஸ்வி. இந்த புத்தகத்துக்கு பெயரு “Landmarks of South Asian civilizations: from prehistory to the independence of the subcontinent” இதுல (ஆங் ஆம்புட்டுட்டுது) பக்கம் 196 ஆல சொல்றாரு பாருங்க: “Clive silenced Omi Chand (Amir Chand) the Sikh merchant who was the intermediary and who demanded a huge share in the spoils as the price for his silence…” அவரு மட்டும் இல்லீங்க… இந்த என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (வால்யூம் 16) என்ன சொல்லுது பாருங்க.. “His real name was Amir Chand; and he was not a Bengali, as stated by Thomas Macaulay, but a Sikh from the Punjab….

ஆனால் வீரமணிதான் தெய்வநாயகத்துக்கு நண்பராயிற்றே. தெய்வநாயகம் செத்துப் போனவர்களையும் கிறிஸ்தவர்களாக்குவார். வீரமணி செத்துப் போனவர்களுக்கும் பூணூல் போடுகிறார். வாழ்க! புரோகித தொழிலை வீரமணி முழுவீச்சில்தான் ஆரம்பித்திருக்கிறார். வாழ்க்கை மேலும் வளம்பெற வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் ஈவெரா வன்முறையை போதிக்கவில்லை என்றார் வீரமணி. சரி பொதுவாழ்வில் வன்முறையை போதிக்காத ஈவெரா என்ன சொன்னார் தெரியுமா? மார்ச் 5, 1957 இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்லும் செய்தி இது: ராஜாஜியை ‘கத்தியை பயன்படுத்தும் நேரடி நடவடிக்கையை’ கூறி மிரட்டியதால் அவர் ராஜினாமா செய்தார் என பெருமையடித்துக் கொண்டார்.

ஆக, வன்முறை நேரடி நடவடிக்கையை சொல்லி ஒரு மாநில முதலமைச்சரையே மிரட்டியவர்தான் ஈவெரா. அப்போது திராவிட கழக அடிப்பொடிகள் எப்படிப்பட்ட மிரட்டல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என ஊகித்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து ஒரு திக வெறியன் ஈவெராவின் மிரட்டலை நடைமுறைப்படுத்த முனைந்த போதுதான் ஈவெராவுக்கு உறைத்தது. வன்முறையை தாம் ஏற்பதில்லை என கூற வைத்தது. (லிங்க் பத்திரிகை, ஏப்ரல் 24, 1960)

சரி. ‘உடையும் இந்தியா’ இதை எந்த இடத்தில், எந்த கான்டெக்ஸ்டில் சொல்கிறது என்பதையும் காணலாம். ‘இனவாத கோட்பாட்டினை அரசியலாக்கும் எந்த இயக்கமும் வன்முறையை பரவவிட தயங்காது, அதில் வன்முறை உள்ளுறையாக அமைந்துள்ளது’ என்பதை சுட்டவே இந்தத் தன்மை வெளிக் காட்டப் பட்டது. அதற்கு முன்னால் இருந்த இரு ஈவெரா மேற்கோள்கள் எதனுடன் இணைத் தன்மை கொண்டது? ருவாண்டா இனப் படுகொலைகளுக்கு முன்னால் சமூகநீதி என்கிற பெயரில் செய்யப்பட்ட இனவெறுப்பு பிரச்சாரங்களுக்கும் இதற்கு உள்ள ஒற்றுமையை காட்டவே.

எனவே வீரமணி எதை மறுத்திருக்க வேண்டும்? ருவாண்டா இனவாத பிரச்சாரத்துக்கும் திராவிட இனவாத பிரச்சாரத்துக்கும் இணைத்தன்மை இல்லை என சுட்டிக் காட்டியிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். அப்படிக் காட்ட முடியாது என்பது வேறு விசயம். ஆனால் அதை முயற்சி செய்யவாவது முனைந்திருக்கலாம். ஆனால் அறிவார்ந்த வாதம் என்பதை வீரமணியிடம் எதிர்பார்ப்பது பகுத்தறிவற்ற மூடநம்பிக்கை மட்டுமே.

மறைமலை இலக்குவனார் மார்மோன்களை பாராட்டியதால் ‘உடையும் இந்தியா’ அவரை தாக்கிற்றாம். பாவம்… இங்கும் வீரமணிக்கு புரிதலில் பிரச்சனை இருக்கிறது. ‘உடையும் இந்தியா’ என்ன சொல்கிறது என பார்ப்போம்:

இந்தப் பேராசிரியர் ‘மார்மன் மதம் குறித்தும் பின்னாளைய புனிதர்களின் சபை குறித்தும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டதில்’ பெருமகிழ்ச்சி அடைந்தாராம். மார்மன்களின் நூல் அவருக்கு ‘தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிக இலக்கியமான திருவாசகத்தை நினைவூட்டியதாம்.’

மார்மன்கள் மதம் எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் அதனுடன் திருவாசகம் போன்ற ஒரு நூலை ஒப்பிடுவது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது புரியும். இலக்குவனாருக்கு மார்மன்கள் பிடித்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் திருவாசகத்தை இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம் என்பதுதான் உண்மை. மார்மன்கள் குறித்து இங்கே படிக்கவும். இதை படித்தால் ஏன் அந்த அபத்தமான ஒப்பீடு அங்கே குறிப்பிடப் பட்டுள்ளது என்பது புரியும்.

அடுத்ததாக குருஜி கோல்வல்கர் ஆரியர்கள் குறித்து கூறியதாக 1939 இல் அவர் எழுதிய நூலிலிருந்து சிலதை எடுத்து வீரமணி வாசித்தார்.

அதில் துருவ பிரதேசம் நகர்வதாக அப்போது சில அறிவியல் ஊகங்கள் கூறியதன் அடிப்படையில், ஆரியர்கள் என்பது ஒரு இனமல்ல என்றும், இந்துக்கள் அனைவரும் ஆரியர் என்றும், துருவப் பிரதேசத்திலிருந்து ஆரியர்கள் வந்ததாக திலகர் கூறுவதை சிறிது மாற்றி துருவமே புலம் பெயர்ந்தது என்றும் குருஜி கோல்வல்கர் கூறுகிறார்.
1939 இல் எழுதப்பட்டது அந்த நூல் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறு என்று இன்று நிரூபிக்கப் பட்டுள்ளது. இங்குதான் ஆரிய இனவாத / புலப்பெயர்வு கோட்பாடுகளை கட்டி அழும் ‘பகுத்தறிவு’ போலிகளுக்கும், ஹிந்துத்துவர்களுக்குமான வேறுபாட்டை கவனிக்க வேண்டும். குருஜி என அழைக்கப்படும் கோல்வல்கரே கூறியதாக இருந்தாலும் அவர் கூறியது தவறு என்றால், அதைத் தவறு என சொல்ல நாங்கள் தயங்கவில்லை. ஆனால் பகுத்தறிவு ஆசான் என நீங்கள் கூறும் ஈரோடு ராமசாமி எப்போதோ பகுத்தறிவில்லாமல் நம்பிக்கொண்டு ஆரியன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வந்தான் என்று சொன்னதை விட்டுவிட்டு ஒரு சமூகநீதிக் கோட்பாட்டை உருவாக்கக் கூட ஈவெராவாதிகளுக்கு திராணியில்லை.

அப்படியே வழக்கம் போல, கர்மவீரர் காமராஜரை கொல்ல முயற்சி செய்தார்கள் இந்துத்துவர்கள் என பழைய பொய்க்கதை ஒன்றை எடுத்துவிட்டார் வீரமணி. ஆதாரமாக ஈவெரா எழுதிய நூலை சொன்னார். ஆனால் ஈ.வெ. ராமசாமி வகையறாக்களை பெருந்தலைவர் எப்படி நடத்தினார், இந்துத்துவர்களை எப்படி நடத்தினார் என்பதைக் கூறினால் வீரமணி கும்பல் சொல்லும் புளுகின் தராதரம் புரிந்துவிடும்.

1957 தேர்தலின் போது ஈ.வெ. ராமசாமியின் திராவிடர் கழகம் பெருந்தலைவர் காமராஜரை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது. தனிப்பட்ட முறையில் கழகத்தவர்கள் தன்னை ஆதரித்தால் தான் அதை மறுக்க முடியாது என்றும், ஆனால் தன்னுடைய காங்கிரஸ் கட்சி ஈ.வெ.ராமசாமியின் வகுப்புவாத நிலைபாடுகளை ஏற்கவில்லை என்றும், தான் தனிப்பட்ட அளவிலும் ஈ.வெ. ராமசாமியின் நிலைபாடுகளை ஏற்கவில்லை என்றும் பெருந்தலைவர் காமராஜர் தெள்ளத் தெளிவாக கூறினார். ஈ.வெ. ராமசாமி தானாக முன்வந்து அளித்த ஆதரவுக்கு காமராஜர் செய்த எதிர்வினை இது. (என்னதான் வெளியே சமூகநீதி என்றெல்லாம் சொன்னாலும், காமராஜருக்கு ஈ.வெ.ரா ஆதரவு அளித்ததன் முக்கிய காரணம் ஈ.வெ.ராமசாமியின் இரண்டாம் கலியாணத்தால் பிரிந்து போன திமுக மீது அவருக்கு இருந்த வன்மம் தான். மற்றபடி ஈரோடு ராமசாமிக்கு கொள்கையாவது மண்ணாவது… வெங்காயம்.)

அதே பெருந்தலைவர் காமராஜர் 1975 இல் காங்கிரஸ் (ஓ) – ஜனசங்க கூட்டணியை ஏற்படுத்தினார். இந்திரா காங்கிரஸின் பாசிச எமர்ஜென்ஸியை எதிர்த்து! இதுவும் வரலாறு. அப்போது தன்னை ஆதரித்த ஈ.வெ.ராமசாமியை ‘ஓரமாய் இரும் பிள்ளாய்’ என ஒதுக்கிய கர்ம வீரர் காமராஜர், தன்னை கொல்ல முயன்றதாக இவர்கள் புளுகும் ஜனசங்கத்துடன் கூட்டணி வைத்தார் என்றால், இந்த திராவிட கும்பலை எப்படிப்பட்ட தீமையாக அவர் கருதியிருக்க வேண்டும்! இருந்தாலும் வெட்கம் கெட்டுப் போய் இவர்கள் கர்மவீரரின் திருப்பெயரை தங்கள் மேடைகளில் நாணமில்லாமல் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வழக்கம் போல நல்ல ஊழியக் காரராக கிறிஸ்தவ எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டவும் வீரமணி மறக்கவில்லை. ஸ்டெயின்ஸ் பாதிரியாரை பஜ்ரங்தள் காரர்கள் உயிரோடு எரித்துக் கொன்றார்களாம். அந்த கொடுஞ்செயலை நிகழ்த்தியவனுக்கும் ஹிந்து அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என நீதியரசர் வாத்வா கமிஷன் அறிக்கை கூறுவதை ஏனோ வீரமணியார் மறைத்துவிட்டார். ஒருவேளை வசதியான மறதியும் காரணமாக இருக்கலாம். மறக்காமல் ஒரிசாவில் ஒரு கன்னியாஸ்திரி காரில் கடத்தி செல்லப்பட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதாக கூறினார் வீரமணி, அந்த கொடுஞ் செயலுக்காக திராவிடர் கழகம்தான் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்ததாம். பிப்ரவரி 3 1999 இல் நடந்ததாக பெரிய அளவில் இந்த ஒரிசா கன்யாஸ்திரி வன்கொடுமை நிகழ்ச்சி ஊடகங்களில் பேசப்பட்டது. ஆனால் அதற்கு பின்னர் நடந்த நீதிவிசாரணையின் போது அந்த வன்புணர்ச்சி சம்பவம் ஒரு முழுப் பொய் என்று நிரூபிக்கப் பட்டது. இதுவும் வாத்வா கமிஷன் அறிக்கையில் தெள்ளத் தெளிவாக உள்ளது.

இருந்தாலும் வீரமணியின் மனிதநேயத்தை (அது கூலிப்படை ஆர்ப்பாட்டமல்ல, மனித நேயம் என்றே ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம்) பாராட்டுவோம். இதோ, நமது தமிழ்நாட்டில், கிறிஸ்தவர்கள் நடத்தும் குழந்தைகள் இல்லங்களில் கடுமையான வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு மேல் நடத்தப்படுவதும், அந்த இல்லங்கள் சட்ட விரோதமாக இயங்குவதும் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளனவே! ஒரு தேவநாதனை வைத்து அனைத்து அர்ச்சகர்களையும் கேவலப்படுத்தும் வீரமணியும் அவரது கும்பலும் தமிழ்நாட்டில் பரவலாக கிறிஸ்தவ அமைப்புகள் செய்யும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக எத்தனை ஆர்ப்பாட்டங்களை எங்கெங்கெல்லாம் செய்திருக்கிறார்கள்?

சரி. 1999 இல் நடந்ததாகச் சொல்லப் பட்ட ஒரு நிகழ்ச்சிக்காக தாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை பத்தாண்டுகளுக்கு மேல் இப்போது விசுவாச ஊழியனாக நினைவு படுத்தும் வீரமணி, 2006 இல் ஓமலூர் சுகன்யா எனும் 17 வயது மாணவியின் கொலை நடந்தததே, அந்தக் கொலை தொடர்பாக ஏதாவது ஆர்ப்பாட்டத்தை செய்திருக்கிறாரா? கட்டாயம் செய்திருப்பார். ஏனென்றால் அவருக்குத்தான் மதம் கிடையாதே, மனித நேயம் மட்டும்தானே உண்டு. எனவே நடத்தியிருப்பார். அதை அவர் தெரிவிக்க வேண்டும். அப்போது உண்மையிலேயே அவர் கிறிஸ்தவ அமைப்புகளின் ஊழியராக செயல்படவில்லை என்பது தெளிவாகிவிடும்.

பிறகு வழக்கம் போல IDRF (India Development and Relief Fund) அமைப்பு குறித்த பிஜு மாத்யூ என்பவரின் அறிக்கையை வைத்து ராகம் இழுத்தார் வீரமணியார். அதாவது இந்து அமைப்புகளுக்கும் வெளிநாட்டு பணம் வருகிறதாம். முதலில் அந்த பிஜு மாத்யூ அறிக்கை அமெரிக்க, பிரிட்டிஷ் அரசு அமைப்புகளால் விரிவான ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, IDRF மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தவறானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது. இன்றும் வெளிப்படையாக அந்த அமைப்பு இயங்கி வருகிறது. அது மட்டுமல்ல IDRF அமைப்பு இந்து சேவை நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவ அமைப்புகளுக்கும், மதச்சார்பற்ற அமைப்புகளுக்கும், இதர சிறுபான்மையினரான ஜைனர்கள் போன்றோரின் அமைப்புகளுக்கும், தலித் மேம்பாட்டு அமைப்புகளுக்கும் கூட உதவி செய்து வருகிறது. இவையெல்லாம் தெள்ளத் தெளிவாக இந்த சுட்டியில் காணலாம் (http://www.letindiadevelop.org/thereport/) மேலும் இந்த அமைப்பு இந்தியாவுக்கு அனுப்பும் பணம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உழைத்து சம்பாதித்த பணம்.

ஆனால் வேர்ல்ட்விஷன் போன்ற பன்னாட்டு மதமாற்ற அமைப்புகளின் பணம் எவருடையது? காலனியம் மூலமும் ஆயுத விற்பனை மூலமும் மேற்கத்திய நாடுகள் உருவாக்கிய லாபத்தின் உபரியில் இருந்து வரும் பணம். அது இந்தியா போன்ற நாடுகளில் மேலும் மதச் சண்டைகளையும் பிளவுகளையும் உருவாக்க மூலதனமாக களமிறக்கப்படுகிறது. IDRF பல பத்தாண்டுகள் முனைந்தாலும் திரட்டமுடியாத அளவு பணம் இந்த பன்னாட்டு அமைப்புகளால் ஒரு ஆண்டில் இந்தியாவில் களமிறக்கப்படுகிறது. அதைத்தான் உடையும் இந்தியா? நூல் வெளிப்படுத்தியுள்ளது.

வீரமணியின் எஜமான விசுவாசம் நன்றாகவே இந்த கூட்டத்தில் வெளிப்பட்டது. ஆனால் ‘உடையும் இந்தியா’ போன்ற நூலை உடைக்க அவரால் இயலாது. ஏனெனில் அதற்கான அறிவு அவரிடமும் இல்லை. அவர் துதிபாடிக் கூட்டத்திடமும் இல்லை. எனவே வழக்கம் போல சாதி துவேச வசை பாடல்களுடனேயே இதைப் போன்ற அரங்குகள் முடிவது அவற்றின் தவிர்க்க முடியாத விதி.

காங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை

தீபிகா படுகோன் இவரைத்தான் இளைஞர்களுக்கான மிகச்சிறந்த முன் உதாரணம் என்றார். அழகிய சிவந்த தோற்றம். வழு வழுப்பான கன்னங்கள். அறிவாளி என்று பறை சாற்றும் கண்ணாடி அணிந்த பார்வை. நேரு – இந்திரா – ராஜீவ் என்ற அரச பாரம்பரியம். நாட்டில் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் முதற்கொண்டு எல்லோருடைய பாராட்டும் புகழ்ச்சியும் சொரியப் படும் ஆளுமை. ராகுல் காந்தியை ஏறக்குறைய எல்லோருமே பிரதமர் ஆவார் என்றே எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த பிம்பத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான மனிதர் யார்? அவரது நடவடிக்கைகள் என்னென்ன? மக்களில் எத்தனை பேர் இந்த திசையில் யோசிக்கிறார் என்று தெரியவில்லை.

high_dramaபொதுக் கூட்டங்களில், யாராவது ஒரு கிழவியைக் கட்டிப் பிடித்து, அம்மா என்று கதறுவது போன்ற ஸ்டன்ட்களை எல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே பார்த்து விட்டோம். இப்போது ராகுல் காந்தி, இதை ஒரு கடமையாகவே வைத்துக் கொண்டு, பாதுகாப்பு வளையத்தை தாண்டிக் குதித்து மக்களுக்கு கை கொடுப்பது, கூலிக்கு மண் சுமந்து வேலை செய்பவர்களுடன் வலிக்காமல் பிளாஸ்டிக் கூடை சுமப்பது, தலித்துகளுடன் உட்கார்ந்து உணவு உண்பது போன்ற நாடகங்களைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. ராகுலின் பேச்சும், நடவடிக்கைகளும் கடைந்தெடுத்த அரசியல் தந்திரப் பேச்சாகவே இருப்பது ஒன்றும் அதிசயம் அல்ல.

நமது பத்திரிக்கைகளுக்கும் இந்த ராகுல் காந்தி பில்டப்பில் பங்கு உண்டு. ராகுல் ஒரு கடையில் மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டார். ஒரு ஏழைக் கிழவியைக் கட்டிப் பிடித்து அம்மா என்றார். ஒரிசா மக்களுடன் ஒரியா மொழியிலேயே பேசினார் என்று பழங்காலத்தில் மன்னர்களை புலவர்கள் புகழ்வது போல புகழ்ந்து தள்ளுகின்றன. ஒரு பத்திரிகை இந்தியாவிலேயே பிரபலமானவர் ராகுல்
காந்தி என்று கருத்துக் கணிப்பு நடத்துகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா, “காமன் வெல்த் போட்டிகள் நடத்துவதில் உள்ள ஊழல் பிரச்சினையில் நேர்மைத் திறன் உள்ள ஒருவர் தலையிட வேண்டும். ராகுல் காந்தியைப் போல ஒருவர் தேவை.” என்று எழுதுகிறது. ராகுல் காந்தியின் நேர்மை பற்றி யாருக்கு என்ன தெரியும்? இதெல்லாம் வாசகர்களை மூளைச் சலவை செய்யும் வழி இல்லாமல் வேறு என்ன? இன்னும் மன்னராட்சி மன நிலையிலிருந்து மக்களை மீண்டு வராமல் பார்த்துக் கொள்ளுகிற பத்திரிக்கை தந்திரம்தான் இவை.

மக்களைப் பற்றி கவலைப் படாமல் அரசு இயந்திரத்தை நடத்துவது காங்கிரசின் வேலை. மக்கள் ஏதாவது பிரச்சனை என்று பொங்கி எழும்போது, அந்த கோபத்தை தணித்து ஒட்டு வங்கியைக் காப்பாற்றுவது சோனியா-ராகுல் ஆகியோரின் வேலை என்று ஒரு ராஜ தந்திர அமைப்பு உருவாகி இருக்கிறது. சோனியாவே பிரதமர் என்று உட்கார்ந்திருந்தால் காங்கிரஸ் தேர்தல்களில் வெல்வது கடினம் – எதிர் கட்சிகளுக்கு குறிப்பிட்டு குற்றம் சாட்டுவது மிக எளிதாகி இருக்கும். இதை எல்லாம் எண்ணிப் பார்த்து தானோ என்னவோ, அன்றே “பதவியைத் தியாகம் செய்கிறேன்” என்று சோனியா தியாகத்தின் சின்னமாக உட்கார்ந்து, மக்கள் மத்தியில் தன் ஆளுமையை காப்பற்றிக் கொண்டிருக்கிறார்.

வெளிப்புறத்தில் பதவியைத் துறந்து, தியாகம் செய்தது சோனியா காந்தியின் மிகப் பெரிய ராஜ தந்திரம். ஆளும் கட்சிக்கு உட்புறத்தில் இருந்து கொண்டு, பதவியில் இருந்தால் கிடைக்கும் எல்லா அதிகாரங்களையும் இப்போது பெற்று, அதற்கு மேல் எடுக்கப் படும் முடிவுகளின் விளைவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவையும் இல்லாத வசதியும் பெற்று இருக்கிறார். அவரின் வழியில் ராகுலும் எந்த மந்திரி பதவியும் ஏற்காமல் இருப்பது ஆச்சரியமானது அல்ல.

rahul2ராஜீவ் இறந்த சமயத்தில் சுவிஸ் நாட்டு பத்திரிகை ஒன்று, ஆயிரம் கோடி ரூபாய்கள் (அல்லது இருநூறு கோடி டாலர்கள்) கொண்ட வங்கி கணக்குக்கு ராகுல் உடைமையாளர் – சோனியா அந்த கணக்குக்கு கார்டியன் என்று எழுதியது. அப்போது ராஜீவின் மரணத்தில் இந்த செய்தி கவனிப்பு இல்லாமல் போய் விட்டது. போபர்ஸ் க்வோட்டோரோச்சி சம்பந்தப் பட்ட ஊழலும், அது அண்மையில் புதைக்கப் பட்டதும் தெரிந்ததே. இந்தியாவில் மற்ற மாநிலத்தவர் ஹிமாசல பிரதேசத்தில் சொத்து வாங்க முடியாது. ஆனால் பிரியங்காவிற்கு சிம்லாவில் வீடு கட்ட இடம் வாங்க முடிந்திருக்கிறது. இவ்வாறு நேரு குடும்ப நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

பழி ஒரு இடம் – பாவம் ஒரு இடம் என்பது ஒரு பழைய சொல்வழக்கு. யாரோ செய்த தீமைக்கு யாரோ பொறுப்பாளி ஆவது நடை முறைதான். மறுபக்கத்தில் யாரோ செய்த நல்ல காரியத்துக்கு யாரோ மாலை மரியாதை பெறுவதும் நடப்பது தான். நமது நாட்டை ஆளும் அரசின் நடவடிக்கையே இப்படித்தான் இருந்து வருகிறது. அரசின் நடவடிக்கையில் நல்லது ஏதாவது நடந்தால் முன்னிலைப் படுத்தப் படுவது நேரு குடும்பம் – ஆனால் தவறு ஏதாவது நிகழ்ந்தால் அவர்கள் வசதியாக ஒதுங்கிக் கொள்ள, வேறு யாராவது பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.

இதற்கு நிறைய உதாரணங்கள் அண்மையில் நிகழ்ந்த சம்பவங்களிலிருந்தே கிடைக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலை எடுத்துக் கொண்டால், மத்திய மந்திரி ராஜா மட்டுமா தன்னந்தனியாக இதை செய்திருக்க முடியும்? கிரிக்கெட் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கொட்டப் படும் பல்லாயிரம் கோடி ரூபாய்களில் ஊழல் இதெல்லாம் தற்போதைய அரசாங்கத்தின் ஆணி வேரான நேரு குடும்பத்துக்கு சம்பந்தமில்லாமலா இருக்கும்? இவை பற்றி சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ எதுவும் அறிக்கை விடுவது இல்லை. பேசுவது இல்லை. சம்பந்தம் இல்லாதது போல இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரிசா மாநிலம் நியமகிரியில் உத்தேசிக்கப் பட்ட வேதாந்தா நிறுவனத்தில் சுரங்கத் திட்டம், சட்ட விரோதமானது என்று தடை செய்யப் பட்ட இரண்டு நாட்களுக்குள், தானே முன் நின்று தடுத்து நிறுத்தியதாக சொல்லிக் கொண்டு அங்கே ராகுல் காந்தி ஆஜர். சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில், டோங்க்ரியா பழங்குடியினர் கூடிய பெருங்கூட்டத்தில், “நானே உங்களுக்காக டெல்லியில் முழங்கினேன். உங்களுக்காக ஒரு சிப்பாய் டில்லியில் இருக்கிறான் என்று எண்ணிக கொள்ளுங்கள்” என்று ராகுல் அறிவித்தார். இவ்வாறு வெற்றி அறிவிப்புக்கு முன்னால் எப்போது அவர் அந்த பழங்குடியினரை சந்தித்தார் என்று செய்திகளைப் புரட்டினால், இருபது மாதங்களுக்கு முன் 2009 சனவரியில் தான். இடைப்பட்ட காலத்தில் வேதாந்தா நிறுவனம் அரசின் அனுமதி பெறும்போது என்ன பி.ஜே.பியா ஆட்சியில் இருந்தது? அப்போதெல்லாம் ராகுல் எங்கே போனார் என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை.

2010 மே மாதத்தில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், ஒரிசாவின் நியாம கிரி மலைகளில் பாக்சைட் வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைத்தால், காடுகள், பழங்குடியினர், நீர் ஆதாரங்கள் ஆகியவை பாதிக்கப் படாது என்று ஆராயப் பட்டு விட்டது என்று கூறி அனுமதி வழங்கியது. இதற்கு முன்னிருந்தே அந்த பகுதியில் வாழ்ந்து வந்த டோன்க்ரியா பழங்குடியினர் இந்த சுரங்கம் வெட்டுவதை எதிர்த்து போராடி வந்தார்கள். இவர்களின் குரல் இங்கு மட்டுமல்லாது லண்டனிலும், எதிரொலித்தது அவர்கள் அதிருஷ்டம். சர்வைவல் இன்டர்நேஷனல் என்கிற அமைப்பு நமது நாட்டு பழங்குடியினருக்காக லண்டனில் போராடியது. இங்கிலாந்தின் பத்திரிகைகள், அவதார் படத்தில் தம் வாழ்வுக்காக போராடும் நாவி பழங்குடியினரை உதாரணமாகச் சொல்லி, ஆங்கிலேயர்கள் மனதில் கலக்கத்தை உருவாக்கினார்கள். இந்திய உச்ச நீதி மன்றமும் இந்த சுரங்கத் திட்டம் சட்ட விரோதமானது என்று அறிவித்தது.

rahul3 இவ்வாறு சட்ட விரோதம் என்று ஆன பின்னால் தான், அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்த திட்டம் கைவிடப் பட்டதாக அறிவித்தார். அப்போது “இதில் அரசியல் எதுவும் இல்லை. சட்டப் படியே நடக்கிறது” என்றார். இவ்வளவு நடந்த பின்னால், ராகுல் கூலாக ஆஜராகி என்னால் தான் தடுக்கப் பட்டது என்று மார் தட்டினார். இவர்களது ஆட்சிதானே நடக்கிறது? ஒரு வருடம் முன்பே இவர் இதை செய்திருக்கலாமே! சட்டப் படி தவறு என்று ஆகி கைவிட்ட ஒன்றை எதோ தான் பார்த்து பழங்குடியினருக்கு செய்த நன்மை என்று சொல்வது, மக்களை முட்டாள்கள் என்று நம்பி செய்யப்படும் மிகக் கீழ்த்தரமான அரசியல். ஒரிஸ்ஸாவின் நான்கு கோடி மக்கள் தொகையில் பழங்குடியினர் சுமார் இருபத்தி இரண்டு சதவீதம். இவர்களின் ஓட்டுக்களைப் பெற இந்த ஸ்டன்ட் உபயோகப் படும் என்று காங்கிரசில் பலர் எண்ணுகிறார்கள்.

இந்த பாக்சைட் சுரங்கத் திட்டத்தில் குரல் கொடுத்த ராகுல், இதே போல ஒரிஸ்ஸா பகுதியிலேயே நடக்கும் மற்ற போராட்டங்களுக்காகக் குரல் கொடுப்பாரா? ஆந்திர – ஒரிசா எல்லையில் மல்கான்கிரி என்ற பகுதியில் அணை கட்டப் படுகிறது. இந்த அணை கட்டினால் வருடா வருடம் வெள்ளம் வந்து அங்கு மக்கள் அதிகமாக பாதிக்கப் படுவார்கள் என்று சில அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள். அங்கே ஏன் இந்த பழங்குடியினரின் சிப்பாய் வாயை திறக்க வில்லை? ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிதானே நடை பெறுகிறது? நினைத்தால் ஆந்திர அரசை அணைத்திட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்திருக்கலாமே.

ஒரிஸ்ஸாவிலேயே ஜகத்சிங்புரா என்னும் இடத்தில் POSCO என்னும் தென்கொரிய நிறுவனம் நிலங்களைக் கையகப் படுத்தி உள்ளது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். அது பற்றி பி.ஜே.பி கூட போராட்டங்கள் நடத்தி வருகிறது. அங்கேயும் ராகுலைக் காணவில்லை. இந்த வேதாந்தா நிறுவனமே, வேதாந்தா பல்கலைக் கழகம் என்ற பெயரில் ஆறாயிரம் ஏக்கர் நிலங்களை ஒரிசாவில் வளைத்துப் போட்டுள்ளது. இதற்கு முன் எந்த பல்கலைகழகம் இவ்வளவு பெரிய இடத்தில் கட்டப் பட்டுள்ளது? இது நிச்சயம் வேதாந்தாவின் சதி என்று சந்தேகப் பட இடம் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் ராகுல் பேசியதாகவே தெரியவில்லை.

உண்மையிலேயே ஒரு தொழிற்சாலை அல்லது சுரங்கத் திட்டத்தில் பயன் இருக்கும் போது, இவருக்கு நேர்மைத் துணிவு இருந்தால் எதிர்த்து போராடும் மக்களின் பயத்தைப் போக்கி, அந்த திட்டத்தால் ஏற்படும் நீண்ட நாள் நன்மைகளை எடுத்துச் சொல்லி, பொறுப்பான ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக நடந்து கொண்டிருக்க வேண்டும். எதைச் சொன்னால் மக்கள் கூட்டம் வரவேற்கும், எந்தப் பக்கம் சாய்ந்தால் ஒட்டு கிடைக்கும் என்று நடந்து கொள்வது அல்ல.

அமேதி தொகுதியில் எம்.பி ஆனபின் ராகுல் பாராளுமன்றத்தில் எதற்காவது வாயைத் திறந்திருக்கிறாரா? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் ஊழலைப் பற்றி அவரின் கருத்து என்ன? காஷ்மீர் பிரச்சினையில் என்ன சொல்கிறார்? தீவிரவாதம் குறித்து அவரது கருத்து என்ன? நக்சலைட்டுகள் குறித்து அவர் திட்டம் என்ன? பாகிஸ்தான் குறித்து என்ன எண்ணம் அவருக்கு? இதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஏன் அவருக்கே தெரியாது. இவர்தான் நமது வருங்கால பிரதமர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது.

                                                      

ஒரு எம்.பி.யாகவே இவர் எதுவும் செய்யாத போது பிரதமராக அமர்ந்து அரசாட்சி செய்வதில் இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அவரது படிப்பு குறித்த விவரங்கள் எதுவும் நம்பக் கூடியதாகவே இல்லை. இந்தியாவின் அடித்தட்டு மக்களின் நிலை குறித்து அவருக்கு எதுவும் தெரிந்ததாகவே அவர் நடவடிக்கைகள் இல்லை. ரவுல் வின்சி என்ற இத்தாலியப் பெயரை புனைப் பெயராகக் கொண்டு ஒரு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தது ஒன்றே அவரது மொத்தமாக வேலை பார்த்த அனுபவம்.

                                                      

எம்.ஜே. அக்பரின் ஒரு சமயம் ராகுலின் அரசியல் முன்னேற்றம் குறித்து எழுதியது இங்கே கவனத்திற்குரியது, “பெரும்பான்மையாக வறுமையில் வாழும் ஒரு தேசத்தில், ஏழைகள் தமக்குள் ஒருவராக அடையாளம் கண்டு கொள்ள ஒரு அரசியல் கட்சி தேவை. அப்படி ஒரு கட்சியாக காங்கிரஸ் பகலில் ஏழைகளுடனும், இரவில் பணக்கார கார்போரேட்டுகளுடன் கைகோர்த்தபடியும் இருந்து வருகிறது. இக்கட்சியின் பகல் நேர திட்டங்கள் ஓட்டுக்களைப் பெற்றுத் தரும், இரவு நேர தோழமைகள் அரசு நடத்த உதவும். இது ஒரு மிக சாமர்த்தியமான நாடகம். இந்த நாடகத்தின் முதல் காட்சிகள், இந்திரா காந்தியை லேசாக நினைவு வைத்திருக்கிற, நேருவை சுத்தமாகவே மறந்து போய்விட்ட ஒரு இளம் தலைமுறையினருக்காக அரங்கேறி வருகிறது. இந்த நாடகத்தில் ஹீரோ, பகல் நேரத்தில் ஏழைகளுக்கான மிகப் பெரிய ஆளுமையாக திகழ வேண்டும். இரவில் பணக்காரர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும். இது தான் அந்த ஹீரோ ராகுல் காந்தியின் முன்னால் இருக்கும் சவால்.”, என்கிறார்.

nehrugandhi-kudumbam

ராகுலை தவிர்த்து பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஒன்றும் அவ்வளவு தூரம் பெரும் பெயர்கள் எதுவும் இல்லாமல் போகவில்லை. மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சிதம்பரம் எல்லாம் உலகம் முழுக்க புகழ் அடைந்த பெயர்கள் தான். ஆனால் இவர்கள் பெயருக்கு இந்தியத் தேர்தல்களில் ஓட்டுக்கள் விழுவது என்பது மிகக் குறைவே. நேரு-காந்தி குடும்பத்திலிருந்து ஒருவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுக்களைப் பெற்றுத் தரமுடியும் என்ற காங்கிரசின் பரிணாம வளர்ச்சி துரதிருஷ்ட வசமானது. “ராகுல் கட்சிக்கும் நாட்டுக்கும் தலைவனாகப் ஆகப் போவதை கண்டு கொள்ள ஒரு பெரிய அரசியல் விஞ்ஞானி தேவை இல்லை” என்கிறார் மணி சங்கர ஐயர். ஜனநாயக ரீதியில் சரியானதோ இல்லையோ, சோனியா இன்னும் பல பத்தாண்டுகள் காங்கிரசின் தலைவராக இருப்பதும், ராகுல் பிரதமராவதும், அவர்களே மறுத்தாலும், தவிர்க்க இயலாத ஒன்று என்றே தோன்றுகிறது.

அதற்கு உதவியாக இருப்பது பி.ஜே.பியின் பலவீனங்கள் என்றும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்திரா காந்திக்கு பிறந்த பிள்ளைகளில், சஞ்சய் காந்தி அரசியலில் நேருவின் வழியில் தன் தாயைப் போல பெரிதாக எழ இயலவில்லை. ராஜீவ் கூட இந்திராவின் மரணத்தை ஒரு காரணமாக வைத்தே தேர்தலில் வெல்ல முடிந்தது. அந்த ஒரு தேர்தலுக்கு பின் அவராலும் பெரிய ஆளுமையாக உருவாக இயலவில்லை. பிரியங்கா வதெராவும் எதிர் பார்த்த அளவு அரசியல் சக்தியாக உருவாகவில்லை. சோனியாவின் அரசியல் அரங்கேறுவதும், எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும் ராகுல் பிரதமாராவதும் அவர்கள் கையில் மட்டும் இல்லை. பி.ஜே.பியின் கையிலும் தான் இருக்கிறது. கொள்கை வலிமையும், தீர்மானமும், சரியான தலைமையும், மக்கள் ஆதரவும் பெரிதாக பி.ஜே.பி.க்கு இல்லாத வரை காங்கிரசின் அரசியல் நாடகங்களுக்கு மக்கள் பலியாவது உறுதி.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்

அனைவருக்கும் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இந்த நன்னாளை முன்னிட்டு தமிழ்ஹிந்து வழங்கும் தமிழர் தெய்வம் கண்ணன் என்ற பவர்பாயிண்ட் பிரசண்டேஷனை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இரண்டு வருடங்கள் முன்பு (2008-ம் வருடம்), இந்துக்களின் இதே புனித நன்னாளில் தான் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களும், அவரது ஆசிரமத்தின் சீடர்களும் மாவோயிஸ்டு வெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள்.

ஒரிஸாவில் வனவாசிகளின் முன்னேற்றம், கல்வி சேவை, அவர்களின் பண்பாட்டு பாதுகாப்பு ஆகிய துறைகளில் அயராது உழைத்து, மதமாற்ற சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகி விளங்கி, மதவெறி-மாவோயிஸ்டு கூட்டுச் சதியால் தனது எண்பதாவது வயதில் கொல்லப் பட்டார் துறவி சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி.

வனவாசிகளின் மேம்பாட்டுக்காகவும் ஆன்ம உரிமைக்காகவும் தன்னையே பலிதானமாக தந்த அந்த வீரரின் தியாகத்தையும் இந்தப் புனித நன்னாளில் நினைவு கூர்வோம்.

சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி: கண்ணீர் அஞ்சலி

பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும், இந்த பலிதானத்தையும் நினைவு கூறும் கீழ்க்கண்ட மூன்று வாழ்த்து அட்டைகளை தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு வழங்குகிறது.

இவற்றை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த நன்னாளில் அனுப்புங்கள்.

(படங்களின் மீது க்ளிக் செய்து அவற்றின் முழு, பெரிய அளவு வடிவங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்).

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-1

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-2

krishna-janmashtami-swami-lakshmananda-rememberance-2010-3

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

அறிந்த தகவல் 1:

இருசொற்கள் சேரும்போது, வினைச்சொல்லில் அதன் வேர்ச்சொல் மட்டும் இருந்து,
காலத்தைக் காட்டும் பகுதி மறைந்து அதாவது ”தொக்கி” இருந்தால், அது வினைத்தொகை.

உதாரணம்: ஊறிய காய், ஊறும் காய், ஊறப் போகும் காய் என்று காலத்தை மறைத்து எப்போதும் வினை நடக்கும் வாய்ப்புள்ள ஊறுகாய் எனும் வார்த்தை வினைத்தொகை என அறிக.

அடுக்கு மொழித் தகவல்:

தெரிஞ்சுக்கோடா தொக்கின்னா அது கொக்கி
தொக்கித்தாண்டா வரும் தொகை
எனக்கும் தெரியும் அதோட வழிவகை
பரவிட்டுப் போகுதுடா பகை
கிடைக்கிற தொகைய வச்சு நாம விடுவோமுடா புகை

வள்ளுவர் சொல்லாத தகவல்:

உறுமீன் வரும்வரை
கொக்கிதேடி நிற்குமாம் அந்தக் கொக்கு
ஊறுகாய நக்குமாம் அதோட நாக்கு

அறிந்த தகவல் பற்றிய அறியாத தகவல்:

ஒரு வாக்கியத்தில் பல வார்த்தைகள் உண்டு. அவற்றில் வினைத்தொகையும் ஒன்றாக இருக்கலாம். வினைத்தொகை வார்த்தை ஒன்றில் காலம் மட்டும் அல்ல, வினை பற்றிய விவரமும் மறைந்தே இருக்கிறது. அந்த வாக்கியத்தில் உள்ள மற்ற வார்த்தைகள் தரும் தகவல்களைக் கொண்டு எப்போதும் நடக்கும் சாத்தியமுள்ள வினை பற்றிய விவரத்தை அறிய விரும்புபவர்கள் அறிந்து கொள்வர். எனவே, ஊறுகாய் என்ற வார்த்தை வெறும் ஊறுகாய் விவகாரம் இல்லை என நீவிர் அறியக் கடவீர்.

சினிமா தகவல் 1:

ஒரு தமிழ் சினிமாவில் பள்ளியில் படிக்கும் மாணவி பைக் மெக்கானிக்கைக் காதலிக்கிறாள். அவனை சந்திக்க தன்னுடைய ஸ்கூட்டியை வேண்டுமென்றே ரிப்பேர் செய்துகொள்கிறாள். அப்போது பக்கத்தில் இருக்கும் அவள் தோழி சொல்லும் வசனம்:

“உங்க போதைக்கு நாந்தான் ஊறுகாயா”

சினிமா தகவல் 2:

அந்தப் படத்தை தியேட்டரில் போய் பார்த்தபின் புனிதமான பெயரைக் கொண்ட எங்கள் பள்ளிக்கூடத்தின் பெயரை இந்தப் படம் கெடுத்துவிட்டது என்று பிரச்சினை செய்ததால் படம் மீண்டும் ஸென்ஸார் செய்யப்பட்டது.

சினிமா தகவல் 3:

இந்துத் தெய்வங்களைக் கேலி செய்தும், கிராமத்து உயர்நாகரீகத்தை மட்டம்தட்டியும், இந்துக்களின் பழக்கவழக்கங்களை இகழ்ந்தும் வருவதால் ஒரு நடிகருக்கு (?) பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.

தெரிந்த, புரியும் தகவல் 1:

வினை [ viṉai ] , s. act, action, deed, work, தொழில்; 2. thought, temper (good or bad) கருத்து; 3. malignity, evil, misfortune, malice, தீவினை; 4. a verb, வினைச்சொல்; 5. war, போர்.

தெரிந்த, புரியும் தகவல் 2:

sec⋅u⋅lar⋅ism/ˈsɛkyələˌrɪzəm/ [sek-yuh-luh-riz-uhm] – noun

1. secular spirit or tendency, esp. a system of political or social philosophy that rejects all forms of religious faith and worship.
2. the view that public education and other matters of civil policy should be conducted without the introduction of a religious element.

Origin:
1850–55; secular + -ism
——
sec•u•lar•ism n. [sěk’yə-lə-rĭz’əm]

Religious skepticism or indifference.
The view that religious considerations should be excluded from civil affairs or public education.
——
Sec”u*lar*ism, n.

1. The state or quality of being secular; a secular spirit; secularity.
2. The tenets or principles of the secularists.
——-
secularism – noun

a doctrine that rejects religion and religious considerations

தெரிந்த புரியும் தகவல் 3:

Secular noun மதச்சார்பற்ற, சமயச் சார்பற்ற, உலகியல் சார்ந்த

தெரிந்தும் புரியாத தகவல்கள்:

1. கிருத்துவர்களால் கிருத்துவர்களுக்காகத் தமிழ்நாட்டில் நடத்தப்படும் கட்சியின் பெயர்: இந்திய கிறிஸ்தவ மதச்சார்பற்ற கட்சி

2. செக்யூலரிசத்திற்காக என்று சொல்லிக்கொண்டு ஏற்படும் கூட்டணிகளில் எப்போதும் இடம் பெறும் கட்சி ஒன்றின் பெயர் “முஸ்லீம் லீக்”.

3. சிறுபான்மையினரான கிருத்துவ இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இந்திய வரிப்பணத்தின் பெரும்பங்கு செலவிடப்படவேண்டும் என்று போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களை மதச் சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.

4. இந்தியாவில் மிக மிக மிக மிக மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பார்ஸிகளும், யூதர்களும் சிறுபான்மை அந்தஸ்து கோராவிட்டாலும் உயர்ந்த நிலைகளில் இருக்கின்றனர்.

5. இந்துக்களின் அன்பிற்கு மட்டுமல்ல மரியாதைக்கும் உரியவர்களான பார்ஸிகளும், யூதர்களும் “ஐயோ கொல்றாங்களே” வசனம் பேசாமல், “இந்துக்கள் எங்கள்மீது அன்பு செலுத்துகிறார்கள்” என்று சொல்லுகிறார்கள். தங்களின் உழைப்பால் உயருகிறார்கள். அடுத்தவர் வரிப்பணத்திற்கு ஆசைப்படுவதில்லை.

6. இந்திய அரசாங்கத்தின் வருடாந்திர பட்ஜெட்டைவிட பலமடங்கு அதிகமான அந்நிய நாட்டு நன்கொடைகளைப் பெறும் சிறுபான்மை கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் அதிகமாகவும், இந்துக்களால் நடத்தப்படும் கல்விநிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகமாகவும் இருக்கின்றன.

சமீபத்திய நற்செய்தி:

karuna_award
கத்தோலிக்க பிஷப் அமைப்பு தரும் “வாழ்நாள் சாதனை” விருது பெறும் கருணாநிதி

2009 தேர்தலுக்கு முன், இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் மார்ட்டின் தலைமையில் கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று:

பாராளுமன்ற, சட்ட மன்ற தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கின்ற சக்தியாக கிறிஸ்தவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 20 சதவிகிதம் உள்ள கிறிஸ்தவர்களை அரசியல் கட்சிகளும் கண்டு கொள்வதில்லை. இந்த நிலை மாற கிறிஸ்தவர் பெயரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே கிறிஸ்தவர்கள் ஆதரிக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாராளுமன்ற தேர்தலில் இந்திய கிறிஸ்தவ மதசார்பற்ற கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை எந்த கட்சி தருகிறதோ அதற்கு ஆதரவு கொடுப்பது எனவும் இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகம் அறிந்ததும், அதிகம் தெரியாததும்:

பல இடங்களில் நடக்கும் குண்டுவெடிப்புகள், கற்பழிப்புகள், ஆஸிட் வீச்சுக்கள், கொலைகள், கொள்ளைகள் இவற்றின் மூலமாகவும் “அமைதி மார்க்கம்” இந்தியர்களுக்கு அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. அமைதி மார்க்கத்தின் தீவிரவாதத்தால் அழிந்துபோன வங்கதேச மக்களைப் பற்றி, காஷ்மீரத்து மக்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், ”அன்பு மார்க்கம்”?

”அன்பே சிவம்” உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் கிருத்துவ கன்னியாஸ்த்ரீகள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை உருக்கிக் கொள்வதாகக் காட்டப்படுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் உள்ள கிருத்துவர்கள் கிருத்துவர்களுக்கு மட்டுமே ஓட்டுப் போடவேண்டும் என்று ஒரு கிருத்துவக் கட்சி வேண்டுகோள் விடுப்பது முதலில் விசித்திரமாகவும், பின்னர் ஏளனமாகவும் தோன்றலாம். ஒரு சில கிருத்துவர்களின் தனிப்பட்ட வேலையாகத் தெரியலாம். தீர்மானத்தை நிறைவேற்றிய கூட்டம் கீழ்ப்பாக்கத்தில் நடந்திருப்பது ஞாபகம் வரலாம். கிருத்துவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என்றும் நாம் நினைக்கலாம். சோனியா காந்தியின் தலைமையில் கிருத்துவர்களை எம்.பிக்களாக்க வேண்டும் என்று இந்தியாவெங்கும் வைக்கப்பட்ட ப்ரம்மாண்டமான கட்-அவுட்கள் புறக்கணிக்கத் தக்கவையாகத் தெரியலாம்.

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மதத்தின் ஆக்கிரமிப்பு முகம் நமக்குத் தெரியாது என்பதே.

அறிந்த தகவல் 2:

பத்திரிக்கைகள் என்பவை லாபத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட்டு கம்பெனிகள். மண்கலங்கள் உடைந்து போவது போன்ற உப்புச் சப்பில்லாத செய்திகளை அவை வெளியிடுவதில்லை.

அறிந்த தகவல் 3:

தென்னிந்தியாவில் பா.ஜ.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த மாநிலம் கர்நாடகம். அக்கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிக்கைகள் வெங்கலப் பானைகள் உடைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

சினிமா தகவல் 4:

“நொங்ங்” என்று கொட்டினார் ப்ரூஸ் லீ.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

”It’s like a finger pointing away to the moon. Don’t concentrate on the finger, or you will miss all the heavenly glory”

பல அப்பாவிகளின் வாழ்வை அழித்துக்கொண்டிருக்கும் வில்லன் கூட்டத்தின்மீது வன்முறையை கட்டவிழ்க்கப் புறப்பட்டார் ப்ரூஸ் லீ.

அறிந்த தகவல் 4:

என்டர் தி எட்டியூரப்பா.

பா.ஜ.க ஆட்சியின்போது கர்நாடகாவில் சர்ச்சுகள்மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் தெரிவித்தன. vandalised, vandalism போன்ற வார்த்தைகள் பக்கங்களை நிறைத்தன. சர்ச்சுகள்மீது கல்லெறியப்பட்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனராம். பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்களில் சேதாரங்களைக் காட்டும் பாதிரியாரும், பாதிரியாரின் விரலும், விரலை வேடிக்கை பார்க்கும் பேஜ்3 பிரபலங்களும் தெரிந்தனர். சேதாரங்கள் தெரியவில்லை.

ஷாவோலின் சீடன் தலையை தடவிக்கொண்டு விழித்தான்.

அறிந்த தகவல் 5:

இருசொற்கள் சேரும்போது, இடையே வேற்றுமை உருபு மறைந்து இருந்தால், அது வேற்றுமைத்தொகை.

உதாரணம்: கல்லெறி = கல்லை + எறி. இதில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது.

தர்க்கமாகிப் போன தகவல்:

காவிரியில் தண்ணீர் வருகிறது. ஒக்கேனக்கலிலும் தண்ணீர் வருகிறது. அதனால் ஒக்கேனக்கல் கர்நாடகத்திற்கே சொந்தம்.

அறியாத தகவல் 1:

உண்மை நிலவரம் என்ன? இந்த அன்பு மத ஆக்கிரமிப்பின் கொடூரம் நமக்குத் தெரியாது.

அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது. இந்த நிலங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கிருத்துவ அமைப்புகளுக்குச் சொந்தம். அதாவது, இந்தியாவின் பெரும்பகுதி நிலம் யூரோப்பிய கிருத்துவ அமைப்புக்களுக்குச் சொந்தம். மிகப் பிரம்மாண்டமான இந்திய நிலப்பகுதிகள் யூரோப்பிய கிருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதுவும் நமக்குத் தெரியாது.

நிலவரம் இப்படி இருந்தாலும், நமது ஊரில், நமது வீட்டைச் சுற்றி கிருத்துவர்களின் சொத்துக்கள் அதிகரித்துவருவது வெளிநாட்டினரின் கையில் நமது சொத்துக்கள் கொள்ளை போகின்றன என்ற உண்மையை நமக்கு உணர்த்தவில்லை.

இந்தியாவின் வட கிழக்குப் பகுதி முழுவதும் கிருத்துவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை எந்தப் பத்திரிக்கையும் இதுவரை சொன்னதில்லை.

திரிபுராவில் இந்துக் கோயில்கள் அனைத்தும் மூடியே இருக்கின்றன. இந்துப் பண்டிகைகளைக் கொண்டாடுபவர்களையும், கோயில் பூசாரிகளையும் திரிபுரா தீவிரவாதிகள் கொன்று வருகிறார்கள். அந்தத் தீவிரவாதிகளை வெளிப்படையாகவே சர்ச்சுகள் ஆதரிக்கின்றன.

நேபாளத்தில் இருந்து ஆந்திராவரை பரவியுள்ள நக்ஸலைட்டு அமைப்புகள் சீன அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட கிருத்துவ சர்ச்சினால் நடத்தப்படுபவை என்பதும் நமக்குத் தெரியாது.

நாகலாந்தில் உள்ள தீவிரவாதக் குழுக்களை அந்த மாநிலத்தை எப்போதும் ஆண்டுகொண்டிருக்கும் மந்திரிகள்தான் நடத்திவருகிறார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. இந்தக் குழுக்களில் மிகக் கொடிய தீவிரவாதக் குழுவின் சின்னம் சிலுவை. அவர்களின் கோஷம் “நாகலாந்தை கிருத்துவத்திற்கு மீட்போம்” என்பதை ஒத்தது.

ஒரிஸ்ஸாவிலும், அஸ்ஸாமிலும், சூனியக்காரிகள் என்று சொல்லி வயதான மூதாட்டிகளையும், ஆதரவற்ற பெண்களையும் வேட்டையாடுகிறார்கள். அவர்களைப் பிடித்து சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி அவர்கள் மார்பில் கூரிய ஆணி அறைந்து, பின்னர், ஒரு கட்டையில் கட்டிவைத்து, பைபிள் வாசித்தவாறே எரித்துவிடுகிறார்கள். செய்தித் தாள்களில் சூனியக்காரி வேட்டையால் ஒரு சில பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல், வயிற்றுவலியால் தற்கொலை செய்துகொண்ட பெண் பற்றிய செய்திக்குப் பக்கத்தில் தேடினால் கிடைக்கலாம்.

இதுபோன்ற சூனியக்காரி வேட்டையை ஆங்கிலத் திரைப்படத்தில் பார்த்து மகிழும் நமக்கு இதன் தீவிரம் தெரிவதில்லை. இந்துக்கள் அனைவரையும் சூனியக்காரர்களாகவே கிருத்துவம் கருதுகிறது என்பது பெரும்பாலான தமிழ்நாட்டுக் கிருத்துவர்களுக்கே கூடத் தெரியாத உண்மை.

இந்துத் தெய்வ வழிபாட்டை சைத்தான் வழிபாடு என்று கிருத்துவமும் இஸ்லாமும் போதிக்கின்றன. எனவே, கிருத்துவர்கள் தமிழ் இந்துக்களையும் சைத்தானை வழிபடுபவர்களாகத்தான் கருதுகிறார்கள். இவர்களின் கைப்பாவையாக இருக்கிற திராவிட கட்சிகளின் தலைவர்கள் மஞ்சள் துண்டு அணிவது, கோயிலுக்குப் போவது என்று சாத்தானின் கைப்பாவைகளாக மாறிக்கொண்டு இருப்பதால் இப்போது இவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்துவதோடு, தங்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை ஆட்சிபீடத்தில் ஏற்ற முடிவு செய்துள்ளார்கள்.

பைபிள் தகவல்கள்:

மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

வெளி 20:7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,…

தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப் போனார்கள்.

அறிந்த தகவல் 3:

வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச் சொற்கள் புணர்வதாம்.

உதாரணம்: சாத்தன்கை = சாத்தான்+அது+கை = சாத்தனதுகை

கவனிக்கப்படாத தகவல்:

ஒரிஸ்ஸா காடுகளில் பரிதாபகரமாக எரித்துக்கொல்லப்பட்ட ஒரு கிருத்துவ போதகரின் மனைவிக்கு பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. பட்டம் வாங்கிய பின்னர் எனது கணவரது பணியைத் தொடர்ந்து செய்வேன் என்று சொல்லிவிட்டு அம்மையார் ஆஸ்திரேலியா போய்விட்டார்.

தகவல் இல்லாத தகவல்:

இந்தியாவில் கிருத்துவப் போதகராக இருந்த ஒருவரின்மேல் ஆஸ்திரேலியாவில் கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக சொல்லப்படும் செய்திகளை யாரும் மறுக்கவோ, ஆதரிக்கவோ, நிறுவவோ இல்லை.

கிசுகிசு தகவல்:

இந்துப் பெயரை வைத்துக்கொண்டு, ஆனால், இந்துக்களையும், இந்துத் தெய்வங்களையும், இந்திய கிராமத்துப் பழக்கங்களையும் ஏளனம் செய்து பிழைப்பவரின் தாயார் தன் இளவயதில் கிருத்துவ மதத்தைத் தழுவியவர்.

மற்றொரு சினிமாக்காரர் பற்றிய தகவல்:

இலங்கைத் தமிழர்களுக்காக சிறைக்குப் போவதாகக் காட்டிக்கொள்ளும் சீமானின் உண்மையான பெயர் சைமன் என்று சொல்லப்படுவதை அவரது ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். ஆனால், அவர் எப்போதும் சட்டையில் காட்டும் சே குவாராவின் தேசத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மதம் கிருத்துவம் மட்டுமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சர்ச்சுகள் நிறைந்த க்யூபாவில் ஒரு மசூதிகூட கிடையாது. அரசாங்க நிலைப்பாடு நாத்திகம் என்று காட்டிக்கொண்டாலும், சர்ச்சுகள் மிகச் செழிப்பாக மந்தைகளை மேய்க்கின்றன. ஃபிடல் காஸ்ட்ரோவால் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவதிலிருந்து தப்ப யூதர்கள் நாட்டை விட்டு ஓடினர். ஆனால், அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார் போப்பாண்டவர்.

பழையவர் பற்றிய தகவல் 4:

விமானத்தில் இறங்கிய உடன் அந்த நாட்டு மண்ணை குனிந்து முத்தமிடுவது அவரின் கட்டுப்படுத்த முடியாத பழக்கம். க்யூபாவிற்குச் சென்றபோது அவருக்கு வயதாகிவிட்டது. குனிந்து முத்தமிட முடியாது என்பதால் க்யூபா நாட்டு மண்ணை ஒரு சட்டியில் போட்டு அவர் முத்தமிட ஏதுவாக உயர்த்தினார்கள். க்யூபா நாட்டு மண் கிருத்துவத்தின் வாய்க்குப் போனது.

தென்கொரியாவில் “வளர்ச்சி” பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)
தென்கொரியாவில் வளர்ச்சி பற்றி கிறிஸ்தவ தம்பட்டம் (Courtesy: ucanews.com)

அனைவரும் மறந்துபோன தகவல்:

இந்தியா வந்திருந்த போப்பாண்டவர் இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் மற்ற இந்தியர்களை கிருத்துவ மதத்திற்கு அறுவடை செய்யச் சொன்னார்.

புதியவர் பற்றிய சமீபத்திய தகவல் 1:

கண்டம் விட்டு கண்டம் போய் காண்டம் வேண்டாம் என்றார் போப்.

On Africa trip, pope says condoms won’t solve AIDS.

YAOUNDE, Cameroon – போப் பெனடிக்ட் XVI சொன்னார் இவ்வாறு: எய்ட்ஸ் என்கிற ஆட்கொல்லி நோய்க்கு காண்டம்களால் பதில் சொல்ல முடியாது. உலகம் முழுவதும் 2007ம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு எய்ட்ஸ் வந்து இறந்த ஆப்பிரிக்கர்களால் ஏற்பட்டது. ஏறத்தாழ 22 மில்லியன் ஆப்பிரிக்க மக்கள் எய்ட்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.”எய்ட்ஸ் வியாதியை காண்டம்கள் வழங்குவதன் மூலம் தடுத்துவிட முடியாது”

The pope told reporters aboard the Al italia plane heading to Yaounde. ”அதற்கு மாறாக, காண்டம்கள் இந்த பிரச்சினையை அதிகரிக்கின்றன.”

Treatment Action Campaign in South Africaஐச் சேர்ந்த Rebecca Hodes இது குறித்துப் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்: எய்ட்ஸ் வியாதியை தவிர்க்க உதவும் காண்டம்களின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசாமல், “அதற்கு மாறாக, காண்டம்களுக்கு எதிராக அவர் பேசி வருவது ஆப்பிரிக்கர்களின் உயிரைவிட அவருடைய மதக் கொள்கை அவருக்கு அதிக முக்கியம் என்பதையே காட்டுகிறது.”

”காண்டம்களை உபயோகப்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸை முற்றிலுமாக அழித்துவிட முடியாது என்பது உண்மையாக இருப்பினும், தற்போது எய்ட்ஸ் என்கிற இந்தக் கொடூரமான ஆட்கொல்லி வியாதியைத் தவிர்க்க வேறு எந்த வழிகளாலும் முடியவில்லை என்பது தெளிவாகத் தெரியும் உண்மை” என்று Rebecca Hodes சொன்னார்.

1982ல் இருந்து காமரூனை சர்வதிகாரியாக ஆண்டு வரும் ஜனாதிபதி Paul Biya போப்பாண்டவரை அரசு மரியாதைகளோடு வரவேற்றார். இவர் தனக்கு மாறான கருத்துச் சொல்பவர்களை அழித்துவிடுகிறார் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக் குறை சொல்லியுள்ளது. காமரூனில் நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து போப் நேரடியாக எதுவும் இதுவரை பேசவில்லை. ஆனால்,”நற்கதி அளிக்கும் நமது புனித நூலின் நற்செய்தியானது மிக உரக்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படுமானால் கிருஸ்துவின் ஒளியானது இருண்டுகிடக்கும் மக்களின் வாழ்வில் வெளிச்சத்தைக் காட்டும்” Benedict said as the president and other political leaders looked on.

இந்த நற்செய்தி உலகெங்கும் விமர்சனங்களை உருவாக்கிய வேளையில், ஆப்பிரிக்கக் கண்டம் முழுமைக்கும் நற்செய்தி பரப்ப தனது ஒருவார பயணத்தைத் தொடர்ந்தார் போப்.

மருத்துவ வரலாற்றுத் தகவல்:

அம்மை, காலரா, மலேரியா, ப்ளேக் முதலான ஆட்கொல்லி வியாதிகள் காலனி ஆதிக்கத்திற்கு முற்பட்ட காலகட்டங்களில் ஏற்படவில்லை. காலனி ஆதிக்கத்திற்குப் பின்பே அடிமையாக்கப் பட்ட மக்களுக்கு இவை பரவின.

Aztec smallpox victims
Aztec smallpox victims

தென்னமெரிக்க இன்கா இன மக்கள் அனைவரும் கிருத்துவ மதத்தைப் பரப்ப வந்த ஸ்பானிஷ்களிடம் இருந்து பரவிய இந்த வியாதிகளால் முற்றிலுமாக அழிந்தனர். சிகப்பு இந்திய பழங்குடிகளுக்கு சேவை செய்த கிருத்துவப் பாதிரிகள் அவர்களுக்குப் போர்வைகளைப் பரிசாக வழங்கினர். திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.

“15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் நன்னம்பிக்கை முனையில் இருந்து மலபார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். உருவ வழிபாட்டு நம்பிக்கையாளர்களான பழங்குடியினரிடையே கிருத்துவத்தின் ஆசிகளை வழங்குவதே அவர்களுடைய மிக முக்கிய குறிக்கோளாக இருந்தது. இந்தப் புனிதமான நன்மைதரக்கூடிய மத சேவையை செய்ய ஒரு பாப்பல் புல் (போப்பாண்டவரின் புனிதக் கட்டளை) வழங்கப்பட்டிருந்தது. இந்த யூரோப்பிய ஊடுருவலின் முதல் விளைவாக ரத்தத்தைச் சிதறவைத்த போர்களும், வெறுத்து ஒதுக்கவேண்டிய வியாதிகளும் ஆசிய கண்டத்திற்கு ஏற்பட்டன. இவை மிக விரைவாகப் பரவி சொல்லொண்ணாத் துயரங்களை ஏற்படுத்தின. இந்த வியாதிகள் பரவியபோது சின்ன அம்மைக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்வியாதிகள் முதன் முதலில் அறிமுகமானபோது சீன மற்றும் இந்துக் கோயில்களில் இந்த வியாதிகளைத் தவிர்க்கத் தேவையான தெய்வீக உருவங்கள் ஏற்படவில்லை.” – பக்கம் 34. The History of the Small Pox By James Carrick Moore.

அறிந்த தகவல் 5:

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கிருத்துவப் பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதாகத் தொலைக்காட்சிகளில் காட்டினர். அறுவடை செய்யப்பட்ட ஆடுகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.

அறிந்த தகவல் 6:

அல்வழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். அது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப் பதினான்கு வகைப்படும்.

உதாரணம் 1: தலைவணங்கு = தலை+யால்+வணங்கு.

இங்கு `ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு மறைந்து வருவதால், இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

உதாரணம் 2: பெட்டிப் பணம்.

இங்கு `இல்’ என்னும் ஏழாம் வேற்றுமை உறுபு தொக்கு நிற்றலால், இத்தொடர் ஏழாம் வேற்றுமைத் தொகை நிலைத்தொடர் எனப்படும்.

அறியாத தகவல் 2:

சுனாமி பாதிப்பின்போது வீடு வாசலை இழந்தாலும் மந்தைக்குள் மாட்டிக்கொண்டதால் கிடைத்த வீடுகள் மிக மோசமான தரமற்றவையாக இருப்பதாகவும், அந்த வீடுகளை “சில அமைப்புக்கள்” சுனாமி பாதிப்பின்போது கட்டிக்கொடுத்தன என்றும் தொலைக்காட்சி சேனல்கள் சில சமீபத்திய செய்திகளின் ஊடே தெரிவித்தன.

அறியாத தகவல் 3:

கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டவர் உதவிக்கரத்தை உடனே நீட்டவில்லை. ஆண்டவரின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் உதவி செய்யவில்லை. கத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டவர்கள். மந்தைக்கு வந்துவிட்டபின் மனிதாபிமானத்திற்கும் வந்தது கேடு.

அறியாத தகவல் 4:

காஷ்மீரத்தில் இருந்த பண்டிட்டுகளின் அழிவை வெறும் பத்திரிக்கைச் செய்திகளாக ”ஓரளவு” மட்டும் அறிந்த நமக்கு நாகலாந்தில் வாழும் ரியாங்குகள் அகதிகளாக மட்டுமே வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியாது. கிருத்துவ மதத்திற்கு மாற மறுப்பதால் லட்சக்கணக்கான ரியாங்குகள் வருடம் தோறும் அங்கே கொல்லப்படுகிறார்கள். இதை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட ஒரு இனப்படுகொலை இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. இது தகவலாகக்கூட உங்களுக்குத் தெரியாது.

சோமாலிய வறுமையைப் போலக் காஷ்மீரத்து இன அழிப்பு நமக்கு வெறும் தகவல் மாத்திரமே. இலங்கையில் அழியும் நம் சொந்த ரத்தமான தமிழர்களின் அழிவு நமக்கு மரத்துவிட்டது. ரியாங்குகளின் அழிவு பற்றி நமக்கு எதுவுமே தெரியாது. காஷ்மீரப் பண்டிதர்களின் அழிவு நமக்கு எந்தக் கவலையையும் ஏற்படுத்திவிடவில்லை.

அறியாத தகவல் 5:

தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய பிரமுகர்கள் பலர் இறையியல் கல்லூரிகளில் உருவானவர்கள். ஆனால், ஆரிய-திராவிட இனவாதத்தால் கண்கள் கட்டப்பட்ட தமிழினத்திற்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாது.

உணராத தகவல் 9000:

இரண்டு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகள் மறைந்து வராமல் உவமை உருபு, பண்பு உருபு முதலியன மறைந்துவரச் சொற்கள் புணர்தல் (வேற்றுமை அல்லாத வழியில் சொற்கள் புணர்தல்) அவ்வழித் தொகை நிலைத்தொடர் எனப் பெயர் பெறும்.

உதாரணம்: கொள் சுரணை

எதிர்கால தகவல் 12:

வெளிப்படுத்தின விசேஷம் 0:0: நாளை தமிழகத்தில் நமது பிள்ளைகள் அகதிகளாகத் திரிவார்கள். அப்போது அவர்களின் உடம்பு துப்பாக்கிக்கு இரையாகும்போதும், நமது மகள்கள் கற்பழிக்கப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்படும்போதும், குண்டை வெடிக்கச் செய்தும், குண்டால் வெடிபட்டும், நடுத்தெருவில் அவர்கள் உடல் சின்னாபின்னமாகச் சிதறி சாகும்போதும், நாசமாப் போகும்போதும், ………………

இந்த உலகம் இப்போது போலவே அப்போதும் இப்படி நிம்மதியாகவே சுற்றிக்கொண்டிருக்கும்.

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

ஜூன் 12ம் தேதி, மும்பையில் இந்து, கிறிஸ்த மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஒரு முக்கியமான மத உரையாடல் (inter faith dialogue) நிகழ்வு நடைபெற்றது.

mumbai-meet
photo courtesy: The Times of India

இதில், இந்துத் தரப்பிலிருந்து காஞ்சி காமகோடி பீடம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்த துறவிகளான சுவாமி நிகிலேஷ்வரானந்தர் மற்றும் சுவாமி வாகீசானந்தர், ”வாழும் கலை” அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சுவாமி சிதானந்த சரஸ்வதி (பரமார்த்த நிகேதன், ரிஷிகேசம்), பிரம்மகுமாரிகள் ராஜயோக அமைப்பின் தலைவர் தாதீ ஜானகி, வேங்கடாசாரியார் சதுர்வேதி சுவாமி (ஸ்ரீ ராமனுஜர் மிஷன், சென்னை), சுவாமி விஷ்வேஷ்வரானந்த கிரி (சன்யாச ஆசிரமம், ஹரித்வார்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவத் தரப்பிலிருந்து ஜீன் லூயி பியரி டுரான் (வாத்திகன் போப் அரசின் அங்கமாக உள்ள மத உரையாடல்கள் கவுன்சிலின் தலைவர்) , பெட்ரோ லோபஸ் குவிண்டானா (இந்தியாவில் வாத்திகன் அரசின் தூதர்), கார்டினல் ஆஸ்வால்டு கிராசியாஸ் (மும்பை) மற்றும் ஆர்ச்பிஷப்கள் ஃபெலிக்ஸ் மாகாடோ (நாசிக்), தாமஸ் டாப்ரே (புனே), ராஃபி மஞ்சாலி (வாராணசி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னணி பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். கத்தோலிக்க திருச்சபையின் செயல்பாடுகளில் “மத உரையாடல்” (inter-faith dialogue) என்பதும் ஒன்று. ஊடகங்களில் இது கிறிஸ்தவத்தின் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றுவதாகவும், பிறமதத்தவர்களுடன் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் நல்லிணக்கத்துடன் இருக்க விரும்புகிறார்கள் என்பதற்கு சான்றாகவும் பெரிய அளவில் விளம்பரப் படுத்தப் படும். ஆனால் இதன் உண்மையான நோக்கம் கிறிஸ்தவம் அல்லாத மற்ற மதங்களையும் உண்மையானவை என்று அங்கீகரிப்பதோ அல்லது நேர்மையான, திறந்த மனதுடனான உரையாடலை நிகழ்த்துவதோ அல்ல. மாறாக, கிறிஸ்தவ மதமாற்ற வியூகங்கள் வகுக்கப் பட்டு, செயல்பாட்டில் இருக்கும் பிரதேசங்களில் அதற்கான சூழல் மற்றும் களம் எப்படியிருக்கிறது, அதனால் உருவாகும் சமூக மோதல்கள், எதிர்பாராத விளைவுகள் இவற்றை எப்படி சமாளிப்பது ஆகிய விஷயங்களில் வத்திகனுக்குத் தேவையான விவரங்களைத் திரட்டுவதும், எதிர்த் தரப்பின் பலம், பலவீனம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதும் தான் உண்மையான நோக்கங்கள். இதை போப் மற்றும் வத்திகன் வட்டாரங்களே தங்கள் விசுவாசிகளுக்குப் பலமுறை தெளிவு படுத்தியிருக்கின்றனர்.

பார்க்க: இந்து கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்

– சீதாராம் கோயல் கட்டுரை, தமிழில்

வெகுஜன பொதுப் புத்தியில் கிறிஸ்தவம் பற்றிய ஒரு நல்ல பிம்பத்தைக் கட்டமைக்கவும் இத்தகைய “உரையாடல் கூட்டங்கள்” உதவும் என்பதால் கத்தோலிக்க திருச்சபை முனைந்து இத்தகைய கூட்டங்களை நடத்தி வருகிறது. வழக்கமாக இத்தகைய கூட்டங்கள் கத்தோலிக்க சர்ச் அல்லது அமைப்புகளின் வளாகங்களிலேயே நடைபெறும். ஆனால் இந்தியாவில், மும்பைத் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான, ஆறுமுகன் பெயரில் அமைந்த ஷண்முகானந்தா ஹால் என்ற புகழ்பெற்ற அரங்கத்தில் தான் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, இத்தகையதொரு உரையாடல் கூட்டத்தினைக் கூட்டுவதற்கு கத்தோலிக்க திருச்சபை அழைப்பு விடுத்தது” என்று வாத்திகன் பிரதிநிதி தனது அறிமுக உரையில் கூறினார். இந்தியாவில் நடைபெறும் கிறிஸ்தவ மதப் பிரசாரங்கள், மதமாற்றங்கள் பற்றி அவருக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை, பாவம்.

ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் நிலைப்பாட்டை முன்வைத்து ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆற்றொழுக்குப் போன்ற ஹிந்தியில் அருமையாக உரையாற்றினார். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது உரையின் சாராம்சம், அறிக்கையாக வழங்கப் பட்டது. அந்த அறிக்கையின் மையமான கருத்துக்கள் –

[1] ஒரு மாதம் முன்பு இயேசு பிறந்ததாகக் கருதப் படும் ஜெருசலம் நகரில், இஸ்ரேல் நாட்டின் பிரதான யூத மதகுருவுடன் இதே போன்றதொரு உரையாடல் கூட்டத்தில் போப் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தின் முடிவில், போப் அவர்களும், யூத மதகுருவான ரபி யோனா மெட்சர் அவர்களும் இணைந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது ரபி, கத்தோலிக்க திருச்சபை யூதர்களிடையில் மதப்பிரசாரங்களும் மதமாற்றங்களும் செய்யாது என்று போப் உறுதியலித்திருப்பதாகக் கூறி அதற்கு நன்றி தெரிவித்தார். அதே மேடையில் போப் அவர்களும் அமர்ந்திருந்தார், மறுப்பு ஏதும் சொல்லவில்லை, அதனால் அவருக்கு இதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது. இதே போன்றதொரு உறுதிமொழியினை இந்துக்களுக்கும் போப் அளிக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

[2] இத்தகைய கூட்டங்களுக்குப் பின், இதில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்துக்களைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையென்றால் கூட்டம் நடத்துவதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். இந்து உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமாட்டோம் என்று சர்ச் இந்துக்களுக்கு உறுதியளிப்பதோடு, அதைப் பின்பற்றவும் செய்யாவிட்டால், இத்தகைய கூட்டங்களால் ஒரு பயனும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

[3] மறைந்த போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் உலகம் முழுவதையும் கிறிஸ்தவ மயமாக்குவதே ஏசுவின் “இரண்டாம் வருக்கான” ஆயத்தம் என்றும், அதற்காக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசியாக் கண்டம் முழுவதும் சிலுவையை வேரூன்ற வைப்பதே வாத்திகனின் குறிக்கோளும், செயல்திட்டமும் ஆகும் என்றும் 1999ஆம் ஆண்டு தன் இந்திய வருகையின் போது குறிப்பிட்டார். அப்படியானால், கிறிஸ்தவம் என்ற மதமே இல்லாத காலத்தில், உலகத்தைக் கிறிஸ்தவமயமாக்க சர்ச்சுகளும், திருச்சபைகளும் இல்லாத காலத்தில், ஏசுவின் முதல் வருகைக்கான காரண காரியம் என்ன என்பதை போப் அவர்கள் தான் தெளிவுபடுத்தவேண்டும்.

பார்க்க: கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

(கந்தமால் மற்றும் குஜராத் கலவரங்கள் பற்றி விசாரிக்க அமெரிக்க அரசு சார் அமைப்பான USCIRF இந்தியாவிற்கு வருகை தரப்போவதாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு குறித்து கீழ்க்கண்ட கருத்து தெரிவிக்கப் பட்டது).

[4] அமெரிக்க மத சுதந்திரக் கண்காணிப்பு கமிஷன் (USCIRF – US Commission on International Religious Freedom) என்ற அமைப்பை , இந்த தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிடும் வெளிநாட்டு அரசின் கருவியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த அமைப்பு இந்தியாவிற்கு வருகை புரியவும், இந்த நாட்டின் மத சுதந்திரம் பற்றி மதிப்பீடு செய்யும் முகமாக மக்களுடன் உரையாடவும் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அறிகிறோம். உள் தலையீட்டு நோக்கத்துடன் வரும் இந்த அமைப்பினை அனுமதிக்கக் கூடாது. நம் நாட்டின் உள்விவகாரங்களில் இத்தகைய தலையீட்டை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

[5] சர்ச்சுகளுக்காகவும், கிறிஸ்தவ குழுக்களுக்காகவும் மிகப் பெரிய அளவில் நன்கொடைப் பணம் “சேவைப் பணிகளுக்காக” என்ற பெயரில் இந்த தேசத்துக்குள் வந்து கொண்டிருக்கிறது என்பதனை நாங்கள் அறிவோம். இந்தப் பணம் சுகாதாரம், கல்வி முதலிய சமூக நலப் பணிகளுக்காக மட்டுமே செலவிடப் பட வேண்டும்; மதமாற்றங்களுக்காகச் செலவிடப் படக் கூடாது. சேவை நிறுவனத்தை எந்த மதத்தினர் நடத்துகின்றனர் என்று பாராமல், சேவை செய்யும் அனைத்து அமைப்புகளுக்கும் இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப் படவேண்டும் என்று இந்த உரையாடல் கூட்டத்தில் முன்மொழிகிறோம். ஒரு பொது நிதியை உருவாக்கி, இந்தப் பணத்தைப் பகிர்ந்தளித்து, அதன் பயன்பாடுகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டியும் நிறுவப் படவேண்டும்.

[6] கிறிஸ்தவ மிஷநரிகள் இந்துக்களை மதமாற்றுவது எளிதாகி வருவது போலத் தோன்றுகிறது. அதனால், அனைத்து இந்து அமைப்புகளும், சங்கங்களும் ஒன்றிணைந்து இந்துக்களிடையே புரிதலை உருவாக்கவும், மதமாற்றங்களை முற்றிலுமாகத் தடுக்கவும் பணியாற்ற வேண்டும்.

[7] இந்து தர்மம் இயல்பாகவே பன்முகத் தன்மை கொண்டது. அதனால் பல்வேறு வகையான மார்க்கங்களும், மரபுகளும் இந்த மண்ணில் ஒன்றையொன்று அழிக்கவெண்டும் என்ற தேவை இல்லாமல் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்து தர்மம் பல்வேறு விதமான நம்பிக்கைகளையும் மதங்களையும் செழித்து வளரச் செய்திருக்கின்றது; அதுவே தர்மத்தின் வழி. மற்ற நாடுகளிலிருந்து இந்த மண்ணிற்குள் வந்திருக்கும் மற்ற மதங்களும் இந்த முக்கியமான இலக்கணத்தை மதிக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் தேசியத்தனமையைக் குலைக்கவோ, அழிக்கவோ கூடும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இந்து தர்மமும் சரி, இந்து மக்களும் சரி, இந்தத் தேசத்தைத் தங்கள் இல்லமாகக் கொள்ள கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும், பார்சிக்களையும், யூதர்களையும் வரவேற்கின்றனர். அதே நேரத்தில், இந்த மதங்கள் எங்கள் மதத்தை அழிக்கவோ அல்லது மத உணர்வுகளைப் புண்படுத்தவோ கூடாது என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்து மதங்களும் பரஸ்பரம் மரியாதையுடனும், சமநிலையுடனும், நம்மை ஒரு தேசமாகப் பிணைக்கும் தேசிய உணர்வுடன் வாழவேண்டும் என்பதையே நாங்கள் விழைகிறோம். இந்த தேசிய உணர்வே முதன்மையானதாக இருக்கவேண்டும்.
[8] கிறிஸ்தவ சர்ச்சுகளும், அமைப்புகளும் மதம் மாறுபவர்களின் நோய்களையும், உடல் பிரசினைகளையும் தீர்த்து வைப்போம் என்று வெளிப்படையாகப் பிரசாரங்கள் செய்வதனை நாங்கள் அறிவோம். இது 1954-ஆம் வருடத்திய இந்திய மருந்துகள் சட்டப் படி (DRUGS AND MAGIC REMEDIES ACT) குற்றமாகும். இந்தக் குற்றம் புரிபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
[9] அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், மத்தியக் கிழக்கு தேசங்கள், இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளில், அந்த நாடுகளின் அரசுகளும், மரியாதைக்குரிய மதநிறுவனங்களும் இணைந்து, தங்கள் தேசிய கலாசாரத்தின் ஊற்றுமுகமாக விளங்கக் கூடிய மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியுடன் கூடிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இந்தியாவில் மட்டும் தான், மதம்-தவிர்த்த, ஆன்மிகம்-தவிர்த்த ”மதச்சார்பின்மை” என்று பெயரிடப்பட்ட ஒரு ஜந்துவை, அதிகாரபூர்வமாகவும், சட்டபூர்வமாகவும் வளர்ப்போம் என்று நாம் தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறோம்.

மதச்சார்பின்மை என்பது நிர்வாகத்திற்கான ஒரு முக்கியத்தேவை தான். ஆனால் அதுவே இந்த தேசத்தின் ஆன்மா ஆகிவிட முடியாது. இந்த தேசத்தின் ஆன்மா இந்து தர்மத்திலும், ஆன்மிகத்திலும் தான் இருக்கிறது. இந்த உண்மையை உணர்ந்து, இந்த தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாப்போம் என்பதில் உறுதியுடன் நிற்குமாறு நமது அரசையும், அனைத்து முக்கிய மத நிறுவனங்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

[10] இலங்கையின் புத்த மகாசங்கமும், புத்த அமைப்புகளும் அந்த நாட்டின் அரசு மதமாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளன. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

[11] கலாசார உள்ளீடு (inculturation) என்ற மதப்பிரசார யுக்தியின் கீழ், வேதம், ஆகமம், ரிஷி, ஆசிரமம், ஓம் போன்ற பற்பல இந்து மத கலைச் சொற்களையும், வாசகங்களையும், சின்னங்களையும் இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும். எங்கள் சமூகத்தில் தளர்ந்த நிலையில் இருக்கும் சில மக்களை மதமாற்றத்திற்காகக் குறிவைத்து அவர்களை ஏமாற்றும் செயல் தான் இது என்பதில் ஐயமில்லை. மேலும், இது இந்துக்களின் மத உணர்வுகளை அவமதிப்பதாகவும், காயப் படுத்துவதாகவும் இருக்கிறது. சில சர்ச்சுகள் வேதங்கள், உபநிஷதங்கள், கீதை, புராணங்கள் இவற்றிலுள்ள பகுதிகளைத் திருடிச் சேர்த்து ”புதிய இந்திய பைபிள்” என்று ஒரு பைபிளை உருவாக்கியிருப்பதாகவும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்த பைபிள் பிரதிகள் பொதுச் சுற்றில் இருந்தால் அவற்றை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். இந்திய அரசு இந்தப் பிரசினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

செய்திகளுக்கான சுட்டிகள்: 1, 2, 3