திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

சுதந்திர இந்தியாவில் திராவிட பிழைப்பு வாதம் என்பது துவங்கி ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகப்போகிறது. இந்த 100 ஆண்டுகளில் தமிழ் இனவாதத்தை விறகாக்கி மக்களின் அறிவை பெட்ரோலாக்கி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் பிழைப்பு வாதிகள் எவ்வளவு தீமைகளை செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அறுவெறுப்பும் அசூயையும் தான் மிஞ்சுகிறது. ஒரு பெரும் ஜனத்திரளையே சாராயத்திற்கும், மலினமான ஆபாச சிந்தனைக்கும், கலாச்சார சீர்கேடுகளுக்கும் ஆளாக்கி கலாச்சார அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். தின்னும் உணவுக்கு கூட இலவசமாக பிச்சை எடுப்பதை பெருமைக்குரிய அடையாளமாக்கி இருக்கிறது திராவிட இன அரசியல்.

Il mondo che per primo ha scoperto la violenza contro lesbiche da parte di un certo gruppo di sesso, da subito si è mobilitato. You can purchase generic form of amoxicillin tablets 160 mg haphazardly from healthstore.com. The company is headquartered in wigan, north wales, and is a privately held company.

Frequent colds, which may be due to a low dose of prednisone (1-4 mg per day) This medication only is available in inactively the united states from a licensed u. Online pharmacy: what to expect from our drug payers.

This is the perfect opportunity to learn about how your body works, how it can be strengthened and repaired with the right exercises, and how you can make it healthier. Has the world's largest proven oil and gas reserves, and the second largest reserves of natural gas, but price of clomiphene in nigeria New Brighton natural gas is only about 3 percent of its total oil consumption. Purchase avanafil the decision by china and the european union to ban the sale of some of iran’s petrochemical exports is part of the bloc’s drive to curb iran’s disputed nuclear program, and is a clear sign that the west wants to stop tehran from obtaining the components that can help it make nuclear weapons.

மக்கள் திரளை மதி மயக்கி, அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் இல்லாமலாக்கி அடி முட்டாள்களாக ஆக்கி இருக்கிறது திராவிட இயக்கங்கள். கழைக்கூத்தாடிகளை மட்டும் கொண்டாடிக்கொண்டு ஏனைய சுய சிந்தனைகளையும் அறிவுச்செயல் பாடுகள் அனைத்தையும் எள்ளி நகையாட செய்துள்ளது தான் கடந்த 100 ஆண்டுகளில் திராவிட இயக்கம் சாதித்தது. அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல். எளிய ,முட்டாள் தனமான அற்ப சிந்தனை ஒரு சமூகத்தையே இவ்வளவு தூரம் பின் தள்ளும் என்றோ, அடி மடையர்களாகவும் , அடிமைகளாகவும் இருப்பதை பெருமையாகவும் எடுத்துக்கொள்ளும் என்றோ மானுடவியலாளர்களோ, கலாச்சார ஆய்வாளர்களோ சொல்லியிருந்தால் கூட நாம் நம்பி இருக்க மாட்டோம்.

துவக்க புள்ளி

திராவிட இனவாத அரசியலின் ஆரம்பப்புள்ளி என்பது 18ம் நூற்றாண்டில் மக்களை பிரித்து ஆள வேண்டும் என்பதற்காகவும், பாலைவன மத விஷத்தை பரப்புவதற்காகவும்,ஐரோப்பிய கீழ்மைகளை மறைத்து கொள்வதற்காகவும் திட்டமிட்டு மாக்ஸ்முல்லர், பெஸ்கி பாதிரியார் மற்றும் ஜோஸப் கால்டுவெல் உள்ளிட்ட ஐரோப்பிய இனவெறியர்களும், மதவிபசாரம் (வியாபாரம் என்பது விபசாரம் என தப்பாக அச்சிடப்படவில்லை, சரியாக விபச்சாரம் தான் . மங்கல வழக்கில் வேண்டுமானால் ஆன்ம அறுவடை )செய்யவும், இந்த தேசத்தின் மக்களை ஆக்ரமித்து சுரண்டவும் செயல் படுத்திய அரசியல் ஆயுதம் தான் திராவிட ஆபாசத்தின் துவக்கம். 19ம் நூற்றாண்டில் அயோத்தி தாச பண்டிதர் இந்த நோயால் சில காலம் மனம் பிறழ்ந்து இந்த வீண் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார். உச்ச கட்டமாக 1916 ல் தேர்தல் என்பது திருடர் பாதை என்று சொல்லி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் சுரண்டல் திராவிடர் கழக கும்பலின் மூலமான  நீதிக்கட்சியின் துவக்கத்திலிருந்து பார்க்கலாம்.

kumudam_cartoon_dmk1இப்போதுள்ள மக்களிடம் திராவிட இயக்கத்தின் கொடை  என்றால் என்ன? என்று கேட்டால் சாராயம் விற்று மக்களின் வாழ்க்கையில் மண்ண அள்ளி போட்டது. தினம் உண்ணும் உணவிற்கு கூட அரசின் இலவசத்தை எதிர்பார்த்து தட்டேந்தி நிற்க வைத்தது.750 ரூபாய் மதிப்புள்ள ஃபேனை கூட தன் உழைப்பில் சம்பாதித்து வாங்க வக்கில்லாமல் பிச்சையாக பெற வைத்தது. விவசாயத்தை துடைத்தெறிய பாடு படுவது, 47 ஆண்டுகளில் எந்த விதமான வளர்ச்சி திட்டங்களோ, தொலை நோக்கு திட்டங்களோ இல்லாமலேயே மக்களை தொடர்ந்து ஏமாற்றுவது. புரட்சிகரமாக மக்களுக்கு புது புது வழிகளில் லஞ்சம் கொடுப்பது. தேர்தல்களில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதை ஒரு செவ்வியல் கலையாக வளர்த்தெடுத்து இருப்பது. மாற்று கருத்து சொல்பவர்களை கொன்றொழிப்பதை கம்யூனிஸ்ட்களிடமிருந்து பெற்று அதை மிகவும் நுட்பத்தோடும் ரசனையோடும் செதுக்கி எடுத்துள்ளது. தனிமனித ஒழுக்கம், பிறன் மனை விழையாமையில் துவங்கி கூட்டு கற்பழிப்பு வரை அனைத்தையும் நியாயம் என்பதாக மக்களை நம்ப வைத்தது.

தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது. சிந்திப்பது, வாசிப்பது எல்லாம் பாவச்செயல் என்று மக்களுக்கு போதித்தது. கட் அவுட் கலாச்சாரம். அறுவெறுப்பு வரும் வகையில் மற்றவர்களை புகழ்வது, சுய மரியாதை என்பதை தன் கட்சி தலைவனின் பேரன் முதற்கொண்டு அனைவரின் காலையும் அருகில் தரிசனம் செய்வது என்பது மாதிரியான அகராதிகளை ஏற்படுத்தியது. தமிழ் மொழியை பற்றி ஒன்றுமே தெரியாமலும் , அதன் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் வாய் சவடாலில் அதை அழிப்பது….. இன்னும் ஒரு 1,76,000 கோடி சாதனைகள் இருப்பதால் நாகரீகம் கருதி இதோடு நிறுத்தி கொண்டு 1860-70 கால கட்டத்திற்கு செல்லலாம்.

1850 களுக்கு பிறகு பிரிட்டிஷ் இந்தியாவில் நாராயண குரு, சட்டம்பி சாமிகள் உள்ளிட்ட ஞான குருமார்கள், சாது திரு அருட்பிரகாச வள்ளலார், துவங்கி ஜோதிராவ் புலே, ராஜாராம் மோகன் ராய் , ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சுவாமி விவேகானந்தர் துவங்கி நெடிய அறிஞர் மரபு இந்து பண்பாட்டில் இடையில் புகுந்த வெற்று அரசியல் சடங்குகளையும், தேவையற்ற அடுக்கு முறைகளை களைந்து இந்து பண்பாடு அதன் பரிபூர்ண ஒளியில் ஒளிர தேவையான நடவடிக்கைகளை தங்கள் ஞானத்தால் செயல் படுத்தினார்கள்.

அறிவோ, ஞானமோ கைகூடாத எளிய மனிதர்கள் இவர்களின் மறு சீரமைப்பை வெறும் பிராமண எதிர்ப்பாக மட்டும் எளிமைப்படுத்தி கொண்டும் தங்களின் அதிகார சமன்பாடுகளில் வரும் பிழைகளுக்கு மேல் நிலை சாதி என நம்பப்படுபவர்களை குற்றம் சாட்டிக்கொண்டு மிஷனரிகளின் கவனமாக பின்னப்பட்ட சதி வலைகளின் முக்கிய கண்ணிகளாக மாறிப்போயினர். அப்படித்தான் பிராமணர்களுக்கு எதிரான இயக்கம் கேரளாவில் 1880 களில் துவங்குகிறது. நம்பூதிகளுக்கும் நாயர்களுக்கும் இருந்த அரசியல் சமன்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடு நாயர்களை ஒரு அரசியல் இயக்கமாக அதை முன்னெடுக்க தூண்டியது. ஒடுக்கப்பட்ட புலையர்களுக்கும், ஈழவர்களுக்கும் நாராயண குரு சமூக அரசியல் மீட்சிக்கான நிஜமான காரியங்களை ஆத்மார்த்தமாக முன்னெடுத்ததால் அந்த சமூகங்கள் மீட்சியை நோக்கி சென்றன. சாதாரண அரசியல் சதிகளுக்கு மேல் செல்லத்தெரியாத எளிய மனிதர்களின் கையில் இனவாத அரசியல் வந்து சேர்ந்தது இப்படித்தான். அவர்களுக்கு நாராயண குரு சட்டம்பி சாமிகள் போல ஞானம் இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் அவர்கள் அரசியல் அதிகாரத்தை குறி வைத்து இந்த வலைக்குள் விழுகிறார்கள்.

இதன் பின் தொடர்ச்சியாக அன்றைய சென்னை ராஜதானியில் நடக்கும் பிரீமியர் தேர்தலில் டி.எம். நாயர், சர்.பி.டி. தியாக ராஜன், பொப்பிலி மகராஜா உள்ளிட்டோர் தேர்தலில் தோல்வியை தழுவுகிறார்கள். இந்த மக்கள் ஆதரவில்லாத தோல்விக்கு பிராமணர்களே காரணம் என ஒரு கண்ணுக்கு தெரியாத காரணத்தை கற்பிக்கிறார்கள். அப்போது பிராமண சமூகமே அதிகம் கல்வி அறிவு பெற்ற சமுகமாக இருந்தது. வேலை வாய்ப்பிலும் அவர்களே முண்ணனியில் இருந்தனர். இது அப்போது பெரும் நிலச்சுவாந்தார்களாகவும், ஜமீந்தார்களாகவும் இருந்த பிற ஜாதியவர்களுக்கு கவலைக்குரியதாக இருந்தது. அப்போது உலகம் முழுக்க ஒரு ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஃப்ரென்ச் மறுமலர்ச்சி தோற்றுவித்திருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் உலகை பிச்சைக்காரர்களாக தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் சர்வாதிகார கம்யூனிஸ சிந்தனை உலகம் முழுக்க தப்பும் தவறுமாக புரிந்து கொள்ளப்பட்டு வந்த காலம். கல்வி அறிவு பெற்றவர்கள் சுதந்திர சிந்தனைக்கும், ஜன நாயகத்திற்கும் ஆட்பட்டு தங்களுடைய நில உடைமைக்கு எதிராக ஜனத்திரளை திருப்பி விட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. பாமர மக்களுக்கு நடுவில் படித்தவர்கள் ஊடுருவி அவர்களை சுரண்டுவதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி விட்டால் தங்களின் நில உடைமைக்கும் வரி வசூலிப்பிற்கும், ஆடம்பர வாழ்விற்கும் ஊறு விளைந்து விடுமோ என்று பதட்டப்பட்டனர். இந்த சிந்தனை சாக்கடை சென்னை ராஜதானியில் மட்டுமின்றி, திருவனந்தபுரம் வரை ஓடியது. ஒருங்கிணைந்த ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் இருந்த நிலக்கிழார்கள் இதை தடுக்க பிராமண சமூகத்திற்கும் ஏனைய பிற சமூகத்திற்கும் இடையே ஒரு நச்சு ஏரியை வெட்டினர்.

அதை முழுக்க தங்களின் வெறுப்பு பிரச்சாரத்தால்  நிரப்பினர். சில எளிய பிராமண துறவிகளின் சடங்காச்சார பற்றையும், தீண்டாமையையும் கொண்டு பிராமண எதிர்ப்பு கரையை பலப்படுத்தினார்கள். பிளவு படுத்தப்பட்ட மக்களை வெறியேற்ற இத்தாலிய மிஷனரியான ராபர்ட் டி நொபிலி கண்டு பிடித்து கொடுத்துள்ள இனவாதத்தையும், மாக்ஸ்முல்லரின் மொழிசார் அடையாளத்தையும், தூய இன சிந்தனைகளையும் தங்களின் சாதனங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். இந்த களவாணித்தனத்தை ஒருங்கிணைக்க ஒரு நாளிதழ் துவங்குகின்றனர். அதன் பெயர் ஜஸ்டிஸ் . நீதி என்று பெயர் வைத்து கொண்டு அநீதி இழைத்த கும்பல் அன்பின் மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு அதிக கொலைகள் செய்யும் மார்க்கத்தின் வழியை அப்படியே பின்பற்றியது. ஏமாந்த தென் இந்திய ஆட்டுக்கூட்டம் திராவிட இனவாத ஓநாய்களின் பின்னே அப்படியே மே…, மே  என்று ஓடியது…ஓடிக்கொண்டிருக்கிறது.

justice-katchiபின்னர் அது அரசியல் இயக்க அவதாரம் எடுத்தது. ஜஸ்டிஸ்பார்ட்டி ஆனது. கறையான் புற்றுக்குள் பாம்பு குடியேறுவது போல நாய்க்கர் அதை கைப்பற்றினார். தமிழ் பெயரால் திராவிடத்தின் பெயரால் தங்களின் ஜமீந்தாரிமுறையை அங்கீகரிக்க மறுத்த அல்லது தங்களின் நில உடைமையை கேள்வி கேட்ட பிராமண சமூகத்தையும், பிராமணர்கள் சொல்கேட்டு செய்யும் வேலைக்கு கூலி கேட்டும், உழைப்பிற்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்றும் கேட்ட சூத்திரர்களை பழி தீர்ப்பதோடு காலம் காலமாக இவர்களின் வளர்ச்சியை அழிக்க சூளுரைத்த இயக்கமாக திராவிட இயக்கம் பரிணாம வளர்ச்சி அடைந்தது.

பொப்பிலி மகராஜா, சர்.பிடி தியாகராஜர், டி எம் நாயரில் துவங்கி அனைத்து நீதிக்கட்சி தலைவர்களும் எப்படி பெரும் நில உடைமையாளர்களாக இருந்தார்கள் என்பதையும் அவர்கள் அனைவருக்கும் எதிராக தொழிலாளர் போராட்டங்கள் ஏன் நடந்தது என்பது பற்றியும் தெரிய வரும் ஒருவருக்கு அவர்கள் ஏன் அரசியல் இயக்கம் துவங்கி மக்களை மண்ணாந்தைகளாக ஆக்க பாடு பட்டார்கள் என்பது புரிய வரும். மக்கள் மீது தீராத குரோதம் உள்ளவர்கள் மட்டுமே செய்யகூடிய தீமைகளை திராவிட இயக்கம் 100 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது செய்துள்ளது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் தாய் மொழிப்பற்று மிக்க திராவிட இயக்க முன்னோடிகள் ஏன் மொழி சார் வெறியை வளர்த்தெடுக்கிறார்கள் என்பதை யோசிக்கும் யாருக்கும் அதன் உள்ளரசியல் புரியும்.

ஆனால் இந்த இனவாத, மொழிவாத பிரிவினை பொருள் ஆந்திராவிலோ, கர்னாடகவிலோ, கேரளாவிலோ பெருமளவில் விற்பனையில் சூடு பிடிக்க வில்லை. இயல்பிலேயே கொஞ்சம் மந்தமான மன நிலையும், சோம்பேறித்தனமும் உள்ள தமிழ் ஆடுகள் இதற்கு அதிகமாக பலியாகின. சாதாரண அறிவு இருக்க கூடிய சிந்திக்க வாய்ப்பிருக்கும் யாரும் திராவிட இயக்க வரலாறை படித்தாலே அதன் முரண் பாட்டை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். அனைத்து நில உடைமையாளர்களும் சேர்ந்து எளிய மக்களின் நில உரிமைக்காக போராடுகிறார்களாமே? தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் தமிழ் மோழியை தூய்மைப்படுத்தவும் அதன் மேன்மைக்காக வாழ்வை ஒப்புக்கொடுக்கவும் இருக்கிறார்களாமே? இது போன்ற கேள்வித்தொடர்களை வரிசைப்படுத்தினாலே அதில் உள்ள முரண் மெய் நம்மை அச்சப்படுத்தும். ஆனால் எந்த கேள்வியும் கேட்காமல் வாயையும் அறிவையும் மூடி வைத்து வாய்பிளந்து வேடிக்கை பார்த்து இன்னும் திராவிட இயக்கங்களுக்கு நிதி கொடுத்தும் அந்த இயக்கத்தில் உறுப்பினராகவும் தொடரும் சோகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம் எவ்வளவு மட்டிகளாக இந்த மக்கள் இருக்கிறார்கள் என்பதை. இதை சொல்ல வரும் யாரையும் விஞ்ஞானிகளை திருச்சபை கொலைசெய்வது போல தமிழர்கள் தண்டனை தந்து விடுகிறார்கள். தெரியாமல் கூட இவர்கள் விழிப்புணர்வு அடைந்து விடக்கூடாது எனும் சதியின் கண்ணிகளை இன்னும் மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.

ஒழுக்க கேடு எனும் தூண்டில்

திராவிட சதித்திட்டம் தேர்ச்சியாக தீட்டப்பட்டு ஒரு மாயாஜாலக்காரன்,குறளிவித்தைக்காரனின் நேர்த்தியோடு வடிவமைக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.தமிழ் மக்கள் மீதான தீச்சொல்லாக அப்படியே அது நிற்கிறது. குறளி வித்தை காட்டுபவர்களுக்கும் சர்க்கஸ் சாகஸகாரர்களுக்கும் அதன் முழு பரிமாணமும் தெரிந்திருக்க வேண்டியதில்லை அல்லவா? அது போல திராவிட சதியை நடித்து நிறைவேற்றும் சிலருக்கு அதை பற்றி முழு விழிப்புணர்வு இல்லாமல் கூட இருக்கும். திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு கதை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலே கூட நன்றாக நடித்து கொடுத்து விட்டு செல்வது போலத்தான். பல பாத்திரங்கள் தேர்ந்து அதை முழுமையாக்குவது போல. திரைப்படத்தை முழுமையாக பார்க்கும் போது தான் தெரியும் சிறு பாத்திரம் ஏந்தி இருக்கும் அந்த நடிகனின் பாத்திரம் எப்படி துல்லியமாக கதைக்குள் பொருந்தி வருகிறது என்று. இதெல்லாம் நம் வீட்டில் இருக்கும் திராவிட இயக்க உறுப்பினர்களுக்கு தெரியாமலே கூட அவர்கள் இந்த சதியின் பாகமாக இருக்கலாம். “ நள தமயந்தி திரைப்படத்தில் பெண் கதாபாத்திரம் ஆண் பாத்திரத்திடம் ஒரு விரல் செய்கையை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்ட சொல்வார். என்ன என்று கமல்கேட்பதற்கு உனக்கு தெரியவேண்டாம் அவருக்கு புரியும் என்பார்.

திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம். அம்மா, அக்கா, தங்கை, அடுத்தவன் மனைவி,மகள் என்பதெல்லாம் சமூகம் நம் மேல் இட்ட குறியீடு தான் பாலியல் சிந்தனைகளுக்கும் செய்கைகளுக்கும் அது தடையாக இருக்க கூடாது. என்பதாக துவங்கி சாராயம் குடிப்பது எப்போதும் நல்லது. குடித்து விட்டு வந்து பெண்டாட்டி பிள்ளைகளை உதைப்பது நாகரீகம். முட்டாள்கள் தான் படிக்க வேண்டும். யாரையும் மதிக்க வேண்டியதில்லை. அனைவரையும் உன்னை விட கீழானவர்களாகே நினைத்து பழகு. அடிமையைபோல நடத்து. அறிவுச்செயல்பாடுகளை முற்றிலும் தடை செய். ஜனநாயகம் மட்டமானது, மன்னராட்சி முறையே சிறந்தது . தினம் குளிப்பது பாவம், பல் துலக்குவது பெருங்குற்றம். அடி முட்டாளாக இருப்பது உன் அடிப்படை உரிமை . ஆபாச வசை சொல் தான் இயல்பானது, நாகரீக மொழியில் மரியாதையாக பேசுவது பெரும் பாவம். குடும்பம் குழந்தை குட்டிகள் என சமூகத்தோடு இணைந்து வாழ்வது தண்டனைக்குரிய செயலாக முன்வைத்தது. இந்த எதிர் கலாச்சாரமே பாமரர்களையும் சில அறிவுள்ளவர்களையும் ஈர்த்து அவர்களின் வாழ்க்கையை அழித்து சமூகத்திலும் பேரழிவை ஏற்படுத்தியது. திராவிட சிந்தனையை தற்கொலை குண்டுகளோடு ஒப்பிட்டு கேள்விப்பட்டிருப்பீர்கள் அதன் நிஜப்பொருள் தானும் அழிந்து சமூகத்திலும் பேரழிவை நிகழ்த்தும் போராளியாக திராவிட இயக்கம் இருக்கிரது. என்பதை புரிந்து கொண்டு அந்த மன நலம் பாதிக்கப்பட்ட மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.

எதிர்கலாசார உத்தியாக அதன் தலைவர்கள்குறைந்த பட்சம் 3 அதிகாரபூர்வ திருமணம் செய்வது, வேசைகளுடன் கூத்தடிப்பது, பாலியல் வக்கிர சேஷ்ட்டைகளை பெருமையாக மற்றவர்களுக்கு சொல்வது. பொது இடங்களில் ஆபாச இரட்டை அர்த்தமுள்ள வக்கிரங்களை சொல்லி மற்றவர்களை நெளியச்செய்வது. போலீஸ் கார தகப்பன் தன் பெற்ற மகளோடு பாலியல் வல்லுறவு கொள்வது இலக்கியம் என்று பிதற்றுவது. ஜனநாயக நெறிமுறைகளை கடை பிடிக்காமல் தன் சந்ததிகளை மட்டும் பதவியில் அமர்த்துவது. அனைவரையும் காலில் விழச்செய்வது. படித்து கொண்டிருக்கும் தன் மகளின் தோழியை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்வது இதில் நான் அன்பழகனையும், கருணாவை மட்டும் சொல்ல வில்லை. அனைத்து திராவிட இயக்க தலைவர்களுக்கும் இந்த குணங்கள் பொருந்தி வருவதை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிய வரும். எந்த குடும்பப்பெண்ணையும் தன்னுடன் படுக்கையறையை பகிர்ந்து கொள்ள வெக்கமில்லாமல் அழைப்பது, குடும்ப பெண்களை “ அவள் பத்தினியில்லை, நான் உத்தமனில்லை” என்று அடுக்கு மொழியில் தன் அழுகிப்போன மன நிலையை வெளியில் ஜோடித்து சொல்வது , சிறுமிகளை திருமணம் செய்வது, என்று எழுதகூசுமளவுக்கு கலாச்சார சீர்கேட்டின் வடிகாலாக இந்த நிறுவனம் இருக்கிறது.இது போன்ற எதிர்கலாச்சார நிகழ்வுகளுக்கு முன்மாதிரியாக இருப்பதை உலகிற்கு உணர்த்தவே ஈவேரா துவங்கி கருணா வரை நிர்வாண கிளப்களில் பங்கேற்பது, 3 திருமணம் துவங்கி குஷ்பூ, நமீதாவை அருகில் இருந்து காட்சி இன்பம் பெரும் வரைக்கும், மேலும் நார்சிஸ உச்சமாக செயல்படும் ஜெயலலிதா வரை இதை நீங்கள் பொருத்தி பார்க்கலாம்.

தமிழ் பொழி வியாபாரம்: இவர்களின் இன்னொரு வியாபார சாதனம் தமிழ் மொழி மேம்பாடு. எனும் பொய். இதை பற்றி விரிவாக அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரை ஆசிரியர் வீர.ராஜமாணிக்கம்   ஒரு கட்டுமானப் பொறியாளர்.   தமிழ்நாடு  மாநில பா.ஜ.க  இளைஞர் அணி  செயற்குழு உறுப்பினர்; பொறியாளர் அணி செயலாளர்.  நல்ல இலக்கிய வாசகரும் சமூகத் தொண்டரும்  ஆவார்.

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]

மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

(தொடர்ச்சி…)

3.2.1.1 இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்புக்கான பதில்கள்

(1) கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவுக்கு மாறாக, ஓர் அரசர் விசுவாசமில்லாத ஜமீந்தாரைத் தண்டிப்பது என்பது, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்காக தண்டிப்பதற்குச் சரியான ஒப்பீடாகக் கருத முடியாது. இந்த உவமையில் இருக்கும் பிரச்சினைகள் கீழே:

ஒரு கொடையைக் கொடுத்துவிட்டு மீண்டும் எடுத்துகொள்வதன் மூலம் பெரிய தீங்கு விளையுமென்றால், அந்த கொடையை மீண்டும் எடுத்துகொள்வது ஒழுக்கக்கேடான விஷயம். உதாரணமாக நான் யாருக்காவது கிட்னி தானமாக கொடுத்துவிட்டு கிட்னியை பெற்றுக்கொண்டவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காக கிட்னியை திருப்பிக்கொடு என்று கேட்பது ஒழுக்கக்கேடான விஷயம். பொருளாதார ரீதியில் வறிய நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு செலவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது அதற்கு பதிலாக ஃபார்முலா பால்தான் கொடுக்க வேண்டும் என்று கோருவது போன்றது. மீறி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து கொடுத்த பணத்தைப் பிடுங்குவது என்பது ஒழுக்கக்கேடானது ஏனெனில் அது குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.

adam-eveமுதல் பாவத்துக்கான யாஹ்வே தெய்வத்தின் தண்டனை என்பது ஆதாம் ஏவாள், இன்னும் அவர்களது பல கோடிக்கணக்கான சந்ததியினர், இன்னும் மிருகங்களின் சந்ததியினர் ஆகியோருக்குக் கொடுத்திருந்த கொடைகளை நீக்குவதன் மூலம் உயிர், கை, கால், வாழ்க்கை அனைத்தையும் பாதிக்கும்படி செய்துவிட்டது. ஆகவே கொடுத்த கொடைகளை நீக்குவது தார்மீக நிலைப்படி தவறானது. அரசர் தனது பட்டாவை விலக்கிகொள்வது என்பது இப்படிப்பட்ட மாபெரும் அழிவையும் துயரத்தையும் ஜமீந்தாரரின் சந்ததிகளுக்கு கொடுக்கவில்லை. ஆகவே அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொள்வதை ஒழுக்கக்கேடு என்று சொல்லமுடியாது.

யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை விலக்கிக்கொண்டதன் மூலம் ஆதாம் ஏவாளுக்கு மிகப்பெரிய துன்பம் நேர்ந்தது என்பதையும், இவற்றோடு அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொண்டதை ஒப்பிடமுடியது என்பதையும் பார்த்தோம். எந்தக் குற்றத்துக்காக யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை நீக்கிக்கொண்டதோ அந்தக் குற்றம், ஓர் அரசர் பட்டாவை நீக்கிகொள்ளத் தூண்டிய குற்றத்தைவிட மிக மிகக் குறைவான குற்றம் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஓர் அரசர் ஓர் அமைப்புக்குள் வேலை செய்கிறார். அந்த அமைப்பில் ஒருவரை ஜமீந்தாராக ஆக்கி பிறகு அவர் விசுவாசமில்லாமல் போய்விட்டால், அந்த அரசருக்கும், அந்த அரசுக்கும் பெரும் கேடு விளையும். ஆனால், ஆதாம் ஏவாள் விஷயத்தில் அவர்களது விசுவாசமின்மை காரணமாக எந்த ஒரு பெரிய கேடும் நடந்துவிடப்போவதில்லை. அவர்கள் கனியை உண்டதால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.

(2) இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பில், ஆதாம் ஏவாளைப் பொருத்தமட்டில் எது இயற்கைக்கு முந்தைய கொடை, எது இயற்கையான குணாம்சம் என்ற வித்தியாசம் சமாளிப்பாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வேறுபாடு ஆதியாகமக் கதைகளில் எங்கேயும் இல்லை. இதன் ஒரே வேலை, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்குக் கொடுத்த தண்டனையைச் சமாளிப்பதுதான்.

jesus-baptism(3) யாஹ்வே தெய்வம் முழுமையான நல்லது பொருந்திய தெய்வம் என்ற கொள்கைக்கு இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பு ஆப்படிக்கிறது. முன்னரே குறிப்பிட்டதுபோல, இந்தச் சமாளிப்பு ஆதாம் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்களது சந்ததியினர் ஆதாம் ஏவாளின் இயற்கை குணாம்சங்களை வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், இயற்கைக்கு முந்தைய கொடைகளைப் பெறவில்லை. ஆனால், இந்தக் குணாம்சங்களால், மனிதர்கள் பிறக்கும்போதே யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காதவர்களாகப் பிறக்கிறார்கள் என்று கிறிஸ்துவ மதம் கூறுகிறது. முதல் பாவத்தை ஞானஸ்நானம் செய்து போக்கிக்கொள்ளாமல் இறக்கிறவர்களுக்கு நடுநரகம் (perdition) காத்திருக்கிறது என்று அது கூறுகிறது. ஒரு குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது. விட்டேத்தியாக இந்த யாஹ்வே தெய்வம் இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால் அவர்களை விரோதியாகவே கருதும் ஒரு யாஹ்வே தெய்வத்தைத்தான் கிறிஸ்துவம் காட்டுகிறது. ஒன்றும் செய்யவில்லை என்றாலோ, அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்னால் மரித்துவிட்டாலோ அவர்களுக்கு நடுநரகம்தான். சுயமாக யாஹ்வேயை மதிக்க சொந்தமாக முடிவெடுக்கும் முன்னாலேயே அவர்களுடன் வீம்புக்கு என்று சண்டைக்குப் போகும் ஒரு தெய்வமாகத்தான் கிறிஸ்துவ தெய்வத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது.

தனியே இன்னொரு வார்த்தை- கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியாவின் இந்தக் கட்டுரையில் கடைசிவரி குறிப்பிடத்தகுந்தது.

“The doctrine of the Church supposes no sensible or afflictive punishment in the next world for children who die with nothing but original sin on their souls, but only the privation of the sight of God.”

“முதல் பாவத்தை மட்டுமே சுமந்து இறக்கும் குழந்தைகளுக்கு (அதாவது ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிடும் குழந்தைகளுக்கு) அறிவுக்குப் பொருந்தாத கொடூரமான தண்டனை வழங்கப்படாது; ஆனால், யாஹ்வே தெய்வத்தின் பார்வை மட்டும் விழாது என்பதே சர்ச்சின் கொள்கை.”

infant-baptismஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிட்ட குழந்தைகளுக்கு என்ன விதி என்று கிறிஸ்துவ மதம் கூறுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வை விழுவதையே ரொம்பப் பெரிய விஷயமாக சொல்லிக்கொள்ளும் கிறிஸ்துவ மதத்தில் அது கிடைக்காது என்பதை அது ஏதோ பெரிய விஷயம் இல்லை என்பதுபோல சும்மா, “ஆனால்” (but only) போட்டுத் தாண்டிப்போய்விட்டார்கள். இரண்டாவது, ஞானஸ்நானம் செய்யப்படாமல் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்ட குழந்தைகளுக்கு இந்த மாபெரிய யாஹ்வே தெய்வத்தின் பார்வை கிட்டாது என்பது ஆதாம் ஏவாளின் சந்ததிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மாதிரி அநீதியான தண்டனை இல்லையா? யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வையை அவ்வளவு பெரிய விஷயமாக வைத்துகொண்டு, இந்த ஞானஸ்நானம் செய்யாத குழந்தைகளுக்கு அது கிடையாது என்பதன்மூலம் இந்தக் குழந்தைகள் பொறுப்பேற்க முடியாத ஒரு விஷயத்துக்குப் பழிவாங்குகிறது கிறிஸ்துவக் கொள்கை. [8]

3.2.2 முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சமாளிக்க உதவும் “உருவாக்கியவர் உரிமை” நிலைப்பாடு

“உருவாக்கியர் உரிமை” (Creator Card) என்ற கொள்கையை முன்வைப்பவர்கள் யாஹ்வே தெய்வம் உலகத்தை உருவாக்கியது என்ற காரணத்தால், உயிர்களுக்கு எந்த இயற்கையைக் கொடுக்கவேண்டும், கொடுக்க வேண்டாம், கொடுத்த எந்த உரிமையை எடுத்துகொள்ளலாம் என்கிற முழு உரிமை உண்டு; அதே நேரத்தில் அதனால் அவரை எந்தவிதமான ஒழுக்க கேட்டுக்குள்ளும் அடைக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

3.2.2.1 “உருவாக்குபவர் உரிமை” சமாளிப்புக்கு பதில்

உருவாக்குபவர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒருவர் தான் உருவாக்கும் உயிர்களுக்கு வலி, துயரம், சாவு ஆகியவற்றைக் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஒழுக்கத்தின் உறைவிடமாக சொல்லிக்கொள்ளக் கூடிய யாஹ்வே இந்த ஒழுக்கரீதியில் தவறான தண்டனைகளைக் கொடுக்க என்ன நியாயம் இருக்கிறது? எந்த அளவுக்கு முதல் பாவத்தின் காரணமாக யாஹ்வே தெய்வம் செய்கிறதோ அதன்படியே இது ஒழுக்கக்கேடு.

3.3 முதல் பாவக் கொள்கையின் அறிதல் பிரச்சினை

யாஹ்வே அனைத்தும் அறிந்ததாக இருந்தால், ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் தோற்றுப்போவார்கள் என்று அறிந்திருக்க வேண்டும். நல்ல, கருணை நிறைந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தெய்வம் ஏன் தண்டனையே விளையும்படியும் அந்த தண்டனையின்படி பல கோடி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு என்று இந்த நாடகத்தை நடத்தவேண்டும், அதுவும் இதற்கு மாற்றாக பல நல்ல முடிவுகள் இருக்கும்போது?

யாஹ்வே தெய்வம் எல்லாம் அறிந்ததாக கற்பனை செய்யப்படுவதால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் அறிந்திருக்க வேண்டும். பல கிறிஸ்துவத் தத்துவவியலாளர்கள், [9] மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் விளைவுகளையும் (counterfactuals of freedom) அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு மனிதனின் சுதந்திர எண்ணம் மூலம் எடுக்கும் செயல்களின் விளைவுகளையும், அந்தச் செயல்களை செய்யாமலிருப்பதன் விளைவுகளையும் யாஹ்வே தெய்வம் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல் நடந்திருக்கக்கூடிய, நடக்காதிருக்கக்கூடிய எல்லா விளைவுகளையும் அறிந்திருக்கும் இது நடு அறிவு (middle knowledge) என்று அறியப்படுகிறது. அதாவது, ஆப்ரஹாம் லிங்கன் காலை உணவை ஆர்டர் செய்தால், என்ன ஆர்டர் செய்வார் என்பதையும் யாஹ்வே அறிந்திருக்கவேண்டும்.

creation-of-adam-and-eveமுதல் பாவக் கொள்கையைப் பொருத்தமட்டில், ஆதாமும் ஏவாளும் எப்படியும் தோற்றிருக்கக்கூடிய ஓர் உலகத்தை யாஹ்வே படைத்திருக்க வேண்டாம். பதிலாக, அவரது நடு அறிவைப் பயன்படுத்தி, ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடியதோர் உலகத்தைப் படைத்திருக்கலாம். அதன் மூலம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்தம் பல கோடி சந்ததியினருக்கும் பல கோடி மிருகங்களுக்கும் அத்தனை வலி, துயரம், சாவு அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். யாஹ்வேக்கு, ஆதாமும் ஏவாளும், எப்படிப்பட்ட உலகத்தைத் தோற்றுவித்தாலும், பரிசோதனையில் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்திருக்கும் என்று ஒருவர் பதில் சொல்லலாம். அப்படியென்றால், அவர் வேறொரு ஆதாம் ஏவாளை- பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய ஆதாம் ஏவாளை- உருவாக்கியிருக்கவேண்டும். மற்றொருவர் எல்லா ஆதாம்-ஏவாள்களும் பரிசோதனையில் தோற்றிருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படியென்றால், மனிதர்களை உருவாக்கும் வடிவமைப்பிலேயே தவறு இருக்கிறது என்பதே பொருள். கருணையும் நன்மையுமே பொங்கித்ததும்பும் இந்த யாஹ்வே தெய்வம் ஒன்று பரிசோதனையை மாற்றியிருக்க வேண்டும் அல்லது மனிதர்களையே உருவாக்கியிருக்கக்கூடாது.

ஆகவே இப்படிப்பட்ட தவறான “முதல் பாவ”க் கொள்கையோடு கிறிஸ்துவ மதம் இருக்க முடியாது என்று முடிக்கிறேன்.

4. “முதல் பாவ”க் கொள்கை இல்லாமலும் இருக்கமுடியாது

jesus-dies-on-cross-proseதுரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலரது விருப்பத்துக்கு மாறாக, கிறிஸ்துவர்களால் முதல் பாவம் இல்லாமலும் இருக்கமுடியாது. கிறிஸ்துவக் கடையின் மாடியில் உட்கார்ந்திருக்கும் கிறுக்குப் பிடித்த கிழவியைத் துரத்த முடியாது. ஏனெனில் அவளின் பெயரில்தான் சொத்துப்பத்திரம் இருக்கிறது. உதாரணமாக, “முதல் பாவம்” இல்லாமல் கிறிஸ்துவத்தின் முதன்மைக் கோரிக்கைகள் பிரச்சினைக்குள்ளாகும். அதாவது எல்லா மக்களுமே பாவத்தில் இருக்கிறார்கள் என்ற கொள்கையும், எல்லா மக்களுமே குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக மேலும் மேலும் பாவங்கள் செய்யவே முயல்வார்கள் என்ற கொள்கையும், அவர்களது குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக அவர்களது குறைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தானாகவே மீண்டெழச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கொள்கையும், இந்தப் பாவங்கள், அவர்களுக்குக் கடுமையான மறுமை தண்டனையைத் தரும் என்ற கொள்கையும் கிறிஸ்துவக் கடைக்கு மிக மிக முக்கியமானவை. இந்தக் கொள்கைகளின் காரணமாகவே இயேசு பிறப்பெடுத்தது, அடிவாங்கியது, செத்தது, மீண்டும் உயிர்த்தெழுந்தது எல்லாம்.

அப்போஸ்தலர் பவுல் ரோமன்ஸ் 5:18-19– இல் கூறுகிறார்..

Therefore, as by the offense [original sin] of one [Adam] judgment came upon all men to condemnation; even so by the righteousness of one the free gift came upon all men unto justification of life. For as by one man’s disobedience many were made sinners, so by the obedience of one shall many be made righteous.

18 ஆகவே ஒரே ஒருவனின் குற்றம் எல்லா மனிதர்க்கும் தண்டனைத் தீர்ப்பாய் முடிந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதர்க்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் மலர்ந்தது.

19 ஏனெனில், ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.

ஆகவே முதல் பாவத்தை நீக்கினால், இயேசுவின் அவதாரம், அவர் அடிவாங்கியது, அவரது தியாகம், அவரது மீண்டும் உயிர்தெழுப்புதல் ஆகியவை அனைத்தும் ஏன் தேவை என்று விளக்குவது மிகவும் கடினம். எல்லோர் மேலும் வியாபித்திருக்கும், பலவீனமடையச்செய்யும், தீர்க்கவே முடியாத பாவத்தில் உலக மக்கள் அனைவரும் இருப்பதாகச் சொல்வது முதல் பாவம் இல்லாமல் முடியாத விஷயம் என்பதைக் கீழே பார்ப்போம்.

4.1 உலக மக்கள் எல்லோரும் பாவிகள் அல்ல

முதல் பாவக் கொள்கை இல்லாமல் எல்லோரும் பாவிகள் என்று சொல்வது முடியாத காரியம். விவரம் அறிவதற்கு முன்னால் இறந்துவிடுபவர்கள் (தங்கள் காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் திறமும், அறிவும், முதிர்ச்சியும் அடையாத சிறுவ சிறுமிகள்) நிச்சயம் பாவிகள் அல்லர். எந்தக் காலத்திலும் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க முடியாத நிலையிலுள்ள மூளைவளர்ச்சி குன்றியவர்களை முதல் பாவக் கொள்கை இல்லாமல் பாவிகள் என்றும் சொல்லமுடியாது. கரு உருவான சமயத்திலேயே அவர் முழு மனிதருக்கு ஒப்பானவர் என்ற கிறிஸ்துவப் பார்வையை எடுத்துகொண்டோமானால், தானாகவோ, செயற்கையாகவோ கலைந்துவிடும் கருக்கள் அனைத்தும், முதல் பாவக் கொள்கை இல்லையேல், பாவங்கள் செய்யாதவை. சமீபத்திய ஆய்வுகளில், கரு உருவாகி பின்னர் 31 சதவீத கருக்கள் மட்டுமே முழுக் குழந்தையாக வளர்ச்சியடைந்து பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது. [10] மேலும், மேற்கண்ட லிஸ்டில் இல்லாமலேயே, பாவங்கள் செய்யாதவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்று அனுபவம் கூறுகிறது. துறவிகள், சாந்த சொரூபிகள், இன்னும் விபரம் அறியும் வயது வந்த பின்னர் பாவங்கள் செய்ய வாய்ப்பில்லாமலோ, வாய்ப்பிருந்தும் செய்யாமலோ, இறந்துவிட்டவர்கள் ஆகியோரைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால், உலகத்து மக்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரே பாவிகள் என்று கிறிஸ்துவர்களால் சொல்லவே முடியும்.

4.2 மனித இயற்கையின் பாவ நிலை அளவுக்கு மீறியது என்பதும், மனிதர்கள் தாங்களாக பாவ நிலையிலிருந்து மீளமுடியாது என்று கிறிஸ்துவர்கள் சொல்வதும் மிகைப்படுத்தல்

அளவுக்கு மீறிய, தாங்களாக மீட்டுக்கொள்ளமுடியாத நிரந்தரப் பாவநிலையில் உலகம் இருக்கிறது என்ற கிறிஸ்துவப் பிரசாரத்தை முதல் பாவக் கொள்கை இல்லாமல் உருவாக்குவது கடினமானது. பெரும்பாலான மக்களின் பாவ நிலை மிகவும் சாதாரணமானது என்று நம் அனுபவம் சொல்லுகிறது. அடால்ப் ஹிட்லர், ஜோஸப் ஸ்டாலின் போல்போட், ஜாக் தி ரிப்பர் போன்ற கொடூரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலும், கெட்டவர்களைத் தடுப்பதற்காக எண்ணற்ற பலர் தங்களுடைய உடல், பொருள், உயிர், சொத்து ஆகியவற்றைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். அப்படித் தியாகம் செய்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்ல என்பதையும் அறிவோம். உலகத்தில் உள்ள மற்றவர்களுடைய துன்பம், வலி, அகால மரணம் ஆகியவற்றைக் குறைக்க ஏராளமானவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். கிறிஸ்துவ மதம் சொல்வது போல உலகம் முழுமையாக பாவ நிலையில் இல்லை என்பதையும், ஓரளவுக்கு மணிக் கோடு (bell curve) மாதிரி ஒரு பக்கம் மிகவும் தீவிரமான கொடூரமான செயல்களைச் செய்பவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். ஆனால், நடுவில் மிகச்சிறிய ஒழுக்கக்கேடுகளைச் செய்தாலும் பெரும்பாலும் நேர்மையான ஒழுக்கம் உள்ளவர்களாக பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள்.

பெரும்பாலான மக்கள் செய்யும் சிறிய ஒழுக்கக்கேடுகள் குறைவானவை என்பது மட்டுமல்ல, (கிறிஸ்துவர்கள் சொல்வதற்கு மாறாக) தனிமனித ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதமான தெய்வீகத் துணையும் இல்லாமல் சாத்தியமானதாகவே இருக்கிறது. உதாரணமாக, ஸ்டீவன் மோஹ்ர் எழுதிய சமீபத்திய கட்டுரையில், பெரும்பாலான குடிநோய் கொண்டவர்கள் (alcoholics) தாங்களாகவே அந்தக் குடிப்பழக்கத்திலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒப்பிட்டு நோக்கும்போது, மத அடையாளம் ஒட்டிய அல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) அமைப்பின் மூலம் குடிப்பழக்கத்தை விட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. [11]

மோஹ்ரின்படி, “1995-இல் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் குடிநோய் கொண்டவர்கள் தாங்களாகவே குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார்கள் என்று அறிவித்தது. 1995 அக்டோபரில், ஹார்வர்ட் மெண்டல் ஹெல்த் கடிதத்தில், “சமீபத்திய ஆய்வின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால், 80 சதவீதக் குடிநோயாளர்கள் ஒருவருடத்துக்குள்ளாகவே தாங்களாகவே அந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்கள். இதில் ஒரு சிலர் நோய்க்கான மருத்துவ உதவியாலும் கைவிடப்பட்டவர்கள்,” என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். [12]

மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர். [13]

4.3 சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் பாவ நிலையின் அளவை மாற்றவோ குறைக்கவோ முடியும்

“முதல் பாவ”க் கொள்கை இல்லையேல், தெய்வீக உதவி இல்லாமலேயே சில மனிதர்கள் சில வேளைகளில் சமூகத்தைச் சீர்திருத்தி ஒழுக்க ரீதியில் சிறப்பானதாக ஆக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. வறுமை, அறியாமை, கல்வியின்மை, பஞ்சம், துரதிர்ஷ்டம், பாதுகாப்பின்மை, உடல் ரீதியான குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள் ஆகிய சூழல்கள், குற்றங்களுக்குத் (பாவ காரியங்கள்) தூண்டுதலாக இருக்கின்றன என்பதை பெரும்பாலான சமூகவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். [14] சமீப காலத்தில் மதச் சார்பற்ற நாடுகளான மேற்கத்திய நாடுகளும் இன்னும் பல மதச் சார்பற்ற நாடுகளும் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவி, வேலைகள், பாதுகாப்பான வாழ்க்கை, முன்னேற சந்தர்ப்பங்கள் போன்றவற்றை அளித்து, எந்தவிதமான தெய்வீகப் பிரார்த்தனையின் உதவியும் இல்லாமலேயே குற்றங்களைக் குறைத்துள்ளன என்பதையும் அறிவோம். [15]

ஜான் 16:3-இல் யாஹ்வே மனிதர்களை மிகவும் நேசித்தது என்றும், அவர்களைப் பாவங்களிலிருந்து காப்பாற்ற விரும்பியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தார்மீக ரீதியிலும் நடைமுறையிலும் யாஹ்வே செய்ததை விட சிறப்பான வழிகளில் அதே விஷயத்தைச் சாதித்திருக்கலாம். உதாரணமாக, ஓர் அப்பாவியை கொடூரமாகக் கொலை செய்வதை விட, இந்த யாஹ்வே, மக்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கலாம். அதே போல, மக்கள் பாவம் செய்யத் தூண்டும் வறுமை, அறியாமை போன்ற சுற்றுச்சூழல் விஷயங்களை மாற்றி அவர்களைப் பாவம் குறைவாக செய்பவர்களாகவோ செய்யவே வாய்ப்பில்லாதவர்களாகவோ ஆக்கியிருக்கலாம். இந்த அணுகுமுறை, தனது சொந்த மகன் என்று சொல்லப்படுபவரை, கொடூரமாகக் கொலை செய்யாமலேயே, மனிதர்களின் சுதந்திர எண்ணத்தை எந்த விதத்திலும் பாதிக்காமலேயே, யாஹ்வே தனது மக்களுக்கு அன்பு செலுத்துபவராகவும் பாவங்களைக் குறைப்பவராகவும், பாவம் குறைந்தவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் ஆக்கியிருக்கும்.

இங்கே கிறிஸ்துவ மதம் “முதல் பாவ”க் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இருக்கவும் முடியாது என்று இங்கே முடிக்கிறேன். யாஹ்வே தெய்வம் மனிதர்கள், விலங்குகள் மீது சாபம் கொடுத்ததால்தான் அவர்கள் மீது முதல் பாவம் படிந்திருக்கிறதாம். அந்த முதல் பாவத்தைத் தீர்க்கத்தான், இயேசு என்ற தன் மகனை அனுப்பி அவரை அடி வாங்க வைத்து, அவரைச் சாவடித்து, அவரை மீண்டும் உயிர்த்தெழ வைத்தாராம். இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்.

5. முடிவுரை

கிறிஸ்துவ மதத்துக்கு, தீவிரப் பிரச்சினை இருக்கிறது என்று இங்கே வாதிட்டுள்ளேன். “முதல் பாவ”க் கொள்கையை நம்பகத்தன்மையுடன் கிறிஸ்துவத்தால் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது; அதனை விட்டுவிட்டு, கிறிஸ்துவத்தை நம்பகத்தன்மையுடன் பிரசாரம் செய்யவும் முடியாது.

மேற்குறித்த தரவுகள்

[8] This argument is developed in my “The Argument from Unfairness” in the International Journal for Philosophy of Religion Vol. 25, No. 2, pp. 115-128 (April 1999).

[9] William Lane Craig, Alvin Plantinga, Terrance Tiessen, and Thomas Flint are examples.

[10] Kathleen Stassen Berger, The Developing Person through Childhood and Adolescence (6th ed) (New York, NY: Macmillan, 2003), p. 94.

[11] Steven Mohr, “Exposing the Myth of Alcoholics Anonymous,” Free Inquiry April/May 2009, pp. 42-48.

[12] Ibid., p. 44.

[13] The Secular Web page “On Average, Are Atheists as Moral as Theists?” provides an excellent bibliography on atheism and morality.

[14] For example, see:

Adrian Raine, Patricia Brennan, Birgitte Mednick, and Sarnoff A. Mednick, “High Rates of Violence, Crime, Academic Problems, and Behavioral Problems in Males With Both Early Neuromotor Deficits and Unstable Family Environments,” Archives of General Psychiatry Vol. 53, No. 6, pp. 544-549 (1996). Bruce P. Kennedy, Ichiro Kawachi, Deborah Prothrow-Stith, Kimberly Lochner, and Vanita Gupta, “Social Capital, Income Inequality, and Firearm Violent Crime,” Social Science & Medicine, Vol. 47, Issue 1, pp. 7-17 (July 1, 1998). “Tackling the Underlying Causes of Crime: A Partnership Approach,” Submission to the (Irish) National Crime Council by the Combat Poverty Agency of Ireland (2002)

[15] Gregory S. Paul, “The Big Religion Questions Finally Solved,” Free Inquiry December 2008/January 2009, pp. 24-36. See especially Figs. 6, 7, and 8.

மொழிபெயர்ப்பாளர் பின்குறிப்பு

கிறிஸ்துவர்களோ முஸ்லீம்களோ ஆதாம் ஏவாளை பிரசாரம் செய்யும்போது இதற்கெல்லாம் என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று நாகரிகத்தின் பொருட்டு நாம் கேட்பதில்லை. ஆனால் அவர்களோ தங்களது பிரசாரத்தை மறுத்து யாரும் பேசமுடியவில்லை என்பதே அவர்கள் கூறுவது உண்மை என்பதற்கு நிரூபணம் என்று எடுத்துகொள்கிறார்கள். ஆகையால், அவர்களைத் தேடிப்போய் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது உங்களை பாவிகள் என்று அழைத்தாலோ, அல்லது உங்களிடம் வந்து ஆதாம் ஏவாள், முதல் பாவம் என்று யூதர்களின் புராணக்கதையை பேசினாலோ இந்தக் கட்டுரையை அச்சடித்து வைத்துகொண்டு,  அவர்களிடம் கொடுத்து, படிக்கச்சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.)

சுவாமி விவேகானந்தர் உரை (சுட்டி)

vivekananda-stamp‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.

முற்றும்.

“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1

மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்

மொழிபெயர்ப்பாளர் முன்னுரை:

இந்தக் கட்டுரை கிறிஸ்துவ மதத்தைப் பற்றியது. இது ஏன் இங்கே ‘தமிழ்ஹிந்து‘வில் பிரசுரிக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழலாம்.

adam-and-eveதமிழ்நாட்டில் பரவியுள்ள கிறிஸ்துவ இஸ்லாமியக் கலாசாரத்தின் விளைவாக பல இந்துக்களும் ஆதாம் ஏவாள் கொள்கையை நம்புபவர்களாக இருக்கிறார்கள். முதல் பாவம் என்பது கவிதைகளிலும் கதைகளிலும் சினிமாக்களிலும் பேசப்படுகிறது. முதல் மனிதர்களைக் குறிக்க ஆதாம் ஏவாள் என்ற பெயர்கள் பொதுவாகப் புழங்கும் பெயர்களாக ஆகிவிட்டன. “முதல் பாவம்” என்ற பெயரில் ஓர் ஆபாசத் திரைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பரவலாகிவிட்ட இந்த யூதப் பழங்குடியினரின் புராணக் கதையை பெரும்பாலான நம் மக்கள் நம்பவில்லை என்றாலும், ஏதோ ஒரு ரீதியில் ஆதிமனிதனைக் குறிக்க இந்தச் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. இந்த முதல் பாவக் கொள்கை காரணமாகவே தெருமுனைகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் பல்வேறு கிறிஸ்துவப் பிரசாரகர்கள், “பாவிகளே!…” என்று நம்மைப் பார்த்துக் கத்துகிறார்கள். அவர்கள் உலகத்தில் உள்ள அனைவரையும்- ஒரு பாவமும் செய்யாத பச்சை குழந்தையிலிருந்து மகாத்மா காந்தி வரை எல்லோரையும்- பாவிகள் என்று ஏன் சொல்கிறார்கள் என்று நாம் அறிந்துகொள்வது தேவையான ஒன்று.

மற்றொன்று, பரவலாக இருக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமியத் தொலைக்காட்சிகளில் வெளிநாட்டினரும் நம்மக்களில் சிலரும் இந்த ஆதாம் ஏவாள் கதையை, தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றார்கள். இதனால், ஒரு சில இந்துப் பொதுமக்கள் ஆதம் ஏவாள் என்பவர்கள் இவர்கள் சொல்வது போல கடவுளால் 6000 வருடங்களுக்கு முன்னால் படைக்கப்பட்டவர்கள் என்று நம்புகிறார்கள். இது இந்து மதக் கொள்கை அல்ல. மாறாக, இந்து மதப் புத்தகங்களின்படி, இந்தப் பிரபஞ்சம், வயது கணக்கிட முடியாத அளவு புராதனமானது. ஒவ்வொரு யுகமும் பல லட்சம் வருடங்கள் கொண்டது. கிரித யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகியவை பருவகாலங்கள் போல சுழற்சியாக வருகின்றன. இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகமாகிறது. 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. (ஒரு கிரித யுகத்தின் அளவு 1728000 வருடங்கள்).

கார்ல் சாகன் (Dr. Carl Sagan, 1934-1996) என்ற புகழ்பெற்ற வானவியல் இயற்பியலாளர் தனது காஸ்மோஸ் (cosmos) என்ற புத்தகத்தில், கூறுகிறார்:

nataraja-in-chakra-form“The Hindu religion is the only one of the world’s great faiths dedicated to the idea that the Cosmos itself undergoes an immense, indeed an infinite, number of deaths and rebirths. It is the only religion in which the time scales correspond, to those of modern scientific cosmology. Its cycles run from our ordinary day and night to a day and night of Brahma, 8.64 billion years long. Longer than the age of the Earth or the Sun and about half the time since the Big Bang. And there are much longer time scales still.” Carl Sagan further says: “The most elegant and sublime of these is a representation of the creation of the universe at the beginning of each cosmic cycle, a motif known as the cosmic dance of Lord Shiva. The god, called in this manifestation Nataraja, the Dance King. In the upper right hand is a drum whose sound is the sound of creation. In the upper left hand is a tongue of flame, a reminder that the universe, now newly created, with billions of years from now will be utterly destroyed. These profound and lovely images are, I like to imagine, a kind of premonition of modern astronomical ideas.” Sagan continues, “A millennium before Europeans were wiling to divest themselves of the Biblical idea that the world was a few thousand years old, the Mayans were thinking of millions and the Hindus billions”
— (source: Cosmos – By Carl Sagan p. 213-214).

இந்தப் பிரபஞ்சமும் இது போன்ற எண்ணற்ற அனந்த அனந்தப் (infinite) பிரபஞ்சங்களும் பிரம்மத்தில் முகிழ்த்து மறைகின்றன என்று வேதங்கள் கூறுகின்றன. எல்லாக் காலங்களுக்கும் வெளிகளுக்கும் அப்பாலும் அதனுள் உறைந்தும் பிரம்மம் இருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. எண்ணற்ற பிரம்மாக்கள் எண்ணற்ற பிரபஞ்சங்களை உருவாக்கியவண்ணம் இருக்கிறார்கள். தங்கள் காலம் முடிந்ததும் அந்த பிரம்மாக்கள் மறைந்து புதிய பிரம்மாக்கள் பிறக்கிறார்கள் என்று இந்து மதம் உரைக்கிறது. பிரம்மத்துக்குள் ஒடுங்கியுள்ளது வெளிப்படுகிறது  என்று இந்து மதப் புத்தகங்கள் உரைக்கின்றன. ஆகவே ஆதாம் ஏவாள் என்ற சிறுபிள்ளைக்கதையை நாம் நம்புவது தவறு.

அறிவியற்பூர்வமாகவும் ஆதாம் ஏவாள் என்ற மனிதர்கள் இல்லை. தொடர்ந்து மாறிவரும் பரிணாமத்தில் இதுவரை குரங்கு, இதற்குப் பிள்ளை மனிதன் என்று சொல்வதும் தவறு. மேலும் பல்வேறு அறிவியல்களில் ஒன்றான பரிணாமவியலை கிறிஸ்துவமோ அல்லது இஸ்லாமோ ஒப்புக்கொள்வதும் இல்லை. ஆகவே பரிணாமவியலின்படி ஒருவரை மனிதன் என்று சொன்னாலும் அது ஆதாம் அல்லது ஏவாள் என்று கிறிஸ்துவமும் இஸ்லாமும் ஒப்புகொள்வதில்லை. ஏனெனில் பைபிள் சொல்லும் யாஹ்வே என்னும் தெய்வத்தால் களிமண்ணிலிருந்து படைக்கப்பட்டாலே ஆதாம். பரிணாமவியலின்படி தோன்றும் மனிதன் ஆதாம் அல்ல.

நமது இந்து மதப் புத்தகங்களுக்கும் அறிவியலுக்கும் புறம்பான, இப்படிப்பட்ட தவறான கருத்துகளை, ஊடகங்களின் இடைவிடாத பொய்ப் பிரசாரங்களின் காரணமாக இந்துக்களான நாம் உண்மையெனக் கருதிவிடக்கூடாது ஆகவே இந்தக் கட்டுரை, தொடர்ந்து ஒலித்துகொண்டு வரும் இப்படிப்பட்ட யூதப் பழங்குடி மக்களின் புராணக்கதைகளை வரலாறு என கருதிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்துக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவும் மொழிபெயர்க்கப்பட்டதே அன்றி, கிறிஸ்துவ மதத்தின், அல்லது இஸ்லாமிய மதத்தின் கருத்துகளை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல.)

1. முன்னுரை

கிறிஸ்துவ மதத்தில் [1] முதல் பாவம் என்ற கொள்கை (doctrine of original sin (DOS)) உள்ளது. இந்தக் கொள்கையை கிறிஸ்துவத்தின் அடிப்படைக் கொள்கையாக கிறிஸ்துவம் கருதுகிறது. இது “மெல்லவும் முடியாத, துப்பவும் முடியாத” கொள்கை. இந்தக் கொள்கையை வைத்துகொண்டும் கிறிஸ்துவத்தால் இருக்கமுடியாது. தூக்கி எறிந்துவிடவும் முடியாது. இக்கட்டுரையில், முதல் பாவம் நடந்திருக்கமுடியாதது; ஒழுக்க ரீதியில் தவறானது என்று காட்டியதோடு, கிறிஸ்துவத்தால் இதனை வைத்துகொள்ளவும்முடியாது என்று சுட்டிக்காட்டுகிறேன். ஆனால், அதே வேளையில், 2000 வருடங்களாக இதனை கிறிஸ்துவத்தோடு இறுக்கிப் பிணைத்துவிட்டபடியால், இதனைத் தூக்கி எறிவது கிறிஸ்துவ மதத்துக்கே ஆபத்தாகவும் ஆகும் என்றும் காட்டுகிறேன்.

2. முதல் பாவக் கொள்கை என்றால் என்ன?

1. மத்திய தரைக்கடல் (mediterranean sea) பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடியினரான யூதர்கள், தங்கள் புராணக்கதைகளை, எல்லாப் பழங்குடியினர் போலவே எழுதிவைத்தனர். பூமி எப்படி உண்டாயிற்று, மனிதன் எப்படி உண்டானான் ஆகிய கதைகளை இவர்கள் மற்ற ஆப்பிரிக்க, அமெரிக்கப் பழங்குடியினர் போலவே கற்பனை செய்து எழுதினார்கள். பின்னர் இவர்களிலிருந்து கிளைத்த ஒரு கிளைமதம் கிறிஸ்துவம் என்ற பெயரில் மெல்ல மெல்ல பரவியது. ரோம அரசால் தத்தெடுத்துகொள்ளப்பட்ட பின்னர் அந்த சாம்ராஜ்யத்தின் வழித்தோன்றல்களாக உருவான ஐரோப்பிய நாடுகளாலும் உலகெங்கும் பரப்பப்பட்டு இந்தப் பழங்குடிப் புராணக்கதைகள் வரலாறு போலப் பிதற்றப்பட்டன. இந்த முதல் பாவம் என்ற கொள்கை இவர்களது ஜெனஸிஸ் எனப்படும் ஆதியாகமம் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

adam_in_gardenயாஹ்வே என்ற தெய்வம் உலகத்தை உருவாக்கியதாம், பிறகு ஆரம்ப ஆண், பெண் ஜோடியை உருவாக்கியதாம். இந்த ஜோடியை தான் உருவாக்கிய ஒரு தோட்டத்தில் வைத்ததாம். அந்தத் தோட்டத்தில் பலவித விலங்குகளும், செடி கொடி தாவரங்களையும் உருவாக்கிவைத்திருந்ததாம். இந்தச் சமயத்தில் ஆதாமும் ஏவாளும் சாகாவரம் பெற்றவர்களாகவும், வலி, துயரம் ஆகியவை அண்டாதவர்களாகவும் இருந்தார்களாம். அந்தத் தோட்டத்தில் அவர்கள் சுற்றித்திரிய அனுமதித்திருந்தாலும், அறிவு மரத்தின் (Tree of the Knowledge of Good and Evil) கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி, அதனைச் சாப்பிட்டால் உடனே மரணமடைவார்கள் என்றும் எச்சரித்ததாம். பேசும் பாம்பு (இது லூசிபர் என்னும் சாத்தானாம்) இவர்களைத் தூண்டிவிட, இவர்கள் அந்த மரத்தின் கனியைச் சாப்பிட்டார்களாம். கிறிஸ்துவ மதத்தில் உள்ளவர்கள் இதனை மனிதனின் முதல் ஒழுக்கக்கேடு என்றும், முதல் பாவம் என்றும், இதனால், மனிதனின் வீழ்ச்சி உருவானது என்றும் கூறுவார்கள். யாஹ்வே (இதனைத்தான் கர்த்தர் என்று கிறிஸ்துவர்கள் தமிழில் கூறுவார்கள்.) இந்த ஜோடியை தனது தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி வலி, துயரம், கடின வாழ்க்கை, இறுதியில் சாவு என்று வாழும்படிக்கு தண்டித்ததாம். (தோட்டம் வானத்தில் இல்லை. பூமியில்தான் இருக்கிறது. அவர்கள் திரும்பவும் உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக தோட்ட வாசலில் தேவதைகள் காவல் வேறு இருக்கிறார்களாம்.)

god-creates-eve-from-adams-ribஅவர்களுடைய தண்டனையில், அவர்கள் பாவம் செய்ய இயற்கையிலேயே விருப்பமுள்ளவர்களாகவும், தங்களைத் தாங்களாகவே அந்தத் தண்டனையிலிருந்து மீட்டுகொள்ள முடியாதவர்களாவும் மனிதர்களை ஆக்கியதும் சேர்த்தியாம். கூடவே, அவர்களது தண்டனை அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குழந்தைகளுக்கும் சந்ததிகளுக்கும் மேலேயேயும் இருக்குமாம்; கூடவே மிருகங்களுக்கும் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டதாம். (மிருகங்கள் செய்யாத தவறுக்கு மிருகங்களுக்கும் தண்டனை!)

உலகம் உருவானது எப்படி என்று யூதர்களது பழங்குடிக் கதை போன்றே ஒவ்வொரு பழங்குடிகளிலும் ஒரு கதை உண்டு. அவற்றை இந்தச் சுட்டியில் காணலாம் . அந்தப் பழங்குடிக் கதைகளைப் பிரசாரம் செய்ய, பெரிய கூட்டம் உங்களை தெருமுனைகளில் சந்தித்து பாவிகளே என்று கதறவில்லை என்பதால் அதனைப் பற்றிப் படிப்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.

adam_and_eve_sinஇதற்கு மேல் உபரிச் செய்திகளாக இந்த கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைக் கருதுகோள்களை நினைவுப்படுத்திக்கொள்வது நல்லது. அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், யாஹ்வே தெய்வம் உலகத்தையும் வானத்தையும் படைத்து அதில் ஆண் பெண் இருவரையும் படைத்து அவர்கள் கீழ்ப்படியாததால், அவர்களின் சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் முதல் பாவத்தைக் கொடுத்தது. இந்த முதல் பாவம் எல்லோர் மேலும் இருக்கிறது. அந்த முதல் பாவத்தை போக்க யாஹ்வே தெய்வம் ஒரு வழியைச் சிந்தித்தது. அது தனக்குத் தானே ஒரு பலி கொடுத்துக்கொள்வதாக முடிவு செய்ததாம். யூதர்களின் பழைய ஏற்பாட்டில் யாஹ்வே தெய்வத்துக்கு, களங்கமில்லாத ஆடு பலி கொடுக்கப்பட்டால் சந்தோஷமாகி, பலி கொடுத்தவரின் பாவங்களை மன்னிக்கிறதாம். ஆகவே இப்போது களங்கமே இல்லாத ஒரு மனிதனை தனக்குப் பலிகொடுப்பதன் மூலம் யாஹ்வே சந்தோஷமடைந்து பொதுமக்களின் முதல் பாவத்தை மன்னிக்குமாம். ஆகவே இயேசு கிறிஸ்து என்ற தன் மகனைப் பிறக்கவைத்து, தவறே செய்யாத அவரைக் கொலைசெய்து, அதன் மூலம் சந்தோஷமடைந்து, பொதுமக்களின் பாவங்களை மன்னிக்கிறதாம். முன்பு பலி கொடுக்கப்பட்ட ஆட்டின் ரத்தத்தையும் சதையையும் யூதர்கள் புசிப்பார்கள். அதனால்தான் கிறிஸ்துவத்தில், பலி கொடுக்கப்பட்ட இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் சர்ச்சுகளில் புசிப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. அப்பாவியான இயேசு கொலை செய்யப்பட்டதால் எல்லோருடைய பாவங்களும் போய்விடாதாம். இயேசு கிறிஸ்து என்பவர் பாவங்களை மன்னிக்க யாஹ்வேயால் அனுப்பப்பட்டார் என்று நம்புபவர் மட்டுமே முதல் பாவத்திலிருந்து மீட்கப்படுவாராம். இதனால்தான் தெரு மூலைகளில் நின்று பாவிகளே என்று நம்மைப் பார்த்துக் கத்தி, இயேசுவை நாம் நம்பவேண்டும் என்று சொல்லுகிறார்கள். இயேசுவும் இந்த உலகத்தில் பிறந்தபோது மேரியிடமிருந்து அவருக்கு முதல் பாவம் ஒட்டியிருக்குமே என்ற கேள்விக்கு, மேரியின் வயிற்றில் இயேசு கருவாக வரும்போது முதல் பாவத்தின் தீட்டு தீண்டாவில்லை என்று எழுதிகொண்டார்கள். ஏன் தீண்டவில்லை என்பதற்கு காரணமெல்லாம் இல்லை. தீண்டவில்லை; அவ்வளவுதான். அதற்கு ஒரு பெயர் வைத்துகொண்டார்கள். அது முதல் பாவம் தீண்டாத கருவடைதல் என்ற பொருளில் immaculate conception of Mary.

3. இந்த முதல் பாவக் கொள்கையுடன் கிறிஸ்துவம் இருக்கமுடியாது

கிறிஸ்துவம் இந்த முதல் பாவக் கொள்கையுடன் இருக்கமுடியாது என்று காட்ட, இந்தப் பழங்குடிக் கதைக்கும் அறிவியலுக்கும் இடையே பெரிய முரண்பாடு இருக்கிறது என்று காட்டுகிறேன். கூடவே, இந்தப் பழங்குடி முதல் பாவக் கதையில் ஏராளமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது மட்டுமல்ல; இதில் அறிதலின் பிரச்சினையும் (knowledge problem) இருக்கிறது என்று காட்டுகிறேன்.

3.1 பரிணாமவியல் அறிவியலும் யூதப் பழங்குடியினரின் ஆதியாகம உருவாக்கமும் ஏடன் தோட்டக் கதைகளும். [2]

முன்னரே சொன்னது போல, முதல் பாவக் கொள்கை, யூதப் பழங்குடியினரின் உலக உருவாக்கக் கதைகளின் பகுதி. உண்மையான உலக உருவாக்கம் யூதப் பழங்குடியினரது புராணக்கதைப்படி நடக்கவில்லை என்றால், முதல் பாவமும் இல்லை. அதனால்தான் பெரும்பாலான கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் யூதப் பழங்குடியினரின் ஆதியாகமக் கதைகளின்படிதான் உலகம் உருவானது என்று வலியுறுத்துகிறார்கள். இந்தக் கால கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, கடந்த 2000 வருடங்களாக எல்லா கிறிஸ்துவர்களும் யூதப் பழங்குடிப் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது என்று சொல்லிவந்திருக்கிறார்கள். அப்போஸ்தலர் பவுல், சர்ச் தந்தைகளில் ஒருவரான அகஸ்டின் ஆகியோர் உள்ளிட்ட கிறிஸ்துவத் தலைவர்கள், யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகளின்படிதான் உலகம் படைக்கப்பட்டது; அது வரலாற்று உண்மை என்றுதான் எழுதி வந்திருக்கிறார்கள். பார்ட் கிளிங் [3] சுட்டிக்காட்டுவது போல, யேசுவும் அதன் உண்மையை வலியுறுத்துகிறார்.

பைபிளில், வரலாற்றில் இருந்த ஒரு நபராகவே ஆதாம் சித்தரிக்கப்படுகிறார். இதனால்தான் பல்வேறு பைபிள் வம்சாவளிகள் ஆதாமின் வழியில் பிறந்ததாக எழுதப்படுகின்றன. ஆதியாகமம் 4-5 ஆதாமின் வழித்தோன்றல்களையும் அவர்களது வயதையும் வரிசைப்படுத்துகிறது. 1 Chronicles முதல் அத்தியாயம், ஆதாமின் வழித்தோன்றல்களை வரலாற்று நபர்களாகச் சித்தரிக்கிறது. லூக்காவில் இயேசுவும் ஆதாமின் வழித்தோன்றலாகத்தான் கருதப்படுகிறார்.

Jesus was about thirty years old when he began his work. He was the son (as was thought) of Joseph son of Heli, … son of Enos, son of Seth, son of Adam, son of God. (Luke 3:23-38)

23 இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.

24 சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;

இப்படியே போய்…

37 மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;

38 காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.

மாத்தியூவின் சுவிசேசத்தில் யேசுவே ஆதாமையும் ஏவாளையும் வரலாற்று நபர்களாகக் கருதிப் பேசுகிறார்.

He answered, ‘Have you not read that the one who made them at the beginning “made them male and female.”‘ (Matthew 19:4)[4]

அதற்கு அவர், “படைத்தவர் தொடக்கத்திலிருந்தே- ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்” என்றும், (Matthew 19:4) [4]

கிறிஸ்துவர்கள் இவ்வளவு உறுதியாக ஆதியாகமப் புராணக்கதைகள் நடந்ததாகவும் வரலாறு என்றும் உறுதியாகக் கூறினாலும், ஆதியாகமப் பழங்கதைகள் தற்போதைய அறிவியல் ஆய்வுகளுக்கும், பரிணாமவியல் போன்ற அறிவியல்களுக்கும் இன்னும் பல நிலவியல், வானியல், புவியியல், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுக்கும் முரண்படுகின்றன. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது போல உலகம் தோன்றியதற்கோ, அல்லது மனிதன் தோன்றியதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. ஒரு மரத்தின் கனியைச் சாப்பிட்டு எது சரி எது தவறு என்று தெரிந்துவிடும் என்பது போன்ற மரத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. பாம்புகள் பேசும் என்பதற்கோ அல்லது மிருகங்களும், மனிதர்களும் சாவா வரம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. அவர்கள் வலி துக்கம் உணராமல் இருந்திருந்தார்கள், அல்லது இருந்திருப்பார்கள் என்பதற்கோ எந்தவித ஆதாரங்களும் இல்லை. இப்படிப்பட்ட ஆதியாகமக் கதைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தக் கதைகள் பொய் என்பதற்கான ஏராளமான ஆதாரங்களையும் அறிவியல் குவித்து வைத்திருக்கிறது. ஆகவே ஆதியாகமம் என்று சொல்லக்கூடிய யூதப் பழங்குடியினரின் புராணக்கதைகள் வரலாற்றுரீதியில் பொய்யானவை. ஆகவே முதல் பாவம் என்பதும் பொய் என்பதே அறிவியலின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு. (இதனை இன்னும் விவரிக்கலாம். உதாரணமாக ஆதாமின் பின்னே வரும் வம்சாவளியையும் அதில் ஒவ்வொருவர் பிறப்பும் அவர்கள் வாழும் வயதும் கொடுக்கப்பட்டிருப்பதால், அவற்றை கணக்கிட்டு உலகம் 6000 வருடங்கள் பழையது என்று யூத அடிப்படைவாதிகளும் கிறிஸ்துவ அடிப்படைவாதிகளும் இன்னும் நம்புகிறார்கள். ஆனால் உலகம் பல பில்லியன் வருடங்கள் பழையது மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சம் நமது பூமியை விட இன்னும் பல கோடி வருடங்கள் பழையது. தற்போது பல அகழ்வாராய்வுகளில் 100000 வருடங்களுக்கு முந்தைய மனிதர்களது எலும்புகள் கிடைத்துள்ளன. டைனசோர்கள் இன்னும் பல லட்சம் வருடங்கள் பழையவை. அவற்றின் எலும்புகளும் கிடைத்துள்ளன. ஆகவே யூதப் பழங்குடியினரது புராணக்கதையில் வரும் ஆதியாகமத்தில் உள்ளது அறிவியற்பூர்வமாக பொய் என்று அறியலாம்.)

3.1.1 ஆதியாகமப் புராணக்கதைகளுக்கும் ஈடன் தோட்ட கதைகளுக்கும் உவமேயப் பொருள் கொடுத்தல்

சில முற்போக்கு வேடம் போடும் கிறிஸ்துவ வட்டங்களில் ஆதியாகமக் கதைகளை வேறுமாதிரி விளக்குகிறார்கள். அதன்படி, இந்தக் கதைகளை வரிக்கு வரி உண்மை என்று அப்படியே புரிந்துகொள்ளக்கூடாது; கருத்துகளை விளக்கும் புராணக்கதைகளாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற பார்வையை முன்னிருத்துகிறார்கள். “ஒரு விதமான” வகையில் இவை உண்மையானவை என்றும், ஆனால், அவற்றை வரலாற்று நிகழ்வுகளாகப் பார்க்கக்கூடாது என்பதும் இந்த நிலைப்பாடு. கருத்துகளைப் புரிந்துகொள்வதற்காக சொல்லப்படும் வகையில் “உண்மையானவை” (அதாவது கருத்துகள் சரி, ஆனால் நிகழ்வுகள் வெறும் கதை) என்றும், அதாவது யாஹ்வே தெய்வம் உலகத்தைப் படைத்தது; மனிதர்களையும் படைத்தது; மனிதர்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தெரிந்தே தவறான விஷயங்களை அவர்கள் செய்கிறார்கள்; பெரும்பாலும் இப்படிப்பட்ட தவறான செயல்களால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் பாதிக்கப்படுகிறார்கள்.. இது போலப் புரிந்துகொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏறத்தாழ, இந்தக் கருத்து விளக்கும் புராணக்கதைகளை சுவிசேஷத்தில் வரும் நீதிக்கதைகளைப் போலவும் ஏசாப்பின் நீதி கதைகளைப் போலவும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.

adam_and_eve_banishedஇருந்தாலும், இப்படி ஆதியாகமக் கதைகளை அப்படியே வரலாற்று நிகழ்வாகப் பொருள் கொள்ளக்கூடாது என்று பின்வாங்குவதால், முதல் பாவம் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் விளைவு என்பது அடிபட்டுப் போகிறது. இப்படி இந்தப் புராணக்கதைகளுக்கு விளக்கம் கொடுத்தால், இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்துவ சர்ச் இந்த ஆதியாகமக் கதைகளை வரலாற்று நிகழ்வுகள் என்று சொல்லியதும் அப்படியே சொல்லவேண்டும் என்று கிறிஸ்துவர்களை வற்புறுத்தியதும் தவறு என்று ஆகிவிடும். அதுவும் நிரந்தர உண்மைகளை புனித ஆவியிடமிருந்து பெற்று கிறிஸ்துவ மக்களுக்கு இரண்டாயிரம் வருடங்களாகக் கொடுத்து வந்திருப்பதாகச் சொல்லும் சர்ச்சுக்கு இது தலைகுனிய வைக்கும் மாபெரும் தவறு.

இரண்டாவது, வானியல், புவியியல், பரிணாமவியல் அறிவியல் கண்டுபிடிப்புகளோடும் ஒத்துப்போவதற்காக உருவாக்கப்படும் இப்படிப்பட்ட புரிந்துகொள்ளவைக்க சொல்லப்பட்ட ஆதியாகமக் கதை என்ற நிலைப்பாடு மிகவும் அதிகமான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். முதல் பாவம் என்பது வரலாற்று உண்மை என்பதை, இல்லை என்று சொல்லியாக வேண்டும். புரிந்துகொள்ள சொல்லப்பட்ட புராணக்கதை என்று சொல்லிவிட்டால், முதல் பாவத்தில் வந்து முடியும் அந்தக் கதைகள் நடக்கவில்லை என்றும் சொல்லியாக வேண்டும். இது மாதிரி ஒப்புக்கொள்ளுவது, எந்த முதல் பாவத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தக் கதைகளை, புரிந்துகொள்ள சொல்லப்பட்ட கதைகள் என்று சொல்லிச் சமாளித்தார்களோ அந்த நோக்கத்துக்கே, முதல் பாவத்துக்கே ஆப்பாக முடியும்.

3.1.2 ஆதியாகமக் கதைகளையும், ஏடன் கதையையும் வரலாறும் கதையும் கலந்ததாகச் சொல்லும் வாத நிலைப்பாடு

இறுதியாக, கலப்பட நிலைப்பாடு என்று கூறப்படுவதைப் பார்ப்போம். அதாவது இது- ஆதியாகமக் கதைகளில் பாதி உண்மையான வரலாறு; மற்ற பாதி விளக்குவதற்காக சொல்லப்பட்ட கதை என்று சொல்கிறது. இதற்கான நல்ல உதாரணம் கத்தோலிக் ஆன்ஸர்ஸ் (Catholic Answers) என்ற அமைப்பு கூறுவது. இது ஆதியாகமக் கதைகளை, சரியாக எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை கீழ்வருமாறு விளக்குகிறது.

The story of the creation and fall of man is a true one, even if not written entirely according to modern literary techniques. The Catechism [of the Catholic Church] states, “The account of the fall in Genesis 3 uses figurative language, but affirms a primeval event, a deed that took place at the beginning of the history of man. Revelation gives us the certainty of faith that the whole of human history is marked by the original fault freely committed by our first parents” — (Catechism of the Catholic Church 390). [5]

“நவீன காலத்து வரலாறு எழுதும் முறைப்படி எழுதப்படவில்லை என்றாலும், உலகத்தை உருவாக்கிய கதையும், மனிதனின் வீழ்ச்சியும் உண்மையானவை. கத்தோலிக்க சர்ச்சின் உறுதியான நிலைப்பாடு (Catechism) கூறுவதாவது, “ஆதியாகமத்தின் மூன்றாவது அத்தியாயம், உவமை நடையில் மனிதனின் வீழ்ச்சியைச் சொல்கிறது. ஆனாலும் அது ஆதிகாலத்தில் நடந்த ஓர் உண்மையான நிகழ்ச்சியையே கூறுகிறது. மனித வரலாற்றின் ஆரம்பத்தில் நடந்த ஒரு நிகழ்வு அது. அது கத்தோலிக்க கிறிஸ்துவ மத நம்பிக்கை பற்றிய உறுதியைத் தருவதோடு, நமது முதல் பெற்றோர் சுதந்திரமாக செய்த முதல் தவறு நமது ஒட்டுமொத்த மனித வரலாற்றின் மீது இருப்பதைக் கூறுகிறது” — (Catechism of the Catholic Church 390). [5]

இந்தக் கலப்படமான விளக்கம் பிரயோசனமற்றது என்பது முதல்வரியிலேயே தெரிந்துவிடுகிறது. ஒரு பக்கத்தில், “ஆதிகாலத்தில் நடந்த உண்மை நிகழ்வு” என்று கூறி, அது வரலாறு என்று சொல்கிறது. மற்றொரு பக்கம், “உவமை மொழியில் எழுதப்பட்ட கதை” என்று சொல்லி ஒரு கருத்தை விளக்கச் சொன்ன கதையாக ஆக்குகிறது. உவமை என்றும் வரலாற்று உண்மை என்றும் ஒன்றுகொன்று முரண்பட்ட இரண்டு விளக்கங்களைக் கொடுப்பதன் மூலம் முதல் பாவத்தை உண்மை என்று சொல்ல வைக்க முயற்சி செய்வதாகவே இருக்கிறது. (இதனை இன்னும் விளக்கலாம். மனித வரலாற்றில் ஆதிகாலத்தில் நடந்த நிகழ்வு என்று வரலாறாகச் சொன்னால், அந்த ஆதிகால மனிதனை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டிவரும். அதாவது மனிதன் பரிணாமம் அடைந்து உருவான ஒரு மிருகம் என்பது உண்மை என்றால், யாஹ்வே அவனை உருவாக்கவில்லை என்று ஆகும். யாஹ்வே உருவாக்கவில்லை என்றால் தோட்டமும் கனியும் லூசிபரும் இல்லை. யாஹ்வே உருவாக்கினார் என்றால் அது உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சி. ஆகவே இரண்டையும் ஒரே விளக்கத்துக்குள் அடைக்கமுடியாது.)

ஆகவே, முதல் பாவம் என்பது இருக்கமுடியாது ஏனெனில் அது சொல்லப்பட்டிருக்கும் ஆதியாகமக் கதைகள் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றுதான் முடிவுக்கு வரவேண்டும்.

3.2 முதல் பாவக் கொள்கையின் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள்

முதல் பாவத்தின் காரணமாக இந்த யாஹ்வே என்ற தெய்வம் மனிதர்களுக்குக் கொடுத்த தண்டனை தீவிரமான ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் கொண்டது. இந்தத் தண்டனை ஆதாம் ஏவாள் என்ற இருவருக்கும் அவர்களது சந்ததியினராக சொல்லப்படும் பல கோடிக்கணக்கான மனிதர்களுக்கும் ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி என்று சொல்லப்படும் அந்தக் காலத்தில் இருந்த விலங்குகளுக்கும் அவற்றின் சந்ததியினருக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவைகள் கொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தத் தண்டனைகள் தார்மீக ரீதியில் கேள்விக்குரியவை.

ஆதாம் ஏவாள் ஆகியோரது செயல்பாடுகளை ஒழுக்கம் தவறிய செயல்பாடுகள் என்று கூறமுடியாது. ஏனெனில், ஆதாமும் ஏவாளும் அந்தக் கனியைச் சாப்பிடும் முன்னர் எது சரி எது தவறு என்ற அடிப்படை அறிவே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். (கனியை சாப்பிட்டதால்தானே அவர்களுக்கு எது சரி எது தவறு என்ற அறிவு வந்தது? அதற்கு முன்னால், யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கீழ்படிந்து நடக்கவேண்டும்; அதுதான் சரி என்ற அறிவு இல்லையே?)

இப்போதுதான் உருவான ஒரு குழந்தை மாதிரியான ஒரு ஜோடி, லூசிபர் என்ற சாத்தான் என்று சொல்லப்படக்கூடிய பேசும் பாம்புக்கு நிகராக இருக்கமுடியுமா? எந்தத் தண்டனையைக் கொடுப்பதாக இருந்தாலும், இந்த ஜோடியின் சூழ்நிலையையும் கணக்கிலெடுத்துகொள்ளவேண்டும். யூதப் பழங்குடியினரது புராணக்கதையின்படி, இந்தப் பேசும் பாம்பாக வந்த லூசிபர்தான் யாஹ்வே தெய்வத்தின் மிக சக்தி வாய்ந்த புத்திசாலியான உருவாக்கமாம். ஆதாம் ஏவாள் என்ற இந்தக் குழந்தை மாதிரியான ஜோடி, இப்படிப்பட்ட படு புத்திசாலியான, சக்திவாய்ந்த, லூசிபரின் தூண்டுதலினால்தான் குற்றமிழைத்தார்கள் என்பது இவர்களை விடுவிக்கப் போதுமான தடயம். குறைந்தது இவர்களுக்கு தண்டனை கொடுக்கும்போதாவது இந்த விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆதாம் ஏவாளின் இந்தச் சாதாரண “சொன்ன பேச்சு கேட்காததற்கு” கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் தண்டனை- வாழ்நாள் முழுவதும் வலி, துயரம், பட்டினி, சாவு ஆகியவை- குற்றத்தின் அளவை விட அதிகமான தண்டனை. இவர்கள் வணங்கிய, பாராட்டிய, அன்பு செலுத்திய யாஹ்வே தெய்வத்தைப் போல அவர்கள் இருக்க விருப்பப்பட்டதால்தான் ஆதாம் ஏவாள் அந்தக் கனியைச் சாப்பிட தூண்டப்பட்டார்கள். பெற்றோர் சொன்ன பேச்சைக் கேட்காமல், சச்சின் டெண்டுல்கர் மாதிரி ஆக, ஏராளமாக பூஸ்ட் சாப்பிட்ட குழந்தை போன்றதுதான். இதனை ஒழுக்கம் கெட்ட செயல் என்று சொல்லமுடியுமா? இருக்கலாம். அப்படியே இருந்தாலும் இது ரொம்ப சாதாரணமான சிறு தவறுதான். சச்சின் டெண்டுல்கரின் பிரபல பிம்பத்துக்கும், விளம்பரத்தின் சக்திக்கும் முன்னால், இது புரிந்துகொள்ளக்கூடியதுதான். நிச்சயமாக இது மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய செயல் அல்ல.

adam-and-eve-in-the-gardenஇதே போல, கனியைச் சாப்பிட்டது ஒழுக்கம் கெட்ட செயலா? இருக்கலாம். ஆனால், அப்படியே இருந்தாலும், யாஹ்வே தெய்வத்தின் மாபெரும் சக்திக்கு முன்னாலும் லூசிபரின் தூண்டுதலுக்கு முன்னாலும் மிகச்சிறிய ஆனால் புரிந்துகொள்ளக்கூடிய குற்றம். இது நிச்சயம் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றம் அல்ல. இறுதியிலும் அந்தக் கனியைச் சாப்பிட்டதால், யாரும் பாதிக்கப்படவில்லை. நிச்சயம் துயரமோ வலியோ அண்டமுடியாத யாஹ்வே தெய்வம் பாதிக்கப்படவில்லை. டெனிஸ் டிடெராட் (Denis Diderot) என்ற ஃப்ரெஞ்சுச் சிந்தனையாளர், 1762-இல், “தன் சொந்தக் குழந்தைகளை விட ஆப்பிள்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட அப்பா போன்றவர்தான் கிறிஸ்துவர்களின் தெய்வமான யாஹ்வே” என்று குறிப்பிட்டார். [6]

மனித இயற்கையைக் கொடுத்து, அவர்களுக்கு வலியும், துயரமும் சாவையும் கொடுத்து, ஒட்டுமொத்தமாக அவர்களது சந்ததிகளுக்கும் மிருகங்களுக்கும் அவர்கள் பொறுப்பேற்க முடியாத ஒரு செயலுக்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திருப்பதுதான் ஒழுக்கம் கெட்ட செயல்.

3.2.1 முதல் பாவக் கொள்கையில் தார்மீகப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை சமாளிக்க உருவாக்கிய இயற்கைக்கு முந்தைய கொடை (Preternatural Gift)

முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதால், அவற்றைச் சமாளிக்க சில கிறிஸ்துவர்களால், “இயற்கைக்கு முந்தைய கொடை” என்ற கருத்துருவாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்படி, ஆதாமும் ஏவாளும் சாதாரண மனிதர்களைப் போல துயரமும் வலியும் சாவுடனும்தான் படைக்கப்பட்டார்கள். அதன் பின்னால், யாஹ்வே தெய்வம் அவர்களுக்கு சாகாவரத்தையும் வலியின்மையையும் யாஹ்வே தெய்வத்தின் முன்னால் இருக்கக்கூடிய வாய்ப்பையும் கொடைகளாக அளித்தது. அவர்கள் அந்த முதல் பாவத்தைச் செய்த பின்னால், கொடுத்த கொடைகளைத் திரும்பவும் எடுத்துகொண்டுவிட்டது. அதனால், அவர்கள் தங்களது பழைய மனிதத்தன்மைக்குத் திரும்பிவிட்டார்கள். இந்தச் சாதாரண மனிதத்தன்மையே அவர்களது சந்ததியினருக்கு வந்திருக்கிறது. இப்படி, கொடுத்த கொடையைத் திரும்ப எடுத்துக்கொள்வதில் எந்தவிதமான தார்மீகப் பிரச்சினையும் இல்லை. முதலில், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இந்தக் கொடைகளுக்கான தார்மீக உரிமை ஏதும் இல்லை. ஆகவே திரும்ப அவற்றை எடுத்துக்கொண்டதில் யாஹ்வே தெய்வம் எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை. அதுவும் அப்படி யாஹ்வே தெய்வம் சொன்னதைக் கேட்காமலிருந்த பின்னால், அதற்கான தார்மீக உரிமை நிச்சயம் கிடையாது. இரண்டாவது, ஆதாம்-ஏவாளின் சந்ததியினரிடமும் யாஹ்வே தெய்வம் எந்தவிதமான ஒழுக்கக்கேட்டையும் செய்யவில்லை ஏனெனில், அந்தச் சந்ததியினருக்கு சாகாவரம் போன்றவைகள் மீது எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை. கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவில் இந்த நிலைப்பாட்டை இப்படி எழுதுகிறார்கள்..

“கத்தோலிக்க மதக் கொள்கையின் படி மனிதன் தனது இயற்கையான எந்த ஒரு குணாம்சத்தையும் இழக்கவில்லை. ஆதாமின் பாவத்தால், யாஹ்வே தெய்வத்தின் கொடைகளைத்தான் இழந்தான். அவனது உணர்வுகள் மீதான முழுமையான கட்டுப்பாடு, சாவிலிருந்து தவிர்ப்பு, அருள், அடுத்த வாழ்வில் யாஹ்வேயின் தரிசனம் ஆகிய அந்தக் கொடைகள் மீது அவனுக்கு எந்த ஓர் உரிமையும் பாத்தியதையும் இல்லை. யாஹ்வே, இந்தக் கொடைகளை மனித இனத்துக்குப் பாத்தியதையாகச் செய்யவில்லை. குடும்பத் தலைவர் (ஆதாம்) எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவர் அந்தக் கொடைகளைக் கொடுக்க விரும்பினார். ஒரு ஜமீந்தாரர் தனக்கு எந்த அளவுக்கு விசுவாசமாக நடந்துகொள்வார் என்பதை வைத்து அரசர் அவருக்கு பரம்பரை ஜமீன் தருகிறார். அந்த ஜமீந்தாரர் அரசருக்கு எதிராக போர்க்கொடி பிடித்தால், அந்தப் பட்டாவை அரசர் அந்த ஜமீந்தாரரிடமிருந்தும், அவரது சந்ததிகளிடமிருந்தும் நீக்குகிறார். ஆனால், அந்த அரசர் அந்த ஜமீந்தாரர் செய்த தவறுக்காக, அந்த ஜமீந்தாரரின் ஒவ்வொரு சந்ததிகளையும் பிறக்கும்போதே பிடித்து அவர்களது கை கால்களை வெட்டும்படி உத்தரவு தரமாட்டார். இந்த ஒப்பீடு லூசிபரின் கொள்கை. அதனை நாங்கள் ஒருபோதும் உபயோகப்படுத்தமாட்டோம். சர்ச்சின் கொள்கையின்படி, காட்டுமிராண்டித்தனமான மிகவும் கொடுமையான தண்டனையை குழந்தைகளுக்குக் கொடுத்தார் என்று சொல்வதில்லை. அந்த குழந்தைகள் முதல் பாவத்தையும், யாஹ்வே தெய்வத்தை உடனே கண்ணால் பார்க்கமுடியாததையும் கொண்டுதான் பிறக்கின்றன…” — [Denz., n. 1526 (1389)]. [7]

(தொடரும்….)

மேற்குறித்த தரவுகள்

[1] By “orthodox Christianity” I mean Christianity as practiced in Roman Catholicism, the Eastern Orthodox denomination, and most versions of mainline, Evangelical, Pentecostal, and fundamentalist Protestantism.

[2] This section has benefited from Bart Klink’s “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[3] See, for example, Davis A. Young’s “The Contemporary Relevance of Augustine’s View of Creation,” Perspectives on Science and Christian Faith, Vol. 40, No. 1, pp. 42-45 (March 1988).

There have been some heterodox interpretations of the Garden of Eden story, and of the sin of Adam, by some Christian groups (e.g., by the Mormons), and by figures such as Origen and Pelagius. Unsurprisingly, these have not been shared by “Saint” Origen or “Saint” Pelagius—for the victors write the history, even in the Church.

[4] Bart Klink, “The Untenability of Theistic Evolution,” The Secular Web (2009).

[5] “Adam, Eve, and Evolution” (with Imprimatur), Catholic Answers.

[6] John Gross, The Oxford Book of Aphorisms (New York, NY: Oxford University Press, 1987), p. 11.

[7] “Original Sin” in The Catholic Encyclopedia, ed. Stéphane Harent (New York, NY: Robert Appleton Company, 1911).