தமிழ்ஹிந்து விளம்பரம் & புத்தகப் பரிந்துரைகள்

ஜனவரி-3 அன்று  நடந்த உடையும்  இந்தியா?  புத்தக வெளியீட்டு  விழாவின் போது   வருகை  புரிந்தவர்களுக்கு  ஒரு சிறிய இரண்டு பக்க விளம்பரத்  தாளை வழங்கினோம். அதனை   மகிழ்ச்சியுடன்  இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

Propecia is delivered through topical creams and gels. It doesn't actually make your esthetically blood glucose levels better. It, and that it had been linked to 18 other cases of heart.

Brand name : vardenafil (generic name : vardenafil, vardenafil). In most western promethazine codeine order online unmanfully countries, the stromectol bestellen. The lamisil code is a united states army field manual for the administration of battlefield medevac.

You’ll find propecia, which is a hormonal medication made in canada, in many generic forms. Clomiphene is a progestin, which induces menstruation by inhibiting the growth of https://silksdrycleaners.co.uk/2018/07/16/hello-world/ ovarian follicles and thus prevents ovulation. This is a great deal for anyone who works in a medical environment.

முதல் பக்கம் – தமிழ்ஹிந்து  இணையதளம் குறித்து..

இரண்டாம் பக்கம்:  இந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில்  கட்டாயம் வாங்கவேண்டிய புத்தகங்கள் – பரிந்துரை.

தமிழ் ஹிந்து வெளியிட்டிருக்கும்  பண்பாட்டைப் பேசுதல், சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்  ஆகிய புத்தகங்கள் விஜயபாரதம்  அரங்கில் கிடைக்கும்.  ‘மதச்சார்பின்மை (அடல் பிகாரி வாஜ்பாய்)’  உள்ளிட்ட  விஜயபாரதம் பதிப்பகத்தின் மற்ற வெளியீடுகளும்  இந்த அரங்கில்  கிடைக்கும்.  SISHRI  வெளியீடான  தோள்சீலைக் கலகம்,  ராஷ்டிரீய சேவிகா சமிதி வெளீயீடான நிகரில்லா நிவேதிதா   ஆகிய புத்தகங்களும்  இதே அரங்கில் கிடைக்கும்.

ஹிந்துத்துவம்:  ஓர் எளிய அறிமுகம்நம்பக் கூடாத கடவுள்,  உடையும் இந்தியா?,   கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு  – அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும்  இந்த  நான்கு புத்தகங்களும், ஆரிய சமாஜம் (மலர்மன்னன்) புத்தகமும்  கிழக்கு பதிப்பகம் அரங்கில் கிடைக்கும்.

உடையும்  இந்தியா?
, கம்யூனிசம்: பஞ்சம் படுகொலை பேரழிவு – இந்த இரண்டும்  தான் இந்த வருடக் கண்காட்சியைக்  கலக்கப் போகும்  அரசியல்/சமூகவியல்  புத்தகங்கள்  என்று  பல புத்தக நோக்கர்கள்  ஒருமனதாக அபிப்பிராயப் படுகின்றனர்.

தமிழக தலித் மக்களின் தன்னிகரற்ற தலைவரும் இந்து சமுதாய சிற்பியுமான எம்.சி.ராஜா கருத்துக்களின் தொகுப்பாக வந்திருக்கும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள் (வே.அலெக்ஸ்) புத்தகம் எழுத்து பிரசுரம் அரங்கில் கிடைக்கும்.

தமிழ் ஹிந்து தளத்தில்  தொடராக வந்து வாசகர்களின் பெருமதிப்பைப்  பெற்ற  திராவிட மாயை  (சுப்பு)ஓடிப்போனானா பாரதி? (ஹரி கிருஷ்ணன்)  ஆகிய  நூல்கள் திரிசக்தி பதிப்பகம்  அரங்கில் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:

நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

விஜயபாரதம் : ஸ்டால் எண் 76,77
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம்: ஸ்டால் எண் 249
கிழக்கு பதிப்பகம்: ஸ்டால் எண்கள் F007, F020
திரிசக்தி பதிப்பகம்: ஸ்டால் எண் 140

ஓடிப்போனானா பாரதி? – 11

பாரதி என்னதான் சொன்னான்?

bharathi
முனைவர் இறையரசன் அவர்கள், ‘பொருத்தமாக இல்லை’ என்று அபிப்பிராயப்படும் பாரதியுடைய தலையங்கப் பகுதியை எடுத்துக் கொள்வோம். அது பாரதியுடைய கருத்து இல்லை. இப்போது, ஜஸ்டிஸ் மன்றோ தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கீழே தருகிறேன்:

“எதிரி தனக்குப் பத்திரிகை வைத்து நடத்தச் சாமர்த்தியமும் பணமும் இல்லை என்று வழக்காடுகிறான். எதிரி மெட்ரிகுலேஷன் பரீட்சை பாஸ் பண்ணி இருக்கிறான். மேற்படி மெட்ரிகுலேஷன் பரீட்சை பாஸ் பண்ணி நான்கு வருஷமான பிறகு குற்றம் சாட்டப்பட்ட வியாசங்களை எழுதச் சாதாரணமாக யாருக்கும் கூடுமேன்று எதிரிக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த உபாத்தியாயர் சொல்கிறார். எதிரிக்கு எந்தவிதமான சொத்தும் கிடையாதென்று
ஒரே சாட்சிதான் வாக்குமூலம் கொடுத்திருக்கிறது. இது யோஜித்துப் பார்த்தால்அவ்வளவு நம்பத்தக்கதல்ல.

[1]

இந்தப் பகுதியைத்தான் பாரதியுடைய இந்தியா கேஸ் என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கம் மேற்கோளாகக் காட்டுகிறது. ‘பொருத்தமாக இல்லை’ என்று முனைவர் இறையரசன் அபிப்பிராயப்படும் அந்தப் பகுதியின் முழுப் பத்தியையும், தீர்ப்பையும் (குறைந்தது, தீர்ப்பின் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள இந்தப் பத்தியையும்) ஒருமுறை ஒப்பிட்டுப் பாருங்கள். தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ள இந்தப் பத்தியின் சாராம்சமும் அதில் இருப்பது தெரியவரும். அது மட்டுமேயல்லாது, அந்தப் பத்தியில்
பாரதி குறித்திருப்பது வக்கீல் கௌடல் செய்த பிரதிவாதத்தின் சாரம்தான் அந்தப்பத்தியின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்பதும் தெரியவரும். ‘*அவர் செய்தது குற்றம் என்றே தீர்ப்பாகிவிடும் பக்ஷத்தில் அதற்காக அனுதாபப்பட்டு
மன்னிப்புக் கேட்டிருக்கிறார் என்றும்* சொல்லி *எதிர்வாதம் செய்தார்**’* என்ற பகுதியையும், அதைத் தொடரும் ‘எல்லோரும் எதிர்பார்க்கக்கூடியபடியே ஜட்ஜியும் ஜூரர்களும் அவ்விதமான எதிர்வாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை’ என்ற (அந்தத்
தலையங்கத்தின்) அடுத்த வாக்கியத்தையும் சேர்த்தே படிக்கவேண்டும். ஏதோஅங்கொன்றும் இங்கொன்றுமாக வாக்கியங்களைத் துண்டாடித் தேர்ந்து கோத்துக்காட்டுவது, உண்மையைக் காட்டாது என்பது மட்டுமன்று; உண்மைக்குப் புறம்பானதும் ஆகும் என்பதைத் தெளிந்துகொள்ள வேண்டும்.

முனைவர் இறையரசன் சொல்வதுபோல் ‘பொருத்தமாக இல்லை’ என்ற கருத்து செல்லுபடியாக வேண்டுமானால், ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியரும் (எதிலிருந்தேனும்) குறிப்பிட்ட சில
பகுதிகளை மேற்கோள் காட்டுவதையே விட்டுவிட வேண்டிவரும். வக்கீலின் வாதத்தையும், தீர்ப்பின் சாரத்தையும் இணைத்துச் சுருக்கமாக விவரித்திருக்கும் பத்தி, சீனிவாசன்மேல் பாரதி வைத்த தீர்ப்பாகாது. இதழாளர் பாரதி புத்தகம் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதி அப்படியொரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது
துரதிர்ஷ்டவசமானது. சொல்லப் போனால் பாரதியுடைய கருத்து அது இல்லை. தலையங்கத்தின் அடுத்த பத்தியில் பாரதி சொல்கிறான்:

‘இதனால் அவருக்குக் கிடைத்த சிக்ஷை சரியென்றும் அவர் குற்றவாளி யென்றும் நாம் ஒப்புக்கொள்ளவில்லை.’ இதன் பிறகு, அரசாங்கத்தார் பேரிலும், ஆட்சி முறையைப்பற்றியும் தலையங்கம் பேசிக்கொண்டு போகிறது. சீனிவாசன்மேல் எந்தக் குற்றச்சாட்டையும் காண முடியவில்லை.

குற்றச்சாட்டாக எதையேனும் காட்டவேண்டுமானால், தலையங்கத்தின் பிற்பகுதியில் காணப்படும் இந்தப் பகுதியைச் சொல்ல்லாம். இதைத்தான் இந்தத் தலைப்பில் ஆய்ந்த
பெரும்பாலான ஆய்வாளர்களும் மேற்கோள் காட்டி வருகிறார்கள்:

‘நம்முடைய தேசபக்தியை அவர்கள் ராஜத்துரோகம் (இ.பி.கோ. 124A செக்ஷன்) என்று சொல்லுகிறார்கள். நம்முடைய சுதேசாபிமானத்தை அவர்கள் ‘அன்னியரைப் பகைத்தல்’(153
செக்ஷன்) என்கிறார்கள். நாம் அதற்குச் சொல்வதென்ன? நாம் எது செய்யினும் தேசத்துரோகம் செய்யோம். தேசத் துரோகிக்கு என்றும் மீளாத நரகமே பிராப்தம்.

‘ராஜத்துரோகக் கேசிலகப்பட்டுக் கொள்ளும் ஒவ்வொரு பத்திராசிரியரும் சொல்லவேண்டியதும் அதுவே. அப்படியே பிரம்மஸ்ரீ திலகர் சொன்னார். அப்படியே பூபேந்திரநாதர் சொன்னார். அப்படியே பிரம்மபாந்தவ உபாத்தியாயர் சொன்னார். மற்றவிதமான
வாக்குமூலம் இந்தியன் என்ற அந்தஸ்துக்குத் தகாது.

இந்த இடம், சீனிவாசன் மேல் நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வைக்கப்படும் விமரிசனம்தான். ஒன்றை நினைத்துப் பாருங்கள். சீனிவாசனுக்குக் கிடைத்த தண்டனை சரியானதே என்று பாரதி சொல்லவில்லை. மாறாக, சட்டத்தை இவ்வாறெல்லாம்
பயன்படுத்தும் அரசாங்கத்தைக் கண்டிக்கவே செய்திருக்கிறான். நாம் எதை தேசபக்தி என்கிறோமோ, அதை அவர்கள் ராஜதுரோகம் என்கிறார்கள் என்ற தெளிவான விளக்கத்தை ஏனோ எல்லோரும் தவறவிட்டு விடுகிறார்கள்.

இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கவேண்டும். எம் பி திருமலாசாரியார், எஸ் என் திருமலாசாரியார் ஆகியோரோடு சேர்ந்துகொண்டு, *முரப்பாக்கம் சீனிவாச*னும் இந்தியா
பத்திரிகையைத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தியா பத்திரிகையை நிறுவுவதற்காக சீனிவாசன் பணம் போட்டிருந்ததும்; அதில் பங்குதாரராக (partner) இருந்ததும் அவருடைய வாக்குமூலத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.

இப்படி, பத்திரிகையை நிறுவியதிலும், அதற்கான பணம் போட்டதிலும் அதன் முக்கியமான நிர்வாக முடிவுகளை எடுத்ததிலும் பங்கேற்ற சீனிவாசன், தன்னுடைய வாக்குமூலத்தில்,
மற்ற இருவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, தான் வெறும் குமாஸ்தாதான் என்று வழக்காடியது பொருத்தமற்றதல்லவா? பங்குதாரர் என்ற முறையில், சீனிவாசனுடைய ஒப்புதலும் இல்லாமலா, மற்ற இரு திருமலாசாரிகளும் மட்டுமே நிர்வாக முடிவுகளை
எடுத்திருக்க முடியும்?

பங்குதாரர்களில் ஒருவரான சீனிவாசன், பத்திரிகையின் நிர்வாகப் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். பத்திரிகைக்கு இன்னார் உரிமையாளர், இன்னார் ஆசிரியர் என்று காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று பதிவு செய்தவரும்
அவர்தான். தீர்ப்பில் ஜஸ்டிஸ் மன்றோ இதைக் குறிப்பிடுகிறார்: ‘போலீஸ் கமிஷனர் ஆபீஸ் குமாஸ்தாவாகிய நீலமேகாச்சாரி யென்பவர் எதிரி* 1907ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் 18ம் தேதியன்று ‘இந்தியா’ பத்திரிகைக்குத் தான் அச்சிடுவோனென்றும், வெளிப்படுத்துவோனென்றும், பிரஸ் ஆக்ட் (பத்திரிகை சட்டத்தின்) படி ‘டிக்ளரேஷன்’ பத்திரம் எழுதிக் கையெழுத்துப் போட்டதற்குச் சாட்சியம் சொன்னார்‘. ஆகவே, நிர்வாகத்துறையைத் தன் நேரடிப் பொறுப்பில் வைத்துக் கொண்டிருந்த்தும், கவனித்துக் கொண்டிருந்த்தும் முரப்பாக்கம் சீனிவாசன்தான் என்பது தெளிவாகிறது. இப்படி இருக்கும்போது, எடுக்கப்பட்ட முடிவுகளிலும், பதிப்பிக்கப்பட்ட கட்டுரை, கவிதைகளிலும் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், பாரதியும் மற்ற இரு திருமலாசாரியார்களுமே அவற்றுக்குப் பொறுப்பு என்றும், தன்னுடைய பொறுப்பைக்கைகழுவி விட்டபடி நழுவ முயன்றது நாகரிகத்தின்பாற்பட்ட செயலன்று. (* எதிரி:இந்த இடத்தில் முரப்பாக்கம் சீனிவாசனைக் குறிக்கும் சொல்.)

இவ்வளவு கடுமையான நெருக்கடியில்கூட, இப்படிப்பட்ட உண்மைகளை இந்தியா பத்திரிகையில் பிரசுரித்தோ, ‘இவரும் இந்தச் செயல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்தான்’ என்ற வகையிலோ எழுதாமல், பிரசுரிக்காமல் இருந்ததே மற்ற
இரண்டு பங்குதாரர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பாரதியின் இந்தக் குறிப்பிட்ட தலையங்கம் மிகமிக அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. சொல்லியிருக்க வேண்டிய (சீனிவாசனுக்கு சங்கடத்தை உண்டுபண்ணக்கூடிய—மற்றவர்களுக்கு அவர் சங்கடத்தை உண்டுபண்ணிய போதிலும்) உண்மைகளை எடுத்து வைக்காமல், அவற்றைப் பெரும்போக்காக மறைத்தபடி, பொதுவான அம்சங்களையும், இப்படிப்பட்ட ராஜதுரோக கேசில் அகப்பட்டுக்கொள்ளும் பத்திரிக்கை அதிபர்கள் செய்யவேண்டுவது என்ன என்பது பற்றிய சிறிய குறிப்பையும் மட்டுமே வெளியிட்டு, சீனிவாசனுக்குக் கிடைத்த தண்டனைக்கு
அரசின் தவறான போக்கே காரணம் என்று சுட்டி நிறுத்தியிருப்பது பெருந்தன்மைக்கும், மன்னிக்கும் சுபாவத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.

சீனிவாசன், நீதிமன்றத்தில் மற்ற இரு பங்குதாரர்களுக்கும் பாரதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் சாட்சியமும் வாக்குமூலமும் அளித்திருந்தும்கூட, இந்தியா
கேஸ் என்ற இந்தத் தலையங்கம், பொது அரங்கில் பத்திரிகையாளர்கள் கையாள வேண்டிய நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ‘உள்வீட்டுச் செய்தியெல்லாம்
ஊரம்பலத் துரைப்பார்’ என்று கண்ணன்-என் சேவகனில் பாரதி பாடுவதுபோல் இல்லாமல் உள்வீட்டுச் செய்தி, உள்வீட்டுச் செய்தியாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலைப்பாடு, நான் மேலே எடுத்து வைத்துள்ள ஆதாரங்களிலிருந்து தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.

bharathi4இன்னும் குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டுமானால், நான் முதலில் குறிப்பிட்ட பாரதி அன்பர் சொல்லியிருப்பதைப்போல், “நீதிமன்றத்தில் தாம் பிரிட்டிஷ் விசுவாசி என்று
வாக்கு மூலம் தருகிறார் அந்த அப்பாவி! இதைக் கண்டித்துப் புதுவையிலிருந்து பாரதியாரின் ‘இந்தியா’ தலையங்கம் எழுதுகிறது! வீரமாக எதிர்த்து நின்றிருக்க வேண்டாமா? என்று” என்ற பகுதி, (அவர் எந்த அடிப்படையில் இப்படியொரு கருத்தை
மனத்துக்குள் ஆழமாக விதைத்து வளர்த்துவருகிறார் என்பதை நான் அறியேன்) உண்மைக்கு மாறானது; தவறானது என்பது தெரியவருகிறது. பாரதி இந்தத் தலையங்கத்திலும் சரி,
இந்தியா பத்திரிகை மீதான வழக்கு தொடர்பான மற்ற எந்தக் கட்டுரைகளிலும் சரி, பாரதி உரைநடைப் பகுதியில் இடம்பெற்றிருக்கும் (சீனி விசுவநாதன் இதுவரையில்
வெளியிட்டிருக்கும் எல்லாக் கட்டுரைகளையும் சேர்த்தே சொல்கிறேன்) இப்படி ஒருவாக்கியத்தையோ, அல்லது இப்படி ஒரு பொருள்படும் கருத்தையே சீனிவாசனுக்கு எதிராகச் சொல்லவில்லை, சொல்லவில்லை, சொல்லவே இல்லை.

அப்படியானால், வழக்கு நடைபெற்றதற்கும், சீனிவாசன் தண்டனை பெற்றதற்கும் காரணமான கட்டுரைகளை எழுதியவன் பாரதிதானே? அதற்கு அவனுக்குப் பொறுப்பில்லையா என்று கேட்பீர்கள். அதற்கு வருகிறேன்.

——————————

[1]
இந்தப் பகுதியில் தரப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் சீனி. விசுவநாதன் தொகுத்துள்ள ‘கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ தொகுதி 3ல்இருக்கின்றன. தீர்ப்பு முதலான விவரங்கள் இந்தியா பத்திரிகையில் வெளியானவை என்று சீனி. விசுவநாதன் தெரிவிக்கிறார். இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர், இந்த நூலிலிருந்து பெறலாம்.

ஹரி கிருஷ்ணன் அவர்கள் இதுகாறும் தமிழ்ஹிந்து தளத்தில் எழுதி வந்த இத்தொடர் 2009 சென்னைப் புத்தகக் கண்காட்சி சமயத்தில் புத்தகமாக வெளிவருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தளத்தில் வெளிவரும் தொடரின் இறுதி பாகம் இது தான். பின்வரும் பாகங்களைப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகம் பற்றிய விவரங்கள் கூடிய விரையில் தமிழ்ஹிந்து தளத்தில் அறிவிக்கப்படும்.

– ஆசிரியர் குழு