தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை

சென்ற சனிக்கிழமை (14-ஆகஸ்டு) அன்று தஞ்சையில் சைவ மரபு பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய இப்பதிவும், புகைப்படங்களும் மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து சென்னை நன்மங்கலம் சிவாய நமஹ என்ற சிவத் தொண்டர் மூலமாக நமக்குக் கிடைத்தது. அதனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

The price can vary a little depending on your location. They were worried that they would have to pay buy clomid in india Jewar a lot of money to keep their baby healthy. However, there are still some things to consider before you head to the store to buy cheap levitra.

The following statement was just released into the press today: the government is in talks with the association of british insurers about the implementation of a new uk-wide mandatory benefit, the policy would be expected to be. What clomid online kaufen is the difference between dapoxetine and citalopram? The doctor just told me to take this drug to treat my depression.

When you take a corticosteroid, especially one that's been shown to enhance the therapeutic benefits of the immune system, you may find the condition improves. For the best price of azithromycin clomid for men for sale 500 mg in stores be sure to compare prices of other similar products. Doxycycline for acne in dogs a new trial of doxycycline for acne in dogs revealed it may help clear up some acne, the daily mail reported on sunday.

சிவாய நமஹ என்னும் இறைத்தொண்டர் அனைத்து சிவாலயங்களிலும் திருவிளக்கு ஏற்றும் பணி இடையறாது நிகழவேண்டும் என்பதற்காகப் பற்பல பணிகளைச் செவ்வனே செய்துவருகிறார். அது பற்றிய வலைத்தளம் இங்கே.

– திருச்சிற்றம்பலம் –

நம் சைவ சமயத்திற்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கின்றது. ஆதியும் அந்தமுமில்லா அருப்பெருஞ்சோதியாகிய நம் சிவபெருமானே வேத ஆகமங்களை தம் திருவாய் மலர்ந்தருளினார். முத்தமிழும் மறைகள் நான்கும் ஆனவனாகிய நம் சிவபெருமான் மாதவம் செய்த தென் திசையாகிய செந்தமிழ் நாட்டின்மேல் கொண்ட தனிப்பெருங்கருணையினாலே பன்னிருத் திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் தம் அருளாளர்கள் மூலம் திருநெறிய தமிழில் அருளிச் செய்தார். இக்காலத்தில் சிலர் திருவேடம் பூண்டு தம் தோற்றம் மறந்து வேதாகம நிந்தனையை தமிழ் பற்று என்ற பெயரில் செய்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும். நம் தொன்மையான சைவ மரபினை பாதுகாக்கும் நோக்குடன் நம் சிவபெருமான் அருளிய வேதம், ஆகமம் மற்றும் நம் அருளாளர்கள் அருளிய பன்னிருத் திருமுறை மற்றும் பதினான்கு சாத்திரங்களையும் தகுந்த முறையில் போற்றவும் சைவ பெருமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தால் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.

thanjai-saiva-manadu-aug-2010-1

மாநாடு திட்டமிட்டபடி 14-08-2010 அன்று மிகவும் சிறப்பாகவும் மங்களகரமாகவும் நடந்தேறியது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ பெருமானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. திருநெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் தூப தீபத்துடன் வழிபாட்டினை ஏற்ற, திருவாவடுதுறை ஆதீன கட்டளைத் தம்பிரான் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பஞ்சபுராணம் பாடி மாநாட்டினைத் துவக்கி வைத்தனர்.

ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொடர்ந்து அருளுரை வழங்கினார். அவர் தம் உரையில் “இந்துக்கள் அனைவரும் மொழியின் பேரால் பிரிக்கப்பட்டு சிவ சிந்தையினின்றும் விலகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் போதனைகளைக் குறை கூறுபவர்களை வன்மையாகக் கண்டித்தார். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சியையும், திருமுறைப் பயிற்சியையும் எல்லோரும் பயன்படுத்திக் கொண்டால் பயனுடையதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

thanjai-saiva-manadu-aug-2010-2

பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன. அவையில் கூடியிருந்தவர்கள் தங்கள் கண்களின் கண்ணீர் மல்க நாடகங்களைக் கண்டுகளித்தனர். பெங்களூர் சிவச் செல்விகள் பூஜா மற்றும் சரயு ஆகியோர் “தோடுடைய செவியன்…” என்ற திருப்பதிகத்திற்கு நடனம் ஆடி அவையோர்களை சிவானந்தத்தில் ஆழ்த்தினர். பிறகு அடிவர்களுக்கு மாகேஸ்வர பூசை சிறப்பாக நடைபெற்றது.

நண்பகல் அமர்வின் முதல் நிகழ்வாக சென்னை நன்மங்கலம் சிவாயநம அவர்கள் தம் கணீர் குரலில் சிவபுராணம் பாட, கூடியிருந்த அவையோரும் உடன் பாடினர்.

ஸ்ரீகாசி மடத்து இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தமூர்த்தி தம்பிரான் சுவமிகள் “மொழிக்கு மொழி தித்திக்கும் திருமுறைகள்” என்ற தலைப்பில் திருமுறையின் பெருமைகளை மிக அற்புதமாக எடுத்துரைத்தார். மேலும், ஹர ஹர நமபார்வதி பதயே| ஹர ஹர மகாதேவா|| என்ற மகுடம் வந்த விதமும், திருமுறைகளில் இந்த வார்த்தைகள் கையாளப்பட்டுள்ள விதத்தையும் காட்டி, சைவப் பெருமக்கள் இம்மகுடத்தைக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வயதான காலத்தில் மட்டும் இது போன்ற பணிகளில் ஈடுபடும் பக்தர்களின் மத்தியில் இளைஞர்களால் இம்மாநாடு நடத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.

துலாவூர் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானம் அவர்கள் தம் அருளாசியில், “நித்ய அனுஷ்டானம், சைவ ஒழுக்கம், முறையான தீக்கை இவற்றைக் கடைப்பிடிப்பதே சிறப்பு என்றும் அதுதான் தெய்வீக தன்மையைத் தரும்” என்றும் கூறினார். மேலும், சைவ மரபு என்பதன் முக்கியம் பற்றியும் கூறினார்.

நெடுங்களம் சிவஸ்ரீ ரமேஷ் குருக்கள் மற்றும் கோவை சிவஸ்ரீ சுரேஷ் குருக்கள் அருமறைப் பயனாகிய திருஉருத்திரம் மற்றும் சிவ ஆகமங்களை ஓதினர். தற்காலத்தில் சைவ விழாக்களில் காணுதற்கரிய வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர்.

கோவை சைவத்திரு. கந்தசாமி ஓதுவார் அவர்கள் திருமுறை இன்னிசை நிகழ்த்தினார்.

சைவ நெறி வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைகளை சிவ. கோமதிநாயகம் அவர்கள் விளக்கிக் கூறினார். அவர்தம் உரையில் தமிழகத்தில் பூஜைகள் நடக்காத சிவாலயங்களில் சிவாகம வழியில் பூசைகள் நடத்த கழகம் பாடுபடும் என்றும் மொழியின் காரணமாக வேறுபட்டு நிற்கும் சைவர்களிடையே தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார். சைவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே தன் கொள்கைகளாகக் கொண்டு எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடியை மட்டுமே நம்பிதான் இவ்வியக்கமே உருவாக்கப்பட்டுள்ளது. சைவப் பெருமக்கள் அனைவரும் சைவநெறி வளர்ச்சிக் கழகத்தில் சேர்வதைத் தங்கள் கடமையாக உணர்ந்து சேர வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து ஓர் அணியிலே திரண்டு ஒருமித்த குரல் எழுப்பினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். ஈசன் அருளால் இன்று உருவாகியிருக்கும் இந்த அமைப்பு வெகு விரைவிலேயே ஆயிரக்கணக்கான தொண்டர்களை உடைய ஓர் சக்தி வாய்ந்த அமைப்பாக திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நமக்குக் குருவருளும் திருவருளும் தோன்றாத் துணையாக இருக்கும் என்று கூறினர்.

thanjai-saiva-manadu-aug-2010-3

shaivam.org இணைய தள நிருவாகியும், சிறந்த சைவ நெறி புரவலருமான பெங்களூரைச் சேர்ந்த சிவத்திரு. சு. கணேஷ் அவர்கள் “வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என்ற தலைப்பில் நான்மறையின் சிறப்பை முத்து முத்தாக எடுத்துரைத்தார்.

பிரம்மஸ்ரீ அருணசுந்தர குருக்கள் “ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க” என்ற தலைப்பில் சிவ ஆகமங்களின் பெருமைகளை எடுத்துக் கூறினார். திருமுறைகள் எவ்வாறெல்லாம் ஆகமங்களைப் போற்றுகின்றன என்று ஆதாரங்களுடன் கூறினார்.

சைவத்திரு நெல்லை சிவகாந்தி அவர்கள் “திருவருட்பயன்” என்ற தலைப்பில் சைவ சிந்தாந்தக் கருத்துக்களை விளக்கினார். சைவத்தின் பயனே திருவருட் பயன் என்று உறுதியாக எடுத்துக்காட்டுகள் மூலம் கூறினார். திருவருட்பயனை திருக்குறளுடன் ஒப்புநோக்கி விளக்கினார்.

சைவத்திரு சாமி தியாகராஜன் அவர்கள் “அர்ச்சனை” என்ற தலைப்பில் அர்ச்சகர்-இறைவன் இவர்களுக்குள்ள தொடர்பு அதன் பலன் எல்லாவற்றையும் தனக்கே உரிய இனிய நடையில் பேசினார்.

சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு T.N. இராமச்சந்திரன் அவர்கள் இம்மாநாட்டைப் பற்றிப் பேசும்போது “மாநாடு என்றால் இதுதான் மாநாடு” என்று பேசி இம்மாநாட்டிற்கு மேலும் மகுடம் சூட்டினார்.

தருமை ஆதீன மௌனமடம் முனைவர். ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகளில் முழுமையாகப் பங்கேற்று, “தமிழ்சொல்லும் வடசொல்லும் தாள்நிழல் சேர” என்ற தலைப்பில் அழகுற பேசி அரிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும், வேத ஆகம, திருமுறைகள் சிறப்பையும் ஒப்புநோக்கி விவரித்தார். வரலாற்று சிறப்புமிக்க இம்மாநாட்டினை நடத்திய சைவநெறி வளர்ச்சிக் கழகத்திற்கு தம் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

சைவத்திரு பட்டமுத்து அவர்கள் “தமிழ்மொழி வடமொழி” என்ற இருமொழிகளின் பெருமைகளையும் ஒப்பிட்டு ஸ்ரீமத் மாதவ சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிபுராணம் மூலம் மிக அரிய கருத்துக்களை மேற்கோள் காட்டி விளக்கினார். மேலும், இரு பாலகர்களை முன்னிறுத்தி வடமொழியிலும் தமிழிலும் உள்ள சிவஞான போத சூத்திரங்களை ஓதச் செய்தார். மேலும், வேதத்தின் சிறப்பை விளக்கி “வடமொழி என்பது தந்தை மொழி என்றும், தென் தமிழ் என்பது தாய்மொழி” என்றும் நயம்பட கூறினார்.

thanjai-saiva-manadu-aug-2010-4

“புற்றில்வாழ் அரவுமஞ்சேன்” என்ற திருவாசகப் பதிகத்திற்கு சிவச் செல்வி சரயு மிக அழகாக நடனம் ஆடினார்.

இறுதியாக கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் “எல்லாவற்றிலும் நம் முன்னோரின் மரபுபடியே செல்லுதல்தான் நல்லது” என்றும் “கும்பாபிஷேகம் என்பதை குடமுழுக்கு என்று சொல்வது கூட பிழையே” என்று கூறினார். நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த சைவ நேயர்களின் ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து ஆசீர்வதித்தார்.

சிவத்திரு கோமதிநாயகம் அவர்கள் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்து பலத்த கரவொலியைப் பெற்றார். அன்பர்கள் எழுப்பிய “அரகர” என்னும் ஒலியால் மாநாட்டு மன்றமே அதிர்ந்தது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ முழு முயற்சி எடுக்க சைவ மக்களை இம்மாநாடு வேண்டுகிறது.
  • நமது சமய சான்றோர்கள் நமக்குத் தந்துள்ள சைவ மரபுகளை மீறாமல் கடைப்பிடித்து சைவ ஒழுக்கங்களைப் பேணி பாதுகாக்க, சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
  • சைவ மக்களுக்கு தமிழும், சமஸ்கிருதமும் இரு கண்களாகக் கொள்ள வேண்டும் என்ற அருளாளர்கள் அருளாணையைத் தமது உயிராகக் கொள்ள வேண்டும் என்று சைவ உலகினை இம்மாநாடு வேண்டுகிறது.
  • வறுமையால் வாடுகின்ற திருமுறை ஓதுவா மூர்த்திகளுக்கு மாதந்தோறும் சம்பாவனைக் கொடுத்து ஆதரித்து மகிழும் கோவை ஆனைக்கட்டி மடத்தின் அதிபதி ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகளை இம்மாநாடு பணிந்து வணங்கி தனது நன்றியுணர்வு பெருக்கினை புலப்படுத்துகிறது.
  • சிவாச்சாரியார்களும், திருமுறை ஓதுவார்களும் நமது சைவ சமயத்தின் இருகண்கள். இவ்விரு பெருமக்களும் நித்திய பூசையிலும் மகா கும்பாபிஷேகங்களிலும் ஒருவரையொருவர் அனுசரித்து உதவுமாறு இம்மாநாடு வேண்டுகிறது.
  • இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட சிவாலயங்கள் பலவற்றில் மகா கும்பாபிஷேகமும் தங்க ரதம் அமைத்தல் போன்ற நற்காரியங்களையும் செய்து வருகின்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறையினை இம்மாநாடு பாராட்டுகிறது.
  • இம்மாநாட்டில் பங்கேற்ற சைவ அன்பர்கள் அனைவரும் இரு மாதத்திற்கு ஒருமுறை கூடி, சைவ மரபினைப் பாதுகாக்கக் கருத்துப் பரிமாற்றம் செய்து மகிழ வேண்டும் என அன்பர்களை இம்மாநாடு வேண்டுகிறது.

– திருச்சிற்றம்பலம் –

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 6

அவ்வப்போது, முடிந்த போதெல்லாம் நான் சில கோயில் தரிசனங்கள் செய்ய வேறூர்களுக்குப் போவதுண்டு. ஆனால் சில பங்களிப்புகளும், தரிசனங்களும் தானாக எனக்கு அமைந்ததும் உண்டு. மறக்கமுடியா ஒரு தொடர் விசேஷ தரிசனங்கள் பற்றியும் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவை தானாக அமைந்ததும் அல்லாது, ஒரு குறிப்பிட்ட கால தேசத்துக்குள்ளும் அமைந்ததுதான் எனக்கு மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தன.

puri_jagannath-in-chennaiஎன்னுடன் சக ஊழியராக வேலை பார்த்த முனைவர் ஒருவர்; ஒரிஸ்ஸாவில் இருந்து வந்துள்ளவர். அந்த முனைவரின் உதவியால்தான் நமது “அருணாசல அக்ஷர நாமாவளி“யின் முதற் பதிப்பும் வெளியாகியது என்பது தனிக் கதை. அவர்கள் சங்கத்தின் சார்பாக பூரியில் இருக்கும் ஜெகன்னாதர் கோயில் போல ஒரு கோயிலை சென்னை-மகாபலிபுரம் கீழக் கடற்கரை சாலையில் உத்தண்டியைத் தாண்டி காணத்தூரில் நிறுவிக் கொண்டிருந்தனர். வெகு நாள்கள் ஆகியும் முன்னேற்றம் மிகவும் இல்லாது தடைகள் பலவும் நேர்ந்ததால், விநாயகர் சந்நிதியை முதலில் முடித்து அதற்குக் கும்பாபிஷேகமும் செய்து முடித்து விடுவது எனத் தீர்மானித்தனர். அதுவே அவர்களது முதல் முயற்சி என்பதாலும், கும்பாபிக்ஷேகம் பற்றிய விவரங்களை அவர்கள் மிகவும் அறியாததாலும் என்னை ஒரு குழுவின் கௌரவத் தலைவராக ஆக்கி, வைதிக முறையில் செய்து வைக்க வேண்டி, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னனர். அப்போதெல்லாம் எனக்கு நேரமும் இருந்தது, உடம்பை வருத்திக் கொண்டு உதவி செய்யவும் முடிந்தது. நான் எனக்கு அறிமுகமாகி இருந்த வைதிகர்களின் துணைகொண்டு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து முடிக்க முடிந்தது. அது முடிந்ததும் நாற்பத்தெட்டு நாள்கள் கழித்து வரும் மண்டல பூஜைக்கும் என்னை அழைத்திருந்தனர்.

sankarankoilஅதற்குள் ஒருமுறை காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது காஞ்சிப் பெரியவர்களின் அனுமதியினால் சங்கரன் கோயில் கும்பாபிக்ஷேகத்திற்கு அவர்களுடன் சென்றுவர ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நானும் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கிருந்த அவர்களது பரிவாரத்துடன் சேர்ந்துகொண்டேன். எனக்கு அவர்களது நிகழ்ச்சி நிரல் எதுவும் தெரியாது. அங்கு போனதும்தான் சங்கரன் கோயில் கும்பாபிஷேகம் முடிந்ததும் அவர்கள் அடுத்தபடியாக திருச்செந்தூர் முருகன், மற்றும் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகங்களுக்கும் செல்வார்கள் என்று தெரிந்தது. அவர்களுடன் அப்படிச் சென்றதால் எல்லா கும்பாபிஷேகங்களுக்கும் சென்று நன்கு தரிசனமும் செய்ய முடிந்தது. முதலில் சிவன், அப்புறம் முருகன், அதற்கப்புறமாக அம்பாள் என்று வரிசையாகவும் செய்ய முடிந்தது. அது முடிந்ததும் சென்னை வந்த மறுநாளே பூரி ஜெகன்னாதர் கோயிலில் உள்ள பிள்ளையார் சந்நிதி மண்டல அபிஷேகத்திலும் கலந்து கொள்ள முடிந்தது.

இப்படியாக ஒரு தேவையினால் பிள்ளையாரில் ஆரம்பித்து, அது முடிந்து ஒரு மண்டலத்திற்குள் பரமசிவன் குடும்பக் கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்ததை ஓர் அருளாகவே கருதுகிறேன். சங்கரன் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணன் என்பதால் இந்த வரிசையில் முழுமுதற் கடவுளர்கள் இருவரும் உள்ளதை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

இனி வருவது இந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் அப்புறம் என்றுதான் ஞாபகம். பக்தர்கள் பலரின் முயற்சியால், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் திருப்பணி செவ்வனே முடிவுற்று, 1996-ம் வருட ஆரம்பத்தில் கும்பாபிஷேகமும் நடந்தேறியது. சாதாரணமாக அரசர்கள் அல்லது நாட்டுக்கோட்டை தனவந்தர்கள் முன்னின்று நடத்தும் ஒரு பணியை அங்கிருந்த சாமியார் அவர்களின் முயற்சியால் நன்கு நிறைவேறியதைப் பாராட்டாதவர்கள் எவரும் இல்லை. அந்த வைபவங்களில் ஐந்து நாள்களும் கலந்துகொண்டு என்னால் இயன்றதையும் செய்துகொண்டிருந்தேன்.

அந்த கும்பாபிஷேக சமயத்தில் நான் பல அன்பர்களைச் சந்தித்தேன். அவர்களில் ஒருவர் தான் அந்த ஓதுவார். அவர் திருவாரூர் பக்கம் இருந்த ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பதாகவும், அவர் உள்ள இடத்தில் இருக்கும் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் பாடல் மட்டும் பெற்ற ஸ்தலம் என்றும் கூறி, அந்தக் கோயிலின் திருப்பணி நடைபெறுவதாகவும், நான் எப்போதாவது அங்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். திருவாரூர் போக வேண்டும் என்பது எனது நெடு நாளைய ஆசை

thiruvarur

 

ஒவ்வொரு நாளும் சாயரட்சையில் எல்லாச் சிவன் கோயில்களின் கலைகளும் திருவாரூர் கோயில் தியாகராஜர் சந்நிதியில் ஒடுங்கும் என்றும், ஒவ்வொரு நாளும் இந்திரன் அங்கு சாயங்காலப் பூஜை செய்வதாகவும் ஐதிகம். திருவாரூர் என்பதே திரு+ஆர்+ஊர் என்பதைக் குறிக்கும்; லக்ஷ்மி பூஜை செய்த இடம் அது. ஒருமுறை அக்கோயிலின் முகப்பில் உள்ள தேவாசிரிய மண்டபத்தில் அமர்ந்திருந்த அடியார்களுக்கு வணக்கம் செலுத்தாது சுந்தரமூர்த்தி நாயனார் நேராக சிவன் சந்நிதிக்குச் செல்ல, அதைப் பார்த்த விறனமிண்ட நாயனார் என்பவர் கோபம் கொண்டு “வன்தொண்டரும் புறகு” என்கிறார். வன்தொண்டர் ஆகிய சுந்தரரை அப்படிப் புறந்தள்ளி ஒதுக்கியதோடல்லாமல், அவருக்குத் தனியாக வடக்கு கோபுர வாயிலுக்கருகே ஒட்டுத் தியாகேசராக தரிசனம் கொடுத்த சிவபெருமானையும் அப்படியே உதாசீனம் செய்கிறார். அதனால் அவரிடம் சுந்தரரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு “தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்…” எனத் தொடங்கும் அறுபது நாயன்மார்கள் பற்றித் தெரிவிக்கும் “திருத்தொண்டத் தொகை”யை திருவாரூரில் எழுதி முடிக்கிறார். அப்புறம் வெளிவந்த நம்பியாண்டார் நம்பி, “திருத்தொண்டர் திருவந்தாதி”யில் சுந்தரர் மற்றும் அவர் பெற்றோர்கள் இருவரையும் அதில் சேர்த்து அறுபத்து மூவர் ஆக்குகிறார் என்பார் திருமுருக கிருபானந்த வாரியார். அதற்கும், சேக்கிழார் பெருமானின் :திருத்தொண்டர் புராணம்” ஆகிய பெரிய புராணத்திற்கும் சுந்தரர் அளித்ததே மூல நூலாகும். அத்தகைய திருவாரூருக்குப் போய்வர வேண்டும் என நான் எண்ணியிருந்ததால், எனது திருவாரூர் அன்பர் ஒருவரது துணை கொண்டு அக்கம் பக்கத்திலுள்ள வெவ்வேறு கோயில்களையும் தரிசனம் செய்யப் புறப்பட்டேன்.

நமது ஒதுவார் இருந்த ஊருக்குச் செல்ல அங்கிருந்து டவுன் பஸ்ஸிலேயே போகலாம் என்று அறிந்து கொண்டபின், அதன் நேரமும் தெரிந்துகொண்டு என் நண்பரை நேராகவே பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு நாள் காலை வரச் சொல்லியிருந்தேன். பஸ்ஸோ வந்து விட்டது, ஆனால் நண்பரைக் காணவில்லை. அடுத்த பஸ்ஸில் போகலாம் என்றால் இன்னும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகலாம் என்பதால், விசாரித்துக் கொண்டு செல்வோம் என்று பஸ்ஸிலேயே அமர்ந்துவிட்டேன். பஸ் புறப்பட்டு சிறிது நேரம் கழித்து என் அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் அந்தக் கிராமத்தின் பெயரைச் சொல்லி, அந்த ஊர் வரும் போது என்னிடம் சொல்லச் சொன்னேன். அவரோ, “நானும் அங்குதான் போகிறேன். கவலை வேண்டாம்” என்றார். என்ன விஷயமாக வந்திருக்கிறேன் என்று அவர் என்னை விசாரிக்க, நான் ஒதுவார் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்ல, அந்த நபரோ ஓதுவார் வீட்டின் எதிரில்தான் அவர் வசிப்பதாச் சொல்லி, அவர் வீட்டிற்கும் வரச் சொன்னார்.

நல்லது என்று சொல்லி, அப்போதுதான் அவர் பெயரையும் விசாரித்தேன். தன் பெயர் அருணாசலம் என்றார். எனக்கோ இறைவனே அழைத்துக் கொண்டு போவது போலத் தோன்றியது. என் கையில் இருந்த அருணாசல நாமாவளி கைப்புத்தகப் பிரதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன் என்று நினைக்கிறேன். அவர் வீட்டிற்கும் சென்றேன்; அவரும் அப்போதுதான் பறித்த இளநீர் இரண்டை சீவி எனக்குச் சாப்பிடக் கொடுத்தார். இதற்குள் எனது திருவாரூர் நண்பரும் அடுத்த பஸ்ஸைப் பிடித்து அங்கு வந்து சேர்ந்தார். ஓதுவாரையும் பார்த்துவிட்டு, சிவன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு அன்று மாலையே திருவாரூர் திரும்பினோம். அச்சமயம் திருவாரூர் கோயிலில் நடந்த அண்ணாமலையார் சம்பந்தப்பட்ட இன்னுமொரு சம்பவத்தை எனது, “நம்மைத் தேடி வரும் இறைவன்” கட்டுரையில் சொல்லி இருப்பது வாசகர்களுக்கு ஞாபகம் வரும் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் எனது திருவாரூர் அன்பரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக என் வீட்டில் சொன்னார்கள். அதன்படி அக்குடும்பத்தினர் சென்னைக்கே குடிபெயர்ந்து வந்து சில நாள்களிலேயே, அவரது 80-வயதுக்கும் மேலான பாட்டியார் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும், அவரது இறுதி நாள்கள் அமைதியாக இருக்க பிரார்த்தனை செய்யவும், முடிந்தால் என்னை வரச் சொல்லியும் செய்தி வந்திருந்தது. நான் அன்று மாலையே அங்கு செல்லும்போது, கையில் இருக்கட்டும் என்று நாமாவளிப் பிரதிகள் சிலவற்றையும் எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன்.

பாட்டி மிகவும் முடியாது ஒரு மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார். நான் வந்தது தெரிந்தது, காதும் நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தது, ஆனால் பேசத் திறன் இல்லை. அதற்குப் போதுமான சக்தி இல்லை. சரியாகச் சாப்பிட முடியவில்லை, திரவங்கள் தான் ஆகாரம். அவைகளும் உடலில் தங்குவதில்லை. சிறிது நேரம் அவரைப் பற்றிப் பேசி விட்டு, அவரது காது நன்கு கேட்கிறது என்பதால் நாமாவளியைப் பாராயணம் பண்ணலாமா என்று கேட்டேன். அவர்களது சம்மதத்தின் பேரில், நான் முன்னே பாடிக் கொண்டிருக்க மற்றவர்களும் புத்தகத்தைப் பார்த்து என்னுடன் பாடினார்கள்.

பாடி முடியும் தறுவாயில், வைத்தியரும் பாட்டியைப் பார்க்க வந்தார். பாட்டி இறந்தால் திருவாரூர் பக்கம் உள்ள தனது கிராமத்தில் இறக்க விரும்புவதாகவும், அன்று மறுநாள் அதிகாலையே கார் ஒன்றில் அவரை அழைத்துச் செல்லப் போவதாகவும் சொல்ல, வைத்தியரும் காலையில் கிளம்பும் முன் drips கொடுக்க வருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றார். நான் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு, வீட்டிற்குக் கிளம்பி வந்து விட்டேன்.

இரண்டு மூன்று வாரங்கள் சென்றபின், என் வீட்டில் இருந்தவர்களுடன் அந்த அன்பர் பேசி இருக்கிறார். அவர்கள் திட்டமிட்டது போலவே கிராமத்திற்குச் சென்றார்களாம், பாட்டியின் நிலையும் நாளுக்கு நாள் சீராகி, உடல் தேறி சென்னைக்கும் வந்து விட்டார்களாம். எவருக்கும் வருவது போல எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சாகும் தறுவாய் என்றார்கள், ஊரில் காலம் முடியட்டும் என்றார்கள், இப்படியும் ஓர் அதிசயம் நடக்கிறது என்றால், மனிதர்களது தவிர வேறு ஒரு சக்தியும் இருக்கிறது என்பதை மீண்டும் உணர்ந்தேன். சில நாள்கள் கழிந்ததும், வேறு எதற்கோ பாராயணம் செய்யும் போது நாமாவளியின் இறுதி இரண்டு அடிகள் என் கவனத்திற்கு வந்தன. அவை:

tiruvannamalaiபவ நோயை தீர்க்கும் மருத்துவரன்றோ ()
மருத்துவர் மற்றும் மருந்தாய் இருப்பாய் ()

அவைகளைப் பார்த்ததும் வேறு சில அடிகளையும் பார்த்தேன். பல இடங்களில் மலையே மருந்தாய் இருப்பதை உணர்த்துவதையும் நோக்கினேன். அப்போது தான் ரமணரது இந்த “அக்ஷர மண மாலை” அடிகளும் ஞாபகத்திற்கு வந்தன:

மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா

சரிதான், பாட்டி பிழைத்தது ஒரு வேளை முதல்நாள் செய்த பாராயணத்தின் பலனாகவும் இருக்கலாமோ என்ற ஓர் எண்ணமும் கிளம்பியது. இது பற்றித் தெரிந்த சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அதை எத்தனை பேர் புரிந்து கொண்டார்களோ, அதை எப்படிப் புரிந்து கொண்டார்களோ? ஆனால் பின்னர் நடந்த சில நிகழ்வுகள் எனக்கு நாமாவளிப் பாராயணத்தின் அருமையை வெகு சிறப்பாகவே புரிய வைத்தன. இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் நடப்பதென்னவோ நாராயணன் செயல் என்று நன்றாகவே புரிய வைக்கும்.

(தொடரும்…)