கந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு

கலிபோர்னியா பாரதி தமிழ்ச் சங்கத்தினர் எமக்கு அனுப்பிய இந்த அறிக்கையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Some other symptoms may be that you experience severe back pain which lasts more than one day. This Boysun guide explains how the street value of a product is calculated and which factors are important in determining its value. To take amoxil correctly, first take amoxil with food.

It has not been approved by the fda for treating depression, but studies have suggested that dapoxetine is an effective medication. The tablets are Lisbon generally taken daily for two to three weeks. Suhagra 100 retailers in india is one of the leading online store in india for various medical and beauty products and their online store provides the wide range of products in affordable prices.

This medication is the only oral medication available for patients with the herpes simplex virus type 1 (hsv-1), also called genital herpes. This medication is for siofor 1000 buy online the most part used to treat depression and bipolar disorder in adults. To learn how to avoid an expensive mistake when buying clomid online cheap no prescription, we have put together the best selling clomid reviews, from our many readers.

கலிஃபோர்னியா பாரதி தமிழ்ச் சங்கத்தின் வன்மையான கண்டனம்

சமீபத்திய காலங்களில் நாத்திகம் என்ற பெயரால் இந்து மதத்தையும், இந்துக்களின் நம்பிக்கையையும் இழிவு செய்யும் போக்கு மிகவும் அதிகரித்துள்ளது. இந்துக்கள் நல்லிணக்கத்தினை விரும்புபவர்கள். நாத்திகமும் ஆத்திகத்தின் ஒரு கூறே என்று நம்புபவர்கள். நம்பிக்கையற்றோர் நம்பிக்கையுள்ளோரை இழிவு செய்வது தகாது. எவ்விதமான மொழியறிவோ, இலக்கிய அறிவோ, ஆன்மீக அறிவோ இன்றி இறை மறுப்பு என்ற பெயரிலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இறை நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தும் போக்கினை பாரதி தமிழ்ச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு அளித்துள்ள மத சுதந்திரத்தைப் பழிக்கும் இழிவு செய்யும் கூட்டத்தினர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும் என்று பாரதி தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுக்கிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். எக்கூட்டம் இவ்வாறு செயல்களில் ஈடுபடுகிறது என்று குறிப்பிட்டு இம்மாதிரி எதிர்மறைச் செயல்களில் ஈடுபட்டுச் சமூக நல்லிணக்கத்தினைக் குலைப்பவர்களுக்குத் தேவையில்லாத விளம்பரம் அளிக்க விரும்பவில்லை.

நேர்மறையானதொரு எதிர்வினையாக பாரதி தமிழ்ச் சங்கம் ஜூலை 19 மாலை 6:00 மணிக்கு இணையம் வாயிலாக நேரலையாகக் இந்துத் தமிழர்கள் போற்றும் முருகப் பெருமானைத் துதிக்கும் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை நேரலையாக நடத்தியது.

இறை நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழர் ஒவ்வொருவரும் கந்த சஷ்டி கவசத்தினை ஒரு முறையாவது கேட்டிருப்பர். மனப்பாடமாகத் தெரியாவிட்டாலும் சில வரிகளாவது அவர்கள் வாய் முணுமுணுத்திருக்க, மனம் முருகனைத் தொழுதிருக்கும். சூலமங்கலம் சகோதரிகள் குரலில் கந்த சஷ்டிக் கவசத்தினைக் கேட்டிராதோர் யார்!மனப் பாடமாகக் கவசத்தினைப் பாராயணம் செய்யத் தெரிந்தவர்களுக்குக்கூட அதன் வரலாறு தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். 12-ம் நூற்றாண்டு காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே சமயத்தில் கந்த சஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்தனர்.

நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கக் கமிட்டி உறுப்பினர் திருமதி. சியாமளா ரகுராம் சிறப்பாகத் தொகுத்தளித்தார்.

விரிகுடாப் பகுதியில் 25 ஆண்டுகளாக கர்நாடக சங்கீதத்தைக் கற்றுத்தரும் குரு திருமதி. ஆஷா ரமேஷ் அவர்களின் மாணவிகள் அக்‌ஷரா, துர்கா பக்திப் பாடல்களுடன் துவங்க, தமிழிணையம் ஆசானாகப் போற்றும் அறிஞர், சங்கப் பாடல்களிலும், கம்பனிலும், பாரதியிலும் தோய்ந்தவர், ‘வாழும் நிகண்டு’ என்று சொல்லுமளவுக்கு இலக்கணத்திலும், யாப்பிலும் தேர்ந்தவர், பண்டைத் தமிழிலக்கியத்தில் புலமை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக் கணக்கான பக்கங்களில் ஆய்வு கட்டுரைகள், இலக்கண, இலக்கிய விளக்கங்களை, விமர்சனங்களையும் பல்வேறு நூல்களையும் எழுதியிருப்பவர், 50 ஆண்டுகளாகக் கந்த சஷ்டிக் கவசத்தினைப் பாராயணம் செய்துவருபவர், ‘ஹரியண்ணா’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் திரு. ஹரி கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். கந்த சஷ்டிக் கவசத்தினைப் பாராயணம் செய்யும் முறை, கவசத்தினைப் பற்றியச் சுவையான பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டு ‘ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய’ என்ற கவச வரிகளுக்கு விளக்கமளித்து உரையாடினார். தற்போது அச்சுப் பதிப்புகளிலும், இணையத்திலும் கிடைக்கும் கந்த சஷ்டிக் கவசத்தில் காணப்படும் பிழைகளையெல்லாம் களைந்து திருத்திய வடிவத்தினை அனைவரும் பயன் பெறும் வகையில் வெளியிட்டுள்ளார்.

திரு. ஹரி கிருஷ்ணன்

திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் ஒரு சேர ஒரே சமயத்தில் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் என்று நேரிசை வெண்பாவில் துவங்கும் முதல் வரியுடன், அமர ரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி என்ற குறள் வெண்பாவைப் பாடி தொடர்ந்து நிலைமண்டில ஆசிரியப்பாவில் அமையப் பெற்ற கந்த சஷ்டிக் கவசத்தினை ஒரு முகமாக முருகனை நினைத்துத் துதித்துப் பாராயணம் செய்தனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் மனமுருகி ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என்று பல முறை கோஷமெழுப்பினர்.

நிகழ்வின் காணொளியை இங்கு காணலாம்.

அமெரிக்காவில் கந்த சஷ்டிக் கவசத்தினை இப்படி ஒரே சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து இந்துத் தமிழர்களைப் பங்கெடுக்க வைத்து பாராயணம் செய்யும் நிகழ்ச்சியை இணையம் வாயிலாக வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது பாரதி தமிழ்ச் சங்கம். பகுத்தறிவு என்னும் பெயரில், போர்வையில் மறைந்து கொண்டு, அறியாமையின் ஆழத்தில் மூழ்கி , தெய்வ நம்பிக்கை கொண்ட மக்களையும் அவரது உணர்வுகளையும் புண்படுத்துவதை இந்துக்கள் இனியும் பொறுக்க வேண்டியதில்லை. அப்படி இழிவான செயல்களில் இறங்குபவர்களுக்கு எதிர்வினையாகத் தானும் இறங்காமல், தமது நம்பிக்கைகளை உயர்த்திப் பிடித்து, ஆன்மீக வழியில் தனது வன்மையான கண்டனங்களைப் பாரதி தமிழ்ச் சங்கம் பதிவு செய்திருக்கிறது.

வெற்றி வேல். வீர வேல்.

ஓம் முருகா ஓம்!

கந்தர் சஷ்டி கவசம் : பிழையற்ற பதிப்பு

பல அச்சுப் புத்தகங்களிலும் இணையதளங்களிலும் காணப்படும் கந்தர் சஷ்டி கவசம் நூற்பிரதியில் பல்வேறு பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. இதைக் கண்ணுற்ற கவிப்பெருஞ்சுடர் ஹரி கிருஷ்ணன் அவர்கள், “கண்ணுக்குத் தெரிந்த பிழைகளைக் களைந்து கூடுமானாவரை பிழையற்ற பதிப்பாக ஒன்றை இணையத்துக்கு வழங்கலாம் என்று நினைக்கிறேன்” என்று ஃபேஸ்புக் மூலம் முன்னெடுத்து, சைவ அறிஞர் ஜாவா குமார் மற்றும் சில நண்பர்கள் உதவியுடன் இந்தத் திருந்திய வடிவத்தை வழங்கியிருக்கிறார். இதனை நமது வாசகர்களுடன் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறோம். வெற்றிவேல், வீரவேல்.

_ ஆசிரியர் குழு

தேவராய சுவாமிகள் அருளிய
கந்த சஷ்டி கவசம் (முழுதும்)
திருந்திய வடிவம்

(நேரிசை வெண்பா)

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் — கதித்தோங்கும்
நிஷ்டையும்கை கூடும் நிமல ரருள்கந்தர்
சஷ்டி கவசம் தனை.

(குறள் வெண்பா)

அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்(கு) உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட

மையல் நடம்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக (10)

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென (20)

வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்றனை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்(டு) ஆயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்(டு) இலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயரையும் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற்(று) என்முன் நித்தமும் ஒளிரும் (30)

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈரறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத்(து) அழகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் (40)

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடி அதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண (50)

ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்(து) உதவும்

லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதன் என்று (60)

உன்திரு வடியை உறுதியென் றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க்(கு) உயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க (70)

முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்இளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம் பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க (80)

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க

பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க

பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைகள் இரண்டும் கருணை வேல் காக்க (90)

முன்கை இரண்டும் முரண்வேல் காக்க
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க

நாவில் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க (100)

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க

தாக்கத் தாக்க தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்களும்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் (110)

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லினும் இருட்டிலும் எதிர்ப்படு(ம்) அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ(டு) அனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்

என் பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் (120)

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவை களுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டால் கலங்கிட (130)

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்(டு) ஓடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி யுருட்டு கை கால் முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற்செதி லாகச்

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் (140)

பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக

விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனிதொடா(து) ஓட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் (150)

சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப்பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத்(து) அரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா(து) ஓட நீயெனக்(கு) அருள்வாய்
ஈரே(ழு) உலகமும் எனக்குற வாகவும்

ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணாள் அரசரும் மகிழ்ந்துற வாகவும் (160)

உன்னைத் துதிக்க உன்திருநாமம்
சரவணபவனே சைலொளிபவனே

திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை அழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா (170)

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா

சமரா புரிவாழ் சண்முகத்தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னா விருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன் ஆவின் நன்பூதியை (180)

நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி

உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் ரக்ஷி அன்னமும் சொன்னமும்

மெத்த மெத்தாக வேலா யுதனார்
சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன் (190)

வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே

பிள்ளையென்(று) அன்பாய்ப் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந்(து) அருளித்

தஞ்சமென்றடியர் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய (200)

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி

கந்தர் சஷ்டி கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்

ஒருநாள் முப்பத்தாறு உருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
திசைமன்னர் எண்மர் சேர்ந்(து)அங்(கு) அருளுவர் (210)

மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்

நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத்தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடியாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சம்ஹா ரத்தடி (220)

அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளுள்
வீரலட் சுமிக்கு விருந்துணவாக

சூர பத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத்தேழ்வர்க்(கு) உவந்(து) அமுதளித்த

குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத் தடுத்தாட் கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறு வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி (230)

திறமிகு திவ்ய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சிப் புனையும் வேளே போற்றி

உயர்கிரி கனக சபைக்கோர் அரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம். (238)

முருகாசரணம்.
வெற்றிவேல் வீரவேல்.

எல்லாப் பிழைகளையும் களைந்திருக்கிறேன் என்று நம்புகிறேன். என்னை மீறி பிழைகள் இருக்குமாயின் அன்புகூர்ந்து தெரிவியுங்கள். வெளியிட்ட பதிப்பில் திருத்தி விடுவோம்.