எது உழைப்பாளர் தினம்?

மே 1 உலக உழைப்பாளிகள் தினம் அல்ல. கோடானுகோடி மக்களை இரக்கமின்றி அழித்தொழிக்கும் ஒரு அரக்க சித்தாந்தம் அற உணர்ச்சி முலாம் பூசி நடிக்கும் ஒரு நாடக தினமே மே 1… நகரம்-கிராமம், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, உடல் உழைப்பு-மூளை உழைப்பு, விவசாயத் தொழிலாளி-ஆலைத் தொழிலாளி என்று பாகுபடாமல், இயற்கையும் மானுடமும் இணைந்து பணியாற்றும் ஒரு தினமாக அது கொண்டாடப்பட வேண்டும். நமக்கு எது அந்தத் தினம்?

View More எது உழைப்பாளர் தினம்?

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

View More சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

பைத்ருகம் – ஒரு பார்வை – 2

தன் மகனை ஒரு நம்பூதிரியாக வளர்க்கக் கூடாது, ஒரு மனிதனாக வளர்க்க வேண்டும் என்றும், தன் மகன் எப்படி வளர வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளது என்றும் ஆவேசமாகச் சண்டை போடுகிறான். அமைதியாகக் கேட்டுக் கொள்ளூம் அப்பா நம்பூதிரி, அப்படியானால் நான் உன்னை என்னைப்போல் அல்லவா வளர்த்திருக்க வேண்டும் என்று சொல்ல பதில் சொல்லமுடியாமல் வெளியேறுகிறான்…

View More பைத்ருகம் – ஒரு பார்வை – 2

பைத்ருகம் – ஒரு பார்வை – 1

கேரள மண்ணின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அபரிதமான தாக்குதலால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் கோவில்களும் சாஸ்தாக்களும் யாகங்களும் பகவதிகளும் அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் அழிந்துவிடுமோ என்று கவலைப் பட்டிருக்கிறான் ஒரு கலைஞன்! அப்படி அழியாமல், மதம் மாறாமல் மிச்சம் மீதி இருக்கும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை தளராமல் இருக்க ஓர் அதிர்ச்சி வைத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ்…

View More பைத்ருகம் – ஒரு பார்வை – 1