யோசிக்கும் வேளையில்: ‘அத்வேஷ்டா’ எனப்படுவது யாதெனில்…

நாட்டு நடப்பில் சிரத்தையின்றி, அதன் போக்கு தனிநபர் வாழ்க்கையையும் பாதிக்கும் என்கிற பிரக்ஞையுமின்றி, தங்கள் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளிலேயே உழன்று கொண்டிருக்கும் சராசரி ஹிந்துக்களுக்கு ஓரளவேனும் விழிப்பூட்ட நம்மில் பலரும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இவ்வேளையில், அவர்களுக்கு மீண்டும் தாலாட்டுப் பாடுவதில் சிலர் உற்சாகம் காட்டி வருவதைப் பார்க்கிறோம்.

Chciałabym dodać, że można wyzwolić mikrofon na składkie odcinki, które jeszcze mogą zostać nagrane na konkretne zasady. Zithromax can be used by the elderly and those Sulzbach-Rosenberg with severe liver or kidney disease. You do not have to leave your favorite app and just click on the links, it is a better and simpler way to see all the apps all in one place.

The doctor may want to try you on another drug, such as atazanavir (ritonavir / ritonavir). This means that the body can zyrtec d cost Kretinga no longer use the female hormones oestrogen, which is produced during the female menstrual cycle, and progesterone, which is produced during pregnancy. Buy generic tadalafil cialis 20mg at a lower price from a trusted online pharmacy with free uk delivery.

It is the only steroid that has been specifically developed for use by patients who require the treatment of a condition or disease that requires chronic therapy. The more you have to do, the more difficult the thing is https://liricomusicschool.com/drums-lessons/ in the future. You may not have any diarrhea after taking the antibiotic for 2 weeks.

தமிழ் ஹிந்து தளத்தில் ஹிந்துக்கள் நலன் தொடர்பான விவகாரம் எதைப்பற்றியாவது எவர் எழுதினாலும் உடனே ‘அத்வேஷ்டா’ என்று சிலர் விஸ்தாரமாக மறுமொழி அளிக்க ஆரம்பித்துவிடுவது வழக்கமாகிப் போனதால் எரிச்சல் தாங்க முடியாத சில நண்பர்கள் இந்த ‘அத்வேஷ்டா சமாசாரத்தை நீங்களாவது கொஞ்சம் கவனிக்கக் கூடாதா’ என்று என்னிடம் கேட்கலாயினர்.

ஆகையால் மிகுந்த யோசனைக்குப் பிறகு எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தேன்.

முதலில் இரட்டை வரிகளாக உள்ள இந்த நான்கு வரி ஸ்லோகத்தைப் படிப்போம்:

krishna_arjunaஅத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸம துக்க-ஸுக க்ஷமீ.

ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா த்ருட நிஸ்சய:
மய்யர்பிதமனோபுத்திர்யோ மத்பக்த: ஸ மே ப்ரிய.

இந்த வரிகள் ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரண்டாவது அத்தியாயத்தில் பதிமூன்று, பதினான்காவது ஸ்லோகங்களாக இடம் பெறுகின்றன.

கீதையின் பனிரண்டாவது அத்தியாயம் பக்தி யோகம் குறித்து பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் அர்ஜுனனுக்கு விளக்கிக் கூறும் பகுதியாக அமைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

அத்வேஷ்டா என்ற சொல்லுடன் ஸ்லோகம் தொடங்குவதால் அதன் பொருளை ஆராய்வோம். இச்சொல்லுக்கு, ‘பொறாமை யின்றி’ என்றும் பொருள் கொள்ளலாம். மேலும், ‘பொறாமைக் குணம் இல்லாதவர்’ என்று ஒரு நபரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். அதையே, பிறர் தன்மீது பொறாமைகொள்ளும் படியாக நடந்துகொள்ளாதவர் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

அத்துடன் அத்வேஷ்டாவுக்கு மானசீகமாக ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, ‘ஸர்வபூதானாம் மைத்ர’ என்பதை ஒரு தொடராக வைத்துக்கொண்டால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவர் என்றாகிறது.

‘கருண ஏவ ச’ என்ற அடுத்த தொடர் அவ்வாறே அனைவரிடத்தும் இரக்கம் காட்டுபவர் எனப் பொருள்படுகிறது. ‘நிர்மமோ நிரஹங்கார’ என்பவற்றை, தான் என்கிற மமதை, அஹங்காரம் ஆகியன இல்லாதவர் எனலாம்.

‘ஸம துக்க ஸுக’ என்பது துக்கத்தையும் சுகத்தையும் சமமாக பாவிப்பவர் என்ற பொருளைத் தரும். ‘க்ஷமீ’ என்பது மன்னிக்கும் பண்புள்ளவர் என்பதைக் குறிக்கும்.

மேற்குறிப்பிட்ட இரு வரிகள் பதிமூன்றாவது ஸ்லோகமாக ஒரு தொகுதியாக அமைகிறது. அடுத்த தொடர் பதினான்காவது ஸ்லோகமாக, ‘ஸ்ந்துஷ்ட’ என்று தொடங்குகிறது. அதையடுத்து, ‘ஸததம் யோகீ’ என்ற இரு பதங்கள் வருகின்றன. இம்மூன்று பதங்களையும் எப்போதும் எல்லாவற்றிலும் மன நிறைவுள்ள யோகி என்று வருமாறு மாற்றிப் போட்டு ஒரு தொடராகக் கொள்ள வேண்டும்.

அடுத்து வருவன ‘யதாத்மா த்ருடநிஸ்சய’ எனும் இரு சொற்கள். உள்ளத்தையும் புலன்களையும் அடக்கியாள்பவன், இவ்வாறு தனது உள்ளமும் புலன்களும் தன் கட்டுப்பாட்டில் உள்ளவை என்பதில் திட நம்பிக்கையுள்ளவன், என்று இவற்றுக்குப் பொருள் கொள்ளலாம்.

’மய்யர்பிதமனோபுத்திர்யோ’ என்ற நெடுந்தொடர் என்னிடத்தில் தனது மனதையும் அறிவையும் அர்ப்பணித்தவர் என்ற பொருளைத் தரும். மயி என்ற சொல் என்னிடம் என்ற பொருளைத் தருவது. அது அர்ப்பணித்தல் என்ற வினைச் சொல்லுடன் இணையும்போது மய்யர்பித என்றாகிறது.

அடுத்து ’மத்பக்த ஸ’ என்பதைத் திருப்பிப் போட்டால்தான் அத்தகையவ னான என் பக்தன் என்ற பொருள் வரும். ’மே ப்ரிய’ என்று ஸ்லோகம் முடிவடைகிறது. எனக்குப் பிரியமானவன் என்பது இதன் பொருள்.

karmayogi-dvd-coverஆக இப்ப்போது இந்த நான்கு வரிகளையும் சேர்த்துப் பொருள் சொல்லிப் பார்ப்போம்:

‘எவர் ஒருவர் பொறாமைப்படாதவராகவும் அதேபோல் தன்மீது பிறர் பொறாமை கொள்ளும்படியாக நடந்துகொள்ளாதவராகவும், எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் உள்ளவராயும் மமதையோ அகங்காரமோ இல்லாதவராகவும் சுக துக்கங்களை சரி சமமாக பாவிப்பவராகவும், மன்னிக்கும் பண்புள்ளவராகவும் இருக்கிறாரோ அவர், (13)

எப்போதும் எல்லாவற்றிலும் மனநிறைவுள்ள யோகியாவார். மேலும், தனது உள்ளத்தையும் புலன்களையும் அடக்கியாள்பவராக அவர் இருப்பதோடு, அவ்வாறு தனது உள்ளமும் புலன்களும் தனக்குக் கட்டுப்பட்டவை என்பதில் திடமான நம்பிக்கையுள்ள வருமாவார். இவ்வாறு இருந்து, தனது உள்ளம், அறிவு ஆகிய வற்றை எனக்கு அர்ப்பணம் செய்பவர் யாரோ அவர் எனது பிரியத்திற்குரிய பக்தனாவார்.’

‘அத்வேஷ்டா’ என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத் தொகுதிக்கு இதுதான் பொருள்.

இறையுணர்வில் ஒன்றிப்போவதற்கு உள்ள மூன்று மார்க்கங்களாக ஞான யோகம், கர்ம யோகம் பக்தி யோகம் ஆகியவற்றை அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறுகையில், பக்தி யோகம் பற்றி விளக்குமுகமாக இந்த நான்கு வரிகளை கீதாசாரியன் குறிப்பிடுகிறான், அவ்வளவே.

நீ இப்படி இருக்க வேண்டும் என்று அர்ஜுனனுக்குக் கண்ணன் அறிவுறுத்தவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் கீதை என்கிற அற்புதம் யுத்த பூமியில் நிகழ்கிறது. அதிலும், நான் எதற்காகப் போர்த் தொழில் செய்ய வேண்டும், அதனால் விளையப் போவது என்ன என்று சோர்வுற்று மனம் குழம்பிய நிலையில் உள்ள அர்ஜுனனிடம் கண்ணன் இந்த வாசகங்களைக் கூறுகிறான்.

பக்தி மார்க்கத்தில் உள்ளவன், அதாவது பக்தியை ஒரு யோகமாக, தவமாகக் கடைப்பிடிப்பவன் எவ்வாறு இருக்க வேண்டும், எப்படியிருந்தால் எனக்குப் பிரியமானவனாக இருப்பான் என்பதைத் தெரிவிக்கிறானே யல்லாது, நீ அவ்வாறு பக்திமானாக இரு என்று சொல்லவில்லை.

மாறாக, கர்ம யோகத்தைப் பயிலுமாறுதான் அர்ஜுனனுக்கு எடுத்துக் கூறி, உற்றார், உறவினர், நண்பர் என்றெல்லாம் இனங் கண்டு மயங்காமல் அவர்களுடன் போரிட்டு வெற்றிகொள்ளுமாறு உபதேசம் செய்கிறான். போர்க் களத்தில் சூழ்ச்சியும் சதியும் முறைகேடுகளும் செய்யத் தயங்காத எதிரியை, அவன் உறவினனாகவோ நண்பனாகவோ இருந்தாலும் அது பற்றி யோசிக்காமல் யுக தர்மப்படி அதே வழியில் மன்னிப்போ இரக்கமோ காட்டாமல் கொன்றொழிக்குமாறு அர்ஜுனனுக்குக் கண்ணன் அறிவுறுத்துகிறான். இவ்வாறு கர்ம யோகத்தைச் சரிவர மேற்கொள்பவன் தனக்குப் பிரியமானவன் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகவே அர்ஜுனன் போர்க்களத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் எனக் கற்றுக் கொடுக்கிறான்.

இன்றைய கால கட்டத்தில் ஹிந்துக்கள் யாவரும் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எதிரி நண்பனாகவோ உறவினனாகவோ மரியாதைக்குரியவனாகவோ, குருவாகவேகூட இருந்தாலும் போர் என்று வந்துவிட்டால் அவனை எதிர்த்துப் போரிட்டு இரக்கமோ மன்னிப்போ காட்டாமல் வென்று வீழ்த்து என்று அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் கூறிய உபதேசம் இன்று நமக்கும் பொருந்தும்.

பக்தி மார்க்கத்திற்குப் பொருந்தி வருபவை, போர் நெருக்கடியோ ஆபத்தான சூழ்நிலையோ இல்லாத இயல்பு நிலையில் கடைப்பிடிக்க வேண்டியவை ஆகியவற்றை கர்ம மார்க்கத்தைக் கடைப் பிடிக்க வேண்டிய தருணத்தில் எண்ணிப் பார்த்துக் குழம்பக் கூடாது!

எந்தவொரு கருத்தானாலும் சந்தர்ப்பச் சூழ்நிலையை நன்கு எண்ணிப் பார்த்து, எப்போது எதை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து செயல்பட்டாலன்றி காரிய சித்தி சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டால் பிரச்சினை இல்லை!

கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் 11-லிருந்து 30 ஆவது ஸ்லோகம் வரை ஞான மார்க்கத்தை நம் ஞானாசிரியன் விளக்குகிறான். பிறகு 39 ஆவது ஸ்லோகம் தொடங்கி, மூன்றாவது அத்தியாயம் முடியும்வரை என்று கூறத்தக்க அளவு கர்ம யோகம் பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறுகிறான்.

நான்காவது, ஐந்தாவது அத்தியாயங்களை ஞாம்னம், கர்மம் ஆகிய இரண்டின் கலவை எனக் கொள்ளலாம். ஆறாவது அத்தியாயத்திலும் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. ஆக முதல் ஆறு அத்தியாயங்களின் தொகுப்பில் கர்ம யோகமே மிகுதியாக வலியுறுத்தப்படுகிறது. ஏழு முதல் பனிரண்டாவது வரையிலான பகுதியை இரண்டவது தொகுப்பாகக் கொள்ள வேண்டும். இதில் பக்தி யோகம் சிறப்பாகப் பேசப்படுகிறது.

பொதுவாக எல்லாத் தொகுதிகளிலுமே இம்மூன்று அம்சங்களை அடையாளங் காணலாம் என்றாலும் எந்தப் பகுதியில் எது முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை எளிதாகவே கண்டுகொள்ள முடியும்.

karma-yoga-this-way-to-karma-small-89504மூன்றாவதான இறுதி ஆறு அத்தியாயங்களின் தொகுப்பில ஞானம், பக்தி, கர்மம் ஆகியவற்றை மீண்டும் விவரித்து, இறுதியாகச் சரணாகதித் தத்துவத்தை நம் ஞானாசிரியன் விளக்குகிறான். இந்தச் சரணாகதியானது பக்தியின் மூலமாகவே சாத்தியப்படும் என்பதும் அதுவே சிலாக்கியமானது என்பதும் முற்றிலும் உண்மையே.

ஆனால், முடிவுரையாக அர்ஜுனனுக்குக் கண்ணபிரான் சொல்வது, ‘நான் சொல்ல வேண்டியன அனைத்தையும் சொல்லிவிட்டேன், இனி நீ உன்னுடைய சுய அறிவைப் பயன்படுத்தி உனக்கு எது உசிதம் என்று படுகிறதோ அதை மேற்கொள்வாயாக’ என்று முடிவெடுக்கும் உரிமையை அர்ஜுனனுக்கே அளித்துவிடுகிறான்!

அர்ஜுனனும் அதற்கு இணங்க அப்போதைய சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்பக் கர்ம யோகத்தை மேற்கொள்கிறான். இதன் உட்பொருளை நன்கு கிரகித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கிரகித்துக் கொண்டமைக்கு அடையாளமாக, கண்ணன் காட்டிய வழியில் நமது சுயஅறிவைப் பயன்படுத்தி, தற்போதைய சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்பக் கர்ம யோகம் பயின்று இறை யுணர்வில் ஒன்றிவிட, மிகுந்த சிரத்தையுடன் முனைவோமாக.