ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

என்னதான் மாபெரும் கருணை பொங்கும் இதயத்திலிருந்து மானுடத்துயரனைத்தையும் நீக்க உருவெடுத்ததாகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும், ஒற்றைப்பார்வைகளும், ஒற்றை அதிகார பீடங்களும் அழிவைத்தான் ஏற்படுத்தும் …ஹிந்து தர்மத்தில் சாஸ்திர சம்பிரதாயங்கள் உறைநிலை கொண்டவை அல்ல. அவை நெகிழ்ச்சித்தன்மை கொண்டவை. காலந்தோறும் பரிணாம மாற்றம் அடைபவை. மானுட நலத்தையே தம் இலட்சியமாகக் கொண்டவை. அனைத்துயிரும் அனைத்துலகும் இன்புற்றிருப்பதையே அவை நோக்குகின்றன. அவற்றின் நோக்கம் சனாதனமானது, அழிவற்றது. அதற்கான வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

View More ஹிந்து தர்மத்தின் அதிகாரி யார்?

சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

அடுத்த பிறவியில் இந்தியாவில் பிறந்தால்தான் மோட்சம் கிடைக்கும் என்று கோடிக்கணக்கான சீனர்கள் எண்ணுகிறார்கள்.. சீனாவை மேற்கத்திய கண்ணாடி அணிந்து கொண்டு நாம் பார்க்கிறோம். அல்லது இங்குள்ள மார்க்சிய கண்ணாடி அணிந்து கொண்டும் நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணாடி மிகவும் தடிப்பானது. இந்தக் கண்ணாடிகளை உதறிவிட்டு நாம் சீனாவை இயல்பாக நோக்க வேண்டும்.

View More சீனாவின் இதயத்தை வெல்ல இந்திய கலாசார சக்தி!

பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

பவித்ரா ஸ்ரீனிவாசன் பல பரதநாட்டிய விற்பன்னர்களிடம் பயிலும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீமதி மற்றும் ஸ்ரீமான் தனஞ்சயன் நடனத் தம்பதியரிடம் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். மேலும், ‘பத்மபூஷன்’ கலாநிதி நாராயணனிடம் கற்றுக்கொள்ளும் பெரும்பேற்றையும் பவித்ரா பெற்றுள்ளார். முதல் முறையாக குறுந்தகட்டில்(CD), பாரம்பரிய நடனத்தை வெளியிட்டவர் இவரே. கிருஷ்ண கான சபா இவருக்கு ‘பால சரஸ்வதி’ பட்டம் கொடுத்துச் சிறப்பித்தது. பாரத் கலாச்சார் ‘யுவகலா பாரதி’ பட்டம் வழங்கியுள்ளது. மியூசிக் அகாடமி, திறமை மிக்க இளம் கலைஞருக்கான ‘எம்ஜியார் விருது’ வழங்கியுள்ளது.

View More பரதத்தில் பஞ்சதந்திரம்: பவித்ரா ஸ்ரீநிவாசன்

இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கடல் வழி வணிகம் குறித்தும், அதைச் சீராக வைத்திட பின்பற்றப்பட்ட விதி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன – இன்றைய முறைகள் போல…பலதரப்பட்ட வணிகச்சரக்குகள், பெரிய, விரைந்து செல்லக்கூடிய ‘வங்கம்’ என்ற வகைக் கப்பல்களில், வந்திறங்குகையில், எழும் ஓசையை வர்ணிக்கும் சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியின் பாட்டு …

View More இந்திய நாட்டின் அன்றைய கப்பல் மேலாண்மையும் துறைமுகங்களும்

ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

… எல்லா இஸ்லாமிய படையெடுப்பு, கொள்ளை, கொலைகளையும் போல மதுரை சூறையாடப்பட்டது;ஒரு முறை அல்ல. இருமுறை அல்ல. நாயக்கர் காலம் வரை. சரித்திரம் முழுதும். இதே சரித்திரம் வெவ்வேறு ரூபங்களில் இன்னமும் நம்மை அலைக்கழிக்கிறது. சரித்திரம் பற்றியும் மனித இயல்பு பற்றியும் ஒன்று சொல்வதுண்டு. சரித்திரத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்வது இல்லை என்பதைத் தான் சரித்திரத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் ஒரே பாடம்.

View More ஆலவாய் (மதுரை மாநகரத்தின் கதை) – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம்தான் பிரமாணம்’ என்கிறார்… ”தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள்” என்கிறார் ஜெயகாந்தன்.

View More சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்

”சில நேரங்களில் ஏசு என்று ஒரு மனிதர் வாழாமலே இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைப்பதுண்டு. வேறெந்தப் பெயரும் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகாரத்துக்காக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதில்லை… மனித இனம் ஏசுவின் பெயரால் தனக்குத்தானே என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் …..

View More சுவாமி விவேகானந்தரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும்

அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

… இந்தப் படம் மெனக்கெட்டு குறிப்பிடும் அளவுக்கு எந்த விதத்திலும் ஒரு சிறப்பான படமோ அல்ல, குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவோ அல்ல. இவ்வளவு குறைகளுக்கு நடுவிலும் இந்தப் படம் தன் கதையினாலும், ஒரு சில வசனங்களினாலும், ஜிஹாதி பயங்கரவாதத்தினால் சூழப்பட்ட இன்றைய இந்திய சூழ்நிலையில் குறிப்பிடத் தக்க ஒரு படமாக மாறிப் போகிறது. இப்படி ஒரு சினிமா தமிழ் சூழலில் எடுக்கப் படுவது சாத்தியமில்லை என்பதினாலும் இதில் துணிவாக எடுக்கப்பட்ட ஒரு சில முயற்சிகளினாலும் இந்தப் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.

View More அலைபாயுதே கண்ணா… (மிழிகள் சாக்‌ஷி, மலையாளத் திரைப்படம்: ஒரு பார்வை)

கட்டிப்பிடி திருமணம்!

கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுதான் பண்டைய…

View More கட்டிப்பிடி திருமணம்!