அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

”ராமர் அங்கேதான் பிறந்தாரா? அங்கே கோவில் கட்டலைன்னா இப்ப என்ன? ஆதாரம் இருக்கா அங்கேதான் ராமர் பிறந்தாருன்னுட்டு?” – கேள்விகள், கேள்விகள்.

It is used in the treatment of a variety of infections. That's why you need to be careful when using azithromycin price mercury Gagarin online coupon codes, and you'll save a lot more money with online coupons than you would on any other type of coupon. Ciplox mg/kg orally 30 min before the injection of bmk cells.

You can try to lose a few inches off the end of your penis. In canada, where tadalafil and dapoxetine tablets price in pakistan the lowest prices are charged, prices for tadalafil and dapoxetine tablets price in pakistan are the cheapest in buy clomid without prescription canada for both generic and brand names. If you have some questions about the drugs you want to buy from our online pharmacy, then you can contact us for a free consultation.

What i can assure you of is that the most exciting thing that has ever happened to me. Other side effects include clomid 50 mg price in india Carolina dizziness, drowsiness, and constipation. I do not have any side effects or any other problems after taking levofloxacin.

”இந்தத் தீர்ப்பு இப்ப வரலைன்னு யாரு அழுதா? இந்த இளைய தலைமுறைக்கு ராமர்னாலே யாருன்னு தெரியாது. அதைப் பத்தியெல்லாம் யாரும் கவலைப்படலை.” — இப்படியும் கமெண்ட்கள்.

இந்திய ஜனநாயகத்தின் மாபெரும் கறையான முடிசூடா இளவரசன் ராகுல் வின்சி என்கிற ராகுல் காந்தி, “அயோத்தியை விட முக்கிய விஷயங்கள் இருக்கின்றன” என்று சொல்ல பத்திரிகைகள் அதை அப்படியே பக்கங்களில் பிரதானமாக வாந்தியெடுத்தன. (கல்மாடி சுருட்டினதில் வாங்க வேண்டிய கப்பமா? குடும்ப நண்பர் குவிட்ரோச்சி கொடுக்க வேண்டிய கமிஷனா? – எது அயோத்தியை விட முக்கியம் என யாரும் கேட்கவில்லை.)

ஆனால் தீர்ப்பின் நேரம் நெருங்க நெருங்க நாடெங்கும் மக்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு கவனித்தார்கள். மூன்றரை மணி– நான்கு– நான்கு இருபது- தீர்ப்பு வர ஆரம்பித்தது. சந்தித்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. போன்கால்கள் எஸ்.எம்.எஸ்கள் எதிர்பாராதவர்களிடமிருந்தெல்லாம் வர ஆரம்பித்தன!

தீர்ப்பு தெளிவாக இருந்தது.

ayodhya_makeshift_templeஅது ராமர் கோயில்தான். அந்த இடம் ஸ்ரீராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் (ஹிந்தியில் “தேவ-துல்ய”) வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது. பாபர் அங்கு, அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடத்தைக் கட்டுவதற்கு முன்னால் அங்கே ஒரு கோயில் அமைப்பு இருந்தது. அதை அவன் இடித்தானா இல்லையா என்பது கேள்விக்குரியது. ஆனால் அதன் இடிபாடுகளின் மீது- அவனுக்குச் சொந்தமில்லாத இடத்தில்- அவன் கட்டியதுதான் அந்தக் கட்டிடம். எனவே அது ”ராம் லல்லா” என்கிற குழந்தை ராமருக்குச் சொந்தமானது.

தீர்ப்பு தெளிவாகத்தான் இருந்தது. ஆங்கில, ஹிந்தி தொலைக்காட்சி சேனல்களில் அப்படியே சொல்லவும் செய்தார்கள். ஆனால் தமிழ்த் தொலைக்காட்சி சானல்களில் ராமர் என்கிற வார்த்தை வராமல் பார்த்துக் கொண்ட விதம், அந்தத் தீர்ப்பை முடிந்தவரை முஸ்லீம்களுக்குச் சாதகமாக வந்ததுபோல சொன்ன விதம் இருக்கிறதே, மகா சிறுபிள்ளைத்தனமாகவும், நகைப்புக்குரியதாகவும் இருந்தது!

மூன்று நீதிபதிகளுமே கும்மட்டம் இருந்த மையப்பகுதி, ஸ்ரீராம ஜென்ம பூமியின் இதயப்பகுதி ஹிந்துக்களுக்கு உரியது எனத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சர்ச்சைக்குரிய கட்டிடத்திற்கு முன்புறம் உள்ள ராம் சபூத்ரா மற்றும் சீதா கீ ரசோயீ ஆகிய வழிபாட்டு மேடைகள் உள்ள இடம் நிர்மோஹி அகாராவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். நிர்மோஹி அகாரா என்ற மடம் 1885-லேயே ராமஜன்மபூமி விஷயமாக நீதிமன்றத்தை அணுகியவர்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசு ஹிந்துக்களுக்கு எதிராக நடந்தது. சுதந்திர பாரதத்தின் நீதித்துறை 60 வருடங்கள் கழித்தாவது அந்தக் களங்கத்தைத் துடைத்திருக்கிறது.

நீதிபதி கானின் தீர்ப்பில் இந்தச் சர்ச்சைக்குரிய பகுதி இப்படிப் பங்குபோடப்பட வேண்டுமெனக் கூறுகிறது:

மையக் கும்மட்டத்துக்குக் கீழே ராம்லாலா விக்கிரகங்கள் வைத்துள்ள தற்காலிகக் கோயில் அமைந்துள்ள பகுதி ஹிந்துக்களுக்கே இறுதியாக அளிக்கப்பட வேண்டும் என மேலும் அறிவுறுத்தப்படுகிறது. நிர்மோஹி அகாராவுக்கு ராம் சபுத்ரா பகுதியும் சீதா ரஸோயி பகுதியும் அளிக்கப்பட வேண்டும் என நெறியுறுத்தப்படுகிறது.

ayodhya_verdict_judges

நீதிபதி சுகிர் அகர்வால் தனது தீர்ப்பில் கூறியிருப்பது:

மூன்று கும்மட்டங்கள் இருந்த இடத்திற்குக் கீழாக உள்ள பகுதி பகவான் ராம ஜென்மஸ்தான தெய்வம் என்றும் ஸ்ரீ ராமர் பிறந்த இடமாகவும் ஹிந்து மத நம்பிக்கை கருதுவதால் அது ஹிந்துக்களுக்கு உரியதாகும். வழக்குத் தொடுத்தவர்கள் (அதாவது முஸ்லீம்கள்) அதற்கு எந்த இடையூறும் எவ்விதத்திலும் செய்யக் கூடாது.

நீதிபதி தரம் வீர் ஷர்மா தனது தீர்ப்புச் சுருக்கத்தில் முன்னுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கையில் கூறியிருப்பது:

1. சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடமா?

சர்ச்சைக்குரிய இடம்தான் ராமர் பிறந்த இடம். அந்த இடமே சட்டரீதியில் ஓர் ஆளுமையாகவும் தெய்வமாகவும் கருதப்பட வேண்டும். ஏனெனில் அது பகவான் ராமர் குழந்தையாகப் பிறந்த இடமாக, இறைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

2. சர்ச்சைக்குரிய கட்டிடம் மசூதியா? அது எப்போது கட்டப்பட்டது? யாரால் கட்டப்பட்டது?

சர்ச்சைக்குரிய கட்டிடம் பாபரால் கட்டப்பட்டது. அது கட்டப்பட்ட ஆண்டு சரியாகத் தெரியவில்லை. அது இஸ்லாமிய மதநெறிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டது. எனவே அது ஒரு மசூதியாகக் கருதப்பட முடியாது.

3. அங்கு மசூதி ஹிந்து கோவிலை இடித்த பிறகு கட்டப்பட்டதா?

அங்கு ஏற்கனவே இருந்த ஒரு பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு அந்தச் சர்ச்சைக்குரிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் அந்த இடிக்கப்பட்ட கட்டிடம் ஒரு பிரம்மாண்டமான ஹிந்து மத வழிபாட்டுக் கட்டிடம் என்பதை ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளது.

************

இதே விஷயங்களைத்தான் ஹிந்துத்துவ வாதிகளும், அயோத்தி இயக்கத்தை முன்னெடுத்து நடத்தியவர்களும் இத்தனை ஆண்டுகளாகக் கூறிவந்துள்ளார்கள். ஆனால் ஊடகங்களும், இடதுசாரி அறிவுஜீவிகளும் ஏதோ பிரம்மாண்டமான- தினசரி தொழுகை நடத்தி வரப்பட்ட- மசூதியை ஹிந்துத்துவர்கள் இடித்துவிட்டதாகப் பொய்ப் பிரசாரம் செய்தார்கள். அதன் விளைவாகவே இந்தியா முழுக்க கலவரங்கள் உருவாகின. மதச்சார்பின்மையின் நாயகன்களாகவும் சிறுபான்மையினரின் காவலன்களாகவும் தங்களைக் காட்டிக்கொள்ள இந்த அறிவுஜீவிகள் அப்பாவிகளின் இரத்த ஆற்றில் மூழ்கி முக்குளிக்கவும் தயங்கவில்லை.

ஆனால் இது ஒரு நிலத் தகராறுப் பிரச்சினையோ அல்லது மத வழிபாட்டுத்தலம் குறித்த இரு சாராரின் பிரச்சினையோ மட்டும் அல்ல. தேசம் குறித்த இரு அடிப்படையான பார்வைகள் இங்கே மோதியுள்ளன.

ayodhya_jai_shri_ramஇந்தத் தேசத்துக்கென்று ஒரு பண்பாட்டு வளமை உள்ளது. அதுவே இந்தத் தேசத்தை ஒன்றுபடுத்துகிறது. அதன் அடிப்படையிலேயே நாம் நம் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். குறுகிய சுயநல அரசியல் இலாபங்களுக்காக, அந்தப் பண்பாட்டு மதிப்பீடுகளை நாம் பலி கொடுத்துவிடக்கூடாது என்பது ஒரு பார்வை.

மாறாக நமக்கென்று ஒரு பண்பாடு கிடையாது. ஒரு சமுதாயத்தை தாஜா செய்து, ஒவ்வொரு சமுதாயத்தையும் ஒன்றோடொன்று மோதவிட்டு அரசியல் நடத்துவதே சாலச்சிறந்தது என்கிற மற்றொரு பார்வை. அந்நியர்களையும் அரசியல் இலாபமிருந்தால் தேசிய நாயகர்களாக்கும் வக்கிரம் கொண்ட அந்தப் பார்வை மதச்சார்பின்மை என்கிற பெயரில் இந்த நாட்டில் கோலோச்சியது. இந்தத் தேசத்தின் வரலாற்றை வெறுமனே அதிகாரத்தையும் பொருளாதார உறவுகளையும் மட்டுமே கொண்டு கட்டுடைக்கும் பார்வை அது.

அதே நேரத்தில், தேசிய அளவில் கருத்துரீதியாக வெற்றிடத்தை உருவாக்கி, அங்கு அந்நிய தேசக் கருத்தாங்கங்ளை விதைத்து, ஆன்ம அறுவடைக்கென களம் இறங்கியிருந்தன ஆக்கிரமிப்பு மத சக்திகள்.

வாக்கு வங்கிகளுக்காக மக்களைப் பிளக்கும் போலி மதச்சார்பின்மையும், வலுவற்ற வக்கிர அரசியலைப் பயன்படுத்தி விரிவாதிக்க ஆன்ம அறுவடை செய்யும் சக்திகளும் கைகோர்த்ததன் சின்னமாக மாறியது பாப்ரி கும்மட்டம். சோவியத் உடைந்த காலகட்டம் அது. வளமையான புரவலனை இழந்த இந்திய இடதுசாரி அறிவுஜீவிகளுக்கும் வகாபிய இஸ்லாமிய சக்திகள் கைகொடுக்க முன்வந்தன.

அதன் விளைவாக மவுண்ட்ரோடு மாவோ பத்திரிகை உள்ளிட்ட எல்லா இந்திய இடதுசாரி அறிவுஜீவிகளும் இஸ்லாமிய நேசர்களானார்கள். பொதுவாகவே மார்க்ஸியச் சித்தாந்திகளுக்கு வகாபிய இஸ்லாமியக் கருத்தியல் சாய்வு உண்டு. அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் கூட, இஸ்லாமியச் சக்திகளை எங்கும் தாக்கும்போது தங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர் அல்ல எனக் காட்ட இந்தியாவில் ஹிந்துத்துவத்தை தாக்குவது, ஓர் அருமையான பப்ளிக் ரிலேஷன் தந்திரம். (1990-களின் தொடக்கத்தில்தான் முதலாம் புஷ் ஈராக்கின் மீது தாக்குதலை ஆரம்பித்திருந்தார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.) எனவே அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் இந்திய நோக்கர்கள் உட்பட இந்திய இடதுசாரிகளின் இஸ்லாமிய நேசபாவத்தை முழு மனதுடன் ஆதரித்தனர். உலக அரங்கில் ஹிந்துத்துவர்கள் சர்வதேச வில்லன்களாக்கப்பட்டனர்.

1992 டிசம்பர்-6 வலதுசாரி-இடதுசாரி வேறுபாடில்லாமல் கறுப்பு ஞாயிறாகச் சித்தரிக்கப்பட்டது. சோ துக்ளக்குக்கு கறுப்புச் சட்டை போட்டார். இல்லாத மசூதிக்குப் பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக ஒவ்வொரு டிசம்பர் 6-ஆம் தேதியும் அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. இந்த 18 வருட பொய்ப் பிரசாரத்தைத்தான் அக்குவேறு ஆணி வேறாக இந்தத் தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது.

************

சரி, உண்மையைத் தீர விசாரிப்போம் என்று அரசே ஆணையிட்டு 2003-இல் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட போதுதான் எத்தனை எதிர்ப்புகள்! எத்தனை போலித்தனமான ஊடக விளையாட்டுகள்! ஒன்றை மட்டும் பார்க்கலாம். அவுட்லுக் பத்திரிகையின் எழுத்தாளர் சந்தீபன் தேப் அயோத்தி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்று அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சி கண்டுபிடித்த விஷயங்களைக் கட்டுரையாக எழுதினார். அங்கு பல சுதைச் சிற்பங்கள், பழைய தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட ஒரு கல்வெட்டு ஆகியவை கிடைத்திருப்பதை அவர் எழுதினார். இதற்கு இர்பான் ஹபீப் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் இடைக்கால அறிக்கைகளில் பாப்ரி அமைப்பின் கீழே எவ்வித பிறிதொரு அமைப்பும் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை எனச் சொல்லி வந்தார்கள். சந்தீபன் தேப் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எழுதிய பதிலில் குறிப்பிட்டார்:

”இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த புதிய (அதாவது இடைக்கால) அறிக்கை குறித்து எழுதிய பெரும்பாலான நாளேடுகள் பாப்ரி மசூதியின் கீழ் எவ்வித அமைப்பும் இல்லை என்று எழுதினாலும், உண்மையில் அந்த அறிக்கை என்ன சொல்கிறதென்றால், 30 அகழ்வாராய்ச்சிக்கான குழிகள் தோண்டப்பட்டதில், மனிதர்கள் உருவாக்கிய அமைப்புகள் 8 குழிகளில் கிட்டியுள்ளன. 16 குழிகளில் எதுவும் கிடைக்கவில்லை, 5 குழிகளில் மேலே இருக்கும் அமைப்பால் முடிவு செய்ய முடியவில்லை. ஒரு குழி இன்னும் தோண்டவில்லை. கண்டுபிடித்த விஷயங்களாக ஆவணம் சொல்லியிருப்பவை: கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைக்கப்ப்ட்ட செங்கல் சுவர்களுக்கான ஆதாரம், அலங்காரத்துடனான வண்ணத் தரைகள், பல தூண்களின் அடித்தளங்கள், நான்கு பக்கங்களிலும் யக்க்ஷர்கள் கொண்ட 1.64 அடி நீளமுள்ள கருங்கல் தூண்” (அவுட்லுக், ஜூன் 23, 2003)

ஆனால், இர்பான் ஹபீப்பும், மற்ற பிரபல நாளேடுகளும் கோயிலுக்கான எவ்வித ஆதாரமும் இல்லை எனச் சொல்லத் தயங்கவில்லை; கூசவில்லை. இந்த ஏமாற்று வேலை தீர்ப்பு வருவதற்கு சில நாள்கள் முன்னால் கூட நடத்தப் பட்டது. CNN-IBN டிவியில், “அயோத்தித் தீர்ப்பு, வரலாற்று ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்” (Ayodhya dispute hinges on historical evidence) என்கிற தலைப்பில் ஒரு செய்தித் துணுக்கு. அதில் அகழ்வாராய்ச்சி அறிக்கை குறித்து ஓர் ஆராய்ச்சியாளர் பேசுகிறார். பின்னர் அந்த அறிக்கை தவறு என்று இஸ்லாமியர் ஒருவரும் பின்னர் தமோதர் ஜா என்கிற மார்க்ஸியரும் (இவரை, சர்வதேசப் புகழ்மிக்க வரலாற்று அறிஞர் என நிகழ்ச்சியில் சொல்கிறார்கள்.) இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்தது மசூதியைத்தான் என்று சொல்கிறார்கள். பிறகு செய்தித் தொகுப்பாளர், “வரலாற்று அறிஞர்கள் ஒருபக்கம் இப்படிச் சொல்கிறார்கள்; ஹிந்து தரப்போ இதை மறுக்கிறது” என்கிறார்! ஏதோ ஹிந்துக்கள் வரலாற்று ஆசிரியர்களுக்கு எதிர் என்றும், இஸ்லாமியர்களே வரலாற்று ஆதாரப்படி நடப்பதாகவும் ஓர் ஊடகப் பிரமையை வலிந்து உருவாக்குகிறார்கள்!

இத்தகைய ஊடக மோசடிகளையும் அயோத்தி தீர்ப்பு தகர்த்து எறிந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு போலி அறிவுஜீவிகளும் விலைக்குப் போன ஊடகங்களும் உருவாக்கிப் பரப்பிய பொய்களை அம்பலப்படுத்தி, ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில்தான் என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறது. அந்த வகையிலும் இத்தீர்ப்பு முக்கியமானதாகிறது.

ayodhya_karsevaks

அயோத்தியில் அடிமைச் சின்னமான பாப்ரி கும்மட்டத்தை நீக்கும் அறப்போரில் கரசேவகர்கள் மௌலானா முலாயம் சிங்கின் குண்டடிகளைத் தங்கள் நெஞ்சில் சுமந்து பலிதானிகள் ஆனார்கள். ஆனால் அந்தத் தியாகிகளுக்கு மதவெறியர்கள் என்றும் மசூதியை இடித்தவர்கள் என்றும் பழி சுமத்தப்பட்டது. இன்று, அவர்கள் மதவெறியர்கள் அல்ல; தாய்நாட்டின் அவமானத்தைத் துடைத்த தேசபக்தர்கள் என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப் பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு அவர்கள் தியாகத்தினால் நமக்குக் கிடைத்திருக்கும் பிரசாதம். அதனால் நாம் மேலும் உத்வேகம் பெறுவோம். அனைத்து இந்திய மக்களையும்- குறிப்பாக இஸ்லாமியச் சகோதரர்களையும்- உண்மையை உணரச் செய்து, அயோத்தியில் ஸ்ரீ ராமனுக்கு மகோன்னதமானதோர் ஆலயத்தை, அன்பினால், சமரசத் தன்மையால் அமைப்போம்.

ஜெய் ஸ்ரீ ராம்!

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 2

Ananda K Coomaraswamy
Ananda K Coomaraswamy

முந்தைய பகுதி

ரத நாட்டியத்தை, சதிர் என்று இழிவாகப் பேசப்பட்ட நிலையிலிருந்தும், அதை விரைவில் எதிர்நோக்கியிருந்த அழிவிலிருந்தும் மீட்டு அதற்கு சமூகத்தில் அதுவும் ஒரு  கலையென ஒரு அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுத் தந்ததற்கு –  ஈ.கிருஷ்ணய்யர், ஆனந்த குமாரஸ்வாமி, ருக்மிணி தேவி, பாலசரஸ்வதி போன்றோருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுக்களில், சரித்திர அறிவோ, கலை உணர்வோ அற்ற வெற்று சமூக சீர்த்திருத்த கொள்கைகளே கொண்டிருந்த ஆங்கிலக் கல்வி பெற்ற மேல் தட்டு ஜீவிகள் பரதத்தை அழிவுக்குத் தான் தள்ளிக் கொண்டிருந்தனர். இச்சமூக சீர்த்திருத்த் வாதிகளிடமிருந்து பரதத்தைக் காப்பதற்கு தைரியமும், தியாக உணர்வும், சமூக தூஷணையைத் தாங்கிக் கொள்ளும் மனமும் தேவையாக இருந்தது. ஈ.கிருஷ்ணய்யரும், ருக்மிணி தேவியும் சமூக பிரஷ்டத்திற்கு ஆளானார்கள். பிராமண குலத்தவர் சதிர் ஆடவாவது என்ற முகம் சுளிப்பும் பகிஷ்காரமும் அவர்கள் பெற்றது. ஆனால் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோமோ என்றிருந்த நிலையிலிருந்து பரதம் மீட்கப்பட்டது. தமிழ் நாட்டில் இப்பெரியவர்களால் பரதநாட்டியத்திற்குக் கிடைத்த ஒரு மறுமலர்ச்சி, இந்திய துணைக்கண்டம் முழுதுக்கும் மற்ற பிராந்தியங்களிலும் கிளர்ந்து, ஒரு விழிப்புணர்வு பரவுவதற்கான காரண சக்தியாகவிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

எனவே, இந்தக் கலைஞர்கள் பரதக் கலையை மீட்டுத் தந்ததோடு, அவரவர் பார்வைக்கும் ரசனைக்கும் ஏற்ப தம் பாணியை உருவாக்கிக் கொண்டது பற்றியும் எனக்கு ஏதும் பிரசினைகள் கிடையாது. அவர்கள் பணி வரலாறாகிவிட்ட பணி. மேலும் சென்று, ருக்மிணி தேவி, சதிர் என்று வழங்கிவந்த பாரம்பரியத்தின் அவப்பெயரை நீக்க தான் உருக்கொடுத்த பரத்நாட்டியத்தில் பக்திக்கு பிரதான்யம் கொடுத்ததிலும் ஒரு பிரசினையும் இல்லை. அதேசமயம் பாலசரஸ்வதி தன் பரதத்தில் சிருங்காரத்திற்கே முதலிடம் தந்தது பற்றியும் பிரசினை இல்லை. இரண்டுமே பரதத்தின் இரு பக்கங்கள் தான். இருவருமே அவரவர் பார்வையில், அவர்கள் கால 30-களிலும் 40-களிலும் பரதத்தை குதிரைப் பட்டைப் பார்வை கொண்ட சமூக சீர்த்திருத்த வாதிகளின், அதைக் கறைபடுத்திய சமூகத்தின, பிடிகளிலிருந்து காப்பாற்றி அதன் ஆத்மாவை கண்டறிந்து மீட்கும் பணியில் சரியாகவே செயல் பட்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்று எண்பதுகளில், பரதம் ஒரு கலையாக, த்மிழ் நாட்டின் அடையாளமாக ஏற்கப்பட்டு, உலக அங்கீகாரமும் பெற்ற்பிறகு, அதற்குரிய சிறப்பான இடத்தை சமூகத்தினிமிருந்து மீட்டெடுத்த காலகட்டத்தில், பரதத்தில் சிருங்காரமா?, பக்தியா? என்று ஒன்றை மறுத்து மற்றொன்று என யாரும் வாதமிட்டால் – அது, தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய  அவருடைய அறியாமையையே வெளிக் காட்டும். சங்க கால அகப் பாடல்களிலிருந்து தான் பக்தி இயக்கம் பிறந்தது, சிருங்காரமும் பக்தியும் ஒரே உணர்வின் இரு பாவனைகள், நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

(4)

ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் வேறு. பரதத்தை அதன் மீது படிந்திருந்த கறைகளை நீக்கி, அதன்  இழிவு நிலையிலிருந்து மீட்டாயிற்று. சரி. அதற்காக, பரதம் ஒரு சரித்திர கால, தொல்பொருட் காட்சி சமாசாரமாகவே தான் காப்பாற்றிப் பாதுகாக்கப்பட வேண்டுமா? இன்று பரதம் ஆடும் கலைஞர்கள் ஏன் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட காதலன் வருகைக்காக ஏங்கும் காதலியாக, தன் சகியிடம் என்னேரமும் புலம்பும் பெண்ணாகவே தம்மை பாவித்துக்கொண்டு, அந்த ஏக்கத்தையும் புலம்பலையுமே பாடி ஆடிக்கொண்டிருக்கவேண்டும்?  அவளை விரக தாபத்தில் ஏங்கி உடல் மெலிய, வளைகள் கைகளிலிருந்து ந்ழுவி விழச் செய்யும் அந்த ஆள் மேலே மேகங்களிடையே உலவித் திரிகிறவனாக இருந்தால், அவன் அங்கேயே இருந்து கொள்ளட்டும், இங்கு இறங்கி வந்து நடன மேடையையும் மொத்த குத்தகை எடுத்து ஆக்கிரமித்துக்கொள்ள அவனை அனுமதிக்கவேண்டாமே.

Yamini Krishnamurthy
Yamini Krishnamurthy

ஏனெனில், மேடையில் பரதம் ஆடும் பெண் காரைக்காலம்மையாரோ, ஆனந்தமயி மாவோ இல்லை. நம் ஊரில், நம் தெருவில், நம் அடுத்த வீட்டில் அன்றாடம் நாம் படும் அவஸ்தையையே  அவளும் கொஞ்சம் கூடவோ குறைவாகவோ படுகிறாள் தான். அந்த மேகங்களிடையே வானத்தில் உறையும் அந்த காதலன், இப்படித்தான் எதிர்ப்படும் பெண்களையெல்லாம் ஆசை காட்டி ஏமாற்றி ஓடுகிற, தெற்கு தில்லி க்ரேட்டர் கைலாஸ், டிஃபென்ஸ் காலனி திடீர் பணக்கார வீட்டு இளைஞன் போன்றவன் என்றால் –  ஒன்று நிச்சயம், மேடையில் நடனமாட வந்துள்ள பெண் இன்னொரு க்ளோரியா ஸ்டைனெனாகத் தான் இருப்பாள்  (Gloria Steinem – பிரபல அமெரிக்க பெண்ணியவாதி). அவளுடைய சுதந்திரத்தையும் பெண்மையையும் ஆக்கிரோஷத்துடன் நிரூபிக்கும் பெண்ணாகத்தான் இருப்பாள். பாலசரஸ்வதியின் நினைவு மாலை (Balasaraswati Memorial Evening) ஏற்பாடு செய்திருந்த கமானி அரங்கத்தில் சங்கீத் நாடக் அகாடமி சேர்மன், டாக்டர் நாராயண மேனனை, இந்த கண்டித நாயகிகள் (மூன்று உலகறிந்த நடன கலைஞர்கள்: யாமினி கிருஷ்ணமூர்த்தி, சோனல் மான் சிங், மூன்றாமவர் நினைவுக்கு வர மறுக்கிறார் –  வெ.சா. 26.5.2010) தம் உரிமை என்று தாம் கருதியது தமக்கு மறுக்கப்பட்டதை எத்தனை ஆக்ரோஷத்துடன் வறுத்தெடுத்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். என்றென்றைக்குமா அவர்கள்  விப்ரலப்தைகளாகவும் விரஹத் கண்டிதாக்களாகவும் இருபபார்கள்?

அன்று உமா ஷர்மாவும் அருணா வாசுதேவும் கூட்டாக உருவாக்கி, உமா ஷர்மா நடனமாடிய் ‘ஸ்த்ரீ’ யைப் பார்த்ததும் எனக்கு இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. யுகம் யுகமாக, ஆண்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த  சமூகமும் பெண்களை அடக்கி ஆண்டு கொடுமைப் படுத்திய சோகத்தை நடனமாகச் சொல்ல வந்தவர்கள், சன்னமான பாவாடை யையும், கதக்கின் அடையாளமே ஆகிப்போன ’சக்கரை’யும்  விட்டு விடவில்லை. (தெருக்கூத்தின் கிரிகை போல, அல்லது பாலேயின் பிரூட், pirouette போல. பிரூட் ஒற்றைக்காலில் அதுவும் நிமிர்த்திய குதிகாலின் பலத்தில் சுழன்று ஆடுவது. பாலே நடனத்தில் ஒன்றிப்போவது). ’சக்கர்’ ஆடும்போது, இந்தப் பாவாடை இடுப்பளவு மேல் எழுந்து வட்டமாக சுழ்லும். இந்தச் ’சக்கர்’ என்பதே, கதக் மொகலாய தர்பார்களிலும் பின்னர் நவாபுகளின் அரண்மனைகளிலும் நுழைந்ததும், நவாபுகளின் கண்கள் பிரகாசித்துக் குதூகலித்திடும ஆண் ரசனைக்காக் கண்டுபிடிக்கப்பட கவர்ச்சி ஐட்டம். (அன்றைய ஐட்டம் நம்பர் என்று இன்றைய சினிமா பாஷையில் சொல்லலாம்)

kathak-dancerஆக, பெண்கள் ஆண்களின் சுலப ரசனைக்கான கவர்ச்சிப் பொருளாக்கப்பட்டதன் அடையாளம் தான் சக்கர். Crowning Glory விளம்பரப் படத்துணுக்கில், டிம்பிள் கபாடியா நனைந்து உடலை ஒட்டிக்கொண்டிருக்கும் மெல்லிய உடையுடன் நீச்சல் குளத்திலிருந்து வெளிவருகிறாளே, அதிலிருந்து அதிக வித்யாசப் பட்டதில்லை, சக்கரின் நவாப் தர்பார் நோக்கங்கள். பெண்கள் காலம் காலமாக போகப் பொருளாக அவமானப் பட்டதைச் சொல்ல வந்த கணடனக் குரல் ’ஸ்த்ரீ’யில் சக்கர்! மெல்லிய பாவாடையுடன். முகலாய தர்பாரிலும், நவாப் அரண்மனைகளிலும் கதக் நுழைந்தபோது,  ‘கதா வாசக்’கும்  (அபிநயங்களுடன் ஆடிப் பாடிக் கதை சொல்பவர்), பரத முனிவனும் வெளியேற்றப்பட்டது போல, மொகலாய, நவாப் கால பெண்ணடிமைச் சின்னமான சக்கரும் சன்ன பாவாடையுமாவது இப்போது 1980-ல் எழும் கண்டனத்திலாவது வெளியேற்றி இருக்க வேண்டாமா? வேறு எதற்காகவும் இல்லாவிட்டாலும், தம்மை உறுத்தும் மனச்சாட்சியைச் சமாதானப் படுத்தவாவது இதைச் செய்யத் தோன்றவில்லையா?

”ப்ரமரி”  (சுற்றலடவுகள்) நம் நாட்டிய பாரம்பரியத்தில் வரும் ஒன்று தானே என்று சொல்லலாம். வாஸ்தவம் தான். ஆனால் கதக் நாட்டியக் கலைஞர்களைத் தவிர வேறு யாரும் இதைத் தம் நடனத்தில் சேர்த்துக்கொள்ளவில்லையே, இது பரதனின் ஒப்புதல் பெற்றது என்று சொல்வதாக இருந்தாலும், பரதனின் திட்டத்தில் இருக்கும் எத்தனையோவற்றில் இது ஒன்று தானே. எனக்குப் புரிகிறது, இந்த சக்கர் ஒரு ஆவேச உணர்வை, கோபத்தை, (நமது தெருக்கூத்தில் வரும் கிரிகை போல)ச் சொல்வதாக இருக்கும் அல்லது கதக்கிலேயே ஓர் பரவச்த்தைச் சொல்வதாகவும் இருக்கும். அப்படியானால் அது ஏதோ ஒரு கட்டத்தின் உச்சமாக வருவதில் தவறில்லை. உஷா ச்ர்மாவின் ‘ஸ்திரீ”யிலேயே கூட, ‘நவரசங்களும் என்னில் தான் அடக்கம்” என்று ஒவ்வொரு ரசமாகச் சொல்லி வரும்போது, ஒவ்வொரு பதம் முடிந்தபிறகும் வரும் சக்கர் அதை வலியுறுத்தும் பரவச உணர்வாக இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது சுருக்கமாகவும் ஒன்றின் முடிவில் வரும் முத்தாய்ப்பாகவும், பெண் தன் பலதரப்பட்ட் சக்திகளை ஒவ்வொன்றாகச் சொல்லி பெருமை கொள்வதாகவும் இருக்கும். அது பொருள் அறிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும்.

மரபு என்றால் என்ன?தன் எந்த செயல் அர்த்தமுள்ளதாகவும் தெரிந்து, செய்வதில் அது உயிர் பெறுவதாகவும் இருக்கிறதோ அது தானே மரபாகத் தொடர்ந்து வரும்? இந்த ‘சக்கர்’களையும், ‘தத்கார்’களையும், ஏன் தரங்கத்தையும் தான் (குச்சிப்புடியில் தாம்பாளத்தின் மீது ஆடும் நடனம்) இவை எல்லாவற்றையும் ஜெமினி சர்க்கஸ்காரர்களுக்கு விட்டு விட்டால் நன்றாகவும் பொருத்தமாகவும் இராதா? அல்லது அப்படி எதையும் சர்க்கஸுக்கு விட்டுக் கொடுக்க இஷ்டமில்லையெனில், தத்காரை கயிற்றின் மேல் ஆடுவதாக, சக்கரை மிஸோராம் பெண்க்ளைப்போல, மூங்கில் கழிகளின் மேல் ஆடுவதாக, அல்லது தரங்கத்தை மூன்று கால் நாற்காலி மேல் ஆடுவதாக புதுமைகளைப் புகுத்தலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சொல்வது பொருத்தமாக இருக்கும். சிலப்பதிகாரத்தில் ‘குடக்கூத்து” என ஒரு நடனம் பேசப்படுகிறது. திருவிக்கிரம மங்கலம் சிற்பங்களில் இதைக் காணலாம். இதுவும் ஏதோ ஒரு சர்க்கஸ் வித்தையாகத் தான் காட்சி தருகிறது. இருப்பினும்,  அது இன்று நம்மிடையே இல்லை. அதை யாரும் நடனம் ஆட எடுத்துக்கொள்ளவில்லை. பரத நாட்டியத்தின் வரலாற்றுப் பதிவுகளில் கூட அது எங்கும் தொடரப் படவில்லை. ஒரு வேளை அதன் தாயாதியாகத் தான் இன்றைய கரகாட்டம்  நம்மிடையே வாழ்கிறதோ என்னவோ. உண்மையில் இம்மாதிரியான  உடல் பயிற்சிகளுக்கான இடம் அது தான் – நாட்டுப்புற நடனங்கள்.

இவையெலலாம் செவ்வியல் மரபைச் சார்ந்தனவாகக் கொள்ளமுடியாது. இவை நவாப் தர்பார்களின், கலை ரசனைக்குத் தீனி போட உருவானவை.

இதையெல்லாம் சொல்லும் போது என்னைத் தமிழ் நாட்டைச் சேர்ந்தவற்றைத் தவிர வேறு எதையும் அங்கீகரிக்க மறுப்பவனாக, யாரும், நினைக்கக் கூடாது. வேடிக்கை என்னவென்றால், இம்மாதிரியாக தன்னைப் போஷிப்பவர்களின் முகம் பார்த்து அவர்களைக் குஷிப்படுத்தும் காரியத்தை பரதநாட்டியத்திலும் பார்க்கலாம்.

kavuthuvam_dance_namaaste_poseடாக்டர் ராகவன் ஒரு உதாரணம் தருகிறார். கவித்வம் என்று அறியப்பட்ட ஒன்று பின்னால், இன்றும் கூட அதற்குப் பெயர் கௌத்துவம் தான். அதன் பதம் ‘சலாமுரே’ என்ற உருதுச் சொல்லுடன் முடியும். இது ஏதோ காலத்தில் நவாபுகளின் சந்தோஷத்துக்காகத் தொடங்கியது, தஞ்சை மராட்டிய அரண்மனையிலும் தொடர்ந்தது என்றும் தான் அதை ‘நமஸ்தே’ என்று மாற்றியமைத்ததாகவும் சொல்கிறார் டாக்டர் ராகவன். கணேசர் தன் முன் ஆடும் நடனமணி, ‘சலாம்’ வைப்பதைக் கண்டால் வேடிக்கையாகத் தான் இருக்கும். கவித்வம், அல்லது இன்றைய கவுத்துவம் அல்லாவின் முன்னோ ஏதும் நவாபின் முன்னோ ஆடப்படுவதும் இல்லை. ஆடுபவர் மீனாட்சிபுரத்திலிருந்து சமீபத்தில் மதம் மாறியவரும் இல்லை.

மன்னர்களின் முன்னும், ஜமீந்தார்களின் முன்னும் ஆடப்பட்ட காலத்தில், தம்மை ஆதரித்து போஷிக்கும் அம்மன்னர்களின், ஜமீந்தார்களின் அருமை பெருமைகளை, சாகஸங்களை, அழகைப் போற்றிப் புகழ்ந்து எத்தனையோ குறவஞ்சிகள் இயற்றப்பட்டன, ஆடப்பட்டன தான். ஆனால் அவை எதுவும் இன்று ஜீவித்திருக்கவில்லை. யாருக்கும் நினைவிலும் இல்லை. ஆடுவதும் இல்லை. மன்னர்களும், ஜமீந்தார்களும் போன வழியிலேயே இவற்றுக்கும் விடைகொடுக்கப் பட்டுவிட்டன. வெகு எளிதாக சிக்கல் எதுவும் இல்லாது தீர்க்கப்பட்டு விட்ட பிரசினை. போஷிப்பார் இல்லை. ஆடுவாரும் இல்லை. சந்தைப் பொருள் போலத் தான். அந்த குறவஞ்சிகளை இப்போது ஏதும் சுவடிக் காப்பகத்தில் தான் காணமுடியும்.  கொஞ்ச காலம் முன் வரை, ஒரு தாசி தன் மகளுக்கு தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பதான  பதங்கள் வழங்கி வந்தன்..  ”காசில்லாதவன் கடவுளேயானாலும், கதவைச் சாத்தடி” போல.

நாற்பதுக்களுக்குப் பிறகு இந்தப் பதங்களும் நடனமும் போன இடம் தெரியவில்லை. இந்தப் பதத்திற்கு சஞ்சாரி பாவம் ஆடும் நடனமணியின் கற்பனையில் என்னென்னவெல்லாம் வந்து அலைமோதும் என்பதை அவரவர் கற்பனைக்குத் தான் விடவேண்டும். இப்போது நடன மேடைகளில் அதைக் காணமுடியாது. ஆனால், கதக் நடனக் கலைஞர்கள், நவாப்களின் ரசனைக்காகத் தயாரிக்கப்பட்ட சக்கர்களை இன்னம் விடாது பற்றிக் கொண்டு அதை செவ்வியல் நடனம் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள். கதக் நடனம் அதன் வரலாற்றில் கதாவாசக்குடன் தொடங்கியது. அந்த கதாவாசக் இப்போது போன இடம் தெரியவில்லை.

குழந்தையை வெளியே எறிந்தாயிற்று. அதைக் குளிப்பாட்டிய  தண்ணீர் என்னவோ பத்திரமாகத் தொட்டியில் இருக்கிறது.

(5)

சில நூற்றாண்டுகளே பழமையான் அர்த்தமில்லாத, நடனமுமில்லாதவற்றை, இன்னம் மோசம் அவை கதக் நாட்டிய பத்ததிக்கு வெளியிலிருந்து பெற்றவை, அவற்றையே கதக் விட்டுவிட முடியவில்லை என்றால், பரத நாட்டியம் அதன் 2000 வருட பழமையை, அவை அர்த்தமுள்ளதாகவும், அதன் நாட்டிய பத்ததியின் அங்கமாக இணைந்த ஒன்றாக இருந்த போதிலும், விட்டு விடமுடியவில்லை என்றால், அதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை தான்.

இன்று பரதம் ஆடும் கலைஞர்கள், நிறையப் படித்தவர்கள். பண்டித மணிகள். கூர்ந்த அறிவுடையவர்கள். எதையும் அலசி ஆராய்பவர்கள். அவர்களது பாண்டித்யம், பரதத்தின் எல்லைக்குட்பட்டதாகச் சொல்லமுடியாது. மற்ற பிராந்தியங்களின், நாட்டிய பத்ததிகளைப் பற்றியும் அவர்கள் முடிந்த அளவு தெரிந்து வைத்திருப்பதாக நாம் அனுமானிக்கலாம். அவர்கள் தாம் ஆடும் நடனத்திற்கு எடுத்துக் கொள்ளும் பதங்கள் அதிகம் போனால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையானவை அல்ல எனப்தும் அவர்களுக்குத் தெரியும். சமீபகாலமாகத் தான் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக, பிரபந்தங்கள், திருவாசகம் போன்றவற்றிலிருந்து தம் நடனத்திற்கான பாடல்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள். தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியம் மிக அகண்டது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடர்வது சுமார் 400 – 500 வருட காலம் தொடர்ந்து பிரவாஹித்து ஒரு சமுத்திரமாக முன்னிற்பது. இந்த வளமையும் பிரம்மாண்டமும் அதன் சிருஷ்டி மேதமையும் இதுகாறும் மீறப்படாதது. இதெல்லாம் போக, இன்று ஆடப்படும் பரதம் அதன் பதங்கள் சிருங்காரமே பக்தியாக, பக்தியே சிருங்காரமாக வெளிப்பாடு பெறும் பதங்கள். அவர்கள் தாம் ஆடும் பரதம் தெய்வத்திற்கு சமர்ப்பணம் என்றும் சொல்கிறார்கள். இருப்பினும், பிரபந்தங்களையும் தேவாரத்தையும் அவ்ர்கள் காணத் தொடங்கியது சமீப காலத்தில் தான். இன்று அவர்கள் ஆடும் நாட்டியப் பதங்கள் 200 வருடங்களுக்கு மேல் பழமையானவை அல்ல. அதோடு, இன்று ஆடப்படும் பரத நாட்டியத்தின் அமைப்பு, அலாரிப்பு, வர்ணம், பதம், தஞ்சாவூர் சகோதரர்களால், திருவனந்தபுரம் மன்னர் ஸ்வாதித் திருநாளின் காலத்தில் தீர்மானிக்கப் பட்டது.

ஆக, பரதம் 2000 ஆண்டு பழமையான ஒரு மரபு என்று உரிமை கொண்டாடிக்கொண்டு நாம் நடைமுறையில் செய்வது அதை 200 ஆண்டுகளுக்குள் சிறைப்பட்ட ஒன்றாக ஆக்கியது தான். கதக் ஆடுபவர்களும் இதைத் தான் செய்கிறார்கள். அவர்கள் பரதத்தை விட இன்னும் கொஞ்ச தூரம் பின்னால் போய்க்கொள்கிறார்கள். மொகல் தர்பார் வரை. இங்கும் டாக்டர் ராகவன் ஒரு சுவாரசியமான தகவலைத் தருகிறார். தஞ்சாவூர் சகோதரர்களிடமிருந்த பெற்ற அமைப்பு தேவேந்திரனின் (தேவன்னா) ’சங்கீத முக்தாவளி’ என்ற நூல், லாஸ்யத்தின் வெளிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்ததைத் தான் பின்பற்றியது. இந்த லாஸ்யம் தானே இன்றைய பரத நாட்டியமும்.. தஞ்சை சகோதரர்கள் அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என்று சிறு சிறு மாற்றங்களைத் தான் செய்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் ராகவன்.

(6)

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக பேசப்படும் பெயர் தெரிந்த தலைக்கோலி என்று மன்னரால் விருது அளிக்கப்பட்டவள் மாதவி என்னும் தாசி. 5-ம் நூற்றாண்டு சிலப்பதிகாரத்தில் பேசப்படுபவள். அவளும் சங்க கால இலக்கியங்களில் பேசப்படும் விறலியரும் எல்லாம் ஆடிய நடனங்கள் எதைப் பற்றியனவாக இருந்தன? பொதுமக்கள் ஆடிய நாட்டுப் புற நடன்ங்கள் பற்றியும், அவர்கள் நடனங்கள் எவவாறு ஆடப்பட்டன, எப்பொருளைப் பற்றியனவாக அந்த நடனங்கள் இருந்தன என்பதைப் பற்றியும் சிலப்பதிகாரம் விவரமாக பதிவு செய்துள்ளது. அவர்கள் கண்ணனைப் போற்றிப் புகழ்ந்து ஆடினர். அவர்கள் ஆடிய நடனங்களின் நுணுக்கங்களைப் பற்றியும் விவரமாக சிலப்பதிகாரம் சொல்கிறது. ஆனால் மாதவி ஆடிய நடனம் எதைப் பற்றி? அந்த நடனத்தின் ஆட்ட நுணுக்கங்கள் என்ன? அது செவ்வியல் மரபைச் சார்ந்ததா, அல்லது பொது மக்கள் ஆடும்  நாட்டுப்புற மரபில் வந்ததா?

ashtanayika சிலப்பதிகாரத்தின் கானல்வரி, வேனிற்காதை பகுதிகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள், அவை காதலைப் பற்றிய்தாக அதன் பல்வேறு வகைகளைப் பற்றியதாக, நாம் ”அஷ்டநாயிகா” என்று சொல்கிறோமே அது போன்றதாக, பல்வேறு மெய்ப்பாடுகளைச் சொல்வதாக இருந்தது எனத் தெரிகிறது. ஆக, அவை ஆண் பெண் உறவுகளைப் பற்றியதாக, என்றென்றைக்குமாக ஜீவித்திருக்கும் அவன்- அவள் சந்திப்புகள், உறவுகள், ஈர்ப்புகள், ஏமாற்றங்கள் பற்றியதாக இருந்தது.  அத்தோடு குடக்கூத்து பற்றியும் அறிகிறோம் குடக்கூத்து பற்றிய ஒரு சிற்பப்படிமம் கேரளத்தில் உள்ள திருவிக்கிரமங்கலத்தில் காணப்படுகிறது. மேலும் சிலப்பதிகாரம் பேசும் சாக்கியார் கூத்து, இன்றும் கேரளத்தில் வழங்கும் நாடக பாணியாகும். பந்தாட்டம் பற்றியும் அது பேசுகிறது. பந்தாட்டம் கந்துகம் என்றும் அறியப்படுகிறது. அது கேரளத்தில் ஆடப்படும் மோஹினி ஆட்டத்தின் ஒரு அங்கம். இவை எல்லாமே ஒரு காலகட்டத்தில், சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கிய நாடக, நாட்டிய பத்ததிகளாகும் ஆனால் இன்று தமிழ் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டவை. ஆனால், கேரளத்தில் இன்றும் ஜீவித்திருப்பவை.

இன்று பரத நாட்டியம் என்று அறியப்படுவது முப்பதுக்களில் ‘சதிர்’ என்று வழங்கப் பட்டது. இது தமிழ் நாட்டிற்கே உரிய மரபான நாட்டுப்புற வடிவங்களும் செவ்வியல் மரபுகளும் அகில இந்திய பின்னணியின் தாக்கத்தில் ஒன்றையொன்று கலந்த ஒன்றாகும். இது கிறிஸ்து சகாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் பரதனின் நாட்டிய சாஸ்திரத்துடனோ அல்லது பின் வந்த மற்ற நாட்டிய நூல்களுடனோ முழுக்க முழுக்க அவைவழி செய்யப் பட்டதாகக்  காணமுடியாது போகலாம். தன் பரிணாம வளர்ச்சியில், பின் வந்த காலங்களில், குடக்கூத்து, ப்ரமரி போன்றவற்றை தன்னிடமிருந்து கழற்றி விட்டதைப் போல, பல புதியவற்றைத் தன்னுள் சேர்த்துக் கொண்டும் உள்ளது. இது பல நூற்றாண்டுகளின் பரிணாமம்.

சங்க காலத்தில் காதலனாகக் கண்ட மனித ரூபத்திலான ‘அவன்”,  பக்தி இயக்கத்தில் தேவனாகிவிட்ட ’அவன்’ ஆனது போல, 17-ம் நூற்றாண்டிலிருந்து 19- நூற்றாண்டு வரையான காலகட்டத்தில், தன் போஷகனான எந்த மன்னனின், நவாபின், ஜமீந்தாரின் முன் ஆட நேர்ந்துள்ளதோ அந்த போஷகனுக்கு , தேவனைக்குறித்த ‘அவன்’ இடத்தைக் கொடுத்து, அவனைப் போற்றி புகழவோ, அவன் காதலுக்கு ஏங்கும் நாயகியாகவோ தன்னை வரித்து ஆட நேர்கிறது.. முருகனுக்கும் கண்ணனுக்கும் ஏங்கியவள் இப்போது ஒரு ஜமீந்தாரின் காதலுக்கு ஏங்குகிறாள். ‘உலா’, ‘குறம்’ போன்ற தமிழ் பிரபந்தங்கள் குறவஞ்சி என்னும் நாட்டுப் புற நாட்டிய் நாடக வடிவை உருவாக்கிப் பின்னர் அது செவ்வியல் நடனமாகவும் பரிணாமம் பெற்று பரதத்தின் ஒரு அங்கமாகவும் ஆயிற்று. குறவஞ்சி நாட்டிய நாடகத்தின் ஆரம்பம் நாட்டுப்புற பாடல் வகையிலாகும். ஆக,  பரத நாட்டியம், தான் அதற்கு முன்னர் அமர்த்தியிருந்த  சிம்மாசனத்திலிருந்து தன்னைச் சிருஷ்டித்த கடவுளையே கீழிறக்க முடிந்ததென்றால், இந்த நாயக-நாயகி கால் விலங்கிலிருந்து  தன்னை மீட்டுக்கொள்ள அதற்கு ஏன் இத்தனை தயக்கம்?

(தொடரும்)

ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவருடன் ஒரு மாலைநேர சந்திப்பு

rss-flood-reliefராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பே உலகத்தின் ஆகப் பெரிய தன்னார்வு சேவை நிறுவனமாகும் (Voluntary service organization). போர்க்களமாகட்டும், இயற்கை சீற்றமாகட்டும் அங்கே எவ்வித வேறுபாடும் இல்லாமல் துன்புறுவோருக்கு ஸ்வயம்சேவகர்கள் சேவை செய்வார்கள். ’சங்க பரிவாரம்’ என அழைக்கப்படும் சங்க குடும்பம் இன்று தேசிய வாழ்க்கையின் பலதுறைகளில் தொண்டாற்றுகிறது. ஹிந்து ஒற்றுமை, சாதிய எதிர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், கிராம முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு என சங்கம் செயல்படாத துறையே இல்லை எனலாம். இந்த அமைப்பின் அகில பாரத தலைவர் ‘சர்சங்கசாலக்’ என்று அழைக்கப் படுகிறார்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆறாவது அகில பாரத தலைவராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் திரு. மோகன்ஜி பாகவத் சென்னை வந்திருந்தார். தமது இடைவெளியற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் நா.சடகோபன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் சார்பில் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் அவருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட நேரம் அளித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை தலைமையகத்தில் 15-மே-2010 அன்று நடந்த கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள் –

நீங்கள் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்றதும் முதன் முறையாக சென்ற இடம் டாக்டர் அம்பேத்கரின் தீக்ஷாபூமியாக அமைந்திருந்தது…

அது மிகவும் இயல்பான விஷயம்தான். பாபாசாகேப் அம்பேத்கர் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருக்கிறார். அங்கு சாதியம் சற்றும் இல்லாத நிலையைப் பாராட்டியிருக்கிறார். அதே போல, அம்பேத்கர் பௌத்த மார்க்கத்துக்கு மாறிய போது குருஜி கோல்வல்கர் (ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர்) “சங்கரரின் கூர்த்த மதியும் புத்தரின் கருணை நிறைந்த இதயமும் நமக்கு தேவை” என்று தேச மக்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்தவர் திரு.தத்தோபந்த் தெங்கடி (பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனர்) ஆவார்.

ஆனால் சிலர் அம்பேத்கரை ஹிந்துமத விரோதியாக பார்க்கிறார்களே…

இதோ பாருங்கள்… அம்பேத்கருக்கு சங்க ஹிந்துக்களின் நல்ல நோக்கங்கள் குறித்து தெளிவான புரிதல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அக்கால கட்டத்தில் பெருமளவு ஹிந்து சமுதாயம் தலித்துகளுக்கு உரிய நீதியை கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் அவர் புரிந்திருந்தார். இந்த நிலையை சங்கம் நிச்சயமாக காலப் போக்கில் மாற்றிவிடும், சாதியமற்ற ஹிந்து சமுதாயத்தை அது உருவாக்கும் என்பதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் சங்கத்துக்கு அதைச் செய்யக் கூடிய அதிகாரமோ சக்தியோ இல்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். சங்கம் அதைச் செய்து முடிக்கும் காலம் வரை தலித்துகள் பொறுமையாக அநீதிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர் கருதினார். எனவே அவர் பௌத்த தருமத்துக்கு மாறினார்.

mohanbhagwat_jpg_1089fஆனால் அவர் ஏன் பௌத்த தருமத்துக்கு மாறினார்? ஏனென்றால் அது பாரத கலாச்சாரத்தில் வேர் கொண்டிருந்த ஒரு தருமம். அதனை ஹிந்து பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக அம்பேத்கர் கருதினார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னிய மதங்களுக்கும் மார்க்சியம் போன்ற அன்னிய சித்தாந்தங்களுக்கும் ஈர்க்கப்படாமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். திரு தத்தோபந்த் தெங்கடியிடம் அம்பேத்கர் வெளிப்படையாகவே கூறினார்: “கோல்வால்கர் தாழ்த்தப்படாத மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். நான் நம் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பெரும் தடைச்சுவராக இருக்கிறேன்”.  (ஆனால் நாம் குருஜி கோல்வால்கரை சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக பாடுபட்டவராக பார்க்கவில்லை. அவர் ஹிந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமாக பாடுபட்டவர் என்றே கருதுகிறோம், அதுவே உண்மையும் கூட)

இந்தியா டுடே பத்திரிகையில் நீங்கள் உங்கள் உரைகளில் மகாத்மா காந்தியை பாராட்டியதாக செய்தி வந்தது…

ஓ… இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சங்கத்தில் காந்திஜி குறித்து ‘கண்டுபிடித்தது’ நான் இல்லை. குருஜி கோல்வல்கர் மகாத்மா காந்தி குறித்து ஒரு பெரிய பேருரையே நிகழ்த்தியுள்ளார். நான் பிராந்த பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) ஆவதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலை பிரார்த்தனையில் மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கிராம முன்னேற்றம், சுதேசி மற்றும் பசுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் காந்திஜியின் பார்வையும் சங்க சிந்தனையும் செயல்பாடும் ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. எனவே எவருக்காவது நான் காந்திஜி குறித்து உரையாற்றியது ஆச்சரியம் தந்ததென்றால், அது அவர்களுக்கு சங்கத்தின் வரலாற்றைக் குறித்தும் தத்துவத்தைக் குறித்தும் உள்ள அறியாமையையேக் காட்டுகிறது.

அம்பேத்கரையும் காந்தியையும் விரோதியாக காட்டக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த இரண்டு தலைவர்களையும் நீங்கள் எவ்விதம் சமரசத்துடன் நோக்குகிறீர்கள்?

gandhi_and_ambedkarஅனைத்து மாபெரும் தேசிய தலைவர்களுக்குமே அவர்களிடையே (கருத்து/நிலைப்பாட்டு) வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே சமுதாயத்தின் நலனையையும் தேசத்தின் நலனையுமே மிகவும் மதித்தவர்கள். இந்த பார்வையில் நாம் அவர்களை அணுகும் போது ஒற்றுமைக்கான பல அம்சங்களை, அவர்களிடையே ஒத்திசைவு கொண்ட பல விஷயங்களை நாம் காணமுடியும். நம்முடைய  தேச நிர்மாணப் பணிக்கு அவர்களிடமிருந்து நல்ல பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியும். இதுதான் எப்போதுமே தேசத்தலைவர்களைப் பொறுத்தவரையில் சங்கத்தின் அணுகுமுறையாக அமைந்திருக்கிறது.

தலித்துகளை தேசிய நீரோட்டத்திலிருந்தும் ஹிந்து பண்பாட்டிலிருந்தும் அப்புறப்படுத்த ஒரு வலிமையான இயக்கம் செயல்படுகிறது. இதனை எதிர்கொள்ள சங்கம் என்ன செய்கிறது?

மீனாட்சிபுரம் மதமாற்றக் காலம் முதலே சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இன்னும் சொன்னால், அவ்வாறு சங்க ஷாகாக்களால் தீண்டாமையும் சாதியமும் அகன்று விட்ட இரண்டு கிராமங்களுக்கு அண்மையில்  “சமூக நல்லிணக்கம் கொண்ட கிராமங்கள்” என்ற தமிழ்நாடு அரசு விருது கூட கிடைத்தது.  தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட இடங்களில் சமாதான முயற்சிகள் செய்ய சங்க ஸ்வயம் சேவகர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் சங்கம் தலித்துகளின் மேம்பாட்டுக்கு தீவிரமாக செயல்படுகிறது. அண்மையில் குருவாயூர் கோவிலில் கூட சங்கம் இதை செய்தது.

சங்கத்துக்கு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நீர்வளங்கள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுகாதார அமைப்புகள், மயானங்கள் ஆகியவை அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இப்பார்வையை செயல்படுத்த நம் சக்திக்கு தகுந்த அளவில் எல்லா இடங்களிலும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

janmashtami_15_jpg_595g
Women dressing her child as Krishna on Janmashtami, Hyderabad.

நீங்கள் எப்போதும் ஹிந்துத்துவம், ஹிந்து தன்மை குறித்து பேசுகிறீர்கள். ஹிந்து என்று நீங்கள் யாரை வரையறை செய்கிறீர்கள்? மத சிறுபான்மையினர் ஹிந்துக்களா ஹிந்துக்கள் அல்லாதவரா?

இந்த தேசத்தைத் தங்கள் மூதாதையர் தேசமாகவும் புண்ணியபூமியாகவும் கருதும் அனைவரும் ஹிந்துக்களே. இந்த தேசம் போற்றி பாதுகாத்து வந்த தார்மிக மதிப்பீடுகளையும்,  பண்பாட்டையும் பின்பற்றும் எவரும், அவர்களது வழிபாட்டு முறைகள் எவையாக இருந்தாலும் ஹிந்துக்களே. தங்களைத் தாங்களே மதச்சிறுபான்மையினர் என அன்னியப்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் சுய அடையாளத்தைக் குறித்த இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம். இந்த மூன்று விஷயங்களும் யாருக்கு பொருந்துகிறதோ அவர்கள் அனைவரும் தேசிய உணர்தலில் ஹிந்துக்களே ஆவர்.

தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முக்கியமானவையாக உள்ளன. சங்கம் சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக உலக வெப்பமயமாதல் போன்ற விஷயங்களில் என்ன நிலைப்பாடு கொண்டதாக உள்ளது?

நமது பண்பாடும், தார்மிக மதிப்பீடுகளும், நம் வாழ்க்கை முறையும் சுற்றுப்புறச் சூழல் உணர்வு கொண்டவையாக, சுற்றுப்புற சூழலை நன்றாக வைத்துக்கொள்ள உகந்தவையாகவே உள்ளன. நாம் இயற்கையை வணங்குபவர்கள். அனைத்து இயற்கையும் தெய்வீகத்தால் நிரம்பியது என்பது நமது தரிசனம். பசு பாதுகாப்பு இந்த இயற்கையின் இறைத்தன்மையுடன் இணைந்ததே ஆகும். சுற்றுச்சூழல் குறித்த ஒரு தெளிவான நல்ல  நிலைப்பாடு என்பது அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். அதற்கு நமக்கு பரிசோதனைகளின் அடிப்படையிலான மாதிரிகள் (models) தேவை. சங்கமும் சங்கம் சார்ந்த அமைப்புகளும் அத்தகைய பரிசோதனைகளை தேசம் முழுவதும் செய்து வருகிறார்கள்.

பாரதம் போன்ற பரந்து விரிந்த, பன்மையான சூழ்நிலைகள் வேறுபட்ட தட்பவெப்ப சூழல்கள் இருக்கும் தேசத்தில் ஒரே மாதிரியை எல்லா இடங்களுக்கும் பொருத்திவிட முடியாது. அந்தந்த பிராந்தியங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு சூழலியல் நிலைபாடுகள் உருவாக்கப்பட வேண்டும். நான் சொன்னது போல பல இடங்களில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சித்திரகூடத்தில், கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல கிராமங்களில் இவை நடைபெறுகின்றன. இப்பரிசோதனைகள் மூலம் கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) அடிப்படையில் பிராந்திய சூழலியலுக்கு உகந்த மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் விளைவாக உருவாக்கப்படும் சூழலியல் பாதுகாப்பு நிலைபாடுகள் தெளிவான நல்ல தன்மை கொண்டவையாகவும் வளங்குன்றா வளர்ச்சிக்கு (sustainable development) துணை செய்பவையாகவும் அமையும்.

அறிவியல் ஆன்மிகம் இவற்றைப் பொறுத்தவரையில் பாரதத்துக்கு உலகப் பண்பாடுகளின் மத்தியில் ஒரு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் அறிவியல், ஆன்மிகம், பாரதப் பண்பாடு இவற்றின் ஒத்திசைவு குறித்து சங்கத்தின் பார்வை என்னவாக இருக்கிறது?

ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உபநிடதம் கூறுகிறது – “(அக-வளர்ச்சியை புறக்கணித்து) புற-அறிவியலை மட்டுமே தேடுவோர் பெரும் இருளில் விழுவார்கள். ஆனால் புற-அறிவியலை புறக்கணித்து அகஞானத்தை மட்டுமே நாடுவோரோ அதைவிடப் பெரிய காரிருளில் மூழ்குவர். ”

சமுதாய வாழ்க்கைக்கு கூறப்பட்டதாகும் இது. வீடு பேற்றை மட்டுமே நாடுவோருக்கு, மற்ற புருஷார்த்தங்களான பொருளிலும் இன்பத்திலும் நாட்டமில்லாதவர்களுக்கு (ஆத்மார்த்த வித்யா எனப்படும்) அக ஞானம் மட்டுமே போதுமானது. ஆனால் சமுதாயத்தில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. ஆனால் அவர்களுக்கும் இறுதி நோக்கம் வீடுபேறு எனும் மோட்சம் எனும் முக்திதான். எனவே காம-அர்த்த தேடலுடன் மோட்சத்தையும் அவர்கள் அடைவதற்கான ஒரு ஒழுங்குபடுத்தும் தத்துவமாக தர்மம் அமைகிறது.

bharat_mata_abanindranath
Bharatmata, the famed painting by Abanindranath Tagore

பிரித்தே பார்க்கும் தன்மை கொண்ட மேற்கத்திய பண்பாடு போன்று இல்லாமல், ஒன்றுப்படுத்திப் பார்க்கும்  இத்தகைய  நமது பார்வையே அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஒரு முழுமையான அறிதலை நமக்குத் தந்துள்ளது. இதுதான் ஹிந்து தத்துவம். உலகம் உய்வடைய இதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால் உலகம் இதனைக் கேட்க, இந்த பார்வையை ஏற்றுக்கொள்ள, ஹிந்துக்கள் சக்தி பெற வேண்டும். ஏனென்றால், சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும். நம் தேசம் உலக நலத்தைப் பேணும் அறிவியலாளர்களை அதிக அளவில் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஹிந்து தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தினால்தான், ஹிந்து சமுதாயம் சக்தியுடன் ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கினால்தான் பாரத அன்னையின் குரல் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும். அப்போதுதான் அவள் ஜகத்குருவாக முடியும். ஆகவே அத்தகைய வலிமை மிக்க ஹிந்து சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

(இந்தக் கலந்துரையாடலின் ஆங்கில வடிவத்தை  இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்)

சமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1

779_bharatanatyam_stampபின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, ‘சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாங்கள் பரஸ்பரம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்ட நண்பர்கள். என் கருத்துக்களை வெகுவாக மதிப்பவர். இந்த பரஸ்பர உறவும் மதிப்பும் தான் அவர் என்னை இந்திய நடனங்களைப் பற்றி என்னை எழுதச் சொன்ன காரணம். அப்போது நான் ஒரு விபத்தில் கால் ஒடிந்து ஒன்றே கால் வருட காலம் படுக்கையில் கட்டுக்களோடு கிடந்தவன். வருடம் 1988. எனக்கு இந்தப் பொருள் பற்றிச் சொல்ல நிறைய இருந்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவானேன்? சந்தோஷமாக எழுதினேன். ஆனால் அவர் கட்டுரையைப் படித்த பின்னர் வெகுநாட்கள் யோசித்து, பின்னர் இதை பிரசுரிக்க மறுத்துவிட்டார். காரணம் சங்கீத் நாடக் பத்திரிகை சங்கீத நாடக அகாடமியின் அதிகார பூர்வ வெளியீடு. அவர் சொன்னார் – கருத்துக்களை வெளியிடத் தடையேதுமில்லை. ஆனால் அகில இந்திய புகழ் பெற்ற, அகாடமி பாராட்டும் விருதுகளும் பெற்றுள்ள நடனக் கலைஞர்களைப் பெயர் குறிப்பிட்டு வைக்கும் இம்மாதிரியான விமர்சனங்களை அகாடமியின் அதிகார பூர்வ பத்திரிகையில் வெளியிட இயலாது என்று.

நாங்கள் நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த வெகுவாக மதிக்கும் நண்பர்கள். அவர் நிலை எனக்குப் புரிந்தது. இந்தக் கட்டுரையைத் தான், எழுதச் சொல்லிப் பின் பிரசுரமாகவில்லையே தவிர, இதன் பின்னரும் சங்கீத் நாடக் பத்திரிகையில் நான் நிறைய எழுதியிருக்கிறேன். அகாடமிக்காக தமிழகக் கலைஞர்களைப் பேட்டி கண்டு, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அகாடமி நிகழ்த்திய சர்வ தேச, நாடக விழாக் கருத்தரங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன். புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்கிறேன். ஒரு நிகழ்வின் காரணமாக எங்கள் நட்புறவு பாதிக்கப் பட்டதில்லை. இம்மாதிரியான மறுப்புகளை நான் தமிழ் நாட்டிலும் சரி, தில்லியிலும் சரி, நிறையவே சந்தித் திருக்கிறேன். இருந்தாலும், தில்லியில் எனக்குக் கிடைத்த சுதந்திரத்தை, தமிழ்கத்தோடு ஒப்பிட்டு சமனப் படுத்த முடியாது. தமிழ்கத்தின் அறிவு ஜீவிகளோ, வேண்டாம், ”என்பிலதனை” ப் பற்றி பேசுவானேன்?

பின்னர் இதன் சுருங்கிய வடிவம் தில்லி பத்திரிகையில பிரசுரமானது.

இப்போது இது அன்று எழுதிய வடிவிலேயே தமிழில் தரப்படுகிறது. 22 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்று நாம் யோசிக்கலாம்.

(1)

ரண்டாயிரம் வருடங்களுக்கும் மேல் பழமையும் நீட்சியும் கொண்ட ஒரு மரபு, இடைப்பட்ட காலனிய ஆதிக்கத்தின் கீழ் மறக்கப் பட்டாலும், பின்னர் எழுந்த தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது திரும்பக் கண்டெடுக்கப்பட்டு ஒரு மறுமலர்ச்சியாகப் பெற்றாலும், அதன் நீண்ட பழமை ஒரு சுமையாகவே இம்மரபின் மீது அமர்ந்து அழுத்துவதாகத் தோன்றுகிறது. இத்தகைய நீண்ட பழமையே ஒரு போதையாகவே செயல் படுகிறதோ என்னவோ. மறுமலர்ச்சி ஒரு மரபைத் தோற்றுவிக்காது, பழம் மரபையும் வடிவையுமே திரும்ப முன் வைக்கிறோமோ என்று தோன்றுகிறது. பழமையின் சுமை நம்மை, இன்று சிருஷ்டிபரமான செயல்பாடுகளுக்குச் சக்தியற்றவர்களாக்கி விடுகிறது போலும்!

நம் பழம் பாரம்பரிய சொத்துக்களை, மரபுகளைத் திரும்ப கண்டறிவதற்கும் நம் ஆளுமையைக் கண்டறிவதற்கும் கூட், தூண்டுதல்கள் நம்முள்ளிருந்து எழாது வெளிநாட்டிலிருந்து தான் பெறவேண்டியவர்களாக இருந்திருக்கிறோம். உதய் சங்கருக்கும் ருக்மிணி அருண்டேலுக்கும் ஒரு அன்னா பாவ்லோவா, “போய் உங்கள் பாரம்பரிய நடனங்களைக் கற்கச் செல்லுங்கள்” என்று சொல்ல வேண்டியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை அவரவர் துறையில் தோற்றுவித்த சக்திகளான இந்த முன்னோடிகளைக் குறை கூறுவதற்காக இதை நான் குறிப்பிட்வில்லை நம் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப இது நிகழும் ஒரு உண்மை என்பதைத் தான் சொல்ல விரும்புகிறேன். ஒரு உரத்த சிந்தனயின் பதிவாகவே நான் இதை எழுதிச் செல்லும்போது பின் வரும் கட்டங்களில் இத்தகைய நிகழ்வுகளை நாம் திரும்பத் திரும்ப சந்திப்போம். நம் பழ்மையின் பெருமைகளை நினைத்து அசைபோட்டுக் கொண்டே தொடரும் மந்தத் தன ஜீவிதத்திலிருந்து, சுகமான உறக்கத்திலிருந்து, வெளியிலிருந்து முதுகில் விழும் அடிதான் நம்மை விழித்தெழ வைக்கிறது.

முதலில், என்னைப் பற்றி, என் வீட்டைப் பற்றி, என் மக்களைப் பற்றியே பேசுவோமே. இல்லையெனில் தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள நடன மரபுகளைப் பற்றி நான் குறை சொல்வது தமிழுக்கு அன்னியமானவற்றை அங்கீகரிக்க மறுக்கும் பிராந்தியா வெறி என்று மற்றவர்கள் என்னைக் குத்திக் குதற பாய்ந்தோடி வரக்கூடும்.

உண்மைதான். இந்தியாவின் அகண்ட பரப்பில் வாழும் நம் எல்லோருக்கும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காஷ்மீரத்தில் பரதனின் நாட்டிய சாஸ்திலிருந்து தான் கதையே தொடங்குகிறது. பரதனுக்கும் முன்னால் சிலர் இருந்ததாகத் தெரிந்த போதிலும், பரதன் தான் நம் எல்லோருக்குமான இப்போது கிடைக்கும் அதிகாரபூர்வமான, மூல கிரந்தம். அதிலிருந்து தான் இந்தியாவின் எந்த நடன வடிவமும் தம் மரபின் ஆதாரங்களைப் பெறுகிறது. இதுவே ஒரு ஆச்சரியம் தரும் விஷயம் தான். பரந்த இந்திய துணைக்கண்டத்தின் அத்தனை பிராந்திய நடன மரபுகளும் தம் ஒவ்வொன்றின் வேறுபடும் நடனங்களின் வாசிக, ஆங்கிக ஆஹார்ய அபிநயங்களுக்கும் இன்னும் பல்வேறு பத்ததிகளுக்கும், லோக் தர்மிகளுக்குமான ஆதாரங்களை உள்ளடக்கிய நூலாக, கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் அமையக்கூடும் என்பது வியக்கத்தக்க ஒரு நிகழ்வு.

(அபிநயங்கள் மற்றும் லோகதர்மி/நாட்யதர்மி வகைகள் குறித்த அறிமுகம் இங்கே).

இத்த்கைய ஒரு தொகுப்பு, விதிமுறை வகுப்பு சாத்தியமாக அந்த மூன்றாம் நூற்றாண்டு கஷ்மீரத்துக்கும், மற்ற இந்திய பிராந்தியங்களுக்கும் இடையே எத்தகைய தகவல் தொடர்பு வலைப் பின்னல் இருந்திருக்கக் கூடும்! அப்படி ஒரு பரந்தும் சிக்கலுமான ஒரு வலைப் பின்னர் இருந்திருந்தது என்று எடுத்துக் கொண்டால், இப்பின்னல் செயலற்றுப் போவதைக் குறிக்கும் இடைவெளிகளை, நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்கு நீளும் இடைவெளிகளை எப்படி விளக்கி சமாதானம் கொள்வது? கி.பி. 3-ம் நூற்றாண்டு நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு கி.பி. 8ம் நூற்றாண்டில் தான் நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணத்தக் காண முடிகிறது. 8ம் நூற்றாண்டே மிகவும் முன் தள்ளிப் போவதாகச் சொல்கிறார்கள். தென்னிந்தியாவினுடையதைத் தவிர மற்ற எந்த பிராந்தியத்தின் லோக் தர்மியும் தேசியும் என்னவாக இருந்தன என்பது பற்றி எதுவும் தெரிவதில்லை.

silambu_for_danceஆனால், தென்னிந்தியாவின் தொடர்பு அறுந்ததில்லை. வேடிக்கை தான். ஆச்சரியம் தான். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் அன்றைய தமிழ் நாட்டில் பயின்று வந்த செவ்வியல் நடன மரபுகள் பற்றியும் (’மார்கி’) எண்ணற்ற கிராமிய கலை வடிவங்கள் பற்றியுமான (’தேசி’) தகவல்கள் அத்தனையும் தன்னுள் அடக்கிய கருவூலமாகத் திகழும் காப்பியம் ஒன்று உண்டு. சிலப்பதிகாரம் என்ற அக்காப்பியம் இயற்றப் பட்டதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னர், 13-ம் நூற்றாண்டில் அதற்கு உரையெழுத வந்த அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் காலத்தில் வழங்கிய இசை, நடன்ங்களைப் பற்றிய நூல்கள், பெருநாறை பெருங்குருகு, பஞ்ச பாரதீயம், பரதம், அகத்தியம் போன்ற நூல்கள் தன் காலத்தில் முற்றாக மறைந்துவிட்டன என்றும், முறுவல், செயந்தம், குணநூல், செயிற்றியம் போன்ற நூலகளின் பெரும்பகுதி அழிந்து மிகுந்த பகுதிகள் கொஞ்சமே தனக்குக் கிடைத்துள்ளதாகவும் தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். எனவே சிலப்பதிகாரம் பேசும் இசை, நடனம் பற்றி அறிய தன் காலத்தில் கிடைக்கும் நூல்களின் எஞ்சிய பகுதிகளையே தான் மிகவும் சார்ந்திருக்கவேண்டியிருக்கும் தன் நிலைக்கு வருந்துகிறார். இருப்பினும், இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை, கி.பி. 3-ம் நூற்றாண்டின் பரதனின் நாட்டிய சாஸ்திரத்திற்கும், 5-ம் நூற்றாண்டின் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கும், பின்னர் மறுபடியும் இளங்கோ அடிகளுக்கும், சிலப்பதிகார உரை எழுத வந்த 13-ம் நூற்றாண்டு அடியார்க்கு நல்லாருக்கும் இடையே தொடர்ந்த் பரஸ்பர உறவும் அவ்வுறவினால் நிகழும் சம்வாதமும் ஒரு இடைவிடாத தொடர் எனத் தெரிகிறது.

சிலப்பதிகாரத்துக்கு முன்னர் கூட, 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க நூல்களிலிருந்து ஊர் ஊராக நாடு முழுதும் சென்று தம் இசையாலும், நடனங்களாலும் மக்களையும் மன்னனையும் மகிழ்வித்து வாழ்ந்த விறலியர்களை, பாணர்களைப் பற்றியும் அறிகிறோம். இந்த மரபின் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த வளர்ச்சியும் பரிணாமமும் தான் சிலப்பதிகாரம் பேசும் செவ்விய இசை, நடனங்களும் கிராமிய இசை, நடனக் கலைகளும் உருவாக வழிவகுத்தன. சங்க கால அகப்பாடல்கள் தான், பின்னர் 5-ம் நூற்றாண்டிலிருந்து 10-ம் நூற்றாண்டு வரை நீண்ட பக்தி காலத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. நான் இங்கு அதன் தொடக்கத்தையும் இறுதியையும் மாத்திரம் பேசினால் போதுமானது. பக்தி யுகத்தின் தொடக்கமாக வந்த 5-ம் நூற்றாண்டு காரைக்காலம்மமையார் சிவனின் தாணடவ நிருத்தத்தைக் கண்ட பரவசத்தை தன் பாடல்களில் கொண்டாடுகிறார். அது அன்றைய தமிழ் வழக்கில் ‘கொடுகொட்டி’ எனப் பெயர் பெற்றது. இதன் கடைசியாக, 9-ம் நூற்றாண்டு வைஷ்ணவக் கவிஞரான, நம்மாழ்வாரின் திருவாய்மொழி தான், தெனனிந்திய வைஷ்ணவ கோயில்களில் அரையர்கள் நிகழ்த்தும் அரையர் சேவை நடனத்திற்கான பாடல்களைத் தருகிறது. அரையர் சேவை என்ற நடன மரபு கி.பி. 954-1054-ல் வாழ்ந்த திருவரங்கத்து பெருமாள் அரையரால் தோற்றுவிக்கப்பட்டது. இன்றும் அந்த மரபு தொடர்வதை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் காணலாம்.

(2)

bharatanatyam_0110_sமிழ்நாட்டில் முதலில் தோற்றம் கொண்ட பக்தி இயக்கம் சுமார் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டு காலம் நீடித்த ஒன்று. மன்னர்கள் அதன் வளர்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். நாடெங்கும் கோவில்கள் கட்டப்பட்டன. கோவில்கள் கலாச்சார வளர்ச்சிக்கு மையமாயின். கல்விக் கூடங்களாயின. பாட்டும் இசையும் நடனமும் முக்கிய இடம் பெற்றன. நடனக் கலைஞர்களில் சிறந்து விளங்குகிறவர்க்கு அரசரே தலைக்கோலி என்ற பட்டம் வழங்கி நிறைய பொருளும் பரிசுகளும் வழங்கும் ஒரு மரபு தொடர்ந்து இருந்து வந்தது என்பது சிலப்பதிகாரத்திலிருந்து தெரிய வருகிறது. மேலும், அவர்கள் சிரமமின்றி வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான அளவு நிலமும் தானமாகத் தரப்பட்டது என்றும் தெரிகிறது. சிலப்பதிகாரத்தின் முக்கிய பாத்திரமான மாதவி, ஒரு தலைக்கோலி ஆவாள். அவள் ஆடிய நாட்டியம் பற்றியும் அதன் வடிவங்கள், ஆடிய கருத்துக்கள் பற்றியும் சிலப்பதிகாரம் விவரமாகச் சொல்கிறது. தலைக்கோலி மாதவி ஆடிய நடனங்கள் செவ்விய மரபிலும், காதல் போன்ற மதம் சாராத பொருள் பற்றியும் இருந்ததாகவும், பொதுமக்களும் பெண்களும் குழுவாக ஆடியவை குரவைக் கூத்து போன்ற நாட்டுப்புற வடிவஙகளிலான நடனங்கள் என்றும் அவை பக்தி சார்ந்தும் மதம் சார்ந்தும், கண்ணனைப் புகழ்ந்து பாடுவனவாகவும் இருந்ததாக சிலப்பதிகாரச் செய்திகள் சொல்கின்றன. இன்னம் நிறைய நாட்டுப் புற வடிவங்கள் பேசப்படுகின்றன. அவை பற்றி தனியாகப் பின்னர் பேசலாம்.

இங்கு குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் சில்: தமிழ்நாட்டில் கலை, கலாச்சார வரலாறு பற்றி நமக்குத் தெரியவரும் காலத்திலிருந்தே, இந்த நடனக் கலைஞர்கள் சமூகத்தில் வெகுவாக மதிப்பும் கௌரவும் பெற்றிருந்தனர். மன்னர்களால் மதிக்கப்பட்டனர். சுதந்திரமாக எவ்வித கஷ்டங்களும் இன்றி தங்கள் வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தனர். கோவில்கள் கலைகளின் மையமாக உருவானதும், இசை, நடன கலைஞர்களுக்கு வாழும் வசதி தர நிலமும் பொருளும் தரப்பட்டதும் எல்லாம், முன்னர் இக்கலைஞர்கள் சமூகத்தில் பெற்றிருந்த கௌரவமான இடத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான். ராஜ ராஜ சோழ்னின் காலத்தில் (கி.பி. 11-ம் நூற்றாண்டில்) தஞ்சைக் கோவிலின் ஆதரவில் இருந்த இசை நடனக் கலைஞர்கள் நூற்றுக் கணக்கில் இருந்தனர்.

இத்தகைய ஒரு ம்ரபு 7-ம் நூற்றாண்டு பல்லவர்கள் ஆட்சி செய்த காலத்திலிருந்து தொடர்கிறதென்றாலும், சோழர் காலத்தில் அது பலம் வாய்ந்த, நாடு முழுதும் பரவலாகக் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு நியதியும் பாரம்பரியுமுமானது, ஒரு பேரரசாக சோழமன்னர்கள் தம் ஆதரவை பிரும்மாண்ட அளவில் ஸ்தாபித்த கீர்த்தி பெற்றதன் காரணமாக என்று சொல்ல வேண்டும். 9-ம் நூற்றாண்டிலிருந்து இசை பற்றியும் நடனம் பற்றியுமான நூல்கள், பின் அதற்கான உரை நூல்களும் பல இயற்றப்பட்டு வந்துள்ளதைப் பார்க்கிறோம். நந்திகேஸ்வரரின் அபிநய தர்ப்பணம், சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம் தொடங்கி சுத்தானந்த பிரகாசம் வரை – கடைசியாகச் சொலலப்பட்ட சுத்தானந்த பிரகாசத்தைத் தான் இன்றைய பரதநாட்டியம் தன் பயிற்சிக்கான ஆதார நூலாகக் கொள்கிறது. 8-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் தொடர்ந்து தோன்றியுள்ள உரையாசிரியர்களால் தான் இசையும் நடனமும் பாதுகாக்கப் பட்டும், பரப்பப் பட்டும், படிப்பிக்கப் பட்டும், பிரபலமாககப் பட்டும் வந்துள்ளன. தென்னிந்தியா அதற்கான பாதுகாப்பகமாக இருந்ததன் காரணத்தால் தான் இந்திய துணைக்கண்டம் முழுதும் அதனால் பயன்பெற முடிந்திருக்கிறது.

karana_sculptures_at_chidambaram_temple10-ம் நூற்றாண்டிலிருந்து 13-ம் நூற்றாண்டு வரையிலான சோழர் காலத்தில் கோவில் கட்டிடப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்த முகம் தெரியாத பெயர் தெரியாத சிற்பிகளுக்கு 3-ம் நூற்றாண்டு காஷ்மீரைச் சேர்ந்த பரதனின் நாட்டிய சாஸ்திரத்தில் காணும் 108 கரணங்களைப் பற்றிய அறிவு இருந்திருக்கிறதே, அது சாத்தியமான அந்த அதிசய நிகழ்வை சற்று எண்ணி வியக்கலாம் நாம் இப்போது.. சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம் கோவில்க்ளின் கோபுர வாசல் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் கரண சிற்பங்கள் இதற்கு அத்தாட்சி. இந்த சிற்ப விளக்கங்கள் இல்லாது போயிருந்தால், பரத நாட்டிய சாஸ்திரம் சொல்லும் கரணங்களை நம்மால் இன்று எப்படி திரும்ப கற்பித்து உருக்கொடுத்திருக்க முடியும்? அதன் பயிற்சி தலைமுறைக்குத் தலைமுறை, தொடர்ந்து வந்திருந்தாலே இடையில் கலைஞருக்குக் கலைஞர் மாற்றங்கள் நிகழும். எத்தகைய காட்சித் துணையும் இல்லாது, இரண்டாயிரம் வருடத்துக்கு முன் எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒன்றை இப்போது ஆடும் கலையாக எபபடி உருக்கொடுப்பது?

இடைப்பட்ட காலத்தில் உரையாசிரியர்கள் பல நூற்றாண்டு கால இடைவெளியில் தம் விளக்கங்களைத் தந்திருந்தாலும் அவர்கள் விளக்கங்களிலும் கூட கருத்து வேறுபாடுகளும் கரணங்களின் தொடர்ச்சி பற்றிப் பல்வேறு பார்வை வித்தியாசங்களும் இருக்கக் கூடுமல்லவா? மூல நூலையும் உரைகளையும் படி எடுத்தவர்கள் பாடபேதங்களையும் விட்டுச் சென்றிருப்பார்கள் தானே. உதாரணமாக, சகடாஸ்யம் என்பது சக்கரத்தைப் போல உடலை வளைப்பதா அல்ல்து ஒரு சக்கரத்தை உருட்டிச் செல்ல இடது கால் பின்னிருக்க வலது காலை முன்வைத்து சக்கரத்தைத் தள்ளுவதான் அபிநயமா?

தென்னிந்தியாவில் இதற்கு உதவியவை நந்திகேஸ்வரனின் அபிநய தர்ப்பணம் போன்றவையும் அவற்றைத் தொடர்ந்து வந்த உரை விளக்கங்களும் தான். அவ்விளக்கங்கள், இங்கு காணப்பட்ட நாட்டுப்புற நடனங்களையும் கருத்தில் கொண்டவை தான். தென்னாட்டுக் கோவிலகளில் காணும் கரண சிற்ப படிமங்களோடு அவை ஒவ்வொன்றும் நாட்டிய சாஸ்திரத்தின் எந்த ஸ்லோகத்தைக் குறிப்பன என்றும் செதுக்கப்பட்டிருந்தாலும், அச் சிற்பப் படிமங்கள் தென்னாட்டில் பயின்ற முறையைச் சார்ந்த படிம விளக்கங்கள் தான்.. உதாரணமாக, இந்த நடன படிமங்கள் எல்லாமே தமிழ் நாட்டில் இன்று பயிலும் பரதநாட்டிய பாணியிலான ஆதார நிலையான அர்த்தமண்டலியிலேயே (அரைமண்டியிலேயே) அமைந்தவை.

(3)

னவே இந்த மரபும் பாரம்பரியமும் இடையில் அறுபடாத, தொடர்ந்த வாழும் மரபும் பாரம்பரியமும் ஆகும். சோழ சாம்ராயம் முடிவுக்கு வந்தால், பாண்டியர்கள் அதைத் தொடர்ந்தனர். பாண்டியர்கள் விட்ட இடத்தில் இழையைப் பற்றி இன்னும் சிறப்பாகத் தம் ஆதரவைத் தொடர்ந்தவர்கள் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள். அவர்களைத் தொடர்ந்த நாயக்க மன்னர்களும் தம் பாரம்பரிய ஆதரவைத் தொடர்ந்தனர். நாயக்கர்கள் காலம் ஓய்ந்ததும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் தம் ஆதரவில் 19- நூற்றாண்டு முன் பாதி வரை இப்பாரம்பரியம ஜீவித்திருக்க செழித்து வளம் கூட்டச் செய்தனர். மராட்டிய அரசர்களில் ஒருவனான துலஜா கலைகளைப் போஷித்தவன் மட்டுமல்ல, சங்கீத சாராம்ருதம் என்ற நூலுக்கு காரணகர்த்தனும் ஆவான். அவன் இயற்றிய தியாகேசர் குறவஞ்சி என்னும் இசை நாடக நூல், சமீப காலம் வரை தொடர்ந்து நடிக்கப் பட்டு வந்தது. திருவாரூரின் பிரம்மோத்சவத்தின் ஊர்வலத்தின் போது கோவில் தாசிகள் தியாகேசர் குறவஞ்சியை நடனமாடிக்கொண்டு செல்வர். அந்நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று நடனமாடிச் சென்றவர் சமீபத்தில் தான் மறைந்தார். தஞ்சை மராட்டிய மன்னர்கள் ஸ்தாபித்த ‘தஞ்சை சரஸ்வதி மஹல் நூலகம், இசை, நாடகம் சார்ந்த பழம் ஏட்டுச் சுவடிகளின் பெட்டகமாகச் சிறந்து விளங்குகிறது. மருத்துவம் ஜோதிடம், போன்றவையும் அந்நூலகத்தில் உண்டு.

Balasaraswati
Balasaraswati

தேவ தாசிகள், 5-ம் நூற்றாண்டு, சிலப்பதிகாரம் சிறப்பித்த மாதவி முதல், 20-ம் நூற்றாண்டு, மைலாப்பூர் கௌரி அம்மாள், (ஆனந்த குமாரஸ்வாமி தன் Mirror of Gestures எழுத துணை நாடியது கௌரி அம்மாளைத் தான். அதை ஆனந்த குமாரஸ்வாமியே பதிவு செய்துள்ளார்), நம்மிடையே சில வருஷங்களுக்கு முன் வரை வாழ்ந்த பால சரஸ்வதி போன்றோர் வரை, இவர்கள் எல்லாம் பெரும் கலையாற்றல் பெற்றவர்கள். தாம் சார்ந்த கலையின் சிகரங்கள். சமூகத்தில் பெறும் கௌரவத்தைப் பெற்றவர்கள். நம் நாட்டின் கலைக்கும் பண்பாட்டு ஜீவிதத்திற்கும் அடையாளமாகித் திகழ்ந்தவர்கள். இந்த பாரம்பரியம் ஒரு அறுபடாது தொடர்ந்த பாரம்பரியம். இன்றும் சமீபத்திய பழமையிலும் சமூகத்தில் அந்தஸ்து பெற்றுவிட்ட, கலை உணர்வும் பண்பும் அற்ற பாமரர்களால் சிறுமைப் படுத்த்பட்ட காரணம், இவர்கள் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகப் பெற்று வந்த மன்னர் ஆதரவை இழந்ததே ஆகும். ஆனால் இவர்கள் வாழ்வில் சிறுமைப் பட்டாலும், அவர்கள் கலைத் திறனும், சாதனைகளும் கறைபட்டவை அல்ல என்பது புதிதாக ஆங்கிலக் கல்வி பெற்று சமூகத்தில் உலவ வந்த பெரிய மனிதர்களுக்கு தெரியவில்லை. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள், தலைமுறை தலைமுறையாக அவர்கள் பயின்று பாதுகாத்து வந்த பாரம்பரியத்தின் கலைமதிப்பை, பண்பாட்டுச் சிறப்பை அவர்கள் அறிந்தவர்கள் இல்லை. ருக்மிணி தேவி பரத நாட்டியம் கற்க விரும்பிய போது, ஆனந்த குமாரஸ்வாமி தன் Mirror of Gestures எழுதக் கிளம்பியபோது அவர்கள் அண்டியவர்கள் இந்த தேவதாசிகள் தான். நான் சொல்ல விரும்புவது இந்த பாரம்பரியம் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ள ஒரு பாரம்பரியம், அது அறுந்தது சமீபத்தில் தான்.. அந்த நீண்ட பாரம்பரியத்தின் மதிப்புகளைக் காணத் தவறியது சமீப காலத்திலிருந்து சீரழிந்து வரும் இன்றைய நம் சமூக மதிப்புகள்.

இந்த மரபும் பாரம்பரியமும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றின் சுமையோடு வரும் ஒன்று. இத்தகைய ஒரு நீண்ட பாரம்பரியமோ சுமையோ இந்திய நிலப் பரப்பில் வேறு எந்த பிராந்தியத்திலும் காணாத ஒன்று. எனவே இக்கலையின் இன்றைய பயிற்சியாளருக்கு இது எவ்வித சுதந்திரத்தோடும், சிருஷ்டிகர பார்வையோடும், துடிப்பான செயல்பாட்டோடும் தோளில் சுமக்கவோ முன் செல்லவோ இயலாத பாரம் மிக்க சுமையாகியிருக்கிறது. நாம் வெறும் சரக்கு வண்டியாகிவிட்டோமா என்ன?

(தொடரும்)

vesa-150x1501வெங்கட் சாமிநாதன் ஐம்பது வருடங்களாகத் தமிழில் எழுதிவரும் கலை, இலக்கிய விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். இலக்கியம் வாழ்க்கையின் முழுமையை வெளிப்படுத்துவதன் மூலமாக உன்னதத்தை உணர்த்தும் முயற்சி என நம்பிச் செயல்டுபவர் வெங்கட் சாமிநாதன். மேலும் விவரங்கள் இங்கே.

வெ.சா தனது கலை, இலக்கிய விமர்சனப் பயணத்தைத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுறும் இந்தத் தருணத்தில்  இந்திய நடனங்கள் பற்றிய இக் கட்டுரைத் தொடரை வெளியிடுவதில் தமிழ்ஹிந்து.காம்  பெருமையடைகிறது.

தமிழக அரசு சின்னம் மாற்றம்?: சில எண்ணங்கள்

சில நாட்கள் முன்பு ஒரு ஜூனியர் விகடன் செய்தி –

thiruvalluvar_statueகிளம்பும் மூடுக்கு வந்த கழுகார், ”தமிழகத்தில் எங்கெங்கும் தான் பதித்த முத்திரையே இருக்க வேண்டுமென்ற முதல்வரின் இன்னொரு கனவுக்கும் சட்டசபையில் அடி போடப் பட்டுவிட்டது! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ-வான ரவிக்குமார், ‘எந்த அரசும் சமயச் சார்பற்று இருக்க வேண்டும். ஆனால், அரசு முத்திரையில் இந்து கோயிலைக் குறிக்கும் விதமாக கோபுரம் இடம் பெற்றிருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும்’ என்று பேசியதோடு, ‘அதற்கு பதிலாக எல்லா சமயமும் ஏற்றுக் கொண்ட திருவள்ளுவரை அரசு முத்திரையில் வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

‘சந்தேகமென்ன… குமரியில் முதல்வர் அமைத்த அதே ‘அய்யன் திருவள்ளுவ’ உருவம்தான் பரிசீலிக்கப்படும். தமிழ் செம்மொழி மாநாட்டு கோலாகலத்தோடு இதுவும் சேர்ந்துகொள்ளும்’ என்கிறார்கள் விவகாரம் அறிந்த தி.மு.க. பெருந்தலைகள்!”

”ஓ!”

”அரசு முத்திரைகள் மாறும்போது, மாநிலத்தின் அத்தனை அரசாங்க அலுவலகங்களிலும் புழங்கும் விண்ணப்பங்கள், கார்டுகள் என்று எல்லாமே புதிதாக அச்சாகும். அது ஒரு தனிப்பெரும் அச்சக கான்டிராக்ட்! யாருக்கு வாய்க்குமோ அந்த முத்திரை அதிர்ஷ்டம்?” என்று சொல்லிக் கண்ணடித்துப் பறந்தார். அவர் சீறிப் பறந்த வேகத்தால், நம் மேஜைக் காகிதங்களெல்லாம் காற்றில் மிதந்தன.

உள் ஒன்று வைத்தவர்  முதல்வர்;  அந்த ஒன்றையே புறம் நின்று பேசுபவர் ரவிக்குமார்; அகமும், புறமும் ஒன்றான உத்தம அரசியல்வாதிகள்.

இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியானதும், இது பற்றிய அபிப்பிராயங்களும், விவாதங்களும் பொதுத் தளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதிகாரபூர்வமாக எந்த முடிவும் எடுக்கப் படுமுன்பே கமுக்கமாக கழக அரசு தன் கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கி விட்டது போலத் தெரிகிறது. சென்னையில்  நகர்ப் பேருந்து பயணச் சீட்டுக்களில் ஏற்கனவே புதிய சின்னம்  போடப்பட்டு விட்டதாக அங்கு சென்று வந்த ஆந்தையார் தெரிவிக்கிறார்.

சித்திரைப் புத்தாண்டை சீரழித்த சிறுமதியாளர் இப்போது முத்திரையிலும் கைவைத்து விட்டனரே என்று மனம் பதைக்கிறார்கள் உண்மையான தமிழன்பர்கள்.  சின்னம் விவகாரம் சின்ன விவகாரம் தான்.  இன்று  தமிழக அரசியலில் எதிர்க் கட்சிகளும், இளிச்சவாய்ப் பொதுமக்களும் இருக்கும் நிலையில்  இந்த மாற்றமும் சுமுகமாகவே  நடந்தேறி விடலாம்.  இங்கு அதிர்ச்சி தரும் விஷயம் என்று இனி எதுவுமே இருக்காது.

இந்த மாற்றங்களின் ஊடாக தமிழ்ச் சமூகமும், பண்பாடும், அரசியலும் போய்க் கொண்டிருக்கும் திசை என்ன என்பது பற்றி நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

***********

சொல்லப் போனால்,  19ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நாணயங்களிலேயே கோபுர சின்னம் இடம் பெற்று விட்டது. தமிழகத்தில் எங்கும் காட்சி தரும் கோபுரமே அதன் நாணயத்தில் இடம் பெறத் தகுந்த அடையாளம் என்று காலனிய ஆட்சியாளர்களுக்கே தோன்றியிருக்கிறது. 1819ம் ஆண்டில் கால் வராகன் நாணயத்தில், ஒரு பக்கம் வாளேந்திய போர்வீரனும், மறுபக்கம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட நீள கோபுரத்தின் சின்னமும் உள்ளது. Quarter Pagoda  என்ற வாசகமும் உள்ளது.

tn_old_coin_full

Pagoda என்பது நீண்ட கோபுரத்தைக் குறிக்கும் சொல். இந்த குத்துமதிப்பான சித்திரத்தைப் பார்த்தால் குறிப்பிட்டு இது எந்தக் கோயில் கோபுரம் என்று சொல்ல முடியாது. ஆனால் இத்தகைய கோபுரங்கள் தமிழ்நாட்டில் மிக அதிகம் இல்லை (மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் விமானங்கள் நீண்டு கூம்பு வடிவத்தில் மேலேறிச் செல்பவை. ஆனால் அவை விமானங்கள், கோபுரங்கள் அல்ல). பெரும்பாலான கோயில் கோபுரங்கள்  அடிப்பகுதி மிக அகன்று சாய்மானம் குறைவாக சீராக மேலேறிச் செல்பவை.

பின்னாட்களில் இதே கோபுர சின்னம் சீர்படுத்தப் பட்டு, தற்போதைய  தமிழக அரசு சின்னம் 1956ல் அறிமுகப் பட்டது  (அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது).  பிறகு 1968ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட்டபோதும், இந்தச் சின்னமே நீடித்தது. சின்னத்தில் உள்ள கோபுரத்தின் நீள, அகல விகிதங்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரத்தையே பெரிதும் ஒத்திருந்ததால், இது அந்தக் கோயில் கோபுரம் என்றே அப்போது முதல் அறியப் படலாயிற்று. அவ்வகையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்  தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் நீளம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது; அக்கோபுரத்தின் மடிப்புகளும், அதில் உள்ள சிற்பங்களும்  கூட (இவை பக்கத்தில் உள்ள உயரக் கட்டிடங்கள் மீது நின்று பார்த்தால் மட்டுமே காணக் கூடியவை) தனித்தன்மை கொண்டவை.

tn_state_emblems_over_time

தொடக்கத்தில் சத்யமேவ ஜயதே என்ற வாசகம் தேவநாகரி லிபியிலேயே இருந்தது. பிறகு ஆங்கிலத்திற்கு வந்து, கடைசியில் “வாய்மையே வெல்லும்” என்று தவறாகத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு இன்றுவரை தொடர்கிறது.

சத்தியம் என்ற சொல்  என்றும் அழியாமல் இருப்பதை (’சத்’), நித்தியத் துவத்தைக் குறிக்கிறது – “உண்மை” என்பதே அதற்கு ஈடான தமிழ்ச் சொல்.  சத்தாகவும், அசத்தாகவும் இருக்கும் பரம்பொருளை “உண்மையுமாய் இன்மையுமாய்” என்று திருவாசகம் கூறும்.  வாய்மை என்பது  அந்த சத்திய வஸ்துவின் இயல்பில் அடங்கிய, பொய் பேசாமலிருத்தல் என்ற ஒரு குறிப்பிட்ட ஒழுக்க நெறி. அதுவே சத்தியப் பொருள் அன்று. எனவே “உண்மையே வெல்லும்” என்பதே சரியானது.

போகட்டும்.

***********

இப்போது  கோபுரத்திற்குப் பதிலாக வள்ளுவர் உருவத்தை வைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப் பட்டுள்ளது. ”மழித்தலும், நீட்டலும் வேண்டா” என்று போதித்த தெய்வப் புலவர் உண்மையில் எப்படி இருந்திருப்பார் என்று யாருக்குத் தெரியும்?  தற்போது நாம் எங்கும் காணும் கொண்டை போட்ட, தாடி வைத்த திருவள்ளுவர் கடந்த சில பத்தாண்டுகளில் ஒரு திருவல்லிக்கேணி ஓவியரின் கற்பனையில் உருவானவர்.

கன்யாகுமரிப் பாறை மேல் உள்ள சிற்ப வடிவத்தையே அரசு சின்னமாக வைக்கப் போவதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த சிற்பத்தில் கலை ரீதியாக நிறைய குறைபாடுகள் உள்ளன என்று பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  முதலில் அதன் கண்ணை உறுத்தும் பரிமாணம்.   சாஸ்தாங்கோவில்  பிராகாரத்தில் நிற்கும் சங்கிலி பூதத்தான் போல அவ்வளவு பெரிதாக வள்ளுவர் என்கிற ஞானியை, கவிஞரை வடித்தது சுத்தமாக ரசிக்கும் படியாக இல்லை.  அதோடு, அவர் வலது இடுப்பை ஒசித்து நிற்கும் பாவத்திற்கும் (bhavam), அந்த மூர்த்திக்கும் பொருத்தம் இருப்பதாகவே தோன்றவில்லை. அந்த முகமும், சுருள் தாடியும்  படத்தில் பார்க்கும் வள்ளுவரை விடவும்  முற்றிலும் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. அவர் கையில் காட்டும் மூன்றுவிரல் முத்திரை எந்த சிற்ப சாஸ்திரத்திலும் இல்லாத, சுண்டுவிரலும் கட்டைவிரலும் இணையும் ஒரு செயற்கையான, அர்த்தமற்ற புது முத்திரை. இவ்வளவு  குளறுபடிகள் உள்ள அந்த சிலாரூபத்தின் மீது  முதல்வருக்கு அப்படி என்ன மோகமோ தெரியவில்லை!

சரி, அப்படியே வள்ளுவரது மிக ஆதாரபூர்வமான வடிவம் நமக்குக் கிடைத்திருந்தால் கூட, தமிழக அரசின் சின்னமாக இருப்பதற்கு அந்த வடிவத்தை விட கோபுரமே சிறந்த தகுதி வாய்ந்தது. எந்த ஒரு தனிமனிதரை விடவும்  தமிழ்க் கலாசாரத்தை  அது சிறப்பாகப் பறைசாற்றும் தன்மை கொண்டது.

srivilliputhur_templeகோபுரம் தமிழ்க் கட்டடக் கலையின்  உன்னதங்களுள் ஒன்று. பூமியினின்று எழுந்து விண்ணை நோக்கி எழுந்து செல்லும் அதன் தோற்றம் என்றென்றும் மேன்மையை, உயர்ச்சியை, வளர்ச்சியை விழையும் மானுட சக்தியின்  ஒளிமிக்க குறியீடாக விளங்குகிறது. அது பற்றியே,

”துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே”

என்று பாரதியார் பாடினார் போலும்!  கோபுரத்தின் அடுக்குளில் அமைக்கப் படும் சிற்ப உருவங்கள் பிரபஞ்சத்தின், இயற்கையின் பல்வேறு  வர்ணஜாலங்களையும், விசித்திரங்களையும் பிரதிபலிப்பவை. அவ்வகையில் முழுமையின்,  பரிபூரணத்தின் உருவாகவும் திகழ்ந்து, தமிழரின் இரண்டாயிரம் ஆண்டு கால தத்துவ ஞானத்தின் சாரத்தை கோபுரம் விளக்குகிறது என்று சொன்னால் மிகையாகாது. இந்த மண்ணின் சிற்பிகளின், கலைஞர்களின், ஞானிகளின், உழைப்பாளிகளின், மன்னர்களின், வீரர்களின், மக்களின் ஆன்மாவைத் தம்முள் கோபுரங்கள் தாங்கிக் கொண்டிருக்கிறன.

இத்தகைய மாபெரும் பண்பாட்டுப் பெட்டகமான கோபுரம் இந்து மதச் சின்னமாகவும் இருக்கிறது. உண்மை தான். ஆனால் அதில் என்ன பிரசினை?

தமிழ்த் தாயின் திருவுருவத்தைத் தமிழே அரசே அங்கீகரித்து தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் நிறுவியுள்ளது. அந்தத் திருவுருவத்தின் மூலம் என்ன? கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் சுற்றில் உள்ள அழகிய சரஸ்வதி சிலையின் வடிவமே அது.  ”தெள்ளு கலைத் தமிழ் வாணி”க்கு  அந்தச் சிலாரூபத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப் பொருத்தமானது. இயைபான அழகியல்.  அப்போ தமிழ்த் தாய் சந்தேகமில்லாமல் இந்து மதச் சின்னம் தானே?

அவளுக்கு நாம் பாடும் வாழ்த்து?  அதில் “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (ஸமுத்ர வஸனே தேவி!) என்று பூமி தேவியைத் தான் போற்றுகிறோம். அந்த பூமித் தாயின் முகமண்டலமாகவும், திலகமாகவும்  பாரதமும், தமிழ்நாடும் இருப்பதாக அந்தப் பாடல் கூறுகிறது.

“செம்பொனார் திலகம் உலகுக்கெல்லாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே”

thamizh_annaiஎன்ற சம்பந்தர் தேவாரத்தை உள்வாங்கி சைவத் தமிழ்ப் புலவர் எழுதிய, கவித்துவம் நிரம்பிய வாழ்த்துப் பாடல். அந்தப் பாடல் இந்துச் சின்னம் இல்லையா?

“கோபுரம் இந்து மதச் சின்னம்; அதை மாற்ற வேண்டும்” என்ற வக்கிரம் பிடித்த வாதம் எங்கு இட்டுச் செல்கிறது என்று பாருங்கள். கிறிஸ்தவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு இது ஆட்சேபகரமாக இருக்கலாம் என்று கற்பிதப் படுத்தப் பட்டு, மூளைகெட்ட முந்திரிக் கொட்டை மதச்சார்பின்மை  என்ற பெயரில்  இந்த மண்ணின் இயல்பான பண்பாடு ஒழிக்கப் படுகிறது.  நாளை தமிழ்த் தாய்க்கு பர்தா போடவும் (அல்லது அவளைக் கல்லால் அடித்தே கொன்று போடவும்),  தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பதில் சுவிசேஷ பஜனை பாடவும் கூட இந்த மானங்கெட்ட கூட்டம்  கொடி பிடிக்கும்.

அட, அந்த வள்ளுவரே, அவரது சிலையே இந்து மதத் தொடர்புடையவை என்று எளிதாகச் சொல்லலாமே!  தெய்வப் புலவரின் திருக்குறளை  திராவிட இயக்கம் வந்து பிய்த்துப் போட்டு அதற்கு அபத்த உரைகள் எழுதும் காலத்திலும் சரி, அதற்கு முன்பும் பின்பும் சரி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சைவர்களும், வைணவர்களும், சமணர்களும் தான் அதை ஏற்றிப் போற்றிப் படித்து, உரைகள் எழுதினார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும் (இது பற்றிய எனது பழைய கட்டுரை : “திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து”). கழக அரசு  இன்று அடிவருடும் ஆபிரகாமிய மதவெறி சக்திகள் நாளை திருவள்ளுவரையும் தூக்கி எறியக் கோரிக்கை விடுக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

பாமியான் மலைக் குன்றுகளின் புத்தர் சிலைகளை பீரங்கி வைத்துத் தகர்த்த அதே தாலிபானிய மதவெறி சக்திகளுக்கு கூழைக் கும்பிடு போட்டு சேவகம் செய்யும் கேடுகெட்ட அரசியலை எம்.எல்.ஏ ரவிக்குமார் சார்ந்திருக்கும் கட்சி செய்கிறது.  இஸ்லாமியர்கள் பிரசினை செய்தார்கள் என்பதற்காக டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை போடும் உரிமையை தமிழ் இளைஞர்கள் விட்டுத் தந்து விட வேண்டும் என்று  ஈனத்தனமாகக்  கடிதம் எழுதும் அளவுக்கு தலித்துகளுக்குத் திம்மித் தனத்தைப் போதித்துக் கொண்டுகிறது  அவரது “விடுதலை சுண்டெலிகள்” கட்சி.

ஒரு கட்டத்தில் திராவிட அரசியல் தமிழ்ப் பண்பாட்டின் உண்மையான கூறுகளை (அவை அனைத்தும் இந்துத்துவத்தின் வெளிப்பாடுகளே)  அவமதிப்பதை நிறுத்தி விட்டு,  சிறிதாவது ஏற்கும் கட்டத்திற்கு வருவது போலத் தோன்றியது. சமீபத்திய திமுக மாநாடுகளில் அலையலையாக ஐயப்ப சாமிகள் தெரிந்தார்கள்.  கழக இளைய வாரிசுகளின் குடும்பத்தினர் கமுக்கமாக அல்லாமல்,  கண் பார்வை பட  தங்கள் கடவுள் நம்பிக்கைகளைப் பறை சாற்றினார்கள்.  ஆனால் அது ஒரு குறுகிய கால மாயத் தோற்றம் மட்டுமே என்று  தோன்றுகிறது.  சோனியா காந்தியின் பிடியில் சிக்கியுள்ள தேசிய அரசியல் முழுமையாகவே இந்து எதிர்ப்பு நிலைப்பாட்டை வேரூன்றி வருகையில், திராவிடக் கட்சிகளில் நீறுபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து வரும் கடும் இந்து துவேஷமும்,  ஏன் இந்திய தேசியம் மீதான வெறுப்புணர்வும் கூட இன்னும் அதிகமாக, வெளிப்படையாகவே தலை தூக்கக் கூடும்.

*********

இந்த முத்திரை மாற்ற அறிவிப்புக்கு அங்கங்கே சில எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. தமிழகத்தில் தன்மானம் இன்னும் செத்துவிடவில்லை என்று அவை உணர்த்துகின்றன.

karnataka_emblemவேறு மாநிலச் சின்னங்கள் எல்லாம் மதச்சார்பற்றவையாகத் தானே இருக்கின்றன என்று  ஒரு நொள்ளைக் கேள்வியை ரவிக்குமார் கேட்கிறார். பக்கத்து மாநிலமான கர்நாடகத்தின் சின்னத்தில் நடுவில் கண்ட பேருண்ட பட்சியும் (Ganda Bherunda bird) அதற்கு இருபுறமும்  இரு சரபங்களும்  (Sharabha),  அதாவது யாளிகளும் உள்ளன. இது முழுமையாகவே புராண உருவகம்.  இரணியனைக் கிழித்து கோபம் அடங்காத நரசிம்மரை சாந்தம் செய்ய சிவனார் சரப உரு எடுத்து அவரைத் தழுவுகிறார். அப்போதும் கோபம் அடங்காத நரசிம்மர் இரண்டு தலைகள் கொண்ட பேருண்டப் பட்சியாக உருமாறுகிறார் – ஒன்று சாந்தத்தையும், ஒன்று கோபத்தையும் குறிக்கிறது.  தீயோரை அழித்தலும், நல்லோரைக் காத்தலும் செய்யும் அரசுக்கு இந்தப் பட்சி ஒரு தத்துவார்த்தமான குறியீடாகக் கருதப் பட்டது.  ஹொய்சளர்கள், கடம்பர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள் என்று எல்லா கர்நாடக ராஜ வம்சங்களும் இந்தப் பட்சியின் உருவத்தை தங்கள் இலச்சினைகளில் பொறித்துள்ளனர். அதன் நீட்சியாகவே இன்று கர்நாடக அரசு முத்திரையில் அந்த உருவம் உள்ளது.  அந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் நந்தியின் திருவுருவம் உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சின்னத்தில் குத்துவிளக்கும்,  அதன் சுற்றுலாத் துறையின் சின்னத்தில் திரிமூர்த்தி உருவமும் (திராவிட பாணி எலிபெண்டா குகை சிற்பம்) உள்ளது. கேரள அரசின் சின்னத்தில் நடுவில் திருச்சங்கும் இருபுறமும் பாரம்பரிய அலங்காரத்துடன் கூடிய யானைகளும் உள்ளன.  இந்தச் சின்னம் திருவாங்கூர் சம்ஸ்தானத்தின் சின்னத்தின் அடிப்படையிலானது.  திருச்சங்கு பத்மநாப சுவாமியைக் குறிக்கிறது.

இப்படிப் பல உதாரணங்கள் தரலாம்.  எந்த மாநிலத்திலும்  குறுகிய கால அரசியல் சரிநிலைகளுக்காக அதன்  பண்பாட்டின் அடையாளத்தையே மாற்றவேண்டும் என்பது போன்ற கேனத்தனமான வாதங்கள் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எதிர்ப்பாளர்களில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் பண்பாட்டு ரீதியாக சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். ஸ்ரீவில்லிப் புத்தூர்க் காரர்கள் தங்கள் ஊர்ப் பெருமைக்கு இழுக்கு வருகிறதே என்பதற்காக இதை எதிர்க்கிறார்களாம்.  அந்தத் தொகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும் கூட முத்திரை மாற்றத்தை எதிர்த்துப் போராடப் போகிறார்களாம்!  (”கோபுர மாற்றம்… ஸ்ரீவில்லிபுத்தூர் சீற்றம்!” – சமீபத்திய ஜூனியர் விகடன் ரிப்போர்ட்). இந்த விஷயத்தில் பண்பாட்டுவாதத்தால் ஒரு பயனும் இல்லை, அதைவிட  ஊர்ப்பெருமைவாதம், குறுங்குழுவாதம் ஓரளவு எடுபடும் என்று தோன்றுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சைவ, வைணவ மதங்கள் மூலமும், கலைகள், இலக்கியம் மூலமும் ஒன்று திரண்டு  வந்திருக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றில் நல்ல முன்னேற்றம் தான்!

மொத்தத்தில் இத்தகைய விஷயங்கள் ஒரு பெரும் நோயின் அறிகுறிகள். நோய் முதல் நாடி அதைத் தீர்க்க வேண்டும்.

*********

eknath-ranadeபாறை மேல் வள்ளுவர் வந்த வரலாறு எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.  1960களில் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவின் போது, கடும் கிறிஸ்தவ எதிர்ப்பையும் முட்டுக்கட்டைகளையும் மீறி, நாடு தழுவிய மக்கள் சக்தியின் துணை கொண்டு, கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீபாதப் பாறை மீது விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுந்தது.  அதனை எழுப்ப அயராது உழைத்தவர் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரும், விவேகானந்த கேந்திரத்தை நிறுவியருமான ஏகநாத் ரானடே.  உடனடியாக, அதற்குப் பக்கத்தில் இருந்த பாறைக்கு  இரவோடிரவாக ஒரு புது மகத்துவம் முளைத்தது – புனித சேவியர் (அல்லது புனித தாமஸ்??,  யாரோ ஒருவர்..) முதன்முதலில் வந்த போது அங்கு தான் கால் வைத்தாராம்!  மளமளவென்று  சிலுவையை நாட்ட ஏற்பாடுகள் நடந்தன.

பார்த்தார் ரானடேஜி.  பாறையின் ஒரு சிறிய மாடலை செய்து, அதில் ஒரு சின்ன திருவள்ளுவர் சிலையை வைத்து அரசுக்கு அனுப்பினார். அங்கு தெய்வப் புலவரின்  நினைவு மண்டபம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் முன்வைத்தார். அரசு ஏற்றுக் கொண்டது. எம்.ஜி.ஆர் காலத்திலேயே திட்டம் போடப் பட்டது.

தமிழனின் பாறையைத்  தாமஸ் அபகரிக்காமல் காத்தது ஒன்றுபட்ட இந்து உணர்வு தான்.  அதே உணர்வு தான் நமது பண்பாட்டையும் பாதகர்கள் ஒழித்து விடாமல் காக்கும் அருமருந்து என்பதை உணர்வோம்.

நமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே.ராமானுஜன் தனது ஒரு நூலில் குறிப்பிடும் ஒரு சம்பவம். கர்நாடகத்தில் பல பகுதிகளிலும் நாட்டார் மரபுகளில் வாய்மொழியாகவே புழங்கும் ராமாயணக் கதைகளை அவர் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு கதையில் இப்படி ஒரு பிரசங்கம். ராமன் வனவாசம் ஏற்றுக்கொண்டு காட்டுக்குக் கிளம்பும் நேரம்; சீதை தானும் வருவேன் என்று அடம் பிடிக்கிறாள். காட்டில் என்னவெல்லாம் கஷ்டங்கள் உண்டு என்று எடுத்துச் சொல்லி ராமன் அவளைத் தடுக்க முயல்கிறான்.

”கரும்பு முறித்தாற் போல சொல்லல் ஆச்சுதோ – ஒரு
காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ”

என்று அருணாசலக் கவிராயர் பாட்டில் வருவது போல, சீதை அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டும் தன் பேச்சிலேயே நிற்கிறாள். ராமன் அவளுக்கு மேலும் மேலும் எடுத்துச் சொல்கிறான். அப்போது சீதை இறுதியாக “எனக்குத் தெரிந்த எல்லா ராமாயணத்திலும், ராமனோடு கூடவே சீதையும் காட்டுக்குப் போவாள். எனவே, எப்படி நீங்கள் என்னைத் தடுக்க முடியும்?”  என்று கேட்கிறாளாம்!

நமது பண்பாட்டில், நெடுங்காலம் முதலே ராமாயணம் என்கிற மாபெரும் காவியம் இங்ஙனம் தனக்குத் தானே ஆதாரமாகும் தன்மை (intertextuality) கொண்டிருக்கிறது  என்று ராமானுஜன் விளக்கிச் செல்கிறார்.

*  * * * *

valmiki_smஅன்பில் கட்டுண்ட அன்றில் பறவைகளின் துயரத்தைக் கண்டு மனமுருகிய வால்மீகி என்கிற மகரிஷியின், மகா கவிஞனின் வாக்கிலிருந்து மானிட குலத்தின் ஆதிகாவியம் நம் மண்ணில் உதித்தது.  பின்னர் அந்த தெய்வீகக் கவிதை நம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், பல்வேறு மகா கவிகளாலும், மக்களாலும் பல்வேறு விதங்களில் மீண்டும் மீண்டும் பாடப் பட்டுள்ளது.

”இந்தியாவில் ஏராளமான வேறுபட்ட மொழிகள் பேசப் படுகின்றன. ஆனால் எல்லாருக்கும் புரியக் கூடிய இரண்டு மொழிகள் உண்டு – அவை ராமாயணமும், மகாபாரதமும் ஆகும்” என்று கன்னட இலக்கிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி ஒரு கட்டுரையில் சொல்வார். எவ்வளவு உண்மையான விஷயம்!  கவிச்சக்கரவர்த்தி கம்பன்  தமிழ் மொழியில் தனது  மகோன்னத பேரிலக்கியமான கம்பராமாயணத்தை இயற்றினான், ஆனால் அதற்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் ராமகாதை வேரூன்றியிருந்தது. பெரும்பாலான இந்தியமொழிகளின் இலக்கிய வரலாறு என்பதே அம்மொழிகளில் எழுதப் பட்ட ராமாயண நூலில் தான் தொடங்குகிறது. மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனும், அஸ்ஸாமிய மொழியில் மாதவ கந்தாலியும், வங்க மொழியில் கிருத்திவாசரும் எழுதிய ராமாயண காவியங்களும்,  தெலுங்கின் மொல்ல ராமாயணம், கன்னட தொரவே ராமாயணம் ஆகியவையும் இவ்வகையிலானவை.  பண்டிதர்களின் சம்ஸ்கிருத மொழியை விடுத்து, பொதுமக்களின் “அவதீ” மொழியில் பக்திரசம் ததும்பும் ராமசரிதமானஸ் என்ற காவியத்தை துளசிதாசர் எழுதினார்; அதற்குப் பின்னர் தான் இந்தப் பேச்சுமொழி வளர்ச்சி பெற்று, இன்று நாம் கச்சிதமான வடிவில் காணும் ஹிந்தி மொழியாயிற்று.

கம்பராமாயணத்தின்  பாயிரப் பாடல் ஒன்று மொழிகளை இணைக்கும் இராமகாதையின் இந்தப் பாங்கினை அழகாகக் கூறுகிறது –

வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை – சம்ஸ்கிருதம், தென்கலை – தமிழ், வடுகு – தெலுங்கு, பாடை – பாஷை, அடைவுடன் – பக்தியுடன்)

இந்திய தேசிய உருவாக்கத்தில் ராமாயணத்தின் பங்கு மகத்தானது. அயோத்தியையும், ராமேஸ்வரத்தையும், இலங்கையையும், கங்கையையும், கோதாவரியையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் சரடு ராமாயணத்தில் உள்ளது.  இந்தியப் பண்பாட்டின் அடிநாதமான குரல் என்று சொல்லத் தக்க ஒன்று இருக்குமானால் அது ராமாயணம் தான்.

இன்றைய இந்தியாவிற்கு வெளியே, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா என்று ஆசியக் கண்டம் முழுவதும் ராமகாதை பரவியுள்ளது. ராமகாதை பரவிய ஒவ்வொரு பகுதியிலும்  வாழும் கலாசாரத்தின் குறியீடாகவும், எண்ணற்ற பழம்பெரும் கலை வடிவங்களின் அங்கமாகவும் உள்ளது. அது மட்டுமல்ல, வாழ்க்கை நெறிகளை உணர்த்தும் அற நூலாகவும், வழிபாட்டுக்குரிய புனித நூலாகவும் உள்ளது. நூற்றாண்டுகளாக ஆபிரகாமிய மதங்கள் இந்தப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த போதிலும், இந்து, பௌத்த மத அடையாளங்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் ஒரேயடியாக மறைந்து விட்ட போதும், இன்னும் ராமாயணம் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பது சிலிர்ப்பூட்டும் விஷயம்!

பார்க்க: ஏழ்கடல் சூழ் தீவுகளில் இராமன் புகழ்!

*  * * * *

சென்ற நூற்றாண்டின் இந்திய தேசிய மறுமலர்ச்சியின் நாயகர்கள் ராமகாதையையும், அதன் நாயகர்களையும் தேசியப் பெருமிதத்தின் குறியீடுகளாகவே கண்டனர்.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
ஆரியராணியின் வில்.

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்?-எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்

என்று மகாகவி பாரதி முழங்கினார்.

சுவாமி விவேகானந்தர் சென்னையில் நிகழ்த்திய இந்தியப் பெரியோர்கள் (The Sages of India) என்ற உத்வேகமூட்டும் உரையில் கூறுகிறார் –

sita_agnipariksha”ராமன் முற்காலத்து வீரம் நிறைந்த மக்களுக்கு லட்சியமாய், உண்மைக்கும் ஒழுக்கத்திற்கும் உறைவிடமாய், ஒரு லட்சியமான புத்திரனாயும், கணவனாயும், அரசனாயும் திகழ்வதை நாம் ராமாயணத்தில் காண்கிறோம். மிகத் தெளிவாகவும், சுத்தமாகவும், அழகாகவும், எளிமையாகவும் உள்ள மொழியில் ராமனுடைய சரித்திரம் அந்த மகாகாவியத்தில் எழுதப் பட்டிருக்கிறது. சீதையைப் பற்றி என்ன சொல்வது! சீதை போன்ற மற்றொரு பெண்மணியை இதுவரை தோன்றியிருக்கும் உலக இலக்கியங்கள் ஒன்றிலும் காணமுடியாது. இனிமேலும் காண்பதரிது. சீதை ஒப்பற்றவள். இதுவரை பல ராமர்கள் தோன்றியிருக்கலாம்; ஆனால் ஒரு சீதைக்குமேல் உலகில் தோன்றியதில்லை. அவளே இந்திய மாதர்களின் லட்சியமாய் விளங்குகிறாள். இந்திய மாதர்களிடம் இருக்கும் நற்குணங்கள் அனைத்தும் அவளிடமிருந்தே பிறந்திருக்கின்றன என்று தோன்றுகிறது.  இந்தப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா முழுவதிலும் உள்ள ஆண்,பெண்,குழந்தைகளுடைய வழிபாட்டையும் பெற்று அவள் வாழ்ந்து வந்திருக்கிறாள். அவள தூய்மையை விடத் தூய்மையானவள். அவளே பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் இருப்பிடம். அவள் கற்புக்கு அணிகலமாய், எல்லாக் கஷ்டங்களையும் சலிப்பின்றிச் சகித்தாள். இத்தகைய அவள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் தெய்வமாய், நமது தேசீய லட்சியமாய் எப்போதும் இருந்து வருவாள்..

நமது புராணங்கள், வேதங்கள், சம்ஸ்கிருத பாஷை முதலிய அனைத்தும் ம்றையலாம்; ஆனால் ஐந்து இந்துக்கள் இருந்தாலும் சீதையின் சரித்திரம் மறையாமலிருக்கும். சீதை நமது லட்சியமாய் நமது ரத்தத்தில் கலந்திருக்கிறாள்.”

தனது இந்திய உரைகளிலும் சரி, மேற்கத்திய உரைகளிலும் சரி சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவங்களையும், ராஜயோகத்தையும் மட்டும் பேசவில்லை. ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவை அளிக்கும் கலாசார விழுமியங்கள் பற்றியும் தவறாமல் பேசினார். Story of Ramayana என்ற தனது உரை ஒன்றில், ராமாயணக் கதை முழுவதையும் தனது மேற்கத்திய சீடர்களுக்குப் புரியும் வகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சுவாமிஜி கூறியிருக்கிறார்.  இன்றைய நவீன ஆன்மிக குருமார்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டிய, நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் இது.

மகாத்மா காந்தி துளசிதாசரின் ராமசரிதமானஸ் என்ற நூலை ஈடு இணையற்ற பக்தி நூலாகக் கருதினார்.  ராம நாமத்தை தனது தனிப்பட்ட வாழ்வில் தீமைகளிலிருந்து காக்கும் கவசமாகவும், தெய்வ வழிபாட்டுக்குரிய உன்னத மகா மந்திரமாகவும் கொண்டார். ராமசரிதமானசில் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று “ராம ரதம்” (Rama Rath). ராவணனிடம்  மகா ரதம் இருக்கிறது, உங்களிடம் இல்லையே என்று விபீஷணன் கேட்கிறான். அதற்கு ராமன் சொல்கிறான் –

கேளாய், நண்பனே
எப்பேர்ப் பட்ட இடர்களிலும் வெற்றி தரும் தேர் என்னுடையது.
வீரமும், துணிவும் அதன் சக்கரங்கள்
சத்தியமும், சீலமுமே அதன் திடமான வெற்றிக் கொடி.
வலிமை, விவேகம், புலனடக்கம், தன்னலமின்மை  என்று நான்கு குதிரைகள்.
பொறுமை, கருணை, சமநிலை என்பவை அவற்றைப் பிணைக்கும் கயிறுகள்.
தெய்வ அருள் அதன் சாரதி.
பேராசையின்மை, ஈகை, நல்லறிவு, தளராத மனம் ஆகியவை அத்தேரின் கண் உள்ள ஆயுதங்கள்.
இந்தத் தர்மமயமான தேரில் ஏறிச் சென்று
சம்சாரம் என்ற பெரும்பகையையே ஒருவன் வென்று விட முடியும்.
அப்படியிருக்க, அசுரர்களுடன் போரிடுவதில் என்ன கவலை?

ராமாயணம் லட்சியமாகக் கூறும் சமூக, அரசியல் சித்தாந்தங்களையே காந்திஜி ராம ராஜ்யம் என்ற கருத்தாக்கமாக முன்வைத்தார்.

இங்ஙனம், இந்திய தேசிய எழுச்சியில், ராமகாதையின் பங்கு மகத்தானது. 1980களில் தொடங்கிய ராமஜன்ம பூமி இயக்கம் தான் நாடு தழுவிய இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. நமது பண்பாட்டைப் பற்றிய புதிய பிரக்ஞையை நமக்கு அளித்தது.

*  * * * *

காலனிய ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மிஷநரிகளும், இந்தியவியலாளர்கள் என்ற பெயரில் உலவிய சில திரைமறைவு-மிஷநரிகளும் சேர்ந்து இந்துமதம், இந்து தத்துவங்கள், மற்றும் கலாசாரம் பற்றிய திரிபுகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டு உருவாக்கினர். இதற்கு ராமாயணமும் தப்பவில்லை. ஆனால், நமது பண்பாட்டுப் பொக்கிஷமான ராமாயணம் பற்றிய எதிர்மறைப் பிரசாரங்கள் இன்னும் பொதுத்தளத்தில் தொடர்கின்றன. திராவிட இயக்கம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த நாட்களில் ஆரிய திராவிட இனவாதத்தின் அடிப்படையில், ராமாயணத்திற்கு எதிரான அபத்தப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப் பட்டன. உண்மையான தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களால் அப்போதே அவை கடுமையாக நிராகரிக்கப் பட்டு கண்டனம் செய்யப் பட்டன.  சமீபத்தில் ராமசேது விவகாரத்தின் போது கூட சிறிய அளவில் அவை தலைதூக்கின. ஆனால் தமிழகம் அந்த இருண்ட காலங்களில் இருந்து மீண்டெழுந்து விட்டதால் இது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

ராமாயணத்திற்குப் பல வடிவங்கள் உள்ளன; இவற்றில் பலவாறு மாறுபாடுகள் உள்ளன. எனவே ராமாயணத்தை வைத்து மக்களை இணைப்பது இந்துத்துவ சதி என்று ஒரு அறிவுஜீவித் தரப்பு தொடர்ந்து ஓலமிட்டு வருகிறது.  (ஒட்டுமொத்த இந்துமதம் பற்றியே அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்).  ஆனால் என்ன செய்வது? இந்த ”சதி” இன்று நேற்றல்ல, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது :))

வால்மீகி ராமாயணம் எழுதப் படுவதற்கு முன்பே இந்த மாபெரும் காதை உருவாகி வந்திருக்க வேண்டும், அதன் மையக் கரு வரலாற்று நிகழ்வுகளிலிருந்தே பெறப் பட்டிருக்க வேண்டும் என்று பெரும்பாலான ஆய்வாளர்களும் இப்போது ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் வால்மீகி தான் முதன் முதலில் ஒரு பிரதியாக (text) இதனை உருவாக்கியவர். அவருக்குப் பின்வந்த இந்து மரபைச் சேர்ந்த அனைத்து ராமாயணங்களிலும்  மையக் கருத்துக்களில் மாறுபாடுகள் இல்லை, சிற்சில சம்பவங்களும், சித்தரிப்புகளுமே மாறுபடுகின்றன.  ஜைன, பௌத்த ராமாயணங்கள்  ராமகாதையின் பிரசித்தியைப் பயன்படுத்தி தங்கள் சமயக் கருத்துக்களைப் பரப்புவதற்காக அந்தச் சமயத்தினர் உருவாக்கியவை – எனவே அவற்றில் உள்ள திரிபுகளையும், கதை மாற்றங்களையும் வைத்து  மையநீரோட்டமான  ராமகாதை மரபினை மதிப்பீடு செய்வது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று.

ravivarma_rama_sita_lakshmana_smallமேலும், ராமாயணத்தின் பல வடிவங்கள் இந்துமதத்தின், இந்து கலாசாரத்தின் பன்முகத் தன்மைக்கு மிகப் பெரிய வாழும் உதாரணங்களாக இன்றுவரை நின்று கொண்டிருக்கின்றன.  அவற்றில் எவையும் அழிக்கப் படவில்லை, அதனாலேயே அவை நமக்கு இன்று கிடைத்துள்ளன.  மாறாக, கிறிஸ்தவ மத அதிகார பீடம்,  ஒற்றைப் படையான மதத்தையும், மையப் படுத்தப் பட்ட மத அதிகாரத்தையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், 300 ஆண்டுகளுக்கும் மேலாக,  வன்முறை மூலமும்,  அடக்குமுறை மூலமும்  தொடக்க கட்ட விவிலியத்தின் பல்வேறு பிரதிகளையும், வேறு பல கிறிஸ்தவ ஆவணங்களையும் மறைத்தும், ஒழித்தும் இருப்பது   தெளிவாக வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் ஆதரிப்பதாகக் கூறும் அறிவுஜீவிகள், ஏனோ இந்த விஷயத்தைக் கவனிக்க மறந்து விடுகிறார்கள்!

வால்மீகி ராமாயணம் என்பதே ஒற்றைக் குரலாக ஒலிக்கும் நூல் அல்ல. ராமனை தர்மச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வாலி வதம் பற்றிய பிரசங்கத்தையும், அதில் வரும் வாத விவாதங்களையும் முனிவர் தவறாமல் பதிவு செய்கிறார், வெள்ளையடித்து மறைத்து விடவில்லை. தர்மத்தையும், வேதநெறியையும் வலியுறுத்தும் காவியத்தில்  ஜாபாலி முனிவர் ராமனுக்கு அளிக்கும் உலகாயத உபதேசமும் உள்ளது – தந்தை சொல் காப்பாற்றுதல் போன்ற விஷயத்தையெல்லாம் பற்றி ஏன் கவலைப் படுகிறாய், அயோத்திக்குத் திரும்பிப் போய் ஆட்சியை ஏற்றுக் கொள், வாழ்க்கையை அனுபவி என்று pragmatism பேசுகிறார் அந்த முனிவர்.  ராமாயணத்தை ஆழ்ந்து கற்கும் எவருக்கும் வால்மீகி சத்தியத்தைத் தேடும் ஒரு கவி-ரிஷி என்ற தன் இயல்பு மாறாமல், தர்மத்தின் பல பரிமாணங்களும் வெளிப்படுமாறு இந்தக் காவியத்தை ஆக்கி அளித்தார் என்பது புலனாகும்.

*  * * * *

ராமயணம் தன்னளவில் ஒரு மகத்தான தரிசனம்.  மகாபாரதம் பேசுவது போன்ற தர்மக் குழப்பங்களும், சிக்கல்களும், தத்துவ விவாதங்களும் ஆதி காவியமான ராமாயணத்தில் இல்லை. ஆனால் வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை அது தனக்கே உரிய அழகியல் கண்ணோட்டத்துடன் கம்பீரமாகக் கூறிச் செல்கிறது. கம்பனைப் பற்றி பாரதி கூறுகையில்,

“எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்”

என்கிறான். இதில் எல்லையொன்றின்மை என்று அவன் சொன்னது எதை?  வாழ்க்கையை, அதன் வர்ண ஜாலங்களை என்று தோன்றுகிறது. தியாகத்திற்கு எல்லை உண்டா? சகோதர பாசத்திற்கு எல்லை உண்டா? பக்திக்கு எல்லை உண்டா? ஆசைக்குத் தான் எல்லை உண்டா?

லட்சுமணனும், பரதனும், கைகேயியும், குகனும், வாலியும், ஜடாயுவும், லங்கா தகனமும், அக்கினிப் பிரவேசமும், மாயமானும் வாழ்க்கையின் சில பரிமாணங்களின் ஆழ்ந்த படிமங்களாகவே நம் கலாசார வெளியில் பதிந்துள்ளனர். இந்த மண்ணின் பண்பாட்டுடன் பரிச்சயம் கொண்ட மனம் அவற்றை மிக சகஜமாகவே உணர முடியும்.  இதைத் தான் பாரதி கூறியிருக்கிறானோ?

யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய:  ஸரிதஸ்ச மஹீதலே
தாவத் ராமாயண கதா லோகேஷு ப்ரசரிஷ்யதி

இப்புவியில் மலைகள் மண்ணில் நிற்கும் வரை, நதிகள் ஓடும்வரை, ராம காதை உலகில் நிற்கும்.

(வால்மீகி ராமாயணம் 1.2.36)

கம்பன் கண்ட சிவராம தரிசனம்

அன்று மிதிலையின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக ஆகப் போகிறது.

முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்.

பொழுது புலரத் தொடங்குகிறது. அதைக் கம்பன் இப்படி விவரிக்கிறான் –

ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம்
மயல் உழந்து, தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக யா-
னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான்.
(மிதிலைக் காட்சிப் படலம், 150)

[ததையும் மலர்த் தார் அண்ணல் – மலர்கள் அடர்ந்த மாலையணிந்த இராமன்; மயல் உழந்து – மயங்கி; தளரும் ஏல்வை – தளரும் காலத்தில்; செய்ய வெய்யோன் – இளஞ்சிவப்பாக எழும் சூரியன்; புகர்முக யானை – புள்ளிகளுடைய முகத்தயுடைய யானை; உரிவை – உரித்த தோல்; நுதல் – நெற்றி]

இருளைக் கிழித்துக் கொண்டு உதயகிரி மீது இளஞ்சூரியன் எழுகிறான். அது எப்படியிருக்கிறது? புதையிருள் வடிவம் கொண்ட கரிய யானையின் (கஜாசுரனின்) தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்ட மாமலையாகிய மகாதேவனின் நெற்றிக் கண் திறப்பது போல் இருக்கிறதாம்!

சுடரோன் எழுந்து விட்டான். அவனது கதிர்கள் நாற்புறமும் பரவுகின்றன. அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர, வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(மிதிலைக் காட்சிப் படலம், 153).

[மறை – வேதம்; கின்னரர்கள் – குதிரை முகமும் மனித உடலும் கொண்டு பறந்து கொண்டே இசை பாடும் தேவ வர்க்கத்தினர்; வேலை – கடல்; மண்ணும் மணி முழவு – மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட அழகிய மிருதங்கம்; வாள் இரவி – ஒளி பொருந்திய சூரியன்; கண்ணுதல் வானவன் – நெற்றிக் கண்ணுடைய சிவபிரான்]

ravivarma_rama_breaking_bowதேவரும், முனிவரும், மனிதரும் புகழ்ந்தேத்த, ஆர்ப்பரிக்கும் அலைகடலே மிருதங்கமாக ஒலிக்க, அந்த வான் அரங்கில் சிவ நடனம் நிகழ்கிறது. ஆடும் கூத்தனின் செஞ்சடை விரிவது போன்று கதிர்கள் விரிந்து உலகனைத்தையும் தீண்டுகின்றன.

இப்படி, சீதா கல்யாணம் நடக்கும் அந்த சீரிய நாளின் உதயத்தை சிவனது திருக்காட்சியாகக் கம்பன் வர்ணித்திருக்கிறான். சிவதனுசை முறிக்கப் போகும் மாவீரனின் பெருமைக்கு அந்த நாளின் உதயமே கட்டியம் கூறுகிறது என்பதைக் குறிக்கத் தானோ?

சபை கூடிவிட்டது. அரசகுமாரர்களை விசுவாமித்திர முனிவர் ஜனக மகாராஜனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ”குழந்தாய் ராமா, இந்த வில்லைப் பாரேன்” (”வத்ஸ ராம, தனு: பஷ்ய” – வால்மீகி) என்று குறிப்புணர்த்துகிறார் முனிவர். முனிவரின் நினைப்பைப் புரிந்து கொண்ட இராமன் எழுகிறான். அதைக் கம்பன் பாடும் அழகு தான் என்னே!

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
“அழிந்தது வில்” என வானவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்;
(கார்முகப் படலம், 26)

[கொழுங்கனல் – கொழுந்து விட்டெரியும் தீ; முப்பகை வென்றார் – காமம், கோபம், மயக்கம் முதலாகிய மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள்]

வேள்வியின் முடிவில் பூர்ணாகுதியாக சொரிந்த நெய் முழுதும் வழிய, வேள்வித் தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு விண்ணை நோக்கி எழுவது போல, இராமன் எழுந்தானாம்! கார்மேக வண்ணனைத் தீவண்ணனாக இங்கே கவி சித்தரிக்கிறார். (”செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே” – அப்பர் தேவாரம்)

இந்த உவமை மிகவும் அழகானது. வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி என்ற சொல் அதிலிருந்து வருகிறது. தெய்வீக சங்கல்பமே இச்சையாக மாறி வேள்வியாக உருக்கொள்கிறது. வேள்வியின் விளைவான பலன் நெருங்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் தீ எழுவது போன்று, சீதா ராமர் திருமணம் நடக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பத்தின் உருவாக ராமன் வில்லுடைக்க எழுகிறான்.

சூரிய, சந்திரரை திருமாலின் கண்களாகக் கூறுவது மரபு. ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்பது திருப்பாவை. அதே போன்று சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றையும் சிவனது முக்கண்களாகக் கூறுவார்கள். மூன்றாவதாகிய நெற்றிக் கண் அக்னி வடிவானது. நாளின் உதயத்திலேயே ராமனைத் தீண்டிய செங்கதிரின் உள்ளுறை பொருளான அந்த அக்னி வடிவமாக இங்கே ராமன் வில்லுடைக்க எழுகிறான் என்றும் கொள்ள இடமிருக்கிறது. ”பொறுமையில் பூமிக்கு நிகரானவன், அறத்திற்காகக் கோபமுறும் தருணத்திலோ காலாக்னிக்கு நிகரானவன்” (காலாக்னி ஸத்ருச: க்ரோதே, க்ஷமயா ப்ருத்வீ ஸம:) என்றல்லவோ வால்மீகி முனிவர் ராமனின் குணாதிசயங்களைப் பட்டியலிடுவார்!

’கங்கை வார் சடை’

ravivarma_gangadharaஅயோத்தியா காண்டத்தில் மற்றொரு காட்சி.

நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை. கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது –

வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
(கங்கைப் படலம், 18)

[வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்; சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]

தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவி. வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கிறது.

காசி ராமேஸ்வரம்:

வால்மீகி ராமாயணத்தில் சேதுக் கரையில் ஸ்ரீராமன் சிவபூஜை செய்ததாக வரும் பிரசங்கம் இல்லை. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ளது.

இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பும்போது சீதைக்கு சேதுவைக் காட்டி அதன் மகிமையை விரிவாக இராமன் விளக்குகிறான். சேதுக் கரையில் இறங்கி திருவணையை வாய் கீறி, அந்த அணைக்குத் தெய்வங்களைக் காவலாக நிறுத்துகிறான். அகத்தியர் அப்போது அங்கு வந்து ராமனைச் சந்தித்து, சிவபூஜை செய்யுமாறு கூறுகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் கொண்டுவர அனுமன் போய் வரத் தாமதமாகிறது. அப்போது –

காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே
‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.

[ஆலம் – ஆலகால விஷம்; ஞாலம் உண்டவர் – பிரளய காலத்தில் உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் மகாவிஷ்ணுவாகிய ராமன்]

’முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண்மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்

[முகுத்தம் – முகூர்த்தம்]

ஒத்தபூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப.

(யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 34-36. கம்பன் கழகப் பதிப்பு, பக்-1678)

கம்பன் வாழ்ந்த காலகட்ட்த்தில் (11-ஆம் நூற்றாண்டு) இராமேஸ்வரம் பற்றிய இந்தப் புராண ஐதிகம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களிலேயே இராமேஸ்வரம் குறிப்பிடப் படுகிறது.

தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவிய வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை..

[வவ்விய – கவர்ந்து சென்ற; வாட்டி – அழித்து; வெஞ்சிலை – வெம்மை தரும் வில்]

கம்பனுக்கு முன்பே ஸ்ரீராமனை அண்ணல் என்று அழைத்திருக்கிறார் சம்பந்தர்!

ramalinga_pujaதமிழகம் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் மைசூர்ப் பகுதியில் காவிரி சங்கமத்தில் ராமநாதபுரா என்ற ஊரில் இதே ஐதிகத்துடன் கூடிய பழமையான கோயில் உள்ளது. ஆந்திராவில் வாரங்கலுக்கு வடக்கே “ராமப்பா குடி” என்றே ஒரு ஊரும், அதில் காகதீயர் காலத்திய ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலும் உள்ளது. மிக அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஒரு மாபெரும் சிற்ப அற்புதம் இந்தக் கோயில். எனவே ராமேஸ்வரம் பற்றிய ஐதிகமும் ஒரு தொன்மை மரபு தான் என்பதில் ஐயமில்லை.

வால்மீகியின் ராமன் “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று தன்னை மனிதனாகவே கூறிக் கொள்பவன். அந்த இலக்கணத்தின் படியே பெரியோர்களையும், தேவதைகளையும், முனிவர்களையும் அவன் வணங்கிச் செல்வதாக நெடுகிலும் வால்மீகி முனிவர் சொல்லிச் செல்கிறார். உலக அன்னையாகிய சீதாதேவி படகில் கங்கை நதியைக் கடக்கையில் (இன்றைக்கும் இந்துத் தாய்மார்கள் செய்வது போன்று) தங்கள் குடும்பத்தையும், குலத்தையும் காக்கவேண்டும் என்று கங்கையையும், யமுனையையும் வேண்டிக் கொள்கிறாள், நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் பிரார்த்தனை செய்கிறாள்! கானகத்தில் புனித விருட்சங்களை ராமரும், சீதையும் வணங்குவதாகவும் வருகிறது.

இதனால் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்ற கருத்து ஒரு மட்டுக் குறைகிறது என்று சில சமயவாதிகள் எண்ணினால் அது அறியாமையும், ஸ்ரீராமனின் அவதார ரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுமே ஆகும். போரில் இறந்த வானரர்கள் அனைவரையும் உயிர்ப்பித்த ராமன் ஜடாயு இறந்தபோது கதறி அழுகிறான். அதற்கு எப்படி தர்க்கபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியும்? இவையனைத்தும் அவனது அலகிலா விளையாட்டு, “நடையின் நின்றுயர் நாயகனின்” தெய்வலீலையில் ஒரு அங்கம் என்று தான் கொள்ளவேண்டும். அவனது சிவபூஜையும் அவ்வாறே என்றே கருதிக் கம்பன் தன் காவியத்தில் அதனைச் சேர்த்திருக்க வேண்டும்.

ravivarma_rama_sita_lakshmana_smallஅதோடு, பிரம்மஹத்தி (அல்லது வீரஹத்தி) தோஷம் அகல்வதற்காக ராமன் சிவபூஜை செய்தான் என்றும் சொல்லப் படுகிறது. அதர்மத்தை அழித்தொழித்த ஸ்ரீராமனின் செய்கை எப்படி பாவமாகவும், தோஷமாகவும் ஆகக் கூடும்? ராமாயணத்தின் மையத் தத்துவத்திற்கே முரணாக அல்லவா இருக்கிறது இது! இந்த ஐதிகம் சாதிய, ஜோதிட, பரிகார வெறியர்களால் ஒரு கட்ட்த்தில் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தை மட்டுமல்ல, இதிகாச புராணங்களின் எல்லா நிகழ்வுகளையுமே நாள்கள் கோள்களின் பலன்களாகவும், விதிப் பயன்களாகவுமே சித்தரிக்கும் ஒருவித இயந்திரத் தனத்தின் விளைவு அது. (உதாரணமாக: ஏன் ராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது என்றால் அவன் ஜாதகத்தில் அப்படி இருந்தது, சீதையின் ஜாதகமும் அப்படி இருந்த்து; வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்குக் குறித்த நாள் சரியில்லை.. இப்படியாக அது போய்க் கொண்டிருக்கும்). இத்தகைய ஒரு கண்ணோட்டம் ஜோதிடப் பிரியர்களான ஒரு சிறு கூட்டத்தாருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் இதிகாச, புராண நிகழ்வுகளில் அற்புதமாக இழையோடும் ரசானுபவத்தையும், அவற்றின் இயல்புத் தன்மையையும், பல சமயங்களில் அவற்றின் தெய்வீக, தத்துவ பரிமாணங்களையுமே குலைப்பதாக இருக்கிறது. எனவே இந்த “தோஷ நிவாரண” ஐதிகத்தை நிராகரித்து, தெய்வலீலையின் ஒரு அங்கமாக மட்டுமே ராமனின் சிவபூஜையைக் கருதவேண்டும்.

ராமேஸ்வர: என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சமத்காரமாக மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம். ராமனாகிய ஈஸ்வரன் (ராம: ஈஸ்வரஸ்ச), ராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவன் (ராமஸ்ய ஈஸ்வர: ), ராமனைத் தனக்கு ஈஸ்வரனாகக் கொண்ட சிவன் (ராம: யஸ்ய ஈஸ்வர: ) !

ராமேஸ்வரத்தின் ஐதிகத்திற்கு இணையாக, காசியில் சிவன் எப்போதும் ராம நாம தியானத்தில் இருக்கிறார் என்றும், இறக்கும் உயிர்களின் காதில் தாரக மந்திரமான ராமநாமத்தை உபதேசித்து அவைகளைக் கரையேற்றுகிறார் என்றும் ஒரு தொன்மை மரபு உள்ளது.

அதையும் கம்பன் சொல்லியிருக்கிறான்.

வாலிவதம் நிகழ்ந்தவுடன், ராமன் வாலிக்கு முன்னே தோன்றுகிறான். நீண்ட விவாத்த்திற்குப் பின், வாலி ஸ்ரீராமனது அவதார ரகசியத்தை உணர்கிறான். தன் உயிர் போகும் தறுவாயில் பலவாறு பரம்பொருளான ராமனைத் துதிக்கிறான். இந்தத் துதிப் பாடல்கள் அனைத்துமே மிக அழகானவை.

ஏவுகூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ; முதல்வன் நீ; முற்றும் நீ; மற்றும் நீ;
பாவம் நீ; தருமம் நீ; பகையும் நீ; உறவும் நீ;
(வாலிவதைப் படலம், 129)

[ஏவுகூர் வாளியால் – விரைந்துசெல்லக் கூடிய கூரிய அம்பால், வேலைவாய் – வேளையில்]

மாவலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர்வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப்பொருளை யான்
தேவ நிற்கண்ட எற்கு அரிது எனோ தேரினே!
(வாலி வதைப் படலம், 128-1, கம்பன் கழகப் பதிப்பு பக்-744).

[மாவலச் சூலியார் – பெரிய வலியுமையுடைய சூலத்தை ஏந்தியவரான சிவபிரான்; வாழ்த்துநர்க்கு – தம்மைப் போற்றுபவர்களுக்கு; ஓவலற்று உதவல் – குறைவில்லாமல் அருளுதல்; ஆவலிப்பு உடைமை – பெருமித உணர்வு கொண்டமை; தேவ – தேவனே; தேரினே – எண்ணிப் பார்க்கையில்; நிற்கண்ட எற்கு அரிது எனோ – அப்பேர்ப்பட்ட உன்னையே கண்ட எனக்கு கிடைத்தற்கரியது என்று இனி என்ன உள்ளது?]

சிவபிரான் தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவது ராம நாம மகிமையினாலேயே என்று இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.

வாலி ஒரு சிறந்த சிவபக்தன். இது கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவன் வாலி என்ற குறிப்பு தாரை புலம்பலில் வருகிறது (“அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய் உள் அன்பினால் …. வணங்காது இத்துணை வைக வல்லையோ?”). அத்தகைய வாலி, தன் இறுதிக் காலத்தில் ஸ்ரீராமதரிசனமும் மோட்சமும் கிடைத்த பாக்கியத்தை இப்பாடலில் வியந்து போற்றுகிறான். வாலியின் சிவ வழிபாட்டின் பலனாக, அவனுக்கு இறுதிக் காலத்தில் ராமபக்தி சித்தித்தது என்று இதன்மூலம் குறிப்புணர்த்தப் படுகிறது என்றும் கொள்ளலாம்.

அனுமன் அருள்நடம்:

கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு காட்சி.

பிரம்மசாரி உருவில் சென்று ராமலட்சுமணர்களை சந்தித்துப் பின்னர் அவர்களுக்குத் தனது உண்மையுருக் காட்டியதன் பின், அதனை அறிவிக்க சுக்கிரீவனிடம் ஓடோடி வருகிறான் அனுமன். ”சுக்ரீவா, நமது துன்பக் கடலைக் கடந்து விடுவோம், அளவற்ற வலிமையுடைய வாலியின் உயிரைக் கவர காலன் வந்துவிட்டான்” என்று அறிவிக்கிறான்!

மேலவன் திருமகற்கு உரைசெய்தான் – ‘விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்’ எனா
ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம் புரிகுவான்.
(நட்புக் கோட் படலம், 2)

[விரை செய் தார் வாலி – மலர்களால் செய்த மாலை அணிந்த வாலி; வலியினான் – வலிமையுடையவன்; உயிர் தெற – உயிரைக் கவர]

அப்படி அறிவித்த்தோடு, ராமனைச் சந்தித்த மகிழ்ச்சியில் நடனமும் ஆடுகிறானாம் அனுமன்! எத்தகைய நடனம்? “ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம்” என்கிறான் கம்பன்.

அனுமன் ராமலட்சுமணர்களை சந்திக்கும் கட்டத்தில் வரும் அற்புதமான பாடல்களிலேயே கம்பன் இந்த அருள்வடிவத்தை நமக்குக் கோடி காட்டி விடுகிறான். அனுமன் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை, ஆனால் அவனது சுருக்கமான முகமன் மற்றும் கேள்விகள் முடிந்ததுமே, ராமன் லஷ்மணனிடம் கூறுகிறான் –

ravivarma_hanumanஇல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்லார்தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?
(அனுமப் படலம், 18)

[இசைகள் கூர – புகழ்ச்சிகள் விளங்க; காட்சி – அறிவு; விரிஞ்சனோ – பிரமனோ; விடைவலானோ – ரிஷபவாகனன் ஆகிய சிவனோ]

லக்ஷ்மணா! இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? “வில்லார்தோள் இளையவீர” – இவ்வளவு பெரிய வில்லைக் கையில் வைத்திருக்கிறாய் எல்லாம் சரிதான், ஆனால் இது கூடப் புரியலையா உனக்கு?

பிறகு மேலும் விளக்கிச் சொல்லுகிறான் –

மாணி ஆம் படிவம் அன்று மற்றிவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ்வுலகுக்கு எல்லாம் என்னலாம்..

[மாணி – பிரமசாரி; படிவம் – உருவம்]

இது ஏதோ சாதாரணப் பிரமசாரி என்று நினைத்து விடாதே. உலகிற்கெல்லாம் ஆதாரமான பொருளின் வடிவம் தம்பி!

ராமனின் பரம பக்தனான அனுமன் சிவாம்சம், சிவஸ்வரூபம் என்றே ராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது, அவதார நோக்கத்திற்கு உதவ அனைத்து தெய்வங்களும் வெவ்வேறு உருவங்களில் அவதரிக்கின்றனர். (”அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின் என்றான்” – திருஅவதாரப் படலம், 25). அனுமன் வாயு மற்றும் சிவபிரான் ஆகிய இருவரது அம்சங்களும் ஒன்றிணைந்து அவதரிக்கிறார் –

வாயு ’மற்று எனது கூறு மாருதி’ எனலும், மற்றோர்
’காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம்’ என்றார்; புராரி ‘மற்று யானும் காற்றின்
சேய்’ எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ?
(திருஅவதாரப் படலம், 27)

[மற்கடங்கள் – குரங்குகள்; காசினி – உலகம்; புராரி – சிவபெருமான்; திசையுளோர் – தேவர்கள்; அவதி – எல்லை]

ஆஞ்சநேய அஷ்டோத்திரத்தில் “ருத்ர வீர்ய ஸமுத்பவ:” என்ற நாமம் உள்ளது. துளசிதாசர் எழுதிய ஹனுமான் சாலீஸா என்ற அனுமன் துதிப் பாடல் பாரத்த்தின் பல பகுதிகளிலும் பிரபலமானது. இதில் ஒரு பாடலில் “சங்கர ஸுவன பவானீ நந்தன” என்று துளசிதாசர் அனுமனை சிவனின் புதல்வனாகவே போற்றுகிறார். அவரது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண நூலிலும், “சங்கட மோசன்” என்னும் மற்றொரு துதிப் பாடலிலும் பல இடங்களில் அனுமனை சிவஸ்வரூபமாகப் போற்றும் வரிகள் உள்ளன. வடபாரதத்தில் எல்லா அனுமன் கோவிலிலும் சிவலிங்கம் உண்டு. எல்லா சிவன் கோவில்களிலும் அனுமன் சன்னிதியும் உண்டு! தென்னகத்திலும் எல்லா பழமையான சிவன் கோயில்களிலும் தூண்களில் அனுமார் திருவுருவம் இருக்கும்.

பல ராமாயண நூல்களிலும் தெளிவாகவே பேசப் படும் இந்தக் கருத்தை ஒருமுறை சொன்னபோது, ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு இது பெரும் எரிச்சலை உண்டுபண்ணியது. ஸ்ரீராமனின் பரமபக்தன் என்ற ஸ்தானத்தில் கூட இப்படி சிவனை ஏற்றுக் கொள்ளவேண்டி வருகிறதே என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அனுமன் சிவாம்சம் என்பதே இடைச் செருகல் என்று கூறத் தொடங்கினர்! அந்த அளவிற்கு இறுக்கமான சமயவாதம் போலும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பெரும்பாலான தெய்வ பக்தியுள்ள இந்துக்களுக்கு இத்தகைய சமயவாத பிரசினைகள் இல்லை என்பதே உண்மை.

சிவ-விஷ்ணு ஐக்கியம்:

kambar_stampகம்பனுக்கும் இத்தகைய பிரசினைகள் ஏதும் இருக்கவில்லை.

ஒரு மழைக்கால நாள். சோழவள நாட்டிலே, பசுமை அலையடிக்கும் நெல்வயல்கள் சூழ்ந்த ஒரு காவிரி வாய்க்கால் கரையில் உட்கார்ந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி. கடவுள் வாழ்த்து முடித்துத் தன் அமர காவியத்தை எழுத ஆரம்பித்திருக்கிறான். முதலில் பாடவேண்டியது கோசல நாட்டு வளம். காவிரிக் கரையில் அமர்ந்த கவிமனம் சரயு நதியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டது.

“… கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்” என்று நிறுத்தி வானத்தை நிமிர்ந்து பார்க்கிறான்.

காலையில் கண்ட வெண்மேகக் கூட்டங்கள் எல்லாம் கடலுக்குப் போய் மேய்ந்து விட்டுக் கருமேகமாகித் திரண்டு வந்து விட்டன. சில கணங்களில் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. இந்தக் வெண்மேக-கருமேக விளையாட்டைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நல்லவேளை அவனுக்கு ஆரிய-திராவிட இனவாதமோ, அல்லது கருப்புப் பணத்தை மறுபடி வெள்ளைப் பணமாக்குவது பற்றிய பொருளாதார நுட்பங்களோ மனதுக்கு வரவில்லை. கொடுத்து வைத்தவன் தெய்வீகக் கவிஞன். பாடுகிறான் –

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
(ஆற்றுப் படலம், 2)

அந்த வெண்மேகம் நீறு அணிந்த கடவுள். அது தலையில் “ஆறு அணிந்து” சென்று அலைகடலை முகந்து எடுத்து, கார்மேகக் கடவுளாகத் திரும்பி வருகிறது. செல்வத் திருமகளையே மார்பில் அணிந்த அந்தக் கார்மேகம், உலக உயிர்கள் சகல செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டி மழையாகப் பொழிகிறதாம்!

காவியத் தொடக்கத்திலேயே சிவனையும் திருமாலையும் இணைத்து ஹரி-ஹர வந்தனமாக இந்த அருமையான பாடலைச் செதுக்கிய கம்பனின் கவிதா விலாசத்தை என்னவென்று புகழ்வது!

இன்னொரு காட்சி.

சீதா தேவியைத் தேடுவதற்காக நாற்புறமும் சேனைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறான் சுக்ரீவன். தென்திசைக்கு அங்கதனையும், அனுமனையும் தலைவர்களாகக் கொண்ட சேனை புறப்பட்த் தயாராக நின்று கொண்டிருக்கிறது. அப்போது சேனைத் தலைவர்களுக்கு வழிகூறுவது போல அமைந்த பாடல்களில் பாரத பூமியின் பல்வேறு பிரதேசங்களின் சிறப்புக்களையும் பெருமிதத்துடன் எடுத்தோதி வருகிறான் சோழநாட்டுக் கவி.

கோதாவரி நதிக்கப்பால் கொங்கணத்தைக் கடந்தபின் வருவது அருந்ததி மலை. எவ்வளவு பெரிய மலை தெரியுமா?

’அரன் பெரியவன், அரி பெரியவன்’ என்று சண்டை போட்டுக் கொள்ளும் அறிவிலிகள் பரகதியைச் சென்று அடைவதற்கு எப்படிச் சாத்தியம் இல்லவே இல்லையோ, அது போன்றே யாராலும் சென்றடைய முடியாத மலை அது! வானத்தைத் தொடும் முகடுகள் கொண்ட அந்த மலையைத் தொழுது வணங்கி அப்பால் செல்லுங்கள் வானரர்களே!

“அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்”
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய்க் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால் ..
(நாடவிட்ட படலம், 24)

[அதிகன் – பெரியவன்; அடைவு – அடைதல்; பரிசே போல் – தன்மையதாக இருப்பது போல்; புகல் அரிய பண்பிற்று ஆம் – சென்றடைய முடியாத தன்மையை உடையது; சுரநதி – தேவகங்கை; வரன் – வரம்]

tulsidas_stampகம்பனைப் போன்றே, மகாபக்தரும் ஞானியுமான துளசிதாசரும் தமது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண காவியத்தில் சைவ-வைஷ்ணவ சமரசத்தை இன்னும் அழுத்தமாகப் பேசுகிறார்.
ஸ்ரீராமன் கூறுகிறான் –

”சிவத்ரோஹீ மம தாஸ கஹாவா
தே நர ஸபனேஹும் மோஹி ந பாவா”

என்னுடைய தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் எவனோ, அந்த மனிதன் கனவில் கூட என்னை வந்தடைய மாட்டான்.

”சங்கரப்ரிய மம த்ரோஹீ, சிவத்ரோஹீ மம தாஸ
தே நர கரஹி கல்ப பரி, கோர நரக மஹூ வாஸ”

சங்கரனின் அன்பன் என்ற பெயரில் என்னை துவேஷிப்பவன், என் தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் – இவர்கள் இருவருமே கல்பகாலம் முழுவதும் கோர நரகத்தில் வாசம் செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்.

கம்பன் ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடமான திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த தன் இராமவாதார காவியத்தை, சைவத்தின் தலைமைப் பதியான சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் முன்னிலையில் மீண்டும் அரங்கேற்றுகிறான். இரு சாராரும் அவனது அமர காவியத்தைப் புகழ்ந்தேத்திப் பாராட்டினர் என்பது வழக்கு.

துளசிதாசர் பண்டிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துப் பொதுமக்களின் மொழியான “அவதீ” (லக்னோ பகுதி ஹிந்தி மொழி வடிவம்) என்ற பாஷையில் தனது ராமகாவியத்தைப் படைக்கிறார். இதனைப் பண்டிதர்கள் யாரும் அங்கீகரிக்காமல் போக, மனம் நொந்த துளசிதாசர், அன்றிரவு காசி விசுவநாதர் கருவறையில் வேத,புராண ஏடுகளுக்கெல்லாம் கீழே தனது நூலை வைத்து இது உனக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். மறுநாள் காலை வந்து பார்க்கையில், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றெல்லா நூல்களுக்கும் மேலாக வந்தமர்ந்திருந்ததாம்! பண்டிதர்கள் விசுவநாதரின் திருவுள்ளமாக்க் கருதி துளசிதாசரின் நூலை அங்கீகரித்தனர் என்பது வழக்கு.

தென்தமிழ் நாட்டைச் சேர்ந்த குமரகுருபரர் காசி வரை சென்று அங்கு மடம் அமைத்து தர்ம நெறியைப் பரப்பிய வரலாறு அனைவரும் நன்கறிந்தது. குமரகுருபரர் காசியில் வாழ்ந்த காலத்தில் தமது மடத்தில் தினந்தோறும் கம்ப ராமாயணச் சொற்பொழிகள் செய்ததாகவும், அவற்றைத் தவறாமல் கேட்டு வந்த துளசிதாசர், அதனாலேயே தமது காவியத்தில் கம்பராமாயணத்தில் உள்ளது போன்று சில இடங்களை அமைத்தார் என்றும் ஒரு வழக்கு உள்ளதாம். காசி மடத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் கூறிய தகவல் இது.

இவ்வாறாக, தன் காவியம் முழுவதிலும் சிவ-விஷ்ணு ஐக்கியத்தைப் பல்வேறு விதங்களில் எடுத்துரைக்கிறான் கம்பன். தமிழகத்தில் சமயப் பூசல்கள் அவ்வப்போது தலைதூக்கி வந்த காலகட்டத்தில் வாழ்ந்த கம்பன் ஒரு இலக்கியகர்த்தாவாக தன் காவியமெங்கும் சமய சமரசத்தை வலியுறுத்திக் கொண்டே செல்கிறான். இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாகவே கம்பன் திகழ்கிறான் எனலாம்.

வந்தேமாதரம் – தேசத்தின் உணர்வு; தேசியத்தின் ஆன்மா!

bharat_mata_abanindranathவந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

– வந்தே மாதரம்:  மகாகவி பாரதியாரின் மொழியாக்கம் (முழுவதும் இங்கே).

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும்  நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: – ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: – கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: – ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: – கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: – ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: – ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: – ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: – லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: – ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: – வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: – தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

– கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, திருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து.   இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான  வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன – வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” – திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

–  ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்”  என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும். வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!

வந்தே மாதரம்!

ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க அரசியல்: ஒரு அலசல்

பா.ஜ.க – தற்போதைய நிலைமை

2004-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலை விட 2009-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பா.ஜ.க அடைந்த தோல்வி கடுமையானது. இந்தத் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம், 2004-ம் ஆண்டு பெற்ற தோல்விக்கான காரணங்களை பா.ஜ.க சரியாக அலசவில்லை என்று சொல்லலாம். மாநிலம் வாரியாக, தொகுதி வாரியாக, என்ன பிரச்சனைகள் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டது. 1999 தேர்தலில் மக்கள் தங்களுக்கு எதற்காக ஆதரவு அளித்தனர், அவர்கள் முன்னிலையில் என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோம், அவர்களின் எதிர்பார்ர்ப்புகளுக்கிணங்க நாம் ஆட்சி செய்தோமா, நம்மால் நிறைவேற்றமுடியாத சில வாக்குறுதிகளுக்கு சரியான காரணங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றோமா, என்றெல்லாம் சிந்திக்கத் தவறிவிட்டது.

2004 முதல் 2009 வரை தாம் பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை வளர்க்க எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க சரிவர எடுக்கவில்லை. அந்த ஐந்து வருட காலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தல்களில், தங்களுக்கு அபரிமிதமான ஆதரவு உள்ள மாநிலங்களில் மட்டுமே (குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர்) மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அபரிமிதமான ஆதரவு இருந்தும் உட்கட்சிப் பிரச்சனைகளால் ஆட்சியைத் தக்க வைக்க முடியாமல் தோல்வி கண்ட மாநிலம் ராஜஸ்தான். மற்ற சில மாநிலங்களில் (ஹிமாசலப் பிரதேசம், பஞ்ஜாப்) பெற்ற வெற்றி, பா.ஜ.க ஆதரவு ஓரளவிற்கும், அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதான வெறுப்பும், கோவமும் சேர்ந்ததாலும் ஏற்பட்ட வெற்றி என்று சொல்லலாம். உள்ளாட்சி தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றும் சட்டசபை தேர்தலில் மாபெரும் தோல்வி பெற்ற மாநிலம் தில்லி. கட்சியை நன்றாக வளர்த்து, நல்ல முறையில் வெற்றி கண்ட மாநிலமாக கர்நாடகத்தை மட்டும் சொல்லலாம்.

2004 முதல் 2009 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது என்பதில் மாற்றுக் கருத்திற்கே இடமில்லை. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், விலைவாசி, உள்-வெளி பாதுகாப்பு, விவசாயம், உள்துறை, வெளியுறவு, என்று அனைத்துத் துறைகளிலும் மன்மோகன் அரசின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. மன்மோகன் அரசு ஆட்சி செய்த லட்சணத்தையோ, அவ்வரசின் செயல்பாட்டினால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டங்களையோ, ஒரு பிரதான எதிர்கட்சி தன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அருமையான முறையில் பயன்படுத்தியிருக்க முடியும், பயன்படுத்தியிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியேயும் மத்திய அரசை சரியானபடி எதிர்கொண்டு, அதன் யோக்கியதை மக்களுக்கு தெரியுமாறு முனைந்து செயல்பட்டிருக்க வேண்டும். இவ்விஷயத்தில் பா.ஜ.க. பரிதாபமாகத் தவறிவிட்டது. சுலபமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டிய பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து நிற்கிறது. 2004 தோல்விக்குப் பிறகு, அத்தோல்வியின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் என்னெவெல்லாம் தவறுகள் செய்ததோ, அதை விட அதிகமான தவறுகளை இப்போது செய்து கொண்டிருக்கிறது.

பொதுவான கட்சி வகைகள்

நம் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல்வகை, குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகள். இதில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனை, ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அகாலி தளம், தேசிய காங்கிரஸ், பா.ம.க போன்றவை சேரும். இரண்டாவதாக, தனி மனித சர்வாதிகார கட்சிகள். இதில் அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, போன்றவை சேரும். மூன்றாவதாக, உட்கட்சி ஜனநாயகத்துடன் செயல் படும் கட்சிகள். இதில் பா.ஜ.க, கம்யூனிசக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. ஐக்கிய ஜனதா தளத்தை ஓரளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.

குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளைப் பொறுத்தவரை, வெற்றிகளின் பாராட்டுதல்கள் அக்குடும்பத்திற்கும், தோல்விகளின் பழிகள் கட்சிக்கும் (மற்ற தலைவர்களுக்கும்) சென்று விடும். குடும்பத்தின் காலடியில் விழுந்து கிடந்து அக்குடும்பத்தைத் துதி பாடும் தலைவர்களும் தொண்டர்களும் இருக்கும் வரை, அக்கட்சிகளுக்கு தோல்விக்குப் பின்னர் பெரிதாக உட்கட்சிப் பிரச்சனைகள் வருவதில்லை. தனி மனித சர்வாதிகாரக் கட்சிகளும் அதே போல் தான். வெற்றியின் பாராட்டுக்கள் அந்த சர்வாதிகாரத் தலைவருக்கும், தோல்வியின் பழிகள் மற்ற தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தான். இங்கும் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் தங்கள் சர்வாதிகாரத் தலைவரின் காலடியில் கிடந்து அவர் புகழ் பாடிக் கொண்டிருப்பதால் தோல்வியினால் பிரச்சனைகள் ஏற்படாது. ஆனால், மூன்றாவது வகையாகச் சொல்லப்பட்ட, ஒரளவிற்கு உட்கட்சி ஜனநாயகம் இருக்கக் கூடிய பா.ஜ.க போன்ற கட்சிகளில், வெற்றி பெற்றால் பிரச்சனை கிடையாது. அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடிவிட்டுப் போகலாம். தோல்வியுற்றாலோ, ஒரே குழப்பம் தான். பழியையும் கூட்டாக எல்லோரும் ஏற்றுக் கொண்டால் பிரச்சனையில்லை. ஆனால் பழியை யார் தலை மேல் போடுவது என்று ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தால், கட்சியின் கட்டுப்பாடு போய், ஆங்காங்கே பிளவு ஏற்பட ஏதுவாகிறது. தற்போது பா.ஜ.க-வின் நிலை இது தான்.

தி.மு.க, காங்கிரஸ், போன்ற குடும்ப வாரிசு அரசியல் செய்யும் கட்சிகளாகட்டும், அ.இ.அ.தி.மு.க, பஹுஜன் சமாஜ் போன்ற தனி மனித சர்வாதிகாரிகளின் கட்சிகளாகட்டும், தோல்விக்குப் பிறகு நல்லமுறையில் சமாளித்து தலை நிமிர்ந்து நின்றதையும், நிற்பதையும் பார்க்கிறோம். அதற்கு முக்கிய காரணம், அந்தக் குடும்பங்களும், தலைவர்களும், தங்கள் கீழ் உள்ள மற்ற தலைவர்களையும், தொண்டர்களையும் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்கள். எனவே அவர்கள் மீண்டும் தலை நிமிர்வது ஓரளவிற்கு சாத்தியமானது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத் தேர்தலில் தோற்ற பிறகு பா.ஜ.க. நிலைகுலைந்து போனது மிகவும் வருந்தத்தக்கது. இது நம் நாட்டின் ஜனநாயகத்திற்கும், முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல.

பா.ஜ.க – தலைவர்களின் இயலாமை, கட்சியின் சறுக்கல்

2009 பொதுத் தேர்தல் நிறைவுற்று 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்து, பாராளுமன்றம் ஒரு முறை கூடியும் முடிந்து விட்டது. இன்னும் பா.ஜ.க தோல்வியின் பாதிப்பிலிருந்து வெளிவந்தபாடில்லை. தன்னை வித்தியாசமான கட்சி என்றும், கட்டுப்பாடுள்ள, உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சியென்றும் கூறிக் கொள்ளும் ஒரு கட்சி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் உடனே இறங்கியிருக்க வேண்டும். தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, சிறந்த பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயலாற்ற என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்து, கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் எப்படி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று விவாதித்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒரு செயல் திட்டத்தைத் தயார் செய்திருக்கவேண்டும். தேர்தல் முடிந்து 100 நாட்கள் ஆகியும் அவ்வாறு செய்யாமல் இருப்பது பா.ஜ.க போன்று திறமையான தலைவர்கள் உள்ள கட்சிக்கு அழகல்ல.

பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள். பல தேர்தல் களங்களைச் சந்தித்தவர்கள். அவர்கள் இவ்வாறு நிலைகுலைந்து போய் கோஷ்டிச் சண்டையிட்டுக் கொள்வது தான் வருத்தமளிக்கிறது. தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயாமல், அருண் ஜெய்ட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோருக்கு ராஜ்ய சபையிலும், லோக் சபையிலும் தலைவர் பதவிகள் தரப் பட்டது, ஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி போன்றோருக்குப் பிடிக்கவில்லை. உத்தர்கண்ட் மாநிலத்தின் முதல்வரான கந்தூரி அவர்களை அம்மாநிலத்தில் பொதுத் தேர்தல் தோல்விக்குக் காரணமாக்கி அவரை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியதும், ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்விக்கு அம்மாநில முதல்வராக இருந்த வசுந்தராவை தற்போது சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து கீழே இறக்காததும் பிரச்சனையாகிப்போனது. இதிலே மற்றொரு பிரச்சனை என்னவென்றால், வசுந்தரா அத்வானிக்கு வேண்டப்பட்டவர் என்றும் சொல்லப் படுவதால், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களின் கட்டளைகளை அவர் மதிப்பதில்லை என்றும் சொல்லப் படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில், அத்வானிக்கும் ராஜ்நாத்திற்கும் பனிப்போர் என்றும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பிரச்சனையாக மாறிய ஜஸ்வந்த் சிங் விவகாரம்

இதனிடையே, ஜஸ்வந்த், யெஷ்வந்த் மற்றும் அருண் ஷௌரி ஆகியோர் கட்சித் தலமைக்கு எழுதிய கடிதங்களுக்கு தலைமை சரியான மதிப்பளிக்கவில்லை. அவர்களை அழைத்து குறைகளைக் கேட்கவும் இல்லை. அவமானமுற்ற அவர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் ஆற்றாமையை வெளியிடத் தொடங்கினார்கள். இது மக்களிடையே கட்சியின் பெயருக்குப் பாதகமாக அமைந்தது. யெஷ்வந்த் சின்ஹா கட்சிப் பதவிகளிலிருந்து வெளியேறினார். ஜஸ்வந்த் சிங், சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரிவினைக்குக் காரணமாயிருந்த பாகிஸ்தானின் முதல் அதிபர் முகம்மது அலி ஜின்னாவைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதை வெளியிட்டால் தேர்தல் நேரத்தில் கட்சியின் வெற்றிக்குப் பாதகமாக அமையும் என்கிற சந்தேகத்தின் பேரில், கட்சித் தலைமை, ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தலின் போதும், பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போதும், புத்தகத்தை வெளியிடவேண்டாம் என்று கூறிவிட்டது. தேர்தல் முடிந்தபடியால் தற்போது புத்தகத்தின் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்தார் ஜஸ்வந்த் சிங்.

விழாவிற்கு ஓரிரு தினங்கள் முன்பே, அவர் புத்தகத்தில் இந்தியாவின் பிரிவினைக்கு சர்தார் வல்லபாய் படேலும், ஜவஹர்லால் நேருவும் தான் காரணம் என்றும், ஜின்னாவை மிகவும் பாராட்டியும் எழுதியிருந்தது, ஊடகங்களில் வெளியானது. இதனால் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளான பா.ஜ.கவினர் யாரும் புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போகாமல் அதனைப் புறக்கணித்தனர். இதனிடையே, பா.ஜ.கவின் “சிந்தனைக் கூட்டம்” சிம்லாவில் நடைபெற ஏற்பாடு நடந்தது. அக்கூட்டத்திற்கு யெஷ்வந்த் சின்ஹா மற்றும் அருண் ஷோரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஜஸ்வந்த்திற்கு மட்டும் இருந்தது. அவரும் சிம்லா சென்றடைந்தார். அவரின் புத்தக வெளியீட்டினால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகியிருந்த பா.ஜ.க தலைமை, சிந்தனைக் கூட்டம் நடக்கவிருந்த அன்று காலை ஒரு அவசரக் கூட்டம் நடத்தி, ஜஸ்வந்த் சிங்கை கட்சியிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து, அம்முடிவை அவர் தங்கியிருந்த அறைக்குத் தொலைபேசி மூலம் அழைத்து அவரிடம் தெரிவித்தது.

கட்சி தொடங்கிய காலத்திலிருந்து முப்பது வருடங்களுக்கும் மேலாக கட்சிப்பணியாற்றியவர், 1998 முதல் 2004 வரை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பொருளாதார, வெளியுறவு போன்ற துறைகளின் அமைச்சராக இருந்தவர், கட்சியிலும் பல பொறுப்புகள் வகித்தவர், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர், ஆகிய சிறப்புகள் பெற்ற ஒரு மூத்த தலைவரை, மரியாதை நிமித்தமாகக் கூட ஒரு விசாரணைக்கு ஏற்பாடு செய்யாமல், அவரின் தரப்பு நியாயங்களைக்கூட கேட்காமல், சிந்தனைக் கூட்டத்திற்கு வந்தவரை, சற்றும் எதிர்பாராமல், தொலை பேசி மூலம் கட்சியிலிருந்து வெளியேற்றம் செய்தது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தந்தனென்னவோ உண்மை தான். கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியினர் தங்கள் ஆதர்ச தலைவராகப் போற்றும் சர்தார் வல்லபாய் படேலைப் பற்றி அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படும் வகையில் எழுதியது மாபெரும் தவறு தான். ஆனால் இத்தனை ஆண்டுகள் கட்சியில் உழைத்த ஒரு மூத்த தலைவரான அவரை நீக்கம் செய்த முறை கட்சியிலேயே பலருக்கு அதிருப்தி தருவதாக இருந்துள்ளது. எனினும் ஜஸ்வந்தை நீக்கம் செய்ததன் மூலம் மற்ற அதிருப்தியாளர்களுக்கு, கட்சிக் கொள்கைக்கு மாறாக கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்பவர்களுக்கு இந்த கதி தான் ஏற்படும், என்கிற ஒரு பலமான தகவலை கட்சித் தலைமை அனுப்பியது. இதன் மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.

ஜஸ்வந்தின் ஜின்னா விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் 2005-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற, அப்போதைய துணைப் பிரதமாரகவும் உள்துறை மந்திரியாகவும் இருந்த அத்வானி அவர்கள், அங்கே பாகிஸ்தான் மக்களிடையே ஜின்னாவை ”மதச்சார்பற்றவர்” என்று அவருடைய பழைய மாநாட்டுப் பேச்சு ஒன்றை குறிப்பிட்டு, பாராட்டிப் பேசினார். அதன் பிறகு அவருக்கு ஆர்.எஸ்.எஸ் கண்டனம் தெரிவித்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறங்கவேண்டி வந்தது. ஜஸ்வந்த், அத்வானி இருவரும் ஜின்னாவைப் பாராட்டிப் பேசிய பேச்சுகளில் பெருமளவு வேறுபாடுகள் இருந்தாலும், அத்வானிக்கு ஒரு சட்டம் ஜஸ்வந்துக்கு ஒரு சட்டமா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஜஸ்வந்த்தை கட்சியை விட்டு நீக்கிய விதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது என்றாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் நடந்து கொள்ளும் விதமும், ஏதோ முப்பது ஆண்டுகள் பா.ஜ.க வின் எதிர்க்கட்சியில் இருந்து செயல்பட்டது போலவும் அவர் பேசுகின்ற பேச்சுக்களும், அவர் தன் புத்தகம் பாகிஸ்தானில் பிரமாதமாக வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கத்தோடு அங்கு சென்று அந்நாட்டு ஊடகங்களில் நம் தேசத் தலைவர்களை விமரிசனம் செய்ததும், அவர் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பரிதாபமும் போய், அவரை கட்சியிலிருந்து நீக்கியது சரிதான் என்கிற முடிவிற்கு நம்மை வரவழைத்து விட்டன.

ஜஸ்வந்த் நடவடிகையின் விளைவுகள்

ஜஸ்வந்த் சிங்கின் மீது தலைமை எடுத்த நடவடிக்கை மூலம், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுமாறு வசுந்தராவைக் கட்சித் தலைமை வற்புறுத்த ஆரம்பித்தது.

இந்நடவடிக்கையினால் யெஷ்வந்த் சின்ஹா போன்றவர்கள் சற்று பின்வாங்கினாலும், வசுந்தரா இப்படியும் அப்படியுமாக ஆட்டம் காண்பித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு தலைவரான அருண் ஷோரி சற்றும் தயங்காமல் தன்னுடைய அதிருப்தியையும், நிலைப்பாடையும், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெளிவாகக் கூறினார். கட்சித் தலைமையையும் சற்று காட்டமாக விமரிசனம் செய்தார். கூடவே மிகவும் உஷாராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைக் கவரும் வகையில், அதைப் பாராட்டும் வகையில், பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ். கையகப்படுத்த வேண்டும் என்றும், அவ்வியக்கத்தின் தலைமையின் கீழ் தான் பா.ஜ.க செயல் படவேண்டும் என்றும் அந்தப் பேட்டியில் சொல்லி வைத்தார். பா.ஜ.க மீதான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிடிப்பு வெளியில் தெரியாவிட்டாலும், உள்ளுக்குள் அதுவே உண்மையாதலால், ஜஸ்வந்த் சிங்கின் மேல் அதிரடியாக நடவடிக்கை எடுத்த பா.ஜ.க தலைமையினால் அருண் ஷோரியின் மேல் எடுக்க இயலவில்லை. மேலும் உத்தர்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட கந்தூரி அவர்களும், மற்றவர்கள் கட்சியின் தோல்விக்காகத் தண்டிக்கப் படாதபோது தான் மட்டும் ஏன் தண்டிக்கப் படவேண்டும், என கேட்டு கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சென்னை வருகை

bhagavatஜஸ்வந்த் சிங், யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் அதிருப்தியாளர்களாக மாறியிருந்த சமயத்தில், சென்னைக்கு முதல் பயணமாக வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பா.ஜ.க பற்றி கேட்கப்பட்ட சரமாரியான கேள்விகளுக்கு நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தார். “ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவகர்கள் பலர் பா.ஜ.க வில் இருந்தாலும் அது தனியான சுதந்திரமான கட்சி, அதன் பிரச்சனைகளை அதுவே தீர்த்துக் கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. தற்போது அக்கட்சிக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் பூசல்கள் மனதுக்கு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விரைவில் மீண்டு வரும். ஆர்.எஸ்.எஸ். என்பது சமூக மற்றும் கலாசார இயக்கமேயன்றி, அரசியல் இயக்கம் அல்ல. எங்களுக்கு அரசியல் செய்யவும் விருப்பமில்லை. பா.ஜ.க விற்கு நாங்களாக எந்த அறிவுரையும், ஆலோசனையும் வழங்கமாட்டோம். அவர்களாக எங்களிடம் வந்து அறிவுரையோ ஆலோசனையோ கேட்டால் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்று மிகத் தெளிவாகத் தெரிவித்தார் மோகன்ஜி.

பத்திரிகையாளர் கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு மாபெரும் பொதுக் கூட்டமும் திருவான்மியூரில் நடந்தேறியது. ஐய்யாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம் சேவகர்களும், அதற்கு சமமான பொது மக்களுமாக மொத்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட அந்த மாபெரும் கூட்டத்தில் உரையாற்றிய திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேசத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து சேவை செய்து கொண்டு வருகின்றது. இந்த இயக்கத்தின் ஸ்வயம் சேவகர்கள் நல்ல முறையில் பண்படுத்தப் பட்டு, சுதந்திரமாக, சுயமாக, பல தளங்களில் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் விஞ்ஞானம் முன்னேறினாலும், கூடவே சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது; அதே போல் தான் ஒரு பக்கம் மதப் பற்றும் ஆன்மீகமும் வளர்ந்தாலும், சண்டை சச்சரவுகளும் பெருகிக்கொண்டிருக்கின்றன. உடல், மனம், அறிவு ஆகியவற்றை அறிந்துகொணட உலகு, தர்மத்தை அறியத் தவறிவிட்டது. அந்த “தர்மம்” என்பது நம் தேசத்தில் தான் உள்ளது. மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் அந்த தர்மமே ஹிந்துத்துவம். உலக நாடுகளுக்கிடையே சகோதரத்துவத்தையும், சரிசமமான பாவனையையும், ஏற்படுத்த ஹிந்துத்துவம் உள்ள நம் நாட்டினால் மட்டுமே முடியும். அதைத்தான் உலகும் எதிர்பார்க்கிறது. தேவைக்கேற்ற திருப்தியுடன் கூடிய எளிமையான வாழ்வு எப்படி வாழவேண்டும் என்று நாம் தான் உலக நாடுகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும்”.

”ஒரே மாதிரியான சமூகம் இருந்தால் தான் ஒற்றுமை ஏற்படும் என்று நம்பிக்கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, பல்வேறு விதமான மக்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியும் என்று நிரூபித்திருப்பவர்கள் நாம். நம்மிடையே உள்ள ஹிந்துத் தன்மையினால் தான் அந்த ஒற்றுமை சாத்தியமானது. நாம் எல்லா தனியடையாளங்களையும் அறிந்து மதிப்பு கொடுத்து, அனைத்தையும் ஒன்றுபடுத்தி, நமக்கென்று ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திவிட்டோம். ஹிந்துத் தன்மை என்ற உணர்வே அந்த அடையாளத்தை ஏற்படுத்த உதவியுள்ளது. நம் நாட்டிற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. ஹிந்துத்தன்மையே அந்த பாரம்பரியம். இந்த ஹிந்துத் தன்மையை விட்டு, நம் பாரமபரியத்திலிருந்து விலகிப் போன ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம், போன்ற நிலப் பரப்புகளெல்லாம் அமைதியை இழந்து கலவர பூமியாக இருக்கின்றன. சனாதன தர்மமே நம் தேசத்தின், சமூகத்தின் தாரக மந்திரம். தர்மம் நிலைத்துள்ள ஒரு சமூகத்தை அமைக்க தலைவர்களும், கோஷங்களும் போதாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு பாமரனும், நற்குணங்களும், எப்போதும் தயார் நிலயிலும், உள்ளவனாக ஆக வேண்டும்”.

“அந்தக் குறிக்கோளை முன்வைத்துதான் ஆர்.எஸ்.எஸ். இயங்கிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு அரசியல் தேவையில்லை. அதிகாரம் வேண்டி தினந்தினம் நடந்து கொண்டிருக்கும் மலிவான அரசியல் விளையாட்டுகளில் நாங்கள் பங்குபெற விரும்பவில்லை. ஜாதி, மத, மொழி வேறுபாடுகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அந்த வேறுபாடுகள் மறைய வேண்டும். ஹிந்துஸ்தானம், இந்தியா, பாரதம், என்பவை அனைத்தும் “ஹிந்து” என்பதையே குறிக்கின்றன. இது தான் நம் தேசத்தின் அடையாளம், ஹிந்து என்கிற அடையாளம், என்பதே மறுக்கமுடியாத உண்மை. இந்த ஹிந்து அடையாளமே நம்மை இந்த உலகத்தின் தலைசிறந்த நாடாக ஆக்கி தலைமைப் பீடத்தில் இருக்கச்செய்யப் போகிறது” என்று பேசி, நாட்டின் இளைஞர்களை, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து, அதன் உள்ளே வந்து அதன் குணநலன்களை அனுபவித்து, அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, தேச சேவையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார்.

ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையும் பா.ஜ.க சிக்கல்களும்

சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு புது தில்லி திரும்பிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாக்வத் அவர்கள் “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்கு ஒரு அருமையான பேட்டி அளித்தார். அதில், “பா.ஜ.க சுயமான சுதந்திரமான அமைப்பு. அதன் தினசரி காரியங்களில் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தலையிடாது. தற்போது பா.ஜ.கவில் உட்கட்சிப் பூசல் அதிகரித்திருக்கிறது கவலையை அளிக்கிறது. இருந்தாலும் இந்தப் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் சக்தியும், திறமையும அக்கட்சித் தலைவர்களிடம் உண்டு. சஙத்தைப் பொறுத்தவரை தலைவர் பதவிக்கு 55 முதல் 65 வயது வரை நிர்ணயம் செய்திருக்கிறோம். பா.ஜ.க அதன் தலைமையில் மாற்றம் கொண்டு வருமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களாக சங்கத்திடம் ஆலோசனையோ அறிவுரையோ கேட்டால் கண்டிப்பாக வழங்குவோம். சஙத்தைப் பொறுத்த வரை தலைமை ஏற்று நடத்துவதற்கு தேவைப்பட்ட நபர்கள் இருக்கின்றார்கள். நினைத்த மாத்திரத்தில் 75 தலைவர்கள் கூட சங்கத்தால் தேர்ந்தெடுக்க முடியும். சிம்லாவில் நடக்க இருக்கும் சிந்தனைக் கூட்டத்தில் பா.ஜ.க அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து ஒருமைப்பாட்டுடன், கட்டுப்பாட்டுடன், பழைய சக்தியுடன் மீண்டும் திரும்பும் என்று எதிர்பார்ர்க்கிறோம்” என்று கூறினார். பா.ஜ.கவிடம் சங்கம் என்ன எதிர்பார்ர்க்கிறது என்பதைத் தெளிவாகப் புரிய வைத்தார்.

ஆனாலும் பா.ஜ.க திரு மோகன்ஜி அவர்களின் எச்சரிக்கையை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவருடைய ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் புறக்கணித்தது என்றே சொல்லவேண்டும். அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னதை தீவிரத்துடன் சிந்தித்திருந்தால் அக்கட்சி தோல்விக்கான காரணங்களை அலசியிருந்திருக்கும். மேலும் அதிருப்தியில் இருக்கும் யெஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும். ஜஸ்வந்த் சிங்கையும் அநாகரீகமாக வெளியேற்றியிருக்காது. அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றியும் ஒரு செயல் திட்டம் வரைந்திருக்கும். இவை எதுவும் செய்யாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஜஸ்வந்தை மட்டும் அவசரகதியில் கட்சியிலிருந்து நீக்கி விட்டு மற்றபடி உருப்படியாக ஏதும் செய்யாமல் சிந்தனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டது பா.ஜ.க. சிம்லாவிலிருந்து டில்லி திரும்பியபிறகும் அதிருப்தியாளர்களை கூப்பிட்டு பேசவில்லை தலைமை. வெறுத்துப்போன அருண் ஷோரி என்.டி.டிவி தொலைக்காட்சிக்கு முதலிலேயே சொன்னது போல் பேட்டி கொடுக்க, ஜஸ்வந்த் சிங் மற்ற பல புகார்களை வரிசையாக அடுக்கி அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, 2005 லிருந்து அத்வானியின் சரிவிற்ககுப் பெரிதும் காரணமாயிருந்த சுதீந்த்ர குல்கர்னி (தான் பா.ஜ.க.விற்கு வந்த வேலையை செவ்வனே முடித்த சந்தோஷத்தில்) கட்சியை விட்டு விலக, யெஷ்வந்த் சின்ஹா மீண்டும் பேச ஆரம்பிக்க, இவர்கள் போதாது என்று முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ப்ராஜேஷ் மிஷ்ரா (அத்வானிக்கு சுதீந்த்ர குல்கர்னியை அனுப்பியது போலவே, இவரை வாஜ்பாய்க்கு “செக்” வைக்க எதிர் தரப்பு அனுப்பியது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருக்கின்றது) அவர்களும் காந்தஹார் விமான கடத்தல் விவகாரத்தில் அத்வானியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த, என்று பா.ஜ.க படாத பாடு பட்டது.

mohan_bhagwat-rss1இதனால் மிகவும் வெறுத்துப்போன ஆர்.எஸ்.எஸ். மீண்டும் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. புயலின் நடுவே லாகவமாக படகு செலுத்திப்போகும் படகோட்டி போல, திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள், ஆழமான பிரச்சனைகளில் பா.ஜ.க சிக்கியிருந்த நேரத்தில், ஊடகங்களின் கேள்விக் கணைகளை லாகவமாக எதிர்கொண்டார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்திற்கு வந்திருந்த பத்திரிகையாளர் அனைவரும் கூட்டம் முடிந்த பின்னர் மோகன்ஜியின் திறமையை வியந்தும் பாராட்டியும் பேசினர். இக்கூட்டத்தில் அவர், தான் ஏற்கனவே ”டைம்ஸ் நௌ” தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னதை மீண்டும் நினைவுகூர்ந்தார். மேலும், “ஒரே மனப்போக்கும் சிந்தனையும் உள்ள அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடவேண்டும். நம்முடைய தனிப்பட்ட வேற்றுமைகளும், கருத்து வேறுபாடுகளும், நம் ஒற்றுமையையும் உழைப்பையும் பாதிக்காவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும். சங்கத்தைப் பொறுத்தவரை இப்போது செய்துகொண்டிருக்கும் நற்பணிகளை மேன்மேலும் அதிகப் படுத்தி இந்நாட்டிற்குச் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும். பா.ஜ.க தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளை விரைவில் முடிவிற்குக் கொண்டு வந்து மீண்டும் புத்துணர்வுடன் திகழும். அதற்கான வேலைகளில் பா.ஜ.க முழுமனத்துடன் இறங்கிவிட்டது. அக்கட்சிக்குத் தேவையான சமயத்தில் அறிவுரையும், ஆலோசனையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறி முடித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த பத்திரிகையாளர் கூட்டத்திற்குப் பிறகு பா.ஜ.க. தலைவர்கள் பலரும் திரு மோகன்ஜியை சந்தித்து ஆலோசனைகள் பெற்றனர். அவரும் அத்வானி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். தற்போது பா.ஜ.க வில் சற்று அமைதி நிலவுகிறது. எல்லோரும் தற்போதைய நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ளனர் என்பதும், கூடிய விரைவில் உட்கட்சிப் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உணர்ந்திருப்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது.

மோகன்ஜி தலைமையும் சங்கத்தின் எழுச்சியும்

இந்த பலவீனமான, இக்கட்டான சமயத்தில், சங்க இயக்கங்களின் சேவகர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் மற்றும் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் மக்களுக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கக் கூடிய ஒரே விஷயம் திரு மோகன்ஜி பாக்வத் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். தலைமை பொறுப்பு ஏற்றிருப்பது தான். பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்னர் தான் பொறுப்பு ஏற்றுக்கொண்டார் என்றாலும், அவர் கடந்த ஆறு மாதங்களாக பணி புரிகின்ற செயற்பாடு, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது. தெளிவாக யோசித்து நன்றாக நிலவரங்கள் அறிந்து பேசுவது, திட்டமிட்டு செயல்படுவது, ஊடகங்களை ஆற்றலுடன் எதிர்கொள்வது, பா.ஜ.க வினரை ஒதுக்கியும் விடாமல் அதே சமயத்தில் மிக அதிகமாகவும் தலையிடாமல் அவர்களுக்கு தக்க சமயத்தில் தேவையான ஆலோசனைகள் வழங்கி கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த விதம், என அனைத்துச் செயல்களும் மிகவும் பாராட்டத் தக்க விதத்தில் அமைந்துள்ளன.

மோகன்ஜி பாக்வத் அவர்களின் செயல்பாட்டினால், பா.ஜ.க வின் தலைமையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும், இளைய வயதினர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், அவர்களுக்கு ஏற்ப மற்ற பதவிகள் தரப் படுவார்கள் என்றும் பேசப்படுகிறது. வருகின்ற டிசம்பர் மாதத்துடன் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் முடிவடைவதால், வேறு ஒரு இளைய வயதுடைய தலைவர் அனைவரின் சம்மதத்துடன் பதவியேற்றப்படுவார் என்றும், மாநிலத் தலைவர்கள் சிலரும் மத்தியப் பணிகளுக்கு அழைக்கப் படுவார்கள் என்றும், பல இளைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப் படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தன்னுடைய ஆலோசனைகளுக்கும், அறிவுரைகளுக்கும், செயல்பாட்டிற்கும் தக்க அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை சென்று மோகன்ஜி சந்தித்தது, அவரின் நற்பண்பைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது.

மோகன்ஜியின் வருகையும், செயல்பாடுகளும், சங்கத்தில் ஒரு எழுச்சியையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளன என்றால் அது மிகையாகாது. அத்வானியும் லோக்சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து வேறு ஒரு இளைஞருக்கு வழிவிட்டு பிதாமகர் ஸ்தானத்திலிருந்து கட்சியை வழிநடத்திச் செல்வார் என்ற எதிர்பார்ப்பும் பெரும்பாலும் இருந்தாலும், கிடைக்கின்ற செய்திகளை வைத்துப் பார்க்கின்றபோது அத்வானி இப்போதைக்குக் வெளியேறுவதாகத் தெரியவில்லை. அவருடைய முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி 13-ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில், “Advani will prove his obituary-writers wrong” என்கிற கட்டுரையில், அத்வானி இப்போதைக்கு அரசியலை விட்டு விலகமாட்டார் என்றே எழுதியுள்ளார். இந்த ஒரு விஷயம் மோஹன்ஜி அவர்களுக்குச் சவாலாகவே இருந்தாலும், அவரும் அத்வானியும் கட்சி மற்றும் சங்கத்தின் நலன் கருதி, பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் படி நல்ல முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது

சங்கம் செய்ய வேண்டியது.

advani_vajpayee2009 தேர்தலின் முடிவுகளில் பா.ஜ.க விற்கு மட்டுமல்லாமல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கும் ஒரு முக்கியமான பாடம் உள்ளது. கடந்த காலக் கட்டத்தில், குறிப்பாக சென்ற பத்து ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் அரசியல் விவகாரங்களை முழுவதுமாகப் பா.ஜ.க விடமே ஒப்படைத்து விட்டு ஒதுங்கியிருந்தது தவறு என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் பிராபல்யமும், கட்சியில் அவர்கள் மேலிருந்த அபரிமிதமான வழிபாடும், அதற்குக் காரணமாக இருக்கலாம். அவ்விரு பெருந்தலைவர்களும் கூட “சர்சங்கசலக்” (ஆர்.எஸ்.எஸ். தலைமை) என்கிற ஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்கத் தவறிவிட்டார்களோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், சங்கப் பின்னணி இல்லாமல், சங்கத்தின் வெளியிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த பலர் பல பதவிகளில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் சங்கத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்.

சங்கப் பின்னணியும், சங்க உறவும் இல்லாத நபர்களின் கைகள் கட்சியில் ஓங்கியிருப்பது சங்கத்திற்கும், கட்சிக்கும், நாட்டிற்கும் நல்லதல்ல. 2004, 2009 தேர்தல்களின் முடிவுகள் இந்த உண்மையைத் தெளிவாக நிரூபித்து விட்டன. மேலும் கடந்த பத்து ஆண்டுகளில், பல நல்ல, செயல் திறன் கொண்ட தலைவர்களை (உமா பாரதி, கல்யாண் சிங், மற்றும் சிலர்) சங்கமும், கட்சியும் இழந்திருக்கின்றன. விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களின் அதிருப்தியையும் பா.ஜ.க சம்பாதித்துக் கொண்டுள்ளது. அவர்களும் இவர்களின் இக்கட்டான சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளாமல் சில முறை நடந்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் சமயங்களில் கூட ஒற்றுமையில்லாமல் இருந்திருக்கிறார்கள். இவையெல்லாம் பெரிய இழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே, கடந்த பத்து ஆண்டுகளின் நிகழ்வுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து, அவை போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாவண்ணம், சஙத்தின் அனைத்து இயக்கங்களும் ஒற்றுமையுடன் செயல் படுமாறு ஒரு மாபெரும் செயல் திட்டம் தயார் செய்யப் படவேண்டும். அந்தந்த இயக்கம் அவரவர்களுக்கு என்றுள்ள தளங்களில் தீவிரமாக செயல் படும் அதே நேரத்தில், தேசத்தின் பிரச்சனை என்று வரும்போது அனைத்து இயக்கங்களும் ஒரே கூறையின் கீழ் கூடி சங்கத்தின் பிரம்மாண்ட சக்தியை காண்பிக்க வேண்டும். சங்க இயக்கங்கள் ஆன்மீக குருமார்களிடத்தும் இடைவெளியில்லாத உறவும் நட்பும் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். அனைத்து இயக்கங்களும் ஒன்றாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இயக்கங்களின் ஒற்றுமையைப் பார்த்துத்தான் மக்கள் ஒன்று கூடுவார்கள். ஆகவே அவ்வப்போது ஆர்.எஸ்.எஸ் அரசியல் பக்கம் பார்க்க வேண்டும் என்பதும், பா.ஜ.கவை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

எந்த அரசனும் தன்னிச்சையாக ஆட்சி செய்தது கிடையாது. எந்த மன்னனும் மந்திரியின் ஆலோசனைகளைக் கேட்டுத்தான் செயல் படுவான். ஒவ்வொரு சக்ரவர்த்தியின் பின்னாலும் ஒரு ஆச்சாரியர் இருப்பார். சந்த்ரகுப்தனுக்கு சாணக்கியர் போல! ஒவ்வொரு வம்சத்திற்கும் ஒரு குரு இருப்பார். அவர் சொல்படியே அந்த வம்சத்தினர் ஆட்சி செய்வார்கள். ரகு வம்சத்திற்கு வசிஷ்டர் போல! எனவே, இந்த தேசத்தின் இந்து இயக்கங்கள் அரசியல், ஆன்மீக, கலாசார பாதைகளில் தனித்தனியாகப் பயணம் செய்தாலும், அனைவரும் பயணம் மேற்கொண்ட குறிக்கோள் “தேச முன்னேற்றம்” என்ற ஒரே குறிக்கோள் தான். அரசியல், ஆன்மீகம், கலாசாரம் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்ணைந்து இருப்பது தான் இந்த தேசத்தின் பாரம்பரியம். அதுதான் ”ஹிந்துத்துவம்” என்பது. ஒரே குறிக்கோளுடன் சென்றுகொண்டிருக்கின்ற பயணங்களின் அடிப்படையும் அதே ஹிந்துத்துவம் தான். இந்த உண்மையை மோகன்ஜி பாக்வத் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருகிறார் என்பது தான் நம்பிக்கை தரும் செய்தி. இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த தேசத்தில் பிறந்து, இம்மண்ணில் வளர்ந்து வரும் அனைவருக்கும் இந்த அடையாளம் பொது என்று அவர் தெளிவு படக் கூறியது தான். அதாவது ஜாதி மத வேறு பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த பூமியைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த ஹிந்துத்துவ அடையாளம் பொதுவானது என்பது தான்!

சென்னையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிய போது சொன்னது: “எங்கள் இயக்கம் தேசிய கலாசார இயக்கம். சமூகத்தை ஹிந்துத்துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில், ஹிந்து அடையாளத்துடன் முன்னேற்றுவதே எங்கள் பணி. உலகின் தலை சிறந்த நாடாக பாரதம் விளங்குவது இதன் மூலமே தான் சாத்தியம். நாங்கள் அரசியல் இயக்கம் அல்ல. தினசரி அரசியல் செய்ய மாட்டோம். ஆனால் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கான முக்கியமான முடிவுகளை அரசாங்கமோ, பாராளுமன்றமோ எடுகும்போது, இந்த தேசத்தின் நலன் கருதி, எந்த மாதிரியான முடிவு நல்ல முடிவோ, அம்முடிவை எடுக்குமாறு செய்வதே எங்கள் தலையாய பணியாக இருக்கும்”.

எனவே, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க வின் நடவடிக்கைகளைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்க, அதன்படி பா.ஜ.க நடந்துகொள்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. மட்டுமல்லாமல் இந்த தேசத்திற்கும் நன்மை பயக்கும்.