23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்

நேருவின் பொருளாதார அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி 1958 இல் ஆயுள் பாதுகாப்பீடு ஊழலில் பதவி விலக நேர்ந்தது. (இதை பாராளுமன்றத்தில் தன் மருமகன் ஃபெரோஸ்காந்தியே எழுப்பியது தற்செயலா அல்லது நேருவின் ராஜ தந்திரமா என்பது தெரியவில்லை.) நேருவின் உதவியுடன் செயல்பட்ட ஜெயந்தி தர்ம தேஜா பண மோசடி செய்து நாட்டை விட்டே ஓடினார். ஒரு இந்திய குத்ராச்சி என்று வைத்து கொள்ளூங்கள். ஆனால் மன்மோகன் சிங்கிற்கு நிலக்கரி ஊழலினாலோ 2-ஜி ஸ்பெக்ட்ரத்தினாலோ எந்த தனிப்பட்ட லாபமும் இல்லை என்பது போல நேருவுக்கும் இந்த ஊழலுக்கும் தனிப்பட்ட ஆதாயங்கள் இருந்ததாக நிரூபிக்கப்படவில்லை…. 1962 – இந்திய ராணுவம் மிக மோசமான முறையில் அரசியல் தலையீடுகளால் சீர்குலைக்கப்பட்டு சீனாவினால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. நேரு இப்போது ராதாகிருஷ்ணனும் ராஜாஜியுமாக சேர்ந்து தமக்கு எதிராக சதியாலோசனைகள் செய்வதாக அச்சம் கொண்டிருந்தார்…

View More 23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்

ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

ஐயா இளவரசரே, உங்கள் பாட்டியோ, உங்கள் தந்தையோ கொலை செய்யப்பட்டதற்கு இந்த நாடே கண்ணீர் விட்டு அழுதது. உங்களுக்குத் தெரியாது, பாவம், நீங்கள் அப்போது சின்ன பாப்பா. இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த குற்றவாளிகள் யார் என்பதையெல்லாம் காவல்துறை, புனலாய்வுத் துறை இவை தூண்டித் துருவி கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது… தம்பி! இது என்னவோ பள்ளிக்கூடத்து நாடகம் இல்லை. இது ஒரு பெரிய நாட்டின் வரலாற்று நிகழ்வு. இந்த அரசியலில் வெற்றி, தோல்வி, நாட்டின் முன்னேற்றம், எதிர்கால திட்டங்கள் இவை அனைத்துமே உள்ளடங்கியிருக்கின்றன…. உங்களையெல்லாம் மூட்டை முடிச்சோடு வண்டி ஏற்றிவிட மக்கள் தயாராகி விட்டார்கள். பாவம், வீட்டுக்குப் போய், உங்கள் அம்மா, அக்கா குடும்பத்தாருக்கு நல்ல நாடகமாகப் போட்டு நடித்துக் காண்பியுங்கள். அவர்களாவது மனம் மகிழ்ந்து இருக்கட்டும். இந்த நாடும் ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விடும்.. .

View More ஊழலெல்லாம் தெரிஞ்சு போச்சு, வீட்டுக்குப் போங்க!

2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

ஒருபுறம் ராஜா குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் என்று கூறி அவரை JPC முன் வருவதற்குத் தகுதியில்லாதவர் என்பதும், மறுபுறம் பிரதமரும், அமைச்சர் சிதம்பரமும் குற்றம் சாட்டப்படாதவர்கள் என்பதால் அவர்களை JPC-க்கு அழைப்பதில்லை என்று கூறுவதும் முன்னுக்குப் பின் முரணான நிலைபாடுகள். பார்க்கப் போனால் பிரதமர் தானே முன் வந்து JPC-யின் அழைப்பை ஏற்று வருவதாகச் சொன்னவர்தான். இப்படியாக இந்த ஊழல் விவகாரத்தில் முற்றிலும் அறிந்த மூன்றில் இரண்டு பேர்கள் தாங்களே முன் வந்து JPC உறுப்பினர்களுக்குத் தகவல் அளிப்பதாகச் சொல்லியும், அவர்கள் கூப்பிடப்படவில்லை… JPC நடந்த உண்மையை அம்பலப்படுத்துவது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா, அல்லது அந்த உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பது தனது பொறுப்பு என்று நினைக்கிறதா? நமக்கே தெரிகிற பல உண்மைகளை, நமது அரசின் உண்மை ஆய்வு நிறுவனங்கள் பலவுமே வெளிக்கொண்டுவரத் தயங்குகிறது, மறுக்கிறது, அல்லது வேறு பக்கம் பார்த்துக்கொண்டு நிற்கிறது. உண்மைகளைத் தேவையில்லை என மறுத்து, அவைகளைப் பாய்க்கு அடியில் குப்பையைத் தள்ளுவதுபோலத் தள்ளிக்கொண்டிருக்கிறது….

View More 2-G விவகாரம்: ராஜாவின் நேர்முகச் சாட்சி என்னும் மர்மம்

2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்

உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டா விருப்பாக சமீபத்தில் நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிகக் குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது. இப்படி ஏலம் குறைந்ததற்குக் காரணங்கள் என்ன என்று அலசுவோம்….. நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு… தற்போது நாடு முழுவதும் 9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இனிமேல் புதிய இணைப்பு பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க வாய்ப்பில்லை…

View More 2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்