கானக மக்களும் மலைக்கோயில்களும்

மலைப்பகுதிகளிலும் கானகங்களிலும் வசிக்கும் மக்களை நமது இந்திய மரபு சார்ந்த பழைய இலக்கியங்களும் நூல்களும் மலைவாசிகள், வனவாசிகள் என்று அவர்கள் வசிப்பிடத்தைக் குறிப்பிட்டே அழைக்கின்றன. ஆதிவாசிகள் (aboriginal), பழங்குடியினர் (tribal) போன்ற சொற்கள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி காலத்தில் வழக்கில் புகுந்து இன்று அரசு ஆவணங்களிலும் பொதுவழக்கிலும் அவ்வாறே குறிப்பிடும் துரதிர்ஷ்டவசமான நிலை உருவாகியுள்ளது.

If you do have any issues or questions, please don't hesitate to call or email. Kamagra online paypal nsa i”m a man and a teacher, and i”ve also run into a lot of salutarily teachers in the last few years that have done that.”the most valuable thing i can offer teachers is, “there”s always more to learn.” this is another way to be a teacher and say, �. If you don’t like provigil, there are always other natural alternative treatments that.

They help fight free radicals, improve blood circulation and reduce inflammation, all of which help your. It is the first drug approved for Janakpur metformin can you buy over the counter preventing breast cancer, and it is the only drug to be approved for treatment of advanced breast cancer. Doxylamine is also used as a supplement by many people.

Generic ivermectin is used to treat certain skin conditions. In addition, in 2013 San Salvador Atenco prednisone online and 2014, the FDA approved Clomiphene cit. La place saint-sulpice sereine, sans précédent et avec le béguiness, mais s'y perdait.

மேலும், கானக மக்களும் மலைவாசிகளும் தமக்கென்று ஒரு தனிக்கலாசாரத்தைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் இந்துக்களே அல்ல. இயற்கை வழிபாட்டையும், “சிறு தெய்வ” வழிபாடுகளையும் செய்பவர்கள் – இதுபோன்ற சிறிதும் ஆதாரமற்ற கருத்துக்கள் காலனியம் கட்டமைத்த வரலாறு மூலமாக புகுத்தப் பட்டன. பின்பு அவற்றை அப்படியே அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்ட சுயசிந்தனையற்ற கல்வியாளர்களும், இந்தியக் கலாசாரத்தை எப்போதும் பிளவுபட்டதாகவே சித்தரிப்பதில் முனைப்பு கொண்ட மார்க்சிய வரலாற்றாசிரியர்களும் இக்கருத்துக்களை மேலும் வளர்த்தெடுத்தனர். தமிழில் உள்ள சைவ, வைணவ பக்தி இலக்கியங்களை சாதாரணமாகக் கற்பவர்களுக்குக் கூட இந்த சித்திரிப்புகள் எவ்வளவு பொய்யானவை என்பது புரியும். இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.

அடர் கானகத்திற்கு நடுவே இயற்கை எழில் கொஞ்சும் காளஹஸ்தி மலை. நஞ்சை அமுது செய்து அருளிய நாயகர் திருவருளைச் சிந்தித்த படியே வந்து கொண்டிருக்கிறார் திருஞான சம்பந்தர். கானகத்தில் வாழும் குடியினரின் தினைப் புனங்களில், பயிர்களைக் கவர வரும் மான்களையும் பன்றிகளையும் கிளிகளையும் கவணில் கற்கள் எறிந்து துரத்துகின்றனர் பெண்கள். சாதாரணக் கற்கள் அல்ல, அவர்களது ஆபரணங்களில் உள்ள பொன்னும், மணியுமான கற்கள்.

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு
மாகடல் விடம்
தானமுது செய்தருள் புரிந்த சிவன் மேவு மலை
தன்னை வினவில்
ஏனம் இளமானினொடு கிள்ளை தினை கொள்ள
எழிலார் கவணினால்
கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகு
காளத்தி மலையே.

[தானவர்கள் – அரக்கர்; வாதை – துயரம்; மாகடல் – பெரிய கடல்; வினவில் – கேட்டால்; ஏனம் – பன்றி; கிள்ளை – கிளி]

சம்பந்தரின் எல்லா பாடல்களிலும் ஒரு பொதுவான அழகிய அமைப்பு உண்டு. முதல் இரண்டு வரிகளில் சிவபெருமானது பெருமைகளும் அடுத்த இரண்டு வரிகளில் குறிப்பிட்ட தலத்தின் இயற்கை வர்ணனையும் அதன் பெருமைகள் குறித்த செய்திகளும் இருக்கும். அதன்படியே இப்பாடலிலும் காளத்தி மலையில் வசிக்கும் கானக மக்களின் செல்வச் சிறப்பும் பேசப்படுகிறது. சைவர்கள் அன்றாடம் ஓதும் திருமுறைகளில் உள்ள பாடலில் கானகவாசிப் பெண்கள் “கானவர் தம் மாமகளிர்” என்று மிகவும் உயர்வாகக் குறிப்பிடப் பட்டுள்ளார்கள். அவர்கள் கீழாகவோ அன்னியமாகவோ கருதப்படவில்லை. மாறாக அந்த மலையுடனும் அங்கு உறையும் இறைவனுடனும் இணைத்துப் பேசப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது.

இன்னொரு காட்சி.

மதுரை மாநகரின் புறத்தே அழகர் மலைமீது ஏறிக் கொண்டிருக்கிறார் பெரியாழ்வார். மாலிருஞ்சோலையில் உறையும் மாதவனின் அடியார் என்ற வீறுடன் நடக்கிறார். மலை மேலே கோயிலில் மட்டுமல்ல, மலை வழியெங்கும் நடந்து கொண்டிருக்கிறது வழிபாடு! மலைக்குறவர் இனங்கள் தங்கள் புனத்திலே விளைந்த புதிய தானியத்தை சமர்ப்பித்து திருமாலின் பொன்னடி வணங்கும் காட்சியைப் பாடுகிறார்.

உனக்குப் பணி செய்திருக்கும் தவம்
உடையேன், இனிப்போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின்
சாயை அழிவு கண்டாய்
புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி உன்
பொன்னடி வாழ்க என்று
இனக் குறவர் புதிய(து) உண்ணும்
எழில் மாலிருஞ் சோலை எந்தாய்!

[கடைத்தலை – வாசல்; சாயை – புகழ்; புனத்தினை – தானியத்தை; புது அவி – புதிய வேள்விப் பொருள், அதாவது நைவேத்தியம்; எந்தாய் – என் தந்தையே]

இப்பாடலில் மலைவாசி மக்களுக்கு இனக்குறவர் என்று பெருமைமிகு அடைமொழியைக் கொடுக்கிறார் ஆழ்வார். அவர்கள் தங்கள் புனத்தில் அறுவடை செய்த தானியங்களை திருமாலுக்கு அர்ப்பணிப்பதை வேள்வியில் தரப்படும் ஆகுதிக்கு ஒப்பிட்டு “புது அவி காட்டி” என்று கூறுகிறார். அழகர் கோயிலில் புது அறுவடை முடிந்ததும் அப்பகுதி மக்கள் தானியங்களைக் கொண்டுவந்து இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் முன்மண்டபத்தை இன்றும் காணலாம். பல நூற்றாண்டுகளாக வரும் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கு இதைவிடப் பெரிய சான்று வேறு என்ன வேண்டும்?

இயற்கையின் வண்ணங்களிலும், அன்றாட வாழ்க்கையின் மகிழ்வுகளிலும் நிறைவுகளிலும் கூட தெய்வீகத்தை ஸ்பரிசித்தனர் நம் இந்துமதத்தின் குருமார்கள், ஆசாரியர்கள். அதனால் தான், புண்ணியத் தலங்களைக் கூறும்போது அவற்றின் இயற்கை வளம், அங்குள்ள மக்களின் பெருமை, அவர்களின் வாழ்க்கை முறை எல்லாவற்றையும் இணைத்தே பெருமைப் படுத்துகின்றர். எனவே, கோயில்களை மட்டுமல்ல, இவை அனைத்தையும் பேணிப் பாதுகாப்பதும் நமது கலாசாரக் கடமையாகிறது.

காட்டுமிராண்டி – ஓர் ஆய்வு

காட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் Hari Krishnan ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம். தமிழ் அகராதியில் தேடியபோது “விலங்காண்டி, நாகரிகமற்றவன், முரடன்; காட்டில்வாழ்வோன்” என்று பொருள் தந்தது. ஆனால், சொல்லின் உருவாக்கம் பற்றி தகவல் ஏதும் இல்லை. அனேகமாக, காட்டு மிருக ஆண்டி என்பது ஒருவிதமாக மருவி, காட்டுமிராண்டி ஆகியிருக்கலாம் என்று ஹரிகி கூறினார். இப்படித் தான் இருக்கும் என்று நானும் கருதுகிறேன். ‘மிராண்டி’ என்பதற்கு வேறு எந்தவகையிலும் அர்த்தம் இருப்பதாகத் தோன்றவில்லை.

முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும்போது அல்லது அவற்றில் உள்ள கருத்துக்களை எடுத்து எழுதும்போது, savage, barbarian ஆகிய சொற்களுக்கு இணையாக நேரடி தமிழ்ச்சொல் ஏதும் காணப்படாததால், 19ம் நூற்றாண்டின் தமிழ் உரைநடையாளர்கள் இந்தச் சொல்லை உருவாக்கியிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

உடனே, ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது. என்னிடம் முதலில் இக்கேள்வியை எழுப்பிய அறிஞர் சம்ஸ்கிருதத்திலும் அப்படி ஒரு சொல் இல்லை என்று தெரிவித்தார். எனவே, பெரும்பாலும் மற்ற இந்திய மொழிகளின் பழைய நூல்களிலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.

ஏன்? ஏனென்றால், அப்படி ஒரு கருத்தாக்கமே நமது இந்துப் பண்பாட்டில், இந்திய சிந்தனை முறையில் இல்லை என்பதே காரணம். கானகவாசிகள், மலைவாசிகள், வேடர்கள் ஆகியோரை நாகரிகமற்றவர்கள் என்று இந்தியப் பண்பாடு ஒருபோதும் கருதியதில்லை, அவர்கள் இந்து சமுதாயத்தின், அதன் கலாசாரத்தின் அங்கமாகவே இருந்தனர். சிவன், விஷ்ணு, துர்க்கை, காளி, விநாயகர், முருகன், ஐயப்பன், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர் என எந்த தெய்வ வடிவத்தையும் அவதாரத்தையும் எடுத்துக் கொண்டாலும் அதில் கானக மக்களின், கானக கலாசாரத்தின் கூறுகள் பிரிக்க முடியாதபடி உள்ளதை நாம் காணமுடியும்.

வன்ய (வனம் சார்ந்தவர்), நிஷாத³, புலிந்த³, பி⁴ல்ல போன்ற பல சொற்களால் கானக மக்கள் பண்டைய சம்ஸ்கிருத இலக்கியங்களில் குறிக்கப் பட்டனர். யஜுர்வேதத்தின் ஸ்ரீ ருத்ரம் ‘நமோ வன்யாய’ ‘நிஷாதே³ப்⁴ய:’ என்று ருத்ரனின் பல வடிவங்களைப் பாடும்போது இவர்களையும் குறிப்பிடுகிறது. வால்மீகி ராமாயணம் நிஷாதர்களின் அரசனான குகனை ராமனுக்கு இணையான ஒரு அரசகுமாரனாக, ராமனால் அன்புடன் தழுவிக்கொள்ளப் படுபவனாக சித்தரிக்கிறது. மகாபாரதமும், ராஜசூய யாகத்தில் தருமனின் அரச மரியாதைக்கு உரியவன் என்பதாக நிஷாத இளவரசனான ஏகலவ்யனைக் குறிப்பிடுகிறது. ஆதி சங்கரர் இயற்றிய சுப்ரமணிய புஜங்கம் ‘புலிந்தே³ஶ கன்யா’ என்று வள்ளியை அழைக்கிறது.

சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிஞ்சி நிலத்து மக்களான குறவர், எயினர், வேடர் ஆகியோர் “காட்டுமிராண்டிகளாக” ஒரு போதும் கருதப்படவில்லை. அவர்களது வழிபாடுகளையும், வீரச்செயல்களையும், வாழ்க்கை முறையையும் மதிப்புக்குரியவையாகவே இந்த நூல்கள் சித்தரிக்கின்றன.

“கானவர் தம் மாமகளிர் கனகமணி விலகு காளத்தி மலையே” – தேவாரம். இதில் காட்டில் வாழும் சமுதாயத்தினரை ‘கானவர்’ என்றும் அவர்களது பெண்களை ‘மாமகளிர்’ என்றும் சம்பந்தர் சுட்டுகிறார். “கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான்” – நாச்சியார் திருமொழி. இதில் கண்ணனின் குலத்தை ‘காடு வாழ் சாதி’ என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

இத்தகைய பழைய தமிழ்ச் சொற்கள் எதுவும் savages, barbarians என்பதைக் குறிக்க பொருத்தமில்லாதவை என்பதால் தான் காட்டுமிராண்டி என்ற சொல் உருவாக்கப் பட்டது.

பி.கு:

பின்னாளில் ஈ.வெ.ராமசாமி என்பவர் “தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை” என்று ஒரு கருத்தைக் கூறினார். அவரைத் தமிழரில் ஒரு சாரார் ‘பெரியார்’ என்றும் ‘தந்தை’ என்றும் கூட அழைத்து வருகின்றனர்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

கிகாலி முதல் பரமக்குடி வரை – 2

முந்தைய பகுதி: பாகம் 1

சென்ற பதிவில் ருவாண்டா எப்படி ஜெர்மனி ஆட்சியின் கீழ் வந்தது என்பதை பற்றி பார்த்தோம். முதல் உலக போரில் அடைந்த தோல்வியால் ருவாண்டாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஜெர்மனி படைக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் ருவாண்டாவிற்கு அருகில் இருந்த காங்கோ என்ற நாட்டை ஆக்கிரமித்து இருந்த பெல்ஜியம் ஜெர்மனி படையை விரட்டி ருவாண்டாவிற்குள் புகுந்தது. ருவாண்டா மன்னர் பெல்ஜியத்தின் காலனி நாடாக மாற்ற ஒப்புக் கொண்டார். ருவாண்டாவை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தவுடன் பெல்ஜியம் செய்த முதல் வேலை, தனது நாட்டுப் பாதிரியார்களை அங்கு இறக்குமதி செய்தது தான். ஜெர்மனி அதிகாரிகள் மிஷனரிகளை பயன்படுத்தி கொண்டார்களே தவிர அவர்களை ஆயுதமாக பயன்படுத்தவில்லை. ஆனால் பெல்ஜியமோ அவர்களை தனது இராணுவ பிரிவாகவே பயன்படுத்தியது.

1920 ஆம் ஆண்டு பெல்ஜிய காலனிய உயர் அதிகாரி காங்கோ மற்றும் அதன் சுற்றியுள்ள தனது கட்டுபாட்டில் உள்ள நாடுகளின் கிறித்துவ மிஷனரிகளுக்கு ஒரு சுற்றிக்கையை அனுப்பினார். இந்த சுற்றறிக்கை ஒவ்வொரு மதம் மாறிய இந்திய கிறித்துவரும் படிக்க வேண்டிய ஒன்று …. அவர் கூறியதின் ஒரு சில பகுதிகள் மட்டும் இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.

காலனி நாடுகளில் உள்ள கிறித்துவ மிஷனரிகளுக்கான கடமைகள்:

நீங்கள் இங்கு இருப்பது மதமாற்றம் செய்வதற்கு. உங்களின் முக்கிய வேலை கடவுளை பற்றிய விசயங்களை அவர்களுக்கு சொல்வது கிடையாது, கடவுளிடம் எவ்வாறு பிராத்திப்பது என்பது கருப்பர்களுக்கும் தெரியும். கொலை செய்வதும், திருடுவதும் தவறு என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் மதமாற்றம் செய்ய வந்து இருப்பது அவர்களுக்கு இறைவனை பற்றி சொல்வதற்கு அல்ல… நமது தேவைகளை பூர்த்தி செய்ய…..

இதற்காக கீழ் கண்ட விசயங்களை நீங்கள் மிக கவனமாக கடைபிடிக்க வேண்டும்

(1)       நமது காட்டுமிராண்டிக் கருப்பர்களைச் செல்வங்களின் மீது பற்று இல்லாதவர்களாக மாற்ற வேண்டும். ஏழைகள் தான் கடவுளை அடைய முடியும் என்றும்  செல்வம் சேர்ப்பது கடவுளுக்கு எதிரான விசயம் என்று பிரச்சாரம் செய்யுங்கள்.

(2)       நமது ஆட்சி முறையாலும் நமது தொழிலதிபர்களாலும் பல விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படலாம். அவ்வாறு நடக்கும் பொழுது அதற்கு எதிராக எவரும் போராட்டம், பழிவாங்கல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்குங்கள். துறவிகளை உதாரணம் காட்டி, அவர்கள் எவ்வாறு தனக்குத் தீங்கு இழைத்தவர்களை மன்னித்தார்கள், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை எவ்வாறு பொறுத்துக் கொண்டார்கள் போன்றவற்றை சொல்லி அவர்களைக் கோழைகளாக மாற்றுங்கள்

(3)       அவர்களின் ஒற்றுமையான சமுதாயத்தை சீர்குலைத்து ஒவ்வொருவரையும் தனிமைப் படுத்துங்கள். நம்முடன் இருப்பது தான் தனக்குப் பாதுகாப்பு என்று நம்மை தேடி தானாக வருவார்கள். இது போன்ற செயல்களை வயதானோர்கள் எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றி கண்டு கொள்ளாதீர்கள். அவர்கள் ஒரு சில வருடங்களில் இறந்துபோவார்கள். உங்களின் முக்கிய நோக்கம் வருங்கால சந்ததியினர் தான்.

(4)       முதல் கட்ட மதமாற்ற செயல்களிலேயே உங்களிடம் பணிவோடு இருக்கும் பழக்கத்தைக் கற்று கொடுங்கள். உங்கள் பள்ளிகளில் எக்காரணத்தை கொண்டும் உங்களிடம் கேள்வி கேட்கும் பழக்கத்தை மட்டும் அனுமதிக்காதீர்கள்.

(5)        கருப்பர்களின் கடவுள் உருவங்கள் மற்றும் பண்பாட்டு சின்னங்களைச் சாத்தான்களின் உருவங்கள் என்று கூறுங்கள். அவர்கள் பண்பாட்டுச் சின்னங்களை எல்லாம் அருங்காட்சியகத்திற்கு மாற்றுங்கள். கருப்பர்களின் நினைவில் இருந்து அவர்கள் மூதாதையர்களை பற்றிய எண்ணங்களை முழுமையாக மறந்திடச் செய்யுங்கள்.

(6)       உங்களை ‘ MY FATHER’ என்றே அழைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துங்கள். அவர்களை மனதளவில் உங்களின் அடிமைகளாக மாற்றுங்கள்.

அரசாங்கம் உங்களுக்கு முழு உதவியாக இருக்கும். கத்தோலிக்க மிஷனரி பள்ளிகள் கட்டவும், மதம் மாற்றம் செய்யவும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கிடைக்கும், எந்த நிலம் தேவைப் பட்டாலும் உடனடியாகக் கொடுக்கப்படும். வேலை ஆட்கள் இலவசமாகக் கொடுக்கப் படுவார்கள். நான் சொன்ன அனைத்து விசயங்களுக்கும் பெல்ஜியம் மன்னர் அனுமதி அளித்துள்ளார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது நாட்டிற்காக பாடுபடுவோம்.

வாழ்க பெல்ஜியம் மன்னர் !! வாழ்க பெல்ஜியம் நாடு !!

Source: A Classic colonial distortion of African history and its catastrophic consequences by Ntaganzwa

படத்தில் இருப்பவர் ருவாண்டாவின் கால்டுவெல்

பெல்ஜிய மன்னர் உத்தரவிட்டு விட்டார், பணமும் கிடைத்து விட்டது. சரி…. அதை எவ்வாறு செய்து முடிப்பது? இது போன்ற வேலைகளை செய்வதற்கு என்றே அந்த காலத்தில் பல பல்கலைக் கழகங்களையும் பல பேராசிரியர்களையும் வைத்து இருந்தனர் ஐரோப்பிய அதிபுத்திசாலிகள். அப்படி பட்ட ஒருவர் தான் GAMALIEL.  அவர் சொன்ன விசயத்தை அப்படியே இங்கு பதித்து உள்ளேன்.

For missionaries to succeed in “saving African souls,” they must first acquire political power, economic power, social power and cultural power in order to obtain massive, fast and long lasting conversions – Gamaliel

இவரின் பரிந்துரைப்படி கத்தோலிக்க மிஷினரிகள் பெல்ஜிய அரசாங்க உதவியுடன் மத மாற்றத்தைத் தீவிரப்படுத்தின. மிஷினரிகளின் மதம் மாற்றும் செயல்கள் ருவாண்ட மன்னர் முஸிங்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மன்னர் மத மாற்றத்திற்கு ஒரு மிகப் பெரிய தடைக் கல்லாகவே இருந்தாலும், கத்தோலிக்க மிஷனரிகள் மதம் மாறிய அரசியல் தலைவர்கள் மற்றும் மன்னர் குடும்ப உறுப்பினர்களை வைத்துத் தனது காரியங்களை சாதித்துக் கொண்டனர். ஆரம்ப காலத்தில் மன்னருடன் நேரடிச் சண்டையில் கத்தோலிக்க மிஷனரிகள் ஈடுபடவில்லை. இதற்கான முக்கிய காரணம் மன்னரின் அரசவையில் உள்ள அனைவரையும் மதம் மாற்றி அதன் மூலம் மன்னரைத் தனது கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது தான். அவர்கள் எதிர்பார்த்தது போலவே மத மாற்றம் நிகழ்ந்தது. முதலில் சாதுவாக நடந்து கொண்ட மிஷனரிகள், மன்னரின் அரசவையில் உள்ளவர்களை போதுமான அளவு மதம் மாற்றி பெரும்பான்மை பெற்ற உடன் தனது சுய உருவத்தைக் காட்டத் தொடங்கினர். மன்னரை முடக்கும் செயல்களில் இறங்கினர். மன்னரோ அவர்களின் மிரட்டலுக்கு அடி பணியாமல் தொடர்ந்து மிஷினரிகளின் மதம் மாற்றும் செயல்களுக்கு இடையூறாகவே இருந்தார்.

மன்னர் முராட்டாவுடன் பெல்ஜியம் மன்னர்

முடிவில் பெல்ஜியத்தின் உதவியுடனும் மதம் மாறிய மன்னர் குடும்பத்தினரின் உதவியுடன் மன்னர் முஸிங்காவை பதவி நீக்கம் செய்து நாடு கடத்தினர். கத்தோலிக்க கிறித்துவராக மதம் மாறிய அவருடைய மகன் முடாரா III என்பவர் மன்னராக்கப்பட்டார். முடாரா III மன்னர் ஆன பிறகு பெல்ஜியத்தை பாராட்டி அவர் கூறிய வார்த்தைகள்…

Christ the King to have given Rwanda the divine light of Belgian colonial administration along with its science of good government”.

(குறிப்பு: முடாரா III கத்தோலிக்க பாதரியார்களால் அவர்களின் பள்ளியில் வார்த்து எடுக்கப்பட்டவர். அவர்கள் அளித்த அந்த கல்வியே தந்தையையே நாடு கடத்தும் அளவுக்கு கொண்டு சென்றதோடு மட்டும் அல்லாமல் அவர்களது அடிமையாக இருப்பது தனக்குப் பெருமை என்று சொல்லும் அளவுக்கு அவரை மாற்றியது. பாரதத்தில் இருந்த பல மன்னர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் குழந்தைகள் இது போன்று வெளி நாடுகளில் படித்து அங்கு உள்ள பல்கலைக் கழகங்களில் வார்த்து எடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது)

முடாராவின் மத மாற்றம் ருவாண்டாவை இருண்ட காலத்திற்கு அழைத்துச் சென்றது. மன்னரே நாட்டுபற்று இல்லாமல் எதிராளியின் கைப்பாவையாகச் செயல் பட்டதால் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் காலனி அதிகாரிகள் மற்றும் வெள்ளைப் பாதிரியார் அமைப்பின் கீழ் வந்தது. சுருங்க சொன்னால் கத்தோலிக்க வெள்ளை பாதிரியார்கள் அமைப்பு ருவாண்டாவின் மன்னராட்சிக்கு இணையான ஒரு மாற்று அரசாங்கமாகத் திகழ்ந்தது.

ருவாண்டாவின் மேற்கத்திய முறையிலான கல்வி கூடங்களில் உயர் சாதி என்று கருதப்பட்ட துட்ஸி இனமக்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர். அவர்கள் பாடத்திட்டத்திலும் நமது நாட்டில் இருந்தது போல் குமாஸ்தா அளவிலான கல்வி முறையே போதிக்கப்பட்டது. பெல்ஜியம் உருவாக்கிய வறுமையின் காரணமாக மக்கள் பட்டினியால் உயிர் இழந்தனர். பலர் தங்கள் குழந்தைகளை மிஷனரிகளிடன் பணத்திற்காகவும் உணவிற்காகவும் விற்றனர். பல இடங்களில் குழந்தைகள் சர்வ சாதாரணமாகக் கடத்தப்பட்டு அனாதைகளாக மிஷனரிகளில் விற்கப்பட்டனர். இவ்வாறு விற்கப்பட்ட குழந்தைகளே பிற்காலத்தில் கத்தோலிக்கத்தின் ஆயுதங்களாக மாற்றப்பட்டனர்.

காங்கோ சுரங்கத்தில் கொத்தடிமைகளாக இருந்த ருவாண்டா மக்கள்

இந்த நிலையில் ருவாண்டா, புருண்டி மற்றும் காங்கோ பகுதிகளில் ஏராளமான சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சுரங்கங்களில் பணி செய்ய ஏராளமான மக்கள் தேவைபட்டனர். நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாய தொழிலை செய்து வந்தனர். பெல்ஜியத்தினருக்கு சுரங்க வேலைக்கு ஆட்கள் எளிதாக கிடைக்கவில்லை. இதனால் பெல்ஜிய காலனி ஆதிக்கவாதிகள் ருவாண்டாவின் விவசாயத்தை நாசம் செய்தனர். இதன் காரணமாக மிகப் பெரிய பஞ்சம் உருவானது. துட்ஸி மக்களை வைத்து ஹுடு இன மக்களை கொடுமைப்படுத்தி பெல்ஜிய காலனி அதிகாரிகளின் சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய வைத்தனர். பல ஆயிரம் கோடி மதிப்பு மிக்க கனிம பொருட்களை பெல்ஜியம் கொள்ளை அடித்தது (இந்த பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட யுரேனிய தனிமங்கள் தான் இரண்டாம் உலக போரில் ஜப்பானில் வீசப்பட்ட போன்ற அணுகுண்டுகளுக்கு பயன்படுத்தபட்டதாக ஒரு தகவலும் உண்டு).

இதை எல்லாம் பற்றி மன்னர் முடாரா கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டு இருந்தார். சுருக்கமாக சொன்னால் முடாரா இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி மாதிரி செயல்பட்டார். பெல்ஜியம் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கொள்ளை அடித்த கணக்கில் வந்த கனிம வளங்களின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.

பெல்ஜியம் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து சுரண்டிய கனிம வளங்களின் ஒரு பகுதி

30 ஆண்டு கால காலனி அட்சியில் உருவான மேற்கத்திய பொருளாதார கொள்கையில் ஒட்டு மொத்த நாடே வறுமையில் வாடியது. துட்ஸி இன மக்கள் மட்டுமே காலனி அரசாங்கத்தில் வெள்ளையர்களுக்கு அடிமை வேலை செய்ய அனுமதிக்கப் பட்டதால் அவர்கள் நிலை மட்டும் சற்று பாதிக்கபடாமல் இருந்தது. 80% ஹுடு இன மக்கள் பொருளாதார மாற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். கத்தோலிக்க கிறித்துவ அமைப்பு ஒடுக்கப்படும் ஹுடுகளுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. இந்த நிலையைப் பயன்படுத்தி கத்தோலிக்க கிறித்துவ மிஷினரிகளின் கீழ் வராத பிற கிறித்துவ அமைப்புகளான புரொட்டஸ்டண்ட் போன்ற அமைப்புகள் ஹுடு மற்றும் துட்சி சாதிகளுக்கு இடையே இருந்த பொருளாதார மற்றும் சமுதாய ஏற்றத் தாழ்வு பிரச்சனைகளை முன் வைத்து வளர முயற்சித்தன. கத்தோலிக்க அமைப்பு ஆளும் அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்ததால், புரொட்டஸ்டண்ட் அமைப்புகள் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்த போராளிகளுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டன.

நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று ஒரு தொழிற் சங்கங்களை உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது போல், ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தங்களுக்கு என்று ஒரு கிறித்துவ மதமாற்ற நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தங்களது வியாபார மற்றும் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி கொள்கின்றன (கூடம்குளம் அணுமின் நிலையத்தை வரவிடாமல் செய்ய வைப்பது போன்று). இதன் காரணமாக பல்வேறு கிறித்துவ அமைப்புகளுக்கு இடையேயும் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட பல்வேறு சண்டைகள் ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தன.

பேகன்களின் சிலுவை வெவ்வேறான வடிவத்தில் கிறித்துவ அமைப்புகளின் அடையாளங்களாக

புதிதாக வந்த கிறித்துவ மிஷனரிகள் பெல்ஜியத்தின் பொருளாதார சூழ்ச்சியினால் சமுதாயத்தின் கீழ் நிலைக்கு சென்ற ஹுடு இனத்தின் தலைவர்களை மதம் மாற்றியதோடு மட்டும் அல்லாமல், துட்சி இனத்தவர் ஹுடு இனத்தவர்களை காலம் காலமாக அடக்கி ஆள்வதாக பிரச்சாரமும் செய்தனர். இந்த பிரச்சாரங்கள் தனது பாரம்பரியம் மற்றும் வரலாற்றை மறந்த புதிய தலைமுறை ஹுடு மக்களுக்கு பழியுணர்ச்சியை தூண்டியது. ஹுடு இனத்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பையும் கொடுத்து அவர்கள் அரசாங்கத்தின் முக்கிய தலைமை பதவிகளை அடைய புதிய கிறித்துவ மிஷனரிகள் உதவி செய்தனர். இதன் விளைவாக ஹுடு சாதிகள் முழுமையும் மிகக் குறைந்த காலத்தில் வேகமாக மதம் மாறின. ஹுடு இன பாதரியார்கள் துட்சி இனத் தலைவர்களுக்கு எதிராக செய்த பிரச்சாரத்தின் காரணமாக நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடிக்க தொடங்கியது. ஹுடு இனத்தில் மத மாற்றமும் ருவாண்டாவில் கலவரமும் ஒரே விகிதத்தில் வளர்ந்தன. மிஷினரிகளின் இந்த பொய் பிரச்சாரத்தால் நாடே எரிந்து கொண்டு இருக்க… பெல்ஜியம் எந்த பிரச்சனையும் இன்றி கனிம வளத்தைக் கொள்ளை அடித்துக் கொண்டு இருந்தது. வேறு சொற்களில், பெல்ஜியம் கொள்ளை அடிப்பதை மக்களிடம் இருந்து திசை திருப்பவே பாதிரியார்கள் மூலம் இது போன்ற செயல்களை செய்தார்கள், பாதிரியார்கள் அதற்கு முழுவதுமாக ஒத்துழைத்தார்கள் என்றும் கூறலாம்.

ஏசு கிறிஸ்துவை விற்பனை செய்ய காரணமாக இருந்த கனிம வளங்கள்

இரண்டாம் உலக போர் முடிவுற்று ஐக்கிய நாடுகள் சபை உருவானது. 1919 ஆம் ஆண்டு ருவாண்டாவை ஆளும் அதிகாரத்தை பெல்ஜியத்திற்கு வழங்கிய League of Nations ஆணை ரத்து செய்யப்பட்டு, ருவாண்டா ஐநா சபையின் நேரடி கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டது. பெல்ஜியம் ருவாண்டாவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. வெளியேறும் முன்பு அனைத்து வளங்களையும் சுரண்டும் செயலில் பெல்ஜியம் அதிகாரிகள் இறங்கினர். மக்களிடம் பல்வேறு இன மோதல்களை உருவாக்கி, ருவாண்டா தன்னாட்சி நடத்தும் அளவுக்கு முன்னேறம் அடையவில்லை என்று கூறி, சர்வதேச நாடுகளையும் ஏமாற்றினர். ஆண்டுகள் பல கழிந்தன. ருவாண்டாவின் அனைத்து கனிம வளங்களையும் வரை முறையின்றி சுரண்டின. ஐநாவின் தொடர் வலியுறுத்தலின் காரணமாகவும், “கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சாதி பிரச்சனைகள் எழுந்ததன்” காரணமாகவும், பெல்ஜியம் ருவாண்டா நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. 1959 ஆம் ஆண்டு இது குறித்த வரைவு திட்டத்தை உருவாக்க முடாரா III மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையின் பொழுது மர்மமான முறையில் மன்னர் உயிர் இழந்தார். பெல்ஜிய மருத்துவர் மன்னருக்கு கொடுத்த தடுப்பூசியினால் தான் மன்னர் உயிர் இழந்தார் என்று குற்றம் சாட்டப் பட்டது. விசாரணை ஏதும் இன்றி அவர் உடலடக்கம் நடைபெற்றது.

அவர் உடலடகத்தின் பொழுது ஆப்பிரிக்காவின் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கு கொண்டனர். புருண்டி மன்னரும் கலந்து கொண்டார். புருண்டி மன்னர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே காலனிய ஆதிக்க நாடுகளையும் கிறித்துவ மிஷினரிகளையும் எதிர்த்தார் என்பது குறிப்பிடத் தக்கது. புருண்டி மன்னரிடம் அவர் ஏன் இன்னும் கிறித்துவராக மதம் மாறவில்லை என்ற காரணத்தை ஐரோப்பிய கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கேட்டார் அதற்கு அவர் கூறிய பதில் –

You want to know why I was never baptized? Look at the one you baptized, he is in a coffin!”

முராட்டா III மன்னர் உயிர் இழந்த பின்பு கிகேலி V பதவியேற்றார். புதிய மன்னர் பெல்ஜியத்தை கடுமையாக எதிர்த்தார். அரசியல் நிலையற்ற தன்மையையும் சாதி கலவரங்களையும் கட்டுபடுத்த பெரும் முயற்சியை செய்தார். ஆனால் மத மாற்றத்தின் மூலம் மக்களை தனது கட்டுபாட்டில் வைத்து இருந்த ஹுடு பாதரியார்களின் போராளி குழுக்களை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை.

1959 ஆம் ஆண்டு ஹுடு பாதிரியார்களின் தலைமையில் உருவான ஹுடு போராளி குழு அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்த பெல்ஜியம் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்தாமல் அதிகாரத்தில் இருந்த துட்சி இனத்தவர்களை தாக்கியது. சுமார் 20,000 துட்சி இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். நிலைமையை உணர்ந்த கத்தோலிக்க அமைப்பும் பெல்ஜிய காலணி ஆதிக்க நாடுகளும் அரசு மற்றும் சர்ச்சின் தலைமை பதவிகளில் இருந்த துட்சி இனத்தவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்து ஹுடு இனத்தவர்களை அமரவைத்தனர். அதிகாரத்தை கைப்பற்றிய ஹுடு இனத்தவர்கள் உடனடி தேர்தலை நடத்தி மன்னரை ஆட்சியில் இருந்து இறக்கினர். 1961 ஆம் ஆண்டு ருவாண்டாவின் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1962 ஆம் ஆண்டு ருவாண்டா சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தப்பட்டு முழுமையான ஹுடு இனத்தவர்கள் தலைமையிலான அரசாங்கம் கறைபடிந்த கைகளோடு உருவானது.

ருவாண்டாவின் தேசியக் கொடி

இது வரை ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தின் விளைவால் துட்ஸி மற்றும் ஹுடு இனத்தவர்களிடம் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை பற்றியும், மத மாற்றத்தின் காரணமாக முராடா மன்னர் தானும் அழிந்து தனது நாட்டையும் எவ்வாறு அழிவு பாதைக்கு கொண்டு சென்றார் என்பதை பற்றியும் கண்டோம். ஆனால் இது மட்டுமே 10 இலட்சம் மக்களை கொல்லும் அளவுக்கு ஒரு சமுதாயத்தை கொண்டு செல்ல முடியாது. அதற்கு வேறு ஒரு சக்தி வாய்ந்த காரணம் இருந்தது. அது என்ன என்பதை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

(தொடரும்)