
The man he brought with him to this family was also a nazi. This type of allegra good rx Sawangan dizziness is commonly called "anagyris". This may cause your menstrual periods to get disrupted.
What your body desires is a balance of everything. Generic generic amoxicillin clavulanate clomiphene retail price Pleasantville (zyvox) (500mg) Irritability of lips, especially if neurontin is taken with alcohol.
The penicillins were extremely effective against a wide range of bacteria but only about 30 of these antibiotics were used. Some drugstores also charge Esenyurt a prescription co-payment, and/or an additional amount if you do not want to buy their generic equivalent drug from a store. In this context, the use of antibiotics in farm animals is regulated by the eu’s directive 2006/112/ec, which aims to reduce antibiotic resistance in animals through the banning of certain antimicrobial substances, in particular antibiotics used for growth promotion.
ஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை (ஜூன் 4) நடத்திய பிரிவினைவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன). இதன் எதிரொலி அரசியல் வானில் இப்போது தீனமான சுவரத்தில் கேட்கிறது. ஆனால், இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு உலக அளவில் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய ராணுவம் போல பரிதாபத்திற்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் எளிதில் தாக்கும் இலக்காக நமது வீரர்களை சுட்டுக் கொல்வது வழக்கமான செய்தியாகவே இருந்து வந்துள்ளது. எந்தத் திசையிலிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத நிலையில், எதிர்த் தாக்குதலுக்கு அரசியல் அதிகார பீடத்திலிருந்து சமிக்ஞை கிடைக்காத நிலையில், கைவிடப்பட்டவர்களாகவே அவர்கள் பெரும்பாலும் போராடி வந்திருக்கிறார்கள்.
கார்கில் எதிர்த் தாக்குதல் போன்ற சில நல்லனுபவங்கள் இருந்தாலும், விடுதலைக்குப் பிந்தைய 68 ஆண்டுகளில் பெரும்பான்மைக் காலகட்டம் நமது ராணுவத்தின் மன உறுதியைக் குலைப்பதாகவே அமைந்திருந்தது. காஷ்மீரில் கல்வீசும் வெறியேற்றப்பட்ட இளைஞர்களையோ, முகாமில் புகுந்து படுகொலை செய்யும் பாக். ஆதரவு பயங்கரவாதிகளையோ இதுவரை நமது ராணுவத்தால் அடக்க முடியாததற்கு காரணம், நமது ராணுவத்தின் முயலாமை அல்ல; அவர்களைக் கட்டிப்போடும் அரசியல் அதிகார பீடத்தின் இயலாமையே அதற்குக் காரணம்.
இத்தகைய மோசமான நிலைப்பாடு தற்போது மாறி இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்தே பல துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் புலப்படத் துவங்கியிருக்கின்றன. அதில் பாதுகாப்புத் துறையும் முக்கியமானது. பாதுகாப்பு அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பேற்ற பிறகு அதன் செயல்பாடுகள் புது வேகம் பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் மணிப்பூர் பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல்.
1998 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் உள்துறை அமைச்சராக அத்வானியும் பாதுகாப்பு அமைச்சராக ஜஸ்வந்த் சிங்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸும் இருந்தபோது ஜம்மு காஷ்மீரில் நமது ராணுவம் செயல்படுத்திய ‘முந்திக் கொண்டு முதலடி கொடுக்கும் நடவடிக்கை’ (ப்ரோ ஏக்டிவ் பாலிஸி) காரணமாகத் தான் ஜம்மு காஷ்மீரில் வேட்டுச் சத்தம் குறைந்தது என்பதும், அங்கு ஜனநாயகம் மீட்கப்பட்டது என்பதும் உண்மை. அத்தகைய அணுகுமுறையே இப்போதும் மியான்மரில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்நிய நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது தான் புதிய விஷயம். அதுவும் மியான்மர் அரசின் ஒப்புதலுடன், நமது ராணுவம் அங்கு புகுந்து தாக்குதல் நடத்தும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கான களத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள் பிரிவினைவாதிகளே.

கடந்த ஜூன் 4-ம் தேதி, மணிப்பூர் மாநிலத்தில் கண்காணிப்புப் பணிக்காகச் சென்றுகொண்டிருந்த இந்திய ராணுவ வீர்ர்கள் மீது ராக்கெட் லாஞ்சர்கள், பயங்கர ஆயுதங்கள் கொண்டு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில், நமது வீர்ர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு நாகலாந்து தேசிய சோஷலிஸ கவுன்சில் (கப்லாங்) என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதன் பின்னணியில் சீனாவின் மறைமுக உதவி இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் பழங்குடியினச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு, அண்டை நாடுகளின் உதவியுடன் இயங்கும் பல பிரிவினைவாத இயக்கங்கள் அப்பகுதிகளில் ஆங்காங்கே செயல்படுகின்றன. இவற்றுக்கு கிறிஸ்தவ மிஷனரி உதவிகளும் உண்டு. திரிபுரா, மேகாலயா, மணிப்பூர், மிஸோரம், நாகலாந்து, அஸ்ஸாம், அருணாசல் ஆகிய மாநிலங்களில் இயங்கும் இந்தப் பழங்குடியின பிரிவினைவாதக் குழுக்கள் அவ்வப்போது எதிர்த்தரப்பை தாக்குவது வழக்கம். அங்கு அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம், எதிரி யார் என்றே தெரியாமல் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரிவினைவாதக் குழுக்களை முடக்கவும், இப்பகுதி மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கவும் பல முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், புவியியல் சிக்கல்கள், எல்லைப் பிரச்னைகள், அரசியல் நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக, இப்பகுதியில் அடிக்கடி நிச்சயமற்ற நிலைமை ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் குழப்பம் ஏற்படுத்த சீனா முயல்கிறது.
நமது வட கிழக்கு அண்டைநாடுகளான மியான்மர், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றில் சீனாவின் கொடுங்கரம் நீண்டு வருகிறது. இதை மாற்றும் வகையில் அண்மைக்காலமாக பிரதமர் மோடியின் அயலுறவுப் பயணங்கள் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகின்றன. அதன் வெற்றிகரமான விளைவே மியான்மர் எல்லைக்குள் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல் எனில் மிகையில்லை.
பொதுவாக, வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் பிரிவினைவாதிகள் இங்கு தாக்குதலை நடத்திவிட்டு, அண்டை நாட்டிற்குள் நுழைந்து பாதுகாப்பாக இருந்துகொள்வது வழக்கம். இதனை அண்டை நாடுகளும் தடுக்க முடிவதில்லை. அங்குள்ள அடர் கானகங்களில் முகாம் அமைத்து பயிற்சி பெறும் பிரிவினைவாதிகள், திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு மாயமாகிவிடுவார்கள். இவர்களைத் தடுக்கவோ, பதிலடி கொடுக்கவோ நமது பாதுகாப்புப் படையினரால் முடிவதில்லை. இந்த இயலாமைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, மியான்மரில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்.

அண்மையில் (2014 நவம்பர் 19) மியான்மர் நாட்டிற்குச் சென்ற பிரதமர் மோடியின் அணுகுமுறையால், அந்நாட்டுடன் இதுவரை இருந்த இறுக்கம் மறைந்து நட்பு மலர்ந்துள்ளது. தற்போது தங்கள் நாட்டிற்குள் புகுந்த நாகலாந்து பிரிவினைவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததற்கு இந்த நட்பே காரணம். பிறகு சீன நெருக்கடிக்கு அஞ்சி இத்தாக்குதல் தங்கள் நாட்டின் எல்லைக்குள் நடக்கவில்லை என்று மியான்மர் அரசு மறுத்தாலும், உலகம் உண்மையை உணர்ந்துவிட்டது- இனிமேல் இந்தியா வேடிக்கை பார்க்காது.
இந்திய வீரர்கள் பலியாவதும், அவர்களுக்கு மலர்வளையம் வைத்து குண்டு முழங்க ராணுவ மரியாதை செலுத்துவதும் பழைய கதைகள். இனிமேல் இந்திய வீர்ர் ஒருவர் தாக்கப்பட்டாலும், இந்திய ராணுவம் எப்படிச் செயல்படும் என்று இப்போது உலகிற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் தாக்குதல் நடத்திவிட்டு மியான்மர் எல்லைக்குள் தலைமறைவான பிரிவினைவாதிகளின் இரு முகாம்களை ஜூன் 9-இல் முற்றுகையிட்டு இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியதில் 38 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் மறைவிடங்களில் இருந்து பெருமளவிலான பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை ராணுவ தலைமை தளபதி சுஹாக் ஒருங்கிணைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படியே இந்த நடவடிக்கைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டன.
இந்த அதிரடித் தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ’21 பாரா’ பிரிவைச் சார்ந்த 70 பேர் ஈடுபட்டனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், தாக்குதலை வெற்றிகரமாக முடித்து நமது வீரர்கள் முகாம் திரும்பிய பிறகே இத்தகவல் அனைவருக்கும் தெரிய வந்தது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை காரணமாக, நாகலாந்து பிரிவினைவாத அமைப்புக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று சீன அரசு மறுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு தீர்வு காண இந்தியா எத்தனை தீவிரம் காட்டும் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். “மியான்மர் அரசுடன் நல்லுறவு கொண்டிருப்பதால் அந்நாட்டு ராணுவ உதவியுடன் இந்த தாக்குதல் நடத்த முடிந்தது; எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட எவ்வித அச்சுறுத்தலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும். இது ஒரு தொடக்கம் தான்” என்று கூறியிருக்கிறார் மற்றொரு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ராத்தோர்.
இந்தியாவின் இந்த அதிரடியால் அரண்டுபோன பாகிஸ்தான், தானாக முன்வந்து வாக்குமூலம் கொடுக்க துவங்கி உள்ளது. மியான்மரில் இந்தியா தாக்குதல் நடத்தியது போல பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திவிடுமோ என்ற அச்சத்தால், ”பாகிஸ்தான் மியான்மர் அல்ல” என்று புலம்பி இருக்கிறார் பாக். அமைச்சர் ஒருவர். அதற்கு “இந்தியாவின் புதிய அணுகுமுறையால் அச்சமடைந்தவர்கள் பிதற்றத் துவங்கியுள்ளனர்” என்று பெயர் குறிப்பிடாமல் பதிலடி கொடுத்திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர். “ஆட்சியில் இருப்பவர்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படும்போது பல விஷயங்களும் மாறுகின்றன. பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கை நாட்டின் பாதுகாப்புச் சூழல் தொடர்பான மனப்போக்கையே மாற்றிவிட்டது” என்றும் அவர் கூறி இருக்கிறார் பாரிக்கர்.
இந்தக் கருத்து முற்றிலும் உண்மை. கிழடு தட்டி மயங்கிக் கிடந்த பழைய சிங்கம் அல்ல இப்போதைய இந்தியா. தற்போதைய இந்தியா கர்ஜிக்கும் இந்தியா. உடனடி முடிவெடுக்கும் திறன் படைத்த, ஓய்வறியாமல் பணியாற்றும் தலைமை கொண்ட, நாட்டுநலனே பிரதானமாகக் கொண்ட அரசைப் பெற்றிருக்கிறது இன்றைய இந்தியா.
அதன் எதிரொலி இப்போது வடகிழக்கில் மின்னலாக வெளிப்பட்டிருக்கிறது. இந்த மின்னலைத் தொடர்ந்து வரும் இடியோசை பகையை வெல்லும். அதைத் தொடரும் மழையால் மண் குளிரும். நாடும் செழிக்கும்.
.