ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

நாவலரும் அவர் வழி வந்த நல்லறிஞரும் திருத்தி வளர்த்த நம் தமிழ்மொழி இப்போது சிதைக்கப்பட்டு வருவது கொடுமையானது. பத்திரிகைகள் முதலிய ஊடகங்களிலேயே பல எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் மிக அதிகளவில் காணப்படுகின்றன. சிலரது எழுத்துக்களில் ஆங்கிலத்தில் வேற்றுமையுருபுகளை பெயருடன் சேர்க்காமற் பிரித்தெழுதுவது போல, தமிழில் எழுத முயல்வது தெரிகின்றது. புதிது புதிதாக பல மரபுகள் உருவாகின்றனவா? என்று ஐயமுண்டாக்குவதுபோல பலரது எழுத்துநடை உள்ளது.

View More ஆறுமுகநாவலரின் தமிழ் நடை

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5

உங்கள் பரிசுத்தவேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பல புத்தகங்களிலிருந்து போதுமான ஆதாரங்களோடு உங்கள் ஆண்டவராகிய ஜெஹோவாவின் தீயகுணங்களை ஒவ்வொன்றாக நிருபித்துள்ளோம். சொல்லாலும், செயலாலும், உணர்வாலும் அவர் தீமையின் உறைவிடமாக விளங்குகிறார் என்பதை இங்கே தெள்ளத்தெளிவாகக் கண்டோம். இன்னும் பைபிளில் காணப்படும் ஆதாரங்களை அடுக்கினால் எமது நூல் மிகவும் விரிவாக நீளும், ஆகவே இதுவே போதும்.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 5

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4

ஆதி மனிதர்கள் ஜெஹோவால் விலக்கப்பட்ட பழத்தினை சாப்பிட்டதால் அவர்களுக்கு நல்லது எது, தீயது எது என்பவற்றை உணரும் பகுத்தறிவு வந்தது என்று உங்கள் பரிசுத்த வேதாகமம் கூறுகிறதே! அப்படியானால் மனிதர்கள் பகுத்தறிவோடு இருக்கக்கூடாது என்று தடைசெய்த உங்கள் கர்த்தரின் செயல் சரிதானா? தனது பிள்ளைகள் பகுத்தறிவைப் பெறக்கூடாது என்று நினைத்த அவரது நோக்கம் நேர்மையானதா?… தன்னிச்சைப்படி தன்னைப்போலவே படைக்கப்பட்ட மனிதரின் செயலைக்கண்டு ஜெஹோவா ஏன் வருத்தப்படவேண்டும்? தூய உயிர்களாக இருந்த மனிதர்கள் பாவிகளானதற்காக அவர் வருத்தப்பட்டது புரிகிறது. அவர்கள் பாவிகளாதைத் தவிர எந்தத் தீங்கையும் இழைக்கவில்லையே?…

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 4

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

தமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்?….

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1

ஸ்ரீலஸ்ரீசுவாமிகள் அறிவார்ந்த தமது சீடர்களில் சிலருக்கு இந்த நூலைக்கற்பித்து, அவர்களை சிறந்த சொற்பொழிவாளர்களாகவும் பயிற்றுவித்தார். கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் பொதுவிடங்களிலும் கோயில்களிலும் கூடும் ஹிந்துக்களிடையே பிரச்சாரம் செய்யும்போது, சுவாமிகளின் இந்த சீடர்களும் கிறிஸ்தவத்தினை கண்டிக்கும் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். பின்னாளில் 1890க்குப்பிறகு சுவாமிகளின் இரு முக்கிய சீடர்கள் கேரளம்முழுவதும் பிரயாணம்செய்து கிறிஸ்துமதச்சேதனத்தில் உள்ளக் கருத்துக்களைப் பரப்பினார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மதமாற்றத்தின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது….

கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தடுத்து முறியடிப்பதற்கு மிகச்சிறந்தவழி அவர்களது கிறிஸ்தவம் மட்டுமே உண்மையானமதம் என்ற கருத்தினை நிராகரிப்பதுதான் என்று ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் தெளிவாக அன்றே உணர்ந்திருந்தார்.

View More கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 1

ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்

தலித்துகளை மையப்படுத்தி இருக்கின்ற பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. இதையெல்லாம் விட்டுவிட்டு பாஜக அரசாங்கத்தை மட்டும் குறிவைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதிலிருந்து – இந்துமதத்தை மட்டும் குறிவைத்து தாக்கி நிகழ்ச்சி நடத்தப்படுவதிலிருந்து இந்த அமைப்பின் நோக்கமும், இந்த அமைப்பினை பின்னால் இருந்து இயக்குகின்ற அமைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.

View More ஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்

திரைப்பார்வை: The Man from Earth

ஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது…. யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம்…. கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது….

View More திரைப்பார்வை: The Man from Earth

ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

இதை சொன்னவர் யார்? ஊகிக்க முடிகிறதா? “இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்….”

View More ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்

பேசமுடியாதவர்கள் பாடுகிறார்கள், கேட்க முடியாதவர்கள் ரசிக்கிறார்கள். பிறவிக் குருடர்கள் கண்பார்வை பெற்று ஓவியம் வரைகிறார்கள். ஊனமுற்றோருக்குக் கை, கால் முளைக்கிறது… 1972-இல் வங்கி கிளர்க் வேலையிலிருந்தவர் 2008-இல் தீவிர நோய்க்கு ஆட்பட்டு இறக்கும்போது அவரின் சொத்து மதிப்பு சுமாராக 15,000 கோடி ருபாய்கள்.. ‘பாவிகளை அழிப்பதற்காக கர்த்தரின் கோபமே சுனாமி’ என்ற பால் தினகரனை அங்கீகரிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏது உரிமை?… இங்கிலாந்தில் இந்த உளறல்களைப் பொதுஇடங்களில் நடத்தத் தடை. ஆனால் இந்தியாவில்… மோகன் சி லாசரஸ் குறித்த அவரது பாலியல் இச்சைகளால் விலகிப்போன சொந்த மகன் ஜாய்ஸ்டன் நக்கீரனில் தெரிவித்த கருத்துகள்… ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை… மோசடிக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையை செய்யத் தவறி வருகிறது அரசு…

View More ஏசு கிறிஸ்து: ஓர் ஏகபோக ஏமாற்று வியாபாரம்

தமஸோ மா… – 1

“மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்கள் சாமுவேல்… இது ஞாயிற்றுக்கிழமை விவிலிய வகுப்பு கதை அல்ல. இது சரித்திரம். எல்லா பிரிட்டிஷ் வன்முறைக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் இருக்கும் அல்லது கற்பிக்கப்படும்… பெருமளவு உலகத்தின் வரலாற்றை, சர்வ நிச்சயமாக இந்த தேசத்தின் வரலாற்றை எழுதும் கடமையை கர்த்தர் நம்மிடம்தான் கொடுத்திருக்கிறார். இதோ இந்த பாவப்பட்ட இந்திய மக்களின் வரலாற்றையும் நாம்தான் எழுதி அவர்களுக்கு அளிப்போம்.. பஞ்சாபின் இந்த கிணற்றுக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் உண்டு. அதை நாம் அவர்களுக்கு சொல்வோம்… பின்னர் அவர்களின் வரலாற்றாசிரியர்களே அதை அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்பிப்பார்கள்… இதுவும் விவிலிய வகுப்புகளின் கதைகளாகும் நாள் வரும். அப்போது அது நல்லொழுக்கமும் இறையச்சமும் ஊட்டும் சுவையான கதையாகவே இந்த நாட்டுக்கு இருக்கும். கவலைப்படாதீர்கள்… சாமுவேல்… இந்தியாவின் வரலாறு எப்போதுமே அதை வெற்றி கொண்டவர்களால்தான் எழுதப்பட்டு வந்துள்ளது, இந்தியர்களால் அல்ல”

View More தமஸோ மா… – 1