சுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்
தொகுப்பு: ஏகநாத் ரானடே (Rousing call to the Hindu nation)
தமிழில்: ஆர்.கோபாலன்
வெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.
In the united states, it is estimated that more than 5 million dogs are diagnosed with pmc each year, with the most common cause of death being rupture of the colon leading to se. It is a white crystalline powder with the molecular formula c21h27n3o3s and the molecular weight of 398.7, the solubility in ethanol buy clomiphene citrate side effects El Centro is 0.1%, the melting point is 210°c, the density is 1.30 g/ml and the specific gravity is 1.37. You have 48hrs to test the drug and get a full refund.
It is up to us to make the choice to be well again. Tamodex 20 mg tablet price the president’s campaign has been in full swing for weeks and, https://blog.ratonviajero.com/madrid-mas-mercados-y-menos-mercadillos/ despite his recent remarks about the need for “compromise,” he seems to be trying hard to avoid the type of political fight that could be expected in a campaign. It is intended to provide informative information only.
Some people talk about this feeling much more intensely when it comes to their faith in god and in his creation than when it comes to science. Take Sagua de Tánamo clomid online kaufen the medicine as directed by your doctor, or according to the instructions that come with your prescription. You may also have to contact a doctor or a pharmacist before you start to take corticosteroids for any reason.
தொடர்ச்சி..
உனது ஸ்வதர்மத்தைச் செய் – இதுவே உண்மைகளில் பேருண்மையாகும்:
வீரர்கள்தான் உலகில் இன்பம் அனுபவிக்கிறார்கள். உனது வீரத்தைக் காட்டு. சாம, தான , பேதம், தண்டம் என்ற நால்வகை உபாயங்களையும் சந்தர்ப்பங்களுக்குத் தக்க உபயோகப்படுத்தி, உனது எதிரியை வென்று உலகில் இன்பம் அனுபவி. அப்பொழுதுதான் நீ தார்மிகன் ஆவாய். அப்படியில்லாமல் யாராவது ஒருவன் தன் மனத்தில் தோன்றியபடி உன்னை உதைத்து மிதித்தால், நீ அந்த அவமானத்தைச் சகிப்பாயானால் அவமானகரமான வாழ்க்கையே வாழ நேரும். இவ்வுலகில் உனது வாழ்க்கை சரியான நரக வாழ்க்கை ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகும். சாஸ்திரங்கள் இதைத்தான் கூறுகின்றன. “ உனது ஸ்வதர்மத்தைச் செய்துவா; இதுதான் உண்மை. உண்மைக்கெல்லாம் உண்மை.” எனது மதத்தைச் சார்ந்தவர்களே! உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். ஆனால் ஒன்று: எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். எவரையும் துன்புறுத்தவோ, கொடுமைப்படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்தவரையில் பிறருக்கு நன்மை செய்யப்பாருங்கள். ஆனால் இல்லறத்தானாக இருப்பவன் பிறர் செய்யும் தீமைகளுக்குத் தலை வணங்குவானாயின், அது பாவமாகும். அவன் அப்பொழுது அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் திருப்பித் தர வேண்டும். இல்லறத்தான் பெரு முயற்சி செய்து, உற்சாகத்துடன் பணம் ஈட்டவேண்டும். அதைக் கொண்டு தனது குடும்பத்துக்கும் பிறருக்கு ஆதரவு தந்து, வசதிகளைச் செய்வதுடன் முடிந்த வரை நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். உன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றால் மனிதன் என்று உன்னை எப்படி அழைத்துக் கொள்கிறாய் ? நீ சரியான கிருஹஸ்தன் ஆகமாட்டாயே? உனக்கு மோட்சம் கிடைப்பது பற்றி என்ன சொல்வது?
இரண்டு விதமான சுபாவங்களுக்கு வெவ்வேறு பாதை:
இப்பொழுது பின்பற்ற வேண்டிய நல்ல பாதை எது? மோட்சத்தை (விடுதலையை) விழைகிற மனிதனுக்கு உகந்த பாதை ஒன்று: தர்மத்தை விரும்புகிறவனுக்கு உகந்த பாதை மற்றொன்று; இந்தப் பேருண்மையைத்தான் கீதாசாரியனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதையில் விளக்க முயன்றார். இந்தப் பேருண்மையின் மீது தான் வர்ணாசிரம அமைப்பு, ஹிந்து சமாஜத்தின் ஸ்வதர்ம தத்துவம் முதலியனவெல்லாம் நிறுவப்பட்டுள்ளன.
அத்வேஷ்டா ஸர்வ பூதானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: சமதுஃக்கஸுக்ஷமீ. ( பகவத் கீதை – அ. 12 சு. 13 )“எதிரியற்றவன், எல்லோரிடமும் நட்பும் தயையும் வாய்ந்தவன்; ‘நான், எனது’ என்ற உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”
இதுவும் இதுபோன்ற மற்ற அடைமொழிகளும் மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டவனுக்கே பொருந்துவன.
க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த்த² நைதத் த்வய்யுபபத்³யதே
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப (பகவத் கீதை – அ.2 சு.3)“ஆண்மையின்மைக்கு இடம் கொடாதே. பிருதாவின் குமாரனே! அது உனக்குப் பொருந்தாது. மனத்திலுள்ள இந்த இழிந்த பலவீனத்தை உதறிவிட்டு எழுந்து நில். எதிரிகளைப் பொசுக்குவோனே!”
தஸ்மாத் த்வமுத்திஷ்ட² யசோ லப⁴ஸ்வ
ஜித்வா சத்ரூன் பு⁴ங்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம்
மயைவைதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்ய ஸாசின்! (பகவத் கீதை – அ. 11 சு. 33 )“ ஆகவே நீ எழுக ! புகழ் பெறுவாயாக ! உனது எதிரிகளை வென்று வளமான அரசாட்சியை அனுபவிப்பாயாக! உண்மையில் என்னால் இவர்கள் முன்னரே கொல்லப்பட்டுவிட்டனர். ஸவ்யஸாசியே (அர்ஜுனா), நீ ஒரு கருவியாக மட்டும் இருப்பாயாக!
இந்த உபதேசங்கள் தர்மத்தை முக்கிய இலக்காகக் கொண்ட இல்லறத்தானுக்குப் பொருந்துவன.
சாத்விக அமைதிக்கும் தாமசகுணத்தின் மந்த நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு:
வெளியிலிருந்து பார்த்தால் நீ இருப்பது சத்வ குண நிலையிலா அல்லது தாமச குண நிலையிலா என்று நமக்கு எப்படிப் புரியும்? எல்லா இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டு, எல்லாவிதச் செயல்களையும் வேலைகளையும் கடந்து சாத்விகமான அமைதி நிலையில் நாம் இருக்கிறோமா, அல்லது உயிரற்று, ஜடப் பொருள்போல் நம்மிடம் வேலை செய்யச் சக்தி இல்லாததால் வேலை எதுவும் செய்யாமல் இருந்து கொண்டு அமைதியாக, படிப்படியாக உளுத்துப் போய், உள்ளுக்குள்ளே இழிகுணம் சூழ்ந்து, மட்டரகமான தாமச நிலையில் இருக்கிறோமா? இந்தக் கேள்வியை நான் உண்மையாகவே கேட்கிறேன். பதில் தரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறேன். உனது சொந்த மனத்திடமே கேள். உண்மை எதுவென உனக்குத் தெரியும்.
சாத்விக அமைதி-மகத்தான சக்திகளின் உறைவிடம்:
ஆனால், பதிலுக்காகக் காத்திருப்பதற்கு என்ன அவசியம்? மரத்தை அதன் பழத்திலிருந்து அறியலாம். சத்வ நிலையில் ஒரு மனிதன் இருக்கும்பொழுது நிச்சயமாகவே செயல் புரியாமல் அமைதியாக இருப்பான்! அந்தச் செயலின்மை மகத்தான சக்திகளை ஒரு முனைப்படுத்திக் குவித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். அந்த அமைதி அபார சக்தியின் பிறப்பிடம் ஆகும். மிக உயர்ந்த சாத்விக நிலையிலுள்ள அந்த மனிதன் நம்மைப் போல் கைகளாலும் கால்களாலும் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை. மனத்தால் நினைத்தாலே எல்லா வேலைகளும் உடனே மிகச் செம்மையாக நிறைவேறிவிடும். சத்வ குணம் மேலாதிக்கம் செலுத்தும் அந்த மனிதன்தான் அனைவராலும் வணங்கப்படுகிற பிராம்மணன் (இங்கு, பிரம்மத்தை அறிந்தவன் எனபது பொருள்). வீட்டுக்கு வீடு போய்த் தன்னை வணங்கும்படி மற்றவர்களை அவன் கெஞ்சிக் கேட்க வேண்டுமா? சர்வசக்தி வாய்ந்த உலக அன்னையானவள் தனது சொந்தத் திருக்கரத்தால் பொன்னெழுத்துக்களில் அவனது நெற்றியில், “இந்த மகானை, என் புதல்வனை, அனைவரும் வழிபடுக” என்று எழுதுகிறாள். உலகம் அதனைப் படிக்கிறது, கவனிக்கிறது. பணிவுடன் அவன் முன் தன் தலையைத் தாழ்த்தி வணங்குகிறது.
உண்மையில் அந்த மனிதன்,
அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தானாம் மைத்ர: கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார: ஸமது:கஸுக க்ஷமீ (பகவத் கீதை – அ.12.சு.13)“எதிரி அற்றவன்; எல்லாரிடமும் நட்பும், தயையும் வாய்ந்தவன். ‘நான், எனது’ என்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”
தாமச குணம் வாய்ந்த மந்த நிலை – மரணத்தின் சின்னம்:
கோழைகள், பேடித் தன்மை வாய்ந்தவர்கள். மூக்கால் முணுமுணுத்து வார்த்தைகளைக் கடிந்து பேசுகிறவர்கள். ஒருவார காலமாகப் பட்டினி கிடப்பவனைப் போல மெல்லிய இழைந்த குரல் உடையவர்கள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோலத் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள். இது மட்டரகமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்வ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும். முழுவதும் இழிகுணமும், நாற்றமும் நிறைந்தவர்கள். அர்ஜுனன் இத்தகையவர்களின் கோஷ்டியில் விழ இருந்தான். அதற்காகவே தான் பகவான் விஷயங்களை இவ்வளவு விரிவாக விளக்குகிறார். இதுதான் உண்மையல்லவா? பகவானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட முதற் சொல்லைக் கவனியுங்கள். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த நைதத் த்வய் யுபபத்யதே” (ஆண்மையற்ற குணத்துக்கு இடங்கொடாதே, பார்த்தனே! அது உனக்கு அழகல்ல ), அதன் பின்னர் ‘தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோ லபஸ்வ’ ( ஆகவே, நீ எழுந்து நில், புகழ் பெறு!) என்றார்.
கடந்த ஆயிரமாயிரமாண்டுகளாக நாட்டு மக்கள் ஆகாயம் முழுவதையும் பகவானின் பெயரால் நிரப்பி வருகிறார்கள். பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடவுள் ஒரு போதும் அதற்குச் செவி சாய்க்கவில்லை. மூடனின் ஓலத்தை மனிதனே ஒரு போதும் கேட்பதில்லையே, கடவுளா கேட்பாரென நினைக்கிறீர்கள் ? இப்பொழுது கடைத்தேற ஒரே வழிதான் உண்டு. அது, கீதையில் பகவான் கூறியுள்ள சொற்களைக் கவனித்துக் கேட்டு நடப்பது – க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த ( பார்த்தனே! ஆண்மையற்ற தன்மைக்கு இடங்கொடாதே). தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ (ஆகவே நீ எழுந்து நில். புகழ் பெறு).
விதியின் பெரிய வேடிக்கை:(*)
இதிலிருக்கிற வேடிக்கையைக் கவனியுங்கள். ஐரோப்பியர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்து போதித்தார். “எதிரியே உனக்கு இருக்கக் கூடாது. உன்னைச் சபிக்கிறவர்களை நீ ஆசீர்வதி. உன் வலது கன்னத்தில் அறைந்தால், நீ இடது கன்னத்தையும் காட்டு; உனது வேலைகளனைத்தையும் நிறுத்திவிட்டு மறு உலகுக்குச் செல்ல ஆயத்தமாகு; உலக முடிவு மிக நெருக்கத்தில் உள்ளது” என்றார். ஆனால், கீதையில் நமது பகவான், “எப்பொழுதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரிகளை அழித்து உலகத்தை அனுபவி” என்றார். ஆனால் கடைசி முடிவில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உட்பொருளாக எதைக் குறிப்பிட்டார்களோ அதற்கு நேர் எதிரிடையான முடிவு ஏற்பட்டது. ஏசு கிறிஸ்துவின் சொற்களை ஐரோப்பியர் ஒரு போதும் கருத்துடன் கவனித்து ஏற்கவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்பான பழக்க வழக்கங்களுடன் அபாரமான ராஜஸ குணங்கள் வாய்ந்து , துணிகரமாக, இளமைத் துடிப்புடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் சுகபோகங்களையும், வசதிகளையும் திரட்டிச் சேர்த்து, மனம் அலுக்கும்வரை அவற்றை அனுபவிக்கிறார்கள்.
நாமோ மூலையில் உட்கார்ந்து கொண்டு, இரவு பகலாகச் சாவைப் பற்றி நினைந்து, “நளிநீ த³லக³த ஜலமதிதரலம் தத்வஜ்ஜீவனம் அதிசயசபலம்” (தாமரை இலைமீதுள்ள தண்ணீர் நடுங்குகிறது, நிலையில்லாதிருக்கிறது; அதுபோல் மனிதனின் ஆயுள் அற்பமானது. அநித்தியமானது) என்று பாடுகிறோம். அதன் விளைவாக நம் ரத்தம் உறைந்துபோய், நமது உடலின் மாமிசம் மரண தேவனான யமனின் பயத்தால் அஞ்சிக் கெஞ்சுகிறது. அந்தோ! யமன் கூட நமது சொல்லையே சரியென நம்பி விட்டான் போலும்! பிளேக் நோயும் மற்றும் பல நோய்களும் நமது நாட்டினுள் நுழைந்து விட்டன.
கீதை உபதேசத்தைப் பின்பற்றுவோர் யார்? ஐரோப்பியர்கள்! ஏசு கிறிஸ்துவின் விருப்பப்படி நடப்பவர்கள் யார்? ஸ்ரீகிருஷ்ணனின் சந்ததிகள்! இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
[ (*) – சுவாமிஜியின் மேற்கண்ட அவதானிப்புகள், பாரதம் காலனிய அடிமைத் தனத்தில் வீழ்ந்திருந்த போது, 1880 – 1902 காலகட்டத்தில் சொல்லப் பட்டவை என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.]
புத்தர் உபதேசங்கள்:
புத்த சமயம், வேத சமயங்கள் ஆகியவற்றின் குறிக்கோள்கள் ஒன்றேதான். ஆனால் புத்த சமயத்தவர்கள் கடைப்பிடித்த வழி முறைதான் சரியில்லை. பௌத்தர்களின் வழிமுறை சரியாக இருந்திருக்குமானால் ஏன் மீண்டும் ஈடேற முடியாதபடி அழிந்து குலைந்து போகிறோம் நாம்? காலவெள்ளம் இயற்கையாக இதனை விளைவித்து விட்டது என்று கூறினால் போதாது. காரண-காரியச் சட்டங்களை மீறிக் காலத்தால் செயல்பட முடியுமா?
ஐரோப்பா கிறிஸ்துவைக் கைகழுவி விட்டதால் உயிர் பிழைத்தது:
வேத சமயங்கள் தான் வழிமுறைகளைப் பற்றிக் கவனித்து, மனிதன் எய்த வேண்டிய நான்கு நிலைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுக்கான சட்ட திட்டங்களை வகுத்து வைத்துள்ளன. புத்தர் நம்மை அழித்தார். அது போல கிறிஸ்து கிரீஸையும் , ரோம் நாட்டையும் அழித்தார். பின்னர் காலப் போக்கில் அதிர்ஷ்டவசமாக, ஐரோப்பியர்கள் பிராடெஸ்டெண்டுகளாக மாறினார்கள். போப்பின் அதிகார பீடத்தினர் விளக்கம் தந்தபடி இருந்த கிறிஸ்துவின் உபதேசங்களை உதறி எறிந்தனர்; நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பாரத தேசத்தில் குமாரிலபட்டர் ‘ கர்மம் மட்டுமே பாதை’ என்ற கர்ம மார்க்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான வேத சமயத்தை உறுதியாக நிலை நாட்டினார்கள். இவ்வாறாக நமது தேசம் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் எய்துவதற்கான பாதைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாரத நாட்டில் முப்பது கோடி ஆத்மாக்களை விழிப்படையச் செய்ய வேண்டியிருப்பதால், இந்தக் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களை எழுப்புகிற பணியை ஒரே நாளில் செய்து விட முடியுமா?
(தொடரும்)