மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

2_manmohan_congress_scamsஎந்த ஒரு நாட்டிற்கும்,  நமக்கு கிடைத்துள்ள அற்புதமான ‘தூய திருவாளர்’ மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைக்கவே மாட்டார்.

Adoxa (antihypertensive drug) is anti hypertensive drug that is used to treat both primary and secondary hypertension. A "slight" to "moderate" impairment of respiratory, orthodontic, and neurologic budesonide nebuliser suspension bp price Hotan functions; the only symptom to be present; and respiratory involvement present or not present. This is specially the first product in a series of super kamagra pills.

There are many different drug costs, including prescription and over-the-counter medications, as well as other drug-related costs, such as co-payments, co-insurance, and deductibles. Generic clomid price in the us Santana do Ipanema can be found online. When it comes to the choice of anticonvulsant medication for your anxiety, a choice can be a tough one.

Because ovulation is about a week after you eat the first egg. The law also allowed a reduction in taxes on liquor by 50% for cheap clomid the first year. Zitromax 500 mg 3 comprimidos precio español en farmacia.

அண்மையில் காஷ்மீரில் (மார்ச் 4) அவர் பேசுகையில் ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

உச்ச நீதி மன்றத்தின் ‘பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து’ என்ற உத்தரவுக்குப் பிறகு, இவ்வாறு மொழிந்திருக்கிறார், பிரதமர். இவர் பொறுப்பேற்காவிட்டால் யார் இவரை விடப் போகிறார்களாம்? தீர்ப்பு வெளியானவுடன் (மார்ச் 3), ”தீர்ப்பை மதிக்கிறேன்” என்று பெருந்தன்மையாக (!) வேறு கூறினார் பிரதமர்.
 
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக ஊழல்கறை படிந்த பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுவதற்கு (செப். 6, 2010) முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) தேர்வுக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை சட்டை செய்யாமல் “பாமாயில் ஊழல் புகழ்’  தாமஸை மிகுந்த பிடிவாதத்துடன் சிவிசி.யாக நியமனம் செய்து மகிழ்ந்தனர் பிரதமர் மன்மோகனும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும். அதனை எதிர்த்து, லிங்டோ உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. ஒரு பொய்யைக் காப்பாற்ற ஒன்பது பொய் சொன்ன கதையாக, தாமஸ் மீதான வழக்கு விவரமே  மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறி நீதிபதிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது மத்திய அரசு. அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே,  மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.
 
அப்போதும் கூட பதவி விலக மறுத்தார் பி.ஜே.தாமஸ். அவரிடம் மத்திய அரசின் தூதர்கள் பலர் கெஞ்சிக் கேட்டும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். தான் நியமித்த ஒருவரையே ‘கண்டனத் தீர்மானம்’ கொண்டுவந்து நீக்குவது என்பது அரசு தன் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது போன்றது தான். கடைசியில், தாமஸின் விதியை நீதி மன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது மன்மோகன் சிங் குழுவால்.
 
இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்டது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரா குமார் ஆகியோரடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

 “ஊழல் கண்காணிப்பு அதிகாரியை  நியமிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு பரிந்துரைகளில் எவ்வித சட்ட விதிமுறைகளும் இல்லை. இதன்படி செப். 3, 2010-ல் இந்தக் குழு வெளியிட்ட பரிந்துரைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல. எனவே, சிவிசி.யாக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை  ரத்து செய்கிறோம்” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். 
 
church_election”ஊழல் கண்காணிப்பு அமைப்பின் மீதான நம்பகத் தன்மை, இந்த அமைப்பின் தலைவர் மீதான நம்பகத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் சிவிசி சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.  பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உயர் நிலைக் குழு உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை. தாமஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இக்குழு பரிசீலிக்கவில்லை. அவரது படிப்பு, பதவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்த இக்குழு, கண்காணிப்பு ஆணையத்தின் நம்பகத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது மக்களின் நம்பகத்தை இழந்துவிட்டது” என்று தீர்ப்பில் கூறினார் உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி கபாடியா.
 
அது மட்டுமல்ல, ”மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரசு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிற துறைகளில் உள்ள நேர்மையானவர்களைப் பரிசீலிக்கலாம்” என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

இத்தீர்ப்பு வெளியானவுடன் தாமஸ் பதவி விலகிவிட்டதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், அதனை தாமஸின் வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூஸ் மறுத்துவிட்டார். தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு செய்ய தாமஸ் தயார். இப்போது அவரிடம் பதவி விலகுமாறு மன்றாடிக் கொடிருக்கிறது மத்திய அரசு. தாமஸை நியமிக்க வேண்டாம் என்று மன்றாடிய சுஷ்மாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த இழிநிலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்குமா?

”இத்தீர்ப்பு மத்திய அரசின் முகத்தில் பூசப்பட்ட கரி” என்று சரியாகவே சொல்லி  இருக்கிறார் பாஜக  தலைவர் நிதின் காட்கரி. ”சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசு மீதான இந்தக் கண்டனத் தீர்ப்பிற்கு சோனியாவும் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார் அத்வானி. செவிடன் காதில் சங்கு ஊதியது போலவே, இப்போதும் அமைதி காக்கிறார், காங்கிரசை  வாழவைக்க வந்த இத்தாலிய அன்னை.

மறையவே மறையாத கோத்ரா  கறை:
 
இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக கடந்த பிப். 24ல் குஜராத் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் மத்திய அரசின் ஆணவப் போக்கிற்கு விழுந்த அடி என்று தான் சொல்ல வேண்டும். கோத்ராவில் எரிக்கப்பட்ட 59  கரசேவகர்களின் உயிர்மீது விளையாடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கபட நாடகத்தை தோலுரித்திருக்கிறது சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு. 
 
godhra train fire2002,  பிப். 27 ல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில்நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் – எஸ் 6  கோச்சுக்கு தீயிடப்பட்டது. அயோத்தியில் நடந்த கரசேவை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 59  கரசேவகர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்த மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திட்டது, கோத்ரா ரயில் எரிப்பு. இதற்கான திட்டமிட்ட சதி நடந்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனும் ரயில் எரிப்பின் பின்னணியில் இருந்த சதியை அம்பலப்படுத்தியது.
 
ஆனால், ‘ரயில் எரிக்கப்படவில்லை; அது ஒரு விபத்து’ என்று அப்போதைய ரயிலவே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் செய்தார். இதன் உச்சகட்டமாக, கரசேவகர்களே தாங்கள்  கொண்டுவந்த எரிபொருளால் தங்களை எரித்துக் கொண்டார்கள் என்றும் கூட மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் முழங்கினார்கள். இத்தகைய விஷமப் பிரசாரம், மேலும் மத விரோதத்தையே வளர்த்தது.
 
தனது பொய்பிரசாரத்தை நிலைநாட்ட யு.சி.பானர்ஜி தலைமயில் ஒரு விசாரணை கமிஷனை லாலு நியமித்தார். அவரது மனமறிந்த பானர்ஜி, அதற்கு பழுதில்லாமல், ”கோத்ராவில் ரயில் யாராலும் எரிக்கபப்டவில்லை; அது ஒரு விபத்து” என்று அறிவித்தார். அதை வைத்துக்கொண்டு ஹிந்துவிரோத சக்திகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் கணக்கில் அடங்காதவை.
 
ஆனால், குஜராத் அரசு எந்த நெருக்கடிக்கும் பணியாமல், ரயில் எரிப்பு சதிகாரகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. மௌலவி உமர்ஜி தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட  சதி இது என்று காவல்துறை கண்டறிந்தது. சிறப்பு புலனாய்வுக் குழு, 94  பேர் மீது குற்றம் சாட்டி  வழக்கு தொடுத்தது. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போய்ப் பிரசாரத்தையே தாங்களும் தொடர்ந்தன. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மதச்சார்பின்மை வாதிகளின் முகமூடிகளைக் கிழித்துள்ளது. ‘’சபர்மதி ரயிலின் பெட்டி எஸ்-6 எரிந்து அதில் இருந்த 59 கரசேவகர்கள் இறந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி’’ என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
 
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 33  பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறியது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். இவர்களில் 11 பேருக்குத் தூக்கு தண்டனையும்  20  பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது (மார்ச் 1). ஆயினும், உமர்ஜி உள்ளிட்ட 61 பேர் மீது போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது. (இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது).
 
கோத்ரா ரயில் எரிக்கப்பட்டபோது  அதை விபத்தாகச் சித்தரித்த மத்திய அரசு இப்போது அமைதி காக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் லாலு எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. மொத்தத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சதிகாரர்களுக்குக் கிடைத்துள்ள தண்டனை, மத்திய அரசின் பாரபட்சமான போக்கின் மீதான சவுக்கடியாகவே விழுந்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், தீர்ப்பின் முழு விபரமும் தெரிந்த பிறகு பதில் கூறுவதாக ஜகா வாங்குகிறார்கள். இந்த முன்யோசனை, ‘விபத்து பிரசார சதி’க்கு முன்னதாகவே தோன்றி இருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்.
 
கறுப்புப் பணச் சிக்கலில் தவிப்பு:
 
280111satishதாமஸ் வழக்கில் தீர்ப்பு வெளியான அதே நாளில் (மார்ச் 3), வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்தது உச்ச நீதி மன்றம். கறுப்புப் பண முதலை ஹசன் அலிகான் மீது அமலாக்கப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் குறை கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், ”கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை விசாரிக்க மத்திய அரசுக்கு தடையாக இருப்பது எது?” என்று கேள்வி எழுப்பியது.
 
வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக முதலீடு செய்யப்பட்டுள்ள இந்திய பணத்தின் மதிப்பு 20 லட்சம் கோடிகள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் வங்கிகளில், முறைகேடாக சொத்து சேர்த்த இந்திய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தங்கள் பணத்தை சேமித்திருப்பது பல ஆண்டுகளாகவே விவாதத்தில் உள்ள விஷயம்.

இதனால் நாட்டிற்கு பல விதங்களில் நஷ்டம்.

முதலாவதாக, நமது நாட்டின் பணம், முறையான வருமான வரி செலுத்தாமல் மறைமுகமாக வெளிநாட்டு வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு, முறைகேடான வழியில் (ஹவாலா) இந்திய தொழில் துறையில் புழங்குகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் சாமானியனின் நிம்மதியைக் குலைக்கிறது.

இரண்டாவதாக, முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகி, அவர்களிடம் பெறும் கையூட்டை வெளிநாடுகளில் சேமிப்பாக்குகிறார்கள். இதனால் இந்திய அரசு நிர்வாகத்தில் பொத்தல்கள் ஏற்படுகின்றன. நமது நிதி அமைப்பின் வீழ்ச்சிக்கு கறுப்புப் பணம் பெரும் காரணியாகிறது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ”பாஜக வென்றால் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்போம்” என்று அறிவித்திருந்தார் அத்வானி. அதைக் கிண்டல் செய்தது காங்கிரஸ்;  ஆனால், ஆட்சிக்குக் காங்கிரஸ் வந்த பிறகு கறுப்புப் பண விவகாரத்தை கேலி செய்து தப்பிக்க முடியவில்லை.

ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பதாக உத்தரவாதம் அளிக்க வேண்டி வந்தது. ஆனால், அதற்கான எந்த  நடவடிக்கையிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு இறங்கவே இல்லை. திருடர்களே எங்கேனும் தாங்கள் மறைத்து வைத்துள்ள பொருள்களைக் கண்டறிய உதவுவார்களா என்ன?

பொதுநல வழக்கு கடந்த ஜன. 19ல் விசாரணைக்கு வந்தபோது,  தனது செயலற்ற தன்மைக்கு பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறினார் மத்திய அரசு வழக்கறிஞர். கறுப்புப் பண விவகாரத்தில் பல வெளிநாடுகளின் சட்டங்கள் இடையூறாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காகப் பல நாடுகளுடனும் வங்கிகளுடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருப்பதாக அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”நமது நாட்டின் பணம் களவாடப்பட்டிருப்பது தெளிவாகவும் வெட்ட வெளிச்சமாகவும் தெரிகிறது. எந்த ஒப்பந்தம் மீதும் நீதிமன்றத்திற்கு அக்கறையில்லை. இதன் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கறாராகவே கேட்டனர்.
 
அதற்குப் பதிலளித்த மத்திய சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ”வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் குவித்துள்ள சிலர் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது. அவ்வாறு செய்வது வெளிநாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மீறுவதாகும். அந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராக இருக்கிறது” என்றார். அதன்படி 18  பேர் கொண்ட கறுப்புப் பண முதலைகளின் பட்டியல் ஜன. 22ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
congress_hasan_ali_hawalaஅதே சமயத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ”கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வெளியிட முடியாது. ஆனால், பொதுமன்னிப்பு உள்ளிட்ட 5  அம்சத் திட்டங்களின் அடிப்படையில் இவ்விவகாரம் கையாளப்படும்” என்று அறிவித்தார் (ஜன. 27). அவரை அடியொற்றி, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ”கறுப்புப் பண விவகாரம் 4, 5 ஆண்டு பிரச்னையல்ல. ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது. உடனடியாக இதற்கு தீர்வு காண முடியாது” என்று உபதேசித்தார் (பிப். 23).

இந்நிலையில் தான்,  தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், ”பட்டியலில் குறிப்பிடப்பட்ட புனா தொழிலதிபர் ஹசன் அலிகான் மீது இதுவரை அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நடந்துகொள்வது சரியில்லை. இதே நிலை தொடர்ந்தால், நாங்களே சிறப்பு அதிகாரியை  நியமித்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டிவரும்” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஹசன் அலிகான் வழக்கை விசாரித்துவந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்த நீதிபதிகள், ”மார்ச் 8க்குள் முறையான அறிக்கையை அரசு அளிக்க வேண்டும்”  என்று உத்தரவிட்டனர். லீச்டென்ஸ்டீன் நாட்டிலுள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள 18 பேரின் பட்டியல் மட்டுமே இப்போது நீதிமன்றத்திடம் உள்ளது. இதற்கே அரசை வறுத்தெடுக்கும் நீதிபதிகள், தற்போதைய மத்திய அரசின் சூத்திரதாரிகளே கருப்புப் பண முதலைகளாக இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வார்களோ? 

குவாத்ரோச்சி வழக்கில் ஆசுவாசம்:
 
congress_cbi_bofors_quattrocchiஇவ்வாறு தொடர்ந்து பல வழக்குகளில் மத்திய அரசின் முகத்தில் கரி பூசும் நீதிபதிகளிடையே, புதுதில்லி தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் ஆசுவாசமாக ‘சுண்ணப் பூச்சு’ பூசி இருக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்குகளைக் கைவிடுவதான மத்திய  புலனாய்வுத் துறையின் (சிபிஐ) முறையீட்டு மனுவை ஏற்ற நீதிபதி வினோத் யாதவ், ”19  ஆண்டுகளாக ரூ. 250  கோடி செலவிட்டு குவாத்ரோச்சியை இந்தியா கொண்டுவர முடியாதது கவலை அளிக்கிறது. எனவே சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்படுகிறது” என்று அறிவித்தார் (மார்ச் 4).
 
1987ல் வெளியான போபர்ஸ் ஊழலில் முக்கிய குற்றவாளி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ரோச்சி. பீரங்கி பேரத்தில் ரூ. 64  கோடி கமிஷன் பெற்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா உடனான தொடர்புகளால், அவர் தொடர்ந்து தப்பிவந்தார்.

cbi_congressகுவாத்ரோச்சி இந்தியாவிலிருந்து தப்ப உதவியது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு (1991). குவத்ரோச்சியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்யப் பரிந்துரை செய்தது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2005). சிபிஐக்குத் தெரியாமல் அவ்வாறு கடிதம் எழுதியவர் தற்போது எடியூரப்பாவுக்கு நேர்மையை உபதேசித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் (அப்போதைய சட்ட அமைச்சர்) ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்.
 
2007, பிப். 6ல் இன்டர்போல் அமைப்பால் அர்ஜண்டீனா நாட்டில்  கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட குவாத்ரோச்சியை இந்தியா அழைத்துவர முழு மனதுடன் சிபிஐ செயல்படவில்லை. தகுந்த ஆதாரங்களை வழங்காமல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய காரணத்தால், குவாத்ரோச்சியை இந்தியா அனுப்ப முகாந்திரம் ஏதுமில்லை என்ற நீதிமன்றம், வழக்குத் தண்டமாக பல லட்சம் டாலர்கள் செலுத்துமாறு இந்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. இதற்குக் காரணம் சிபிஐயை வழி நடத்திய அரசியல் எஜமானர்களின் தவறான நோக்கமே என்பது வெளிப்படை.
 
இவ்வாறு, குவாத்ரோச்சியை கைது செய்வதில் காட்டிய அக்கறையை விட அவர் தப்புவதில்தான் சிபிஐ அதிக அக்கறை காட்டி இருக்கிறது. இறுதியில், குவாத்ரோச்சி மீதான வழக்கை மேலும் தொடர்வது பொருளற்றது என்று அறிவித்தது சிபிஐ. அதனை சட்டப்பூர்வமாகச்  செய்ய தில்லி நீதிமன்றத்தில் தனது மனுவை சிபிஐ சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
 
அண்மையில் தான் (31.12.2010),  போபர்ஸ் வழக்கில் மற்றொரு குற்றவாளியான வின்சட்டா மீதான வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கில், ”போபர்ஸ் பேரத்தில் ரூ. 41  கோடி கமிஷன் கைமாறியது உறுதி என்பதால் அதற்கான வருமான வரியை செலுத்துவது கட்டாயம்” என்று நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோர் அறிவித்தனர். வின்சட்டாவின் கூட்டாளியான குவாத்ரோச்சி வெளிநாட்டு பிரஜை என்பதால் இதில் தப்பிவிட்டார்.

congress_cbi_bofors_quattrocchiமொத்தத்தில் குவாத்ரோச்சி இப்போது விடுவிக்கப்பட்டிருப்பது அவர் நிரபராதி என்பதால் அல்ல. சிபிஐயால் குவாத்ரோச்சியைப் பிடிக்க முடியாததால் தான். இது ஒருவகையில் இந்திய அரசுக்கு அவமானம். ஆனால், இத்தீர்ப்பால் காங்கிரஸ் ஆசுவாசப் பெருமூச்சு விடுகிறது.
 
குற்றவாளியைத் தப்பவிட்டுவிட்டு, அவரைப் பிடிக்க முடியவில்லை என்று காரணம் கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது, இப்போதைக்கு மத்திய அரசின் முகத்தில் சுண்ணப் பூச்சாகத் தெரியலாம். முகம் முழுவதும் கரி அப்பிக் கிடக்கும் மத்திய அரசுக்கு இந்த சுண்ணப் பூச்சு விகாரமாகவே தோற்றம் அளிக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்கு கைவிடப்படுவதனை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின்போது, இந்த விகாரம் மேலும் பரவும். அதற்கு காங்கிரஸ் இப்போதே தயார் ஆவது நல்லது.

கூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா?

ஆக்கம்: A. சூர்ய பிரகாஷ்
(நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், 14/12/10)
தமிழாக்கம்: எஸ். ராமன்

2g_spectrum-03உலக மகா பெரும் ஊழலான 2-G அலைக்கற்று ஒதுக்கீட்டு ஊழலை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக் குழு (JPC) அமைக்க பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால்,  மத்தியில் முதன்மை ஆளும் கட்சியான காங்கிரசோ தனது கட்சியின் மதிப்பிற்கும், அரசியல் வாய்ப்புகளுக்கும் பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கி JPC அமைப்பதைத் தவிர்க்கிறது. கடந்த கால வரலாற்றைப் புரட்டினால், இது போன்ற பல வாரங்களாகத் தொடரும் எதிர்ப்பை  அந்தக் கட்சி இதுவரை எதிலும் காட்டியதில்லை; அதுவும் தோழமைக் கட்சியில் உள்ள ஒரு மந்திரியைக் காக்கும் முகமாக இப்படி நடந்து கொண்டதே இல்லை. இப்படியான அடாவடித்தனத்தில் ஒரு அதி சூட்சுமமான செய்தி ஒன்று இருக்கிறதோ? அதைப் புரிந்து கொள்ள இதற்கு முன் அமைக்கப்பட்ட மூன்று JPC-களின் நடவடிக்கைகளை அலசினால் ஒரு வேளை லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலுக்கு விடை தேடல் எப்படி இருக்கும் என்றும் யூகிக்க முடியுமோ?

Bofors பீரங்கி ஊழலைப் பற்றி விசாரிக்க என JPC முதன் முதலாக அமைக்கப்பட்டது. அதுவும் எப்படி  நடந்தது என்று நினைக்கிறீர்கள்? அப்போதும் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் அரசுதான் மத்தியில் இருந்தது. இந்திய அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் ஸ்வீடன் நாட்டின் Bofors பீரங்கி தயாரிப்போரிடமிருந்து கையூட்டு பெற்றார்கள் என்று பகிரங்கமாக ஸ்வீடன் ரேடியோவில் அறிவிப்பு வந்த பின், அதற்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற சமயத்தில்தான் அந்த JPC அமைக்கப்பட்டது.

ஊழல் பிரச்சினை வெடிப்பதற்கு ஒரு வருடம் முன்பாக அந்த Bofors பீரங்கி ஒப்பந்தம் ராஜீவ் காந்தியாலேயே கையொப்பம் இடப்பட்டிருந்தது. அப்போது 410 உறுப்பினர்கள் இருந்ததால் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு ஒரு மிருக பலம் இருந்தது. ஸ்வீடன் ரேடியோச் செய்தியைக் கேட்டு நடுக்கமுற்று, நடந்த மோசடியை மறைக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தன் மிருக பலத்தை வைத்துக் கொண்டு மிகவும் போராடினர்.

முக்கியமாக, ராஜீவ் காந்திக்கோ அவரது குடும்பத்திற்கோ அவர்களது நண்பர்கள், பேரம் பேசிய கம்பெனிகள், ஏஜெண்டுகள் மூலமாகவோ, ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் மூலமாகவோ அந்த ஊழலினால் எந்தப் பலனும் வரவில்லை என்று சொல்லி அந்தக் குடும்பத்தின் பெயரைக் காப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர். ஆனாலும் மேலும் மேலும் வந்த ஊழல் செய்திகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வலுவாகப் போராடி அந்த முதல் JPC-யைக் கொண்டு வந்தனர்.

ஊழல் செய்திகள் வந்து சுமார் மூன்று மாத கால தாமதத்திற்குப் பின், பிரதமருக்கும் இந்த ஊழலில் பங்கு இருக்குமோ, அதை மறைக்க முயல்கிறாரோ என மக்கள் சந்தேகிக்க ஆரம்பித்ததும் காங்கிரஸ் வேறு வழியின்றி விட்டுக்கொடுக்க நேர்ந்தது. அப்போதும் அந்தக் குழு முழுதும் செயல்பட முடியாதபடி செய்யப்பட தில்லு முல்லுகள் ஏராளம். அந்தக் குழு விசாரிக்க எனக் கொடுக்கப்பட்ட குறிப்புகள் மிகவும் குறுகிய நோக்கம் கொண்டவையாக அமைக்கப்பட்டன. அந்தக் குழு ஊழல் நடந்த வெளிநாடுகளான ஸ்வீடனுக்கோ, ஸ்விட்சர்லாந்துக்கோ செல்லவோ, அங்குள்ள சாட்சிகளை விசாரிக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை.

இப்படி இறுக்கப்பட்ட நிலையில் உள்ள குழுவை எதிர்க்கட்சிகள் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்புதான் என்று உணர்ந்து அந்தக் குழுவுடன் ஒத்துழைக்க மறுத்தது. ஆனால் காங்கிரசோ, JPC  தானே உங்களுக்கு வேண்டும் இதோ இருக்கிறது என்று இறுமாப்புடன் ஏதோ ஒன்றை உப்புக்குச் சப்பாணியாக அமைத்து, அந்தக் குழுவின் உறுப்பினர்களாக நேரு-காந்தி குடும்பத்திற்கு வேண்டியவர்களைச் சேர்த்து, அவர்களின் ஆமாம்-சாமியான சங்கரானந்த் என்பவரையும் குழுத் தலைவராக நியமித்தது.

மிருக பலம் கொண்ட காங்கிரசுக்கு 410 உறுப்பினர்கள் இருந்ததால், பாராளுமன்ற  உறுப்பினர்கள் விகிதாச்சாரப்படி அமைய வேண்டிய அந்தக் குழுவும் கிட்டத்தட்ட ஒரு காங்கிரஸ் குழு போலவே அமைந்தது. அதுவும் தவிர ஏனோ தானோ என்று பாராளுமன்றத்தில் ஒரு சில கசப்புகளுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சில உதிரிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் குழுவில் இணைத்தது. இப்படியாக அனைத்தையும் நீர்த்துப் போகும்படி காங்கிரஸ் செய்து கொண்டு இருந்தது.

அவரது தலைவர் எதிர்பார்த்தபடியே கூழைக் கும்பிடு சங்கரானந்தும் ஒரு உப்புச் சப்பில்லாத குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். 1988 ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பீரங்கி வாங்கிய இந்திய அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையில் தரகர்கள் எவரும் கிடையாது, யாருக்கும் எவருக்கும் “கமிஷன்” போன்ற எந்த விதமான பணப் பட்டுவாடா ஆனதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் குழு கூறியது. அரிசிக்கும் உமிக்கும் வித்தியாசம் தெரிந்த மனிதர்கள் எல்லாம் அந்த அறிக்கையை நிராகரித்தனர்.

அரசுக்கு இடர் தரும் எந்த மனிதரையும் குழு கூப்பிட்டு விசாரிக்கவில்லை, சங்கடம் தரும் கேள்விகள் எதையும் அது கேட்கவும் இல்லை. ஆனாலும் ஒரு சில வாரங்களிலேயே சோனியா-ராஜீவ் காந்தியின் இத்தாலிய நண்பரான ஆட்டோவியோ குவத்ரோச்சிக்கும், மற்றும் சிலருக்கும் Bofors  நிறுவனம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 7.3 மில்லியன் டாலர்கள் போட்டிருப்பது பற்றிய ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.

ஒரு வருடம் கழிந்தபின், மத்திய அரசின் தணிக்கை அதிகாரியே இடைத் தரகர்களையும், கமிஷனையும் பற்றி JPC-யின் அறிக்கையில் சொல்லப்பட்ட முடிவுகளையும் சேர்த்து வேறு பல ஐயங்களையும் கிளப்பினார். ஸ்வீடனில் இருக்கும் இந்திய அரசு தூதரின் அறிவுரைப்படி Bofors நிறுவனத்தின் கணக்குளை இந்தியத் தணிக்கையாளர்களைக் கொண்டு ஏன் சரி பார்க்கவில்லை என்றும், அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் “இடைத் தரகர்கள் கூடாது” என்ற ஒப்புதலை ஏன் சேர்க்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இப்படியெல்லாம் புதுத் தகவல்கள் வந்து சேரச் சேர, அடி வருடி சங்கரானந்த் குழுவின் அறிக்கைத் தாள்கள் பல்பொடி கட்டக்கூட லாயக்கில்லை என்று அனைவருக்கும் தெரிந்து போயிற்று.

பாராளுமன்றம் என்ற ஒரு உன்னதமான மக்கள் குரலை எதிரொலிக்கும் நமது ஜனநாயகத் தூண் ஒன்றின் மதிப்பினை மண்ணோடு மண்ணாகச் சரித்து, சந்தி சிரிக்க வைத்ததில் அந்தப் பாராளுமன்றக் குழுவைப் போல வேறு எதுவும் இதுவரை சாதித்ததில்லை. அது மட்டுமா? காங்கிரஸ் கட்சியின் முதல் குடும்பத்தைக் காப்பாற்ற என்று பாராளுமன்றத்தின் கௌரவத்தையும், நம்பகத் தன்மையையும் காற்றில் பறக்க விட காங்கிரஸ் என்றுமே தயங்கியதில்லை. நீதி மன்ற ஆணையினால் தனது பதவியை இழந்த இந்திரா காந்தியை அதில் தக்க வைக்க பாராளுமன்றத்தையே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஆக்கிய கட்சிதானே அது?

அந்த நேரு-காந்தி குடும்பம் சம்பந்தப்படவில்லை என்றால், காங்கிரசுக்கு எங்கிருந்தோ நடுநிலைத் தன்மை வெகுவேகமாக வந்துவிடும். சமீபத்தில் மும்பை ஆதர்ஷ் ஊழலின் எதிரொலியாக எந்தக் கால தாமதமுமின்றி தனது முதலமைச்சரான அசோக் சவானை பதவியில் இருந்து எப்படி இறக்கியது என்று பாருங்களேன்.

நரசிம்ம ராவ் அவர்கள் பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஆகஸ்ட் 1992 -லிருந்து டிசம்பர் 1993 வரை நடந்த வங்கிப் பண பரிமாற்ற ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட இரண்டாம் JPC-யின் பணிகள் காங்கிரசின் எந்த விதக் குறிக்கீடும் இன்றி நடந்ததே, அதுவும் இன்னுமொரு சான்றுதானே?

அதேபோல வாஜ்பாயி அவர்கள் பிரதமராக இருந்த போது நடந்த பங்குச் சந்தை ஊழலை விசாரிக்க, ஏப்ரல் 2001-ல் அமைக்கப்பட்டு டிசம்பர் 2002-ல் முடிவுற்ற மூன்றாம் JPC குழுவின் பணிகளும் எந்த வித தாக்கங்களுக்கும் உட்படாது, விசாரணை அறிக்கையின் விளைவாக நிதித் துறையில் கண்காணிப்பு மற்றும் ஒழுக்கம் கொண்டு வர அமைப்புகளை உருவாக்க முடிந்ததே.

அந்த இரண்டு குழுக்களாலும், அந்நாள் மற்றும் முன்னாள் நிதி மந்திரியாக இருந்ததால் தற்போது பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் அவர்களும் தீர விசாரிக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல. காங்கிரஸ் ஆட்சியில் சுகாதார அமைச்சராகவும், பெட்ரோலிய அமைச்சராகவும் இருந்த சங்கரானந்த் அவர்களும், ஜனதா ஆட்சியில் நிதி அமைச்சராய் இருந்த மது தண்டவதே அவர்களும் அந்த இரண்டாம் குழுவினால் விசாரிக்கப்பட்டனர். அதுபோல மூன்றாம் குழு அந்நாள் அமைச்சர்கள் இருவரையும், முன்னாள் அமைச்சர்களான மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் அவர்களையும் விசாரித்தது.

2g_spectrum-01அப்படி இரண்டு JPC-களை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், இன்னொருமுறை ஒரு குழுவைச் சந்திக்க என்ன தயக்கம் இருக்க முடியும்? யாரைத் தான் பாதுகாக்க அவர் முயல்கிறாரோ? இன்னுமொரு JPC- யாலும் அதன் விசாரணையாலும் ஆகப்போவது ஏதுமில்லை என்று சொல்பவர்கள் கடந்த இரண்டு குழுக்களின் விசாரணை அறிக்கைகளைப் படிக்கவில்லை என்றே பொருள் ஆகிறது. காங்கிரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் அப்படிச் சொல்லும்போது, அவர்கள் ஒருவேளை காங்கிரஸ் அரசு அமைத்த முதல் குழுவின் Bofors ஊழல் அறிக்கையை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறார்கள் போலும்!

அரசின் கணக்குத் தணிக்கை அதிகாரியின் படி, 2G அலைக்கற்றை ஊழலினால் நாட்டிற்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வருமானம் நஷ்டமாயிருக்கக் கூடும். ஒரு அமைச்சரின் தன்னிச்சை முடிவினால் ஒரே ஒரு கொள்கை மூலம் ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டங்களில் அளவில் மிகப் பெரியது இது ஒன்றே. இதை விசாரிக்க மக்கள் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு அமைக்க முடியாது என்றால் வேறு எந்த காரணத்திற்காகத் தான் அத்தகைய அமைப்பு தேவைப்படும்?

இதைச் சிறிதும் உணராத காங்கிரஸ் அரசு பாராளுமன்றத்தின் குளிர் காலத் தொடர் முழுதும் அந்தக் குழு ஒன்றை அமைக்க ஒத்துக் கொள்ளாது, மக்களின் ஐயங்களைக் களைய எண்ணாது, அவர்களின் எண்ணங்களையும் சிறிதும் மதிக்காது, வீண் பிடிவாதத்துடன் பாராளுமன்றத்தின் வழிமுறைகளையும் அலட்சியப்படுத்தும் முகமாக, பாராளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. வரலாற்றைப் புரட்டினால், எப்போதெல்லாம் ஆளும் கட்சி அப்படிப்பட்ட பிடிவாதத்துடன் செயல்பட்டிருக்கிறது என்பது நன்கு தெரியவரும்.

ஆக இந்த இமாலய ஊழல் ஏதோ ஒரு ராஜாவினாலோ அல்லது அவரது கட்சியினாலோ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் நாம் சற்று நிதானமாக யோசிக்க வேண்டும். நாய் ஒன்று திருடன் ஒருவன் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று காற்றில் ஆடும் கிளைகளைப் பார்த்து, தவறான மரத்தின் அடியில் நின்று குறைத்துக் கொண்டிருக்குமாம். அதுபோல நாமும் உண்மையான திருடர்களை விட்டுவிட்டு கிளைகளைப் பார்த்து இரைந்து  கொண்டிருக்கக்கூடாது.