[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 20-ஆம் பாகம்

However, they are also used for treating certain types of cancer, such as leukemia, prostate cancer, multiple myeloma, and lymphoma, among others. Toremifene with doctor's prescription - clomid tablet price at clicks nowise buy toremifene online without prescription. Doxycycline and doxycycline can be combined with certain antibiotics to increase effectiveness and lower the chance of resistance.

It has been suggested that it may be because the hormone is being converted to estradiol instead of progesterone, but i am unable to see this as a reason for it not working. Phentergan is a prescription drug that works with a phenergan to help you lose weight Dikwa and feel fantastic. Maternal and infant health committee: consultation on a consultation of the health and wellbeing board, nhs long-termcare and the royal college of midwives in respect of the use of pill-based.

Phenergan without prescription inhibits pde-5 enzyme. Doxycycline may also Muzaffarnagar be used for other uses; ask your doctor or pharmacist for more information. Please refer to the product label for more information.

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

மதமாற்றம்–

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் மாற்றிவிடுகிறது.
உறவுகளை அந்நியமாக்கிவிடுகிறது.
அது தேசத்தைக்கூட மாற்றிவிடுகிறது.
கலாசாரத்தை மாற்றிவிடுகிறது.

இந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது.

1956 அக்டோபர் 13-ஆம் நாள் மாலை அம்பேத்கர் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

அக்கூட்டத்தில் அவர் கூறும்போது, தன்னுடைய பௌத்த சமயம் ஒருவகையான புதிய பௌத்தமாக அல்லது நவயானாவாக இருக்கும் என்று கூறினார்.

நீங்கள் ஏன் புத்தமதத்தைத் தழுவுகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டபோது அவர் சினங்கொண்டு, ‘‘நான் இந்துச் சமயத்தை விட்டுவிட்டு பௌத்தத்தை ஏன் தழுவுகிறேன் என்ற கேள்வியை நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள். உங்களுடைய மூதாதையர்களிடமும் இதைக் கேளுங்கள்” என்று கூறினார். “என்னுடைய வகுப்பு மக்கள் அரிசனங்களாக இருந்துகொண்டு இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெறுவதோடு நின்றுவிடவேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அப்படியானால் இட ஒதுக்கீடு போன்ற நன்மைகளைப் பெற்றுக் கொண்டு தீண்டப்படாதவர்களாக இருப்பதற்குப் பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களா? நாங்கள் முழுமையான மனிதர்களாக ஆவதற்கு முயற்சிக்கிறோம். நான் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது தீண்டாமை ஒழிப்பு குறித்து உங்களுடைய கருத்துடன் நான் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பினும் தீண்டாமையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் வரும்போது இந்நாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் கேடு தரக்கூடிய வழியையே நான் தேர்ந்தெடுப்பேன் என்று அவரிடம் கூறியிருக்கிறேன். அத்தன்மையில் இப்போது நான் பௌத்த மதத்தைத் தழுவுவதன் மூலம் இந்நாட்டிற்கு பெரும் நன்மையை நல்குவதாகவே நினைக்கிறேன்.

ஏனெனில் பௌத்தம் பாரத நாட்டுக் கலாசாரத்தின் பிரிக்க முடியாத ஒரு கூறாக இருக்கிறது. என்னுடைய மதமாற்றத்தால் இந்நாட்டின் கலாசார மரபுகளும் வரலாறும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளேன்’’

என்று பத்திரிகையாளர்களிடம் மேலும் விளக்கினார்.

அந்நிய மதங்களுக்கு மாறினால் இந்தியக் கலாசாரம், மரபுகள் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற புரிதலை இங்கு அம்பேத்கர் தெளிவுப்படுத்துகிறார்.

மதமாற்றத்தின் மூலம் இந்நாட்டின் கலாசர மரபுகளுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதே அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது.

அதுமட்டுமல்ல,

அம்பேத்கர் சீக்கியமதம் மாறுவது என்று முதலில் முடிவெடுத்தவுடன் அதுசம்பந்தமாக மூஞ்சேவிடம் அளித்த அந்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்-

“ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்திலோ கிறித்துவத்திலோ சேருவார்களெனில் அவர்கள் இந்து சமயத்திலிருந்து மட்டுமல்ல, இந்துப் பண்பாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவார்கள். மாறாக அவர்கள் சீக்கிய சமயத்திற்கு மாறினாலும், இந்துப் பண்பாட்டையே தொடர்ந்து பின்பற்றுவார்கள். எவ்வகையினும் இது இந்துக்களுக்கு அற்பமான நலன் அல்ல, பெருத்த நலனே.

சமயமாற்றத்தினால், நாட்டுக்கு என்ன விளைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இஸ்லாத்துக்கோ கிறித்துவத்திற்கோ மாறுவார்களெனில் நாட்டுநலன்கள் பெரிதும் பாதிக்கப்படும். அவர்கள் இஸ்லாத்தில் சேருவார்களெனில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை இரு மடங்காகிவிடும். இஸ்லாமியர்கள் மேலாதிக்கம் பெருகிவிடுமோ எனும் அச்சம் மெய்யாகிவிடும். அவர்கள் கிறித்துவத்திற்கு மாறுவார்களெனில் கிறித்துவர்களின் எண்ணிக்கை ஐந்தாறு கோடிக்கு மேல் பெருகிவிடும். அது நாட்டையாளும் பிரிட்டானியர்களுக்கு நாட்டின்மீது மேலும் பிடிப்பை மிகுதியாக்கவே உதவும்.

மாறாக, அவர்கள் சீக்கிய சமயத்தைத் தழுவினால், இந்நாட்டின் வருங்கால நலன்களுக்குத் தீங்கு ஏதும் நிகழாது. நாட்டின் வருங்கால நலன்களுக்கு உதவியாகவே இருப்பார்கள். அவர்கள் இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடமாட்டார்கள். மாறாக நாட்டின் அரசியல் முன்னேற்றத்துக்கு உதவியாக இருப்பார்கள். எனவே, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள், பிற சமயத்திற்கு மாறுவதென்று முடிவு செய்தால் சீக்கியச் சமயத்திற்கு மாறுவதே நாட்டின் நலன்களுக்கு உகந்ததாகும்.’’

அதாவது இந்த மண்ணில் தோன்றாத மதங்களில் அதாவது இஸ்லாம், கிறித்துவம் ஆகிய மதங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மாறினால் இந்திய அல்லது இந்து பண்பாடு மாறிவிடும். மட்டுமல்ல அம்பேத்கர் சொல்ல வருவது – முக்கியமானது – தாழ்த்தப் பட்டவர்கள் அந்நிய மதத்துக்கு மாறினால் இந்தியத் தேசியத்திலிருந்து விலகிவிடுவார்கள் என்று கூறுகிறார். அதாவது அந்த மதங்கள் இந்திய தேசியத் தன்மையை மக்களின் மனங்களிலிருந்து உறிஞ்சிவிடும் என்கிறார்.

தெள்ளத்தெளிவாகக் கூறவேண்டுமானால் ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் அல்லது கிறித்துவத்திற்கு மாறினால் அவர்கள் தேசியத் தன்மையை இழப்பர் என்றும் குறிப்பாக முஸ்லிம் மதத்திற்கு மாறினால் முஸ்லீம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி முஸ்லீம் ஆதிக்க ஆபத்து உண்மையாகிவிடும் என்றும் அம்பேத்கர் கூறுகிறார்.

மதம் மாறினால் இந்திய தேசிய உணர்வு மங்கிவிடும் அல்லது இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடுவர் என்பதற்கு வரலாற்றில் ஏதாவது ஆதாரம் உண்டா? அப்படி இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு நிகழ்வு நடந்ததுண்டா?

சரித்திரத்தில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

 

முதல் நிகழ்வு:

மதுரையில் வீரபாண்டியன் ஆண்டபொழுது அவன் படையில் 20,000 முஸ்லீம் படைவீரர்கள் இருந்தனர். இந்த முஸ்லீம் படையினர் முழுக்க முழுக்க இந்துவாக இருந்தவர்கள். பின்பு இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள். மதம் மாறியவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. தேசிய உணர்வும் மாறிவிட்டது. ஆம். மாலிக் காபூர் படைகள் வீரபாண்டியனை எதிர்த்தபோது அவன் படையில் இருந்த இஸ்லாமிய வீரர்கள் மாலிக் காபூர் படையில் சேர்ந்துவிட்டனர். காரணம் மாலிக்காபூர் இஸ்லாமியன் என்பதாலேயே. வீரபாண்டியனுக்காகப் போராட வேண்டிய, இந்த தேசத்திற்காகப் போராட வேண்டிய முஸ்லீம்படையினர், இந்த நாட்டின்மீது படையெடுத்து வந்த- இந்த நாட்டைக் கொள்ளையடிக்க வந்த- மாலிக்காபூர் படையில் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காகச் சேர்ந்தனர். இங்கு மதமாற்றப்பட்டவனின் தேசிய உணர்வு மாறிவிட்டதை உணரலாம். இந்தச் சம்பவத்தை இஸ்லாமிய அறிஞரான அமிர் குஸ்ரூவும் உறுதிப்படுத்துகிறார்.

அமிர் குஸ்ரூ வீரபாண்டியனின் படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டதாகவும் அவர்கள் கலீமா ஓத தெரிந்திருந்ததால் மாலிக் காபூர் அவர்களைத் தன் படையில் சேர்த்து பதவிகள் அளித்ததாகவும் கூறுகிறார். மேலும் மாலிக் காபூரின் படைகள் பட்டணம் எனும் நகரத்தை அடைந்தபோது அந்த நகரத்தை ஆண்ட பாண்டிய குரு என்பவரின் படையில் முஸ்லீம்கள் இருந்ததாகவும் பாண்டிய குரு சுல்தானின் படைகள் வந்தபோது தப்பித்துச் சென்றார் என்றும் அவரது படையில் இருந்த முஸ்லீம்கள் மாலிக் காபூருடன் சேர்ந்து கொண்டனர் என்றும் அமிர் குஸ்ரூ கூறுகிறார். (ஆதாரம்: அமிர் குஸ்ரூ “காஸாஇனுல் பதூர்” (Khazain-ul-Futooh வெற்றியின் பொக்கிஷம்) மொழிபெயர்ப்பு முகமது ஹபீப் (மெட்ரா 1931) பக்.99, & John Dowson History of India பாகம் – 3 பின் இணைப்பு : பக்.550-551.)

இந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:

“கி.பி.1311இல் மாலிக்காபூர் பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலைநகரான உறையூருக்கருகிலிருந்த பீர்தூலைத் தாக்கினான். போரின் நடுவில் பாண்டியனின் படையிலிருந்து 20,000 முகம்மதியர்கள் திடீரென்று எதிரி மாலிக்காபூர் பக்கம் சேர்ந்துகொண்டனர்.” (–கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)

 

இரண்டாவது நிகழ்வு:

விஜயநகரம் வீழ்ச்சியடையக் காரணம் இஸ்லாமியர்கள் செய்த தேசியத் துரோகம். இதை வீரசாவர்க்கரும் ‘வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்’ என்ற தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்றுச் சம்பவத்தை கே.கே.பிள்ளையும் உறுதிப்படுத்துகிறார்:

“விசயநகரத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான தலைக்கோட்டைப் போரில் (கி.பி.1565) இராமராயன் ஐந்து சுல்தான்களை ஒருங்கே எதிர்த்துப் போராடினான். அவனிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றிய இரு முஸ்லீம்கள், தத்தம் ஆணையின்கீழ் பணியாற்றிய எண்பதினாயிரம் படைவீரர்களுடன் பகைவர்களான சுல்தான்களுடன் சேர்ந்துகொண்டனர். இவர்களுடைய நம்பிக்கைத் துரோகத்தினால் இராமராயன் தோல்வியுற்று, பகைவர்களின் கைகளில் கொலையுண்டு இறந்தான்.” ( –கே.கே.பிள்ளை, தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்)

இந்த வரலாற்றுச் சம்பவங்களால் நமக்குத் தெரியவருவது என்னவென்றால் மதமாற்றத்தின்மூலம் தேசிய உணர்வு, தேசபக்தி எல்லாமே மாறிவிடுகிறது.

இதனால்தான் இந்த மண்ணில் உதித்தெழுந்த சீக்கிய மதத்தை முதலில் தேர்ந்தெடுக்க நினைத்தபோது அம்பேத்கர், ‘‘சீக்கிய சமயத்தைத் தழுவினால், இந்நாட்டின் வருங்கால நலன்களுக்குத் தீங்கு ஏதும் நிகழாது. நாட்டின் வருங்கால நலன்களுக்கு உதவியாகவே இருப்பார்கள். அவர்கள் இந்திய தேசியத்திலிருந்து விலகிவிடமாட்டார்கள்” என்று கூறினார்.

இந்திய தேசிய உணர்வு இஸ்லாமியர்களிடம் இருக்கப்போவது இல்லை என்ற காரணத்தால்தான் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் இருந்து குறைக்க வேண்டும் என்று அம்பேத்கர் கூறினார்.

பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை நூலில் கூறுகிறார்:

‘‘….இன்றைய நிலையில் இந்தியப் படைகளில் முஸ்லீம்களே பெரும்பாலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது, முஸ்லீம்களில்கூட பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்களே மேலாதிக்கநிலை பெற்றுள்ளனர். இத்தகைய படையமைப்பின் விளைவாக, வெளிநாட்டுப் படையெடுப்புகளிலிருந்து இந்தியாவைக் காக்கும் பொறுப்பு, பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்களிடமே முற்றுமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

என்ன காரணத்தினாலோ ஆங்கிலேயர் தமக்குத் தந்த சிறப்பு நிலையை உணர்ந்து பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநில முஸ்லீம்கள் பெருமிதம் கொள்ளத் தொடங்கினர். இந்தியாவின் வாயிற்காப்பாளர்கள் தாங்கள்தாம் என அவர்கள் பெருமிதமாகப் பேசிக்கொள்வதை நாம் சாதாரணமாகக் கேட்க முடியும். எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி எண்ணிப் பார்க்கும் இந்துக்கள், படையமைப்பின் மெய்யான நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ‘வாயில் காவலர்கள்’ இந்தியாவின் விடுதலையையும் தன்னாட்சியையும் கட்டிக் காப்பாற்றுவார்களென இந்துக்கள் எந்த அளவுக்கு நம்ப முடியும்? இந்த வினாவுக்கான விடை இந்தியாவின் வாயிலைத் தட்டித் திறந்து தாக்க முற்படுவோர் யாவர் என்பதைப் பொருத்தே அமையும். வடமேற்கு எல்லை வழியாக இந்தியாவின் மீது படையெடுக்கும் வாய்ப்புடன் பொது எல்லைகளைக் கொண்ட அயல்நாடுகள் இரண்டுதான். அவை, ஆப்கானிஸ்தானமும், ரஷ்யாவுமே. இவற்றுள் எந்நாடு, எப்போது இந்தியா மீது படையெடுக்கக்கூடும் என்பதை அறுதியிட்டுக் கூற இயலாது. படையெடுப்பு ரஷ்யா நாட்டிலிருந்து வந்தால் நமது வாயில் காவலர்கள் அதை எதிர்த்து நாட்டுப்பற்றுடன் உறுதியாகப் போராடுவார்கள் என்று நம்பலாம். ஒருவேளை ஆப்கானியர்கள் தனியாகவோ, பிற முஸ்லீம் நாடுகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டோ இந்தியாவின் மீது படையெடுத்தால் அப்போதும் நமது வாயில் காவலர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று நாட்டைக் காப்பார்களா அல்லது அவர்கள் தாராளமாய் உள்நாட்டில் நுழைய வழிவிட்டுப் பகைவர்களுடன் ஒத்துழைப்பார்களா? இந்தச் சிக்கலை இந்துக்கள் எவரும் புறக்கணித்துவிட முடியாது. இவ்வளவு முக்கியமான சிக்கலில் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதிப்பாடு என்ன என்பதைத் தெளிவுறுத்திக் கொள்ளவே இந்துக்கள் முனைவர்.

இந்தியா மீது படையெடுக்க ஆப்கானியர்கள் ஒருபோதும் கருதமாட்டார்கள் என்று கூறப்படலாம். ஆனால் கடுமையான இடர்ப்பாடுகளையும் எதிர்க்கொள்ளத் திறமுண்டா என்ற அடிப்படையில்தான் எந்தக் கொள்கையையும் சோதிக்க வேண்டும்.

ஒருவேளை முஸ்லீம்களான ஆப்கானியர் படையெடுக்க நேர்ந்தால், பஞ்சாபி, வடமேற்கு எல்லை மாநிலத்தைச் சேர்ந்த படைவீரர்கள் எப்படி நடந்துக்கொள்ளக்கூடும் என்பதைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்துடன்தான் அவர்களது நாட்டுப்பற்றையும், நம்பகத்தன்மையையும் மதிப்பிட வேண்டும். இத்தகைய சூழலில் அவர்கள் பிறந்த மண்ணைக் காப்பதற்காகப் போராடுவார்களா அல்லது சார்ந்த சமயத்தின் மேம்பாட்டுக்குத் துணை நிற்பார்களா என்ற வினாவுக்கான விடையை ஆராயாமல் இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றி உறுதியான நம்பிக்கை கொள்ள இயலாது.

இந்தியா ஆங்கிலேயரின் பாதுகாப்பின்கீழ் இருக்கும்வரை சங்கடமும் கலக்கமும் தரக்கூடிய இச்சிக்கல்களுக்கு விடைதேடுதல் தேவையில்லை என்று புறக்கணிப்பது நமது பாதுகாப்புக்கு உகந்த போக்கு ஆகாது. அத்தகைய மெத்தனமான எண்ணம் தோன்றுவதே மன்னிக்க முடியாத குற்றமெனலாம்.

முதலாவதாக, கடந்த உலகப் பெரும்போர் காலத்தில், மெய்யாகவே இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தோன்றிய நிலையில், இந்தியாவை எந்நிலையிலும் காக்கும் வல்லமை ஆங்கிலேயருக்குக் கிடையாது என்பது தெளிவாகப் புலனாகியது.

இரண்டாவதாக, ஒரு அமைப்பின், அதாவது இந்தியப் படையின் செயல்பாட்டுத் திறனை, அது செயற்கையான சூழலில் எப்படிச் செயல்படுகிறது என்பதிலிருந்து மதிப்பிட முடியாது. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இந்தியப் படைவீரர்களின் செயல்பாங்கு செயற்கையானதே. படைவீரரின் இயல்பூக்கங்களுக்கும் இயற்கையான பற்றுகளுக்கும் ஆங்கிலேயரின் கட்டுப்பாடு இடம் கொடுப்பதில்லை. அதனாலேயே ஆங்கிலேயரின்கீழ் பணிபுரியும்போது அவர்கள் திறமையுடன் செயல்பட்டாலும், அது செயற்கையான சூழ்நிலையே. அச்சூழலில் அவர்கள் நன்கு செயல்படுவதைக் கொண்டு இந்தியர் கட்டுப்பாட்டின்கீழ் வந்தபின்னரும் அவ்வாறே செயல்படுவர் என்று உறுதி கூற முடியாது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்ற பின்னரும், இந்தியப் படைகள் இந்தியாவின் நலனுக்கேற்ற வகையில் திறமையாகச் செயல்படுவார்கள் என்ற உறுதிப்பாடு இந்துக்களுக்குக் கிட்ட வேண்டும்…. “

(தொடரும்…)

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19