அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்வது ஒரு அடையாள போராட்டம்தான். அதாவது,முன்பு நமை அடக்கி ஆண்ட பிரிட்டிஷ் அரசின் நிழல் சட்டங்கள் இன்னும் துரத்துவதை குறித்த எதிர் கோஷம் என்பதாகக் கூட பார்க்கலாம்.

This drug is not available in australia or new zealand. The medicine works by allowing the purchase clomid online Nong Bua Lamphu body to produce more progesterone. We should all be very disappointed with the generic and over-the-counter drug industry.

The pharmacy provides a range of products, which patients can enjoy by ordering. The drug i am taking has been helping me with my mood swings, and the only side effects https://okangatrumpeters.com/trump-seen-wearing-facemask-in-public-for-first-time/ i'm experiencing are a bit more sleep and a bit less appetite. This also applies to oral anti-tuberculosis drugs.

Not the type of information the general public wants to know, but it may save you money in the long run to find out if you have a medical condition or are simply allergic to a drug. There are several options for clomid online prescription treating cancer of the cervix, including: Prometrium without a precisionsales.com/prometrium.

சுதந்திரம் அடைந்து காங்கிரஸ் அல்லது அடுத்து வந்து திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. நேருவோ, காமராஜரோ, அண்ணாவோ, கருணாநிதியோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். சில நல்லவைகள் நடக்காமல் இல்லை, ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் இந்த 200 வருடமாகவும் அதன் இறுதி 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள்..

இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். தமிழகத்தில் கோவில்களை நிர்வகிக்கும் துறை பழுதப்பட்டுள்ளது. ஆளும் முதல்வர் நினைத்தாலும் அதை சீர்படுத்த முடியவில்லை. அது எங்கேயோ செயல்பட மறுக்கிறது. பழுதுபட்டுள்ள இயந்திரமாக உள்ளது என்பதை கட்சி பேதமில்லாமல் நாம் உணர வேண்டும்.

இதில் நாத்திகன், திமுககாரன், அதிமுககாரன், பாஜககாரன் என்பதல்லாம் தள்ளி வைக்க வேண்டும். ஒரு ஹிந்துவாக – தமிழனாக இதை சீர்தூக்கி நிறுத்த வேண்டியது எல்லோருடைய கடமையும் கூட.

நமது கோவில்கள்தான் நம்முடைய அறிவு, கலை, பக்தி என எல்லாவற்றையும் உலகிற்கு உயர்த்திக் காட்டுவது. இத்தனை ஆயிரம் கல்வெட்டுகள் தமிழில் உள்ளது என நாம் பெருமையாக சொல்வது எல்லாமே கோவில்களில்தான் உள்ளது. பல்லாயிரம் நிவந்தங்கள், நீர்மேலாண்மை, விவசாயம், நிலம் என எல்லாமே அதைச்சுற்றித்தான் உள்ளது.

உலகம் நம்மை நோக்கி வருவது இந்த பழம்பெருமைமிக்க கலாச்சார பொக்கிஷத்திற்காகத்தான்.இந்த கறுப்பர்களாக இதையெல்லாம் செய்தார்கள் என்ற வெறுப்பில்தான் நமக்குள் பிரிவினை விஷத்தை அனலாக கொதிக்க விட்டது ஒரு பிரித்தாளும் சதி.நம்மை கவ்விக் கொண்ட இந்த மேற்கின் இருட்டை கிழித்தெறிந்தே ஆக வேண்டும் நாம்.இல்லை என்றால் மீட்பே கிடையாது.


ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது.

இதில் அந்த கோவில்களில் ஏற்கனவே இருந்த கல்வெட்டுகளை எல்லாம் முறையாக திரும்பவும் பதிவு செய்துள்ளார் திருப்பணியின் போது.’ ஸ்வஸ்தி ஸ்ரீ ;இதுவும் ஒரு பழங்கற்படி’ என்று துவங்கி அந்த கல்வெட்டு செய்திகளையும்,நிவந்தங்களையும் உலகமறிய மீண்டும் தொடர்ந்திருக்கிறார்.

இதுதான் எதிர்கால சமூகத்திற்கு அடுத்த ஆயிரம் வருடத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டிய தேவையை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. உயிரை கொடுத்து காத்த நிலம், உயிரை கொடுத்து காத்த கோவில், பண்பாடு இவற்றை சட்டம் என்பவற்றின் பெயரால் பலியாகக் கொடுக்க முடியாது.அதுவும் நம்மை நாமே ஆள்கிற இந்த நேரத்தில் கூட.

நான் சில மாதம் முன்னால் செம்பியன் மாதேவியார் திருப்பணி செய்த ஆநாங்கூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். யாருமே இல்லை பூட்டியிருந்தது. வாசலில் இருந்த இளைஞர்கள் ஓடிப்போய் சாவியை வாங்கி வந்து திறந்துவிட்டு கூடவே வந்தார்கள். நாங்கள் அங்கிருக்கும் கல்வெட்டுகளை படித்தவுடன் அவர்களுக்கு இன்னும் குஷியாகிவிட்டது.

“அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை. உடனே ஒரு கல்வெட்டில் அந்த பெயர் எழுதியிருப்பதை காட்டினோம். அதை தெளிவாக படித்த இளைஞருக்கு புதையல் கிடைத்தது போல மகிழ்ச்சி. இவ்வளவு பழமையான ஊரிலா நாங்கள் வாழ்கிறோம் என்று சந்தோஷமாக கேட்டார்.

“இது செம்பியன் மாதேவி திருப்பணி செய்த கோவில். அப்படியென்றால் இது அந்த காலத்தை விட பழமையான கோவில். இது கருங்கற் பணி செய்தே ஆயிரம் வருடத்துக்கு மேலாகிற. ,தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு முன்னே கட்டப்பட்டது” என்றவுடன் அவர்கள் கண்ணில் ஒரு கலாச்சார பலம் மின்னி மறைந்தது.

இன்று இந்தியாவில் பழமையான கோவில் மரபு, ஆகம முறைகளுடன் பாதுகாப்போடு இருப்பது தமிழகத்தில்தான். காஷ்மீரில் கோவில்களும் சைவமும் எப்படி இருந்தன என்று உலகத்திற்கு தமிழகத்தை காட்டித்தான் சொல்ல முடிகிற நிலை இன்று உள்ளது. படையெடுப்புகளில் காப்பாற்றப்பட்ட இந்த பொக்கிஷங்களை அரசியல், வரலாற்று அறிவில்லாமல் நாம் இழந்துவிடக்கூடாது.

எனவே, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களோடு நாம் இணையாத புள்ளிகள் இருக்கலாம். அவர் சொல்கிற கருத்துகளோடு நாம் முரண்படலாம். ஆனால் இப்போது உள்ள கோவில் நிர்வாகத்தை மறுசீரமைக்க வலிமையாக நாம் குரல் கொடுக்க வேண்டியது நேரம் இதுவென்பதில் மாற்றுக் கருத்தில்லை.

படங்கள்: ஆநாங்கூர் கோவில் (செம்பியன் மாதேவி திருப்பணி)

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

<< முந்தைய பகுதி 

தொடர்ச்சி… 

(7)

1998 ஆம் ஆண்டு திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் ஆராதனை அறக்கட்டளை என்ற அமைப்பு சிவாச்சாரியார்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, தமிழகம் முழுவது உள்ள சிவாச்சாரியார்களால் தங்கள் பிறந்தநாள், திருமணநாள், தீக்ஷை நாள்களில் ஸ்ரீ சுந்தரர் மடத்தின் ஒரு நாள் பூஜை செலவை ஏற்றுக்கொள்வது என்ற திட்டத்தின்படி ஒரு தொகை வைப்புநிதியாக வைக்கப்பட்டு ஆண்டின் 365 நாள்களும் பூஜைகள் தடையின்றி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்பின் இந்த ஆராதனா அறக்கடளை மூலம் அனைத்து சிவாச்சாரியார்களும் ஒன்று சேர்ந்து 2000 ம் ஆண்டில் ஸ்ரீ சுந்தரர் மடம் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது சம்பந்தமாக முயற்ச்சிகள் மேற்க்கொள்ளப்பட்டன.

முன்பு 40 ஆண்டுகள் முன் செய்த திருப்பணியானது, சிவாச்சாரியார்கள் கஷ்ட ஜீவனத்திற்க்கு இடையில் செய்த திருப்பணி என்பதால், மடம் பழுதடைய ஆரம்பித்தது. எனவே மடத்தை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அதன்படி, சுந்தரர் ஆராதனா அறக்கட்டளை சார்பாக ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் தலைமையில், 20-10- 2000 ஆம் ஆண்டு சேலம் சிவஸ்ரீ கணேச சிவாச்சாரியார் மற்றும் அவினாசி சிவஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்கள் வழிகாட்டதலோடு திருப்பணி சார்ந்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி திருமடம் திருப்பணி ஆரம்பித்து தொடங்குவது என்றும், அதற்க்குமுன்பாக, 40 ஆண்டுகள் முன்பாக நம் முன்னோர்கள் செய்தது போல் முதலில் திருநாவலூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலை முதலில் கும்பாபிஷேகம் செய்து பின் சுந்தரர் திருமடம் கும்பாபிஷேகம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் ஆலயம் திருப்பணி தொடங்கப்பட்டது.அதேநேரத்தில் திருமடத்திலும், திருப்பணி அறக்கட்டளை சிவாச்சாரியார்களும், தொண்டைமண்டலதிருப்பணிக்குழு என தொண்டை மண்டல சிவாச்சாரியார்களும் திருப்பணி ஆரம்பித்தனர். ஆனால் திருப்பணியில் தடை ஏற்ப்பட்டது. காரணம் திருப்பணி சார்ந்த நிதிகள் சிவாச்சாரியார்களே செய்வது, வெளியில் வசூல் செய்வதில்லை என்பதாலும் சிவாச்சாரியார்கள் அனைவரும் தங்கள் கோயில் நித்ய பூஜையில் உள்ளதாலும், தமிழகம் முழுவது விரவி ஒரு குடி, இருகுடி என்று உள்ளதால், ஒன்று சேர்ந்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிப்பதில் வந்த தாமதமே.

இந்நிலையில் வயது முதிர்ந்த சிவாச்சாரியார்கள், முதலில் பெரியகோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்தால்தான் திருமடம் திருப்பணி தங்கு தடையின்றி நடைபெறும் என்று வழிகாட்டினர். அதன்படி திருநாவலூர் கோயில் & மடத்தின் குருக்கள் சிவஸ்ரீ முத்துஸ்வாமி குருக்கள் சக்கரமாக சுழன்று பெரியக்கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்க்கான பணிகளை மேற்க்கொண்டார் . 2003 ல் தொடங்கிய திருப்பணி 2006 ல் பூர்த்தி பெற்றது .அறநிலையத்துறையின் எவ்வித உதவியும் இன்றி ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்போடு, முழுக்க முழுக்க சிவாச்சாரியார்கள் செய்த கும்பாபிஷேகம் இது.

கும்பாபிஷேகத்திற்க்காக பெரியகோயில் குருக்கள் முத்துசாமி சிவம், பல ஊர்க்களுக்கு சென்று சிவாச்சாரியார்களை அணுகியபொழுது, அவர்கள் தங்களால் இயன்ற அளவு நிதிஉதவி, நெய், பூஜை பொருட்கள், மூலிகை திரவியங்கள், கலசங்கள் என வாங்கித்தந்தனர். 2006 ல் நடைபெற்ற ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சிவாச்சாரியார்கள் சுமார் 200 பேர் இருப்பார்கள் . ஆறு நாட்கள் நடந்த கும்பாபிஷேகத்திற்க்கு சிவாச்சாரியார்கள் தங்கள் திருநாவலூர் என்ற எண்ணத்தில் பலரும் சம்பாவனையே வாங்காமல் தொண்டு செய்தனர் .திருக்கோயில் குருக்கள் வலியுறுத்தி தந்த மரியாதை நிமித்தமான சம்பாவணையை மட்டும் சிலர் ஏற்றுக்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பல சிவாச்சாரியார்கள் உடலாலும், மனதாலும், பொருளாலும் தொண்டுசெய்து ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்தார்கள். திருநாவலூரோடு சிவாச்சாரியார்களுக்கு இருந்த தொடர்பும், பந்தமும், திருநாவலூர்பூமியை தங்கள் ஆதிபூர்விகமாக பாவித்த பக்தியுமே சிவாச்சாரியார்களின் இந்தளவிற்கான தொண்டுக்கும் ஈடுபாடுக்கும் காரணமாயிற்று.

2006 பக்தஜனேஸ்வரர் கும்பாபிஷேகத்தை உள்ளூர் குருக்கள் தலைமையில், தமிழக சிவாச்சாரியார்கள் தன்னார்வலராக தொண்டாற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள் என்பதை அவ்வூர் பொதுமக்களாலேயே மறுக்கமுடியாத உண்மையாகும். அதாவது 1965 மற்றும் 2006 வாக்கில் நடைபெற்ற பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இரண்டுமே சிவாச்சாரியார்கள் பங்களிப்போடே நடைபெற்றது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது. இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு பக்தஜனேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை பூர்த்தி செய்து, 2007 ஆம் ஆண்டு மீண்டும் திருமடம் திருப்பணி ஆரம்பிக்கவிருந்த நிலையில் கோயில் & மடத்தின் குருக்களுக்கு சில தனிப்பட்ட குடும்ப சங்கடங்கள் ஏற்பட்டது.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1995525057427722&id=100009107423631

(8)

திருநாவலூரில் இரண்டு ஆதிசைவ குருக்கள் குடும்பம் உள்ளது.இவர்களில் மூத்தவர் சிவஸ்ரீ ராமநாதகுருக்கள் &வாரிசுகள். இளையவர் சிவஸ்ரீ. சம்பந்த குருக்கள் &வாரிசுகள். இவர்கள் இருவருக்கும் பெரியகோயில் என்ற ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலில் 15 &15 நாள் பூஜை முறை. இவர்களில் இளையவர் சம்பந்த குருக்களே பெரியகோயில் பூஜை முறையோடு, திருமடம் பூஜை &நிர்வாகம் செய்துவந்தார்.இவரது இளைய மகன் முத்துசுவாமி குருக்கள் முறைப்படி வேத ஆகமம் பயின்றவர் .திருமுறைகளில் மிகுந்த பற்றுக்கொண்டவர் .

திருநாவலூர் மிகவும் புராதான கோயில் என்றாலும், பக்தி பெருக்கம் ஏற்பட்ட 2000 ஆம் ஆண்டு வாக்கில் பல பக்தர்கள் கோயிலை தேடிவரும் வகையில் கோயில் புகழ்பெறச் செய்தவர் இந்த முத்துஸ்வாமி குருக்கள் என்றால் மிகையாது. இவர் மிகுந்த திறமையாக கோயிலை நிர்வாகம் செய்தது, சிலருக்கு சங்கடமாக இருந்தது . பொதுவாக ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் தன்மானம் பார்க்காமல் அடிமைப்போல் இருந்தால் கிராமப்பகுதியில் புகழ்வார்கள். அவ்வாறு இல்லாமல், கொஞ்சம் தன்மானத்தோடு, நிர்வாகம் செய்பவராக இருந்தால் சிலருக்கு சங்கடமே. அவ்வகையில் இவர் எங்கு சறுக்குவார் என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இவரின் குடும்பசங்கடம் + அதே நேரத்தில் உருவான நிதிமுறைகேடு என்ற வாய்ப்பை பயன்படுத்தி சிலர் இவரை பழிவாங்கினார்கள்.

பொதுவாக திருமடத்தில் சிவாச்சாரியார்களே நிதிஉதவி அக்காலத்தில் செய்தனர். வெளிநபரிடம் பெரும்பாலும் வசூல் செய்வதில்லை. அவ்வாறான நிலையில் நிதிமுறைகேடு பற்றி விசாரிக்கவேண்டியவர்கள் தமிழக சிவாச்சாரியார்கள். அடுத்து முறைகேடு நடந்தாலும், அதனை திருத்தி, அல்லது தண்டனைக்குட்படுத்தி, மாற்று ஏற்பாடு செய்து, முறைப்படுத்தவேண்டுமே தவிர, ஒரு மரபின் வழி வழி அடையாளத்தை அழிக்க முனையக்கூடாது. இதுவே சான்றோர் செய்கை. ஆனால் திருநாவலூரில் இந்த சூழலை பயன்படுத்தி மடத்திற்க்கும், குருக்களுக்கும் உள்ள தொடர்பை அறுக்க முயன்றனர் . இதன் காரணமாக திருப்பணி ஆரம்பிப்பது தாமதமாகியது.

காரணம் தமிழகம் முழுவதும் உள்ள சிவாச்சாரியார்கள் நிதி சார்ந்து பங்களித்தாலும், அங்கு நிர்வாகம் செய்து அதனை செயல்படுத்தும் இடத்தில் உள்ளூர் குருக்களே இருந்தார். அவரே திருமடம் அர்ச்சகர்& நிர்வாகம் செய்து வந்தார். இதே காலக்கட்டத்தில் அதாவது 2000 முதல் 2010 வரையிலான காலங்களில் சைவசமயத்தில் ஈடுபாடுகொண்டு பலரும் வந்தனர். இவ்வாறு சைவசமய பக்திகொண்டு சிவவழிபாடு தொடங்கிய அடியார்களில் பலரும் சரியை, கிரியை வழி மூலம் இறைவனை அடைதல் பிறவின்பயன் என்றபடிக்கு, உழவாரம் செய்தல், தீபம், தூப தொண்டுகள், முற்றோதல், திருத்தலயாத்திரை என்ற அடியார் இலக்கணத்தோடு செயல்பட்டோர் பலர். இதேகாலத்தில், கடந்து ஐம்பது வருட திராவிடவாசத்தில் இருந்து விதிவசமாக சிவகோலம் கொண்டோர் சிலர். இவர்களுக்கு சிவக்கோலம் கொண்டாலும் பழைய திராவிடவாசம் விடவில்லை .எனவே முடிந்தளவு சைவசமயத்தில் திராவிட கருத்துகளை இறக்குமதி செய்தனர் .

அந்தபடிக்கு இத்தைய சிவகோலம் கொண்டோர், சரியை, கிரியை செய்து அடியாராக இருப்பதைவிட, ஆதினமாக, சைவசமய சட்டாம்பிள்ளையாக மாறவிரும்பினர் .அதாவது ஒரு படத்தில் கிண்டலாக வரும் .இந்த வில்லன், துணை நடிகர் எல்லாம் நடிப்பதில்லை. Direct ஹீரோதான் என்பார் . அதுபோல் சைவசமயம் சார்ந்த மூன்று வருடத்திலேயே Direct டாக ஆதினம், மடாதிபதி ஆவது என்று சைவசமய மார்க்கெட்டை கணித்து திட்டமிட்டோர் சிலர். அப்படியான எண்ணோம் கொண்டோருக்கு சுந்தரர் மடம் ஒரு காரணியாகியது. எப்படி வார்டு கவுன்சிலர் ஏழைகளின் பிரச்சனை உடைய இடத்தை தன்பெயரில் பட்டா போட்டுக்கொள்வாரோ, அதுபோல், அன்றைய சூழலில் சுந்தரர் மடம் சில சிக்கலில் இருந்ததால், அந்த சூழலை பயன்படுத்தி திருப்பணி என்ற பெயரில் சிலர் நுழைய முயன்றனர். அதன்படி திருப்பணி செய்வதாக முதலில் 2010 ல் நுழைந்தவர்கள், விருத்தாசலம் அறுபத்திமூவர் திருப்பணி மன்றம் என்ற அமைப்பினர் .

அதுமுதல், அதாவது 2010 முதல் திருநாவலூர் சுந்தரர் திருமடம், வழக்கு பிரச்சனை என இன்று வரை இருந்துவருகின்றது. சரியோ, தவறோ தேவையின்றி மற்றவர் அனுபவத்தில் உரிமையில் இருந்த இடத்தில் நுழைய சிலர் முற்பட்டதால் வந்த விளைவு இது. ஸ்ரீ சுந்தரர் பெருமான் அருள்வாழ்வே வழக்கு மன்றத்தில் ஆரம்பித்ததால், அவர் இடமும் வழக்கு பிரச்சனை என்று உள்ளதோ?

(9)

திருநாவலூர் ஸ்ரீ சுந்தர் திருமடத்தில் சரியோ, தவறோ அவ்விடத்தில் திருப்பணி ஆரம்பித்து நடைபெற்று வந்தது. திருப்பணிகளை தடைசெய்யவேண்டும் என்பது நோக்கமல்ல. பாரம்பர்ய மிக்க சைவ ஆதினங்கள், சிவாச்சாரியார்களை கொண்டு ஆலோசித்து முறைப்படுத்தவேண்டும் என்பதே கோரிக்கை.

இப்பொழுது திருப்பணி செய்பவர்களுக்கு உண்மையில் திருப்பணி செய்வதுதான் மைய நோக்கம் என்றால், அவர்கள் திருப்பணிக்கு சிவாச்சாரியார்கள் அனைவரும் தோளோடு தோள் நிற்போம். காரணம் இப்பொழுது திருப்பணி செய்பவர்கள் அறநிலையத்துறையிடம் உபயத்திருப்பணி என அனுமதி வாங்கியே செய்கிறார்கள். உபயத்திருப்பணி என்றால் வெளியில் வசூல் செய்யாமல் ஒரு தனி நபரோ அல்லது டிரஸ்டோ உபயமாக செய்வது. உபயதாரர் அந்த உபயத்தை பூர்த்தி செய்துவிட்டார்கள் என்றால், அவருக்கான கோயில் மரியாதை செய்யப்படும். மரியாதை பெற்றுக்கொண்டர் எவ்விதத்திலும் அதன் பின் தன் உபயத்தில் அதிகாரமோ, உரிமையோ செய்யக்கூடாது.

அவ்வகையில் இப்பொழுது திருப்பணி செய்பவர்கள் ஒரு உபயதாரர்கள். இவர்கள் திருப்பணி பூர்த்தி செய்வதில்தான் மைய நோக்கம் இருக்கவேண்டுமே ஒழிய, எந்த இடத்திற்க்கு உபயம் செய்கிறார்களோ அந்த இடத்தை ஆக்ரமிக்கும் நோக்கம் இருக்கக் கூடாது. ஆனால் இன்று திருநாவலூரில் திருப்பணி செய்பவர்களுக்கு, திருப்பணி செய்வது மட்டுமே நோக்கமல்ல.அதற்க்கு மேலும் மடத்தை ஆக்ரமிக்கும் எண்ணம், மடத்தில் இருந்து சிவாச்சாரியார்களை வெளியேற்றும் எண்ணம் உள்ளது என்பது அவர்கள் செயல்பாடுகளால் உணரமுடிகின்றது.

அடுத்து சுந்தரர் திருப்பணியில் வரலாற்று ரீதியாக 1500 ஆண்டுகள் பந்தம் கொண்ட, கடந்த நூறு ஆண்டுகளாக மடத்தை நிர்வாகித்து சென்ற கும்பாபிஷேகம் செய்த தமிழக சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்குவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்து நால்வரில் ஒருவராகிய ஸ்ரீ சுந்தரர் மடத்தின் திருப்பணியை சைவபாரம்பர்ய ஆதினங்களாகிய, தருமைஆதினம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதினங்களையும், ஏற்கனவை 1965ல் நடைபெற்ற திருநாவலூர் சுந்தரர் மடம் திருப்பணிகுழு தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்த கூனம்பட்டிஆதினம், மற்றும் சிவாச்சாரியார்களை கலந்தாலோசிக்காமல், அவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், தான்தோன்றித்தனமான திருப்பணி செய்வதன் காரணம் என்ன? அதன் மர்மம் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

இன்று வாழும் நாவுக்கரசராக, பழுத்த சைவப்பழமாக உள்ள, வேத, ஆகம, திருமுறை சித்தாந்த சாஸ்திரங்கில் சைவ அனுபவம் வாய்ந்த, ஆதினங்களில் இன்று மிகவும் மூத்தவராக விளங்கும் ஞானாச்சாரியார் தருமை ஆதினம் அவர்கள் இப்பொழுது நடைபெறும் திருப்பணியில் ஆகம குற்றம் உள்ளது என்று கூறியுள்ளதாக தகவல் வருகின்றது. திருநாவலூருக்கு மிக மிக அருகாமையில் உள்ள, அப்பர் பெருமான் அவதரித்த திருவாமூரில் அனைத்து திருப்பணிகளும் ஸ்ரீலஸ்ரீ தருமை ஆதினம் அவர்களை ஆலோசித்து, அவர்கள் வழிகாட்டுதலோடு விழாக்களை செய்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க திருநாவலூர் சுந்தரர் மடாலய திருப்பணியில் சைவப் பாரம்பர்ய ஆதினங்களின் வழிகாட்டுதலை பெறாத மர்மம் என்ன?தருமை ஆதினம் அவர்களை திருநாவலூர் திருமடத்தில் எழுந்தருளச் செய்து திருப்பணி சார்ந்த ஆலோசனை பெறாதது ஏன்.?

திருவாமூர் அப்பர் கோயில்வரை வரும் தருமை ஆதினம், மேலே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாவலூருக்கு வரமாட்டோம் என்றா கூறிவிடுவார். மூத்த ஆதினமாகிய அவர்களை அழைக்காதது ஏன்? தமிழகத்தின் பாடல் பெற்ற தலங்கள் மற்றும் முக்கிய சைவசமய வரலாற்று இடங்களில் திருப்பணிகளோ அல்லது கும்பாபிஷேகமோ அல்லது விழாக்களோ செய்யும் பொழுது, இதனை அரசாங்கம் செய்தாலும் சரி, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் போன்று வேறு உபயதாரர் எவர் உபயமாக செய்தாலும் சரி, சைவசமயத்தின் மிகப்பெரும் முப்பெரும் ஆதினங்களாகிய தருமை ஆதினம், திருவாவடுதுறை ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம் ஆகிய இவர்களை ஆலோசிக்காமல், இவர்கள் வழிகாட்டுதல் இல்லாமல், இவர்களை கும்பாபிஷேகம் விழாக்களுக்கு அழைக்காமல் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக வரலாறு இல்லை. இவ்வாறு இருக்க, சைவசமய மூவர் முதலிகளில் ஒருவராகிய சுந்தரர் அவதரித்த சைவசமய வரலாற்று சிறப்புமிக்க திருமடம் திருப்பணியில் மட்டும் சைவ பாரம்பர்ய ஆதினங்களை அழைத்து வழிகாட்டுதல் பெறாதது ஏனோ?

எப்பொழுதுமே நம் சைவமரபில் முதலில் உதவி புரிந்தவர்களை மறக்கமாட்டார்கள்.இது சைவதர்மம், சைவ நியதி. அதன்படி 1965 ல் சுந்தரர் மடம் திருப்பணி குழு தலைவராக இருந்து கும்பாபிஷேகம் செய்த கொங்கு தேசம் கூனம்பட்டிஆதினம் ஸ்வாமிகளை இப்பொழுது நடைபெறும் திருப்பணியில் ஆலோசனையோ, வழிகாட்டுதலோ பெறாதது ஏன்?அழைக்காதது ஏன்? இப்படியான மரபுகள், சைவதர்மங்கள், சைவ நியதிகள் இருக்கும் பொழுது தான்தோன்றிதனமாக திருப்பணி செய்ய சுந்தரர் மடம் என்ன இவர்கள் வீடா?

சைவசமய மூவர் முதலிகளில் ஒருவர் சுந்தரர் பெருமான் என்பதால், அவர் அவதரித்த இடத்தில் நடைபெறும் திருப்பணி, விழா சார்ந்த விசயங்களை பற்றிய விபரங்களை கேட்கும் உரிமை, உலகம் முழுவதும் உள்ள மெய்யடியார்களுக்கும், ஏதேனும் தவறுகள் இருப்பின் அதை பற்றிய விபரங்கள் கேட்கும் கடமையும் மெய்யடியார்களுக்கு உண்டு.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1999131883733706&id=100009107423631

(10)

விருத்தாஜலம் அறுபத்து மூவர் திருப்பணிமன்றம் என்ற அமைப்புசார்பாக தொடங்கப்பட்ட திருப்பணி, சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் சிவாச்சாரியார்கள் பக்கம் அடிப்படை நியாயம் இருந்ததால் விழுப்புரம் மாவட்டம் நீதிமன்றம் தடையாணை அளித்தது. ஆனால் தடையாணை பெற்றதால் பல சங்கடங்கள் அக்காலத்தில் உள்ளூர் குருக்களுக்கு ஏற்பட்டது. பொதுவாக உள்ளூர் குருக்கள் ஊரில் ஒரு குடியாக வாழ்வதால், பல இடைஞ்சல்கள் ஏற்படும் . ஒத்த குடி என்றும், அடித்தால் கேட்க ஆளில்லை என்றும், பார்ப்பான் என்றும் வசவுகள் வரும். கடந்த ஐம்பது ஆண்டு திராவிட ஆட்சிகாலத்தில் பிராமணர்கள், முக்கியமாக உலக விபரம் இல்லாத கோயில் குருக்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுவார் என்று சொல்லித்தெரியவேண்டாம் .அவரவர் யூகத்திற்க்கு சிந்திக்கலாம். எனவே உள்ளூர் குருக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, உள்ளூர் குருக்கள் குடும்பத்தோடு வழக்கு தொடர்ந்த சிவாச்சாரியார்கள் வீட்டுக்கு சென்று அழுது புலம்பல் செய்ய, இவ்வழக்கு தாக்கல் செய்து தடையாணை பெற பெரிதும் துணையாக இருந்த, அர்ச்சகர் சங்க தலைவர் கடலூர் அருணாசலம் அவர்கள் இல்லத்திற்க்கே சென்று உள்ளூர் குருக்கள் நெருக்கடியை கூற, வேறு வழியின்றி வழக்கை வாபஸ் வாங்குவது என்று முடிவுசெய்யப்பட்டு வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

இவ்விடத்தில் பொதுவாக திருநாவலூர் கிராமத்தில் சிலர் கூறும் கூற்று என்னவென்றால், வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு இங்கு என்ன வேலை என்பது. அதாவது சுந்தரர் மடம் உள்ளூர் விசயமாம். அதனால் வெளி சிவாச்சாரியார்கள் தலையிடக்கூடாதாம்.ஏனெனில் வழக்கு தொடர்ந்தவர்கள் வெளியூர் சிவாச்சாரியார்கள் என்பதால் இந்த வாதம் முன்வைக்கப்படுகின்றது. திருநாவலூரில் உள்ள ஒரு காளி, மாரி கோயில்கள் என்றால் வெளியூர் நபர்கள் எவரும் தலையிடப்போவதில்லை. ஆனால், திருநாவலூர் சுந்தரர் மடம் சைவசமய உலகத்திற்க்கு சொந்தமான்து. அடுத்து சிவாச்சாரியார்கள் பூர்வீக வரலாறுகளை ஆராய்ந்தால் ஆகமங்களிலும், அடுத்து திருமுறைகளிலும், திருமுறை என்றால் பெரியபுராணத்திலும், அதிலும் திருநாவலூரில் அவதரித்த சுந்தரர் புராணத்திலுமே அதிகம் உள்ளது. அவ்வகையில் திருநாவலூர் தமிழக சிவாச்சாரியார்களுக்கு ஆதிபூர்வீகம்.

அடுத்து சாதாரண பஜனை மண்டபமாக இருந்த இடத்தை, ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து ஐம்பது ஆண்டுகள் முன் போக்குவரத்தே இல்லாத கஷ்டமான காலத்தில் நடந்தே சென்று திருப்பணி செய்து, சுந்தரர்மடமாக பொலிவுறச்செய்தது வெளியூர் சிவாச்சாரியார்களே. அதன்பின், ஐம்பது ஆண்டுகளாக நித்யபூஜை. ,சிறப்பு விழாக்கள், திருமடம் நிலத்தில் பிரச்சனை ஏற்ப்பட்டபோது, அப்பிரச்சனையை தீர்த்து நிலம்கிரையம் செய்து தந்தது என அனைத்தும் செய்தது வெளியூர் சிவாச்சாரியார்களே. மேலும், சுந்தரர் மடத்தை சிவாச்சாரியார்கள் சாதி ரீதியாக அணுகவில்லை .தங்கள் மரபின் அடையாளமாக, தமிழகத்தில் மிஞ்சி இருக்கக் கூடிய தங்கள் மரபின் எச்சமாக, ஆதிபூர்விக மடமாக கருதுகிறார்கள்.எனவேதான் தமிழகம் முழுவதும் உள்ள பல சிவாச்சாரியார்கள் அம்மடத்திற்கு தொண்டு செய்துள்ளார்கள். எனவே வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு இங்கு என்ன வேலை என்று பேச்சு கொஞ்சமும் நியாயமற்றது.

இவ்வாறு 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்ந்து தடையாணை பெற்ற வழக்கு வாபஸ் பெறப்பட்ட பின், சுந்தரர் திருமடம் பிரச்சனை அல்லது ஈகோவுக்கு உரிய இடமாக மாறிப்போனது. 2011 க்கு பின் சிவாச்சாரியார்களும் அவ்விடத்தில் திருப்பணி ஆரம்பிக்க முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் 2012 ஆண்டு டிசம்பர் மாதம் கூனம்பட்டிஆதினம் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஒன்றினைந்து ஐம்பது ஆண்டுகள் முன்பு கட்டிய திருமடம், பழமை காரணம் காட்டி ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

(11)

எதற்கு இடிக்கப்பட்டது. ஏன் இடிக்கப்பட்டது என்றும் எதுவும் தெரியாது. எவருக்கும் தெரியாதுஉள்ளூர் குருக்களும் அடியேனுக்கு தெரிந்தவரை வெளியூர் சிவாச்சாரியார்களுக்கு தகவல் அளித்ததாக தெரியவில்லை.

பின்பு ஒரு பத்து நாட்களில் புதியதாக உருவாக்கப்பட்ட தம்பிரான் தோழர் அறக்கட்டளை -உளுந்தூர்பேட்டை என்ற அமைப்பு சுந்தரர் திருமடத்தை புதியதாக திருப்பணி செய்ய உள்ளதாகவும், அதற்க்கு அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும், மடம் பழமையாக உள்ளதால், அறநிலையத்துறை அனுமதி பெற்று பழைய மடம் இடிக்கப்பட்டதாகவும், பிற்காலத்தில் அடியேன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொண்டேன்.

தேவையின்றி ஸ்ரீ சுந்தரர் திருமடத்தை, தமிழக சிவாச்சாரியார்களிடம் இருந்து அந்நியப்படுத்தவேண்டும், என்ற நோக்கில், அனாவச்யமாக அறநிலையத்துறையிடம் சென்றது தேவையற்றதாக தோன்றுகின்றது.

கடந்த காலத்தில் திருமடத்திற்காக ஒரு கற்பூரம் வாங்கக் கூட அறநிலையத்துறை உதவி செய்தது இல்லை. கடந்த காலத்தில் மடத்தில் தொண்டும் உதவியும் செய்தவர்கள் தமிழக சிவாச்சாரியார்களே. ஆனால் சிவாச்சாரியார்களை புறக்கணிக்கவேண்டும் என செயல்படுவதால், திருப்பணி செய்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக அறநிலையத்துறையே இவ்விசயத்தில் உள்ளே இழுத்துவிட்டு, இப்பொழுது அறநிலையத்துறை பஞ்சாயத்து செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இவ்வாறு தம்பிரான் தோழர் அறக்கட்டளை அமைப்பினர் அறநிலையத்துறையிடம் அனுமதிபெற்று பழைய மடத்தை இடித்து புதியதாக திருப்பணி செய்வதாக அறிவித்தனர்.

ஆனால் தார்மீகரீதியாக, சைவநியதிப்படி பழையமடம் இடிப்பதற்க்குமுன் கடந்த நூறு ஆண்டுகளாக கட்டிக்காத்த தமிழக சிவாச்சாரியார்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களோடு சேர்ந்து திருப்பணி ஆரம்பித்து இருக்கவேண்டும். அல்லது சிவாச்சாரியார்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், ஐம்பது ஆண்டுகள் முன் திருநாவலூரிலேயே ஐந்து ஆண்டுகளாக இரவுபகலாக தங்கி திருப்பணி தலைவராக திருப்பணி செய்தருளிய ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி ஆதினம் ஸ்வாமிகளுக்காவது பழைய மடம் இடிப்பது சார்ந்த தகவல் தெரிவித்து, புதிய திருப்பணி செய்வது சார்ந்து சுவாமிகள் வழிகாட்டுதலோடு செய்திருந்தால் அதில் ஒரு நியாயம், நேர்மை இருக்கும். ஏனெனில், நம் பாரம்பர்யத்தில் பாட்டன்காலத்தில் கோயிலுக்கு ஒரு திருப்பணி உதவி செய்திருப்பார்.சன்றோர்கள் அந்த நன்றியை மறக்காமல் பேரனை கூப்பிட்டு அந்த திருப்பணி சார்ந்து ஆலோசிப்பார்கள்.இது தர்மம். அப்படி, குறைந்தபட்சம் கூனம்பட்டி ஆதினம் அவர்களையாவது மடம் இடிப்பது மற்றும் திருப்பணி சார்ந்து ஆலோசித்திருக்கலாம். ஏனெனில் ஸ்ரீ கூனம்பட்டி ஆதின சுவாமிகள், திருநாவலூரிலேயே தங்கி திருப்பணி செய்தார்கள் என்பதை அவ்வூர் வாசி ஒருவரே கூறியுள்ளதாக நண்பர் ஒருவர் பதிவு செய்துள்ளதும் காண்க (பார்க்க படம் 2)

ஆனால் சுந்தரர் மடம் முன்பு திருப்பணி செய்து, கட்டிக்காத்தவர்களாகிய எவரையும் ஆலோசனை செய்யாமல், தான்தோன்றித்தனமாக மடம் இடிக்கப்பட்டு புதிய மடம் திருப்பணியானது 23-01 -2013 அன்று நடைபெற உள்ளதாக பத்திரிக்கை அடித்து விநியோகம் செய்யப்பட்டது. (பார்க்க படம் -1) கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பணி செய்வதாக அடிக்கப்பட்ட பத்திரிக்கையிலாவது, ஆதிசைவப்பெரியோர்கள் என்ற வார்த்தை சம்பிரதாயத்திற்க்கு சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுது 2013 ல் திருப்பணி செய்ய உள்ளதாக அடிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையில் ஆதிசைவர்கள், சிவாச்சாரியார்கள் என்ற வார்த்தையே கிடையாது.

பத்திரிக்கை வாசகமே சிவாச்சாரியார்களை ஒதுக்கிவிட்டு செய்கிறோம் என்பதை குறிப்பால் உணர்த்தியது. சரி, இந்த தம்பிரான் தோழர் அறக்கட்டளை நிர்வாகிகள் யார் என்றால், ஒரு காலத்தில், பெரியகோயில் வழிபாடு வந்தவர்கள், பக்கத்தில் உள்ள மடத்திற்க்கு வந்து தரிசனம் செய்து, திருமடம் குருக்களிடம் நயமாக பேசி, மாதா மாதம் சுவாதி கட்டளை செய்கிறோம் என்று பணிவாக பேசி,ஆரம்பித்து காலப்போக்கில் மடத்தின் ஆதரவற்ற நிலையை அறிந்து திருப்பணி என்ற பெயரில், எந்த குருக்கள் மாத சுவாதி செய்ய ஆதரவு அளித்தாரோ, அதே குருக்கள் சமூகத்தை எதிர்த்து உள்ளே நுழைந்தவர்கள்.

அதாவது ஒட்டகத்தை கொட்டகையில் விட்ட கதை என்றபடிக்கு ஆனது. அக்கதை, பாலைவனமாகிய அரேபியாவில் பகலில் கடும் உஷ்ணமும், இரவில் அதீத குளிரும் வாட்டும். ஒட்டகத்தின் மீது தங்கள் வழித் துணைக்கு தேவையான பொருட்களை சுமையாக ஏற்றிக் கொண்டு பயணப்படுவது அரேபியர்களின் பழக்கம். அதில் முக்கியமானதாக இருப்பது கூடாரம் அமைக்கும் கொட்டகை பொருட்கள். அரேபிய ஷேக் வியாபாரி அவ்விதம் பயணப்பட்டு இரவில் ஓய்வெடுக்க கொட்டகை அமைத்து உறங்குகிறான். கடும் குளிரில் அவன் பாதம் வைத்திருந்த இடத்தில் மட்டும் சிறிது சூடு பரவுவதை உணர்கிறான். என்னவென்று பார்த்ததில் ,அது அவனது ஒட்டகம் விடும் மூச்சுக் காற்று என்று தெரிகிறது. சரி, உடலுக்கு இதமாக இருக்கிறதே என்று நினைத்து… கொட்டகைக்குள் தனது கால்களை கொஞ்சம் மடக்கிக் கொண்டு ,ஒட்டகம் தன் மூக்கை நுழைக்கும் அளவுக்கு இடம் ஏற்படுத்தி தருகிறான்.
முதலில் மூக்கை நுழைத்த ஒட்டகம், கொட்டகைக்குள் இருக்கும் சௌகர்யம் பிடித்துப் போக… சிறிதுசிறிதாக முகம், கழுத்து, முன்னங்கால், முதுகு பின்னங்கால் என்று அனைத்தையும் கொட்டகைக்குள் நுழைத்து விட…
தான் தன்னுடைய அற்ப சுகத்துக்காக(ஒட்டகையின் மூச்சு வெப்பம்) நிரந்தர சுகமாகிய தூக்கத்தை இழந்து…கொட்டகைக்கு வெளியே கடும் குளிரில் தன் துப்பட்டாவை போர்த்திக் கொண்டு இரவு முழுவதும் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டிருந்தான்…வியாபாரி… அதே கதையாக மடம் அமைப்பதற்கான நிறைவுப் பணியில் ஏற்பட்ட தொய்வையும், பணமுடையையும் போக்க வந்த சைவ வேடதாரிகளின் திரவிய உதவியாகிய அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு…அரும்பாடுபட்டு அமைத்த சுந்தரர் திருமடமாகிய கோவிலை (நிரந்தர நிர்வாகத்தை) அவர்களின் ஆக்ரமிப்பில் விட்டுவிட்டு…ஆதிசைவர்கள் இன்று கொட்டகைக்கு வெளியே காத்திருக்கிறோம்… எப்போது விடியும் என்று!?

இப்படி, திருமடம் குருக்கள் செய்த பெரும் தவறு குற்றம் இது. எந்த உபயமாக இருந்தாலும் கோயிலில் செய்துக்கொள்ளுங்கள்.மடத்தை வந்து தரிசியுங்கள், தேவாரம் ஓதுங்கள், விபூதி பிரசாதம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெளிவாக கூறியிருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. இவற்றையெல்லாம் தமிழகத்தில் உள்ள மற்ற சிவாச்சாரியார்கள் அனுபவப் பாடமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு 23-01-2013 அன்று அறநிலையத்துறை அனுமதியோடு திருப்பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது .

படங்கள்:

https://facebook.com/story.php?story_fbid=2004300016550226&id=100009107423631

(12)

பழைய மடம் இடித்து பூமிபூஜை போடுவதாக 2013ல் ஜனவரியில் அறிவித்த அக்காலகட்டத்திலேயே அடியேன் இவ்விசயத்தில் சம்பந்தப்படுகின்றேன்.

சிறுவயதில் எனது தந்தையோடு பலமுறை சுந்தரர் மடம் விழாவிற்கு வந்துள்ளேன். அதேபோல் பெரியகோயில் கும்பாபிஷேகத்திற்கும் வந்துள்ளேன்.அதேபோல் கடந்த காலங்களில் உறவினர்களோடு சிறுவயதில் வரும்பொழுது, சுந்தரர் பூஜைக்கான மாலைகள், புஷ்பங்கள், அபிஷேக பொருட்களை கெடிலம் கூட்ரோடில் இருந்து தலையில் சுமந்தபடி திருநாவலூருக்கு நடந்தே வருவார்கள்.அப்பொழுது உறவினர்களோடு விளையாட்டு பிள்ளையாக வந்து வழிபாடு செய்துள்ளேன். மற்றப்படி 2013 ஆம் ஆண்டுவரை சுந்தரர் மடம் சார்ந்து அ, ஆ க்கூட அடியேனுக்கு தெரியாது. ஆனால் பழையமடம் இடிக்கப்பட்டு புதிய மடம் சிவாச்சாரியார்களை புறக்கணித்து நடைபெறுகின்றது என்பதை அறிந்து உள்ளூர் குருக்களை தொடர்பு கொண்டு கேட்டபொழுது, இது சார்ந்து எதுவும் எங்களை கேட்காதீர்கள். இது சம்பந்தமாக எங்கள் வீட்டு படியும் ஏறாதீர்கள் என்று உரைத்துவிட்டார்கள். சரி திருமடம் சார்ந்த விபர ஆவணங்களையாவது காண்பியுங்கள் என்று கேட்தற்க்கு, எங்களிடம் எதுவும் இல்லை. எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறிவிட்டார்கள் (அந்நிலையில் மடம் சார்ந்த விசயம் எதுவும் தெரியாது .பின்னாளில் அடியேன் பல மாதங்கள் செலவு செய்து தகவல் பெறும் சட்டம் மூலம் சில மடம் சார்ந்த சில ஆவணங்களை பெற்றேன்)

உள்ளூர் குருக்கள் இவ்வாறு முகத்தில் அடித்ததுபோல் கூறிவிட்டதால், நேராக திருநாவலூர் உள்ளூர் முக்கியஸ்தர்களை சந்தித்து பேசினேன்.அவர்கள் அந்நேரத்தில் மிகவும் மரியாதையாகவே பேசினார்கள். குறை ஒன்றும் சொல்வதற்க்கில்லை. ஆனால் உள்ளூர் குருக்கள் மீது குற்றம் கூறினார்கள். அடியேன் அவர்களிடம் உரைத்தது – உள்ளூர் குருக்கள் மீது குற்றம் உள்ளது என்பதற்க்காக ஒட்டுமொத்த தமிழக சிவாச்சாரியார்களை புறக்கணிப்பது தகுமா? கடந்த காலத்தில் மடத்திற்க்கு தொண்டு செய்த சிவாச்சாரியார்கள் தியாகத்தை தாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சைவசமயம் சார்ந்த ஓர் இடத்தில் தவறுகள் நிகழ்ந்தால் மீண்டும் அதனை வேத ஆகம முறைப்படியே நெறிப்படுத்தவேண்டும்.

மனுநீதிச்சோழன் திருவாரூர் கோயிலுக்கு தேவையானவை என்ன என்று ஆராய்ந்து வேண்டியவற்றையும், விலக்கனவற்றையும் ஆகமங்கள் கூறியபடி செய்தார் என்பதை,

“பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்தான்
துங்கஆகமம் சொன்ன முறைமையால் .

என்று தமிழ்வேதமாகிய பெரியபுராணத்தில் சேக்கிழார் பாடிஅருள்கின்றார்.

நமிநந்தியடிகள்நாயனார் திருவாரூரில் சமணர்கள் ஏற்பட்ட இடையூறுகளை நீக்கி மீண்டும் வேத ஆகம நெறிப்படி பூஜைகள் விளங்க சோழமன்னனிடம் கோரிக்கை வைக்கின்றார். மன்னனும் அவ்வாறே இடையூறுகளை சரிசெய்து வேதஆகமவிதி விளங்க நிபந்தம் பூஜைகள் செய்ய வழிவகுக்கின்றான். இதனை பெரியபுராணத்தில் சேக்கிழார் ,

“நாதமறைதேர் நமி நந்தியடிகளார் நற்றொண்டாகப்
பூதநாதர் புற்றிடம் கொள் புனிதர்க்கு அமுதுபடி முதலாம்
நீதிவளவன்தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்தமைத்தான் வேதாகம நூல் விதிவிளங்க ”

என்று பாடியுள்ளார்.

எனவே வேத ஆகம விதிப்படியே திருநாவலூர் வாழ் மக்களாகிய தாங்கள் செயல்படவேண்டும்.காரணம் வாய்மைக் குன்றா திருநாவலூர் என பெரியபுராணம் கூறுவதால், ஊர் பெரியவர்கள் வாய்மையோடு எனது கோரிக்கையை பரிசீலனை செய்யவேண்டும் என்றேன். இருப்பினும் ஒற்றை ஆளாகச் சென்று பேசியதால், அவர்கள் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.அது தவறும் இல்லை. ஆனால் ஒருவர் மட்டும் இப்பொழுதே சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பாக இருபத்தி ஐந்து லட்சம் பேங்கில் போடுங்கள் .திருப்பணி சிவாச்சாரியார்கள் செய்யலாம். மற்றப்படி பழங்கதை வேண்டாம் என்று கூறிவிட்டார். என் தகுதிக்கு அந்நிலையில் இயலாத காரியம் .எனவே அடியேன் திரும்பிவந்து விட்டேன்.

பொதுவாக திருநாவலூரில் ஆதிசைவர்கள், சிவாச்சாரியார்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏதும் தெரியவில்லை என்றே எனக்கு தோன்றியது .எல்லோருமே ஐயர் அவ்வளவே தெரிவதாக உணர்ந்தேன்.ஆகமம், ஆதிசைவர் என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை என தோன்றியது. எனவே, சிவாச்சாரியார்கள் பற்றிய வரலாறை சுருக்கமாகவும், சிவாச்சாரியார்களுக்கும் சுந்தரர் மடத்திற்க்கும் உள்ள தொடர்பை விளக்கமாக எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, அதனை நான்கு பக்க நோட்டீசாக, திருநாவலூர் பொதுமக்களிடம் மன்றாடி கேட்கும் வகையில், தமிழகஅரசுக்கும், திருநாவலூர்வாழ்பொதுமக்களுக்கும், சைவசமயஅன்பர்களுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் பிரசுரமானது, நானும் என்னோடு ஒரு சிவஅன்பர் என இருவர் மட்டும் திருநாவலூரில் உள்ள வீடு வீடாக சென்று பிரசுரம் வழங்கி கோரிக்கை வைத்தோம். ஆனால், சிவாச்சாரியார்கள் பங்கேற்பு இன்றி குறிப்பிட்டநாளில் பூமிபூஜை நடைபெற்றது.

அடியேன் வீடு வீடாக சென்று சிவாச்சாரியார்கள் சார்பாக வைத்த கோரிக்கை மறுநாள் தினமலரில் திடிர்பரப்பரப்பு என்ற தலைப்பில் செய்தியாக வந்தது. சிவாச்சாரியார்களை ஒதுக்கி பூமிபூஜை நடந்ததால், ஒரு பத்து தினங்கள் கழித்து, மீண்டும் திருநாவலூர் வாழ் பொதுமக்களுக்கு இருகரம் கூப்பி பணிவான வேண்டுகோள் என்ற தலைப்பில், திருநாவலூருக்கும் ஆதிசைவர்களுக்கும் உள்ள பந்தத்தை விளக்கி இரண்டு பக்க பிரசுரம் ஒன்று வீடுவீடாக மீண்டும் அடியேனும் எனது சிவநண்பரும் வழங்கினோம்.

தொடர்புடைய படங்கள்:

https://facebook.com/story.php?story_fbid=2004479509865610&id=100009107423631

(13)

திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது.

அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. முதல் நிபந்தனையாகிய
முன்னுரிமைகோரக்கூடாது என்பதற்கு மாறாக மடம் ஆக்கிரமிக்கப்படும் நிலையில் உள்ளது. அனுமதி கொடுத்து இந்த முத்தநாதர்களை (மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் அவரைக் கொல்ல சிவனடியாராக வேடமிட்டு வரும் விரோதி) உள்ளே அனுமதித்ததே அறமற்றதுறை. இன்று அவர்கள் தந்த நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டு வருகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை.

படம்:

https://www.facebook.com/story.php?story_fbid=2082112152102345&id=100009107423631

இவ்வாறு, சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான திருப்பணியும் குடமுழுக்கும் செய்து விட்டிருக்கிறார்கள். இந்த சைவவேடதாரிகளின் இன்றைய செயல்பாடு சரிதானா? சைவதர்மமா? என்பதை சைவசமயத்தார்கள் சீர்தூக்கி சிந்திக்கவேண்டும். சிவாச்சாரியர்களுக்கு நீதி கிடைக்கவும், சைவ மரபு பாதுகாக்கப் படவும் முன்னின்று குரல்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிவார்ப்பணம்.

(முற்றும்)

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதரித்த ஊர். இங்கு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது. சுவாமி பெயர் பக்த ஜனேஸ்வரர். கோயிலுக்கு அருகில் ஓர் இடம் சுந்தரர் அவதரித்த இல்லம் இருந்த இடம் என்று பாரம்பரியமாகக் கருதப் படுகிறது. 1960 களில் இந்த இடத்தையும் இதன் அருகில் இருந்த காலி மனையையும் ஆதிசைவர்கள் (குருக்கள்) எனப்படும் சிவாச்சாரியர்கள் வேறு யாருடைய உதவியையும் பெறாமல் விலைக்கு வாங்கி ஒரு சிறிய மடத்தை கட்டி அங்கு சுந்தரரின் உருவச் சிலையை ஸ்தாபித்து குருபூஜை செய்து வரத்தொடங்குகின்றனர் (சுந்தரர் ஆதிசைவ குலத்துதித்த அருளாளர் என்பது சைவர்கள் அனைவரும் அறிந்ததே) . ஆடி மாதம் சுந்தரர் குருபூஜையும் ஆவணி மாதம் அவதாரத் திருநாள் வழிபாடும் நடக்கிறது. பல இடங்களிலிருந்தும் ஆதிசைவ பெருமக்கள் வந்து கலந்துகொள்கின்றனர். பின்பு பக்கத்திலுள்ள காலி மனையை ஒரு சிவாச்சாரியர் வாங்கி தானம் செய்ய, மடம் கட்ட தமிழகம் எங்கும் உள்ள சிவாச்சாரியர்கள் தங்களாலியன்ற சிறுசிறு தொகைகளை வழங்குகின்றனர் (1960 களில் தான் பத்திர பதிவு நடந்தது என்றாலும் உண்மையில் பல காலமாகவே சுந்தரர் மனை இடம் ஆதி சைவர்களது பொறுப்பிலேயே இருந்து வருகிறது). நித்திய பூஜை உள்ளூர் சிவாச்சாரியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது. . 1975ல் கூனம் பட்டி ஆதினம் கும்பாபிஷேகம் செய்து வைக்கிறது.

இடையில் இம்மடம் அறநிலைத்துறையினரால் பக்த ஜனேஸ்வரர் கோவிலின் கீழ் வரும் சொத்து என்று கணக்கு காண்பிக்கப் பட்டு கையகப்படுத்தப்படுகிறது . மேலும் உள்ளூர் ஆதி சைவ அர்ச்சகருக்கும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட சிறு உரசல்கள் 1999ல் இம்மடம் சம்மந்தமான விஷயங்களிலும் எதிர் ஒலிக்கிறது. 2000ல் உள்ளூர் சிவாச்சாரியர் தமிழகம் எங்கும் உள்ள ஏனைய ஆதி சைவர்களிடம் நன்கொடை பெற்று மடத்தை சீர் செய்ய முயல்கிறார் .ஆனால் இது ஒழுங்காக நடக்கவில்லை. மடம் பராமரிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்நிலையில் 2009 ல் விருத்தாச்சலத்தை சேர்ந்த சைவ அமைப்பு ஒன்று திருப்பணி செய்ய முன்வருகிறது . அவர்கள் மீதுஆதி சைவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தடையாணை பெறுகிறார்கள். 2012ல் வேறு அறக்கட்டளை ஒன்று குரு பூஜையை நடத்துவதாக கூறி உள்ளே வருகிறது. அவ்வாறு வந்த அறக்கட்டளை 2013ல் மடத்தை சீர் செய்கிறேன் என்று உத்தரவாதம் தர, பழைய மடம் இடிக்கப் படுகிறது. ஆனால் இவர்களால் ஒரு அளவுக்கு மேல் பொருள் திரட்ட முடியாததால், பவானியைச் சேர்ந்த வேறு ஒரு சைவ அமைப்பு ஒன்றை உள்ளே கொண்டு வருகிறார்கள். ஆனால், இந்த பவானி அமைப்பு வைதீக நெறியான சைவசமயத்திற்கு முற்றிலும் விரோதமாக, தமிழ்த்திருமுறையைக் கொண்டு சடங்குகளையும், கோயில் குடமுழுக்குகளையும் செய்து கொண்டிருக்கும் ஒரு கோஷ்டியைச் சார்ந்தது. வேதாகம விரோதம், சம்ஸ்கிருத வெறுப்பு, அந்தணர்கள் மீதான வெறுப்பு ஆகியவையே இந்த கோஷ்டியினரின் முக்கிய கொள்கைகள். சைவம் என்ற போர்வையில் துவேஷத்தைப் பரப்பி, படிப்படியாக உண்மையான சைவநெறியை அழித்து வருபவர்கள் இந்தக் கோஷ்டியினர். இச்சூழலில், நிலைமை அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அர்ச்சகர்கள் அமைப்புகள், பாரம்பரிய சைவ மெய்யடியார்கள் சிலர் தலையிட்டு நிலவரத்தை சீர் செய்ய முயல்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஊர்ப்பிரமுகர்களும் அறநிலையத் துறையும் புதிதாக வந்த பவானி கோஷ்டிக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில், திருப்பணியை மட்டுமே அவர்கள் செய்வார்கள் என்று குடமுழுக்கில் தலையிட மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது. ஆனால் தொடர் நீதிமன்ற விடுமுறையை பயன்படுத்தி தந்திரமாக தீபாவளி அமாவாசை என்பதையும் கணக்கில் கொள்ளாமல் ஆகம விரோதமாக அசுப முஹூர்த்தத்தில் நவம்பர்-7 புதன் அன்று திருமுறை திருக்குடமுழுக்கு செய்வதாக அதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அறிவிக்க படுகிறது. இதற்கு எதிராக பாரம்பரிய சைவர்களும் சிவாசாரியார்களும் பரவலாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இது அனைத்தையும் மீறி, முற்றிலும் வேதாகம விரோதமாக ஒரு சமய, கலாசார அழிப்பு குடமுழுக்கு என்ற பெயரில் நடந்தேறியிருக்கிறது.

தம்பிரான் தோழர் என்றும் வன்றொண்டர் என்றும் போற்றப்படும் ஆதிசைவ குலதீபமான ஸ்ரீ சுந்தரரின் திருக்கோயிலுக்கே சிவாகம வழியிலான கும்பாபிஷேகமும் பூஜையும் முடக்கப் பட்டிருக்கிறது என்பது எத்தகைய கொடுமை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகம் முழுதும் இருக்கும் ஆதி சைவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக சில ஆயிரங்களுக்குள் தான் வரும் . மிகவும் சிறுபான்மையிைைனரான அவர்களது பாரம்பரிய வழிபாட்டு இடங்களையும், வழிபாட்டு மரபுகளையும் அழிப்பது இன அழிப்பு, கலாசார ஒழிப்பு என்றே ஆகும். இந்தக் கண்டனத்திற்குரிய அத்துமீறல் திருத்தப்படவேண்டும். இந்த விஷயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு திருநாவலூர் மடத்தின் மீது ஆதிசைவர்களுக்கு உள்ள நில உரிமைகளும், வழிபாட்டு உரிமைகளும் சட்டபூர்வமாக உறுதி செய்யப் படவேண்டும்.

இப்பிரசினையின் முழு பின்னணியையும் குறித்த இக்கட்டுரையை வெளியிடுகிறோம். கட்டுரையாசிரியர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள சிவாலயத்தில் அர்ச்சகராக உள்ள ஆதிசைவ குருக்கள் ஆவார். ‘ஆதிசைவர் வரலாறு’ என்ற நூலையும் எழுதியிருக்கிறார்.

– ஆசிரியர் குழு

(1)

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி.

அடியேன் இக்கட்டுரையில் திருநாவலூர் சுந்தரர் மடம் பற்றி கீழ்க்கண்ட விபரங்களை வெளிப்படுத்தவுள்ளேன்.

1) திருநாவலூரில் ஸ்ரீ சுந்தரர் மடத்தின் தோற்றம் பற்றியது.

2) அம்மடத்திற்க்கும் ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியார்களுக்கும் உள்ள தொடர்பு பந்தம்.

3) சிவாச்சாரியார்கள் அம்மடத்தை எழுப்பி 50 ஆண்டுகள் முன்பு கும்பாபிஷேகம் செய்த விபரம்.

4) சிவாச்சாரியார்கள் அம்மடத்திற்கு கடந்த ஐம்பது ஆண்டுகள் செய்த தொண்டு உழைப்பு.

5) சிவாச்சாரியார்கள் திருப்பணி செய்ய முயன்ற விபரங்கள்.

6) இடையில் அனுகூல சத்ருக்கள் எவ்வாறு பசுத்தோல் போர்த்திய புலியாக மடத்தின் திருப்பணியில் நுழைந்தார்கள் என்ற விபரம்.

7) சைவ வேடதாரிகள் இன்று திருப்பணி செய்கிறோம் என்ற பெயரில் செய்யும் அட்டூழியங்கள். அராஜகங்கள்.

8) இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் செய்த சட்ட போராட்டங்கள் விபரம்.

9) நல்லவர்கள் போல் நடிக்கும் சைவ வேடதாரிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் மூலம் ஒன்றும் உலக விபரம் அறியா உள்ளூர் குருக்களை குண்டர்கள் போல் மிரட்டும் விபரம்.

10) அரசிடம் உபயத்திருப்பணிக்கு அனுமதிபெற்று விட்டு கோடி கோடியாக வசூல் செய்யும் விதம். மடத்தை சொந்தம் கொண்டாடும் வகையில் செயல்படும் நரிதந்திர விபரம்.

11) சைவ ஆதினங்களும், சைவப்பெரியோர்களும் எடுத்து கூறியபொழுதும் அவர்கள் வாக்குகளை துச்சமாக எடுத்தெறிந்து செயல்படும் சைவவேட குண்டர்களை பற்றிய விபரம்.

12) சிவாச்சாரியார்கள் மிக மிக மிக இன சிறுபான்மையினர் என்பதால் அவர்களை, அவர்களின் மரபுகளை அழிக்க துடிக்கும் நயவஞ்சக செயல்களின் விபரம்.

13) திருப்பணி என்ற விதத்தில் திருமுறை வியாபாரத்தை, திருமுறை புரோகிதத்தை அவ்விடத்திலேயே பிரமோட் செய்யும் விதம்

14) அடையாளமற்றவர்கள் தங்கள் திருமுறைவியபாரத்தை அடையாளப்படுத்துவதற்க்காக, திருமுறை புரோகிதத்தை மேலும் வியபாரப்படுத்த சுந்தரர் மடத்தை அடையாளப்படுத்தும் விதம்.

15) பெரிய அளவில் மடம் எழும்பினாலும், முற்றிலும் ஆகம விரோதமாக கட்டப்படுவதாக ஆதினமே கூறியும் வசூல் ஆர்வத்தில் ஆணவத்தோடு செயல்படும் விபரம்.

16) சைவ வேட குண்டர்களைக் கொண்டு மடம் சார்ந்த உரிமையை கேட்கும் சிவாச்சாரியார்களையும், அவர்கள் குடும்பபெண்களையும் மிரட்டும், ஊருக்கு நல்லவர்கள் போல் நடக்கும் நயவஞ்சகர் பற்றிய விபரம்,

இவ்வாறு தொகுத்து எழுதவுள்ளேன். இது முழுக்க முழுக்க சுந்தரர்மடம் பற்றி சைவ உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். உண்மை வெளிவர வேண்டும். சிவாச்சாரியார்கள் சார்ந்த தவறு இருந்தால் அதையும் சீர்தூக்கி பார்த்து உண்மை நியாயம் எது என்பது இவ்வுலகம் அறியவேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை.

திருப்பணிகளை தடைசெய்வேண்டும் என்பது நோக்கமல்ல. சைவ மரபுகளை காலில் போட்டு மிதித்து, சிவாச்சாரியார்களை குண்டர்களை வைத்து மிரட்டு முற்றிலும் சிவாச்சாரியார்களுக்கும் மடத்திற்கும் உள்ள தொடர்பை அறுக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படுபவர்களை அம்பல்பபடுத்தவேண்டும் என்பதே கட்டுரையின் மையம்.

எனவே சைவசமத்தார்களே, அடியார்களே, பக்தர்களே, கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். உண்மை நியாயம் எது என்பதை நீங்கள் உணருங்கள். கூறுங்கள்.

(2)

நமது சைவசமய அருளாளர்களாகிய நால்வர் பெருமக்கள் மற்றும் 63 நாயன்மார்களுக்கு அவர்கள் அவதரித்த தலங்களில் கோயில்கள் கட்டி மரபாக வழிபாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளன.பொதுவாக இவைகள் எளிமையான முறையில் நாயனாரை சித்திரமாகவோ சிறு உருவமாகவோ வைத்து வழிபட்டுவந்துள்ளார்கள்.

சீர்காழியில் குலோத்துங்கசோழ மன்னன் பெரியகோயிலில், தனிப்பிரகாரம் கொண்ட பெரிய கோயிலாகவே சம்பந்த பெருமானுக்கு ஆலயம் அமைத்துள்ளான். இவ்வகையில் நால்வர் அவதரித்த இல்லங்கள், திருமடமாக பூஜைகள் செய்துவழிபட்டுவந்தன.

சீர்காழியில் சம்பந்தபெருமான் அவதரித்த இல்லம் சம்பந்தர் மடமாகவும், திருவாமூரில் அப்பர் பெருமான் அவதரித்த இல்லம் நமது தருமை ஆதினம் முயற்ச்சியால் அப்பர் கோயிலாகவும், மாணிக்கவாசகருக்கு அவர் அவதரித்த திருவாதவூர் இல்லம் கற்கோயிலாகவும் காட்சி அளிக்கின்றன. அவ்வகையில், ஸ்ரீசுந்தரர் அவதாரம் செய்த திருநாவலூர் இல்லம் ஆதிகாலத்தில் பஜனை மடமாக இருந்துள்ளது. அங்கு சுந்தரர் படம் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்துள்ளது. கிராமத்திற்கே உரிய வகையில் மற்ற சாமி படங்களும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். இந்த சுந்தரர் அவதார இல்லம், திருநாவலூர் பாடல் பெற்ற ஸ்தலமாகிய பக்தஜனேஸ்வரர் கோயிலுக்கு வடபாகத்தில், சிவாச்சாரியார்கள் இல்லத்திற்கு முன்பு இருந்து வருகின்றது.

பல்நெடுங்காலம் அத்தலத்து சிவாச்சாரியார்களே, தங்கள் சக்திக்கு உட்பட்டு பஜனை மடத்தில் இருந்த சுந்தரர் திருவுருவத்திற்க்கு வழிபாடுகள் செய்து வந்தள்ளனர். ஒரு விதத்தில் பஜனை மடம் வரலாற்று காலத்தில் முன்பு சடையனார் என்ற சிவாச்சாரியார் வாழ்ந்த இல்லமே. இவ்வாறு சுந்தரர் திருவுருவ படமாக வழிபட்டு வந்த நிலையில், நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கோயில்கள் சார்ந்த அறநிலையத்துறைச் சட்டம் 1951 ல் மாற்றி அமைக்கப்பட்டது. அந்நிலையில் பல கோயில்களின் நிர்வாகங்கள் சரிசெய்யப்பட்டு வந்தன.

இக்காலத்தில் கொங்குதேச ஆதிசைவதிருமடம் அப்பொழுது இருந்த ஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் பிரசங்கமணி கோவைசேக்கிழார் என்று அழைக்கப்பட்டவர்கள். பெரியபுராணத்தை தேனினும் இனிய அமுதமாக பிரசங்கம் செய்யக்கூடியவர்கள் .இவர்கள் திருநாவலூர் மீது தனிப்பற்றுக்கொண்டு ஸ்ரீ சுந்தரர் அவதரித்த இல்லத்தை திருமடமாக செப்பனிட ஆவல் கொண்டார்கள்.

அக்காலத்தில் திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயிலுக்கும், சுந்தரர் அவதார இல்லத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், அறநிலையத்துறை ஆதரவு தேவைப்பட்டது. அவ்வகையில் முதலில் பக்தஜனேஸ்வரர் கோயிலானது, ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்போடும், ஸ்ரீ கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட்டு, திருவண்ணாமலை T.K. மணி குருக்கள் அவர்களை அறங்காவலராக இருந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சுந்தரர் திருமுறை பதிகம் கல்வெட்டு 03-03-1965 அதாவது இன்றைக்கு சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் திறந்துவைக்கப்பட்டது.

இங்கு சற்றே சிந்திக்கவேண்டியது திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில் அறங்காவரும் ஒரு ஆதிசைவர். திருப்பணிக்கமிட்டிதலைவரும் ஒரு ஆதிசைவதிருமடத்தின் தலைவர். எதற்காக இதை இங்கு கூறுகின்றேன் என்றால் பல்லாண்டுகளாக திருநாவலூருக்கும், தமிழக சிவாச்சாரியார்களுக்கும் உள்ள தொடர்பை தெரிந்துக்கொள்ளவே. அதாவது திருநாவலூர் கோயிலுக்கு ஒரு குருக்கள் தர்மகர்த்தாவாக இருக்கும் அளவிற்க்கு அக்காலத்தில் நல்ல ஒரு உறவு இருந்துள்ளது .

திருநாவலூர் கிராமபொதுமக்களும் அன்று நன்கு சிவாச்சாரியார்களுக்கும், கூனம்பட்டி ஆதினம் சுவாமிகளுக்கும் ஒத்துழைப்பு தந்துள்ளனர். இந்நிலையில் கோயிலின் வடபுறம் உள்ள சுந்தரர் அவதார இல்லத்தை திருமடமாக அமைக்க தமிழக சிவாச்சாரியார்கள் முயற்சி மேற்கொண்டனர்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=851265248414316&id=359756944231818

(3)

அந்த பஜனை மடம் சிறியதாகவும் ஆக்ரமிப்புக்கு உள்ளாகும் நிலையிலும் இருந்து. எனவே இடத்தை சரிசெய்து, 1965 ஆம் ஆண்டு, கூனம்பட்டி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் தலைமையில் திருப்பணிக்குழு உருவாக்கப்பட்டு, திருவண்ணாமலை T.k.மணிகுருக்கள், புதுவை மணக்குளவிநாயகர் கோயில் உ.நா.மணிகுருக்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல ஆதிசைவர்கள் ஒன்று சேர்ந்து திருமடம் அமைக்க கிராம பெரியோர்கள் ஒத்துழைப்போடு முயன்றனர். அப்பொழுது அறநிலையத்துறை ஆணையாரக இருந்த திரு. உத்தண்டராம பிள்ளை அவர்கள் இதற்கு தூண்டுகோலாக இருந்தார்.

1965 காலகட்டத்தில் போக்குவரத்துகள் அவ்வளவாக இல்லாத சூழலில், குருக்கள் எல்லோருமே மிகக் கொடுமையான வறுமைக்குரிய நிலையில் வாழ்ந்த காலகட்டத்தில், அதாவது வெற்றிலைபாக்கில் ரூ 2 வைத்தாலே அதிசயப்படும் காலத்தில், இவ்வாறு சிவாச்சாரியார்கள் மடம் அமைக்க முயற்சித்தது உண்மையில் இறையருளே.

ஆண்டி ஒன்று கூடி மடம் அமைத்த கதை என்று ஒரு பழமொழியை கிண்டலாகக் கூறுவார்கள். ஆனால் அக்கால சிவாச்சாரியார்கள் தங்கள் வறுமையையும் பொருட்படுத்தாது ஒரு ரூபாய் இரு ரூபாய் என சேகரித்தும், போக்குவரத்து இல்லாததால் பல பொருட்களை கெடிலம் கூட்ரோடில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தலையில் சுமந்தும் பல பொருட்களை சேகரித்து திருமடம் திருப்பணிகளை தொடங்கினார்கள். அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையே நம்பி திருப்பணி செய்தார்கள்.

1965 ல் ஆரம்பித்த திருப்பணி கிட்டதட்ட 10 வருடங்களாக நடைபெற்று, 1975 ல் பூர்த்திபெற்றது. இவ்வளவு காலதாமதம் ஆக காரணம், அக்கால குருக்களின் வறுமை நிலையே. இருப்பினும் தங்கள் வறுமை நிலையிலும் பல கஷ்டங்களுக்கும், சிரமங்களுக்கும் நடுவில் சுந்தரர் மீது கொண்ட பக்தி ஒன்றன் காரணமாக திருப்பணியை பூர்த்தி செய்து, ஆனந்த வருஷம் பங்குனிமாதம் 17 ம் தேதி, (31-03-1975) அன்று ஸ்ரீ சுந்தரர் மடாலயம் கும்பாபிஷேகம் திருவருள் குருவருள் துணையோடு செய்தார்கள். இக்காலகட்டத்தில் அன்று இருந்த திருநாவலூர் மக்களின் ஆதரவு அளப்பரியது. எனவே, சிவாச்சாரியார்களே திருப்பணிசெய்த போதிலும், கிராம மக்களின் ஒத்துழைப்பை மதிக்கும் வண்ணம், கும்பாபிஷேகம் பத்திரிக்கையிலும், கல்வெட்டுகளிலும் கிராம முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பதிந்து மரியாதை செய்தார்கள். (பார்க்க படம் 1,2)

கும்பாபிஷேகம் பத்திரிக்கையில் இப்படிக்கு என்ற இடத்தில் கூனம்பட்டிஆதினம் சுவாமிகள் பெயரும் மற்றும் அகில இந்திய ஆதிசைவர்கள் என்று அச்சிடப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இவ்வாறு ஸ்ரீ சுந்தர் மடாலய கும்பாபிஷேக திருப்பணியில் பங்குபெற்ற தமிழக சிவாச்சாரியார்கள் பெயர்கள் கல்வெட்டில் உள்ளவாறு,

தலைவர் -கூனம்பட்டி ஆதினம்.
1)T.k.மணிகுருக்கள் -திருவண்ணாமலை.
2)A.உமாபதிகுருக்கள் -திருவண்ணாமலை.
3)A.நடேச குருக்கள் -நார்த்தாம்பூண்டி
4)அ.சுப்பிரமணியகுருக்கள் -புளிச்சப்பள்ளம்.
5)அகதீஸ்வரகுருக்கள் -திருப்பாச்சனூர்.
6)மாணிக்க குருக்கள் -T.இடையார்.
7)ம.கா.சுந்தரேச பட்டர் -மதுரை
8)சுவாமிதாத சிவாச்சாரியார் -தருமபுரம்
9)விஸ்வநாத சிவாச்சாரியார்- அல்லூர்
10)விஸ்வநாத குருக்கள் -சேலம்
11)இஷ்டசித்தி ஏகாம்பர குருக்கள் -காஞ்சிபுரம்.
12)உ.நா.மணி குருக்கள் -பாண்டிச்சேரி.
13)நா.குமாரசாமி குருக்கள் -மயிலாப்பூர்
14)பாபு குருக்கள் -திருவான்மியூர்
15)V.சுந்தர குருக்கள் -வடபழனி
16)S.r.சுவாமிநாத குருக்கள் -சுவாமிமலை.
17)S.விஸ்வநாத குருக்கள் -ராம்பாக்கம்
18)சுவாமிநாத குருக்கள் -திருப்புறம்பயம்.
19)K.A.சபாரத்ன குருக்கள் -கோயம்பேடு.
20)S.சாம்பசிவகுருக்கள் -விருத்தாஜலம்.
21)D.சுந்தரேச குருக்கள் -திருவண்ணாமலை.
22)தா.மந்திரமூர்த்தி குருக்கள் -அன்னியூர்.
23)V.K.ஈஸ்வர குருக்கள்.-வேலூர்
24)தியாகராஜ குருக்கள்.-சித்தலிங்க மடம்.
25)சிதம்பர குருக்கள் -சேந்தமங்கலம்.
26)கா.சுவாமிநாத சிவாச்சாரியார்-திருவாவடுதுறை.
27)அய்யாமணி சிவாச்சாரியார்-திருவாடானை.
28)பட்டம் ராமலிங்கசிவாச்சாரியார் -திருவண்ணாமலை.
29)தியாகராஜ குருக்கள் -திருக்கழுக்குன்றம்.
30)A.கணேச குருக்கள் -தஞ்சை
31)சாம்பமூர்த்தி சிவாச்சாரியார-சென்னை.
32)N.அய்யாசாமி குருக்கள் -குந்தம்பாக்கம்.
33)C.சாமிநாத குருக்கள் -சென்னை.
34)V.பாலசுப்பிரமணிய குருக்கள் -மைலம்.
35)T.சுவாமிநாத குருக்கள் -அன்னியூர்.
36)உ.ஷண்முக சுந்தர பட்டர் -மதுரை.
37)பரசுராம குருக்கள் காளஹஸ்தி.
38)N. ஹாலாயஸ்யம் குருக்கள் -சென்னை.

என தமிழகத்தின் பல சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து சுந்தரர் திருமடம் அமைத்தார்கள்.

இவர்கள் அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது.? மேலும் கீழ்கண்ட படத்தில் காணும் கல்வெட்டு பழையமடம் இடிக்கும் பொழுது பாதுகாப்பாக எடுத்துவைக்கப்பட்டதா? அல்லது அழித்துவிட்டார்களா? இப்பொழுது திருப்பணி நடைபெறும் இடத்தில் சிவாச்சாரியார்கள் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்த இந்த விபரங்களை அளிக்கும் இந்த பழைய கல்வெட்டு மீண்டும் பதிக்கப்படுமா? என்பது அந்த சுந்தரருக்கே வெளிச்சம்.

இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பான் என்ற பழமொழிபோல, சிவாச்சாரியார்கள் உரிமையில் இருந்த சுந்தரர் மடத்தை, அவர்களை மிரட்டி வெளியேற்றி சுயநல லாபத்திற்ககாக, அடையாள அரசியலுக்காக திருப்பணி செய்யும் ருத்திராட்ச வேடதாரிகளை அந்த இறைவன் மன்னிக்கவே மாட்டார். மேலும் இப்பொழுது நடைபெற்றுள்ள திருப்பணி பல உண்மையான சிவாச்சாரியார்களின் மனவேதனையில், மன துக்கத்தில் எழும்பும் ஒரு ஆகம விதியற்ற மாயக் கட்டிடம். ஒரு மரபிடம் இருந்து பிடுங்கி அவர்களை மிரட்டி வெளியேற்றி செய்யும் இந்த திருப்பணி கண்டிப்பாக இறை திருப்பணி அல்ல. இத்தகைய திருப்பணிக்கு உதவுவோருக்கு, தட்சன் செய்த யாகம் போன்று புண்ணியத்திற்க்கு பதில் பாபமே மிகும். தண்டனையும் கிட்டும்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1991116057868622&id=100009107423631

(4)

தமிழக சிவாச்சாரியார்கள் ஸ்ரீலஸ்ரீ கூனம்பட்டி ஆதினம் தலைமையில் சுந்தரர் மடாலய மஹாகும்பாபிஷேகத்தை 1975 ல் நடத்தியபின்னர், உள்ளூர் குருக்கள் அவர்களிடம் திருமடம் நிர்வாகத்தை ஒப்படைத்து, வருடம் தோறும் முக்கிய விழா நாட்களில் சுந்தரர் மடாலயத்தில் ஒன்று சேர்ந்து விழா செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் குருக்கள் மடத்தை நிர்வாகித்து, நித்ய பூஜை செய்து வருவது என்று தீர்மானிக்கப்பட்டது. திருநாவலூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் குருக்கள், சுந்தரர் கோயிலின் நித்ய பூஜைகள் செய்து வந்தார் . தமிழகத்தில் இருந்து பல சிவாச்சாரியார்களும், மாதந்தோறும் தங்கள் குடும்பத்தோடு வந்து மடத்தில் வழிபாடு செய்தனர். முக்கியமாக கொங்கு தேசத்து ஆதிசைவர்கள் சுந்தரர் திருமடத்தில் அதிக பற்றும் பக்தியும் கொண்டு விளங்கினார்கள்.

இந்நிலையில், திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் அவதாரத் தலம் என்பதால், சுந்தரர் அவதாரதினமாகிய ஆவணிஉத்திரமும், குருபூஜை விழாவாகிய ஆடிசுவாதியும் வருடம்தோறும் தமிழக சிவாச்சாரியார்கள் சார்பாக செய்வது என்று கூனம்பட்டிசுவாமிகள் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. இதில் ஆடிசுவாதி குருபூஜை ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலில் அக்காலத்தில், அதாவது 1975 வாக்கில் சிறப்பாக நடத்தப்பட்டுவந்ததால், கோயிலோடு இனைந்து மடத்திலும் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அதாவது கோயிலில் புறப்படும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை, சுந்தரர் மடத்தில் அழைத்து, சிவாச்சாரியார்கள் சார்பாக மண்டகப்படி பூஜை, உபசாரம், மரியாதை செய்வது என்றபடி செய்யப்பட்டது.

திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் அவாதரத்தலம் என்பதால், சுந்தரர் அவதாரதினமாகிய ஆவணிமாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று ஜனனோத்ஸவம் சிவாச்சார்யார்கள் சார்பாக செய்யப்பட்டது. இந்த அவதாரவிழா பெரியகோயிலில் உள்ள ஸ்ரீ சுந்தரர் மற்றும், மடத்தில் உள்ள ஸ்ரீ சுந்தரர் என இரு இடங்களிலுமே செய்யப்பட்டது.

ஸ்ரீ சுந்தரர் மடாலய கும்பாபிஷேகம் ஆண்டுமுதல், அதாவது 1975 ல் இருந்து 2006 வரை சுமார் 60 ஆண்டுகள், தமிழக சிவாச்சாரியார்கள் ஒன்றுசேர்ந்து சீரும் சிறப்புமாக செய்துவந்தார்கள். (பார்க்க -படம் 1,2,3,4)

2006 க்கு பின் மடம் திருப்பணி சார்ந்த சில முயற்ச்சிகள் மேற்கொண்டதால், அவதாரவிழா மற்றும் குருபூஜை எளிமையாகக் கொண்டாடப்பட்டுவந்தது. இவ்வாறு திருநாவலூர் ஸ்ரீ சுந்தரர் மடாலயத்தோடு, கும்பாபிஷேகம் முன் ஐம்பதுஆண்டுகள், கும்பாபிஷேகம்பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் என ஒரு நூற்றாண்டுகள் தொடர்பும் கொண்ட சிவாச்சாரியார்களை, மேலும், சுந்தரர் அவதரித்தது முதல் 1500 ஆண்டுகள் வரலாற்று ரீதியான தொடர்பும் கொண்ட சிவாச்சாரியார்களை, முற்றிலும் வெளியே மிரட்டி தள்ளுவதற்கு முயற்சித்து, மேற்படி மடத்தை அபகரிக்கவும், சொந்தமாக்கவும் முயற்ச்சிக்கும் துர்செயல் சைவவேடம் கொண்டவர்களுக்கு தகுமோ? இப்படியான துர்மனம் கொண்டிருப்பது சைவ அடியாருக்கான இலக்கணம் ஆகுமோ? ஆவணம் ரீதியாக 100 ஆண்டுகள் தொடர்பும், பந்தமும் கொண்ட தமிழக சிவாச்சாரியார்களை, ஒதுக்கும் செயலை ஆதினங்களும், சைவவுலகமும் பார்ப்பதுதான் அழகோ?

மெய்யடியார்களே, அடியேன் இந்த தொடரை ஆவணங்களோடு, உரிய ஆதாரத்தோடே எழுதி வருகிறேன். கற்பனையோ, கட்டுக்கதையோ இல்லை. எனது ஒவ்வொரு எழுத்திற்கும் ஆதாரங்களை படமாக பதிவிட்டுவருகிறேன்.

இதை படியுங்கள். சிந்தியுங்கள் .உண்மையை சீர்தூக்கி பாருங்கள்.

வரலாற்று ரீதியாகவும், ஆவணங்கள் ரீதியாகவும் பந்தம் தொடர்பு கொண்ட சிவாச்சாரியார்களை ஒதுக்கி,மிரட்டி ஆணவத்தில் திருப்பணி செய்யும் சைவவேடதாரிகளின் இச்செயல் சைவசமயத்திற்க்கு தகுமோ? சிந்தியுங்கள்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1992075371106024&id=100009107423631

(5)

தமிழக ஆதிசைர்களாகிய சிவாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து எழுப்பிய திருநாவலூர் சுந்தரர் மடத்தில் விசேஷ பூஜைகள், குருபூஜைகள் குறைவின்றி கும்பாபிஷேகத்திற்கு பின் நடந்துவந்தன. இந்நிலையில், ஸ்ரீ சுந்தரர் மடத்திற்க்கு என்று தனி வருமானம் கிடையாது. தனிப்பட்ட நிலங்களால், பூமியால் வருமானமும் கிடையாது.அறநிலையத்துறையும் பொருளாதார ரீதியாக ஆதரவு கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் பல ஊர்களில் இருந்து ஆண்டுக்கொருமுறை சிவாச்சாரியார்கள் வந்து ஆடிசுவாதி குருபூஜை, மற்றும் ஆவணி உத்திரம் அவதார விழா செய்துவந்தபோதிலும், திருமடத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரர் பெருமானுக்கு நித்யபூஜை எவ்வித குறைவின்றி நடைபெறவேண்டுமே என்ற எண்ணம் ஆதிசைவர்களிடம் ஏற்பட்டது.

அந்நிலையில் மிகச்சிறந்த ஆகமவித்வானும், வயதில் பெரியவருமாகிய திருக்கோலக்கா சிவஸ்ரீ இராமநாதசிவாச்சாரியார் அவர்களிடம் நித்யபூஜை பற்றிய கருத்து சென்றது. சிவஸ்ரீ.திருக்கோலக்கா சிவாச்சாரியார் திருநாவலூர் மீதும், சுந்தரர் மீதும் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர்கள். 1975 ல் நடைபெற்ற சுந்தரர் மடாலய கும்பாபிஷேகத்தில் பிரதான ஆச்சார்யமாக இருந்து கும்பாபிஷேகம் செய்தவர்கள். எப்பொழுதும் எண்ணம் செயலகளால், சுந்தரர் சுவாமியின் திருவருளிலேயே திளைத்திருப்பவர். (அடியேன் உபதேசக் குரு இவர்களே).இன்று மிகவும் வயது முதிர்ந்த நிலையில் ஸ்ரீ சுந்தரர் மடம் அடாவடிகளை நினைத்து கவலையும் வருத்தமும் கொண்டவராக உள்ளார்கள். இவ்வாறு திருநாவலூர் சுந்தரர் மடம் சார்ந்த நித்யபூஜா கோரிக்கை இவர்களிடம் சென்றபொழுது, இயற்க்கையாகவே சுந்தரர் மீது கொண்ட பக்தியின் காரணமாகவும், சுந்தரர் கும்பாபிஷேகத்தில் பிரதான ஆச்சார்யமாக இருந்த குருபக்தியின் காரணமாகவும், நித்யபூஜை சார்ந்த செலவுகளை நாமே ஏற்றுக்கொள்கிறோம் என்று உறுதியளித்து, அதன்படி, 1980 ல் திருநாவலூர் ஸ்ரீசுந்தமூர்த்திசுவாமிகள் நித்யபூஜா டிரஸ்ட் என்று ஆரம்பித்து, 1980 முதல் கிட்டத்தட்ட சுமார் 2011 வரை சுந்தரர் மடத்தில் நித்யபூஜைகள் குறைவின்றி செய்வதற்க்காக நிதி உதவிதனை தம் டிரஸ்ட் மூலம், சுந்தரர் மடத்தின் பூஜகராகிய சம்பந்த குருக்களிடம் தந்து வந்துள்ளார்கள்.(பார்க்க, படம் 1,2,3,4.)

கிட்டதட்ட 35 ஆண்டுகள் நித்யபூஜைக்கு உதவி செய்துள்ளார்கள் திருக்கோலக்கா சிவாச்சாரியார்.இங்கு ஆதாரத்திற்க்கு சில படங்களை மட்டுமே பதிவு செய்துள்ளேன்.

1970, 1980 காலகட்டத்தில் ஒரு ரூபாய் என்பது குருக்களை பொருத்தவரை பெரியவிசயம். எங்கள் கோயிலில் 1986, 87 வாக்கில் நவக்கிரக சன்னதியில் ஒன்பது கிரஹத்திடமும் ஐந்து பைசா வைத்துவிட்டு செல்வார்கள். 9×5=45 பைசாவை வைத்து என் தந்தை வீட்டுக்கு தேவையான காய்கறி வாங்குவார்கள். சிவராத்திரி கட்டளைக்கு தட்சணை ரூ 2 அன்றைய தேதியில். இதை எதற்க்காக கூறுகிறேன் என்றால், அக்காலத்தில் ஐந்துபைசா, இருபதுபைசா, ஒரு ரூபாய்க்கு அவ்வளவு மரியாதை. இதை இக்கால இளைய தலைமுறை தெரிந்துகொள்ளவே இவ்விசயத்தை எடுத்துக்கூறினோம்.

இப்படியான சூழலில் திருக்கோலக்கா, ராமநாதசிவாச்சாரியார் சுந்தரர் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, தன் பணத்தை ரூ10000 முன் பணமாக செலுத்தி, மேலும் சில ஆதிசைவர்களிடமும் பணம் பெற்று அதை டிரஸ்டில் செலுத்தி, அதன்மூலம் வந்த வருவாய் மூலம், ஸ்ரீ சுந்தரர் மடம் நித்ய பூஜைக்கு அளித்துள்ளார்கள்.

படத்தில் 1987 ஆம் ஆண்டு நவம்பர்மாதம், நித்ய பூஜைக்காக ரூ 250 அளித்துள்ளார்கள்.அக்காலத்தில் 250 என்பது எவ்வளவு பெரிய பணம் என்பதை அன்றைய பெரியவர்களிடம் கேட்டால் கூறுவார்கள். இவ்வாறு ரத்தமும், சதையுமாக உழைத்து பல சிவாச்சாரியார்கள் அன்றைய கஷ்டமான காலங்களில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் நடைபயணம் கொண்டே நடந்து சென்று, சுந்தரர் மடம் பூஜைகள் குறைவின்றி நடக்க உதவியுள்ளார்கள். இவ்வாறெல்லாம் கடந்த நூறு ஆண்டுகளாக ஸ்ரீ சுந்தரர் மடத்தை போற்றி, பாதுகாத்து கட்டி காப்பாற்றி வந்த சிவாச்சாரியார்களை குண்டர்களை கொண்டு மிரட்டி, சுந்தரர் அவதார இடம் என்றால் கோடி கோடியாக வசூலாகும் என்ற காரணத்திற்காகவும், சுந்தரர் மடம் என்ற அடையாள அரசியலுக்காவும், இந்த சைவ வேடதாரிகள் எளியவர் இடத்தில் புகுந்து அடாவடி செய்யும் அரசியல்வாதிகளைப் போல், இனசிறுபான்மையினராகிய சிவாச்சாரியார்களை மிரட்டியும், மறைமுக வஞ்சகங்களை செய்து, சிவாச்சாரியார்கள் உரிமையில் இருந்த சுந்தரர் மடத்தை திருப்பணி என்ற பெயரில் முத்தநாதன் போல் வஞ்சகம் செய்ய நினைப்பது சரியோ? தகுமோ?

உண்மை என உங்கள் மனம் கூறினால் சைவசமயத்தில் இப்படியான ஒரு கொடுரம் நடைபெறுவதை அவசியம் கண்டியங்கள். குற்றங்களை தகுந்த காலத்திலேயே கண்டித்து முளையிலேயே கிள்ளி எறிந்துவிடவேண்டும். இல்லையேல் வேடதாரிகள் விஷமாக பரவி சைவசமயத்தையே சீர்குலைத்துவிடுவார்கள்.

தொடர்புடைய படங்கள் இங்கே:

https://facebook.com/story.php?story_fbid=1993025167677711&id=100009107423631

(6)

1990 ஆம் ஆண்டு சிவாச்சாரியார்களுக்கு ஒரு சோதனை ஏற்ப்பட்டது. அது என்னவெனில் சுந்தரர் மடம் நிர்மாணம் செய்த இடத்தில், தங்கள் நிலம் சேர்ந்துள்ளது என்று திருநாவலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆட்சேபம் செய்துள்ளார். ஸ்ரீ சுந்தரர் மடம் அமைந்துள்ள இடம் சுமார் 18 சென்ட் அளவுடையது. இதில் சுமார் 8 சென்ட் தங்கள் பாகத்தில் உள்ளது என்று அந்த கிராம நபர் ஆட்சேபம் தெரிவிக்க சிவாச்சாரியார்கள் கலக்கமுற்றனர். காரணம் ஆக்காலத்தில் சிவாச்சாரியார்கள் மிகவும் சிரமப்பட்டே, தங்களுக்கு பூரணமான வருமானம் இல்லாத நிலையில், ஸ்ரீ சுந்தரர் மீது கொண்ட அன்பின் காரணமாக மடத்தை எவ்வித பூஜைகள் குறைவின்றியும் ஒன்று சேர்ந்து நடத்திவந்தார்கள். இந்நிலையில், ஸ்ரீ சுந்தரர் மடமாக எழுப்பியுள்ள பூமியில் ஆட்சேபம் எழுந்துள்ளது என்றபொழுது இதை எவ்வாறு தீர்ப்பது என்ற கையறுநிலையில் தவித்தனர்.

இந்நிலையில் ஊர்பெரியவர்கள் முன்னிலையில், ஆட்சேபம் தெரித்தவரிடம் சிவாச்சாரியார்கள் சமாதானம் பேசினார்கள். பேச்சுவார்த்தை முடிவில் ஆட்சேபம் தெரிவித்தவர் நிலம் எந்தளவுக்கு உள்ளதோ, அதற்க்கு சமமான தொகை அவரிடம் கொடுப்பது என்று முடிவானது. தேங்காய் மூடியில் ஐந்தும், இரண்டும் தட்சணை பெறும் சிவாச்சாரியார்கள், எவ்வாறு பணம் கொடுத்து நிலத்தை மீட்பது என்று கலங்கிய நிலையில், ஸ்ரீ சுந்தரர் பெருமான் திருவருளால், கோவை செட்டிப்பாளையம் வேலுச்சாமிகுருக்கள் உதவ முன்வந்தார். பொதுவாகவே திருநாவலூர் சுந்தரர் மடத்தின் மீது கொங்கு தேச ஆதிசைவர்களுக்கு அளவற்ற பக்தி உண்டு. அவர்களில் இவர் சிவஸ்ரீ வேலுச்சாமி குருக்கள் சுந்தரர் என்றால் உருகிவிடுவார்கள். அப்படிப்பட்டவர் சுந்தரர் மடம் பூமியில் பிரச்சனை என்ற உடன், பெரும்பான்மை தம் பணத்தோடு கொங்கு ஆதிசைவர்கள் சிலரிடமும் வசூல் செய்து ரூ 7000 ஆட்சேபம் செய்த நபரிடம் தரப்பட்டது.

ஆட்சேபம் தெரிவித்தவரும் சிவாச்சாரியார்கள் படும் துன்பத்தைக், கஷ்டத்தைக் கண்டு பெரிய அளவிற்கு பேரம் பேசாமல், தன்மையோடு சிவாச்சாரியார்கள் சேர்த்து தந்த பணத்தை பெற்றுக்கொண்டு, 24/04/1992 ஆண்டு, கொண்டாடும் பாகபாத்திய விடுதலை ஆவணம் எழுதி பத்திரப்பதிவு திருநாவலூர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டது.

பத்திரத்தின்படி, கோவை செட்டிப்பாளையம் சந்திரசேகர குருக்கள் குமாரர் வேலுச்சாமி குருக்கள் அவர்கள் தந்த ரூ 7000 தொகை பெற்றுக்கொண்டு இந்த பத்திரம் எழுதிக்கொடுக்கின்றோம்.இன்று முதல் இந்த நிலத்திற்க்கும் எங்களுக்கும் உரிமை இல்லை. இந்நிலம் ஸ்ரீ சுந்தரர் மடத்திற்க்கு உரிமையானது என்றபடிக்கு அவர்கள் குடும்ப வாரிசுதாரர்கள் அனைவரும் கையெழுத்திட்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டது.(பார்க்க படம் 1,2,3,4)

திருநாவலூர் உளுந்தூர்பேட்டை தாசில்தார் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், 15/03/2013 அன்று உளுந்தூர்பேட்டை தாசில்தார் அவர்களுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அடியேன் சுந்தரர்மடம் நிலம் சார்ந்த தகவல்கள் கேட்டபொழுது, சுந்தர் மடம் கூட்டுப்பட்டாவில் உள்ளது என்றும், சுந்தரர் பெயரிலேயே 4.50 ஏர்ஸ் அதாவது சுமார் 11சென்ட் நிலமும், கோவை வேலுச்சாமிகுருக்கள் பெயரில் 3,50 ஏர்ஸ் நிலம் அதாவது சுமார் 8 சென்ட் நிலமும் உள்ளதை அரசு வருவாய் பதிவேடுகளின்படி தாசில்தார் பதிலாக தந்துள்ளார்கள். (பார்க்க படம் -5)

அதாவது சுந்தரர் மடத்தில் கிட்டத்தட்ட பாதி நிலம் வேலுச்சாமிக்குருக்கள் என்ற ஆதிசைவர் பெற்றுத்தந்த நிலம். இது 2013 ஆம் ஆண்டு நிலவரம். இன்றைய நிலை என்னவோ. இவ்வாறு வேலுச்சாமி குருக்கள் என்ற ஆதிசைவர் அக்காலத்தில் பல கஷ்டத்திலும், நெருக்கடியிலும் பெற்று தந்த நிலம்.

பத்திரத்தின் நகல் மற்றும் தொடர்புடைய படங்கள் இங்கே:

https://www.facebook.com/permalink.php?story_fbid=1994048910908670&id=100009107423631

(தொடரும்)

அடுத்த பகுதி >>

மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

பிப்ரவரி 3, 2018:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுரம் பகுதியில் நேற்றிரவு 10.45 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம் தீயணைப்பு வாகனங்கள் மூலம் 30க்கும் மேற்பட்ட வீர்ர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாகனங் கள் மூலம் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு லாரிகள் நிரப்பிய வண்ணம் இருந்தனர். தீ மளமளவென பரவியதால் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை அணைக்க முடிந்தது. தீக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செய்தி இங்கே.

மீனாட்சி அம்மன் கோவிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது எதிர்பாராத ஒன்று அல்ல. கோவிலுக்குள் கடைகள் வைக்க அனுமதியளித்துள்ளார்கள். கோவிலின் வெளிப் பிரகாரமான சித்திரை வீதியில் ஏராளமான காஷ்மீர் முஸ்லீம்களின் கடைகள் உள்ளன.

காஷ்மீருக்குள் இந்தியாவின் ஜனாதிபதி கூட ஒரு ஊசிமுனை நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் இந்தியாவை எதிர்க்கும் காஷ்மீர் முஸ்லீம்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கடை போட அனுமதித்திருக்கிறார்கள்.

கோவிலின் உள்ளே செல்லும் வழியில் ஏராளமான கடைகள் உள்ளன. அவற்றை வைத்திருப்பவர்கள் பல காலமாக வைத்திருக்கிறார்கள். 20 ரூபாய் 30 ரூபாய் என்று சொற்ப வாடகையைக் கூட அவர்கள் கட்டுவதில்லை.

கோவிலின் எதிர் புறம் உள்ள திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம் என்ற மண்டபம் முழுக்க கடைகளால் நிரம்பியுள்ளன. பாடப் புத்தகக் கடைகள், பாத்திரக் கடைகள் டெய்லர் கடைகள், வளையல் பொட்டு விற்கும் கடைகள் என்று அந்த அழகிய எழிலான மண்டபத்தின் ஒரு தூண் ஒரு இஞ்ச் கூட விடாமல் கடைகளைப் போட்டிருக்கிறார்கள். அங்குள்ள எழில் வாய்ந்த சிற்பங்களையும் தூண்களையும் விதானங்களையும் நாம் காணவே முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். இதிலும் பல கடைகளை வைத்திருப்பவர்கள் முஸ்லீம்களே.

புது மண்டபத்தில் இருந்து அங்குள்ள வியாபாரங்களை அகற்றி அருகே கட்டப் பட்டுள்ள ஒரு கட்டிடத்துக்கு மாற்ற பலரும் முயற்சி செய்தும் இன்னும் அந்த எழில் வாய்ந்த மண்டபத்தினை பேராசை பிடித்த வியாபாரிகளிடம் இருந்து எந்த அரசாங்கமும் மீட்க முடிவதில்லை.

இது குறித்து நான் பல முறை எழுதியுள்ளேன். பல கடைகளில் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ள தகவல்கள் ஜூனியர் விகடன் போன்ற நக்சல் பத்திகைகளில் கூட வெளி வந்தன. அந்தக் கடைகளில் இருந்து ஒரு சிறிய குண்டு வைத்தால் கூட ஒட்டு மொத்தக் கோவிலையும் தரை மட்டமாக்கி விட முடியும். இருந்தாலும் அரசாங்கம் கவலையின்றி உள்ளது. அங்குள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை

புது மண்டபத்தில் இருக்கும் முஸ்லீம்கள் உள்ளூர் முஸ்லீம்கள். அங்கு பாத்திரக் கடை வைத்திருக்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்பாக என் அம்மா தோசைக் கல் கேட்டார் என்று வாங்கப் போன பொழுது புது மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் மழை பெரிதாக இடியுடன் பிடித்துக் கொண்டது. உடனே கரண்டும் போய் விட்டது. முழங்கால் வரை மண்டபத்துக்குள் தண்ணீர் ஓட சிம்னி விளக்கு வெளிச்சத்தில் நான் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பயணித்துத் தோசைக் கல்லைத் தேட, தோசைக் கல்லை எடுத்துக் கொடுத்த கடைக்காரரை இருட்டில் நான் கவனிக்கவில்லை. கல்லைக் கொடுத்து விட்டுச் சொன்னார் ”இன்று மீனாட்சி திருக்கல்யாணம். கட்டாயம் மழை பெய்ய வேண்டும். நல்லபடியாக மழை பெய்து விட்டது சந்தோஷம்” என்று. அப்பொழுதுதான் ஆளைப் பார்த்தேன் கடைக்காரர் ஒரு முஸ்லீம்.

இந்தக் கடைக்காரர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தி விட்டு அதை முழுமையான கலை மண்டபமாக அதன் ஒரிஜினல் எழிலுக்கு மாற்றும் ப்ராஜக்ட் பல வருடங்களாக நடந்து வருகிறது. எவராலும் இவர்களை அகற்றவே முடியவில்லை.

அடுத்து சித்திரை வீதியில் இருக்கும் பெரும்பாலான ஜவுளிக் கடைகள் முஸ்லீம் கடைகளே. இவர்களில் பட்டாணி, பாக்கிஸ்தானி என்று வடக்கத்திய உருது முஸ்லீம்கள் கடைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில கடைகளில் காஷ்மீர்காரர்கள் கலைப் பொருட்கள் விற்கும் உயர் விலைக் கடைகளை வைத்திருக்கிறார்கள். அங்கு ஒரு சின்ன பேப்பர் கூழ் பொம்மையே சில ஆயிரங்களுக்கு விற்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து வருபவர்கள் கூட வாங்கத் துணிய மாட்டார்கள். அந்தக் கடைகளின் உயரம் அதிக பட்சம் இரண்டு மாடிகள்தான் என்பதினால் அந்தக் கடைகளை இடிக்கப் போவதில்லை. அவை அங்கேயே தொடரும். சட்டப் படி எவரும் அவர்களை அங்கிருந்து காலி செய்ய முடியாது. ஆனால் அவர்களின் க்டைகளுக்கும் கோவிலின் மதில் மற்றும் கோபுரத்துக்கும் அதிக பட்சம் முப்பது அடிகளே இடைவெளி. இந்த உருட்டல் மிரட்டல்கள் எல்லாம் வழக்கமாக எல்லா கலெக்டர் கமிஷனர்களும் சொல்வதுதான். இது வரை எந்தக் கட்டிடமும் இடிக்கப் பட்ட வரலாறே கிடையாது. அங்கு இடிக்கப் பட்ட ஒரே கட்டிடம் மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமே – மாலிக் காஃபூரின் படையெடுப்பில்.

கோவிலின் உள்ளும் புது மண்டபத்திலும் சித்திரை வீதியிலும் உள்ள அனைத்து கடைகளும் உடனடியாக நீக்கப் பட வேண்டும். அந்த இடங்களில் அரசாங்க  அருங்காட்சியகங்கள், நூலகங்கள், பக்தர்கள் தங்கும் சத்திரங்கள், அன்னதான சத்திரங்கள் ஆகியவை ஆகியவை அமைக்கப் பட வேண்டும். கடைகள் சித்திரை வீதி தாண்டியே அனுமதிக்கப் பட வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலைக் காக்க இன்னும் ஒரு விஜயநகரப் பேரரசு வரப் போவதில்லை. மீனாட்சி அன்னையும் சொக்கநாதரும் அரசுக்கு நல்ல புத்தி அளிக்க வேண்டும். இன்னும் ஒரு திருமலை நாயக்கரை, கம்பணரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். இரண்டாயிரம் வருடத்திற்கும் பழமையான அந்தக் கோவில் அசுரர்களின் பிடிகளில் இருந்து உடனடியாக மீட்க்கப் பட வேண்டும்

ஆகவே மிக அவசரமாக இந்த தீ விபத்தை முன் வைத்தாவது உடனடியாக அனைத்து கடைகளும் அப்புறப் படுத்தப் பட வேண்டும். கோவிலுக்குள்ளும் புது மண்டபத்திலும் சித்திரை வீதியிலும் உள்ள அனைத்து கடைகளும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் அப்புறப் படுத்தப் பட வேண்டும். இதைச் செய்யாவிட்டால் அந்த மாபெரும் ஆலயம் அழிவதை எவராலும் காப்பாற்ற முடியாமல் போய் விடும்

அன்னை மீனாட்சி அருள் செய்ய வேண்டும்.

(ச.திருமலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

ஆங்கிலேயப் புத்தாண்டு தினமான ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர்.

ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஹிந்து மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

ஆந்திர அரசின் உத்தரவு

ஹிந்துப் பண்பாட்டைப் பெரிதும் மதிக்கும் முதல்வர்களில் ஆந்திர முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு முக்கியமானவர். ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பின்போதும், யுகாதி நன்னாளன்று, அரசு சார்பாகப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கத்தையும் கொண்டுள்ளவர் அவர். சமீபத்தில் மூன்றாம் முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, அறநிலையத்துறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறார். கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதிலும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

2018 ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோவில்களில் நடுநிசி நேரத்தில் திறந்து வைத்துப் பூஜைகள் நடத்தக் கூடாது, என்று அரசாணைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது ஹிந்து அமைப்புகளாலும், விஷயம் அறிந்த ஹிந்துக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற மாநிலங்களிலும் அரசுகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று விவரம் அறிந்த ஹிந்துக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.

ஆந்திரப் பிரதேச அரசு எதனால் இப்படிப்பட்ட உத்தரவை இட்டுள்ளது என்று யோசித்துப் பார்த்தால், நாம் பல விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கிறிஸ்தவக் கலாச்சாரம்

ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசியப் படையெடுப்புகளாலும், ஆங்கிலேய அரசிடம் அடிமைப்பட்டுக் கிடந்ததாலும் நமது பாரத தேசத்தில் கிறிஸ்தவக் கலாச்சாரம் பலவிதங்களில் ஊடுருவியுள்ளது.

சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, குடியரசாகப் பிரகடனம் செய்யப்பட்டப் பிறகும் கூட, அமைந்த அரசுகள் ஆங்கிலேய ஆட்சி முறையையே பின்பற்றி வருவதாலும், அரசியல் சாஸனத்தை உருவாக்கும்போது கூட பாரத கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஆங்கிலேயரின் அரசியல் சாஸன அடிப்படையில் உருவாக்கியதாலும், தொடர்ந்து வந்த அரசுகள் (பெரும்பாலும் காங்கிரஸ் அரசுகள்) மதச்சர்பின்மை என்கிற பெயரில் ஹிந்து தர்மத்தின் நலனைப் புறந்தள்ளியதாலும், பொதுவாகவே பொது மக்களிடம் ஏற்பட்டுள்ள மேற்கத்திய மோகம் அதிகமாகிக் கொண்டே இருப்பதாலும், ஆங்கிலேயப் புத்தாண்டு (கிரெகோரியன் காலண்டர்) கொண்டாடுவது, ஆங்கிலேயக் காலண்டர்படி பிறந்தநாள் திருமணநாள் (கேக் வெட்டி, மெழுகுவர்த்தி அணைத்து) கொண்டாடுவது, விடிய விடிய மது அருந்தி கேளிக்கைகளில் ஈடுபடுவது, போன்ற வழக்கங்கள் ஹிந்துக்களிடையேயும் தொற்று நோய் போலப் பரவியுள்ளன.

நடை, உடை, பாவனையிலிருந்து முக்கிய தினங்கள் கொண்டாடுவது வரை மேற்கத்தியக் கலாச்சாரத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் ஹிந்துக்கள் இன்றைய சூழலில் பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கத்தைச் சுத்தமாகக் கடைப்பிடிக்காத நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

பாரதக் கலாச்சாரமும் பஞ்சாங்கமும்

சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் உருவான நாகரிகம் நமது வேத நாகரிகம். இறை தரிசனம் கண்ட மஹரிஷிகள், பிரபஞ்சத்தின் ஒலிகளைக் கிரகித்து வெளிக்கொணர்ந்த வேதங்களின் அடிப்படையில் உருவான நாகரிகம். மஹரிஷிகள் இயற்றியுள்ள வேதங்கள் உபநிடதங்கள், இதிஹாசங்கள், புராணங்கள், ஸ்ருதிகள், ஸ்ம்ருதிகள், தர்ம சாஸ்திரங்கள் போன்றவற்றின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதே நமது கலாச்சாரம்.

ஆலயங்கள் கட்டப்படுவதில் ஆரம்பித்து, பூஜைகள் நடத்துவது, உற்சவங்கள் நடத்துவது, திருவிழாக்கள் கொண்டாடப்படுவது போன்ற ஆலயங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் ஆகமங்கள் வழிவகுத்தபடியே நடைபெற்று வருகின்றன. அப்படி நடைபெறுவதே தொடரவேண்டும். அதுவே நமது ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஆன்மிகப் பாரம்பரியம் ஆகும்.

அதேபோல, பிறந்த நேரம் முதல் அந்திம நேரம் வரை நமது பிறந்த தினம், வளர்ச்சி, கல்வி, தொழில், திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், இறந்த பிறகு நடத்தப்படும் அந்திமக் காரியங்கள் என்று நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளபடியே நாம் நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு தனி நபரின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், ஆலயங்களின் விசேஷ தினங்களுக்கும், அரசாங்கங்களின் ஆட்சிமுறைக்கும் கூடப் பஞ்சாங்கங்களைப் பின்பற்றுவதே நமது பாரதப் பண்பாடாக இருந்து வந்துள்ளது. பஞ்சாங்கங்கள் என்பவை கிரக சஞ்சாரம், கணித சாஸ்திரம், காலச்சுழற்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுபவை. வருஷங்கள், அயனங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், யோகங்கள், கரணங்கள் என்று துல்லியமாகக் கணிக்கப்படும் நேரங்களில் தான் ஒவ்வொரு காரியத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்பது நமது சாஸ்திர விதி. சுப காரியங்களாக இருந்தாலும், அசுப காரியங்களாக இருந்தாலும், பஞ்சாங்கத்தின்படி செய்வதே நமது பண்பாடு.

ஹிந்துப் பண்பாட்டில் புத்தாண்டு

காலச்சுழற்சி என்று வருகின்ற போது நமது தேசத்தில் சூரிய மானம், சந்திர மானம் ஆகிய இரண்டு முறைகளைத் தழுவி காலக்கணக்கு கணிக்கப்படுகின்றது. மானம் என்றால் மானித்தல், கணக்கிடுதல் என்று அர்த்தம். பூமிக்குச் சார்பாக சூரியனின் இயக்கத்தைக் கணக்கிடுவது சூரிய மானம், பூமிக்குச் சார்பாகச் சந்திரனின் இயக்கத்தைக் கணக்கிடுவது சந்திர மானம். அவ்வாறு கணிக்கப்பட்டுத்தான் பஞ்சாங்கத்தில் புத்தாண்டுகள் குறிப்பிடப்படுகின்றன.

அதன்படி தான், தமிழ் புத்தாண்டு (வருஷப்பிறப்பு – சித்திரை முதல்நாள்), விஷு, யுகாதி, பைகாசி போன்று நமது தேசத்தில் ஹிந்துக்கள் புத்தாண்டுகள் கொண்டாடி வருகின்றனர்.

ஆலயங்களில் பல்வேறு திருவிழாக்கள் உற்சவங்கள் நடக்கின்றன. அவற்றில் ஒன்று தான் வருஷப் பிறப்பும். வருஷப்பிறப்பு தினத்தன்று ஆலயங்களில் அந்த வருஷத்திற்கானப் புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுவது நமது பாரம்பரிய வழக்கம். நமது கலாச்சாரத்தில், புத்தாண்டுப் பிறப்புக்குப் பின் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.

ஆலயங்கள் திறக்கப்பட்டு, சன்னிதிகள் ஒவ்வொன்றும் நடை திறக்கப்படுவது, பள்ளி எழுச்சி, பூஜைகள் செய்யும் காலங்கள், அபிஷேக, அலங்கார, அர்ச்சனைகள், நைவேத்யங்கள், ஷோட உபசாரங்கள், தீப ஆராதனைகள், பள்ளிக்கு அனுப்புதல், நடை சாத்துதல், ஆகியவை முடிந்து கோவில் மூடுதல் வரை ஆகமங்களில் தெளிவாக நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகம விதிகளின் படி, அர்த்த ஜாம (இரவு) பூஜை முடிந்தவுடன் சன்னிதிகளைச் சார்த்தி (நடை அடைப்பது) கோவில்களை மூடிவிடுவர். பின்னர் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில்தான் கோவில்களும் சன்னிதிகளும் திறக்கப்படும். அந்நேரத்தில் தான் பூஜைகளும் அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறும். புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கமும் படிக்கப்படும்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அர்த்த ஜாமப் பூஜைக்குப் பிறகு மூடப்பட்ட சன்னிதிகள் மீண்டும் பிரம்ம முகூர்த்தத்தில்தான் திறக்கப்பட வேண்டும். வைகுண்ட ஏகாதசி, மகா சிவராத்திரி போன்ற வெகு சில, குறிப்பிட்ட விசேஷ தினங்களில் மட்டுமே கோவில்களும், நடைகளும் இரவு நேரங்களில் திறந்து பூஜைகள் நடத்தப்படும். மற்றபடி, நடுநிசிகளில் கோவில்கள் திறந்து பூஜைகள் நடத்துவது ஆகம விதிகளுக்கு முரணானது என்பது மட்டுமல்லாமல், தோஷம் மிகுந்த செயலும் ஆகும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கு

ஆந்திர அரசு, ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி நடுநிசிகளில் கோவில்கள் திறக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசும் அவ்வாறு உத்தரவிட வேண்டும் என்று விவரமறிந்த தமிழ் ஹிந்துக்களும் ஹிந்து அமைப்புகளும் விரும்பின. ஆனால், வருமானம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கும் அறநிலையத்துறையோ அல்லது தமிழக அரசோ அவ்வாறு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

எனவே, அஸ்வத்தாமன் என்கிற வழக்கறிஞர், “ஆகம முறைப்படி, அர்த்த ஜாமப் பூஜைக்குப் பிறகு மூடப்பட்ட கோவில்கள் அடுத்த நாள் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் தான் திறக்கப்பட வேண்டும். இந்த நடைமுறையை மீறும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நடுநிசி நேரத்தில் கோவில்கள் திறக்கப்படக் கூடாது. எனவே, ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டிக் கோவில்கள் நடுநிசியில் திறக்கப்பட்டுப் பூஜைகள் நடத்துவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்கிற மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கு தொடர்ந்துள்ளார்

விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.ஸ்வாமிநாதன் ஆகியோர் வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்தனர். அரசுத் தரப்பு வழக்கறிஞர், “புத்தாண்டு தினத்தையொட்டி நள்ளிரவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது இல்லை; பொது மக்களின் வசதிக்காகவும் தரிசனத்துக்காகவும் தான் திறக்கப்படுகின்றன. இது காலம் காலமாக நடந்துவரும் வழக்கமாகும். இதனால் ஆகம விதிகள் மீறப்படவில்லை” என்று வாதிட்டுள்ளார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடை விதிக்க மறுத்துவிட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் ஜனவரி 8-ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அறநிலையத்துறையின் சந்தேகத்திற்குரிய செயல்?

இதனிடையே சென்ற வாரம் டிசம்பர் 30-ம் தேதியன்று தினமலர் நாளிதழ் ஒரு மூலையில் “கோவில் திறப்பு நள்ளிரவில் இல்லை” என்கிற தலைப்பின் கீழ் ஒரு பெட்டிச் செய்தி போட்டிருந்தது. அதில். “கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய அரசு, புத்தாண்டு பிறப்பை ஒட்டி, கோவில்களில் நள்ளிரவு நடை திறக்க உத்தரவிட்டது. அதற்கு, பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஆகம விதிகளுக்கு புறம்பாக இருப்பதால், புத்தாண்டு நடை திறப்பு கைவிடப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, பகலில் கூடுதல் நேரம் கோவில்கள் திறந்திருக்கும்” என்று அறநிலையத்துறை அதிகாரிகள் சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதாவது, மொட்டையாக “அறநிலையத்துறை அதிகாரிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதிகாரிகளின் அந்தஸ்து என்ன? ஆணையரா? இணை ஆணையர்களா? உதவி ஆணையர்களா? இல்லை ஏதாவது சில கோவில்களின் நிர்வாக அலுவலர்களா? அவர்கள் பெயர் என்ன? போன்ற எந்தத் தகவலும் இல்லமல், ஒரு கிசு கிசு போன்ற செய்தியாகத்தான் அது இருந்தது.

மேலும், இது சம்பந்தமாக அரசு ஆணை எதுவும் வெளியிடப்படவில்லை. துறை ரீதியான சுற்றறிக்கையும் விடப்பட்டதாகத் தெரியவில்லை. அதோடு மட்டுமல்லாமல், தினமலரைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் இந்தச் செய்தியைச் சொன்னதாகவும் தெரியவில்லை.

அதன் பிறகு ஜனவரி 1ம் தேதி தினமணி நாளிதழில், “புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற மக்கள்; தேவாலயங்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு” என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், “தேவாலயஙளில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலிகளும், கோயில்களில் திங்கள் கிழமை அதிகாலை சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன” என்றும் “புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், முண்டகக் கன்னியம்மன் கோவில், அஷ்ட லட்சுமி கோவில், வடபழனி முருகன் கோவில், தியாகராய நகரில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களில் திங்கள் கிழமை அதிகாலையில் சிறப்புப்பூஜைகள் நடைபெற்றன; முக்கியக் கோவில்களுக்குப் பக்தர்கள் செல்ல ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை இரவு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன” என்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த இரண்டு நாளிதழ்களின் செய்திகளையும் பார்க்கும்போது, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை மனதில்கொண்டு, அறநிலையத்துறை செய்கின்ற விஷமமா என்கிற சந்தேகமும் வரத்தான் செய்கிறது.

பொறுத்திருந்து பார்க்கவேண்டும்

ஹிந்துக் கோவில்களில் இந்த நடைமுறைக் கொண்டுவரப்பட்டபோதே ஹிந்துக்கள் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துப் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் நடத்தி இருக்க வேண்டும். அப்போதே வழக்குகளைத் தொடர்ந்திருக்க வேண்டும். குறைந்த பட்ச நடவடிக்கையாக, நடுநிசி நேரத் தரிசனங்களுக்குப் போகாமல் அறநிலையத்துறை நடவடிக்கையைப் புறக்கணித்திருக்க வேண்டும். பல வருடங்களாக இவை எதையும் செய்யாமல் இருந்தது தவறு.

மேலும், இவ்வழக்கைப் பொறுத்தவரை, உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையைத் தள்ளி வைக்க முடிவு செய்துள்ள நிலையில் தற்காலிகத் தடையாவது வழங்கியிருக்க வேண்டும். பலதரப்பட்ட வழக்குகளில் தற்காலிகத் தடை வழங்குவது என்பது நடைமுறையில் உள்ளதுதான். இவ்வழக்கில் ஹிந்துக்களின் மதவுணர்வுக்கு மதிப்பளித்துத் தடை வழங்கியிருக்கலாம். வழங்காதது வியப்பாகத்தான் உள்ளது.

ஜனவரி 8ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரப்போகும் இவ்வழக்கில், நமது தேசத்தின் ஹிந்து கலாச்சாரத்தையும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களையும், ஆகம விதிகளையும், ஆந்திர அரசின் உத்தரவையும் கருத்தில்கொண்டு, சென்னை உயர் நீதிமன்றம் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்புக்கு நடுநிசியில் கோவில்கள் திறப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும் என்பதே ஹிந்துக்களின் விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.

*******

தினமணி செய்தி:

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

ல்லாண்டு காலமாக இந்துக்களுக்கும், இந்திய விரோதிகளுக்கும் ஆதரவாக ஆனந்த விகடன் செயல்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனந்த விகடனை கருநாநிதி குடும்பம் மூலமாக சர்ச்சுகள் வாங்கிவிட்டன என்றும் அந்தப் பத்திரிகையில் எழுத முற்றிலும் இந்தியவிரோத மனப்பான்மை கொண்டவர்களை சர்ச்சுகள் நியமித்திருக்கின்றன என்பதிலும் உண்மைகள் இருப்பதாகவே தோன்றுகிறது.

என் இந்த யூகத்தை நிரூபிப்பது போலத்தான் இந்தக் கட்டுரையும் இருக்கிறது. இந்தக் கட்டுரை மூலம் சர்ச்சுகள் என்ன சொல்கின்றன என்பதை பொருள் விளக்கம் என ப்ராக்கெட் போட்டு சொல்லி இருக்கிறேன்.

தோண்டத் தோண்ட சிலைகள் ! – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

மானிட சமுதாயத்தைக் காக்க, அழிவு ஏற்படுத்தும் கிருமி குப்பியைக் கைப்பற்ற ‘தசாவதாரம்’ படத்தில் கமலஹாசன் பெரும் போராட்டத்தையே நடத்தினார். அந்த சிலையின் ஆற்றலை உணர்ந்த அமெரிக்க கமல், சிலையைக் கொண்டு போக படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. சிலைகள், வெறும் சிலைகள் அல்ல… அவைகள் நம் சித்த மருத்துவத்தின் அடையாளங்கள். பதினெண் சித்தர்கள் தொட்டு மகான்கள் வரையில், சிலைகளின் வழியாகத்தான் சஞ்சீவி மூலிகைகளை இழைத்து வைத்து அதை சிலைகளுக்குள் புகுத்தினர்.

[[[பொருள் விளக்கம்: கோயிலில் இருக்கும் சிலைகளுக்கு எந்த ஆன்மீக சக்தியும் கிடையாது. தூய தமிழர்களான சித்தர்கள் அறிவியல் முறைப்படி மருந்துகளை வைத்து உருவாக்கிய அந்தக் காலத்து ஹாஸ்பிட்டல்கள்தான் இந்தக் காலத்தில் கோயில்கள் என்று சிலர் புகுத்தினர். இதற்கான ஆதாரம் க-மல ஹாஸன் வந்து போன “தசாவதாரம்” வீடியோ.

பெரிய ஜோக் என்னவென்றால், அந்த வீடியோவில் அமெரிக்கத் தலைவீங்கிக் கமல் கடத்த விரும்பியது சிலையை அல்ல, சிலைக்குள் இந்திய க-மல ஹாசன் போட்டு வைத்த ஒரு கண்டுபிடிப்பை.

க-மல ஹாசன் படமே சரிவர புரியாதவர்களைத்தான் கிறுத்துவ சர்ச்சுகளின் பத்திரிக்கையான ஆனந்த விகடன் வேலைக்கு வைத்துக் கொள்கிறது. “எனக்கு முட்டாள்கள்தான் வேண்டும்” என்று ஈவெரா சொன்னதை ஆனந்த விகடன் நிறைவேற்றி வருகிறது.]]]

இன்ன கோயில் தீர்த்தம் அருந்தினால், இந்த நோய் போகும் என்று சொல்லி வைத்து சிலைகளுக்கு அபிஷேகம் நடத்தி, வழியும் நீரை தீர்த்தமாக்கிக் அருந்த வைத்தனர். கோயிலுக்கு மனிதர்களை வரவழைக்க இப்படியாக ‘பக்தி’ மார்க்கத்தைக் காட்டி நோய் தீர்த்தனர். இப்போதெல்லாம், பளிங்குக் கற்களில் சிலைகளை வைக்கிறார்கள் அது வேறு கதை. அதற்குள் நாம் போக வேண்டாம்.

[[[பொருள் விளக்கம்: ஹிந்துக்களின் பக்தி மார்க்கம் பற்றி சொல்லும்போது, அதை பக்தி மார்க்கம் என்று சொல்லக் கூடாது, “பக்தி” மார்க்கம் என்று கொட்டேஷன் போட்டுத்தான் சொல்ல வேண்டும். அதாவது, கோயிலுக்கு, மன்னிக்கவும், சித்த மருத்துவ ஹாஸ்பிடலுக்கு “மனிதர்களை” வரவழைக்க இப்படிப்பட்ட தந்திரங்களை பின்பற்றினார்கள் அந்தக் காலத்து பிற்போக்குவாதிகள்.

இப்படித் தந்திரங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த ஹிந்து காட்டுமிராண்டிகள் நோய்க்கு மருந்து வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள். ஜலதோஷம் வந்தால்கூட இந்தத் தமிழ்க் காட்டுமிராண்டிகள் வடக்கிருந்து உயிர்நீப்பார்களே ஒழிந்து, சித்த மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை ஏற்க மாட்டார்கள். அதனால், சித்தர்கள் இப்படி மறைமுகமாக ஹாஸ்பிட்டல்களை நடத்தி மருந்து கொடுத்து வந்தார்கள். சித்த மருத்துவம் என்பதே இப்படிப் பொய்களைச் சொல்லித்தான் ஏமாற்றி வருகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் எனதருமை விகடன் வாசக மக்கழே. ]]]

statue_theft_deenadayalan

நாம் போக வேண்டியது, சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த ஆயிரம் ஆண்டு பழமையான சிலைக் கடத்தல் மற்றும் அதன் காரண கர்த்தாவான ஆசாமி குறித்த விஷயத்துக்குள்.

தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் இன்றைய தெலுங்கானாவில் இருக்கும் ஹைதராபாத்தில் இருந்து சென்னை புதுப்பேட்டைக்குள் நுழைந்த அந்த இளைஞனின் பெயர் தீனதயாளன்.

பிழைப்புக்காக ஆரம்பத்தில் ஏதேதோ வேலைகள் செய்து, நாட்களை நகர்த்திய அந்த இளைஞனின் கால்குலேட்டர் இல்லாத கணக்குப் போடும் திறனால், மாடு பராமரிப்பும், மேய்ப்புமாக இருந்த கைத்தொழில் தொலைந்து போய் மாடு தரகு பிடியும், பாத்திர வியாபாரமும் கைக்கு வந்தது.

வட்டிக்கு விடுதல், சினிமா படங்களை லீசுக்கு எடுத்து விநியோகித்தல் என்று இப்படி அடுத்தடுத்து அந்த இளைஞனின் பாதை அமைந்து விட, சென்னையை நிரந்தரமாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடர ஆரம்பித்தார்.

தீனதயாளனின் திருமணம், பிள்ளைகள், அவர்களின் கல்வி, அவர்களின் திருமணம் என்று எல்லாமே ஸ்டார் அந்தஸ்தோடு சுபமாக சென்னையிலேயே பிரமுகர்கள் சூழ ஆசீர்வதிக்க, சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் பின்னர், மகன் அமெரிக்காவிலும், மகள் பெங்களூருவிலும் என்று செட்டில் செய்து விட்டார், தீனதயாளன்.

ஓய்வில்லாத ஓட்டம், ஓட்டம் என்றே வாழ்க்கையின் பெரும்பகுதி போனதில் தீனதயாளனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கணக்கெடுத்துச் சொல்லவே நிறைய ஆட்கள் தேவைப்படுகிற அளவு செல்வம் குவிந்து வழிந்தது.

[[[பொருள் விளக்கம்: தீனதயாளன் மிகப் பெரிய உழைப்பாளி. அதுவும் ஏழையாக இருந்து தன் கடுமையான உழைப்பால் மிகப் பெரிய பணக்காராக மாறியவர்.

கணிதமேதை ராமானுஜரைவிட மிகப் பெரிய கணிதமேதை. கால்குலேட்டர் இல்லாமலேயே 2 + 4 = 8 என்று ஒரு நொடியில் சொல்லிவிடக் கூடியவர். அப்படிப்பட்ட கணிதமேதையை இந்த சமூகம் பிற்படுத்தப்பட்டவர் ஆக்கியது. அதனால் வாழ வழியில்லாமல் போன அந்தக் கணித மேதையை கடத்தல் மேதையாக்கியது இந்தக் கொடூர சமூகம்.

போலீஸ்காரர்கள் சிலைக் கடத்தித்தான் அவருக்கு பணம் வந்தது என்று சொல்கிறார்கள். இருந்தாலும், அவர் அந்தத் தொழில்களைவிட மற்ற தொழில்களையே அதிகம் செய்தார். இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காகத்தான் அந்தப் பட்டியலை நாங்கள் கொடுத்து இருக்கிறோம்.

எனவே, அந்த உழைப்பைப் பாருங்கள். ஆகா, இப்படி அல்லவா இளைஞர்கள் உழைக்க வேண்டும்.]]]

தன்னுடைய 77-வது வயதில் இப்போது, (2016 -) மீண்டும் தீனதயாளன் ஓட ஆரம்பித்திருக்கிறார்.

[[[பொருள் விளக்கம்: இந்த 77 வயது முதியவரை, உழைப்பாளியை, உலகெங்கும் ஓட வைத்து இருக்கிறது கருணையற்ற இந்த அரசு. கடத்தல்க்கார’ர்’ வீரப்ப’ரை’க்கூட நாங்கள் அவர் இவர் என்று மரியாதையுடன் சொல்வது போல இவரையும் மரியாதையுடன் விளித்திருப்பதை வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.]]]

அவரை விடாமல் விரட்டிக் கொண்டிருக்கிறார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல். தீனதயாளன் எப்படி தன்னை படிப்படியாக (?!) வளர்த்துக் கொண்டார், இவ்வளவு செல்வம் குவிந்தது எப்படி என்பது குறித்தெல்லாம் கேள்வி கேட்க எந்த ‘துறையும்’ இல்லாத நிலையில், அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.

[[[பொருள் விளக்கம்: கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை. இது ஆனந்தவிகடன் எனும் சர்ச் பத்திரிகைக்குத் தெரியும். ஆனந்த விகடன் குழுவினரின் அறிவே அறிவு !

துறை என்பதை “துறை” என கொட்டேஷன் மார்க்குக்குள் போட்டுச் சொல்லி இருப்பதால், ஒரு மிகப் பெரிய அறிவுசீவி குழுவினரால் ஆனந்த விகடன் நடத்தப்படுகிறது “என்பதை” தெரிந்துகொள்வீராக !

நானும் அறிவுசீவிதான். என்பதை உங்களுக்குக் காட்ட என்பதை என்பதை கொட்டேஷனுக்குள் போட்டு “என்பதை” என்று சொல்லி இருக்கிறேன்.]]]

போலீஸ் தரப்பில் விசாரித்தோம்.

“சிலை கடத்தல் வழக்கில் தமிழ் சினிமா படத் தயாரிப்பாளர் வி.சேகர், சிக்கியபின் மீண்டும் ஒரு பெரிய அளவிலான சேசிங் ஏதும் இல்லாமல் இருந்தது. அப்போது சிலை கடத்தல் விவகாரத்தில் பெரிதாகப் பேசப்பட்ட சினிமா நடிகையின் மூலமும் ஒன்றும் கிடைக்க வில்லை.

தீனதயாளன் விவகாரம் அப்படிப்பட்டது அல்ல. ஆனால் சர்வதேச அளவில் சிலை கடத்தல் மற்றும் கொள்ளையில் தேடப்பட்டு வரும் சுபாஷ் சந்திர கபூரின் நெருங்கிய தொழில் கூட்டாளி இந்த தீனதயாளன். முதல் நாளே இவர் வீட்டிலிருந்து 50 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 55 சுவாமி சிலைகளை. பார்சல் போட்டு வைத்திருந்த ஸ்டேஜில் மீட்டிருக்கிறோம்” என்றனர்.

சென்னை, ஆழ்வார்பேட்டை, முர்ரே கேட் சாலையில், ஐந்து கிரவுண்ட் பரப்பளவில் இரண்டடுக்கு மாடிகளுடன் சலவைக் கற்களால் 25 கோடி ரூபாய் பெருமானத்தில் இழைத்து இழைத்து கட்டப் பட்டிருக்கிறது அந்த வீடு. சுற்றிலும் போலீஸ் நிற்க, முந்தைய ஆர்ட் கேலரியின் முகமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.

ஒரு கலா ரசிகனுக்குரிய வீடு போல தோற்றமளிக்கும் அங்கே தரை தளத்தில், கலைப்பொருட்கள் விற்பனைக்கான, ‘அபர்ணா ஆர்ட் கேலரி ’ இதுநாள் வரையில் தொழில் பாதுகாப்பு மையமாய் தீனதயாளனுக்கு இருந்து வந்துள்ளது.

முன்பக்கமாக இவைகளை காட்சிப்படுத்தி வைத்து விட்டு, பின் பக்கமாக தீனதயாளன் ஏற்றி அனுப்பி வைத்த கோயில் திருட்டுச் சிலைகளும், கடத்தல் சிலைகளும் ஏராளம் என்கின்றனர், விசாரணை தரப்பில்…

[[[பொருள் விளக்கம்: இதெல்லாம் விசாரணைத் தரப்பில் சொல்லப்படுவது. இது உண்மையா என்பது ஆனந்த விகடன் பத்திரிகைக்குத் தெரியாது.]]]

statue_theft_deenadayalan-2

எப்படி ட்ராக் செய்தீர்கள் ?’ என்று போலீஸ் தரப்பில் பேசியதில்,

“ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலைப் பற்றி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கான (சோர்ஸ்) தொடர்பை பலப்படுத்தி வைத்துக் கொள்வது அவர் வழக்கம். இதனால்தான் சாலையோரக் கூலிகள், குடிசைப் பகுதி மக்கள் இன்னும் சிலர் அவருடைய போன் நம்பரை கேட்டாலே சொல்வார்கள்.

கடந்த திங்கட்கிழமை ஐ.ஜி. சாரின் அலுவலகத்துக்கு ‘அந்த’ தொடர்பு வட்டத்திலிருந்துதான் போன் வந்திருக்க வேண்டும். ‘குறிப்பிட்ட ஏரியாவில் இருந்து நள்ளிரவில் சிலைகள் பார்சல் செய்யப்பட்டு லாரிகளில் கொண்டு போகிறார்கள். யாரும், இதை கண்டு கொள்வதில்லை’ என்பதே போனில் வந்த தகவல்.

இந்த தகவலைத் தொடர்ந்து எங்களுக்கு அலர்ட் போட்டு விட்ட ஐ.ஜி., ‘ இந்த ஆபரேசனில் யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அங்கே சிலை கடத்தல் நடப்பதை எப்படி உறுதி செய்வது?’ என்பது போன்றவைகள் குறித்து ஒரு ஸ்பெஷல் கிளாசே எடுத்து விட்டார்.

அதன்படி முதலில் அந்த வீட்டை கண்காணிப்புதான் செய்தோம். அந்த வீட்டில், கருடாழ்வார் சிலையையே பார்சல் போட்டு கடத்தும் வேலையில் மும்முரமாக இருந்த, தீனதயாளனின் மேலாளர் மற்றும் உதவியாளர்கள் ராஜாமணி, குமார், மான்சிங் ஆகியோர்தான் முதலில் சிக்கியவர்கள். சத்தமில்லாமல், அவர்களை எங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஒருவர் மேலாளர், மற்ற இருவர் தீனதயாளனுக்கு நம்பிக்கையான நபர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்து முடித்த பின்னரே, கோர்ட்டில் ரெய்டுக்கான அனுமதி பெற்று சோதனையில் இறங்கினோம். நான்கு நாட்கள் ஓடி விட்டன.

[[[பொருள் விளக்கம்: அதாவது, தீனதயாளன் தப்பிச் செல்லவும், முடிந்த அளவு சிலைகளை இந்த வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தவும் காவல்த்துறையானது நான்கு நாட்கள் டைம் கொடுத்தது.]]]

இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டோம். சுற்றிலும் பளிங்கு சலவைக் கற்கள், ஆனால், குறிப்பிட்ட சில இடங்களைத் தட்டிப் பார்க்கும் போது சத்தம் வேறு மாதிரியாக கேட்கவே, சுவற்றை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்துதான் அபூர்வமான நம்முடைய நாட்டின் பழங்கால ஓவியங்களும், 34 சிலைகளும் மீட்கப்பட்டன.” என்று விவரித்தனர்.

ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம்.

“சிலை கடத்தலில் 1965-ம் ஆண்டுமுதல் ஈடுபட்டு வரும் தீனதயாளன், ஸ்ரீவில்லிபுத்துார் பக்கத்தில் கோவில் சிலை திருடிய வழக்கில், கைதானவர். அதில் ஜாமீனில் வந்த பின், சென்னையில் இருந்த ஆர்ட் கேலரிகளை மொத்தமாக மூடிவிட்டு, ஆந்திராவுக்கே போய் விட்டார்.

ஆந்திராவிலிருந்து, மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சிலைகளை கடத்தும் திட்டம் தோல்வியில் முடியவே, அங்கிருந்து கிழக்காசிய நாடுகளில் தஞ்சமாகி பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து பழையபடி சிலை கடத்தல் வேலையில் இறங்கியிருக்கிறார். தஞ்சாவூர், அரியலுார், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள சோழர் கால சிலைகள் இந்த டீமால் கடத்தப்பட்டுள்ளன. அவைகள் எத்தனை என, கணக்கெடுத்து வருகிறோம்.

statue_theft_deenadayalan-3

தீனதயாளனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிலைகள், பல கோயில்களில் இருந்து திருடப்பட்டவை. மிகவும் பழமையான ஓவியங்களும் கிடைத்துள்ளன. அவைகள் யாவும் நம்முடைய நாட்டின் கலைப் பொக்கிஷங்கள் ஆகும்.

அவைகள் எந்த காலகட்டத்து ஓவியங்கள் என கண்டுபிடிக்க டெல்லியில் உள்ள தொல்லியல் துறைக்கு ஃபேக்ஸ் அனுப்பியுள்ளோம். அவர்கள் திங்கட்கிழமை சென்னை வருகிறார்கள். அவர்களது ஆய்வு முடிவுக்கு பின்னர் இன்னும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.

இதுவரையில் 93 சிலைகள் அந்த வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல சிலைகள் புதைத்தும் வைக்கப்பட்டிருந்தன. உலோகச் சிலைகள் மட்டுமல்ல, யானைத் தந்தங்களால் செய்யப்பட்ட சிலைகளும் ஏராளம். 2004-ம் ஆண்டு, நெல்லை பழவூர் கோவிலில் நடராஜர் சிலை உள்பட 13 சிலைகளை திருடியதாக கூட்டாளிகள் 8 பேருடன் தீனதயாளன் சிக்கினர். 9 சிலைகள் மீட்கப்பட்டன.நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே ரூ. 16 கோடி. இந்த வழக்கில் தீனதயாளன் கைது ஆகாமல், தலைமறைவாக இருந்தே அப்போது ஜாமீன் பெற்றார். இப்போது அப்படி முடியாது என்று கருதுகிறோம். மேலும், எங்கும் தப்பி விடாதபடி, அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுவிட்டது ” என்கிறார் பொன்.மாணிக்கவேல்.

 

[[[பொருள் விளக்கம்: 2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, ஆனந்த விகடன் வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.

93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே.]]]

“தீனதயாளனை நான் தேடிப் போகப் போவதில்லை. ஆனால், அவரே இங்கு வந்து சரண் அடைவார், எங்களுக்கு அவரை எப்படி சரண் அடைய வைக்க வேண்டுமென்பது தெரியும்” என்று உறுதியாக சொல்கிறார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்.

பொன்.மாணிக்கவேல் கையில் ஒரு புத்தகம் இப்போது இருக்கிறது. அடிக்கடி அதை பிரித்துப் படித்துப் பார்த்து ‘நோட்ஸ்’ எடுத்து வைத்துக் கொள்கிறார். அது சிலைகள், பழங்கால கலைப் பொக்கிஷங்கள் தொடர்பான ஒரு பெரிய புத்தகம்.

தீனதயாளனின் வீட்டுக்கு அவரே போலீஸ் பாதுகாப்பைப் போட்டு வைத்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் உள்ளே போகும் போது, அவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பி வைக்கிறார்கள் போலீசார்.

[[[பொருள் விளக்கம்: பொதுவாக போலீஸ்க்காரர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றாலும் பொன். மாணிக்கவேல் மிகவும் நல்லவர். எங்களுக்கு வடா பாவ் வாங்கித் தந்தார். அவர் வெளியில் இருந்து மிகப் பெரிய சிலைகளை ஷர்ட், பேண்ட் பாக்கட்டில் வைத்துக்கொண்டு வந்து தீனதயாளன் வீட்டில் வைத்துவிடவில்லை என்பதற்கு இந்த செக்கிங்கே ஆதாரம்.

மற்றபடி, இன்னும் சில நாட்களில் நீங்களும் இந்தக் கடத்தலை மறந்துவிடுவீர்கள், போலீஸ்காரர்களும் 1965லும், 2004லும் மறந்தபடி இதை மறந்துவிடுவார்கள். ]]]

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுக்க பல கோயில்களில் புனரமைப்பு, சீரமைப்பு, கும்பாபிஷேகம் செய்கிறோம், வசதி செய்து தருகிறோம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி கோயில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன. பல கோயில்கள் மொத்தமாக இடிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற கோயில்கள் முதல் கிராம கோவில்கள், குலதெய்வ கோயில்கள், அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை, தனியார் கோயில்கள் என அனைத்துக் கோயில்களும் இந்த சதிக்கு பலியாகி வருகின்றன.

temple-mandapam-thiruvaiyaru

 இங்கே நடக்கும் தவறு என்ன..?

கோயிலின் பழமையும் பாரம்பரியமும் ஒரு அளப்பரிய சொத்து. அதன் புராதனம் கட்டடக்கலை, கலைநயம் மிக்க வேலைப்பாடுகள் போன்றவை விலைமதிப்பற்றவை. கோயிலின் ஆன்ம சக்தி மற்றும் அதன் அதிர்வலைகள் அங்குள்ள கோயில் அமைப்பு, ஸ்தானம் முதலிய பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை அழிப்பதன் மூலம் கோயிலின் புராதனமும், வரலாற்று ஆதாரங்களும், கோயிலின் ஆன்ம சக்தியும் அழிக்கப்படுகின்றன.

 யார் செய்கிறார்கள்?

இந்த மாஃபியா பல மட்டங்களில் இருக்கிறது. வெளிநாட்டு மதவாதிகள்- தொண்டு நிறுவனங்கள், சிலைக் கடத்தல் கும்பலோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றுக்கு ஏஜென்ட்களாகச் செயல்படும் சில பெரிய மனிதர்கள், சிறிய குறைகளைப் பெரிதுபடுத்தி இடிக்கச்சொல்லும் சில சாமியார்கள், கேரள மந்திரவாதிகள், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குத் துணை போகும் ஸ்தபதிகள், இவர்கள் அறிவுரையில் இயங்கும் சில அறங்காவலர்கள் போன்றோர் ஆவர்.

 ஏன் செய்கிறார்கள்?

 • இந்திய பாரம்பரியத்தையும் தொன்மையையும் கண்டு பொறாமை.
 • மதம் பரப்பும் நோக்கத்திற்கு இந்தியாவின் பாரம்பரிய தர்மம் சார்ந்த  வாழ்க்கை நெறி இடையூறாக உள்ளது. அதற்கு அடித்தளமாக உள்ள கோவில்கள், சமயநெறிகள், பண்பாட்டு வழக்கங்கள் போன்ற  ஆணிவேர்களை அறுக்க நினைக்கும் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதி – கோயில்கள் அழிப்பு
 • கலாசார உலகமயமாக்கலுக்கு (அமெரிக்க மயமாக்கலுக்கு) பாரம்பரியம் ஒரு தடையாக உள்ளது. அதை அழிக்க வெளிநாட்டுப் பெருமுதலாளிகளும்- தொண்டு அமைப்புக்களும்- மதவாத சக்திகளும், எழுத்தாளர்களுக்கு பணம் கொடுத்து மக்கள் சிந்தனையில் விஷம் கலந்து கொண்டிருப்பது போல, பாரம்பரிய மரபுகளை திரிக்க நடத்திகொண்டிருக்கும் நாடகத்தின் ஒரு பகுதி. கலாசார மாற்றத்தால் இந்திய சமூகத்தை பெரு நுகர்வு சமூகமாக மாற்றி தங்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பன்மடங்கு பெருக்கும் திட்டம்.
 • இந்தியாவின் வரலாற்றைத் திரிக்க நினைக்கும் வெளிநாட்டு- உள்நாட்டு சக்திகளுக்கு இடையூறாக, உண்மை வரலாற்றுக்குச் சான்றாக இருக்கும் கோவில் கல்வெட்டுக்களும் சாசனங்களும் உள்ளன. எனவே அவற்றை அழிப்பது அவசியமாகிறது.
 • இந்திய சிற்ப வேலைகளுக்கு வெளிநாடுகளில் ஏக கிராக்கி. கடத்திச் செல்வோரின் நோக்கமும் அதுவே.
 • ஸ்தபதிகளுக்கு, இருப்பதை சீரமைப்பதை விட இடித்துக் கட்டினால் வருமானம் அதிகம். அதன் பொருட்டு அவர்களும் துணை போகிறார்கள்.
 • சில அறங்காவலர்கள்- பெரிய மனிதர்கள், விளம்பர மோகத்தால் தங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் இடம்பெற பழமையான கோயிலை இடித்து புதிதாகக் கட்ட நன்கொடை அளித்துத் தூண்டுகிறார்கள்.  கோயில்களை தங்கள் கௌரவம் வளர்க்கும் இடங்களாக எண்ணியதன் விளைவு.
 • பல இடங்களில் ஸ்தபதிகளும் அறங்காவலர்களும் இந்த கோயில் சிதைப்புக் கும்பலின் பணத்திற்கு- சதிக்கு மயங்கி துணை போவதும் உண்டு.

 எப்படிச் செய்கிறார்கள்?

 • முதலில் கோயிலில் அது பின்னம்,  இது குறை என்று மாற்றங்களைச் சொல்லும் இந்த மாஃபியா குழு, கோயில் குழுவினரை ‘தெய்வ குற்றம்’ என்பது போல பயமுறுத்தி விடுவர். அதை சீர்படுத்தும் முறைகளைச் சொல்லும்போது, கோவிலுக்கு ஒவ்வாத மாற்றங்களைச் சொல்லி, புராதனச் சின்னங்களை அப்புறப்படுத்துவர். கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்.

sandblasting-3

 • சில இடங்களில் கும்பாபிஷேகம் செய்கிறேன் என்று பழமையான கோயிலையே இடித்துத் தள்ளிவிட்டு ஆடம்பரமாக கோயில்கள் என்னும் பெயரில் கட்டடங்கள் கட்டுகிறார்கள்.
 • சுத்தப்படுத்துகிறேன் என்னும் பெயரில், கோயிலின் சுவர்களிலும்,  தூண்களிலும் சேண்ட் பிளாஸ்டிங் எனப்படும்  (Sand Blasting) எனப்படும் முறையால் மணல் துகள்களை மிகை அழுத்த காற்றின் மூலம் வேகமாக அடிக்கச்செய்வர். அதனால் கல் சுவரும், கல்வெட்டுக்களும் சிற்பங்களும் கொத்தி விடப்பட்டது போல விகாரமாகிவிடும்; காலப்போக்கில் வலுவிழந்து சிதைந்து விடும்.
 • வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்.
 • கருவறைக்குள் டைல்ஸ் ஓட்டுவது, கருவறைக்குள் ஃபோகஸ் லைட் போட்டு மூலவர் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது,  கற்சுவர்களுக்கு மேல் கிரானைட் ஓட்டுவது, கோயில் விக்கிரகங்களின் இடங்களை மாற்றி வைப்பது (ஸ்தான பேதம்) என கணக்கில் அடங்காத தவறுகளால் கோயிலின் ஆன்ம சக்தி சிதைக்கப்படும்.

இப்படி என்னென்ன வழி இருக்கிறதோ அத்தனை வழிகளாலும் ஆலயங்களின் சாநித்யம் சிதைக்கப்படுகிறது.

சில உதாரணங்கள்:

 • தஞ்சை பெரிய கோயில்–  கல்வெட்டுக்களும், புராதனச் சிற்பங்களும் சீரமைப்பு என்ற பெயரில் நாசம் செய்யப்பட்டன (2008).

(http://janajaati.blogspot.in/2008/08/imminent-danger-to-thanjavur-big-temple.html)

 • திருவொற்றியூர் கோயில் – சிலைகள் உடைக்கப்பட்டு, அகற்றப்பட்டு,  கல்வெட்டுக்கள் சிதைக்கப்பட்டு அராஜகம் அரங்கேறியது  (2013).

(http://www.dinamalar.com/news_detail.asp?id=789444)

 • காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயில் – கோயிலை விளம்பரத் தளமாக  மாற்றினார்கள். ஆகம விதிமீறல்கள் தலைவிரித்தாடின. கோயில் கதவில் ஈ.வெ.ரா. சிற்பங்கள், கோவிலுக்குள் அறங்காவலர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் என அநியாயங்களின் உச்சம் அரங்கேறியது.

(http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2847)

 • சேவூர் வாலீஸ்வரர் கோவில் –  கல்வெட்டுக்கள் சேண்ட் பிளாஸ்டிங் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோயில் அமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது.

(http://sevurwar3.blogspot.in/search/label/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)

 • சுமார் முப்பது ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து புராதனச் சிலைகளை கடத்தி விற்று வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் வழக்கு என்னவாயிற்று?  கடத்தப்பட்ட சிலைகளின் நிலை பற்றிய வலுவான விசாரணைகள் இன்றி வழக்கு அமைதியாக இருக்கிறது. முறையாக தோண்டப்பட்டால் பல முக்கிய புள்ளிகளும் பல்லாயிரம் கோடி புராதன சொத்துக்களும் மீட்கப்படும்

http://www.aazham.in/?p=1718

http://chasingaphrodite.com/tag/art-of-the-past/

 • சிலைக் கடத்தல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் தங்கைக்கு உள்ள தொடர்பை பற்றி திரு. சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே மேடைகளில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=zOgpYsUf6Ac

இவை சில உதாரணங்கள் மட்டுமே. விலைமதிப்பற்ற பல்வேறு ஆபரணங்கள் உலோகச் சிலைகள் கடத்தப்படுகின்றன. சமீபத்தில் மதுரைக் கோயிலுக்கு சொந்தமான ரூ. 66,000 கோடி மதிப்புடைய மரகத லிங்கம் காணாமல் போனது தமிழகம் முழுக்க பேரதிர்ச்சியை உருவாக்கியது. இவையன்றி எத்தனையோ பெரிய கோயில்கள், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பவை முதற்கொண்டு, கிராம குலதெய்வ கோயில்கள் வரை இந்த மாஃபியா கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.

மக்கள் செய்யவேண்டியது என்ன?

v  நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.

v  கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.

v  சேண்ட் பிளாஸ்டிங் மூலமோ, இல்லை பிற பணிகள் மூலமோ கோயிலில் கல்வெட்டு, சிற்பங்கள் போன்றவை சேதப்படுத்துவதைப் பார்த்தால் உடனடியாகத் தடுக்க வேண்டும். தன்னார்வ அமைப்புக்கள், தொல்லியல்துறை, உள்ளூர் நிர்வாகம் என எவ்வளவு தூரம் தகவல் தெரிவிக்க முடியுமோ தெரிவித்து, குற்றங்களைத் தடுக்க வேண்டும்.

v  கோயிலின் தொன்மையான தூண்கள்,  சுவர் கற்கள், சிற்பங்கள் போன்றவற்றை எவரேனும் எடுப்பதைக் கண்டால் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

v  கோயிலின் கருவறையை இடம் மாற்றம் செய்யக் கூடாது. கருவறைக்குள் கழிப்பறை போல டைல்ஸ் ஒட்டக் கூடாது.  கோயிலின் கருவறைகளின் நீள- அகல- உயரங்களை மாற்றம் செய்யக் கூடாது. பழமையான சிலைகளை அகற்ற அனுமதிக்கக் கூடாது. கருவறைக்குள் லைட் போடக்கூடாது.

v  செயற்கை சாம்பிராணி, கெமிக்கல் கற்பூரம், சீமை- கலப்பின மாடுகளின் பால், தயிர், நெய், கெமிக்கல் விபூதி போன்றவற்றை கோயிலில் பயன்படுத்தக் கூடாது. நாட்டுப் பசுவின் பால், தயிர், நெய், பசுஞ்சாணத்தால் செய்யப்பட விபூதி, இயற்கை கற்பூரம், சாம்பிராணி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திரிபுவனம் ஆலயம்
திரிபுவனம் ஆலயம்

அரசாங்கம் செய்ய வேண்டியது என்ன?

 • தற்போது நடைபெற்று வரும் அனைத்து கோயில் வேலைகளையும் உடனடியாக நிறுத்த அரசாணை பிறப்பித்து, அக்கோயில்களில் நடக்கும் பணிகள் குறித்தான ஆய்வு தொல்லியல் துறை, தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் ஆன்மிக அமைப்புக்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 • கோயில் ஊழியர்கள், நிர்வாகிகளுக்கு கோயிலின் வரலாறு, தொன்மை குறித்த பயிற்சி அளிக்கபட்டிருக்க வேண்டும். கோயிலின் முகப்பில் கோவிலின் வரலாறு, புராதனம் போன்ற தகவல்களைத் தெரிவிக்க தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
 • சிலைக் கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து, வேரோடும்- வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.
 • கடந்த ஆண்டுகளில் நடந்த கோயில் வேலைகளைக் கணக்கெடுத்து அங்கு நடந்த மாற்றங்களைக் கணக்கெடுத்து குற்றவாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்.
 • தொல்லியல்துறை ஆவணப்படுத்திய அனைத்து புராதனச் சின்னங்களையும் மறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட வேண்டும்.
 • தமிழகக் கோயில்களின் நிர்வாகத்தை- கட்டுப்பாட்டை விட்டு அறநிலையத் துறை வெளியேறி, ஆன்மிகக் குழு, கோயிலின் பாரம்பரிய நிர்வாக குழுவினரிடம் ஒப்படைத்து அரசு கண்காணிப்புப் பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
 • புதிய கோயில் பணிகளை, வல்லுனர் குழு, தொல்லியல்துறை, ஆன்மிக அமைப்புக்கள், பக்தர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு மேலாண்மை குழுவின் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையில் நடைபெறச்செய்ய வேண்டும்.

தற்போது நடக்கும் வேகத்தில் கோயில் அழிப்புப் பணிகள் தொடர்ந்தால், வருங்காலத்தில் சுற்றுலாத் தலங்கள் இருக்கும்;  கோயில்கள் இராது. இருந்தாலும் அதில் சாந்நித்யம் இராது. மாலிக் காபூர் ஏற்படுத்திய சேதத்தை விட கொடூரமான சேதங்களை தற்போதைய நவீன மாலிக் காபூர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள்.

அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம். இல்லையேல் நம் முன்னோர்களில் லட்சக் கணக்கானவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பாடுபட்டது பலனின்றி போவதோடு, அடுத்த தலைமுறை வரலாற்று அடையாளம் தொலைத்த அனாதைகளாகவும் மாறிவிடும் அபாயம் உள்ளது.

அயோத்தியா பட்டிணம் ராமர் கோயில்: அறநிலையத் துறையின் அக்கிரமங்கள்

மது முன்னோர்களின் கலாச்சார மற்றும் தொழில் நுட்ப திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது நமது கோயில்கள். அத்தகைய கோயில்களில் ஒன்று தான் சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டிணம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில். விபீஷணர் அயோத்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் ராமபிரானை நோக்கி இந்த இடத்தில் தவம் இருந்தார். அப்பொழுது ஸ்ரீராமர் மீண்டும் அவருக்கு பட்டாபிஷேக கோலத்தில் காட்சி அளித்தார். தனக்கு கிடைத்த ஸ்ரீ ராமரின் பட்டாபிஷேக காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விபீஷணர் இந்த ஆலயத்தை அமைத்தார் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது. இந்த தலத்தில் ஸ்ரீராமர் அன்னை சீதா தேவியுடன் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தகைய சரித்திர முக்கியதுவம் வாய்ந்த இந்த தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மன்னர்களால் சிறப்பான முறையில் மண்டபங்கள் பல கட்டப்பட்டன. இக்கோயில் மண்டபங்கள்ளும் அவற்றில் உள்ள தூண்களும் அழகிய சிற்பங்களால் நிறைந்துள்ளன. கோயிலின் மண்டப சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் இத்தனை வருடங்கள் பராமரிக்கப்படாத நிலையிலும் அழகாக காட்சி அளிக்கின்றன.

இந்த கோயிலின் மைய கருவறை 1000 வருடங்கள் பழமையானது. மேற்கத்திய தொழில் நுட்ப முறையில் பல கோடி செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களே ஒரு 200 ஆண்டுகளில் உடைந்து விடுகின்ற நிலையில் இத்தனை ஆண்டுகளாக குறையாத வனப்புடன் இந்த கோயில் உள்ளது. எத்தனையோ மழை, புயல், சுட்டேரிக்கும் வெயில் என்ற இயற்கையின் விளையாட்டை தாண்டி நின்ற இந்த கோயில் சிற்பங்கள் அறநிலை துறையின் அதிகாரிகளினால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

இந்த கோயிலின் முன்புறம் பழமையான கலை அம்சம் மிக்க மரத்தாலான ஒரு தேர் உள்ளது. விலை மதிப்பற்ற இந்த கலை பொக்கிஷம் இன்று ஒரு மிக பெரிய குப்பையாக மாறியுள்ளது. மேற்கூரை எதுவும் இன்றி மண் காற்றால் தூசு படிந்து முழுமையாக அழியும் நிலையில் உள்ளது, இந்த கலை பொக்கிஷத்தை ஒரு காருக்கு போடும் துணியோ அல்லது ஒரு தார்பாலினை உபயோகித்தோ பாதுகாத்து இருக்கலாம். இந்த சாதாரண விஷயத்தைக் கூட செய்யாமல் தேரை முற்றிலும் அழிய விட்டிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு 100 ஏக்கர் அளவில் நில சொத்து உள்ளது. இருந்தும் எந்த பயனும் இல்லை. அனைத்து சொத்துகளும் திராவிட இயக்க அரசியல் கொள்ளையர்கள் கையில் உள்ளது.

இந்த கோயிலை கட்டிய சிற்பிகள் ராமாயண காவியத்தை பல இடங்களில் சிற்பங்களாக ஓவியங்களாக உருவாக்கியுள்ளனர். ஆனால் அந்த ஓவியங்களில் சூர்பனகை ஓவியம் மட்டும் இல்லை. அந்த குறையை தற்பொழுது அறநிலை துறை போக்கியுள்ளது. எப்படி என்று கேட்கிறீர்களா? ‘SAND BLASTING” என்ற சிற்பங்களின் மீது மணலை பீச்சி அடிக்கும் தடை செய்யப்பட்ட தொழில் நுட்பத்தை உபயோகித்து, எல்லா சிலைகளையும் சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் மூக்கை மழுங்கடித்து சூர்பனகை போல மாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

இந்த முறையில் சுத்தம் செய்த ஒரு சில ஆண்டுகளில் சிலைகள் மற்றும் கட்டிடங்கள் வலிமை இழந்து உடைந்து அழிந்துவிடுகின்றன.

’SAND BLSATING’ தடை செய்யப்பட்டதற்கான ஆணை….

நாசம் செய்யப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் கோயில் சிலைகள்

கோயிலை பல ஆண்டு காலம் பராமரிக்காமல் நாசம் செய்து விட்டு பின்னர் திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில் வண்ண பூச்சு செய்துள்ளனர். இதற்கு பல இலட்சம் செலவு செய்து உள்ளனர். உண்மையில் வருடத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்து ப்ராமரித்திருந்தாலே போதும், இந்த மோசமான நிலைக்கு கோயில் கோபுரம் சென்று இருக்காது.

இது மட்டுமா? பல இலட்சம் செலவு செய்து தீட்டப்படும் நவீன பெயிண்டுகளே ஒரு சில வருடங்களில் மங்கி போய் விடுகின்ற நிலையில் பல நூறு வருடங்கள் ஆன பிறகும் அழியாமல் இருக்கும் பழங்கால ஓவியங்கள் தற்பொழுது அறநிலை துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் மழை நீர் வடிந்து அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அந்த அற்புதமான ஓவியங்கள் மீது மின்சார ஒயர்கள், பல்புகள் என்று போட்டும் சர்வ நாசம் செய்து உள்ளனர்.

அது மட்டும் இன்றி 600 வருட பழமையான மண்டபங்களுக்கு உள்ளே ஆகம விதிக்கு புறம்பாக பல சிமெண்ட் சிலைகளை வைத்து கல் மண்டபத்தின் அழகையும் பாரம்பரியத்தையும் கெடுத்து உள்ளனர். ‘DEAD LOAD’ என்று சொல்லப்படும் இந்த நிரந்தர அதிகப்படியான பளு நாளடைவில் தூண்களை வலுவிழக்க செய்து உடைத்து விடும் ஆபத்தும் உள்ளது. அது மட்டும் இன்றி சிமெண்டினால் உருவாக்கப்படும் பொம்மைகள் மீது அரச மரம் எளிதாக வளர்ந்து தூண்களில் விரிசல் ஏற்படுத்துகின்றன. இதை பற்றி எல்லாம் இந்த அறநிலை துறை அதிகாரிகளுக்கு எந்த கவலையும் இல்லை. இவர்களுக்கு காண்டிராக்ட் விட்டு வரும் வருமானம் மட்டும் தான் முக்கியம்

பல கற் சிலைகள் சிதலமடைந்து இருக்கின்றன். இது குறித்து கேள்வி எழுப்பிய பொழுது எனக்கு தெரியாது என்று திமிர்த்தனமான பதில் வேறு வருகிறது. அது மட்டும் அல்ல. சில வருடங்களுக்கு முன்பு கோயில் மண்டப தரையின் மீது இந்திய அரசின் தொல் பொருள் சட்டத்திற்கு புறம்பாக மொசைக் தரை போட்டு கோயிலின் புனிதத்தை கெடுத்ததோடு மட்டும் அல்லாமல் பல அரிய கல்வெட்டுகளையும் அழித்துள்ளனர். இப்பொழுது மீண்டும் அந்த மொசைக் மீது மார்பில், டைல்ஸ் ஒட்டி விட்டனர். ஏற்கனவே அதிக அளவில் சேதப்படுத்திய நிலையில் இவர்கள் மேலும் மேலும் விலைமதிப்பற்ற கலை பொக்கிஷமாக திகமும் மண்டபங்களை சீரழித்து கொண்டு இருக்கின்றனர்.

எனது நண்பர் இந்த கோயில் இருந்த பொழுது ஒரு வயதான மூதாட்டி டைல்ஸ் போடாதீர்கள். என்னை போன்ற வயதானவர்கள் எளிதாக நடக்க முடியாது என்று வருத்ததுடன் சொன்ன பொழுது அந்த அதிகாரிகள் அது எல்லாம் முடியாது என்று அவரிடமும் திமிர்த் தனமாக பதில் அளித்து இருக்கிறார்கள். பாவம் அந்த மூதாட்டி வருத்ததுடன் சென்று விட்டார்.

தற்பொழுது பெரும்பாலான இடங்களில் டைல்ஸ் ஒட்டி விட்டுள்ளனர். இந்த அழிப்பு வேலைக்காக பல இலட்ச ரூபாய்கள் செலவு செய்வதற்கு பதிலாக சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே செலவு செய்து கோயில் சிற்பங்களையும் அழகிய ஓவியங்களையும் அருமையாகப் பாதுகாத்து இருக்கலாம். இந்த அடிப்படை பொது அறிவு கூட இல்லாதவர்கள் எப்படி கோயில் அதிகாரிகளாக செயல்படுகிறார்கள்?

இந்தக் கோயிலில் இத்தோடு மட்டும் நிறுத்தவில்லை. பல நூறு வருடம் பழமையான பழமையான பலிபீடத்தையும் சிதைத்து உடைத்து உள்ளனர். ஆகம விதிகளின் படியும், இந்திய அரசின் தொல் பொருள் சட்டப்படியும் மன்னிக்க முடியாத குற்றம் இது.

ஆகம விதிகளுக்கு புறம்பாக கருடாழ்வார் சன்னதியின் மேல் கோபுரத்தையும் கட்டி உள்ளனர்.கருடாழ்வார் சன்னதிக்கும் மண்டபத்திற்கு இடையே படிக்கட்டுகளையும் அமைத்துள்ளனர். இவை எல்லாவற்றையும் விட கொடுமையான ஒரு விசயம் ஹனுமன் சன்னதிக்கு நடந்து உள்ளது. இந்த கோயிலில் வெளி பிராகாரத்தில் இருந்து ஸ்ரீராமரை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் ஹனுமனுக்கும், கோயிலுக்கும் நடுவே தமிழக அரசு ஒரு சாலையை வேறு போட்டு உள்ளது. பழமையான சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு தலத்தில் இது போன்று சாலை அமைப்பது ஒரு மிகப்பெரிய தவறு என்பது பட்டம் பெற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமான விசயம். சரி அவர்களுக்கு தான் தெரியவில்லை. கோயில் சம்பளத்தில் வாழ்க்கையை நடத்தும் இந்த அறநிலை துறை அதிகாரிகளுக்காவது தெரிய வேண்டாமா?

இது தவிர இவர்கள் காண்ட்ரேக்ட் விட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கோயிலிக்கு தற்பொழுது புதிய தேர், புது பரிவார தெய்வ மண்டபங்கள், ஆகம விதிகளுக்கு புறம்பாக படிக்கட்டுகள் என்று பல்வேறு முறை கேடுகளிலும் ஈடுபட்டு உள்ளனர். இது போன்ற கோயில் திருப்பணிகளுக்கு எல்லாம் பணம் புகழ் பெற்ற கோயில்களில் ஜிசியா போன்று வசூல் செய்யப்படும் தரிசன டிக்கெட் மூலம் பெறப்பட்ட வரியில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அந்தந்த கோயில்களுக்கு உரிய சொத்துகள் மூலம் வரும் வருமானத்தைப் பெற இந்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏன் என்பதற்கு நான் விளக்கம் அளிக்க தேவையில்லை, அது எல்லாருக்குமே தெரியும் என்று நினைக்கிறேன்.

பல ஹிந்து சகோதரர்கள் இது போன்ற அறங்கெட்ட அதிகாரிகளை எதிர்த்து பல்வேறு நிலைகளில் போராடி கொண்டு இருக்கின்றனர். இதில் சிலர் வெற்றியையும் அடைந்து உள்ளனர். ஆனால் சில நேரங்களில் போலி திராவிட இனவாத வெறியர்களால் வாங்கப்படும் நீதியால் இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அநீதிகளும் நடக்கின்றன.

முன்னோர்களின் கடின உழைப்பிலும் அவர்களது ஆன்ம சக்தியாலும் சான்றோர்களின் தவ வலிமையிலும் உருவாக்கப்பட்ட மதிப்பு மிக்க கோயில்களை அழிக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டிப்பாக ‘சிவன் சொத்து குல நாசம்’ என்ற பொன்மொழிக்கேற்ப கட்டாயம் தண்டனை பெறுவார்கள்.

மேலும் தெய்வ சக்தி மனித யத்தனம் மூலமாகவே செயல்படும் என்பதையும் நாம் உணரவேண்டும். ஒரு இந்தியனாக, ஹிந்துவாக தமிழனாக நாம் செய்ய வேண்டிய கடமைகள் சில உள்ளன. இது போன்ற விசயத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லலாம், இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம். உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரலாம். இது குறித்த புகாரை கீழ் கண்ட அதிகாரிகளுக்கு பத்திரிக்கை துறையினருக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ தெரிவிக்கலாம்.

சில பத்திரிகை துறையினரின் மின்னஞ்சல் முகவரிகள்:

The Hindu: letters@thehindu.co.in
புதிய தலைமுறை: news@gennowmedia.com
New Indian Express: writetous@newindianexpress.com
Dinamalar: dmrcbe@dinamalar.in
Dina thanthi: managerms@dt.co.in

இந்து சமய அறநிலை துறை சம்பந்தப் பட்ட அனைத்து விசயங்களுக்கும் ஒட்டு மொத்த பொறுப்பில் இருப்பவர்கள், அதில் நடக்கும் தவறுகளுக்கு பொறுப்பு ஏற்று அதற்கு நடவடிக்கை எடுக்க கூடிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றீய விவரங்கள்:

The Secretary, Tamil Development, Religious Endowments and Information Department,
Email: tamilreinfosec@tn.gov.in, Ph: +91-44-25672887, Fax: +91-44-25672021

The commissioner, Hindu religious and Endowment board
E mail ID: tn.endowments@gmail.com, Ph No: +91-44-28334817, Fax: +91-44-2833 4816

இந்தியாவின் கலாச்சார சின்னங்களை பாதுகாப்பதற்கான பொறுப்பில் இருக்கும் இந்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை அதிகாரியின் விவரங்கள்:

Janhwij Sharma, Director (Conservation), ASI (Delhi)
Email ID: dircon.asi@gmail.com Ph: +91-11-23013316,

Sh. S.V. Venkateshaiah, Regional Director South Zone (Bangalore)
Email ID: rdsouth.asi@gmail.com Ph : +91 9449571424,

The commissioner, Department of Archaeology,
Email ID: tnarch@tn.nic.in, Ph: 044-28190023, FAX: 28190023

இந்த அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்.

13. Protection of place of worship from misuse, pollution or desecration & 18. Power to Central Government to control moving of sculptures, carvings or like objects படி சம்மந்தப் பட்ட இந்திய அரசின் தொல்லியல் துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கு வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த சட்டங்கள் குறித்த விவரங்கள் இங்கே.

இந்திய அரசியல் சட்டத்திற்கு புறம்பாக தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக செய்யாததோடு மட்டும் இன்றி பாரம்பரிய கலாச்சார சின்னங்களை அழித்து மதத்தை அவமானப்படுத்த கூடிய செயல்களை செய்தது போன்ற பல்வேறு தவறுகளை செய்த அதிகாரிகளின் மீது கீழ் கண்ட சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டி உயர்திரு சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அனுப்பலாம்.

The Indian Penal Code:

Section 119. Public servant concealing design to commit offence which it is his duty to prevent
Section 120. Concealing design to commit offence punishable with imprisonment
Section 295. Injuring or defiling place of worship with intent to insult the religion of any class
Section 405. Criminal breach of trust
Section 406. Punishment for criminal breach of trust
Section 409. Criminal breach of trust by public servant, or by banker, merchant oragent
Section 424. Dishonest or fraudulent removal or concealment of property
Section 425. Mischief

The collector, Salem district,
E-Mail: collrslm@nic.in, Ph: +91-427-2330030 / +91-427-2452244, Fax: +91-427-2400700

[பாகம் -24] ஷரியா சட்டத்தில் இந்துக்களின் இழிநிலை – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 24-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

கைதிகளின் எண்ணிக்கையை, அவர்கள் எந்த அளவுக்கு மலிந்திருந்தார்கள் என்பதிலிருந்து உணரலாம், அவர்கள், நபர் ஒருவர் இரண்டு திராம் முதல் பத்து திராம் வரை விலைவைத்து விற்கப்பட்டனர். அவர்கள் பின்னர் கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, நெடுந்தொலைவுப் பட்டணங்களிலிருந்து அடிமை வணிகர்கள் வந்து இவர்களை வாங்கிச் சென்றனர்… அழகியோர், கறுப்பர், செல்வர், ஏழையர் எனற வேறுபாடின்றி, அகப்பட்டோரெல்லாம் அடிமைகளாக்கப்பட்டனர்.

கி.பி.1202-இல் குத்புதீன், களிஞ்சரைக் கைப்பற்றியபோது, கோயில்கள் அனைத்தும் மசூதிகளாக மாற்றப்பட்டு உருவ வழிபாடு பூண்டோடழிக்கப்பட்டது, ஐம்பதாயிரம் ஆடவர் அடிமைத்தளையில் பிணைக்கப்பட்டனர், சமவெளி முற்றுமே இந்து அடிமைத்தனமெனும் இருளில் மூழ்கியது.

புனிதப்போரில் கைப்பற்றப்பட்ட இந்துக்களுக்கு அடிமைத்தனமே கதியாயிருந்ததது. போர் நிகழாத காலங்களிலும் இந்துக்களை இழிவுபடுத்தக் கையாளப்பட்ட கொடுமையான வழிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அலாவுதீனின் ஆட்சிக்காலத்தில் 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சில பகுதிகளில் இந்துக்கள் சுல்தானுக்கு மிகத்தொந்தரவு கொடுத்தனர். எனவே, இந்துக்களைக் கிளர்ச்சி செய்ய முனையுமளவுக்குத் தழைத்தெழவிடாத வகையில் வரிகளால் ஒடுக்க அவர் முனைந்தார்.

குதிரைகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொள்ளவோ, உயர்ந்த துணிமணிகள் அணியவோ, உயர்தர வாழ்கை வசதிகளைத் துய்க்கவோ, இயலாதவாறு இந்துக்கள் சுரண்டப்பட்டனர்.

 

ஜிஸியா வரியைப் பற்றி டாக்டர் டைடஸ் கூறுகிறார்:

“சுல்தான்கள், பேரரசர்கள், மன்னர்கள் எனப் பலவகைப்பட்ட ஆட்சிகளிலும், இந்துக்களிடம் ஜிஸியா வரி வசூலிக்கப்பட்டதில் மட்டும் மாற்றமில்லை. வரிவதிப்பு ஆளுவோர்களின் வசூல் திறமையைப் பொருத்து அமைந்தது. இறுதியாக, அக்பரின் அறிவார்ந்த ஆட்சயில்தான் (கி.பி.1665) மொகலாயப் பேரரசு முழுவதிலும் (முஸ்லீம் ஆட்சியின் அடிப்படைக் கொள்கையாக எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் நிலவிய) இவ்வரி நீக்கப்பட்டது.”

 

இவ்வரியைப் பற்றி லேன்பூலே கூறுவதாவது:

“இந்துக்களுக்கு நிலத்தின் விளைச்சலில் பாதி வரியாக விதிக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து எருமைகள், ஆடுகள் கறவைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வைகள் விதிக்கப்பட்டன. ஏழை, செல்வர் வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு இவ்வளவு, கால்நடை ஒன்றுக்கு இவ்வளவு என்று வரிவிதிக்கப்பட்டது. வரிவசூல் அலுவலர்கள் கையூட்டு பெற்றுச் சலுகை காட்டினால், பணிநீக்கத்துடன், தடியடி, குறடு, கிடுக்கிச்சட்டம், தளையிடல், சிறை முதலான கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். புதிய விதிகள் மிகக் கடுமையாகச் செயல்படுத்தப்பட்டன, ஒரு அலுவலர், 20 இந்துக்களிடமிருந்து, கட்டிவைத்து அடித்தல் போன்ற முறைகளில் வரி வசூலிக்கப் பணிக்கப்பட்டார். இந்துக்களின் வீடுகளில் தங்கம், வெள்ளியேதும் வைத்துக்கொள்வதிற்கில்லை என்பதுடன், வெற்றிலை பாக்கு போன்ற மலிவான இன்பங்களுக்குக் கூட வழியில்லை. அரசின் உள்ளூர் (இந்து) அலுவலர்கள் வறுமையிலேயே வாழ்ந்தனர், அவர்களது மனைவியர் முஸ்லீம் வீடுகளில் பணிப்பெண்டிராகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அரசின் வருவாய்த்துறை அலுவலர்கள், பிளேக் என்னும் கொள்ளை நோயைவிடக் கடுமையாய்க் கருதப்பட்டனர். அரசுப்பணியாளராக நேர்வது மரணத்தைவிடக் கொடுமையான இழிவாய்க் கருப்பட்டது, அத்தகையோருக்கு இந்துக்கள் எவரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.

 

இவ்வாணை பற்றி அக்கால வரலாற்றாசிரியர் கூறுகிறார்:

“சட்டங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டன. சௌக்கிதார்கள், குத்கள், முகாதிம்கள் போன்ற பணியாளர்கள் குதிரையில் செல்லவோ, ஆயுதம் தரிக்கவோ, வெற்றிலை போடவோ, நல்ல துணியணியவோ இயலா நிலையிலிருந்தனர்… இந்துக்கள் தலைநிமிர்ந்து நடக்கவும் அனுமதிக்கப்படவில்லை… அடியுதைகள், தளைகள், கிடுக்கிச் சட்டங்களில் பிணித்தல் போன்ற முறைகளில் வரிவசூல் செய்யப்பட்டது.,

இக்கொடுமைகளெல்லாம் பேராசை, பிறழ்ந்த அறநெறியுணர்வு காரணமாகச் செய்யப்பட்டன என்பதற்கில்லை. மாறாக, இஸ்லாமிய ஆட்சியின் அடிப்படை வழிமுறைகளாக இவை நிலவிவந்தன. சுல்தான் அலாவுதீன் ஒருமுறை, முஸ்லீம் சட்டநெறிகளின் கீழ், இந்துக்களின் நிலையென்னவெனத் தெளிவுறுத்துமாறு கேட்டபோது, காஜி விடுத்த பதில் இதனையுணர்த்துகிறது. காஜியின் விளக்கமாவது, அவர்கள் திறை செலுத்தக்கடமைப்பட்டவர்கள், வரி வசூல் அலுவலர் வெள்ளி வேண்டுமெனக் கேட்டால், மறுபேச்சின்றி பணிவும், மரியாதையும் காட்டித் தங்கம் கொடுக்க வேண்டியது இவர்கள் கடமை. அலுவலர்கள் அவர்களது வாயில் குப்பையைப் போடவிரும்பினால் மறு பேச்சின்றி வாயைத் திற்ந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் செலுத்தும் திறையைப் பணிந்து உவந்து செலுத்துகின்றனர் என்பதற்கு அடையாளமாக இக்குப்பையை வாயில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் புகழை உயர்த்தலே கடமையென்றும், அதையெதிர்க்க முனைவதில் பயனில்லையென்றும் அவர்கள் உணரவேண்டும். அவர்களை இழிவானவர்கள் எனக்கூறி அவர்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருங்கள் எனக் கடவுளே கட்டளையிடுகிறார். இந்துக்களை இழிநிலையில் நடத்துதல் நமது சமயக் கடமை, ஏனெனில் இறைத்தூதருக்கு அவர்கள் உறுதியான எதிரிகள், அவர்களைக் கொலை செய்யவும், கொள்ளையடிக்வும் அடிமைப்படுத்தவும் தூதர் கட்டளையிட்டுள்ளார். அவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுங்கள்; மறுத்தால் கொலை செய்தோ, அடிமைப்படுத்தியோ, அவர்களது செல்வங்களையும் சொத்துக்களையும் கவர்ந்து கொள்ளுங்கள் எனத் தூதர் கூறியுள்ளார். இந்துக்கள் மீது ஜிஸியா வரி விதிப்பதற்கு இஸ்லாமியச் சட்ட வல்லுநர்களில் பேரரறிஞரான ஹனிபாவே அனுமதியளித்துள்ளார். மற்ற சட்ட நெறியாளர்களோ, இஸ்லாமா, சாலா என்ற இரண்டிலொன்றுதான் இந்துக்களுக்கான தேர்வாகமுடியும் என்று கூறியுள்ளனர்.

கஜினி முகமதுவின் படையெடுப்புக்கும் அகமதுஷா அப்தலியின் படையெடுப்புக்கும் இடைப்பட்ட 762 ஆண்டுக்கால நிலை இதுதான்.’’

 

இவ்வாறு இந்திய தேசத்தின் மீது நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிற அம்பேத்கர் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் கூறுகிறார்:

‘‘படையெடுப்புகளின் பல்வேறு விளைவுகளுக்கிடையே முக்கியமானது, தற்போது பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று கோரப்படும் பகுதிகளின் வாழ்க்கைநிலை, பண்பாடு ஆகியவை பெருமளவில் மாற்றப்பட்டுள்ளமையே என்று கருதுகிறேன். எனவே, இப்பகுதிகளுக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்குமிடையே ஒருமைப்பாடு சிதைந்துவிட்டது என்பதோடன்றி வெறுப்புணர்வே மிகுந்துள்ளதெனலாம்.

படையெடுப்புளின் முதல் விளைவு, வடஇந்தியாவுக்கும் இந்தியாவின் பிறபகுதிகளுக்குமிடையிலான ஒருமைப்பாட்டின் சிதைவே. வட இந்தியாவை வென்றபின் கஜினிமுகமது அதை இந்தியாவிலிருந்து பிரித்துக் கஜினியிலிருந்து ஆட்சி செய்தார்.

கோரிமுகமது வட இந்தியாவை வென்றபோது அதை இந்தியாவோடு இணைத்து முதலில் லாகூரிலிருந்தும் பின்னர் டெல்லியிலிருந்தும் ஆட்சிசெய்தார். அக்பரின் அண்ணனான ஹக்கீம், வட இந்தியாவிலிருந்து காந்தாரத்தையும் காபூலையும் பிரித்து ஆட்சிசெய்தார், அக்பர் அவற்றை மீட்டும் வட இந்தியாவுடன் இணைத்தார், அவை மீண்டும் 1738-இல் நாதிர்ஷாவினால் பறிக்கப்பட்டன.

சீக்கியர்களின் எழுச்சி மட்டும் நிகழாதிருந்தால் அப்போதே வட இந்தியா தனித்துப் பிரிந்திருக்கும். எனவே, வடஇந்தியா, அடிக்கடி கழற்றிமாட்டப்படும் புகைவண்டியின் சரக்குப்பெட்டி போலவே இருந்து வந்துள்ளது. இதைப்போன்றே, அல்சாஸ்-லொரைன் பகுதி ஆரம்பத்தில் ஸ்விட்சர்லாந்து தாழ்நாடுகள் இவற்றோடு ஜெர்மனியின் பகுதியாய் கி.பி.1680 வரை விளங்கியது. 680-இல் ஃபிரான்சு வென்று அதனைத் தனது பகுதியாக்கிக் கொண்டது. மீண்டும் ஜெர்மனி 1871-இல் அதைவென்று தமது நாட்டுடன் சேர்த்துக் கொண்டது. 1918-இல் மீண்டும் அது பிரிக்கப்பட்டு ஃபிரான்சுடன் சேர்க்கப்பட்டது. 1940-இல் அது ஃபிரான்சிலிருந்து பிரிக்கப்பட்டு, ஜெர்மனியுடன் சேர்க்கப்பட்டது.

படையெடுப்பாளர்கள் கடைப்பிடித்த ஆட்சிமுறைகள் பல பின்விளைவுகளை இங்கு விட்டுச்சென்றுள்ளன. இவ்விளைவுகளில் ஒன்றே இந்து, முஸ்லீம்களுக்கிடையே நிலவும் கசப்புணர்வு; ஒரு நூற்றாண்டுகால, இணைந்த அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரும், தணியவோ, மறக்கவே இயலாத அளவுக்கு இக்கசப்புணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது.

படையெடுப்புகளின் போதெல்லாம் நடைபெற்ற கோயில்களை இடித்தல், கட்டாய மதமாற்றம், சொத்துக்களைச் சூறையாடி மக்களைக் கொன்று குவித்தல், ஆண் பெண் குழந்தைகளை அடிமைப்படுத்திப் பலவகையில் இழிவு செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாய் நினைவில் நிற்பதன் வாயிலாகக் கர்வடைந்துள்ள முஸ்லீம்களுக்கும் அவமான உணர்வில் மூழ்கிய இந்துக்களுக்குமிடையே நல்லுணர்வு நிகழ வாய்ப்பேதும் இல்லையன்றோ? இதுவுமன்றி இந்தியாவின் வடமேற்கு மூலைதான் பல கொடூர நிகழ்ச்சிகளுக்குக் களமாய் விளங்கியது, முஸ்லீம் கொள்ளையர் கூட்டத்தினர் இப்பகுதியில் அலையலையாய் வந்து குவிவர், பின்னர் நாட்டின் பிறபகுதிகளுக்கு வெவ்வேறு திசைகளில் செல்லுவர். இப்படையினர் சிறுசிறு எண்ணிக்கையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சென்றடைந்தனர். காலப்போக்கில் இந்தியாவின் தூரப்பகுதிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கவும் செய்தனர். நெடுங்காலம் நிலவிய அவர்களது ஆட்சியின்போது இங்கு நிலவிய ஆரியப் பண்பாட்டின் மீது, இஸ்லாமியப் பண்பாடு ஆழமாகப் பதிக்கப்பெற்றதன் விளைவாய் இந்தியாவின் வடமேற்கு மூலையில், பிறபகுதிகளினின்றும் சமய, அரசியல் நோக்குகளில் முற்றிலும் மாறுபட்ட சமுதாயம் உருவாகியது.

முஸ்லீம் படையினர் இந்தியா வரும்போது இந்துக்களுக்கு எதிரான முழக்கங்களோடுதான் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பு முழக்கங்கள் முழங்கி கோயில்களுக்குத் தீவைப்பதுடன் திரும்பிவிடவில்லை. அப்படிப் போயிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகளுடன் அவர்கள் திருப்தியடைந்து விடவில்லை. அதற்கு மேலாக இஸ்லாத்தை இம்மண்ணில் விதைத்துவிட்டுத்தான் சென்றனர். அதன் வளர்ச்சி, ஓங்கியுயர்ந்த தேக்குத்தோப்பு போன்று மாபெரும் அளவில் நிகழ்ந்தது, அத்தோப்பு வட இந்தியாவில்தான் மிக அடர்த்தியாய்ப் பெருகியது. தொடர்ந்துவந்த படையெடுப்பாளர்கள் அதற்கு நல்ல உரமும் நீரும் இட்டு அதனைத் தழைத்தோங்கிடச் செய்தனர். இவ்வளர்ச்சியோடு ஒப்பிடும்போது பௌத்தமும் இந்து சமயமும் வெறும் புதர்களெனக் கிடந்தன. சீக்கியர் எழுச்சி என்னும் கோடரிகூட இப்பெருந்தோப்பைப் பெரிதும் பாதித்துவிடவில்லை.”

இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் இஸ்லாத்தை இம்மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக அவர்களின் மனங்களில் முழுமையாக- மனநிறைவாக- இந்திய தேசத்தைத் தங்கள் தாய்நாடாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

முஸ்லீம்கள் முழுமையான இஸ்லாமிய அரசு இந்தியாவில் உருவானால் மட்டுமே இந்திய தேசத்தைத் தங்கள் சொந்த தேசமாகக் கருதுவார்கள். இஸ்லாமிய அரசு உருவாக வேண்டுமானால் இந்தியாவில் முழுவீச்சுடன் மதம்மாற்றினால் மட்டுமே அது சாத்தியப்படும். இன்றைய சூழ்நிலையில் மதமாற்றத்தின் மூலமாக மட்டுமே இந்தியாவை மறுபடியும் அடிமைப்படுத்த முடியும். ஆனால் அம்பேத்கரின் எண்ணமோ மீண்டும் இந்தியா அடிமைப்படக்கூடாது என்பதாகும். மீண்டும் இந்தியச் சுதந்திரத்தைக் காக்க, கடைசிச் சொட்டு இரத்தம் உள்ளவரை போராடுவோம் என்பதே அம்பேத்கரின் அறைகூவல்.

 

இதோ அந்த அறைகூவல்:

‘‘என்னை மிகவும் கலக்கமடையச் செய்யும் நிலைமை எதுவென்றால் இந்தியா இதற்குமுன் ஒரே ஒரு தடவை மட்டுமே தன் சுதந்திரத்தை இழக்கவில்லை. இந்திய மக்களே செய்த துரோகத்தாலும் காட்டிக் கொடுக்கும் கயமைத்தனத்தாலும் இந்தியா தன் சுதந்திரத்தைப் பல தடவை இழந்தது.

முகமது பின் காசிம் சிந்துவின் மீது படையெடுத்தபோது சிந்துவின் மன்னன் தாகிரின் படைத் தளபதிகள் முகம்மது பின் காசிமின் கையாட்களிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு தங்களுடைய அரசருக்காகப் போரிட மறுத்தனர்.

ஜெயச்சந்திரன், முகம்மது கோரியை இந்தியா மீது படையெடுத்து வந்து பிருதிவிராஜனுக்கு எதிராகப் போரிடுமாறு அழைத்தான். அவனுடைய உதவியையும், சோலங்கி மன்னர்களின் உதவியையும் அளிப்பதாகக் கோரிக்கு உறுதி கூறினான்.

சிவாஜி இந்துக்களின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது மற்ற மராட்டியத் தலைவர்களும் இராசபுத்திர அரசர்களும் முகலாயப் பேரரசின் பக்கம் நின்று சிவாஜிக்கு எதிராகப் போரிட்டனர்.

பிரிட்டிஷார் சீக்கிய அரசர்களுக்கு எதிராகப் போரிட்டபோது, சீக்கியர்களின் தலைமைத் தளபதி செயல்படாமல் வாளாவிருந்தார். சீக்கிய அரசைக் காத்திட அவர் உதவவில்லை. 1857-இல் இந்தியாவின் பெரும்பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது சீக்கியர்கள் ஏதும்செய்யாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். … வரலாறு திரும்புமா…?

சாதிகள், மதங்கள் முதலான பழைய பகைச் சக்திகளுடன் தற்போது வெவ்வேறான மற்றும் எதிரெதிரான கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் பல உருவாகியிருப்பது மேலும் கவலைகொள்ளச் செய்கிறது… நாட்டின் நலனைவிடத் தங்கள் தங்கள் கட்சியின் நலனை இக்கட்சிகள் முன்னிறுத்தாதவாறு இந்திய மக்கள் மனத்திட்பத்துடன் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டின் சுதந்திரம் இரண்டாவது முறையாக இடருக்குள்ளாகிவிடும். மீண்டும் மீட்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும். கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும்வரை நம்முடைய சுதந்திரத்தைக் காத்திடுவோம் என்று நாம் உறுதி பூணுவோம்.’’

1949 நவம்பர் 25ம் தேதி அன்று அரசியல் சட்டம் குறித்து நடந்த மூன்றாவது சுற்று விவாதத்திற்குப் பதிலளித்து அம்பேத்கர் இவ்வாறு பேசினார்.

அம்பேத்கரின் இந்த அறைகூவல் இந்திய தேசியத்திற்கானஅறைகூவல்.

இந்திய தேசியம் மறுபடியும் சிதைந்துவிடக்கூடாது என்ற பேரார்வத்தினால்– தேசிய உணர்வினால் உந்தப்பட்டு எழுந்த அறைகூவல்.

இஸ்லாத்தில் மாறியிருந்தால் நாடே சின்னாபின்னமாகியிருக்கும் என்று அம்பேத்கர் கூறியிருந்த வார்த்தைகளோடு இதை இணைத்துப் பார்த்தால் அம்பேத்கர் மதமாற்றத்திற்கு ஏன் இஸ்லாத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

(தொடரும்…)

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில் இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும் கருத்துகளைப் பார்த்தோம். பாகம் 23-இல் முஸ்லீம் அரசர்கள் தங்கள் படையெடுப்பால் எவ்வாறு  புறச்சமயிகள், கோயில்கள், கலாசாரத்தை அழித்தொழித்தார்கள் என்று பார்த்தோம்.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22 || பாகம் 23

[பாகம் -23] இஸ்லாமியர்கள் செய்த புறச்சமயிகள், கோயில்கள், கலாசார அழிப்பு – அம்பேத்கர்

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 23-ஆம் பாகம்

[முந்தைய பாகங்களின் சுருக்கம் – இந்தப் பக்கத்தின் கடைசியில்..]

 

 

அம்பேத்கர் கூறுகிறார்:

‘‘யுவான் சுவாங் வந்த காலத்தில் பஞ்சாப் மட்டுமின்றி ஆப்கானிஸ்தானமும் கூட இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததென்பதும், அக்காலத்தில் இப்பகுதிகளில் வேத மதமும் புத்த மதமும் மட்டுமே நிலவின என்பதும் உண்மைதான். ஆனால் யுவான் சுவாங் தம் நாட்டுக்குத் திரும்பியதற்குப் பிந்தைய காலத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்பதையும் நோக்க வேண்டாமா?

இக்கால இடைவெளியில் நிகழ்ந்தனவற்றுள் முக்கியமானவை, வடமேற்கு எல்லை வழியாகக் கூட்டமாய் வந்த முஸ்லீம் படையெடுப்புகளே. இவற்றுள் முதல் படையெடுப்பு கி.பி.711-இல் முகமது பின் காசிம் தலைமையில் நடைபெற்றது, அப்போது அரேபியர்கள் சிந்து மாநிலத்தை வென்று தம் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தனர். பாக்தாத்தில் ஆட்சிபுரிந்த கலீபாவின் ஆணைப்படி நிகழ்ந்த இப்படையெடுப்பு, நிலையான ஆட்சிக்கு வழிகோலவில்லை, தொலைதுரத்திலிருந்து நேரடியாக ஆளுவதில் உள்ள சிரமங்களால் இவ்வாட்சி கி.பி.ஒன்பதாம் நுற்றாண்டின் மத்தியில் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னர் கி.பி.1001-இல் இருந்து தொடர்ச்சியாக, பல கடும் படையெடுப்புகளை கஜினி முகமது நடத்தினார். இவர் 1030-ஆம் ஆண்டு இறந்தார். ஆனால் முப்பதாண்டு காலக் குறுகிய இடைவெளியில் 17 முறை படையெடுத்தார். இவரையடுத்து 1173-ஆம் ஆண்டு முதல் கோரி முகமதுவின் படையெடுப்புகள் தொடங்கின, இவர் கி.பி.1206-இல் கொல்லப்பட்டார், கஜினி முகமதுவின் 30 ஆண்டுகாலப் படையெடுப்புகளும் இந்தியாவைக் கடுமையாக பாதித்தன. இதனைத் தொடர்ந்து செங்கிஸ்கான் தலைமையில் மொகாலாயக் கூட்டங்களில் படையெடுப்பு தொடங்கியது, 1221-இல் நிகழ்ந்த முதல் படையெடுப்பில் இந்தியாவின் எல்லையைத் தாக்கிவிட்டு நாட்டில் நுழையாமல் அவர்கள் திரும்பி விட்டனர். இருபதாண்டுகளுக்குப் பின்னர் இரண்டாம் படையெடுப்பின் போது லாகூர்வரை வந்து வீழ்த்தினர். இப்படையெடுப்புகளில் 1398-இல் நிகந்த தைமூரின் படையெடுப்பே மிகப் பயங்கரமானது. பின்னர் 1526-இல் பாபரின் படையெடுப்பு நிகழ்ந்தது. இத்தகைய படையெடுப்புகள் பாபருடன் நின்றுவிடவில்லை. இரு நுற்றாண்டுகளூக்குப் பின்னர் மேலும் இரண்டு கடுமையான படையெடுப்புகளை இந்தியா எதிர்கொள்ள நேர்ந்தது. 1738-ஆம் ஆண்டில் நாதிர்ஷா அப்தாலியின் படையெடுப்பின்போது பானிப்பட்டில் மராட்டியர்கள் ஒடுக்கப்பட்டனர், இதையடுத்து முஸ்லீம் ஆதிக்கத்திற்கெதிரான இந்துகளின் எழூச்சி மீண்டும் தலைதூக்கவொண்ணா வகையில் முற்றுமாக வேரறுக்கப்பட்டது.

இம்முஸ்லீம் படையெடுப்புகள் நாடு பிடிக்கவும் கொள்ளயடிக்கவும் மட்டுமே நடத்தப்படவில்லை. வேறு முக்கியமானதோர் நோக்கத்தின் அடிப்படையிலும் இவை நிகழ்ந்தன. சிந்து மாநிலத்தின் துறைமுகமான தேபூலுக்கருகில் கைப்பற்றபட்ட கப்பலொன்றைச் சிந்துவின் அரசர் தாகீர் திருப்பித் தர மறுத்ததற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே முகமது பின் காசிமின் படையெடுப்பு நிகழ்ந்தது. எனினும் பல தெய்வ, உருவ வழிபாடுகளை மேற்கொண்டிருந்த இந்திய நாட்டைத் தாக்கி, வென்று, முஸ்லீம் மதத்தை இங்கு நிறுவுதலும் அவர்களது குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது. முகமுது பின் காசிம் உறஜ்ஜாஜுக்கு விடுத்த மடல் ஒன்றில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

தாகீர் அரசரின் மருமகனும் படை வீரர்களும் முக்கிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். புறச்சமயிகள் பலர் மாறினர்; மாறாதோர் கொல்லப்பட்டனர். விக்கிரக வழிபாட்டுக் கோயில்களுக்குப் பதிலாக மசூதிகளும் வழிபாட்டிடங்களும் நிறுவப்பட்டு உரியகாலங்களில் குத்பா ஓதிவழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலையும் மாலையும் தக்பீரும் எல்லாம் வல்ல இறைவனின் புகழும் முழங்கின்றன.

சிந்து அரசின் தலையோடு அனுப்பப்பட்ட இக்கடிதத்துக்குப் பதிலாக உறஜ்ஜாஜ் எழுதியதாவது:

“பகைவர், நண்பர் என்ற வேறுபாடோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடோ காட்டாமல் மக்கள் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும். புறச்சமயிகளுக்கு இடங்கொடாதீர், அவர்களது தலையை வெட்டுக என இறைவன் கூறுகிறார். இறைவனின் இவ்வாணையை உணர்க, அதன்படி எதிரிகளுக்குத் தாராளமாகப் பாதுகாப்பளித்துக் கொண்டே போனால் உமது பணிநீளுமென்பதையுணர்ந்து நம்மைச் சாராத எதிரிகளுக்குச் சற்றும் இடங்கொடாதிருப்பீராக.”
 

முகமது கஜினியும் தமது பலபடையெடுப்புகளை, புனிதப் போர்களாகவே கருதினார். இவரது வரலாற்றாசிரியரான அல்உத்பி இவரது படையெடுப்புகளைக் குறித்து எழுதுவதாவது:

“அவர் உருவ வழிபாட்டுக் கோயில்களை அழித்து இஸ்லாத்தை நிறுவினார். நகரங்களைக் கைப்பற்றி மூட நம்பிக்கையும் உருவ வழிபாடும் கொண்ட ஈனர்களைக் கொன்று முஸ்லீம்களுக்குத் திருப்தியளித்தார். தாய்நாடு திரும்பி இஸ்லாத்துக்காகத் தாம் பெற்ற வெற்றிகளை விவரித்ததுடன் ஆண்டுக்கொரு முறை இந்தியா மீது புனிதப் போரை மேற்கொள்வதாகவும் உறுதிபூண்டார்.”

 

முகமதுகோரியும் தமது இந்தியப் படையெடுப்புகளைப் புனிதப் போர்களாகவே கருதினார். அவரது வரலாற்றாசிரியரான ஹசன் நிசாமி, படையெடுப்புகளைக் குறித்துக் கூறுவதாவது:

“அவர் பலதெய்வ வழிபாடு, உருவவழிபாடு எனும் முட்புதர்களைத் தமது வாள்கொண்டு களைந்து இந்திய நாட்டைப் புறச்சமய அழுக்கு நீக்கித் துய்மைப்படுத்தினார். அவரது அரசாணை வீச்சின் உத்வேகம் ஒரு கோயிலைக் கூட விட்டு வைக்கவில்லை.”
 

தமது இந்தியப் படையெடுப்பின் நோக்கம் குறித்துத் தைமூர் தமது நாட்டுக் குறிப்புகளில் எழுதியுள்ளதாவது:

“(இறைவனின் ஆசியும் அருளும் தமக்கும் தமது குடும்பத்திற்கும் நிறைவாகப் பெற்ற) முகமது நபியவர்களின் ஆணைப்படி, புறச்சமயிகளைப் போரில் வென்று மெய்யான நம்பிக்கையின் பாதைக்கு அவர்களை மாற்றுவதே எனது இந்தியப் படையெடுப்பின் நோக்கம். நம்பிக்கையின்மை, பலதெய்வ வழிபாடு போன்ற அழுக்குகளையும் கோயில்களையும் வழிபாட்டுச் சிலைகளையும் அழிப்பதன் மூலம் களைந்து அந்நாட்டைத் துய்மைப்படுத்துவதில் இறைவனின் நம்பிக்கைக்குத் துணைவர்களாகவும் படைஞர்களாகவும் செயல்படுவோம்.”
 

முஸ்லீம்களின் இத்தைகைய படையெடுப்புகளில் பல முஸ்லீம்களுக்கிடையிலான போர்களும் நிகழ்ந்துள்ளன என்னும் உண்மையை, முஸ்லீம் படையெடுப்புகள் என இவற்றைக் கருதுவதன் மூலம் மறந்துவிடுகிறோம். ஆனால் படையெடுத்து வந்தவர்கள் தார்த்தாரியர், ஆப்கானியர், மங்கோலியர் எனப் பல்வேறு இனத்தவர்கள் என்பதே மெய். கஜினி முகமது தார்த்தாரியர், கோரி முகமது ஆப்கானியர், தைமூர் மங்கோலியர், பாபர் தார்த்தாரியர், நாதிர்ஷாவும் அகமதுஷா அப்தலியும் ஆப்கானியர். இந்தியப் படையெடுப்புகளில், தார்த்தாரியரை அழிக்க ஆப்கானியர் நடத்திய படையெடுப்புகளும் தார்த்தாரியரையும் ஆப்கானியரையும் அழிக்க மங்கோலியர் நடத்திய படையெடுப்புகளும் அடங்கும். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் அனைவரையும் சமய சகோதரத்துவ அன்பால் பிணைக்கப்பட்ட, ஒரே குடும்பத்தவராய்க் கருதுதல் கூடாது. அவர்கள் ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக விளங்கி மாற்றாரைப் பூண்டோடு அழிக்கும் போர்களை நடத்தியுள்ளனர். இவ்வாறு தமக்கிடையே பலபோர்களை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் கூட, இந்து மத நம்பிக்கையை ஒழிக்கும் நோக்கத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருந்தனர் என்பதை நமது கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே இந்திய வரலாற்றுப் போக்கினை ஆராயும்போது, படையெடுப்பாளர்களின் அடிப்படை நோக்கமே, அவர்கள் கையாண்ட முறைகளைவிடப் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

படையெடுப்பில் வென்ற காசிம் முகம்மதுவின் முதல் சமயச் செயலே தேபூல் நகரில் சிறைப்பிடிக்கப்பட்ட பார்ப்பனர்கள் அனைவரையும் சுன்னத் செய்துக்கொள்ளக் கட்டாயப்படுத்தியதே ஆகும். இத்தகைய பலவந்த மதமாற்றத்திற்கு வலுவான எதிர்ப்பு காட்டப்பட்டதால் 17 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர், ஏனையோர், பெண்கள், குழந்தைகள் உட்பட, அடிமைகளாக்கப்பட்டனர். மேலும், இந்துக் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கிடைத்த கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கை அரசாங்கத்துக்கு ஒதுக்கி, மீதியைப் படையினரே பங்குபோட்டுக் கொண்டனர்.

கஜினி முகம்மது தொடக்கத்திலிருந்தே இந்துக்களின் உள்ளங்களில் பீதியைத் தோற்றுவிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர். கி.பி.1001-இல் ஜெய்பால் அரசர் தோற்கடிக்கப்பட்டபோது அவரை அடிமைத்தளையுடன் வீதிகளில் இழுத்துவந்து அவர் அவமானப்படுவதை அரசரது படைத்தலைவர்களும், மகன்களுமே காணச்செய்தார், இதன்வழி புறச்சமயிகளின் பூமியில் இஸ்லாத்தைப் பற்றிய அச்சம் கொடிகட்டிப் பறந்திடுவதையே அவர் விரும்பினார்.

புறச்சமயிகளைக் கொன்றழிப்பது (கஜினி) முகம்மதுவுக்குத் தனியானதோர் இன்பமாகவே இருந்தது. கி.பி.1019-இல் சந்தராய் நகரின்மீது நடந்த படையெடுப்பில் ஏராளமான புறச்சமயிகள் கொல்லப்பட்டனர். முஸ்லீம்கள் கொள்ளைப் பொருள்களோடு எளிதில் திருப்தியடைந்து விடுவதில்லை. சூரியனையும் தீயையும் வணங்கும் புறச்சமயிகளைக் கொன்றுகுவிக்கும் வெறியே கொள்ளை நாட்டத்தைவிட அவர்களிடம் மிகுதியாக இருந்தது. முஸ்லீம் வரலாற்றாசிரியர்கள், இந்துப் படைகளைச் சேர்ந்த யானைகள் அப்படைகளிலிருந்து விலகி இஸ்லாத்தின் சேவைக்காக முஸ்லீம் படைகளுடன் சேர்ந்து வருவதாகக்கூட எழுதியுள்ளனர்.

அடிக்கடி நிகழ்ந்த சமயப் படுகொலைகளால் இந்துக்களின் உள்நாட்டுப் பண்பாடும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக,

முகமது பக்தியார் கில்ஜி, பீகாரை வென்றபோது நிகழ்ந்தவற்றைப் பற்றி தபாகுத்-இ-நசிரி இவ்வாறு எழுதுகிறார்:

“வெற்றியாளர்கள் ஏராளமான செல்வங்களைக் கைப்பற்றினர். அங்கு வாழ்ந்தவர்கள் பலர் மொட்டையடித்திருந்த பார்ப்பனர்கள். அவர்கள் யாவரும் கொல்லப்பட்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய அந்நகரில் ஏராளமான நூல்கள் கிடைத்தன, ஆனால் கோட்டை கைப்பற்றப்பட்டபோது படிப்பறிவுடையோர் யாவரும் கொல்லப்பட்டு விட்டதால் அந்நூல்களின் பொருளை அறிந்து சொல்ல யாரும் கிடைக்கவில்லை.”


 

இப்படையெடுப்பு பற்றிய சான்றுகளைத் தொகுத்துரைக்க முற்படும் டாக்டர் டைடஸ் பின்வருமாறு கூறுகிறார்:

“முந்தைய பேரரசின் (அக்பரின்) ஆட்சிக்காலத்தின்போதே, புறச்சமயிகள் தமது சமயத் தலைமைப்பீடமான காசியில் பல கோயில்களைக் கட்டத்தொடங்கினர். அவை பணிமுற்றுப்பெறா நிலையில் உள்ளனவென வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். புறச்சமயிகள் அவற்றைக் கட்டிமுடிப்பதில் ஆர்வம் காட்டினர். (இஸ்லாம்) நம்பிக்கையின் காவலரான பேரரசர் காசியில் மட்டுமன்றி, தமதாட்சிக்குட்பட்ட ஏனைய இடங்கள் அனைத்திலும் கோயில்களை அழிக்க ஆணையிட்டார். காசி மாவட்டத்தில் 76 கோயில்கள் இடிக்கப்பட்டதாக அலகாபாத் மாநில நிர்வாகம் தெரிவிக்கிறது.”

 

உருவ வழிபாட்டை முற்றுமாக அழிக்கும் இறுதி முயற்சியை அவுரங்கசீப் எடுத்துக்கொண்டார். இந்துக் கோயில்களையும் மா அதிர்இஆலம்கரி என்ற நூலின் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கிறார்:

“தத்தா, மூல்தான், காசி ஆகிய மாநிலங்களில்- குறிப்பாகக் காசியில்- முட்டாள் பார்ப்பனர்கள் மூடத்தனமான நூல்களைப் பள்ளிகளில் கற்பித்து வருகிறார்கள் என்ற செய்தி. கி.பி.1669 ஏப்ரலில் அவுரங்கசீப்புக்கு எட்டியது, முஸ்லீம்களும் கூட இப்பள்ளிகளுக்குச் செல்கின்றனர் எனவும் அவர் அறிந்தார். மார்க்க நெறியாளரான பேரரசர் புறச்சமயிகளின் கோயில்களைக் கடும் நடவடிக்கைகொண்டு ஒடுக்கவேண்டுமென மாநில ஆளுநர்களுக்கு ஆணை பிறப்பித்தார். உருவ வழிபாட்டுப் போதனையும், கடைப்பிடிப்பும் முற்றுமாக நிறுத்தப்பட வேண்டுமென அவரது ஆணை கூறியது…… காசி விசுவநாதர் ஆலயம் தகர்த்தழிக்கப்பட்டதென அரசு அதிகாரிகள் மாமன்னருக்குத் தகவல் அனுப்பினர்.”

 

டாக்டர் டைடஸ் மேலும் வருணிப்பதாவது…

“முகமது, தைமூர் போன்ற படையெடுப்பாளர்கள் புறச்சமயிகளை நயத்தாலும் பயத்தாலும் மதமாற்றம் செய்வதைவிடத் தமது சமயப் போர்வாள் கொண்டு உருவ உடைப்பு, கொலை, கொள்ளை, பிடிபட்டவர்களை அடிமைகளாக்குதல் போன்ற செயல்களிலேயே நாட்டம் கொணடிருந்தனர். ஆனால் நிலையான ஆட்சியாளர்களாக ஆள முற்பட்டோருக்கு, மதமாற்றம் அவசரத் தேவையாயிற்று. நாடு முழுமைக்குமான சமயமாக இஸ்லாத்தை நிறுவுதல் அரசின் அடிப்படைக் கொள்கையாய் உருவெடுத்தது.

முகமதுவைப் போலவே, ஆயிரம் கோயில்களை அழித்தவர் என்று பெரும்பெயரெடுத்த குத்புதீன், பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அடிக்கடி பலவந்தமான மதமாற்றத்தைத் தூண்டியிருக்க வேண்டும். ஒரு நிகழ்ச்சியைச் கூறலாம். அவர் (அலிகாரில்) கி.பி.1194-இல் கோயிலை நெருங்கியபோது விவேகமும் புத்திக்கூர்மையும் கொண்ட படைவீரர்கள் இஸ்லாத்தைத் தழுவினர், ஏனையோர் வாள் வீச்சில் உயிர் இழந்தனர்.”
 

கடுமையான நடவடிக்கைகள் மூலமாக மதமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கு மேலும் ஏராளமான எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. பிரோஸ்ஷா (கி.பி.1351-1388)-வின் ஆட்சிக்காலத்தில் நடந்த பரிதாபகரமான நிகழ்ச்சி ஒன்றைச் சுட்டுவோம், டெல்லியைச் சேர்ந்த முதிய பார்ப்பனர் ஒருவர் தமது வீட்டில் சிலைகளை வைத்து வழிபடுவதாகவும் முஸ்லீம் பெண்களை மதமாற்றத்திற்குத் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவர் வரவழைக்கப்பட்டு நீதிபதிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மூத்தோர்கள் கொண்ட அவைமுன் நிறுத்தப்பட்டார். இது குறித்துச் சட்டம் தெளிவாக இருப்பதாகக் கூறி, அவர் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது எரிக்கப்படவேண்டும் என்று அவை தீர்ப்பளித்தது. மெய்யான சமயமும் சரியான நெறியும் தெளிவுறுத்தப்பட்டும்கூட, அவற்றை அவர் ஏற்க மறுத்ததால், சுல்தானின் ஆணைப்படி உயிருடன் எரிக்கப்பட்டதுடன், சுல்தானின் கடுமையான சட்டங்களையும், அவற்றைச் செயல்படுத்துவதில் அவர் காட்டும் உறுதியையும், அவரது ஆணைகள் சிறிதளவும் வழுவாது நிறைவேற்றப்படுமென்பதையும் நோக்குக என்ற எசசரிக்கையும் விடுக்கப்பட்டது.

 

கோயில்களை அழிப்பதுடன், இந்துக்களை அடிமைகளாக்குவதும் கஜினி முகமதுவின் கொள்கையாக இருந்தது. இதுபற்றி டாக்டர் டைடஸ் கூறுவதாவது:

“இந்தியாவில் இஸ்லாம் நுழைய முற்பட்ட காலத்தின் தொடக்கக் கட்டத்தில் புறச்சமயிகளைக் கொன்றுகுவித்து, கோயில்களை அழித்ததுடன் நிற்காமல் தோல்வியுற்ற மக்களில் பலர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதையும் காண்கிறோம். இப்படையெடுப்புகளில் படைத்தலைவர்களுக்கும் பிறபடை வீரர்கள் யாவருக்கும் கொள்ளையில பங்கு என்பது அவர்களைப் பெரிதும் கவரும் ஓர் அம்சமாக விளங்கியது. புறச்சமயிகளைக் கொன்றுகுவித்தல், கோயில்களை அழித்தல், அடிமைகளைக் கைப்பற்றுதல், மக்களின் வீடுகளில், குறிப்பாகக் கோயில் பூசாரிகளின் வீடுகளில் கொள்ளையடித்தல் ஆகியவையே முகமதுவின் படையெடுப்புகளுக்கு முக்கிய நோக்கங்களாய்த் தோன்றுகின்றன. அவரது படையெடுப்புகளின்போது ஒரு சமயம், அழகிய ஆடவர் மகளிர் சுமார் 5 லட்சம் பேர் அடிமைப்படுத்தப்பட்டு, கஜினிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.”

 

பின்னர், கி.பி.1017-இல் கனோஜியை முகமது கைப்பற்றியபோது அளவிறந்த செல்வத்துடன், எண்ணமுயன்றோர் விரல் சோர்வுறும் அளவுக்கு ஏராளமான கைதிகளையும் கொண்டு சென்றார். அவரது கி.பி.1019-ஆம் ஆண்டுப் படையெடுப்புக்குப் பிறகு கஜினியிலும் மத்திய ஆசியாவிலும் இந்திய அடிமைகள் எவ்வாறு மலிந்திருந்தனர் என்பதை அக்கால வரலாற்றாசிரியர் கூற்றாகக் காண்போம்… “

(தொடரும்…) 

 

முந்தைய பாகங்களின் சுருக்கம்:

இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம்.

இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம். தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.

வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம்.

இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது. இஸ்லாமியப் பெண்களின் கீழ்த்தர துயர நிலை மற்றும் மனநோய் பரப்பும் இஸ்லாமிய மனப்பான்மை போன்றவற்றைப் பற்றி அம்பேத்கரின் கருத்துக்களை பாகம் 15ல் கண்டு தெளிவு அடையலாம். பதினாறாம் பாகத்தில் இஸ்லாம் எப்படி சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதைக்கும், முன்னேற்றத்திற்கும் எதிரான பிற்போக்கான மதம், ஏன் அவ்வாறு வளர்ச்சியை எதிர்க்கிறது, பகுத்தறிவுக்கு விரோதமான ஷரியா சட்டம், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள பிரச்னை ஆகியவற்றை அலசுகிறது.பாகம் 17 இஸ்லாத்தில் தேசபக்திக்கு இடமுண்டா என்பதைப் பற்றியும், தலித்துகளின் தேசிய கண்ணோட்டத்திற்கான அவசியத்தைப் பாகம் 18-இல் இஸ்லாம் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது, அதன் தலைவர்கள் எவ்வாறெல்லாம் முரண்படுகிறார்கள் என்றும் பார்த்தோம். பாகம் 19-இல் (இஸ்லாமிய) மதமாற்றாத்தால் தேசிய உணர்வு, தேச பக்தி அழிவது குறித்துப் பார்த்தோம். பாகம் 20 தொடங்கி 21,22-ஆம் பகுதிகளில்  இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டுவதன் அவசியம், அதனால் மட்டுமே சாத்தியமாகக்கூடிய இந்தியாவின் பாதுகாப்பு, இஸ்லாமியர்களின் இந்துஅரசுக்கான கீழ்ப்படியாமைக் குணம் ஆகியவை குறித்து அம்பேத்கர் தீவிரமாக முன்வைக்கும்  கருத்துகளைப்  பார்த்துவருகிறோம்… 

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 || பாகம் 16 || பாகம் 17 || பாகம் 18 || பாகம் 19 || பாகம் 20 || பாகம் 21 || பாகம் 22