பன்றி வளர்ப்பின் சிறப்பும் சமையல் குறிப்புகளும்

pork_steaksபன்றிக்கறியைச் சாப்பிடுபவர்களிடம் கேட்டால், பன்றிக்கறியின் சுவைக்கு ஈடு இணை இல்லை என்றுதான் சொல்வார்கள். இத்தனைக்கும், ஆடு, மாடு கறிகளை விட கொழுப்பில் குறைவானதாக இருக்கும் பன்றிக்கறி சுவையில் மிகுந்திருப்பது உண்மை.

Price of priligy in kenya (ksh): 1,700 (as of 2017) (rs). Our site Malakanagiri get clomid online is designed for you, the priligy in singapore is looking for your priligy in singapore. I have never experienced a bad or uncomfortable side effect.

It is a rare occasion when you come across such a rare opportunity for any treatment, whether it is the treatment of anxiety, depression, diabetes or stress. The new report, which will clomid price in naira be released to the public in a conference call tuesday, also indicates that millions of people living with mental illness are not getting. Methylphenidate is used to treat the symptoms of attention deficit/hyperactive disorder and is used to increase attention in children.

The mics of clarithromycin (0.125-64 mg/l) and oflox. The third clomid price cvs Workington is to look at your family medical history. It should not be combined with any other medicine or dietary supplement, even over-the-counter medicines.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இந்துக்களால் விரும்பி சாப்பிடப்படும் ஓர் உணவு பன்றிக்கறி. சுமார் 7000 வருடங்களுக்கு முன்னரே இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பன்றிகள் பன்றிக்கறிக்காக வளர்க்கப்பட்டுள்ளன என்பது அகழ்வாராய்ச்சிகளில் தெரியவருகிறது [1]. மனிதர்களால் முதன் முதலில் உணவுக்காக வளர்க்கப்பட்ட மிருகம் பன்றிகளே என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனித வரலாற்றின் ஆரம்பத்தில், பன்றிகள் கிழங்குகளைத் தோண்டி எடுக்க காடுகளில் மனிதர்களுக்கு உதவியிருக்கின்றன. அவை பூமியை கிழங்குக்காக நோண்டிப் போட்ட பின்னால், அந்த நிலங்களில் உழுவது எளிதாக ஆகிறது. தாவரங்களையும் சிறு விலங்குகளையும் பன்றிகள் தின்பதால், பன்றிகள் இருக்கும் பழங்குடி கிராமங்கள் சுத்தமானவையாக ஆகின்றன.

இன்றும் உலகத்தில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவுகளில் ஒன்று பன்றிக்கறியாகும். உலகத்திலேயே மிக அதிகமாக பன்றிக்கறி உண்ணும் நாடு சீனா. அங்கு 52.5 மெட்ரிக் டன் அளவு பன்றிக்கறி உண்ணப்படுகிறது. இது அங்கு ஒரு ஆளுக்கு 40 கிலோ அளவாகும். அதற்குப் பின்னரே ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்க ஐக்கிய நாடுகளும் வருகின்றன. பசிபிக் தீவு, தென் கிழக்காசியா (லாவோஸ், வியட்நாம், தாய்லாந்து பிலிப்பைன்ஸ்) ஆகிய நாடுகளில் மிகவும் விரும்பி சாப்பிடப்படுவது பன்றிக்கறிதான். பன்றிக்கறியே அந்த நாடுகளின் முக்கிய உணவு.

இந்திய அரசு பன்றிப் பண்ணைகளில் கவனம் செலுத்தி அவற்றில் குறைந்த செலவில் விவசாயிகள் மிகுந்த லாபம் ஈட்டலாம் என்பதனை அறிவுறுத்தி வருகிறது. [2]

பன்றிக்கறி மூலம் செய்யப்படும் ஏராளமான உணவு வகைகள் இந்தியாவில் புழங்குகின்றன. மேலை நாட்டு உணவில் மிக முக்கியமான ஓர் உணவு பன்றிக்கறி. இத்தாலிய ‘புரோசிட்டோ’ (Prosciutto)* எனப்படும் பன்றிக்கறி அனைவராலும் மிகுந்த சுவை மிகுந்ததாகப் பாராட்டப்படுகிறது.

மேலை நாடுகளில் பன்றிக்கறி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டுக்கறி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. இதில் கோழிக்கறியை விட மையோக்லோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டுக்கறியைவிட மிகவும் குறைவு. மையோக்லோபின் என்ற இந்த புரோட்டீனே கறிக்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது. கறி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது. இதன் காரணம் மையோக்லோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்லோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குக் கெடுதி என உணரலாம்.

 

நூறு கிராம் பன்றிக்கறியில் உள்ள சத்துகள் (Nutritional Value per 100 g)

Energy 1,013 kJ (242 kcal)
Carbohydrates 0.00 g
Sugars 0.00 g
Dietary fiber 0.0 g
Fat 13.92 g
saturated 5.230 g
monounsaturated 6.190 g
polyunsaturated 1.200 g
Protein 27.32 g
Tryptophan 0.338 g
Threonine 1.234 g
Isoleucine 1.260 g
Leucine 2.177 g
Lysine 2.446 g
Methionine 0.712 g
Cystine 0.344 g
Phenylalanine 1.086 g
Tyrosine 0.936 g
Valine 1.473 g
Arginine 1.723 g
Histidine 1.067 g
Alanine 1.603 g
Aspartic acid 2.512 g
Glutamic acid 4.215 g
Glycine 1.409 g
Proline 1.158 g
Serine 1.128 g
Water 57.87 g
Vitamin A equiv. 2 μg (0%)
Vitamin B6 0.464 mg (36%)
Vitamin B12 0.70 μg (29%)
Vitamin C 0.6 mg (1%)
Vitamin K 0.0 μg (0%)
Calcium 19 mg (2%)
Iron 0.87 mg (7%)
Magnesium 28 mg (8%)
Phosphorus 246 mg (35%)
Potassium 423 mg (9%)
Sodium 62 mg (3%)
Zinc 2.39 mg (24%)

pig-farmதற்போது சுகாதார முறையில் பன்றி வளர்ப்பது தமிழ்நாட்டில் பரவி வருகிறது [3]. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ரங்கபிரபு பல ஏலக்காய்த் தோட்டங்களையும் தென்னந்தோப்புகளையும் பராமரித்து வந்தாலும் திடீரென்று அவரது தென்னை மரங்கள் பட்டுப்போக ஆரம்பித்தன. எவ்வளவுதான் விவசாய அறிவியலறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வேதிப்பொருள்களைத் தெளித்தாலும், பட்டுப்போவது நிற்கவில்லை. அவர் 100 பன்றிகளை வளர்த்து வந்தார். அவரது பன்றிகளின் கழிவுகளை தோப்புகளுக்கு வெளியே கொட்டி வந்தார்கள். அதனை நிறுத்திவிட்டு, அந்த பன்றிக்கழிவையே தென்னைகளுக்குப் போட ஆரம்பித்தார். பட்டுப்போயிருந்த தென்னைகள் கூட துளிர்விட்டு செழுமையாக வளரத்துவங்கின. பொதுவாக 60 காய்களைத் தரும் தென்னைகளில் கூட பிறகு 100-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் காய்க்க ஆரம்பித்தன. ஏலக்காய் தோட்டங்களிலும் இதே முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அங்கும் பசுமை தலைகாட்ட ஆரம்பித்தது. தோட்டங்கள், விவசாயப் பண்ணைகளின் ஓர் இன்றியமையாத அங்கமாக பசுப் பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை வைப்பதும் அவற்றின் கழிவுகளை இயற்கை உரமாக செடிகொடி மரங்களுக்குப் போடுவதும் இன்றியமையாதது.

எல்லா மாமிசங்களைக் கையாள்வதும், சாப்பிடுவதையும் போலவே பன்றிக்கறியிலும் செய்யவேண்டும். நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி ஆகியவற்றை நன்றாக வேகவைத்து சமைத்து உண்பது போலவே பன்றிக்கறியையும் சமைத்து உண்ண வேண்டும். ஒரு சிலர் பன்றிக்கறியில் மட்டும் புழு இருக்கிறது; நாடாப்புழு இருக்கிறது என்று சொல்லி பன்றிக்கறியை சாப்பிடக்கூடாது என்பது போலச் செய்து வைத்துள்ளார்கள். அது உண்மையல்ல. எல்லாக் கறிகளும் சுகாதாரத்துடனேயே கையாளப்பட வேண்டும். எந்தக் கறியையும் சுகாதாரமின்றி கையாண்டாலோ முழுவதும் சமைக்காமல் இருந்தாலோ சுகாதாரக்கேடுதான். முன்பு மேலை நாடுகளில் பன்றி சுகாதாரமின்றி சமைக்கப்பட்டதால், Trichinosis என்ற வியாதி மிகவும் பரவலாக இருந்தது. நாடாப்புழு என்ற ஒட்டுண்ணி, சரியாக சமைக்கப்படாத பன்றிகறியிலிருந்து மனித குடலில் ஒட்டிக்கொள்வதால் வரும் வியாதியே Trichinosis என்ற இந்த வியாதி. இது தற்போது மேலை நாடுகளிலேயே மிகவும் அரிதாக ஆகிவிட்டது. மேலை நாடுகளில் முழுவதுமாக சமைக்காத பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றை சாப்பிடும் பழக்கம் தற்போதும் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முழுவதுமாக வேகவைத்து சமைக்கப்பட்ட உணவையே நாம் உண்பதால், இந்த பிரச்சினை இல்லை. ஆகவே இப்படி பயமுறுத்துபவர்களின் பொய்களுக்குப் பலியாகவேண்டாம்.

சுகாதாரமான முறையில் வளர்க்கப்பட்டு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்ட பன்றிக்கறி சுவை மிக்கது.

===

மேலும் படிக்க இணைப்புகள்:

[1] http://www.admin.ox.ac.uk/po/050311.shtml

[2] http://www.indg.in/agriculture/animalhusbandary/agriculture/on-and-off-farm-enterprises/agri-onnoff-piggery

[3] தேனி மாவட்டம், புதுப்பட்டியில் பன்றிப் பண்ணை மூலம் வெற்றி ஈட்டிய பண்ணையாளர் ரங்கபிரபு பற்றிய செய்திக் குறிப்பு-
http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/Pig-Farming-Success-Story.pdf

===

சில சுவையான பன்றிக்கறி செய்முறைகள்

1. கோவா பன்றிக்கறி விண்டலூ

இது கோவாவின் பிரசித்தமான விண்டலூ. இதனை சாதாரண சாதத்துடனோ, அல்லது சீரக சாதத்துடனோ கலந்து சாப்பிடலாம். கூடவே கீரைப் பொரியல் வைத்துக்கொள்வதும் நன்றாக இருக்கும்.

goan-pork-vindalooதேவையான பொருள்கள்

பன்றிக்கறி – 1 கிலோ
விண்டலூ மசாலா** – 8 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது)
இஞ்சி விழுது – 2 மேஜைக்கரண்டி
நாட்டுச் சர்க்கரை – 1 தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 6
நல்லெண்ணெய் – 3 மேஜைக்கரண்டி (அல்லது சமைக்க தாவர எண்ணெய்)
உப்பு – ருசிக்கேற்ப
தண்ணீர் – தேவைக்கேற்ப

** விண்டலூ மசாலா செய்ய–

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம் – 2 (வெட்டியது)
பெரிய தக்காளி – 3 (நறுக்கிக்கொண்டது)
பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
இஞ்சி விழுது – 1 மேஜைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கருமிளகு – 7
வெள்ளை வினிகர்

செய்முறை: வினிகர் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, அவ்வப்போது வினிகர் சிறிதளவு விட்டு கெட்டியான விழுதாக ஆகும் வரைக்கும் அரைத்துக்கொள்ளுங்கள். விண்டலூ விழுது ரெடி.

இது பன்றிக்கறி விண்டலூ செய்வதற்கு உபயோகப்படுத்திகொண்டாலும், இதே செய்முறையில் கோழிக்கறி விண்டலூ செய்யவும் சுவையானதாக இருக்கும்.

செய்முறை

 • பன்றிக்கறியை கொழுப்பு நீக்கிவிட்டு, விரலளவு சதுரங்களாக வெட்டிகொள்ளவும்.
 • வெட்டிய கறியை விண்டலூ மசாலாவுடன் கலந்து 24 மணிநேரம் ஊறவைக்கவும்.
 • அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும்.
 • அத்துடன் இஞ்சி விழுது, பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
 • பின்னர் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
 • இதன் மீது கறியை மட்டும் சேர்க்கவும். கூடவே நீராக இருக்கும் மசாலாவை இப்போது சேர்க்கவேண்டாம்.
 • கறி நன்கு பழுப்பாக ஆகும்வரைக்கும் வதக்கியபின்னர், இப்போது மசாலாத் தண்ணீரைச் சேர்க்கவும்.
 • மேலும் ஒரு கோப்பை தண்ணீரும் ருசிக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
 • குறைந்த தீயில் கறி மிருதுவாக ஆகும்வரை வேகவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

===

சுவையான பன்றிக்கறி (கேரளா)

kerala-pork-curryதேவையான பொருள்கள்

பன்றிக்கறி – அரைக்கிலோ
வினிகர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1 (நீளமாக அரிந்தது)
இஞ்சி – ஒரு தேக்கரண்டி (நீளமாக அரிந்தது)
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
பட்டை – 2
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பூண்டு – 12 பற்கள்
எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி

 

செய்முறை

 • கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.
 • ஒரு பிரஷர் குக்கரில் கறியோடு, வினிகர், உப்பு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, தண்ணீர் சிறிது சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடுங்கள்.
 • விசில் வரும்வரை வெந்தவுடன் அதிகமாக இருக்கும் தண்ணீரை வடித்துவிடுங்கள்
 • அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 • இத்துடன் வேகவைத்த கறியை சேர்த்து, காய்ந்து பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

இதனை ரொட்டி, சப்பாத்தி, ஆப்பம் ஆகியவற்றுடன் சாப்பிடலாம். மிகுந்த சுவையாக இருக்கும்.

===

prosciutto* ஸ்பெயினில் பன்றித் தொடையை உப்புக்கண்டம் போட்டு ஊறவைத்து ஒரு வருடத்திற்கும் மேலாய் சுவற்றில் மாட்டி விடுகிறார்கள். அதன் நீரெல்லாம் வடிந்து போன தொடை மாமிசத் தொங்கல்கள் ஒவ்வொரு ஹோட்டலினுள்ளும் நுழைந்தவுடனேயே சுவற்றில் மாட்டப்பட்டுள்ளன. எக்கச்சக்க விலை. அதை ஸ்லைஸாய் அறுத்து தர ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடலாம். கூடவே ஸ்பானிஷ் ரெட் வைனும் இருந்தால் விசேஷம். அதன் பெயர்தான் புரோசிட்டொ (Prosciutto).