தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

ஸ்ரீநாதமுனிகள் காலத்தில் ஆகமங்களுக்கும், வேதாந்தத்திற்கும் இணைப்பான கருத்தியல் அடிப்படைகளை ஆய்வதே பெரும் பணியாக இருந்திருக்கிறது. யோகம் என்பதுதான், உணர்ச்சிகள் வழியிலும் போகாமல், வெறும் வேதாந்த விவாதங்களுடன் நிறுத்திக் கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் அக உலகின் அத்தாட்சியாக ஏதாவது அனுபவங்களை அடைய நினைப்போரின் புகலிடமாக இருந்திருக்கிறது. ஸ்ரீநாதமுனிகளும் ‘யோகரஹஸ்யம்’ என்ற நூல் எழுதியிருந்ததாகவும், அது என்ன காரணத்தாலோ பின்னர் அரிதாகி மறைந்து போயிற்று என்று குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநாதமுனிகளுக்கே பெரும் கண்டுபிடிப்பாக அவர்தம் காலத்தில் இருந்தது ஆழ்வார்களுடைய பாடல்களான நாலாயிர திவ்ய பிரபந்தம். ஆகமமா, வேதாந்தமா, யோகமா என்று இருந்த ஒரு வேதாந்தி ஏன் தமிழ்ப் பாசுரங்களை, அதுவும் அகத்திணை இலக்கணத்தில் எழுதப்பட்ட கோவை இலக்கியம் போன்ற அந்தாதி நூல்களை மிக முக்கியமானவை என்று கருதினார், அதுவும் தம் வாழ்நாளின் முழுதையும் அர்ப்பணிக்கத் தகுந்ததான சீரிய பெருந்தனமாக ஏன் கொண்டாடினார் என்பதெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சங்கள்.

If the cost of your dapoxetine 60 mg price in pakistan is a problem, then please contact the pharmacy that gave you the drug. I was having fun with my clomiphene for a week until i stopped Lara clomid tablet buy online my cycle on monday and then the rest of my cycle stopped on thursday. The condition is characterized by kidney damage caused by the breakdown of the kidneys' filters that remove waste from the blood stream.

The medicine may also interact with other prescription and over-the-counter medications, as well as herbal products. Acetaminophen online order can save you a lot from paying for expensive wham glyciphage 500mg price medical treatment. It does not cause any kind of addiction and does not cause any kind of damage to the individual.

Clomid online overnight delivery in the us the following text is intended for informative purposes only. In mice, clomid for men for sale conversationally doxorubicin is an extremely potent carcinogen and has been shown to be teratogenic in rats. It’s not recommended to use hyaluronic acid as a daily moisturizer.

பக்திக்கும், வேதாந்தத்திற்குமான பொது கருத்தியல் அணுகுமுறை ஸ்ரீநாதமுனிகளின் காலத்திற்கு முன்னரே ஆழ்வார்களின் காலத்திலேயே, சிறப்பாக நம்மாழ்வார் என்னும் ஸ்ரீசடகோபர் என்ற புலவராலேயே மிகத் திறமையாகக் கவிதைக் குறிப்புகளின் செறிவால் ஆன வடிவில் தரப்பட்டுவிட்டது. வேதாந்திகளும், ஆகமங்களில் கரைகண்ட சான்றோர்களும், யோக நெறி பயிலும் முனிவரர்களும் பன்னெடுங்காலம் கண்டெடுக்கப் பாடுபட்ட மீப்பொது கருத்தியல், வேதாந்தத்திற்கும், பக்திக்குமான கருத்திணக்கம் மிக அழகான பாசுரங்கள் வடிவில் நம்மாழ்வார் அளித்த இந்தக் கருத்தியல் கொடைதான் பிற்காலத்தில் வேதாந்த ஸூத்ரங்களுக்கு விரிவுரை எழுதப்புகுந்த ஸ்ரீராமானுஜருக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது என்பதை 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவர் தமது ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ‘இவர் உரைகொள் இன்மொழி கொண்டு சாஸ்த்ரார்த்தங்கள் நிர்ணயிக்க வேண்டுகையாலே’, ‘பாஷ்யக்காரர் இதுகொண்டு ஸூத்ர வாக்யங்கள் ஒருங்க விடுவர்’ (ஆசாரிய ஹ்ருதயம், முதல் பிரகரணம், சூர்ணை64, 65) வேதாந்த அறிவுநெறியின் அணுமுறைத் தெளிவும், பிரமாண நிஷ்கர்ஷமும் நம்மாழ்வாரால் மிக எளிமையான தமிழில் எடுத்துக்காட்டப்படுவது வியத்தற்குரிய ஒன்றாம்.

உதாரணமாக வேதாந்தம் கடவுள் என்ற கருதுகோளைப் பற்றிச் சுருதி, வேதம் என்ற சூழலுக்குள்ளேயே தேட்டம் நடைபெற வேண்டும், அறிவைக்கொண்டு, பிரத்யக்ஷம், அனுமானம் என்ற அளவைகளைக் கொண்டு அன்று என்று கூறுவதை நம்மாழ்வாரின் ஈரச்சொல் பேசுகிறது, ‘உளன் சுடர் மிகு சுருதியுள்’. சாஸ்திர திருஷ்டி, ஞானக்கண், நேரடிக்காட்சி போன்று அடர்த்தியான மானஸ சாக்ஷாத்காரம் என்பதை நம்மாழ்வார் கூறுவது கடவுள் காட்சியைப்பற்றி, ‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’. விசிஷ்டாத்வைதம் மொத்த உலகையும் ஒரு பெரும் உடலாகப் பார்க்கிறது. அதனுள் உயிராய் விளங்குவது பரம்பொருள் என்று கூறுகிறது. சடகோபனின் செழுந்தமிழ் அதே கருத்தை, ‘உடல் மிசை உயிரென கரந்தெங்கும் பரந்துளன்’ என்று கூறுகிறது. இவ்வாறு ஆழ்ந்த சிந்தனை வேகங்களை ஏற்படுத்தும் குறிப்புகள் ஆழ்வார்களின் பாடல்களில், நம்மாழ்வாரின் பாசுரங்களில் நிறைந்து கிடப்பதை முதன்முன்னம் கண்டு வியந்து, அதனாலேயே தம் வாழ்வு அனைத்தையும் ஆழ்வார்களின் பாடல்களை மீட்டெடுப்பதிலேயே அர்ப்பணித்தவர் ஸ்ரீநாதமுனிகள். அந்தப் பாடல்களுக்கு அவர் கண்ட ஆழங்களின் விளக்கச் சுடர், அடுத்து வந்தோரால் நினைவில் ஏந்தப்பட்டு, ஸ்ரீராமானுஜர் காலத்தில் பெருவிளக்கம் கண்ட பீடுகெழு சான்று நூலாய்த் துலங்கியது. இதன் காரணமாகவே ஈன்ற முதல் தாய் சடகோபன் என்றும் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் என்றும் அறிஞர் உலகம் போற்றியது.

நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. பாதி சாத்திரப் படிப்பும், பாதி நம்பிக்கையும், பாதி உணர்ச்சியும், பாதி எதிர்பார்ப்பும் என்று கருத்தியல் குழப்பங்களே உலவிய காலத்தில்தான் காரிமாறனின் கவனத்தில் தமிழும், வேதாந்தமும், ஆகமங்களும், பக்தியும், கோவிலும் ஒருசேரக் குவியப் பெற்று தமக்கான கண்டெடுப்பும், தெளிவும், தேற்றமும் பெறுகின்றன. பொருளதிகாரத்தின் விழுமிய உயிர்நிலையாம் அகத்திணை இலக்கணம் எனப்படும் தமிழ் என்பதை கண்டெடுத்ததில் ஆழ்வாரின் பங்கு என்பது குறித்து யோசிக்கும் பொழுது தமிழின் அகத்திணை இலக்கணத்தைப் பரம்பொருளை நோக்கி எழும் பக்தியின் வடிவில் புனரமைத்துக் காட்டிய வெற்றி செந்தமிழ் வேதியனாம் சடகோபனின் பங்களிப்பு என்பதை மிக விரிவாக நமக்கு நிரூபித்துக் காட்டுகிறது அழகியமணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய (13 ஆம் நூற்) ‘ஆசாரிய ஹ்ருதயம்’ நம்மாழ்வாரின் பெரும் சாதனை, வேதாந்தத்தையும், பக்தியையும் முரண்பாடின்றி கோத்ததுதான் என்றால் அவர் வழியொற்றி எழுந்த பக்தி மதம் எத்தகைய தத்துவ அடிப்படையில் அமைந்தது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மாழ்வாரின் ‘நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’, ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்ற கூற்றுகளும், அவற்றை அடியொற்றி எழுந்த மற்ற ஆழ்வார்களின் கருத்துகளும். பெருக்கெடுக்கும் பக்தி உணர்ச்சியின் வேகமும் குறையாமல், அதேநேரத்தில் இயல்பாக வேதாந்த அறிவு நெறிக் கோட்பாடுகளில் எந்தப் பிறழ்வுமின்றி அமைந்திருக்கும் ஆழ்வார்களின் பரபக்தி, பரஞான, பரமபக்தி தசைகளைப் பற்றிப் பேசப் புகுந்த ஆசார்ய ஹ்ருதயம், ‘கண்டேன் என்ற பத்தும் உட்கண்ணாலே’ என்று விளக்குகிறது. அந்தப் பகுதிக்கு மிக அழகான விளக்க உரை எழுதும் ஸ்ரீமணவாள மாமுனிகள், நம்மாழ்வார் தொடங்கி இன்று வரையில் வேதாந்த நெறியைப் பிறழாது பல்கிப் பெருகும் பக்தி வேகத்திற்குக் கட்டளைக்கல்லாய் அமைந்த சொற்களிட்டு எழுதுகிறார், ‘(கண்டேன் என்று வரும் திருவாய்மொழியின்) இப்பத்துச் சந்தையாலும் சொன்ன ஸாக்ஷாத்காரம் நெஞ்சென்னும் உட்கண்ணென்கிற ஆந்த்ர சக்ஷுஸ்ஸான மநஸ்ஸாலே உண்டானது’ ‘அப்படி தர்சித்த அதுதான் மாநஸ அனுபவமாய், பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமையாலே..’ (ஆசார்ய ஹ்ருதயம், நான்காம் பிரகரணம், 230-12, 232, ஸ்ரீமத் வரவரமுநீந்த்ர க்ரந்தமாலை, ஸ்ரீகாஞ்சீ பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராச்சாரியர் பதிப்பு, 1966) (ஆந்த்ரம்–உள், சக்ஷ¤ஸ் – கண், ஸாக்ஷாத்காரம் – காட்சி, பாஹ்ய அனுபவ யோக்யம் அல்லாமை — புறக்காட்சியாக அடைய முடியாத தன்மை.

அகத்திணை இலக்கணத்தில் துறை போய ஒரு தமிழ்ப் புலவர், வேதாந்த, ஆகம, புராண, இதிகாசக் கல்விகளின் பலனாய்ப் பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடத்தில் மிகச் சிறு வயதிலேயே தம் உள்ளம் முற்றும் இழந்து காதலாகி, அந்த பக்தி நெகிழ்வில் ஆற்றாமை விஞ்சப் பாடிய பாடல்கள், பெரும் சம்ஸ்க்ருத வித்வான்களாய் இருந்த வேதாந்தப் பண்டிதர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்பட்டு, விசிஷ்டாத்வைத ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் என்ற மதத்திற்கே மூலப் பனுவலாக ஆகி நின்ற நிலை நினைக்கும் தோறும் வியப்பு மேலிடுகின்ற ஒன்றாம். வேதாந்தத்திற்கும் பக்திக்குமான, பொது கருத்தமைப்புக்கான இணைப்பு என்ன என்று தேடிக் கொண்டிருந்த வித்வான்களுக்கிடையில், அத்தகைய பொது கருத்தமைப்பு மிகச் சரியான முறையில் அமையப் பெற்றும், அதனோடும் நில்லாது பக்தியுள்ளம் கடல் புரையப் பொங்கி, புறம் பொசிந்த ஈரத் தமிழ்த் தெய்வக் காதல் பனுவலாய் நினைவில் நிறுத்தும் வகையில் அந்தாதித் தொடையிலும் அமைந்து வரும் பொழுது, தவித்த வாய்க்குப் தண்ணமுதாய் அமைந்திருக்கும்.

சங்க காலத்துப் புலவர்க்கும் வேதாந்தம் எனப்படும் உபநிஷதங்களின் தத்துவ ஆய்வுகளின் நுட்பங்களும், அவை எழுப்பும் அறிவு நெறி சார்ந்த அணுகுமுறையின் கோட்பாடுகளும் நன்கு தெரிந்திருந்தாலும் சிந்தையும், சொல்லும் செல்லா நிலைமைத்தாகிய அந்நிலைக்கு நற்பயிற்சியாக வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் யாங்ஙனம் என்பது பற்றிச் சிந்தித்தனர். அறத்தின் வழிப்படும் வாழ்வும், பொருளீட்டும் நெறிப்படும் முயற்சியும், நல்ல இன்பத்தை மனிதன் நயந்து துய்த்தலில்தான் முழுமை பெறுகிறது என்று கருதினர். நல்ல இன்பம் என்பதை அவர்கள் மிக அக்கறையான கருத்தாகவே அணுகினார்கள். எது இலக்கியக் காதல்? எது இலட்சியக் காதலோ அதுவே இலக்கியக் காதல். நற்குணங்கள், நல்வாய்ப்புகள் இவற்றில் ஒத்த தலைவனும், தலைவியும், பால்வரை தெய்வத்தின் காரணமாக, யதேச்சையாக, தம்முள் ஒருவரை ஒருவர் எதிர்பட்டு, இன்னதென்று விளக்கலாகா காரணத்தால் காதல் வயப்படுதல். இதில் இலட்சியத் தன்மையாவது குணநலன்கள் நிறைந்து, ஒத்த தலைவனும் தலைவியும் இயற்கையில் எதிர்ப்பட்டுத் தம்முள் ஒருவரை ஒருவர் கண்டடைதல் என்பது ஏதோ அன்றாடம் நடந்துவிடும் ஒன்றன்று.

சங்கப் புலவர்கள் கவிதையில் இந்த இலட்சியக் காதலுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர். களவியல், பின்பு கற்பாகிய மணவினையின் மூலம் ஊரறிய இல்லறமாக மலர்தல், நன்மக்கட் பேறு என்பதில் கனிந்த பயன் அடைதல். தலைவனுக்கும், தலைவிக்கும் இடையில் ஏற்படும் அகநிலை சார்ந்த உணர்ச்சிகளும், அதன்வழீஇய ஒழுக்கங்களும் அன்பு நிலை தவறாத ஐந்து விதங்களில் அமையக் கூடும். நெருக்கம், பிரிதல், நெருக்கத்திற்காகக் காத்து இருத்தல், பிரிவில் இரங்கி காத்திருத்தல், சேர்ந்த நிலையில் ஊடலுக்கான பல காரணங்களைக் கல்பித்துக் கொள்ளுதல், அவை தணிந்து பின் கூடுதல் ஆகிய இந்த அக ஒழுக்கங்களை அன்பின் ஐந்திணை குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற நிலப் பெயர் குறியீட்டால் வழங்கினர். எந்த வித அன்பின் கேடும் கூற இயலாத இலட்சியக் காதல் வாழ்வு என்பதால் இதை அன்பின் நிலை வழாஅத ஐந்திணை என்று குறிப்பிட்டனர். இந்த இலட்சியக் காதல் சித்திரத்தையே, இதற்கான இலக்கணத்தையே சங்கப் புலவர்கள் தமிழின் சிறப்பாகக் கருதினர். அகத்திணை என்பதைத் தமிழ் என்று குறிக்கும் வழக்கமும் சங்கத்தைத் தொடர்ந்த காலத்திலும் நிலவியது. ‘இல்லது, இனியது, நல்லது’ என்று அகத்திணையை மீட்டுருவாக்கம் செய்த இறையனார் களவியல் காலத்தும் தமிழ் என்பது அகத்திணை இலக்கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

பொதுவாகத் தமிழின் பொருளதிகாரமே, அதிலும் அகத்திணையியல், புறத்திணையியல் என்பதே பெரும் குறியீட்டு நுட்பங்கள் செறிந்த இயலாகத்தான் இருந்திருக்கிறது. ஆண்பெண் கூட்டுவாழ்வின் பிரபலமான வகைப்பாடுகளை பெருந்திணையின்பாலும், கைக்கிளையின்பாலும் ஒதுக்கிவிட்டு ஓர் இலட்சிய ஆணும் ஓர் இலக்கியப் பெண்ணும் தம்முள் செம்புலப் பெயல் நீர் போன்ற காதல் என்பதையே சங்கப்புலவர்களின் கற்பனை அரங்கேற்றியது. அன்பின் தவிசில் போதலரும் ஓர் ஐயிதழ்ப் புங்கவமாய்க் காதல் என்ற உயிர் இலட்சியத்தை அதன் நுண் அதிர்வுகள் பொடியாமல் மலர ஏந்தும் மாட்சியே சங்கப் புலவர் காட்டிய திணை, நிலமும், நெறியும், ஒழுக்கமும், பண்பும், மனப்பாங்கும் கலந்த எழிலுருவாய் நிற்கின்றன. இந்த இலக்கிய உலகின் இலட்சிய ஆவேசத்தை முழுதும் அங்குரித்துப் பிறந்தவர்கள் ஆழ்வார்கள்.

சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் நம்மாழ்வாரும், அவரடியொற்றி வந்த பெருமக்களும்.. ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களைத் திராவிட வேதம் என்கிறது திருமாலின் வரவாறு. அதற்கு எழுந்த வியாக்கியானங்களையும், அதன் கருத்துகளைத் திரட்டித் தந்த சூர்ணைகளையும், அவற்றினை விளக்க வந்த விரிவுரைகளையும் திராவிட வேதாந்தம் என்றும் கூறுகிறது. இது ஏதோ தோற்றரவாக அமைத்த பெயராக்கம் அன்று. வேதாந்தத்தில், சுருதியில் என்ன அளவையியல் ரீதியிலான கடைப்பிடிகள் கொள்ளப்பட்டனவோ அதே கடைப்பிடிகளைச் சிறிதும் தளர்த்தாமல் பக்தி நெகிழ்வின் பயிலரங்காய் அமைந்த பன்னிருவர் பனுவலுக்கும் எடுத்துப்பிடித்த ஏற்றம்தான் இணையான வேதாந்தமாய்த் தோற்றம் கொண்டது.

வடமொழி வேதாந்தம், திராவிட வேதாந்தம் என்னும் இரண்டையும் வைத்துப் பார்க்கும் பார்வைதான் முழுமையுடையது என்ற காரணத்தாலேயே தன் தர்சனத்தை ‘உபய வேதாந்தம்’ (இரட்டை வேதாந்தம்) என்று உரத்துக் கூறிக் குலவியது காரிமாறனைக் குலமுன்னவனாய்க் கொண்டெழுந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயம் (திருமாலின் வரவாறு). திருவாய்மொழியின் உட்கருத்தை விளக்க எழுந்த உரை மரபு கூறுகிறது, ‘வேதநம் என்றும், உபாஸநம் என்றும் உபநிஷத்துக்களில் சொல்லுகிற பக்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகிறது’. (பகவத் விஷயம், ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் பதிப்பு, ஸ்ரீரங்கம், 1975, முதல் ச்ரியப் பதி, பக் 149). உரையின் இந்த இடத்தை விளக்க வந்த அரும்பத உரை பக்தியைக் காமமாக உருவகித்துச் சொன்னதற்கு பயன், ‘உத்தம ஸ்த்ரீக்கு உத்தம நாயக விஷய அனுராகம் போலே, தமக்கு பகவத் ப்ராவண்ய அதிசய ஸூசனார்த்தமாக’ என்று கூறுகிறது. அதாவது, ‘மிகச் சிறந்த தலைவிக்கு மிகச் சிறந்த தலைவனிடத்தில் இடையறாது பொங்கும் காதல் போன்றது தமக்குப் பரம்பொருளிடத்தில் உண்டான ஈடுபாடும், இடையறாது பொங்கும் பக்தியும் என்பதைக் குறியீட்டின் மூலம் காட்டுவதற்காகத் திருவாய்மொழியில் அகத்திணை இலக்கணம் எவ்வாறெல்லாம் கையாளப்பட்டிருக்கிறது என்று மிக விரிவாக நிறுவுகிறது திருமாலின் வரவாறு.

எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள் என்பதை எடுத்துக்காட்ட ஆசார்ய ஹ்ருதயத்தின் ஒரு சூர்ணையை விளக்கிக் காட்டினால் நன்கு புரியும்.

திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்? ஆழ்வாரேதான் தோழியும், தாயும், மகளும். எப்படி? ‘ஞானத்தில் தம் பேச்சு, பிரேமத்தில் பெண் பேச்சு’ (118) என்கிறது ஆசார்ய ஹ்ருதயம். ஆழ்வார் பக்தியால் உள்ளம் கலங்காது ஞானத் தெளிவோடு பேசும் பொழுது தாமான தன்மையில் பேசுகிறார். பக்தி நெகிழ்வால் உள்ளம் உடைகுலைப்பட்டு ஆற்றாமை விஞ்சக் கலங்கும் போது பெண்ணான தன்மையில் பேசுகிறார் என்று கூறும் ஆசார்ய ஹ்ருதயம், யார் இந்தத் தோழி, தாய், மகள் என்று வரையறுத்துக் காட்டுகிறது. தோழி என்பவள் தலைவி, தலைவன் இருவரையும் சேர்த்து வைப்பவள் அன்றோ? தலைவி, தலைவனுக்கே உரியவள் என்று வாதாடி அறத்தொடு நிற்பவள் அல்லவா தோழி? மற்றவருக்குப் பேச்சுப்படில், அதை விலக்கித் தலைவிக்கும், தலைவனுக்கும் உண்டான தொடர்பை வலியுறுத்தி மணமுடித்தலாகிய கற்புக்குக் கொண்டு செல்பவள் அன்றோ? இந்த உயிர் பரம்பொருளுக்கே உரியது, வேறொருவருக்கு உரியதன்று என்ற தொடர்பைப் பற்றிய ஞானம் பிரக்ஞையில் இருக்கும் வரை இந்த உயிர் பரம்பொருளை மறவாது அதை நோக்கியே செல்லும் அல்லவா? இந்தத் தொடர்பு பற்றிய ஞானத்தை (ஸம்பந்த ஞானத்தை) பிரக்ஞையின் அவஸ்தையாகக் கூறுகிறது ஆசார்ய ஹ்ருதயம். ஏனெனில் முக்காலத்திலும் இருப்பது பிரக்ஞை. இந்த ஸம்பந்த ஞானமாகிய பிரக்ஞை அவஸ்தையைத் தோழி என்று எடுத்துக் காட்டுகிறது. இந்த ஜீவனுக்கும், பரம்பொருளுக்கும் உண்டான ஸம்பந்தத்தைப் பற்றிய வேதாந்த ஞானம் தோழி.

வேதாந்தம் மேலும் என்ன சொல்கிறது? இந்த உயிர் பரம்பொருளின் உடல். உடலைக் காப்பாற்ற, பேண உயிர் முனைகிறதா அல்லது உடலே தானே முனைகிறதா? உடல் தானே முனைந்தால் அது நோய் அல்லவா? அது போலவே உயிர் தன்னை ரட்சித்துக் கொள்ளத் தான் முனைவது சரியன்று. தனக்கு உயிராய் இருக்கும் பரம்பொருள் தன்னைக் காக்க என்னேரமும் முனைந்த வண்ணம் இருக்கிறது என்று உணர்ந்து அதன் உடல் தான் என்ற உணர்த்தியில் அகலாவண்ணம் இருப்பதுதான் உயிருக்கு அழகு. இந்தத் தன்னுடைய மர்யாதையிலிருந்து உயிர் விலகும் பொழுதெல்லாம் அதைத் தெருட்டி, அதன் இயல்பை நினைவு படுத்திக் கடவா வண்ணம் நியமிக்கும் வேதாந்த ஞானத்திற்குத் தாய் என்று பெயர். ஏன்? தாய் என்ன செய்வதாகக் கூறுகிறது அகத்திணை இலக்கணம்? தலைவன் வந்து மணக்கும் வரை படிகடவாமல் ஆற்றியிருத்தலே இயல்புக்கும், குல மரியாதைக்கும் ஏற்றது என்று அடக்கி நியமிப்பவள் என்றல்லவோ கூறுகிறது? மகள் அல்லது தலைவி என்பவள் இயற்கைப் புணர்ச்சியில் தனிமையில் முதன்முன்னமே தலைவனுக்குத் தன்னை உரிமையாக்கிவிட்டவள். தன்னைப் பற்றியும், அவனைப் பற்றியும் நினைவு முதிர முதிர நாளுக்கு நாள் அவனை அடைந்தே தீருவது என்று எல்லா மரியாதைகளையும் கடந்தும் சென்று அவனைச் சேர்ந்துவிட வேண்டும் என்றபடியான பதற்றம் மிக்கவள். ஸம்பந்தத்தை உணர்த்தும் தோழியிடமும், நியமிக்கும் தாயிடமும் தன் பதற்றம் பொங்க ஆற்றாமையைக் காட்டுபவள். இவள் சேர்த்து வைத்தாலல்லது முடிந்து படுவாளோ என்று தோழியும் தாயும் அஞ்சும் அளவிற்கு அவனை அடைவதில் பதற்றம் மிக்கவள்.

இந்த உயிருக்கு, தான் பரம்பொருளின் உடல் என்பது தெரிந்தாலும், தனக்காக என்னேரமும் பரம்பொருள் காப்பதில் மும்முரமாக உள்ளது என்று தெரிந்தாலும், தன்னைக் கடைத்தேற்றத் தான் முனைவதெல்லாம் கடைசியில் தனக்கு அநர்த்தமாக முடியும், அவன் வந்து கடைத்தேற்ற எதிர்நோக்கி ஆற்றியிருத்தலே, மஹா விசுவாசத்தில் ஊன்றி நிற்றலே உயிராகிய தனக்கு அழகு என்பது புரிந்தாலும், தன்னையும் அவனையும் பற்றிய நினைவு எழ எழ, ப்ராப்யத்தைப் பற்றிய (அடைவதைப் பற்றிய) பதற்றமும், அவசரமும் பெருகும். இவ்வாறு அடைய வேண்டும் என்ற உயிரின் பதற்றமுற்ற நிலையே மகள் அல்லது தலைவி எனப்படுவது. இந்தத் தோழி, தாய், மகள் என்ற மூன்றும் ஸம்பந்தத்தைப் பற்றிய உணர்த்தி, உபாயத்தைப் பற்றிய துணிவு, அடைவதில் பதற்றம் என்னும் பிரக்ஞையின் அவஸ்தைகள் எனலாம். ஆசார்ய ஹ்ருதயம், ‘ஸம்பந்த உபாய பலங்களில் உணர்த்தி, துணிவு, பதற்றமாகிற ப்ரஜ்ஞா அவஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்’ (133) என்று சூர்ணையிடுகிறது. இவ்வாறு அடிப்படையிட்டு மிக விரிவாக இந்த இரட்டை வேதாந்தத்தின் திறவுகோலைத் தந்துள்ளது அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆசார்ய ஹ்ருதயமும், அதற்குத் தெளிவே உருவாய் விளக்கம் தந்த ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்யானமும்.

எனவே வேதாந்த நெறியின் எந்த ஒரு தத்துவ முடிவும் தழைத்தது தென்னாட்டில்தான், அது அத்வைதமாக இருக்கட்டும், விசிஷ்டாத்வைதமாக இருக்கட்டும், த்வைதமாக இருக்கட்டும், வேதாந்த விளக்கத்தின் ஒளியில் பக்தியின் உள்ளம் கனிந்த பெருக்கமும் தமிழ் நாட்டைச் சேர்ந்த புலவர்களாலும் வேதாந்திகளாலும்தான் இணைந்து வளர்க்கப்பட்டு பாரதத் திருநாடனைத்தும் பெருவாழ்வு நல்கும் விருட்சமாகத் தழைத்தோங்கியது. இந்துமதத்தின் இயல்பானதும் ஆழமானதுமான அடிப்படைகள் சங்க காலத்தின் வழிவந்த தண்டமிழ்ப் புலவர்களாலும், வேதாந்த நெறியைப் பேரறிவு துலங்க முன்னெடுத்துச் சென்ற தமிழ் நாட்டு வேதாந்திகளாலும் பொலிவு பெற்றவையாகும்.

ஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் – 2

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி..

தப: ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்|
நாரதம் பரிப்ப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்|| – பாலகாண்டம்-1-1

இதுவே ராமாயணத்தின் முதல் ஸ்லோகம் ஆகும். முதன்முதலில் தொடுக்கும் பாசுரத்தில் திருமகளை வழிபட்டு தொடங்குவதானது ஒருவித மங்கல வழக்கு என்பர் . ரிஷிகளுக்கு தவமே தனம்(செல்வம்) ஆகும். தபோதனம் என்பதற்கு இலக்கண குறிப்பாக இருபெயரொட்டு பண்புத்தொகை அல்லது கர்மதாரய ஸமாஸம் என்கிறது வீரசோழியம். இதைத்தான் மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று வைத்து பிராட்டியை வணங்கியே ,தன் காவியத்தை, “ஸீதையின் மஹாசரித்ரமாகத்” தொடங்குகின்றார்.

முதல்பாகத்தில் “பிராட்டி முற்படப் பிரிந்தது தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக” என்று ஸ்வாமி பிள்ளைலோகாசார்யர் அருளிய ஸ்ரீவசனபூஷண வரிகளை கண்டோம்.  இவ்விரண்டாம் பாகத்திலே “நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக” என்னும் வரிகளை விளக்கமாகக் காண்போம்.

பிராட்டி நடுவிற் பிரிந்தது பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக.

ஒரு ஜீவாத்மாவுக்கு அவன் இச்சிக்கும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு என்பனவாற்றை, பரமன் அருள்செய்ய, பிராட்டியின் சிபாரிசு(புருஷகாரம்) அவசியமாகிறது என்று பார்த்தோம். அங்ஙணம் சிபாரிசு செய்ய பிராட்டியிடம் காணப்படும் இன்றியமையாத குணங்களாக 1) க்ருபை ,2)பாரதந்த்ர்யம் மற்றும் 3) அநந்யார்ஹத்வம் என்றும் பார்த்தோம். அக்குணங்களில் க்ருபையை முற்பாகத்தில் கண்ட நாம் பாரதந்த்ர்யம் என்னும் குணத்தை இங்கே பரக்கக் காணலாம்.

பாரதந்த்ர்யம் என்றால் என்ன?

பாரதந்த்ர்யம் என்றால் எம்பெருமானுக்கோ அல்லது அடியாருக்கோ அல்லது ஆசார்யனுக்கோ வசப்பட்டிருத்தல் ஆகும். “நான்” என்னும் சொல்-ஸ்தூலமாக ஜீவனையும், ஸூக்ஷ்மமாக –அவ்வாத்மாவினுள் உறையும், அந்தர்யாமியான பரமனையும் குறிக்கும். நமது உடலில், மனஸ் அல்லது அந்தகரணம் என்று ஒரு உள்-புலனுண்டு. அதற்கு சிந்தித்தல் (சித்தம்) , தேர்வு செய்தல் (புத்தி) மற்றும் “தன்னை இன்னது என்று அடையாளம் செய்வது” (அபிமாநம்) என்னும் 3 பணிகளுண்டு. அந்த மூன்று பணிகளையும், பரமனின் திருவுள்ள உகப்பிற்காக அர்பணிப்பது பாரதந்த்ர்யம் ஆகும். (இங்கே மனஸை அர்பணித்தல் என்பது உடலுக்கும் பொருந்தும்). நம் உடலை கரணகலேவரம் என்பர் வடநூலார் (கரணம்=புலன்(6), கலேவரம்=உடல்). அவற்றை தனக்காகக் கொள்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும். பாரதந்த்ர்யம் சாத்வீகமானது. ஆனால் ஸ்வாதந்த்ர்யமோ ராஜஸமானதாம்.

தனக்கு கொடுக்கப்பட்டவற்றுள் ஒன்றனை தேர்வு செய்ய பயன்படும் மனதின் செயல்பாடு “புத்தி” எனப்படும். எடுத்துக்காட்டாக பெண்டிர் பதின்மரிடம் 1000 சேலைகளை, அவர்களின் பார்வைக்கு வையுங்கள். அவர்கள், தமக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது ஸ்வாதந்த்ர்யம் ஆகும். அவ்வாறன்றி தன் கணவனுக்கு பிடித்தமான சேலையை தேர்வு செய்வது பாரதந்த்ர்யம் ஆகும். [புத்தியின் ந்யாசம்/(அவனிடத்தில் வைத்தல்) பாரதந்த்ர்யம் என்பர்.]

1. தயரதரும் கௌசல்யையும்

அயோத்யா காண்டம் 12 ஆம், ஸர்கத்தில் சக்கரவர்த்திக்கும் ,கைகேயிக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை பின்வருமாறு. கைகேயி “ராமனுக்கு 14 ஆண்டுகள் வனவாசம், பரதனுக்கு பட்டாபிஷேகம்” என்று இரண்டு வரங்கள் கேட்டு, பிடிவாதம் செய்கின்றாள். சக்கரவர்த்தியாரோ அனலில் இட்ட புழுவாகத் துடிகின்றார். மந்திரத்தால் கட்டுப்பட்ட நாகம்போல சீறுகின்றார். அப்பொழுது கௌசல்யா தேவியார் பற்றிய நினைவு வந்து அவளை, கைகேயிக்கு ஒப்பிட்டு -“ஹே ந்ருஸம்ஶே ! நீயோ ஹிம்சையே இயல்பாகக் கொண்டவள் ! அஹிம்ஸா தேவியான அவளோவெனில்,

யதா யதா ச கௌசல்யா தாஸீவச்ச ஸகீவ ச |
பார்யாவத் பகிநீவச்ச மாத்ருவத் ச உபதிஶ்டதி ||
ந மயா ஸத்க்ருதா தேவீ ஸத்காரார்ஹா க்ருதே தவ | -12-68

பொருள்: அந்தந்த சமயத்திற்கேற்றபடி ஒரு வேலைக்காரியைப் போல, ஒரு தோழியைப் போல, மனைவியாக, ஒரு சகோதரியைப் போல ,தாயைப் போல கௌசல்யை நடந்து வந்திருக்கின்றாள். என்னுடைய பாராட்டுக்குரிய அவளை, உன்னிடமிருந்த பயம் காரணமாக பகிரங்கமாக நான் பாராட்டியதே இல்லை – என்று புகழ்பாடுகின்றார்.

சக்கரவர்த்திக்கு கௌசல்யா தேவியானவள் “பகிநீவச்ச – சகோதரியைப் போல” என்று பாராட்டும் சொல் இங்கு சுவாரஸ்யமானது. இதற்கு ஆசார்யர்கள் தரும் விளக்கம் பின்வருமாறு –“தயரதன் இரண்டாம் தாரமாக சுமித்ரா தேவியையும், பிறகு மூன்றாம் தாரமாக கைகேயி தேவியையும் மணம் முடித்து இல்லம் திரும்பும்பொழுது கௌசல்யை அவனுக்கு கற்பூர ஆலத்தி காட்டினாள். இது ஒரு இளைய சகோதரி ,அத்தம்பதியரின் நல்வாழ்வு, ஆயுள், ஒற்றுமை வேண்டி செய்யும் மங்கல சம்ஸ்காரம் ஆகும். இதுகண்டே தயரதர் அவளை “பகிநீவச்ச” என்று பாராட்டினார். இதுவே கைகேயியானவள், தனக்குப் பிறகு ,மேலும் நான்காவது தாரமாக ஒருத்தியை, தயரதன் கொண்டு வந்திருந்தால் அங்கு பூரிக்கட்டை, தட்டு, பாத்திரம் பறந்திருக்கும். எனவே கௌசல்யை தன் புத்திக்கு அனுசரித்து நடக்காமல், தன் கணவனுடைய புத்திக்கு அனுசரித்து நடந்தாள். சம்பராசுர யுத்தத்தில் தயரதனை காப்பாற்றிய கைகேயி ,அவன் கொடுத்த இரண்டு வரங்களையும் ஸ்வீகரித்தாள். இதுவே கௌசல்யைக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருந்தால், அவ்விரு வரங்களையும் நிராகரித்திருப்பாள். ஏனெனில் ஒரு மனைவிக்கு தன் கணவனின் “புத்திக்கு அனுசரித்து நடத்தல்” என்பதற்கு மேம்பட்ட வரம்/சிறப்பு என்று ஒன்று கிடயாது. வரம் என்றால் கணவன் என்றும் ஒரு பொருளுண்டு. “நான் பெண்ணல்ல! “நான்” –இந்த பெண் உடம்பு- என்னும் கூட்டில் வாழும் ஒரு ஆத்மா ஆவேன்! இப்பிறப்பில் என் கணவனுக்கு அனுசரித்து நடத்தலே எனது வரம் (சிறந்த தர்மம்)! சுகம்-துக்கம் ,குளிர்-வெயில்,லாபம்-நஷ்டம்,வெற்றி-தோல்வி என இவையெல்லாம் மனோ வ்யாபாரங்களேயன்றி ஆத்ம குணங்கள் அல்ல” என்றும் தெரிந்து வைத்திருந்தாள். “கடமையை செய்! பலனில் விருப்பம் கொள்பவனாய் இராதே!” – என்னும் கீதை வசனம் இவ்விடத்தில் நினைவு கொள்ளத் தக்கது. இங்கு கௌசல்யையுடைய இயல்பாக ரிஷி காட்டியது பாரதந்த்ர்யம். கைகேயியுடைய இயல்பாக காட்டியது ஸ்வாதந்த்ர்யம். இம்மஹா குணத்திற்கு வசப்பட்டே அன்றோ, எம்பெருமானும் அவளுடைய திருவயிற்றில் 12 திங்கள் கர்ப்பவாசம் செய்தது.

“அஜாயமாநோ பஹுதா விஜாயதே” -பிறப்பே இல்லாத பகவான் ,தன் பக்தர்களிடம் தானும் பாரதந்த்ர்யமாய் (அடிமையாய்) நடந்து, விளையாட வேண்டி, தன் இச்சைக்கு ஏற்றபடி உடலெடுத்துப் பிறக்கிறான் என்கிறது வேதம். அதைத்தான்

“மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்”

என்றும்

“ஆதியஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேதமுதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்” என்றும்

உருகுகின்றார் சடகோபர்.

மேலும் பாரதந்த்ர்யத்திற்கு, ஒரு தலையாய உதாரணம் காண்போம்.

2. ஶத்ருக்னரும் பரதரும்

“கச்சதா மாதுலகுலம் பரதேந ததா அநக: |
ஶத்ருக்நோ நித்யஶத்ருக்நோ நீத: ப்ரீதிபுரஸ்க்ருத:” -அயோத்யா காண்டம்-1-1

பொருள்: தன் தாய்மாமன் யுதாஜித்தின் கேகயநாட்டிற்கு செல்லும் பரதனால், பாபமில்லாதவனும், நித்யசத்ருக்களாம் ஐம்புலன்களை வென்ற ஶத்ருக்நன், மகிழ்ச்சி பொங்க, அழைத்துச் செல்லப்பட்டான் என்கிறார் கவிக்குயில் வால்மீகி. 23999 ஸ்லோகங்களை ஒருதராசிலும் இச்ச்லோகத்தினை மற்றொரு தராசிலும் வைத்தால், இது வைக்கப்பட்ட தட்டானது தாழும். ஒரு உடைவாளோ, வில்லோ எடுத்துச் செல்லப்பட்டது போலே ஶத்ருக்நன் எடுத்துச் செல்லப்பட்டான்”—என்பது செயப்பாட்டு வினை. அதற்கும் மேலாக, “ப்ரீதிபுரஸ்க்ருத:”-அவ்வாறு எடுத்துச் செல்லப்படுவதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்கிறார் ஆதிகவி. (அதாவது கடகராசியில் நாலாம் பாதத்தில் குரு உச்சம் பெற்று மகிழ்வது போன்றதாம் இதுவும்.) இங்கு செய்வினை ஏன் வரவில்லை ? செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன பெரிய வாசியென்று கேட்கலாம் ! செய்வினையில் பரதன் எழுவாய்(கர்தா காரகம்), ஶத்ருக்நன் பயனிலை (கர்ம காரகம்) ஆயிருப்பர். செயப்பாட்டு வினையால் ஶத்ருக்நன் எழுவாய், பரதன் கரணகாரகம் ஆகின்றனர். இங்கு ஶத்ருக்நனுக்கு முதன்மை இடத்தை கொடுக்கின்றார் மஹரிஷி.

ஏனெனில், ராமாயண காவியத்தில் ராமர் –“பெரியோர் சொல் கேட்டல்” என்னும் சாமான்ய தர்மத்தை(ORDINARY) அனுஷ்டித்துக் காட்டினார். லக்ஷ்மணன் “தன் புத்திக்கு அனுசரித்து, ராமனை விட்டுப் பிரியாது அணுக்கத் தொண்டாற்றினார் / பகவத் கைங்கர்யம்”. இது விஶேஷ(GOOD) தர்மம் ஆகும். இதனை ஶேஷத்வம் என்பர். இதில் சிறிது ஸ்வாதந்த்ர்யம் கலந்திருக்கும். ஆனால் லக்ஷ்மணன் அயோத்தியில், பெற்றொருக்கு துணையாக இருக்கவேண்டும் என்பதுதான் ராமரின் திருவுள்ளம் ஆகும். மேலே, பரதன் 14 ஆண்டுகள் ராமரை பிரிந்தும் அவருடைய திருப்பாதுகைகள் வைத்து ராஜ்யபரிபாலனத்தை செய்தார். இதனை பாரதந்த்ர்யம் என்பர். ராமருடைய திருவுள்ளம் உகக்க, ராமருடைய புத்திக்கு அனுசரித்து தொண்டாற்றினார். இந்த தர்மம் விஶேஷதரம்(BETTER) ஆகும். ஆனால் ஶத்ருக்நன் பரதனின்(ராமபக்தனின்) திருவுள்ளம் உகக்க தொண்டாற்றினார். இந்த தர்மம் விஶேஷதமம்(BEST) ஆகும். பகவத் பக்தியை விட பாகவத பக்தியே சிறந்தது என்று காட்டவே மேற்படி ஸ்லோகத்தில் செயப்பாட்டு வினை எடுத்தாளப்பட்டது. நீத:-அழைத்துச் செல்லப்பட்டவன் ,ப்ரீதிபுரஸ்க்ருத: -கௌரவிக்கப்பட்டவன்/”தனக்கு எது இயல்போ அவ்வாறே இருக்குமாறு விடப்பட்டவன்” என்பன வினையாலணையும் பெயர்கள். இரண்டும் செயப்பாட்டு வினையில் வந்து பாரதந்த்ர்யம் காட்டுகின்றன.(பரதனுக்கு அடிமைப்பட்டு கிடப்பதே அவனது இயல்பு/ஆநந்தம் ஆகும்.)

3. ராமானுஜரும் ப்ரம்மஸுத்ரமும்

ராமானுஜர் தம்முடைய ஶ்ரீபாஷ்ய நூலில் கடவுள் வாழ்த்து/ ஆசார்யர்கள் வாழ்த்துப் பகுதியில்

“பகவத் போதாயந க்ருதாம் விஸ்தீர்ணாம் ப்ரஹ்மசூத்ர வ்ருத்திம் பூர்வாசார்யா: ஸங்க்ஷிபுஹு:| தந்மதாநுஸாரேண ஸூத்ராக்ஷராணி வ்யாக்யாஸ்யந்தே ||” – ஶ்ரீபாஷ்யம்-3

பொருள்: போதாயந பகவானால் செய்யப்பட்டுள்ளதும், மிக விரிவாகவுமுள்ள ப்ரஹ்மஸுத்ர வ்ருத்தியை நம் பூர்வாசார்யர்கள் மிகச் சுருக்கமாக எழுதினார்கள். அவர்களுடைய திருவுள்ளத்தை அனுஸரித்தே ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன.

என்று எழுதுகின்றார். இங்கு யாப்பு/சந்தஸ் கருதி “என்னால்(மயா)” என்னும் சொல் விடப்பட்டது. எனவே அதையும் (அத்யாஸம்) சேர்த்துக் கொண்டு “என்னால் ஸூத்திரங்கள் வ்யாக்யாநம் செய்யப்படுகின்றன” என்று பொருள் கொள்ளவேண்டும். இதுவும் செயப்பாட்டு வினை ஆகும். இங்கு ராமானுஜரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார். பாஷ்யத்தினை தன் புத்திக்கு ஏற்றவாறு எழுதாமல், பூர்வாசார்யர்கள் (குஹதேவர், டங்கர், த்ரமிடர், நாதமுனிகள், ஆளவந்தார் முதலியோர்) திருவுள்ளத்திற்கேற்ப எழுதுகின்றார். இந்தப் பண்பு

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாது – தன் நெஞ்சில்
தோற்றினதே சொல்லி, இது சுத்த உபதேச
வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்.

என்ற உபதேச ரத்தினமாலை-71 ஆம் வெண்பாவுக்கேற்ப அமைகின்றது.

4. நம்மாழ்வாரும் எம்பெருமானும்

“தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன்,
என் முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே”

என்று தன்னை ஒரு கருவியாக்கி ,தனது ப்ரபந்தங்களை எம்பெருமான் தானே எழுதிக்கொண்டான் என திருவாய்மொழியில் நம்மாழ்வாரும் பாரதந்த்ர்யம் காட்டுகின்றார்.

5. கூரத்தாழ்வானும் பெரியநம்பிகளும்

ஒருமுறை ஶ்ரீரங்கத்திற்கு பகைவர்களால் கேடு விளையுமென்று, எல்லோரும் அஞ்சியிருந்த சமயம் பெரியநம்பிகள் ராமாநுஜரிடம்,-“நான் இத்திருத்தல நன்மை வேண்டி, வேத சம்ஹிதைகள்,ப்ரபந்தங்கள் ஓதிக்கொண்டே, இத்திருவரங்கத்தை வலம் வரப் போகின்றேன். ஆனால் என்னுடன் மற்றொருவர், எனக்கு பின்னால் வர வேண்டும். அப்படி என்னுடன் வலம் வருபவர் –“ஒருவர் பின்னால் நான் செல்கிறேன்”- என்ற எண்ணம் கொள்ளாதவராக இருத்தல் வேண்டும் என்றார். “அப்படி ஒருவர் கிடைப்பது அரிது”- என்றார் ராமாநுஜர். ”ஏன் !நம் ஆழ்வானை அனுப்பலாகாதோ?“-என்றார் நம்பிகள். சரியென கூரத்தாழ்வாரை அனுப்பினார் ராமானுஜர். நம்பிகள் முன்னே செல்ல, பாரதந்த்ர்யத்தில் மூழ்கி முக்குளித்த ஆழ்வானும் “தன் சித்தம், புத்தி, அபிமாநம் என ” அனைத்திலும் பெரியநம்பிகளே தன்னுடைய ஆத்மா என்ற நிஷ்டையுடன், அவர் பின்னே செல்ல ,திருவலமும் இனிதே முடிந்தது. இந்த நிகழ்ச்சி திருவாய்மொழி -ஈடு முப்பத்தாறாயிரப்படி -7-10-5 ஆம் பாசுர ஐதிஹ்யத்தில் காணலாம்.

6. மதுரகவிகளும் நம்மாழ்வாரும்

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே. – கண்ணிநுண்சிறுத்தாம்பு- 2

நம்மாழ்வார் திருநாட்டிற்கு எழுந்தருளும் பொழுது ,அவர் சீடரான மதுரகவிகள், பிரிவாற்றாமையால் தானும் உடனே வைகுந்தம் செல்ல விழையாமல், தன் ஆசார்யன் திருவுள்ளத்திற்கு உகப்பாக “அவர் அருளிய திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களை உலகில் ப்ரசாரம் செய்து தன் வாழ்நாளைக் கழித்தார். இவர் “ஆசார்யர் சடகோபருக்கு மேலாக தேவு மற்று அறியேன்” என்று வாழ்ந்தவர்.

******

இனி விஷயத்திற்கு (பிராட்டி நடுவில் பிரிந்தது) வருவோம். உத்தரகாண்டத்தில் 42 ஆம் ஸர்கத்தில் ஸீதை கர்ப்பம் தரிக்கின்றாள். அப்படியான நாளில் ஶ்ரீராமர் அவளிடம் “அழகான முகமுடையவளே ! வைதேஹீ! எனக்கு புத்திரன் பிறக்கின்ற புண்ணியம் கிட்டிற்று. நீ ஆசையாக ஏதாவது எண்ணியிருந்தால்,அவையனைத்தையும் என்னிடம் கூறு” –என்றார். அதற்கு ஸீதை – ராகவரே! மிகுந்த புண்ணியம் பல உள்ளவர்களும் ,பழம் மற்றும் கிழங்கு முதலானவற்றை மட்டும் உண்பவர்களும் ஆகிய முனிவர்களின் திருவடிகளின் கீழே வசிப்பதற்கு நான் விரும்புகின்றேன். கங்கையின் கரையில் உள்ளவைகளும், தூய்மை நிறைந்தவைகளுமான அவர்களின் பர்ணசாலைகளை நான் விரும்புகின்றேன்.மேற்கூறிய ஒழுக்கமுள்ள முனிவர்கள் வாழும் இடத்தில் ஒரு நாளாவது வசிக்க விரும்புகின்றேன். இப்படியாக எனது ஆசைகள் உள்ளன” -என்றாள். இத்தகைய ஆசையை நிறைவேற்றும் விதமாக , உலகினர் ஸீதை மீது கற்பித்த பொய்யான பழியை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளை ராமர் காட்டுக்கு அனுப்பினார். இந்தப் பிரிவிற்கு பலன் என்ன கிட்டியது என்றால் –ராமர் தன்னை அன்புடன் அரண்மனையில் வைத்திருந்தாலும் ,கானகம் அனுப்பினாலும் எந்தவிதமான வேறுபாடும் காணாமல் ;அவனுடைய நினைவிலேயே ஒன்றியபடி ஸீதை இருந்தாள். இப்படியாகத் தன் பத்தினித்தன்மை மூலம் பாரதந்த்ர்யத்தை வெளிப்படுத்தியதே ராமனைப் பிரிந்த பயனாகும்.மஹரிஷி இதனை மேலும் விளக்குகின்றார்.

உத்தரகாண்டம் 48 ஆம் ஸர்கம் லக்ஷ்மணன் அவளை கங்கை கரையில். வால்மீகி ஆஶ்ரமத்திற்கு அருகில் இறக்கி விட்டான். ராமர் அவளை கானகத்தில் விட்டு வர சொன்ன காரணத்தையும் கூறினான்.

ந கலு அத்யைவ ஸௌமித்ரே ஜீவிதம் ஜாஹ்நவீ ஜலே |
த்யஜேயம் ராகவம் வம்ஶே பர்துர் மா பரிஹாஸ்யதி || -8

பொருள்: சுமித்திரையின் மகனே ! ராமன் மூலமாக உண்டான இந்த கர்ப்பம், இக்ஷ்வாகு குலத்திற்கு இல்லாமல் போய்விடக் கூடாது என்ற காரணத்தால் அல்லவோ நான் இன்னமும் கங்கையில் விழுந்து உயிர் துறக்காமல் உள்ளேன் என்றாள். நம்மாழ்வாரும் –“மாயும் வகையறியேன் வல்வினையேன்” என்கிறார். இங்கு பிரிவாற்றாமை காரணமாக ,தன் புத்திக்கு அனுசரித்து தற்கொலை செய்துகொள்ளாமல், ராமனின் திருவுள்ளத்திற்கு ஏற்ப, அவன் குலம் தழைக்கவும், கர்ப்பம் வாழவும், தன் உயிரை பிடித்திருந்தாள்.

பதிர் ஹி தைவதம் நார்யா: பதிர்பந்து பதிர்கதி:|
ப்ராணைர் அபி ப்ரியம் தஸ்மாத் பர்து கார்யம் விஶேஷத: || – 17

பொருள்: எந்தக் காரணத்தினால் ஒரு பெண்ணிற்கு அவளது கணவன் தெய்வமாகவும், உறவினனாகவும்,மோக்ஷமாகவும் உள்ளானோ ,அந்தக் காரணத்தை முன்னிட்டு மனைவியானவள் தனது உயிர் மற்றும் அதனினும் மேலாக வேறு ஏதாவது இருந்தால் அதன் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.- என்றாள். இப்படியாக நடுவிலே பிரிந்து பாரதந்த்ர்யத்தை வெளியிட்டாள். தன் மாமியார் கௌசல்யாதேவியின் வழியிலே அச்சு பிசகாமல் நின்றாள். மஹரிஷியும் தன்னுடைய மஹாகாவியத்திற்கு “ஸீதாயா: சரிதம் மஹத்” என்று பத்திரம் /பட்டா எழுதி கொடுத்துள்ளார். வழிபாட்டில் மக்களும், பெருமாளை விட பிராட்டிக்கே முதன்மை இடம் கொடுக்கின்றனர்.

தைத்தீரிய உபநிஷத்தில் “தபஸா ப்ரம்ஹ விஜிக்ஞாஸஸ்வ, தபோ ப்ரம்ஹ இதி” (தவத்தினால் பரமனை அறியவேண்டும், தவமே பரமனாவான்” என்று காண்கிறோம். மேலும் விஷ்ணுபுராணத்தில் சொன்னபடி, தப: என்பது ஆண்பால் சொல். இது திருமாலைக் குறிக்கும். அதன் பொருளான சிந்தா(சிந்திக்கும் செயல்) என்பது பெண்பால் சொல். இது திருமகளைக் குறிக்கும். எனவே பிராட்டியும் தவசீலர்களின் இருப்பிடத்தில் வாழ விரும்பினாள். ஶ்ரீ: என்பது “ஶ்ரிங் ஸேவாயாம்” என்ற மூலச்சொல்லிலிருந்து பெறப்படும். ஶ்ரீ: – ஶ்ரயதே இதி ஶ்ரீ: என்பது வ்யுத்பத்தி. இதற்கு நாராயணனை இருப்பிடமாக உடையவள்/ வணங்குபவள் / தொண்டு புரிபவள் என்பது பொருள்(பாரதந்த்ர்ய, அந்ந்யார்ஹங்களுக்கு விளக்கம்). ஶ்ரீ: ஶ்ரீயதே இதி ஶ்ரீ: என்று கொண்டால் பிற ஜீவாத்மாக்களுக்கு இருப்பிடம், வணங்கத்தக்கவள் ,தொண்டினை ஏற்பவள் என்றும் பொருள்(க்ருபைக்கு விளக்கம்). இதையே மஹரிஷியும் “தப ஸ்வாத்யாய” என்று “சிறையிருந்தவள் ஏற்றமாக” காவியத்தை தொடங்குகின்றார்.

பிராட்டி, தான் திருவயிறு வாய்த்திருந்த தகவலை ,ஒருநாள் பூங்காவில் பெருமாளோடு இருந்த சமயத்தில் தெரிவிக்கின்றாள். “என்ன வரம் வேண்டும்” என்று கேட்கிறார் பெருமாள். நாட்டில் தன் மீது அபவாதம் கிளம்பியது என்று முன்னமே அறிந்தவள், பெருமாளுக்கு எவ்விதத்திலும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. எனவே தபோவனம் செல்ல விருப்பம் தெரிவிகின்றாள். இதை அறியாத பெருமாளும், மறுநாள் காலையில் லக்ஷ்மணனுடன் அனுப்புவதாக சம்மதம் தெரிவிக்கின்றார். அதன் பிறகு நடக்கும் ஆலோசனையில் தான் பத்ரன் என்னும் ஒற்றன் மூலம் நாட்டில் நிலவும் அபவாதம் தெரிய வருகின்றது. அவளை வால்மீகி ஆஶ்ரமத்தருகே விட்டு வரும்படி இளையாழ்வாரை பணிக்கின்றார் பெருமாள். பிறகு தொண்ணூற்று ஐந்தாம் ஸர்கத்தில் ,லவகுசர்கள் மூலம் ஸீதை விருத்தாந்தம் அறிகின்றார். அவளை திரும்ப அழைக்கின்றார். 48 ஆம் ஸர்கம் முதல் 97 ஆம் ஸர்கம் வரையில் நடந்த பிரிவில் பாரதந்த்ர்யம் வெளியாகின்றது. “சிறையிருந்தவள்” என்று க்ருபையும், “ஏற்றம்” என்று பாரதந்த்ர்யமும் மற்றும் அநந்யார்ஹத்வமும் பொருள் தருகின்றன.

அடுத்த பகுதியில் பாரதந்த்ர்யம், பிராட்டியிடம் நிரூபாதிகமாகவே (இயற்கையாக) உளது என்பதனை தர்க்கம் கொண்டு பொருத்துவோம்.

பொதுவாழ்க்கையில் பாரதந்த்ர்யம்

கர்நாடகாவில் ஒரு பெரிய தனவந்தர் இருந்தார். அவர் சட்டத்திற்கு அடங்கியிருந்த பொழுது ஒரு விமான போக்குவரத்து நிறுவனத்தை நடத்தினார் .பிறகு 8000 கோடிரூபாய்க்கு மேல், கடனை அடைக்க முடியாமல் வெளிநாட்டில் குடியேறினார் . அங்கு வாலை, சுருட்டிக்கொண்டு அந்நாட்டு சட்டத்திற்கு அடங்கியிருக்கின்றார். உலகில் பலரும் சட்டத்திற்கு அடங்கி நடந்தால் இன்பமாக வாழ முடியும். சட்டத்தை மீறினால் சிறை செல்லவேண்டும் அல்லது வேறு நாட்டிற்கு செல்ல வேண்டி வரும்.

இது வீட்டிற்கும் சரி ,சமுகத்திற்கு சரி ! வணிகத்திற்கு சரி! எங்கும் பொருந்தும் .அரசியல் ,விளையாட்டு என எங்கும் சட்ட திட்டங்களுண்டு .கால்பந்து விளையாட்டில் தவறிழைத்தால் மஞ்சள் அட்டை (அ ) சிகப்பு அட்டை காட்டப்படும். எல்லா நாடுகளுக்கும், ஏன் ஐ.நா சபைக்கும் கூட சட்ட திட்டங்களுண்டு.

இவ்வுலகைப் படைத்து , உயிர்களுக்கு உடல்களையும் படைத்து , இப்படி செய் (விதி) ! இப்படி செய்யாதே (நிஷேதம்) ! என்று ஶாஸநம் செய்பவர் பரப்பிரம்மம். ஶாஸ்த்ரம் தனை ஆக்கியவன் ஶாஸ்தா ஆவார். விதிக்கப்பட்டதை (ஸத்யம், அஹிம்ஸை ,புலனடக்கம், தயை ,க்ஷமை ,த்யானம் ,தவம், க்ஞானம்) கடைபிடித்தால் புண்ணியம் ஆகும். அதனை செய்யாவிட்டால் பாவம் ஆகும். நிஷேதத்தினை (புலால் உண்ணுதல் ,கொலை ,திருட்டு ,பிறன் மனை விழைதல், இவ்வாறு செய்வாரோடு கூட்டு ) செய்யாவிட்டால் புண்ணியம் ஆகும். அதனை செய்தால் பாவம் ஆகும்.

எனவே எந்த ஒரு ஜீவாத்மாவும்; ஏதாவது ஒருவகையில்; ஒரு ஶாஸநத்திற்கு அடிமையாவான் . இதுவே அவனது முதல் இயல்பு (தாஸ:) . க்ஞானம் அவனது இரண்டாவது இயல்பு(க்ஞாதா) . கர்மம் அவனது முன்றாவது இயல்பு(கர்த்தா ). கடைசியில் இதனால் ஆனந்தம் ஏற்படுகின்றது (போக்தா) . இது நான்காவது இயல்பு . ஸ்வதந்த்ரனாயிருப்பவன் பற்பல கர்மங்களால் பிறப்பு ,மூப்பு,நோய் , இறப்பு என்னும் சுழற்சியில் இருப்பான். அவன் என்று ஈஸ்வரனுக்கு தான் பரதந்த்ரன் என்று உணர்ந்து அதன்படி நடக்கின்றானோ , பின்னர் அவன் நடத்தைக்கேற்ப இறைவனை அடைகின்றான். இறைவனை அடைந்தபிறகு அவனுக்கு பாபமின்மை ,மூப்பின்மை ,இறப்பின்மை ,சோகமின்மை ,பசியின்மை ,தாகமின்மை ,ஸத்யகாமத்வம் ,நினைத்ததை அடைதல் என்னும் 8 இயல்புகளும் பிரகாசிக்கத் தொடங்குகின்றன. (அபஹதபாப்மா ,விஜரோ, விம்ருத்யு,விஶோக: ,விஜிகத்ஸோ ,அபிபாஸ: ,ஸத்யகாம: ,ஸத்யஸங்கல்ப: -சாந்தோக்ய உபநிஷத்)

மேலும் நம்மக்கள் இதிஹாஸ புராணங்களை ஏதோ ஸ்வாரஸ்யம் வேண்டி, FICTION/ புனைவு கதைகள் போன்று வாசிக்கின்றனர். அது தவறான போக்காகும். ராமானுஜர் ஓராண்டுகாலம் திருமலையில், பெரிய திருமலை நம்பியிடம் ராமாயண பாடம் பயின்றார் என்று காண்கிறோம். இதிஹாஸ-புராணங்கள் என்பன உபநிஷதங்களுக்கான PRACTICAL LIFE/ நடைமுறை -வாழ்க்கை விவரணங்களாகும். அதில் வரும் நிகழ்ச்சிகளை உபநிஷத பார்வை கொண்டு அணுக வேண்டும். அவைகளை மீமாம்ஸா ஆராய்ச்சி செய்து, தத்துவ உண்மையினை பயில வேண்டும். இவ்வாறான கலைகளைப் பயில ஆசானின் வழிகாட்டுதல் இன்றியமையாதது. நுனிப்புல் மேய்தல் கூடாது.

பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால்- நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்.

– உபதேச ரத்தின மாலை-66

(தொடரும்)