ஊழல் தவறா? ஊழலை வெளிக் கொணர்வது தவறா?

corruption-in-indiaஒரு அரசாங்கத்தில் அல்லது பெரிய நிறுவனமொன்றில் உயர் பொறுப்புகளில் இருப்போர் விதிமுறைகளுக்கு மாறாக சில தவறுகளில் ஈடுபட்டு ஆதாயங்களைப் பெற்று வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தனிப்பட்ட அதிகாரிகள் அல்லது நிர்வாகிகள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்கள் ஊரைக்கூட்டி விளம்பரம் செய்துகொண்டா அந்தத் தவறுகளைச் செய்வார்கள். எத்தனைக்கெத்தனை இரகசியமாகச் செய்ய முடியுமோ அப்படிச் செய்வார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் செய்யக்கூடிய தவறுகளுக்கு எந்த வித ஆதாரமும் எழுத்திலோ, அல்லது வாய்ச்சொல் மூலமாகவோ, சாட்சிகளையோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி அவர்கள் செய்யும் ஊழல்கள் இரகசியமாகவே இருந்துவிட்டால் அது அவர்களுக்கு ஆதாயம். அவர்கள் பணியாற்றும் அரசு, பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் ஆகியோருக்கு இதனால் பெருத்த இழப்பு ஏற்படுவதோடு, ஒழுங்காய் நடந்து கொள்பவர்களையும் ஊழல் செய்யத் தூண்டுவது போல அமைந்து விடும் இல்லையா? ஆகவே இப்படிப்பட்ட தவறுகளைக் கவனமாகப் பார்த்துக் கொண்டு அவர்கள் அறியாமல் ஏதாவது ஊழலுக்கான ஆதாரங்களை விட்டிருந்தால் அதை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகத்துக்கும் அக்கறை கொண்ட உண்மையான பிரஜைக்கும் உரிமை இருக்கிறது.

This is the main reason we have been so involved with nolvadex. Beware of a bottle of pills that says "crestor" or "crestor 40 https://ondamarina.net/homepage/microsoftteams-image-4/ mg" when you have taken it. In the prilosec-placebo group, 2 subjects vomited and 2 lost consciousness (3.9%), and 2 subjects suffered moderate upper abdominal pain and 1 subject.

It is a lot more effective and healthy than what i had been doing. The length of time you spend in bed each day (this can vary based on the type of steroid used http://blog.bitsense.com.ar/2014/01/10/recomendacion-charla-de-inaki-baz-castillo-junto-jose-luis-millan-en-voip2day-2013/ and can even be a factor of the severity of the disease) I was just tired at the time so was going to take it.

It is important to find out the cause of pain first, before seeking for treatment. In the Lanester united states, the price for clomid can vary from .50 to for a month dose to for a 5-month supply. Phexin is an essential fatty acid compound that also happens to be a plant extract that has the ability to stimulate production of the enzyme carnitine acetyltransferase (cat), which is a necessary enzyme in the body.

அரசாங்கங்களே அடுத்த நாட்டு நடவடிக்கைகளை கவனித்துத் தெரியப்படுத்த ஒற்றர்களை வைத்திருக்கிறார்களே. அதற்கென்று இரகசிய அமைப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவே. சில ஆதாரங்களைப் பெற வேண்டுமானால், அந்தந்த இலாகா அல்லது அலுவலகத்தில் ஊழலுக்கு எதிரானவர் எவரேனும், இப்படியெல்லாம் நடக்கிறதே என்று கோபப்பட்டு, ஊழலுக்கான ஆதாரங்களை இரகசியமாகப் பிரதி யெடுத்து, நடவடிக்கை எடுக்க விரும்பும் பொதுநல விரும்பிகளுக்குக் கொடுத்தால் தான் உண்டு. இல்லையேல் ஊழல்கள் அத்தோடு மறைக்கப்பட்டு விடும். ஊழல் நடக்கிறது என்பதை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாமென்றாலோ, யார் யார் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில், உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கும் பங்கு இருக்குமானால் பாதிக்கப்படப்போவது புகார் கொடுத்தவர்தானே தவிர ஊழல் செய்தவர் அல்ல.

ஒருவன் செய்த தவறுக்கு அவனிடம் இரகசிய ஆவணம் இருக்கிறது. அதை அவன் ஊரறிய வால் போஸ்டர் அடித்தா ஒட்டுவான். அந்த இரகசிய ஆவணம் நல்லவன் எவன் கையிலாவது கிடைத்தால் விடுவானா? அதை பிரதியெடுத்து, குற்றம் செய்தவனுக்கு எதிராகப் பயன்படுத்தத்தான் செய்வான். அந்த ஆவணம் உண்மைதானா, குற்றம் நடந்திருக்கிறதா, அப்படி நடந்திருந்தால் அதற்கான ஆவணத்தை மறைத்து வைத்திருந்த ஊழல் பேர்வழியைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஊழலை வெளிப்படுத்திய அந்த ஆவணத்தை இரகசிய இடத்திலிருந்து எடுத்தது யார்? பிரதி எடுத்தது யார்? யாரிடம் அது கொடுக்கப்பட்டது? என்றெல்லாம் கேட்பது, குற்றம் செய்தவனைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி போலத்தான் தோன்றுமே தவிர ஊழலை ஒழிக்கும் உறுதி இருப்பதாகத் தெரியாது. இந்த அளவுக்கு ஒரு நபர் ஊழலுக்கு எதிராக, தனக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது தெரிந்தும் துணிச்சலாக அதை வெளிப் படுத்துகிறானே அவனை ஊக்கப்படுத்த வேண்டும் என்று நாம் நினைப்பதில்லை. மாறாக அவனையே கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து, ஏண்டா நமக்கு இந்த வீண் தொல்லை என்று அவன் மனம் நொந்து இனி யார் எக்கேடு கெட்டால் என்ன, நம் விஷயத்தைப் பார்த்துக் கொண்டு போய்விடுவோம் என்று அந்த நேர்மையாளனும் ஒதுங்கி விடுவான்.

குற்றத்தைத் தடுக்கவோ, குற்றம் செய்தவனை தண்டிக்கவோ, இப்படிப்பட்ட ஆவணங்கள் இரகசியமாக, பிரதியெடுத்தோ, அல்லது திருடியோதான் மக்கள் பார்வைக்கு வரமுடியும். குற்றவாளியே அவற்றை எடுத்து இந்தா எடுத்துக் கொள்ளுங்கள் ஆதாரம் என்றா கொடுக்கப்போகிறான். இந்த குற்றத்தை விசாரிப்பவர்களுக்கு அந்த ஆவணத்தின் நம்பகத்தன்மைதான் முக்கியமானதே தவிர, யார் கொடுத்தது, ஏன் கொடுத்தான், எப்படி எடுத்தான் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பது நீதி பரிபாலன செயல்பாடுகளுக்கு எதிரானது. பொது நலத்துக்கும் எதிரானது; ஊழலை ஊக்கப்படுத்துவது போன்றது; ஊழல் வாதிகளைப் பாதுகாக்க விரும்புவது போன்றது.

expose-corruptionஎனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒரு பெரிய நாட்டுடமையாக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்டத்தில் சில பணிகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டது. அவர்கள் அந்தந்த பகுதி வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து தேவைப்படும் எண்ணிக்கையைப் போல ஐந்து மடங்கு ஆட்களின் பெயர்களைக் கேட்டிருந்தார்கள். அதன்படி சுமார் 120 பேர் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பெயர்களை அனுப்பி வைத்தன. அவற்றை ஆய்வு செய்து தேர்வுக்கு அழைப்பு விடுக்கும்போது, அந்த 120 பேர்களைத் தவிர இவர்களாகவே சுமார் ஏழெட்டு பேர்களை அதில் சேர்த்து அவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். அப்படி அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் சில அதிகாரிகளின் பிள்ளைகள், ஒரு சிலர் ஊழியர்களின் பிள்ளைகள். அந்தத் தேர்வின் முடிவுகள் பட்டியலாக மக்கள் பார்வைக்கு வைக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பலருக்குக் கடிதம் மூலம் அனுப்பப்பட்டன. அப்படி கடிதம் அனுப்பப்பட்டவர்களில் சிலர் வேலை வாய்ப்பு அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் மட்டும் அல்ல; அந்த அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள்அவர்கள். இந்த இரகசியத்தை அறிந்து கொண்ட அதே அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் இதை நேரடியாகச் சென்று புகார் செய்தால் பூசி மெழுகிவிடுவார்கள் என்பதால் ஒரு குறுக்கு வழியைக் கையாண்டார். அந்த கோட்டத்திற்குட்பட்ட ஒரு சிற்றூரில் இயங்கும் “வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்” எனும் பொய்யான பெயரில் இந்த விவரங்களைத் தலைமை அதிகாரிக்கு இரகசிய கடிதம் மூலம் தெரிவித்து விட்டார். அந்த அதிகாரி வெளி மாநிலத்தவர். இப்படியொரு ஊழல் நடப்பது அவருக்குத் தெரியாது. உடனடியாக அவர் வேலை வாய்ப்பு அலுவலகம் அனுப்பிய பட்டியலையும், இவர்கள் நடத்திய தேர்வில் பங்கு கொண்டவர்கள் பட்டியலையும் வாங்கிப் பார்த்துவிட்டு ஊழல் நடந்திருப்பதை உறுதி செய்து கொண்டார். தன் அலுவலகத்திலேயே சிலர் தங்கள் பிள்ளைகள் பெயரைச் சேர்த்து இப்படியொரு மோசடியைச் செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் பெயரை நீக்கிவிட்டு மற்றவர்களுக்கு வேலைக்குக் கடிதம் அனுப்பினார். இதில் இன்னொரு சோகம் என்னவென்றால், ஊழியர்களின் பிள்ளைகளின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு காலப்போக்கில் ஒவ்வொருவருக்காய் பணி ஆணை அனுப்பி வேலையில் சேர்த்துவிட்டனர். இப்படியும் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த பொதுநல விரும்பி “வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்” என்ற பெயரில் ஒரு கடிதம் அனுப்பி இந்த ஊழலை வெளிக் கொணர்ந்தார். அப்படியொரு சங்கமே இல்லை. இருந்தாலும் அந்தக் கடிதத்தில் கண்டிருந்தவை அனைத்தும் அப்பட்டமான உண்மை; அவை அனைத்தும் நடந்தேறிய ஊழல்கள். அதனால் நிர்வாகம் கொடுத்த வேலை ஆர்டர்களை நிறுத்திக் கொண்டது பிறகு தனித்தனியாக அவர்களும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் என்பதும் நடந்தது. தவறு செய்தவர்கள் யார் என்பதை விட்டுவிட்டு அந்த ரகசிய லிஸ்டை எடுத்தது யார், பொதுநல விரும்பியிடம் கொடுத்தது யார் என்று ஒரு விசாரணை நடத்தி, அவர்கள் சந்தேகித்த ஒரு நபரை அந்த பிரிவிலிருந்து மாற்றி உபயோகமில்லாத இடத்துக்கு அனுப்பிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகம் தவறு நடந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, தவறு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருட்டுத் தனமாக வேலைக்கு ஆர்டர் வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தவறுக்கு வெளிச்சம் போட்ட கடைநிலை ஊழியர் ஒருவரை பழிவாங்கத் துடித்தது ஏன்? ஏனென்றால் நிர்வாகத்தின் உயர்ந்த பீடத்தில் இருப்பவர்கள் அறிந்தே இந்த தவறுகள் நடந்தன என்பதுதான். எல்லாம் நேர்மையாக நடத்த வேண்டிய உயர்நிலைப் பதவி வகிப்பவனே திருட்டுக்குத் துணை போய்விட்டு, அந்தத் திருட்டு அம்பலமானவுடன் திருடியவனை தண்டிக்காமல், திருட்டைக் காட்டிக் கொடுத்தவன் மீது பாய்ந்து குதறியது என்ன நியாயம். அதுதான் இன்றைய நம் நாட்டு நியாயம்.

corruptionஇங்கு தவறுகளையும் ஊழல்களையும் செய்யலாம், செய்த தவறுகளையும் ஊழல்களையும் சாமர்த்தியமாக மறைக்கலாம். ஆனால், அவற்றைச் சுட்டிக் காட்டினால் அது தவறு. தவறுக்கான ஆதாரங்களைக் காட்டினால் அது ஏன், எப்படி, யாரால் வெளிவந்தது என்பதில்தான் விசாரணை போகின்றதே தவிர, அந்த தவறு நடந்தது உண்மையென்றால், அந்த ஆவணமும் சரியானதுதான் என்றால் தவறு செய்தவன் தான் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர, தவறை வெளிக்கொணர்ந்தவன் அல்ல. அப்படி அவன் வெளிக் கொணர்ந்தது தவறு என்பது நிரூபிக்கப்பட்டால், அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கை களை எடுத்துக் கொள்ளட்டும். ஊழலை ஒழிக்க அடிமட்டம் தொடங்கி, மேல் மட்டம் வரை நேர்மையாகச் செயல்பட்டால் மட்டுமே தர்மமும் நீதியும் நிலைநாட்டப்படும். இல்லையேல் நீதியும் நியாயமும் புதைகுழிக்குத்தான் போகும். படிக்காத மூடன் தவறிழைப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் படித்தவன் தெரிந்தே தவறுகளைச் செய்வானானால் அவனை மன்னிக்க முடியாது. அதனால்தான் மகாகவி பாரதி சொன்னான், “படித்தவன் பாவமும் சூதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்” என்று.

நமக்குக் குறி ஊழலும் ஊழல் புரிந்தவனும்தான்; ஊழலை வெளிக்கொணர்ந்தவன் அல்ல என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். அப்படி ஊழலை வெளிக் கொணர்பவனுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை, அதைவிட்டு அவனை பலிகடாவாக ஆக்குவது ஊழலுக்குத் துணை போவதாகும்.

கனிம வளங்களை சுரண்டும் முதலைகள்

பாதாளத்தின் அதிபதி குபேரன். அவனது செல்வச் செழிப்பு அளவிடற்கரியது என்று புராணங்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அது உண்மையா என்று பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்புவதுண்டு. அண்மையில் தேசிய அளவிலும் தமிழக அளவிலும் வெளியாகியுள்ள கனிமவள ஊழல்கள் குபேரனின் செல்வம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிப்பவையாக இருக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் வெளியாகியுள்ள கிரானைட் ஊழல், அதன் பின்புலத்தில் உள்ள அதிகார வர்க்கத்தையும், பாதாளத்தைச் சுரண்டும் அரசியல்வாதிகளையும், அவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு கொழிக்கும் பெரு வணிகர்களையும் அடையாளம் காட்டியுள்ளது.

மண்ணுக்குள் இருப்பதெல்லாம் அரசுக்கே சொந்தம் என்ற கோட்பாடு வருவாய்த் துறையில் பிரசித்தம். ஆனால், ஆற்றில் மணல் அள்ளுவதானாலும், கல்குவாரி நடத்துவதானாலும், கிரானைட் வெட்டி எடுப்பதாக இருந்தாலும், வருவாய்த் துறையினரின் ஆசி பெற்றவருக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இந்த வாய்ப்பைப் பெற ஆளும் கட்சியினரின் ஆதரவு, பல கோடி லஞ்சப் பணம் மடைமாற்றம், அதிகார வர்க்கத்தின் ஆதரவு ஆகியவை கண்டிப்பாகத் தேவை.

அதனால் தான் ஒரு மணல் லாரியில் 2 யூனிட் மட்டுமே மணல் ஏற்றப்பட வேண்டும் என்ற விதியை மீறி 5 யூனிட் வரை மணல் ஏற்றி அனுப்ப முடிகிறது; காவிரி ஆற்றில் இருந்து கேரளத்துக்கு அரசின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் மீறி மணல் அனுப்ப முடிகிறது; அரசுக்கு செலுத்தும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக மணல் விலையை அதிகரித்து கொள்ளை லாபம் ஈட்ட முடிகிறது. மணல் மட்டுமல்ல, ஓடைக்கல், சுண்ணாம்புக்கல் எடுப்பதிலும் கூட ஊழலே நேர்த்தியான வழிமுறையாக இருக்கிறது.

இந்தத் துறையில் நுழைய வேண்டும் என்றாலே, கவனிக்க வேண்டியவர்களைக் கவனிக்கும் திறம் இருந்தாக வேண்டும். அரசியல் பின்புலமும் இருந்தால், நீங்கள் சில வருடங்களில் கோடீஸ்வரர் ஆகலாம். சில தமிழ்த் திரைப்படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன் கோடீஸ்வரன் ஆவது கண்டு மெய் சிலிர்த்திருப்போம். அதை உண்மையாக ஆக்க முடியும்- நீங்களும் சாமார்த்திய சாலியாக இருந்தால்.

இங்கு சாமர்த்தியத்தின் அளவுகோல் – ஊழல் செய்யும் திறன் மட்டுமே. மண்ணுக்குக் கீழ் உள்ள எதையும் விற்க, அதை விற்பனைப் பொருளாக்க – கை நீட்டும் அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாக இருக்க வேண்டும். எல்லாம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் வரை. திடீரென விஷயம் வெளியானால் சிறையில் களி தின்னவும் (முதல் வகுப்புக்கு களி பிரச்னை இல்லையாம்!) தயாராக இருக்க வேண்டும். இப்போது மதுரையில் பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிசாமி சிக்கியுள்ளது போல.

பாறைகளில் மிகவும் கடினமாகவும், இழைக்கும்போது மெருகேறுவதாகவும் இருப்பது கிரானைட். சாதாரண கருங்கல்லில் தான் தரமான கிரானைட் பதிவுகள் இருக்கின்றன. கிரானைட் பதிவுகள் உள்ள பாறைகள் நல்ல விலைக்கு ஏலம் போகின்றன. இதற்கெனவே தமிழக அரசு நிறுவனமான ‘டாமின்’ செயல்படுகிறது. கனிம வளங்களைக் கண்டறிதல், கிரானைட் குவாரிகள் நடத்துதல் ஆகியவை இந்நிறுவனத்தின் பணிகள். குவார்ட்ஸ், கிராபைட், கிரானைட், லைம்ஸ்டோன் ஆகியவற்றின் குவாரிகளைக் கண்டறிவதும், ஏற்றுமதி செய்வதும் ‘டாமின்’ நிறுவன பணிகள் ஆகும். இதற்கென ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் நிபுணர்களும் கொண்ட பெரும் படை இந்நிறுவனத்தில் உள்ளது.

இங்கு தான் ஊழலில் ஊற்றுக்கண் துவங்குகிறது. டாமின் நேரடியாக குவாரிகளை நடத்துவதில்லை. கனிமவளம் உள்ள இடங்களைக் கண்டறிந்தவுடன் அங்கு குவாரி நடத்த ஏலம் விடுகிறது டாமின். அந்த ஏலம் அந்தந்தக் காலத்தில் மாநிலத்தை ஆளும் கட்சியினரால் கட்டுப்படுத்தப்படுவது தொடர்கதை நிகழ்வு. தவிர, வருவாய்த் துறையினரில் கிராம நிர்வாக அலுவலர் துவங்கி, வருவாய்த் துறை அமைச்சர் வரை பலரையும் கவனித்தால் தான் ஏல அனுமதி பெற முடியும். இவ்வாறு பல லட்சம் செலவு செய்ய சிறு தொழில் முனைவோரால் ஆகாது. பெரும்புள்ளிகள் பங்கேற்கும் இந்த ஏலமே ஒரு கண்கட்டு வித்தை. இதில் வெற்றி பெறுபவர் வற்றாத காமதேனுவாக அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காட்சி அளிப்பார். கட்சி பேதமின்றி அனைவரும் நன்கொடை பெற நாடுவது இத்தகைய பெரும்புள்ளிகளையே.

அண்மையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதுதொடர்பான மோசடிகள் வெளியாகி, அங்குள்ள பாஜக அரசுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கின. அப்போது விஷயம் புரியாமல் வேடிக்கை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், தமிழகத்தில் நடந்துள்ள கிரானைட் ஊழல் இப்போது வெளியாகி இருக்கிறது.

இந்த கிரானைட் ஊழலின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை விட அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இது தொடர்பாக முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் அளித்த அறிக்கைப்படி ரூ. 16,000 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம். அதாவது இந்த இழப்பு மதுரையில் செயல்படும் கிரானைட் குவாரிகளைக் கணக்கில் கொண்டு மட்டுமே தயாரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் உள்ள கல்குவாரிகள், கிரானைட் குவாரிகளில் நடைபெறும் ஊழல், மோசடிகளைக் கணக்கிட்டால் ஊழலின் அசுர வடிவம் நமக்கு புலப்படும்.

இந்த மோசடியை பல வகையாக மதிப்பிடுகிறார்கள். குவாரிகளில் தோண்டி எடுக்கப்படும் கிரானைட் அளவை குறைத்துக் காட்டுவது, 10 சதவீதம் மட்டுமே தரமான கிரானைட் என்று காட்டிவிட்டு மீதமுள்ள கிரானைட்களை கழிவுகளாக காட்டி வரி ஏய்ப்பு செய்வது, அனுமதி பெற்ற இடத்தின் அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களிலும் குவாரியை விஸ்தரிப்பது, அனுமதி இல்லாமலே பல இடங்களில் குவாரி நடத்துவது.. என கிரானைட் மோசடியின் இலக்கணங்கள் பல வகை. இந்த மோசடி எதையும் உள்ளூர் அதிகாரி முதற்கொண்டு அமைச்சர் வரையிலான படை பரிவாரங்களின் ஆசி இல்லாமல் நடத்த முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இப்போது மதுரையில் பரபரப்பாகப் பேசப்படும் கிரானைட் ஊழலும் இந்த வகையைச் சேர்ந்ததே. இப்போது பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பழனிசாமியுடன் பல அதிகாரிகளும் சிக்கி உள்ளனர். இதுவரை 21 பேர் கைதாகி உள்ளனர். இது குறித்து 22 இடங்களில் 18 குழுவினர் ஆய்வு செய்திருக்கின்றனர். இந்த அதிகாரிகள் குழு அளித்துள்ள சில முடிவுகளே ஊழலின் தொடரும் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. 5,000 கனமீட்டர், 10,000 கனமீட்டர் என்று மிகக் குறைவாகவே வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் மதிப்பு அளவிடப்பட்டுள்ளது. அநேகமாக, மேற்படி அளவீடுகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாக கிரானைட் அதிபர்கள் வரி செலுத்தி விட்டால், நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிவிட முடியும்.

ஆயினும், இப்போதைக்கு சூடான செய்தியாக கிரானைட் ஊழல் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் சென்ற திமுக ஆட்சியிலேயே துவங்கிவிட்ட ஒன்று என்பது அதிமுகவினருக்கு ஆறுதல். எனினும், ஆளும் கட்சியினர் திமுக மீது பழி போட்டு மொத்தமாக தப்பிவிட முடியாது. கனிமவளக் கொள்ளை குறித்து விஜயகாந்த், ராமதாஸ், பாண்டியன், வைகோ உள்பட பலரும் பேசத் துவங்கி இருக்கின்றனர். சந்தடி சாக்கில் காவிரி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடக் கூடாது என்பதே நாட்டுநலம் விரும்புவோரின் கோரிக்கை.

**********


பிரதமர் முகத்தில் நிலக்கரிப் பூச்சு

தமிழகத்தில் கிரானைட் ஊழல் என்றால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசை நிலைகுலையச் செய்திருக்கிறது மத்திய கணக்கு தணிக்கை ஆணையரால் அம்பலப் படுத்தப்பட்டுள்ள நிலக்கரி ஊழல். …

ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்திய அதே சி.ஏ.ஜி. (தேசத்தின் நன்றி, திரு. வினோத் ராய்க்கு என்றும் உண்டு), தற்போது, நிலக்கரி ஏலம் உள்ளிட்ட பல அம்சங்களில் மத்திய அரசின் மோசடியான அணுகுமுறையால் நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறது. குறிப்பாக நிலக்கரி சுரங்கங்களை பகிரங்கமாக ஏலம் விடாமல், தனியார் நிறுவனங்களுக்கு தாராளமாக வாரி வழங்கியதால் ரூ. 1.86 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் இழப்பு நேரிட்டிருப்பதாக சி.ஏ.ஜி. குற்றம் சாட்டி இருக்கிறது.

அதிலும் 2005 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் தான் இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக் காட்டி இருக்கிறது. மத்திய கணக்கு தணிக்கை ஆணையரின் அறிக்கையானது அரசை தடம் புரளாமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமைப்பு ஏற்பாடாகும். முன்னர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளை சி.ஏ.ஜி. கண்டறிந்து கூறியதால் தான் குற்றவாளிகள் அமபலமாகினர்; 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளேனும் அரசியல்வாதிகளிடமிருந்து தப்பின. அதேபோல, இப்போதும் நிலக்கரி ஏலமுறையில் நிலவும் மோசடிகளை வெளிப்படுத்தி இருக்கிறது சி.ஏ.ஜி. வழக்கம்போல, இப்போதும் இந்த அறிக்கையை எள்ளி நகையாடி, முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் நிலக்கரித் துறையை தன்வசம் வைத்திருந்தவர் ‘திருவாளர் தூய்மை’ என்று போற்றப்படும் நமது பிரதமர் மன்மோகன் சிங் தான். எனவே நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியது; இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்கியது. ஆயினும், மாநில அரசுகள் தான் நிலக்கரி ஒதுக்கீட்டில் ஏலமுறையை எதிர்த்ததாகக் கூறி, மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறது காங்கிரஸ். தற்போதைய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்று நிதி அமைச்சருடன் சேர்ந்து ஆலாபனை பாடுகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானபோது ‘பூஜ்ஜிய நஷ்டம்’ மட்டுமே ஏற்பட்டிருப்பதாக அதிமேதாவி அமைச்சர் கபில் சிபல் கூறியது நினைவுக்கு வருகிறதா?

இந்த விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய, பாஜக ஆளும் மாநிலங்களிலும் நிலக்கரி சுரங்கங்கள் ஏலமின்றி விடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கதைக்கின்றன. நிலக்கரி அமைச்சகம் மத்திய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அவை வசதியாக மறந்துவிட்டன. மிக விரைவில், இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) இவ்விஷயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல். எஜமானன் என்ன சொல்கிறாரோ அதை நிறைவேற்றும் வேட்டை நாயான சி.பி.ஐ. என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முந்தைய ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது, தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்த மன்மோகன் இப்போது என்ன செய்யப் போகிறார்? நாடாளுமன்றம் முடங்கினாலும், காங்கிரஸ் கட்சிக்கு கவலை இல்லை. தேசத்தின் பிரதமரே தன் முகத்தில் கரி பூசிக்கொண்டு தள்ளாடுவது நாட்டு மக்களுக்குத் தான் கவலை அளிக்கிறது. இன்னும் எத்தனை காலம் தான் இவர் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

ஈரோடு: கோவில் நிலத்தை அபகரித்த சி.எஸ்.ஐ – மோசடி!

ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான, சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரி ‘ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்கம்’ மற்றும் பொதுமக்கள் சார்பாக கடந்த 6 ஆண்டுகளாக, கண்டன ஆர்ப்பாட்டம், மனுக் கொடுத்தல், அடையாள உண்ணாவிரதம், ஒருநாள் கடையடைப்பு, ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம், பேரணி, பால்குட ஊர்வலம், திருவிளக்கு பூஜை, சாகும்வரை உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கோவில் நிலத்தை மீட்க பக்தர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பகுதி

காண்க:

ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!

ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உரிமை கொண்டாடி வரும் ஈரோடு சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது, அண்மையில் வெளியான நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியரின் விசாரணை அறிக்கை. இதன்மூலமாக, இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வரும் ஈரோடு ஹிந்து இயக்கங்களின் லட்சியம் பெரும்பகுதி நிறைவேறி உள்ளது. சி.எஸ்.ஐ, பிரப் தேவாலய கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி நிலத்தை மீட்டு கோவிலுக்கு பயன்படுமாறு செய்வதே, ஈரோடு ஹிந்து இயக்கங்களின் அடுத்தகட்டப் பணியாக இருக்கும்.

நடந்தது என்ன?

இதுநாள் வரை சி.எஸ்.ஐ. தரப்பில் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், ”ஈரோடு நகர பழைய புல எண்: 586, 587-ல் உள்ள கட்டிடம் மற்றும் இடம், லண்டன் மிஷனரி சொசைட்டி சார்பில் 12-08-1905-ல் நடைபெற்ற ஏலத்தில் முறையாக எடுக்கப்பட்டது; அதன் பின்னர் 19-01-1906-ல் கோவை மாவட்ட ஆட்சியரால் எச்.எ.பாப்ளி என்பவருக்கு புல எண்: 586, 587-ல் உள்ள 12.66 ஏக்கருக்கு உரிமைப் பட்டயம் (Sale Title) அளிக்கப்பட்டது; 12-12-1907-ல் எச்.எ.பாப்ளி என்பவர் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி உரிமைகளை லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬னுக்கு மாற்றம் செய்துள்ளார்; 14-04-1965-ல் லண்டன் மிஷ¬னரி சொசைட்டி கார்ப்பரே¬ன் பதிவு செய்யப்பட பத்திரம் மூலமாக, மேற்படி சொத்துக்களை தென்னிந்திய திருச்சபைக்கு மாற்றம் செய்துள்ளனர்; அது முதல் மேற்படி சொத்துக்கள் தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்பது தான்.

இந்த வாதத்தின் அடிப்படையிலேயே, ஈரோட்டின் மையப் பகுதியில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, ‘சிறுபான்மையினர்’ என்ற போர்வையில் அழிச்சாட்டியம் செய்து வந்தது சி.எஸ்.ஐ.

ஈரோடு வட்டாட்சியரிடம் பட்டா பெற இயலவில்லை

இந்நிலையில், சி.எஸ்.ஐ. நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு அவர்களிடம் உள்ள ஆவணங்களைக் கொண்டு ஈரோடு வட்டாட்சியரிடமிருந்து (தாசில்தார் ), பட்டா பெற இயலவில்லை. எனவே, தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரி, சென்னையில் உள்ள உதவி நிலவரித் திட்ட அலுவலரை 2010ம் ஆண்டில் அணுகினர்.

முறையற்ற ஆணை

வழக்கிடைப் புலங்கள் இன்றைய பராமரிப்பில் உள்ள நகரளவை ஆவணங்களின்படி அரசு புறம்போக்கு என பதிவாகி உள்ள நிலையில், ‘Custodian of Land’ என்ற முறையில், ஈரோடு வருவாய் வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமலேயே, சென்னை-5 நிலவரித்திட்ட அலுவலரால் 30-6-2010-ம் நாளன்று முறையற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்கண்ட 30-6-2010-ம் நாளிட்ட உத்தரவுக்கு எதிராக, ஈரோடு மக்கள் நலம் நாடுவோர் சங்கம், ஈரோடு அருள்மிகு மாரியம்மன் பக்தர்கள் சங்கம், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் ஆகியோர் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையருக்கு மேல் முறையீடு செய்தனர்.

நிலவரித் திட்ட ஆணையர் மறு விசாரணைக்கு உத்தரவு

மேல் முறையீட்டு மனுக்களை ஏற்றுக் கொண்ட நிலவரித்திட்ட ஆணையர் (Commission of Land Revenue & Settlement), “ஈரோடு வட்டாட்சியரை விசாரணைக்கு உட்படுத்தாமல், நிலவரித் திட்ட உதவி அலுவலர் பிறப்பித்த ஆணை சரியானதல்ல” என்று கூறி, அவ்வாணையை ரத்து செய்து மறு விசாரணைக்கு (Denovo Enquiry) உத்தரவிட்டார். (கடிதம் தேதி : 30-03-2011).

அக்கடிதத்தில் கூறியுள்ளதாவது: “வழக்கிடைப் புலங்கள் தொடர்பாக ஈரோடு வட்டாட்சியரை விசாரணை செய்து, ஆவணங்களை விரிவாக பரிசீலனை செய்து, தகுதி மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு முடிவு செய்ய ஏதுவாக மறு விசாரணைக்கு (Denovo Enquiry) ஈரோடு நகர வருவாய் பின் தொடர்பணி நிலவரித் திட்ட வட்டாட்சியருக்கு மீட்டனுப்பி உத்தரவிடுகிறேன்”.

நிலவரித் திட்ட வட்டாட்சியர் மறு விசாரணை:

இதனடிப்படையில் சென்னை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்ட ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, vநிலவரித் திட்ட வட்டாட்சியரால் (Settlement Tahsildhar) தாவா குறித்து (Denovo Enquiry) மறு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த எழுத்து மூலமான வாக்குமூலம், ஆஜர்படுத்திய ஆவணங்களின் நகல்கள் யாவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நிலவரித் திட்ட தனி வட்டாட்சியருக்கு எழுத்து மூலமாக, சி.எஸ்.ஐ. நிறுவனத்தினர் அளித்த வாக்குமூலத்தில் “விற்பனைச் சான்றும் மற்ற உரிமைப் பத்திரங்களும் (Title Deeds) எங்களால் உண்மைக்குப் புறம்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு கவுரவத்தை குறைப்பதற்கு மேல் ஒன்றுமில்லை. சி.எஸ்.ஐ. அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும், ஒருபோதும் கற்பனையான உண்மைக்குப் புறம்பான ஆவணங்களைத் தயார் செய்திட வளைந்து கொடுத்ததில்லை. சி.எஸ்.ஐ. சாதி, மத, மொழி, கொள்கை வேறுபாடின்றி எல்லா வகையான மக்களுக்கும் சேவை செய்து கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. மத சிறுபான்மையோராகிய எங்களின் உரிமைகளையும் நலன்களையும் காப்பாற்ற வேண்டிய முதற்கடமை அதிகாரிகளுக்கு உள்ளது என்பதைச் சமர்ப்பித்துக் கொள்கிறோம்” என்று கூறினர்.

நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் அளித்த விசாரணை அறிக்கை:

விசாரணையின் இறுதியில் நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையின் சுருக்கம் (ந.க.எண்: 0041/2012 ; நாள் : 10-07-2012 ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வழக்கிற்காக தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள்: விசாரணையில் கண்டுபிடிப்பு

ஈரோடு நகரில் சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்திற்கு இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்ததற்கான பத்திரத்தை எச்.ஏ.பாப்ளியோ அல்லது அவருக்குப் பின்னிட்டவரான அந்தோணி வாட்சன் பிரப் துரையோ அல்லது தற்பொழுது சொத்தில் உரிமை கொண்டாடும் சி.எஸ்.ஐ. நிறுவனமோ ஆஜர்படுத்தவில்லை. எனவே, ஏலமிட்டதாகக் கூறப்படும், ஏல ஆவணங்கள் யாவும் விதிமுறைகளுக்குப் புறம்பானதாகவும், சட்டத்திற்குப் புறம்பானதாகவும், வேண்டுமென்றே இந்த வழக்கிற்காக போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என தெளிவாகிறது.

எந்த ஆவணங்களிலும் எச்.ஏ.பாப்ளியின் கையெழுத்து இல்லை.

எச்.ஏ.பாப்ளி 12-08-1905-ல் ஈரோடு டிவிசன் டிப்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் செட்யூலில் கண்டுள்ள சொத்துக்களை முழுத் தொகை அதாவது ரூ.12910/- கொடுத்து விலைக்குப் பெற்றதாக Sale Certificate ரூ.100/-க்கான முத்திரைத் தாளில் வழங்கப்பட்டுள்ளது. கையில் எழுதப்பட்டுள்ள இந்த சான்றில் செட்யூல் என்ற இடத்திற்கு நேராக கையயாப்பம் இடப்பட்டுள்ளது. அதன் கீழ் Collector என்று எழுதப்பட்டுள்ளது.
கையொப்பம் இடப்பட்ட தேதி, கலெக்டரின் முத்திரை, செட்யூலில் ஏலமிடப்பட்ட நில விவரம் ஆகியன எதுவுமில்லை. ஏல ஆவணங்கள் எனில் ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம், ஏலம் கூறிய விவரம், அவர்களின் கையயாப்பம், அதிக ஏலத் தொகை, ஏலத் தொகை எண்ணால் எழுத்தால் குறிக்கப்படும், ஏலச் சொத்து விபரம் குறிக்கப்பட்டும் இருக்க வேண்டும்.
ஏலம் நடைபெற்றதற்கான ஆவணங்களோ, ஏல ஆவணத்தில் எச்.ஏ.பாப்ளி கையயாப்பமிட்ட ஆவணங்களோ எதுவுமில்லை. வழங்கப்பட்ட ஏலச் சான்றுக்கு கோப்பு எண், தேதி விவரங்கள், வழங்குவோரின் பதவி முத்திரை எதுவுமில்லை.

உயிரற்ற உரிமைப் பத்திரம்

எச்.ஏ.பாப்ளி பெயரில் உள்ள உரிமைப் பட்டயம் (Title Deed) அதாவது நிலப்பட்டா மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டது. உரிமைப் பட்டயம் (Title Deed) இந்த வழக்கின் (Life) உயிர் போன்றது. மற்ற ஆவணங்கள் உடல். மற்ற ஆவணங்களுக்கு உயிரூட்டும் வல்லமை உரிமைப் பட்டயத்திற்குத்தான் உண்டு. ஆனால், இந்த வழக்கில் உரிமைப் பட்டயம் உயிரற்றதாக உள்ளது. எனவே, ஏல ஆவணங்கள் அனைத்தும் செயல்நிலை அற்றதாகவும், மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளன.

ஏலம் எடுத்த சொத்துக்களின் உரிமையை லண்டன் மிஷன் மற்றும் சி.எஸ்.ஐ.க்கு மாற்ற, பாப்ளிக்கு அதிகாரம் இல்லை.

சி.எஸ்.ஐ. வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தின் உரிமை, ஏலத்தில் எடுத்தகாகக் கூறப்படும் எச்.ஏ.பாப்ளிக்கு இல்லாதபோது, அவர் லண்டன் மிசனுக்கு (தற்போதைய சி.எஸ்.ஐ.) சொத்துக்களின் உரிமையை 1907-ஆம் ஆண்டில் மாற்றிக் கொடுக்க அதிகாரமற்றவர், அருகதையற்றவர். ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் நிலவரி மற்றும் ஏலத் தொகையையும் செலுத்தியதற்கான செல்லுச் சீட்டினையும், பாப்ளி பெற்றிருக்கவில்லை.அத்தகைய ரசீதுகள். ஆவணங்கள் சி.எஸ்.ஐ. சொத்து மேலாளர் விசாரணையில் கொடுக்கவில்லை.

பத்திரப் பதிவில் மோசடி : ஒரு கிரிமினல் குற்றம்

ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்களின் மதிப்பு 1905-ஆம் ஆண்டில் ரூ.12,910.00 செலுத்தியதற்கு ரசீது யாதொருவரும் ஆஜர்படுத்தவில்லை. எச்.ஏ.பாப்ளியும் இது குறித்து 1907-ஆம் வருடத்திய பதிவுப் பத்திரத்தில் சர்வே எண்கள். 586 & 587 தனக்கு இன்ன வகையான, இன்ன ரூபாய்க்கு பெறப்பட்டது என்று குறிப்பிடவில்லை. உரிமை பட்டயத்தில் (Title Deed) சர்வே எண்கள். 586 & 587 குறிப்பிடாத போதும் அத்துடன் இணைக்கப்பட்ட அட்டவணையில் (Schedule) தவறான நில வாடகை குறிப்பிட்ட நிலையிலும், 1907-ஆம் வருடத்திய பத்திரப் பதிவு மோசடியானது. இரு ஒரு கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது. இவ்வாறு ஈரோடு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

நகர நிலவரித் திட்ட வட்டாட்சியர் பிறப்பித்துள்ள ஆணை

இவ்வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்தபின், நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் கீழ்க்கண்ட ஆணையை பிறப்பித்துள்ளார்:

  1. சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் Title Deed-ல் நிலப்பட்டாவில் சர்வே எண், எந்த சர்வே எண்ணுக்கு, எவ்வளவு விஸ்தீரணம், ஒவ்வொன்றுக்கும் கிரவுண்ட் ரெண்ட் எவ்வளவு எனக் குறிப்பிடாததாலும், ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்கும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஆவணங்களில் உள்ள பதிவுகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லாததாலும், 1902-ஆம் வருடத்திய இந்திய முத்திரைச் சட்டத்தின்படி பத்திரப் பதிவு இல்லாததாலும், ஏலம் நடந்ததாகக் கூறப்படும் ஏலத்தொகை செல்லானதற்கு செல்லுச் சீட்டு இல்லாததாலும், சி.எஸ்.ஐ. தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கலெக்டரின் கையயாப்பம் ஒன்றுக்கொன்று முரண்பாடாக ஒத்துப் போகாமல் வேறுபாடாக உள்ளதாலும், இவ் ஆவணங்கள் யாவும் மெய்த்தன்மைக்கு அப்பாற்பட்டிருப்பதாலும், சுருக்கமாக சர்வே எண். இல்லாமல் Title Deed (A Physique without soul) உள்ளதாலும், அதில் உள்ள நிலவரி GR ‘அ’ பதிவேட்டிற்கு மாறுபடுவதாலும், (Schedule)-லில் உள்ள GR ‘அ’ பதிவேட்டில் உள்ள பதிவுகளுக்குப் புறம்பாக உள்ளதாலும், சி.எஸ்.ஐ. ஆஜர்படுத்திய ஆவணங்கள் மெய்த்தன்மைக்கு புறம்பாக இருப்பதாலும், சி.எஸ்.ஐ.யின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
  2. மேற்படி எச்.ஏ.பாப்ளி பதிவு செய்த ஆவணம் எண்: 3067.1907/ நாள் 12-12-1907-ல் கண்டுள்ள ஏலமிட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டவுடன் இந்திய முத்திரைச் சட்டம் 1902-ன்படி பதிவு செய்யப்படாமல், உள்நோக்குடன் தயார் செய்யப்பட்ட மோசடிக் கிரையம் என்பதாலும், Title Deed -ல் நிலப்பட்டாவில் குறிப்பிடாத சர்வே எண்களைக் குறிப்பிட்ட மோசடிக் கிரையப் பத்திரத்தினை ஏற்படுத்தி அரசை ஏமாற்றி தனக்கில்லாத உரிமையினை லண்டன் மிஷனுக்காக மாற்றிக் கொடுத்துள்ளார் எச்.ஏ.பாப்ளி.
  3. இந்த நில மோசடியானது கிரிமினல் குற்றம் என்பதாலும், பாப்ளியின் கிரையப் பத்திரத்தினைத் தொடர்ந்து 1965-இல் சி.எஸ்.ஐ. மிஷனுக்கு சொத்துக்கள் மோசடியாக மாற்றப்பட்டிருப்பதும் கிரிமினல் குற்றமாகும் என்பதாலும், சி.எஸ்.ஐ. உதவி சொத்து மேலாளரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
  4. ஈரோடு டவுன் பழைய சர்வே எண்: 586, 587 பரப்பளவு 12.66 ஏக்கரின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 900 கோடிக்கும் மேற்படுவதால், அரசு சொத்துக்களின் பாதுகாவலர் (Custodian of Govt. Properties) என்ற முறையில் மேற்படி சொத்துக்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுரை பெற்று செயல்பட ஈரோடு வருவாய் வட்டாட்சியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
  5. பத்திர எண்: 3067 & 1907-ல் ஈரோடு நகர பழைய சர்வே எண்: 586, 587 தவிர பிற சொத்துக்கள் உள்ளதால், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் அவர்களின் உத்திரவு பெற்று பிற சொத்துக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  6. ஈரோடு நகரம் பழைய சர்வே எண்: 586, 587-க்கு டவுன் சைட் அரசு புறம்போக்கு என ஏற்கனவே உள்ளவாறே ஆவணங்களில் பதிவு செய்திட உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்நிலங்கள் யாவும் அரசு புறம்போக்காக ஏற்கனவே உள்ளதால், வருவாய்த்துறை புதிதாக சுவாதீனம் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமித்து வைத்துள்ள கோவில் இடம்

சி.எஸ்.ஐ. நிர்வாகமே! சேவை என்பது பெயரில் மட்டும்தானா?

இந்த உத்தரவு குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள சி.எஸ்.ஐ. நிர்வாகிகளான ஐ.ஆல்ட்ரின் ராஜேஸ்குமார் (பிரப் மெமோரியல் சர்ச் அஸிஸ்டண்ட் பிராபர்ட்டி மேனேஜர்) மற்றும் பாதிரியார் சாந்தக்குமார் ஆகியோர், “இந்த அறிக்கையானது ஒருதலைப்பட்சமானது மட்டுமின்றி, ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கு எதிரானதாகும். இது உண்மையிலேயே அரசு புறம்போக்காக இருந்தால், இத்தனை நாட்களாக எவ்வாறு நாங்கள் பயன்படுத்தியிருக்க முடியும்? ஆகவே, இது குறித்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.
அடித்தள மக்கள், ஏழைகள், உதவி வேண்டுபவர்களுக்கு போராடி வரும் நிறுவனமாகும் என்று கூறும் நிர்வாகம், மோசடியான கிரையப் பத்திரம் என விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரும், அபகரித்துள்ள ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுக்க முன் வராதது ஏன்? சேவை என்பது பெயரளவில் மட்டும்தானா? என ஈரோட்டு மக்கள் கேட்கின்றனர்.

சி.எஸ்.ஐ., பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி – சென்னை உயர்நீதிமன்றம்

தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், கோவை பதிப்பில் 27-மார்ச்-2012ம் தேதி வெளியான ஒரு செய்தியில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எஸ்.ராஜேஸ்வரன் அளித்துள்ள ஒரு தீர்ப்பில், ‘’சி.எஸ்.ஐ. (Church of South India) என்பது தொண்டு நிறுவனம் அல்ல; இந்திய கம்பெனிகள் பதிவு சட்டத்தின்படி 1947-48-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பெனி ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெளிவந்துள்ள அறிக்கை மேற்கண்ட தீர்ப்புக்கு மேலும் வலுசேர்க்கும் வண்ணம் உள்ளது.

ஈரோடு மக்களின் எதிர்பார்ப்பு

ஈரோடு மக்களும், மாரியம்மன் பக்தர்களும் இதுநாள் வரை கூறிவந்த குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக, சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்புள்ள நிலத்தை மீட்டு, அங்கு ஸ்ரீ பெரிய மாரியம்மனுக்கு ராஜகோபுரத்துடன் கூடிய மிகப் பிரமாண்டமான ஆலயம் அமைக்க விரும்புகின்றனர். இதுவே ஈரோடு மக்களின் பெருவிருப்பம் ஆகும். இதை நிறைவேற்றுவது கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறையின் கடமை.
அதேபோல ஈரோட்டின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க திட்டமிடப்பட்டுள்ள உள்ள 80 அடி சாலை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.

அரசுக்குச் சொந்தமான நிலத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக மோசடியாக அனுபவித்து வந்ததற்காக சி.எஸ்.ஐ. நிர்வாகத்திடம் அதிகபட்ச குத்தகை கட்டணமும், போலி பத்திரங்களை தயார் செய்ததற்காக சட்ட ரீதியான கடும் தண்டனையும் வழங்க வேண்டுமென விரும்புகின்றனர்.

மேலும் சி.எஸ்.ஐ. நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற சொத்துக்கள் குறித்தும் ஆழமான விசாரணை நடத்த வேண்டுமென்றும் விரும்புகின்றனர்.

இந்த விஷயத்தில், இனி அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொதுமக்களும், அம்மன் பக்தர்களும் அமைதியுடன் கூர்ந்து கவனித்து வருகின்றனர். மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சம் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

(சேக்கிழான் உதவியுடன்)


ஆதாரம் (Source) :

ஈரோடு நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் திரு. சு.சம்பத் அவர்களின் விசாரணை அறிக்கை (ந.க.எண்.0041/2012; நாள்: 10-07-2012).


இணைப்பு:
1) விசாரணை அறிக்கை
2) பத்திரிகை செய்திகள்.

ஒரு நதியின் நசிவு

கோள் நிலைதிரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

4000-year-old-iron-age-settlement-unearthed-at-adichanallurஎன்கிறார் இளங்கோ அடிகள் காவேரியைக் குறித்து. காவேரியைப் போன்ற விஸ்தீரணமும் நீளமும் அகலமும் கிளையாறுகளும் இல்லாமல் போனாலும்கூட தென் தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதியாக இருந்து வரும் நதி தாமிரவருணி. இந்த நதியின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இதன் கரையில் கற்கால நாகரிகம் செழித்து வளர்ந்ததை ஆதிச்ச நல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். பொருநை ஆறு அல்லது தாமிரவருணி நதி, திருநெல்வேலியின் மேற்கே பாபநாசத்திற்கு மேலே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள பொதிகை மலையில் உற்பத்தியாகி, பல சிற்றாறுகளுடன் சேர்ந்து, தாமிரம் வரும் நீராக திருநெல்வேலி நகரை அடைந்து, அதன் பின்னே கிழக்கே ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, ஏரல் போன்ற ஊர்களின் வழியாக, கிட்டத்தட்ட 125 கிலோமீட்டர்கள் ஓடி, திருச்செந்தூருக்கு அருகே உள்ள புன்னைக் காயல் என்ற இடம் அருகே கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்று அல்லது ஒன்றே ஒன்று. இரண்டு பருவ மழைகளினாலும் நீரைப் பெறுவதால் இது வற்றாத நதியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு நதி. வேறு உருப்படியான தொழில்கள் இல்லாத திருநெல்வேலி மாவட்டத்தை நெற்களஞ்சியமாக ஆக்கும் நதி. பாலாறு, மணிமுத்தாறு, காரையாறு, சேர்வலாறு, வராக நதி, சித்தாறு, போன்ற பல கிளை நதிகள் இதில் கலக்கின்றன. ஓரளவுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்து மக்களின் தாகம் தீர்க்கும் நதி. இரண்டு மாவட்டங்களின் உயிரோட்டம். பல ஊர்களுக்கு ஒரே பிடிமானம், ஆத்மா, வாழ்க்கையின் ஒரு பகுதி, ஜீவநாடி. ஒரு காலத்தில் மாசு படாமலும், அழகாகவும் இருந்து கரைபுரண்டோடிய நதி. பத்தினிப் பெண்டிருக்காக ஒரு முறையும், அறநெறி தவறா அந்தணர்க்கு ஒரு முறையும், நீதி வழுவா மன்னருக்கு ஒரு முறையுமாக மாதம் மும்மாரிப் பொழிந்ததாகக் கூறப்படும் மழையினால் வற்றாமல் ஓடிய ஜீவநதி.

தாமிரவருணியின் தோற்றம் முதல் அது வங்காள விரிகுடாவில் கலக்கும் சங்கமம் வரை ஆழ்வார்களால் பாடப் பட்ட வைணவக் கோயில்களும், பல்வேறு சைவக் கோயில்களும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு அமைந்திருக்கின்றன. தமிழையும் சமயத்தையும் வளர்த்த நதி. பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த கழனிகளின் நடுவே இன்றும் நிமிர்ந்து நிற்கும் அக்கோயில்கள் ஆற்றின் கரையைத் தழுவிக் கொண்டு அமைந்திருக்கின்றன.

thamirabarani1எந்தவொரு நதியுமே வெறும் உயிரற்ற நீர் ஓடும் பாதை மட்டும் அல்ல. நதிகள் அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின், நாகரிகத்தின், பண்பாட்டின், கலைகளின் மூலாதாரமும் கூட. ஒரு நதியின் வரலாறு என்பது அந்தப் பிராந்தியத்தின் வரலாறு. ஆறுகள் தந்த செழுமையினாலும் வளத்தினாலும் அந்த வளம் தந்த சூழலினாலுமே கலைகளும் நாகரிகமும் செழித்து வளர்ந்தன. நதிக்கரைகளிலேயே உலகின் மாபெரும் மனித நாகரிகங்கள் உருவாயின. நாகரிகம் வளர, கலைகள் வளர்ந்தன; கலைகள் வளர ஆற்றின் கரைகளில் அந்த நதிகளை அளித்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கோயில்கள் வளர்ந்தன. இவ்வாறாக நதியின் வளத்தால் சமயங்களும் பக்தியும் கலைகளும் பண்பாடும் அவை உருவாக்கிய வரலாறும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க இயலா வண்ணம் இணைந்தே வளர்ந்தன. நதிகள், வனங்கள், மலைகள், நில வளங்கள், சமுத்திரங்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை; உலகத்தின் மக்களும் இல்லை. இயற்கையே நம் வாழ்க்கையின் ஆதாரம். அப்படிப்பட்ட முக்கியமான இயற்கை வளமான நதி வளத்தை, நம் பாண்பாட்டின், கலைகளின் ஆதாரத்தை நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகிறோம். நதிகள் மட்டும் அல்ல, அவை வளர்த்த கலைகளையும், பண்பாட்டுச் சின்னங்களையும் நாம் எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதற்கு ஒரு சிறு உதாரணமே தாமிரவருணி நதியின் இன்றைய நிலை. இன்று தமிழ்நாட்டின் எந்தவொரு நதியை எடுத்துக் கொண்டாலும் எந்தவொரு நீர் ஆதாரத்தை, வன வளங்களை எடுத்துக் கொண்டாலும் இந்த அவல நிலைதான் நீள்கிறது.

முக்கியமாக தாமிரபரணி ஆற்று நீர் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பாசனத்திற்குப் பயன்பட்டு வந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் உள்ள சுமார் நானூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது. ஆனால் அப்படி எல்லாம் தண்ணீர் ஓடிய ஆறு இப்போது பல மாதங்களில் மணல் மட்டுமே காட்சி தருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி வரும் ஆற்று மணலில் தோரியம் என்ற அரிய தனிமம் உள்ளது. மணல் எடுப்பதால் தோரியம் தாதுவும் அழிந்து வருகிறது.

sand-theft2ஓர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு தாமிரவருணி நதிக்கரையோரமாகச் சென்றிருந்த பொழுது அந்த நதியின் படுகை முழுவதுமே கொள்ளையடிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அதன் முழு நீளத்திலும் பல்வேறு இடங்களில் போர்க்கால அவசரத்துடன் மணலைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தாமிரவருணி ஓடும் பல இடங்களில் ஆற்று மணலை அரசாங்கமே தோண்டி விற்றுக் கொண்டிருந்தார்கள். பேர்தான் அரசாங்கம் தோண்டுகிறது என்றாலும் தோண்டும் பணியைச் செய்பவர்கள் தனியார்களே. ஒரு நாளைக்கு ஒரு தோண்டும் இடத்திலிருந்து மட்டும் 5000 லாரிகள் மணலை அள்ளிக் கொண்டு சென்றன. அவ்வளவு மணல் தேவைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் என்று இல்லை, தமிழ்நாட்டில்கூட கட்டிடப் பணிகள் எதுவும் நடப்பதில்லை. எல்லா மணல் லாரிகளும் கேரளாவுக்கு மணலைக் கொண்டு சென்றன. அங்கு அதை என்ன செய்கிறார்கள், யார் வாங்குகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. கேரளா ஒன்றும் நீர்வளம், மணல்வளம் இல்லாத ஊர் இல்லை. ஆனால் அங்கே மணல் எடுப்பதைத் தடுக்க கடுமையான சட்டங்களும் அதைச் சரிவரப் பாதுகாக்கும் கெடுபிடிகளும் இருப்பதால், ஏமாளிகள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து அங்கே எடுத்துப்போய் ஏராளமான விலைக்கு விற்கப்படுகிறது.

sand-theft1தாமிரவருணி என்றாலே தாமிரம் வரும் நீர் என்று அர்த்தம். கனிம வளம் நிறைந்த மணல் அது. ஒரு லாரி லோடில் கிட்டத்தட்ட 5000 ரூபாய் எல்லா லஞ்சச் செலவுகளும் போக லாபம் மட்டும் கிட்டுகிறது என்றார்கள். நமக்கு வீட்டுத் தேவைக்கு வரும் லாரி லோடையும் இந்த லாரிகளையும் ஒப்பிடாதீர்கள். நம் வீட்டுக்கு வரும் லாரியைப் போன்று மூன்று மடங்கு மணல் கொள்ளக் கூடிய பத்து டயர்கள் கொண்ட டிப்பர் லாரிகள். ஆனால் அரசாங்கத்திற்குக் கணக்குக் காண்பிப்பதோ ஒரு சாதாரண லாரி லோடு மட்டுமே. குறிப்பிட்ட அளைவை விட பல மடங்கு அதிகமாக அள்ளுவதாகப் பலரும் குற்றம் சாட்டினார்கள். அள்ளிய மணல் அருகில் உள்ள பல காலியிடங்களில் குவித்து வைக்கப்பட்டு தேவைக்கேற்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தன. மலைமலையாய் ஆற்று மணல் குவித்து வைக்கப் பட்டிருந்தன. 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு ஆற்றுப் படுகை வெடிகுண்டுகளால் பறிக்கப்பட்ட ஈராக் போல குண்டும்குழியுமாக, கண்றாவியாகக் காட்சியளித்தன. பெரும் தோண்டும் இயந்திரங்கள் வைத்து ஆற்று மணல் அள்ளப் படுவதை சர்வ சாதாரணமாகக் காண முடிந்தது. இத்தனையாயிரம் லாரிகள் கிராமங்களுக்குள் ராட்சத்தனமாகச் சென்று கிராமத்தின் அமைதியை இரவு பகல் பாராமல் குலைத்தன. வீடுகளுக்குள் மண்வாரித் தூற்றின. சாலைகள் அனைத்தும் இதன் கனமும் போக்குவரத்தும் தாங்காமல் குண்டும் குழியுமாக மாறின. எங்கும் மணல் புழுதிப் புயலாக வீசியது. ஆற்று நீரும் மணலும் வற்றியதால் சுற்றியிருந்த பகுதிகளின் கிணறுகளும் வற்றத் தொடங்கின. இயற்கை தந்த செல்வத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியினரும் அந்த ஊர்களின் செல்வாக்குள்ளவர்களும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்தனர். இதன் பாதிப்புகளைப் பற்றி மக்களும் கவலைப்படுவாதாயில்லை. எதிர்ததுக் கேள்வி எழுப்பிய ஒரு சிலரும் மர்மமான முறையில் இறந்து விட்டனர். இருபத்தினாலு மணி நேரமும் தொடர்ந்து அரசாங்க அனுமதியுடன், அரசியல் துணையுடன் தாமிரவருணி ஆற்றின் இயற்கை வளம், அதன் அழகு, எல்லாம் கற்பழிக்கப்பட்டதன் விளைவை இந்த முறை ஐந்து வருடங்கள் கழித்துச் சென்றபொழுது பூரணமாக உணர முடிந்தது. சேது சமுத்திரத் திட்டம் போட்டு கடல் மணலையே அள்ளியவர்கள் ஆற்று மணலையா சும்மா விடுவார்கள்? சுத்தமாகத் துடைத்து இனி எடுப்பதற்கு ஏதுமே இல்லையென்ற நிலையில் கொண்டு நிறுத்தி விட்டார்கள். இப்பொழுது ஒட்டுமொத்த நதி ஓடும் பாதையிலும் ஆற்று மணல் என்பதே இல்லாமல் போய் விட்டது.. இனி இந்த அளவு ஆற்று மணல் சேர பல நூறாண்டுகள் ஆகலாம். பல நூற்றாண்டுகளாக ஆறுகள் மலைகளை அரித்து அரித்து இயற்கையாகச் சேகரிக்கப்பட்ட ஆற்று மணல் அனைத்தும் ஒட்டு மொத்தமாகக் கொள்ளை போய் இன்று சகதிகள் மட்டுமே மிச்சமிருக்கின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நதிகளின் நிலையும் இப்படித்தான் இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

riverbathஇயந்திரம் எதையும் பயன்படுத்தாமல் மணலை வாரித்தான் எடுக்க வேண்டும். தரைமட்டத்திலிருந்து அரை மீட்டர் ஆழத்திற்குள் மட்டும்தான் மணல் எடுக்க வேண்டும். நீர் மட்ட அளவுக்குக் கீழ் மணல் எடுக்கக் கூடாது. குடிநீர்க் கிணறுகள் மற்றும் பம்புகளிலிருந்து 500 மீட்டருக்குத் தொலைவில்தான் மணல் எடுக்க வேண்டும்… என்று எக்கச்சக்கமான சட்டதிட்டங்கள் இருந்தாலும் அரசியல்வாதிகளின் பேராசையினால் தமிழ்நாட்டின் மிக அரிய ஓர் இயற்கை வளம் சில பத்தாண்டுகளுக்குள் மொத்தமாகக் கொள்ளை போயிருக்கிறது. முன்பு என் சிறு வயதில் தினமும் ஆற்றில் குளிக்கச் செல்தல் எங்களுக்குப் பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மைல் ஒன்றரை மைல் அகலத்திற்கு பரந்த வெண் மணற்பரப்பு இரண்டு புறமும் விரிந்து கிடக்க, கோடைக்காலங்களில் நடுவேயும், மழைக்காலங்களில் பொங்கிக் கரை கொள்ளாமலும் கடலை நோக்கி ஓடும் அந்த நதியைப் பரவசத்துடன் பல முறை கண்டு, குளித்து, அனுபவித்திருக்கிறேன். பெரிய கழிவுகள் எதுவும் ஆற்றில் கொட்டப்படாத பொற்காலம் அது. பௌளர்ணமி நிலவு நாள்களில் சித்திரான்னங்களுடன் ஆற்றில் குளித்து விளையாடி உணவருந்திச் சென்றிருந்த கனவுக் காலம் அது. நிலவு போன்ற வெண்ணிற மணற் பரப்புகளில் அலுப்பே தெரியாமல் காலையும் மாலையும் விளையாடிய விளையாட்டுக் காலம் அது. நீரில் இறங்கி விட்டால் நேரம் போவது தெரியாமல் பல மணி நேரங்கள் அலுப்பின்றி நீந்திக் களித்துக் கண்கள் சிவக்க வெளிவந்த கவலையற்ற பருவம் அது. வற்றாத ஜீவநதி அது. இந்த ஆறு அப்படி இருந்தது என்று இன்று யாராவது சொன்னால் பொய் சொல்கிறான், கனவுலகில் இருக்கிறான் என்று நினைத்து நம்ப மாட்டார்கள். ஆம் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட அது ஒரு வாழும் நதியாகத்தான் இருந்தது. உண்மை; வெறும் கற்பனையில்லை.

கருவேலமரக் காடும் மணற்கொள்ளையும் பின்னே கழிவும்

sand-theft4மூன்று பெரும் அழிவுகள் இந்த ஆற்றின் வனப்பை, ஜீவனை இன்று அழித்து வருகின்றன. அவை அரசியல்வாதிகளின் பேராசையினால் விளைந்த மணல் கொள்ளையும் அரசாங்கத்தினரின் அலட்சியத்தினால் உருவான சீமக் கருவேல மரங்களின் வளர்ச்சியும் கட்டுப்பாடில்லாமல் ஆற்றினுள் விடப்படும் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவு மற்றும் ப்ளாஸ்டிக், பாலித்தீன் குப்பைகளும் ஆகும். இன்று மணல் களவு போய் வெறும் சேறும் சகதியுமாக பாழ்பட்டுக் குற்றுயிரும் குலையுருமாக, நானும் இருக்கிறேன் என்று களையிழந்து ஜீவனின்றிக் கிடக்கின்றது. ஆற்று மணல் கொள்ளை ஒருபுறம் என்றால் கட்டற்று ராட்சசன் போல வளர்ந்து நிற்கும் சீமைக் கருவேல மரங்கள் அந்த நதிக்கு மற்றொரு யமனாக வாய்த்திருக்கிறது. இந்த இரு பெரு நாசங்களையும் தவிர வழியில் உள்ள நகரங்கள் முழுவதிலும் பெருத்த மக்கள்தொகையின் அத்தனைக் கழிவுகளும் நதியில் கொட்டப்படுவது மற்றுமொரு சீர்கேடு. பல்லாயிரம் ஆண்டுகளாக செழிக்கச் செழிக்க உணவு உற்பத்தியின் ஆதாரமாக இருந்த நதி இன்று மற்றொரு கூவமாக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது நதியின் பாதையில் பெரும்பான்மையான இடங்களில் ஆற்றின் அருகே சென்று பார்க்கவே முடியாத வண்ணம் சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக ஆற்றங்கரைகளிலும் ஆற்றின் உள்ளேயும் வளர்ந்துள்ளன. முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் காரில் செல்லும் பொழுதே நதியின் ஓட்டத்தைப் பார்க்கலாம். இப்பொழுது சுத்தமாக அடர்ந்து வளர்ந்த சீமக் கருவேல முள்மரங்களும் பார்த்தீனியச் செடிகளும் பெரு வனமாக வளர்ந்து நதியை மறைத்து விடுகின்றன. அருகில் சென்றால் கூட ஆற்று நீரின் ஓட்டத்தைக் காண முடிவதில்லை. தண்ணீர் பெருக்கெடுத்துப் போகும்பொழுது அந்த மரங்கள் தண்ணீருக்கு அடியிலும் வளர்ந்து இருப்பதினால் யாரும் துணிந்து உள்ளே நீந்திக் கூட சென்று விட முடியாது. உடலைக் கீறிக் கிழித்து விடும்.

papanasam-agasthiyar-fallsதொடர்ந்து நடத்தப்பட்ட மணற் கொள்ளைகள் காரணமாக ஆற்றின் இரு கரைகளிலும் பரந்து விரிந்த பெரும் மணற் பரப்பு இன்று காணக் கிடைப்பதில்லை. மணற் பரப்பு இல்லாத படியால் சகதியில் இறங்கி ஆற்றை நெருங்க வேண்டியுள்ளது. இப்படி சீமைக் கருவேல மரங்களும் சகதிகளும் கலக்கும் சாக்கடைகளும் சேர்ந்து இந்த நதியை பயன்படுத்த முடியாத ஒரு கூவம் போல மாற்றியுள்ளன. இந்த நதி மக்களின் வாழ்க்கையுடன் இயைந்த- அவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வந்து அவர்களின் அன்றாடப் பயன்பாடுகளான குளிப்பதற்கும் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் ஆரோக்யமான பொழுதுபோக்குகளுக்கும் ஆதாரமாக இருந்த ஒரு நதி. நூறு கிலோமீட்டர்களுக்கும் அதிகமான நீளமுள்ள ஆற்றில் இன்று பல மைல் தூரம் சென்றாலே குளிப்பதற்கும் ஆற்றின் அருகே செல்வதற்கும் ஏற்ற ஒரு சில படித்துறைகளும் மணற்பாங்கான கரைகளும் காணக் கிட்டுகின்றன. நதியின் ஒட்டு மொத்த 150 கிமீ தூரத்திலும் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆற்றை அணுக முடிகிறது, மணற் கரைகள் காணக் கிட்டுகின்றன. அற்புதமான மேற்குத் தொடர்ச்சி பாபநாசம் மலைத் தொடரில் நதி தூய்மையாகவும் தன் இயற்கையான வனப்புடனும் தன் பயணத்தைத் துவக்கும் நதி கீழிறங்கி சமதளத்தில் ஊர்களின் நடுவே ஓடத் துவங்கும் பொழுதே அதனை மாசு படுத்தலும் அசிங்கப் படுத்தலும் துவங்கி விடுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் ஓடிக் கொண்டிருந்த இந்த ஒரே நதியும் இப்பொழுது மதுரையில் ஓடும் வைகை என்னும் சாக்கடை போல, சிங்காரச் சென்னையில் ஓடும் கூவம் என்னும் சாக்கடை போலச் சீரழிந்து போய் விடுமோ என்ற அச்சமே மேலோங்குகிறது.

தாமிரவருணிக் கரையில் இருந்த என் கிராமத்திற்குச் சென்றிருந்த பொழுது தினமும் ஆற்றிற்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “இந்த ஊரில் அந்த ஆற்றின் பக்கமே இப்பொழுது யாரும் போவதில்லை. சகதியும், கருவேல முள் மரமும் நிறைந்திருக்கிறது. நீ வெகு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாய் ஒழுங்காய் ஊர் போய்ச் சேரும் வழியைப் பாரு,” என்று சொல்லி வைத்த மாதிரி பலரும் எச்சரித்தார்கள். வெள்ளம் வரும் காலத்தில் கூட கவலையின்றி குளிக்கச் சென்ற மக்கள் கூட இப்பொழுது இந்த ஆற்றின் அருகில் போவதில்லை. பேயைக் கண்டது போல பயந்து ஒதுங்குகிறார்கள்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூட, வீட்டில் குளிக்கும் ஆள்களை அரிதாகவே பார்க்க முடியும். ஆற்றிற்கோ ஆற்றில் இருந்து பிரிந்து வரும் வாய்க்கால் ஒன்றிலோதான் அந்த ஊர் மக்கள் அனைவருமே குளிக்கச் செல்வார்கள். குளித்து விட்டு இடுப்பிலோ தோளிலோ ஒரு குட ஊற்று நீருடனும் ஈரம் சொட்டும் உடைகளுடனும் சாரிசாரியாக காலையும் மாலையும் மக்கள் வருவது சாதாரண நிகழ்வாக இருந்துகொண்டுதான் இருந்தது. இன்று ஆற்றிற்குக் குளிக்கவோ ஏன் பார்க்கக் கூடச் செல்ல முடியாத நிலை. முன்பெல்லாம் குடிநீருக்கும் கோயில் விக்ரகங்கள் திருமஞ்சனத்திற்கும் ஆற்றில் இருந்துதான் நீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் துணிகளுடன் சென்றால் துணிகளை ஒருபுறம் துவைத்து வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மணலில் தோன்றி வைத்த இடங்களில் ஊற்று ஊறியிருக்க, குடத்துடன் கொண்டுசெல்லும் தாமிரப் பாத்திரத்தை வைத்து நீரை மொண்டு குடத்தை நிரப்பி விடுவார்கள். இப்பொழுது ஆற்றின் கரையில் மணலும் இல்லை; மணலில் யாரும் ஊற்று நீர் தோண்டுவாரும் இல்லை. எல்லாமே பழங்கனவாய் போனது. இப்பொழுதெல்லாம் வீட்டிற்கு முன்பாக பஞ்சாயத்துக் குழாய்களில் உப்பு நீரே ஊற்று நீர், குடிநீர் எல்லாமே. குழாயில் நீர் வராவிட்டாலும் யாரும் ஆற்றுக்கருகே ஒதுங்குவது கூடக் கிடையாது.

so-called-riverஎச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் வீட்டுக்கருகே ஓடும் வாய்க்காலிலும் மறுநாள் துணிந்து வீட்டில் இருந்து ஓர் அரைக் கிலோமீட்டர் தூரத்தில் ஓடும் ஆற்றுக்கும் சென்றிருந்தேன். கால்வாயில் பாசியும், பச்சையும் படர்ந்து பழுப்பும் பாசி நீலமும் கலந்த நீரில் எங்கு முள்செடிகள் இருக்கும் என்பதைக் கண்டு, விலக்கி, ஜாக்கிரதையாகக் குளிக்கிறார்கள். ஆற்றிற்கு போகும் வழி முழுக்க மலக் காடுகள்; எங்கும் கழிக்கப்பட்ட மனிதக் கழிவுகள், குப்பைகள் நிறைந்திருந்தன. மிகவும் ஜாக்கிரதையாகக் கால்பதித்து நடக்க வேண்டியிருந்தது. முள்ளு மரங்களின் ஊடாக முழங்கால் வரையிலான சகதிகலந்த நீரில் சற்று தூரம் நடந்த பின்னால் குளிப்பதற்கென்று கஷ்டப்பட்டு அடையாளம் கண்டுவைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தை அடைய முடிந்தது. அதுவரை வழுக்கி விழாமல் செல்வதே கடினமாக இருந்தது. நல்ல மழை தொடர்ந்து பெய்திருந்தமையினால் ஆறு முழுக்க கருநீலமான நீர் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான கிராமங்களின் கழிவுநீர்களையும், குப்பை, அசுத்தங்களையும், திருநெல்வேலி நகரத்தின் ஒட்டு மொத்த வீட்டு, வணிகக் கழிவுகளையும் தனக்குள் அடக்கி, ஒளித்து வைத்துக்கொண்டு மேலோட்டமாக கரும்பச்சையில் கள்ளத்தனமாக, ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்’ என்பது போல போல நதி ஓடிக் கொண்டிருந்தது, தான் நடந்துவந்த பாதை முழுவதும் ஓர் அடி விடாமல் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு பாழ்பட்டு ஓடிய அந்த நதி. “ரோலிங் வாட்டர்(?!) கேதர் நோ மாஸ்” என்று சின்ன வயசில் படித்ததை நம்பித் துணிந்து கடவுள் மீது பாரத்தைப் போட்டு ஆற்றில் இறங்கி விட்டேன்.

காலுக்குக் கீழே வழவழப்பான்ன சகதியில் சிறிது தூரம் உள்ளே சென்ற பின், நறுநறுவென புது வெள்ளம் கொண்டு போட்டிருந்த- இன்னமும் களவு போகாமல் இருந்த- மேற்குத் தொடர்ச்சி மலைப்பாறைகளின் மணற் துகள்கள் கால்களில் பதிவது பேரானந்தமாக இருந்தது. ஒரு நிமிடம் அந்த ஆற்றில் கலந்திருக்கும் கோடிக்கனக்கான டன் கழிவுகளையும் சீரழிவுகளையும் மறந்து உள்ளே மூழ்கி அடி மணற் கண்டு அங்கேயே மூச்சடைத்து நின்றேன். அந்த இடத்தில் மட்டும் முள்ளு மரங்கள் இருக்காது என்றும் மணல் அள்ளும் பாதையாக இருந்தபடியால் முள் பயம் இல்லாமல் நீந்திக் குளிக்கலாம் என்றும் அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த அளவுக்கு, அந்த நதியைத் தன் வாழ்க்கையின் ஓர் அங்கமாக நினைத்த உள்ளூர் மக்களே, அஞ்சி அருகே செல்லாத ஓர் ஆபத்தான இடமாக மாறிவிட்டிருந்தது அந்த நதி. பால் கொடுத்து வளர்த்த தாமிரவருணித் தாயை இன்று விஷம் கொடுக்க வைத்து விட்டிருக்கிறார்கள். ஆற்றில் இருந்து வெளியேறிய பின்னர் நண்பரிடம், “இப்பொழுதுதான் தாமிரவருணியில் குளித்து வெளியே வந்திருக்கிறேன்,” என்றேன். “அடடே, நான் தான் சொன்னேனே அதற்குள் இறங்க வேண்டாம் என்று. எதுக்கு ரிஸ்க் எடுத்தீர்கள்? பார்த்து, படை, சொறி, அரிப்பு, தோல்நோய் என்று எதுவும் வந்து விடப் போகிறது,” என்று பயங்காட்டினார். “இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை. பழைய நினைப்பில் ஆண்டவன்மேல் பாரத்தைப் போட்டு இறங்கி மூழ்கி விட்டேன்,” என்றேன். “சரி சரி வாழ்க்கையை வெறுத்து துணிந்திருக்கிறீர்கள். நான் என்ன சொல்வது? உங்கள் பாடு!” என்று விட்டுவிட்டார் அவர். அவர் சொன்னதையே நான் ஆற்றில் குளிக்கப் போனதைக் கேள்விப்பட்ட பல உறவினர்களும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். ஒரு காலத்தில் அந்த ஆற்றில் குளிக்காத மக்கள் அந்த ஊரில் கிடையாது. இன்று அதே நதியைப் பயன்படுத்துவோர் அருகி வருகிறார்கள். அன்றாட வாழ்வின் அங்கமாக இருந்த ஒரு நதி ஆள்வோரின் சீரழிப்பால் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆற்றில் மனிதர்கள் இறங்காவிட்டாலும் கூட நிறைய பறவைகள் வந்திறங்கியிருந்தன. மணல் தோண்டி ஆங்காங்கே மேடுபள்ளங்களும் ஆற்றின் நடுவே பல திட்டுக்களும் அந்தத் திட்டுக்களில் முள் காடுகளும் அடர்ந்திருக்கின்றன. அந்தத் திட்டுக்களும் கழிவுகள் கொண்டு வரும் நதியும் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக மாறியுள்ளன. இவ்வளவு பறவைகளை அந்த ஆற்றில் நான் கண்டதேயில்லை. ஆற்றின் மறுகரையில் தூரத்தே திவ்ய தேசத் திருத்தலங்களும், ஸ்ரீவைகுண்டத்தின் ஓங்கி வளர்ந்து ஏஷியன் பெயிண்ட்டில் வண்ணமயமகாக கம்பீரமாக நின்ற போபுரமும் கோயிலின் நீண்ட காவி அடிக்கப் பட்டப் பிரகாரச் சுவர்களும் தூரத்துப் பசுமையின் நடுவே காட்சியளித்து, இந்த ஆற்றின் மாசும் ஒரு நாள் மாறும், இந்த நதியும் ஒரு நாள் புனிதமடையும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த நதியால் தழுவப்பட்டு வரும் கோயில்கள் அமைதிச் சாட்சியாக நம்பிக்கையளித்தன.

இன்று நமக்கு வீட்டிற்குள் கார்ப்பொரேஷன் குழாய் வழியாக நதி நம்மைத் தேடி வந்து விடலாம். நாம் போய்த் தேடிச்சென்று நீந்திக் குளிப்பதற்கும் குடிநீர் கொள்வதற்கும் நமக்கு நதி தேவையில்லாமல் இருக்கலாம். ஆனாலும் நதி வளமாகவும் தூய்மையாகவும் இருந்தால்தான் அதன் கரைகளில் வாழும் மனிதனும் ஆரோக்யமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும். நதி நசிந்தால் நாகரிகம் நசிக்கும்; கலை நசிக்கும்; மனிதம் நசிக்கும். மேற்கத்திய நாடுகளில் உள்ள நதிகள் அன்றாட மனிதப் பயன்பாட்டுக்கு உரியவை அல்ல. இருந்தாலும் அவைப் போற்றிப் பாதுகாக்கப் படுகின்றன. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் ஆறுகளை நாம் குளித்து அனுபவிக்க முடியாது. அதன் பாதையில் உருவாகும் அருவிகளும் ஓடைகளும் கண்களுக்கு ரம்யமான காட்சிகளுக்காக உள்ளவை மட்டுமே. ஆனால் நமது நதிகள் நம் பண்பாட்டின் ஒரு பகுதி. நம் ஊனிலும் உணர்விலும் கலந்து ஓடும் ஓர் அங்கம். நம் நதிகள் நமக்குத் தெய்வங்கள். இயற்கையைத் தெய்வமாக வழிபடும் இந்து மதத்தின் பண்பாட்டுச் சின்னங்கள். நதிக்கரைகளையும் கடவுள்களையும் நம்மால் பிரிக்க முடியாது. வடக்கே இமய மலையின் கங்கை முதல் தெற்கே குமரி முனையின் நதிகள் வரை நம் கலாசாரத்தில், நம் பாரதப் பண்பாட்டில், நதிகள் என்றால் புனிதமானவை; வணக்கத்துக்குரியவை. நதி நம் தாய்; நம் கடவுள். நதி நம் வாழ்க்கையின் ஆதாரம். பாரதம் முழுவதையும் இணைக்கும் இந்துப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று நதி வழிபாடு. ஆறுகளை நாம் தாயாக, தேவியின் வடிவாக நினைத்து அல்லவா வணங்கி வருகிறோம். இயற்கையின் ஒப்பற்ற வரங்களில் ஒன்றை, பல்லாயிரக்கணக்கான நம் இந்துப் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றை நாம் என்றிலிருந்து அசிங்கப்படுத்த ஆரம்பித்தோம்? தாயாக வணங்கிய நதியை நாம் நச்சு நீராக மாற்றிய அலட்சியம் எங்கு எப்போது துவங்கியது? எப்படி நாம் நம் வணங்கிய கடவுளை அழிக்கத் துணிந்தோம்?

waterpollutionஇயற்கையைக் கடவுளாக வழிபடுவது நம் பாரதப் பண்பாட்டின் அடிப்படைக் கூறு. கடவுள் பக்தி இருந்தவரை, நம்பிக்கை இருந்தவரை நாம் இயற்கையைப் போற்றி வணங்கிப் பாதுக்காக்கத் தவறவில்லை. என்று நம் நம்பிக்கையின் வேர்கள் அசைக்கப் பட்டனவோ, என்று திராவிட இயக்க, கிறிஸ்தவ மதமாற்ற விஷக் கிருமிகள் நம்மிடையே பரவத் தொடங்கியதோ அன்றிலிருந்து இயற்கையை இறைவனாக மதித்து வணங்கும் நம் வழக்கம் தளர ஆரம்பித்தது. நம் வீழ்ச்சியின் துவக்கம் அன்றிலிருந்து துவங்கியது. கடவுள் இல்லை, இயற்கையைக் கடவுளாக வழிபடுவது காட்டுமிராண்டித்தனம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்ட பொழுது, இயற்கையைக் கடவுளாக வழிபடும் நம் தொன்மையான வழக்கத்தில் இருந்து விலகி மெல்ல மெல்ல இயற்கையை ஒரு போகப் பொருளாக அனுபவிக்கத் துவங்கினோம். வழிபாட்டிற்குரிய ஒரு கடவுளாக நம்பி வணங்கப்பட்டவரை நதிகளின் இயற்கையான வனப்பும் அழகும் எழிலும் தூய்மையும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. என்று அந்தக் கலாசாரம் அழிக்கப்பட ஆரம்பித்ததோ, என்று திராவிட இயக்கங்கள் மற்றும் மதமாற்ற விஷப் பிரசாரங்களினால் மக்களின் கடவுள் நம்பிக்கையும் இயற்கை வழிபடும் நம் தொன்மையான கலாசாரமும் மெதுவாக கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கப் பட்டதோ, அன்றிலிருந்து இயற்கை வளங்களை பக்தியுடன் நாம் வணங்கிய, பாதுகாத்த உணர்வு மங்கி, அதை நம் சுயநலத்திற்காக அழிக்கத் தலைப்பட்டோம் அதன் விளைவே அழிந்து வரும் நதி வளங்கள். நாம் அழிப்பது நதிகளை அல்ல; நம்மையும் நம் சந்ததியினரின் எதிர்காலத்தையும் என்ற உணர்வை சினிமா மாயையில் மயங்கிக் கிடக்கும் நம் மக்கள் உணர வேண்டும். இயற்கையை வணங்கும் நம் முன்னோர்களின் தொல் நம்பிக்கை நம் மக்களிடம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். நம் தொன்மையான நம்பிக்கைகளையும் கலாசாரத்தையும் கேள்விக்குள்ளாக்கி மாற்றுவதன் மூலம் நமது இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது நம்மை ஆக்கிரமித்த பிரிட்டிஷாருக்கும் போர்ச்சூக்கீசியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் எளிதாக இருந்தது. அன்று வெள்ளைக்காரர்கள் பின்பற்றிய அதே உத்தியை கடந்த 45 ஆண்டுகளாக நம்மை ஆளும் திராவிடக் கட்சிகளும் பின்பற்றி, நம் நம்பிக்கைகளை நம் வழிபாட்டு முறைகளை நம் கலாசாரக் கூறுகளை கேலிக்குள்ளாக்கி, அதன்வழியே அவற்றை அழித்து அதன் விளைவாக நம் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்று நம் கலாசாரம் அழிக்கப் பட்டதோ அன்றே நம் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படும் என்பதை நம் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவதார் போன்ற திரைப்படங்கள் உணர்த்துவது இந்த எளிய உண்மையைத்தான். நம் நம்பிக்கைகள் அழிக்கப் பட்டதால் நம் நதிகள் அழிக்கப் பட்டன. நம் பண்பாடு அழிக்கப்பட்டால் நம் இயற்கை வளங்களும் சேர்ந்தே அழிக்கப் படும்; அதன் பிறகு நாம் இன்னும் ஆப்பிரிக்க மக்கள் அனுபவிக்க நேரும் கொடும் வறுமையையும் வறட்சியையுமே சந்திக்க நேரும். நம் கலாசாரத்தை, நம் பண்பாட்டை நம் இந்து தர்மம் கற்றுக் கொடுத்த அடிப்படைகளை நாம் மறந்தால் நாம் எல்லாவற்றையுமே அதனுடன் சேர்ந்து இழந்தவர்களாகிறோம், அதுவே நசித்து வரும் நம் காவேரியும், தாமிரவருணியும் இன்று நமக்கு உணர்த்தும் பாடங்கள். இனிமேலாவது, காலம் கடப்பதற்கு முன்னால் நம் மக்கள் இந்த விஷ சுழலில் இருந்து வெளியேற முயல வேண்டும்.

waterஇன்னும் நதி வற்றி விடவில்லைதான். இன்னும் நம்பிக்கையிருக்கிறது. என்றாவது நம் தேசத்தின் இயற்கை வளங்கள் மீதும் பாரம்பரியச் சின்னங்கள் மீதும் நம் மண்ணின் மீதும் அக்கறையுள்ள, தேசத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கம் இல்லாத ஓர் அரசாங்கம் அமையுமானால் நிச்சயமாக இந்த நதியை மீட்டெடுத்து விடலாம். அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் இந்த நதி முற்றிலுமாக மற்றொரு கூவமாக மாறி விடும் முன்னால் மீட்டெடுக்க வேண்டியது மிக மிக அவசரம். நதி உற்பத்தியாகும் இடத்தில் தொடங்கி கடலில் சேரும் சங்கமம் வரை ஆற்றின் கரைகளிலும் உள்ளேயும் உள்ள ஆக்கிரமிப்புகள், முள் செடிகள் அகற்றப் பட வேண்டும். மணற் கொள்ளை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். நதியில் சாக்கடைகளையும் கழிவுகளையும் கொண்டுசேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும். காட்டுச் செடிகளும், விஷக் கொடிகளும் நீக்கப்பட வேண்டும். நதி என்பது தோற்றத்தில் இருந்து, கடலில் கலக்கும் இடம் வரை, தூய்மையான நீராக, மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி பயன்படுத்தக் கூடிய ஓர் அளப்பரிய வளமாக, மீண்டும் ஒரு வாழும் நதியாக மாற்றப்பட வேண்டும். இந்தக் காரியங்களை ஓர் அரசாங்கத்தினால் மட்டுமே செய்ய முடியும். அதற்கான நிதி ஆதாரமும், அதிகாரமும் அரசிடம் மட்டுமே உண்டு. கலர் டி.வி-க்கு ஒதுக்கிய நிதியில் நூற்றில் ஒரு பங்கை, செம்மொழி மாநாடு என்ற பெயரில் தன்புகழ் பாடும் கவியரங்கங்கள் நடத்திக் கொண்ட கூத்திற்குச் செலவுசெய்த பணத்தில் ஒரு சிறிய பங்கை அரசாங்கம் ஒதுக்கினால் கூட அழிந்து வரும் நதிகளுக்கு உயிர்ப் பிச்சை வழங்க முடியும். இன்னமும் நேரம் இருக்கிறது. மனமும் பணமும் மட்டுமே வேண்டும். யார் செய்யப் போகிறார்கள்? எப்பொழுது செய்யப் போகிறார்கள்? இனி வரும் தமிழ்நாட்டு அரசியலில் இந்தக் கனவு நனவாகும் ஒரு காலம் இனி எப்பொழுதாவது நம் வாழ்நாளில் வருமா?

நம் சந்ததியினருக்கு நாம் விட்டுவிட்டுப் போகப்போவது என்ன?