வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]

<< முந்தைய பகுதி

You can also take these oral hygiene products with you in your bag if you feel uncomfortable. A study published in the medical journal "cns" clomid cycle cost Ausa studied the. Generic levitra generic levitra 100mg generic levitra 20mg generic levitra.

Prednisone is prescribed as a single or daily dose. It is the most commonly prescribed antibiotic and has a Fuchūchō terbinafine cream price wide safety margin. The problem with that is i'm allergic to penicillin.

There is a need of both these two different languages for the betterment of urdu as a language. They can also be ordered on the internet without prescription from other online clomid prescription online pharmacies. The information provided for this article was correct at the time of publication, however the authors have since updated their study.

1. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் முக்யமான சர்வ சம்மதமான விஷயம் என்ன?

வாசிப்புகளை ICONIC, INDEXICAL மற்றும் SYMBOLIC என்று ஸ்ரீ ராமானுஜன் வகைப்படுத்துகிறார். இதை முறையே மறுவாசிப்பு, மாற்று வாசிப்பு மற்றும் மறுப்பு வாசிப்பு என்ற படிக்கு வ்யாசத் தொடரின் முந்தைய பகுதியில் எளிமைப் படுத்த விழைந்தோம். ஒரு ராமாயண வாசிப்பின் மையக்கருத்தை அறியும் படிக்கு அதை வகைப்படுத்த முனைதல் மிகவும் அவச்யமானது. ஸ்ரீ ராமானுஜன் அவர்களது வ்யாசம் இதனை முதன்மைப்படுத்தி மேற்கொண்டு விவாதத்தினை தொடர்ந்துள்ளார். வ்யாசத்தின் தலைப்பிலும் இது தெளிவுபடுத்துள்ளது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

2. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் விஷயங்களில் ஏற்றுக்கொள்ளவியலா விஷயம் என்ன?

a. “I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text” (134)

b.”…no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text.”

அ. ஒவ்வொரு ராமாயண நூலையும் ஒரு தனிவாசிப்பு என்று கருத வேண்டுமே (telling) அல்லாது பாடாந்தரம் என்றோ மாறுபட்ட வாசிப்பு என்றோ அவதானிக்கலாகாது. அவ்வாறு அவதானிக்க விழைவது இப்படிப்பட்ட தனிவாசிப்புகளுக்கெல்லாம் ஏதோ ஒரு நூல் மூல நூல் (Ur-Ramayana) என்று எந்த நூலையாவது உருவகிக்கச் செய்யும். (அஃதாகப்பட்டது மூல நூல் (Ur-Text) என்ற கருத்தாக்கத்தை முற்றிலுமாக மறுக்க விழைகிறார்.

ஆ. வெவ்வேறு ராமாயண காவ்யம் சொல்லும் வாசிப்புகளும் தனிவாசிப்புகள் என்று கருதப்படவேண்டுமேயன்றி மறுவாசிப்புக்களல்ல ( Version or Variant)

இ. அசல் படைப்பு (original) என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொறு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது. ஒரு ராமாயணக்கதை பகிரும் ஒரு கதை அதில் முடிவு பெற்றாலும் கூட ராமாயண கதை இன்னது தான் என்று முடிவு பெற்ற கதையும் கிடையாது. (எதிர்காலத்திலும் பல ராமாயணக்கதைகள் சொல்லப்படக்கூடும்.)

rama_pattabhishekamமனித சமுதாயத்துக்கு ராமாயண கதை என்ற பெயரில் முதன் முதலில் கிட்டும் ஒரு கதைத் தொகுப்பு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்பதில் யாருக்கும் வேறு கருத்து இருக்க முடியாது. வால்மீகி ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்னர் இந்தக் கதை பாணர்களால் பாடல்களாகப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்த நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்திய இந்தியவியலாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆனால் அப்படி வால்மீகி ராமாயணத்துக்கு முன்னால் பாடப்பட்ட எந்த ஒரு பாடற் தொகுப்பும் மறுதலிக்கவியலா ஆதாரங்களின் பாற்பட்டு கிடைக்கவில்லை என்பதும் நிதர்சனம். ஆகையால் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் மூல ராமாயணம் என்பது கிட்டத் தட்ட நூறாண்டுகளுக்கு மேற்பட்டு இந்த நூலை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன்பாற்பட்டு ஆய்வாளர்களால் எட்டப்பட்ட ஆய்வு பூர்வமான முடிபு.

ஸ்ரீ ராமானுஜன் அவர்களின் வ்யாசம் இப்படிப்பட்ட ஒரு ஆய்வுபூர்வமான முடிபினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முறையான ஆய்வுக்கூறுகள் அவற்றினை நிறுவ வேண்டிய விளக்கங்கள் அதன் மூலம் எட்டிய முடிபுகள் என்ற படிக்கு செயற்படாது வெறும் அபிப்ராயமாக மூல ராமாயணம் என்ற கருத்தாக்கத்தை புறந்தள்ளுவது அறவே மறுதலிக்கப்பட வேண்டிய விஷயம். ஆய்வு மூலம் எட்டப்படாத ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஒரு அபிப்ராயம் என்று சுட்டப்பட வேண்டிய விஷயம். ஆகையால் புறந்தள்ளப்பட வேண்டிய விஷயம்.

3. வ்யாசத்தில் காணப்படும் சுய முரண்பாடு என்ன?

300 ராமாயண வ்யாசம் வெவ்வேறு வாசிப்புகளை அதன் மையக்கருத்தை அறியுமுகமாக வகைத்தொகைப் படுத்தியுள்ளது. அதனில் ஒரு வகை ஏற்கனவே அறிமுகமாகி உள்ள நூலிலிருக்கும் கதைக்களனையும் கதாபாத்ரங்களையும் உள்வாங்கி ஆனால் முற்றிலும் முரணான ஒரு கதையை முன்வைக்க விழைவது.

பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது என்றும் அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அது அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், முந்தைய நூலையும் பிந்தைய நூலையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?

ஏசுபிரானின் சரித்ரம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷிகளால் பகிரப்படுகிறது. அதில் பல முரண்கள் காணப்படுகிறது என்பதனை பைபிளியல் அறிஞர்களின் ஆய்வுகளினை அடியொற்றி ஸ்ரீ சீதாராம் கோயல் அவர்கள் ஏசு கிறிஸ்து: ஒரு ஆதிக்கத்தின் கருவி (Jesus Christ: An Artifice of Aggression) என்ற நூலில் விவரிக்கிறார். ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் சிற்சில மாறுபாடுகளுடன் குரான்-ஏ-கரீமிலும் காணப்படுகிறது. ஹிந்துமஹாசபையின் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்கள் எழுதிய நூலான க்றிஸ்துவின் பரிச்சயம் என்ற நூல் ஏசுபிரானை ஹிந்துஸ்தானத்திற்கு வந்தவராகவும் யோக முறைகள் பயின்றவராகவும் சிவபெருமானை வழிபட்டவராகவும் காண்பிக்கிறது.

ஏசுபிரான் என்ற ஒரு நபர் சரித்ரத்தில் வாழ்ந்து மறைந்தாரா என்பது சரித்ர வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டுள்ளது. அக்கருத்தாக்கத்தை ஒருபுறம் ஒதுக்கி ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் விவிலியத்தையும் குரான்-ஏ-கரீமையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கரின் நூலையும் ஸ்ரீ ராமானுஜனின் வாசிப்பு அலகீடுகளின் படி நிறுக்க முனைவோம். இவைகளில் குரான்-ஏ-கரீம் ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் பற்றி ஒரு மாற்று வாசிப்பு கொடுப்பதையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூல் கிட்டத்தட்ட ஒரு மறுப்பு வாசிப்பு அளிப்பதையும் வாசகர்கள் எளிதில் அவதானிக்கலாம். ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் கோட்பாடு சார்ந்து பார்ப்போமானால் விவிலியம் என்பது ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் மூல நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. அது மட்டிலுமல்ல ஏசுபிரானின் வாழ்க்கை சரிதத்தைப் பகிரும் நூற்களில் விவிலியமும் குரான்-ஏ-கரீமும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூலும் ஒரேதராசில் நிறுக்கப்பட வேண்டும் என்பது நகைப்புக்குறிய வாதமாகத் தென்படவில்லை? அது மட்டுமல்ல, “no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text” என்ற அவர் கூற்றின் படி இது போன்ற கதையளப்புகளுக்கு முடிவும் கூட கிடையாது. தொடர்ந்து எப்படி வேண்டுமானாலும் திடீரெக்ஸ் நூற்கள் எதிர்காலத்திலும் எழுதப்படலாம். திடீரெக்ஸ் மஹிஷாசுர கதையளப்புக்களின் பாற்பட்டு நாளைக்கு வேறொரு அன்பர் ஏசுபிரான் சிவபெருமானை வழிபட்ட அன்பர் என்று மட்டிலும் உருவகிக்காது, உலகத்திலே க்றைஸ்தவ மதத்தை வேரும் வேரடி மண்ணுமாக சிதைக்க விழையும் ஒரு சான்றோராக உருவகப்படுத்திக் கூட ஒரு நூலை எழுத முனையலாம் தான். அப்படிப்பட்ட ஒரு நூலையும் விவிலியத்தையும் ராமானுஜன் கோட்பாடு சார்ந்து ஒரே தராசில் நிறுவ முனைவது நகைப்புக்குறியதாக அறியப்படுமா இல்லையா?

4. மூல நூல் (Ur-Ramayana) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்றால் அதற்குப் பின்னால் எழுந்த நூற்கள் தரத்தில் தாழ்ந்தவையா அல்லது மாற்றுக்குறைந்தவையா?

இராமாவதாரம் என்ற கம்பநாட்டாழ்வாரின் நூல் ஆதிகவி வால்மீகியின் ராமாயண நூலை அடியொற்றி எழுதப்படும் நூல் என்று கம்பநாட்டாழ்வார் தனது நூலின் வாயிலாகவே தன்னுடைய அபிப்ராயமாகவே வெளிப்படுத்துகிறார் என்று பார்த்தோம் இல்லையா?

இதனை ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் தனது கீழ்க்கண்ட விளக்கங்களால் மேலும் அழகாகத் தெளிவு படுத்துகிறார் –

“கம்பர் மட்டுமின்றி காளிதாஸன், பவபூதி போன்ற பலரும் வால்மீகி முனிபுங்கவரின் ராமாயணத்தை அடியொற்றி எழுதுவதால் வால்மீகி முனிவரின் நூலுடைய தரத்துக்கு ஒருமாற்று குறைந்தது இவர்களுடைய படைப்புகள் என்பது யாருடைய வாதமும் கிடையாது. இந்த அனைத்துப் புலவர் பெருமக்களும் அவர்களுடைய கவிதா மேதாவிலாஸத்துக்கும் காவியம் படைக்கும் அவர்களது கற்பனைத்திறனுக்கும் ராமாயண காவ்யத்தினை தங்களது திறமையால் அழகாக தனித்துவத்துடன் வடித்த மாண்பிற்கும் போற்றப்பட வேண்டும். இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்.

ராமாயண நூற்களின் புராதனம் மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த முதல் கதைத் தொகுப்பு என்ற வினாவின் பாற்பட்டு இந்த விஷயத்தை அணுகமுனைந்தால் ஹிந்துஸ்தானத்தின் சரித்ரம், பண்பாடு, சமூஹவியல் போன்ற நோக்குகள் சார்ந்து ஆதிகவி வால்மீகி இயற்றிய வால்மீகி ராமாயணமே மூத்த மற்றும் மூல ராமாயணம் என்று அறியப்பட வேண்டும். ஏனெனில் ராமாயணக் கதை பகிரும் மற்றைய அனைத்து நூற்களும் காலத்தால் இதற்குப் பிந்தியவை என்பது மறுதலிக்கப்பட முடியாது என்பதால் என்ற கருத்து ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்து.

ஆகவே பிற்காலத்திய படைப்பாளர்கள் வால்மீகியின் விவரணைகளிலிருந்து மாறுபடுவது என்பது தங்களது காலத்திய சூழலையும் அறநெறிகளையும் தங்களது படைப்பில் வடிக்க முனையும் முயற்சியாகத் தான் கருதப்படவேண்டும். வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யத்தில் காணப்பட்ட பிழைகளையும் தவறுகளையும் களையும் படிக்கு பிற்காலப் படைப்பாளர்கள் தங்களது படைப்பினை சமைத்தார்கள் என்று சில அறைகுறை அறிஞர்கள் கருத்துப் பகிர்வது நகைமுரணான கருத்து என்று புறந்தள்ளப்படவேண்டிய கருத்து”

எனது கூடுதல் விளக்கம்:

ஹிந்துஸ்தானத்தில் ராமாயணத்தை வெவ்வேறு பாஷைகளில் காவியச்சுவை மிளிர படைத்த எண்ணிறந்த கவிஞர்களும் தாங்கள் வால்மீகி முனிவரை அடியொற்றுவதாக அவர்கள் தரப்பிலிருந்தே அதைப் பகிருகிறார்களே அன்றி அவர்கள் அப்படியொரு கருத்தைச் சொல்லுவதாக ஆதாரமின்றி அப்படி ஒரு கருத்து அவர்கள் மீது சுமத்தப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் வால்மீகி அவர்களை ஆதி கவி என்று சுட்டும் அதே வேளையில் வேறெந்த கவிஞரையும் மாற்றுக்குறைவாக தனது வ்யாசத்தில் சுட்டவில்லை என்பது அழுத்தம் திருத்தமாகச் சுட்டப்பட வேண்டிய விஷயம்.

5. நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் பற்றிய சர்ச்சை.

ramayana_folk_dollsஇந்த விவாதத்தை தனது பக்கத்தில் அறிமுகம் செய்யப்புகும் போது ஸ்ரீ ஜடாயு அவர்கள் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பலவற்றையும் தேடித் தொகுத்து அவற்றை ஆவணப்படுத்த முனைந்த ஸ்ரீ ஏ. கே. ராமானுஜன் அவர்களது முயற்சியை விதந்தோதுகிறார்.

மேற்கொண்டு விவாதத்தில் இப்படிப்பட்ட நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பற்றி ஸ்ரீ ஜடாயு அவர்கள் பகிரும் கருத்துக்களைப் பார்ப்போம்.

மகேஷ் சங்கர் என்ற அன்பர் விவாதத்தின் போது பற்பல நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் மூல நூலாகிய ராமாயணக் கதைக் களனை தாறுமாறாக்கி கவிழ்க்கும் தன்மையவை என்ற கருத்தினை முன்வைக்கிறார். (கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கோஷமிட விழையும் விடலைகள் சிலர் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளின்ன் தொன்மையைப் பற்றியும் கூட கூசாது கதைக்க முயலுவதை கூர்ந்து அவதானிக்க வேண்டும் – என் விளக்கம்)

அதனை ஸ்ரீ ஜடாயு மறுதலிக்கும் கருத்துக்கள் கருத்தாழம் பொதிந்தவை –

“தொன்மையான நாட்டார் வழக்கு ராமாயணக் கதைகள் என்று பரப்புரை செய்யப்படும் கதைகளுடைய தொன்மையின் உண்மைத்தன்மை எத்தகையது என்பது முதற்கண் நோக்கத் தக்கது. எந்த வடிவத்தில் இவையெல்லாம் ஸ்ரீ ராமானுஜன் போன்ற அன்பர்களால் படியெடுக்கப்பட்டனவோ அதை அவதானித்து இவையெல்லாம் அதிக பக்ஷமாக 200 வருஷங்களுக்கு முற்படாத காலத்தில் சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது துலங்கும்.

புழக்கத்தில் இருந்துள்ள நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளுக்கு மூல நூலாகிய வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றி ஒரு அறிமுகம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது முக்யமாக அவதானிக்கத் தக்க விஷயம். அப்படியிருக்கையில் மூல நூலான வால்மீகி ராமாயணத்தை தாறுமாறாக்கி அவை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தன என்பது நகை முரணான விஷயம். தாங்கள் அறியக்கூட இல்லாத ஒரு நூலை தாறுமாறாக்கி அவற்றை கவிழ்ப்பதற்கு இவர்கள் முனைந்தார்களா 🙂

நாட்டார் வழக்குக் கதைகள் பலவும் அந்தந்த உள்ளூர் / க்ராமத்து கற்பனைகளை உள்ளடக்கியவை. பற்பல சிந்தனைகளை உள்ளடக்கியவை அப்படிப்பட்ட கற்பனைகள். மிக உயர்வான சிந்தனைகளும், அதோடு வக்ரமான மற்றும் கோணலான சிந்தனைகளும் கூட இப்படிப்பட்ட கதைகளில் காணக்கிட்டுகின்றன என்பதை மறுக்க இயலாது. உள்ளூர்களில் சொல்லப்படும் கதைச் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்தும் சிற்பங்களிலிருந்தும் ராமாயணங்கள் என்று தாங்கள் புரிந்து கொண்ட ஒரு கதை /பல கதைகளின் மீது தங்கள் கற்பனையின் பாற்பட்ட புரிதல்களை சுமத்தி அதனையொட்டி சமைக்கப்பட்டவை இப்படிப்பட்ட உள்ளூர் நாட்டார் வழக்கு வாய்வழி ராமயணக் கதைகள். இவ்வாறான புதிய சேர்த்தல்கள் காலப்போக்கில் இப்படிப்பட்ட கதைகளுடன் தொடர்ந்து இணைந்து கொண்டு வந்தன. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து,  உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.  காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது என்று கருதுவதற்கே  இடமுள்ளது”.

(சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் இப்படிப்பட்ட ராமாயணக்கதைகளை இலக்கிய வடிவம், மொழியியல் மற்றும் குரிப்பிட்ட பாஷாசைலிகளைச் சார்ந்து தனது வ்யாசத்தில் காலக்கணக்கின் அதிக பக்ஷத்தை 500 வருஷங்களுக்கு முன் வைக்கிறார் – என் விளக்கம்)

6. மூல நூல் வால்மீகி ராமாயணம் என்றால் கம்ப ராமாயணம் மற்றும் தாய்லாந்திய ராமாயணம் போன்ற பிந்தைய நூல்களின் தனித்தன்மை, நம்பகத்தன்மை , காவிய / இலக்கியச் சிறப்பு (தனித்துவம் ) போன்றவை குறைத்து மதிப்பிடப்பட வேண்டுமா?

நாலாவது வினாவில் ஸ்ரீ ஜடாயு அவர்களால் இந்த விஷயம் முன்னமேயே தர்க்க பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பின்னிட்டும் மேற்கொண்டு அவர் பகிரும் சில தகவல்கள் –

“வால்மீகி ராமாயணத்துக்கும் கம்ப ராமாயணத்துக்கும் ஏதோ பிணக்குகள் இருப்பது போன்ற ஒரு சித்திரத்தைக் கட்டமைக்க விழைவது சரியில்லாதது. ஏனெனில் கம்பர் ஆதிகவி வால்மீகி முனியின் அடியொற்றித் தனது காலகட்டத்து சூழலையும் அறநெறிகளையும் அதன் வடிவத்தில் புகுத்தி அதற்கு ஒரு வடிவம் தந்தார் என்பது நிதர்சனம்.

மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றி கால கதியில் அதன் சூழலையும் அறநெறிகளையும் பின்னர் வடிக்கப்பட்ட நூற்களில் புகுத்திய படிக்கு பிந்தைய நூற்கள் அனைத்தும் அதன் தனித்துவம் மற்றும் நம்பகத்தன்மையை தன் வசம் கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. தாய்லந்திய அறிஞர்கள் வால்மீகி ராமாயணத்தின் மூலத்தன்மையை / அதன் புராதன மேன்மையை வெகுவாகக் கொண்டாடுபவர்கள் என்பதில் எந்த சம்சயமும் இல்லை. சாரமற்ற இடதுசாரிக்கயமைக் கருத்துக்களை தாய்லாந்திய அறிஞர்கள் புறந்தள்ளுவதால் தான் ஹிந்துஸ்தானத்தின் மேன்மையான ராமாயண அறிஞர் பெருமக்களை தங்களது ராமாயண நூல் விளக்க விவாதக் களன்களுக்கு அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து ஹிந்துஸ்தானத்து ராமாயண அறிஞர் பெருமக்களது விளக்கங்களை ஆர்வமுடன் கேழ்க்கிறார்கள்”.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற ஒரு நூல் ஹிந்துஸ்தானத்திலும் உலகின் மற்றைய பகுதிகளிலும் புழங்கும் நூற்கள் அனைத்துக்கும் மூல நூலானது என்றும் மற்றவை அனைத்தும் அதன் அடியொற்றி அதனின்று இணங்கியும் மாறுபட்டும் சமைக்கப்பட்ட நூற்கள் என்ற தர்க்கத்தின் பாற்பட்ட ஒரு பார்வையை மறுதலிக்க விழையும் இடதுசாரிக்கயமைத் தனத்தினை உருவகித்துக் கட்டமைக்கப்பட்ட கருத்தானது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு கருத்து.

எந்தவொரு மையக்கருத்தோ அச்சோ இல்லாமல் பற்பல மக்களால் பற்பல ப்ரதேசங்களில் பற்பல விதத்தில் சொல்லப்படும் பற்பல கதைக்களன்களால் அறியப்படும் அனைத்து விதமான ராமாயணங்களும் ஒரே தராசில் ஒரு சேர நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இடதுசாரிக் கயமைக்காரர்களது. இது தர்க்கத்திற்கும் யதார்த்தத்திற்கும் நிதர்சனத்துக்கும் மாறுபட்டது.

1980-90 களில் முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீ ராமஜன்மபூமி இயக்கத்தை நீர்க்கச் செய்ய இதுபோன்ற உளுத்துப்போன வாதங்களை முன்வைக்க விழைந்தனர் இடதுசாரிக் கயமையாளர்கள் என்பது கவனிக்கத் தக்கது. புராதன காலத்திலிருந்து இன்றுவரை ஹிந்துஸ்தானத்து கலாசாரம், பண்பாடு மற்றும் சரித்ரத்தில் ராமபிரான் மற்றும் ராமாயண நூலினைப் பற்றித் தொடரும் ஒரு மதிப்பினை அழித்தொழிக்கவும் அதனை இழிவு செய்யுமுகமாகவும் தான் இடதுசாரிச் சதி மற்றும் கயமைத்தனத்தை ஒட்டிய இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன. இதில் தர்க்கபூர்வமான அல்லது அறிவுபூர்வமான நிலைப்பாடுகள் ஏதுமில்லை என்பது கவனிக்கத் தக்கது.

இது போன்ற தீயதான சாரமற்ற இடது சாரி வாதங்கள் தர்க்கபூர்வமாக முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலவித இந்து விரோத கும்பல்கள் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் இந்த உளுத்துப்போன வாதங்களை மீண்டும் தூசிதட்டி எடுத்து ஹிந்துஸ்தான அறிவியக்கத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதனால் தான் ராமாயணத்தை இழிவு செய்யும் பல சாரமற்ற கூச்சல்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது.

(முற்றும்)

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

<< முந்தைய பகுதி

தொடர்ச்சி…

சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் “முன்னூறு ராமாயணம்” முன்வைக்கும் கருத்தாக்கங்களை மறுதலித்து வைக்கும் தர்க்கங்கள் :-

ராமானுஜனின் முன்னூறு ராமாயண வ்யாசத்தை வாசித்த படிக்கு, அவர் சொல்லுவதில் மறுதலிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் தான் மூல ராமாயணம் என்ற ஒரு கூற்றை அவர் மறுக்க விழைவது. ராமாயண கதையைப் பகிரும் ஒவ்வொரு நூலும் தன்னளவில் ஒரு ராமகதையை தன் வசம் கொண்ட தனித்ததாகிய நூல் என்று கருத்துப் பகிர விழைகிறார் ஸ்ரீ ஏ கே ராமானுஜன்.

valmiki_smஆனால் வாஸ்தவத்தின் பாற்பட்டு, மனித சமுதாயத்துக்கு ராமாயணம் என்ற பெயரில் ஒரு தொகுப்பாகக் கிடைத்த முதல் நூல் ஆதிகவி வால்மீகி முனிவர் இயற்றிய வால்மீகி ராமாயணமே என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. ஹிந்துஸ்தானத்தின் மற்றைய ப்ராந்தியங்களிலும் நம் தேசத்திற்கு வெளியே ஏனைய தேசங்களிலும் இதற்குப் பின்னால் இந்தப் பெயரில் எழுந்த ஏனைய காவியங்கள் காலத்தால் இதற்கு மிகவும் பிற்பட்டவை என்பது மிக முக்யமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இதையடுத்து சொல்லப்படும் ஒவ்வொரு ராமாயண நூலும்,  “இதை ஒட்டி அல்லது வெட்டி இதனின்று வேறு பட்டு அல்லது இதனின்று முரண்பட்டு” என்ற வகையில், கதைக்களனை எடுத்துச் செல்லும் ராமாயண கதாசிரியரோ அல்லது ஆராயப்புகும் ஆய்வாளரோ அடிப்படை அலகீடாகக் கொள்ள விழைவது வால்மீகி ராமாயணம் என்ற நூல் தான். இதை  எந்த வகையிலும் மறுக்க முடியாது. ராமாயண காவ்யத்தை சொல்லும் நூற்களில் மனித சமுதாயத்துக்கு முதன் முதலில் கிட்டிய ஒரு நூற் தொகுப்பு என்ற படிக்கு இது தான் மூல நூல் என்பதனை மறுக்க இயலாது.  அப்படி மறுப்பதற்கு ஏதுவான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை.

வால்மீகி முனிபுங்கவர் தமது ராமாயண நூலை எழுதுவதற்கு முன்னரேயே இந்த நூல் சொல்லும் கதை பல பாணர்களால் பாட்டு வடிவினில் இருந்திருக்க வேண்டும் என்று இந்தியவியல் அறிஞர்கள் அபிப்ராயப்படுகிறார்கள். ஆனால் அப்படிப் புழங்கிய பாடல்கள் எவையும் மறுக்கவியலா ஆதாரங்களின் பாற்பட்டு இதுவரை கிடைத்ததுண்டோ என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

இதற்கு மேற்கொண்டு சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் அவர்கள் இந்த விஷயம் சம்பந்தமாகச் சொல்லும் முக்ய விஷயங்களைப் பார்ப்போம் :-

பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்கள் காலத்தால் மிகவும் பழமையானவை என்று சொல்லப்படுகிறது. சில சமயம் ஆதிகாவ்யமாகிய வால்மீகி ராமாயணத்துக்கும் முற்பட்டவை இவை என்றும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் இவை சரியான கூற்றுகளல்ல.

புத்த ஜாதகக் கதைகளில் ராம கதை காணக்கிட்டுகிறது என்றும் அதன் கதைக்களன் வேறானது என்றும் சொல்லப்படுகிறது. புத்த ஜாதகக் கதைகள் என்பவை பௌத்த சாஸ்த்ரங்களாகிய த்ரிபிடகம் என்று நாம் அறியும் பௌத்த மூல நூற்களுக்குப் பிந்தைய காலத்தின் பாற்பட்டவை என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். த்ரிபிடகம் என்று தற்காலத்தில் நாம் அறியும் பௌத்த நூற்கள், பொதுயுகத்தின் முதலாம் நூற்றாண்டில் கனிஷ்க ராஜனுடைய காலத்தில் கூட்டப்பட்ட மூன்றாவது புத்த சங்கத்தில் தொகுக்கப்பட்டவை என்பது அறிஞர்கள் கருத்து. த்ரிபிடக நூற்களில் உள்ளடக்கமாகாத பௌத்த ஜாதகக் கதைகள் என்பவை காலத்தால் இவற்றுக்கும் கூடப் பிற்பட்டவை என்பது கவனிக்கத் தக்கது.

ஆகையால் இவை காலத்தினால் மிகவும் பிற்பட்டவை என்பது ஆழ்ந்து கவனிக்கத் தக்கது.

பௌத்த மற்றும் ஜைன ராமாயணங்கள் ஆதிகவி வால்மீகி முனிபுங்கவரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்துக்கு முற்பட்டவை என்ற படிக்கான முன்பின் முரணான காலக்கணக்கு எத்தகையது?  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (1879 – 1955) ஆராய்ச்சி முடிபுகள் ஐஸக் ந்யூட்டனுடைய (1642 – 1726) ஆராய்ச்சிக்கூறுகளுக்கு அடிப்படை என்று  யாராவது கூறினால், அது காலக்கணக்கு  குறித்த எத்தகைய  அடிப்படையான தர்க்கப் பிழையோ  அது போன்றது.

அதே போல, ஜைன ராமாயணங்களுள் மிகப்பழமையான ஜைன ராமாயணம் ஸ்ரீ விமலஸூரி அவர்களால் இயற்றப்பட்ட பவுமாசரிஅ எனும் ஜைன ராமாயணம். ஸ்ரீ விமலஸூரி அவர்கள் பொதுயுகம் 3ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த ராமாயணம் வால்மீகி ராமாயணத்துக்கு மூத்தது என்பது வால்மீகிக்கு மூத்தவர் காளிதாசர் என்பது போன்ற ஒரு கூற்றுக்கு சமமான கூற்று.

ப்ராந்திய பாஷைகளில் சமைக்கப்பட்ட (வாய்வழியான மற்றும் எழுதப்பட்ட) ராமாயணங்கள் பொதுயுகத்தின் 8ம் அல்லது 9ம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பாரதத்தின் பல ப்ராந்தியங்களில் இருக்கும் வாய்மொழியான ராமாயணங்களை மட்டும் கவனிக்குங்கால் இலக்கிய மற்றும் மொழியியல் அலகீடுகளை வைத்து இவற்றின் பாஷா சைலிகளை அணுகுகையில் இவையெல்லாம் கிட்டத்தட்ட ஐன்னூறு ஆண்டுகளுக்கு உட்பட்டவை என்பது துலங்குகிறது.

அப்படியானால் வால்மீகி முனிபுங்கவருக்கு அவருடைய ஆதிகாவ்யமாகிய வால்மீகி ராமாயணம் எனும் நூலை எழுதுவதற்கு உந்து சக்தியானவை எவை என்று கேழ்வியெழும் அல்லவா? சம்ஸ்க்ருதத்திலும் மற்றும் ஏனைய ப்ராக்ருத / அபப்ரம்ஸ பாஷைகளிலும் வால்மீகி முனிவரின் காலத்திற்கு முன்னர் ராமாயணப்பாடல்கள் பாடப்பட்டிருக்க வேண்டும். அவையே அவருக்கு உந்துசக்தியாக இருந்திருக்க வேண்டும் என்பதனை ஒருக்கால் ஒப்புக்கொள்வோம்.

அப்படியானால் அடுத்த கேழ்வியெழும் இல்லையா? வால்மீகி முனிபுங்கவருக்கு முந்தையதான ராமாயணக் கதைகளும் பாடல்களும் எங்கே என்று? அவை காலத்தால் அழிந்து போய் விட்டன என்பது மறுக்கப்பட முடியாத விஷயம்.. அஃதாகப்பட்டது காணக்கிட்டும் ஒரு நூலுக்கான ஆதாரம் காணக்கிட்டாதது. ஆனால் அது தான் ஆதாரம் என்றால்,  சான்றுகளின் பாற்பட்டு அல்லாது வெறும் கற்பனையின் பாற்பட்டு மிகும் அப்படிப்பட்ட ஆதாரம் என்பது எப்படியாகும்?

ஆம்லெட்டு தோசை செய்யப்பயன்படும் குஞ்சு பொறிக்கா முட்டையிலிருந்து (Poultry eggs) கோழிக்குஞ்சுகள் பிறந்ததாகவும் அக்கோழிக்குஞ்சுகள் வாயிலாகக் கோழியினம் பெருகியது என்று சொல்லுவது எப்படிப்பட்ட புத்திசாலித்தனமான தர்க்கமாகுமோ அத்தகைய தர்க்கத்தை ஒத்ததாக இருக்கும் அப்படிப்பட்ட ஒரு தர்க்கம். இல்லையா?

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததின்னு யானக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனக்குஞ்சு சொன்னதின்னு – பாட்டு நினைவுக்கு வருமில்லையா?

துளசிதாசர்
துளசிதாசர்

ஆதிகாவ்யமான வால்மீகி ராமாயணத்தின் மறுவாசிப்பாக சம்ஸ்க்ருதத்திலும் தமிழ் மற்றும் ஏனைய ஹிந்துஸ்தான பாஷைகளில் எழுதப்பட்ட மற்ற ராமாயண காவியங்களை எழுதிய சான்றோர்கள் அனைவரும் இந்த வால்மீகி ராமாயணத்தை எழுதிய ஆதிகவி வால்மீகிக்குத் தாங்கள் கடன் பட்டிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். காளிதாசன், பவபூதி, போஜராஜன், ராஜசேகரன், கவிராஜன், மற்றும் இராமாவதாரம் என்ற பெயரில் தமிழில் ராமகதையை எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர்,  ஹிந்தியில் ராமசரிதமானஸ் எழுதிய துளசிதாசர், கன்னடத்தில் ராமாயணம் குறித்த எழுதிய நவீன காலத்திய கவிஞர் எழுத்தாளருமான குவெம்பு போன்றோர் அனைவரும் ஆதிகவி வால்மீகியின் வழியே தாங்கள் செல்வதாக எழுதியிருக்கிறார்கள்.

அப்படியானால் ராமாயணத்துக்கு முன்னூறு முகங்கள் உண்டு சொல்லுவதன் பின்னணியும் உந்துசக்தியும் யாது என்று கேழ்வியெழும் இல்லையா?

வாஸ்தவத்தில் இப்படிப்பட்ட ஒரு குதர்க்கமான சதிமிகுந்ததான ஒரு கூற்றின் பின்னணியில் இருப்பது புலமை இல்லை மாறாக யுக்தி என்பதனை நாம் உணர வேண்டும். இடதுசாரிகளின் அப்யாசத்தில் உள்ள நயவஞ்சகமான யுக்திகள் என்பது இப்படிப்பட்ட செயல்பாடுகளின் பின்னணியில் உள்ளது. தாங்கள் எதிர்க்க விழையும் ஒரு பொருளை முற்று முழுதாக நிராகரித்தல் என்பது ஒரு இடதுசாரி யுக்தி. அவர்களை விளக்கங்கள் மற்றும் ஆதாரங்களுடன் எதிர்கொண்டால் போலிவாதத் தர்க்கத்தினையொட்டி தங்களது அடிப்படைகளையே மாற்றிக்கொள்வார்கள். “ஒரே ஒரு உறுதியான நூல் உள்ளது என்பதனை நாங்கள் மறுக்கிறோம்” என்பது இவர்கள் எடுத்துக்கொள்ளும் நிலைப்பாடுகளுள் ஒன்று. மறுபடி இதை மறுதலிக்க இவர்களை விளக்கங்கள், ஆதாரங்கள் என்று அணுக முனைந்தால்,”புராதனமான என்றோ உறுதியான என்றோ எந்த விஷயமும் இருக்கவியலாது; வெவ்வேறு காலகட்டத்தில் மாறிக்கொண்டே செல்லுவது தான் உலகம்” என்று தங்கள் பாதையையும் அடிப்படைகளையும் கமுக்கமாக மாற்றிக்கொண்டு ஏதும் நிகழாதது போலப் பயணத்தை தொடர்வது இடதுசாரிச் செயல்பாடு.

கௌரவர்களை கதாநாயகர்களாகவும் பாண்டவர்களை வில்லன் களாகவும் கொண்ட மெய்யான மஹாபாரதக் கருத்துக்கள் இப்போதெல்லாம் தலையெடுப்பதைக் கண்ணுறுகிறேன் என்று சமீபத்தில் ஞானபீட விருது வென்ற சந்த்ரசேகர கம்பர் என்ற அன்பர் கருத்துத் தெரிவிக்கிறார். இவர் ஏதும் புதிதாகச் சொல்லவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். இப்படிச் சொல்லுவது தான் நவநாகரீகமாயிற்றே. மஹாபாரதக் கதைக்களன் உருக்குலைப்பாளர்களின் பலரகங்களில் ஒரு ரகம் தானே இந்த அன்பர். “On the meaning of Mahabharata” என்னும் நூலின் வாயிலாக இப்படிப்பட்ட உருக்குலைப்புக் கருத்தாக்கங்களை வி.எஸ்.சுக்தங்கர் போன்ற அறிஞர் பெருமக்கள் முழுமையாகவும் முடிவாகவும் கட்டுடைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

அபாரமான கவிதை படைக்கும் திறன்பெற்ற ஒரு கவிஞர் தேசத்தின் பெருமை வாய்ந்த ஒரு நபரின் வாழ்க்கை சரிதத்தை காவியமாக வடிக்க முனைந்த ஒரு முதல் செயற்பாடு வால்மீகி முனிபுங்கவர் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை சமைத்தமை. ஆதலால் அவர் ஆதிகவி என்று அழைக்கப்படுகிறார். மஹாகவி காளிதாஸன் *கவி* என்ற சொல்லை *வால்மீகி* என்ற சொல்லுக்கிணையான ஒரு பதமாகக் கையாண்டுள்ளான் என்பது நோக்கத் தக்கது. ஹிந்துஸ்தானத்தின் வெவ்வேறு ப்ராந்தியங்களில் வசித்த வெவ்வேறு மொழி பேசும் பலவேறு கவிகளும் காலத்தாலழியாத ஒப்புயர்வற்ற இந்த ஆதிகாவ்யத்தை தங்களுடைய திறமைக்கு ஏற்றபடிக்கு தங்களுடைய மனச்சாந்திக்காக வேண்டி பலமுறை தங்கள் தங்கள் மொழியில் இயற்றியிருக்கிறார்கள். பலமுறை அவ்வாறு பாஷாந்தரங்களில் இயற்றப்பட்ட காவியங்கள் அதை இயற்றிய ஆசிரியரின் பங்களிப்பால் அதீத அழகுடன் செறிவூட்டப்பட்ட ஒரு காவியமாக மிளிர்வதையும் கண்ணுறுகிறோம்.

இப்போது நான் சொல்ல விழைவது ஒரு மலிவான ஒப்பீடாக இருக்கலாம் தான். ஆனால் தற்கால வழக்கியலில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை மாற்று மொழிகளில் எடுக்க விழைந்தால் அது ஒரு கட்டத்துக்கு கட்டம் ஒத்துப்போகும் திரைப்படமாகவும் எடுக்கப்படலாம் அல்லது ஆங்காங்கு மாறுதல்களைச் செய்து எடுக்கப்படும் ஒரு ரீமேக் ஆகவும் இருக்கலாம்.

ஹிந்துஸ்தானத்தின் ஒவ்வொரு சமயமும் ராமாயண கதையை தத்தெடுத்து அதனை உள்வாங்கி உபயோகப்படுத்தி தங்களது கொள்கைகளை பொதுமக்களுக்கு எளிதாக எடுத்துறைக்க விழைந்தன என்பது நாம் முக்யமாக கவனிக்க வேண்டிய விஷயம். லக்ஷ்மணனால் கொல்லப்படும் ராவணனைச் சொல்லும் ஜைன ராமாயணக் கதையிலிருந்து சீதையின் அபஹரணத்தை வெகுவாகக் கவனப்படுத்தும் பௌத்தராமாயணங்களும் அத்வைதக் கோட்பாடுகளின் சொற்பொழிவினைக் கேட்குமாறு ராமபிரான் உருவகப்படுத்தப்படும் வேதாந்திகளின் ராமாயணங்களும் சரணாகதி தத்துவத்தினை முன்னிறுத்தும் விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை விளக்கும் ராமாயண விவரணங்களும் ஹனுமனை முன்னிறுத்தி அவனைஎதிர்கால ப்ரம்மாவாக சித்தரிக்க விழையும் த்வைத ராமாயண விவரணங்களும் தசமுக (பத்துத் தலை) ராவணன் மரித்த பின்னர் கிளர்ந்தெழும் ஒரு சதமுக (நூறு தலை) ராவணனை வதம் செய்யப்புகும் சீதாபிராட்டியை தேவியாக சித்தரிக்க விழையும் சாக்த ராமாயணங்களும் என்று ஒருபுறமிருக்க ராமபிரானை விஷ்ணுவின் அவதாரமாக சித்தரிப்பதை மறுதலிக்கும் சைவர்களிலிருந்து ராமாயண காவியத்தை தேவையற்றது என மறுதலிக்க விழையும் நூதன யுகத்து அறிவுஜீவிகள் வரை பலரும் பல விதத்தில் ராமாயணத்தில் தங்கள் சிந்தனையைச் செலுத்தி அதில் புகல் பெறுவதை புறத்தொதுக்க இயலாது.

ப்ரம்மதேவனின் ப்ரசித்தமான வசனமான ‘பரம் கவீனாம் ஆதாரம்’  (எல்லாக் கவிகளுக்கும் ஆதாரமான) என்ற சொற்றொடர் 300 ராமாயணம் என்ற ஒரு கருத்தாக்கம் ஒரு மோசடியைப் பரப்புரை செய்யும் ஒரு கருத்தாக்கமாக இருப்பினும் கூட வேறொரு வகையில் அதற்கு அணுக்கமாகக் கூட போய்விடுவதைக் கண்ணுறாமல் இருக்கவியலாது.

ஃபேஸ்புக்கிலும் சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் அவர்களது வ்யாசம் கவனத்துக்குக் கொணரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு சுவையான மற்றும் சுருக்கமான ஒரு விவாதமும் முன்னெடுக்கப்பட்டது. ஸர்வ ஸ்ரீமான்கள் ஜடாயு, ஆர்.வி, மகேஷ் சங்கர் மற்றும் ராமசூரி போன்ற அன்பர்கள் இந்த விவாதத்தில் பங்கெடுத்தார்கள். சில விஷயங்கள் புரிதலின்றி முன்வைக்கப்பட்டன. சில் விஷயங்கள் மிகக் கூர்மையாக அவதானிக்கப்பட்டன. FAQ என்ற படிக்கு குறுவினாக்கள் வாயிலாகவும் அதற்குப் பகிரப்படும் விடைகளாகவும் இந்த விவாதத்தின் முக்யமான அம்சங்களை முன்னிறுத்துவது ஒரு தெளிவைக் கொடுக்குமாதலால் இந்த வ்யாசத்தின் அடுத்த பகுதி FAQ நோக்கிச் செல்கிறது.

தனிப்பட்ட அன்பர்கள் ஆங்க்லத்தில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துக்களைத் தொகுக்க விழைவது எனது முயற்சி. என்னுடைய தனிப்பட்ட விளக்கங்களை ஆங்காங்கு பகிர்ந்திருக்கிறேன். தனிப்பட்ட நபர்களது கருத்துக்களை மொழியாக்கம் செய்கையில் அவர்களது கருத்துக்கள் ஒருக்கால் சிதைந்து அது வேறுவிதமாகப் பகிரப்பட்டால் அது என்னுடைய குறைபாடாக ஆகுமேயன்றி மூலக்கருத்தைப் பகிர்ந்த தனிப்பட்ட நபர்களது குறைபாடாக அவற்றைக் கருத வேண்டாம் என்று விக்ஞாபித்து மேற்கொண்டு தொடர்கிறேன்.

படங்களுடன் கூடிய ராமாயண ஓலைச்சுவடிகள் (ஒரிஸ்ஸா)
படங்களுடன் கூடிய ராமாயண ஓலைச்சுவடிகள் (ஒரிஸ்ஸா)

அப்பகுதிக்குச் செல்லுமுன்னர் பதினைந்து வருஷ காலத்திற்கும் மேற்பட்டு ஸ்ரீமத் வால்மீகி ராமாயண நூலின் வெவ்வேறு பாடாந்தரங்களை ஆராய்ந்த பதிப்பாசிரியர் குழுவினர் எட்டிய முடிபுகள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வு என்ற வ்யாசத் தொடரின் மூன்றாம் பாகத்தில் பகிரப்பட்டிருந்தது. அவற்றில் முக்யமான முடிபுகளை ஒரு மீள்பார்வை செய்து மேற்கொண்டு செல்லுவோம் :-

பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். உத்தர மற்றும் தக்ஷிண (Northern, Southern). இந்த இரண்டு பாடாந்தரங்களும் ஒன்றுடன் ஒன்று பெருமளவு வேறு பட்டாலும் தங்களிடையே பொதுவிலான ராமாயண கதையை பாதுகாத்து வைத்திருந்தது அவதானிக்கப்பட்டது. இந்த பொதுமையான குணாதிசயம் தான் மூலராமாயணம் (Ur-Ramayana) என்ற நூல் இந்த பாடாந்தரங்களின் ஆதாரமாக இருக்கவேண்டும் என்ற முக்யமானதொரு முடிபை எட்ட ஆய்வாளர்களுக்கு ஹேதுவாக இருந்தது என்றால் மிகையாகாது.

வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது என்ற டாக்டர் ஜேக்கபி அவர்களின் கருத்தை பதிப்பாசிரியர் குழுவினர் வழிமொழிகின்றனர்.

தக்ஷிண பாடாந்தரங்கள் முறையே தெலுகு, க்ரந்தம் மற்றும் மலயாள அக்ஷரங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதும் மூன்று வெவ்வேறு வரிவடிவங்களில் பாதுகாக்கப்பட்டிருப்பினும் மூன்றும் கிட்டத்த்ட்ட ஒரே வடிவத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதும் தெற்கத்திய பாடாந்தரத்தின் சிறப்பு. ஆகவே தான் டாக்டர் ஜேக்கபி அவர்களும் க்ரிடிகல் எடிஷனின் பதிப்பாசிரியர் குழுவினரும் தெற்கத்திய பாடாந்தரமானது மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் மூல வடிவினை அப்படியே பாதுகாத்து வந்துள்ளது என்ற முடிபினை எட்ட ஹேதுவாக இருந்திருக்கலாம் எனத்தெரிகிறது.

அறுதியாக தக்ஷிண பாடாந்தரமே மூல ராமாயணத்தின் தொன்மை மற்றும் வடிவத்தை அப்படியே பாதுகாத்துள்ளது என்பதாலும் மாறுதல்களுக்கு உட்படாததாலும் பஹு சம்மதமான (பலராலும் ஏற்கப்படும்) ப்ரதி (Vulgate) எனக்கொள்ள வேண்டும் எனவும் ஒருமனதாகப் பதிப்பாசிரியர் குழுவினர் கருதுகின்றனர்.

அதே சமயம் உத்தர பாடாந்தரம் குறைந்த நம்பகத் தன்மையுடையது என்று கருதலாகாது என்ற முக்யமான கருத்தையும் தெரிவிக்கின்றனர். உத்தர பாடாந்தரங்களில் பெருமளவு மாறுதல்கள் மொழிசார்ந்தவையே அல்லாது வடிவு அல்லது உள்ளடக்கம் சார்ந்தவை அன்று என்றும் பகிரப்பட்ட கருத்து நோக்கத் தக்கது.

(தொடரும்)