ஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்

ஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது. சுவாமி ராம்தேவ் அவர்களையும் போலீஸ் கைது செய்து கடத்தி டெல்லியை விட்டு வெளியேற்றி உள்ளது. இக்கட்டுரை வெளியிடும் வரை, சுவாமி ராம்தேவின் நிலை குறித்து செய்திகள் இல்லை.

If, at any time while taking the drug, you feel that any of your health is in danger, you should have the doctor visit you right away. Buy drugs http://jualah.id/product/silver-phone/ from india with confidence and reliable. Aciclovir from india by dhanvanti pharmacy was a cid to me.

That statement means the author cannot accept an explanation, and even if they could, they would not understand it. Neuropathy is Gursahāiganj ciprofloxacin eye drops goodrx characterized by the loss of sensory nerves in the peripheral nervous system, most often those connected to the skin. This product is no prescription or over-the-counter.

Generic oxytrin is a combination of two drugs - adoxa and lantus. Your buy generic clomid online at http://johndanatailoring.co.uk/product-tag/scarves/ walmart found a that this browser could together find. Dit werk is gebaseerd op de voorstellen in het voorstel van de commissie.

காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையில் அவர்களின் உறுதியை விட பயமே தெளிவாகத் தெரிகிறது. நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாதத் தாக்குதல் நடத்துகிற தீவிரவாதிகளுடனும், தீவிரவாத நாடான பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கிற அரசு, அமைதி வழியில் பட்டினி கிடக்கிற ஒரு போராட்டத்தை நசுக்க வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு அவசரம், பயம், பதட்டம்?

போலீஸ் நடவடிக்கை

அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளும் சுவாமி ராம்தேவ்

அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளும் சுவாமி ராம்தேவ்

சத்தியாக்கிரகம் நடந்த இடம்

போலீஸ் நடவடிக்கை
போலீஸ் நடவடிக்கை

இது ஒரு பாசிச அரசியல் என்று கூறுகிறார் பி.ஜெ.பியின் மூத்த தலைவர் அத்வானி. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உடனடியாக பார்லிமென்ட் கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும் – இந்தப் பிரச்சனை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒரு துறவி ஊழலுக்கு எதிராக போராடுகிறார். நள்ளிரவில் பெண்களும் குழந்தைகளும் குழுமியுள்ள இடத்தில் அராஜகம் அரங்கேறி உள்ளது. பிரதமரே இதற்கு பொறுப்பு” என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க வின் தலைவர் நிதின்கட்கரி அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் போது, “இந்த அரசு பிரச்சனைகளை முக்கியமாகக் கருதுவதே இல்லை. அப்பாவி மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். இது எமர்ஜென்சி காலகட்டம் போல உள்ளது. அந்த எமர்ஜென்சியும் 1975ல் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப் பட்டது. இந்த நிகழ்வும் அதே போல ஜூன் மாதத்திலேயே நிக்ழந்துள்ளது. இதற்கு பிரதமரும், காங்கிரஸ் தலைவியும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பி.ஜே.பி கட்சியின் சார்பிலும் இந்த பிரச்சனையில் சத்தியாக்கிரக போராட்டம் துவங்கும்” என்று அறிவித்துள்ளார்.

“இன்றைய தினம் இந்த நாட்டில், பத்து கோடி மக்கள் என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர். இது எந்த மதச் சார்பினாலும் அல்ல, நடைமுறை நிலையை அவர்கள் உணர வைத்ததால் தான். இந்த ஊழலை எதிர்த்து ஐந்து வருடங்களாக போராடி வருகிறேன். ஒரு லட்சம் கிமீ நடைப் பயணம் செய்த பின் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். ராம்தேவ் திடீரென்று வானத்திலிருந்து குதிக்கவில்லை. தரையில் தான் வாழ்கிறேன். தரையிலிருந்தே உழைத்து மேலே வந்திருக்கிறேன்.”

“என்னுடைய கணக்கு படி, வெளிநாடுகளில் சுமார் நானூறு லட்சம் கோடி கறுப்புப் பணம் பதுக்கப் பட்டுள்ளது. இது சிறிய தொகை அல்லவே. இது என்னுடையை கருத்து அல்ல; பொருளாதாரம் குறித்துப் படித்தவர்களின் கருத்து இது.. எப்போதெல்லாம் உண்மையின் பாதையில் ஒருவர் செல்கிறாரோ அவரை மற்றவர்கள் பைத்தியம் என்று கூறுவர். என்னை இதுவரை அப்படி பைத்தியம் என்று அழைக்கவில்லை. நான் சொல்வதன் உண்மை நிச்சயம் வெளிப்படும். வரும் நாட்களில், நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்து ஊழல் குற்றம் புரிந்தவர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுவார்கள்.”

சுவாமி ராம்தேவ்

அண்ணா ஹசாரே போராட்டம் நடத்திய காலம் போலன்றி, பாபா ராம்தேவின் போராட்டத்துக்கு ஆரம்பத்திலிருந்தே அரசியல்வாதிகள், மீடியா என்று எல்லா தரப்புகளிலும் ராம்தேவ் அவர்களின் நோக்கங்களுக்கு உள்ளர்த்தம் கற்பித்து அவதூறு வீசப்பட்டது. இதையே திரும்பத் திரும்ப பேசினார்களே தவிர அவரது போராட்டத்துக்கான குறிக்கோளைக் குறித்து பேசத் திராணி இல்லை.

அப்படி என்னதான் பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்தார்?

  • வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல நூறு லட்சம் கோடி பணத்தை இந்தியாவின் தேசிய சொத்தாக அறிவித்து அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீ்ட்டுக் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • அளவுக்கு அதிகமாக, முறைகேடாக பணம் சம்பாதித்து, அந்த கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக பதுக்கி வைப்பது தேசிய குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.
  • ஊழல் செய்து, ஒருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.
  • அன்னா ஹசாரே தலைமையில் மக்கள் பிரதிநிதிகள் குழு மூலம் வரையறுக்கப்பட்டு வரும் லோக்பால் மசோதா மிகவும் வலுவான சட்டமாக இருக்க வேண்டும்.
  • ஊழல் குற்றச்சாட்டுக்களை விரைந்து விசாரிக்க எல்லா மாநிலங்களிலும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
  • ஊழல் செய்து சிக்கிக் கொள்ளும் வி.ஐ.பிக்கள் மீதான வழக்கு விசாரணை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனுக்குடன் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
  • ஊழல் செய்வதற்கு 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்களும் ஒரு விதத்தில் உதவியாக உள்ளன. எனவே 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்களையே ரத்து செய்ய வேண்டும்.

இவையே ராம்தேவ் அவர்கள் எழுப்பிய கோரிக்கைகள். அரசியல் வாதிகள், சினிமாத் துறையினர், தொழிலதிபர்கள், கிரிக்கட் விளையாட்டு சூதாட்டக் காரர்கள், என்.ஜி.ஓக்கள் என்று பலருக்கும் ஜுரம் கொள்ள வைக்கும் இந்த கோரிக்கைகளை நசுக்க, ஊழலுக்கு பெயர்போன காங்கிரஸ் அரசு போலீசை ஏவியதில் வியப்பேதும் இல்லை.

இது இப்படி நடக்கும் என்பதற்கு குறியீடாக, இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவதூறுப் பிரச்சாரம் தூண்டிவிடப் பட்டது. ராம்தேவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் லட்சக்கணக்கான மக்கள் வரப் போவதற்கு ஏற்ப உண்ணாவிரத போராட்டத் திடலில் அடிப்படை வசதிகளை செய்ததைக் கூட குறை கூறினர். பாபா ராம்தேவ் பெரும் பணக்காரர் என்று பிரச்சாரம் ஓடியது.

ராம்தேவ் எழுப்பிய கோரிக்கைகள் பிரச்சனைகள் குறித்து எந்த மீடியாவும் வாயைத் திறக்கவில்லை. மெழுகுவர்த்திகளுடன் ஆதரவு தெரிவிக்கும் என்.ஜி.ஓக்களைக் காணவில்லை. பாலிவுட் நடிக நடிகைகள் யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. உண்மையில் யாரும் கேட்காத போதே ஷாருக்கான் இந்த போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்றார். அவர் கவலை அவருக்கு. இதிலிருந்தே ஊழல்வாதிகளும், கறைபடிந்த நேர்மையற்ற மீடியாவும் ராம்தேவிற்கு எதிராக இருந்ததை புரிந்து கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் அதிகமாகப் போய், காங்கிரசின் திக்விஜய் சிங் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக ராம்தேவை விமர்சிக்க ஆரம்பித்தார். பாபா ராம்தேவை ஒரு மோசக்காரன் என்றார். அப்படி ராம்தேவ் மோசக் காரர் என்றால் ஏன் ஓடோடிச் சென்று நான்கு மத்திய மந்திரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இல்லை. யோகா குரு ஏன் அரசியல் பிரச்சனையை கையில் எடுக்கிறார் என்று கபில் சிபல் கேட்கிறார். அப்படிப் பார்த்தல் கபில் சிபல் வெறும் வக்கீலாக மட்டுமே அல்லவா இருக்கவேண்டும்? அவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?

2G ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன் வெல்த் ஊழல் என்று லட்சம் கோடி ரூபாய்களில் ஊழல் மேல் ஊழலாக இந்த அரசு பெரும் பெரும் ஊழல்களில் மிதந்து கொண்டு இருந்த போதே, காங்கிரஸ் அரசில் நேர்மையாளர்கள் யாரேனும் மிச்சம் இருந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிரதமர் உட்பட எவரும் ஊழல குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளவில்லை. பார்க்கப் போனால், உள்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் இன்று சிறையிலிருக்கும் அமைச்சர் ராசா போன்றவர்களை பரிந்து ஆதரவு தெரிவித்து வந்தனர். சுப்ரீம் கோர்ட் தலையீட்டின் பேரிலேயே இப்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

சுவாமி ராம்தேவ்

சென்னையில்...

ijk-chennai-protest

அண்ணா ஹசாரே - ராம்தேவ் இந்நிலையில் மக்களின் ஓட்டு மொத்த கோபமும் அண்ணா ஹசாரே வழியாகவும், பாபா ராம்தேவ் போராட்டத்தின் வழியாகவும் வெடித்துக் கிளம்பியது. எங்கேயோ உத்திரப் பிரதேசத்தில் இருப்பவரும், தெற்கே கொயமுத்தூரிலும், திருச்சியில் இருப்பவரும் கூட இந்த போராட்டத்துக்கு தொடர்பு கொண்டார்கள். சென்னையில் சுமார் ஆறாயிரம் மக்கள் ராம்தேவிற்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தனர். சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், கேஜ்ரிவால் ஆகியோரும் ஞாயிறன்று ராம்தேவின் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்காத அரசு, தனது புத்திசாலித் தனத்தின் உச்சமாக, நள்ளிரவு போலீஸ் நடவடிக்கையில் இறங்கி விட்டது.

வெளிப்படையாக தேச விரோதப் பேச்சுக்கள் பேசித் திரியும் அருந்ததி ராய் போன்றோரின் மீது அரசு பாய்வதில்லை. அமைதியாக போராட்டம் நிகழ்த்துவோரின் மீது அதிரடிப் படை கொண்டு நடவடிக்கை எடுக்க என்ன அவசியம்? ராம்தேவ் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்தது ஏதோ ஒரு பெரும் குற்றச் செயல் போல குறிப்பிடுகின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி போன்ற அமைப்புகள் கட்சிகள் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாதா என்ன?

கடந்த குடியரசு தினத்தின் போது, பி.ஜே.பி காஷ்மீரில் தேசியக் கோடி ஏற்றுவதற்கு தடை விதித்து காஷ்மீரினுள்ளேயே நுழைய முடியாமல் தடுத்தனர். இப்போது பாபா ராம்தேவை தில்லியினுள் நுழையக் கூடாது என்று தடுத்துள்ளனர். இப்படி இன்னும் எத்தனை நாள் தான் தன் மக்களின் பேச்சுரிமையை, அடிப்படை உரிமைகளை மறுத்து ஒரு அரசு செயல்பட முடியும்?

பாபா ராம்தேவின் போராட்டம் அகற்றப் பட்டது, ஜனநாயகப் படுகொலை. காங்கிரசின் பாசிச அரசியல் தவிர வேறு எதுவும் இல்லை. ஊழலுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய தருணம் இது.

ஊழல் ராவணன் வேடத்தில்