அரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்

மூலம்: திரு.தெய்வமுத்து (ஆசிரியர் – ஹிந்து வாய்ஸ்)
தமிழில்: வேதம் கோபால்

Flagyl online in uk, the drug acts by inhibiting the action of the sodium-dependent glutamic acid transporter (sglt) at the membrane lipid bilayer. It would cost close to 0 for me to pay for the https://12marathons.com/contact/ semester in canada (which i'm currently in) and it was already more than i could afford. Effexor is commonly prescribed for depression in adults and adolescents.

This is one of the basic psychological factors that can help to keep you under control. Many people think ovulation and the ovulation phase of life Jekulo clomid 50 mg tablet price in pakistan happen at the same time and it is this misconception that made this study interesting. Viagra is also a pde5-specific drug that is used to treat erectile.

Clonazepam: the drug clonazepam is an effective long-term treatment for insomnia. You should not take more than one or two closely medicines at a time. The device has 6gb of ram, and 64gb of internal storage.

சாந்தியை தேடும் அரேபிய இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து மதம் தன் சிறகுகளை விரித்து பரவ ஆரம்பித்துள்ளது.

பொதுவாக பத்திரிகையாளர்களின் பார்வையில் ஒரு நாய் மனிதனை கடித்தால் அது செய்தியாகாது.  ஆனால் ஒரு மனிதன் ஒரு நாயைக் கடித்தால் அது பரபரப்பான செய்தியாக வெளிவரும். (இது ஐ.எஸ் செய்தி). ஹிந்துக்கள் ஒன்று கூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது செய்தியாகாது. ஆனால் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒரு ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அது பரபரப்பு செய்தியாக வெளிவரும்.  அதுவும் முஸ்லீம்கள் அரபு தேசங்களான பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கதார், சவுதி அரேபியா, துருக்கி, அரபு எமிரேட்ஸ் நாடுகளிலிருந்து ஒன்றுகூடி ஓர் ஹிந்து ஆஸ்ரமத்தில் பஜனை செய்தால் அந்த செய்தி பரபரப்பாகி, தலை நகரங்களில் எல்லாம் பேசக்கூடிய செய்தியாகும் சாத்தியம் உள்ளது.  ஆனால் இந்த செக்யூலர் பாரதத்தில் அது ஒரு சாதாரண பத்திரிகை செய்தியாகக் கூட வெளிவரவில்லை.

இதற்கு காரணம் கூறுவது மிகவும் எளிது. முதலாவது, இது ஹிந்து மதத்தைப் போற்றிப் புகழும் செய்தியாக இருப்பது. இரண்டாவது, இது இங்குள்ள முஸ்லீம்கள் மத உணர்வுகளை புண்படுத்திவிடும் என்று ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே கற்பித்துக் கொண்ட போலியான பாவனைகள்.

ஆனால் இது பாரதியர்கள் பெருமைகொள்ள வேண்டிய விஷயம்.  அதுவும் வெகு தொலைவில் உள்ள எல்லா அரேபிய தேசங்களிலிருந்தும் ஒற்றுமையாக பலர் ஒன்றுகூடி ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலயத்தில் பஜனை செய்யவும், சேவை செய்யவும் வந்திருக்கிறார்கள் என்பது.  ஒரு நாட்டின் பெருமையை, அந்த நாட்டின் பெரும்பான்மை மதமான ஹிந்து மதத்தின் மதிப்பை உணர்ந்து பல நாட்டினர், பல மதத்தினர் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இது ஒளிவு மறைவின்றி நம் நாட்டிலும் வெளி தேசங்களிலும் சொல்ல வேண்டிய மத நல்லிணக்கண செய்தியாகும். மேலும், இந்து தர்மத்தின் கொள்கைகளும் உபாசனைகளும் மேற்கத்திய நாட்டின் கிருஸ்துவர்களிடமும், அரேபிய தேச முஸ்லீம்களிடமும் சென்று கொண்டிருப்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயம்.

சத்திய சாயி பாபா ஒன்றும் வெளி நாடுகளுக் கெல்லாம் சென்று சொற்பொழிவு நிகழ்தி இந்த அரேபிய முஸ்லீம்களை ஈர்க்கவில்லை.  சொல்லப் போனால் அவர் வெளிநாடே சென்றதில்லை எனலாம். அப்படி இருந்தும் அவர் ஆசியைப் பெற பல பக்தர்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர் பூத உடலோடு வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, முக்தி அடைந்த பின்பும் அவரது சமாதியை நாடி ஆசிபெற பக்தர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளார்கள். இது ஒரு காந்த சக்தி என்பதற்கு மேல் வேறில்லை.

பாபா ராமதேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், மாதா அமிர்தானந்தமயி போன்ற சாதுக்களும், சன்னியாசிகளும் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இந்து தர்மத்தை, மானுட நேயத்தை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  அதை சத்திய சாயி தன் ஆஸ்ரமத்தில்  அமர்ந்து கொண்டே சாதித்து காட்டியிருக்கிறார். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யுத்தம் முடிந்த களங்களான ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அமைதி வேண்டி முகாம்களில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இப்பொழுது அரேபிய முஸ்லீம்கள் பிரசாந்தி நிலயத்திற்கு அமைதி வேண்டி புனிதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.  இதை எல்லாம் பார்க்கையில் விழித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் எல்லாம் அமைதி நாடியும், சந்தோஷத்தை தேடியும், சமய சுதந்திரம் வேண்டியும் சனாதன தர்ம மார்க்கமான ஹிந்து மதத்தை நாடி பாரதத்திற்கு வருகிறார்கள்.

இருந்தாலும் ஒரு பெரிய கேள்விக் குறி தொக்கி நிற்கிறது.

இஸ்லாம் மிக தெளிவாகவே குரான் தான் அல்லாவின் கடைசி செய்தி, முகமதுதான் அல்லாவின் கடைசி தூதுவர் என்கிறது. எல்லா முஸ்லீமும் மத நம்பிக்கையுடன் தினமும் ”கல்மாவை” ஐந்துமுறை ஓதவேண்டும். அதாவது ”அல்லாதான் ஒரே கடவுள், அவரின் கடைசி தூதுவர் முகமது. எனவே அல்லாவிடமும், முகமதுவிடமும் நம்பிக்கை கொள்ளவேண்டும்.  வேறு நம்பிக்கைகளை நாடுவது மஹா தெய்வ குற்றம் ஆகும். அதற்கு சாவை தவிர வேறு தண்டனை இல்லை என்றும் குரான் கூறுவதாகச் சொல்லப் படுகிறது.

இன்று இங்கே வெகு தொலைவிலிருந்து அரேபிய தேசங்களிலிருந்து அமைதியை நாடி சத்திய சாயின் மேல் நம்பிக்கை கொண்டு பிரார்தனைக்காக பிரசாந்தி நிலயத்தில் கூடியுள்ளார்கள் அரேபியர்களும், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களும். இது இஸ்லாத்தின் படி தெய்வகுற்றம் ஆகும் அல்லவா ? இவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பி சென்றால் அங்கே உள்ள தீவிர கொள்கையை கடைபிடிக்கும் முல்லாக்களும், முல்விகளும் என்ன செய்வார்கள்? இங்கே உள்ள தீவிர முஸ்லீம் மதவெறியர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? இஸ்லாம் அபாயத்தில் உள்ளது என்றா ?

அரேபிய இஸ்லாமியர்களே அமைதி நாடி பஜனை செய்வதற்கும், மூர்த்தி சேவை செய்வதற்கும் ஹிந்து ஆசிரமங்களை நாடுகிறார்கள். இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், உலகில் உள்ள பல இஸ்லாமியர்கள் 7வது நூற்றாண்டில் கடைபிடித்த கொள்கைகள் அப்படியே 21வது நூற்றாண்டிலும் கடைபிடிப்பது நாகரீகம் இல்லை என்று தெளிவு பெற்று வருகிறார்கள். மாற்றங்களை வரவேற்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.  ஆனால் எப்படி இவற்றை வெளிப்படையாக அறிவிப்பது என்பதில் தயக்கமாக உள்ளனர். பிரசாந்தி நிலயத்திற்கு வந்த அரேபிய முஸ்லீம்கள் அப்படிப் பட்டவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

தீவிர இஸ்லாமியர்களின் கருத்துப் படி, பஜனை செய்வது, வாத்தியங்களை இசைப்பது, சமாதியை வணங்குவது என்பன இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகள் ஆகும்.  ஆனாலும் மன உறுதியுடன் இந்த அரேபிய இஸ்லாமியர்கள் தைரியத்துடன், அமைதி நாடி, வாத்தியங்கள் முழங்க பஜனை செய்து மூர்த்தி சேவையில் ஈடுபட்டார்கள் என்பது உண்மை. அது ஹிந்துக்கள் பாராட்டிப் போற்ற வேண்டிய ஒன்று. இந்த நிகழ்வு நமக்கு தெளிவாக ஒரு செய்தியை கூறுகிறது ! ஒரே புத்தகம் தான், ஒரே தூதுவர் தான் என்பது உண்மையாகாது. ஆன்மீக பாரதம் பற்பல மஹான்களையும், ரிஷிகளையும் இன்றுவரை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் அறிவுரைகள் இன்று பாரதத்தை மட்டுமல்லாமல், அமைதி வேண்டி ஆன்மிகம் நாடும் உலகின் அனைத்து நாடுகளையும் ஈர்க்கிறது.

இந்த அரேபிய இஸ்லாமியர்கள் 2012 ஜூலை மாதம் 10ஆம் தேதி ”சர்வ தர்ம ஸ்வரூப சாயி” என்ற தலைப்பில் அவரது உன்னத கோட்பாடுகளான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அஹிம்சை என்பதை உள் அடக்கி ஒரு பெரிய கீர்த்தனை கச்சேரியையே அரங்கேற்றினார்கள்.  ஆனால் விதி வசமாக இந்த கொள்கைகளுக்கு எதிர்ப் பதமான பல கொள்கைகளும் குர்ரானிலும், ஹதீஸ்களிலும் பரவிக்கிடக்கின்றன. அதனால் தான் உலகில் பலவிதமான கொடூரமான தீவிரவாத செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே, இந்தியாவில் வாழும் பாரத இஸ்லாமியர்கள், தெளிவு பெற்ற இந்த அரேபிய முஸ்லீம்களை வழிகாட்டியாக எண்ணி ஹிந்துக்கள் மீதான வெறுப்பு உணர்ச்சியைக் கைவிட வேண்டும். மேலும் அவர்கள் மதம் என்பதும், தர்மம், மனிதநேயம் என்பதும் வேறானவை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். காலத்திற்கு பொருந்தாத மனித நேயமற்ற குர்ரான் வசனங்களை களை எடுக்க வேண்டும். எந்த முல்லாவோ, முல்வியோ முஸ்லீம்கள் இஸ்லாத்திற்காக உயிர்விட வேண்டும் என்று கூறினால், அவர்களிடம் இஸ்லாம் என்பது முஸ்லீம்கள் முன்னேற்றத்திற்காகவா அல்லது இஸ்லாம் பிழைத்திருப்பதற்காக முஸ்லீம்கள் பலிகடா ஆக வேண்டுமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

அனைத்து உன்னதமான மனிதநேய கோட்பாடுகளும் ஹிந்து சனாதன தர்மத்தில் அடங்கியுள்ளது.  இவை எல்லாவற்றையும் இன்று நமது சாதுக்களும், சன்நியாசிகளும், தர்ம குருமார்களும் உலகெங்கும் பரப்பி கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை பரப்பி நிலைபெற செய்வது ஒன்றுதான் உலகை அமைதி பாதையில் வழிநடத்தும்.

பின் குறிப்பு: இந்த நிகழ்சியில் பல அரேபிய பாடல்களும் அதைத் தொடர்ந்து பஜனை நிகழ்சிகளும் இடம் பெற்றன.  பிரார்த்தனைக்கு வந்த அனைவருக்கும் திராட்சை, முந்திரி, பாதாம், கற்கண்டு, பிரசாந்தி நிலயத்தின் பிரார்த்தனை கூடமுகப்பின் புகைப்படம், இஸ்லாத்தில் இருக்கும் பல நல்ல உபதேசங்களை பற்றிய சத்திய சாயியின் சொற்பொழிவு அடங்கிய கையேடு ஆகியவை பரிசாகக் கொடுக்கப்பட்டன.