லாவண்யா மரணமும் “நடுநிலை” பாசாங்குகளும்

கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தனது உயிரையே மாய்த்துக்கொண்ட மாணவி லாவண்யாவின் மரணம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகையில், தமிழ்நாட்டின் சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் “நடுநிலை” என்ற பெயரில் இந்தப் பிரசினையை முன்வைத்து கூறப்படும் கருத்துக்களின் வக்கிரமும் போலித்தனமும் குமட்டலை ஏற்படுத்துகிறது.

I love my new and i love my old so i would recommend that if you do plan on making a big change this summer, that you take some time to consider other products as well. In this study, we investigate buy clomid for fertility Yarmouth if mutations of the dopr regulatory protein can be used as a means of promoting the survival of anaerobic bacteria and archaea. We compare cheap drugs from a wide variety of sources.

Gabapentin 600 mg gabapentin is a semisynthetic drug that inhibits the gaba receptor, part of the inhibitory neural network that helps reduce the pain signals sent from a injured neuron. Clomid and pregnancy (or hormone replacement therapy or hormone therapy for short) is a method of hormone replacement used to replace estrogen in Vangaindrano women who have been diagnosed as having a hormone resistant form of breast cancer. The clomid pill is taken once a day and can last up to two months.

If a drug is to be used on a continuous basis, a person may want to consult with a doctor. This form of pain is caused by nerve damage and is characterized by allodynia, a kroger flonase price Thunder Bay painful response that occurs even when the injured nerve is not stimulated with. Do you want to save money on your dosage of doxycycline in addition, a low dose of doxycycline (or a similar product) means you're likely to end up consuming less medication overall, so you're likely to experience fewer side effects.

அரட்டை என்ற சொல்லையே தனது சுய அறிமுகமாகக் கொண்டுள்ள Sowmya Ragavan என்ற இந்த ஃபேஸ்புக்கருக்கு, ஒரு இந்து மாணவியின் உயிரோ, அந்தக் குடும்பத்தின் பெருந்துயரமோ, அந்த மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டிய கிறிஸ்தவ மதமாற்ற வெறியின் கொடுங்கரங்களோ எதுவுமே ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம்… லாம். ஆனால், இப்படிப் பட்ட ஒரு “ஜோக்”கை உருவாக்கி ஏளனம் செய்து மகிழும் மனநிலை எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள முயல்கிறேன்.

இதற்குப் பின்னால் எத்தனை அடுக்குகள் பொய்மையும், Dumbo தன்மையும், கடும் இந்துமத வெறுப்பும், அதை உருவாக்கிய மூளைச்சலவையும் இருந்திருக்கிறது என்று யோசித்தால் மூச்சடைக்கிறது.

அதாவது, “எங்கள படிக்க வேண்டாம்” என்பதற்காகத் தான், நாகர்கோவிலிலும், திருநெல்வேலியிலும், சென்னை பட்டாபிராமிலும் திருவல்லிக்கேணியிலும் இன்னும் பற்பல ஊர்களிலும் இந்து காலேஜ், இந்து ஹை ஸ்கூல், நேஷனல் காலேஜ் மேலும் பற்பல பெயர்களில் இந்த மண்ணின் குப்பனும், சுப்பனும் கருப்பாயியும் மீனாட்சியும் கல்வி கற்பதற்காக உயிரையும் உழைப்பையும் நிதியையும் கொடுத்து ஏகப்பட்ட கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். அவர்கள் எல்லாம் “சங்கிகள்”.

பிரிட்டிஷ் காலனியம் வருவதற்கு முன்பே இங்கிருந்த சுதேசிக்கல்வி குறித்து, காந்தியர் (“சங்கி” அல்ல) தரம்பால் எழுதிய “அழகிய மரம்” முதலான புத்தகங்களை மாங்கு மாங்கென்று B. R.மகாதேவன் உயிரைக் கொடுத்து மொழிபெயர்த்து, அவை கிழக்கு பதிப்பகம் போன்ற பிரபல பதிப்பகம் மூலமே வெளிவந்துள்ளன. இதெல்லாம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபரப்பில் சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை என்று தோன்றுகிறது. காந்தியரான ராஜாஜி (“சங்கி” அல்ல) கொண்டுவந்த “குலக்கல்வி” திட்டம் என்பதும் உண்மையில் எளிய மக்களை நசுக்குவதற்காக அல்ல, மாறாக அவர்களது பள்ளிக்கல்வியை நீடித்ததாக, துரிதமாக்குவதற்காக உருவாக்கப்பட்டது என்று பல ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

இந்த வரலாற்று பிரக்ஞை எல்லாம் அந்தக் குருவி மண்டைக்கு ரொம்பப் பெரிதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவ பள்ளிகளில் நடக்கும் மதமாற்ற “டார்ச்சர்” என்பது தமிழ்நாட்டின் சமூக யதார்த்தம், சாதாரண அரட்டையர்களுக்குக் கூட புலப்படும் அந்த விஷயத்தைக் கூட இருட்டடிப்பதன், மூடி மறைப்பதன் உள்நோக்கம் என்ன?

ஒரு பாவமும் அறியாத #லாவண்யா மரணத்திற்கு நீதிகேட்டு இன்று தேசம் முழுவதும் குரல்கள் வலுத்து வருகையில், தமிழ் ஊடகங்கள் இதைப்பேச மறுத்து கள்ள மௌனத்தில் ஆழ்ந்துள்ளன என்பதை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த “ஜோக்கை” எழுதியவர் ஒரு திமுக கொத்தடிமையாக, இந்து முகமூடியில் உலவும் ஒரு கிறிஸ்தவ வெறியராக, எப்படியும் இருக்கக் கூடும். ஆனால் இந்த பிரசினையில் ஒரு கணிசமான தரப்பின் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்றால், தமிழ்நாட்டின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாகிறது.

பி.கு: லாவண்யாவின் தந்தை ஒரு திமுக கட்சி அபிமானியாக இருந்தவர், “சங்கி” அல்ல.


“மதம் மாறாமல் இருக்கும் லட்சக்கணக்கான கான்வெண்ட் மாணவிகளில் ஒருத்தி” – Kirthika Tharan என்பவர் எழுதிய பதிவின் கடைசிவரி. இதே போன்று “இன்னும் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் இரவு நேரத்தில் பேருந்தில் பயணிக்கும் லட்சக்கணக்கான பெண்களில் ஒருத்தி” என்ற வாசகத்தை நிர்ப்பயா வன்புணர்வு என்னும் குரூர சம்பவத்திற்குப் பின்பு ஒரு பெண் எழுதினால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதற்குச் சற்றும் குறையாத உணர்வின்மை இந்த வரிகளில் உள்ளது என்பதையாவது இப்பதிவர் உணர்கிறாரா?

லாவண்யா என்ற இந்து மாணவியிடம் இருந்தது ஒரு vulnerability. அதைக் குறிவைத்துத் தான் அவர்மீதான உளவியல் சித்ரவதைகள், மதமாற்ற அழுத்தங்கள் சம்பந்தப்பட்ட கிறிஸ்தப் பள்ளியால் தரப்பட்டன. இந்த அடிப்படை புரிதல் கூட ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள இந்தப் பதிவருக்கு இல்லையா அல்லது வேண்டுமென்றே விஷயத்தின் தீவிரத்தை trivialize செய்கிறாரா?

லாவண்யாவின் மரணத்தை முன்வைத்து ஒரு உண்மையான சீரியசான மக்கள் பிரசினையைப் பேசிக்கொண்டிருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் கசப்புகளை “மத அரசியலை” கொண்டுவருகிறதாம். எப்படியெல்லாம் சீன் போடுகிறார்கள் பாருங்கள். உண்மை என்னவென்றால், இவ்வளவு நாள் இங்கு நடந்துவரும் மத அரசியலில் இந்துவெறுப்பு, இந்து எதிர்ப்பு கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கிறது. அது தரும் தெனாவட்டில் தான் கிறிஸ்தவ மதமாற்ற வல்லூறுகள் இங்கு திரிந்துகொண்டிருக்கின்றன. ஒரு மாற்றமாக, இந்து வாழ்வுரிமைப் பிரசினையை ஒரு கட்சி அழுத்தமாக பேச ஆரம்பித்த உடனேயே திமுக என்ற கட்சிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் ஏற்படும் பதற்றத்தையே இது காட்டுகிறது.

கட்சியும் அரசியலும் ஒருபுறம் இருக்கட்டும். ஒரு பெண்ணாக, ஒரு மனிதராக, தற்கொலை செய்துகொண்ட மாணவி மீது ஒரு குறைந்தபட்ச பரிவு காட்டும் மனசாட்சி கூடவா மரத்துப் போய்விட்டது? 🙁


அரியலூர் மாணவி விவகாரம்: `பாஜக-வினர் கிராமத்துக்குள் வரக் கூடாது!’ – மைக்கேல்பட்டி மக்கள் மனு என்கிறது விகடன் செய்தி.

திமுக அரசு இந்த விவகாரத்தில் தனது வழக்கமான குயுக்திகள் எல்லாவற்றையும் ஏற்கனவே பிரயோகிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அரசில் அதீத செல்வாக்கு செலுத்தும் கிறிஸ்தவ மிஷநரி மாஃபியாவும் இதில் முழுமூச்சாக இறங்கியுள்ளது. அதில் முக்கியமான புள்ளி – மாணவியின் மரணத்தை முற்றிலுமாகக் குறுக்கி “உள்ளூர்” லோக்கல் விவகாரம் போலக் காண்பிக்க முயற்சிப்பது. அதன் ஒரு பகுதி தான் மைக்கேல்பட்டி என்ற ஊர்மக்கள் எல்லாரும் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைப்பது என்ற திட்டமிடப்பட்ட நாடகம். அதாவது ஊர்மக்களே அந்த இடம் ஒரு “அமைதி பூங்கா” என்றும் அங்கு “முழு மத நல்லிணக்கம் நிலவுகிறது” என்றும் “கிறிஸ்தவ மதமாற்ற பிரசினை எதுவும் இல்லை” என்றும் “தூய இருதய பள்ளி மக்களுக்கு மாபெரும் சேவை செய்து வருகிறது” என்றும் ஆட்சியருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கிறார்களாம். அதுவும் எப்படி? அங்கு அதிக எண்ணிக்கையில் வாழும் “இந்துக்கள்” இப்படி கூறுகிறார்களாம். இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி “அமைதிப்பூங்கா”வில் அனாவசியமாக பாஜக காரர்களும் இந்து இயக்கங்களும் பிரசினை செய்கிறார்கள் என்ற பிம்பத்தை உண்டாக்குவது தான் இதன் நோக்கம்.

இப்படித்தான் தமிழ்நாடும் ஒரே “அமைதிப்பூங்கா”வாக இருக்கிறது என்று வழக்கமாகக் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் உருவாக்கியுள்ள அகராதியில் “அமைதிப்பூங்கா” என்றால் அங்கு கிறிஸ்தவ மதமாற்றமும், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு அராஜகங்களும், இஸ்லாமிய மதவெறி – ஜிகாதி பிரசாரங்களும் ஜகஜ்ஜோதியாக எந்த இடையூறுமில்லாமல் அரசு ஆதரவுடன் ஏகபோகமாக நடக்கும் என்று பொருள். எப்போதும் அசட்டையாகவும் திராவிட கட்சி கொத்தடிமைகளாகவுமே இந்துக்களை வைத்திருந்து பழக்கிவிட்ட இந்த மாநிலத்தில் இந்தக் கொடுமைகளையும் அராஜகங்களையும் எதிர்த்து இந்துத் தரப்பிலிருந்து திடீரென்று ஒரு சிறு குரல் எழுந்தால் கூட “அமைதி” குலைந்து விட்டது ஐயோ குய்யோ முறையோ என்று அலறுகிறார்கள்.

தமிழ்நாடு பாஜகவும், அதன் தொண்டர்களும் இந்தப் பொறியில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பிரசினையை வைத்து இப்போது எழுந்திருக்கும் இந்து அறச்சீற்றக் கனல் அணையாமல், இந்த பிரசினையின் அனைத்து பரிமாணங்களையும் பேசுவதற்கான களமாக இதை மாற்றவேண்டும். கீழ்க்கண்ட விஷயங்கள் அனைத்தும் பேசப்பட வேண்டும்.

  • கிறிஸ்தவ கல்வி நிலையங்களின் மதமாற்ற அழுத்தத்தால் ஏற்கனவே நிகழ்ந்த “மர்ம” மரணங்களை தமிழக காவல்துறை ஊத்திமூடியது எப்படி – உசிலம்பட்டி சிவசக்தி (2015), சென்னை ரஞ்சிதா (2009), ஓமலூர் சுகன்யா ஆகியோர் மரணங்களுக்கான நீதி.
  • தமிழ்நாடு மாநில அரசின் கல்வித் துறையை கிறிஸ்தவர்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ள கொடுமை, அதற்கான தீர்வு
  • அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் என்ற வகையில் ஏன் மிக அதிக % நிதி கிறிஸ்தவ பள்ளி, கல்லூரிகளுக்கு போகிறது, ஏன் அவை இந்துக்கள் சிறப்பாக சேவை மனப்பான்மையுடன் நடத்தும் கல்வி நிலையங்களுக்குப் போவதில்லை என்று அரசுக்கு கோரிக்கை
  • அப்பாவி இந்து, கிறிஸ்தவ பெண்கள், சிறார்கள் மீதான கிறிஸ்தவ சர்ச்கள், கூடுகைகள், மதப்பிரசார அமைப்புகளின் பாலியல் அத்துமீறல்கள்
  • தமிழ்நாட்டில் இந்திய தேசிய விரோதத்தையும், இந்துமத வெறுப்பையும், பிரிவினைவாதத்தையும் தூபம் போட்டு வளர்க்கும் கிறிஸ்தவ மத அமைப்புகளின் மீது நடவடிக்கை
  • கிறிஸ்தவத்திற்கு மாறியபின்னரும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இந்து என்று பொய் கூறி சாதிச்சான்றிழ் பெற்று சட்டவிரோதமாக இடஒதுக்கீடை பெறும் “முகமூடி கிறிஸ்தவர்கள்” மீதான நடவடிக்கை

இந்த அனைத்து விஷயங்களையும் முன்வைத்து பாஜக தனது போராட்டத்தை முன் எடுத்துச்செல்ல வேண்டும்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

தமிழ்ஹிந்து தளத்திற்கு நாரதர் விருது-2017

இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத்  கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள்.  நாரத மகரிஷி ஆதிமுதல் ஊடகவியலாளர்  என்பதால் அவர் பெயரில் விருது.

இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்),  ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்), மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.

“தமிழ்ஹிந்து இணையதளம் உண்மையில் பல நண்பர்களது கூட்டு முயற்சியாலும் உழைப்பாலும் உருவாகி வளர்ந்தது. தளத்தின் உருவாக்கம், நிர்வாகம், ஆசிரியர் குழு, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றில் பங்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இவ்விருதை உரித்தாக்குகின்றேன். தங்கள் படைப்புகளை அளிக்கும் எழுத்தாளர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கும் நன்றி” என்று ஆசிரியர் குழு உறுப்பினர் ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ்ஹிந்துவின் ஒட்டுமொத்த ஆசிரியர் குழுவின் சார்பாக,  மேற்கண்ட கருத்தை வழிமொழிகிறோம்.

இத்தளத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும்  கணிசமான பங்களித்தவர்கள் மற்றும் தொடர்ந்து பங்களித்து வருபவர்கள் என்ற வகையில் அரவிந்தன் நீலகண்டன், ஆனந்த கணேஷ், ஜெயஸ்ரீ கோவிந்தராஜன், ச.திருமலை,  ஸ்ரீகாந்த், ஹரன்பிரசன்னா, ம.வெங்கடேசன்,  எஸ்.கே, மதுரபாரதி, ஹரி கிருஷ்ணன், சேதுபதி அருணாச்சலம்,   சேக்கிழான், வீர.ராஜமாணிக்கம், ஒரு அரிசோனன், தேசிகன், ராமச்சந்திர சர்மா ஆகியோரை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழ்ஹிந்து இணையத்தின் வாசகர்களையும் அபிமானிகளையும் விருது விழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: ஜூன் 10, 2017,  சனிக்கிழமை  மாலை 6 மணி

இடம்:  TAG அரங்கம், ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் மேல்நிலைப்பள்ளி, 54, பர்கிட் சாலை, தண்டபாணி தெரு, தி.நகர், சென்னை – 17.


சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

Sakshi Maharaj
சாக்‌ஷி மஹராஜ்

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது.

பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கருத்தில் கொண்டதாக இருந்தாக வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் பாஜகவின் லட்சியங்களை முழுமையாக ஏற்கும் நிலை வரும்வரை கட்சி பொறுமை காத்தாக வேண்டும்.

மதச்சார்பின்மை என்ற காங்கிரஸ் கடைப்பிடித்த போலித்தனத்தில் பாஜக உழல வேண்டியதில்லை. அதேசமயம், பாஜக இப்போது ஆளும்கட்சி என்பதையும் மறந்துவிடக் கூடாது. இங்கு தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள் தடம் புரள்கிறார்கள்.

இன்றைய தேசிய அரசியல், பாஜக – அதன் எதிரிகள் என இருகூறாகப் பிளவுபட்டு நிற்கிறது. பொதுவாகவே பாஜகவைக் குறைகூற காரணங்களைத் தேடும் எதிர்க்கட்சியினருக்கு,  ‘வெறும் வாயை மெல்லுவோருக்கு கிடைத்த அவல் போல’ சில சர்ச்சைகளை சொந்தக் கட்சியினரே உருவாக்கித் தருவது நல்லதல்ல. ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் அட்டகாசம் கிளப்பிவிட்டதாக கதைத்துவரும் போலி மதச்சார்பின்மைவாதிகளுக்கு உதவும் வகையிலேயே சாக்‌ஷி மஹராஜ் போன்றோரின் கருத்துக்கள் இருக்கின்றன.

சென்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மையை மக்கள் வழங்கியதன் காரணம், இத்தனை நாட்களாக போலி மதச்சார்பின்மை மூலம் மக்களை காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் மூன்றாவது அணியினரும் ஏமாற்றியதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர் என்பது தான். அதே சமயம், நாட்டின் வளர்ச்சிக்கு நரேந்திர மோடியே தேவை என்ற எண்ணமும், ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சி பாஜகவால் மட்டுமே அமையும் என்ற நம்பிக்கையும் கூட மோடியின் பெரும் வெற்றிக்குக் காரணங்களாயின.

சாத்வி நிரஞ்சன் ஜோதி
சாத்வி நிரஞ்சன் ஜோதி

மோடி பிரதமரான பிறகு பல நிர்வாக மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். இப்போது அவர் எடுத்துள்ள நடவடிக்கைகளின் பலனை முழுமையாக அடைய நாட்டிற்கு குறைந்தபட்சம் ஓராண்டாவது ஆகும். இப்போதே பொருளாதாரத்தில் மீட்சி தென்படத் துவங்கியுள்ளது. ஊழலுக்கு மோடி அரசு கடும் எதிரி என்பதை எல்லாக் கட்சியினரும் உணர்ந்துவிட்டனர். அவர்களால் மோடி அரசை வேறெந்த வழியிலும் குறைகூற முடியாது.

கருப்புப்பண மீட்பில் தாமதம், அவசரச் சட்டங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் நியாயமானவை அல்ல என்பது எதிர்க்கட்சியினரே அறிந்தவை. எந்த ஒரு அரசும் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படும்போது அவசரச் சட்டங்களை கொண்டுவந்தே ஆக வேண்டும். கருப்புப்பண மீட்புக்கு முதல் முறையாக ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மோடி அரசு தான் எடுத்துள்ளது. எனவே இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், பாஜகவின் உளறல் திலகங்களால் ஏற்படும் சேதாரம் தான் அதிகமாக இருக்கிறது.

ஆர்வத்துக்கும் ஆர்வக் கோளாறுக்கும் ஒரு நூலிழை தான் வித்யாசம். சில நேரங்களில் ஆர்வக் கோளாறு உண்மையான ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையாகி விடுவதும் உண்டு. அதுபோலவே சில பாஜக நிர்வாகிகளின் கருத்துக்கள் சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் உத்தரப்பிரதேசத்தின் உண்ணாவ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.யான சாக்‌ஷி மஹராஜ்.

துறவியான இவர் ஏற்கனவே மூன்று முறை எம்.பி.யாக இருந்திருக்கிறார். உ.பி.யில் முக்கியமான பாஜக தலைவரான இவர் மீது மாயாவதி அரசும் அகிலேஷ் யாதவ் அரசும் பல பொய்வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. இவரது அதிதீவிர ஹிந்து உணர்வுப் பேச்சுகளே இவரது அடையாளமாகவும் சில நேரங்களில் தடையாகவும் மாறிவிடுகின்றன.

“மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்; பசுவை வதைப்போருக்கும் ஹிந்துக்களை முஸ்லிமாக மதம் மாறுவோருக்கும் மரண தண்டனை தரும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; மதரஸாக்கள் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டன” என்றெல்லாம் இவர் இதற்கு முன்னர் கூறி இருக்கிறார். இதன்மூலமாக ஊடகங்களில் அதீத கவனம் பெறும் சாக்‌ஷி மஹராஜ், இதனால் கட்சிக்கு பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி விடுகிறார்.  இவரது பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதோ, அல்லது அவரது கருத்து கட்சியின் கருத்தல்ல என்று மறுப்பதோ பாஜக செய்தித் தொடர்பாளர்களின் வேலையாகி விடுகிறது.

குறிப்பாக கோட்சேவின் முன்யோசனையற்ற செயலால் விளைந்த சரித்திரத் தவறின் விளைவாக, சங்கமும் பாஜகவும் பல்லாண்டுகாலமாக தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத  ‘காந்தி படுகொலை’ என்ற சிலுவையை நீண்டகாலமாக சுமந்துகொண்டிருக்கின்றன. அதன்பயனாகவே பாரதத்தின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது; ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிவதற்கான மதச்சார்பின்மை என்ற தந்திர குகையும் உருவாக்கப்பட்டது. இதை எல்லாம் மறந்துவிட்டு கோட்சே புகழ் பாடும்  சாக்‌ஷி போன்றோரால், பாஜகவின் மதிப்பு குலைகிறது. தவிர காந்தி கொலையை இன்னமும் பிரசாரம் செய்யும் எதிரிகளுக்கு இவர்களே துணை போகிறார்கள்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இந்நிலையில், “ஹிந்துப் பெண்கள் அனைவரும் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாட்டின் மக்கள் தொகையில் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்படாது” என்று உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் பேசி மீண்டும் செய்தி ஆகி இருக்கிறார் சாக்‌ஷி.

நாட்டின் மக்கள் தொகை விஷயத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை ஒப்பிட்டால் சாக்‌ஷி கூறியது தவறில்லை என்பது உண்மையே. ஆனால், அரசு அளவான குடும்பத்தைப் பிரசாரம் செய்யும் நிலையில், அரசின் பிரதிநிதி அதற்கு எதிரான கருத்தைத் தெரிவிப்பது சிக்கலையே ஏற்படுத்தும். அதுவே தற்போது நடந்துள்ளது. சாக்‌ஷி இப்போது ஆளும் பாஜகவின் அங்கம். ஆனால் இன்னமும் தான் முலாயமை எதிர்க்கும் ஒரு பாஜக ஊழியன் என்ற நினைப்பிலேயே உள்ளார். இது தான் பிரச்னை.

எனவே தான், சாக்‌ஷியின் கருத்து பாஜகவின் கருத்தல்ல என்று விளக்கம் அளிக்க வேண்டி வந்தது. தவிர, இது தொடர்பாக சாக்‌ஷி மஹராஜ் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஊடகப் பரபரப்புக்காக எதையாவது உளறிக் கொட்டுவோரை கட்சி எச்சரித்திருக்கிறது.

இந்த இடத்தில் மக்கள் பெருக்கம் குறித்த சாக்‌ஷியின் கருத்தையும் உதாசீனம் செய்ய முடியாது. ஹிந்து மக்கள் தொகை குறைந்த பகுதிகளாக இருந்த பிரதேசங்கள் தான் 1947-இல் தேசப்பிரிவினைக்கு இலக்காயின என்பதை மறந்துவிட முடியாது. இங்கு சாக்‌ஷி மஹராஜ் செய்திருக்க வேண்டியது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து சமுதாயங்களும் சரிசமமாகக் கடைபிடிக்கச் செய்ய என்ன செய்வது என்ற ஆலோசனையை அரசுக்கு வழங்கி இருக்க வேண்டும் என்பது தான்.

அதுவும் கூட சர்ச்சைக்குரியதாகவே இருக்கும். ஆனால், மதரீதியாக இதனை அணுகாமல் தேசநலன் என்ற அடிப்படையில் அணுகும்போது, சர்ச்சைகள் குறைவது மட்டுமல்ல, பாஜகவின் மதிப்பும் அதிகரிக்கும்.

தில்லியில் சட்ட்சபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, “இந்தியாவில் பிறந்தோர் அனைவரும் – ஹிந்துக்களோ, முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ அனைவருமே ஸ்ரீராமனின் வழித்தோன்றல்கள் தான்” என்று கூறினார். அத்துடன் அவர் நிறுத்தி இருந்தால் அவரை யாரும் நிராகரித்திருக்க முடியாது. ஆனால் அடுத்து, “இதை ஏற்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று கூறியது சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்த நாட்டைவிட்டு வெளியேறுமாறு யாருக்கும் உத்தரவிட எந்த ஒரு தனி நபருக்கும் உரிமையில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் அதிகார மமதையாகவே மக்களால் பார்க்கப்படும்.

சாத்வியின் பேச்சை முக்கியமான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கின.  யோகி  ஆதித்யநாத்தின் தாய்மதம் திருப்பும் ‘கர் வாபஸி’ பேச்சுக்களும் நாடாளுமன்றத்தில் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தின.

நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இன்னமும் தேசிய அரசியல் மாற்றத்தின் அர்த்தம் புரியாமல், அரசின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஹிந்துத்துவ அடையாளங்களைக் காண்பதாக எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தான் பாஜகவின் சர்ச்சைக்குரிய பேச்சாளர்கள் பெரும் பிம்பம் ஆக்கப்படுகிறார்கள். ஊடகங்களுக்கு அமைதியான முறையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், மனோகர் பாரிக்கர், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் போன்றோரைப் பாராட்ட நேரமில்லை. மோடியின் அனாவசியமற்ற ஒரு வார்த்தையையும் இந்த ஊடகங்களால் சுட்டிக் காட்ட முடியாது. அதனால் தான், அவலாகக் கிடைக்கும் சாக்‌ஷி போன்றோரைக் கொண்டு அரசை விமர்சிக்கிறார்கள்.

மறக்கக் கூடாத மாமனிதர் பண்டித தீனதயாள் உபாத்யாய
மறக்கக் கூடாத மாமனிதர்
பண்டித தீனதயாள் உபாத்யாய

சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக தலைமை அளித்திருக்கும் எச்சரிக்கை, பிற தலைவர்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்க உதவினால் நல்லது. கட்டுப்பாடற்ற கட்சி என்ற தோற்றம் உருவாக இடம் கொடுப்பது, மோடியின் வளர்ச்சி நோக்கிய ஆட்சிக்கும் வெளிப்படையான நிர்வாகத்துக்கும் தடைக்கல்லாகிவிடும்.

‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இறுதி இலக்காகக் கொண்ட தத்துவத்தின் மீது கட்டப்பட்ட அரசியல் மாளிகை தான் பாஜக. இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையினர்- சிறுபான்மையினர் வேறுபாடும், உயர்ந்த ஜாதி- தாழ்ந்த ஜாதி வேறுபாடும், செல்வர்கள்- ஏழைகள் வேறுபாடும் இல்லாமல் செய்ய வேண்டும். அதுவே பாஜகவின் இறுதி இலக்கு. பண்டிட் தீனதயாள் உபாத்யாய கனவு கண்ட ஒப்பற்ற பாரத சமுதாயம், பாஜகவின் நிதானமான, பெருந்தன்மையான அணுகுமுறைகளால் தான் சாத்தியமாகும்.

 

சமூக ஊடகங்களில் கவனம் தேவை

முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அதிதீவிர ஹிந்துத்துவர்களின் புலிப்பாய்ச்சல் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. மோடி அரசு மத்தியில் இருப்பதாலேயே பலருக்கு உற்சாகம் கிளப்பி சகட்டுமேனிக்கு கருத்துக்களை வாரி இறைக்கிறார்கள். உண்மையில் அவர்களுக்கும் ஹிந்துத்துவ இயக்கங்களுக்கும் எந்த்த் தொடர்பும் இல்லாதிருந்தாலும் கூட, அவர்களின் ‘போலி வேகம்‘ மிகுந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பாஜகவுக்கும், ஹிந்து இயக்கங்களுக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது குறித்து ஹிந்து இயக்கத்தினரும், பாஜகவினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.

சமூக ஊடகங்களை நமது லட்சியங்களைப் பரப்பும் களனாக மாற்றலாம்; நமது நிகழ்வுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் கருவியாக்கலாம்; ஆக்கப்பூர்வமான ஊடகமாக அதைப் பயன்படுத்தும் வரை யாருக்கும் தீமை இல்லை. ஆனால், எல்லை கடந்த விமர்சனங்கள், நாகரிகமற்ற சொல்லாடல்கள், தன்னிச்சையான மிரட்டல்கள் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காணுபோது வருத்தம் மேலிடுகிறது.

உண்மையான சமூக ஊழியர் இதுபோன்ற நீர்க்குமிழிகளிலிருந்து விலகியே நிற்பார். ஏனெனில் குறைகுடங்களே கூத்தாடும்; நிறைகுடங்கள் என்றும் தளும்புவதில்லை.