தலித்துகள் மீதான இஸ்லாமிய கரிசனை…

இந்து  அண்மையில் பாரதிய வம்சாவளி ‘ரோமா’ சமுதாயத்தினர் மேற்கத்திய நாடுகளில் படும் இன்னல்கள் குறித்து எழுதிய உடனேயேmorning_hindutva சில இஸ்லாமிய சகோதரர்கள் வந்து மேற்கத்திய நாடுகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக ‘தலித்துகள் இந்தியாவில் இன்னல்கள் அனுபவிக்கவில்லையா?’ என கேட்டிருக்கிறார்கள். ஏதோ சாதியமும் சமுதாயக் கொடுமைகளும் இந்து சமுதாயத்துக்கு மட்டுமே உரியது என்பது போலவும், இஸ்லாம் ஏதோ சமூக விடுதலை சித்தாந்தம் என சித்தரிப்பது நோக்கம். ஆனால் இஸ்லாத்தை விட சமூக அநீதிகளை மூடி மறைத்து சமத்துவ வேடம் போடும் சமுதாயம் வேறொன்று கிடையாது. இதை இந்த கட்டுரையை எழுதுபவன் சொல்லவில்லை. போதிசத்வ அம்பேத்கர் கூறுகிறார்:

It is possible to use this medication for more than two months and it is best to begin at a low dose. Or would the dose need to be gradually reduced until the body gets used generic clomid price to it and i stop it and. The most important reason for using tamoxifen was to reduce the number of tumors.

The honey must be pure and made by a certified apiary in order to be used as an anti-diarrhea medicine. The online pharmacy viagra nz is a professional clomiphene price in pakistan constantly online pharmacy in uk with a network of over 150. He is a board-certified, board-licensed and fellowship trained obstetrician and gynecologist based in new york city.

The product contains only the ingredients for which it claims. It’s important https://pulina.design/portfolio/mediterranean-oasis/ that your skin receives proper hydration before, during and after the application of makeup. Three times higher than the price of the brand-name drug,

இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகள் அனைவருக்கும் தெரியும். காதரின்ambedkar1 மேயோவின் மதர் இந்தியா இந்து சமுதாயத்தில் உள்ள சமூக தீமைகளை வெளிக்காட்டிய அதே நேரத்தில் ஏதோ இஸ்லாமிய சமுதாயம் முற்போக்கானது எனும் எண்ணத்தை உருவாக்கியது. இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை அருகாமையிலிருந்து பார்த்த எவருக்கும் அது அதிசயத்தை அளிக்கும். இந்துக்களிடம் இருக்கும் எந்த சமூக தீமை இஸ்லாமியர்களிடம் இல்லை என கேட்கலாம்.

பாபா சாகேப் மேலும் தெளிவாக சொல்கிறார்: இஸ்லாமிய சமுதாயம் ஹிந்து சமுதாயத்தைக் காட்டிலும் சமூக தீமைகள் நிரம்பியது.

ஒருவேளை பாகிஸ்தான் உருவாகி இஸ்லாமியர்களுக்கு என்று தனி தேசம் ஏற்பட்டால் நிலை சரியாகிவிடுமா? என நினைத்தால் அதுவும் இல்லை. நவம்பர் -15-2003 இல் ’எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ caste_pakistan இதழில்  இர்ஃபான் அகமது என்பவர் எழுதிய கட்டுரை விஷயங்கள் மிக மோசமாகவே உள்ளன என்பதை காட்டுகின்றன. அவர் சொல்கிறார்: இஸ்லாமிய பாகிஸ்தானில் இந்த ‘இந்து’ தன்மையான சாதி இருக்காது என நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சாதி பாகிஸ்தானில் இந்தியாவில் இருப்பதைவிட தீர்க்கமாக இருக்கிறது.

ஒரு தெளிவான வரலாற்று ஆதாரத்தையே நாம் சொல்லலாம். பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவுதினம் நேற்று. பாபு ஜெகஜீவன் ராமை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொன்னார் மதன் மோகன் மாளவியா. இத்தனைக்கும் மாளவியா ஆச்சாரவாதி என கருதப்படுபவர். jramஆனால் தலித்தான ஜெகஜீவன்ராம் அவர்களை பனாரஸ் இந்து கல்லூரியில் இணைந்து படிக்க சொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை. ஆனால் அலிகார் முஸ்லீம் கல்லூரியை நிறுவிய சையத் அகமதுகானுக்கு இஸ்லாமிய ஒடுக்கப்பட்ட சாதிகளான நெசவாளர் போன்றவர்களை கல்லூரியில் சேர்க்க மனத்தடை இருந்தது. எனவேதான்  1970களில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா பத்திரிகை நடத்திய பேட்டியில் பாபு ஜெகஜீவன் ராம் தன்னை ’பெருமை மிக்க இந்து’ என வர்ணித்தார். இதற்கு இஸ்லாமிலேயே நெடிய பாரம்பரியம் உண்டு என்பதுதான் உண்மை. முல்லா அப்துல் க்வாதிர் பதாயுனியின் ‘முன்தகப் அல் தவாரிக்’, மௌலவி ஸையது ஸியதின் பர்னியின் ‘தாரிக் இ ஃபெரோஸ் ஷாகி’ அல்லது குன்வர் முகமது  அஷ்ரப்பின் ‘ஹிந்துஸ்தான் மாஷ்ரா அகத் இ உஸ்தா மைன்’  ஆகிய சட்ட, மார்க்க விளக்க நூல்கள் இஸ்லாமிய சாதிய சமுதாயத்தை நியாயப்படுத்துகின்றன.  காஸி சஜத் ஹுசைன் என்கிற இஸ்லாமிய அறிஞர் நல்ல இஸ்லாமியர்கள் எந்தெந்த சாதி முஸ்லீம்களுடன் சேர்ந்து உணவு அருந்த கூடாது என வரிசைப்படுத்தியிருக்கிறார் என்பதுடன் அதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் சொல்லியிருக்கிறார்.  ஆம்.. நிச்சயமாக நமது இஸ்லாமிய சகோதரர்கள் அது சஹீ ஹதீஸ் அல்ல என சொல்லக் கூடும். ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தூக்கிப் பிடிக்கப் படும் ஹிட்லரின் முன்னோடி அவுரங்கசீப் ஆட்சியில் கூட நிலை இப்படித்தான் இருந்தது.  அவுரங்கசீப் காலகட்டத்தில் அதிகாரபூர்வமாக அவனது கட்டளையின் அடிப்படையில் எழுதப்பட்ட ’பத்வா இ அலம்கிரி’ நூலில் இஸ்லாமிய சட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக இயற்றப்பட்டன.

ஆனால்  இஸ்லாமிய சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் முழங்குகிறவர்கள் உண்மையில் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுக்கு இஸ்லாமிய சமத்துவம் என்கிற பிரச்சார மாயைக்கு அப்பால் பேச எதுவுமே இல்லை.  ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்கிற அடிப்படைவாத அமைப்பு தூய இஸ்லாத்தை முன்வைப்பதாக சொல்லி செயல்படும் அமைப்பு. இதே அமைப்பின் பங்களாதேஷ் அவதாரம்தான் இந்துக்களை இனப்படுகொலை செய்வதில் முன்னணியில் நின்றது. தமிழ்நாட்டில் தூய இஸ்லாத்தை பரப்பும் பலரும் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவோ அல்லது அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பர். ஆனால் ஒடுக்கப்பட்ட இஸ்லாமியரின் பிரச்சனைகள் குறித்து இந்த அமைப்பினர் ஏதாவது செய்தார்களா என்றால் இல்லை என்கிறார் இர்ஃபான் அகமது. மாறாக அதை மூடி மறைக்கவே இவர்கள் பார்க்கிறார்கள்.  என்னதான் மூடி மறைத்தாலும் சாதிய கொண்டை தெரியாமல் இல்லை.  இர்ஃபான் அகமது தோலுரிக்கிறார்:

ஜமாத் இ இஸ்லாமியின் ’தவாத்’ இதழின் இறுதி பக்கத்தில் திருமண விளம்பரங்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பான்மையான விளம்பரங்களில் மணமகள்/மகனின் சாதி குறிப்பிடப் பட்டுள்ளது.  என்னுடைய களப்பணியில் ஒரு ஜமாத் இ இஸ்லாமி உறுப்பினர் எப்படி தனது சகோதரிக்கு திருமணம் ஆவது சாதி பிரச்சனையால் தள்ளிப் போனது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏனென்றால் அவர் நெசவாளர் சாதியைச் சார்ந்தவர். இத்தனைக்கும் அவர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர். ஜமாத் இ இஸ்லாமி அமைப்பைச் சார்ந்தவர்களே சாதியை சொல்லி திருமணம் செய்ய மாட்டோம் என கூறியவர்களில் இருந்தார்கள்.

இதையெல்லாம் இந்து தாக்கத்தினால் வந்தது மற்றபடி இஸ்லாம் அதன் தூய வடிவில்…. என்று சப்பைக்கட்டு கட்டி நிராகரிக்கலாம்தான். ஆனால் அண்மையில் வெளிவந்த அப்துல் பரி அத்வன் என்பவரால் எழுதப்பட்ட ‘அல் கொய்தாவின் ரகசிய வரலாறு’ நூல் சொல்வதை கேளுங்கள்:  ஒஸாமா பின் லேடனின் முன்னாள் கூட்டாளியும் அல்-கொய்தா அமைப்பிலிருந்தவருமான சாத் அல்-ஃபாகிக் என்பவர் ஒஸாமா பின் லேடன் என்றென்றைக்கும் அல் கொயிதா வென்றிருந்தாலுமே கூட காலிப் ஆகியிருக்க முடியாது என கூறுகிறார். ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’  ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்?  தூய இஸ்லாம் என்கிற பெயரில் வஹாபிய வைரஸ்களை உலகமெங்கும் பரப்பும் சவூதியில் அமெரிக்க தயவில் ஓடிக்கொண்டிருக்கும்  மன்னராட்சி நடைபெறுகிறதே… யூட்யூப் வீடியோவுக்காக சென்னையில் அமளிதுமளி செய்து பொது மக்களை கொடுமைப்படுத்திய இஸ்லாமிய பாசிசத்தின் குண்டர்கள் சவூதிக்கு எதிராக அங்கே நடைபெறும் மன்னராட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கலாமே… அதை விடுங்கள்… இதே தமிழ்ஹிந்து இணையதளத்தில் இந்து ஒடுக்கப்பட்ட சகோதரர்களுக்காக அவர்களின் இட ஒதுக்கீடு உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சகோதரர் ம.வெங்கடேசன் அவர்களின் கட்டுரையை படித்தவர்கள் இதை உணரலாம். அனைத்து இந்துக்களும் அர்ச்சகராவதற்காக இந்த தளத்தின் ஆசிரியர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் இங்கே வந்து தலித்களுக்காக கரிசனை காட்டுவதாக சொல்லும் இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.

1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.

2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.

அதை விடுத்து இங்கே வந்து போலி கரிசனை காட்டுவது நகைப்புக்குரியது. ஏனெனில் இந்த தளம் ‘தலித்தை சங்கராச்சாரியார் ஆக்குங்கள்’ என்றே கட்டுரை வெளியிட்டுள்ளது.  எனவே சமூகநீதியை இந்துக்களுக்கு இஸ்லாமிய சகோதரர் கற்றுத்தர வேண்டியதில்லை. முடியுமானால் இந்துக்களின் சமூகத்தில் இருக்கும் சமூகநீதி இயக்கங்களை இஸ்லாமியர் தங்கள் சமூகத்துக்கு பிரதி எடுக்கலாம். இணையதளத்துக்கு வரும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நோன்பு நல் வாழ்த்துகள்.

இன்று ’தாத்தா’ என அன்புடனும் மரியாதையுடனும் rettaimalai_seenivasanஅழைக்கப்படும் ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம். ஒடுக்கப்பட்ட மக்களை ‘சீர்திருத்த இந்துக்கள்’ என அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் அவர். மதமாறியவர்கள்  தலித் இந்துக்களின் சலுகைகளைத் தட்டிப்பறித்திடக் கூடாது என்பதை தெளிவாக கூறியவர். அன்று ஆரிய திராவிட இனவாதம் தூக்கலாக இருந்தது. வைதீகம் ஆரிய மதம் என்றும் தமிழரின் மதம் வேறு என்றும் கூறப்பட்டது. ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இந்த இனவாத பார்வையை தாண்டி இந்த இருபிரிவினர் என கருதப்படுவோரிடையில் சமய ஒருமை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்துவாக இருந்தே போராடி உரிமைகளை பெற வேண்டுமென்று சொன்னவர். அவரது பிறந்த தினத்தில் அவருக்கு வணக்கங்களுடன் சாதியத்தை வேரும் வேரடி மண்ணுமற அழிக்க உறுதி ஏற்போம். அதற்கான ஆன்மிகவலு இந்து சமுதாயத்துக்கு உண்டு என நம்பிய அவரது நம்பிக்கை நமக்கு அவர் அளித்து சென்றுள்ள கடமை.  இன்றைய தேநீர் நிறைவுறுகிறது. நாளை காலை மீண்டும் சந்திப்போம்.

ஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்

“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன? நீங்கள் ஏன் திருப்தி ?” என  ஏளனமாகவும் கேலியாகவும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன? நாங்களும் உங்களை போல மனித இனம்தானே?  எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள்? உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால் வாடும் போது, தாகத்தால் வாடும் போது, ஆன்மிக உணர்வுடன் தேடும் போது கல்விசாலை, பொதுநீர்நிலை, கிணறு, கோவில் போன்ற பொதுநல வாய்ப்புகள் மறுக்கப்படும் போது என்ன செய்வீர்கள்?

நாங்கள் கற்களோ பாறைகளோ அல்ல. எங்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா? எங்களுக்கும் தேச பெருமையூனூடே பேரும் புகழும் அடைய வேண்டும் என்கிற உணர்ச்சிகள் இருக்காதா? நாங்கள் எத்தனை கொடுமைகளையும், துன்பங்களையும், சுரண்டல்களையும், அவமானங்களையும், அல்லல்களையும் அனுபவிப்பது? எங்கள் தேசாபிமானத்தை நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள். அவமதிப்புகளை அளவில்லாமல் எங்கள் மீது குவித்து எங்கள் தன்மானமே அழியும் அளவுக்கு ஆக்கியிருக்கிறீர்கள். … யாருடைய பரிவோ பரோபகாரமோ எங்களுக்கு தேவை இல்லை.  நாங்கள் பெற விரும்புவது சமூக முன்னேற்றம், அரசியல் எழுச்சி, பொருளாதார உயர்வு… தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் பாதுகாப்பு இருக்கிறது.”

– பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்கள்

ஜூன் 17: இன்று அவர் பிறந்த தினம்.

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 6

முந்தைய பகுதிகள்:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகள நன்கு பரவியுள்ளது.  காஷ்மீர் மாநிலத்தை மையமாக கொண்டு செயல்பட்ட பல்வேறு அமைப்புகள் காலப் போக்கில் வேறு பெயர்களில் தென்னக மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா கேரள ஆகிய பகுதிகளில் பரவியுள்ளது.

india-terrorismதமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழகம், கட்சி துவக்கப்பட்ட காலங்களிலிருநதே இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன்  செயல்படுகிறது.  இஸ்லாமியர்கள் மாற்று மதத்தினர் மீதும், தனிநபர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினால் கூட, தாக்குதல்களை கண்டிக்க கூட தயக்கம் காட்டும் கட்சி திமுக வாகும். 1998ம் ஆண்டு பிப்பரவரி மாதம் 14ந் தேதி கோவையில் அத்வானியை கொலை செய்ய நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் கூட, திராவிட இயக்கங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீதும், அவர்களின் அமைப்பின் மீதும் மென்மையான போக்கையே கடைபிடித்தார்கள்.  திமுகவின் ஸ்தாபகர் சி.என். அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவின் போது 2011 வரை சிறையில் இருக்க வேண்டிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை 2008 செப்டம்பர் மாதம் விடுதலை செய்த அரசு திமுக அரசாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியாக கோவையில் சிறையில் இருந்த பக்ரூதின் அலி அகமது உட்பட எட்டு குற்றவாளிகளை விடுவித்து திமுக அரசு.   2006ம் ஆண்டு மே மாதம் இறுதியில் 20க்கு மேற்பட்ட அல் உம்மா அமைப்பைச் சார்ந்தவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்தவர்களை திமுக அரசு எவ்வித காரணமும் இல்லாமல் விடுவித்தது.  இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகளை இந்த அரசு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விடுவித்தது.

தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தனித்தனியாக இயக்கங்கள் நடத்தி வந்தார்கள்.  அல்உம்மா, மனித நீதி பாசரை, தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹித் ஜமாத், என்கிற பெயர்களில் தங்களது செயல்பாடுகளi செய்து வந்தார்கள்.   1980க்கு முன் தமிழகத்தில் எந்த விதமான பயங்கரவாத செயல்களும் நடைபெற்றதாக எவ்வித தகவல்களும் கிடையாது.  1980க்கு பின் கோவை, திருநெல்வேலி, சென்னை போன்ற இடங்களில் அதிக அளவில் இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு அச்சாரம் போடப்பட்டது.  1997ல் நடந்த தாக்குதல்களுக்கு பழி வாங்கவே அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி, இஸ்லாமிக் டிபன்ஸ் போர்ஸ், மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டாக சேர்ந்து திட்டமிட்ட தாக்குதல் தான் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவையில் நடத்திய தாக்குதாலாகும்.

மனித நீதி பாசறை மற்றும் அல்-உம்மா திட்டமிட்டு நடத்திய தாக்குதல்கள்

சமூக நீதி என்பது முஸ்லீம்களுக்கு எட்டா கனியாகவே இருக்கின்றது. எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் மனித நீதி பாசறை தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது  என அந்த அமைப்பின் பொறுப்பாளர் பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பினார். உண்மையில் நாடு விடுதலை பெற்ற 1947ம் ஆண்டிலிருந்தே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரியும் கட்சிகள் ஓட்டுக்காக சிறுபான்மையினரை தாஜா செய்யும் போக்கு அதிகரித்து வந்துள்ளது என்பதை மறந்து விட்டு விட்ட செய்தியாகும்.   1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந் தேதி கோவை குண்டு வெடிப்பிற்கு முக்கிய இயக்கம் அல்உம்மா என தெரிந்த பின் அந்த இயக்கம் தடை செய்யப்பட்டது.

coimbatore-blast

அல்உம்மா இயக்கம் தடை செய்யப்பட்டதால் தங்களது அமைப்பிற்கு மனித நீதி பாசறை என பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.  தமிழகத்தில் கோவையிலும், தேனியிலும் மனித நீதி பாசறையின் செயல்பாடுகள் அதிக அளவில் இருந்தது. இந்த இரு மாவட்டங்களும் கேரளத்தின் எல்லையில் இருந்தப் படியால் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கேரளத்தில் உள்ள NDF யிடமிருந்து கிடைத்தன.  2001ல் சிமி தடை செய்யப்பட்டவுடன் தமிழகத்தில் உள்ள சிமி இயக்கத்தினர் தங்களது அமைப்பின் பெயரை தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்து கொண்டார்கள்.

26.7.2006ல் மனித நீதி பாசறையில்  புதிதாக  அறிவகம் எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பயிற்சி முகாம்கள்  நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாமில்  மத மாற்றத்தின் மூலம் ஜிகாதிகளை அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும், என்பது முக்கிய அம்சமாக கொண்டு  நடத்தப்பட்டது.  22.7.2006ந் தேதி கோவையில் 1998ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் போல் நடத்த திட்டமிட்டதாக மனித நீதி பாசறையை சார்ந்த ஐந்து பேர்களை கோவை காவல் துணை கண்கானிப்பாளர் திரு ரத்தினசபாபதி கைது செய்தார். கைது செய்து சில தினங்களில் மனித நீதி பாசறை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, கைது செய்த துணை ஆணையர் உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.   9.2.2008ல் தமிழக அரசு கோவையில் எவ்வித பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பதற்குறிய அறிகுறி எதுவும் கிடையாது என கூறி ஐந்து பேர்களையும் விடுதலை செய்துவிட்டது.  ஆனால் மத்திய உளவு துறையின் செய்திப்படி  முஸ்லிம் அமைப்பான மனித நீதி பாசறை  ரத்ததானம் செய்வது, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சிலேட்டு புத்தகம் வழங்குவது போன்றவை ஒருபுறம் வழங்கிக் கொண்டு மறுபுறம் தீவிரவாதப் பயிற்சியை அளிப்பதும், குண்டு தயாரிப்பதும், மதம் மாற்றும் வேலைகளில் ஈடுபடுவதும் இவர்களின் வாடிக்கை என தங்களது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்கள்.

2006 டிசம்பர் மாதம் தென்காசியில் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அருகில் மனித நீதி பாசறையை சார்ந்தவர்கள் பள்ளிவாசல் கட்ட முயற்சித்த போது தடுத்த செயலுக்காக இந்து முன்னணியின் பொறுப்பாளர் குமார பாண்டியனை 17.12.2006ல் பட்ட பகலில் படுகொலை செய்யப்பட்டார்.  ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பிரச்சினைக்குறிய பகுதியாகும், ஆகவே மேலப்பாளையத்தை மையப் பகுதியாக வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் நடக்கும் தாக்குதல்களை நடத்திய குற்றவாளிகள் தஞ்சம் புகும் இடமாக மேலப்பாளையம் விளங்கியது.

மனித நீதி பாசறையில் செயல்படும் இரண்டு முக்கிய அமைப்புகளான அறிவகம், மற்றும்  தமிழ்நாடு டெவலப்மென்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் என்ற   இந்த இரண்டு அமைப்புகளைப் பற்றி துணை டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்; சஞ்சய் அரோரா தெரிவித்த தகவல் மிகவும் முக்கியமானதாகும் ‘ மனித நீதி பாசறை ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கு அதிக அளவில் ஆதராங்கள் கிடைத்துள்ளன.’ மேலும் இந்த அமைப்பில் உள்ள இரண்டு அமைப்புகளும் மனித நீதி பாசறைக்கு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது.  கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்த சம்பவத்தை கூறி கருத்தை தெரிவித்தார். நெல்லிக்குப்பத்தில் உள்ள தலித்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றம் செய்து, மத மாறியவர்களை தேனி மாவட்டத்தில் உள்ள முத்துதேவன்பட்டியில் செயல்படும் அறிவகத்திற்கு அனுப்பி விடுவது.  அறிவகத்தில் மதம் மாறியவர்களுக்கு பயிற்சி எனும் பெயரில் முளை சலவை செய்வது,  1992 டிசம்பர் 6ந் தேதி அயோத்தியில் நடந்த சம்பவங்களின் சி.டி.யை காட்டுவதும், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரங்களின் காட்சிகள் அடங்கிய சி.டியை காட்டி ஜிகாதிகளாக மாற்றுவது.  நெல்லிக்குப்பத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை நடத்திய போது 15 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் அவர்களிடமிருந்து (long sickles, foreign-made daggers”) along with other items (“celephones…audio and video cassettes, an amplifier, a binocular, a camera, digital diaries) கைப்பற்றப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடத்திய குண்டு வெடிப்பில் காரணமாக 11 பேர்கள் கொல்லப்பட்டதும் அல்உம்மா எனும் பயங்கரவாத அமைப்பின் செயலாகும்.  இதன் காரணமாக தமிழக காவல் துறையினர் பல இடங்களில் தங்களது சோதனைகளை துவங்கிய போது பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தன.  11.3.1997ந் தேதி சென்னைக்கு அருகில் கொடுங்கையூரில் அல்-உம்மா இயக்கத்தை சார்ந்த சிலரது வீடுகளில் சோதனை நடத்திய போது, வெடி குண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. ஜெல்லட்டின் குச்சிகள், டெட்டேனட்டர்கள், இரும்பு பைப்கள், அலராம் டைம்பீஸ், ஆகியவை கிடைத்தன.  இதன்காரணமாக இருவர் கைது செய்யப்பட்டார்கள். ஒருவர் முகமது கான்  எஸ்.ஏ. பாட்சாவின் சகோதரர், இரண்டமவர் சாகுல் ஹமீது என்பதாகும்.   கைது செய்யப்பட்டாலும் இவர்கள் மீது முறையான வழக்கு தொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குறியது.

கொடுங்கையூர் போலவே 8.2.1997ல் தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள் பலர் காயமடைந்தார்கள்.  இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட் ,100 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதர் இருவரும் படு காயமடைந்தார்கள, படு காயமடைந்த அப்துல் காதருக்கு தமிழகத்தில் உள்ள தீவிரவாத இஸ்லாமிய இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக பின்னாளில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது   இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக மதுரை மாவட்டத்தை சார்ந்த அப்துல் குத்தூஸ், அப்துல் சலீம் என்ற இருவரும்  கைது செய்யப்பட்டார்கள்.  இந்த குண்டு வெடிப்பு  சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் மீது தமிழக காவல் துறையின் முழுமையான  நடவடிக்கையும்  எடுக்க இயலவில்லை.  குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த போது அரிசி ஆலை அமைந்துள்ள இடத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.

1997 பிப்ரவரி 10ந் தேதி சென்னைக்கு அருகில் வேப்பேரியில் 1000 டெட்டேனட்ர்கள் ஒரு அட்டைப் பெட்டியில் இருந்ததை குப்பை கூடையில் கண்டு பிடித்தார்கள்.  கோவையிலிருந்து சென்னை வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரயாணம் செய்த அப்துல்லா என்பவன் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டான். இவன் கைது செய்து இரண்டு தினங்களுக்குள் டெட்டேனடர்கள் கண்டு பிடிக்கப்பட்ட அதே இடத்தில் 750 எலக்டிரிக் டெட்டேனட்டர்கள், இத்துடன் வெடி குண்டுகள் தயாரிக்க தேவையான கெமிக்கல்களும் மீன்டும் கண்டு பிடிக்கப்பட்டன.  ஆகவே தொடர்ச்சியாக இம்மாதிரியான சம்பவங்களின் காரணமாக தமிழகத்தில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்த அல்உம்மா மற்றும் ஜிகாத் கமிட்டிகள் திட்டமிட்டுள்ளது நன்கு தெரிந்தும் அரசால் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இயலவில்லை.

1998ல் கோவையில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன்பே அதாவது 1981ம் ஆண்டு கோவையில் ஆர்.எஸ்.புரத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசியதற்காக திருக்கோவிலுர் சுந்தரம் தாக்கப்பட்டார்.  1984ம் ஆண்டு மே மாதம் கோவையில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் முடிந்து பின் திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைவர் நாராயணராவ் உட்பட சிலர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார்கள்.  ஆகவே இதை தொடர்ந்து  அல் உம்மா இயக்கத்தின் பொறுப்பாளர் பாட்சா திரு ராமகோபாலன் அவர்களை மதுரை ரயில் நிலையத்தின் தாக்கிய சம்பவமும், முகாம்பிகை மணி, கூடங்குளம் ஜெயராஜ் உட்பட பலர் தொடர்நது இந்த இயக்கத்தினரால் தாக்கப்பட்டார்கள்.  கேரளாவில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்க

30.8.1989ல் கோவையில் வீர கணேஷ் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.  5.9.1991ல் அதே கோவையில் வீர சிவகுமார் என்பவர் படு கொலை செய்யப்பட்டார்.   ஆகவே தொடர்ந்து கோவையில் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெற்ற காரணத்தால் அன்றைய காவல் துறை ஆணையர்களாக இருந்து திரு ஜீ.கணேசன் என்பவரும், துணை கமிஷனராக இருந்து டி.ராதாகிருஷண ராஜாவும்  உடனடியாக கோவையில் உள்ள கோட்டை மேடு பகுதியில் வீடு வீடாக ஆய்வு செய்தார்கள்.  ஆய்வின் போது பெருமளவில் ஆயுதங்களும், வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.  இதன் காரணமாக கோட்டை மேடு பகுதியில் 6க்கு அதிகமான செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டன.

anbazhagan-ramzanஇஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் இருந்த காரணத்தால் 1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது திமுகவின் பொறுப்பாளரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கோவை மு.ராமநாதன் பொதுக் கூட்டம் ஒன்றிய பேசியதாவது ‘ திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், வெற்றி செய்தி கிடைக்கும் போதே கோட்டை மேடு பகுதியில் உள்ள செக் போஸ்ட்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் ‘ என பேசினார்.  இந்த பேச்சின் காரணமாக 1996ல் நடந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதே இஸ்லாமிய இளைஞர்கள் செக் போஸ்ட்களை தகர்த்த போது தடுத்த காவலர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார்.  தாக்கப்பட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தில் கோவை சிறையில் வார்டனாக இருந்த பூபாலன் என்பவர் சிறையிலேயே   கொலை செய்யப்பட்டார்.

29.11.1997ந் தேதி கோவை கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகில் வாகனங்களை சோதனை நடத்திக் கொண்டிருந்தவர் சப் இன்ஸ்பெக்டர் எம்.சந்திரசேகரன் என்பவர்.  அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை நடத்திய போது அவர்களிடம் ஓட்டுநர் உரிமம் கிடையாது, ஆகவே வாகனத்தில் வந்த இரண்டு இஸ்லாமிய இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டார்.  ஆனால் இந்த தகவல் தெரிந்தவுடன் அல் உம்மாவின் மாநில செயலாளர் முகமது அன்சாரி உடனடியாக காவல் நிலைத்திற்கு வந்து அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என தகறாறு செய்து கொண்டு இருந்தார்.  இந்த நிலையில் காவல் நிலையத்திற்கு அருகில் போக்குவரத்தை சீர் படுத்திக் கொண்டிருந்த காவலர் செல்வராஜ் மீது மூன்று அல் உம்மா இயக்கத்தை சார்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அவரை படு கொலை செய்தார்கள்.

1997ம் வருடம் டிசம்பர் மாதம் 6ந் தேதி இஸ்லாமியர்கள் பிரச்சினைக்குரிய கட்டிடம் அயோத்தியில் இடிக்கப்பட்ட நாளில் ஏதேனும் ஒரு வழியில் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து காட்டி வருகிறார்கள்.  ஆகவே 1997ம் வருடமும் தங்களது எதிர்ப்பை காட்ட மூன்று எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைத்து வெடிக்க செய்தார்கள். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், ஆழப்புழா எக்ஸ்பிரஸ் ஆகிய வண்டிகளில் குண்டு வெடித்து சிலர் கொல்லப்பட்டார்கள்.  இதே போலவே 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை அண்ணா மேம்பாலம் அடியில் குண்டு வைக்கப்பட்டு , குண்டு வெடித்ததில் பலர் படு காயமடைந்தார்கள். இந்த சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள ஜிகாத் கமிட்டி என்பதும் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்தவர்கள் நேஷனல் டிபன்ஸ் போர்ஸ் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் பயங்கரவாத தாக்குதல் நடக்க கூடிய சூழ் நிலை இருப்பதாக கோவையில் உள்ள காவல் துறையின் உயர் அதிகாரிகள்  ஜனவரி மாதம் 31ந் தேதி முதல்வருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்திரவு எதிர்பார்த்தார்கள்.  ஆனால் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பதால் எவ்விதமான உத்திரவும் கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.  இந்த விஷயம் சம்பந்தமாக 19.2.1998ந் தேதி தி ஹிந்து நாளிதழில் “Prior warning not taken seriously” என தலைப்பிட்டு வந்த கட்டுரையே சாட்சியாகும்.