இக்காலத்தில் சமஸ்க்ருத மொழி வளர்ச்சி

தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ் தவிர  வேற்று மொழிகளுக்கு கல்வித்தளத்தில், அரசியல் சமூக தளங்களில் பங்கு என்பது மிகக் குறைவே. இத்தனைக்கும் அண்டை மாநில மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராட்டியம் ஆகிய மொழிகளைப் பேசக் கூடியவர்கள் அதிக அளவில் தமிழகத்தில் உள்ளனர். எனினும் இந்த மொழிகளில் உள்ள இலக்கியங்கள், கலைப் படைப்புகள், வரலாற்று நூல்கள் ஆகியவற்றில் பரிச்சயம் உள்ள பன்மொழி அறிஞர்கள் என்று சொல்லப் படவோர் தமிழகத்தில் மிகக் குறைவு. எதிர்மறையாக மற்ற மொழிகளைக் குறித்து ஏளனமும் வெறுப்பும் உள்ள அறிஞர்களே செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து வருகின்றனர். அறிஞர்கள் இயங்கும் தளத்திலேயே இப்படி என்றால் தமிழகத்தின் பொதுமக்கள் மத்தியில் ஏனைய மற்ற  மொழிகளைக் குறித்த அறிமுகம் இல்லை என்றே சொல்லி விடலாம்.

Priligy is used to treat diarrhea caused by bacterial and viral infections. Your doctor will need to know which other clomid prices in kenya medicines you are taking. Below you will find links to other sites of interest that may provide more information about propecia hair loss treatments.

Zopiclone and daytime anxiety: results of a double-blind evaluation of the first 24-week treatment period with zopiclone or placebo in menopausal transition patients with symptoms of excessive daytime sleepiness (eds) A lot more overrashly order dapoxetine is known about antibiotics than you might think. What are the possible side effects of azithromycin 500mg?

All drugs have risks and benefits depending on the circumstances in which they are taken. It has been shown that the action of the propecia is not dose-dependent clomid price at dischem Riverside and may be administered orally, sublingually, rectally or parenterally. Over-the-counter (otc) medications can be used by anyone.

இது மிகச் சமீப காலத்தில் விளைந்த அரசியல் சூழ்நிலைகளின் விளைவு என்று கருத இடம் இருக்கிறது. பேச்சு முறையில் இருந்து வரக் கூடிய உயிர்ப்புள்ள  தெலுங்கு போன்ற ஏனைய மொழிகளே தமிழர்களுக்கு பரிச்சயம் இல்லாத நிலையில் சமஸ்க்ருதம் போன்ற பாரதத்தின் புராதன மொழிகளிடமிருந்து தமிழர்கள் விலகி போயுள்ளது தெளிவு. சமஸ்க்ருத மொழியை பயன்படுத்தி தினம் வீட்டில் பிரார்த்தனை செய்யக் கூடியவர்கள், ஸ்லோகங்கள் ஸ்தோத்திரங்கள் ஓதி வழிபடுபவர்கள், குருமார்களை அண்டி அவர்கள் காட்டும் வழியில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட குறைந்தது இல்லை. எனினும் இந்து மதத்தின் மூல நூல்கள் அனைத்தும் சமஸ்க்ருதத்தில் இருந்தும், பக்தியுள்ள இந்துக்கள் கூட சமஸ்க்ருத மொழியை கற்க முயலுவது இல்லை என்றே சொல்லலாம்.

நிற்க. இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த சமூக நிலையின் பின்னுள்ள அரசியல் பற்றி அல்ல. இந்து மதத்துக்கு மிக முக்கியமான மொழியாக உள்ள சமஸ்க்ருதத்தின் தற்கால நிலை பற்றி சில சிந்தனைகளை, நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் குறிக்கோள். இந்திய துணைக் கண்டம் எங்கும் பொதுவான ஒரு மொழியாகவே பல நூறு ஆண்டுகள் இருந்த சமஸ்க்ருதம் பின்னர் கடந்த சில நூற்றாண்டுகளில் அரசாங்க மொழி, பேச்சு மொழி என்ற பயன்பாடுகள் எல்லாம் போய், வெறும் சடங்கு மொழியாக ஆகி விட்டது. சமஸ்க்ருத மொழியின் இன்றைய நிலை என்ன? இது செத்த மொழியாக, சடங்கு மொழியாகத்தான் இருக்கிறதா.. இருந்த இடத்திலிருந்தே எதையும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தேடுபவர்களுக்கெல்லாம் அறிவை பொதுவாக  அள்ளி வழங்குகிற இணையம் போன்ற தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இந்நாளில் சமஸ்க்ருத மொழி என்ன நிலையை அடைந்திருக்கிறது? என்று பார்க்கலாம்.

bharathamata_lang

முதன்மையாக புராதன காலத்தில் இருந்தே சம்ஸ்க்ருதம் தமிழர்களுக்கு அன்னிய மொழி அல்ல. சுதந்திர தாகம் மிகுந்த காலத்தில் வந்தே மாதரம் என்று தமிழகமும் சேர்ந்துதான் முழங்கியது. நடைமுறை மொழியில் இன்றைக்கு ஆங்கிலச் சொற்கள் புழங்குவது போலவே நீக்க முடியாத அளவு சமஸ்க்ருத சொற்களும் தமிழில் கலந்துள்ளன.

அண்மையில் சென்ற வருடம் ஜூன் மாத இறுதியில் மயிலாடுதுறை அடுத்த ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள கைலாச நாதர் கோவிலில் ஏராளமான சோழர் கால செப்பேடுகள் கிடைத்துள்ளன. இதில் பல செப்பேடுகள் சமஸ்க்ருதத்திலும் தமிழிலும் வடிக்கப் பட்டுள்ளன. இன்றைக்கு இந்தியாவில் ஆங்கிலம் எந்த அளவு அரசாங்கம் மற்றும் பொது மொழியாக இருந்து வருகிறதோ, அந்த  அளவுக்கு சமஸ்க்ருதம் இருந்து வந்தது என்பது தெளிவாகிறது. தமிழ் மன்னர்களான சேர சோழ பாண்டியர் ஆட்சியில் தமிழும் சமஸ்க்ருதமும் சமமாகவே பாவிக்கப் பட்டு வந்துள்ளது.

அதே நேரத்தில் அக்காலத்தில் சமஸ்க்ருதம் எல்லா தரப்பு மக்களாலும் பேசப்பட்டதா என்பது சர்ச்சையின்றி தெளிவாக வில்லை. இலக்கண தமிழ் – பேச்சு தமிழ் என்று இருப்பதைப் போல சமஸ்க்ருதத்திலும் பேச்சு மொழி இருந்திருக்க வேண்டும்.  இது காளிதாசன் போன்ற சமஸ்க்ருத மகாகவிகள் எழுதிய நாடகங்களில் பல பாத்திரங்கள் – சமஸ்க்ருதத்தை பேச்சு முறையில் சற்று கொச்சையாக பேசுவதாக அமைத்துள்ளனர். இதன் மூலம் பேச்சு முறையிலும் சமஸ்க்ருதம் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

இன்னொரு கருத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். எத்தனையோ இந்து மத நூல்கள் சமஸ்க்ருதத்தில் இருந்தாலும்,  இந்த மொழியை  இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமான ஒரு மொழியாக என்றுமே கருதப் படவில்லை. இந்து மதத்தின் முக்கிய இதிகாசங்களான  ராமாயண – மகாபாரத காவியங்கள், வேதங்கள் மட்டும் அல்லாது பௌத்த – ஜைன மதங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு மதங்களின் நூல்களும் சமஸ்க்ருதத்தில் எழுதப்பட்டு உள்ளன. தேவர்கள் மட்டுமே பேசும் மொழி, தேவவாணி, தேவபாஷை என்று என்றைக்குமே உயர்வு சொல்லி ஒதுக்கி வைக்கப் படவில்லை. இந்த மண்ணில் பிறந்த மனிதர்களின் நம்பிக்கைகள் பலவும் சமஸ்க்ருத மொழியிலேயே பதிந்து வைக்கப் பட்டது.  இதோடு மட்டும் அல்லது முகலாயர் ஆட்சிக் காலத்தில்  அரபி – சமஸ்க்ருத அகராதிகள், அல்லோபநிஷத் போன்ற இசுலாமிய நூல்கள் உருவாகின. இவ்வளவு ஏன் இன்றைக்கு  முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்க்கப் பட்ட  சமஸ்க்ருத பைபிள் கூட இருக்கிறது.

ஆங்கிலேய ஆட்சியின் போது, மாக்ஸ் முல்லர் போன்ற மேற்கத்திய மொழியியலாளர்களால் முன்வைக்கப் பட்ட மொழி ஆராய்ச்சிகளில் ஐரோப்பிய மொழிகளுக்கும் – சமஸ்க்ருதத்துக்கும் தொடர்பு உண்டு என்று கூறப் பட்டது. இதன் தொடர்ச்சியாக மேற்குலகு எங்கும் சமஸ்க்ருதத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அண்மைக் காலம் வரை ஏராளமான சமஸ்க்ருத  நூல்கள் ஆங்கிலம் மட்டும் அல்லாது ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்சு, ஜப்பான்  போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வருகிறது. நமது நாட்டுக்கே உரிய மொழி இன்று உலகெங்கும் பலராலும் படிக்கப் பட்டும், மொழிபெயர்க்கப் பட்டும் சிலாகிக்கப் பட்டு வருகிறது என்பது சிறப்பு.

sanskritcollege

இன்றைய நவீன யுகத்தில் இணையம் போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களால் சமஸ்க்ருதத்தை எவரும் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் பெருகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவெங்கும் பனிரெண்டு சமஸ்க்ருத பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றுடன் இணைந்த மற்றும் தனியாக சமஸ்க்ருத படிப்புகள் வழங்கும் கல்லூரிகள் சுமார் நூறு இருக்கலாம். இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடமிருந்து இவற்றுக்கு நிதி உதவியும் கிடைத்து வருகிறது.

ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் என்கிற சுதந்திரமான அமைப்பு பல சம்ஸ்க்ருத பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. சம்ஸ்க்ருத பாரதி, பாரதீய வித்யா பவன் போன்ற தனியார் அமைப்புகளும் சமஸ்க்ருத வகுப்புகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் இவ்வமைப்புகள் அதிக விளம்பரம் இல்லாது இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. இவை சமஸ்க்ருதத்தை மக்களிடம் ஓரளவு கொண்டு சென்று வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை சமஸ்க்ருத உயர்கல்விக்கு குப்புசாமி சாஸ்திரி இன்ஸ்டிட்யூட் மைலாப்பூர், சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள சம்ஸ்க்ருதத் துறைகள், மதுராந்தகம் சம்ஸ்க்ருதக் கல்லூரி, Raja’s colleg e of Sanskrit and Tamil, Thanjavur ஆகிய கல்வி மையங்கள் சமஸ்க்ருதத்தில் உயர்கல்வியை அளித்து வருகின்றன. இது தவிர Government Oriental Manuscripts library, அடையாறு தியசாபிகல் சொசைட்டி, தஞ்சை சரஸ்வதி மகால் போன்ற இடங்களில் பல்லாயிரக்கணக்கான பாரத பாரம்பரிய அறிவுச் செல்வம் பொதிந்துள்ள ஒலைஎடுகள், செப்பேடுகள் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

உலகத் தமிழ் மாநாடு போன்றதொரு உலக சம்ஸ்க்ருத மாநாடு வருகிற 2012ம் ஆண்டு நமது இந்தியாவில் தில்லியில் நடைபெற உள்ளது. இது பதினைந்தாவது மாநாடு ஆகும். இதற்கு முன் ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்று உள்ளது. அண்மையில் தமிழகத்தை கலக்கிய செம்மொழி மாநாட்டைப் போலவே சம்ஸ்க்ருத மாநாட்டுக்கும் உலகமெங்கும் இருந்து சமஸ்க்ருத அறிஞர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு முன் 1997ல் பெங்களூரில் பெரியதொரு அளவில் பத்தாவது சம்ஸ்க்ருத மாநாடு நடந்தது.

bookfair1

இது மட்டும் அல்ல, சென்னை தமிழ் புத்தகக் கண்காட்சியைப் போலவே பெரியதொரு சம்ஸ்க்ருத புத்தக கண்காட்சி வருகிற 2011 ஜனவரி மாதம் ஏழாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை பெங்களூரில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் மாதிரி சமஸ்க்ருத கிராமம், சிறார்களுக்கான போட்டிகள், சம்ஸ்க்ருத கதை, காவிய இலக்கியப்  புத்தகங்கள், பொதுமக்களுக்கு சம்ஸ்க்ருத அறிமுக நிகழ்ச்சிகள், அறிஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கும் வகையில் சுமார் மூன்று கோடி செலவில் பெரியதொரு நிகழ்வாக அமைய திட்டமிடப் பட்டுள்ளது.

சமஸ்க்ருத மொழியில் புதிய நூல்கள் எதுவும் எழுதப் படுவதில்லை. அதன் உயிர்ப்பு போய்விட்டது. ஆகவே சமஸ்க்ருதம் செத்த மொழி என்று ஒரு பொது அபிப்பிராயம் இருந்து வருகிறது. உண்மை அது அல்ல. இந்த புத்தகக் கண்காட்சியில் கூட இருநூறுக்கும் மேற்பட்ட சமஸ்க்ருத புத்தகப் பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். புதிய புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய தத்துவங்கள் சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள பாஸ்சாத்திய சாத்திர இதிகாசம் என்ற நூல், சத்திய சோதனம் என்று சமஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்ட காந்தியடிகளின் சுயசரிதை, பீமாயணம் என்ற பெயரில் வெளிவந்துள்ள அம்பேத்கரின் சுயசரிதை ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

chandamama_t sudharma_tsandesha

சம்ஸ்க்ருத மொழியில் பத்திரிகை துறையும் வளர்ந்து வருகிறது. சிறுவர்களுக்கான சம்ஸ்க்ருத மாதாந்திர பத்திரிக்கையான சந்தமாமா, சமஸ்க்ருதத்தில் நாட்டு நடப்புகளைத் தரும் சுதர்மா என்கிற சம்ஸ்க்ருத தினசரி, சம்பாஷன சந்தேசம் என்னும் மாதாந்திர பத்திரிகை, சம்பிரதம் என்கிற பத்திரிகை, வாக் என்கிற செய்திப் பத்திரிகை போன்ற மேலும் சில பத்திரிக்கைகள் சம்ஸ்க்ருத மொழியில் வெளியாகி வருகின்றன.  வானொலியில் தினமும் சம்ஸ்க்ருத செய்தி ஒலிபரப்பாகிறது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் ஆதி சங்கரர் வரலாற்றை சமஸ்க்ருத மொழி திரைப்படமாக எடுக்கப் பட்டு வெளிவந்தது. அண்மையில் பிரபோத சந்த்ரோதயம் என்கிற பதினொன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண மிஸ்ரரால் இயற்றப்பட்ட காவியத்தை கதையின் அடிப்படையாக கொண்டு சமஸ்க்ருதத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளது.

httpv://www.youtube.com/watch?v=OIIUxYWvxfs

அண்மையில் உத்தரகண்ட மாநிலம் சமஸ்க்ருதத்தை மாநில மொழியாக அறிவித்தது. இந்தியாவிலேயே இந்த ஒரு மாநிலம் மட்டுமே முதன் முறையாக இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. இதே சமயத்தில் உருது இந்தியாவில் பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி மொழி என்பது வியப்பு. உத்தரகண்ட மாநிலம் சம்ஸ்க்ருத மொழியுடனும் பாரத தொன்மையிலும் மிகவும் முக்கியம் இடம் வகிக்கக் கூடியது. இந்த பிரதேசத்தில் இருந்து தான் வியாசர் மகா பாரத கதையை இயற்றினார் என்பது நம்பிக்கை. மகா கவி காளிதாசர் பிறந்ததும் இங்கே தான் என்று கூறுவர். இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் இந்த மாநிலத்தில்தான் உள்ளன. ஆகவே இம்மாநிலம் சமஸ்க்ருதத்தை ஆட்சி மொழியாகக் கொள்வது பொருத்தமே.

தமிழகத்திலிருந்தும் அண்மைக் காலத்தில் சில நூல்கள் சமஸ்க்ருத மொழியில் வெளிவந்துள்ளன. பேராசிரியர் திரு N. வீழிநாதன் அவர்களின் முயற்சியில் தர்க்க சாத்திரம் கற்க விரும்புவோருக்கான எளிய நூலாக பாலப்ரியா, தர்க்க சங்கிரஹம் ஆகிய நூல்கள் 1980 லிருந்து பதிப்பிக்கப் பட்டு வருகிறது. இப் பேராசிரியரே மேலும் அவ்யய கதாதரி போன்ற மேலும் சில நூல்களைப் பதிப்பித்துள்ளார். 1995ல் பண்டிட் R. தங்கசாமி என்பார் பாரதீய தர்சநேஷு ப்ரத்யக்ஷ பிரமாண விமர்சம் என்கிற நூலை வெளியிட்டுள்ளார். இது பாரத தேசத்தில் எழுந்த பல்வேறு தத்துவங்களைப் பேசும் நூல்.

கணினி துறையிலும் இயற்கை மொழி செயலாக்கம் (natural language processing) போன்ற சில நுணுக்கமான ஆய்வுகள் சம்ஸ்க்ருத மொழியில் நடைபெற்று வருகின்றன. இது தவிர ஏராளமான வலைப் பக்கங்கள் இணையத்தில் எழுதப் பட்டு வருகின்றன. பல புதிய புத்தக முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அவ்வளவு ஏன், தமிழகத்தில் நமது முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்கள், முக்கியமாக குறளோவியம், நெஞ்சுக்கு நீதி போன்ற புத்தகங்கள் சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு வருகின்றன என்கிறது ஒரு செய்தி.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழகத்தில் இது போன்ற நூல்கள் சமயம் மட்டும் அல்லது ஏனைய துறைகளிலும் சமஸ்க்ருத மொழியில் வெளிவந்துள்ளன. ஆனால் இவை சமஸ்க்ருத பண்டிதர்கள் மத்தியில் மட்டுமே பிரபலமாக இருந்து பொது மக்களிடம் சென்று சேரவில்லை. இந்த நிலை மாறவேண்டும் என்பதே ஒரு சமஸ்க்ருத அபிமானியாக என்னுடைய அவா.