ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. கற்றறிந்த சான்றோர்களின் பங்கு இதில் அதிகம். அதனினும் அதிகம் இரந்துண்டு வாழும் துறவிகளுக்கு. ஆஸேது ஹிமாசலம் பரந்து விரிந்த ஹிந்துஸ்தானத்தில் இவ்வாறு ஹிந்து தர்மம் தழைக்க வாழ்ந்த பல நூறு துறவியரில் ஒருவர் காஞ்சி மஹாஸ்வாமிகள் என்று அன்புடன் அழைக்கப்பெடும் பூஜ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள். வரும் ஜீன் திங்கள் 6ஆம் திகதி பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது ஜெயந்தி தினம்.
Stroma’s focus is on the research and development of supplements that are not yet on the market. At the risk of oversimplification, and since the antibiotic is not the only drug prescribed, i would say that the above list of common side effects is probably far more common than not using doxycycline for blackly a uti. This was the beginning of my eating disorder being controlled.
If you’re looking to up the performance of either the standard duralast clutch (with the black plastic coating) or the oem clutch (with the new aluminium coating) then you’re in for a treat. It is also a good idea to ask your pharmacist if you https://premierurgentcare.com/contact/ have any questions. In this section, we review all the legit sites offering a cheap alternative to propecia in karachi.
Any use of cookies is not possible without prior consent from the user. Drugs like klamath shasta and klonopin can be particularly difficult to take as they can cause high blood pressure, Kaiama constipation, sexual dysfunction or depression. I had always loved horses and had worked my way through college at the stables.
ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் சம்பந்தமாக நமது தமிழ் ஹிந்து தளத்தில் பதிவான சில கருத்துக்களில் எனக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரது திருவடி பணிந்து எனது மாறுபடும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
அதற்கு முன்.
கடந்த மூன்று வருஷங்களாக தமிழ் ஹிந்து தளம் மற்றும் விஜயவாணி தளம் இரண்டிலும் பதிவேறும் வ்யாசங்களை வாசித்து வருகிறேன். பல நேரெதிர்ப் பார்வைகளைக் கொடுக்கும் வ்யாசங்கள் பதிவேறும் தளங்கள் இவை எனினும் இரண்டும் ஹிந்துத்வப் பார்வைகள் சார்ந்த தளம் என்பது என் புரிதல்.
பரம பூஜனீய டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வல்கர், பூஜ்ய சாவர்க்கர் மற்றும் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த நானாஜி தேஷ்முக் போன்ற பற்பல பெரியோர்களால் ஹிந்துத்வம் என்ற ஆல வ்ருக்ஷம் போஷிக்கப்பட்டு வளர்ந்துள்ளது. பன்முகம் என்ற முக்யமான கருதுகோளும் ஹிந்துக்களின் அன்றாட வாழ்வில் பரிணமிக்கும் பன்முகத்தன்மையுமே காலக்கணக்கிடவியலா ஹிந்து சமயத்தின் ஆணிவேர் என்றால் மிகையாகாது. வைதிகம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற பற்பல தத்துவ ரீதியில் வேறுபடும் சமயங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பினும் தத்துவங்களை தர்க்கிக்கும் முறைகளும் தர்க்கத்தின் கருதுபொருள்களும் ஒருகுடைக்கீழ் வருவதால் இவையனைத்தும் ஹைந்தவம் என்ற ஆலவ்ருக்ஷத்தின் பல கிளைகள் என்றால் மிகையாகா.
தமிழ்ஹிந்துதளம் பெரும்பாலும் ஹிந்துத்வப்பார்வையின் ஒரு பரிமாணத்தைத் தெரிவிக்கும் படியாக வ்யாசங்களையும் உத்தரங்களையும் தாங்கி வந்தாலும் மாற்றுப்பார்வைகள் சம்பந்தப்பட்ட கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறது. பூசல்களும் வசவுகளுமே பதிவுகள் என்ற ரீதியில் உலாவரும் தனிநபர் ப்ளாக்குகள் மற்றும் இணையதளங்கள் போலல்லாது வ்யாசங்களும் உத்தரங்களும் கண்யமிக்கவையாகவும் கருத்தாழம் உள்ளனவையாகவும் இயன்றவரை மட்டுறுத்தலுக்கு உட்பட்டே தமிழ் ஹிந்துவில் வெளியாகின்றன. லக்ஷ்மண் ரேகா (இலக்குவன் கோடு) மீறப்படும் போது ஆசிரியர் குழு தலையிட்டு வரைமுறைகள் மீறப்படுவதை சுட்டிக்காட்டுகிறது.
இப்போது காஞ்சிமாமுனிவர் பற்றி தளத்தில் பதிவான கருத்துக்களையும் எனது மாற்றுக்கருத்துக்களையும் பார்ப்போம்.
ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் அவர்கள், சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012) என்ற வ்யாசத்தில் April 27, 2012 அன்று பதிவு செய்த உத்தரத்தில் பதியப்பட்டது :-
தலைமுறைகள் கஷ்டப்பட்டு அரும் பெரும் நூல்களைக்கொண்டு உருவாக்கிய ஒரு நூலகத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து ஆபாச மஞ்சள் புத்தகங்களை வைத்துக் கொண்டு இந்த நூலகமே இந்த மஞ்சள் புத்தகங்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் என சொல்லி அப்படி சொல்வதையே மகா பெரிய லைப்ரரியன் குரல் என பைண்ட் போட்டு பாகங்கள்பாகங்களாக விற்று அப்படி ஆபாச புத்தகங்களை விற்கிற நபரை நடராஜர் முதல் மகாவிஷ்ணு வரை எல்லா வித தெய்வங்களாகவும் காட்டி ஏன் அதற்கும் மேலாக காட்டி நூலகத்தை ஆக்கிரமித்து கொண்டால்…என்னால் முடிந்த வரை என்னுடைய நூல்களை எடுத்துக் கொண்டு வேறு ஏதாவது நல்ல லைப்ரரி இப்படி பட்ட ஆபாச குரல்கள் வரமுடியாத லைப்ரரி ஒன்றை தேடி பிடித்து போய்விட வேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும். ஏனென்றால் நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது அவர்களல்லவா?
ஸ்ரீமான் களிமிகு கணபதி அவர்கள் 29ம் திகதி ஏப்ரல் அன்றைய பதிவில் பூஜைக்குறியவரான ஸ்ரீ மஹாஸ்வாமி அவர்களது ஜாதி-வர்ணம் பற்றிய கருத்துக்கள் ஹிந்து தர்மத்திற்கு எதிரானது என்றும் அவை காலனியப்பார்வை என்றும் “அநீ எதிர்த்தது அவரது இந்த காலனியப் பார்வையைத்தான் என்றால் அது சரியே” என பதிவு செய்துள்ளார்.
ஆனால் ஸ்ரீ அ.நீ அவர்களது மேற்கண்ட பதிவில் இடித்துக் காட்டுவது என்பது இப்படி குறிப்பிட்ட கருத்து அல்லாது மிகப்பல கீழ்க்கண்ட விஷயங்கள் என்றே தோன்றுகிறது.
- ஸ்ரீ அ.நீ எதிர்ப்பது 7 தொகுதிகளாக அமரர் ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட “தெய்வத்தின் குரல்” என்ற ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் அடங்கிய நூற்தொகுப்பு என்பது என் புரிதல். தவறென்றால் நான் திருத்திக்கொள்கிறேன்.
- ஸ்ரீ அ.நீ அவர்கள் எதிர்க்க விழைவது சில கருத்துக்கள் என்று ஸ்ரீ களிமிகு கணபதி தெரிவித்து இருந்தாலும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் எனவே மறைமுகமாக ஸ்ரீ அ.நி பதிவு செய்துள்ளார் என்பது என் புரிதல்.
- பூஜ்ய ஸ்ரீ மஹாஸ்வாமியை நடராஜர் எனவும் மஹாவிஷ்ணு என காட்டப்படுவதை இவர் ஏற்கவில்லை. ஹிந்து சமயம் என்ற நூலகத்தில் இவர் ஏற்கும் பல நூற்கள் இருப்பினும் தெய்வத்தின் குரல் என்பது கிட்டத்தட்ட ஹிந்து மதம் என்ற ஒட்டு மொத்த நூலகத்தின் குரல் அல்லது லைப்ரேரியன் குரல் அதாவது பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் குரல் என உருவகப்படுத்தப்பட்டு அதனை ஏற்கவியலாது என கூறுகிறார்.
- “நூலகத்தின் அதிகாரபூர்வ தெய்வத்தின் குரலாக ஒலிப்பது” என்ற படிக்கு பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களது கருத்துக்கள் ஏதோ ஹிந்து மதம் சம்பந்தமான விஷயங்களில் அதிகாரபூர்வமான கடைசீச் சொல் என்ற படிக்கு ஒரு கருத்து உலா வருவதாகவும் மேற்கண்ட கருத்தில் தொனிக்கிறது.
ஸ்ரீ ரா.கணபதி அவர்களின் மறைவுக்கான இரங்கல் வ்யாசத்தில் தெய்வத்தின் குரல் சம்பந்தமாக முதலில் ப்ரசுரிக்கப்பட்ட கருத்தில் கூட கிட்டத்தட்ட இதே கருத்தையொத்த கருத்துக்கு நான் மாறுபட்டு என் உத்தரத்தில் அதை தெரிவு செய்திருந்தேன். ஆசிரியர் குழுவினர் என் உத்தரத்தின் அப்பகுதியை நீக்கிவிட்டு வ்யாசத்தில் உள்ள கருத்துக்களை திருத்தம் செய்திருந்தனர்.
பிறப்படிப்படையிலான வர்ணம் என்ற கருத்து “தெய்வத்தின் குரல்” தொகுப்பில் பேசப்படுகிறது. சங்கத்திலும் ஹிந்து இயக்கங்களிலும் ஒன்றாய் உண்டு விளையாடி ஹிந்து எழுச்சிக்கும் ஒற்றுமைக்கும் பாடுபடும் எவராலும் இக்கருத்தை ஏற்கவியலாது என்பது விஷயம். இதைப்புரிந்து கொள்ள இயலும். அக்கருத்தை காய்த்தல் உவத்தலில்லாது கறாராக பதிவு செய்திருந்தால் எனது இவ்யாசத்திற்கு அவசியமிருந்திருக்காது.
நான் “தெய்வத்தின் குரல்” என்ற நூலின் முழு ஏழு பாகங்களும் வாசித்ததில்லை. பின்னிட்டும் நான் வாசித்த படிக்கும் முழு தொகுப்பையுமே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என்ற முத்திரை குத்தும் படியான கருத்தை ஏற்க இயலாது. இங்கு கருத்துக்கள் பகிரும் பல ஹிந்து நண்பர்களுக்கும் என்னுடன் இவ்விஷயத்தில் உடன்படுவார்கள் என எண்ணுகிறேன்.
ஹிந்து மதம் சார்ந்த வேதங்கள், உபநிஷதங்கள், சிற்பம், நாட்டியம், ஆயுர்வேதம், தமிழ் மொழி, ஸம்ஸ்க்ருத மொழி, அத்வைதம், விசிஷ்டாத்வைதம் மற்றும் த்வைதம் போன்ற தத்துவங்கள் பற்றிய தகவல்கள் வினாயகர், சக்தி, சிவன், விஷ்ணு, ஐயப்பன், அனுமன் போன்ற தெய்வங்கள் பற்றிய தகவல்கள் ஆதிசங்கரர் கால ஆராய்ச்சி பற்றிய தகவல்கள், பிறப்பிலிருந்து இறப்பு வரை ஹிந்துக்களது வாழ்வில் செய்யப்பெறும் ஸம்ஸ்காரங்கள், பிடி அரிசித்திட்டம், கோவிலில் உழவாரப்பணி, குளம் போன்ற நீர் நிலைகளை வெட்டுதல், அவற்றை பாதுகாத்தல் அவற்றில் ஆடுமாடுகளும் நீர் அருந்த வழி செய்தல், அனாதை ப்ரேதங்களுக்கு ஸம்ஸ்காரம் செய்தல், போன்றும் மற்றும் எண்ணிறந்த தகவல்கள் அடங்கிய ஒரு கருத்துக்களஞ்சியமாகத்தான் நான் அத்தொகுப்புகளைப்பார்க்கிறேன்.
சமூஹச் சேவகர் என்ற ரீதியிலோ ஹிந்து சமயத்தின் அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்றாதவர் என்ற ரீதியிலோ அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர் எனினும் அத்வைதத்திலேயே வேறு குருமார்களை பின் பற்றுபவர் என்ற ரீதியிலோ பல விஷயங்களில் அத்தொகுப்புகளில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள் பலருக்கு ஏற்பில்லாமல் இருக்கலாம். ஆனாலும் மிகப்பலருக்கும் மிகப்பல கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கும் (வேற்று மதத்தவர் உட்பட) என்பது என் புரிதல். எது எப்படி இருப்பினும் ஒட்டு மொத்த தொகுப்பையே ஆபாச மஞ்சள் புத்தகங்கள் என உருவகப்படுத்துவது முற்றிலும் ஏற்கவியலாது.
ஜைமினியின் பூர்வமீமாம்ச சூத்திரங்கள் அதற்கு பட்டரின் வார்த்திகங்கள் அவற்றில் பௌத்தக் கருத்தாக்கங்களுக்கு எதிர்ப்புகள், கௌடபாதரின் பௌத்தவாதங்களை மறுதலிக்கும் மாண்டூக்ய காரிகை மற்றும் ஆதிசங்கரரின் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்கள் அவற்றுடன் சில விஷயங்களில் ஒத்தும் பல விஷயங்களில் மாறுபட்டும் உடையவர் ராமானுஜர் மற்றும் மத்வாசார்யர் எழுதிய பாஷ்யங்கள் முதல் ஸ்ரீல பக்திவேதாந்த ப்ரபுபாதர் எழுதிய “பகவத் கீதை உண்மையுருவில்” வரை ஹிந்து மதத்தில் வேறு பாடு இல்லாது காலங்காலமாக ஸ்திரமாக இருந்து வருவது பதியப்படும் கருத்துக்களும் அதற்கு மாற்றாக பதியப்படும் கருத்துக்களும். ஆதி சங்கரரை மறைமுக பௌத்தர் என்றும் மாயாவாதி என்றும் மற்றும் தரக்குறைவாக விமர்சிக்கும் (மணிமஞ்சரி போன்று) மற்றைய தர்சன நூல்களும் உண்டு. மேற்கண்ட விமர்சனங்களைப்பார்க்குங்கால் மணிமஞ்சரி பற்றி நினைவில் வந்தது.
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரை நடராஜர் மற்றும் மஹாவிஷ்ணு என்று போற்றுவதையும் “தெய்வத்தின் குரல்” என்று புத்தகத் தொகுப்பிற்கு இடப்பட்டிருக்கும் பெயரை எதிர்ப்பதற்கும் மாற்றுக் கருத்துக்கள் :-
த்வே ரூபே வாஸுதேவஸ்ய சரம் சாசரமேவ ச|
சரம் சன்யாஸினம் ரூபமசரம் ப்ரதிமாதிகம் ||
அர்ச்சாவதாரமாக அசையாது உருவத்துடன் ஒரு ரூபமும் பரிவ்ராஜகராய் அலைந்து திரியும் படியாய் இருக்கும் சன்யாஸி என மற்றொரு ரூபமும் பகவன் வாஸுதேவனுக்கு. ஆக மேற்கண்ட ச்லோகத்தின்படி யதிகளை நாராயண ஸ்வரூபமாகக் கருத வேண்டும் என ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சொல்லப்படும் உன்மத்தரான ஜடபரதரிலிருந்து பாஷ்யங்களில் சொல்லப்படும் ஆத்ம ஞானியான தர்மவ்யாதர் என்ற கசாப்புக்கடைக்காரரிலிருந்து ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு, போன்ற சன்யாசிகளிலிருந்து ரமணர், ராமக்ருஷ்ண பரமஹம்சர், ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், ஸ்வாமி அபேதானந்தர், மாதா அம்ருதானந்தமயி என்று இன்றைய காலக்ரமம் வரை இங்கு நான் குறிப்பிட்ட குறிப்பிடாத அனைத்து ஆன்ம ஞானிகளும் துறவிகளும் மேற்கண்ட வ்யாச வாக்கின் படி நாரயண ஸ்வரூபமாகத் தான் கருதப்படுகின்றனர். அவ்வாறு கருது என மேற்கண்ட வ்யாச வாணி சொல்கிறது. அதையொட்டி யதிகள் தெய்வத்திற்கொப்ப தொழப்படுவது மரபு சார்ந்த விஷயமே. இதில் விந்தையேதுமில்லை. மரபை ஏற்காதவர்கள் அல்லது மரபை மீற விழைபவர்கள் இதை ஏற்காதிருக்கலாம். மரபை ஏற்பவர்களை இவ்விஷயமாய் இடித்துரைப்பது தேவையற்றது.
உடனேயே “ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்” என்ற வாக்யப்படி உலகமே விஷ்ணு மயம் தானே யதி மட்டும் என்ன தனியாக நாராயண ஸ்வரூபம் என ப்ரதிவாதத்தில் இறங்க வேண்டாம். யதிகளை நாரயண ஸ்வரூபமாகக் கருது என்பது ஆன்றோர் வாக்கு சாஸ்த்ர வாக்கின் படி எதிர் கருத்தில் காணப்படும் அவஹேளனம் மாற்றுக்கருத்தால் மறுக்கப்படுகிறது.
நெறி பிறழ்ந்து செயல் படும் துறவிகள் உளரே எனில் பகவத் ச்ருஷ்டியில் நெறி பிறழாத ச்ருஷ்டியே இல்லை எனலாம். மானுடர்களால் துதிக்கப்பெறும் தேவர் தலைவனான இந்திரனே கூட நெறி பிறழ்ந்ததுண்டு என்பது புராணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாம்பின கால் பாம்பறியும் என்ற ரீதியில் ஆன்மீகம் வேண்டுவோருக்கு ஆன்மீகத்தில் உயர்நிலைக்கு உயர்த்தும் துறவியரும் குருமார்களும் மாறாக மந்திரத்தால் மாங்காய் வேண்டுவோருக்குத் துறவி அல்லது குரு என்ற பெயரில் கண்கட்டு வித்தைக்காரரோ மந்திரவாதியோ கிடைப்பார் என்பதும் அவரவர் எண்ணப்பாங்குகள் படி. யத் பாவம் தத் பவதி – எவ்வாறு எண்ணுகிறாயோ அவ்வாறே ஆவாய்.
“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஸ்ரீமான் ஜடாயு அவர்களுக்கும் செரிமானமாகாததைக் கவனித்துள்ளேன். ஆதி சங்கரர் கால ஆராய்ச்சி – ஒரு பார்வை என்ற வ்யாசத்தின் December 21, 2010 ம் திகதிய தனது உத்தரத்தில் ஸ்ரீமான் ஜடாயு கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
”தெய்வத்தின் குரல்” என்று அதீத வழிபாட்டுணர்வுடன் பெயரிடப் பட்டிருக்கும் உபன்யாசத் தொகுப்பு நூலை இங்கு மறுமொழிகளில் பலர் சுட்டிக் காட்டுகிறார்கள் (என்னிடம் கேட்டால், “காஞ்சி பரமசாரியார் உபன்யாசங்கள் தொகுப்பு” என்ற பெயரே பொருத்தமானது என்பேன், Complete Works of Swami Vivekananda என்பது போல). இந்தப் பெயரே மிரட்டும் தொனியில் இருக்கிறது!”
என்னிடம் கேட்டால் “Complete Works of Swami Vivekananda” என்பதற்குக் கூட “தெய்வத்தின் குரல்” என்று குறிப்பிடுவதில் தவறேதுமில்லை என்றே சொல்வேன். ஹிந்துஸ்தானத்தின் பெருமை மிக்க துறவிகளில் ஒருவரான நாராயண ஸ்வரூபமான ஸ்வாமி விவேகானந்தரின் நூற்தொகுப்பை “தெய்வத்தின் குரல்” என குறிப்பிடுவது சாஸ்த்ர சம்மதமானது தான் என்பது மேற்கண்ட வ்யாசவாணியின் படி தவறில்லை என சித்தமாகிறது. சரி,அது எப்படி ஒரே பெயரில் பல நூற்கள் என வினா எழலாம். பாகவதம் என்ற படிக்கு ஸ்ரீமத் பாகவதமும் உண்டு தேவி பாகவதமும் உண்டு. ஸஹஸ்ரநாமம் என்ற படிக்கு விஷ்ணு, லலிதா, சிவ, சுப்ரமண்ய என பல ஸஹஸ்ரநாமங்களுண்டு. கோவில் என்றால் வைஷ்ணவர்கட்கு ஸ்ரீரங்கம் சைவர்கட்கு சிதம்பரம். ஆக ப்ரச்சினையேதும் இல்லை.
மேலும் “தெய்வத்தின் குரல்” என்ற புஸ்தகத் தொகுப்பு அமரர் ஸ்ரீ ரா.கணபதி அவர்களால் தொகுக்கப்பட்டது. பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் ஸ்ரீமான் ரா.கணபதி அவர்களின் குரு என அறிகிறேன்.
ஒரு குழந்தையிடம் குரு பற்றிய ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்று சொல்லு என்றால் ஆஸேது ஹிமாசலம் உள்ள எந்த ஒரு குழந்தையும் பட்டென்று உதிர்க்கும் ச்லோகம்
“குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர:
குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:”
குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவரை மும்மூர்த்தி ஸ்வரூபமாகக் கருது என்று சாஸ்த்ரங்கள் சொல்கின்றன. விஸ்வாமித்ரர் ராமபிரான், சாந்தீபனி கண்ணன், சங்கரர் பத்மபாதர், ராமானுஜர் கூரத்தாழ்வார், மத்வர் ஆனந்ததீர்த்தர், க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபு ஆறு கோஸ்வாமிகள், ராமக்ருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் என நீண்ட குரு சிஷ்ய பரம்பரை வழக்கில் பாரத வர்ஷம் முழுதும் குருவானவர் வழிபாட்டுணர்வுடனேயே சிஷ்யனால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர். “அதீத” என்ற அடைமொழி அவ்வழிபாட்டுணர்வை “அதீதமாய்” பார்ப்பவரின் பார்வையில் தான். ஆதிசங்கரர் வாவென்றழைக்க எதிரில் நதியுள்ளது என்று கூட பார்க்காமல் நதிநீரில் நடந்து வந்த பத்மபாதருக்கு தனது செயல் வழிபாட்டுணர்வா அது “அதீதமானதா” என்றெல்லாம் யோசித்து பின் அவ்வாறு அச்செயல் செய்யப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
மர்க்கட மார்ஜால ந்யாயம் குரு சிஷ்ய உறவுக்கு சொல்லப்படுகிறது. மர்க்கடம் என்றால் குரங்கு மார்ஜாலம் என்றால் பூனை. மலைக்கும் மடுவுக்கும் மேட்டிலும் பள்ளத்திலும் குரங்கு தாவினாலும் குரங்குக் குட்டி தன் தாயை விடாது இறுக்கப்பற்றிக்கொள்ளும். செல்லுமிடந்தோறும் தன் குட்டிப்பூனையைத் தாய்ப்பூனை கவ்விச்செல்லும். சிஷ்யனானவன் தன் குருவை மர்க்கட சிசுவின் பாவத்தில் பற்ற வேணும் என்றும் குருவானவர் மார்ஜால மாதா பாவத்தில் தன் சிஷ்யனை அரவணைக்க வேணும் என்றும் இதன் தாத்பர்யம்.
குருவிடத்து சிஷ்யனுக்கு வழிபாட்டுணர்வு மற்றும் அதை வகை தொகைப்படுத்தல் அதை ஏற்காதது அல்லது புறந்தள்ள விழைவது அவரவர் விருப்பம். வழிபாட்டுணர்வை இழித்துரைப்பதோ அதை எடை போட்டு “சாதாரணம்” அல்லது “அதீதம்” என வகைத்தொகைப்படுத்துவதோ மரபின் பாற்பட்டதன்று. தேவையற்றதும்.
“தெய்வத்தின் குரல்” என்ற தலைப்பு ஒரு யதியின் கருத்துக்கள் என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய குரு என்ற ரீதியில் வைக்கப்பட்டிருந்தாலும் சரியானது தான் என்பது மேற் சொன்ன காரணங்களால் சித்தமாகிறது.
தெய்வத்தின் குரல் என்ற சொல்லாடல் ஏன் மிரட்டும் தொனியில் உள்ளது என புரியவில்லை!!!!!! ஹிந்து தெய்வங்களெதுவும் என்னை நீ வணங்காவிடில் மீளா நரகம் புகுவாய் என பூச்சாண்டியெல்லாம் காட்டுவதில்லையே.
மிகப்பரந்த ஹிந்து சமயத்தின் மிகப்பல பரிமாணங்களில் ஒரு பரிமாணமாகவே தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி முன் வைக்கப்படுகிறார். ஒட்டு மொத்த ஹிந்து சமயத்தின் அதிகாரமான குரலாக அவரோ அல்லது வேறு யாருமோ அவரை முன் வைக்கவில்லை என்பது என் புரிதல். சைவர்களுக்கோ வைஷ்ணவர்களுக்கோ அவர் வாதங்களை ஏற்கவேண்டுமென்பதில்லை. அவரவர் வழிப்படி வழிபாடுகள் செய் என்று தான் ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமிளும் சொல்கிறார் என்றே என் புரிதல். சைவர்கள் வைஷ்ணவர்கள் போன்று அத்வைத தத்துவார்த்தத்தை பின்பற்ற விழைவோர் அனைவரும் கூட அவர் சொல் தான் கடைசீ சொல் என்று சொல்வதில்லையே. அவரை குருவாக ஏற்பவருக்கு அவர் சொல் கடைசீ சொல்லாக இருக்கலாம். அத்வைத தத்துவார்த்தத்தை ஏற்பவர்களில் கூட மற்ற குருமார்களை ஏற்பவர்களுக்கு பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹாஸ்வாமியின் சொல் கடைசீ சொல் என இல்லையே. இல்லாத ஒன்று ஏன் இருப்பதாகக் காண்பிக்கப் படுகிறது தெரியவில்லை.
மஹாத்மா காந்தி காஞ்சி மாமுனிவரைக் காண பாலக்காடு சென்றாரா. அல்லது காஞ்சி மாமுனிவர் காந்தியடிகளைக்கண்டு பழமைவாதம் பேண மன்றாடினாரா என்றெல்லாம் இணைய தளங்களில் விவாதம் செய்யப்பட்டுள்ளது. விவாதத்தினூடே உதிர்க்கப்பட்ட விஷயங்களில் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை அப்படி ஒன்றும் மதித்தவரில்லை என்பதும் ஒன்று. இருவரிடையே நிகழ்ந்த சம்பாஷணம் யாது என்பதற்கு ஆதாரங்கள் இல்லை எனில் எழுதுபவரிடம் எழுதுகோலும் தட்டிவிட்டால் பறந்தோடும் மனக்குதிரை விரும்பும் மார்க்கத்தில் சென்று கற்பனையை எழுத்தில் வடிக்கும் திறமையும் வழிபட வாசகர்களும் இருப்பார்களானால் எழுதப்படுவது சரித்திரம் என சாதிக்க வேண்டிய அவசியமிருக்காது. எழுதப்பட்டது சரித்திரம் என்று வழிபடும் வாசகர்கள் நிர்த்தாரணம் செய்வர்.
“மஹாமனா மாளவியோ மஹாத்மா காந்திரேவச” என முந்தைய ப்ராதஸ்மரணம் அதவா பாரத பக்தி ஸ்தோத்ரத்திலும் “தாதாபாயீ கோப பந்து: திலகோ காந்திராத்ருதா:” என இப்போதைய “ஏகாத்மதா ஸ்தோத்ரத்தில் ஸ்வயம் சேவகர்களால் ஸ்மரிக்கப்படும் காந்தியடிகள் காஞ்சிமாமுனிவரை ஏற்றுக்கொண்டாரா இல்லையா மதித்தாரா மதிக்கவில்லையா என்பதெல்லாம் அனுமானத்தின் பாற்பட்ட கருத்துக்களே. நெருப்பு சுடும் என்பது போல மறுக்க முடியாது நிர்த்தாரணம் செய்யப்பட்ட உண்மைகளன்று.
காந்தியடிகளை உள்ளபடி அவரின் நற்கருத்துக்களுக்காக ஏற்றுக்கொண்டாலும் தேசத்தை நாசம் செய்த செய்கின்ற காங்கிரஸ்காரர்கள் போன்று அவருடைய நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக ஸ்வயம் சேவகர்கள் ஏற்பதில்லை என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்.
மேலும் ஹிந்து சமயத்திற்கும் ஹிந்துஸ்தானத்திற்கும் காந்தியடிகளால் நன்மையேற்பட்டதா தீமைகள் விளைந்துள்ளதா என்பதில் ஹிந்து எழுச்சிக்குப் பாடுபடுபவர்களில் வெகு நிச்சயமாக இரு கருத்துக்கள் உண்டு. இந்த தளத்திலும் மற்றைய ஹிந்துத்வ தளங்களிலும் ஹிந்துக்களால் மதிக்கப்படும் இளைய மற்றும் முதிய பல எழுத்தாளர்கள் காந்தியடிகளையும் காந்திய கருத்துக்களையும் அவரின் சில அல்லது ஒட்டுமொத்த நிலைப்பட்டுகளையும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர் என்பது சுடுகின்ற உண்மை.
ஆனால் ஹிந்து மதத்திலும் ஹிந்து சமய எழுச்சியிலும் அல்லும் பகலும் பாடுபடும் ஸ்வயம் சேவகர்கள் மாற்றுக் கருத்துக்களன்றி ஏற்கும் மாமனிதர் குருஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் இரண்டாவது சர் சங்க சாலக் (அகிலபாரத தலைவர்) என்ற பொறுப்பில் இருந்த பரம பூஜனீய ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்கள்.
யார் காஞ்சி மாமுனிவரை மதிக்கிறார்களோ இல்லையோ, கருத்து வேறுபாடின்றி ஹிந்து இயக்கத்தினரால் மிக உயர்வாக மதிக்கப்படும் குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை மிகவும் மதித்தவர். காந்தியடிகள் காஞ்சிமாமுனிவர் சந்திப்பின் அடிப்படையில் அடித்துவிடப்படும் கருத்துக்கள் போன்று புனைவா இது என வினா எழலாம். இது என் கற்பனா சக்தியால் புனையப்படும் கருத்தன்று. ஆதார பூர்வமானது.
டாக்டர்ஜி என அன்புடன் அழைக்கப்படும் சங்கத்தின் முதலாவது சர் சங்க சாலக் பொறுப்பில் இருந்த பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களது நினைவில் நாக்பூர் நகரத்தில் “ஸ்ம்ருதி மந்திரம்” என்ற நினைவாலயம் பரம் பூஜனீய குருஜி அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. பாரத நாடு முழுதிலிருந்தும் ப.பூ.டாக்டர்ஜீ அவர்களின் பிறந்தநாள் அன்று நிச்சயிக்கப்பட்ட அந்நினைவாலய திறப்புவிழாவில் ஸ்வயம் சேவகர்கள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் காலையிலும் மாலையிலும் வேதமந்த்ரங்கள் ஓதப்பட்டும் மற்றும் சதுர்வேத பாராயணத்திற்கும் பரம் பூஜனீய குருஜி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை ஆசீர்வதித்தருளுமாறு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை பரம் பூஜனீய குருஜி அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதத்தில் வேண்டுகிறார். அந்த ஸ்ரீமுகத்தின் நகல் இத்துடன் இணைப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டது இக்கடிதம். முதல் பக்கத்தில் ஸம்ஸ்க்ருத பாஷையிலும் இரண்டாவது பக்கத்தில் ஹிந்தி பாஷையிலும் எழுதியுள்ளார். மேற்கண்ட கடிதத்தின் நகலை இன்றும் ப.பூ.குருஜி அவர்களுக்கான இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
[gview file=”http://www.tamilhindu.com/wp-content/uploads/Shankaracharya_Kanchi.pdf”]
இயன்றவரை தமிழ் லிபியில் கீழே அக்கடிதத்தை ட்ரான்ஸ்லிடரேட் செய்துள்ளேன்.
“சைத்ரே ஸுதி ப்ரதிபதி பரமபூஜனீய டா.ஹேட்கேவார் மஹாபாகானாம் ஜன்மதிவஸே யதாநிஸ்சிதம் ததீய ஸ்ம்ருதிமந்திர ஸமுத்காடயத. அஸ்ய மஹோத்ஸவக்ருதே பாரத வர்ஷஸ்ய ஸமஸ்த ப்ரதேசத: ப்ரதிநிதிபூதா: ஸஹஸ்ரச: ஸ்வயம்சேவகதுரீ நாகபுரே சங்க கேந்த்ரஸ்தானே ஸ உத்ஸாஹம் ——-. ஸ்ம்ருதி மந்திர உத்காடன தினே ப்ராத: ஸாயஞ்ச வேதமந்த்ரோச்சார பூர்வகம் ஸமுசிதோ—- நிஹிதா. ஸாயங்காலே ஸார்வஜனீய மஹோத்ஸவ அவஸரே சதுர்வேத படனானந்தரம் பூஜ்ய சரணானாம் மங்களாசீர்வசன பத்ரம் மயா ஸர்வேப்ய: ச்ராவயித்வா ஏதாந்நிமித்தம் ஸ்ரீமத்பி: ப்ரோஷிதானாம் பூதி-குங்கும- மந்த்ராக்ஷதானாம் ஸமர்ச்சனேனைவ ஸ்ம்ருதிமந்திரஸ்ய உத்காடனம் ஸஞ்ஜானாம் இதி ப்ரோத்கோஷிதம். ஏவம் விதேன விதினா ஸ்ம்ருதி மந்திர உத்காடன மஹோத்ஸவ: ஸமபாத்யத.
அஸ்ய மஹோத்ஸவஸ்ய ——–ஆசாஸே.
——அஸ்மாகம் ஸர்வேஷாம் பகவத்க்ருபா——-.
ஸ்ரீமஜ்ஜகத்குரு க்ருபாபிலாஷீ சரணரஜ:
மா. ஸ. கோல்வல்கர்
(கோள்வால்கரோபாத ஸதாசிவ ஸுத: மாதவ:)
ப.பூ குருஜி அவர்கள் கடிதத்தை முடிக்கையில் ஸ்ரீ ஜகத்குரு அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என தன்னை விளித்து கடிதத்தை நிறைவு செய்கிறார்.
பூஜைக்கு உரிய காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைத்ததாக தமிழ் ஹிந்து தளத்தில் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உபன்யாசங்களின் தொகுப்பான நூல் ஆபாச மஞ்சள் புத்தகம் என இத்தளத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்து இயக்கங்களை பரிச்ரமப்பட்டு கட்டமைத்த ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருந்த ப.பூ. குருஜி பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவரை குறிக்கையில் அவர்களின் க்ருபைக்கு விழையும் அவரது அடிப்பொடி என விளிக்கிறார். இவை நான் தெளிவு படுத்தும் விஷயங்கள். “ந ப்ரூயாத் ஸத்யமப்ரியம்” – அப்ரியமான உண்மைகளை பேசாதே என்ற மூத்தோர் சொல்லை பின்பற்றி மேற்சொன்ன கருத்துச்சாரங்களிலிருந்து நாம் மேலும் என்ன புரிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. இதை வாசிப்பவரிடம் விட்டு விடுகிறேன்.
ப.பூ.குருஜி அவர்கள் பூஜ்ய ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சர் அவர்களின் நேரடி சீடரான அகண்டானந்தரின் சிஷ்யர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.
ஸ்ரீமான் செந்தில் அவர்கள் “வேதம் புனிதமடைந்தது” என்ற வ்யாசத்தின் உத்தரங்களில் ஸ்வாமி விவேகானந்தர், ஸ்வாமி சித்பவானந்தர், மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் போன்ற பெரியோர்களை சுடுசொற்களால் குறிப்பிட்ட போது தலையிட்ட ஆசிரியர் குழு ஹிந்து இயக்கங்களின் பீஷ்ம பிதாமஹ ஸ்தானத்தில் இருக்கும் ப.பூ. குருஜி அவர்களால் வணங்கப்பெற்ற காஞ்சிமாமுனிவர் ஹிந்து தர்மத்திற்கு ஊறு விளைவித்தவர் என்றும் அவர் கருத்துக்கள் அடங்கிய “தெய்வத்தின் குரல்” என்ற ஒட்டுமொத்த நூற்தொகுப்பு “ஆபாச மஞ்சள் பத்திரிக்கை” என இகழப்பட்ட பின்னர் மௌனம் சாதித்ததும் துரத்ருஷ்ட வசமானதே.
கருத்து வேறுபாடுகளை விவாதம் செய்வது ஆரோக்யமானது. அவசியமானதும் கூட. சமூஹத்தின் முன்னோடிகளை அவர் தம் கருத்துக்களை தரம் தாழ்ந்து முத்திரை குத்துவதை தவிர்க்கலாமே. தமிழ் ஹிந்து தளத்திற்கும் வசவு தளங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு என புரிதல். வசவுப்பதிவுகள் அவற்றை நிறைவு செய்யும் தன்மையவை.
பூஜ்ய ஸ்ரீ காஞ்சிமாமுனிவரை போற்றி அவர் தம் திருத்தாள்களில் அடியேன் சமர்ப்பிப்பது :-
சமதர்சன சந்துஷ்டாய நமோ நம:
வேத தர்ம சாஸ்த்ர பரிபாலனாய நமோ நம:
பாத்ராபாத்ரபேதவினா காருண்யாம்ருத கடாக்ஷ வர்ஷிணாய நமோ நம:
ஸௌலப்ய ஸௌசீல்யாதி ஆத்மகுண பரிபூர்ண விக்ரஹ சந்த்ரசேகரேந்த்ர யதிவர்ய: இத்யனுஸ்ம்ருத்ய வந்திதோஹம் வாரம் வாரம்.
பி.கு :-
- பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மாமுனிவர் அடியேனுடைய குருஸ்தானத்திய யதிவரர் அன்று. அடியேன் மிகவும் போற்றும் யதிவரர்களில் ஒருவர்.
- என்னுடைய இயல்பான மொழிநடையில் வ்யாசம் எழுதப்பட்ட பின்பும் இயன்றவரை தமிழ்ப்பதங்களால் மொழிநடை சீர்திருத்தப்பட்டுள்ளது. தமிழாங்கில விரும்பிகள் எப்போதும் போல் மணிப்ரவாள மொழிநடையின் மீது ப்ரத்யேகமாக சகதி வீச விரும்பலாம். அது அவர்களது விருப்பம். சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அவற்றில் உள்ள நிறை குறைகளை பகிர விழையும் வாசகர்களுக்காக இவ்யாசம் சமர்ப்பிக்கப்படுகிறது.
- காவிரித்தண்ணீருக்காக கர்நாடகாவும் முல்லைப்பெரியாறுத் தண்ணீருக்காக கேரளமும் அவர்களிடையே சிக்கித்தவிக்கும் தமிழகமும் பார்க்கும் போது காஞ்சிமாமுனிவர் தாமிரபரணி நதி பற்றிய உபன்யாசம் இருபது முப்பதாண்டுகளுக்கு முன் கல்கி தீபாவளி மலரில் ப்ரசுரமானது நினைவுக்கு வருகிறது. மலயாளத்து மன்னன் ஒருவனது ப்ரம்மஹத்தி தோஷம் விலக கர்நாடக தேசத்து ப்ரம்மசாரி ஒருவன் தமிழகத்தில் தாமிரபரணி நதியைக் கொணர்ந்தது பற்றியதான உபன்யாசம்/ கதை. அவர் சொன்ன கதைப்படி இப்ரதேசங்களில் இருந்த ஒற்றுமை அபிமானம் எங்கே இன்று மாற்று ப்ரதேசத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கொடுப்பதற்கு இடையூறுகள் செய்யும் மனப்பான்மை எங்கே என்பது துலங்கும். அந்த கதையை / உபன்யாசத்தை தமிழ் ஹிந்து தளம் வெளியிடுமாயின் துறவறத்துக்கு அடையாளமாக விளங்கிய ஹிந்து தர்மத்தின் பெருமை மிக்க துறவியாம் காஞ்சி மாமுனிவரை மனது நிறைவுடன் நினைவு கூர்வதாக அமையும்”வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
கன்னடம் தெலுங்கு கவின் மலயாளம் ஹிந்தியும் எங்களதே”என ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாடுவது பொழுதுபோகாது பாடும் பாடல் அல்ல வாஸ்தவத்தில் இத்தேசத்தில் உணர்வு பூர்வ ஒற்றுமை இருந்தது என துலங்கும். இன்று அவ்வொற்றுமை அரசியல்வாதிகளால் சிதைவு பட்டு வருகிறது ஆனால் அது நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற அவா நம்மில் உறுதியாக உள்ளது. அதற்கு உழைப்போம்.