தமிழ் மரபின் தலைமைப் பண்புகளும் திராவிடக் கட்சிகளும்

தலைமைத்துவம் தமிழ் மரபில் நான்கு குணங்களைக் கொண்டது. இவற்றையே தமிழ் இலக்கியங்கள் அனைத்தும்
தலைமைப் பண்புகள் என்று குறிப்பிடுகின்றன.

I’m on my third dose of priligy now and it has been amazing. Flomax o 4mg in https://furniture-refinishing-guide.com/privacy-policy/ india is a medicine, so it needs to be taken by a doctor's prescription. There are no reported reactions or side effects associated with the use of this medication.

It is very rich in amino acids and it is mainly found in the layers of our skin and is vital. With this price of clomiphene in nigeria amazing program, you can get best levitra 40 mg to improve your results. This medication helps your dog to fight infections and it also helps in controlling the symptoms.

Prednisone without a prescription may take time to be effective with the treatment of this medication. Some of Barinas clomid 100mg tablet price the possible side effects of celecoxib include: If a subject is not of relevance to the conversation at hand (such as a subject of a different age or a topic of discussion that would not have an effect on your decision to buy a product, like a health or safety topic or a safety issue) you should simply ask about it, as i have already mentioned.

1. அஞ்சாமை

2. ஈகை

3. விவேகம்

4. செயலூக்கம்

திராவிட இயக்க அரசியல் இந்த நான்கையும் எப்படி சித்தரிக்கிறது என பார்க்கலாம்.

1. அஞ்சாமை

திராவிட அரசியல் என்பது தேச பிரிவினை , மக்கள் புலபெயர்வு, அந்நியர் தாக்குதல் ஆகியவற்றை அதன் நிலபரப்பில் பெருமளவு சந்திக்கவில்லை. ஒட்டு மொத்த பொது எதிரி என எதுவும் பெரிதாக இல்லை. ஹைதராபாத் ராசாக்கர்கள், மாப்பிளா கலவரம், இந்திய பாகிஸ்தான் பிரிவினை , நேரடி முகலாயர் ஆட்சி , போர்சசுகீசியர் ஆட்சி என எந்த பொது நியாபகமும் இல்லை. தமிழகம் முழுதும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்தது ஒட்டு மொத்தமாக தொகுக்கப்பட்ட நேரேட்டிவ் ஆகவில்லை. ஆகவே அஞ்சாமை என்பதை பெரிய குறியீடாக ஆகவில்லை. சுதந்திரத்துக்கு பின்னரே மத்திய அரசை சீண்டுதல் அஞ்சாமை என பழக்கப் படுத்தப்பட்டது. மக்களிடம் தலைமைத்துவ பண்பான அஞ்சாமை குறித்து இயல்பான எதிர்பார்ப்பு உண்டு. யார் ஒன்றுமே செய்ய மாட்டார்களோ அவர்களுக்கு நேராக செய்வது நல்லது என்ற நோக்கில் திராவிடம் மத்திய அரசை நோக்கி புஜம் மடிப்பது மோஸ்தரானது. பொதுவாக திருப்பி்அடிக்கும் தரப்புகளிடம் குனிந்தும், ஒன்றும் செய்யாதென உறுதி படுத்தப்பட்ட தரப்பிடம் கொந்தளிப்பதும் திராவிட மரபு.

புதிதாக உள்ளே வரும் கட்சிகள் (எ.கா: பா.ஜ.க) தங்களது அஞ்சாமை குணங்களைக் காட்ட வேண்டுமெனில் அஞ்சக்கூடிய எதிரி யார் என்பதை நிறுவி மக்களின் பொதுமனதில் கொண்டு சேர்க்கவேண்டும்.

2. ஈகை

ஈகை தமிழ் மன தொல் தொன்மம். வறியவருக்குப் பொருள் கொடுக்கக் கூடிய மனநிலை குறித்து மக்களிடம் எதிர்பார்ப்பு உண்டு.

திராவிட கட்சிகள் இந்த எதிர்பார்ப்பினை பூரணமாக உணர்ந்தவை. ரூபாய்க்கு மூன்று படி அரிசி முதல், அம்மா உணவகம் வரை அதைக் காணலாம். திராவிட கட்சிகள் ஈகை என்பதை கொச்சையாக்கி , ஊழலுக்கு அதை மக்களின் பலவீனமான பேராசையை நோக்கி திருப்பினார்கள். பிறர் பொருளை விரும்புதல் குற்றமில்லாத அறிவு என்பதை விரித்து, கிடைப்பதை எடுப்பது புத்திசாலித்தனம் என ஆக்கினர். அதை ஈகை என நிறுவினர்.

புதிதாக உள்ளே வரும் கட்சிகள் தங்களது ஈகையை நிரூபிக்க வேண்டும். அதை targeted ஈகை என மாற்றுவது அவசியம்.

தன் பொருள் அல்லாதது ஆக்கம் தரும் என்றாலும் விரும்பாது இருக்கும் குணத்தினை சமூகத்தில் மீட்டெடுக்க வேண்டும். சர்க்கார் படம் நினைவுக்கு வரலாம்.

3. விவேகம்

எது தேவை , எது தேவையில்லை என அறிந்து ஆற்றும் விவேகம் வேண்டும்.

திராவிட கட்சிகளின் விவேகம் என்னவெனில். தமிழரை ஜாதிக்குழுக்களாய் சேராது நிர்வாகம் செய்தல். பின்னர் சேராது இருப்பதையே தாங்கள் ஆள்வதற்கான காரணமாக சொல்லுதல். ஆட்சியை கைக்கொள்ள எது தேவை, எது தேவையில்லை என அறிவர்.ஆழமுள்ள நீரில் முதலை வெல்லும், ஆனால் நீரை நீங்கினால் முதலையை பிற உயிர்கள் வெல்லும். ஜாதிக்குழுக்களாக சிதறடிக்கும் இடத்தில் தங்களை வைத்துக்கொண்டு அதிகாரத்தை தக்க வைக்க வேண்டுமென்ற விவேகம் திராவிட கட்சிகளுக்கு உண்டு.

பொருளாதார முன்னேற்றம் என்பது முன்னேற்றம் இல்லை என நிறுவுதல் இன்னொரு திராவிட இயக்க ஸ்பெஷல் அம்சம். அவர்களுக்கு அதுவே தேவை. சமூக முன்னற்றம் என்பதும் 500 முதல் 5000 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட ஒன்றாகவும் நிறுவி உள்ளார்கள். திராவிட கட்சிகளின் இந்த விவேகம் அசர வைப்பது. மார்க்கெட் (சந்தை) பொருளாதாரம் உலகெங்கும் பரவலாக உள்ள சூழலில், “பொருளாதார முன்னேற்றம் முன்னேற்றம் ஆகாது” என சித்தாந்தம் உருவாக்குதல் எளிதல்ல.

அதானாலேயே அவர்கள் புதிதாக வரும் கட்சிகளையும் தாங்கள் பலம் கொண்ட விவாத வடிவில்தான் அணுகுவார்கள்.

புதிதாக வரும் கட்சிகள் தாங்கள் பலம் கொண்ட இடத்துக்கு திராவிட கட்சிகளை இழுக்கும் விவேகம் கொண்டால் விவாதம் (நேரேட்டிவ்) சூடு பிடிக்கும். வேல் ஏந்திய வீரர்களை தாக்கும் யானையும் சேற்றில் சிக்கினால் நரிக்கு இரையே.

4. செயலூக்கம்

பல வருடம் பதவி சுகம் இல்லாத பொழுதும் ஊக்கத்தினை இழக்காது சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையிலும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையிலும் அடித்தளத்தில் செயலை நிலைக்கொள்ள செய்தல் தலைமை பண்பாகும். திராவிட தலைமைகள் விரிவான தொண்டர் படையை கொண்டவை. இணையத்துக்கு வெளியேயான அவர்களது சமூக வலைத்தளம் (சோசியல் நெட்வொர்க்) செயல்படும் விதம் படு திறமையானது. இதனை, இதனால், இவன் முடிக்கும் என ஆய்ந்து செயல்படுவர். தேமுதிக, மதிமுக என போட்டிக்கு வந்த கட்சிகளை உடைத்த பாங்கு மற்ற கட்சிகளிடத்து அந்த திறமை இல்லை என்பதை காட்டும். மீடியா, நீதித் துறை, போலீஸ் , அரசூழியர் என எல்லா இடத்திலும் ரிஸ்க் எடுத்து செயல்படும் ஆட்களை உருவாக்கி உள்ளனர்.

புதிதாக வரும் கட்சிகள் மிகப்பெரிய களப்பணி (க்ரவுண்ட் வொர்க்) இல்லாத வெறும் இரண்டாம் மட்ட, மூன்றாம் மட்ட தலைமைகளோடு் திராவிட கட்சிகளிடம் சென்றால் எளிதில் கரைய வாய்ப்புண்டு. அடிமட்ட தொண்டர்களிடத்து நீடித்த செயலூக்கம் உருவாக்குதல் எளிதல்ல. திராவிட கட்சிகளுக்கும் சமீபத்தில் இந்த சவால் உண்டு . ஆகவேதான் அவர்கள் சர்ச், ஜமாத் என ஓட்டு வங்கிகளை அணுகுகிறார்கள். அந்த இடத்தில் செயலூக்கத்தை திராவிட கட்சிகள் விதைக்க வேண்டியது இல்லை. அதை அந்த மத அமைப்புகளே பார்த்துக் கொள்ளும். திராவிட கட்சிகள் மொத்த பேரம் பேசினால் போதும். வாக்குகளுக்கு திராவிட கட்சிகள் காசு தருவதும் அவர்கள் உருவாக்கிய செயலூக்க வடிவத்தையே காட்டுகிறது. இப்போதைக்கு வாக்குக்கு காசு விநியோகம் செய்பவரின் செயலூக்கம் போதும், காசு வாங்குபவரின் செயலூக்கம் நிர்வாகத்துக்கு வெளியேயானது என்ற நிலையை பரிசீலிக்கின்றனர்.

ஒருமித்த சமுதாய நோக்கம் (Shared purpose) என்பதன் வழியே செயலூக்கம் உருவாக்குவது எளிதல்ல. புதிய கட்சிகளுக்கு இது அவசியமாக இருக்கலாம். ஆனால் திராவிட கட்சிகள் இருப்பதை நிர்வாகம் செய்து அடுத்தவர் வளராமல் பார்க்கவே முயல்வார்கள்.

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

குத்தறிவாளர்கள் சாதியை வைத்து இழிவு செய்யாதவர்கள் என்ற ஒரு பிம்பம் நம் எல்லோரிடமும் உண்டு. ஆனால் பகுத்தறிவாளர்களும் சாதியை வைத்து இழிவு செய்பவர்கள் என்ற உதாரணத்திற்கு ஒரு பகுத்தறிவாளரை சொல்லவேண்டுமென்றால் புகழ்பெற்ற கவிஞர் – திராவிடர் இயக்கக்காரர்களால் பொற்கிழி பெற்ற ஒரே தலைவரை சொல்லலாம்.

யார் அவர்?

புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதிதாசன் தான்.

திராவிட இயக்கத்தில் அழுத்தமாகத் தடம்பதித்த முதன்மைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

பாரதிதாசன் என்று சொன்னாலே அவர் ஒரு புரட்சிக்கவி; சாதி, மதம், இவற்றை எதிர்த்தவர்; பெண் விடுதலை, தமிழ்ப் பற்று இவற்றை ஆதரித்தவர் என்ற பிம்பம்தான் தோன்றுகிறது.

ஆனால் அவர் கடைபிடித்த கொள்கை அதற்கு எதிராகவே இருந்தது.

அவர் என்னென்ன தத்துவங்களை எழுதினாரோ பாடினாரோ அதைத் தம் வாழ்வில் கடைபிடிக்கவில்லை.

’….. கலப்பு மணம் ஒன்றே

நல்வழிக்குக் கைகாட்டி’

என்று பாடிய கவிஞர் தம் மக்களுக்குக் கலப்பு மணம் செய்விக்க முன்வரவில்லை.அதைக்கூட விட்டுவிடலாம்.

பாரதிதாசன் பகுத்தறிவுவாதி; சாதிக்குத் தீ என்றெல்லாம் சொல்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை. திராவிட இயக்க பகுத்தறிவுவாதிகளும் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசுபவர்கள்தான்.

anna_and_bharatidasan28-7-1946ல் புதுச்சேரி மாகாணத்தின் திராவிடர் கழகத்தலைவர் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணாத்துரையால் பொற்கிழி வழங்கப்பட்டது. பொற்கிழியாக ரூ. 25,000 தரப்பட்டது. அந்தக்காலத்தில் இத்தொகை மிகப்பெரிய தொகை. எந்தக் கவிஞனுக்கும் அந்தக் காலகட்டத்தில் இந்த அளவு தொகை வழங்கப்படவில்லை.

பின்னாளில் அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் முரண்பாடு எழுந்தது. அந்த முரண்பாட்டின் காரணமாக பகுத்தறிவுவாதி பாரதிதாசன் அண்ணாத்துரையை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ அவ்வளவு கேவலமாக எழுதினார், தான் நடத்திய ’குயில்’ வார இதழில். முரண்பாடு என்று வந்துவிட்டால் சாதி ஒழிப்பாவாது; கண்ணியமாவது – இவற்றை எல்லாம் பகுத்தறிவுவாதிகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

சரி அப்படி என்னதான் எழுதினார் பாரதிதாசன்?

1958ம் ஆண்டு தான் நடத்திய குயில் வார இதழில்தான் பாரதிதாசன் அண்ணாத்துரையை கேவலமாக விமர்சித்து எழுதினார்.

கட்டுரையின் தலைப்பு : அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?

இந்தத் தலைப்பில் 4 தொடர்கட்டுரைகளை எழுதினார் பாரதிதாசன். அந்தக் கட்டுரைகளை இப்போது பார்ப்போம்.

1. குயில் இதழ், குரல்– – 1, (30-9-1958), இசை -18

அண்ணாதுரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?
…..
அறிவிப்பு உ. :-

இதற்குமுன் அதே முரசொலியில் அண்ணாத்துரை உங்கட்குக் கொடுத்த பொற்கிழிமேல் நீங்கள் நின்றுகொண்டு ஒலிபெருக்கியில் பேசுகின்றது போல் படம் வந்திருந்தது. அண்ணாத்துரை தான் உங்களைப் பொதுமேடையில் ஏற்றினாராம்.

இதற்கும் அடுத்துவரும் அறிவிப்புக்கும் சேர்த்துப் பதில் எழுதுவேன்.

அடுத்த அறிவிப்பு வருமாறு :-

முன் ஒருமுறை, உங்கட்குப் பொற்கிழி தந்து பொன்னாடை போர்த்தினார் அண்ணாத்துரை என்பதாகக் காட்டியிருந்தார் தம் திராவிடனில் என்.வி.நடராசன் அவர்கள். அதுவுமின்றி அண்ணாத்துரையே புதுவையில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவிஞர்க்குப் பொற்கிழி கொடுத்தேன், பொன்னாடை போர்த்தினேன்; அப்படியிருந்தும் என்னை கவிஞர் எதிர்க்கிறார் என்று கூறினார். இதற்கு நீங்கள் பதில் கூற வேண்டாமா?

எனது பதில் :-

எனக்குப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி கொடுப்பதற்கென்று அமைந்த குழுவினர் தம் செயலைத் தொடங்கிப் பணியாற்றி வருகையில் அண்ணாத்துரை நிலைமை எப்படி என்பது தெரிந்தால், அண்ணாத்துரை எனக்குப் பொற்கிழி பொன்னாடை தந்திருக்க முடியாது என்பது விளங்கும்.

அதைக் கேளுங்கள்.

அண்ணாத்துரையின் தமக்கையார் மகளை காஞ்சியில் செல்வந்தராயிருக்கும் (இன்னும் இருக்கின்றார்) பொன்னப்பாவிடம் இரவில் அழைத்துச் செல்வதும் இன்ப விளையாட்டு முடியும்வரைக்கும் வெளியில் காத்துக் கொண்டிருப்பதும் அண்ணாத்துரையின் வேலை. துண்டு இருந்தால் சட்டை வேண்டாம், சட்டை இருந்தால் துண்டு வேண்டாம் என்கிறாள் என் தொத்தா – அண்ணாத்துரையின் அப்போதைய புலம்பல் இது!

அன்னையோ சென்னையில் ஐயரோடு! காஞ்சிப் பூஞ்சோலைக்குத் தண்ணீர் இழுப்பும் பறிப்பும்.

பண்ணியம் ஏதேனும் உண்ண ஆசைப்பட்டால் அதற்காக அண்ணாத்துரைக்கு வருமானம் பொன்னப்பா தரும் சிறுதானம்.

இந்த நிலையில் எனக்குப் பொற்கிழியும் பொன்னாடையும் அண்ணாத்துரையா அளித்திருப்பார்? அதற்கு மாறாக அண்ணாத்துரை என்ன முயற்சியில் ஈடுபட்டிருந்தார் தெரியுமா அப்போது?

பெரியாரின் செல்வநிலை கண்டு மலைத்தார். அவரின் தொண்டராகி நிலைத்தார். குடும்பம் குலைத்தார். பெரியாரை அவர் அண்ணாரிடமிருந்தும், மக்களைப் பெற்றவரிடமிருந்தும் கலைத்தார்.

இன்னும் இதைச் சொல்வதென்றால் விரியும், திரு.குருசாமியைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்.

இந்த முயற்சியில் அண்ணாத்துரைக்குச் சாப்பாட்டுக் குறைவு நிறைவேறிற்று.ஆனால் அவர் கோட்பாட்டுக் குறைபாடு அப்படியே இருந்தது.

தமக்கொரு நல்ல நிலையை ஏற்படுத்துக் கொள்ள எவன் ஏமாறுவான் என்று அண்ணாத்துரைக் கழுகு முகத்தைத் தீட்டிக் கொண்டிருந்தது.

எனக்கு பொன்னாடைப் போர்த்தும் விழாக்குழுவானது மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தது. அக்குழுவில் நாமக்கல் கருப்பண்ணர், செல்லப்பர் முதலியவர்கள் நாட்டில் செல்வாக்குள்ள புள்ளிகள்.

காலஞ்சென்ற குமாரசாமி இராசாவைத் தலைவராக கொண்ட இராசபாளையத்து மக்கள் என் விழாக்குழுவினர் வாயிலாக என்னைப் பாராட்ட எண்ணாமல் தனியாக என்னை இராசப்பாளையத்திற்கு அழைத்துப் பண முடிப்புக் கொடுக்க எண்ணி என்னை அழைத்தார்கள்.

நான் இராசபாளையம் போக இருப்பது அண்ணாத்துரைக்குத் தெரிந்து நானும் வருகின்றேன் என்று என்னிடம் கெஞ்சினார். அழைத்துப்போனேன். விழா நடந்தது அங்கும் பொற்கிழி அளித்தார்கள். அண்ணாத்துரை ஏதும் கேட்கவில்லை. அவர் எதிர்பார்த்தது சிறிதன்று.

இராசபாளையம் விட்டு வந்த அண்ணாத்துரை, என் விழாக்குழுவினரிடையெல்லாம் சென்று நான் கவிஞருடன் இராசபாளையம் சென்றேன் – சென்றேன்- என்று பறையடித்தார்.விழாக்குழுவில் புகுந்துகொள்ள வேண்டும் என்பது அண்ணாத்துரையின் ஆசை!

விழாக்குழுவினரில் ஒருவர் டி.என்.இராமன்! அவரை அண்ணாத்துரை நெருங்கினார்.தம் ஆசையை மலர்த்தினார். இராமன் ஒப்பினார். மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?

அண்ணாத்துரை விழாக்குழுவினரில் ஒருவராகிவிட்டார்.

(தொடரும்)

2. குயில் இதழ், குரல்– – 1, (7-10-58), இசை -19

விழா நாளைக்கு என்னும்போது நான் சென்னையில் தங்குவதெற்கென்றமைத்த வீட்டில் வந்து தங்கிவிட்டேன். அன்றைக்கே சிங்கப்பூர், திருச்சி, சேலம் முதலிய இடங்களினின்று பெருமக்கள் சென்னையில் வந்து நிறைந்துவிட்டார்கள்.

என்னைச் சிலர் நேரில் வந்து கண்டார்கள். அவர்களால் நான் பெற்ற முறையீடுகள் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாத்துரை வந்து சொன்னது : நான் விழாக்குழுவில் பொருட் காப்பாளனாக இருந்து வேலை செய்யாவிட்டால் இத்தனை சிறப்பாக இந்த விழா அமையாது.என் செலவில் இந்தப் பொன்னாடையை நெய்யச் செய்தேன்.

அண்ணாத்துரை போனபின் மற்றொரு செல்வந்தர் வருகின்றார் அவர் சொன்னது :என் செலவில் என் தறியில் என் ஆளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது, பொன்னாடை.

சேலத்தார் நால்வர் வருகின்றார்கள். அவர்கள் சொன்னது :சேலத்துப் பகுதியில் விழாவுக்கென்று தொகை பெற்றுக் கொண்டவர் இரசீது தருவதாய்ச் சொல்லியும் தரவேயில்லை.

சிங்கப்பூரார் ஒருவர் வருகின்றார் அவர் சொன்னது : பன்முறை பத்தாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கின்றோம் சிங்கப்பூரினின்று! தொகை பெற்றுக் கொண்டதற்கு இரசீது அனுப்புவதில் சுணக்கம் காட்டுகின்றார்கள் குழுவினர்.

டி.என்.இராமன் வருகின்றார். அவர் சொன்னது: குயில் செய்யுள் வார இதழ் வெளியிடுவதற்கான முற்செலவுக்காக இரண்டாயிரம் ரூபாய் தனியே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுபோக மீதியைத்தான் உங்களுக்குப் பொற்கிழியாக அளிக்கப்படும்.

விழா நடந்தது. பொன்னாடை போர்த்தப்பட்டேன், பொற்கிழியை அண்ணாத்துரை கையால் அளிக்கப் பெற்றேன். அதை மிக விழிப்பாக அண்ணாத்துரை முயற்சியால் நிழற்படம் எடுக்கப்பெற்றேன்.

பொற்கிழி பையில் ஐயாயிரம் குறையக் காணப் பெற்றேன். கணக்குப் பின்னால் தருவதாகக் கேட்கப் பெற்றேன். பல விடங்களிலிருந்தும் இருபத்தையாயிரந்தான் சேர்ந்ததென்று கூறப்பெற்றேன். என் வீட்டுக்கு அனுப்பப் பெற்றேன்.

விழா நடந்த பின் அடுத்தவாரத்தில் அண்ணாத்துரை வெளியிடும் திராவிட நாட்டில் ஒரு குறிப்புக் காணப்பட்டது. பாரதிதாசன் பொன்னாடை போர்த்து விழாக்குழுவினர், விழா வரவு செலவுக் கணக்கையெல்லாம் பாரதிதாசன் அவர்களிடம் அனுப்பிவிட்டார்கள். இனிப் பாக்கித் தொகையை அனுப்ப வேண்டியவர்கள் நேரே பாரதிதாசன் அவர்கட்கே அனுப்பிவிடுக என்ற கருத்தமைந்திருந்தது.

அவ்வாறு எனக்குக் கணக்கு அனுப்பப்பட்டதா? இன்றுவரைக்கும் அனுப்பப்படவில்லை. அடுத்தடுத்து அப்போதே கேட்டும் அனுப்பவில்லை. கணக்கைக் கேட்டு வாங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டதால் கேட்டேன் கணக்குத்தரவில்லை. இன்றுவரைக்கும் (7-10-58) தரவில்லை. அண்ணாத்துரை தரவில்லை. கணக்குத் தரக்கூடாது என்பதற்காகத் தரவில்லை அண்ணாத்துரை!

அதன் தகவல் என்ன?

பாரதிதாசனை ஆசிரியராகக் கொண்டு குயில் கவிதை வார இதழ் வெளிவரும் என்ற மறைவான சுற்றறிக்கை பறந்தது, விற்பனையாளரை நோக்கி! ஆறாயிரம் ரூபாய் குயிலுக்கு முற்பணமாக அனுப்பியிருக்கிறார்கள் விற்பனையாளர்கள்.

என்னிடம் டி.என்.இராமன் வந்து குயிலில் வெளிவர வேண்டிய கவிதைகளையெல்லாம் வாங்கிக் கொண்டு, என் அச்சு நிலையத்தையும் சென்னையிலிருக்கட்டும் என்று தூக்கிக்கொண்டு போய்விட்டார். அப்போது அவர் சொன்னது என்னவென்றால் குயில் பற்றி நீங்கள் சென்னைக்கு வர வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம் என்பது.

சில நாட்களின்பின், குயில் வெளிவருநாள் ஆயிற்றே, அது பிழையில்லாமல் வெளிவரவேண்டுமே என்று கருதிச் சென்னை சென்றேன்.

திருத்தம் பார்க்க முதற்குயில் எனக்கு அனுப்பப்படுகிறது. அதன் முதற்பக்கத்தில் குயிலுக்கு உடையவர்கள் டி.என்.இராமன் என்று காணப்படுகின்றது. அவர்களின் உள் எண்ணத்தை
அறிந்தேன். அவர்களே சொன்னார்கள்: குயில் உம்முடையது அன்று. அச்சகம் உம்முடையது அன்று. குயில் எழுதுவதற்குத் திங்கள் ஊதியமாக 200 ரூபாய் உமக்குக் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. அதனோடு, நீர் எம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது.

நான் என்ன செய்தேன்?

நான், அந்தக் குயிலுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை,விற்பனையாளரிடம் வாங்கியுள்ள முற்பணத்திற்கு நான் பொறுப்பாளி அல்லேன். இனி நான் என்வாயிலாக வெளியிட இருக்கும் குயிலுக்கு ஆதரவு தருக என்று நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டு, என் குயிலையும் வெளியிட இருக்கையில் அதன் மேல் இஞ்செக்ஷன் உத்தரவுகோரி ஐகோர்ட்டில் என்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நானும் வழக்கறிஞரை வைத்து எதிர் வழக்கிட்டேன்.

(தொடரும்)

3. குயில் இதழ், குரல்– – 1, (14-10-58), இசை -20

தீர்ப்பாளர், இந்தக் குயில் எந்தப் பணத்தினின்று தோற்றுவிக்கப்பட்டது?என்று கேட்டார்.

அதற்கு டி.என்.ராமன் சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் சொன்னார் : இராமன் பணத்தினின்று என்று!

kuyil_bharatidasan_1என்சார்பில் வந்திருந்த வழக்கறிஞர் அதை மறுத்து, பாரதிதாசனுக்கு அளிக்கப்பட்ட தொகையினின்று இந்தக் குயில் தோற்றுவிக்கப்பட்டது என்று பதில் கூறினார்.

தீர்ப்பாளர் : அப்படியானால் நிதி தண்டிய – செலவு செய்த கணக்குக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே அதற்கு டி.என்.ராமனுடைய வழக்கறிஞர் ஆம்!ஆம்! காட்டச் சொல்லுங்கள் கணக்கை என்றார். என் வழக்கறிஞர் உறுதியாகச் சொல்கிறேன் கணக்குக் காட்டுவேன் என்றார்.

அடுத்த ஆய்வுமன்றில் நான் கணக்கைக் காட்ட வேண்டும். அண்ணாத்துரைக்கு ஆள் அனுப்பினேன். இதோ அதோ என்றார். அஞ்சல் எழுதினேன். இதோ அதோ! தஞ்சையில்
நாடகத்தின்போது நேரிற்கேட்டேன். இதோ அதோ!

என் குயிலைப் பறிக்கவும் என் அச்சகத்தைப் பறிக்கவும் முன் எண்ணத்தோடு செய்யப்படும் இந்த வேலைகள் அனைத்தும் அண்ணாத்துரையுடையதே என்று தெரிந்தும் நான் விடாப்பிடியாக அண்ணாத்துரையைக் கேட்டுப் பார்த்தேன். ஏன் எனில், விழாக்குழுவில் உள்ளவர்களுக்கு அஞ்சி அண்ணாத்துரை கணக்குகளை என்னிடம் கொடுக்கத்தானே வேண்டும்! ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?விழாக்குழுவினரை அழைத்து- கணக்கைப் பாரதிதாசனிடம் கொடுப்போமானால் நாம் எல்லோரும் சிறைக்குப் போக வேண்டும் என்றார்.

குழுவினர் நம்பினார்கள்! ஏன் அவர்களுக்குப் புரிகின்றது. வரவு வந்த பெருந்தொகை கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது.

கொள்ளையடித்தக் குற்றத்தை நம தலையில் கட்டிவிடும் ஆற்றல் அண்ணாத்துரைக்கு உண்டு என்று குழுவினர் உறுதியாக நம்பினார்கள்.

இன்றுவரைக்கும் அண்ணாத்துரை வரவு செலவுக் கணக்கைக் கொடுக்கவேயில்லை!

என் வழக்கு என்ன ஆயிற்று – கெடு தள்ளிக் கொண்டே போகிறது. டி.என்.ராமனின் நிலை கீழ்நோக்கிக் கொண்டே போகின்றது. வழக்கைக் கைவிட்டு விடுவதாக என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் வழக்கைக் கைவிட்டுவிட்டேன். அதன் பயனாகக் குயில் என்னிடமே வந்துவிட்டது. அது சென்னையிலேயே நடந்து கொண்டிருந்தது. அதன்பின் புதுவை வந்தது. அதன்பின் சென்னை அரசினர் அதற்குத் தடைபோட்டார்கள் நின்றது.

அந்தத் தடை நீங்கியது பின் இப்போது புதுவையில் தொடங்கப்பெற்று நடந்து வருகின்றது.

தோழர்கள் எனக்கு அனுப்பிய வினாக்களுக்கு ஒன்று தவிர – விடை சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

இன்னும் ஒன்றுக்குத்தான் பதில் சொல்லியாக வேண்டும்.

அந்தக் கேள்வி என்ன?

கருணாநிதி முதலியவர்கள் – கூட்டத்தில் பேசும்போது பாரதிதாசன் பாட்டுக்களைப் பாடுகின்றார்கள். அவ்வாறு பாடியபின், இது மாஜி கவிஞர் பாரதிதாசன் பாட்டு என்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன – என்பது.

இதற்கு அடுத்த குயிலில் பதில் தெரிவிக்கின்றேன்.

(தொடரும்)

kuyil_bharatidasan_24. குயில் இதழ், குரல்– – 1, (21-10-58), இசை -21

அண்ணாத்துரையா….. என்ற பகுதி கவிஞர் வெளியூர் செல்ல நேர்ந்ததன் காரணமாக இந்த இதழில் வரவில்லை. அடுத்த இதழில் வரும்.

5. குயில் இதழ், குரல்– – 1, (28-10-58), இசை -22

என் பாட்டைக் கூட்டத்தில் பாடி விடுவது! பாடிய பிறகு இது மாசிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னது என்று கூறுவது இதற்கு நான் பதில் கூறுகிறேன். இந்தக் கற்பனை அவர்கட்கு எங்கிருந்து கிடைத்திருக்கும் என்பதை நாம் ஊன்றி நோக்க வேண்டும்.

பொது மகளின் இல்லத்தில் இதுபோன்ற கருத்துக்கள் செயல்கள் கிடைக்கும்.

ஒரு தந்தை பணம் கொடுக்காத காரணத்தால் வருவதை நிறுத்திக் கொள்ளுகிறான்.அல்லது மறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் இறந்துவிட வேண்டும் என்பதில்லை.இன்னொரு தந்தை வந்துவிட்டபின் பையன் முன்னைய தந்தையை மாசித் தந்தை என்பான்.

என்னை மாசிக் கவிஞன் என்பவன் அத்தன்மையை மேற்கொண்டவனாயிருக்கலாம். அல்லது கலப்பில்லாத தே***ள் மகனாயிருக்கலாம். [#]

***********************

[#] – கண்ணியம் கருதி இந்த இணையதளத்தில்  *** பயன்படுத்தப் பட்டுள்ளது.  குயில் இதழில் அந்தச் சொல் அப்படியே அச்சில் வந்திருந்தது.

அண்ணாத்துரைக்கும் பாரதிதாசனுக்கும் அரசியல் ரீதியான முரண்பாடு எழுந்தபோது பாரதிதாசன் தீட்டியிருக்கும் இந்தக் கட்டுரைகள் கண்ணியம் குறைவான,மிக மிக மட்டரகமான, வக்கிரம் பிடித்த விமர்சனங்கள் ஆகும் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை. இதைப் படிக்கும் எவருக்கும் அது புரியும்.

அண்ணாத்துரை மீதும், பாரதிதாசனின் மீதும் மதிப்பும் மரியாதையையும் யாரேனும் கொண்டிருந்தால் அவர்கள் இதனைப் படித்து அதிர்ச்சியடையக் கூடும்.ஆனால் இவை தான் ‘பேரறிஞரின்’, ‘பாவேந்தரின்’ உண்மை முகங்கள்.

டி.என்.ராமன் இசை வேளாளர் சாதியைச் சார்ந்தவர். ஆகவே அண்ணாத்துரையும் டி.என்.ராமனையும் இணைத்து எழுதினார்.`மேளம் மேளத்தை ஆதரிக்க என்ன தடை?’என்று அண்ணாத்துரையின் சாதிப் பெயரை வைத்து இழிவு நோக்கில் எழுதியிருக்கும் பாரதிதாசன் சாதியை எதிர்த்தார் என்று சொல்வது நல்ல முரண்நகை.

திராவிட இயக்க கொள்கைகளையாகட்டும், தலைவர்களாகட்டும், தொண்டர்களாகட்டும். அவர்களைப் பற்றிக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பிரசார பிம்பங்களை உண்மைத் தகவல்களின் ஒளியில், மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

சாதி எதிர்ப்பு பற்றிக் கச்சைக் கட்டிப் பாடிய புரட்சி கவிஞரா இப்படி? என்று அதிர்ச்சியைக் காட்ட வேண்டாம். ஏன் என்றால் உள்ளம் முழுக்க அவர்களுக்கு பொய்மையும், போலித்தனமும், கபடமும், வக்கிரமும் தான் இருந்திருக்கிறது. அதோடு உள்ளம் முழுக்க அவர்களுக்கு சாதி இருக்கிறது, அதுதான் இப்படி வெளிவருகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்

கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில…

why-dmk-emerged1நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடுநிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்துச் சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளிநிற்கும் பார்வையாளர்கள் கூற்று. ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்துதான். ஆனால் தமிழ்நாட்டின் விவகாரமே வேறு. அதிலும் கடந்த ஐம்பது அறுபது வருட கால சமூகச் சித்திரம் மிகவும் மாறிய ஒன்று. மிகவும் மாறியது என்றால் தலைகீழாக மாறியது என்று கொள்ள வேண்டும். சுமார் எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன் கருணாநிதியின் 77வது பிறந்த நாளை ஒட்டி, அவரைப் பற்றி எழுத என்னைக் கேட்டார்கள். அக்கட்டுரையின் கடைசியில்

“…இன்றைய தமிழ் நாட்டின் சரித்திரத்தை உருவாக்கியவர்கள் என்று ராஜாஜி, ஈ.வே.ரா. காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகிய அறுவரைச் சொல்லவேண்டும். இந்த ஆறு சரித்திர நாயகர்களைப் பற்றிய நிர்தாக்ஷண்யமற்ற சரித்திரம் எழுதப்படவேண்டும். அது கட்சி சார்ந்தவர்களாலோ, அல்லது அதற்கு எதிர்முனையில் இருப்பவர்களாலோ எழுதப்படக் கூடாது…”

என்று எழுதியிருந்தேன். தமிழில் இதுகாறும் நேர்மையான, உண்மையான வரலாறுகள் எழுதப்பட வில்லை. எழுதப்படும் என்ற சாத்தியக் கூறுகள் கூட இப்போது காணப்படவில்லை.

இரண்டு நேர் எதிர் கோடிகளைச் சுட்டிக் காட்டினால் போதும். முதலில் சொல்லப்பட்ட ராஜாஜி, இது பற்றிக் கேட்டபோது தன் சுயசரிதையை எழுதுவதில் தனக்கு விருப்பமில்லை என்று மறுபேச்சுக்கு இடமில்லாமல் கூறியவர்.கடைசியாக வரும், நம்மிடையே ஜீவித்திருக்கும் இன்னமும் சரித்திர நாயகனாகவே வாழும் கருணாநிதியோ, தானே தன் நாயக வரலாற்றை தன்முனைப்போடேயே நிறையவே எழுதி வருகிறார். வரலாறு காணாத எழுத்து பிரவாஹம் அது என்று அவருக்கு மிகவும் பிடித்த வர்ணனையிலேயே தான் அதைக் குறிப்பிட வேண்டும். காலம் சொல்லிக்கொள்ளட்டும் என்று ஒருவர் நிராகரிக்க, மற்றவர் காலம் என்ன சொல்லவேண்டும் என்னும் தன் நிர்ணயத்தை எழுதி வருகிறார்.  தமிழ்ச் சமூகம் இரண்டு எதிர் எதிர் முனைகளில் நின்று ஒரு முனையைச் சேர்ந்தவர் மற்றவரைச் சாடுவதும் அல்லது ஸ்தோத்திர மாலை பாடுவதுமாகப் பிரிந்து கிடக்கிறது.

ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

1949-ல் தமிழக அரசியலில் எரிமலையின் கொந்தளிப்பு போன்ற ஒரு நிகழ்வு. ஒரே குடைக்கீழ், குருவும் சிஷ்யனும் போல, தந்தையும் மகனும் போல நாம் கண்ட பகுத்தறிப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் அறியப்பட்ட ஈ.வே.ராவும், பேரறிஞர் என்று அறியப்பட்ட அண்ணாதுரையும் திடீரெனப் பிரிந்து எதிர் எதிர் முனைகளாயினர். இது எப்படி நிகழ்ந்தது, ஏன் நிகழ்ந்தது, என்பது நமக்குச் சொல்லப்பட்டது. நமக்குச் சொல்லப்படுவதுதான் நிகழ்ந்ததா என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். ஆனால் தமிழ்ச் சமூகத்தில், தமிழக அரசியலில் சொல்லப்படுவது சரித்திரமாக எழுதப்பட்டாலும், அது உண்மையா என்பதை அறிவதற்கான சுதந்திரச் சூழல் இல்லாமல் போய்விட்டது.

periyar_with_rajajiஒருநாள் திடீரென்று பெரியார், திருவண்ணாமலைக்கு வந்த அன்றைய கவர்னர் ஜெனரலும் தன் நெடுங்கால அரசியல் எதிரியும் அதற்கும் நீண்ட நெடுங்காலமாக தன் சொந்த நண்பர் என்றும் சொல்லிக்கொள்ளும் ராஜாஜியை, ரகசியமாக, திருவண்ணாமலைக்கே சென்று சந்தித்துப் பேச, அண்ணா அது பற்றிப் பொது மேடையில் கேட்க, “அது என் சொந்த விஷயம்,” என்று சொல்லி பதிலைத் தவிர்த்துவிடுகிறார். 72 வயதாகும் பெரியார் தன் உதவிக்காக சில வருஷங்களாகத் தன்னுடன் இருந்துவரும் 26 வயது மணியம்மையை பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து அது நடந்தும் விடுகிறது. வாழ்நாள் முழுதும் பெண்ணுரிமை பற்றியும் திருமணம் என்ற சடங்கை எதிர்த்தும் பிரசாரம் செய்த பெரியார் இப்போது தன் முதுமையில் இளம் பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டது கழகத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்புகிறது. அதற்குப் பெரியார் சமாதானம் சொல்கிறார்– “எனக்கோ வயதாகிறது. முன்னைப் போல என்னால் கழக வேலைகளைக் கவனிக்க முடியவில்லை. எனக்குப் பின் பொறுப்பேற்க ஒரு வாரிசை ஏற்படுத்தி என் பொறுப்புக்களை கவனிக்கவே இந்த ஏற்பாடு. சில வருடங்களாக என்னுடன் பழகி என் நம்பிக்கைக்குப் பாத்திரமான, இயக்க நலனில் உண்மையான பற்றும் கவலையும் கொண்ட மணியம்மையை வாரிசாக்கிக்கொண்டு இயக்க நலனுக்கும் பொருள் பாதுகாப்புக்குமான ஒரு டிரஸ்ட் ஏற்பாடு இது,” என்று விளக்கம் தருகிறார்.

periyar_and_maniammaiஜூலை 9, 1949 அன்று ஈ.வே.ரா.வுக்கும் மணியம்மைக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதன் எதிர்வினையாக, திராவிடர் கழகத்திலிருந்து அநேகத் தலைவர்கள் அண்ணாதுரையின் தலைமையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகின்றனர். இதுநாள் வரை அவருடைய தலைமையில் கழகத்தை வளர்த்த, அவருக்கு அடுத்த படியில் இருந்த தலைவர்கள் யாரையும் ஈ.வே.ரா நம்பவில்லை. சில வருடங்கள் முன்னதாக வந்து தலைவருக்கு அன்றாட காரியங்களில் உதவியாக இருக்க வந்த ஒரு இளம்வயதுப் பெண்தான், அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும், இயக்கத்திற்கும் கழகச் சொத்துகளுக்கும் வாரிசாக இருக்கத் தகுதியானவர் என்றும் தலைவர் நம்புகிறார். அதை வெளிப்பட அறிக்கையாகவும் உலகம் அறியத் தருகிறார். தலைவரின் இத்தகைய நடவடிக்கை, நம்பிக்கையின்மை, கழகத்தில் பெரும்பாலோரை கழகத்திலிருந்து வெளியேற வைத்துவிடுகிறது. அவ்வருட செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம், அன்பழகன், சி.பி.சிற்றரசு போன்ற முன்னணித் தலைவர்கள் இருந்தனர்.

karunaanidhi-and..(Photo: thanks to mohanram)ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில் அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதை வசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாள்கள் அவை. தன் குடும்பத்தோடு சேலத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா ‘உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்” என்று சொன்னதாகவும், மறுநாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி ’நெஞ்சுக்கு நீதி’யில் எழுதியிருக்கிறார். அக்காலங்களில் அவர் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை. நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்றோர் வரிசையில் அவரும் ஒரு முன்னணித் தலைவராக இருக்கவில்லை. இந்த வரிசையில் எங்கோ ஒரு கோடியில் இருந்தவர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அரசு, கட்சி இரண்டையுமே தன் தலைமைக்குக் கீழ் கொணர்ந்து இப்போது நாற்பது வருடங்களாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி, அத்தலைமையில் நீடிக்கிறார் என்றால், தன்முன் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னை முன்னால் நிறுத்திக்கொண்டது அவரது அசாத்திய சாமர்த்தியத்துக்கும், திட்டமிட்டுச் செயல்படும் திறமைக்கும், கையாண்ட யுக்திகள் நிறைந்த மூளைக்குமான அடையாளங்கள்.

annadurai2திராவிடர் கழகத்தை விட்டு நீங்கி திராவிட முன்னேற்றக் கழகம் என்று புதுக் கட்சி தொடங்கிய போது, பெரியாரைத் தவிர, பேச்சாற்றலும், செயல் ஊக்கமும் கொண்டவர் என வேறு யாரும் பெரியாரிடம் இல்லை. திராவிடக் கழகம் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்ததும், கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் திராவிடக் கழகம் பரவி மாணவர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரக் காரணமாக இருந்தது அண்ணாதான். ‘பாப்பான் ஒழிக’ என்ற ஒற்றைக் கோஷத்துடன் பாமர அளவிலேயே அர்த்தப்படுத்தப் பட்டிருந்த திராவிடக் கழகத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்று பெயர்பெற்றிருந்த நீதிக்கட்சியிலிருந்து விடுவித்து, படித்தோர் மத்தியிலும் ‘பாப்பான் ஒழிக’ கோஷத்துக்கு ஒரு வரலாற்று, தத்துவார்த்த பின்னணிகளும் கூட உண்டு என்ற தோற்றத்தையும் கொடுத்தது அண்ணாதான். அதாவது, பெரியாரின் வெற்றுக் கோஷத்துக்கு தமிழக அரசியலில் விலை போகக்கூடிய, மக்களைக் கவரும் packaging செய்து கொடுத்தது அண்ணா. வெகு சீக்கிரத்திலே திராவிடக் கழகத்தை வெகுஜனங்களிடையே ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையும் தந்தது அவர்தான். இப்போது அத்தனை சாதக அம்சங்களும் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே போய்ச்சேரும். அத்தோடு பெரியாரது கூடாரமே காலியானது. கோபம் வராதா பெரியாருக்கு?

கோபம் வந்தால் ஈ.வே.ராவிடமிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விழும் என்பது சொல்ல முடியாது. ஆத்திரத்தில் பேசுகிறார் என்று சமாதானம் கொள்ளலாமே தவிர பகுத்தறிவின், நியாயத்தின் பாற்பட்டதாக, இராது. புதிய கட்சி தொடங்கியவர்களையெல்லாம் ‘கண்ணீர்த் துளிகள்’ என்று கேலி பேசினார். அது பல ஆண்டு காலம் தொடர்ந்தது. அநேகமாக, அண்ணா முதலமைச்சராகப் பதவி ஏற்று, தன் தலைவர் ஈ.வே.ராவிடம் ஆசி பெறச்சென்ற கணம் வரை. பிறகு தான் ‘கண்ணீர்த்துளிகள்’ என்ற கேலி நின்றது. பதவியில் இருக்கும் யாரையும் ஈ.வே.ரா. பகைத்துக்கொள்ள மாட்டார். திமுக காங்கிரஸை எதிர்க் கட்சியாகத் தாக்கிய போது, ஈ.வே.ரா. காமராஜ் ஆட்சியைப் புகழ்ந்தார். ‘பச்சைத் தமிழர்’ என்றார் காமராஜை. ஏனெனில், காமராஜ் அமைச்சரவில் ஒரே ஒரு பாப்பான் தான் அமைச்சர். ஈ.வே.ராவின் அரசியல் தர்க்கத்திற்கு வேண்டியது அவ்வளவேதான். பல சமயங்களில் காங்கிரஸ் சார்பில் நின்ற ‘பாப்பானை’ ஆதரித்துப் பிரசாரம் செய்திருக்கிறார். இதே ஈ.வே.ரா. தான், “ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அல்ல. துக்க தினம்” என்றார். “வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். திராவிட மக்கள் தொடர்ந்து அடிமைகளாகத்தான் இருப்போம்,” என்றார். ஆனால் அண்ணா இது சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.

வெளித்தெரிந்து இதுதான் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையேயான முதல் கருத்து பேதம். வெளித்தெரிந்தது என்பது மட்டுமல்லாமல், திராவிடக் கழகமும் சரி, திமுகவும் சரி, அல்லது இன்னும் இதன் மற்ற கிளைக் கட்சிகளும் சரி எல்லோரும் இக்கருத்து பேதம் இருந்ததை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அண்ணாவுக்கும் அவர் கடைசிவரை தனக்கும் தன் கட்சிக்கும் தலைவராக மதித்த ஈ.வே.ரா.வுக்கும் இடையேயான வேறுபாடுகள் கருத்தளவிலும் சரி, மனித உறவுகளிலும் சரி, குண முரண்பாடுகளும் நிறைய இருந்தன. அது அநேகமாக, அண்ணா பெரியாரின் அழைப்பின் பேரில் கட்சியில் சேர்ந்த வெகு சீக்கிரத்திலேயே இருவருக்கும் அவரவர் சுபாவங்களும் சில முரண்பாடான போக்குகளும் ஒத்துவராமை வெளிப்பட்டு விட்டது. ஆனாலும் அண்ணா தொடர்ந்து 1949 வரை இருந்ததற்கும், பின்னர் பிரிந்து வேறு கட்சி ஆரம்பித்த பின்னரும் அதன் தலைவர் பெரியார்தான் என்றும் தான் கட்சியின் செயலாளர்தான் என்றும் பிரகடனம் செய்தது மட்டுமல்லாமல், கடைசி வரை அவ்வாக்கைக் காப்பாற்றவும் செய்தார் என்றால் அதற்கு அண்ணாவின் இயல்பான தாராள மனதை, கனிவை, முதியவருக்கு மரியாதை தரும் பண்பை, மன்னித்துவிடும் சுபாவத்தை யெல்லாம்தான் காரணங்களாகக் காண வேண்டும்.

இது வரை சொன்னவை அத்தனையும் அச்சில் வெளிவந்தவை; எல்லோருக்கும் தெரிந்தவை என்ற போதிலும் இன்று, பெரியாரின் போக்கை ஏற்கமுடியாது பிரிந்துவந்த திமுக-விலும் சரி, அதனிலிருந்து பிரிந்த அதிமுக-விலும் சரி, பின்னர் கிளைவிட்டுத் துளிர்த்துள்ள இன்னும் பல திக, திமுக, கிளைகளிலும் சரி, பெரியாரும் அண்ணாவும்தான் வணங்கப்படும் தெய்வங்கள். அவரவர் நினைவு தினங்களில் மாலை சார்த்தி வணங்கி நின்று போட்டோ பிடித்துக்கொள்ளும் சடங்குகளுக்கு உரியவர்கள். எல்லோருக்கும் ஈ.வே.ரா தந்தை பெரியார் தான். பகுத்தறிவுப் பகலவன் தான். அண்ணா பேரறிஞர் தான். இருவர் காட்டிய பாதையில் தான் எல்லா கழகங்களும் செல்வனவாகச் சொல்லிக்கொள்கின்றன.

ஆனால் அவ்வளவோடு சரி. மற்றபடி, பெரியாரின் இன்றைய திராவிடர் கழகமும், திமுகவும் அதிமுகவும் பெரியார், அண்ணா பற்றிய கடந்த கால சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பெரும் தணிக்கைக்குட்பட்டதாகவே இருக்கும். அந்தந்தக் கால கட்சி சார்பில்லாத செய்திப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை, ஏன் விடுதலை, திராவிட நாடு, முரசொலி பத்திரிகைகளில் வந்த செய்திகளைக் கூட அவர்கள் இருட்டடிப்பு செய்யவே விரும்புவார்கள். அது பற்றி அவர்கள் பேசமாட்டார்கள் என்பது ஒருபுறம் இருக்க, இத்தகவல்களை அக்கால கட்டத்தில் அறிந்தவர்களோ, பத்திரிகைகளிலிருந்து தகவல்கள் திரட்டியோ யாரும் எழுதக் கூடுமானால், அவர்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுவார்கள். எம்மாதிரியான எதிர்வினைகளை அவர்கள் சந்திக்கக் கூடும் என்பது சொல்லமுடியாது.

முதலில் அண்ணாவே இப்போது உயிருடன் இருந்திருந்து தம் அந்நாளைய அனுபவங்களை எழுதக் கூடுமானால், அவர் கூட தன் தலைவர் பெரியாரைப் பற்றிய உண்மை விவரங்களை எழுதமாட்டார்தான். காரணங்கள் பல. அண்ணாவின் சுபாவம் அது. சுபாவத்தில் சாது. தலைவரிடம் கொண்ட மதிப்பும் மரியாதையும். தனக்கு இழைக்கப்படும் தீங்குகளை, அவமானங்களை மறக்கும் மன்னிக்கும் சுபாவம். ஆக, அண்ணா எழுதாமல் இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லா திராவிட வாரிசுக் கழகங்களும் கூட இதில் சாதிக்கும் மௌனம் பற்றி என்ன சொல்வது? They don’t want to wash their party’s dirty linen in pubic. நியாயந்தானே. அவர்களுக்கு தந்தை பெரியார் அப்பழுக்கற்ற பகுத்தறிவுப் பகலவன். அவர்கள் அவர் பற்றி மக்களுக்குக் கொடுத்துள்ள சித்திரத்தில் சுருக்கங்களோ, கறுப்புக் கோடுகளோ இருக்கக் கூடாது. அப்படியும் இது சிக்கல்கள் பல நிறைந்த காரியம் தான். எப்படி?

தந்தை பெரியாரைப் பற்றி தீட்டி வைத்துக்கொண்டுள்ள உருவத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்து நடந்த உண்மைகளை மறைத்தால், அது அவர் அண்ணாவைக் கேவலமாக நடத்தியதை மறைத்து அண்ணாவுக்கு துரோகம் இழைத்ததாக ஆகும். பெரியாரிடம் அண்ணா பட்ட அவமானங்களைப் பற்றி உண்மையை எழுதினால் அது பெரியாரைப் பற்றிய கற்பனைச் சித்திரத்தை கோரமாக்கியதாகும். பெரியார் வழியில் அண்ணா வழியில் ஒருசேர நடப்பவர்களுக்கு இது இக்கட்டான நிலைதான். இரண்டு பேரும் மரித்தாயிற்று. இனி இருவரது கற்பனையான உருவச் சித்திரத்தைக் காப்பாற்றி கட்சியை வளர்ப்பதுதான் செய்யக் கூடிய காரியம். அதைச் செய்து வருகிறார்கள் எல்லா திராவிட கட்சியினரும். இவர்கள் எல்லாருமே உண்மைக்கும் உண்மையாகவிருக்கவில்லை. அவர்கள் துதித்துத் போற்றி வணங்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவருக்குமே கூட உண்மையாக விருக்கவில்லை.

ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரண்களைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் வேடிக்கையான குரு சிஷ்யர்கள்தான். அதுவே இருவரையும் மிக சுவாரஸ்யமான மனிதர்களாக்குகிறது. இந்த முரண்கள் ஒரு கட்டம் வரை சகித்துக்கொள்ளப்பட்டு, அதன் உச்சத்தை எட்டியபோது பிளவு தவிர்க்க முடியாததாகியது. அக்கட்டத்திலும் அண்ணா தவிர்க்க முயன்றவர்தான். அவரது விஸ்வாசமும் சாத்வீகமும் அத்தகையதுதான். ஆனால் அதையும் தன் முரட்டு சுபாவத்தால் முறித்துக் கொண்டவர் ஈ.வே.ரா. இவ்வளவையும் மீறி, இருவருமே தமிழ்நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள். இவர்களது குணநலன்களை, கொள்கைகளை, சரித்திரத்தை, எதையும் மறைக்காது எழுதுவதனால் இவர்களது வரலாற்றுப் பங்களிப்பு எதுவும் குறைபடாது. அவரவரது குணநலன்களே அவர்கள் படைத்த வரலாற்றின் குணநலன்களையும் கட்டமைத்தது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்யும்.

இவையெல்லாம் அதிகாரபூர்வமாக இக்கட்சியினர் வாயிலாக வெளிவருவதற்கில்லை. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்து இத்தலைவர்களை நெருங்கி அறிந்தவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் கொஞ்சம் இச் சொல்லப்படாத, இவர்கள் மறைக்க விரும்பும் பல தகவல்களை அறியலாம். சில பெயர்கள் உடன் ஞாபகத்துக்கு வருகின்றன. கோவை அய்யமுத்து, பி. ராமமூர்த்தி, திரு.வி.க., சாமி சிதம்பரனார், மா.இளையபெருமாள் போன்றோர் தம் அனுபவங்களை எழுதும் சந்தர்ப்பத்தில் பல தகவல்களைச் சொல்லிச் செல்கின்றனர். பழைய விடுதலை, திராவிடநாடு இதழ்களிலிருந்தும் இன்று கட்சியினரும், தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கும் உண்மைகள் பெறப்படும். ஏன், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியிலிருந்தும் பெறலாம். உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கருணாநிதி விடுதலை பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் காலை ஈ.வெ.ரா, “எங்கே கருணாநிதி?” என்று கேட்க, “கருணாநிதி குளிக்கப் போயிருக்கிறார்,” என்று பதில் வரவே, கோபமுற்ற ஈ.வே.ரா. “அவன் இங்கே வேலை செய்யவந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?” என்று கேட்கிறார். ஒவ்வொரு தடவையும் கட்சி வேலைக்கே அவரிடமிருந்து காசுபெறப் படும்பாடு பெரும் பாடாக விருந்ததையும் கருணாநிதி பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீதப் பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அண்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரிய வந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கி கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவை கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வரத் தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், “சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்,” என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அண்ணா.

இதுதான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அண்ணாவின் இளைய தலைமுறை திராவிடக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.

அதோடு கழகத்தில் தன் விருப்பு வெறுப்புகளையே கொள்கைகளாகவும் நடைமுறையாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவுதான் தனக்குக் கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந்தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசைபாடியும் உடல்நிலை கெட்டு மரணப் படுக்கையில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதி தாசனுக்கும் தான். தனக்கு நிதி திரட்டித் தராமல், “பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்” திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரிசாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.

அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம்தான் திராவிட கழகத்தவர் கருப்புச் சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? “வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்” அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை ‘குள்ள நரி” என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையேயான உறவு எத்தகையது?

raja-annamalaichettiarநீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாயச் சடங்குகள், புரோகிதருக்குப் பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்குக் கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார்; ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அண்ணாவோ, “நான் எழுதியது எழுதியதுதான். இனி அதை மாற்ற இயலாது” என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.

இது போலத் தான் சேலம் மகாநாட்டில் திராவிடர்க் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப் பின்தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சிதான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னதுபோல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலைமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,

இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்பச் சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்பச் சொத்து ஈ.வி.கே.சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப்படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூகச் சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம்தான்.

ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும்தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தனமான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியாரை தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியமாகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் ‘என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை’ என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இதுதான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்தச் சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத்தான் செய்கின்றனர்.

கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா ‘கண்ணீர்த் துளிகள்’ தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், ‘கண்ணீர்த் துளிகள்’ என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாகத் தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்ததுதான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியினரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப்போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசைப் பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:”திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்.” அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்யச் சதிசெய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும் ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதிமன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.

ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ்மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பழைய கதைகளை எந்த திராவிடக் குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்குத் தெரியும். “எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்.” என்றுதான் பதில்கள் வரும்.

40-களில் 50-களில் விவரம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு நினைவில் தங்கியிருக்குமோ அவ்வளவே வாய்மொழியில் வரச் சாத்தியம் உண்டு. அவர்களே இச்சரித்திரத்தை பதிவு செய்யக் கூடும். இவையெல்லாம் அதிகமாக பரவலாக வெளித்தெரியாத, மணவை ரெ.திருமலைசாமி நகர தூதன் இதழில் எழுதியது, எஸ் கருணானந்தத்தின் அண்ணா நினைவுகள், அரங்கண்ணலின் அண்ணா நினைவுகள், அண்ணா பேரவை இணைய தளம், டி.ம். பார்த்த சாரதியின் தி.மு.க வரலாறு. பி.ராமமூர்த்தி திராவிட கட்சிகள் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று, போன்றவற்றிலிருந்து உதிரி உதிரியாகக் கிடைப்பவை. விடுதலை, திராவிட நாடு இதழ்களிலிருந்தும் கூடத்தான். தேடி அலைபவர்கள் யாரிருக்கக் கூடும்? மலர் மன்னன் எழுதியிருக்கிறார், இச்சம்பவங்களை மையமாகக் கொண்டு. மற்றவர்கள் தம் நினைவுகளை எழுதும் சந்தர்ப்பத்தில் இவை பற்றியும் குறிப்புகள் வரும். ஆனால் மையம் இதுவல்ல.

மலர் மன்னன், மற்றவர்கள் இதுகாறும் பயணிக்காத பிரதேசத்தில் கால் வைத்திருக்கிறார். அவர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். அண்ணாவைப் பற்றி, நல்ல அபிப்ராயங்களும் மதிப்பும் கொண்டவர். அந்த நட்பும் நல்லெண்ணமும், அந்நாட்களில் அண்ணா, மூன்று மாத கால இடைவெளியில் முற்றிலும் நேர்மாறான நிலைபாட்டை வெளியிடுவதைக் குறிக்கத் தவறவில்லை. அண்ணா கனிவும் பாசமும் நிறைந்தவர். விரோதிகளுடன் கூட சிநேகம் கொள்ளும் மனத்தவர். அவரது குணத்திற்கும், பார்வைகளுக்கும், முற்றிலும் எதிரிடையான குணங்கள் கொண்ட வயதில் மூத்த ஈ.வே.ரா-வுடன் இவ்வளவு காலமாக, எல்லா அவமதிப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்ததன் காரணமென்ன என்பது ஒரு புதிர். அதே போல, கடுமையான விருப்பு வெறுப்புகளையே கொள்கைகளாகப் பிரசாரம் செய்துவந்த, பேச்சில் முரட்டுத் தனமும் நயமின்மையும் கொண்ட தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் தன்னைச் சந்திக்கும் எந்த சாதி மனிதரிடமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும் கூட கனிவும் சாத்வீகமும் அளவுக்கு மீறிய மரியாதையும் காட்டும் மனிதராக இருந்ததன் புதிர். இத்தனிப்பட்ட நாகரிகமும் மேடையில் காணும் கொச்சையும் குரோதமும் ஒரே மனிதரிடத்தில் குடி கொண்டிருப்பதும் ஒரு விந்தை தான்.

தமிழ்தான் எங்கள் உயிர் மூச்சு என்று கோஷமிடும் இயக்கத்தின் தந்தை தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பறைசாற்றியவர். பாப்பானை ஒழிப்பது தவிர வேறு சமூக சிந்தனை அற்றவர் சாதியை ஒழிக்கக் கிளம்பிய புரட்சிச் சிந்தனையாளர்.  சமூகத்தில் இழிதொழிலாக இருக்கின்ற இந்தத் தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வருவதில்லை. சமூகச் சீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன், பெரியார் அவர்களே கேட்டார்- “இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒரு மாற்றுக் கூறு என்று கேட்டார்.” (சித்திரை நெருப்பு – மா. இளைய பெருமாள் – பக்கம் 41). இதுதான் பெரியார். அவர் சாதியை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுப் பகலவன். தந்தை பெரியார். இந்தப் பெருமைகள் எல்லாம் இல்லாத காந்தி என்ன செய்தார், என்ன கற்பித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும், தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றியவர்கள் பெரியாரும் அண்ணாவும், இன்னும் சிலரும். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 160: விலை ரூ.80

விஜயகாந்த் சொன்னது சரிதானா?

dmk1967 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சி.என். அண்ணாதுரை முதலைச்சரானார். சில மாதங்களுக்குப் பிறகு மாதச் சம்பளமாக ரூ. 500.00 ஐப் பெற்றுக்கொண்டார். ஆனால் அதை அவருடைய வங்கிக் கணக்கில் சேர்க்க முடியவில்லை.

அண்ணாதுரைக்கு வங்கிக் கணக்கே இல்லை என்பது அப்போதுதான் தெரியவந்தது. உடனடியாக வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு அந்தக் காசோலை வரவு வைக்கப்பட்டது.

நாற்பது ஆண்டுகாலமாக தமிழக அரசியலைப் பார்த்து வருபவர்களுக்கு இது ஒரு அதிசயமாகத்தான் தெரியும். அதிசயம் ஆனால் இது உண்மை.

திராவிட இயக்கங்களைப் பற்றித் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் என் பார்வையில் கூட அண்ணாதுரை முதலமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகப் புகார் இல்லை.

முதலமைச்சர் அண்ணாதுரைக்கு அரசியல் நெறிகளில் பிடிப்பு இருந்தது; பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தது,, வெகுஜனங்களின் நலவாழ்வில் அக்கறை இருந்தது என்பதும் உண்மைதான்.

இத்தனை குணங்களையும் அடக்கி வைத்துக் கொண்டு அண்ணாதுரை ஈவெராவிடம் அடங்கி இருந்தாரே அது ஏன்? என்பது சுவாரசியமான கேள்வி.

மாறுபட்ட குணங்களைக் கொண்ட இருவர் எப்படி இணைந்திருந்தார்கள் என்பதையும் கருப்புச் சட்டையில் தொடங்கி, சுதந்திர தினத்தில் வளர்ந்து ஈவெராவின் திருமணம் என்ற மூன்றாவது காட்சியோடு உறவு முடிந்துவிட்டதையும் கற்பனை கலப்பில்லாமல் சொல்லி இருக்கிறார் மலர்மன்னன்.

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் கடவுள் சிலை உடைப்பு, மதநூல்கள் எரிப்பு என்று நீண்ட கால ஆர்ப்பாட்டம் செய்தவர் ஈவெரா. வெளிநாட்டுக்காரனுக்கு அடிமையாக இருப்பதை பெருமை என்ற ரீதியில் பேசியவர் அவர். கட்சிக்காரனை அடிமையாக வைத்திருப்பது இன்னொரு பெருமை.

ஆனால் இந்தத் தமிழ்நாட்டில் ஈவெராவுக்கு ஒரு ஒளிவட்டம் தரப்பட்டிருக்கிறது அவரது புனித பிம்பம் அரசாலும், அரசியல் கட்சிகளாலும், கல்வி நிலயங்களாலும், மீடியாக்களாலும், தேசவிரோதிகளாலும் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.

இந்த பிம்பத்திற்குத் திரிவைத்து அதைப் பற்ற வைத்திருக்கிறார் மலர்மன்னன்.

காணக்கிடைக்காத காட்சி இது; நேர்மையான முயற்சி இது. காலச்சுவடு, ஜனவரி 2009 இதழில் அண்ணாதுரை குறித்து அவர் எழுதிய கட்டுரையின் விரிவான வடிவமே இந்தப் புத்தகம்.

periyaar_aa1
பெட்டிச் சாவியை அண்ணாதுரையிடம் தருகிறேன் என்று மாநாட்டு மேடையில் முழக்கமிட்ட ஈவெரா பிறகு ஒரு காலகட்டத்தில் ‘என்னிடம் வேலைக்கு வந்தபோது இவர் எம்.ஏ படித்ததாகக் கூறித்தான் சேர்ந்தார். ஆனால் இப்போது எனக்கு சந்தேகம் வருகிறது. இவரது எம்.ஏ. சர்ட்டிஃபிகேட்டைப் பார்க்கவேண்டும்’ என்று வெறுப்பை அள்ளிக்கொட்டினாரே, அது ஏன்?

‘ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு இருக்க வேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை’ என்று பழத்தில் ஊசியை பக்குவமாக ஏற்றினாரே அண்ணாதுரை அது எதற்காக?

‘வெள்ளை சட்டை அணியும் குள்ள நரி’ என்று அண்ணாதுரையை ஈவெரா கண்டித்தாரே, அதற்குப் பின்னனி என்ன?

‘ஆகஸ்டு 15ந் தேதி, திராவிடருக்கும் திருநாள்தான், துக்கநாள் இல்லை’ என்று அண்ணாதுரை அறிவித்தாரே அதன் விளைவு என்ன?

என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரே வழி புத்தகத்தை வாங்கிப் படிப்பதுதான்.

இருந்தாலும் தமிழ் ஹிந்து வாசகர்களுக்காக ஒரு தகவலை மட்டும் கொடுக்கிறேன்.

‘திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபோது மு. கருணாநிதிக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்பு கூறினார்.

இதைத் தொடர்ந்து விஜயகாந்த் மீது திமுக தரப்பில் அர்ச்சனை நடத்தப்பட்டது.

விஜயகாந்த் சொன்னது சரிதானா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மலர்மன்னனின் புத்தகம் உதவக்கூடும்.

திமுக உருவானது ஏன்?
மலர்மன்னன்
கிழக்கு பதிப்பகம், சென்னை.

ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 14: சுயமரியாதைத் திருமணத்தை மறந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்!

periyar_and_maniammai_2ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய இரண்டாவது திருமணம் 09-07-1949 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26.

மணியம்மையை விட 46 வயது அதிகம் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு. இந்த இரண்டாவது திருமணம் நடக்கும்முன் ஈ.வே. ராமசாமி நாயக்கர், திருமணங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் தெரியுமா?

வயது பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி ஈ.வே.ரா!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

”மணமக்கள் விஷயத்தில் போதிய வயது முதலிய பொருத்தமில்லாததும், பெண்களின் சம்மதமோ அல்லது ஆணின் சம்மதமோ இல்லாமல் பெற்றோர் தீர்மானம் செய்துவிட்டார்களாதலால் கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் என்கின்ற நிர்பந்த முறையில் நடப்பது சுயமரியாதையற்ற மணங்கள் என்றே சொல்லலாம்”
(குடியரசு 03-06-1928)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

பெரியாரின் திருமணம் கட்சிப் பெருமையின் மீது வீசப்பட்டannadurai_and_periyar ஈட்டி. இயக்கத்தின் மாண்பு, அதன் தலைவரின் தகாதச் செயலால் தரைமட்டமாகிவிடும். ‘உரத்த குரல் எடுத்து ஊரெல்லாம் சுற்றினாலும்’ தலைவர் போக்கால் ஏற்பட்ட கண்ணியக் குறைவைக் காப்பாற்றிவிட முடியாது. போற்றிப் பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டுபோய்விட்டுவிட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத் துளிகள் அவரது ”சொந்த” வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது; அது மாறும்வரை கழகப் பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழகங்களும், தோழர்களும், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர்த்துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர்.
(திராவிட நாடு – 21-08-1949)

வயதுப் பொருத்தமில்லாத திருமணத்தைப் பற்றி அண்ணாத்துரை!

அதுமட்டுமல்ல 1940-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பத்திரிகையான விடுதலையில் அண்ணாத்துரை எழுதிய ஒரு தலையங்கத்தைப் படித்துப் பாருங்கள்.

“தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்புக் கொடுத்து அண்ணாதுரை எழுதுகிறார் :-

”தொந்தி சரிய மயிரே வெளிர நிறை தந்தமனைய உடலே” படைத்த 72 வயதான ஒரு பார்ப்பனக் கிழவர், ”துள்ளுமத வேட்கைக் கணையாலே” தாக்கப்பட்டு கலியாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.

வயது 72! ஏற்கெனவே மணமாகிப் பெண்டைப் பிணமாகக் கண்டவர். பிள்ளைக்குட்டியும் பேரன் பேத்தியும் பெற்றவர். இந்தப் பார்ப்பனக் கிழவர். ஆயினுமென்ன? இருண்ட இந்தியாவில், எத்தனை முறை வேண்டுமானாலுந்தான் ஆண்மகன் கலியாணம் செய்து கொள்ளலாமே!

பெண்தானே, பருவ மங்கையாயினும் பட்டாடை உடுத்திக் கொண்டு பல்லாங்குழி ஆடி விளையாடும் சின்னஞ்சிறு சிறுமியாயினம், மணமாகிப் பின்னர் கணவன் பிணமானால் விதவையாகிவிடவேண்டும்.

இளமை இருக்கலாம். ஆனால் இன்பவாழ்வுக்கு அவள் அனுமதி பெற அந்தக் கூட்டம் அனுமதிப்பதில்லை. அவளது விழி, உலகில் உள்ள வனப்பான வாழ்க்கைச் சித்திரங்கள் மீது பாயலாம்.

ஆனால் என்ன பயன்? விம்மி விம்மி வாழலாம் விதவைக்கோலத்துடன். இல்லையேல் விபச்சாரியாகலாம். மறுமணத்துக்கு மார்க்கம் மலர் தூவியதாக இல்லை. கல்லும் மண்ணும் முள்ளும், குருட்டுக் கொள்கையினரின் முரட்டுப் போக்கும், சாத்திரமெனும் சேறும் நிரம்பியதாகவன்றோ இருக்கிறது.

அவள் பதினெட்டு ஆண்டுள்ள பாவையாக இருக்கலாம். மலர்ந்த மலராக இருக்கலாம். வாடை சுற்றுப்பக்கம் எங்கும் வீசலாம். அவளது தகப்பனார் மூன்றாம் மனைவியுடன் கொஞ்சிக் குலாவும் காட்சி அவளது கண்களில் படலாம்.

ஆனால் பூவிழந்த பூவை புத்தி கெட்டவர்களின் போக்கிரித்தனமான பொறியாகிய வைதிகத்தால் வாட்டப்பட்டு, நீலநிற வானத்திலே நின்றுலவும் நிலவைக்கண்டும், பாதி இராத்திரி வேளையிலே பலப்பல எண்ணியும், பாழான வாழ்வு வாழ வேண்டும். இல்லையேல் தொட்டிலில் கிடத்திச் சீராட்டிப் பாலூட்டி வளர்க்க வேண்டிய குழந்தையை, பாழும் கிணற்றில், கழுத்தை நெரித்து வீசவேண்டும்!

பேதைப் பெண், ஏன் இவ்வளவு துடுக்கு? இவ்வளவு பதைப்பா? என்று ”பெரிய பெரிய” மனிதர்களெல்லாம் கேட்பர் கோபத்துடன். எனவே பசித்தபாவை, பஞ்சத்தில் அடிபட்டு நசித்துவிடுவாள்.

ஆண் மகனுக்கென்ன; எத்தனை முறை வேண்டுமாயினம் மணம் செய்து கொள்ளலாம். காசநோய் இருக்கலாம். ஆனால் இதற்காக வேண்டி மணம் செய்து கொள்ளாதிருப்பானா? ஊரார், உனக்குக் காசம் இருக்கிறது. மணம் ஏன்? என்றா கேட்பர்! இல்லை! காசநோயால் கஷ்டப்படும் இவனுக்குக் காலமறிந்து கனிவுடன் ‘மருந்துதர’ ஒரு மங்கை நல்லாள் தேவை என்றுதான் கூறுவர். சட்டம் குறுக்கே நிற்காது. சமுதாயம் ஏனென்று கேட்காது. கொட்டு முழக்குடன் மங்கல ஒலியுடன் மணம் நடக்கும். மூன்றாம் முறையாயினுஞ் சரி, ஐந்தாம் ஆறாம் முறையாயினுஞ் சரி ஆண் மகனுக்கு அந்த உரிமை உண்டு! அக்ரமம்! என்று கூறுவர் அறிவாளிகள்.

ஆம்! அக்கிரமந்தான். ஆனால் கேட்பவர் யார்? கேட்டனர். ஒரு ஊரில்! கேட்டது மட்டுமல்ல, குறுக்கே நின்று இத்தகைய கூடா மணத்தைத் தடுத்தும் விட்டனர். தடுத்ததோடு நிற்கவில்லை. மணமகளை அதே நேரத்தில் தக்க மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர். அத்தகைய சீரிய செயல் புரிந்த சீலர்களை நாம் பாராட்டுகிறோம்.

கல்கத்தா அருகேயுள்ள மைமன்சிங் என்ற ஊரில், 72 வயதுள்ள பார்ப்பனக் கிழவனொருவன் இளமங்கை யொருத்தியை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்தான்.

பொன் அவிர் மேனியளைக் கிழவன், தன் பிண உடல் காட்டி எங்ஙனம் மணத்துக்குச் சம்மதிக்கச் செய்ய முடியும்! வாலிபம் இல்லை அவனுக்கு. ஆனால் பணம் இருக்கிறது. பெண்ணின் பெற்றோர் பணத்தைக் கண்டனர். கிழவனின் பெண்டாகப் போயினும், கை நிறையப் பொருள் இருக்குமல்லவா! மணத்துக்கு ஒப்பினர். சகல ஏற்பாடுகளும் நடைபெற்றன.

அந்த ஊரில் இந்தக் கிழவரின் கூடாத் திருமணத்தைத் தடுக்க வேண்டிப் பலரும் சென்று பலப்பல கூறினர்; கிழவர் கேட்டாரில்லை. திருமண நாள் குறித்துவிட்டார். மணப்பந்தல் அமைத்துவிட்டார். மங்கல ஸ்நானம் செய்தார். பட்டுடுத்திப் பணிபூண்டு, பரிமளம் பூசிப் பார்ப்பனக் கிழவர் பரிதாபத்துக்குரிய பாவையை மணமுடித்துக் கொள்ளப் பக்குவமானார்!

மைமன் சிங் ஊர்வாசிகள் கண்டனர். இந்த அக்ரமத்தை எப்படியேனும் தடுத்தே தீர வேண்டும் என உறுதி கொண்டனர். மயிலே மயிலே இறகுபோடு என்றால் போடுமா! எனவே ஊரில் உறுதி கொண்டவர்கள் உள்ளே நுழைந்தனர். மணக்கோலத்திலிருந்த பெண்ணைத் தூக்கிச் சென்றனர்.

இந்தத் திவ்வியமான திடுக்கிடும் செயல்புரிந்ததில் மூஸ்லீம்களும் இந்துக்களும் ஒன்றுபட்டே உழைத்தனர்.

கிழவர் கல்யாண மண்டபம் வந்தார். காலி இடத்தைத் தான் கண்டார். கடுகடுத்தார். முகம் சுளித்தார். கா, கூவெனக் கூவினார்.

இடையே அந்த இளமங்கையைத் தக்கவனொருவனுக்கு ஊராரே மணஞ்செய்து வைத்தனர்.

கண்டார் கிழவர் காரியம் மிஞ்சி விட்டதை. காரிகை போனால் போகட்டும். கைக்கு ஏதேனும் பொருளாவது வரட்டும் என்று கருதி, தனக்கு நேரிட்ட அவமானத்துக்கு, நஷ்ட ஈடாகப் பணம் கேட்டார்.

இந்தக் கூடாமணத்தைத் தடுக்க குணசீலர்கள், தமக்குள்ளாகவே பணமும் வசூலித்து விருந்தும் நடத்தினர்.

பாராட்டுகிறோம்.

பெண்ணாசைப் பித்துக்கொண்டு அலைந்து அந்தப் பார்ப்பனக்கிழவன் பணப்பேராசை தீர்ந்ததும் போதுமென்று இருந்துவிட்டான். பாவை தக்கனொருவனை மணந்தாள். ”தாத்தா” கட்ட இருந்த தாலியைத் தவிர்த்த, அந்த மைமன்சிங்வாசிகளை நாம் மனமாரப் பாராட்டுகிறோம்.

ஆனால் மைமன்சிங்கில் தடுக்கப்பட்டது போன்ற மணங்களை எத்தனை எத்தனையோ தடுக்கப்படாமல் நடந்தேறித்தான் வருகின்றன! தடுப்பாரில்லையே! அறிவு வளரவில்லையே!

ஏன் இத்தகைய கூடாமணங்களைக் கண்காணித்துத் தடுத்துச் சர்க்கார் முன்வரக்கூடாது என்று கேட்கிறோம். எத்தனை முறை ஊரில் உறுதி கொண்டவர்களால் தடுக்க முடியும்? இத்தகைய மணங்கள் நடக்கவொட்டாமல், நாகரிக சர்க்கார் மாதர் வாழ்வு கெடும் விதத்தில் நடைபெறும் இத்தகைய மூடத்தனத்தை தடுக்க, ஏதாவது வழி செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் பிரபலஸ்தர்கள், பகுத்தறிவாளர்கள் கொண்ட கமிட்டிகளை சர்க்கார் நிறுவி, இவ்விதமான கூடா மணங்கள் நடைபெற ஒட்டாது தடுக்க அக்கமிட்டிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம். குடித்துக் கெடுவதை, சூதாடிக் கெடுவதை, விபசாரம் செய்து கெடுவதை, தடுக்க சர்க்கார் சட்டம் செய்து சமுதாயக் கோளாறுகளை நீக்குவது போலவே, இவ்விதமான மணவினைகள் மூலம் மங்கையர் வாழ்வு மிதித்துத் துவைக்கப்படுவதையும் தடுக்கச் சட்டமியற்ற வேண்டும்.

துருக்கியில் கலியாணம் நடப்பதென்றால் மணமகனும், மணமகளும் நோய் ஏதுமின்றி இருக்கின்றனர் என முதலில் டாக்டர் சர்ட்டிபிக்கேட் வாங்கி சர்க்காருக்கு அனுப்ப வேண்டும்.

இந்தூர் சமஸ்தானத்தில் வயதில் அதிக வித்தியாசமுள்ள ஆண் மணந்துகொள்ளக் கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. சில சமஸ்தானங்களில் இத்தகைய சட்டமும் இருக்கிறது.

பம்பாய் மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ. அம்மையாரொருவர் 45 வயதுக்கு மேற்பட்ட ஆடவன் 18 வயதுக்குக் குறைவான பாவையை மணப்பதைத் தடுக்க சட்டம் இயற்றவேண்டுமென்றம், சிந்து மாகாண சட்டசபையில் பேராசிரியர் கன்ஷாயம், பெண்ணின் வயதுக்கு மேல் 20 வயது அதிகமாக உள்ள ஆடவன் பெண்ணை மணக்கக் கூடாது என்றும் பேசி சட்டங்கள் இயற்ற முற்பட்டனர்.

இத்தகைய சட்டத்தின் அவசியத்தைத்தான் மைமன் சிங் மணவினை எடுத்துக்காட்டுகிறது.

சர்க்கார் கவனிப்பார்களா? சர்க்கார் கவனிக்கும்படி சமூகம் கேட்குமா?
(திராவிட நாடு 10.07-49)

இப்படி அதிக வயதுள்ள ஆண் மிகக் குறைந்த வயதுள்ள பெண்களை மணக்கக்கூடாது என்று பல கட்டுரைகள் – பல பிரசாரத்தின் மூலம் திராவிடர் கழகம் சொன்னது. இதை ஈ.வே. ராமசாமி நாயக்கரும் ஆதரித்தார்.

இது மட்டுமல்ல; இராம. அரங்கண்ணல் கூறுகிறார்:-

”பழைய குடியரசு ஏட்டில் இருந்து பெரியாரின் பழைய பேச்சுகளை அடிக்கடி விடுதலையில் மறுபிரசுரம் செய்வேன். அதற்காக ஏடுகளை புரட்டிக் கொண்டிருந்தபோது பொருந்தாத திருமணம் பற்றிய பேச்சு கண்ணில் பட்டது. ஒரு இளம் பெண்ணை வயதானவர் கட்டிக்கொள்வது சரியல்ல என்கிற பேச்சு. அதை அப்படியே வெட்டி எடுத்து, ‘ தக்க வயதும் பொருத்தமே திருமணத்தின் இலட்சியங்கள்”- பெரியாரின் பேருரை என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கம்போசிங்குக்கு கொடுத்தேன். அதுவும் வெளிவந்தது. பிறகு நான் வேலையில் ராஜினாமா செய்துவிட்டு பாக்கிப் பணத்தைப் பெறுவதற்காக சென்றபோது, ‘பெரியார் என்னைப் பார்த்து, “பெருமாள் வீட்டு சோத்தையே தின்னுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றானுங்க” என்று கூறினார்.
(நூல்:- நினைவுகள்)

திருமணம் செய்து கொள்கின்றவர்களுக்கு போதிய வயது வேண்டும் என்று அறிவுரை கூறுகின்ற ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய திருமணத்தின் போது ஏன் கடைபிடிக்கவில்லை?

கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்பவர்; சொல் ஒன்று, செயல் ஒன்று என்ற நிலைக்கே போகாதவர் என்றெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி ஜம்பம் அடிக்கிறீர்களே. அப்படியானால் போதிய வயது இல்லாத திருமணம் சுயமரியாதையற்ற திருமணம் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தன்னைவிட 46 வயது குறைந்த மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்? இது தான் கொள்கைப்பிடிப்பா?

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

“நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய்..” என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும், தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. “கட்சியின் வளர்ச்சி தன்னால்தான்” என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே யாரால்? என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது.

கழகத் தொண்டர்களைத் தலைவர் பாராட்டியதில்லையென்பது மட்டுமல்ல. அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார். தொண்டு என்றால் என்ன? தனிப்பட்ட ஒரு தொண்டரின் சேவையால் கட்சிக்கு ஏற்படும் பயன் என்ன? இயக்க வளர்ச்சி, தொண்டர்கள் சேவையின் கூட்டப் பலன்தான் என்ற கேள்விகளைக் கழகப் பணிபுரிந்தோர் இதுவரை எண்ணியது கிடையாது.
(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

மாபெரும்சக்தி, தன்னை விரும்பவில்லை, தன் தலைமையை உதறித் தள்ளுகிறது. தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது என்று உணர்ந்த பின் தலைவர் ‘கழகத் தலைமை’ என்கிற நாற்காலியிலிருந்து இறங்கியிருக்க வேண்டும் தானாகவே; அதுதான் முறை, சரியானதுங் கூட அப்படிச் செய்திருந்தால் நாணயம் உள்ளவர்களின் பாராட்டுக் கூட கிடைத்திருக்கும்.

அப்படி நடந்ததா என்றால், தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறரே ஒழிய, சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை!

கட்சியே தன்னை விரும்பவில்லையென்று, விளங்கியும் கூட அவ் ‘விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே தவிர, ”தலைமைப் பெருமை”யில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளர வேண்டும், அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை!
(திராவிட நாடு 21-08-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.

துரோகிகள்! ஜூடாசுகள்!

தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!

வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்

இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!

விரட்டப்படுவார்கள்! விரண்டோ டுவார்கள்!

மறைந்துபோவார்கள்! வேறுகட்சியில் சேர்வார்கள்!

தேர்தலுக்கு நிற்பார்கள்! தேய்ந்து போவார்கள்

என்றெல்லாம், ‘சாபம்’ இடுகிறார்.

இந்த ‘ஏசல்,’ ‘சாபம்’ இவைகளை, நான் அவர் அடைந்துள்ளது ஏன் என்று அறிவதால், மாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால், எனக்குக் கோபம் அல்ல, சிரிப்புத்தான் வருகிறது.
(திராவிட நாடு 09-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

போர்ஜரி செய்பவர்கள்!

பணமோசடி செய்பவர்கள்!!

இந்த இரண்டு பலமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவிட்டீர்கள் அன்பர்களே! பல ஆண்டு உழைத்த நமக்குப் பெரியார் தரும் இந்தக்கீழ்மைப் பரிசுகள் கள்ளக் கையொப்பமிடுபவர்கள்! மோசக்காரர்கள் தீரர், வீரர், திராவிடர் என்று அழைத்தார் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றுபவர் இருந்த வரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு – அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம். உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள்-மோசக்காரர்கள் என்று ஏசுகிறார். ஏசலுரையால், மனம் புண்படும் தோழர்களுக்கு, எத்தகைய சமாதானம் கூறமுடியும் – நானும் அதனால் தாக்கப்பட்டுத் தாங்கிக் கொண்டு வருகின்றேன் என்பதை எடுத்துக்காட்டுவது தவிர.
(திராவிட நாடு 16-10-1949)

ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி…. அண்ணா!

ஒட்டகத்துக்கு ஒரு சுபாவம் உண்டு என்று சொல்வார்கள். அதன் மீது பாரத்தை மேலும் மேலும் போட்டால், பளு தாங்காமல் ஒட்டகம் முரண்டிக் கொண்டு படுத்துவிடுமாம்! உடனே, சூட்சம புத்தியுள்ள ஒட்டகக்காரன், கடைசியாக ஒட்டகத்தின் மீது ஏற்றிய சாமானை எடுத்துவிடுவானாம். எடுத்தானதும், ஒட்டகம் சரி, சரி, நம்மீது போட்ட பாரத்தைக் கீழே இறக்கிவிட்டார்கள். நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டு, எழுந்து நிற்குமாம். பிராயணத்துக்குத் தயாராக! இந்த ஒட்டகத்தின் சுபாவத்தை ஒரு சில சமயத்திலே, நல்லவர்களிடமும் காணலாம்.

யாராவது, நல்லவர்களுக்கு மனவேதனை ஏற்படும்படியான தொல்லைகள் ஏற்பட்டால், தாங்கமுடியாத நிலை உண்டாகும்.. உண்டாகும்போது. இனிப் பொறுக்க முடியாது என்று கூறுவர், ஆனால் ஒட்டகத்தின் சுபாவ சூட்சமம் தெரிந்தவர்கள், கொடுத்த தொல்லைகளிலே, ஏதாவதொன்றை நீக்குவர்.. நீக்குவதன் மூலம் நல்லவரின் மனதிலே, சஞ்சலம் குறைந்து, சந்தோஷம் மலர்ந்து சொன்ன வண்ணம் கேட்கும் நிலை பெறுவதுண்டு!

பெரியார், நம்மை, ஒட்டகச் சுபாவம் கொண்டவர்கள் என்றே தீர்மானித்திருக்கிறார் – அதே சூட்சமத்தையும் கையாண்டு பார்க்கிறார்.
(திராவிட நாடு 10-07-1949)

ஈ.வே. ராவின் திருமணத்தை எதிர்த்த அண்ணாதுரை!

ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இரண்டாவது திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர்களுள் அண்ணாதுரை மிக முக்கியமானவர். இந்த திருமணம் தங்களுடைய இயக்கத்தின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்ட திருமணமாகும் என்று கருதிய காரணத்தாலேயே அண்ணாதுரை அதைக் கடுமையாக எதிர்த்தார். ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திருமணத்தை எதிர்த்து அண்ணாத்துரை எழுதிய கட்டுரையில் அந்தத் திருமணம் எப்படி தங்கள் கொள்கைக்கு முரண்பட்டது என்று கூறி ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கொள்கை நழுவலை தோலுரித்துக் காட்டுகிறார்.

இதோ அந்தக் கட்டுரை..

periyar_and_maniammai_1சென்ற ஆண்டு நாம் நமது தலைவர் பெரியாரின் 71 -வத ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு அவர் திருமண வைபவத்தைக் காணும்படி நம்மை அழைக்கிறார் – இல்லை – அறிவிக்கிறார்.

கடந்த ஐந்தாறு அண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துப் பணியாற்றி வந்தார் திருமதி மணி அம்மையார்.

இந்தத் திருமதிக்கு வயது 26.

அவர்கள்தான் பெரியாருக்கு மனைவியாகும் தொண்டில் இப்போது ஈடுபட நேரிட்டிருக்கிறது.

சென்னையில் இவர்கள் பதிவுத் திருமண மனு பதிவு நிலையத்தில் கடந்த ஒருவார காலமாக ஒட்டி வைக்கப்பட்டிருக்கிறது. பலர் பார்த்து திகைப்படைந்துள்ளனர்.

பெரியாருக்கு வயது 72.

மணியம்மைக்கு வயது 26. இவர்களின் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது.

-தலைநிமிர்ந்து தன்மானத் தூதர்களாய், விடுதலை வீரர்களாய், ஏறுநடை நடந்து செல்லும் எண்ணற்ற இளைஞர்கள் இன்று உடைந்த உள்ளத்தைச் சுமந்து கொண்டு, வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு பின்னும் கால்களுடன், பிசையும் கரங்களுடன் யார் பார்த்து என்னவிதமான பரிகாசம் செய்கிறார்களோ என்ற அச்சத்துடன் நடமாடும் நிலையைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துவிடும்.

திருமணம் சொந்த விஷயம், வயோதிகப் பருவத்திலே திருமணம் செய்வதுகூடச் சொந்த விஷயந்தான். அதிலும் தனிப்பட்ட ஒருவர் அல்லது வெறும் அரசியல் கட்சித் தலைவராயுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்வது வயோதிகத்திலே, செய்து கொண்டாலும் கூடக் கேட்டுத்திடுக்கிடவோ, கேலியாகப் பேசவோ கோபமடைய மட்டுமேதான் தோன்றமே ஒழியக் கண்ணீர் கிளம்பாது. இன்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரியாரின் திருமணச் சேதி கேட்டு.

நாம் அவரை ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. இயக்கத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவரைத் தங்கள் குடும்பத் தலைவர் என, வாழ்க்கைக்கு வழிகாட்டியென ஏற்றுக்கொண்டு எந்த இயக்கத்தவரும், எந்தத் தலைவரிடமும் காட்டாத அளவு மரியாதை உணர்ச்சியை அன்பைக் காட்டி வந்திருக்கிறோம்..

…அவரை நாம், பின்பற்றி வந்தது ஏறத்தாழ ”பக்தர்கள் அவதார புருஷர்களை”ப் பின்பற்றி வந்தது போலவேதான்.

இதற்குக் காரணம், நாம் மற்ற எந்தத் தலைவரையும் விட இவரிடம் தனிப்பட்ட தன்மை, பண்பு, இருக்கிறது என்று உளமார எண்ணியதால்தான்.

வயத ஏற ஏற வாழ்க்கையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி, சொந்தச் சுகத்தைப் பற்றிக் கவனப்படாமல் துறவிபோல இரவு பகலென்று பாராமல், அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு, நாம் வாழ, அவர் வாட்டத்தையும் பாடுகளையும் தாங்கிக் கொள்கிறார் என்று தெரிந்ததால் நாம் அவர் பெரியார் எனம் பண்புப் பெயருக்கு முற்றிலும் உரியார், அவர் போன்றோர் வேறு யாரும் இல்லையென்று இறும்பூ தெய்தி வந்தோம் இறுமாந்திருந்தோம்.

…திருமண முறையிலேயுள்ள மூடப்பழக்க வழக்கங்களை முறியடிக்கவும், பெண்களைக் கருவிகளாக்கும் கயமைத் தனத்தை ஒழிக்கவும், ஆண்களின் கொடுமையை அடக்கவும் அவர் ஆற்றியதுபோல் வேறு எந்தத் தலைவரும் உரையாற்றியதில்லை.

…பொருந்தாத் திருமணத்தை அவர் கண்டித்து கேட்டு, கிழவர்கள் கலங்கினர், குமரிகள் குதூகலித்தனர்.

காமப்பித்துக் கொண்டலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே வாலிபப் பெண்ணைச் சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசைக் காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மானரோஷத்தில் அக்கரையுடைய வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடந்தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளிலே முழக்கமிட்டார் – நமக்கெல்லாம் புதுமுறுக்கேற்றினார்.

பிள்ளையில்லையென்ற காரணத்துக்காக சொத்துக்கு வாரிசுயில்லை என்ற காரணத்துக்காக, மனைவியைத் தேடும் கொடுமையை ஆயிரமாயிரம் மேடைகளிலே கண்டித்தார்.

பொருந்தாத் திருமணம் நாட்டுக்குப் பெரியதோர் சாபத்தீது என்று முழக்கமிட்டார்.

அந்தக் காலத்து தசரதன் முதற்கொண்டு இந்தக் காலத்து ‘தங்கபஸ்பம்’ தேடும் கிழவர் வரையிலே எள்ளி நகையாடினார்.

தன்மான இயக்கம் தழைத்திருக்கும் இடத்திலே ‘பொருந்தாதத் திருமணம்’ யார் வீட்டிலாவது, எந்தக் காரணத்தாலாவது நடைபெற இருந்தால், போலீஸ் பந்தோபஸ்துத் தேடக்கூடிய அளவுக்கு நாட்டு மக்களின் உணர்ச்சி வேகம் உருவெடுத்தது.

ஏற்கனவே பொருந்தாத் திருமணம் செய்து கொண்டவர்கள்கூட வெட்கத்தால் – வேதனையால் தாக்கப்பட்டனர்.

”என் போன்ற வயதானவர்கள், கல்யாணம் செய்து கொள்ள எண்ணக்கூடாது – எப்படியாவது, அப்படி ஓர் எண்ணம் வந்து தொலைந்தால் தும்பு அறுந்ததாக (அதாவது விதவையாக) ஒரு நாற்பது ஐம்பது வயதானதாக, ஒரு கிழத்தைப் பார்த்துக் கல்யாணம் செய்து தொலைக்கட்டுமே – பச்சைக் கொடிபோல ஒரு பெண்ணை, வாழ்வின் சுகத்தை அறிய வேண்டிய வயதும், பக்குவமும் கொண்ட பெண்ணைக் கலியாணம் செய்து கொள்வதா – காரணம் ஆயிரம் காட்டட்டுமே, காட்டினாலும் எந்த மானமுள்ளவன், அந்தக் கலியாணத்தைச் சரியென்று கூறுவான்? யாருக்குச் சம்மதம் வரும்?” என்று அவர் பேசிய பேச்சுக் கேட்காத ஊரில்லை.

இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், தமது 72-ம் வயதில் 26வயதுள்ள பெண்ணை, பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர வேறென்ன நிலைமை இருக்கும்!

”எம்பா! திராவிடர் கழகம்! உங்கள் தலைவருக்குத் திருமணமாமே!! என்று கேட்கும் கூரம்பு போல நெஞ்சில் பாய்ந்து தொலைக்கிறதே.

சீர்திருத்தம் இயக்கம் இது. இதோ பாரய்யா, ”சீர்திருத்தம் 71-க்கும் 26-க்கும் திருமணம்” என்ற கேலி பேசுகிறார்களே – கேட்டதும் நெஞ்சு வெடிக்கிறதே.

”கையிலே தடி மணமகனுக்கு! கருப்பு உடை மணமகளுக்கு!” என்று பரிகாசம் பேசுகிறார்களே.

”ஊருக்குத்தானய்யா உபதேசம்!” என்று இடித்துரைக்கிறார்களே.

”எனக்கென்ன, வயதோ 70-க்கு மேலாகிறது. ஒரு காலை வீட்டிலும் இன்னொரு காலைச் சுடுகாட்டிலும் வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் செத்தால் அழ ஆள் இல்லை. நான் அழுகிறபடி சாவதற்கும் ஆள் இல்லை.” என்றெல்லாம் பேசின பெரியார் கலியாணம் செய்து கொள்கிறாரய்யா! என்று கடைவீதி பேசிக் கைகொட்டி சிரிக்கிறதே!

”ஊரிலே நடைபெறும் அக்ரமத்தைக் கண்டிக்கும் அசகாயச் சூரர்களே! சமுதாய இழிவுகளை ஓட்டும் வீரோதி வீரர்களே1 பெண் விடுதலைக்குப் பெரும்போர் தொடுக்கும் பெரியவர்களே! பொருந்தாத் திருமணத்தைக் கண்டித்த கண்ணியர்களே, இதோ உங்கள் தலைவர் துறவிக்கோலத்தில், தள்ளாடும் பருவத்தில், இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாரே உங்கள் கொள்கையின் கதி என்ன, எங்கே உங்கள் பிரசார யோக்கியதை, என்ன சொல்லுகிறீர்கள் இதற்கு, எப்படி இந்த அக்ரமத்தை, அநீதியை அருவருக்கத் தக்க ஆபாசத்தைச் சகித்துக் கொள்கிறீர்கள்? என்று சவுக்கடி கொடுக்கிறது போலப் பேசுகிறார்களே- இனியும் பேசப்போகிறார்களே- என்ன செய்வோம்- என்ன சமாதானம் கூறுவோம்- எப்படி மனப்புண்ணை மாற்ற முடியும்- எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது என்று எண்ணினர்- எண்ணினதும் தாயோ, தகப்பனோ, மனைவியோ, மகளோ, அண்ணன், தம்பியோ உடன் பிறந்தவர்களோ இறந்தால் ஏற்படக்கூடிய துக்கத்தை விட அதிகமான அளவில் துக்கம் பீறிட்டுக் கிளம்பிக் கதறுகின்றனர் – கதறிக்கொண்டேயிருக்கிறோம் – கண்ணீருக்கிடையேதான், இக்கட்டுரையும் தீட்டப்படுகிறது.

பொருந்தாத் திருமணம்! புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! எந்தக் காலத்திலும், எதிரியின் எந்த வீச்சும், சர்க்காரின் எந்த நடவடிக்கையும், இன்று நமது இயக்கத் தோழர்களைத் திகைக்கச் செய்திருப்பது போலச் செய்ததில்லை.

-முகத்திலே கரி பூசிவிட்டார். மூக்கறுத்துவிட்டார்! மூலையில் உட்கார்ந்து கதறுகிறோம் – சேதி தெரிந்தது முதல்.

வெட்கப்படுகிறோம் அயலாரைக் காண!

வேதனைப்படுகிறோம் தனிமையிலே!

ஒருவர் கண்ணீரை, மற்றவர் துடைக்க முயலுகிறோம் – துடிக்கிறோம் -நெஞ்சத்தில் துயரத்தேள் கொட்டியதால்.

பொருந்தாத் திருமணம் புரிந்து கொள்ளத் துணிபவர்களை, எவ்வளவு காரசாரமாகக் கண்டித்திருக்கிறோம் – எவ்வளவு ஆவேசமாகக் கண்டித்தோம்.

இப்போது, எவ்வளவு சாதாரணமாக நம்மையும் நமது உணர்ச்சிகளையும், கொள்கைகளையும் இயக்கத்தையும் எவ்வளவு அலட்சியமாகக் கருதி, நமது தலைவர் 72-ம் வயதிலே திருமணம் செய்து கொள்வதாக அறிவிக்கிறார். நம்மை நடைப்பிணமாக்குவதாகத் தெரிவிக்கிறார் – நாட்டு மக்களின் நகைப்புக்கு இடமாக்கி வெட்கித் தலைகுனிந்து போங்கள் எனக்கென்ன என்று தெரிவித்துவிட்டார்.

-எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண்டும்? உலகின் முன் தலைகாட்ட முடியாத நிலைமையில் எம்மைச் செய்யும் அளவுக்கு நாங்கள் தங்களுக்கு இழைத்த குற்றம் என்ன? நீங்கள் காட்டிய வழி நடந்தோமே, அதற்கா இந்தப் பரிசு?

– எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 இதை மறுக்கமுடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே!

இதைச் சீர்த்திருத்தச் செம்மலாகிய தாங்கள் செய்வதென்பது காலத்தாலும் துடைக்க முடியாத கறை என்து மறுக்க முடியாதே! ஏன் இதைச் செய்கிறீர், எம்மை ஏளனத்துக்கு ஆளாக்கிவிடுகிறீர்!

கண்ணீரைத் துடைத்தப்படி நின்று, ஆயிரமாயிரம் இளைஞர்கள் கேட்டும் கேள்விகள் இல்லை!

இந்தப் பொருந்தாத் திருமணம் நடைபெறக்கூடுமென்று நாம், யாரும் கனவிலும் எண்ணியதில்லை. பெரியாரின் கோலம், வயது, பேச்சு, வாழ்க்கையிலே அவருக்குப்பற்று அற்றது போலிருந்தது காட்டியத்தன்மை ஆகியவை நம்மை அவருடைய மனதிலும் ஒரு ‘மாது’ புகமுடியும் என்று எண்ணச் செய்யவில்லை, அதிலும் எப்படிப்பட்ட மாது?

பெரியாரின் உயிரைப் பாதுகாக்க, உடலைப் பாதுகாக்க தக்கவிதமான உணவு, மருந்து தருதல், பிரயாண காலத்தில் வசதி செய்து தருவது போன்ற காரியத்தைக் கவனிப்பது என்கிற முறையில் இயக்கத்தில் ஜந்தாறு வருஷத்திற்கு முன்பு வந்தவர்கள்தான் மணியம்மையார்.

…பெரியாரின் உடற்பாதுகாப்புக் காண பணிபுரிய, நான் நீ யென்று போட்டியிட்டுக் கொண்டு வர நூற்றுக்கணக்கிலே தூய உள்ளம் படைத்தவர்கள் உண்டு.

அவர்கள் யாரும் தேவைப்படவில்லை! மணியம்மை வர நேரிட்டது!

புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்.

புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால் அந்த அம்மையாரின் அருந்தோண்டு கண்டு, திராவிடர்கள் முதலிலே கொண்டிருந்த அருவருப்பையும் இழந்தனர்.

அப்பா! அப்பா! என்று அம்மை மனம் குளிர வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும் அம்மா- அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும், இக்காட்சியைக் கண்டு, பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார் – பதிவுத் திருமணம்!!

இந்த நிலையை யார்த்தான் எந்தக் காரணங்கொண்டுதான், சாதாரணமானதென்று சொல்லமுடியும்.

நூற்றுக்கணக்கான மாநாடுகளிலே, நமது வீட்டுத் தாய்மார்கள் தமது கரம் பற்றி நின்ற குழந்தைகளுக்குப் பெரியாரைப் பெருமையுடன் காட்டி ”இதோ, தாத்தா பார் – வணக்கஞ் சொல்லு” என்று கூறினார் – கேட்டோம் – களித்தோம்!

பக்கத்திலே பணிவிடை செய்து நின்ற மணியம்மையைக் காட்டி ”தாத்தா பொண்ணு” என்று கூறினார்.

அந்தத் தாத்தாவுக்குக் கலியாணம் பணிவிடை செய்து வந்த பாவையுடன்.

சரியா? முறையா? என்று உலகம் கேட்கிறது.
—————————
அன்புள்ள
சி. என். அண்ணாதுரை

(திராவிட நாடு 3-7-49)

சுயமரியாதைத் திருமணம் மறந்து போனதேன்?

ஈ.வே. ராமசாமி நாயக்கர் திருமணத்தில் வயது வித்தியாசக் கொள்கையை மட்டும் கைவிடவில்லை. தனது வாழ்நாள் முழுக்க எந்த சுயமரியாதைத் திருமணத்தை வலியுறுத்தினாரோ – அந்த சுயமரியாதைத் திருமணத்தையே அவர் தம் திருமணத்தின் போது கடைபிடிக்கவில்லை. ஆனால் சுயமரியாதைத் திருமணத்தை எந்த அளவுக்கு வலியுறுத்தினார் தெரியுமா? ஒருவர் இரு பெண்களை மணந்தாலும் பரவாயில்லை, ஆனால் அது சுயமரியாதைத் திருமணமாக இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார். தன்னுடைய இயக்கத்தவர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தையே நடத்திவைத்தார்.

இந்த அளவுக்கு சுயமரியாதை திருமண விஷயத்தில் கொள்கைப்பிடிப்புடன் இருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் பதிவுத் திருமணம் செய்துகொண்டார்? திராவிடர்க் கழகத்தில் இருந்தவர்கள் கூட வயதுதான் ஈ.வே.ராமாசாமி நாயக்கர் பார்க்கவில்லை யென்றாலும் கூட திருமணத்தையாவது பதிவுத் திருமணமாக இல்லாமல் சுயமரியாதைத் திருமணமாக செய்து கொள்ள பெரியாரை வேண்டினர். ஆனால் பெரியார் கேட்கவில்லை. தன்னுடைய கொள்கைக்கு தானே சமாதி கட்டினார்.

தனது கொள்கைக்கு தானே சமாதி கட்டக் காரணம் என்ன தெரியுமா?அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாத திருமணம். தனது சொத்துக்கும், இயக்கத்துக்கும் நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார். அதனாலேயே திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள்.

இருமணம் பிணைக்கப்பட்டு ஒருவரை ஒருவர் அறிந்து கொண்ட பின் திருமணம் எதற்கு என்றெல்லாம் கேட்ட பெரியார்தான் சொத்துக்களுக்காக திருமணம் செய்துகொண்டார்.

சொத்துக்களுக்காக – இயக்கத்துக்காக என்றால் திருமணம் தான் தீர்வா? கொள்கைப் பிடிப்புக் கொண்ட மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டால்தான் சொத்தை இயக்கத்தை காப்பாற்றுவாரா? திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் காப்பற்றமாட்டாரா? திருமணம் செய்து கொள்ளாமலேயே மணியம்மையாரே சொத்தை இயக்கத்தை காப்பற்றச் சொன்னால் மணியம்மையார் காப்பாற்றமாட்டாரா? திருமணம் செய்து கொண்டால் தான் காப்பாற்றுவரா? சொத்தை இயக்கத்தை காப்பாற்ற திருமணம் தான் தீர்வு என்றால்-

அதே சொத்தை – இயக்கத்தைக் காப்பற்ற மணியம்மை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வழிமுறைப்படி மணியம்மை இயக்கத்துக்காக – சொத்துக்களுக்காக திருமணம் கொள்ளவில்லையே ஏன்? அதிலெல்லாம் அக்கறையில்லாததாலா? சொத்துக்களை காப்பாற்ற பெரியாரும் மணியம்மையாரும் மட்டும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர் என்றால் –

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சொல்படி 1967 வரை சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட எண்ணற்ற தோழர்களின் குடும்ப சொத்துக்களைப் பற்றியே கவலைப்படாதது ஏன்? (1968-ம் ஆண்டுதான் சுயமரியாதை திருமணம் சட்டப்படி ஆனது. அதில்தான் இதுவரை நடந்த சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சொல்லியது) அவர்கள் சொத்து எக்கேடாவது கெட்டுப்போகட்டும், என் சொத்துமட்டும் என் கையில் இருக்கவேண்டும் என்ற எண்ணப்படித்தானே அன்று சட்டப்படி செல்லுபடியாகாத சுயமரியாதை திருமணத்தை மற்றவர்களுக்கும், சட்டப்படியான பதிவுத் திருமணத்தை தனக்கும் வகுத்துக் கொண்டார்! இது தானா கொள்கைப் பிடிப்பு?

சரி ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான் பதிவுத்திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். இதற்கு ஏன் மணியம்மை ஒத்துக்கொண்டார்? மணியம்மை சுயமரியாதை திருமணமே செய்து கொள்ளலாம் என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரை வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே! ஒருவேளை சொத்துக்கள் வந்தால் போதும் என்று நினைத்துவிட்டாரா? தலைவர் கொள்கையில் நழுவும் போது அதைத் தடுத்து நிறுத்துவது தானே தொண்டருக்கு அழகு! ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் கொள்கையிலிருந்து நழுவும் போது மணியம்மையாரும் சம்மதித்தாரே ஏன்?

ஏனென்றால் கொள்கை மற்றவர்களுக்குத்தான் நமக்கு இல்லை என்று மணியம்மையாரும், ஈ.வே.ராமசாமி நாயக்கரும் நினைத்தார்களோ என்னவோ! அவர்களுக்கே வெளிச்சம்!!

தான் பதிவு திருமணம் செய்து கொண்ட பிறகு 1962-ம் ஆண்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

…பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும், மனைவியுமாக ஏற்று நடக்க சம்மதிக்கிறோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் ‘நாங்களிருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்துக்கொள்வதோடு ஒருவருக்கொருவர் எல்லாத் துறைகளிலும் இன்ப-துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்துவாழ உறுதி கூறுகின்றோம’ என்று சொல்லும் முறையை கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
(விடுதலை 20-04-1962)

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு மற்றவர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை கூறுகிறார் என்றால் இதுதான் கொள்கைப்பிடிப்பா?

தான் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டு மற்றவர்கள் சுயமரியாதை திருமணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்ல ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு என்ன தகுதியிருக்கிறது?

நம்முடையது சம உரிமைத் திருமணம் என்கிறார். அப்படியென்றால் இவர் ஏன் சம உரிமைத் திருமணம் செய்துகொள்ளவில்லை?