Taken – தந்தைகளின் திரைப்படம்

பெண்ணின் அப்பா கடத்தல்காரர்களிடம் சொல்கிறார்: நாங்கள் பலவீனமான நாடாக இருக்கிறோம், பரந்த மனப்பான்மை என்ற தவறான நோக்கில் உங்களை உள்ளே விடுகிறோம், நாங்கள் எதுவும் செய்ய இயலாத கையாலாகதவர்களாக இருக்கிறோம், உங்களைப் போன்ற வன்முறைக்குத் துணைபோகும் சக்திகள் உலகம் முழுவதும் பரவி குண்டு வைக்கிறீர்கள், எங்கள் பெண்களைக் கடத்தி ஏலம் விடுகிறீர்கள், இருந்தும் கைகள் கட்டப் பட்டவர்களாகிய நாங்கள் ஏதும் செய்ய இயலாதவர்களாக இருக்கிறோம் …

View More Taken – தந்தைகளின் திரைப்படம்

நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

தமிழில் என்றாவது நிகழ்கால பிரச்சினை எதையாவது எடுத்துக்கொண்டு அலசிய படங்கள் வந்ததாக நினைவு இருக்கிறதா? கீழ்வெண்மணி சாயலில் ஒரு படம் வந்தது. அதைத் தவிர வேறு எதையாவது வைத்து? வீரப்பனை வைத்து மிகைப்படுத்தப்பட்ட படங்கள் வந்ததுண்டு. மிகைப்படுத்துதல் இல்லாமல் ஒரு அண்ணாமலைப் பல்கலை மாணவன் உதயகுமாரன் மரணம் குறித்தோ, ஒரு தர்மபரி பஸ் எரிப்பு குறித்தோ, ஒரு டாடா நிலப் பிரச்சினை குறித்தோ, மணல் கொள்ளை குறித்தோ, சிதம்பரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் குறித்தோ, வீரப்பனால் பாதிக்கப் பட்டவர்கள் குறித்தோ, கோவை குண்டு வெடிப்பு குறித்தோ தமிழில் என்றாவது நிகழ்கால சமூகப் பிரச்சினைகளைத் துணிந்து அலசும் படம் ஏதாவது வந்துள்ளதா?

View More நிறுவன மதங்களின் விபரீதங்களும் அச்சன் உறங்காத வீடும்

உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்ப வேண்டிய எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் கட்சிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள் – இவ்வளவு ஏன்? – அவரவர் வீட்டுக்குள்ளேயாவது தீவிரவாதம் குறித்து அலசி இருப்போமா என்பது சந்தேகம்.

View More உன்னைப் போல் ஒருவன் – வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

இந்திப் படவுலகில் கான்களும் அவர்களுக்குப் பின்புலமாக இருக்கும் இஸ்லாமிய மாஃபியாக்களும்தான் பெரும்பான்மையினர் என்றும், தானும், அமிதாப் போன்ற வெகு சிலரும் மட்டுமே இந்து நடிகர்கள் என்றும் தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் மிக துணிவாக வெளிப்படையாக அந்த நடிகர் சொல்வது இந்திய சினிமாக்களில் நாம் எதிர்பார்க்க முடியாத ஒரு ஆச்சரியம்…

View More ‘ஒரு புதன்கிழமை’ (இந்தி): பட விமர்சனம்

நான் கடவுள்: பட விமர்சனம்

இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான தமிழ்ப் படம்…

தமிழ் சினிமாவில் கதாநாயகி மாடு மேய்க்கும் பெண்ணாக இருந்தாலும் கூடச் செக்கச் செவலென, தளதளவென்று, முடிந்தால் பஞ்சாப் தேசத்துக் கிளியாக இருப்பதும் தமிழ் சினிமாவின் முதல் இலக்கணங்களில் ஒன்று. தமிழுக்காக தன் மூச்சு, பேச்சு எல்லாவற்றையும் விட்டுவிடத் தயாராக இருக்கும் பாரதிராஜா, சீமான், சேரன் வகையறா அக்மார்க் திராவிடத் தமிழர்கள் கூட ஒரு கிராமப்புறத் தமிழ்ப் பெண் பாத்திரத்திற்குச் சுமாரான கரிய நிறமுடைய பெண்ணைக் கதாநாயகியாகப் போடத் துணிந்ததில்லை…

View More நான் கடவுள்: பட விமர்சனம்

போகப் போகத் தெரியும் – 7

திரைப்படத் தொழில் வளர்ச்சியடையாத காலத்தில் அதில் தேசியக் கருத்துகள் இடம் பெற்றன. தியேட்டர்களின் எண்ணிக்கை பெருகி ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கான சுதந்திர இந்தியாவில் சினிமா விளைச்சலை அறுவடை செய்தவர்கள் அண்ணாவின் தம்பிகள்தான்.

View More போகப் போகத் தெரியும் – 7

ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்

படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை…

View More ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்

‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1

இந்தியா துணிவுடன் நடந்திராத தருணங்களின் பொழுது ‘இஸ்ரேலைப் பார் எப்படி துணிவுடன் எதிரிகளைத் தண்டிக்கிறது!’ என்று சொல்வது ஒரு ஃபேஷனாகிப் போனது. இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்கள் கொல்லப்பட்ட பொழுது இஸ்ரேலும் அதன் இரும்புப் பெண்மணியான கோல்டா மேயரும் எப்படி நடந்து கொண்டனர்? என்ன செய்தார்கள்? பார்க்கலாமா?

View More ‘ம்யூனிக்’ முதல் மாலேகாவ் வரை – 1

பைத்ருகம் – ஒரு பார்வை – 1

கேரள மண்ணின் பாரம்பரியத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள அபரிதமான தாக்குதலால் இந்து மதமும் அதன் நம்பிக்கைகளும் கோவில்களும் சாஸ்தாக்களும் யாகங்களும் பகவதிகளும் அடுத்த தலைமுறைக்குக் கிட்டாமல் அழிந்துவிடுமோ என்று கவலைப் பட்டிருக்கிறான் ஒரு கலைஞன்! அப்படி அழியாமல், மதம் மாறாமல் மிச்சம் மீதி இருக்கும் மக்களுக்கு அதன்மீது நம்பிக்கை தளராமல் இருக்க ஓர் அதிர்ச்சி வைத்தியமாக என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கிறார் இயக்குனர் ஜெயராஜ்…

View More பைத்ருகம் – ஒரு பார்வை – 1