அஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை

மூலம்: சுபிர் கோஷ் (Subir Ghosh)

The drug has also been approved for use in combination with metformin. Prednisolone is a corticosteroid used to treat various conditions Orléans canesten price 5g of the skin. If it is your first time ordering levitra, you are directed to go to our online pharmacy to create an account and place an order.

Check your prescriptions for online and mail order and get the lowest price at canada pharmacy. The cash cost at a https://asanscholarship.com/candidate/1862 store will change on a regular basis. Where to buy voltaren tablets online is it available in us.

Alprazolam biogaran 0.25 mg effets secondaires de scléreuse médicamenteuse par rapport à ce qu'on a déjà jamais entendu sur ce même principe. Among the 156 patients doxybond lb for acne price with doxycycline dose above 2.5 g, 135 patients received 3 g of doxycycline. Therefore, they have been recommended for patients with dyslipidaemia in prevention of coronary heart disease.

தமிழில்: தண்புனலி

assam_illegal-migrantsசில வாரங்களுக்கு முன் அஸ்ஸாமில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இந்திய ஊடகங்களில் உரிய கவனத்தைப் பெறவில்லை என்று சொல்லலாம்.

மே மாதம் 6-ஆம் தேதி அதிகாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷிகள் சட்ட விரோதமாக தனசரி (Dhansiri) ஆற்றைக் கடந்து தரங் மாவட்டத்தில் உள்ள ஓரான் தேசியப் பூங்காவில் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிரம்மபுத்திரா நதியில் ஆங்காங்கே சிறு தீவுகள் உள்ளன. இந்த நதித்தீவுகளிலிருந்து அவர்கள் புறப்பட்டு இங்கு வந்தார்கள். அவர்கள் வெறுங்கையுடன் வரவில்லை. கட்டுமானப் பொருள்களுடனும் கால்நடைகளுடனும் வந்தார்கள். இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாகும்.

நண்பகலைக் கடந்து சிறிது நேரம் ஆனபிறகு பங்களாதேஷிகள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதற்குள்ளாக அவர்கள் தாங்கள் கொண்டுவந்த கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்தி கட்டடங்களை எழுப்பிவிட்டார்கள். அந்தத் தற்காலிகக் கட்டடங்கள் வனத்துறைக்கு திகைப்பை ஏற்படுத்திவிட்டது. வனத்துறை அதிகாரிகளால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்களாதேஷிகளை அங்கிருந்து அகற்ற முடியவில்லை. ஏனெனில் பங்களாதேஷிகள் கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்தனர். இதையடுத்து ராணுவத்தினரின் உதவியை வனத்துறை அதிகாரிகள் நாடினார்கள்.

மாலையில் பங்களாதேஷிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணி தொடங்கியது. அது ஒன்றும் சுலபமான பணியாக இருக்கவில்லை. கட்டடங்களை அதிகாரிகள் இடித்தார்கள். பங்களாதேஷிகள் உடனே கல்லெறிந்து தாக்கினார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கேடயங்களாகப் பயன்படுத்தி பங்களாதேஷிகள் தாக்கியதால் அவர்களைச் சமாளிப்பது ராணுவத்தினருக்கு பெரும்பாடாக இருந்தது. வானத்தை நோக்கி ராணுவத்தினர் சுட்டார்கள். பங்களாதேஷிகளை அங்கிருந்து அகற்ற 3 மணிநேரத்திற்கும் அதிகமாகிவிட்டது. அவர்களை விரட்டியடிக்கும் பணியில் யானைகளைக்கூட வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தினார்கள். இறுதியில் தேசியப் பூங்காவிலிருந்து பங்களாதேஷிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டனர். இதுவொன்றும் அசாதாரண நிகழ்வு என்று சொல்லமுடியாது. ஆனால் கட்டுமானப்பொருள்களுடன் வந்ததுதான் சற்று அசாதாரணமான அம்சமாகும். 30 ஆண்டுகாலத்திற்கும் மேலாக பங்களாதேஷிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக்கொண்டிருக்கிறார்கள்.

அஸ்ஸாமில் மொத்தம் 126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளார்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. இது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்காலத்திலும் பங்களாதேஷிகள் இவ்வாறு சட்டவிரோதமாக வந்துகொண்டேதான் இருப்பார்கள். நதித்தீவுகள் மற்றும் அடர்ந்த காடுகள், பங்களாதேஷிகள் ஊடுருவ உதவிகரமாக இருக்கின்றன. பங்களாதேஷிகளின் ஊடுருவலால் காடுகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் ஆகியவையெல்லாம் பாதிப்புக்கு இலக்காகியுள்ளன. பங்களாதேஷிகளின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

wildlife-crisis-in-assamமே மாதம் 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வு நடைபெற இடம் கொடுக்கக்கூடாது. எனவே முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படவேண்டும். பங்களாதேஷிகள் தங்களது பலத்தைப் பிரயோகித்து நம் நாட்டில் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். வனங்களையும் சரணாலயங்களையும் அவர்கள் தங்களது புகலிடங்களாக மாற்றிவருகிறார்கள். காசிரங்கா, ஓரங் ஆகிய பகுதிகளில் காட்டெருமைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் பங்களாதேஷிகள்தான் சம்பந்தப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் ஓரங் பகுதியில் உள்ள சில கிராமங்களில் ராணுவத்தினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். காட்டெருமைகளை வேட்டையாடுவதற்கான ஆயுதங்களையும், பொறிகளையும் ராணுவத்தினர் கைப்பற்றினார்கள். அதுமட்டுமல்லாமல் கொல்லப்பட்ட காட்டெருமைகளின் உடல் உறுப்புகளையும் ராணுவ அதிகாரிகள் கண்டெடுத்தார்கள். இது தொடர்பாக சிலரைக் கைது செய்தனர். அவர்கள் பங்களாதேஷிகள் என்ற சந்தேகமும் ராணுவத்தினருக்கு உண்டு. ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் ஏமாற்று வேலை செய்து இந்தியாவின் குடிமக்களாக தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள்.

பல மாநிலங்களிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் பெயரளவில் மட்டுமே அப்படி உள்ளன. ஆனால் வனவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. அஸ்ஸாமில் காட்டெருமைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களையும் வெட்டி, கடத்திச் செல்கிறார்கள். சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலும் நடத்தப்பட்டு வருகிறது. காட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமாக குடியேறியதுடன் காடுகளில் வாழ தங்களுக்கு உரிமை உண்டு எனவும் அவர்கள் வாதிட்டு வருகிறார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கிவருகிறார்கள். இவ்வாறு சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுபவர்கள் பங்களாதேஷிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. முஸ்லிம்கள் என்றே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். முஸ்லிம்களைப் பகைத்துக்கொண்டால் சிறுபான்மையினரின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்ற பயம் அரசியல் கட்சிகளுக்கு- குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு- உள்ளது. இதனால் காங்கிரஸாரின் ஆதரவுடன் பங்களாதேஷிகள் எல்லா வகையான சுதந்திரங்களையும் சலுகைகளையும் அனுபவித்து வருகிறார்கள். காட்டில் வாழ்வதற்கு அவர்களுக்கு எல்லா வசதிகளுக் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. அவர்களை வெளிநாட்டவர்கள் என்று சொல்லக்கூட காங்கிரஸார் தயாராக இல்லை.

இத்தகைய விரும்பத்தகாத போக்கால் அஸ்ஸாமின் நிலவரமே முற்றிலுமாக மாறியுள்ளது. காட்டுப் பொருள்களை வனவாசிகள் பயன்படுத்த உரிமை உண்டு என்பதை பங்களாதேஷிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்து வருகிறார்கள். இதனால் இந்திய வனவளம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. சரணாலயங்கள் சிதைந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவிலேயே அஸ்ஸாமில் உள்ள காட்டுப்பரப்புதான் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு 485,674 ஹெக்டேராகும். அஸ்ஸாமுக்கு அடுத்தபடியாக ஆந்திராவில் காட்டுப்பரப்பு பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு 268,863 ஹெக்டேராகும். இந்தப் புள்ளி விவரத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மே 6ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு, ஊடகத்தில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இந்தச் செய்தி கண்காணாத மூலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. கூகுளில் இந்தச் செய்தியை தேடிப்பார்த்து உண்மையைப் புரிந்துகொள்ளலாம். இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததற்கு பல காரணங்கள் உள்ளன. வாக்குவங்கி சார்ந்த பயமும் ஓரு முக்கிய காரணமாகும். அரசின் அதிகாரபூர்வ ஆவணங்களின்படி அஸ்ஸாமில் வேறுநாட்டைச் சேர்ந்த யாரும் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கவில்லை என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டவிரோதமாகக் குடியேறவில்லை என்று பங்களாதேஷ் சொல்லிவருகிறது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஏறத்தாழ இவ்வாறுதான் சொல்லுகின்றன. ஆனால் அஸ்ஸாம் கனபரிஷத்தும், பாரதிய ஜனதாவும் ஊடுருவல் விவகாரத்தில் உறுதியாக உள்ளன. பாரதியா ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் அஸ்ஸாம் கனபரிஷத் அஸ்ஸாமில் ஆட்சியில் இருந்தபோதும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்கு திட்டவட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதையும் பதிவுசெய்யாமல் இருக்கமுடியவில்லை.

அஸ்ஸாமைப் பொருத்தவரை இரண்டு வகையான மக்கள் இருக்கிறார்கள். ஒரு தரப்பினர் தீமை எதையும் பார்ப்பதில்லை என்று கூறி கண்ணை இறுக மூடிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது தரப்பினர், தீமை நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் அதை எவ்வாறு சமாளிப்பது, எப்படி முறியடிப்பது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓரங் பகுதியை ஆக்கிரமிக்க ஊக்குவித்தவரே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர்தான் என உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சகலவிதமான உதவிகளையும் செய்துவருகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் காங்கிரஸ் தலைவர்களைத்தான் பங்களாதேஷிகள் அணுகுகிறார்கள்.

all-assam-studentse28099-union-against-the-influx-of-illegal-immigrants-from-bangladeshஅனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் 80-களில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டம் நடத்தியது. இதனால் மாற்றமும் ஏற்பட்டது. ஆனால் அது நிலையானதாக இருக்கவில்லை. இப்போதுகூட பங்களாதேஷிகளின் ஊடுருவல் தங்குதடையின்றி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பங்களாதேஷின் ஊடுருவலால் அஸ்ஸாம் மக்கள் தொகை விகிதாசாரமே மாறுதலடைந்துள்ளது. இதை உன்னிப்பாக கவனிக்கவேண்டும் என்பதுகூட இல்லை. புள்ளிவிவரங்களை சற்று கவனித்தாலே எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இந்தியாவில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர். 1994 முதல் 1997 வரையிலான காலகட்டத்தில் அஸ்ஸாமில் உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

40 சட்டமன்றத் தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட அளவு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அளவில் இந்த காலகட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் அஸ்ஸாமில் 16.4 சதவீதம் அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் புள்ளிவிவரமே அஸ்ஸாமில் எந்த அளவுக்கு வெளிநாட்டவர்களின் ஊடுருவல் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

protest1அஸ்ஸாம் போராட்டம், ஒப்பந்தம் கையெழுத்தான உடன் தணிந்துவிட்டது. ஆனால் எதற்காகப் போராட்டம் தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் அடியோடு மறைந்துவிடவில்லை. பங்களாதேஷிகளுடன் கிளைமறைவில் தந்திரமாக உறவு வைத்திருக்கும் மாநில காங்கிரஸ் அரசு என்றாலும் சரி, மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்ற செயல்படாத அரசானாலும் சரி, பங்களாதேஷிகள் பிரச்சினையை எவ்வாறு அணுகவேண்டுமோ அவ்வாறு அணுகுவதில்லை; அணுகப்போவதுமில்லை. மே 6-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு எதிர்கால சம்பவங்கள் எப்படி இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது.

அஸ்ஸாம் இன்னொரு போராட்டத்தைச் சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது. 80-களில் நடைபெற்ற போராட்டம் பெருமளவில் அமைதியாகவே இருந்தது. ’நெல்லிப் படுகொலை’ஒரு விதிவிலக்கான சம்பவமாகும். அந்தப் படுகொலையைக்கூட அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் திட்டமிட்டு நடத்தியது என்று சொல்லமுடியாது. வருங்காலத்தில் போராட்டம் வெடித்தால் அது முன்பு நடைபெற்ற போராட்டத்தைப் போல அமைதியானதாக இருக்காது. அது வீரியமிக்கதாக, வன்முறை நிறைந்ததாக இருக்கும் என்பதையே இப்போதுள்ள சூழ்நிலை புலப்படுத்துகிறது.

நன்றி: விஜயபாரதம் (04-06-2010)

subir-ghoshசுபிர் கோஷ் (Subir Ghosh)

தில்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்.

வலைப்பதிவு http://www.write2kill.in/