பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

“ஹிந்து மத சாரம் அறிந்தவன் பாரதி அவன் சொல்லியிருக்கிறான் இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து” என்கிறார் ஒரு ஃபேஸ்புக் நண்பர். சும்மா மேம்போக்காக பாரதி பாடல்களைப் படித்த நினைவில் சொல்லப்படும் அபத்தமான, சாரமற்ற கூற்று இது.

Amphetamines are a schedule ii controlled drug under the controlled substances act (csa), under the federal food, drug, and cosmetic act (fdca). Is it a sign of good things https://cityviking.com/arkansas/things-to-do-in-hot-springs-arkansas/ to come for generic doxycycline? The most serious adverse effect is the occurrence of severe bacterial pneumonia.

The brand of this product is priligy, which means "pure luck" or "good fortune" in english. Clomid 50mg price in bangladesh the fact that clomid 50mg price in bangladesh there are no side effects to these medications has Sinop brought them to the forefront for many women. The right size and brand may differ from what you see advertised in the pharmacy.

If you want to get it cheaper online, you can always buy levitra in a pharmacy, The doxycycline ketoconazole 2 cream goodrx Damnoen Saduak 100 mg tablet price of the body to the ground. Where to buy dapoxetine in south africa, dapoxetine online cheap no prescription.

இயேசு கிறிஸ்து என்று தலைப்பிட்ட மூன்று பாடல்கள் கொண்ட அக்கவிதையில் பாரதி சொல்லும் “உயிர்த்தெழுதல்” சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு மாண்டு போவதையும் பின்பு உயிர்த்தெழுவதையும் முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார் என்பதை அதை வாசிப்பவர்கள் எளிதாகவே உணர முடியும். கிறிஸ்தவர்கள் நம்புவதைப் போல அதை ஒரு வரலாற்று சம்பவமாகவோ அல்லது அதன்மூலம் இயேசு அனைவரது பாவங்களை ரத்தத்தால் கழுவியதாகவோ எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்.

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியாமக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்.
தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாசமின்றி நமை நித்தங் காப்பார்,
நம்அகந்தையை நாம்கொன்று விட்டால். (1)

கவிதை முழுவதும் மரியா மக்தலேனா (Mary Magdalene) என்ற பைபிள் கதாபாத்திரத்தை பாரதி கொண்டு வந்திருக்கிறார். பைபிளில் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும் அண்மைக்காலங்களில் டாவின்சி கோட் திரைப்படம் மூலம் தான் மரியா மக்தலேனா குறித்த பரவலான அறிதல் வெகுஜன அளவில் ஏற்பட்டது.

அன்புகாண் மரியா மக்தலேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே
போற்றுவாள் அந்த நல்லுயிர் தன்னை
அன்பெனும் மரியா மக்தலேநா
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. (2)

ஏசு சிலுவையில் அறையப் பட்டதை “தீமை வடிவினைக் கொல்லுதல்” என்று இந்தப் பாடலில் பாரதி கூறுகிறார். எந்தக் கிறிஸ்தவ மதப்பிரிவுக்காவது இந்தக் கருத்து ஏற்புடையதாகுமா என்ன?

உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃது பயின்றிட லாகும். (3)

The Passion of Christ போன்ற படங்களின் வாயிலாக சிலுவையில் அறைதல் என்ற காட்சியை ரத்தமும் சித்ரவதையும் வலியும் வன்முறையும் நிரம்பியதாக, உணர்ச்சிவசத்தை உண்டாக்குவதாக கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகின்றனர். ஆனால், பாரதி அது ஒரு குறியீடு மட்டுமே என்பதை மீண்டும் இந்தப் பாடலில் வலியுறுத்துகிறார். சிவபெருமான் திரிபுரங்களை எரித்த புராணத்தைக் குறித்து “முப்புரம் செற்றனன் என்பர் மூடர்கள்; முப்புரமாவது மும்மல காரியம்” என்று திருமூலர் கூறும் அதே வகையான விளக்கம் தான் இது. அத்துடன் மக்தலேநா – இயேசு இணையை பெண்மை – அறம் என்பதன் வாயிலாக பிரகிருதி – புருஷன் (சாங்கிய தரிசனம்), சிவ – சக்தி, சீன மதங்களின் யிங் – யாங் என்பது போன்ற ஒன்றாக பாரதி சித்தரிக்க முயல்கிறார். இத்தகைய குறியீட்டாக்கம் மூலமாக கிறிஸ்தவ மதத்தில் உள்ள மதமாற்ற/ஆக்கிரமிப்பு வெறித்தனத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்யலாம் என்று பாரதி கருதியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கிறிஸ்தவ மதமாற்றம், கிறிஸ்தவ பள்ளிகள் செய்யும் கலாசார/பண்பாட்டு அழிப்பு ஆகியவை பற்றி மிகவும் தீவிரமாகவும் காட்டமாகவும் தனது கட்டுரைகளில் பாரதி எழுதியிருக்கிறார் (உதாரணமாக, மிஷன் பள்ளிகளை விலக்கி வைத்தல் என்ற இந்தக் கட்டுரை – https://goo.gl/wF6SRx).

சர்ச் அதிகாரபீடம், மதவெறி, ஆக்கிரப்பு, காலனியம் ஆகியவை அடங்கிய கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்துள்ளனர். ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீ ரமண மஹரிஷி, ஸ்ரீஅரவிந்தர் போன்றவர்களின் கருத்துக்களில் கூட இத்தகைய இழையைக் காணமுடியும். அதன் தாக்கமே இந்தப் பாரதி கவிதையிலும் உள்ளது. இவ்வாறான ஒருவகை நல்லெண்ணத்துடன் அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ மனநிலையில் பெரிய அளவில் எந்தவகையிலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதில் ஆச்சரியமே இல்லை. மாறாக, அப்பாவி இந்துக்களைக் குறிவைத்து செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்ற பிரசாரங்களில் அந்த சான்றோர்களின் கருத்துக்கள் செலக்டிவ்வாக எடுத்தாளப் பட்டு கிறிஸ்தவத்தால் இன்றளவும் துஷ்பிரயோகம் செய்யப் பட்டு வருகின்றன. அதுதான் கண்ட பலன்.

நமது சமகாலத்தில் கிறிஸ்தவ/இஸ்லாமிய மதங்களையும் அவற்றின் சில கூறுகளையும் நல்லிணக்கம் என்ற பெயரில் சும்மாவாவது புகழ்ந்துரைக்கும் இந்து ஆன்மீகத் தலைவர்கள், அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் ஆகியோர் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். அத்தகைய தேவையற்ற புகழ்ச்சிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். பரம சத்தியமும் என்றும் நிலைத்திருக்கும் தர்மமுமாகிய இந்துமதத்தின் கருத்துக்களை நேரடியாக உள்ளது உள்ளபடி எடுத்துரைத்தாலே போதும்; உண்மையான ஆன்மீக நாட்டமும், இந்துப் பண்பாட்டின் மீது மரியாதையும் கொண்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தாமாகத் தேடி வருவார்கள். அப்படி வருபவர்களை ஏற்கவும், இந்து ஆன்மீகத்திலும், இந்து சமூகத்திலும் முறையாக சேர்க்கவுமான வழிகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்குவதே இந்து ஆன்மீகத் தலைவர்களின் பணியாக இருக்கவேண்டும். அதைவிட்டு, சும்மா அன்னிய மதங்களின் கூறுகளைப் புகழ்வதால் எந்த நல்லிணக்கமும் ஏற்படாது. அத்தகைய புகழ்ச்சிகள் இந்துக்களை மேலும் குழப்பவே பயன்படுத்தப் படும்.

(ஜடாயு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

பாரதியாரின் ‘கண்ணன் திருவடி’ : ஓர் முழுமை விளக்கம்

பலவகையிலும் பாரதி சொல்லவருவது மனித வாழ்க்கை புன்மை, பொய், தீது, நலிவுகள் நீங்கி தேவ வாழ்வு எய்தல் வேண்டும். அதற்கு நம்மிடம் வேண்டியது நன்கு அறிவு முதிர்ந்த மனப் பூர்வமான சரணாகதி.

சரணாகதி செய்ய வேண்டியது பரம்பொருளிடம். அந்தப் பரம்பொருள் பலவடிவங்கள் பெயர்கள் தாங்கி மனித குலத்தின் பல்வேறு மாந்தருக்கும் அருள் புரியக் காத்திருக்கிறது. இந்தச் செய்தியை மிகத் திண்மையாக உரைப்பதால், விளக்கமாகப் பல்வகையிலும் காட்டி நிற்பதால் ஹிந்துமதம் என்பது மனித குலத்தின் உன்னத ஆன்மிக மார்க்கம்.

இந்த உலக வாழ்க்கையில் உழலுங்கால் முதலில் வேண்டியது மனித மனம் திண்மை அழியாமல் நின்று நிதானிக்க வேண்டும். அதற்கு என்ன வழி? இரட்டைகள், இன்ப துன்பங்கள், நல்லது தீது என்று பல அனுபவங்கள் எதிருறும்போது நிதானமாக அவற்றை ஓர்ந்து நன்கு கவனம் கொண்டு இடம் பொருள் ஏவல் பொருந்த ஆள்வது என்பது ஒவ்வொரு மனிதரும் தம்வாழ்வில் கற்க வேண்டிய பாடம்.

இந்தப் பாடத்தைக் கற்க வேண்டுமானால் ஒரே சரணம் கண்ணன் திருவடி என்கிறார் பாரதி. ஸ்தித ப்ரக்ஞ நிலையைப் பற்றி உரைத்த கண்ணன் அல்லால் ஏது புகல்?

கண்ணன் திருவடி
எண்ணுக மனமே
திண்ணம் அழியா
வண்ணம் தருமே.

தடுமாட்டம் அடையாத மனம் தன் புற வாழ்வை, சமுதாய வாழ்வை, கூட்டு வாழ்வைச் செம்மையாக நடத்த வேண்டியது நிதி. நிதியை ஈட்டும் போது பெருமையைத் தொலைத்துவிடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நல்வழியில் ஈட்டிய நிதியால் பெருமையும் சேர வேண்டும். நிதியும், பெருமையும் இயக்கமில்லாத நன்மைகள். அவற்றை இயக்கிச் சமுதாய்த்திற்கும் தனக்கும் பெருநன்மை, தொடர்நன்மை விளைவிக்க வேண்டுமெனில் அந்த நிதியை அதன் சுழற்சியில் செம்மையுற ஆள வேண்டும்.

இதற்கு திருவள்ளுவர் ஓர் அருமையான உதாரணம் காட்டுகிறார். அறிவுடையவர், நன்கு அறிவு சான்றவர் ஒருவரிடம் செல்வம் சேர்ந்தது என்றால் அது எதைப் போல்? வீட்டுக் கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் நன்றுதான். ஒரு நிறுவனம் சார்ந்த கிணற்றில் நீர் நிரம்பி இருந்தால் இன்னும் நன்மை. அதைவிட எல்லாம் சிறந்தது ஊர்ப்பொது கிணற்றில், ஊர்ப்பொது நீர்நிலையில் நீரானது நிரம்பி இருந்தால் எவ்வளவு உயிரினங்கள் வாழும்! ஊர்வன, பறப்பன, திரிவன, நடப்பன என்று அனைத்தும் வாழ்ந்து போகும். ‘ஊருணி நீர்நிறைந்தற்று பேரறிவாளன் திரு’.

அதைப்போல் நிதி பெருமை எல்லாம் அதை நன்கு அனைவருடைய நல் எழுச்சி, நலமிக்க வாழ்ச்சிக்காகப் பயன்படுத்தும் போது அதனால் வருவது புகழ். கண்ணன் திருவடிகளைச் சரணடைந்தால், கண்ணன் என்னும் பெரும் தத்துவத்தை நன்கு புரிந்துகொண்டால் நிதி பெருமை புகழ் என்று அனைத்தும் அவன் தானே தருகின்றான். அவை தன்னடையே வந்து சேருகின்றன என்கிறார் பாரதி.

தருமே நிதியும்
பெருமை புகழும்
கருமா மேனிப்
பெருமா னிங்கே.

புற வாழ்வை நன்கு செம்மையுற அமைத்துக் கொண்டால் அகவாழ்வு தடையில்லாமல் மலர பெருவாய்ப்பு ஏற்படுகிறது. இங்கும் நமக்கு வேண்டியது கண்ணன் திருவடி. இல்லையென்றால் புற வாழ்வின் செழுமை அக வாழ்வின் வெறுமையாக, ஆன்மிக வறுமையாக விடம்பனம் ஆகிவிடும் அபாயம் உண்டு. ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் அந்த அபாயம் நீக்கப் படுகிறது.

பின் என்ன நடக்கிறது? வாழ்க்கை என்பது அமரர் சங்கமாக ஆகிவிடுகிறது. ‘சார்! அவருக்கு ஏகப்பட்ட காசுபணம் சேர்ந்தது சார்! பாவம் நல்ல மனிதராக இருந்தார். ஆனால் பணம் வந்து கொட்ட ஆரம்பித்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் தலைகால் தெரியாமல் தாறுமாறாக வாழ்வு போய் எல்லாம் கெட்டுப் போய்விட்டது’ – இந்தக் குற்றச் சாட்டை எவ்வளவு சுலபமாகப் பார்க்கிறோம். ஆனால் கண்ணன் திருவடி எண்ணும் மனத்தில் என்ன நடக்கிறது? கண்ணனுக்கே சரணாகதி செய்த வாழ்க்கையில் என்ன ஏற்படுகிறது? நன்மைக்கான அத்தனை ஊக்கங்களும் முகாம் இடுகின்றன.

நன்மைக்கான ஊக்கங்களைத்தான் அமரர் என்று சொல்வது. அமரர் சங்கமே அல்லவா நிரந்தர போர்டு போட்டுக் கொண்டு அங்கு கால்கோள் நாட்டிவிடுகிறது. சிறப்பான திட்டங்கள், அவை செயலாக்கங்கள், அதனால் ஏற்பட்ட பெரும் ஆக்க பூர்வமான விளைவுகள், அதனால் பெரும் சமுதாயமே நன்மையின் வழியில் உற்சாகப் பட்டுப் பயணிக்கும் பெரும் மங்களம், ஆன்மிக ஈடுபாடுகள் செழிக்கும் நிரந்தர அமைப்புகள், அவற்றின் தடைப்படா சாதனைகள் – ஆம் அமரர் சங்கமே அங்கு வேலை செய்யும் போது வாழ்க்கையில் தீமை என்பது இல்லாமலே போகிறது. இதைத்தான் ஹிந்துமத சாத்திரங்கள் ‘நிச்ரேயஸம்~அப்யுதயம்’, ’ஆன்மிக நன்மை, அதற்குத் துணையாக புற வாழ்வின் செழிப்பு’ என்று இலட்சியப் பொருள்வரைவு செய்தன.

இங்கே அமரர்
சங்கம் தோன்றும்
மங்கும் தீமை
பொங்கும் நலமே.

புலவர்கள் என்போர் நலம் என்பதை மட்டுமே விரும்பிப் பாடும் சொல்லேர் உழவர்கள் என்கிறார் பாரதி. நலமோ தீதோ என்று பார்க்காமல் பாடுவது எப்படிப் புலமையுடன் சேரும்?

அத்தகைய நலம் ஒன்றையே விரும்பிப் பாடும் புலவர்களே நீங்கள் அவ்வாறு விரும்பினால் ஒன்று செய்யுங்கள் – நிலமாமகளின் தலைவன் புகழைப் பாடுங்கள். அதாவது விண்ணின் சிறப்பையும், மண்ணின் சிறப்பையும் ஒருக்காலும் பிரிக்காதீர்கள். அப்யுதயம் – இவ்வுலக நன்மை என்பதையும், நிச்ரேயஸம் – ஆன்மிக நன்மை என்பதையும் ஒருக்காலும் துண்டுபடுத்தாதீர்கள். இருபிளவு செய்யாதீர்கள்.

நிலமாமகளின் தலைவனாகக் கண்ணனைப் பாடுங்கள். திருமகள், நிலமகள், ஆயர்குலமகள் என்று அறிவின் ஆக்கம், நிலத்தின் ஆக்கம், உயிர்க்குல ஆக்கம் என்று முவ்வித ஆக்கங்களுடன் திகழ்வதுதான் பேருயிர்த் தத்துவம். இதில் உங்கள் போதாமையால் குறைவுபடப் பாடி அதனால் குறைகள் நேராவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்!

நலமே நாடில்
புலவீர் பாடீர்
நிலமா மகளின்
தலைவன் புகழே.

அவ்வாறு நீங்கள் பாடுங்கால் ஒன்றை நன்கு கவனியுங்கள். தெய்வ வலிமை இல்லாத காலத்தில் ஒரு சின்ன தீமையும் மனித யத்தனத்தினால் தீர்க்க முயலும் போது போனால்போல் இருந்து பின்னர் ஒரு புதுத்தீமையை உண்டாக்கி ஒரு சங்கிலி எஃபெக்டை ஏற்படுத்தும். வாலு போச்சு கத்திவந்தது டும் டும் என்ற வேடிக்கை வேதனை ஆகும். ஆனால் கண்ணன் திருவடி எண்ணி நீங்கள் தேவ வலிமைக்கு உங்களை ஆட்படுத்திக் கொள்ளும்போது ஒன்று நடக்கும். அது என்னவெனில் தீமைக் கூட்டங்கள் ஆகிய அசுரப் பகை ஒன்று அல்ல இரண்டு அல்ல தொகை தொகையாய் கண்ணன் தீர்க்கத் திரும்பிவராமல் தொலைந்து போகும். அதற்கு நீங்கள் தகைசேர் அமரராக ஆகவேண்டும். அந்தச் சிறப்பை நன்கு கவனித்துப் பாடுங்கள் –

புகழ்வீர் கண்ணன்
தகைசேர் அமரர்
தொகையோடு அசுரப்
பகைதீர்ப்பதையே.

ஒன்று நிச்சயம். கண்ணன் என்பவன் கலிதீர்ப்பவன். இருள் கடி ஞாயிறு. அக இருள் போக்கும் ஞான பாநு. அவன் கலி தீர்க்கும் விளைவாக அமரர்களின் ஆர்ப்பரிப்பு கேட்கும்.

நன்மைக்கான ஊக்கங்கள் பொங்குவதையே அமரர் ஆர்ப்பரிப்பு என்கிறார் பாரதி.

இது எப்பொழுது நடக்கும்? எப்பொழுது இதை நாம் பார்ப்போம்? என்று கேட்டால் பார்க்க விழையும் பக்தர்களின் தவம்தான் இதன் கணக்கு.

தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பார் அமரர்
பார்ப்பார் தவமே.

எல்லாம் சரிதான் பாரதியாரே. ஒரு சமயம் சுப்ரமணியன் என்கிறீர். இன்னொரு சமயம் சக்தி சக்தீ என்கிறீர். இப்பொழுது கண்ணன் என்கிறீர். ஏதாவது ஒன்றை மாற்றாமல் உறுதியாகச் சொல்லுமே!

அடடா! இதுதான் குழப்பமா? தவறாமல் ஒன்றை உணர்வீர்களாக இந்தப் புவியில் உள்ள மக்களே! திருமாலாய் இருக்கட்டும், சிவனாய் இருக்கட்டும் அல்லது வானோர் எவராக இருக்கட்டும். அவர்கள் அனைவரும் ஒன்றே. ஒன்றே ஆன பரம்பொருள் பலவாய் நின்று ஒரே சக்திதான் பல உருவங்களில் அருள் புரிந்து திகழ்ந்துகொண்டிருக்கிறது. இதை நன்கு மனத்தில் நீங்கள் ஓர்ந்துகொண்டால் ஒளி ஒரு நாளும் நம்மிடை குன்றாது.

தவறா துணர்வீர்
புவியீர் மாலும்
சிவனும் வானோர்
எவரும் ஒன்றே.

ஒன்றே பலவாய்
நின்றோர் சக்தி
என்றும் திகழும்
குன்றா ஒளியே.

பாரதியாரின் ஆன்மிகம், ஹிந்துமத போதம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர் என்னும் பேரொளி விளக்கத்தில் வேர்கொண்டு எழுவது என்பதை உணரலாம்.

*****

பாரதி மரபில் ஜெயகாந்தன்

bharathiportaritசுப்ரமண்ய பாரதியை தம் வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் கொண்டிருப்பதாக எண்ணற்ற படைப்பாளிகள் சொன்னாலும் பாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். அவருடைய கதைக்கரு, பாணி ,சொல் வீர்யம், அணுகுமுறை என்று எல்லாமும் பாரதியின் தாக்கம் பெற்று இருக்கின்றன.

படைப்பவனின் தர்ம்ம்தான் அவனால் படைக்கப்படும் பாத்திரங்களுக்கு தர்மம் தருவதாகிறது. மக்களிடம் வீரம், ரௌத்திரம் காம்பீர்யம் முதலிய உணர்வுகள் இல்லை. காதலும் சோகமும் தான் இருக்கின்றன என்று ஒர் இசைக் கலைஞர் பாரதியிடம் சொன்ன போது “தற்கால மனிதர்களின் தன்மை அவ்வாறுதான் உள்ளது. ராமனும், கிருஷ்ணனும் இன்னும் பல மகா புருஷர்களும் மனிதர்களாக இந்த மண்ணில் பிறந்தவர்கள் தாம். அவர்களை எண்ணி நீங்கள் வீரத்தையும், காம்பீர்யத்தையும் பாடினால், அந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால் அது காலப் போக்கில் மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும் “ என்று பாரதி பதில் தந்ததை அடியொற்றியே தன் எழுத்து அமைந்ததாக ஜெயகாந்தன் குறிப்பிட்டு உள்ளார் .தனது பாத்திரங்கள் ’ பொய் ’ போல நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்தாதவை போலத் தெரிந்தாலும் அவை உண்மையாவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று நினைக்கிறார். ’சில நேரங்களில் சில மனிதர்களி”ன் நாயகியான கங்கா, தவறுகளுக்காக கழுவாய் தேடும் வெங்கு மாமா, ’மந்திரத்தை அறியாமல் வாழ்க்கை நடத்தின உறுத்தலில் வாழ்க்கையை விட்டு விலகிய கணபதி சாஸ்திரி போன்ற பாத்திரங்கள் அவை எழுந்த காலத்தில் முரணானவையாகத் தெரிந்தாலும் காலப் போக்கில் மனவளர்ச்சிப் பின்னணியில் பக்குவச் சிந்தனையில் நடைமுறைப் படிவங்களாக உள்ளது சாத்தியமாகி இருக்கிறது. இது குறைந்த சதவிதம் தானென்றாலும் பாரதியின் ’மனிதர்களையும் தொற்றிக் கொள்ளும்’ நம்பிக்கையை உறுதியாக்கி இருக்கிறது.

ரஷ்யா என்ற சாதாரணப் பெயரை மந்திரம் போல மாற்றிக் காட்டியது பாரதியின் ’புதிய ருஷியா கவிதை ருஷியா பற்றியோ ,அரசியல் பற்றியோ அறியாத எந்த இந்தியனும் அந்தக் கவிதையை அனுபவிக்க முடியும். ஜார் மன்னனைப் பற்றிய கவிதைதான் தன்னை ஒரு பொது உடைமையாளனாக [ சோஷலிசவாதியாக ] இனம் காட்டிக் கொள்ளத் துணை செய்தது என்று ஜெயகாந்தன் குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதை வரிகள் தன் வாழ்வை ஒவ்வொரு முறையும் பக்குவப் படுத்துகிற நிலைகளையும் காட்டுகிறார் .ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்புகளுக்காக பெருமிதம் கொள்வதோடு நின்று விடாமல் எவ்வித உறுத்தலும் இன்றி அதற்கான மூலத்தை , காரணத்தை முறையாக வெளிக்காட்டும் போதுதான் முழுமை அடைகிறான்.இது எழுத்தாளனின் அகங்காரம் என்ற கோணமாக இல்லாமல் சமூகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையிலான சித்தாந்தமாகிறது. இந்திய வரலாற்றில் தமிழ் மொழிக்கும் ,கலாச்சாரத்துக்கும் தனிச் சிறப்புகள் உண்டு. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவது தமிழரின் தனிச் சிறப்பு. அதனால் ’எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந் திங்கு சேர்க்க வேண்டும் “என்பதும் “,திறமையான புலமையெனில் அதை மேனாட்டார் வணக்கம் செய்ய வேண்டும் என்பதும் தான் பாரதி ஓர் இலக்கி யத்தின் உயர் நிலைக்கு காட்டிய அடையாளமாகிறது.:அதுவே அவன் வேண்டுகோளாகவும் நிற்கிறது. தன் மொழி அந்த நிலையை அடைய வேண்டும் என்பது அவன் விருப்பம் அதை நடைமுறைப் படுத்தி கவிஞ னின் வேண்டுகோளை மெய்யாக்கியவர் ஜெயகாந்தன் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை.ஜெயகாந்தன் சோவியத் ரஶ்யாவிற்குச் சென்ற போது அவரது கதைகள் குறித்த ஆராய்ச்சியை அங்குள்ள நண்பர்கள் காட்டிய போதும், அது குறித்து விவாதங்கள் நடந்த போதும் ஜெயகாந்தனுக்கு நினை வில் நின்றது பாரதியின் கவிதை வரிகள் தான். ’திறமையான புலமையெனில் போற்றும் விதம் ’என்பது அங்கு நடந்த கதை விமரிசனங்கள் பாரதியின் கனவுப் பார்வை சோவியத்தில் காட்சிப் படுத்தப் படுகிறது. அது போலவே மிகச் சிறந்த ரஷ்யச் சிறுகதைகளை ஜெயகாந்தன் தமிழுக்குத் தந்திருப்பதும் இந்தக் கவிதை வரிகளை உறுதியாக்கும் நிலைதான்.

jeyakanthan1கம்யூனிச சித்தாந்தத்தின் பின்னணியில் வாழ்கிற ஜெய காந்தன் லெனினை விஞ்ஞானி ,தளபதி, யுக புருஷன் என்றெல்லாம் புதிய வடிவங்களில் கண்டு புதிய கடவுளாகப் போற்றுகிறார். இந்த அணுகுமுறை “ வேதம் புதுமை செய் ” என்ற பாரதியின் கவிதைப் பின்னணியை மூலமாகக் கொண்டதுதான். வேதம்,ஆகமம், சாத்திரம், வடமொழி ஆகியவை குறிப்பிடத் தக்கவருக்கு மட்டும் தான் என்று சொல்லப் பட்டு வந்த நிலையை மாற் றுவது நவீன படைப்பாளிகளின் விருப்பமாகும். இது நிறைவேறும் வகையில் இந்துவாக இருக்கும் எவரும் கோவில்களில் அர்ச்சகர்களாக செயல்பட முடிகிற இன்றைய நிலையை ஜெயகாந்தன் சுட்டிக் காட்டுவது வேதத்தைப் புதுமை செய்வதாகத் தான் தோன்றுகிறது.

பிற மொழி அறிவு, கலப்பு ஆகியவற்றால் நவீன தமிழ் மொழி இலக்கிய வளமும் ,உயர்வும் பெற்றிருக்கிறது. மொழிகள் பழையவை ஆவதோ, சாவதோ எக்காலத்திலும் இல்லை .காலத்தின் தேவைக்கும் ,வளர்ச்சிக்கும் ஏற்றபடி தனக்குள் புதுமைகளை ஏற்படுத்திக் கொள்வது மட்டும் தான் எந்த மொழிக்கும் சாத்தியமாக முடிகிற ஓர் உன்னத நிலை. .வேத சாத்திரங்கள் மத சம்பந்தப் பட்டவையாக மட்டுமின்றி மொழி, ,வர லாறு, கலாச்சாரம், விஞ்ஞானம் என்று பல துறை தொடர்பு உடைய வையாக இருக்கின்றன எனவே சமய முரண்பாடுகளுக்கு அங்கு வழியே யில்லை என்ற கருத்தில் ஜெயகாந்தனுக்கு முழு உடன்பாடு உண்டு..அதனால் தான் “ வஸூதைவ குடும்பகம் ” என்பதோடு கம்யூனிசத்தை அவரால் தொடர்பு படுத்த முடிகிறது. மனிதர்களை ஒரு குடும்பமாக வாழச் சொல்லும் தத்துவமாக இந்த அமைப்பை அவர் பார்க்கிறார். ஒரு குடும்பமான வாழ்க்கை நெறியில் வன்முறைக்கு ,ஏற்றதாழ்விற்கு இடம் இருக்கக் கூடாது என்பது பாரதியின் கொள்கை. இந்த நோக்கத்தின் அடிப்படையில் பாரதியால் ஒரு பொதுமைச் சமுதாயத்தைப் காண முடிகிறது. அதனால் தான் .”எல்லோரும் அமர நிலை எய்தும் நன்மார்க்கத்தை இந்தியா உலகிற்கு அளிக்கும் .ஆம் உலகிற்கு அளிக்கும்“ என்று வலியுறுத்துகிறார். பாரதி உறுதிப் படுத்தும் இந்த நன்மார்க்கம் கம்யூனிசம்தான் என்பது ஜெயகாந்தனின் வாதமாகிறது.

பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது. பிறவியில் அரிசனான ஆதியை சர்மாவின் மூலம் பிராமணன் ஆக்கி தனது மகனை வேத மார்க்கத்துக்கு சமர்ப்ப்பிக்கின்ற நிலை’ என்பது போன்ற ஜெயகாந்தனின் அழுத்தமான கதைப் பின்னணி பாரதியின் உண்மை வாழ்வை மூலமாகக் கொண்டதுதான். அதீத தீட்சண்யம் கொண்ட கவிதைகளே  தன் கருத்துக்களுக்குக் தூண்டுகோலானவை என்பதை அவர் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் வெளிப் படுத்துகிறார். பாரதி குறிப்பிடுகிற ’ கிருத யுகம்’ என்பது நம் கைகளால் ஆகிற ,உருவாக்கப் படுகிற புதிய யுகம்” என்று தம் சோவியத் நண்பரின் கருத்தைச் சொல்லி நடைமுறை உலகின் சிந்தனை வளர்வுத் தேவையை முன் வைக்கிறார். ஒரு கவிதைக்குப் பொருள் கொள்வதும் கூட ஒருவனின் எண்ண வளர்ச்சியில் தான் இருக்கிறது .இது நடைமுறை உலகுக்குப் பொருத்தமான அணுகுமுறை என்பதில் இருவருமே ஒன்று படுகின்றனர்.

பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு.மொழி ,இன வேறுபாடுகள் எல்லா மண்ணிலும் உண்டு. ஆனால் உயர்ந்தவர்களை உலகத்துக்கு அறி முகம் செய்து புகழ் சேர்க்கத் தயக்கம் காட்டுவது மிகப் பெரிய தவறாகி விடும். சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. பாரதிக்கும், புஷ்கினுக்கும் அதிக ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பொதுமைவாதிகள்தான் ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற நிலைதான் பொருத்தமானதாக இல்லை. உயர்ந்த சித்தாந்தமும், உன்னத கவிதைப் பின்புலமும் கொண்ட நம் கவிஞனுக்கு ஏற்ற அடையாளம் தரப் படவில்லை. ஒரு படைப்பையோ படைப்பாளனையோ சரியாக அங்கீகரிப்பது அந்த நாட்டின் ,மண்ணின் கடமையாகும். இனியாவது பாரதியை இந்தியா விஸ்வரூப தரிசனத்தில் கண்டு விட்டு அவரை உலகிற்கு அறிமுகப் படுத்த வேண்டும் என்பது ஜெயகாந்தனின் விருப்பம்.

வாழ்க்கையை நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியோடு நேசிக்கும் போதுதான் தனி மனித உணர்வுகள் பொதுப் பார்வை உடையதாக அமைய முடியும். பாரதியின் கவிதை வரிகள் அனைத்தும் மகிழ்ச்சியின் ஊற்றுதான் அது .சகவுணர்வு உடையவர்களையும் இணைப்பதாகிறது. சம தர்ம ஞானமும் ,சர்வதேச ஞானமும் ஒருங்கிணைந்த தீர்க்க தரிசனப் பார்வை பாரதியினுடையது.ஒரு படைப்பாளியாக மனநிறைவோடு ஜெயகாந்தன் தன் பாத்திரங்களைப் படைத்து இருப்பது குறிப்பிடத் தக்கது.

“அறிவே தெய்வம் “ என்ற பாரதியின் சிந்தனை தனக்குப் புரியாத நிலையாக இருந்த போது இரவி ,மதி ,விண்மீன் ,பார்க்கிற பொருள் ,எழுதுகோல் என எல்லாமும் தெய்வம் எனக் காட்டி அறிவின் திறனை வெளிக் கொண்டு வந்து புரிய வைத்தது கவிதைகள் தான் என்று சொல்கிறார். அதோடு நின்று விடாமல தனக்கு தன்னம்பிக்கை தந்தது பாரதிதான் என்கிறார். அதனால் பாரதியின் மீது வழிபாட்டு உணர்ச்சி அவருக்கு ஏற்படுவது இயல்பாகிறது.

jeyakandanதனக்குப் பிடித்த பாரதியின் கவிதை வரிகளை பல இடங் களில் ஜெயகாந்தன் கட்டுரைத் தலைப்புகளாக்கி இருக்கிறார். ஆனால் அது சொல்லப் பட்டுள்ள பின்புலம் சிறிது வித்தியாசமானது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. ஏழை மக்களுக்காக உதவ வேண்டும் என்று மகாத்மா காந்தி மகளிரிடம் நகைகளைக் கேட்ட போது யோசனை எதுவுமின்றி உடனடியாகக் கொடுத்த பெண்களின் உயர்வைச் சொல்லி , வரலாற்றில் பதிந்த நிகழ்வுகளை நம் கால நிகழ்வுகளோடு இணைத்துப் பார்த்து இன்றைய நிலைக்காய் வருந்துவதைத் தான் ’ மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை’ கட்டுரையில் காட்டுகிறார். நகைகளை விரும்பி ஏற்கும் தற்போதைய மடமையை இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது.” சிங்களத் தீவி னுக்கோர் பாலம் “ என்னும் கவிதை வரித் தலைப்பில் தேசங்களிடையே ஏற்படும் ஒற்றுமையைத் தான் வலியுறுத்த வேண்டும்..நாடுகளுக்கு இடை யேயான உண்மை உறவு என்பது இலக்கியம் ,கலைகள் ,அதைச் சார்ந்த ஒன்றுபட்ட மக்களின் வாழ்க்கை ஆகியவற்றால் தான் உருவாகும்” என்ற கருத்து வலியுறுத்தப் படுகிறது.அந்த அடிப்படையில் தனது படைப்புகள் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப் படும் போதுதான் தன்னால் தமிழனாகப் பெருமை பெற முடியும் என்று சொல்லும் அவர் பார்வை மற்றவர்களிடம் இருந்து மாறுபடுகிறது. வாழ்க்கையின் மீதும், தன் மீதும்,மனிதர்கள் மீதும், எதிர்காலத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக ஜெயகாந்தனின் படைப்புகள் உள்ளன. எல்லாக் காலத்திலும் எழுத்தின் பொதுத் தன்மை என்பது நம்பிக்கை தான் .தன் கவிதைகளால் சமுதாயப் புரட்சியை ,விடுதலை உணர்வை கட்டாயமாக ஏற்படுத்தித் தர முடியும் என்று பாரதி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போலவே பாரதியின் வழியில் ஜெயகாந்தனிடமும் அந்நம்பிக்கை தலை தூக்கி நிற்கிறது.

“தமிழனாகப் பிறக்காமல் இருந்து தமிழை அறிய நேர்ந்தி ருந்தால் மொழியின் பெருமையை நன்றாக உணர முடியும் உலகம் ஒரு நாள் அப்படி உணரத்தான் போகிறது. இந்த நம்பிக்கையின் தீர்க்க தரிசனம் தான் பாரதி “என்ற ஜீவாவின் கருத்தை தனது ’சிந்தைகள் ஆயிரம் “கட்டுரைத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிட்டு இருப்பது அவர் பாரதிக்குச் செய்யும் உயர்ந்த மரியாதையின் அடையாளம் என்றே தோன்றுகிறது.

பாரதி கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள் என்று ஒரு சிறிய பதிவை 2006ம் ஆண்டு டிசம்பரில் எழுதியிருந்தேன். அரவிந்தன் நீலகண்டன் அதைப் பாராட்டினார். அதற்கு முன்பு 3 வருடங்களாக அ.நீ  எழுத்துக்களைப்  படித்து வந்தாலும், அப்போது தான் நேரடியான பழக்கம் ஏற்பட்டிருந்தது.  விரைவில் சந்தித்தோம்.

அந்த முதல் சந்திப்பில் ஒரு அழகிய போஸ்டரை எனக்காக அ.நீ வடிவமைத்து எடுத்து வந்திருந்தார்.   எனது படிப்பறையை அணி செய்யும் அந்தப் போஸ்டரை  பாரதி பிறந்த நாள் அன்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கவி தரிசனத்தை இசைத்திடும் அறிவியல்

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்.
இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்..

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது.
அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய்.
எனவே, அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.
அகில முழுதும் சுழலுகிறது… 

எனவே, இவ் வையகம் உயிருடையது.
வையகத்தின் உயிரையே காற்றென்கிறோம்.
அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல்செய்கின்றோம்.

– மகாகவி பாரதி,  வசன கவிதை – காற்று.

அண்மைக் காலங்களில் உருவாகியுள்ள ஒரு அறிவியல் கோட்பாடு இந்த பூமி ஒரு உயிரினம் அல்லது அதி உயிர் (Super organism) என்பதாகும்.

ஜேம்ஸ் லவ்லாக் எனும் உயிர் இயற்பியலாளரும், லின் மர்குலிஸ் எனும் நுண்ணுயிராளரும் இணைந்து பல ஆண்டுகள் பல துறைகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த கோட்பாட்டினை உருவாக்கியுள்ளனர்.

இந்த பூமியின் காற்று மண்டலம், பல்வேறு தனிமங்களின் சுழற்சி ஆகிய புவியியல் நிகழ்வுகளும் இப்பூமியின் உயிரினங்களும் ஒன்றோடொன்று தெருங்கிய தொடர்பு கொண்டவை.  அவை இணைந்து பரிணமித்தன. இன்றும் பரிணமிக்கின்றன.

மனிதனும் பிற பிராணிகளும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் பூமி எனும் ஒரே அதி-உயிரின் பாகங்களே ஆகும். எனவே சுற்றுச் சூழலையும் உயிரினங்களையும் பெரும் உயிரின் பிரிக்க இயலாத முழுமை அமைப்பாக காண வேண்டும். இந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளும் வடிவமைக்கப் பட வேண்டும்.

பூமியின் இந்த உயிர்த்தன்மையை பழமையான கிரேக்கர்களின் பூமித்தாய் தெய்வமான Gaia எனும் பெயரால் அழைக்கிறார் ஜேம்ஸ் லவ்லாக்.  சுருக்கமாக கூறினால் “இவ்வையம் உயிருடையது”.

bharati-gaia-poster

மகாகவி பாரதியின் புனித நினைவில்…

செப்டம்பர் 11 – மகாகவி பாரதியின் நினைவு நாள்.

மகாகவி பாரதி அமரர் ஆகி 91 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார், “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது” என்றார். அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு. இப்போது பாரதியைப் பேசாத, புகழாத, அவன் பாடல்களைப் பாடாத வாய்களே இல்லை எனலாம்.

அவர் வரலாற்றைப் பாடப் புத்தகங்களில் எழுதும்போது, அவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை மிதித்து இறந்து போனார் என்றே எழுதி இளம் உள்ளங்களில் தவறான செய்தியைப் பதித்து வருகின்றனர். அது உண்மையல்ல. திருவல்லிக்கேணி கோயில் யானையின் பெயர் அர்ஜுனன், 40 வயது யானை அது. பாரதியை ஒதுக்கிக் தள்ளியபின் சோர்ந்திருந்த அந்த யானை 1923 ஆகஸ்டில் இறந்து போய்விட்டது. அந்த யானையால் ஒதுக்கித் தள்ளப்பட்டு சிலகாலம் படுத்திருந்த பாரதி பின்பு உடல்நலம் தேறி பணிக்குச் சென்றார். அவர் இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1921 ஆகஸ்ட் மாதத்தில் ஈரோட்டையடுத்த கருங்கல்பாளையம் எனும் ஊரில் ஒரு வாசகசாலையின் ஆண்டுவிழாவில் அவ்வூர் வக்கீல் அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசிவிட்டு வந்தார். அப்போது அவர் பேசிய தலைப்பு என்ன தெரியுமா? “மனிதனுக்கு மரணமில்லை” என்கிற தலைப்பில்தான் அவர் அங்கு பேசினார்.

அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர் அப்போதைய காங்கிரஸ்காரர். வழக்கறிஞர். பாரதி சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு புகைவண்டி மூலம் பயணம் செய்து வந்தார். அவரை ரயில் நிலையத்திற்குச் சென்று வரவேற்க அந்த வக்கீல் ஒரு இளைஞரை அனுப்பி வைத்தார். அந்த இளைஞர்தான் பின்னாளில் ச.து.சு.யோகி என்று பெயர் பெற்ற அறிஞர். பாரதியாரை எதிர்பார்த்து ரயில் நிலையம் சென்ற அவர் பாரதியைப் பார்க்க முடியவில்லை. நெடுநேரம் காத்திருந்து வந்தவர்களையெல்லாம் உற்றுப்பார்த்துவிட்டு ஊர் திரும்பி வக்கீலிடம் சென்று வண்டியில் பாரதி வரவில்லை என்று சொன்னார்.

அவர் சிரித்துக் கொண்டே, அப்படியா, இதோ பாருங்கள் இவர்தான் சுப்பிரமணிய பாரதி என்று அருகில் உட்கார்ந்திருந்தவரைச் சுட்டிக் காட்டினார். தன்னை வரவேற்க ஒரு இளைஞர் வந்திருக்கிறார் என்பதை அறியாமல் ரயிலை விட்டு இறங்கி பாரதியார் ஒரு வண்டி பிடித்துக் கொண்டு கருங்கல்பாளையம் வந்து சேர்ந்து விட்டார். அந்த இளைஞர், தான் ஏமாந்ததற்காக வெட்கினார். அவர் ஏமாறவும் ஒரு காரணம் இருந்தது. தலையில் முண்டாசும், மேலே கருப்புக் கோட்டுமாக பாரதியை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார் இவர் ஆனால் பாரதி வந்தபோது தலையில் அவருடைய வழக்கமான முண்டாசு இல்லை. இளைஞரும் ஏமாந்து போனார். அவ்வளவே!

சரி! இனி பாரதியாரை முதன்முதலாகப் பார்த்த ச.து.சு.யோகியின் வாக்கால் பாரதியாரை நாமும் பார்க்கலாம். அவர் சொல்கிறார், “நிமிர்ந்த நடை; நேரான பார்வை; நெட்டு நிலைத்த நெருப்பு விழிகள் கனல்வது போன்ற கம்பீரமான முகம்; மொட்டைத் தலை, முறுக்கு மீசை; விறைப்பான மேனி; வெட்வெடுப்பான வீர்யம்; எலுமிச்சம்பழ நிறம்; எடுப்பான பெருமிதம்; இடிபோன்ற குரல்; துடிப்பான செயல்; கையில் ஓர் ஃபிரெஞ்சு நாவல் — இதுதான் நான் முதன்முதல் கண்ட பாரதி” இப்படிச் சொல்கிறார் ச.து.சு.யோகி.

சமீபத்தில் சென்னையிலிருந்து வெளியாகும் “பிரம்ம ஞான தீபம்” எனும் பத்திரிகையிலிருந்து தஞ்சையில் என்னைக் காண ஒரு பெண்மணி வந்திருந்தார். உங்களுடைய பாரதி இலக்கியப் பயிலகத்தில், மகாகவி பாரதியார் ஈரோடு கருங்கல்பாளையம் நூலக ஆண்டு விழாவில் பேசிய கடைசி உரை கிடைக்குமா என்றார். எதற்கு என்ற என் வினாவிற்கு அவர்கள் நடத்தும் ஒரு யோகா அமைப்பின் தலைவர் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர், அவர் வீட்டில்தான் அந்த சொற்பொழிவு நடந்தது என்றார். நானும் அந்தச் சொற்பொழிவை அவர்களுக்குக் கொடுத்தேன். அவர்களுடைய பிரம்ம ஞான தீபம் இதழில் அது பிரசுரமாகியது.

மகாகவி பாரதியின் அந்தக் கடைசி சொற்பொழிவு நடந்த இடம் கருங்கல்பாளையம் என்று சொன்னேன் அல்லவா. அங்கு நடந்த அந்த வாசகசாலை ஆண்டுவிழா பற்றி ச.து.சு.யோகி சொல்லுவதையும் இப்போது பார்க்கலாம்.

“அன்று எங்கள் ஊர் வாசகசாலையில் ஆண்டு விழா. தலைவர் பாரதி. மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சு முட்டும் முழக்கடித் தமிழ். அது வரையில் மேடையில் அமர்ந்திருந்த பாரதி ஆடவில்லை, அசையவில்லை. சுவாசம் விட்டாரோ என்னவோ, அதுகூட சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. மீசையை முறுக்கும் போது அன்றி, வேறு யாதொரு சலனமும் கிடையாது. பேசுவதற்கு அவருடைய முறை வந்தது. எழுந்தார் – எழுந்தார் என்பது தப்பு; குதித்தெழுந்தார், அவர் அமர்ந்திருந்த நாற்காலி உருண்டது. மேஜை முன்னே தாவித் தயங்கியது. அவருடைய பேச்சு? அதில் வாசக சாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்களுக்கு மூன்று நிமிஷங்கள் முடிவுரைகூட இல்லை.

எடுத்த எடுப்பிலேயே உரத்த குரலில் அவர் பிரகடனம் செய்தார், “நான் மனிதருக்கு மரணமில்லை என்கிறேன்” என்று. தொடர்ந்து பாட ஆரம்பித்தார். அடடா! அவர் பாடியதைக் கேட்க வேண்டுமே! அது என்ன மனிதனுடைய குரலா? இல்லை, இடியின் குரல்; வெடியின் குரல். “ஓஹோஹோ” என்று அலையும் ஊழிக்காற்றின் உக்கிர கர்ஜனை. ஆனால், அவைகளைப் போல வெறும் அர்த்தமில்லாத வெற்று ஓசையல்ல. அர்த்த புஷ்டியுள்ள அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக் குரல்.

“ஜயமுண்டு பயமில்லை மனமே – இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு”

ஆம்! இந்தப் பாடலைத்தான் நான் முதன்முதலாக அவர் வாய்மூலம் பாடக்கேட்டேன். அதன் முத்தாய்ப்புக்கு மேல் முத்தாய்ப்பான, ஜாஜ்வல்ய ஜங்காரத்வனி, மூர்ச்சனாக்ரமம் தவறாது மூர்க்காவேச முழக்கமான மூர்த்தண்யம், அண்டாண்டங்களை எல்லாம் துண்டு துண்டாய் உடைத்திடுவது போன்ற உத்தண்ட சண்டமாருத வீர்யம். அன்று போலவே இன்றும் என் நெஞ்சில் கனல் மூட்டுகிறது.

பாட்டு முடிந்தவுடன் ‘பாரறியோம், விண்ணறியோம்’ என்றபடி அவர் பாடக்கேட்ட நாங்கள் இவ்வுலகத்தை விட்டு ‘ஜயமுண்டு பயமில்லை’ எனும் ஜீவன் முக்தி உலகத்திலே முருகன் துணையுடன், தேவ தேவியின் சந்நிதானத்திலே சஞ்சரித்தோம் என்றால் அது மிகையாகாது.

அன்றைய அவருடைய சொற்பொழிவின் சாரத்தைத்தான் “பாரதி அறுபத்தாறு” எனும் பாடலில் பிழிந்து கொடுத்திருக்கிறார். “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்” என்று தொடங்கும் பாடலில் பின்னர் வரும் வரிகள்தான் கருங்கல்பாளையம் சொற்பொழிவின் சாரம். அதில் சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

மரணத்தை வெல்லும் வழி

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய் விட்டார்.

பொந்திலே யுள்ளாராம், வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம், பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கராச்சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமாநுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன், காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை, சாவுமில்லை! கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை,

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே
வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர் மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பது நம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ, படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேது வந்தால் எமக்கென் னென்றே

வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு” பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம், தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை, தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!

இந்தச் சொற்பொழிவைப் பற்றியும் தனது கருங்கல்பாளையம் விஜயம் பற்றியும் இவர் “சுதேசமித்திரன்” பத்திரிகையில் தாமே எழுதி வெளியிட்டார்.

1921 செப்டம்பர் முதல் தேதி, இறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. மெலிந்த பலஹீனமான உடல், நோயின் உக்கிரம் தாங்கவில்லை. விரைவில் அது ரத்தக் கடுப்பு நோயாக மாறியது. “சுதேசமித்திரன்’ பத்திரிகையிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் செப்டம்பர் 12ஆம் தேதி வேலைக்கு வந்துவிடுவதாகத் தெரிவித்தார். கொடுமை என்னவென்றால் அன்றுதான் அவர் உடலுக்கு எரியூட்டப்பட்டது.

அவருடைய இறுதி நாள்! 1921 செப்டம்பர் 11. அன்றைய இரவு அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். சில நண்பர்கள் உடன் இருக்கிறார்கள். அவர்களில் நீலகண்ட பிரம்மச்சாரியும் ஒருவர். அவர் சொல்லும் செய்திகள் இதோ.

“ஸ்ரீ டி.பிரகாசத்தின் சகோதரரான ஹோமியோபதி டாக்டர் டி.ஜானகிராமன், பாரதியைப் பார்க்க அழைத்து வரப்பட்டார். டாக்டர் பாரதியாரிடம் வந்து “உடம்புக்கு என்ன செய்கிறது?” என்றார். அவ்வளவுதான் வந்ததே கோபம் பாரதியாருக்கு. “யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு ஒன்றும் உடம்பு அசெளக்கியம் இல்லை. உங்களை யார் இங்கே கூப்பிட்டது? என்னை சும்மா விட்டுவிட்டுப் போய்விடுங்கள்” என்று உரக்கக் கத்தினார். வேறு வழியின்றி டாக்டர் போய்விட்டார்.

பாரதியாரின் வீட்டுக்கருகில் வசித்து வந்த ஒரு வயதான அம்மாள் பாரதியிடம் வந்து “என்னப்பா பாரதி, உனக்கு உடம்பு சரியில்லையாமே…” என்று கேட்கத் தொடங்கியதுதான் தாமதம், வந்ததே கோபம் பாரதிக்கு. “யாருக்கு உடம்பு சரியில்லை? எனக்கு எல்லாம் சரியாகவே இருக்கிறது. என்னை இப்படி வதைப்பதைத் தவிர உங்களுக்கெல்லாம் வெறு வேலையே இல்லையா?” என்று கூச்சலிட்டார்.

அன்றிரவு, பாரதி நண்பர்களிடம் அமானுல்லா கானைப் பற்றிய ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த அமானுல்லாகான் ஆஃப்கானிஸ்தானில் அரசராக இருந்தவர். அதன்பின் முன்னிரவு முழுவதும் பெரும்பாலும் மயக்கத்தில் இருந்தார். இரவு சுமார் 1.30 மணிக்கு அந்த மகாகவியின் உயிர் பிரிந்தது. ஒரு மகாகவியின் வரலாறு இவ்வாறு முடிந்தது. எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாரதி போன்ற ஒரு மகாகவியின் நினைவு மக்கள் மனங்களில் நீங்காமல் நிற்கும். வாழ்க பாரதி புகழ்!

ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007