ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

எப்போதுமே தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றம், இந்து சமய வளர்ச்சி ஆகியவைகளை தம் வாழ்நாள் முழுவதும் குறிக்கோளாக கொண்டு அதற்காக செயலாற்றிய ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமென்றால் நாம் சுவாமி சகஜானந்தரை மட்டுமே காட்ட முடியும். தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர். தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையிலும் கூட தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக பல்வேறு ஆதாரங்களுடன் நிரூபித்து அதை தாழ்த்தப் பட்டவர்களிடையே பிரச்சாரமும் செய்தவர் நமது சுவாமிஜி. அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய செய்திகளை நாம் கற்றுக் கொள்வதற்கு இருக்கிறது.

Doxycycline - generic doxycycline for cheap, cheapest, cheapest cost. I need buy hydroxyzine hcl to charge up my phone where can i buy prednisone this is not an easy choice. Dietary changes for men who have high blood pressure or heart failure: a consensus report from the national heart, lung, and blood institute nutrition committee.

The following drugs can be used to make prednisone without a prescription. The key works, but i never had a chance to try to clomid 50 mg price in uae program it before. You can also use online pharmacies such as cvs pharmacy and buy dapoxetine at lowest prices.

Hi all i'm 28 weeks and had my first son with my husband a week ago and i'm now pregnant with our second child. Side effects of the sumatriptan succinate include: allergic reaction, dizziness, dry buy clomid without prescription mouth, increased heart rate, increased blood pressure and upset stomach. Teva is a top-rated brand with a proven track record of quality, convenience, and safety.

தாழ்த்தப் பட்டவர்களுக்கு கிறிஸ்தவம் கல்வி கொடுத்து முன்னேற்றியது என்ற பிரச்சாரம் சகஜானந்தர் வாழ்வில் பொய்யாகிப் போனது. அவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி வழங்கியதற்கான காரணம் சகஜானந்தரின் வாழ்வின் மூலம் உலகுக்கு வெளிப்பட்டது. அமெரிக்கன் ஆர்க்காடு சமயப் பரப்பாளர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய அவர் அங்கு தீண்டாமையின் கோர முகத்தை கண்டார். மாணவர்களை வேற்றுமைப் படுத்தி பார்க்கும் கிறிஸ்தவர்களின் போக்கினை உணர்ந்தார். ஆயினும் தன் கல்வியில் கவனம் செலுத்தினார். பின்பு உயர்நிலைக் கல்வி பயில திண்டிவனத்தில் இருந்த அமெரிக்கன் கிறிஸ்தவ பள்ளியில் 1901ல் சேர்ந்தார்.

சகஜானந்தர் அப்பள்ளியில் பைபிளை ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை விட அதிக ஆற்றல் பெற்றிருந்தார். இதனால் கவரப்பட்ட பாதிரிகள் அவரை கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுமாறும் கிறிஸ்துவத்தை தழுவுமாறும் அவரை வற்புறுத்தினர். அவர் ஏற்க மறுத்துவிட்டார். அப்போதுதான் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு கல்வி கொடுப்பது எதற்காக என்பது வெட்ட வெளிச்சமாகியது. கிறிஸ்தவ மதத்தில் சேர மறுத்ததால் அவருக்காக கிறிஸ்தவ பள்ளி 1903ஆம் ஆண்டில் செலவு செய்த தொகையை திருப்பிக் கேட்டது. மேலும் அவர் விடுதியில் தங்கிப் படித்த தால் அறை மற்றும் உணவு தொகையென 60 ரூபாயை அவரது தந்தையிடம் வசூலித்தனர்.

இதனால் பள்ளியில் இருந்து விலகிவிட்ட சகஜானந்தர் தன் பெற்றோருடன் வேலை தேடி கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயலுக்கு சென்றார். அங்கு அவரின் ஆன்மீகத் தேடல் அதிகமாகியது. ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டும் பல ஆன்மிக நூல்களையும் பயின்றும் பல ஞானிகளிடம் கற்றும் தன்னுடைய ஆன்மிக அறிவையும் வேட்கையையும் அதிகப்படுத்திக் கொண்டார்.

திருமண எண்ணத்திலிருந்து அவர் மனம் விலகியது. 1907ம் ஆண்டு தன்னுடைய 17ம் வயதில் துறவு
நிலையை மேற்கொண்டார். சென்னை வியாசர்பாடியில் இருந்த கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளிடம் சென்று ஆன்மிகக் கல்வி கற்றார். இவர் பெற்றருந்த ஆன்மிக அறிவு, இறை உணர்வைக் கண்டு சிவப்பிரகாச சுவாமிகளே முனுசாமி என்ற இவரின் இயற்பெயரை சகஜானந்தம் என்று மாற்றி அழைத்தார்.

தேசப்பற்றாளர் வ.உ.சியிடம் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களைக் கற்றார். விசார சாகரம், மெய்கண்ட சாத்திரம், ஆதி ரகசியம், அஷ்ட பிரபந்தம், திருவெண்பா, கைவல்யநவநீதம் மற்றும் கம்பராமாயணம் போன்ற நூல்களை ஆழமாகப் படித்தார். சீரங்கம் சென்று பிரதிவாதி பயங்கரம் சீனிவாசாச்சாரியரிடம் சம்ஸ்கிருதம் பயின்றார். அதன் பிறகு ஞான வாசிஷ்டம், பகவத்கீதை, வால்மீகி இராமாயணம் மற்றும் பல சமஸ்கிருத நூல்களைக் கற்று தேர்ந்தார்.

1910ல் சென்னை மண்ணடியில் வாழ்ந்த ஆ.முருகேசப் பிள்ளை என்பவருடன் சிதம்பரம் வந்து சேர்ந்தார். 1916ல் அங்கு நந்தனார் மடமும் நந்தனார் கல்விக் கழகமும் தாழ்த்தப் பட்டவர்களின் கல்விக்காக ஆரம்பித்தார். மடமும் கல்விக் கழகமும் ஆரம்பிக்க பல்வேறு சமுதாய மக்கள் உதவினர். 6 சென்ட் இடமுள்ள மடம் மற்றும் 24 சென்ட் சுற்றியுள்ள நிலத்தைப் பெற வி.இராமசாமி ஐயர், இராமகிருஷ்ணப் பிள்ளை, திவான் பகதூர் கேசவப் பிள்ளை, டாக்டர் நஞ்சுண்ட ராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், திவான் பகதூர் சுப்புராயலு ரெட்டியார், தாசில்தார் இராமசாமிப் பிள்ளை முதலியோர் உதவினர்.

1916ல் தாழ்த்தப் பட்டவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட நந்தனார் பாடசாலை பிரம்மஸ்ரீ என்.கோபாலசாமி ஐயங்கார் அவர்களால் திறக்கப்பட்டு முதன் முதலில் 20-5-1917ல் தண்டேஸ்வர நல்லூர் மாரிமுத்து என்பவரை ஆசிரியராக கொண்டு முதலில் 25 பிள்ளைகளோடு நடைபெற ஆரம்பித்தது.

மடாலயம், பாடசாலை, சத்திரம் முதலியவற்றின் போஷகர்களாக திவான்பகதூர் ஜஸ்டிஸ் சதாசிவ ஐயர், அட்வோகேட் ஜெனரல் எஸ்.சீனிவாச ஐயங்கார், சென்னை சுதேசமித்திரன் பத்திராபதிபர் ஏ.ரங்கசாமி ஐயங்கார், திவான்பகதூர் பி.கேசவப்பிள்ளை, டாக்டர் எம்.சி.நஞ்சுண்டராவ், சி.ஆர்.துரைசாமி முதலியார், ஐகோர்ட் வக்கீல், சிதம்பரம் பிளீடர் இராமசாமி ஐயர், சிதம்பரம் தாலுக்கா போர்ட் பிரசிடென்ட்டும் முனிசிபல் சேர்மனும் கவுன்சிலருமான கே.வராகாச்சாரியர் முதலானோர் இருந்து வந்தனர்.

பாடசாலை கட்டிமுடிக்க 1918ல் அஸ்திவாரக் கல் திவான்பகதூர் ஜஸ்டிஸ் டி.சதாசிவ ஐயர் அவர்களால் நாட்டப் பட்டது. பாடசாலைக்கு என நிதி கொடுப்பவர்கள் தன்னுடைய விலாசத்திற்கோ அல்லது சுதேச மித்திரன் பத்திராபதிபர் ரங்கசயாமி ஐயங்கார் அவர்களுக்கோ அனுப்பினால் அவர்கள் உடனே எங்களுக்கனுப்பி விட்டு பத்திரிகையிலும் பிரசுரம் செய்வார்கள் என்ற விளம்பர அறிக்கை சுவாமி சகஜானந்தரால் கொடுக்கப்பட்டது.

1919ல் ராஜாஜி சிதம்பரத்திற்கு வருகைபுரிந்தார். சுவாமி சகஜானந்தர் அவரை நேரில் சந்தித்து மடமும், நந்தனார் பள்ளியும் தொடங்கப்பட்டதன் உண்மைக் காரணத்தை விளக்கினார். நிதி நெருக்கடியையும், இடத்தின் பற்றாக்குறையையும் விளக்கினார். சுவாமிகளின் பொதுப்பணியைப் புரிந்துகொண்ட ராஜாஜி நந்தனார் மடத்தின் மேம்பாட்டிற்குரிய நிலத்தை அரசு வழங்க வேண்டுமெனத் தென்னாற்காடு மாவட்ட கலெக்டருக்குக் கடிதம் எழுதினார். இதன் மூலம் 52 ஏக்கர் புறம்போக்கு நிலம் கொடுக்கப்பட்டது. மேலும் இலங்கை, பர்மா, இரங்கூன், மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களிடம் உரையாற்றி கழகத்திற்கென நிதியைப் பெற்றார். இந்த உழைப்பின் காரணமாக 1927ல் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. மேலும் கல்விக் கழகம் வளர வேண்டும் என்பதற்காக 1939ல் அரசே நேரடியாக நடத்த வேண்டுமென சுவாமிகள் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு அவரின் தலைமையிலேயே தொடர்ந்து நடத்திவர அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பள்ளியில் கடுமையான ஒழுக்க விதிகள் கடைபிடிக்கப்பட்டன. மாணவர்கள் காலையில் நீதி போதனை வகுப்பில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். கட்டாயம் மாணவர்கள் விபூதி அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தேவாரம் முதலிய பாடல்கள் போதிக்க ப்பட்டன. பள்ளிகளில், விடுதிகளில் படிக்கும் மாணவர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும் என்று போதித்து வந்தார். இதனை மாணவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நந்தனார் விடுதியில் எப்போதும் சைவ உணவுதான் பரிமாறப் பட்டது. அரசாங்கம் நந்தனார் பள்ளியையும் விடுதியையும் எடுத்துக்கொண்ட போதிலும் சுவாமிஜியின் கருத்துப்படி சைவை உணவையே வழங்கிட சம்மதித்தது. இதை எழுத்துப் பூர்வமாகவே சுவாமிஜி எழுதி வாங்கிக் கொண்டார்.

எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார். வ.உ.சியின் சீடராக இருந்த சுவாமி பின்னாளில் வ.உ.சி.எழுதிய நூல்களான அகமே புறம், மெய் அறம் போன்றவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளது அவரின் புலமைக்கான சான்றாகும். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்ப் புலவர்களில் ஒருவராக கருதப்பட்டார். 1940ல் அண்ணாமலை பல்கலைக் கழகம் அவரை தமிழறிஞர் என்று போற்றி பாராட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ் அறிஞர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. 1960ல் திருநெல்வேலியில் இருந்து கழக வெளியீடாக வெளிவந்த ‘தமிழ்ப்புலவர் வரிசை’ எனும் நூலில் இருபது தமிழ்ப் புலவர்களை அவர்களின் படைப்பாற்றல் கொண்டு வரிசைப்படுத்தி உள்ளனர். இதில் எட்டாவது இடத்தில் சகஜானந்தரின் பெயர் இடம் பெற்றுள்ளது அவரின் தமிழ்ப்புலமைக்கான சான்றாகும்.

சுவாமி சகஜானந்தர் அப்போதைய அரசியலின் தேவையைக் கருதி அரசியலில் நுழைந்தார். அன்று தமிழகத்தில் தாழ்த்தப் பட்டவர்களுக்கென இயங்கிக் கொண்டிருந்த அனைத்திந்திய ஆதிதிராவிடர் மகாஜன சபாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த சபாவின் சார்பாக 1926 முதல் 1932வரை சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பிராக இருந்தார். பின்பு காங்கிரஸ் கட்சியில் உறுப்பிராகி 1936-37லிருந்து 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டார். அரசியல் களத்தில் காந்தியடிகள், ராஜாஜி போன்றோரின் அன்பையும் பாராட்டையும் பெற்றிருந்தார். தான் காங்கிரசில் சார்ந்துள்ள போதும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது தீமை காங்கிரசால் ஏற்பட்ட போது அதை கடுமையாக விமர்சித்தும் இருக்கிறார்.

தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்களே

சகஜானந்தர் தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களை ‘ஆதி திராவிடர்’ எனக்கூறாமல் ‘ஆதி இந்துக்கள்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று கோரியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தை மேற்கொண்டவர்களெனக் கருதப் படுவதால் அவர்களும் இந்துக்களே என்று கூறி சகஜானந்தர் தேவஸ்தான கமிட்டிகளில் தாழ்த்தப் பட்டவர்களையும் நியமிக்க வேண்டும் என்று குரலெழுப்பினார். (சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62) திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் விஷயமாக ஒரு சட்டம் கொண்டுவரப் பட்டது. அப்போது சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தேவஸ்தான கமிட்டிகளிலும், நிர்வாக கமிட்டியிலும் இடம் ஒதுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் சாதாரணமாக இந்து என்னும் பேதமிருப்பது போதாது. தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்கள் என்றிருத்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். (ஏனென்றால் அக்காலகட்டத்தில் இந்து என்பதில் தாழ்த்தப் பட்டவர்கள் இல்லை, உயர்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே இந்து என்று வரையறுத்து வைத்திருந்தனர் வெள்ளையர்களும் உயர்த்தப் பட்ட சாதியினரும்).

1934ல் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தினார். சாதிவெறி பிடித்தவர்கள் சகஜானந்தரைத் தாக்கினர். அது பெருங்கலகத்தில் முடிந்தது. தொடர்ந்து பிரச்சாரம், போராட்டங்களின் விளைவாக 1947 ஜூன் மாதம் 2ம் நாள் சகஜானந்தர் கோயில் நுழைவு போராட்டத்தில் வெற்றி பெற்றார். நூற்றுக் கணக்கான தாழ்த்தப் பட்டவர்களுடன் கோயிலில் நுழைந்து இறைவனை வழிபட்டு நாங்களும் இந்துக்கள்தான், எங்களுக்கும் இந்த கோயிலில் நுழைய அனுமதி உண்டு என்பதை பறைசாற்றினார்.

1938ல் கொண்டு வரப்பட்ட மலபார் கோயில் நுழைவு மசோதாவில் கலந்து கொண்டு பேசும் போது, ”தாழ்த்தப் பட்டவர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்று எந்த வேதமும் சாஸ்திரமும் சொல்லவில்லை, சில மடாதிபதிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை விட தாழ்த்தப் பட்டவர்களுக்கே கோயிலுக்குள் நுழையும் உரிமை அதிகமாக இருக்கிறது. கோயிலில் சுவாமி இருக்கிறது என்றும் எங்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. எங்களை உள்ளே போக விடாமல் வைத்திருப்பதால் வாஸ்தவத்தில் இந்து மதத்தில் ஏன் மக்களாகப் பிறந்தோம் என்று துக்கம் அடைந்து வருகிறோம். சீக்கிரம் இதைச் சட்டமாகச் செய்து நடைமுறையில் வந்தால் அது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்” என்று பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்களின்போது தில்லை நடராசர் தேரில் பவனி வருவது வழக்கம். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதியில்லை என்னும் நிலை இருந்தது. இதைப் பார்த்த சகஜானந்தம் அதைப் போலவே ஒரு நடராசர் தரிசனத்தை தாழ்த்தப் பட்டவர்களைக் கொண்டே நடத்தினார். நந்தனார் மடம் மற்றும் கல்விக் கழக சீடர்களுடன் பெரிய இசைக்குழுவை உருவாக்கி அவர்களை தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை இசையுடன் பாடி மகிழ்ந்திடச் செய்தார். இது அரிதினும் அரிதான, மறக்க முடியாத, மிகவும் அனுபவித்து சுவைக்க கூடிய ஒரு நடராசர் தரிசனமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு அமைந்தது. தாழ்த்தப் பட்டவர்களின் மனதில் தாங்களும் இந்துக்கள் என்பதை இவ்வாறு ஆழமாகப் பதியச் செய்தார்.

நந்தனார் மடத்தில் தமிழ் மாதம் மார்கழியில் திருப்பவை, திருவெம்பாவை மாநாட்டில் வழக்கமாக கருத்துரைகளையும் கருத்தாடல்களையும் ஏற்பாடு செய்து மக்களுக்கு அக்கருத்துக்களை பதிய வைப்பார். திருப்பவை, திருவெம்பாவை, நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம் ஆகியவற்றிலிருந்து உரையாற்றிட அறிஞர்கள் விற்பன்னர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்களை கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். ஒவ்வொரு ஆண்டும் இந்து சமயம் சார்ந்த எல்லா விழாக்களையும் மிகுந்த பிரயாசையோடும் பக்திச்சுவை செறியும் வனப்போடும் நந்தனார் மடத்தில் நடத்திக் காட்டுவார். இவை எல்லாமே தாழ்த்தப் பட்டவர்களும் இந்துக்களே என்பதை தாழ்த்தப் பட்டவர்களும் மற்றவர்களும் உணரவேண்டும் என்பதற்காகத் தான்.

அரசியல் களத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய கூட்டுத் தொகுதி, தனித் தொகுதி என்பவற்றில் தாழ்த்தப் பட்டவர்கள் இந்துக்கள், அதனால் தாழ்த்தப் பட்டவர்கள் எதைத் தேர்ந்தேடுக்க வேண்டும் என்பதை ஒரு இந்துவின் மனநிலையில் இருந்து தேர்தெடுத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

சுவாமி சகஜானந்தர் கூறுகிறார்:

‘நம் மக்கள் அறிய வேண்டுவது ஒன்று உண்டு. அதுதான் கூட்டுத் தொகுதிக்கும் தனித் தொகுதிக்குமுள்ள வேற்றுமை.

கூட்டுத் தொகுதி யென்பது இந்து மதத்தவர்களாகிய உயர்வகுப்பினரினின்றும் தாழ்த்தப் பட்ட வகுப்பினரினின்றும் தேர்ந்து கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாம். தனித்தொகுதி யென்பது தாழ்த்தப்பட்ட வகுப்பினரினின்று மாத்திரம் தேர்ந்துக் கொள்ளப் பட்ட அபேட்சகர்களின் ஸ்தானங்களாகும். நாம் இந்து மதத்தவர்கள். ஆதலால், இந்து மக்களனைவருக்கும் பொதுவாகவுள்ள ஆலயப் பிரவேச உரிமை முதலியவைகள் எங்களுக்கும் வேண்டுமென்று வாதிட்டுப் பெற வேண்டியவர்களாயிருக்கிறோம். இதனால் நாம் கூட்டுத் தொகுதியை மேற்கொண்டாற்றான் அவற்றைக் குறித்து அவர்களிடம் வாதிட உரிமையுடையவர்களாவோம். இந்து மதத்தவர்களினின்றும் பிரிந்து, தனித்தொகுதியில் நின்று அவ்வுரிமைகளைப் பெற வாதிட வாயேது? ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் வேண்டான் என்போர் இருப்பாராயின், அவர்கள் நாங்கள் இந்துக்கள் அல்லரென்று சொல்லி, பிறமதம் புகட்டும். ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகள் தாழ்த்தப் பட்ட மக்களாகிய நமக்குக் கொடுக்கக் கூடாதென்னும் வஞ்சகமுடைய உயர் வகுப்பினரிற் சிலர் நம்மைத் தனித் தொகுதியில் நிற்கத் தூண்டுகின்றனர். இவர்களுக்கு அஞ்சி விலக வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.’

இவ்வாறு, சுவாமி சகஜானந்தர் தனக்கு சமயம் ஏற்பட்டபோதெல்லாம் தான் ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

சுவாமி சகஜானந்தரின் தொண்டு யாருக்காக என்பதை பற்றி அப்போது வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து நமக்கு வெளிப்படுகிறது.

‘…வித்யா நிலயங்கள் நிறுவி இந்திய ஏழை மக்களாகிய ஆதிதிராவிடர் பலருக்கு இந்துமத உணர்ச்சி செழிக்க அறிவுச்சுடர் கொளுத்தி வருகின்றனர். இவர் செய்யும் பணிக்கு அரசாங்கத்தோரும், அரசியல் வாதிகளும், தேசபக்தர்களும், மதத் தலைவர்களும் ஒருங்கே துணை நின்று அவரது முயற்சி கைக்கூடும்படி செய்ய முந்துதல் வேண்டும். இந்து மடாதிபதிகள் சிலர், ஏன் பலர், தங்கள் களியாடல்களிலும், சிலர் போலி வேதாந்தத்திலும் மருண்டு இந்து மதம் நாட்குநாட்டேய்ந்து பிற உயிரற்ற மதங்கள் செழித்து கொழித்து வருவதையறியாது கிணற்றுத் தவளைகள் போல வெறும் வறட்டுப் பல்லவி பாடிக் கொண்டிருப்பதுமின்றி கால நிலையறிந்து அதற்கியைந்தன செய்யும் பிறரையும் அலக்கணுறச் செய்து வருகின்றனர். இவர்கள் திருந்துங் காலமே இந்துமதம் உயிர்த்தெழுங் காலமாகும்.

இத்தருணத்து சுவாமி சகஜாநந்தா போன்றோர்க்கு உதவி செய்வது இந்து மதத்திற்கு – இந்தியற்கு – பாரத தேவிக்கு உதவி செய்வதாகும்…’

என்று ஒரு பத்திரிகையில் வந்த செய்தியை ஊழியன் இதழ் 20-10-1925ல் வெளியிட்டது.

இதுமட்டுமல்லாமல் கோயில் சொத்து கோயிலுக்கே என்பதில் தீவிரத்துடன் இயங்கி இருக்கிறார் சுவாமி சகஜானந்தர். அவர் கூறுகிறார் :

‘…வெள்ளைக்காரன் போகிற பரியந்தம் கோயிலில் கை வைக்கவில்லை. காங்கிரஸ் அரசு வந்து எத்தனையோ நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் கோயில் முதலியவைகளைப் பாருங்கள். எவ்வளவு பணம் செலவு செய்து அவைகளைக் கட்டி இருக்கிறார்கள். அந்த மாதிரி காரியங்களை இப்போது நாம் செய்யப் போகிறோமா? இருக்கிறவைகளை வைத்து நடத்த வேண்டும். அதுதான் நியாயம். அதனால் தாங்களும் ஏழைகளுக்குக் கொடுத்தும் சாப்பிடுகிறார்கள். இனாம் தாரி நிலங்களையும் ஜமீன் நிலங்களையும் பங்கிட்டு ஏழைகளுக்குக் கொடுக்கலாம். ஆனால் கோயில் சொத்து பொதுச் சொத்து. அதில் கையை வைப்பது அவ்வளவு நியாயம் இல்லை. உடலையும் ஓம்ப வேண்டும், உயிரையும் ஓம்ப வேண்டும். உடலுக்கு உயிரா, உயிருக்கு உடலா? அநேகருடைய சொத்துக்களைத் திருவடியில் சமர்ப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கோயில் நிலங்களைப் பொறுத்து ஜாக்கிரதையாகச் செய்ய வேண்டும்’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்VII, 1947, அக்டோபர் 29, பக் 61-62)

இன்று இந்து இயக்கங்கள் என்ன சொல்கின்றனவோ அதை 1947லேயே கூறி, அதற்காகப் பரிந்து பேசியிருக்கிறார் சகஜானந்தர் எனும்போது அவர் கோயில்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை உணர முடிகிறது.

திராவிடக்கழக எதிர்ப்பு

புத்தக சாலை சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஆதரித்து பேசும்போது நமது இந்து மதத்திற்கும், கலை அபிவிருத்திக்கும் முக்கியமாக இந்த பில் கொண்டுவரப் பட்டுள்ளது போற்றத் தக்கது என்று கூறினார். மேலும் புத்தகசாலை எவ்வாறு அமைக்க வேண்டும் என்றும் தன் கருத்தை கூறினார்.

”பெரிய புராணம், பாரதம், இராமாயணம், இராமகிருஷ்ணர் பரமஹம்சர் சரித்திரம், மகாத்மா காந்தியின் சரித்திரம், அவர்களுடைய உபதேச மொழிகளையும், திருக்குறள், பகவத்கீதை, ஆகம சாத்திரங்கள், திருப்பாவை, குமரேச வெண்பா, ரிக், யஜூர், சாம, அதர்வண வேத புத்தகங்களையும், பைபிள், குரான் போன்றவைகளையும் வைக்க வேண்டும்” என்று கூறினார். அவர் மேலும் கூறும்போது, ”மதத் துவேஷம், ஜாதித் துவேஷம் உண்டாகக்கூடிய பிரசுரங்களையும், புத்தகங்களையும் வைக்கக் கூடாது. அவைகளால் சாஸ்திரங்கள் மீது பாமர மக்கள் துவேஷம் கொண்டு ரொம்பவும் கெட்டு விட்டது. அந்த மாதிரி நூல்களை மாத்திரம் இந்த லைப்ரரிகளில் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது இந்த நாட்டிற்கு ஒருபெரிய அணுகுண்டைப் போலாகி விடும். சமூகத்துக்குத் துவேஷமுண்டாக்கக் கூடிய நூல்களை வைக்க கூடாது. அதோடு கூடக் கருப்புச் சட்டைக் காரர்களுடைய குடியரசு முதலிய பத்திரிகைகளைப் போடுகிறார்கள். அது குழந்தைகளையும் ஊரையும் கெடுத்துவிடுகிறது. அது அநியாயமாக இருக்கிறது. இதனால் நம் ஹரிஜனங்களிலும் பலர் விபூதி, திருமண் முதலியவைகள் இட்டுக் கொள்வது கிடையாது. இவர்களைப் பார்க்கும் போது என் மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது” என்றார். கடைசியாக ”எந்த மத சம்பந்தமாக இருந்தாலும் தெய்வ புத்தியுள்ளதாகவே இருக்க வேண்டும். துவேஷத்தை உண்டு பண்ணக்கூடிய நூல்களை வைக்க கூடாது. பொதுஜனங்களிடம் நாஸ்திகம் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ரொம்பவும் அவசியமே” என்றும் வலியுறுத்தினார்.

1948 பிப்ரவரி 21ம் தேதி பெரியாரின் இராமாயணத்தை எரித்தல், ராமனது சிலையை செருப்பால் அடித்தல் போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுத்தார். விநாயகர் சிலை உடைப்பையும் எதிர்த்தார். அதேபோல எம்.ஆர்.ராதா நடித்த கீமாயணத்தில் இராமனை இழிவு படுத்தியதையும் கண்டித்தார். காந்தியின் ”ரகுபதி ராகவ ராஜா ராம்” என்ற பாடலை இழிவுபடுத்தி பேசியதையும் கண்டித்தார். அரசாங்கத்திடம் இத்தகைய செயல்கள் இந்துக்களின் மனதை புண்படுத்துகின்றன, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முறையிட்டார். ஒரு தனிப்பட்ட மனிதருக்கு அளிக்கப்படும் சுதந்திரமானது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் விதத்தில் அமைந்து விடக் கூடாது என்று சொன்னார். இது தொடர்பாக அவர் சட்டமன்றத்தில் பேசும்போது கடும் எதிர்ப்பு வந்த்து. அதை அஞ்சாமல் எதிர்கொண்டார். நாமதாரியாக சட்டமன்றம் சென்ற ஒரே தாழ்த்தப்பட்ட சமுதாய சீர்திருத்தவாதி இவர் ஒருவரே.

ஈ.வெ.ரா தஞ்சை விவசாயிகள் கொடூரமாக எரிக்கப் பட்டபோது (1968-69) அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றினார் என்று நமக்கு தெரியும். அவர் ஒரு பிற்படுத்தப் பட்டவரின் மனநிலையிலேயே அப்படி பேசியிருக்கிறார். அதாவது கொன்றவர்களுக்கு ஆதரவாக பேசினார். ஏனென்றால் அவர் தாழ்த்தப்பட்டவர் இல்லையே? ஆனால் இதே பிரச்சினைக்காக 1951லேயே சுவாமி சகஜானந்தர் சட்ட மன்றத்திலேயே தாழ்த்தப் பட்டவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

சுவாமி சகஜானந்தர் கூறுகிறார் :

‘இன்னும் கூலி கொடுக்கும் விஷயத்தில் தஞ்சை ஜில்லாவில் பெரிய கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் கம்யூனிஸ்டுகள் தான் செய்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் கம்யூனிஸ்டுகள் கலகம் செய்யவில்லை. பயிரிட்டு விட்டு சாப்பாட்டிற்குக் கூலி சரியாகக் கிடைக்காத காரணத்தால் தான் விவசாயிகள் மிராசுதார்களிடத்தில் சண்டை போடுகிறார்கள். அதனால் தான் கம்யூனிஸ்டுகள் என்று அடக்குகிறார்கள்.

ஆகையால் கூலி நிர்ணயம் செய்து ஒரு சட்டம் இயற்றுவது தான் நல்லது. இன்னும் பெரும் நிலக்காரர்களிட உள்ள நிலத்தை எடுத்துப் பங்கிட்டுக் கொடுக்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதோடு விவசாயிகளுக்கென்று ஒரு சம்பள போர்டை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.’

(சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் விவாத தொகுப்புத் தொகுதி எண்IX, 1951, மார்ச் 2, பக் 390)

சுவாமி சகஜானந்தரின் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான ஈவெராவின் பச்சை துரோகப் பேச்சை விமர்சிக்கத் தோன்றுகிறதல்லவா?

கிறிஸ்தவ மதமாற்ற எதிர்ப்பு

சுவாமி சகஜானந்தர் தனக்கு ஏற்பட்ட கிறிஸ்தவ மதமாற்ற தூண்டுதல்களைக் குறித்து உணர்ந்தே இருந்தார். இந்துக்கள், முக்கியமாக தாழ்த்தப் பட்டவர்கள் மதம் மாறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். மிஷநரிகளின் மதமாற்ற செயல்களை அறிந்தே இருந்தார். ஒருமுறை சட்டமன்றத்தில் பேசும்போது,

‘சிதம்பரத்தில் இந்து ஆதிதிராவிடர்களால் நடத்தி வரும் அனாதாலயத்தில் 44 பேருக்கு போர்டிங்கு நடத்தினர். அரசாங்கத்தார் அதற்குப் பையன் ஒருவனுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்துள்ளார்கள். இது எந்தக் கணக்குப்படி கொடுத்தார்களென்று புலப்படவில்லை. ஆனால் மிஷனெரிகளுக்கு வாரி வாரி கொடுத்து வருகிறார்கள். மிஷனெரிகளுக்கு கொடுத்து வரும் பணம் தாழ்த்தப் பட்டவர்களைக் கிறிஸ்தவராக்குவதற்குப் பயன்படுகிறது. …..கிறிஸ்தவ போர்டிங்கில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் சேர்வதால் முதலில் மாணவன் சேருகிறான். பிறகு அவன் தாய் தந்தையர் அவன் மூலம் சேருகிறார்கள். அப்படியே தொடர்புள்ள பலர் சேருகிறார்கள். அதனால் ஆதிதிராவிடச் சமூகத்திற்குப் பெரிய நஷ்டம் உண்டாகிறது.

தாழ்த்தப் பட்டவர்களின் பேரால் மிஷனெரிகளுக்குப் பணங்கொடுக்க கூடாது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கென்றே கொடுக்கட்டும். அது எங்களுக்குச் சம்மதம். இந்த மாகாணத்தில் சுமார் ஏழாயிரம் பேர்களுக்கு அரசாங்கத்தார் போர்டிங் கிராண்டு கொடுத்து வருகிறார்கள். அதற்காக இரண்டு லட்சங்கள் செலவழிகின்றன. அவற்றில் பெரும்பாலும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்குப் போகிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பயன்படுவதில்லை. ஆனால் ஏற்கனவே கொடுத்து வரும் பணத்தை நிறுத்தும்படி யான் சொல்லவில்லை. நமது மாண்புமிக்க மந்திரியவர்கள் இந்த வருஷம் ஐம்பதினாயிர ரூபாய்கள் அதிகப் படுத்தியுள்ளார்கள். அதிகப் படுத்தியுள்ள அந்த ஐம்பதினாயிரத்தைத் தாழ்த்தப் பட்ட இந்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கிவைத்துவிட வேண்டுகிறேன். மிஷனெரிக்கு மிஷன் மூலமாய் உதவியுண்டு.’

என்று கூறினார் (1933 மார்ச் மாதம் 21ம் தேதி பேசியது. எண் LXVI, பக் 539-543).

1948 மார்ச் 1ம் தேதி பேசும்போது

‘சேரிகளில் பள்ளிக்கூடங்கள் வைத்தால் அதற்கு கிறிஸ்துவ ஆசிரியர்கள் நியமிக்கிறார்கள். அப்படி நியமிப்பதால் அவர்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி விடுகிறார்கள். அது கூடாது. இன்னும் அங்கே சுயமரியாதைக் காரர்கள் வந்து பள்ளிக்கூடத்தை நாசமாக்கி விடுகிறார்கள். ஆகையால் ஆசிரியர்களை நியமிக்கும்போது யோக்கியமுள்ளவர்களாகப் போடவேண்டும். இவைகளை தடுக்க இந்து ஹரிஜன ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும்.’ என்று கூறினார்.

நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டது என்ற பொய்ப்பிம்பத்தையும் உடைத்திருக்கிறார் சுவாமி சகஜானந்தர்.

‘வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பாடுபட்டார் ஜஸ்டிஸ் கட்சியார். அப்போது நாம் அவர்களோடு ஒத்துழைத்திருக்கிறோம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலிருந்த போது அவ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாண்டதில்லை என்பது கவனிக்கத் தக்கது.’

என்று கூறுகிறார்.

சுவாமி சகஜானந்தர் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இந்து சமயத்திற்கும் அயராது பாடுபட்டிருக்கிறார். தாழ்த்தப் பட்டவர்களுக்கும், இந்து சமயத்திற்கும் எதிராக யார் இயங்கினாலும் அதை எதிர்த்து செயல்பட்டு இருக்கிறார்.

சுவாமி சகஜானந்தர் ஒரு உண்மையான இந்து, மாபெரும் இந்து சமுதாயச் சிற்பி, ஆன்மீக அருளாளர், தன்னலம் கருதாமல் உழைத்த சமுதாயத் தலைவர் என்பதை நினைவில் கொண்டு அவரைப் போற்றுவோமாக.

சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

(திரு.கலவை வெங்கட் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: மது)

சுப்பிரமணியன் சுவாமி இடைவிடாது தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடிவரும் ஓர் இந்திய அரசியல் வாதி; முக்கியமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஏற்பாட்டில் நிகழ்ந்த மாபெரும் 2G ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் ஊழல், சட்ட விரோத வழிகளில் சம்பாதித்து கறுப்புப் பணமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல் வாதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் தொடர்ந்து போராடி வருகிறார். ஆகவே பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக அவர் இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் சுவாமி அவர்கள் சென்ற ஆண்டு வரை வணிகவியல் பேராசிரியராக, வகுப்புகள் எடுத்து நடத்தி வந்த ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் உள்ள மதச்சார்பற்ற, இடது சாரிகள் தான் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் என்பது ஒரு முரண்நகை.

July 16, 2011ல் சுவாமி டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். பாகிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றக் கூடும் ; அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீதான தீவிரவாதம் பெருகும் என்று அண்மையில் ஒசாமா பின் லாடனுக்கு பின் வந்த அல் கொயிதாவின் தலைமை ஏற்கனவே இந்தியாதான் எங்கள் முதன்மை இலக்கு என்று அறிவித்ததை அடிப்படையாக வைத்து ஒரு தீர்க்க தரிசனமாக தெரிவித்திருந்தார். “தீவிரவாதிகள் அறியாமை, ஏழ்மை, அடக்குமுறை, பாரபட்சம் ஆகியவற்றால் தான் உருவாகிறார்கள்”, “தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதை விட, இந்நான்கு சமூகத் தீமைகளை முதலில் ஒழிக்க வேண்டும்” என்பன போன்ற “கசிந்து உருகும் இதயம்” கொண்ட தாராளவாதிகளின் வக்காலத்துகளை புறந்தள்ளி,

பயங்கரவாதி ஒசாமா பின் லாடன் ஒரு கோடி கோடீஸ்வரன்!

டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைக்க முயன்று தோற்ற தீவிரவாதி பைசல் ஷஸத், அமெரிக்க பல்கலையில் MBA பட்டம் பெற்றவன், பாகிஸ்தானில் ஒரு பெரிய முக்கிய குடும்பத்தை சேர்ந்தவன்!

என்பன போன்றவற்றை சுட்டிக் காட்டி இருந்தார். “தீவிரவாதிகளை பயமுறுத்தி தளர்ச்சி அடையச் செய்ய முடியாது ஏனெனில் அவர்கள் பகுத்தறிவை மீறி, சாகவும் துணிந்து செயல்படுபவர்கள்” என்கிற வாதத்தையும் கேலி செய்து “தீவிரவாதத்தின் மூளையாக செயல்படுபவர்கள் அரசியல் இலக்கு கொண்டவர்கள்; தமது உன்மத்தமான போக்கிலும் ஒரு முறையக் கடைபிடிப்பவர்கள்” என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் பயன் தரக்கூடிய தீவிரவாத முறியடிப்பு முறை என்னவெனில் இந்த அரசியல் வெற்றிக்கான அம்சத்தை தோற்கடிக்க வேண்டும்; தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் வழியாக அவற்றை குப்பைத் தொட்டிக்கு தள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தீவிரவாதிகளின் ஒவ்வொரு இலக்கையும் புத்திசாலித் தனமாக தோற்கடிக்கவேண்டும் என்பதை சுட்டிக் காட்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை சுவாமி எடுத்துரைத்திருந்தார். அவருடைய அந்த யோசனைகளில் சில:

 1. ஏற்கனவே இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் சிறப்பு சலுகைகள், உதாரணமாக சிவில் சட்டங்கள் விஷயத்தில் இஸ்லாமிய ஹதீது அடிப்படையிலான நிர்வாக சட்டங்களை அடியோடு நீக்கி பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) அமுல் படுத்துதல்; காஷ்மீருக்கு சிறப்பு இடம் அளித்து, தீவிரவாதம் வளர காரணமாக இருந்து வரும் Article 370ஐ முற்றிலும் நீக்குதல்.
 2. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தால், பதிலுக்கு இந்தியா பலுசிஸ்தான், சிந்து பகுதி மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவுதல்
 3. வன்முறையாக இந்து கோவில்களை இடித்து கட்டப் பட்ட மசூதிகளை நீக்கி அந்த இடங்களில் மீண்டும் இந்து கோவில்களை கட்டுதல்
 4. எந்த பாடல் இந்தியாவை தாய் தெய்வமாக உருவகிக்கிறதோ, புனிதத் தாயாக தாய் நாட்டை வாழ்த்துவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி எதனை இந்திய முஸ்லிம்கள் பாட மறுக்கிறார்களோ அந்த தேசிய கீதமான வந்தே மாதரம் பாடலை ஒவ்வொரு இந்தியனும் பாட வேண்டும் என்று ஆணை நிறைவேற்றுதல்; இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சம்ஸ்க்ருத மொழியை ஒவ்வொரு இந்தியனும் கற்றுக் கொள்ளச் செய்தல்
 5. ஹிந்துக்களும், ஹிந்து அல்லாதோரும் தாங்கள் இந்துப் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக் கொண்ட பின்பே வாக்களிக்க அனுமதித்தல்
 6. இந்துக்களை மதமாற்றம் செய்வதை தடை செய்தல்

சுவாமியின் கட்டுரை இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; இந்த கட்டுரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவதாக இருப்பதாகக் கூறி அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கு அவரது வகுப்புகளை நீக்கச் சொல்லி மனுச் செய்தனர். இதே சமயத்தில் இந்தியாவில் சுவாமி எவருடைய முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தாரோ அந்த பலம் வாய்ந்த அரசியல் எதிரிகள் அதே கட்டுரையைக் காரணமாக வைத்து அவரை கைது செய்யவேண்டும் என்று கூச்சல் எழுப்பினர். முதலில் ஹார்வர்ட் மறுத்தும், சுவாமியின் பேச்சுரிமைக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக் கொண்ட போதிலும் இறுதியில் எதிர்புறமாக திரும்பி அவருடைய வகுப்புகளை நீக்குவதில் வந்து நின்று விட்டது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!

டயானா எக் (Diana Eck) என்பவர் சுவாமியின் வகுப்புகளுக்கு பத்துவா போடுவதை வலியுறுத்துகையில், “சுவாமியின் கட்டுரை எல்லை மீறிப் போகிறது; (முஸ்லிம்) மதக் கூட்டமைப்பு முழுவதையுமே அரக்கர்களாக சித்தரித்து, அவர்களது புனிதத் தலங்கள் மீது வன்முறையை தூண்டி விடுகிறது” என்று கூறினார். அதோடு “சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது என்கிற தார்மீகப் பொறுப்பு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு உள்ளது” என்று நினைவூட்டினார். சுகதா போஸ் (Sugata Bose) இதே பத்துவாவை ஆதரித்து “முஸ்லிம்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது எனும் சுவாமியின் நிலை எப்படி உள்ளது எனில் அமெரிக்காவில் குடிமக்களாக உள்ள யூத அமெரிக்கர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது; அவர்கள் வெள்ளை ஆங்கிலோ சாக்சன் புரோட்டஸ்டண்ட்களின் மேட்டிமையை ஒப்புக்கொண்ட பின்பே அனுமதிக்க வேண்டும் என்று சொல்வதற்கு சமம்” என்கிறார்.

இந்த விமர்சனங்களில் பலகாரணங்களின் அடிப்படையில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

 1. சுவாமியின் கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்; ஆனால் அதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடியவகையில் பேசுவதை முன்வைத்து பேச்சுரிமையை பின்னுக்கு தள்ள முடியாது. ஒரு பேராசிரியர் சில கருத்துக்களை வெளியிட்டதற்காக அவருக்கு கல்வித்துறையில் ஃபத்வா விதிப்பது என்பது “ஸ்டாலின் தவிர்த்த ஸ்டாலினிசம் ” என்று ஹார்வர்டின் பேராசிரியர் ஜேம்ஸ் ரஸ்ஸல் சொன்னதற்கு ஈடானது; ஏனெனில் இவ்வாறு பத்துவா விதிப்பது கல்வித்துறையை வன்முறையாக அடிபணியச் செய்து விடுகிறது.
 2. இஸ்லாமிய அரசுகளால் ஹிந்துக்கோவில்கள் இடிக்கப் பட்டு அந்த இடத்தில் எழுப்பப் பட்ட சுமார் முன்னூறு மசூதிகளை சட்ட ரீதியில் அகற்றுவதைத் தான் சுவாமி கேட்டிருந்தார். இது “வன்முறை அறைகூவல்” என்று டயானா எக் நினைத்தால், இதற்கு முன்பு கோவில்களை இடித்தது நிறுவனமாக செயல்பட்ட வன்முறையின் விளைவு எனபதை ஒப்புக் கொள்வாரா? ஹிந்துக்கள் வன்முறையால் இடிக்கப் பட்ட தமது புனிதத் தளங்களை புனர்நிர்மாணம் செய்ய என்றுமே கோரமுடியாது என்பதுதான் அவரது எதிர்பார்ப்பா?
 3. “ஒரு மதக் கூட்டமைப்பை அரக்கத் தனமாக சித்தரிப்பது” என்பது மட்டுமே ஒரு கல்விப் பொறுப்பை நீக்க போதுமான காரணம் என்று டயானா எக் நினைப்பதனால், இதே போல ஹார்வர்ட் பல்கலைக் கழகக் கூட்டாளி மைக்கேல் விட்ஸலுக்கு எதிராகவும் பத்துவா விதிப்பதை ஆதரிப்பாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . ஏனெனில் கலிபோர்னியாவில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இந்து மதத்தை நியாயமான முறையில் சித்தரிக்கப் படவேண்டும் என்று கேட்ட எல்லா அமெரிக்க ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக உருவகித்தவர் மைக்கேல் விட்சல். இத்தகைய ஃபத்வாக்களை நான் ஆதரிக்கிறேன் என்பதில்லை. ஆனால் எக் எல்லா விஷயங்களிலும் சமச்சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் “கங்கா தின்“களின் (([“கங்கா தின்” (Gunga Din) என்பது பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தின் பிரபல கவிஞரான ருட்யார்ட் கிப்லிங் எழுதிய ஒரு கவிதையில் வரும் தண்ணீர் சுமக்கும் தொழிலாளியின் பெயர். தனது எஜமானான பிரிட்டிஷ் சோல்ஜரின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரைக் கொடுப்பவன் கங்கா தின். ஆக்கிரமிப்பாளனுக்காக தியாகம் செய்யும் முட்டாள்/அப்புராணி அடிமையின் மனநிலையைக் குறிக்க இந்தச் சொல் இங்கு எதிர்மறையாகப் பயன்படுத்தப் படுகிறது)) வார்ப்பில் இல்லாதவர்களுக்கு எதிராக மட்டும் தான் முல்லா தொப்பியை எடுத்து அணிபவர் அவர் என்று கருதப்படுவதற்கே அது இடமளிக்கும்.
 4. போஸ் குற்றம் சாட்டுவது போல சுவாமி ஹிந்து மேட்டிமையை ஒப்புக் கொள்ளக் கோரவில்லை. அவர் எல்லா இந்தியர்களும் தம் முன்னோர்கள் ஹிந்துக்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இது அர்த்தமற்ற வேலை என்று தோன்றினாலும், தார்-உல்-இஸ்லாம் அமைப்பிற்கு எல்லைகளற்ற இஸ்லாமிய சகோதரத்துவம் தேவைப் படுகிறது என்பது உண்மை; சிலநேரங்களில் இதனால் இந்திய முஸ்லிம், ஆப்கானிய – பாகிஸ்தானிய கூட்டாளிகள் மீது பற்றுக் கொண்டு, சில நேரங்களில் இந்தியாவுக்கு எதிராகவே புனிதப் போர் தொடுத்து விடுகிறான்; இதற்கு 26/11 ல் மும்பாயில் நடந்த பயங்கரம் உள்ளூர்வாசிகளில் சிலர் உடந்தையாக செயல்படாமல் நடைபெற்றிருக்க முடியாது என்பதே சாட்சி. எல்லா நாடுகளுக்கும் தம் மீது விசுவாசம் என்பது தேவை. இஸ்லாம் ஒரு அரசியல் கருத்தியலாக இருப்பதால், முஸ்லிம்களின் விசுவாசத்தைப் பெற இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி, முஸ்லிம்களை கற்பனையான உலகாளவிய உம்மாவின் மீதான தொடர்பை விட்டு, ஹிந்து பாரம்பரியத்தில் தம்மை இணைத்துக் கொள்ள செய்வதில் தான் இருக்கிறது. இவ்வாறு முஸ்லிம்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதை செயலாக்கும் வழிமுறைகள் குறித்து வாத – பிரதிவாதங்கள் எழலாம் என்றாலும் சுவாமி கோரியது “ஹிந்து மேட்டிமைக்கான அறைகூவல்” என்று நிச்சயம் கூறமுடியாது.
 5. அண்மையில் நடந்து முடிந்த American Academy of Religions (AAR) மாநாட்டில், பல இடதுசாரி கல்வியாளர்கள், டேனிஷ் கார்ட்டூன் சர்ச்சையை முன்வைத்து, பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்கும் போது, முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே எப்போதும் பேச்சுரிமையில் ஒரு பகுதியாகக் கொண்டனர். பேச்சுரிமையை விட மத சுதந்திரம் முக்கியம் என்று இடதுசாரிகள் கருதுகிறார்கள் போலும்! சரிதான், இந்த கருத்தியலை ஆதரிக்கும் எக் போன்றவர்கள், அதுவும் தற்பால் சேர்க்கையில் ஈடுபட்டு இன்னொரு பெண்ணை மணந்த எக் போன்ற பெண்களுக்கு, இஸ்லாமிய அரசில் மரணதண்டனை கிடைக்கும் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. இந்துக்களின் உருவவழிபாடுகளை சகித்துக் கொள்ள முடியாது போலவே இஸ்லாத்தில் எக் போன்றவர்களின் வாழ்க்கை முறையையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏன் சுவாமி போன்ற ஒரு ஹிந்துவால் இந்த சகிப்புத் தன்மை இல்லாத மதத்தை சகிக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் எக் அவர்களின் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் சகிப்புத் தன்மை, அதுவும் இஸ்லாமிய ஆதரவைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
 6. எந்த சகிப்புத் தன்மையும் அற்ற அமைப்புகளுடன் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற எக்-கின் எச்சரிக்கை பாராட்டத் தக்கது தான். சவூதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் பின் அப்துல் அசீஸ் 2005ல் ஹார்வர்ட் பல்கலையில் இஸ்லாமியக் கல்வி மையம் அமைக்க இருபது மில்லியன் டாலர் நன்கொடை தந்தது உண்மை தானே? இதே சவூதி ஆட்சியாளர்கள் தான், முறை தவறி பாலியல் தொடர்பு கொண்ட (அல்லது வன்முறையாக கற்பழிக்கப் பட்ட) பெண்களுக்கு மரண தண்டனை, சவுக்கடி போன்ற தண்டனைகள் வழங்குபவர்கள், புலம் பெயர்ந்து வரும் இந்துக்கள் தமது தெய்வங்களின் உருவப் படங்களைக் கூட தம்முடன் வைத்திருக்க அனுமதிக்காதவர்கள் என்பது எக் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எக் இது விஷயத்தில் உடனே அந்த பணத்தை சவூதிகளிடம் திருப்பிக் கொடுத்து, இஸ்லாமிய கல்வி மையத்தையும் மூடவேண்டும் என்று ஆவேசமாக விவாதம் நடத்த வேண்டும்; இல்லா விட்டால் எக் அவர்களது பார்வையில் “சகிப்புத் தன்மை அற்றவர்களை” இருபது மில்லியன் டாலர் பணம் “சகிப்புத்தன்மை”யுடையவர்களாக மாற்றிவிடும் என்று நாம் முடிவு கட்டுவதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்று ஆகும்.

இந்த ஹார்வர்ட் ஃபத்வா என்னவோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று முடிவு கட்டிவிடக் கூடாது. அண்மையில் இந்திய அரசு, அரசியல் ஊழல்கள் குறித்த செய்திகளை தடுத்து அமிழ்த்தும் முயற்சியில், ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இணைய தளங்களை மூடும் முயற்சியில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே நடவடிக்கைகளைத் துவங்கியது. இந்த ஊழல் வாதிகளுக்கு எதிராகத்தான் சுவாமி மிக தைரியமான கண்ணியமான ஒரு யுத்தத்தை தொடுத்து வருகிறார். டி.என்.ஏ இதழ் சுவாமியின் கட்டுரைகளை நீக்க வேண்டி வந்தது, பின்புலத்தில் இதற்காக முனைந்து செயல்பட பலம் வாய்ந்த அரசியல் கரம் ஒன்று இருப்பதையே நமக்கு காட்டுகிறது. ஹார்வர்ட் பல்கலையிலும் சுவாமிக்கு எதிராக இடதுசாரிகளின் கூட்டு முயற்சிக்குப் பின்னால் இந்தக் கரம் தான் செயல் படுகிறதோ?

இடதுசாரிகள் மத சுதந்திரம் என்பது மறுக்க முடியாத உரிமை என்கிறார்; அவர்கள் இந்த அளவு பேச்சுரிமைக்கு முக்கியமாக அவர்களுக்கு பிடிக்காத வகையில் உள்ள பேசப் படும்பேச்சுக்கள் குறித்து மதிப்பளிக்காவிட்டாலும் கூட இது ஒருவிதத்தில் அவர்களது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்றுதான் கொள்ளவேண்டும். இந்த பிரகடனம் மற்றவர்கள் நியாயமாக கேட்கும் கேள்விகளைத் தடுக்க முடியாது. மத சுதந்திரம் என்பது உரிமையா? சலுகையா? ஒரு மதம் சகிப்புத் தன்மை அற்று அதன் வழியில் எதிர்படும் மற்ற கலாச்சாரங்களை எல்லாம் வென்று அழிக்கக் கிளம்பினால், சமூகம் அதனை ஏன் பொறுக்க வேண்டும்? சகிப்புத் தன்மை உள்ள ஒரு சமூகமும், சற்றும் சகிப்புத் தன்மை அற்ற மதமும், சகித்துக் கொண்டு போகும் பெண்ணும், அவளைக் கற்பழிக்கும் கயவனும் போன்று பொருத்தம் இல்லாதது. இஸ்லாம் புனிதப் போர் மற்றும் மக்கள் தொகை பரவல் மூலமாக உலகை வெல்ல முயற்சிக்கிறது. இஸ்லாம் அல்லாதவர்கள் இந்த அபாயம் குறித்து விவாதிக்கவும், நியாயமான – சட்டத்திற்குட்பட்ட வழிகளில் இதனை எதிர்கொள்ள யோசனைகளை கூறுவதற்கும் எல்லா உரிமையும் உள்ளது.

பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் இதர பழமையான பாரம்பரியங்கள் அனைத்தும் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் சட்டவிரோத மதமாற்றங்களுக்கான கூட்டு இலக்கு எனும் போது, இந்த மதங்கள் எல்லாம் இணைந்து ஒரு ஹிந்து அமைப்பாக அரசால் பாதுகாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே! அப்படியே நடந்தாலும் இந்தியா ,முதன் முதலாக ஒரு மதச்சார்புடைய நாடாக ஆகிவிடாது. ஐக்கிய அரசு (UK), ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மதச்சார்புடைய நாடுகளாகவே இருக்கின்றன – இவை சர்ச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்து வருகின்றன. இந்த நாடுகள் கிழக்கின் மதங்களை தடுக்கவும், அவற்றின் உர்மைகள் – சலுகைகள் ஆகியவற்றை நீக்குவதற்கும் சட்டங்களை வழமையாக இயற்றி வருகின்றன; கிறிஸ்தவ நாடான ஹங்கேரி கிழக்கத்திய மதங்களை ஒடுக்க இயற்றிய சட்டம் ஒரு அண்மைய உதாரணம். அமேரிக்கா மதச்சாற்பற்றது (மதச்சார்பின்மை என்றாலே கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக ஆகிவிடுகிறது – இது வேறு ஒரு தலைப்பில் பேச வேண்டியது) – இருந்தும் அமெரிக்க அரசு சர்ச்சுக்கு எக்கச் சக்கமாக நிதி செலவிடுகிறது. பல அரபு நாடுகள் இஸ்லாமிய மதவாத அமைப்புகளாகவே இருக்கின்றன – இவை பௌத்தம், இந்து, சமணம் மற்றும் சீக்கியம் போன்ற மதங்களை தம் மண்ணில் சகிப்பதில்லை. இது போன்ற இடங்களில் எல்லாம் இந்து உரிமைகளுக்காகஇடது சாரிகள் போராடுவதே இல்லை – அதே சமயம் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மீது சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு உபதேசிக்க முதலில் வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

சகிப்புத் தன்மை அற்ற மதங்களை இந்துக்கள் கண்மூடித் தனமாக பொறுத்துக் கொள்வது என்பது அவர்களது உச்ச அளவிலான முட்டாள்தனம். நமக்குள்ளே இருக்கிற சில “கங்கா தின்”கள் வேண்டுமானால் பரிசுப் பணத்துக்காக “மதச்சார்பின்மை தொப்பியை” அணிந்து கொள்ளட்டும்; ஏனையோர் நிதர்சனத்தை அலட்சியப் படுத்த முடியாது. இப்போது சுவாமியை அமைதியாக்க விரும்பும் இடது சாரிகள் தான், சர்ச்சு இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டு டாவின்சி கோட் திரைப்படத்தை தடை செய்தபோது கப்சிப் என்று இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தன்னுடைய பேராசிரியர்களிலேயே ஒருவரான ஜேம்ஸ் ரஸ்ஸல், கருத்துரிமை குறித்து எழுதியதை கவனத்தில் கொள்ள வேண்டும்:

“தாராள வாதம் (liberalism) என்பது சுதந்திரத்தைச் சார்ந்தது. சிறுவனாக இருந்த போது சமூக உரிமைகளுக்காக அணிவகுப்பில் பங்கேடுத்தேன்; அதன் பொருள் சம வாய்ப்பு, ஒருங்கிணைப்பு மட்டுமே; கறுப்பினப் பிரிவினை, affirmative action மற்றும் கட்டற்ற வன்முறை அல்ல. கல்லூரியில் படிக்கும் இளைஞனாக தற்பால் கவர்ச்சியாளர்களின் உரிமைக்காக போராடினேன்; வன்முறை, கேலி, கண்டனம் ஆகியவை குறித்த பயமின்றி நம்மைப் போலவே ஓரினச் சேர்க்கையாளர்களும் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். (…) வெளியுறவுகள் குறித்து இடது சாரிகளின் தவறான வழியில் திரும்பி விட்ட கொள்கைகள் முழு அளவும் பாதகமான செமித்திய-எதிர்ப்பாகவும், ஓரினச்சேர்கையாளர்களை வெறுத்தல், பெண்களை வெறுத்தல் என்பதில் அடிப்படையிலேயே வெறுப்பியலாகத் துவங்கும் அரசியல் இஸ்லாத்தின் மீது எந்த தர்க்கமும் இல்லாத வழிபாடுமாகவும் உருமாறிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், இடது சாரிகள் சர்வாதிகாரத்தின் வன்முறையியலுடன் என்றுமே உறவாடியும், அமெரிக்காவை அரக்கனாக சித்தரித்து வந்திருக்கிறது எனும் போது நமக்கு புரிந்து போகிறது – இதில் இதற்கு மேல் ஆழமாக சிந்திக்க ஏதுமில்லை. ஹோரோவிட்சின் “101 கல்வித்துறை முரடர்களின்” ((பேராசிரியர் டேவிட் ஹோரோவிட்ச் 2006ல் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகம் “The Professors: The 101 Most Dangerous Academics in America. அமெரிக்க பல்கலைக் கழகங்களில் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் சிலரை பெயர் குறிப்பிட்டு அவர்கள் தீவிரவாத ஆதரவாளர்களாகவும், அரசியல் சார்பு கொண்டவர்களாகவும், அமெரிக்காவின் முதலாளித்துவ சமூக, பொருளாதார பொதுப்போக்குகளுக்கு எதிராக தங்கள் மாணவர்களையும், கல்வி வட்டத்தினரையும் மூளைச் சலவை செய்வதாகவும் இந்தப் புத்தகத்தில் அவர் குற்றம் சாட்டினார்)) பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலர் தங்களை சுதந்திர உணர்வு கொண்ட லிபரல்களாகவே சித்தரித்துக் கொள்வார்கள். ஆனால் எதிர்க்கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாமல் சென்சார் செய்யத் துடிக்கும் அவர்கள்து மனநிலையே உண்மையில் கருத்துச் சுதந்திரத்தின் முதல் எதிரியாகும். தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வேறு எங்கும் நகர்ந்து போய்விட முடியாமல் சிக்கி விட்ட தம் மாணவர்களிடம் தம் கருத்துகளை சுமத்துகிறார்கள். (..) அது மட்டும் அல்ல, யாரெல்லாம் தம் எண்ணங்களின் படி செயல் படுகிறார்களோ அவர்களை வளர்த்து விட்டு கல்வித் தரத்தையும் தாழ்த்தி விடுகிறார்கள்.”

எக் மற்றும் போஸ் போன்றவர்களைப் போல, (நீட்ஷே சொன்ன அர்த்தத்தில்) “ஒத்துழைக்கும் முட்டாளாக” இல்லாமல் இருப்பதற்கும், துணிந்து தெளிவாக சிந்தித்ததற்காகவும் நான் சுவாமிக்கு நன்றி கூறுகிறேன். அவர் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மிகவும் அவசியமானவை. என்னால் அவர் கூறுகிற சில வழிமுறைகளுடன் ஒத்துப் போக முடியாவிட்டாலும், அவருடைய கருத்துரிமைச் சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் ஹார்வர்ட் இடது சாரிகளைப் போல அல்லாமல், என்னால் ஒப்பமுடியாத சுவாமியின் சில கருத்துக்களை எதிர்கொள்ள என் பேனாவின் வலிமையே போதும், எந்த தணிக்கையும் கோரமாட்டேன்.

ஹார்வர்ட் முல்லாக்கள் வெட்கம் கெட்டவர்கள்.

[பாகம் 2] குதி. நீந்தி வா !

 “வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்” தொடரின் 2ம் பாகம்.

பாகம் 1

மாணவர்கள் பார்வையில் சுவாமி சித்பவானந்தர்

திருச்சி  திரு. வி. லெட்சுமணசுவாமி
விடுதி எண் : 173

நான் விவேகானந்த வித்யாவனத்தில் 1977-78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பை முடித்தேன். கோவை மாவட்டத்தில் உள்ள சித்திரைச் சாவடி ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸிரமத்திற்கு சுவாமி அந்தர்யோகம் நிகழ்த்த  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செல்வது வழக்கம். அப்போது இரண்டு மாணவர்களை உடன் அழைத்துச்செல்வார்.  MDA 6837  என்ற எண்ணுள்ள பச்சைநிற அம்பாசிடர் காரில் செல்வார். அந்த வண்டிக்கு டிரைவர் திரு. ஆறுமுகம் அவர்கள்.

ஒவ்வொரு முறை சித்திரைச் சாவடி செல்லும்போதும் இரண்டு மாணவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படிச் சென்ற மாணவர்களில் நானும் ஒருவன். சுவாமி போகும் போது இராமாயணம் கூறி முடித்துவிடுவார். திரும்பும் போது மகாபாரதம் கூறி முடித்துவிடுவார். நாங்கள் சிறுவர்கள் தானே! கதை கேட்டுக்கொண்டே அவர் மடியில் படுத்து உறங்கி விடுவோம். என் தாயின் மடியில் கூட நான் அந்த நிம்மதியை கண்டதில்லை.

திரும்ப அந்த நாட்கள் வரப்போகிறதா! நினைத்தால் இன்றும் கண்ணீர் வழிகிறது.

1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை. மதியம் நானும் என் நண்பர்களும் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று காவல்துறை  “சைரன் ” ஒலி காதைப் பிளந்தது. மத்திய அமைச்சரும், சுவாமிஜியின் அண்ணன் மகனும், அப்போதைய பாராளுமன்ற வேட்பாளருமான திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் பந்தோபஸ்து படை, கூட்டணி கட்சித் தலைவர்கள் படை, பல கார்கள், வேன்கள், அடியாட்கள் புடைசூழ விடுதிக்குள் நுழைந்தார்.

சுவாமிஜி மாடியிலிருந்து இந்த ஆடம்பர நுழைவை பார்த்துவிட்டார். மரியாதை நிமித்தமாக திரு. சி.எஸ். சுவாமிஜியை பார்க்க மாடிக்குச் சென்றார். சுவாமிஜி கோபத்துடன்,  “முதலில் உன் படைகள், பரிவாரங்கள், பந்தோபஸ்துகளை வெளியே அனுப்பிவிட்டு தனி ஆளாக வந்தால் இங்கு வரலாம்.”  என்றார். உடனே திரு. சி.எஸ். கீழே வந்து அவருடன் வந்த ஜீப்கள், கார்கள், வேன்கள், கட்சிக்காரர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு தனி மனிதராக சாலையிலிருந்து நடந்து வந்து மாடிக்கு சென்று சுவாமியிடம் ஆசி பெற்றார்.

அந்தத் தேர்தலிலும் வென்றார். முற்றும் துறந்த சுவாமிக்கு அரசனும் ஆண்டியும் ஒன்று என்ற கருத்தை புரிந்து கொண்டேன்.

திண்டுக்கல்  தெய்வத்திரு. மெளனகுரு சாமி
தபோவன பழைய மாணவர்

(பொன்விழா நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் சுமார் 80 வயது பெரியவரான திரு. மெளனகுரு சாமி என்பவரைச்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திருப்பராய்துறையில் 1945-46ஆம் ஆண்டு படித்தவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். அவர் கூறியவை இங்கே.)

“அந்தக் காலத்தில்  பள்ளியில் நீச்சல் குளம் கிடையாது. பெரிய சாமிதான் எங்களை காவிரி ஆற்றுக்கு அழைத்துச்செல்வார். ஆபத்தில் தப்பிப்பது எப்படி? என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார். எங்களை அவரே தேய்த்துக் குளிப்பாட்டுவார். எங்க அம்மா கூட என்னை அப்படி குளிப்பாட்டியிருக்க மாட்டார்கள். குளிப்பாட்டுவதன் மூலமாக தினந்தோறும் அவர் ஸ்பரிச தீட்சை எங்களுக்கு கொடுத்தார். சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடைய செய்ய  என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது. அது மட்டுமல்ல மதுரைக்கு வந்த அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவை எங்கள் மில்லுக்கு என்னால் அழைத்து வரமுடிந்தது, சுவாமியிடம் பெற்ற வைராக்கியத்தினால் தான். எங்களைக் கவனித்த அளவுக்குப் பின்னால் வந்த மாணவர்களை சுவாமி கவனித்திருக்க முடியாது.”

சேலம் டாக்டர். திரு. பி. சண்முகம்
(இவர் தபோவன பொதுக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.)

நான் சுமார் 35 வருடங்களாக மருத்துவத்துறையில் உள்ளேன். தீய பழக்கங்கள் உள்ள நோயாளிகள் நிறைய பேர் அந்த பழக்கங்களை  விடமுடியாமல் அந்த பழக்கத்துடனேயே இறப்பதைப் பார்த்திருக்கிறேன்.ஆனால், என்னால் மட்டும் அந்த பழக்கங்களை எவ்வாறு விடமுடிந்தது?

இது பற்றி நீண்ட நாள் யோசித்த பிறகு எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. தபோவனத்தை விட்டு வெளியேறும் போது பெரிய சுவாமிகள் முன்பு மண்டியிட்டு, வாய்பொத்தி வணங்குவோம். அப்போது பெரியசுவாமிகள் நம் தலையில் மீது அவர் கையை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள்.சுவாமியின் இந்த ஆசீர்வாதத்தின் பலன் என்னவாக இருக்கும்?இதனால் பிற்காலத்தில் நம் வாழ்க்கையில் என்ன விளைவுகள் நிகழும்? என நான் எண்ணியது உண்டு. அந்த ஆசீர்வாதத்தின் விளைவு தான் தீய பழக்கங்கள் மறைந்தது என்று இப்போது புரிகிறது. நாம் அழியாமல் நம்மை தடுத்தாட்கொள்வது, நம்மைச்சுற்றி அரண் போன்று அமைந்துள்ள நம்முடைய பெரியசுவாமியின் ஆசீர்வாதம் தான்.

சரியான சமயத்தில் நமது முடியைப் பிடித்து இழுத்துவந்து சரியான பாதையைக் காட்டுவதுதான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும்போது நமக்கு கிடைக்கும் அவருடைய ஆசீர்வாதம்.

பெரிய சுவாமிஜி சமாதி அடைவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் உள்ள அத்வைத ஆஸிரமத்தில் தங்கியிருந்தார். அப்போது சுவாமியின் தோழர் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் சுவாமியைப் பார்க்க சேலம் வந்திருந்தார். அப்போது அன்பர்கள் சுவாமிஜியின் பாதங்களை தொட்டு வணங்கினர். ஒவ்வொருவரிடமும் சுவாமி நலம் விசாரித்தார். இதைக் கவனித்த அவினாசிலிங்கம் அவர்கள் “வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் தங்களுக்குப் பாத நமஸ்காரம் செய்தார்கள். ஆனால் நீங்கள் ஒருவரைக்கூட வாழ்த்தவில்லையே ஏன்?”  என்று கேட்டார்.

அதற்கு சுவாமி, ” நான் அப்படிச்செய்தால் அது அர்த்தமற்றதாகும் அவரவர்கள் செய்த வினைப்பயனை அவரவர்கள் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். கிறிஸ்துவ மதத்தைத்தவிர வேறு எந்த மதமும் பாவம் செய்தவர்களை மன்னிப்பதில்லை.” என்று சுவாமி பதிலளித்தார்.

ஆனால், அதே சுவாமி நாம் படித்து முடித்து ஊருக்கு புறப்படும்போது நம் தலையில் தன் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள். அன்பர்களுக்கு ஆசி கூறாத சுவாமி நம்மை மட்டும் ஆசீர்வதித்தார். நாம் எல்லாரும் எவ்வளவு பாக்கியவான்கள்!

திருப்பூர்  டாக்டர்.திரு. ஆர். கே. கந்தசாமி,
விடுதி எண் : 43  (1950-51)
(தபோவன பொதுக்குழு உறுப்பினர்)

1948-ல் நான் 9-ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். விடுமுறை முடிந்து நானும் என் நண்பன் குமாரசாமியும் விடுதிக்கு வராமல் திருச்சி சென்று சினிமா பார்த்து விட்டு இரவு தாமதமாக விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை சுவாமியிடம் ஆஜர் கொடுக்கச்  சென்றபோது எப்போது வந்தீர்கள்? என்று கேட்டார். நாங்களும் நேற்று இரவு வந்தோம் என்று கூறினோம். நான் பார்க்கவில்லையே என்றார்.  “நாங்கள் திருச்சியில் சினிமா பார்த்துவிட்டு காலதாமதமாக வந்தோம் சுவாமி” என்று உண்மையை கூறினோம். சுவாமிக்கு கடும் கோபம் வந்துவிட்டது.

எங்கள் இருவருக்கும் 5 ரூபாய் அபராதம் விதித்தார். உடனே எனது நண்பன் குமாரசாமி துடுக்காக “உண்மையை சொன்னதற்கு தண்டனையா சுவாமி?” என்று கேட்டான். அதற்கு சுவாமி, “உண்மையைச் சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்றால், நாட்டில் கொலையும் கொள்ளையும் திருட்டும் வன்முறையும் அதிகம் பெருகி விடும். நீ உண்மையைச் சொல்கின்றாய் என்றால்,

1. நீ செய்த தவறுக்கு வருந்துகிறாய் என்பது முதல் பொருள்.

2. இரண்டாவதாக இனி அந்தத் தவறை செய்யமாட்டாய் என்று இரண்டாம் பொருள்.

3. மூன்றாவதாக இந்தத் தவறுக்கு தண்டனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பொருள்.

உண்மையைச் சொல்வதில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன”

என்று கூறி எங்கள் சிந்தனையை தெளிவடையச் செய்தார்கள்.

இது இன்று நடந்தது போல் உள்ளது ஆனால், 62 ஆண்டுகள் கடந்து விட்டன.1943-ல் ஆரம்பிக்கப்பட்ட வித்யாவன குருகுலப்பள்ளி முதன்முதலில் திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் ஆலய மண்டபங்களில் தான் நடைபெற்றது. கோவிலுக்கு எதிர்ப்புறமாக உள்ள சத்திரத்தில் தான் விடுதி இருந்தது.

ஆரம்பத்தில் 50 மாணவர்களே விடுதியில் இருந்தனர். வரிசையாகப் பெட்டியும் அதன்மேல் படுக்கையையும் வைத்திருப்போம். பெட்டியின் முன்னால் அமர்ந்து படிப்போம். உறங்கும் பொழுது பெட்டியின் முன்னால் விரித்துப் படுத்துக் கொள்வோம். Tooth brush மற்றும் soapக்கு  அனுமதி கிடையாது. பெட்டியைப் பூட்டக்கூடாது, விலை உயர்ந்த பொருட்களான, வாட்ச், கேமரா முதலியன கூடாது.பிறகு ஹாஸ்டல் தற்போது உள்ள இடத்தில் கட்டப்பட்டது. அதற்குப் பின் பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. தற்போது உள்ள க்ளாஸ் ரூம் கட்டிடங்கள் எல்லாம் ஹாஸ்டலில் உள்ள மாணவர்களின் உழைப்பால் உருவானவை. செங்கல், girder முதலியன எலமனூர் ரயில் நிலையத்திலிருந்து கட்டிடம் கட்டும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு கைமாறி மாறிப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள். மாணவர்களின் உழைப்புக்காக அன்று இரவே வடை, பாயசத்துடன் விருந்து சமைக்கப்படும். அதனால் மாணவர்களும் உற்சாகத்துடன் ஒத்துழைத்துனர். இவ்வாறாக diginity of labourம் கற்றுத் தரப்படும்.

பள்ளி, விடுதிக் கட்டிடங்கள் வளர வளர மாணவர்களின் எண்ணிக்கையும் கூடியது. அவ்பொழுதெல்லாம் ஆற்றில் குளிப்பது என்றாலே ஒரு தனி ஆர்வம். தினமும் இரண்டு முறை குளிப்போம். தினமும் ஒரே பாதையில் ஆற்றுக்குள் தண்ணீர் வரை மணலில் சுவாமிஜி நடந்து நடந்து ஒரு தனித் தடமே உருவாகியிருக்கும். எங்களில் சிலர் தினமும் அவருடன் செல்வோம். குளிக்கும் பொழுது நாங்கள் 5, 6 பேர் சேர்ந்து அவரைத் தண்ணீருக்குள் அழுத்திப் பிடித்துக் கொள்வோம். சிறிது நேரம் விட்டுத் திடீரென்று எங்களையெல்லாம் தள்ளி விட்டு மேலே வந்து விடுவார்கள்.

1964-ல் என் திருமணத்திற்கு பின் சுவாமிஜியிடம் ஆசி பெற திருப்பாராய்துறைக்கு சென்ற பொழுது ஏற்பட்ட அனுபவம். பஸ்ஸில் காலை 9.30 மணிக்குத் திருப்பூரிலிருந்து விடுதியை அடைந்து அன்றைய சிற்றுண்டியாகிய இட்லி, மால்ட் முடித்து விட்டு, ஸ்வாமிஜியின் அறைக்குச் சென்றோம். எங்களைப் பார்த்து ஸ்வாமிஜி மிகவும் சந்தோப்பட்டார்கள். ஆசியும் வழங்கினார்கள். நலம் விசாரித்துப் பின்பு என்னிடம் உன் சக தர்மணியைக் கூட்டிச் சென்று நீ விளையாடித் திரிந்த இடத்தையயல்லாம் சுற்றிக் காண்பித்து விட்டு ஆற்றில் குளித்து விட்டு  மதியம் உணவு அருந்த வந்து விடு என்று கூறி அனுப்பிவிட்டார்கள். நாங்களும் பள்ளியைச் சுற்றிப்பார்த்து விட்டு ஆற்றிலும் குளித்து விட்டு, கோவிலுக்கும் சென்று தரிசித்து விட்டு திரும்பினோம். மதியம் உணவு முடித்து 2 மணிக்கு சுவாமிஜியிடம் விடை பெறச் சென்றோம். சுவாமிஜி, “அதற்குள் என்ன அவசரம், உனக்குப் பொங்கல் பிடிக்கும் என்று நாளைக் காலை பொங்கல் செய்யச் சொல்லி இருக்கிறேன். இரவு தங்குவதற்கு ஆசிரியர் குடியிருப்பில் ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாளை போகலாம்” என்று கண்டிப்பாகவும், பாசத்துடனும் கூற இரவு தங்கி, காலை உணவு முடித்து விட்டே ஊருக்குத் திரும்பினோம்.

தாய்வீடு சென்று திரும்பிய உணர்வுடன்  திரும்பினோம். தாயன்பிற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்றே தோன்றிற்று.

திருப்பூர்  திரு. ஆர்.பி. பாலகிருஷ்ணன்,
விடுதி எண் : 79 (1980-81)

கார்த்திகை தீபத்திற்கு முதல்நாளே குலபதி துறவியர்களுடன் திருவண்ணாமலைக்குச் செல்வார். அங்கு திருக்கோயிலிலும், கிரிவலப்பாதையிலும் அன்பர்களுக்கு அருள் பாலிப்பார். மாலையில் மலையில் மகாதீபம் ஏற்றியபின் “அண்ணாமலைக்கு அரோகரா!” என்று கூறிவிட்டுத் திருப்பராய்த்துறைக்கத் திரும்புவார். கார்த்திகை மாத பெளர்ணமி வழிபாடும், விருந்தும் மறுநாள் தான் நடைபெறும். நாங்கள் தபோவனம் முழுவதும் அகல்விளக்கு வைத்து மைசூர் பேலஸ் போல ஜொலிக்கச் செய்வோம்.

அண்ணாமலையிலிருந்து திரும்பும் சுவாமி நாங்கள் விளக்குகள் வைத்த சுவற்றில்  எங்காவது எண்ணெய் வடிந்திருக்கிறதா? என்று உற்றுநோக்கியதை இன்றும் நினைத்துப்பார்க்கிறேன்.

நாங்களும் எங்கள் வீடுகளில் தீபம் வைக்கும்போது சுவர் அசிங்கமாகாதபடி  தீபம் வைக்கிறோம். திருவண்ணாமலையை அக்னி ஸ்தலம் என்பர். நாங்கள் எங்கள் இளமைக் காலத்தில் திருவண்ணாமலையோடு தான் வாழ்ந்தோம்!

புரியவில்லையா?

சுவாமி தபோஅக்னி அல்லவா? அவரோடுதானே நாங்கள் வாழ்ந்தோம்!

திரு. கே. ராமசாமி,
விடுதி எண் : 123 (1955-56)

ஒரு முறை சுவாமிகளுடன் நாங்கள் கோவை சென்றிருந்த சமயம் ஜி.டி. நாயுடு அவர்கள், “குழந்தைகளுடன் சுவாமிகளும் வந்து என் விஞ்ஞான கூடத்தை பார்க்க வேண்டும்.”  என்று அழைத்தார்.

எங்களை அழைத்துக்கொண்டு சுவாமி அங்கு சென்றார். அங்கு நாங்கள் பல அதிசயங்களை பார்த்தோம். பிறகு ஜி.டி.நாயுடு அவர்கள் எல்லாரிடமும் ஒரு பேப்பர், பென்சில் கொடுத்து எங்கள் கருத்துக்களை எழுதித் தரச்சொன்னார். சுவாமியிடமும் கொடுத்தார்.

நாங்கள் அவரைப் புகழ்ந்து தள்ளிவிட்டோம். ஆனால், சுவாமி எழுதியிருந்ததைப் படித்து நாயுடு தலைகுனிந்து நின்றார். சுவாமி அப்படி என்ன எழுதியிருந்தார்? சுவாமி எழுதியதாவது:

 “தாங்கள் ஒரு சிறந்த அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும் இருப்பதை பற்றி மகிழ்ச்சி. ஆனால், உங்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கு இந்த உண்மைகளைத் தெரிவிக்காமல், சமுதாயத்திற்கு உதவாமல் இருக்கிறீர்கள்.”

என்று எழுதியிருந்தார். அது உண்மைதான். ஏனெனில், இன்றளவும் இந்தியாவுக்கு திரு. நாயுடுவால் எந்தப் பலனும் இல்லை. இதை சுவாமிகள் அன்றே கூறினார்.

ஒருமுறை மத்திய அமைச்சர். திரு. சி. சுப்பிரமணியம் சுவாமியை பார்க்க வந்திருந்தார். வந்தவுடன் திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமியை பார்க்கச் சென்றார். சுவாமி,

“வாரும் சுப்பிரமணியரே! உம் நெற்றியில் இருப்பது காலையில் வைத்த திலகமா? தற்சமயம் வைத்த திலகமா? அல்லது எனக்காக வைத்த திலகமா?”

என்று ஒரு பிடிபிடித்தார். சி.எஸ் உட்பட அனைவரும் சிரித்தனர்.

1954ஆம் ஆண்டு சுவாமியின் தோழர் கல்வி அமைச்சர் திரு. அவினாசிலிங்கம் தபோவனத்திற்கு வருகை புரிந்தார். அவர் ஹிந்தி மொழியைத் தமிழகத்திற்கு கொண்டு வர விரும்பினார். அதற்கு சுவாமி இப்போதைய சூழ்நிலையில் இந்த திட்டம் தோல்வியடையும் என்றார். அதுபோலவே ஆயிற்று.

இளமையில் ஆக்ஸ்போர்டு தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஒரு தங்க பட்டன் சாமிக்கு கொடுத்திருந்தார்கள். அதை அவினாசிலிங்கம் பார்த்தார். “சுவாமிக்குத் தங்க பட்டன் தேவையில்லை. எனக்குத் தேவை” என்று சொல்லி வாங்கிச் சென்றுவிட்டார்.

பாண்டிச்சேரி திரு. எஸ். ஸ்ரீராம்,
விடுதி எண் : 425 (1979-80)

மாணவப் பருவத்தில் மறக்க முடியாத விழா சரஸ்வதி பூஜை ஆகும். பலகுழுக்களாக பிரிந்து இப்பூஜையை செய்வோம். சுவாமி அதற்கு மதிப்பெண் போடுவார். பரிசு பெறுவதற்காகப் பல ஜிகினா வேலைகளைச் செய்வோம். ஆனால், சுவாமி பகட்டுக்கோ, ஆடம்பரத்துக்கோ மதிப்பெண் போட மாட்டார். நேர்மையான வழிபாட்டுக்கு மட்டுமே மதிப்பெண் கிடைக்கும்.

பணம் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கட்டுபாட்டையும் இரகசியமாக மீறி பல பொருட்களை வாங்குவோம். ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்கள் தருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்வோம். விழா நடைபெறும் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகின்ற வழியெல்லாம் கொடிகளும், தோரணங்களும் கட்டி அலங்கார வளைவுகள் வைத்துத் தடபுடலாகக் கொண்டாடுவோம்.

இதே நேரத்தில் தபோவனத்தில் இந்த மூன்று நாளும் சக்தி பூஜை நிகழும். அன்று குருகுலத்தில் பெற்ற பயிற்சி தான் இன்று வீட்டிலும், தொழில் புரியும் இடத்திலும் எல்லா விழாக்களையும் சிறப்பாகக்  கொண்டாட முடிகிறது. குலபதியிடம் பெற்ற பயிற்சி வாழ்க்கை முழுவதும் எங்கள் கூடவே வருகிறது.

மதுரை திரு. எம்.எஸ். சுப்பிரமணியன்,
விடுதி எண் : 366 (1971-72)

அப்பொழுது வருடம் 1970. நான் 10ஆம் வகுப்பு மாணவன். அந்த ஆண்டுக்குரிய சரஸ்வதி பூஜை அலங்காரங்கள், பூஜை பஜனை போன்றவற்றில் எங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இதற்காக சுவாமிஜி வாழ்ந்த முதல் மாடியிலிருந்த பல அறைகள் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அங்கு பூஜை நடக்கும். ஒரு வகுப்பு மாணவர்கள் மற்றொரு மாணவர்களை மிஞ்சும் வண்ணம் திறமையை வெளிப்படுத்துவார்கள். சுவாமி பூஜையில் கலந்து கொண்டு மதிப்பெண் போடுவார். பிறகுப் பரிசு தருவார்.

அந்த வருடம் 9, 10-ஆம் வகுப்புக்கிடையே ஒரே போட்டி. இதைப் புரிந்துகொண்ட அவர் இருவரையும் கண்டித்துப் பரிசைப் பகிர்ந்து கொடுத்தார். அன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் சுவாமி கூறியது,

“நிர்மாலியமான  சிலா ரூபத்தை அலங்கரிக்கப் பருத்தித் துணி மற்றும் மலர்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.தங்க, வைர நகைகளால் அலங்கரிப்பது அணிகலன்கள் மீது நமக்குள்ள ஆசையின் வெளிப்பாடு. ஆலயத்தின் நகைகளின் இருப்புப் பொருள் வேண்டிய பிரார்த்தனைகளை அதிகரிக்குமேயன்றி ஆழ்மனதின் இருப்பை அறிய உதவாது. பொருள் மீது மனிதன் தன்னுடைய பற்றுதலை குறைக்க குறைக்க அவனிடம் உள்ள பிரம்மானந்தம் வெளிப்பட்டு அவனுக்கு பேரானந்தம் கிடைக்கும். இன்றும் திருப்பராய்த்துறை கோவிலையும், அதிலுள்ள சிவபெருமானையும் பார்த்தால் அத்திருமேனி பருத்தி வஸ்திரம் மற்றும் மலர்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டிருக்கும். அந்த எளிமை நமக்கு மனநிறைவைத்தரும். ஆகவே எளிமையை கடைப்பிடிப்போமாக!”

சென்னை. திரு. கே. கோபி கிருஷ்ணன்,
விடுதி எண் : 285(1980-81)

மார்கழி பஜனை “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்”  என்று கண்ணன் சொன்னான். மார்கழி பிறந்து விட்டால் தினமும் காலை 4.00 மணிக்கு பஜனை கோஷ்டியாக மாறிவிடுவோம். சுவாமி வழிநடத்த அவர் பின்னால் ஒரு நாளுக்கு ஒரு வகுப்பாக திருப்பாவை, திருவெம்பாவை, பஜனைப் பாடல்கள், நாமாவளிகள் பாடிக்கொண்டு தபோவனத்தைச் சுற்றி வலம் வருவோம்.

ஒருபக்கம் தூக்கம் வரும். சுவாமியின் பார்வை பட்டால் தூக்கம் பறந்துவிடும்.

மாட்டுப் பொங்கல். குருகுலத்திற்கு தினமும் பால் வழங்கும் எங்கள் இனிய பசு மாடுகளை சுத்தமாக குளிப்பாட்டி, அலங்காரம் செய்து மாலையில் வழிபாடு நடத்துவோம். கோபால கிருஷ்ணனின் படம் வைத்து மாட்டுப்பட்டியில் சுவாமி தலைமையில் வழிபாடு நடந்த பின் படுக்கை, மாட்டுப்பட்டி இவற்றில் உழைக்கும் அனைத்து தொழிலாளர் குடும்பத்தினருக்கும் எங்கள் விடுதியில் பொங்கலிட்டு மகிழ்வோம்.

காணும் பொங்கல். தமிழகத்தின் பல பாகங்களிலிருந்தும், வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுவாமிஜியை கண்டு ஆசி பெற நிறைய பேர் வருவார்கள். அப்போது தான் எங்களுக்கு  சுவாமியின் அருமை தெரியும். அவ்வளவு பெரிய மகானுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை நினைத்து பெருமைபடுவோம்.

பெயர் கூற விரும்பாத மாணவர்.

ஒரு பழைய மாணவர் சங்க கூட்டத்தில் பழைய மாணவர் ஒருவர் லஞ்சம் பற்றி கருத்து கேட்டபோது சுவாமி சொன்னது, “இந்தியாவில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது மற்றுமொரு சுதந்திர போராட்டமாகும். ஆங்கிலேயராகிய அன்னியர்களை விரட்டுவதற்காக விடுதலை போராட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், லஞ்சத்திற்கு எதிரான விடுதலை போராட்டத்தில் நாம் எதிர்க்கப்போவது வெள்ளைக்காரனை அல்ல. நம் கூடவே இருந்து பாரதத்தைப் பாழ்படுத்தும் நம் அண்டை வீட்டுக்காரனை, கடமை துரோகியை. எதிரிகளுடன் சண்டையிடுவதை விடத் துரோகிகளுடன் சண்டையிடுவது மிகச் சிரமமான காரியமாகும்.

உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இலஞ்சம் என்பது தற்காலத்தில் பெரியவர்களால்கூட நியாயப்படுத்தப்படுகிறது. பழைய மாணவர் கூட்டம் ஒருங்கிணைந்தால் லஞ்சத்தை தம் தம் பகுதிகளில் ஒழிக்கமுடியும். முதலில் நாம் அதை வாங்காதிருந்து பழகுவோமாக.

 லஞ்சம் கொடுத்துப் பழகியவர்கள் மிக அவசியமான, நல்ல காரியங்கள் நடைபெறுவதாக இருந்தால் கொடுத்து சாதித்துக்கொள்ளுங்கள் தவறேதுமில்லை.

சின்ன சேலம்  திரு. ஆர்.எம். அருணாச்சலம்,
விடுதி எண் : 68 (1975-76)

ஒவ்வொரு மாதமும் தபோவனத்தில் பெளர்ணமி வழிபாடு நிகழ்வது வழக்கம். மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை விட சித்திரை மாத பெளர்ணமிக்கு  தனிச்சிறப்புண்டு.
 
நிலவின் முழு அழகைக் கண்டுக்களிக்க வேண்டுமானால் சித்திரா பெளர்ணமிதான் சிறந்த நாள். இந்திர விழாக்கூட சித்திரா பெளர்ணமி அன்று தான் நடந்ததாக கூறுவர். தபோவனத்தில் அன்று மாலை வேளை நெருங்க நெருங்க மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சி.

காவிரி ஆற்றங்கரையில்  நிலவொளியில் “தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே ” என்று ஆரம்பித்து ஐக்கிய வணக்கம் (கூட்டு வழிபாடு) நிகழும்.

இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள காவிரி ஆற்றங்கரைக்கு திருச்சி மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து உயர் அதிகாரிகளும், பிரமுகர்களும் வருகை புரிவர். வழிபாடு முடிந்தவுடன் அறுசுவை விருந்து உண்டபிறகு சுவாமிஜி தலைமையில் செவிக்கு விருந்து படைப்பது தான் சத்சம்பாவணை நிகழ்ச்சியாகும். மாணவப்பருவத்தில் மறக்கமுடியாத நிகழ்ச்சி காவிரி ஆற்று விருந்து.

மதுரை  பேராசிரியர். திரு. கே. ராமமூர்த்தி,
விடுதி எண் : 37

(தபோவன பொதுக்குழு உறுப்பினர், பழைய மாணவ சங்க செயலர், திருவேடகம் விவேகானந்த கல்லூரி முன்னாள் முதல்வர் மற்றும் செயலர்)

எங்கள் குருகுலத்தில் எங்கள் குருநாதர் சுவாமி சித்பவானந்தருடன் மாணவர்கள் இரவு சாப்பிட்ட பிறகு அரைமணி நேரம் விருப்பம்போல் விளையாடுவார்கள். லீவு நாட்களில் மாணவர்களோடு சுவாமி செஸ் விளையாடுவார். எதிரணியில் விளையாடும் பையனை பார்த்து, “டேய்! அழுவுணி ஆட்டம் ஆடறாண்டா” என்று கிண்டலடிப்பார். அந்தப் பையன், “இல்ல. நல்லாதான் ஆடேறன்” என்று சாமியுடன் சண்டை போடுவான்.

நீச்சல் குளத்தில் சின்ன பையனைத் தன் தோளில் தூக்கி கொண்டுபோய் ஆழமான இடத்தில் போட்டு விடுவார்கள். அவன் திண்டாடும் போது உதவி செய்வார்கள்.

பிரார்த்தனைக் கூடத்தில் எல்லோரும் நிமிர்ந்து உட்கார்ந்தாகவேண்டும். இப்படி விளையாட்டும் கட்டுப்பாடும்  சேர்ந்த ஒரு வாழ்க்கை. மாணவர்கள் சுவாமியை மிகவும் நேசித்தார்கள். அந்த சிறிய வயதில் எப்படிப்பட்ட பெரியவருடன் நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது அந்தப் பையன்களுக்குத் தெரியாது.

அதே நேரத்தில் சமுதாயத்தில் பெரிய பதவியில் உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் அந்தஸ்த்தில் உள்ளவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் சுவாமியிடம் வரும்போது கைகட்டி, வாய்பொத்தி வருவதை இந்தப் பையன்கள் பார்க்கிறார்கள். பல மேல்நாட்டுக்காரர்கள் வந்து தங்கள் ஐயங்களை போக்கிக்கொண்டு திருப்தியாகத் திரும்புகிறார்கள். இதையயல்லாம்  அறியாப் பருவத்தில் இந்த மாணவர்கள் பார்க்கிறார்கள். ஓரளவு புரிகிறது; புரியாமலும் இருக்கிறது.

படித்து முடித்து வயதான பிறகு சுவாமியுடன் பழகியதே, விளையாடியதே, அவர் அன்புக்கு பாத்திரமானதே பெருமையுடன் நினைத்து பார்க்கப் போதுமானதாக இருக்கின்றன.

இவர்கள் அனைவருமே கடவுளுடன் தான் வாழ்ந்தார்கள். கடவுள் இவர்களுடன் வாழ்ந்தார்.சிலர் இவரை கீதா சாமியார் என்று சொல்வார்கள். சிலர் தென்னாட்டு விவேகானந்தர் என்று சொல்வார்கள்.

சுவாமிஜி அவர்களுடைய காலத்தில் படித்த மாணவர்கள் அனைவரும் பாக்கியசாலிகள் ஏனென்றால் அவர்கள் கடவுளுடன் வாழ்ந்தார்கள். கடவுள்அவர்களுடன் வாழ்ந்தார். நாங்கள் அனைவரும் அவரை கடவுளாகவே பூஜித்து வருகிறோம்.

ஸ்ரீலங்கா  திரு. ஏ. அரன்மகன், 
விடுதி எண் : 46 (1961-62)

சுவாமியின் பாடசாலைக் கல்வியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவனைத் தண்டிக்கமாட்டார். ஆனால் ஒழுக்கம் தவறுகின்ற மாணவர்களைக் கடுமையாகத் தண்டிப்பார். கடமை நேரங்களில் கண்டிப்பாக இருக்கும் சுவாமி ஓய்வு நேரங்களில் எங்களுடைய சேஷ்டைகளைப் பொறுத்துக் கொள்வார்.

ஈரோடு  திரு. கே. மகாலிங்கம்,
விடுதி எண் : 391 (1984-85)

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது அந்தர்யோகத்திற்கு வருபவர்கள் தங்கள் சந்தேகங்களை போக்கிக்கொள்ள இரவில் தபோவனப் புல்தரையில் கூடுவார்கள். பெரியசுவாமி அவர்களுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். ஒருநாள் இரவு பக்தர் ஒருவர் பெருச்சாளியை  விஷம் வைத்து கொன்று விட்டதாகவும், அது பாவமா என்றும் சுவாமியிடம் கேட்டார். சுவாமி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நிகழ்ச்சி ஒன்றைச் சொன்னார் சுவாமிகள். கரப்பான்பூச்சிகள் நூற்றுக்கணக்கில் ஸ்ரீ ரெங்கநாதருடைய விக்கிரகத்தின் மீது ஊர்ந்து கொண்டிருந்தன.

தீபாராதனை காட்டும்போது திருமால் மீது இவைகளையும் பக்தர்கள் பார்த்தார்கள்.

பக்தர்களுக்குத் தீர்த்தம் வைத்திருக்கும் பாத்திரத்திலும் அவை இருந்தன. ஆராதனை செய்யும் பட்டர்கள் அதை லட்சுமி பூச்சி என்றார்கள். “ஏன் அந்தப் பெயர் வைத்தீர்கள்?” என்று கேட்டால் “திருமால் மீது தங்கியிருக்க திருமகளுக்கு தானே உரிமை உண்டு? அதனால் தான் லட்சுமி பூச்சி” என்கிறோம் என்று பதில் வந்தது.

அப்பூச்சிகளைக் கொல்ல வேண்டுமென்று சொன்ன போது ஆட்சேபணை வந்தது.

நிர்வாகத்திலிருந்த நல்லவர் ஒருவர் அதை பூச்சிமருந்து தெளித்து ஒழித்தார். சமயம் என்ற பெயரால் ஆரோக்கியத்திற்கு இடைஞ்சல் செய்யும் உயிரிகள் விருத்தியடைய இடம் தரக்கூடாது. நோயுண்டு பண்ணும் கிருமிகளைக் கொல்லுவது நம் கடமையாகும். விவசாயம் செய்பவர்கள் பூச்சி மருந்து அடிப்பதில்லையா?

மனிதனுடைய உணவை பங்குபோடும் எலி, பெருச்சாளி இவைகளை கொன்றால் தான்  நாம் பட்டினி கிடக்காமல் இருக்கமுடியும். ஆகவே இவைகளைக் கொன்றே ஆக வேண்டும். கிருஷ்ணன் அர்ஜூனனிடம் பொதுநலனுக்காக உன் ஆசிரியரையும், தாத்தாவையும் கொன்று விடு என்று உபதேசித்தது நினைவில்லையா? மனித வாழ்க்கைக்கு தொல்லை கொடுக்கும் சிற்றுயிர் இனங்களை கொல்வீர்களா? என்று சுவாமி சொன்னார்.

நானும் எங்கள் தோட்டத்திலிருந்த எலிகளை எல்லாம் அழித்தேன்.

ஸ்மரண சுகம்
நெல்லை அரசன் நடேசன்
தபோவன முன்னாள் மாணவர்

48 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வாமிஜி அவர்களின் பள்ளியில் படித்த மாணவன் என்பது மட்டுமல்ல, அவர்களின் ஸ்பரிஸம் பட்டது இந்தத் தேகம் என்ற ஒரே ஒரு தகுதியுடன் நிற்கிறேன்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே.

என்று குரு உருவிற்கு ஏற்றம் சொன்னார் திருமூலர்.

1950 என்று நினைக்கிறேன். காவேரி கரைபுரண்டு ஓடுகின்ற மாமரங்களும், தென்னை மரங்களும், பச்சை வயல்களும் செழித்துச் சூழ்ந்த அந்தத் திருப்பராய்த் துறையில் நான் பெரிய ஸ்வாமிகளைக் கண்டேன். இன்னும் ஸ்வாமிஜி அவர்களின் அந்தக் கம்பீர உருவமும், கண்டிப்பும், கருணையோடு குழந்தைகளான எங்களோடு மற்றொரு குழந்தையாய் ஆடி மகிழ்ந்ததையும், நாங்கள் சேட்டை பண்ணிவிட்டு அவரிடம் வாங்கிய அடியையும் நினைத்துக்கொண்டு அந்த ஸ்மரண சுகத்திலே உங்கள்முன் நிற்கிறேன்.

நாங்கள் இருக்கும்போது நீச்சல் குளம் கிடையாது. அதிகாலையில் ஸ்வாமிகள் எல்லாரையும் குளிக்கக் காவேரி ஆற்றிற்குக் கூட்டிச் செல்வார்கள். சில நேரம் நீரில் அதிக நேரம் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் அங்கும் இங்கும் அவரைத் தேடுவோம். திடீரென்று வெளியே வருவார்கள். கண்களை மூடிக்கொண்டு கைகளால் காதை அடைத்துக் கொண்டு எங்கள் நடுவிலே கோபியர்களுக்கு நடுவில் நிற்கும் கண்ணன் போல நிற்பார்கள்.

சிறுவர்களான நாங்கள் 30, 40 பேர் இருப்போம். அவர் மேல் தண்ணீரை வாரிவாரி இறைப்போம். பொறுமையாகப் பலநேரம் அப்படியே இருப்பார்கள்; எங்கள் கை வலிக்கும்வரை.

நாங்கள் சிறுவர்கள்தானே. 10, 12 வயதுதானே. சோர்ந்து விடுவோம். அப்போது ஸ்வாமி சிறுவர்களான எங்கள் முகத்தில் தண்ணீர் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாங்கள் இங்குமங்கும் ஓடுவோம். சில நேரம் எங்களைத் தூக்கித் தனது திரண்ட முதுகின் மீது வைத்துக் கொண்டு தண்ணீரில் தூக்கிப் போட்டு விடுவார்.

“குதி. நீந்தி வா” என்று சொல்வார்கள்.

இப்படி நீச்சல் சொல்லித் தருவார். இப்படிப் பிரியமாக எங்களோடு இருந்தாலும், மிகவும் கண்டிப்பாகவும் இருப்பார்கள். காலையிலே சரியான நேரத்தில் எழுதல், காலம் தவறாது பூஜையில் கலந்துகொள்ளுதல், படித்தல், சிறுசிறு கைங்கர்யங்கள் செய்தல் இவைகளில் ஒழுங்காக இல்லாமல் கவனம் இல்லாது விளையாட்டாக இருந்துவிட்டால் ஸ்வாமிகளுக்கு மிகவும் கோபம் வந்துவிடும். நமக்கு அடி கிடைக்கும்.

அன்னாரின் கோபமும், அவர் கொடுத்த தண்டனையும் இன்று பரிபூர்ண ஆசிர்ம்வாதமாக இருப்பதை உண்மையிலேயே நான் உணர்கிறேன். அந்தச் சின்ன வயதில் படிப்போடு ஒழுக்கத்தையும் பக்தியையும் ஊட்டினார்கள். ஸம்ஸ்கிருதம் தெரியாவிடினும் எத்தனையோ ஸ்லோகங்களை அந்தப் பள்ளியில் கற்றுக்கொள்ள முடிந்தது.

இரவு உணவுக்குப் பின் ஹாஸ்டலின் நடுவிலே உள்ள இடத்தில் நாங்கள் ஓடிவிளையாடிக் கொண்டிருப்போம். ஸ்கேட்டிங் விளையாடுவோம். திடீரென்று மாடியில் இருந்து மிட்டாய், சாக்லேட் மழை பொழியும்.

மேலே ஸ்வாமிஜி இருந்துகொண்டு ஒவ்வொருவருக்காக மிட்டாயை எறிந்து கொண்டிருப்பார்கள். நாங்கள் ஓடி ஓடி அதைப் பொறுக்கி மகிழ்வோம்.

சில இரவுகள் எங்கள் முன் உட்கார்ந்து பல நல்ல கதைகள் சொல்வார்கள். கேள்விகள் கேட்கச் சொல்வார்கள். ஹாஸ்டலைப்  பெருக்கிச் சுத்தம் செய்வது எல்லாம் நாங்கள்தான் செய்ய வேண்டும். இங்கும் இப்போதுள்ள குழந்தைகள்தான் செய்கிறார்கள். குளியலறை மட்டுமல்ல. கக்கூஸையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்வாமிகளும் தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு எங்களுடன் சேர்ந்து சுத்தம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அநேகமாக இது நடைபெறும். இப்படி எல்லாக் கைங்கர்யங்களிலும் அவர் தானும் சேர்ந்து கொள்வார்.

சிறுவர்கள் நாங்கள்தான் தயார் செய்த உணவைப் பரிமாற வேண்டும். ஹாஸ்டலில் இரவில் சில நேரம் விழித்திருந்து காவல் புரிய வேண்டும். இப்படி குருவின் கைங்கர்யம் என்று எப்போதுமே நாங்கள் ஆனந்தமான ஒரு அனுபவமாகச் செய்து கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில் ஒரு உண்மை நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. ஏகநாதர் என்பவர் ஜனார்த்தன ஸ்வாமி என்ற குருவிடம் வாசம் செய்தாராம். பல ஆண்டுகளாக ஆசிரமத்தில் சமையல்வேலை, ஆசிரம வரவு செலவு கணக்குகள் பார்த்தல், குரு பத்தினிக்குத் தேவையான சாமான்கள் சேகரித்துக் கொடுத்தல், உடன் படிக்கின்ற மாணவர்களைக் கவனித்துக் கொள்ளுதல், குருவிற்குத் தேவையான எல்லாப் பணிகளையும், கைங்கர்யங்களையும் செய்வது இப்படிப் பல ஆண்டுகள் அவர் செய்து வந்தார். படித்தவர்கள் எல்லாம் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள்.

ஒருநாள் ஆசிரமக் கணக்கில் 10 பைசா குறைந்துவிட்டது. அதற்காக இரவில் வெகுநேரம் விழித்துக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். குருநாதரும் ஏதோ விளக்கு எரிந்துகொண்டு இருக்கிறதே என்று கேட்டுக்கொண்டே வந்தார். இவர் அந்தக் கணக்கில் லயித்து இருந்ததால் குருநாதர் வந்ததைக் கவனிக்கவில்லை. ஏகநாதர் ஏதோ சத் விஷயமாகச் சிந்திக்கிறார் என்று குருநாதர் போய்விட்டார். கொஞ்ச நேரம் கழித்து,  “கண்டுபிடித்து விட்டேன், கண்டு பிடித்து விட்டேன்” என்று ஏகநாதர் கூப்பாடு போட்டார்.

உடனே குருநாதர் ஓடிவந்து ‘என்னப்பா? என்ன கண்டு பிடித்தாய்?’ என்று கேடார். ‘10 பைசாவைக் கண்டு பிடித்து விட்டேன்.’ என்று பதில் சொன்னார் ஏகநாதர்.

குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமி மிகவும் வருத்தப்பட்டார். “நம்மிடம் இந்த சிஷ்யன் பல வருடங்களாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ஸாட்சாத்காரம் வரவில்லையே. இப்படிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறானே” என்று மனதில் நினைத்துக்கொண்டு போய்விட்டார்.

மறுநாள் காலையில் ஏகநாதர் ஆற்றில் குளித்து விட்டு சமையலுக்காகக் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அரச மரத்தடியிலே தத்தாத்ரேயரின் தரிசனத்தை குருவின் அருளால் கண்டார். தத்தாத்ரேயருக்கு வணக்கம் செலுத்தினார். மறுபடியும் குடத்தை எடுத்துக்கொண்டு ஆசிரமம் சென்று விட்டார். குடத்தை இறக்கி வைத்துவிட்டு சமையல் காரியங்களைச் செய்யத் துவங்கினார். அப்போது குரு வந்து கேட்டார்.

‘ஏகநாதா, உனக்கு ஏதாவது ஸாட்சாத்காரம் கிடைத்ததா ? ஏதாவது, தெய்வக்காட்சி கண்டாயா?’

‘ஆமாம். குருவின் அருளால் தத்தாத்ரேயரைத் தரிசனம் பண்ணும் பாக்யம் கிடைத்தது.’

குருவிற்கு மிகவும் வருத்தம். ‘வெகு சாதாரணமாக, சுலபமாகக் கிடைத்ததால் அல்லவோ இந்தத் தெய்வீகக்காட்சியின் அருமை இவனுக்குத் தெரியவில்லை. தெய்வீகக் காட்சி கிடைத்த பின்பு உன்மத்தனகப் பித்தனாக அல்லவோ ஆகிவிடுவார்கள். இவன் மறுபடியும் சென்று அடுப்புப் பற்ற வைக்கின்றானே’ என்று கூறினார்.

அதற்கு ஏகநாதர் சொன்னார்: ‘குருநாதா ! நான் இவ்வாசிரமத்தில் 12 ஆண்டுகளாக இருக்கிறேன். என்றைக்காவது உம்மிடம் ஸாட்சாத்காரம் வேண்டும் என்றோ தெய்வீகக் காட்சியைக் காட்டுங்கள் என்றோ கேட்டதில்லையே. எனக்குத் தெய்வம் என்றோ குரு என்றோ வித்யாசம் கிடையாது. தெய்வம் என்றால் எனக்குத் தாங்கள் தானே. அப்படியே தெய்வக் காட்சியை எனக்குக் காட்டினீர்கள். அத்தெய்வம் காட்சி கொடுக்கும்; அப்புறம் போய்விடும். ஆனால், இந்தத் தெய்வமான குருநாதரோ எப்போதும் இங்கேயே இருக்கிறீர்கள். நான் எப்போதும் பார்த்துக் கொள்ளலாம். பேசிக்கொள்ளலாம். ஆனால், அப்படி அந்தத் தெய்வத்தோடு பேசமுடியாதே. நான் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் தங்கள் பாதங்களைப் பிடித்து விடலாம். உங்களுக்கு என்ன கைங்கர்யம் வேணுமானாலும் செய்யலாம். அந்தத் தெய்வத்திற்கு அப்படிச் செய்ய முடியாதே. அப்படி இருக்கும்போது எனக்குக் கண்கண்ட தெய்வமாக இருப்பவர் குருநாதர் ஆகிய தாங்கள் அல்லவோ ?

இதைவிட்டு வேறு எந்தத் தெய்வக்காட்சி வேண்டும்?

கேட்டவுடன், குருநாதரான ஜனார்த்தன ஸ்வாமிகள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அப்படி ஒரு குரு பக்தியும், குரு கைங்கர்யமும் எங்கட்குக் கிடைத்தது.

50 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஏகநாதர் பின்னால் ஒரு பெரிய மகானாக வந்தார். ஸாட்சாத் கண்ணபிரானே அவருக்குச் சிலகாலம் தொண்டனாக வந்து கைங்கர்யம் செய்ததாகச் சொல்வார்கள்.

ஆக, குருவுக்கு நாம் கைங்கர்யம் செய்தால், தெய்வம் கண்டிப்பாக நமக்குச் செய்யும். விபரம் தெரியாத அந்தப் பிஞ்சு வயதிலே எனது தாய் தந்தையர் என்னைச் சித்பவானந்த மகானிடம் ஒப்படைத்தார்கள். ஆதலால், இன்று எனக்குப் பல மகான்களைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டி உள்ளது. இன்பமும், துன்பமும் ஏதோ ஒரு ஓரத்தில் இருந்தாலும் அறிந்தும் அறியாத ஒரு பேரானந்த நிலையை உணர முடிகிறது.

இதெற்கெல்லாம் காரணம் அறியாத வயதிலே, இவர்தான் குரு என்று தெரிவிக்காமல், எனக்கு குருவாக வந்தார் சித்பவானந்த ஸ்வமிகள்.

நமது பெரிய ஸ்வாமிஜி அவர்கள் விளம்பரத்தை விரும்பவில்லை தான். ஸ்வாமிஜையைப் பற்றி இன்னும் பலருக்குத் தெரியாது.

ஸ்வாமிஜியைத் தெரிந்து அவரைப் போற்றுவதற்கு அல்லது அவர் விட்டுச்சென்ற பல அரிய பொக்கிஷங்களை சிறுவர்களும், தமிழ்நாட்டில் உள்ள பல அன்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ, அவைகளை எல்லாம் அவர்கள் செய்து கொண்டிருந்தாலும், வருகின்ற சந்ததியர்க்கு இன்னும் அதிகமாக, எந்த முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த முறையில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

அவர் செய்த பல கல்வித் தொண்டுகள், ஆன்மீகத் தொண்டுகள், அவற்றை எந்த அளவிலே செய்தார் என்பதை மக்களுக்குச் சொன்னால் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

(தொடரும்…)

 

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

அறிமுகம்

1962ம் ஆண்டு. அப்போது எனக்கு வயது 12. நான் தர்மபுரியில் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். என் தந்தையாரின் நண்பர் திரு. ரெங்கநாத செட்டியார் என்பவர் என் தந்தையிடம் வந்து, “பையனைக் கொஞ்சம் என் கூட அனுப்பி வை. சாமியார் வரார் ! மேடையில் நாற்காலி டேபிள் போடணும். சுத்தமாய் வைக்கணும்” என்றார். சமரச சன்மார்க்க சங்கம் சார்பாகக் கூட்டம் ஸ்கூலில் நடந்தது. எங்க அப்பாவும் என்னை அனுப்பி வைத்தார்.

நான் எங்க ஸ்கூலுக்கு (ஜில்லா போர்ட் உயர்நிலைப்பள்ளி, தர்மபுரி) சென்று மேடையில் நாற்காலி, மேசை போட்டு டேபிள் க்ளாத் மேலே போட்டு, நாற்காலி மேலே வெல்வெட் விரித்துக் கொண்டிருந்தேன்.

”இவ்வளவு அலங்காரம் தேவையோ?!” என்று எனக்குப் பின்னால் ஒரு குரல்.

திரும்பிப் பார்த்தேன். ஒரு சாமியார் எனது கன்னத்தில் தட்டினார். அதுதான் முதல் ஸ்பரிசம்.

வெல்வெட் துணி அப்புறப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. திரு. கிரிதாரிபிரசாத் ஒரு மணிநேரம் முழங்கினார்.

ஆரவாரமான, உணர்ச்சிப் பிழம்பு போன்ற கிரிதாரி பிரசாத்தின் பேச்சுக்குப் பிறகு சாமியார் பேசினார்: “மழை பெய்து ஓய்ந்தது. சற்றே ஈரம் வற்றியபின், உங்கள் மனவயலை உழுது, விதை விதைக்கலாம் என்று இருக்கிறேன்” என்று தன் பேச்சைத் துவக்கினார்.

அந்த இரண்டு வரிகள் ஐம்பது ஆண்டுகள் கடந்தும்கூட இன்னும் நினைவில் உள்ளன. ஒரு மணி நேரம் பேசினார் அவர்.

இதுதான் முதல் சந்திப்பு.

ஒவ்வொரு ஆண்டும் அந்தர் யோகமும், சன்மார்க்க சங்கக் கூட்டமும் நடக்கும். அதற்கு வருவார். அப்போது எனக்கு அழைப்பு வரும். வேலை செய்ய !

அவர் பெயர் சித்பவானந்த சுவாமிகள் என்று சொன்னார்கள். என்னுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார். ஓரளவு பழகினார். ரொம்ப ரிசர்வ்டாக இருந்தார். மேடையில் கூடக் கடிவாளம் போட்ட குதிரைதான். வாரியார் பேச்சுப் போல அங்கிங்கு திரும்பாமல், ஸ்பின்னிங் மில் ஓடுவது போல ஒரே சீராக இருக்கும். எடுத்துக் கொண்ட தலைப்பைப் பற்றி மட்டுமே பேச்சு இருக்கும்.

மிராக்கிள்

நான் டிகிரி படித்த முடித்த உடன் அவரிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்குச் சென்று சேருங்கள் என்றார். அவர் பேச்செல்லாம் ஒரே ஆர்டர் மயம்தான்.

“நான் இந்த வருஷமே போய்ச் சேருகிறேன்” என்று சொன்னேன்.

“இரண்டு வேலைகள் பாக்கி இருக்கு. அவை முடியட்டும்” என்றார் அவர்.

அந்த ஓராண்டில் என் தகப்பனாரும், அதன் பின் தொடர்ந்து என் தாயாரும் வைகுண்ட பதவியை அடைந்தனர். நிஜமாகவே அங்கு போனார்களா என்பது எனக்குத் தெரியாது ! ஆனால், சுவாமி சொன்ன இரண்டு வேலைகள் இவைதான் என உணர்ந்து கொள்ள முடிந்தது.

இது மிராக்கிளாக இருந்தாலும் கையில் மாயமாக திருநீறு வரவழைக்கும் அளவுக்கு இவரை நினைக்க முடியவில்லை. அந்தச் சிறிய வயதில் மிராக்கிள் என்னைக் கவர்ந்திருக்கலாம்.

என்னுடைய டிகிரியை எடுத்துக் கொண்டு கோவை பெரிய நாயக்கன்பாளையம் இராமகிருஷ்ண மிஷனுக்குச் சென்று சுவாமி சோமானந்தா முன்னால் ஆஜர் ஆனேன். அவர் கேட்டார்: “உன்னை யார் அனுப்பியது?”

“சுவாமி சித்பவானந்தர்”.

“ஓ ! அப்படியா ! சரி. அப்பிளிகேஷன் போடு. கிடைக்கும்”.

இந்த சுவாமி ஊட்டி ஆசிரமத்தில் சித்பவானந்தரிடம் பிரம்மச்சாரியாக இருந்தார் எனப் பின்னால்தான் தெரிந்தது. அங்கு சேர்ந்து விட்டேன்.

அதன்பிறகு அவினாசிலிங்கம் ஐயா பழக்கமானார். ஆனால் அவரும் சித்பவானந்தரும் முப்பது ஆண்டுகளுக்கு முன் தோழர்களாக இருந்தவர்கள் எனத் தெரியாது. ஒரு நாள் திரு. பி.கே. நடராஜன் அவர்கள் இருவரும் இணைவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது சுவாமி சித்பவானந்தர் அங்கு வந்திருந்தார். நான் அவரைப் பார்க்கச் சென்றேன்.

சுவாமி: “படிப்பு நடக்குதோ?”

நான்: “ஆம், சுவாமி”.

சுவாமி: “படிச்சுட்டு அங்கு (திருப்பராய்த்துறை) வந்துட வேண்டியது”.

நான்: “அங்க இடம் இருக்கா?”

சுவாமி: “தானாக வரும்.”

இந்த உரையாடலின் போது சுவாமி குகானந்தர் உடனிருந்தார்.

அதன்பின் வித்யாலயா ஆடிட்டோரியத்தில் இணைப்பு விழா நடந்தது. அனைவரையும் சேர்த்து 4000 ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் ஊழியர்கள் வந்திருந்தனர்.

அமரர் அவினாசிலிங்கம் அந்த மேடையில் சுவாமியை விட்டு அவர் பிரிந்தது குறித்துத் தேம்பித் தேம்பி அழுதார்.

உடனே சுவாமி:

“இங்கு அழுகை, கூக்குரல், ஒப்பாரி வைக்க அனுமதில்லை. பேசவேண்டிய விஷயத்தைப் பேசிவிட்டு வந்து அமரலாம்” என்றார்.

அவினாசிலிங்கம் ஐயா அடங்கிப் போனார். அந்தக் கேம்பஸில் ஐயா அடங்கிப் போனது அதுவே முதல் முறை.

நிற்க. நம் கதைக்கு வருவோம். என் படிப்பு முடிந்தது. ரிசல்ட் வருவதற்கு முன்பே சுவாமி நித்யானந்தரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. ஆசிரியர் ஒருவர் இறந்து விட்டதால் காலியான வேலைக்கு நேர்காணலுக்கு வருமாறு அழைப்பு.

“தானாக வரும்” என சுவாமி சொன்னது நினைவுக்கு வந்தது. மீண்டும் மிராக்கிள்.

சென்றேன். சுவாமியைப் பார்த்தேன்.

சுவாமி: “என் மூலமாக வருகிறீர்கள் என்று தலைமையாசிரியரிடம் கூறக்கூடாது. தகுதி இருந்தால் செலக்ட் ஆகலாம்”.

பள்ளிக்குச் சென்று குளோரின் என்ற பாடம் சொல்லிக் கொடுத்தேன். 14 பேர் வந்திருந்தார்கள். எனக்குப் போட்ட மதிப்பெண்கள் அதிகமாக இருந்ததால் பணிக்குச் சேர்ந்தேன். சுவாமியிடம் போய் ஆசி வாங்கினேன். அப்போதும் கேட்டார்:

“தலைமையாசிரியரிடம் எதாவது சொன்னீர்களா?”

நான்: “இல்லை”.

தினந்தோறும் காலையில் சென்று பாத நமஸ்காரம் செலுத்துவேன். “ஊம்” என்று ஒரு சிங்க கர்ஜனை மட்டும் கேட்கும். நம் மேல் பார்வை விழும். அவ்வளவுதான். அதற்கு மேல் நேரம் ஒதுக்க மாட்டார். என் பிறந்த நாள் அன்று மட்டும் “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ்” என்று சொல்லுவார்.

துறவியும் எம்.ஜி.ஆரும்

ஒவ்வொரு நிமிஷமும் உபயோகமாகச் செலவிடுவார். காலையில் 2.30 மணிக்கு எழுந்திருந்து, தன் துணிகளைத் தானே துவைத்து, குளித்து முடித்து, கோயிலைத் திறந்து, திருப்பள்ளி எழுச்சி, கீதை, நாமாவளி, தியானம் முடித்து, சிறுவர்கள் உடற்பயிற்சியைப் பார்வையிட்டு, அதன்பின் நடைப்பயிற்சி முடிந்து, ஆஜர் எடுத்து, மாணவர்களோடு சாப்பிட்டு, ஹிந்து எக்ஸ்பிரஸ் இரண்டும் படித்து முடித்து, பின் கடிதங்களுக்குப் பதிலெழுதி, ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி, கடிதங்களுக்குப் பதிலெழுதி, உச்சிகால வழிபாட்டில் கலந்துகொண்டு, உணவும் ஓய்வும் முடித்து, மீண்டும் படித்தல் எழுதுதல் முடித்து, மாலை நடைப்பயிற்சி, வழிபாடு, தியானம், உணவு, சத்சங்கம் முடித்து, இரவு 10.30 மணிக்கு உறங்கச் செல்வார்.

கிழக்கு நோக்கி உள்ள இராமகிருஷ்ணர் கோயிலில் வடக்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்வார். வடக்கு நோக்கி ஸ்நானம் செய்வார். தெற்கு நோக்கி உணவு உட்கொள்வார். மேற்கு நோக்கி அலுவல் புரிவார். இறுதிவரை இந்த திசைகள் மாறியதில்லை.

இந்த நடைமுறைகள் இறுதிவரை மாறவில்லை. சுகவீனம் அடைந்தபோதும் தொடர்ந்தன.

நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில் மிகக் கண்டிப்பானவர் சுவாமி சித்பவானந்தர். ஒருமுறை சேலம் சாரதா கல்லூரி விழாவுக்குக் காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தான் அந்தப் பிரதம விருந்தாளி.

ஆனால், சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார்:

“ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் 15 நிமிடங்கள் தாமதமாக ஒரு நிகழ்ச்சிக்கு வருவது நல்ல எடுத்துக்காட்டாக அமையுமா?”

உடனடியாக எம்.ஜி.ஆர். மன்னிப்புக் கேட்டார்: “சாமி உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் குறித்த நேரத்துக்குள் வரவே முயன்றேன். ஆனால், என்னுடைய தொண்டர்களால் இந்த தாமதம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்கு மூளையே இல்லை. அதனால்தான் அவர்களுக்குத் தலைவனாக இருக்கிறேன்” என்று சொன்னதும் சுவாமி சிரித்து விட்டார்.

பின்பு எம்.ஜி.ஆர் அவருக்குப் பாத நமஸ்காரம் செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.

டைனிங் ஹாலிலும் சரி, அட்டெண்டன்ஸ் எடுக்கும்போதும் சரி மாணவர்களை உச்சிமுதல் உள்ளங்கால் வரை கூர்ந்து நோக்குவார். பொறுமையிழந்த நான் ஒரு நாள் அவரிடம் சென்று,

“அப்படியென்ன தேடுகிறீர்கள் ? யாரைத் தேடுகிறீர்கள்” எனக் கேட்டேன்.

“விவேகானந்தரைத் தேடுகிறேன்”.

“கிடைத்தாரா?”

அவர் உதட்டைப் பிதுக்கினார். இல்லையென்றும் சொல்லவில்லை.

ஒரு நாள் ஆசிரியர் கூட்டத்தில் “இவ்வளவு காலமாகக் குருகுலம் நடத்துகிறோம். ஒரு மாணவன்கூடத் துறவியாக வரவில்லையே? இவர்களைத் துறவி ஆக்கும் அளவுக்கு நமக்குத் தகுதி இல்லையோ?” என அங்கலாய்த்துக் கொண்டார்.

ஊக்கமுடைமை

பள்ளியில் 75-76ம் கல்வியாண்டில் ஓர் அறிவியல் பொருட்காட்சி வைத்திருந்தேன். சுவாமி உள்ளிட்ட பெரியவர்கள் அனைவரும் பாராட்டினர். சுவாமி என்னைத் தனிப்பட்ட முறையில் பாராட்டினார். அதைத் தொடர்ந்து பரமஹம்சரின் விஞ்ஞான விளக்கங்களை “தர்மசக்கரம்” பத்திரிக்கையில் எழுதச் சொன்னார்.

நான் “விஞ்ஞானமும் மெய்ஞானமும்” என்ற தலைப்பில் 15 மாதங்கள் எழுதினேன். ‘செய்து கற்றல்’ என்ற தத்துவ அடிப்படையில் 8ஆம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சி வகுப்புகளை சுவாமியை வைத்துத் ஆரம்பித்தேன். பி.எச்.இ.எல். தலைவர் திரு. தீனதயாளன் இதைத் துவக்கி வைத்தார்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் மெடிக்கல் காலேஜ் டீன், கல்லூரித் துறைத் தலைவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வித்தகர்கள் என இப்படி ஏதாவது ஒருவரை அழைத்து வருவேன்.

எஸ்.எஸ்.எல்.ஸி மாணவர்களுக்கு விஞ்ஞானத் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தன. பள்ளியில் போட்டோ கிராஃபிக் கிளப் செயல்பட்டது. ட்ரான்ஸிஸ்டர் ரேடியோ செய்ய மாணவர்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் எந்தப் பள்ளியிலும் இந்த வசதி அந்தக் காலகட்டத்தில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்வளவுக்கும் சுவாமிதான் எனக்கு ஊக்கம் கொடுத்தார்.

கிருபானந்த வாரியாரும் சுவாமியும்

ஒருமுறை சக்திசங்கத்தின் சார்பாகப் பொள்ளாச்சியில் தொடர் சொற்பொழிவுகள் நடந்தன. சுவாமி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பேச்சாளரை ஒவ்வொருவராக அழைத்துப் பேசுமாறு கூறினார். வாரியாரின் முறை வந்தது.

சுவாமி: “இங்கு கேலி, கிண்டல், நையாண்டி செய்து பேசுதல் கூடாது. எடுத்துக் கொண்ட தலைப்பில் இருந்து விலகி வேறு எங்கோ சென்று விடலாகாது. அடுத்து கிருபானந்தவாரி பேசுவார்.”

வாரியாருக்குக் கற்பூர புத்தி. தன்னைத்தான் குறிப்பிடுகிறார் என்று புரிந்துகொண்டு விட்டார். சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி, “கைலாசம் கண்ட திருவடிகளுக்கு வணக்கம்” என்று கூறித் தன் சொற்பொழிவை வழக்கமான பாணியில் இல்லாமல் சீரியஸாகப் பேசி நல்ல கைத்தட்டல்களைப் பெற்றார்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர்

விவேகானந்தர் நூற்றாண்டு விழா சமயத்தில் 3 விவேகானந்தர் சிலைகள் செய்யப்பட்டன. ஒன்று திருப்பராய்த் துறையில் வைக்கப்பட்டது. மற்றொன்று கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ளது. மூன்றாவது திருவேடகத்தில் வைக்கத் தயாரானது. அதில் ஒரு சிறு குறை இருந்தது. சிலையின் கண்ணுக்கு அருகில் மெல்லிய கோடு ஒன்று ஏற்பட்டு இருந்தது.

“தொலைவில் இருந்து பார்த்தால் இந்தக் குறை தெரியாது” என்று ஒருவர் சொன்னார்.

சுவாமி: “அப்ப தொலைவாக இருந்து ஒழுக்கம் கெட்டு வாழலாமா? சிலையை உடைத்து விடுங்கள்”.

ஒரு நிமிடம் உலகம் ஸ்தம்பித்தது.

“என்ன சாமி சொல்றீங்க? விவேகானந்த சாமி சிலையைப் போய்… எப்படி சாமீ…எப்படி சாமி உடைப்பது?” என்றனர்.

“இப்படித்தான்” என்ற சுவாமி கடப்பாரையை எடுத்து சிலையின் கழுத்தில் ஒரு போடு போட்டார். தலை உருண்டது.

“இந்தச் சிலையை உடைத்துக் கல்லூரி கட்டிடத்திற்கு அஸ்திவாரமாகப் போடுங்கள்” எனக்கூறிச் சென்றார்.

இதே போல மற்றொரு நிகழ்ச்சி. ஒருமுறை சுவாமியும், குகானந்தரும், சாந்தானந்தரும் ஒரு ஊருக்குச் சென்றிருந்தனர். அங்கு ஒருவன் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட விவேகானந்தர் சிலைகள் இரண்டை விற்றுக் கொண்டிருந்தான். அந்த 2 சிலைகளையும் சுவாமி விலைக்கு வாங்கினார். குகானந்தர் மற்றும் சாந்தானந்தர் இருவருக்கும் அந்தச் சிலைகள் பிடிக்கவில்லை.

“நன்றாக இல்லாத சிலைக்குப் பணம் கொடுத்து வாங்கி இருக்க வேண்டாம்.” என்றனர்.

அதற்கு சுவாமி “அதனால்தான் வாங்கினேன். இதை வாங்குபவர்கள் விவேகானந்தர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று நினைத்துவிடக் கூடாது என்பதால்தான் வாங்கினேன். அவற்றை உடைத்து விடுங்கள்” என்றார்.

இராமநாதபுரத்தில் தாயுமானவருக்கு சமாதி கோயில் கட்ட ஏற்பாடு ஆனது. அதில் வைக்க தாயுமானவர் சிலைக்கான வடிவமைப்புப் பற்றி சுவாமி யோசித்தார். வித்யாவன மாணவர்கள் அனைவரையும் வரிசையாகப் பரிசோதனை செய்து சிலரைத் தேர்ந்தெடுத்தார். கண்ணுக்கு ஒரு மாணவனையும், காதுக்கு ஒருவனையும், மூக்கிற்கு ஒருவனையும், கழுத்துக்கு ஒருவனையும், மண்டைக்கு ஒருவனையும், உடல் வாகுக்கு ஒருவனையும் தேர்ந்தெடுத்தார். சிற்பியை அழைத்து இந்த சாமுத்ரிகா லக்‌ஷணப்படி சிலை அமைக்கச் சொன்னார். அதன்படி சிலையும் நன்கு அமைந்தது.

ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு

சுவாமிக்கு உடல்நலம் குன்றியபோது மருத்துவர்கள் கொடுத்த குழாய் மாத்திரைகளை பிரம்மச்சாரி நாகசுந்தரம் கொடுத்தார். ஒரு நாள் கருப்பு சிகப்பு வண்ணத்தில் இருந்த குழாய் மாத்திரைகள் இரண்டு கொடுக்கப்பட்டன. அவற்றை சுவாமி வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தார்.

“ராமசாமி பெரியாரை விழுங்கியாச்சு” என்று சொல்லி சிரித்தார். உடன் இருந்தவர்களும் சிரித்தனர். அதாவது நாத்திக வாதத்தை சுவாமி விழுங்கி விட்டதாகப் பொருள்.

செப்டிக் டேங்க் சுத்தப்படுத்த ஆட்கள் வரவில்லை. பள்ளி திறந்து விட்டால் குழந்தை வந்தபின்பு இந்த வேலைகளை வைத்துக் கொண்டால் அவர்களுக்குச் சிரமம். “ஆட்கள் வரவில்லையே. எப்படி சுவாமி சுத்தப்படுத்துவது?” என்றனர்.

“இதோ இப்படித்தான்” என்று கூறி சுவாமி மலக்குழிக்குள் குதித்து விட்டார். பக்கெட்டில் மனிதக் கழிவுகளைத் தானே எடுத்து அப்புறப்படுத்தினார். அதன்பின் மற்றவர்களும் வேலையில் இறங்கினர். பூர்வாசிரமத்தில் சுவாமி மாபெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.

நமக்கேற்ற கோலத்தில் முருகன்

ஒருமுறை பழனி முருகனைத் தரிசிக்க சுவாமி மலையேறிக் கொண்டிருந்தார். அப்போது வின்ச், ரோப் கார் போன்றவை கிடையாது. பாதி தூரம் கடந்து விட்டார். ஸ்ரீ சாது சுவாமிகள் மேலேயிருந்து கீழே வந்து கொண்டிருந்தார். சுவாமியைப் பார்த்து

“தரிசனத்துக்கோ?” என்றார்.

சுவாமி: “ஆமாம் சுவாமி”.

சாது: “சரி. வாருங்கள். உங்களுக்காக நானும் திரும்ப மலையேறுகிறேன்” என அழைத்துச் சென்றார்.

“உமக்கு எந்தக் கோலத்தில் தரிசனம் வேண்டும்?” என்று கேட்டார்.

சுவாமி: “நமக்கேற்ற கோலத்தில்தான் !”

முருகனின் ராஜ அலங்காரம் மாற்றப்பட்டு ஆண்டிக் கோல அலங்காரம் செய்யப்பட்டது. பொதுஜன தரிசனம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. மூலஸ்தானத்தில் சுவாமி அமர்ந்து தியானம் செய்ய வசதி செய்து தரப்பட்டது.

சில அனுபவங்கள்

தபோவன பிரார்த்தனை மண்டபத்தில் சுவாமி யோகானந்தர் அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் பாடி முடித்தவுடன் சுவாமியிடம் சென்று, “சுவாமி, நான் பாடினேனே, கேட்டதா?” என்று கேட்டார்.

“கேட்டேன்”

“என் பாட்டு நன்றாக இருந்ததா சுவாமி?”

“நீ பாடியது நன்றாக இருந்தது. நீ பாடாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.”

சுற்றி இருந்தவர்கள் சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.

ஒருமுறை ஓர் அழகான கலைநயமிக்க பூந்தோட்டத்தை உருவாக்கி இருந்தேன். குருதேவர் (ராமகிருஷ்ண பரமஹம்ஸரின்) ஜெயந்தி விழாவுக்காக அதைச் செய்திருந்தேன். அதனருகில் ‘தோட்டத்தை ரசிக்கும் மக்கள் தோட்டக்காரனை நினைத்துப் பார்ப்பதில்லை. உலகை அனுபவிக்கும் மக்கள் அதைப் படைத்த இறைவனை நினைப்பதில்லை’ என்று ஒரு போர்டு வைத்திருந்தேன்.

சுவாமி அந்தப் பக்கமாக வந்தார். தோட்டத்தை ரசித்துப் பார்த்தார். பலகையில் எழுதி இருந்ததையும் படித்தார். என் அருகில் வந்து “நான் உங்களை நினைத்துப் பார்க்கிறேன்” என்று கூறி விட்டுச் சிரித்தார்.

குருகுலத்தில் சின்னப்பா என்ற ஆசிரியர் நாடகத்துறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். ஒருநாள் சுவாமியிடம் அவர், “சும்மா போட்ட நாடகத்தையே திருப்பிப் போட்டு அலுத்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பது சலிப்பாக உள்ளது. புது நாடகம் தேவை” என்றார்.

“சின்னப்பா ! நமது அடுத்த நாடகம் வேடன் கண்ணப்பா !” என்றார். அதைக் கேட்டு சின்னப்பாவும் சந்தோஷப்பட்டார். ஆனால், கடைசிவரை சுவாமி அந்த நாடகத்தை எழுத முடியவில்லை.

திரிகாலஞானி

1980ல் தபோவனத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் காவிரியில் குளிக்கும்போது அகால மரணம் அடைந்திருந்தார். அந்தச் சமயத்தில் ஒருமுறை மாணவர்கள் வரிசையாக நின்று சாமியிடம் ஆஜர் கொடுத்துக் கொண்டிருந்தனர். இளம்பிள்ளைகள். கள்ளமறியாத கன்றுகள். ஒரு மாணவன், “சுவாமி. அந்த சாமி செத்துப் போயிட்டார். நீங்க எப்ப செத்துப் போவிங்க?” என்று கேட்டு விட்டான்.

அதற்கு சுவாமி சிறிதும் அதிர்ச்சி அடையாமல், “இன்னும் 5 வருஷம்” என்றார். அதே போல் 5 வருஷம் தான் இருந்தார்.

(தொடரும்)

இக்கட்டுரை ஆசிரியர் திரு.வ.சோமு அவர்கள் தனது பன்னிரெண்டாம் வயதிலிருந்து சுவாமி சித்பவானந்தரை அறிந்தவர். 1974 முதல் 1985 வரை உடனிருந்தவர். இன்றும் தபோவனத்துடன் தொடர்பில் இருந்து தொண்டுகள் புரிந்து வருகிறார். www.rktapovanam.org மற்றும் http://rkthapovanam.blogspot.com ஆகிய இணையதளங்களை நடத்தி வருகிறார். தர்ம சக்கரம், ஆன்மீக ஆலயம், ராமகிருஷ்ண விஜயம், வாராஹி விஜயம் ஆகிய பத்திரிகைகளில் ஆன்மீக கட்டுரைகள் எழுதி வருகிறார்.