46 பாரத செவிலியர் தாயகம் திரும்பியது இந்திய வெளியுறவுத்துறையின் செயலாக்கத்திலும் பார்வையிலும் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுவாக இந்திய அரசுக்கு ஒரு ‘நல்ல பெயர்’ உண்டு. வெளிநாட்டில் இந்தியர்கள் இன்னல்கள் படும் போது அது கண்டு கொள்ளாது என்பதுதான் அது. இந்த விஷயத்தில் இதுவரைக்குமான இந்திய அரசாங்கங்களின் கையாலாகாத்தனம் என்பது உலக பிரசித்தி பெற்றது. குறிப்பாக இந்திய தூதரக அதிகாரிகள் பிற நாடுகளில் வாழும் சக இந்தியர்களின் கஷ்டங்களை கண்டு கொள்ளாமல் நடந்து கொள்ளும் விதம் இவ்வாறு பிழைப்புக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு ஒட்டு மொத்த இந்திய தேசத்தின் மீதே வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் இம்முறை விஷயங்கள் வேறாக இருந்துள்ளன என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
These are not your only choices, you also have many other options available to you. It is effective in cost of clomid in ghana Bragança treating both male and female infertility of women with low fertility problems. This is to show you how important that you use our discount code as soon as possible at checkout.
Fish moxie in san jose, ca - fish moxie - the best fish moxie on the web. Vigamox (sinemet, veracyclovir, elvitegravir and daclatasvir) is an antiretroviral that was originally developed http://bizgatefinancial.com/Connect by vertex pharmaceuticals under research by glaxosmithkline for the treatment of hiv-1 infection in combination with ritonavir and didanosine. The drug has been commercially available under the generic name orexin-a (doxazosin) for the past 15 years.
It is also important to assess the patient for comorbid medical diseases, allergies, and drug or alcohol intoxication. If the same dose is taken repeatedly over a long period of time, the condition may become resistant to the medication and the doctor may ajar need to look for another medication. By viewing, selecting or purchasing prescription medications, you are agreeing to our terms and.
இஸ்ரேல் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் தேசத்தவர் இவ்வாறு கடத்தப்படும் போது செயல்படும் விதம் என்றைக்குமே இந்தியர்களின் ஆற்றாமைக்கு இலக்காகியுள்ளது. என்றைக்கு இந்தியாவிலும் இப்படி இந்தியர்களின் உயிர்களை மதிக்கும் ஒரு அரசு செயல்பட ஆரம்பிக்கும் எனும் ஆதங்கம் ’எண்டபி’ நிகழ்வை பார்க்கும் போதெல்லாம் இந்தியர்களுக்கு ஏற்படும். வாஜ்பாய் அரசாங்கத்தின் காலகட்டத்தில் நிகழ்ந்த காண்டகார் விமான கடத்தலின் போது இந்தியாவில் இருந்த ஊடகங்கள் மிக தீவிரமாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கடத்தப்பட்ட விமானத்தில் இருந்தவர்களின் உறவினர்களை பயன்படுத்தி ஒரு உணர்ச்சிகர மிரட்டலை (emotional blackmail) செய்ததையும் பின்னர் இந்திய உயிர்களுக்காக பயங்கரவாதி விடுவிக்கப்பட்ட அந்த அவமானகரமான நிகழ்வையும் பின்னர் அதை வைத்தே வெட்கமில்லாமல் அதே ஊடகங்கள் பாஜகவை விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது.
இம்முறையும் அதே கதையை மீண்டும் செயல்படுத்த ஊடகங்கள் முனைந்தன என்பதுதான் உண்மை. ஆனால் அதிர்ஷ்டவசமாக இம்முறை அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டது, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது மற்ற அரசியல் நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்துவிட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் இந்த பிரச்சனைக்காக உழைத்தார். ஈராக்கை சுற்றியுள்ள பிற அராபிய நாடுகளைத் தொடர்பு கொண்டார். இந்த அரசுகளின் ஒத்துழைப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்திய அரசு அரசுக்கு அப்பால் சதாம் ஹூசைன் ஆதரவு அமைப்புகளிடம் கூட தொடர்பு கொண்டது. ஜூன் 25 நெருக்கடி முற்றிய காலகட்டம். நரேந்திர மோதி ஒரு உயர்மட்ட அதிகாரிகளின் குழுவைக் கூட்டினார். தேசிய பாதுகாப்பு அதிகாரி அஜித் தோவல் அவர்களுக்கும் தேசிய உளவுத்துறை இயக்குநர் அஸீப் இப்ராஹீம் இருவரும் ரகசிய செயல்திட்டத்துடன் ஈராக் சென்றனர். (NSA Doval went on secret mission to Iraq, தி இண்டு, ஜூலை-8-2014) அஜித் தோவல் பல சாகசங்கள் நிகழ்த்தியவர். எப்படி பயங்கரவாத இயக்கங்களை சமரச மேசைக்கு கொண்டு வருவது எனும் கலை அறிந்தவர். பாகிஸ்தான் ஆகட்டும் வடகிழக்கு பிரிவினைவாத இயக்கம் ஆகட்டும் எங்கும் ஊடுருவி திறம்பட விஷயங்களை முடிப்பதில் அவரது திறமை திரைப்படத்தில் காட்டப்படும் உளவாளிகளின் சாகசங்களையும் முறியடிக்கும். மிஸோரம் பிரிவினைவாதிகளை சமரச மேடைக்கு கொண்டு வந்த இவரது பங்கு இன்றளவும் உளவுத்துறை வட்டாரங்களில் வியந்து பேசப்படுவது.
அஸீப் இப்ராஹீமும் ஒன்றும் இளைத்தவர் அல்ல. தோவல் போலவே காரசாரமான நேர்மையான அதிகாரி. தேசிய உளவுத்துறையின் முதல் இஸ்லாமிய இயக்குநர் என்பது அவரது பயோடேட்டாவின் ஒரு தரவு மட்டும்தான். ஆனால் எவ்வித தயவு தாட்சண்யமும் பார்க்காத நேர்மையாளர். அவரது நேர்மைக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், அவர் இயக்குனரான போதுதான் இஷ்ரத் ஜகான் விஷயத்தை வைத்து காங்கிரஸ் சிபிஐ மூலமாக மோதிக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தியது. அதற்காக தேச பாதுகாப்பைக் குறித்து கூட கவலைப்படாமல் காங்கிரஸ் இயங்கியது. அதைத் தடுத்து உளவுத்துறையின் செயல்பாட்டை ஆதரித்து இயங்கி காங்கிரஸாரின் வெறுப்பையும் அன்றைய சிபிஐயின் கோபத்தையும் சம்பாதித்துக் கொண்டவர். ஆனால் மதம், அரசியல் விளையாட்டு ஆகியவற்றை மீறி உண்மையை பெரிதாக மதித்ததால் காங்கிரஸால் அன்று மோதியை எதுவும் செய்ய முடியவில்லை. இந்த அட்டகாசமான இருவர் ஜோடிதான் ஈராக்கில் களமிறங்கியது.
விளைவுகளை நாம் நம் வீட்டு தொலைகாட்சிகளில் கண்டோம். அவர்கள் திரும்பியது ஆனந்தம். அவர்கள் குடும்பங்களுடன் இணைந்த காட்சிகள் சந்தோஷம். ஆனால் அண்மையில் பெரியவர் பாரதிமணி சொன்னது போல அவர்கள் தம் உறவினரை அணுகுவதற்கு முன் வேட்டை நாய்களென பாய்ந்த ஊடகர்களின் வெறித்தனம் அசிங்கமாகத்தான் இருந்தது. கேரள செவிலியரின் மிக மோசமான ஆங்கில ஒலி வெள்ளம் செய்தியோடைகளை மூழ்கடித்தன. வழக்கம் போல ஸ்டாக்ஹோல்ம் சிண்ட்ரோமுடன் ’போற்றிப்பாடடி பெண்ணே பயங்கரவாதி காலடி மண்ணே’ என்கிற ரீதியில் அவர்கள் கொடுத்த பேட்டிகளை கர்மசிரத்தையாக நம் உள்ளூர் அடிப்படைவாதிகள் தலை வெட்டப்பட்டு சாகும் ஷியாக்களின் மரணத்தையும் வெடிவைத்து தகர்க்கப்படும் பல ஷியா மசூதிகளின் அழிவையும் ஹலால் ஆக்கினர். சரி விஷயத்துக்கு மீண்டும் வருவோம். இப்படியெல்லாம் நம் ஊடகங்கள் கோமாளி கூத்தடிக்கும் போது உண்மையாக இதற்காக உழைத்தவர்கள் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெளியே தெரியும் காட்சிகளுக்கு அப்பால் பல விஷயங்கள் மோதி அரசால் நிகழ்த்தப்பட்டன. இந்திய ஊடகங்களில் அதிகம் கண்ணைக்கவராத ஒரு செய்தி உண்டு. பாரசீக வளைகுடாவிலும் ஏமன் வளைகுடாவிலும் ஏவுகணைகள் தாங்கிய இந்திய போர்கப்பல்கள், ஐ.என்.எஸ்.மைசூர், ஐ.என்.எஸ்.தர்காஷ் ஆகியவை நிறுத்தப்பட்டன. ஈராக்கில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கும் இந்தியர்களைக் காப்பாற்றுவதற்காக இவை அங்கே நிலைநிறுத்தப்பட்டன. (India deploys warship in Persian Gulf, PTI, June-28-2014) 46 செவிலியரை மட்டுமல்லாமல் இன்னும் 130 இந்தியர்களை மீட்டதில் இவற்றின் பங்கு என்ன என்பது ஒருவேளை வரலாற்றில் என்றென்றைக்கும் வராமலே போய்விடலாம்.
இந்திய அயலுறவுத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த அக்பரூதீன் இது குறித்து கூறியுள்ளது முக்கியமானது. “நம் மக்கள் இன்னும் அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிடித்திருப்பவர்களைக் குறித்து நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்போது இது குறித்து கூறப்படும் எதுவும் (எங்கள் மீட்பு முயற்சியை) பாதிக்கலாம்.எனவே எவருடன் இணைந்து இந்த விடுதலையை சாத்தியமாக்கினோம். எப்படி சாத்தியமாக்கினோம் என்பதைக் குறித்து இப்போது சொல்வதற்கில்லை. நாங்கள் அனைத்து கதவுகளையும் பயன்படுத்துகிறோம். தேசத்தின் அனைத்து சக்தியையும் இதில் ஈடுபடுத்தியுள்ளோம்.” ஒரேயடியாக பயங்கரவாதிகளுக்கு பணிந்து போவது என்பதற்கும் தேவையற்ற ஊடக அழுத்தங்கள் என்பதற்கும் அப்பால் இந்திய அரசு செயலாற்ற முடியும் என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை, உளவுத்துறை ஆகியவை இணைந்து செய்து காட்டியுள்ளன. இதற்காகவெல்லாம் மோதி தலைமையிலான அரசை இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் பாராட்டும் என நினைத்திட வேண்டாம். அவை தம் கடமையை தம் ஏவல் எஜமானர்களுக்காக விசுவாசத்துடன் செய்யும்.
தமிழர்களாகிய நாம் இதிலிருந்து பாடம் படிக்க வேண்டியதும் நிறைய இருக்கிறது. இதில் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நடத்தை மிகவும் நேர்மறையாக இருந்தது. இதை அவர் அரசியலாக்காமல் விவேகமாக செயல்பட்டார். கேரள செவிலியரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் அதை வைத்து அரசியல் செய்வதில் அவர் காட்டவில்லை. இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழர்களை பயன்படுத்தி நம் அரசியல்வாதிகள் அடித்த கோமாளி கூத்துகளை கொஞ்சம் நினைவுப்படுத்திப் பார்க்கலாம். குறைந்த பட்சம் இப்போதாவது எஞ்சியிருக்கும் தமிழர்களை மீண்டெழ வைக்க நாம் அறிவுசார்ந்து நெடுநோக்குத் திட்டத்துடன் என்ன செய்கிறோம் என யோசித்தால் உணர்ச்சிகர கோஷங்களுக்கு அப்பால் எதுவுமில்லை. தமிழக மீனவர்களுக்காக உணர்ச்சிகர அரசியலாக்குதலுக்கு அப்பால் எழும் ஒரே அக்கபூர்வமான வேதனை குரல் ஜோ டி குரூஸுடையது மட்டும்தான். தமிழக அரசியல் கேரளத்தை பார்த்து படிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. கட்சி பேதமற்று தமிழர்களுக்காக உணர்ச்சி பூர்வ அரசியலைத் தாண்டி ஆக்கபூர்வமாக செயல்படுவது எப்படி என்பது அது. ஆனால் தமிழ் வெறுப்பும் சிங்கள ஆதரவும் கொண்ட High level கைக்கூலிகள் தமிழர்களுக்கு வாய்த்திருக்கும் ஒரு சாபக்கேடு அந்த சாபக்கேடு மலையாளிகளுக்கு இல்லை என்பதும் மற்றொரு கசப்பான யதார்த்தம்.
இன்னும் பஞ்சாபைச் சார்ந்த 39 இந்தியர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் இடங்களில் உள்ளனர். அவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் இந்திய அரசு வெற்றி பெற வேண்டுமென்று ஒவ்வொரு உண்மையான இந்தியனும் விரும்புகிறார் என்பதில் ஐயமில்லை. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இந்திய அரசு இப்போது அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்காக இயங்குகிறது என்பது நம் 67 ஆண்டுகள் இந்திய அரசு வரலாற்றில் ஒரு நல்ல மாற்றம். ஒரு ஆறுதலான மாற்றம். அதை உருவாக்கி அளித்தமைக்காக மோதியின் அரசுக்கு என்றென்றும் தேசபக்தி கொண்ட இந்தியர்களின் நன்றி இருக்கும். தமிழர்களாகிய நாம் இந்த சரியான அரசை பயன்படுத்தி ஈழத்தமிழர்களுக்கும் மலேசிய தமிழர்களுக்கும் ஏன் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான சுயமரியாதையும் வளமும் கொண்ட வாழ்வை ஏற்படுத்த தங்கள் முழு அறிவையும் அரசியலுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும்.
இது முடிவல்ல… தொடக்கம்.