அணு உலையும் ஆயுதப் போட்டியும் அப்பாவி உயிர்களும் – 2

சென்ற பதிவில் வளரும் நாடுகளின் அணுசக்தியை மேற்கத்திய நாடுகள் எவ்வாறு முடமாக்க முயல்கின்றன் என்பதையும் அதற்காக அவர்கள் ஏற்படுத்தும் மரணங்களை பற்றியும் கண்டோம். இந்த அணுசக்தி இல்லாததால் சீனாவிடம் நாம் இழந்த விசயங்களை பற்றியும் கண்டோம். எல்லோரும் அணு உலையை பற்றியும் அணு குண்டுகளை பற்றி தான் பக்கம் பக்கமாக எழுதி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாவற்றையும் விட சாதாரண பொது மக்களுக்கு தெரியாத மற்றொறு விசயம் உண்டு. அமெரிக்கா தயாரித்து கொண்டு இருக்கும் சக்தி மிக்க மனித அணுகுண்டுகளை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இது சம்மந்தப்பட்ட ஆராய்ச்சிகளை பற்றி பதிவின் முடிவில் விரிவாக எழுதவுள்ளேன்.

I've been taking them daily for 6 months, so my hair is thick, and. Bayer levitra online prescription drugs available to fill https://fergkz.com.br/about/ and for purchase online in your local pharmacy for a nominal fee. For all your doxycycline order online purchase online, we have online pharmacy that is the best option for you.

You are also encouraged to drink plenty of water to help flush out any drugs or other chemicals. Citalopram https://plancor.com.mx/ 50 mg: citalopram is one of the most popular and common antidepressants. They are also given when there are other serious health conditions, such as when a baby has pneumonia and there is a high chance of death, or if a person has a very severe disease, like cancer, diabetes, or heart disease.

The cheapest price for amoxicillin, we make sure that. This is a great way to use the time you save on your day Phatthaya clomid price walmart by using the time machine. Aciphex should not be used in children younger than 2 years,

மேலே உள்ள படம் தான் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சக்தி வரைபடம். இதன் படி வெறும் 3% வீதம் மின்சாரம் தான் அணுமின் நிலையத்தில் இருந்து வருகிறது. நமக்கு அனல் மின் மற்றும் நீர் மின்சக்தியில் இருந்து தான் அதிக மின்சாரம் கிடைக்கிறது. நிலைமை இப்படி இருக்க சிலர் தனது சுய நலத்திற்காக கேடு விளைக்கும் அணு உலையில் மக்கள் வரிபணத்தை கொட்டுகிறார்கள் அது வெடித்தால் பல ஆயிரகணக்கான மக்கள் உயிர் இழப்பார்கள். மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கபடும் என்று பெரிய பந்தல் போட்டு வெள்ளை பாவாடைகளும் சிகப்பு சட்டைகளும் பேசி கொண்டு இருக்கின்றன. இதை பற்றி பேசுவதற்கு முன்பு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு ஒரு விசயம் உள்ளது. அது தான் குறைந்து வரும் நீர் சக்தி மற்றும் எரிசக்தி.படங்களை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும்

மேலே உலகில் இருக்கும் நிலக்கரி உற்பத்தியின் அளவை பற்றிய வரைபடம் உள்ளது. இதன் படி 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசியா நாடுகளின் மொத்த மின் உற்பத்தில் 50% மின்சக்தி தரும் நிலக்கரி பூஜ்ஜியத்தை நோக்கி செல்ல தொடங்க உள்ளது. ஒட்டு மொத்த ஆசியாவிற்கே இந்த நிலை என்றால் 1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நிலை? நமது நாட்டின் மொத்த மின்சகதியில் 50% வீதம் மின்சக்தியை தரும் நிலக்கரி 2020 க்கு பிறகு மிக பெரிய அளவில் குறைய தொடங்கும். அதாவது தற்பொழுது 96743.38 MW மின்சாரம் தரும் அனல்மின் உற்பத்தி தோராயமாக வருடம் ஒன்றிற்கு 2000MW குறைய போகிறது. இதை அணுமின் சக்தி இல்லாமல் வேறு எந்த சக்தி ஈடு செய்யும் என்பது பரலோகத்தில் மட்டும் உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

இது தவிர நமது நாட்டில் இருக்கும் நீர்சக்தி எந்த அளவுக்கு குறைந்து கொண்டு இருக்கிறது என்ற விவரம் நான் சொல்ல தேவையில்லை. இருப்பினும் உலக வங்கியின் ஆய்வு படத்தை மேலே கொடுத்து உள்ளேன். 2020 க்கு பிறகு குடி நீரின் அளவு மிக வேகமாக குறைய போகிறது. கடல் நீரை குடி நீராக்கி பயன்படுத்துவதை தவிர வேறு வழி இல்லை. இதற்கும் அதிக அளவு மின்சாரம் தேவை. நமது மரபுசார் மின்சாரம் 2020க்கு பிறகு கேள்வி குறியாக போகும் நிலையில் அணுசக்தியை தவிர வேறு எந்த மாற்று சக்தி இதை செய்ய போகிறது. டாக்டர் பட்டத்தை வாங்கிய கம்யூனிஸ விஞ்ஞானிகளிடம் 1 பில்லியன் மக்களின் நீர் தேவை பூர்த்தி செய்ய ஏதேனும் தீர்வு உள்ளதா?

இதை எல்லாம் விட நமக்கு முன்பு இன்னொரு பிரச்சனையும் உண்டு. அது தான் நமது மக்கள் தொகை பெருக்கம், இதை எல்லாம் கட்டுபடுத்த முயற்சி செய்தால் சிறுபான்மை அடக்கு முறை என்று சொல்கிறார்கள். மக்கள் தொகை குறைப்பு ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சட்டங்கள் எப்படி சிறுபானமைக்கு எதிரானது என்பது செக்யூலர்வாதிகளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். கேரளா, உத்திரபிரதேசம், பீகார் மற்றும் மேற்குவங்க பகுதிகளில் அதிக அளவு மனித உற்பத்தி ஏன் நடந்து கொண்டு இருக்கிறது என்பது எல்லாம் தெரிந்த கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே!!! மேல் சொன்ன அனைத்து பிரச்சனைகளும் அதிகம் உள்ள மாநிலங்களான கேரளா மற்றும் மேற்கு வங்கம் அதிபுத்திசாலி கம்யூனிஸ்டுகளால் தான் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர் கட்சியாகவோ இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அணு உலையை அனுமதிக்க மாட்டேன். மக்கள் தொகை பெருக்கத்தையும் கட்டுபடுத்த அனுமதிக்க மாட்டேன் என்றால் என்ன செய்வது?

எதற்கு எடுத்தாலும் மரபுசாரா எரிசக்தியை உபயோகபடுத்தலாமே என்று சொல்லும் சில அரை வெக்காடுகளை வேறு நம் நாட்டில் உள்ளனர். மரபு சாரா எரிசக்தியில் முக்கிய இடம் வகிக்கும் காற்று மற்றும் சூரிய மின்சக்தி. இவை இரண்டுமே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாத மற்றும் தொடர்ந்து கிடைக்க கூடிய விசயம் அல்ல.

Photovoltaic solar plant
Solar thermal power plant

53MW மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த photovoltaic solar தொழிற்சாலை ஜெர்மனியில் அண்மையில் கட்டப்பட்டது. இதற்கு செய்யப்பட்ட செலவு 220 million $. இதன் அடிப்படையில் கூடங்குள மின் உற்பத்தி திறனான 2000MW மின்சாரம் உற்பத்தி செய்யும் solar தொழிற்சாலை அமைக்க நமக்கு தேவை > 8500 million $. கூடங்குளத்திற்கு ஆன செலவோ < 3000 million $. இது நடை முறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.

சரி இது வேண்டாம் solar thermal energy போகலாம் என்றால் அதற்கும் அணு உலையை விட 2 மடங்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் தவிர அந்த அளவுக்கு வெப்பம் தர கூடிய மற்றும் நில அமைப்பு தார் பாலைவனத்தில் ஒரு சில இடங்களில் தான் உள்ளது. இது போன்ற அதிகபடியான சூரிய மின்சக்தி சேகரிப்பால் ஏற்படும் வெப்பத்தினால் அதன் சுற்றுபுற பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் நிரந்தரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டும். அமெரிக்கா போன்ற மக்கள் தொகை குறைந்த நாடுகளுக்கே இது போன்ற தொழில் நுட்பம் சாதாராண விசயம் இல்லை. 2000MW மின்சாரத்தை அதுவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில் தற்போதைய நிலையில் சூரிய ஒளியில் உற்பத்தி செய்வது என்பது நடக்க கூடிய காரியமா? அதற்கு தேவையான தொழில் நுட்பத்தை அணு உலை ஆபத்து என்று சொல்லும் கம்யூனிஸ விஞ்ஞானி பத்மநாபன் போன்றவர்கள் தருவார்களா?

எப்பொழுதும் கிடைக்கும் சூரிய சக்திக்கே இந்த பாடு என்றால் காற்றாலைகளை பற்றியும் அது தரும் மின்சக்தி பற்றியும் நான் சொல்ல தேவையில்லை. ஆனால் நமது அரசாங்கம் இதை எல்லாம் விட்டு விடவில்லை. மரபு சார் மின்சக்தி மட்டுமே நமக்கு போதாது. அதனால் மரபுசாரா எரிசக்தியையும் நமது அரசாங்கம் ஊக்கபடுத்தி கொண்டு தான் இருக்கிறது. மரபுசாரா எரிசக்தி உற்பத்தியில் நாம் உலகின் ஏழாவது இடத்தில் உள்ளோம். இதில் மேலும் குறிப்பிட தக்க விசயம் என்னவென்றால் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் கூடங்குளத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் உள்ள மாநிலங்கள் கடைகோடியில் உள்ளன. குஜராத முதல்வர் நரேந்திர மோதி மாநிலம் அதில் முதல் இடத்தில் உள்ளது.

இது தவிர நீர் மின்சக்தி திட்டத்தை பற்றி இங்கு நான் சொல்லியே ஆக வேண்டும். கம்யூனிஸ கை கூலியும் புனித ஆவிகளுக்கு பிடித்தவரும் 24x 7 ஆங்கில ஊடக ரௌடிகளின் கதாநாயகியுமான மேதா பட்கர் அப்பாவி கிராம மக்களை ஏமாற்றி பிரச்சனை செய்து பல ஆயிரம் ஏக்கர் நில பாசன மற்றும் 3000 MW மின் உற்பத்தி தரும் மின் உற்பத்திக்கு எவ்வாறு முட்டுகட்டையாக இருந்து அப்பாவி கிராம வாசிகளை ஏமாற்றி இந்திய அரசாங்கத்திற்கு எதிராக தூண்டிவிட்டு வன்முறையை உருவாக்கினார் என்பதை மக்கள் மறந்துவிட்டார்களா என்ன? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை மாவோயிஸ்டுகளா மாற்றி சீனாவிடம் இவர்கள் கல்லா கட்டினார்கள் என்பது வேறு விசயம். இந்த பக்கம் அணுமின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்த வெளி நாட்டு கை கூலிகள் அந்த பக்கம் சென்று நீர்மின் சக்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கேட்டால் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்வது, இதை படம் பிடிக்க Times Now, CNN-IBN மற்றும் NDTV போன்ற வெளி நாட்டு தொலைக்காட்சிகள் வேறு.

இந்த மேதாபட்கர்க்கு உலக அளவில் கொடுக்கப்பட்ட சில விருதுகளே இவர் யார் என்று காட்டு கொடுத்துவிடும், Amnesty International (இங்கிலாந்து உளவு துறையின் பினாமி அமைப்பு) கொடுத்த விருது – Human Rights Defender’s Award Vigil India Movement. (Ecumenical Christian Centre Center) கொடுத்த விருது – M.A. Thomas National Human Rights Award இது தவிர வெளி நாட்டு NGO க்கள் இவருக்கு பல வித விதமான விருதுகளை வழங்கியுள்ளது.

கூடங்குளம் நாட்டின் கடை கோடியில் மிக பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணு உலை நாட்டின் கடை கோடியில் அதாவது இந்திய பெருங்கடலில் நமது பாதுகாப்பையும் ஆளுமையையும் அதிகரிக்க கூடியது. இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய மிக பெரிய எரிசக்தி பற்றாக்குறையை (அதாங்க அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, பெட்ரோல்) தீர்க்க மிகவும் அவசியம். அது மட்டும் இன்றி இந்த கூட்ங்குளம் அணு உலை மூலமாக தான் நாம் வருங்காலத்தில் அணு ஆயுதங்கள் தயாரித்து நமது நாட்டையும் வீட்டையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள இயலும்.

நமது கம்யூனிஸ மற்றும் கிறித்துவ அறிவு ஜீவிகள் இந்தியாவின் மின்சக்தி வரைபடத்தை காட்டி அணு உலையால் நமக்கு வெறும் 3 சதவிகிதம் மின்சக்தி வருவதாகவும் அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின்சக்தியால் தான் மீதம் உள்ள 80% வருவதாக கூறுகிறார்கள். என்னுடைய கேள்வி இருக்கின்ற மின்சக்தி போதவில்லை என்பதால் தானே இந்த அணு உலை. ஆனால் இந்த அனல் மின்சக்திக்கு ஆதாரமான நிலக்கரி போன்ற எரிபொருட்கள் எதிர் காலத்தில் குறைவாக தான் கிடைக்கும் என்பது இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியாதா? ஒரு அணுமின் நிலையம் கட்ட 10 வருடங்களுக்கு மேல் தேவைபடும் பொழுது இப்பொழுது இருந்தே நாம் தயார் படுத்தி கொண்டால் தானே எதிர் கால பிரச்சனைகளை சமாளிக்க முடியும்.

சில அறிவு ஜீவிகள் சூரிய மற்றும் நீர் மின் சக்தியை பற்றி பேசுகிறார்கள். ஆனால் இதை வைத்து எத்தனை நாள் காலம் தள்ள முடியும். சூரிய மின்சக்தியை வைத்து ஒரு ஐந்து தொழிற்சாலைகளை கூட நடத்த முடியாது. தற்பொழுது நீர்மின் சக்தியை உருவாக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கூட்டம் ஆக்கபூர்வமான நர்மதா நதி நீர்மின் சக்தி திட்டங்களுக்கு பிரச்சனை செய்வது ஏன்?

சில முட்டாள்கள் ஜெர்மனியை பற்றியும், அமெரிக்கா இனி அணு உலைகள் கட்ட போவது இல்லை என்று சொல்கிறார்கள். ஜெர்மனியின் மக்கள் தொகை என்ன? நமது மக்கள் தொகை என்ன? அவர்களுக்கு தேவையான எரிசக்தியும் நமக்கு தேவையான் எரிசக்தியையும் ஒப்பிடுவது யானையையும் பூனையையும் ஒப்பிடுவதற்கு சமம். இது தவிர அவர்கள் தங்கள் தேவைக்கும் அதிகமாக அணு உலைகளை ஏற்கனவே அமைத்து கொண்டுள்ளனர். இனி எதற்கு அவர்களுக்கு புதிய அணு உலை.

கடைசியாக சுனாமி மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டால் அணு உலை வெடிப்பு ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள் என்று சொல்லும் அதே கூட்டம் கேரளாவில் நிலநடுக்கத்தால் அணை உடையும் என்று சொல்பவர்களை முட்டாள்கள் என்று சொல்கிறார்கள்.

உலகில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதிகள்
உலகில் அணு உலைகள் உள்ள பகுதிகளின் வரைபடம்

மேலே உள்ள படங்களே போதும் இந்த போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் மதவாத கூட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள. கூடங்குளத்தில் உள்ள கிறித்துவர்களை பாதுகாக்க தான் கத்தோலிக்க அமைப்புகள் போராடுவதாக சிலர் சொல்கிறார்கள். ஒரு இந்திய மாநிலத்தின் அளவே இருக்கும் பல ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் இந்தியாவிற்கு இணையாக அணு உலைகளை வைத்து உள்ளனவே? அவற்றை எல்லாம் மூட வேண்டும் என்றும் அங்குள்ள கத்தோலிக்க மக்களை காப்பாற்ற வேண்டும் என்று போப் ஏன் போராடவில்லை. ஒரு வேலை ஆப்பிரிக்காவில் பசிக்கு போராடும் மதம் மாறிய கிறித்துவர்களுக்கு உதவி செய்யாமல் இந்தியாவில் இருக்கும் மக்களை மதம் மாற்ற பணத்தை கொட்டுவதை போல் மதம் மாறிய கத்தோலிக்க ஐரோப்பிய கிறித்துவர்கள் செத்தால் நமக்கு என்ன மதம் மாறி கொண்டு இருக்கும் இந்தியர்கள் தான் முக்கியம் என்று கத்தோலிக்க வாடிகன் நினைக்கிறதோ என்னமோ?

அணு ஆயுத சக்தி இல்லாததால் நாம் 1962ல் சீனாவிடம் இழந்தது மிக அதிகம். மீண்டும் அது போன்ற சூழ்நிலையை தவிர்க்கவும், எதிர்காலத்தில் நிலக்கரி போன்ற வளங்கள் குறைபாட்டால் நமக்கு ஏற்படக் கூடிய மிகப் பெரிய மின்சார பற்றாகுறையை தவிர்க்கவும் அணு உலைகள் மிக அவசியம். அதை விட அவசியம் நமது நாட்டில் மர்மமான முறையில் தற்கொலை என்ற பெயரில் இறந்து கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகள்.

உலகிலேயே மிகப் பெரிய யுரேனிய கனிமவளம் ஆந்திராவில் (49000 டன்) உள்ளது என்பதை மத்திய அரசு வெளியிட்டது. இந்த யூரேனியம் மற்றும் ராம சேதுவினால் நமக்கு கிடைக்கும் கடற்கரை கனிம வளத்தின் மூலம் நமது எதிர் கால மின்சக்தி தேவை பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பும் நமக்கு கிடைத்து உள்ளது

வெளி நாட்டு தீய சக்திகளுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகவே உதயகுமார் மற்றும் கிறித்துவ மிஷினரிகள் செயல்படுகின்றன. இந்தியாவை முடமாக்க முயலும் இவர்களின் முயற்சியை முறியடிக்க சாதி மதம் மொழி என்று வேறுபாடு பாராமல் நாம் ஒன்றினைந்து போராட வேண்டும். அணு உலை மின்சாரம் மட்டும் அல்ல. அணு ஆயுதமும் நமக்கு மிக அவசியம். இது அடுத்தவரை தாக்க அல்ல. நம்மை பாதுகாக்க….

“பாம்பு தன்னிடம் விஷம் இல்லாவிட்டாலும் அது விஷம் உள்ளதாக காட்டி கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அதை கொன்று விடுவார்கள்” – சாணக்கியர்

தகவல்கள்: